Showing posts with label திரைப்பட விமர்சனம். Show all posts
Showing posts with label திரைப்பட விமர்சனம். Show all posts

Sunday, August 18, 2013

திரை உலகை திசை மாற்றிய இரு திரைப்படங்கள்

ஜெயகாந்தன் படைப்புகளில் மறக்க முடியாத ஒரு குறு நாவல்தான் ஊருக்கு நூறு பேர்.
மறக்க முடியாத நாவல் என சம்பிரதாயமாக சொல்ல வில்லை. உண்மையில் என் அனுபவத்தை சொல்கிறேன் . பள்ளி வயதில் ஒரே ஒரு முறைதான் இதைப் படித்தேன். மலையாண்டி காவலரை கிண்டல் செய்வதற்காக தான் வைத்து இருக்கும் கார்ல் மார்க்ஸ் படத்தை தன் தாத்தா என சொல்லி அவனை நம்ப வைப்பது , கவலைப்படாமால் தூக்கு மேடை ஏறுவது என பல விஷயங்கள் இன்னும் நினைவில் இருக்கின்றன

தொடர்ந்து படிக்க

திரை உலகை திசை மாற்றிய இரு திரைப்படங்கள்

இயக்குனர் அம்ஷன் குமாருடன் சிறப்பு பேட்டி

மீபத்தில் லீனா மணிமேகலையின் குறும்பட திரையிடலுக்கு சென்று இருந்தேன். திரையிடல் முடிந்ததும் கலந்துரையாடல், விவாதங்கள் நடந்தன.
பெரும்பாலும் பாராட்டி பேசினாலும் ஒரு பெண் ஆவேசமாக எதிர் குரல் எழுப்பினார். இன்னும் எத்தனை காலத்துக்கு தலித்துகளை பரிதாபத்துக்குரியவர்களாகவே காட்டப்போகிறீர்கள். அவர்களிடம் பாசிடிவ் அம்சங்களே இல்லையா என்பது அவர் பேச்சின் சாராம்சம்.
அதன் பின் லீனா அதற்கு பதில் அளித்தார் என்பது வேறு விஷ்யம். இந்த கட்டுரை லீனாவைப் பற்றியது அல்ல.
அந்த பெண் பேசிய கருத்தில் எனக்கு உடன்பாடு உண்டு. தலித்துகள் சொல்லவொண்ணா கொடுமைகள் அனுபவிப்பது உண்மைதான். அதை கவனத்துக்கு கொண்டு வருவதும் ஏற்கத்தக்கதே,
ஆனால் அவர்களை பாசிட்டிவாக காட்டுவதும் , அவர்களிடம் இருக்கும் பாசிட்டிவ் அம்சங்களை காட்டுவதும் , அவர்கள் வாழ்க்கையில் இருக்கும் அழகியல் , நட்பு, காதல் , அன்பு போன்றவற்றை காட்டுவதும் அவசியம்தானே. ஆனால் பெரும்பாலும் யாரும் இதை செய்வதில்லை.
அம்ஷன் குமாரின் ஒருத்தி திரைப்படம், தலித் பெண் ஒருத்தியைப் பற்றிய படம் என கேள்விப்பட்டபோது, அவரும் இப்படித்தான் எடுத்து இருப்பார் என நினைத்தேன். ஆனால் அந்த படம் கிரா அவர்களின் கிடை குறுநாவலை தழுவி எடுக்கப்பட்டது என தெரியவந்தபோது லேசான ஆர்வம் வந்தது. கிரா என்றாலே கரிசல் மண்ணின் அழகியல் , நுட்பமான சித்திரிப்பு , நகைச்சுவை போன்றவைதான் நினைவுக்கு வரும்.

மேலும் படிக்க ....

Tuesday, May 8, 2012

என்னை கவர்ந்த , உணர்ச்சி வசப்படாத உன்னத விமர்சனம்- வழக்கு எண் 18/9

சினிமாவில் நல்ல படம் , கெட்ட படம் என எதுவும் கிடையாது. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு ரசனை.

எனக்கு பிடித்து இருக்கிறது , பிடிக்கவில்லை என சொல்வதில் பிரச்சினை இல்லை. ஆனால் ஒரு சராசரி படத்தை உலகப்படம் அது இது என ஆர்வ மிகுதியால் சிலர் பில்ட் அப் செய்ததை பார்த்து கவலையாக இருந்தது.

தன் விருப்பத்தை அவர்கள் சொல்கிறார்கள். அதில் தவறு ஏதும் இல்லை. ஆனால்  புதிதாக யாராவது வலையுலகை பார்த்தால் ,  ஒட்டு மொத்த ரசனை மீதே சந்தேகம் வந்து விடுமே என்பதே கவலை.

ஒரு பெண்ணை திட்டமிட்டு கவிழ்க்கும் விதி பட கதை அம்சம் , கஷ்டப்பட்டுவர்கள் மேலும் மேலும் கஷ்டப்பட்டே சாக வேண்டும் என்ற ஃபாசிச சிந்தனை ,  மனிதனின் மறுபக்கம் படத்தின் திரைக்கதை யுக்தி , படம் முழுக்க வக்கிரத்தை காண்பித்து விட்டு கிளைமாக்சில் பிராயசித்தம் செய்யும் அலுத்து போன தந்திரம் ,  டிபிக்கல் தமிழ் ரசிகனை மயக்கும் சினிமாட்டிக் முடிவு போன்ற அம்சங்கள் கொண்ட வழக்கு எண் 18/9 படத்தை , படித்தவர்கள் நிரம்பிய பதிவுலகத்தில் சரியாக அணுகுவார்கள் என்று நினைத்த எனக்கு ஏமாற்றமே காத்து இருந்தது.

ஆனால் தண்டோரா மணீஜியின் விமர்சனம் ஆறுதலாக இருந்தது.


அவர் விமர்சனத்தில் இருந்து....

****************************************

உண்மை குற்றவாளி கைது செய்யப்பட்டான் என்று போகிற போக்கில் சொல்லி விடுகிறார்கள்.. ஆனால் படம் முடிந்து நாம் வீட்டுக்கு போவதற்குள் அவன் வெளியில் வந்திருக்க கூடும்..ஆக  படம் பார்ப்பவரின் உணர்ச்சிகளை உசுப்பி விட்டு கல்லா கட்டுவதை தவிர வேறெந்த நேர்மையான நோக்கமும் வழக்கு என்ணில் இல்லை...கிளைமாக்சில் நம்பியாருக்கும், அசோகனுக்கும் என்ன நடக்குமோ அதுதான் இதிலும் நடக்கிறது..ஆனால் நிஜத்தில் அப்படியா என்ன? ஜோதியின் வாழ்க்கை அவ்வளவுதான்..வேலு சிறையில்தான் இருக்க வேண்டும்..ஆர்த்தி ஐ.ஐடி..ஐஐஎம்மோ சேர்ந்து கான்பூருக்கோ..பிலாய்க்கோ போய்விடுவாள்.. அப்படி முடித்திருந்தால் அதுநேர்மையான திரைப்படமாக இருந்திருக்கும்.. 

வழக்கு எண் 18/9

வழக்கமான படம் இல்லைதான்..ஆனால் வழக்கத்தை ஒன்றும் அப்படி மீறியும் விடவில்லை

*************************

நன்றி மணிஜி சார்...




Saturday, May 5, 2012

ஆணாதிக்கம் + கற்பனை வறட்சி= வழக்கு எண் 18/9- திரைப்பார்வை

தமிழ் சினிமாவில் ஒரு டிரெண்ட் உண்டு.

கமல் ஹாசன் போன்றவர்கள் , நல்ல படம் என நினைத்து எதையாவது எடுப்பார்கள். படம் பிளாப் ஆகி குப்பை தொட்டிக்கு போகும். தமிழ் சினிமா ரசிகர்களுக்கு ரசனை இல்லை என பழியை தூக்கி போட்டு அடுத்த குப்பை படம் எடுக்க தயாராவார்கள்.

ஆனால் தமிழ் ரசிகர்கள் புத்திசாலிகள். நல்ல , வித்தியாசமான படங்களை ஆதரித்தே வந்து இருக்கிறார்கள்.

சாதாரண ரசிகர்களின் மன நிலையும், அறிவு ஜீவிகளின் மன நிலையும் ஒத்து போவதே இல்லை.


நான் படத்துக்கு போனால் படத்தை விட , ரசிகர்களின் மன நிலையையே கவனிப்பது வழக்கம்.

வழக்கு எண் 18/9



திரை அரங்கில் நுழைந்ததுமே ஆச்சர்யம். புது படம் . ஆனால் கூட்டமே இல்லை.

படம் பார்க்க பார்க்க காட்சிகளுடன் ஒன்ற முடிந்தது. ஆனால் போக போகத்தான் இயக்குனருக்கு காதல் குறித்தும் புரிதல் இல்லை, சாமான்யர்களின் வலி மீதும் அக்கறை இல்லை என்பது புரிந்தது.

 நம்மை போன்றவர்கள் முதலில் படத்தை ஆகோ ஓகோ என பாராட்டுவோம். யோசித்து பார்த்தால்தான் அது ஒரு குப்பை என புரியும்.

ஆனால் சராசரி ரசிகன் முதல் பார்வையிலேயே படத்தை எடை போட்டு7 விடுவான்.

 நல்லவர்களை பெண்கள் நம்ப மாட்டார்கள், அயோக்கியர்களைத்தான் நம்புவார்கள் என்ற புளித்து போன ஆணாதிக்க சிந்தனைதான் கதைக்கரு. இதை மறைக்க செல் போன் மெசேஜ் ஸ்கேண்டல் போன்ற கிளுகிளு விஷ்யங்களை கையில் எடுத்து இருக்கிறார்.



சாமான்யன் துன்புறுகிறான் . கெட்டவன் ஜெயிக்கிறான் ,கடைசியில் சினிமாட்டிக்கான கிளைமேக்ஸ்.

இது ஒப்பாறாது என இயக்குனருக்கே தெரிந்து விட்டதால் , இன்னொரு யுக்தியை முயன்று பார்த்து இருக்கிறார்.

அந்த காலத்தில் மனிதனின் மறுபக்கம் என்று ஒரு படம் வந்தது. சிவகுமார் கதா நாயகன். அவர் தன் மனைவியை கொன்று விட்டார் என்பது குற்றச்சாட்டு. அவர் ஏன் கொன்றார் என்பதை துப்பறிந்து கண்டு பிடிப்பார்கள். அந்த காட்சிகள் ஃபிளாஷ்பேக்காக காட்டப்படும்போது ,  வில்லன் தோற்றதில் அவர் இருப்பார்.

அதன் பின் மனைவி எப்படி இறந்தார் என்று சிவகுமார் தன் பார்வையில் சொல்வார். அவர் சொல்லும் ஃப்ளாஷ்பேக் வேறு மாதிரி இருக்கும்.

இந்த திரைக்கதை யுக்தியை கொஞ்சம் ஆட்டையை போட்டு இருக்கிறார் இயக்குனர்.

படத்தில் லாஜிக் பற்றி கவலையே படவில்லை என்றாலும் , பீச் காட்சி சரியான கற்பனை வறட்சி.

புதிதாக எதையாவது செய்ய வேண்டும் என்ற ஆர்வம் பாராட்டத்தக்கது.. ஆனால் அதற்கேற்ப உழைப்பும் இருந்தால்தான் ஆர்வம் செயலாகும்.

  வெர்டிக்ட்        
வழக்கு எண் 18/9 -   தள்ளுபடி செய்யப்படுகிறது 



Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா