Showing posts with label டிஎம்எஸ். Show all posts
Showing posts with label டிஎம்எஸ். Show all posts

Monday, June 1, 2020

மேதைகளின் மோதல் .. சிவாஜி , டிஎம்எஸ் , சீர்காழி, அகிலன்


அந்த காலத்தில் சிவாஜி , எம்ஜிஆருக்கு டிஎம் எஸ்தான் பாடுவார்
இருவருக்கும் ஏற்றமாதிரி வேறுபட்ட பாணிகளில் பாடுவார்

இந்த சூழலில் குங்குமம் படத்தில் சின்னஞ்சிறிய வண்ணப் பறவை என்றொரு பாடல்.. வழக்கம்போல டிஎம் எஸ் சை அணுகினர்

இசை அமைப்பாளர் சொன்ன மெட்டை கேட்ட டிஎம்ஸ் இது எனக்கு செட் ஆகாது .உணர்வுடன் , baவத்துடன் பாடுவது என் பாணி. இந்த பாடல் ராகத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கும் பாடல். பிருகாக்கள் அழகாக இடம் பெற்றுள்ளன. இதைப்பாட நான் தகுதியானவன் அல்லன்.  சீர்காழி கோவிந்தராஜன் இது போன்ற பிருகாக்களை துல்லியமாக தன் குரலில் கொண்டு வருவபவர். அவரைப் அணுகுங்கள் என்றார்

அதன்படி சீர்காழியை பாட வைத்தனர்

பாடலை கேட்ட சிவாஜி , பாடல் அற்புதம். ஆனால் நான் பாடுவது போல இல்லை. உணர்வு இல்லை.  டி எம் எஸ் ஸையேபாட வையுங்கள் பாட வையுங்கள் என்றார்
அதன்பின் பாடலின் ராக அம்சங்களை நீர்த்துப்போகச்செய்து ஜனரஞ்சகப்படுத்தி டிஎம்எஸ்ஸை பாட வைத்தனர்.  சீர்காழி பாடிய வெர்ஷனை தன்னால் பாடியிருக்க முடியாது என டிஎம்எஸ் பல மேடைகளில் பெருந்தன்மையாக தன்னை தாழ்த்திக் கொண்டு பேசியிருக்கிறார்.ஆனால் சீர்காழிக்கு சிவாஜி மேல் வருத்தம்தான்

பிறருக்கு விருந்து சாப்பாடு போடுங்கள் . வேண்டாம் என சொல்லவில்லை. ஆனால் என் எச்சில் இலையில் பிறரை சப்பிட வைக்காதீர்கள் என அவரிடமே தன் கோபத்தை நேரடியாக காட்டினார்

ஆனாலும் சிவாஜி சீர்காழி மேல் கோபப்படவில்லை.
சிவாஜி படங்களில் பிற பாத்திரங்களுக்கோ , அசரீரியாகவோ அவருக்கு வாய்ப்புகள் வழங்கப்பட்டன

இதுபோல இன்னொரு சம்பவம்

பாவை விளக்கு படத்தில் காவியமா நெஞ்சின் ஓவியமா என்ற பாடல் தாஜ்மகாலில் படமாக்கப்பட்டது.

கதாசிரியர் அகிலனுக்கு பிடிக்கவில்லை. இயக்குனர் காரணம் கேட்டார்.
சிவாஜி சில்க் ஜிப்பா அணிந்திருப்பது கதாபாத்திர இயல்பையோ உணர்வையோ பிரதிபலிக்கவில்லை. நான் எழுதியபடி கதர்ச்சட்டைதான் பொருத்தமாக இருக்கும் என்றார்

சிவாஜியிடம் இந்த பிரச்சனை சென்றது
அவர் அகிலனை தனியாக அழைத்துச் சென்று பேசினார்
கதையை நீங்கள் அழகாக படைத்து விட்டீர்கள். அந்த உணர்வை காட்சி வடிவால் எப்படி கொண்டுவருவது என இயக்குனர் , ஒளிப்பதிவாளர் என பலர் யோசிக்கிறார்கள். நானும் என் பங்கை ஆற்றுகிறேன். சில்க் ஜிப்பா காற்றில் அசைகையில் அது ஒரு ஃபீல் உருவாக்கும்.  நீங்கள் சித்தரித்த உணர்வு காட்சி வடிவில் வந்து விடும். அதை செயல்படுத்ததான் அனைவரும் உழைக்கிறோம் என்றார் சிவாஜி

இதைக்கேட்ட அகிலன் , கதாசிரியன் அன்ற எல்லையை தாண்டி நான் பேசி இருந்தால் வருந்துகிறேன். இது ஒரு கூட்டு முயற்சி என்பதை ஏற்கிறேன் என்றார்

அடடா..  இதற்கு ஏன் வருத்தம் ? நீங்கள் கோட்டும் ஈடுபாடு எனக்கு மகிழ்ச்சிதான். அதனால்தானே கதாசிரியரான உங்களை படப்பிடிப்புக்கு அழைத்து வந்திருக்கிறோம். உங்கள் கலுத்துகளை சொல்ல தயங்காதீர்கள். என சொன்னார் சிவாஜி.
இருவரும் கட்டிஅணைத்துக் கொண்டனர்
ஒரு அழகான நட்பு உருவாகி கடைசி வரை நீடித்தது

Saturday, May 30, 2020

டிஎம்எஸ் − இளையராஜா பரஸ்பர அவமானங்கள்


ராணி மேரி கல்லூரியில் இளையராஜாவின் நிகழ்ச்சி ஒன்று நடந்தது.  பெண் மாணவர்களின் கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார்.
    ஒருவர் கேட்டார். உங்கள் முதல் நாட்டு வெளிநாட்டு விஜயத்தில் நிகழ்ந்த மறக்க முடியாத அனுபவம் ஏதேனும் இருந்தால் சொல்லுங்கள்


  முதல் விஜயத்தில் எவ்வளவோ பாராட்டுகள் கிடைத்திருக்கலாம். இனிய நிகழ்வுகள் நடந்திருக்கலாம்

   ஆனால் இளையராஜா இப்படி பதிலளித்தார்

   ஆயிரக்கணக்கான மக்கள் முன் எனக்கு இசையறிவு போதாது என டிஎம்எஸ் மட்டம் தட்டி பேசி அவமானப்படுத்தினார். என் படங்களில் பாடிக்கொண்டே இப்படி பேசியதை மறக்க முடியவிநில்லை என்றார்

    வருத்தமாக இருந்தது.

டிஎம்எஸ் பின்விளைவுகள் தெரியாமல் அப்படி பேசக்கூடியவர்தான். ஆனால் ஒரு கணத்திலேயே அதை மாற்றிக் கொள்வார்

   நான் ஒரு ராசி இல்லாத பாடல்தான் தன் மார்க்கெட்டை அழித்தது என கோபமாக பேசுவார். அடுத்த கணமே , அவர்களை குற்றம் சொல்லவில்லை. என் குரல் பிடித்ததால்தான் பாட வைத்தார்கள் என்பார்

டிஎம்எஸ் அப்படி பேசி இருக்ககூடாது. இளையராஜாவும் அதை பெருந்தன்மையாக மறந்திருக்கலாம்

  ஆனால் பிற்காலத்தில் பதிலடி கொடுத்தார்

   நான் வாழ வைப்பேன் படத்தில்  எல்லோரும் பாடுங்கள் என ஒரு பாடல்.

சிவாஜியின் ஆஸ்தான பாடகர் டிஎம்எஸ் பாடினார்

உங்களுக்கு பாடத் தெரியவில்லை என சொல்லிவிட்டு அதே பாடலை எஸ்பிபி யை பாட வைத்தார் இளையராஜா.

முந்தைய அவமானத்துக்கு பதிலடி

மிக மிக வருந்ததக்க நிகழ்வு

அதன்பின் டிஎம்எஸ்சுக்கு வாய்ப்பு கொடுக்கவே இல்லை

எந்தன் பொன் வண்ணமே

பூப்போலே

நல்லவர்க்கெல்லாம்

அந்தப்புரத்தில் ஒரு

அம்மா நீ சுமந்த

அன்னக்கிளி உன்னை

தேன்மல்லி பூவே

நேரமிது நேரமிது

ஐம்பதிலும் ஆசைவரும்

எனபது போல பல பாடல்களை இந்த இணை கொடுத்தது

இவர்கள் பிரிவு நிகழ்ந்திராவிட்டால் மேலும் பல நல்ல பாடல்கள் நமக்கு கிடைத்திருக்கும்








Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா