Sunday, November 14, 2010
பால் குடிப்பதில் இவ்வளவு விஷயமா?
அதுதான் கிடையாது.. நாம் எப்படி குடிக்கிறோம் என்பதை கன்னம்தான்
Wednesday, September 29, 2010
எந்திரன் மூலம் உண்மையாக பயனடைவது யார் ?- அலசல் ரிப்போர்ட்

எந்திரன் படம் ஆரம்பத்தில் இருந்து பாசிடிவாகவும் , நெகடிவாகவும் பல செய்திகள் வந்தவண்ணம் உள்ளன..
ஆனால் ஒரு முக்கியமானா விஷயத்தை யாரும் கவனிக்கவில்லை..
எந்திரன் படம் ஓடுவதை பொறுத்து , படத்தில் சம்பந்தப்பட்டவர்கள் லாபமோ , நஷ்டமோ அடைவார்கள்..ஆனால் படத்தில் சம்பந்தப்படாதவர்களில் , இந்த படம் மூலம் யாருக்கு அதிக பலன் கிடைக்கும் என்ற கோணத்தில் யாரும் ஆராயவில்லை என்பது நம் கவனத்துக்கு வந்தது...
இனிமேலு சும்மா இருக்க கூடாது என களத்தில் இறங்கி செய்த அறிவியல்பூர்வ ஆராய்ச்சியின் முடிவு - இதோ உங்கள் பார்வைக்கு..
*************************************************************************
எந்திரன் மூலம் பயனடைவது யார் ?
4. பதிவர்கள்.
எழுதுவதற்கு ஒரு மேட்டர் கிடைத்தது என்ற அளவில் லாபம்தான். சினிமா செய்தி, ஷூட்டிங் நிலவரம், இசை விமர்சனம், சினிமா விமர்சனம், படம் வெற்றியா என்றெல்லாம் அலசலாம் . பதிவிடலாம்..என்ன்று இவர்கள் பலனடைகிறார்கள்..
ஆனால் இதற்கெல்லாம் சொந்த காசை செலவிட வேண்டி இருக்கும்.. உழைப்பும் தேவை...
எனவே கஷ்டமும் உண்டு, லாபமும் உண்டு என்ற அளவில்தான் பலன் இருக்கும்
பயன் சதவிகிதம் : 65 %
3பத்திரிகைகள்
திட்டி எழுதினாலும் விற்பனை..பாராட்டி எழுதினாலும் விற்பனை என பயனடைகிறார்கள்..
ஆனால் முன்பு போல அதிகம் லாபம் கிடைக்காது.. நெட், தொலைகாட்சி என பல போட்டி வந்து விட்டதால், இப்போது யாரும் பத்திரிகளை மட்டும் நம்பி இருப்பதில்லை... பயன் அடையும் வாய்ப்பு மங்கும்
பயன் சதவிகிதம் : 72 %
2தொலைகாட்சிகள்
நல்ல வேட்டைதான்... பாடல்கள், காட்சிகள் என நிகழ்சிகள் நடத்தலாம்.. ஆனால் சன் டி வி யின் படம் என்பதால் , மற்ற சானல்கள் கொஞ்சம் அடக்கித்தான் வாசிக்க முடியும்...
பயன் சதவிகிதம் : 70 %
1 சமூக சிந்தனையாளர்கள்..
நாட்டில் இருக்கும் எல்லா பிரச்சினைக்கும் எந்திரன் தான் காரணம் என ஆய்வு கட்டுரை எழுதலாம்... இந்திய பொருளாதாரம் நாசமாக போனதற்கு, ஏழைகள் கஷ்டப்படுவதற்கு, சினிமா உருப்படமால் போனத்ர்க்லு என எல்லாவற்றுக்கும் எந்திரன் தான் காரணம் என ஆதாரத்துடன் நிருபிக்கலாம் ..படம் பார்க்க வேண்டும் , செலவு செய்ய வேண்டும் என்ற அவசியம் இல்லை..
செலவு இல்லை ..பலன் உண்டு..
பயன் சதவிகிதம் : 100 %
எனவே எந்திரன் மூலம் அதிகம் பயன் பெறுவது சிந்தனையாளர்கள் தான் ..
எனவே , ஒரு சிந்தனையாளர் பார்வையில் எந்திரன் குறித்து கட்டுரை தீட்டி பயன் பெறுமாறு, அனைத்து பதிவர்களையும் கேட்டு கொள்கிறோம்..
பொது நன்மை கருதி வெளியிடுவோர் : pichaikaaran.blogspot.com
Saturday, September 25, 2010
சினிமா விழாவில் கமல், பாலா சர்ச்சை- கடவுள் பெரிதா , புத்தி பெரிதா ?
கடவுள் இருக்கிறாரா , இல்லையா என்பது விடை இல்லாத கேள்வி. ஏன் என்றால் கடவுள் என்று எதை சொல்கிறோம் என்ப்தை பொருத்த விஷயம் இது..
மைனா படத்தின் குறுந்தகடு வெளியீட்டு விழா சென்னை சத்யம் திரையரங்கில் நடந்த்தது.
பிரபு சாலமன் இந்த படத்தை இயக்கி இருக்கிறார். கமல் வெளியிட இயக்குனர் பாலா பெற்றுக் கொண்டார்.
பாடல் ஆசிரியர் யுக பாரதி பேசும் போது பண்புடன் பேசினார்.. இயக்குனர் கிறிஸ்தவ மத நம்பிக்கை உள்ளவர். எனவே அவர் உணர்வுகளை மதிக்கும் வகையில் “ பிரபு சாலமனை கர்த்தர் கைவிடுவதும் இல்லை.. அவரை விட்டு விலகுவதும் இல்லை “ என்றார்.
அதன் பின் பேசிய பாலா “ நான் அதிகம் பேச வேண்டாம் என நினைத்தேன்.. ஆனால் யுக பாரதியின் பேச்சுக்கு பதில் அளிக்க வேண்டிய நிலை ஏற்பட்டு விட்டது.. புத்தி உள்ளவனை எந்த சாமியும் ஆசிர்வதிக்க வேண்டியதில்லை… “ ” என்று நாத்திகம் பேசி விட்டு சென்றார்.
நம்மை பொருத்தவரை, கிறிஸ்தவ நம்பிக்கையையும் , எல்லா மத நம்பிக்கைகளையும் மதிக்க வேண்டும்..ஒருவர் கடவுள் இல்லை என நினைத்தால் அந்த உணர்வையும் மதிக்க வேண்டும் என்றே நினைக்கிறோம். ஆனால் ஒரு நம்பிக்கையாளர் இன்னொரு நம்பிக்கையாளரை குறை சொலவது தவறு.
புத்தி உள்ளவனுக்கு கடவுள் ஆசி தேவை இல்லை என்கிறாரே..அப்படி என்றால் புத்தி இருக்கும் எல்லோரும் ஜெயித்து விடுகிறார்களா.. உழைக்கும் அனைவரும் ஜெயிப்பது கிடையாது… தன்னம்பிக்கை, புத்திசாலித்தனம் , உழைப்பு, படிப்பு என அனைதும் இருந்தும் , கஷ்டத்தில் வாழ்பவர்கள் அனேகம்..
எனவே ஒருவர் ஜெயிக்கிறார் என்றால் கண்ணுக்கு தெரியாத பல விஷ்யங்கள் அதன் பின் இருக்கின்றன.. இதை சுருக்கமாக கடவுள் ஆசி என சிலர் சொல்லலாம்..
outliers என்ற புத்தகத்தில் இது விரிவாக அலசப்பட்டுள்ளது.. வெற்றிக்கு பின் இருக்கும் காரணங்கள் என்னென்ன என ஆராய்கிறது புத்தகம்..
ஒருவர் புத்திசாலியாக பிறப்பதே கடவுளின் ஆசிதான்..எனவே புத்திசாலிக்கு கடவுள் ஆசி தேவை இல்லை என சொல்வது தவறு என்பதும் ஒரு கோணம்.
பாலாவுக்கு பின் பேசிய பிரபு சாலமன் “ தேங்க்யூ ஜீஸஸ் “ என பேச்சை துவக்கினார்.. “ தவறாக எடுத்து கொள்ளாதீர்கள் “ என பாலாவிடம் விளையாட்டாக கூற அரங்கில் பலத்த கைதட்டல்..
கடைசியில் பேசிய கமல் , தெளிவாகவும் ஆனால் யாருக்கும் புரியாத படியும் தன் பாணியில் பேசினார்..
கல்லை பார்த்தால் கடவுள் தெரியாது..கடவுளை பார்த்தால் கல் தெரியாது .. கல் தெரியாவிட்டால் தடுக்கி விழுந்து விடுவோம் . எனவே பகுத்தறிவு அவசியம் அன்றார்..
கடவுளை நம்பிகிறோமா இல்லையா என்பதோ பிரச்சினை இல்லை… நமது உழைப்பும் , புத்திசாலித்தனமும் கூட இரண்டாம் பட்சம்தான்…
உழைப்பு என்பது போட்டியில் இறங்க அடிப்படை தகுதி.. ஆனால் இறுதி வெற்றியை நிர்ணயிப்பது பல விஷ்யங்கள்.. இதை கடவுள் எனவும் சொல்லலாம் … அல்லது அறிவியல் பூர்வ காரணங்களை அடுக்கலாம்..
வெற்றி பெற்றதும் தான் மட்டுமே- தன் புத்தி மட்டுமே- வெற்றிக்கு காரணம் என நினைப்பது தவறு..
Wednesday, September 22, 2010
தமில் மொளியை வலர்க்கும் மா நகராட்சி- மேலும் சில படங்கள்
நல்லவேலை... சென்னையை தென்னை என எழுதாமல் விட்டார்களே.. அப்படியும் எங்காவது இருக்க கூடும்,, இருந்தால் அதையும் படம் பிடித்து அப்லோட் செய்வேன்,,
தொலைக்காட்சிகளில் சிலர் தமிழை குதறுவதை காண சகிக்காமல் இவர்களே கருணை கொலை செய்கிறார்கள் என்றே நினைக்க வேண்டி இருக்கிறது
சரி... சில தமிழ் கொலைகள் உங்கள் பார்வைக்கு...
காய்கணிகள், கண்ணெ உனக்கு

தமில் மொளியை வலர்க்கும் மாநகராட்சி




தொலைக்காட்சியில் தமிழை கொலை செய்யும் அறிவிப்ப்பாளர்கள் பற்றியும் சினிமாவில் தமிழ் உச்சரிப்பு கொலை பற்றியும் நடிகர் ஒருவர் கிண்டல் செய்வதை டிவியில் கண்டுகளித்தேன்.
” நடிகருக்கு என்ன ஒரு தமிழ் அக்கறை !! “ என்று வியந்த என்னை அலட்சியமாக பார்த்தான் என் நண்பன்..
” இவர்கள் கொலை செய்வதை விட , பொறுப்பில் இருப்பவர்கள் கொலை செய்வதுதான் அதிகம்.. வெளியில் சென்று பார்.. நாட்டு நடப்பு தெரியும் “ என்றான்.
அவன் சும்மா மிகைப்படுத்துகிறான் என நினைத்த படி வெளியே கிளம்பினேன்.
சென்னை மா நகராட்சி ஆங்காங்கு கைவண்ணம் காட்டி இருக்கும் சுவரோவியங்கள் கண்ணை கவர்ந்தன..
அதை பார்த்த்தும் அதிர்ச்சி… தமிழை படுகொலை செய்து இருந்தார்கள்..
ஒன்றிரண்டு என்றால் பரவாயில்லை… ஒன்று விடாமல் அனைத்திலும் , ஏதோ வேண்டுதல் போல , தமிழை குதறி எடுத்து இருந்தார்கள்..
தமிழை இப்படி அலட்சியமாக கையாளலாமா? மிகவும் வருத்தமாகஇருந்தது!
இதோ, அந்த தமிழ் கொளை உங்கல் பார்வைக்கு…..
1.கண்ணியாகுமரி
2.சிற்ப்பங்கள்
3 ஜல்லிகட்டுகாளை அடுக்குதல்
4உங்கலுக்கு உப்பிடும்
Wednesday, September 8, 2010
பொதுவுடமை இயக்கத்தில் பெண்களும் பொதுவுடமையா?- அதிர்ச்சி ரிப்போர்ட்

நக்சல் இயக்கத்தைப் பற்றி ஏதாவது செய்தி வரும்போது படிப்பதோடு சரி. மற்றபடி அவர்கள் வாழ்க்கையைப் பற்றி பெரும்பாலானோருக்கு தெரிவதில்லை.
டைம்ஸ் ஆஃப் இந்தியாவில் வந்த ஒரு செய்தி கட்டுரை அதிர்ச்சி அளிப்பதாக இருந்த்து.
அதை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
பெங்கால்- ஜார்கண்ட் எல்லைப்பகுதியில் சிபி ஐ – மாவொயிஸ்ட் கமாண்டராக இருந்தவர் ஷோபா மண்டி என்ற உமா. பாதுகாப்பு படையினருடன் பல மோதல்கள் இவர் தலைமையில் நடந்துள்ளன. ஆனால் அந்த இயக்கத்தை விட்டு விலகி போலீசில் சரணடைய விரும்புவதாக இவர் கூறுகிறார். ஏன்.. என்ன நடந்த்து..
ஒடுக்கப்பட்டவருக்காக போராடும் இயக்கத்தில் இருந்து ஏன் விலக வேண்டும்??
“அவர்கள் பெண்களுக்கு எதிரானவர்கள். பாலியல் வன்முறையில் ஈடுபடுகிறார்கள் “ என்று சொல்லும் இவர் மேலும் சொல்கிறார்..
“ இயக்கத்தில் சேர்ந்து ஒரு வருடம் ஆகி இருக்கும். ஜார்கண்டில் இருக்கும் முகாமில் இரவு பணியில் அமர்த்தப்பட்டு இருந்தேன். அங்கே பிகாஷ் ( இப்போது மிலிட்ரி கமிஷன் தலைவராக இருக்கிறார் ) திடீரென வந்தார், தண்ணீர் கேட்டார். நான் எடுக்க சென்றேன், தகாத முறையில் நடந்து கொள்ள முயன்றார். நான் தடுத்தேன். என்னை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்தார் . இதை யாரிடமும் சொல்ல கூடாது என மிரட்டினார் . ஆனாலும் உயர் நிர்வாகிகளுடம் புகார் செய்தேன். எந்த நடவடிக்கையும் இல்லை. அப்போது என் வயது 17 .
மூத்த மாவோயிஸ்ட் நிர்வாகிகள் பெண்களை தமது வேட்கைக்கு பயன்படுத்தி கொள்வது சர்வசாதாரணம். கருவுறுதலை அவர்கள் விரும்புவதில்லை. எனவே கருசிதைவு செய்தாக வேண்டும்.
கிராம மக்கள் பயம் காரணமாக அடைக்கலம் தருவார்கள். இரவெல்லாம் விழித்திருந்து, போலீஸ் வந்தால் தப்பிக்க உதவ வேண்டும். இப்படி அடைக்கலம் தரும் வீடுகளின் பெண்களையும் இவர்கள் விடுவதில்லை.
இப்படிப்பட்ட பாலியல் வன்முரையில் இருந்து தப்பிக்க ஒரே வழி, சீனியர் தலைவர் ஒருவருடன் நெருக்கம் ஆவதுதான். இப்படி எனக்கும் ஒருவர் பதுகாப்பு அளித்தார்.. என்னுடன் அவர் உறவு வைத்து இருப்பதாக அவர் அறிவித்தார். அதுதான் எனக்கு திருப்பு முனை.. உயர் பதவிகள் கிடைக்க ஆரம்பித்தன் “என்கிறார்.
போலிஸால் தேடப்படுபவர் இவர். ஜார்கண்ட் எம் பி சுனில் மஹோத்தோ 2007 ல் கொலை செய்யப்பட்தில், இவரை சந்தேகப்படுகிறார்கள். காவல் நிலைய தாக்குதல், போலிஸாரை கொன்றது, கட்த்தல் போன்றவற்றில் இவரை போலிஸ் கைது செய்ய விரும்புகிறது.
இப்படிப்பட்ட கில்லாடியான இவர் அந்த இயக்கத்தை விட்டு விலகுவதுதான் சோகம்.
நன்றி : டைம்ஸ் ஆஃப் இந்தியா
செய்தியை அப்படியே நம்ப வேண்டியதில்லை. மாற்று கருத்து இருப்பவர்கள் பின்னூட்ட்த்தில் தெரியப்படுத்தலாம்.
செய்தியை ஆதரிப்பவர்களும் தங்கள் கருத்தை சொல்ல்லாம்
Tuesday, September 7, 2010
முரளி- ஒரு சினிமா ரசிகனின் பார்வையில் ..
கமல் ரசிகர்கள் டார்கெட் செய்யும் விஷ்யம் , ரஜினி கறுப்பு என்பது. அதுதான் தமிழ் நாட்டின் கலர் என நாங்கள் எதிர்வாதம் செய்வது வழக்கம்.

இன்னிலையில் முரளி அறிமுகமானார். பூவிலங்கு படம். படம் நல்ல வரவேற்பை பெற்றது.
அவரும் கருப்புதான். ஆனால் கறுப்பு என்பது பழக்கமாகி விட்ட ஒன்றாகி மாறி இருந்த்து. சிவப்புதான் அழகு என்ற பழைய கண்ணோட்டம் மாறி இருந்த்து.
முரளி போன்ற நடிகர்களுக்கு தீவிர ரசிகர்களும் இல்லை. தீவிர எதிர்ப்பாலர்களும் இல்லை. படம் நன்றாக இருந்தால் கண்டிப்பாக ஓடும்.
அவர் தனக்கு கிடைத்த அறிமுகத்தை நல்ல முறையில் பயன்படுத்தி கொண்டார் என சொல்ல முடியாது.
ஆனாலும் அவ்வப்போது நல்ல படங்கள் தந்தார்.
பாலம் என்று ஒரு படம் வந்த்து. ஒரு பாலத்தை , இளைஞர்க்ள் சிலர் கைப்பற்றி கொண்டு, தம் கோரிக்கை நிறைவேற்ற நிபந்தனை விதிப்பார்கள்.
வித்தியாசமான படம் . அந்த கோரிக்கை குறித்து அரசியல் பிரமுகர்களுடன் பேட்டி எடுத்து தொலைகாட்சியில் ஒளிபரப்பும் காட்சி நல்ல வரவேற்பை பெற்றது.
பெரும்பாலானோர் அந்த இளைஞர்கள் செய்வது சரி என பேட்டி அளிப்பார்கள். சோ மட்டும் இது சரியான தீர்வு அல்ல என சொல்வது அப்போது பரபரபை ஏற்படுதியது.
முரளிக்கு பெருமை அளிக்கும் படம் இது.
பகல் நிலவு பட்த்தில் சத்யராஜ்தான் அதிகமாக ஸ்கோர் செய்தார் என சொல்ல வேண்டும்.
புது வசந்தம் பட்த்தை மறக்க முடியுமா?
ஆனால் , ஆயிரம் படங்கள் வந்தாலும் , என்னை பொறுத்தவரை நினவில் நிற்பது இதயம் படம்தான்.
அனைவருமே அந்த பட்த்துடன் தம்மை அடையாளப்படுத்தி கொள்ள முடியும். அந்த தவிப்பு, சோகம் , காதல் எல்லாம் பலரும் அனுபவித்த ஒன்றுதான்.
எஸ் எம் எஸ் யுகத்தில் காதலை சொல்வதெல்லாம் பெரிய மேட்டர் இல்லை. ஆனால் அன்றைய கால கட்ட்தில் பொருத்தமானதாக இருந்த்து.
ஆனால் அந்த கால கட்டம் முடிந்த பின்னும் , அதே பாணியிலான பட்த்தை எடுத்து பலர் டார்ச்ச்ர் செய்தார்கள்.
மிகப்பெரிய நடிகர் என்று இல்லாவிட்டாலும், தனக்கு என ஒரு இட்த்தை பிடித்து வைத்து இருந்த்து முரளியின் சாதனை..
நான் ரசித்த ஐந்து விஷயங்கள் ( கடைசி மேட்டர் அடல்ட்ஸ் ஒன்லி )
இதில் கடைசி மேட்டரை மட்டும் சிறுவர்கள் படிக்க வேண்டாம் ( அடல்ட்ஸ் ஒன்லி ) .
Friday, September 3, 2010
கொலை செய்தால் ஊக்க தொகையா? - மனிதாபிமானிகளின் ஓவர் பாசம்
இருதரப்பு வாதங்களையும் கேட்டால், இருவர் சொல்லுவதும் சரி போலவே தோன்றும்.. நம்மால் எந்த முடிவுக்கும் வர முடியாது..
ஆனால், தூக்கு தண்டனை தவறு என்று சொல்பவர்களின் வாதம் வடிவேலுவின் காமடியையும் மிஞ்சும்படி இருக்கும்.. ஆனால் நாம் ,பிரச்சினையின் சீரியஸ்னசை கவனத்தில் கொண்டு இந்த வாதத்தில் இருக்கும் சிரிப்பை கவனிப்பதில்லை...
இந்த மனிதாபிமானிகளின் நகைச்சுவையை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் பெருமைப்படுகிறோம்..
1 ஒருவர் சமுகத்தில் இருக்கும் ஒருவரை கொல்வதால், சமுகத்துக்கு இழப்பு ஏற்படுகிறது... அந்த இழப்பை நிவர்த்தி செய்ய பார்க்காமல், சமுகத்துக்கு மேலும் இழப்பை ஏற்படுத்தும்படி அவரையும் அரசே கொல்வது என்ன லாஜிக் ? ஒரு இழப்பு என்பது , இரண்டு இழப்பாக மாறுவதுதான் நாம் காணும் பலன்..
சூப்பர் வாதம் ... பேசாமல் கொலையாளிக்கு நஷ்ட ஈடு கொடுத்து , விடுதலை செய்து விடலாமா?
2 தூக்கு தண்டனை கொடுப்பதால் , இனி கொலையே நடக்காதா? கொலை என்பது நடக்கத்தான் செய்யும்...தூக்கு அதை நிறுத்தாது...
சிறைதண்டனை என்பது திருட்டை தடுக்காதுதான்.. பேசாமல் சிறை அனைத்தையும் திரை அரங்காக மாற்றி விடலாமா...
3 கொலை செய்யும் அளவுக்கு ஒருவர் துணிகிறார் என்றால் அவர் எந்த அளவுக்கு வாழ்க்கையில் கஷ்டப்பட்டு இருப்பார் .. ? அவருக்கு மேலும் கஷ்டம் கொடுப்பதுதான் தூக்கு தண்டனை..
ஆமாமா.. இனிமேல் கொலையாளிகளுக்கு சகல வசதிகளுடன் கூடிய வீடு வழங்கப்பட்டு, ஊக்க தொகையும் வழங்கப்பட வேண்டும்...
4 தூக்கு தண்டனை கூடாது என மகாத்மா காந்தி சொல்லி இருக்கிறார்..
ஆமா.. நாங்க அவர் சொன்ன எல்லாத்தையும் கேட்டுட்டோம்... இது ஒண்ணுதான் பாக்கி,,,இதையும் கேட்டு காந்தியின் சிஷ்யர்கள் ஆக போறோம்..
5 மரண தண்டனை என்பது தண்டனை ஏ அல்ல.. அது உலகம் என்ற சிறையில் இருந்து கொடுக்கப்படும் விடுதலைதான்... ஒரு கொலையாளிக்கு தண்டனை வழங்காமல் , விடுதலை வழங்கும் சமூகத்தை என்னவென்று சொல்வது ??
அருமை..அருமை.. இனிமே நாட்டுக்கு நல்லது செய்பவர்கள், அப்பாவிகள், நல்லவர்கள் , கல்லூரி மாணவிகள், பெண்கள் எல்லோருக்கும் இது போன்ற " விடுதலை " அளிக்கவும், கொலையாளிகள் இந்த உலகம் எனும் சிறையில் இருந்து கஷ்டப்படவும் தேவையான சட்ட திருத்தம் செய்ய வேண்டும்...
6 கொலைக்கு கொலை என அரசே இறங்குவது மிருகத்தனம் அல்லவா.. ? அவர்களை திருத்தி நல்வழி படுதுவதுதானே அரசின் வேலை..?
பஸ்ஸில் டிக்கர்ட் எடுக்காமல் அரசுக்கு பண இழப்பு ஏற்படுத்தினால், பதிலுக்கு அபராதம் போட்டு பண இழப்பு ஏற்படுத்தலாமா? அருமை...
******************************************************************************
மனித உயிர் மதிப்பு வாய்ந்தது... எனவே யாராக இருந்தாலும் மனித நேயம் முக்கியம்தான்... ஆனால், பாதிக்கப்பட்டவர்கள் நிலையையும் , என் இறந்தோம் என தெரியாமலேயே இறந்தவர்கள் நிலையையும் கொஞ்சம் அனுதாபத்தோடு பார்க்க வேண்டும்.. வெறும் அறிவு பூர்வ விவாதங்கள் உதாவாது...
உண்மையான மனித நேயம் , உலகில் மறைந்து வருகிறதோ என தோன்றுகிறது...
Wednesday, July 21, 2010
பாரதியாரிடம் வீரம் காட்டுவது அழகல்ல
அவரை பற்றி எந்த அபிப்ராயமும் இல்லை.. சும்மா அ ரசியல் லாபத்துக்காக விமர்சிப்பவர்கள்...
இவர்களை பொருட்படுத்த வேண்டியதில்லை..
ஆனால், பதிவுலக நண்பர்கள் விமர்சிப்பது வேறு எந்த சுய லாபத்துக்கவும் இருக்க முடியாது... தங்களுக்கு சொல்லி தரப்பட்ட விஷயங்களை நம்பி, தன்கள் மனசாட்சி ப்படி விமர்சிக்கிறார்கள்...அதிலும் நாகரிகமான வார்த்தைகளியே பயன் படுத்துகிறார்கள் என்பதால், பதில் அளிப்பது நம் கடமை... மற்றபடி அவர்களின் சமுக அக்கறை குறை சொல்ல முடியாததது....தாம் உண்மை என நினைப்பத்தைத்தான் பேசுகிறார்கள் என்பதில் எனக்கு சந்தேகம் இல்லை...
1 ஒரு நண்பன் பெரிய தொழிலதிபராக இருக்கிறான்... உழைத்தால் முன்னேறலாம்... யாரிடம் கை எந்த வில்லை என பேசுகிறான் என வைத்து கொள்வோம்.... நாம் அதல் பார்த்து மகிழ்ச்சி அடைவோம்... வேலை இல்லாமல் கஷ்டப்பட்ட காலத்தில் , நம்மிடம் கடன் கேட்டு எழுதிய கடிதத்தை வெளியிட்டு அவனை அசிங்க படுத்த முயல மாட்டோம்... அதுவும் அவன் உயிருடன் இல்லை என்ற நிலையில் , அப்படி வெளியிடுவது அவனை அசிங்க படுத்துவது ஆகாது.. நம்மை நாமே அசிங்க படுத்துவதுதான் ....
ஆனால், ஒருவர் வறுமையை வெளியிட்டாவது , அவரை அசிங்க படுத்த முயல்கிறோம் என்றால் , அந்த அளவுக்கு அரசியல்வாதிகள் நம் மனித உணர்வை மழுங்கடிக்க செய்திருக்கிறார்கள் என்றுதான் அர்த்தம்...
2 மன்னிப்பு கடிதம் கொடுக்காமல் உயிர் விட்ட பகத் சிங்கை யும் பாரதியாரையும் ஒப்பிட்டு ஒரு நண்பர் கேள்வி எழுப்பிகிறார்... நியாயமான கேள்விதான்...
ஆனால், நண்பரே ..ஒரு வித்தியாசம் இருக்கிறது... இருவரும் தேச பக்தி மிக்கவர்கள் என்றாலும், இருவரின் போராட்ட முறை வேறு. போராட்ட ஆயுதம் வேறு...
கவிதை , எழுத்து என்பதுதான் பாரதிக்கு தெரிந்த விஷயம்... அதற்கு பாதிப்பு ஏற்படாத வகையில் அவர் நடந்து கொண்டதை வைத்து அவரை தவறாக சித்தரிப்பது தவறு...
பாரதியை ஒரு தனி மனிதர் .. அவர் ஒரு புரட்சி கூட்டத்துக்கு தலைவர் , தீவிரவாத தலைவர் என்ற நிலையில் இருந்து , பணிந்து போய் இருந்தால் தவறுதான்.. ஆனால் நிலை அப்படி அல்ல..
அவரை மகா கவி என போற்றுவது பிடிக்கவில்லை என்றால், அவர் கவிதையில், இன்னென்ன தவறு இருக்கிறது என்று சொல்வதுதான் நியாயமே தவிர, அச்சமில்லை அச்சமில்லை என்று பாடிய அவர், பாம்பை பார்த்து பயந்தார் என நிருபிப்பது தேவை இல்லாத வேலை மட்டுமல்ல, நியாயம் இல்லாத செயலும் கூட ..
3 நல்லதோர் வீணை செய்தே , அதை நலம் கெட புழிதில் எறிவதுண்டோ , என திறமைகள் இரூந்தும், வசதி இல்லாத பல கோடி மக்களின் குராலக வர ஒலித்து இருக்கிறார். எனவே அவர் வறுமையில் வாடினார் என்பதை ஆதாரபூர்வமாக நிரூபிப்பது அவரை அசிங்க படுத்துவது ஆகாது... அவரை அந்த நிலையில் வைத்து இருந்த சமூகம்தான் வெட்கப்பட வேண்டும்...
இன்னும் அந்த நிலை மாறவில்லை... ஒரு பத்திரிக்கையை விமர்சிக்கும் சாரு நிவேதிதா போன்றவர்கள், அதே பத்திரிகையில் எழுதிதான் தம் கருத்தை சொல்ல வேண்டி இருக்கிறது.. தமிழ் நாட்டில் எழுத்தாளர்களுக்கு வேறு வழி இல்லை...
4 ஒரு சிறுவனுக்கு பூணூல் போட்டு விட்டால் சாதி ஒழிந்து விடுமா என்பது கேள்வி...
தாம் உயர்வாக நினைக்கும் விஷயம் அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்ற அவரது என்னத்தைதான் இதில் பார்க்க வேண்டும்..
நானோ, நீங்களோ, போநோஒல் போட்டு விட்டால் அது போலித்தனமாக இருக்கும்... ஏன் என்றால் , நாம் பூணூலை கவுர அடையாளமாக பார்ப்பதில்லை...
அரசு பதவியில் இருக்கும் பலர் பல தவறுகளை செய்கிறார்கள்... அதுதான் நாட்டுக்கு தீங்கே தவிர, பாரதியை போன்ற கவி உள்ளம் கொண்டவர்களால் அல்ல...
உயிருடன் இல்லாத ஒருவர், திட்டினாலும் ஆதரவு கரம் நீட்ட ஆள் இல்லாத ஒருவருடன் மோதுவது நமக்கு எந்த பெருமையும் அளிக்காது....
Monday, July 19, 2010
பாரதியை விமர்சியுங்கள்..ஆனால் வறுமையை கிண்டல் செய்யாதீர்கள்

பள்ளிக்கஊட காலத்தல் ஒரு நாள், நடிப்பில் சிறந்தவர் ரஜினியா கமலா என பரபரப்பாக விவாதம் செய்து கொண்டு இருந்தோம்..
கமல்தான் சிறந்த நடிகர் என் பல உலக படங்களை ஆதாரம் காட்டி , தெளிவாக பேசினான் ஒரு நண்பன். ரஜினி ரசிகனான ஒரு நண்பனுக்கு பதில் அளிக்க முடியவில்லை.. டெண்ஷான் ஆகிய நிலையில், அரிசி வாங்க என் கிட்ட கடன் வங்கி சாப்பிட்ட நாய், உலக திரைப்படத்தை பேசுறன் பாரு என எரிச்சலுடன் சொன்னான்.. உண்மையில் உதவி இருக்கிறான்.. நல்லவன் என்பது உண்மைதான்.. அனால், நாலு பேர் இருக்கிடம் இடத்தில் வறுமையை கிண்டல் செய்ததும், அந்த ஏழை நண்பன் முகம சுண்டி பொய் விட்டது. அவ்வளவு நேரம் ஆவேசமாக பேசியவன் அடங்கி போனது , அபோது அவனது முகபாவம் ஆகியவை என்னால் என்றும் மறக்க முடியாது..
இதே பாணியைத்தான், பாரதியாரை விமர்சிப்பவர்கள் கையாளுகிறார்கள்...
அவர் நீதி கட்சியை எதிர்ஹ்தார், அவரது ஜாதிய பார்வை என்பதெல்லாம் வேறு விஷயம்.
ஆனால், வறுமைக்காக , கடிதம் எழுதினர் என்பதை சொல்லி காட்டுவது, வறுமை என்பதை நாம் யாரும் உணர்ந்து பார்த்தில்லை என்பதையே காட்டுகிறது...
அடுத்த வேலை சோறு கிடைக்குமா, நாம் கூட பசியை தாங்கி விடலாம், அனால் நம்மை நம்பி இருப்பவர்களை காப்பாற்ற வேண்டுமே என்ற ஏக்கம், அது முடியாத பொது ஏற்படும் கழிவிரக்கம் என்றெல்லாம் , வறுமையின் கொடூரங்கள் அநேகம்..
இரண்டு நல சாபிடாமல் இருந்து விட்டு, அடுத்த நாள் சாபிட்டால், வாந்தி வரும்..சாப்பிட முடியாது....
பசி , பட்டினி எல்லாம் இல்லாத உலகம் வேண்டும்.. அது வரை அவர்களுக்கு உதாவ விதாலும், அதை கிண்டல் செய்யாமலாவது இருக்க வேண்டும்...
இப்படி பாட நிலையிலும் கூட, எத்ததனை கோடி இன்பம் வைத்தாய் இறைவ என்று பாடிஎதுதான் , பாரதியாரின் தனி தன்மை...
நல்ல சிந்தனை கொண்டவர்கள் கூட தம்மை அறியாமல் , வறுமையை கிண்டல் செய்வது , வருந்ததக்கது...
என்னை பொறுத்தவரை , யாரை வேண்டுமானாலும் விமர்சியுங்கள்...
ஆனால், வறுமையை கிண்டல் செய்யாதீர்கள்... இன்டர்நெட் பிச்சைகாரன் என்று இப்போதும் கிண்டல் தொடர்கிறது...
நாம் காசு இல்லாதா நாட்டிம்ன் சூழலில் வாழ்வத்டால்தான், வறுமையை கிண்டல் செய்வது நம் இயல்பாக மாறிவிட்டது என தோன்றுகிறது...
Thursday, July 15, 2010
பதவி வெறி அரசியல்வாதிகள், பாலகுமாரன் - பரிதாப பட வேண்டியது யாருக்கு
இதுக்கு காரணம் என்னம்மா ? நான் பிறவி மேதையா "
" இல்லை பா.. அதுக்கு காரணம் அவுங்க எல்லாம் சின்ன பசங்க..உனக்கு பதினைஞ்சு வயசு !!! "
முழுமையான வாழ்வு என்பது அந்தந்த வயதுக்கு ஏற்ப வாழ்வது... சின்ன வயதில் சைக்கிள் ஓட்டுவதே சாதனையாக இருந்தது... வாலிப வயதில் விமானம் ஓட்டுவத்துதான் சாதனையாக இருக்க முடியும்... சைக்கில் ஒட்டிய பெருமையை பேசி பயனில்லை..
ஆனால், தமிழ்நாட்டில் இப்படி பட்ட ஆரோகியமான வளர்ச்சி இல்லை..
ஒருவர் அரசியலில் இறங்கி, பதவியில் இருந்து விட்டால், அதே பதவிதான் அவர் வாழ்நாள் லட்சியம் ஆகி விடுகிறது... சாகும் வரை அவர் வாழ்வு பதவியை சுற்றித்தான்...
அமெரிக்க போன்ற நாடுகளில் இந்த நிலை கிடையாது... குறிப்பிட்ட வயத்தில் அரசியலில் இருந்து ஒய்வு பெற்று வேருதுரையில் திறமையை காட்டுபவர்கள் அநேகம்...
தொழில் துறையில் சாதித்து விட்டு, ஒய்வு பெறுவதும் அங்கெல்லாம் சகஜம்...
இந்தியாவில், ஓய்வு பெறும் அரசியல் வாதியை பார்க்க முடியுமா?
கடைசி மூச்சு வரை பதவி வெறி இருப்பதைத்தான் , ஒரு மனிதனின் மாபெரும் குணமாக தமிழ்நாட்டில் நினைக்கிறோம்.
இந்த மனநிலை இருப்பதால் தான், பாலகுமாரன் போன்ற ஒரு மாபெரும் எழுத்தாளர் , எழுத்தில் இருந்து சற்று ஒதுங்கி இருப்பதை , அவரது தோல்வி என சிலர் பார்க்கிறார்கள்..
அவர் நினைத்தால், பழைய மாதிரி கதைகளை இன்றும் எழுத முடியும்.. ஆனால் அது அவருக்கு பெருமை அளிக்காது...
அந்தா கால கட்டத்தில் அவை சிறப்பானைவைதான்.. ஆனால் , இன்றும் அதையே அவர் எழுத தேவையில்லை...
உடையார் போன்ற நாவலுக்கு அவர் அளித்திருக்கும் உழைப்பு , அந்த நாவல் அடைந்த வெற்றி அவருக்கு அளித்து இருக்கும் நிறைவே அவருக்கு போதுமானதாக இருக்கும்... இனி அவர் எழுதவே தேவை இல்லை.... அவர் வாழ்க்கையே ஒரு அழகிய நாவல்தான்...
ஆனாலும் அவர் எழுதினால் நல்லதுதான்... அது உடையாரை விட சிறப்பனதாக இருக்க வேண்டும்...
அவர் அடைந்த முழ்மையை , நிறைவை, சாகும் வரை பதவிக்காக அலையும் அரசியல் வாதிகள் அடைய முடியாது..
இந்த அரசியல் வாழ்க்கைதான் ( பணம் சம்பாத்தித்தாலும் ) தோல்வியே தவிர, பாலகுமாரன் எழுத்துக்கலுக்கு என்றும் தோல்வி இல்லை
பாலகுமாரனை பாராட்டுவோம்...பதவி வெறி அரசியல்வாதிகளை நினைத்து பரிதபபடுவோம்
Wednesday, July 14, 2010
அறிவியல் ஆண்டவன் ஆக்டோபஸ் - பி எஸ் எல் வி ராக்கெட்டும் , புட்பாலும்

அனந்த புரத்து வீடு படம் ரிலீசுக்கு கிடைத்த கவனம கூட , பி எஸ் எல் வி ராக்கெட் ஏவப்படதுக்கு கிடைக்கவில்லை...
ராக்கெட் என்பது விஞ்ஞானிகள் சம்பந்தப்பட்டது ..இதனால் நமக்கு என்ன பலன் என்றே பெரும்பாலோநூர் நினைன்றனர் ( வலை பதிவர்கள் இப்படி நினைக்க வாய்ப்பில்லை )
செயற்கைகோளின் பலன் என்ன, பி எஸ் எல் வி, ஜி எஸ் எல் வி என்றால் என, அதில் இருக்கும் சுவையான தகவல்கள் என்ன, நுணுக்கங்கள் என்ன என்பதையெல்லாம் இன்னொரு முறை பார்க்கலாம்...
என் கவனத்தை கவர்ந்தது, கால் பந்தாட்ட போட்டியில், ஆக்டோபஸ் பெற்ற கவனமும், ராக்கெட் ஏவப்பட்டபோது, ஆலய வழிபாடு செய்யப்பட்டது போதிய கவனம் பெறாததும்தான்...
எப்போதுமே , மனிதனுக்கு தன்னை விட மேலான சக்தியை நம்புவது பிடித்தமான ஒன்று...
( john grey யின் இந்திய சாமியார் பக்தி குறித்து நான் எழுதியதை படித்து இருப்பீர்கள் )
இது போன்ற நம்பிக்கை, இந்தியாவுக்கு மட்டுமே சொந்தம் அல்ல... உலகம் முழுதும் இப்படி நம்பிக்கை இருக்கிறது..
பாமரன் முதல் விஞ்ஞானிகள் வரை அனைவரிடமும் ஒரு வித நம்பிக்கை இருப்பதை பார்க்கலாம் ( குறிப்பிட்ட பேனாவைத்தான் , சிலர் தேர்வுகளுக்கு எடுத்து செல்வார்கள் )
ஆக்டோபஸ் நம்பிக்கையும், ஆண்டவன் நம்பிக்கையும் ஒன்றா என்பது கேள்வி...
இல்லை... ஆக்டோபஸ் என்பது , சம்பவத்தில் தொடர்பு இல்லாதவர்கள், சும்மா ஆருடம் கணிப்பது...
ஆண்டவன் நம்பிக்கை என்பது , சம்பவத்தில் தொடர்பு உள்ளவர்கள், வெற்றிக்காக வேண்டி கொள்வது...
அறிவியலை நம்பாமல் , ஆண்டவனை நம்பலாமா? இது தவறில்லையா ? அடுத்த கேள்வி....
தவறுதான் ....
அறிவியலை நம்பாமல், ஆலய வழிபாடு மட்டும் போதும் .. ராக்கெட் பறந்து விடும் என நினைத்தால் தவறுதான்...
ஆனால், அவர்கள் அப்படி இருந்தது போல தெரியவில்லை... அறிவியலை முழுதும் நம்பி, உழைத்து, பல கணகீ டுகளை செய்து, தயார் நிலையை எட்டியதும், ஆலய வழிப்பட்டு செய்து இருகக ர்கள்..
நமது விஞ்ஞானிகள் , ராக்கெட் வெற்றிகரமாக செலுத்தப்பட வேண்டுமென்பதற்காக திருப்பதி கோவிலுக்கு சென்று வழிபட்டிருக்கின்றனர். இஸ்ரோவின் தலைவர் கே.ராதாகிருஷ்ணன் உட்பட பல விஞ்ஞானிகள் கோவிலுக்கு சென்று சுப்ரபாத சேவையில் ஏழுமலையானை தரிசித்திருக்கின்றனர். ராக்கெட்டின் மாதிரி வடிவத்தை ஏழுமலையானின் பாதத்தில் வைத்து சிறப்பு வழிபாடும் நடத்தியிருக்கின்றனர்
ஆலய வழிபாடு செய்ததால்தான் வெற்றி கிடைத்ததா , என நமக்கு தெரியாது... ஆனால், எப்படியும் ஜெயிக்க வேண்டும் என்ற அவர்கள் ஆர்வம் இதில் தெரிகிறது...
ஆலய வழிபாடு செய்தும் தோல்வி அடைந்து இருந்தால், எவ்வளவு கேலிகள் கிண்டல்கள் எழுந்து இருக்கும் என்பதை கணிப்பது சுலபம்தான்..
ஆலய வழிபாது என இல்லாவிட்டாலும், தனக்கு மீறிய ஒரு சக்தியை எல்லோரும் நம்புவதை பார்க்க முடியும்..
அவர் நீண்ட ஆயுள் பெற , இயற்கையை பிரார்த்திக்கிறேன் என ஆசி வழங்கும் நாத்திக தலைவர்கள்,
அருபேராற்றல், நலத்தை வழங்கட்டும் என கூறும், ஆன்மிக வாதிகள்,
குரு அருள், யாகம் வளர்த்தல் என எத்தனையோ இருந்தாலும், எதையும் கேலி செய்து பயன் இல்லை.
மக்களுக்கு நலம் விளைந்தால் சரிதான்...
ஒருவர் எதை நம்புகிறார், எதை நம்பவில்லை என்பது முக்கியம் இல்லை...
என்ன செய்கிறார் என்பதே முக்கியம்..
அந்த வகையில் நமது விஞ்ஞானிகளை பாராட்ட விரும்புகிறேன்
ஸ்பெயின் அணிக்கும் வாழ்த்துக்கள்....
குறைந்த கோல், நிறைந்த வெற்றி என்ற அவர்கள் ஆட்டம் பற்றி நிறைய பேசலாம்...
விரிவாக பிறகு பார்க்கலாம்
Monday, July 12, 2010
சாமியாரும் , எழுத்தாளரும்- புதிய தகவல்கள்
இவர் நம் இந்திய சாமியார் ஒருவரின் பக்தர் என அறிந்த போது ஆச்சர்யமாக இருந்தது...
ஏர் டெக்கான் விமான சேவையை ஆரம்பித்த கேப்டன் கோபிநாத் வாழ்க்கை வரலாற்றில் , கோபிநாத் இதை குறிப்பிட்டு இருக்கிறார்..
ஊருக்கெல்லாம் அறிவுரை வழங்கும் வெளிநாட்டுக்காரர் ஒருவருக்கு, இந்திய சாமியாரிடம் என்ன தேவை இருக்க முடியும்?
எழுத்தாளர் , நம் சாமியாரை பார்த்தாராம்.. " என்ன வரம் வேண்டும் " சாமியார் கேட்க, எழுத்தாளர் சொன்னாராம்..
என்ன ஆச்சரியம். அடுத்த நாளே அந்த வரம் பலித்து விட்டதாம்...
ஒரு வேளை, இது தற்செயலானது என நினைக்கலாம்..
இன்னொரு வரமும் கேட்டாராம்... அதுவும் பலித்ததாம்...
இந்தியாவில் இருந்த படியே, அயல்நாட்டு சம்பவங்களை ஆட்டுவிக்கும் சாமியார்... அசந்து போன எழுத்தாளர், பக்தராக மாறினாராம்..
அந்த சாமியாருக்கு , லோக்கல் பக்தர்கள் யாரும் இல்லையாம்... எல்லாம் வெளிநாடினர்தானாம்..
அது என்ன வரம்.. சாமியார் பெயர் என்ன , எங்கு இருக்கிறார் என அறிந்து கொள்ள விரும்புபவர்களும், அவரிடம் ஆசி பெற விரும்பும் எழுத்தாளர்களும் , படிக்க வேண்டிய புத்தகம், simplyfly ... by கேபடன் கோபிநாத் ..
************************************************************************************
பொதுவாக இது போன்ற , வெற்றி வரலாறு எழுதுபவர்கள், தனது உழைப்பு, தன்னம்பிக்கை , விடா முயற்சி - இதைத்தான் வலியுறுத்துவார்கள்...
அனால், இந்த புத்தகம் சற்றே மாறுபட்டு, வாய்ப்புகள்தான் மனிதனின் வெற்றி தோல்வியை தீர்மானிக்கின்றன என்ற உண்மையை அருமையாக சொல்கிறது...இதை சொல்ல அவர் வெட்கப்பட வில்லை...
அதற்காக , வாய்ப்பு மட்டுமே அவர் வெற்றிக்கு காரணம் என்பதில்லை... அவர் சும்மா உட்கார்ந்து இருக்கவில்லை... வாய்ப்புகளை கச்சிதமாக பயன்படுத்தி கொண்டார்...
ஒரு வேலையில் நிபுணத்துவம் பெற்றால்தான் சாதனை செய்ய முடியும் என்ற மாயையும் உடைக்கயார் இவர்...
விவசாயம், உணவகம், பைக் ஏஜன்சி, ஹெலிகாப்டர், விமானம் என பல துறைகளில் இருந்து பார்த்து இருக்கிறார்...
வாழ்கையை இனிய பயணமாக ஆக்கி கொண்டு இருக்கிறார் கோபிநாத் அவர்கள்...
தண்ணீரை எடுத்து வர கழுதைகளை பயன்படுத்துவது போன்ற புதுமையான ஐடியாக்களுகு சொந்த காரர் இவர்..
சில ஜெயிக்கலாம, சில தோற்கலாம்.. ஆனால் தன்னம்பிக்கை இழக்க கூடாது என்பது இவர் மனநிலை...
ஆனால், தன்னம்பிக்கையால் மட்டும இவர் வெற்றி பெறவில்லை... வாய்ப்புகளும், பலரது உதவிகளும் வெற்றிக்கு காரணம் என்று சொல்லும் நேர்மை, புத்தகத்தின் மதிப்பை உயர்த்துகிறது...
கண்டிப்பாக படிக்க வேண்டிய புத்தகம்...
Thursday, July 8, 2010
ராமன் வெர்சஸ் ராவணன் - நடந்தது என்ன ?
இந்த வருடத்தில் , இந்த சம்பவம் நடந்தது என துல்லியமாக சொல்வது வரலாறு..
ஏன் நடந்தது என தன கற்பனையால் இட்டு நிரப்புவது வரலாற்று நாவல்..
வரலாற்று ஆதாரங்கள் தெளிவாக இல்லாத நிலையில், சில அடிப்படை பாத்திரங்களை வைத்து , அடிப்படை சம்பவங்களை மாற்றாமல் வைத்து , கதை புனைவதும் வழக்கமாக நடை பெறும் ஒன்றுதான்..
ராமன்- சீதை- ராவணன் என்ற மூன்றை வைத்து பல ராமாயணங்கள் உள்ளன ..
ஏதோ ஒரு நீதியை வலியுறுத்தும் வகையில் அவை இருக்கும்... ஒருவரை நல்லவராக காட்டி, அவரை ரோல் மாடலாக கொள்ளுங்கள் என வலியுறுத்துவது இவற்றின் உத்தேசம்.. இதற்கெல்லாம் ஆதாரம் இல்லை..எனவே எப்படி வேண்டுமாலும் சொல்லலாம்... அனால் சொல்வது மனித சமுகத்துக்கு நல்லதாக இருக்க வேண்டும் )
ஒரு ராமாயணத்தில், சீதை என்பவள், ராவணின் மகள்... ராமனின் போக்கு பிடிக்காமல் , ராவணன் அவளை பிறந்த வீடு அழைத்து செல்கிறான் ..அதன் பின் , ராமன் திருந்தி, தன வீரத்தை நிரூபித்து , அவளை அழைத்து செல்கிறான் என்று வருகிறது...
இன்னொரு ராமாயணத்தில் , ராமனின் போக்கு பிடிக்காமல், தசரதன் , அவனை காதுக்கு நாடு கடத்துகிறார்..
இன்னொரு ராமாயணத்தில் எல்லோருமே நல்லவர்கள்... ராமன் உலக அனுபவம் பெறுவதற்காக, கைகேயி அவனை காட்டுக்கு அனுப்புகிறாள்...
இப்படி எல்லாம் பல இருந்தாலும், அதிகமாக ஏற்று கொள்ள பட்ட ராமயணம, ராமன் ஏக பத்தினி விரதன...சீதை கடத்த படிக்கிறாள்... ராவணன் முழுதும் கெட்டவன் அல்ல... கடை சியில் சீதை மீபு.. தன பின் அக்னி பிரவேசம் என ஒரு கிளைமேக்ஸ் ..அவள் காட்டுக்கு சென்று விடுகிறாள்,,,லவன் குசனை பெறுகிறாள்... என ஒரு க்ளைமேக்ஸ்...
இன்னொரு பார்வையும் உண்டு... ராவணன் மிக நல்லவன்... பல கலைகளில் வல்லவன்... சீதை மேல் காதல் கொண்டு அவளை கடத்துகிறான்... ஆனாலும் அவள் சம்மதம் தான் முக்கியம் என கண்ணியம் காக்கிறான்....
இந்த அ டிப்படையில் , புதிதாக ராமாயணம் சொல்ல நினைத்தது தவறில்லை...
ஆனால், நல்லவன் தோற்றதாக காட்டியது தப்பு... யதார்த்தவாத படங்களில் அப்படி காட்டுவார்கள்... இந்த படத்தில் இப்படி காட்டி இருக்க கூடாது...
இதுதான் தோல்விக்கு காரணம்...
Wednesday, July 7, 2010
விஷ்ணுபுரம் பதிவு பிடிக்கவில்லையா? திட்டுங்கள் சாரு நிவேதிதாவை
அதே போல , ஒருவர் எழுத்தை படிப்பவர்கள் அதை பற்றி விவாதிபதில்லை என்று அவர் குறைபட்டு இருப்பதும் உண்மையே.. அனால் யாரும் புத்தகங்கள் வாங்குவதில்லை என்று அவர் சொல்வது தவறு... அவர் ரசிகர்களை விட, என்னை போன்றவர்கள் அவர் நூல்களை வாங்கி படிப்பதுதான்அதிகம்
உண்மையில் ஒரு எழுத்தாளனின் ரசிகரை விட , என்னை போன்ற பார்வையாளர்கள்தான், ஒருவரது எழுத்தை ஊன்றி படிக்க முடியும்...
என்னை பொறுத்தவரை, ராஜேஷ்குமார், பாலகுமாரன், தமிழ்வாணன், பட்டுகோட்டை பிரபாகர், ஜெயகாந்தன், ஜெயமோகன், சாரு நிவேதிதா என எல்லோரையும் படிப்பவன்... ஒருவர் உயர்வு, ஒருவர் தாழ்வு என எண்ணுவதே இல்லை...
அதே சமயம்,. ஒரு எழுத்தாளர், மற்ற எல்லோரையும் மட்டம் தட்டுவதை ஏற்றுகொள்கிறேன்.. புரிந்தும் கொள்கிறேன்... ஒரு குறிப்பிட்ட சிந்தனையில் இருக்கும் ஒருவர், மற்ற வகை சிந்தனையை , மற்றவர் நடையை ரசிக்க முடியாததுதான்..
ஆனால், ஒரு எழுத்தாளரின் ரசிகர்கள், கண்ணை மூடிக்கொண்டு மற்றவரை விமர்சிப்பது சரியல்ல... எல்லோரையும் படிப்பதுதான் நல்லது....
குறைந்த பட்சம், எந்த எழுத்தாளரின் எழுத்தை ரசிகிரார்களோ, அதையாவது படிக்க வேண்டும்...
ஜெயமோகனின் புத்தகமான விஷ்ணுபுரம் நாவலை படித்து முடித்ததும், அதை பற்றி எழுதுவதற்கு சாரு வின் பதிவுதான் காரணம்... எனவே என் அந்த பதிவு பிடிக்கவில்லை என்றால் நீங்கள் திட்ட வேண்டியது சாரு நிவேதிதாவைதான்,,..
அதே போல, சாறு நிவேதிதாவின் பல புத்தகங்களை படித்து ரசித்து இருந்தாலும் , அதை பற்றி எழுத என்னை ஊக்கு விக்காததர்காக , யாரை வேண்டுமாலும் திட்டி கொள்ளுங்கள்...
எந்த குறிப்பிட்ட எழுத்தாளரின் ரசிகராக இல்லாமல் , எழுத்தை மட்டும் ரசிப்பதால், பல புத்தகங்களை படிக்க முடிகிறது..
இலக்கிய விமர்சனம் படிக்க சிலருக்கு போரடிக்கலாம்..
ஆனால், என்னை போன்ற பார்வையாளன் , ஒரு புத்தகத்தை பற்றி செய்யும் அறிமுகம் , சாதாரண மனிதனின் பார்வையாக இருக்கும் என்ற நம்பிக்கையோடு, சாரு நிவேதிதா நூல் உட்பட எல்லோருடைய புத்தகங்கள் பற்றியும் எளிய அறிமுகம் தர உத்தேசித்து இருக்கிறேன்...
matrix + chaos தியரி = விஷ்ணுபுரம்.( பொருத்தம் இல்லாத தலைப்பு, வருத்தம் தராத நாவல் )
என்னை பொறுத்தவரை, அந்த படம் பார்த்து முடித்தவுடன், நாம் இருப்பது 2010 ல் தானா, உண்மையில் நாம் இருக்கிறோமா அல்லது இதெல்லாம் கற்பனை தோற்றமா , வேறு யாரவது நம்மை ப்ரோகிராம் செய்து வைத்து இருக்கிறார்களா என்றெலாம் தோன்றியது...
யோசித்து பார்த்தால், அப்படி இருக்கும் சாத்தியமும் இருக்கிறது...
அதே போன்ற உணர்வுதான், ஜெயமோகனின் விஷ்ணுபுரம் படித்து முடித்ததும் தோன்றியது...
நாமெல்லாம் உண்மைதானா அல்லது யாரோ ஒருவர் சொல்லி கொண்டு இருக்கும் கதையில் நாமெல்லாம் ஒரு பாத்திரம்தானா .. எல்லாமே ஒரு நாடகம்தானா என்று ஓர் உணர்வு ஏற்பட்டது...
உண்மையில் இந்த உணர்வை ஏற்படுத்துவது அந்த நாவலின் நோக்கம் அல்ல .. ஆனால் எனக்கு ஏற்பட்ட உணர்வு இது... உண்மையல் இதை படிப்பது ஒரு வித்தியாசமான அனுபவத்தை தந்தது.... அறிவுரை கூறுவது, ஒரு சிந்தனையை போதிப்பது , ஒரு நபரின் சாகசங்களை சொல்வது என்று எதுவும் இல்லாமல் ஒரு வித்தியாசமான நாவலாக இருந்தது விஷ்ணு புரம்.
*************************************************************
சில ஆண்டுகளுக்கு முன், ஒரு நண்பன் இந்த புத்தகத்தை என்னிடம் கொடுத்து படிக்க சொன்னான்... இறந்த புத்தகம் அவனை மாற்றி விட்டதாக சொன்னான்... விஷ்ணுபுரத்துக்கு முன், வி. பின் என அவன் வாழ்வை பிரிக்கும் அளவுக்கு இந்த நாவல் இருப்பதாக சொன்னான்..
நாவலின் பெயர் , அட்டை படம், பின் அட்டை குறிப்பு- இதெல்லாம் நாவல் ஒரு சாமிக்கதை போல என என்னை நினைக்க வைத்தது... எனவே சும்மா புரட்டி பார்த்து விட்டு அவனிடமே கொடுத்து விட்டேன்.
சென்ற வாரம் , புத்தக கடைக்கு சென்ற போது தற்செயலாக இந்த புத்தகத்தை பார்த்தேன்... 847 பக்கங்கள்.. சரி,,இதில் என்னதான் இருக்கிறது.... படித்து பார்க்கலாமா என தோன்றியது... விலையை பார்த்தேன்.. 500 ரூபாய்... இந்த விலைக்கு இதுவரை எந்த தமிழ் புத்தகமும் வாங்கியதில்லை.... ஆங்கில புத்தகங்கள் வாங்கி இருக்கிறேன் .தமிழ் பித்தகத்தில் அந்த அளவுக்கு , நான் எதிர்பார்க்கும் விஷயங்கள் இருக்குமா என்ற சந்தேகம் எனக்குஉண்டு..risk
சரி.. ரிஸ்க் எடுத்து பார்க்கலாம் என வாங்கினேன்..
***************************************************************************************************************
ஒரு புள்ளியில் கதை ஆரம்பித்து , சிறிது சிறிதாக வேகம் எடுத்து, அதிவேகத்தை இறுதியில் அடைவது ஒரு விதம்..
சில ஆங்கில படங்களில் , ஆரம்பத்திலேயே ஒரு பெரிய விஷயம் நிகழ்ந்து நம்மை நாற்காலியில் விளும்புக்கு தள்ளும் அளவுக்கு பரபரப்பு ஏற்படுத்தும. அதன் பின், அதற்கு சம்பந்தமே இல்லாத வகையில் வேறு காட்சிக்கு மாறி, சிறிது சிறிதாக வேகம் எடுக்கும்... முந்தல் காதின் அர்த்தம் பிறகு புரியும்..
இந்த பாணியில் இருக்கிறது இந்த நாவல்..
கடினமாக இருக்கும் என நினைத்து , சில பக்கங்களை புரட்ட ஆரம்பித்த சில நொடிகளிலேயே அது என்னை ஈர்த்து விட்டது... சிதறி கிடப்பது போல காட்சிகள் இருந்தாலும், ஒவ்வொன்றும் சுவையாக இருப்பதால் , எதையும் விட்டு விடாமல் படிக்க முடிந்தது..
பல இடங்களில் வைக்கப்பட்ட புள்ளிகள் , ஒரு அழகிய கோலமாக கடைசியில் மாறுவது மிக நேர்த்தி..
*************************************************************************************************************
ஒரு நபர்... அவருக்கு ஏற்படும் சிக்கல்,,,, அத அவர் எப்படி தீர்க்கிறார்... என்ற நேர்கோட்டில் நாவல் செல்லவில்லை ..அப்படி சென்று இருந்தால், சிறிது நேரத்தில் அலுப்பு தோன்ற கூடும்... முடிவுதான் முக்கியம் என்பதால், பல பக்கங்களை வேகமாக கடந்து சென்றுவிடுவோம்..
விஷ் ணு புரத்தை பொறுத்தவரை, நாவல் எங்கு சென்று முடிகிறது என்ற ஆவலை விட, நாவல் தொட்டு செல்லும் விஷயங்கள் முக்கியம் என்பதால், ஒவ்வொரு வரியும் முக்கியத்துவம் பெறுகிறது ...
பிறத்தல் , வாழ்தல் ,இனப்பெருக்கம் செய்தல், சாதல் - இதைத்தானே மிருகங்களும் செய்கின்றன... இதை தாண்டி மனிதனுக்கு வேறு எதுவும் இருக்கிறதா... என்ற ஞான தேடல்தான் பல நல்லதுக்கும் காரணம் ..பல துன்பங்களுக்கும் காரணம்...
ஒரு வேளை, இப்படி தேடுவதே ஒரு வேண்டாத வேலையா ..இப்படி தேடி நம் வாழக்கை வீணடித்து கொள்கிறோமோ என்றும் தோன்றுகிறது..
இதை எல்லாம, பல்வேறு விதமாக பல மார்க்கங்கள் விளக்குகின்றன... எல்லா வழிகளையும், அதனதன் பார்வையில் விளக்கும் ஞான சபை விவாதங்கள் , நேர்மையாக விவரிக்கப்பட்டுள்ளன..
ஒட்டு மொத்த நாவலையும் படிக்காமல், அந்த பகுதியை மட்டுமே படித்தால் போதும் என தோன்றுகிறது... இன்னொரு விதமாக பார்த்தால், அந்த பகுதி இல்லாமல் கூட நாவல் நன்றாக இருக்கும் என்றும் தோன்றுகிறது...
*********************************************************************************
இவ்வளவு கடினமான நாவலை எழுதும்போது கூட நகைசுவை உணர்ச்சியை தக்க வைத்துள்ள , அவரை பாராட்டாமல் இருக்க முடியாது..அதே போல , ஒரு திரைப்படத்தை பார்ப்பது போன்ற அனுபத்தை தரும் வகையில், காட்சி அமைப்புகளை அமைத்துள்ளார்..
சைன்ஸ் பிக்க்ஷன் போல , சில காட்சிகள் உள்ளன... ரகசிய கதவுகள், பாஸ் வோர்ட் என்றெல்லாம் ரசிப்பதற்கு பல இடங்கள் உள்ளன,, ( பாஸ் வோர்ட் என்பது நேரடியாக சொல்லப்படவில்லை... கூர்ந்து படித்தால் புரியும் )
******************************************************************************************************
உங்கள் அறையை அப்படியே விட்டு விட்டால், அது ஒழுங்கு நிலையில் இருந்து ஒழுங்கின்மை என்ற நிலைக்கு செல்லும்... ஒழுங்கின்மை என்ற நிலைக்கு செல்வதுதான் இயற்கை.... என்ரோபி என்று அறிவியல் சொல்வது இதைத்தான், ... இதைதான் காலம் என்கிறார்கள்... பரிபூரண ஒழுங்கின்மையை அடைந்த பின், மீண்டும் ஒழுங்கு என்ற நிலைக்கு வந்தாக வேண்டும்...
இந்த இடத்தைத்தான், பிரளயம் என்று நாவல் சொல்கிறதோ என்று தோன்றுகிறது ..
அதே போல chaos theory .. ஒரு வண்ணத்து பூச்சி சிறகடிக்கும் சிறிய செயல், பல்வேறு சிக்கலான வழிகள் மூலம் அதிகரித்து சென்று, பெரும் புயலாக மாறக்கூடும் ...
ஒரு செயல், அதன் மூலம் இன்னொரு செயல் என்று விரிவடைந்ததுதான் இந்த உலகமா.. ? திருவடி தான் விரும்பிய பெண்ணை அப்போதே அடைந்து இருந்தால், ஓர் ஆழ்வார் உருவாக்கி இருக்க மாட்டார் ....
****************************************************************
மனிதன் ஞானத்தை உருவாக்குகிறான்.. அது அவன் மேல் உட்கார்ந்து இருக்கிறது... தள்ளாடிய படி சுமந்து திரிகிறான்..
காமம் மன வாசல் திறந்து நம்முள் நுழையும் போது, அதன் நிழல்தான் முதலில் நுழைகிறது.
மக்கள் சாதாரணமானவர்களைத தான் தலிவர்கள் ஆக்குகிறார்கள்..பிறகு அவனை அசாதரனமானவன் என நினைத்து வணகுகிரார்கள்.
அதிகாரம் இருப்பதை போல காட்டி கொள்ளும்போது மேலும் அதிகாரம் வந்து சேருகிறது..
பொருட்களுக்கு தனி தன்மை என்பது, இன்னொரு பொருளின் மீது அது ஏற்படுத்தும் விளைவு மட்டுமே. இந்த பொருள் இப்படித்தான் இருக்கும் என சொல்ல முடியாது
தீ என்பது எல்லோருக்கும் சுடத்தானே செய்யும். சுடாத தீ உண்ட ?
உண்டு... நீரின் ஆத்மாவுக்கு..
நாம் பார்க்கிறோம், பார்க்கும் கணத்திற்கும் அப்பொருளை பார்வை தொட்ட கணத்திற்கும் இடையே ஒரு கால இடைவெளி உள்ளது. அது மிகமிகச் சிறியதாக இருக்கலாம். ஆயினும் அவ்விடைவெளியில் அப்பொருள் அழிந்து இன்னொன்று பிறந்திருக்கும்…( ஒரே ஆற்றில் இரண்டு முறை குளிக்க முடியாது என்ற ஜென் தத்துவத்தை தொட்டு செல்கிறார் )
பன்னிரண்டாவது லிங்கம் எது ? ( எது என்பதை தனியாக சொன்னால் ஒரு மாதிரி இருக்கும்... படித்து தெரிந்து கொள்ளுங்கள் )
***********************************************************************************************
எல்லோரும் இதை படித்து , ஒரு நல்ல அனுபவத்தை பெற வேண்டும் என விரும்புகிறேன்.. ஆனால் , இது எல்லோருக்குமான நாவல் அல்ல என்றும் தோன்றுகிறது... முதல் நூறு பக்கங்களை படித்து விட்டால், பிறகு நிறுத்த முடியாது...
நூலகத்தில் இருந்தோ, நண்பர்களிடம் இருந்தோ வாங்கி படிப்பதை விட , சொந்தமாக வாங்கி படிப்பது நல்லது... மீண்டும் மீண்டும் படிக்க வேண்டி இருக்கும்...
*****************************************************************************
மொத்தத்தில் ,இதற்காக செலவிட்ட நேரம், பணத்திருக்கு முழுதும் தகுதி உள்ள புத்தகம்..
விஷ்ணுபுரம்- அகம் , புறம் என அனைத்தையும் ஆராயும் விறு விறு புரம்..
****************************************************************************************************
சில குறைகளை சுட்டி காட்ட விரும்புகிறேன் ...
1 விஷ்ணு புரம் என்ற தலைப்பு, இது மத ரீதியான நூல் என்ற அடையாளத்தை தருவதால், என்னை போல பல வாசகர்களை நெருங்க முடியாமல் போகிறது ... ஒரு தத்துவ நூலான இதற்கு, பின் தொடரும் நிழலின் குரல் என்பது போல செகுலர் பெயரை வைத்து இருப்பதுதான் பொருத்தமாக இருந்துஇருக்கும்
2 பின் தொடரும் குரல் நாவலில் இருந்த அளவுக்கு வடிவ அமைப்பு நேர்த்தி இதில் இல்லை என தோன்றுகிறது...
3 மன்னர்கள், ஆழவார்கள், வைதீகர்கள் என அனைவரையுமே எதிர்மறையாக காட்டி இருப்பது நெருடலாக இருக்கிறது..
4 ஞான சபை விவாதத்தில் தமிழ் மரபான சித்தர் மரபு சார்ந்த விவாதம் இல்லாததது ஒரு குறை.
5 அத்வைதம், த்வைதம் , விஷிஷ்டத்வைதம் போன்ற வார்த்தைகளியே காணவில்லை ....
6. தேடுதல் என்பதே கூட ஒரு வகை அகங்காரம்தான்.. அது அறிதலை தடை செய்யும் என்ற ஜிட்டு கிரிஷ்ணமுர்தியின் தத்துவமும் தலை காட்டுகிறது... கடைசியில் என்னதான் சரியான வாழ்வு முறை , என்று திட்டவட்டமாக எதுவும் கூறாமல் நழுவுவது போலதோன்றுகிறது
***************************************
விஷ்ணுபுரம் - ஆசிரியர் : ஜெயமோகன் கவிதா வெளியீடு விலை rs 500
Tuesday, July 6, 2010
பந்த் - யாருக்கு வெற்றி - கிரிடிகல் அனலிசிஸ்
பந்த் நடத்துவது சட்ட விரோதம் என ஆளும் கட்சியாக இருந்த போது அறிவுரை சொன்ன , அ தி மு க வினர், கடை அடைத்து ஒத்துழைப்பு தாங்க அன்ன்னச்சி என சில இடங்களில் பவ்யமாகவும் , கடையை அடிடா சோமாறி என சில இடங்களில் கொள்கை பிடிப்புடனும் , அடைப்புக்கு போராடினர்..
பந்த் நடத்துவது ஜனநாயக உரிமை என சொன்னவர்கள், இதனால் இத்தனை கோடி நஷ்டம் என செய்தி தருகின்றனர்... அப்படி என்றால், மற்ற நாட்களில் இவ்வளவு கோடி லாபம் கிடைக்கிறதா... அதெல்லாம் எங்கே போகிறது என நமக்கு குழப்பம்..
பந்த் என்பது சரியா தவறா என்பதே குழப்பமாக இருக்க, இது வெற்றியா தோல்வியா என இன்னொரு குழப்பம்..
பந்த் வெற்றி என தினமணி செய்தி ( தேசிய அளவில் வெற்றியாம் .. தமிழ்நாட்டில் பெரிய பாதிப்பு இல்லையாம்..ஆனாலும் ஓரளவு ஆதரவு இருந்ததாம் )
பந்த் பிசு பிசுப்பு... ஆனால் பத்தாயிரம் கோடி இழப்பு - தினமலர்
பந்த் தோல்வி என , படங்களுடன் தின தந்தி செய்தி... தேசிய அளவில் எப்படி என்ற செய்தி இல்லை...
ஆங்கில இதழ்கள் பந்த் வெற்றி என்கின்றன ..
ஒரு சம்பவத்தை எத்தனை விதமாக ரிபோர்ட் செய்கிறார்கள் என்று பார்த்தல் ஆச்சர்யமாக இருக்கிறது...
இந்த பிரச்சினை போதாது என்று , அண்ணா திமுக சரியாக ஒத்துழைக்க வில்லை என தோழர்கள் ஆதங்கப்பட்டு இருக்கின்றனர்..
காங்கிரஸ் கூட்டணி வாய்ப்பை கெடுக்க விரும்பாமல், அ தி மு க பட்டும் படாமல் நடந்து கொண்டு இருக்கலாம்..
சரி..பந்த் வெற்றியா ..இல்லையா டிராவா ..
யாருக்கு வெற்றி...
வெற்றி பெற்றோர்...
தி மு க... தமிழநாட்டில் பாதிப்பு இல்லாமல் பார்த்து கொண்டது...
அண்ணா திமுக ... காங்கிரசையும் பகைக்காமல், அதே சமயம் ஆளும் கட்சியையும் எதிர்த்த சாமர்த்தியம்
கம்யூனிஸ்ட் ---- தமது ஏரியாவில் , யாரையும் நம்பாமல் வெற்றி பெற்ற தில்..
காங்கிரஸ் --- என்ன நடந்தாலும் தன நிலையில் இறங்கிவராத, " மன உறுதி "
பி ஜே பி - தம் மாநிலங்களில் அடைப்பை வெற்றி பெற செய்தது ..
தோல்வி அடைந்தோர் ...........................
பொதுமக்கள் ----- இந்த அடைப்பால் , விலைவாசி குறையவில்லை.. ஒரு நாள் வருமான இழப்புதான் கிடைத்த பலன்
Friday, July 2, 2010
செம்மொழி மாநாடும் , பிச்சைகாரத்தனமும் - பத்ரி அவர்களுக்கு பணிவான விளக்கம்
அவரரது சமிபத்திய பதிவு ஒன்று , என்ற புரிதலும் இல்லாமல் எழுதப் பட்டிருந்தது அவரை மதிப்பவன் என்ற முறையில் வருத்தப்படுத்தியது..
செம்மொழி மாநாட்டில் பொதுமக்கள் சிலர , அங்கிருந்து இலவசாமாக பொருட்களை சுருட்டி செல்ல ஆர்வமாக இருந்தார்களாம். . சாப்பாட்டை நிறைய வாங்கி வீனடித்தார்கலாம்.. எண்ணற்ற சால்வைகள், மேமண்டோக்களை எடுத்து சென்று விட்டார்களாம்.. ( அதிக பட்சம் 100 ரூபாய் மதிப்பு இருக்கும் என வைத்து கொள்ளுங்கள் )
"செம்மொழி அந்தஸ்து தமிழுக்கு வருகிறதோ இல்லையோ, பிச்சைக்காரன் அந்தஸ்து தமிழனுக்கு என்றுமே இருக்கும்." என்று முடித்து இருக்கிறார் அவர்...
தமிழன் பிச்சைகாரனாக இருக்கிறான் என்பது உண்மைதான் என்றாலும், கோபம் நியாயம்தான் என்றாலும், அவர் பிச்சைகாரர்கள் என சும்மா ஜாலிக்காக எடுத்து சென்றவர்களை சொல்வது தவறு... கோடிகணக்கான ரூபாய்களை , ஏழை மக்களின் வரி பணத்தில் இருந்து பிச்சை எடுத்து சாப்பிட்டதுதான்
உண்மையான பிச்சைகாரத்தனம்..
செம்மொழி மாநாட்டு வேண்டும் , வேண்டாம் என மாறு பட்டு கருத்து இருக்கலாம்... ஆனால், வேண்டாம் என கருத்து உள்ள பத்திரிகை கூட, கிடைக்கும் வாய்ப்பு வீணாக கூடாது, விளமபர பணத்தை இழக்க கூடாது என அலைந்ததுதான், சிறப்பு மலர்கள் வெளியிட்டதுதான் பிச்சைகாரத்த்தனம்...
தமிழர்கள் நன்றாக இருந்தால், நல்ல வேலையில் இருந்தால், நல்ல கண்டு பிடுப்புகள் நடந்தால், இயல்பாகவே தமிழ் வளர்ந்து விடும்.. ஆங்கிலத்தை எல்லாம் மாநாடு போட்டா வளர்த்தார்கள்...?
ஆனாலும் தமிழர்கள் கூடும் ஒரு நிகழ்வு நல்லதுதான்... அது தமிழ் அறிஞர்கள் தலைமையில் நடக்க வேண்டும்... அரசு பார்வையாளராக வேண்டுமானால் இருக்கலாம்..தேவையான உதவிகளை செய்து ஒதுங்கி நிற்க வேண்டும்...
இவ்வளவு ஆடம்பரம், செலவு எல்ல்லாம் ஒருவரை பாராட்ட மட்டும்தானே செலவிட பட்டது.... ?
இதை விட பெரிய கூட்டங்களை எல்லாம், சில அமைப்புகள் நடத்தி உள்ளன,, உண்மையில் ஆர்வம் இருப்பவர்கள் மட்டும் கூடுவார்கள்... போலிசார யாரும் இல்லாமலேயே, ஒழுங்குடன் , நேர்த்தியுடன் எல்லாம் நடக்கும்..
இங்கு நடத்தியர்வர்களோ, கலந்து கொண்டவர்களோ, தமிழ் உணர்வுடன் கலந்து கொள்ள வில்லை என்பதால்தான், ஆய்வரங்கை விட , சாப்பாடு இடத்தில் கூட்டம் அலைமோதியது..
வந்த பொது மக்களும், தங்களுக்கு உபகொயம்க எந்த நிகழ்ச்சியும் இல்லாதததால், கையில் கிடைத்தை வாங்கி செல்ல முனைந்தனர்... ( அது கூட இல்லை என்றால், அங்கு வந்து பயன் என்ன ? )
பத்ரி போன்ற நல்லவர்கள் அங்கு சென்று இருக்கவே கூடாது... வந்தவர்களுக்கு , நம் பணம் இப்படி வீணாகிறதே என்ற ஆதங்கத்தில், நடத்துபவர்களுக்கு இழப்பை ஏற்படுத்துவோம், என்ற நினைப்பில், கையில் கிடைத்ததை எடுத்து சென்று இருக்கலாம்.. அவர்கள் மனசாட்சி தை தடுக்காது... ஏனென்றால், அவர்களை பொறுத்துவரை, அங்கு நடப்பது ஒரு நியாயமான நிகழ்ச்சி அல்ல..
ஆனாலும், பத்ரி போன்ற நடுநிலையாளர்கள் பாதிக்கபட்டது, இழப்பை சந்த்தித்து வருந்தத்தக்கதுதான்.. அனால், பொது மக்களை மட்டும் குறை கூறி பயன் இல்லை...
புகை வண்டியில் , பல நேரங்களில், முன் பின் தெரியதர்வகளிடம் , நம் உடமையை பார்த்து கொள்ள சொல்லி விட்டு தண்ணீர் குடிக்க செல்வோம்.. நம்பிக்கை அவர்கள் காப்பாற்று வார்கள்..
அடிப்படையில் தமிழர்கள் நல்லவர்கள்...
அனால் மனோதத்துவ அடிப்படையில், நாம் இருக்கும் இடத்தை பொறுத்து நம் மனநிலை மாறும்...
செம்மொழி மாநாட்டுக்கு வரும் போதே, திருட வேண்டும் என யாரும் வந்து இருக்க மாட்டார்கள்... அங்கு இருந்த ஆடம்பர , போலித்தன நிகழ்ச்சியை பார்த்து, நாமும் தவறு செய்யலாம் என்ற உணர்வு தோன்றி இருக்க கூடும்...
இதை வைத்துக்கொண்டு என்ன சாதனை செய்துவிடப் போகிறார்கள் என்று புரியவில்லை. என பாவமாக கேட்கிறார் பத்ரி... ஒன்றும் செய்ய மாட்டர்கள்..குப்பை தொட்டியில் எறிந்து இருப்பார்கள்...அதை வைத்து அவர்கள் ஒன்றும் மாடி வீடு கட்ட போவதில்லை...
எனவே அவர்களை சொல்லி குற்றம் இல்லை... உண்மையிலேயே , திட்டமிட்டு பிச்சை எடுத்தது யார் என்றால், அது பத்திரிக்கைகள்தான்.
ஒரு சம்பவத்தை பார்வையாளனாக இருந்து பார்த்து , மக்களுக்கு ரிபோர்ட் செய்ய வேண்டியவர்கள், தாமும் அந்த ஜோதியில் கலந்து விட்டது, ஒரு மாபெரும்சோகம்
கம்யூனிசம்,முதலாளித்துவம்,பாசிசம்-ஜாலி அலசல்
***********************************************************************
உலகில் நடக்கும் எல்லா பிரச்சினைகளுக்கும் காரணம் முதலாளித்துவம்தான். அதை ஒழித்தால் எல்லாம் சரியாகி விடும் என்பது ஒரு பார்வை..
கம்யூனிசம் என்றாலே கொடூரம்தான். சர்வாதிகாரம்தான். ஹிட்லரால் கொல்ல பட்டவர்களை விட , கம்யூனிச ஆட்சியில் கொல்ல பட்டவர்கள் அதிகம் என்கின்றனர் சிலர்..
எல்லோரும் வேலை செய்ங்க... உங்க தகுதிக்கான வேலை , கொடுக்கப்படும். .. உங்களுக்கு எவ்வளவு தேவையோ , அது நிர்ணயிக்கப்பட்டு , அரசே உங்களுக்கு வழங்கும்.. வீடு , மருத்துவ வசதி என எல்லாமே அரசு பார்த்து கொள்ளும்... அரசே தொழில் நடத்தும் என்பதால், முதலாளிகள் - தொழிலாளிகள் என்ற பேதம் வராது.
இதனால் , ஏழை பணக்காரன் என்ற வேற்றுமை நீங்கும்.. எல்லோரும் ஒன்றுதான்...
நல்லதுதானே என தோன்றுகிறது...
அம்பானியும் நானும் ஒன்றுதான் என்றால் சந்தோஷம்தானே...
அனால், ரொம்ப சந்தோஷ படதே என்கின்றனர் இன்னொரு தரப்பினர்..
அம்பானியும் நீயும் மட்டும் ஒன்றல்ல... வேலை பார்க்காமல் பொறுப்பில்லாமல் சுற்றி திரியும் உன் நண்பனும் நீயும் கூட , ஒரே இடத்தில் வைக்க படுவீர்கள்.. திறமைகேற்ப ஊதியம், உழைப்புகேற்ப ஊதியம் என்பதெல்லாம் அடிபட்டு போய், தேவைகேற்ப ஊதியம் என வந்து விடுவதால், ஊக்கத்துடன் உழைப்பவர்கள் முட்டாளாகி விடுவார்கள்... உழைப்பு மழுங்கி விடும்... முன்னேற்றம் பாதிக்கப்படும் என்கிறார்கள் இவர்கள்..
தேவைகேற்ப ஊதியம் - யாருக்கு எவ்வளவு தேவை என்பதை நிர்ணயிக்கும் இடத்தில் இருப்பவர்கள், முதலாளிகள் போல மாறி விடுவார்கள் என எச்சரிக்கிறார்கள் இவர்கள்...
சரி... அப்படி என்றால் நீங்கள் என்ன வழி முறையை பரிந்துரைக்கிறீர்கள் என்றால் அவர்கள் குழப்புகிறார்கள்..
நியாமான வழியில் உழை... போட்டியிடு ... முன்னேறு.... அரசு எந்த விதத்திலிம் தலையிடாது...
இப்படி செய்தால், புதிய தொழில்கள் பெருகும்... நிறைய பேருக்கு வேலை கிடைக்கும்.... திறமை அடிப்படையில், உழைப்பு அடிப்படையில் அனைவருக்கும் சம்பளம் கிடைக்கும்... எல்லோரும் மகிழ்ச்சியாக இருக்கலாம் என்கிறார்கள்..
சரி.. பன்னாட்டு நிறுவனத்துடன், ஏழை விவசாயி எப்படி போட்டியிட்டு ஜெயிக்க முடியும்?
திறமையை வளர்த்துக்கொள்ள வாய்ப்பு மறுக்கப்பட்ட , அடித்தட்டு மக்கள் சாக வேண்டியதுதான..
பலவீன மாணவர்கள் வாழ வழியில்லையா?
காசு சம்பாதிப்பதுதான் , நோக்கம் என்றால், கிராம பகுதிகளில் , பேருந்து இயக்க யாரும் முன் வர மாட்டார்களே என்றெல்லாம் கேட்டால் இவர்கள் பதில் சொல்வதில்லை..
உண்மையில் , அவரவர் சொல்வது அவரரர் தரப்பில் கொள்கை அளவில் சரியாக இருந்தாலும், நடை முறையில் இரண்டுமே இல்லை என்பதுதான் உண்மை...
உதாரணமாக, ஒரு கிராமத்தில் சிலர் பசு மாடுகள் வைத்து இருக்கிறார்கள் என வைத்து கொள்வோம்..
அவரவர் திறமையை பொறுத்து, மாட்டை பராமரிக்கும் தன்மையை வைத்து, பால் கறந்து சம்பாத்தித்து கொள்ளலாம். என்பது முதலாளித்துவம்.. எல்லோரும், அதிக பால் உற்பத்தி செய்ய ஊக்கத்துடன் உழைப்பார்கள் என்பது ப்ளஸ்.ஆனால், மாடு வாங்கும் வசதி இல்லாதவர்கள், பால் வாங்க காசு இல்லாதவர்கள் பாதிக்கப்படுவார்கள்..
எல்லா பாலையும் , கிராம நிர்வாகத்துக்கு கொடுத்து விடுங்கள்... அவர்கள், யாருக்கு என்ன தேவையோ அதை பிரித்து கொடுப்பார்கள் என்பது , கம்யூனிசம்...
ஏழை , பணக்காரன் என்ற வேறு பாடு இல்லாமல் , அனைவருக்கும் பால் கிடைக்கும் என்பது ப்ளஸ்
இப்படி செய்தால், மாட்டை நல்லபடியாக கவனத்து, அதிக பால் கறக்கும் ஆர்வம் குறையும் எம்பது ஒரு பிரசினை... நிர்வாகம் சுரண்டல் வேலையை ஆரம்பிக்கும் என்பது மாபெரும் பிரசஈனை...
பாலை பரித்தி கொண்டு, மாட்டையும், அதை வளர்ப்பவனை யும் கொன்று விடு என் பது பாசிசம்...
இதில் எந்த அ னுகூலமும் யாருக்கும் இல்லை... ஆனால் , இதுதான் , நடந்து வருகிறது...
