தூக்கு தண்டனை சரியா , தவறா என்பது அவ்வப்போது தலை காட்டும் விவாதம்தான்...
இருதரப்பு வாதங்களையும் கேட்டால், இருவர் சொல்லுவதும் சரி போலவே தோன்றும்.. நம்மால் எந்த முடிவுக்கும் வர முடியாது..
ஆனால், தூக்கு தண்டனை தவறு என்று சொல்பவர்களின் வாதம் வடிவேலுவின் காமடியையும் மிஞ்சும்படி இருக்கும்.. ஆனால் நாம் ,பிரச்சினையின் சீரியஸ்னசை கவனத்தில் கொண்டு இந்த வாதத்தில் இருக்கும் சிரிப்பை கவனிப்பதில்லை...
இந்த மனிதாபிமானிகளின் நகைச்சுவையை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் பெருமைப்படுகிறோம்..
1 ஒருவர் சமுகத்தில் இருக்கும் ஒருவரை கொல்வதால், சமுகத்துக்கு இழப்பு ஏற்படுகிறது... அந்த இழப்பை நிவர்த்தி செய்ய பார்க்காமல், சமுகத்துக்கு மேலும் இழப்பை ஏற்படுத்தும்படி அவரையும் அரசே கொல்வது என்ன லாஜிக் ? ஒரு இழப்பு என்பது , இரண்டு இழப்பாக மாறுவதுதான் நாம் காணும் பலன்..
சூப்பர் வாதம் ... பேசாமல் கொலையாளிக்கு நஷ்ட ஈடு கொடுத்து , விடுதலை செய்து விடலாமா?
2 தூக்கு தண்டனை கொடுப்பதால் , இனி கொலையே நடக்காதா? கொலை என்பது நடக்கத்தான் செய்யும்...தூக்கு அதை நிறுத்தாது...
சிறைதண்டனை என்பது திருட்டை தடுக்காதுதான்.. பேசாமல் சிறை அனைத்தையும் திரை அரங்காக மாற்றி விடலாமா...
3 கொலை செய்யும் அளவுக்கு ஒருவர் துணிகிறார் என்றால் அவர் எந்த அளவுக்கு வாழ்க்கையில் கஷ்டப்பட்டு இருப்பார் .. ? அவருக்கு மேலும் கஷ்டம் கொடுப்பதுதான் தூக்கு தண்டனை..
ஆமாமா.. இனிமேல் கொலையாளிகளுக்கு சகல வசதிகளுடன் கூடிய வீடு வழங்கப்பட்டு, ஊக்க தொகையும் வழங்கப்பட வேண்டும்...
4 தூக்கு தண்டனை கூடாது என மகாத்மா காந்தி சொல்லி இருக்கிறார்..
ஆமா.. நாங்க அவர் சொன்ன எல்லாத்தையும் கேட்டுட்டோம்... இது ஒண்ணுதான் பாக்கி,,,இதையும் கேட்டு காந்தியின் சிஷ்யர்கள் ஆக போறோம்..
5 மரண தண்டனை என்பது தண்டனை ஏ அல்ல.. அது உலகம் என்ற சிறையில் இருந்து கொடுக்கப்படும் விடுதலைதான்... ஒரு கொலையாளிக்கு தண்டனை வழங்காமல் , விடுதலை வழங்கும் சமூகத்தை என்னவென்று சொல்வது ??
அருமை..அருமை.. இனிமே நாட்டுக்கு நல்லது செய்பவர்கள், அப்பாவிகள், நல்லவர்கள் , கல்லூரி மாணவிகள், பெண்கள் எல்லோருக்கும் இது போன்ற " விடுதலை " அளிக்கவும், கொலையாளிகள் இந்த உலகம் எனும் சிறையில் இருந்து கஷ்டப்படவும் தேவையான சட்ட திருத்தம் செய்ய வேண்டும்...
6 கொலைக்கு கொலை என அரசே இறங்குவது மிருகத்தனம் அல்லவா.. ? அவர்களை திருத்தி நல்வழி படுதுவதுதானே அரசின் வேலை..?
பஸ்ஸில் டிக்கர்ட் எடுக்காமல் அரசுக்கு பண இழப்பு ஏற்படுத்தினால், பதிலுக்கு அபராதம் போட்டு பண இழப்பு ஏற்படுத்தலாமா? அருமை...
******************************************************************************
மனித உயிர் மதிப்பு வாய்ந்தது... எனவே யாராக இருந்தாலும் மனித நேயம் முக்கியம்தான்... ஆனால், பாதிக்கப்பட்டவர்கள் நிலையையும் , என் இறந்தோம் என தெரியாமலேயே இறந்தவர்கள் நிலையையும் கொஞ்சம் அனுதாபத்தோடு பார்க்க வேண்டும்.. வெறும் அறிவு பூர்வ விவாதங்கள் உதாவாது...
உண்மையான மனித நேயம் , உலகில் மறைந்து வருகிறதோ என தோன்றுகிறது...
Friday, September 3, 2010
Thursday, September 2, 2010
வேலூர் புத்தக கண்காட்சி

புத்தகம் வாங்க வேண்டுமானால் சென்னைக்குத்தான் வர வேண்டும் என்று இல்லாமல் எல்லா இடங்களிலும் புத்தகங்கள் கிடைக்க செய்வது வரவேற்கத்தக்கது...
சென்னை, பெங்களூர் போன்ற இடங்களில் இருப்பவர்கள்கூட , வேலூருக்கு சென்று, நெரிசல் இல்லாமல் புத்தகங்கள் பார்வையிட்டு தேவையானதை வாங்க , இந்த கண்காட்சி உதவுகிறது.
தினமும் முக்கியமான பிரமுகர்கள் பங்கேற்கும் நிகழ்வுகள், இலக்கிய அமர்வுகள் நடக்கின்றன..
வரலாற்று சிறப்பு மிக்க வேலூரை சுற்றி பார்த்து விட்டு அப்படியே புத்தகங்களையும் பார்வையிட்டு , தேவையானதை வாங்கி கொண்டு வரலாம்.
நான் ரொம்ப நாளாக தேடிய புத்தகங்கள் கண்ணில் பட்ட்ன.. தள்ளுபடி விலையில் வாங்கிக் கொண்டேன்..
தேடிய புத்தகங்கள் சில கிடைக்கவில்லை.. அதாவது என் கண்ணில் படும்படி வைக்கப்பட வில்லை... ( ஜெயமோகனின் கொற்றவை , கேபிள் சங்கரின் சினிமா வியாபாரம், தாஸ்தயெவ்ஸ்கியின் ஒரு புத்தகம் அங்கு இருந்திருக்க கூடும்.. ஆனால் என் கண்ணில் பட வில்லை )
நான் அவசரமாக இன்னொரு இடம் செல்ல வேண்டி இருந்த்தால் , விசாரித்து வாங்க முடியவில்லை..
அவ்வப்போது மின்சார தடை ஏற்பட்ட்து வருத்தம் என்றாலும், நல்ல முயற்சியை வரவேற்க வேண்டும்...
.
Labels:
books
Wednesday, September 1, 2010
ராஸ லீலா – நாவல் அபத்தமா அல்லது வாழ்க்கை அபத்தமா ?
சாரு நிவேதிதா என்ற எழுத்தாளரைப் பற்றி பலருக்கு பலவித அபிப்ராயங்கள் இருக்க கூடும். அவர் மேல் பல விமர்சனங்கள் இருக்க கூடும். அதை எல்லாம் மறந்து விட்டு ராஸ லீலா என்ற அவரது நாவலை மட்டும் படித்தால் அது எப்படி இருக்கிறது??
இரண்டு பாகங்கள் கொண்ட பெரிய புத்தகம் இது. முதல் பகுதியில் . கண்ணாயிரம் பெருமாள் என்பவரை பற்றி கதை சொல்லப்படுகிரது.. இரண்டாம் பகுதியில் கண்ணாயிரம் பெருமாள் நமக்கு ஒரு கதை சொல்லுகிறார்.
தபால் துறையில் பணி புரியும் பெருமாள் அங்கு நடக்கும் அடக்குமுறை, ஒழுங்கீனம் போன்றவற்றால் மன உளைச்சலுக்கு ஆளாகிறான். இதை சொல்லுவதுடன் நின்று விடாமல், பின் குறிப்புகள் மூலம் வேறு ஒரு அர்த்த்தை தருகிறது.
அடக்குமுறை , பாசிசம் என்பது நம் ரத்த்தில் ஊறிய ஒன்று. கொடுங்கோல் ஆட்சி நடக்கும் சர்வாதிகாரிகள் செய்யும் அட்டூழியங்கள் , அவர்களுக்கு மட்டுமே உரிய ஒன்றல்ல. நமக்குள்ளும் அந்த குணம் இருக்கிறது. நம் சக்திக்கேற்ப அதை செய்து கொண்டுதான் இருக்கிறோம்.
அலுவலக மேலாளராக, தந்தையாக, கணவனாக, மனைவியாக என எங்கெல்லாம் முடியுமா அங்கெல்லாம் மற்றவரை அடக்கி ஆள முயல்கிறோம். சர்வாதிகாரியால் மற்றவரை கொல்ல முடியும்,. நாம் அப்படி செய்வதில்லை என்பது நாம் நல்லவர் என்பதால் இல்லை. நமக்கு அந்த அளவுக்கு சக்தி இல்லை என்பதால். மற்றபடி நமக்கும் சர்வாதிகாரிக்கும் வித்தியாசம் இல்லை..
கதையில் வரும் இந்திராணி என்ற அதிகாரியால் ஏற்படும் மன உளைச்சலை அதில் வரும் வெளினாட்டு கைதிகளோடு ஒப்பிட்டு பார்த்தால் இது புரியும்..
இது ஒரு புறம்..
இன்னொரு பக்கம் பார்த்தால், கட்டற்ற சுதந்திரம். ஒரு காலத்தில் ஒரு பெண்ணை பார்த்து சிரித்து அவள் பதிலுக்கு பார்த்தாலே ஒரு சாதனை..லவ் லெட்டர் கொடுபதெல்லாம் இமாலய சாதனை. இன்று நிலை வேறு.
பார்ப்பது , பழகுவது என்பதெல்லாம் இயந்திரமயமாகி விட்ட்து. ஆனாலும் சிலர் உண்மையாக நேசிப்பவர்களும் இருக்கிறார்கள்... நாம் உண்மையாக ஒருவருடன் பழகுகிறோம். அவரோ கொஞ்சம் பழகி விட்டு, நம்மை உதறி செல்கிறார். இதை நடைமுறையில் அனுபவத்து அதிர்ச்சி அடைந்தவர்கள் இரண்டாம் பகுதி நாவலை நன்கு ரசிக்க முடியும்.
உண்மையில் எதற்குமே அர்த்தம் இல்லை.. எல்லாமே ஜஸ்ட் ஒரு விளையாட்டுதான் என தோன்றுகிறது.. அபத்தமான நாடகம்தான்..
ஆனால் இது போன்ற அனுபவங்கள் இல்லாத ஒருவர் இந்த நாவலை படிக்கும்போது , அபத்தமான நாவலாக தோன்றலாம்..
இன்னும் சிலருக்கு இது ஒரு நல்ல ஃபாண்டசியாக தோன்றலாம். விறுவிறுப்ப்பான கவர்ச்சி நாவலாக தோன்றலாம்...
ஆனால் அனுபவித்து நொந்து போனவர்களுக்கு , இந்த நாவல் கண்ணாடியில் முகம் பார்த்து கொள்வது போல தோன்றும்.
மொத்த்தில் இந்த நாவல் எல்லோருக்குமான நாவல் அல்ல... அனைவரும் படிக்க கூடாது..
வாழ்வின் அபத்தங்களை அனுபவித்தவர்கள் படித்து பார்க்கலாம்.
சிறந்த நாவலில் ஒன்று என இதை தமிழ் உலகம் ஏற்குமா என்பது சந்தேகம். சாருவின் நாவல்களை ஒப்பிட்டாலே கூட இதை சீரோ டிகிரிக்கு அடுத்த நிலையில்தான் வைப்பார்கள்.
ஆனால் என்னை பொருத்தவரை இது நான் படித்த சிறந்த நாவல்களில் ஒன்று.
அதற்காக எல்லோரும் படியுங்கள் என சொல்ல வில்லை... படித்துவிட்டு என்னை திட்டாதீர்கள்...

Thursday, August 26, 2010
எந்திரன் ஹீரோயின் ஐஸ்வர்யா ராய்,,ஹீரோ யாருப்பா? ரஜினிக்கு வந்த சோதனை - ஆடியோ விழா காமடி
எந்திரன் ஆடியோ ரிலிஸ் பலர் கண்டு களித்தாலும், ஹிந்தி ஆடியோ ரிலீசை பலர் கவனிக்கவில்லை..
உண்மையில் அதுதான் சூப்பராக இருந்ததது,,, ரஜினியின் பேச்சு வெளிப்படையாகவும் , சம்பிரதாயம் அற்றும் இருந்தது... நேமையாக பேசினார்.
என்னதான் பேசினார்?
" ரகுமான் புனித்ததன்மை நிறைந்தவர்,,, ஆன்மிக கடல்,,நன்றாக இசை அமைத்துள்ளார்..
எனக்கு ஜோடியாக நடிக்க ஒத்து கொண்டதற்கு ஐஸ்வர்யா ராய்க்கு நன்றி... நான் மிகைபடுத்தவில்லை,, உண்மையிலேயே நன்றி..
சமிபத்தில் என் சகோதரன் வீட்டுக்கு சென்று இருந்தேன்,, நான் இருப்பதை கேள்விப்பட்டு என்னை பார்க்க ஒரு ராஜஸ்தானி வந்தார்.. அவர்க்கு அறுபது வயது இருக்கும்..
என்ன எப்படி இருக்கீங்க என ஜாலியாக விசாரித்தார்.. என்ன முடியை காணோம் என கிண்டலடித்தார்,, (சிரிப்பு )
அதன் பின் ரிடைர்ட் லைப் நல்ல எஞ்சாய் பண்றீங்களா என கேட்டார்..
நான் ஒய்வு பெறவில்லை,,, ஒரு படத்தில் நடித்து வருகிறேன்... ஐஸ்வர்யா ராய் தான் கதாநாயகி" என பெருமையாக சொன்னேன்..
அவருக்கு பயங்கர சந்தோசம்.. " அப்படியா , நல்லது ,, ஐஸ்வர்யா கதாநாயகி... அவருக்கு ஜோடி யார் " என ஆர்வமாக கேட்டார் .. ( சிரிப்பு..கைதட்டல் )
திகைத்து போன நான் , " நான்தான் ஜோடி " என்றேன் ..
அவர் அரண்டு விட்டார் " என்ன... நீதான் ஜோடியா ? " என்றவருக்கு சில நிமிடங்கள் பேச்சே வரவில்லை ...
கடைசி வரை அவருக்கு அதை ஏற்க முடியவில்லை...
ஐஸ்வர்யா ரைக்கு நன்றி ,,,
படம் உண்மையிலேயே நன்றாக வந்து இருக்கிறது..
ஆனால் இது போல சொல்வதற்கு எனக்கு கூச்சமாக இருக்கிறது.. ஒரு உணவு சமைத்து பரிமாறினால், சாபிட்டவ்ர்கல்தான் , உணவு நன்றாக இருக்கிறது என சொல்ல வேண்டும்...
சமைதவர்களே அதை பற்றி பேசி பயனில்லை..
ஷோலே பெரு வெற்றி அடைய காரணம் படம் நன்றாக இருந்ததுதான்...
அதே போல இதுவும் வெற்றி பெரும்.. இந்தியாவிலேயே அதிக செலவில் தயாரிக்கப்பட்ட படம் என்பதால் மட்டும் அல்ல... நன்றாக எடுக்கப்பட்ட படம் என்பதால்..
இவ்வாறு ரஜினி பேசினார்
***************************************
வாக்களிக்க
http://ta.indli.com/site/pichaikaaran.blogspot.com

Tuesday, August 24, 2010
அடல்ட்ஸ் ஒன்லி கவிதையில் அசலும் நகலும் -இலக்கிய அக்கப்போர்
அன்புள்ள பதிவர் பிச்சைக்காரன் அவர்களுக்கு ..
மண்டபத்தில் உட்கார்ட்ந்து யாரிடமும் கேட்காமல் நானே சொந்தமாக சில அஜால் குஜால் கவிதைகள் எழுதி இருக்கிறேன். படித்து விட்டு உங்கள் கருத்தை சொல்லுமாறு கேட்டு கொள்கிறேன்..
. . .. ;-)பழசும் புதுசும் ;-)...
வேலை முடிந்ததும்
காசை குறைவாக கொடுத்தேன்..
“ அவ்வளவுதான் தர முடியும் ..
கட்டில் பழசு” என்றேன்...
கட்டில்தான் பழசு,
கட்டழகி அல்ல என்று வந்தது பதில்...
;-)பதிலடி;-)
இளமையாக காட்டிக்கொள்ளும்
மனைவியை கிண்டலடிக்க
நினைத்தான்..
விருந்து ஒன்றில்
” ஆறு குழந்தைக்கு அம்மாவே “
என அன்பாக அழைத்தான்...
கடுப்பான மனைவி
பழிவாங்க நினைத்தாள்
“ கொஞ்சம் பொறுங்கள், வருகிறேன்
நான்கு குழந்தைக்ளுக்கு அப்பாவே “ என்றாள்
அன்புடன் ,
தமிழ் வெறியன்
அன்புள்ள தமிழ் வெறியன் அவர்களுக்கு..
எழுச்சியுடன் நீங்கள் எழுதிய கவிதை உணர்வு என் பதிலை படித்ததும் அடங்கிவிடும் என அஞ்சுகிறேன்..
தமிழ் இலக்கிய மரபில் அஜால் குஜால் கவிதைகளுக்கு தனி இடம் உண்டு .. வேலை இல்லாத சிலரால் துவக்கப்பட்ட இந்த கவி மரபு அதன் பின் வேலையை விட்டு விட்டு எழுதும் அளவுக்கு
பரிணாம வளர்ச்சி அடைந்தது.
இது போன்ற கவிதைகளை உணர்வு பூர்வமாக எழுத வேண்டும். யோசித்து எழுதக்கூடாது. அனுபவத்தில் இருந்து எழுதுவதுதான் நிஜம்..மற்றதெல்லாம் நகல்...
சிலர் ஆங்காங்கு குஜால் வார்த்தைகளை போட்டுவிட்டால் , அது கவிதை என நினைக்கிறார்கள்..இது தவறு ...
கேரளாவின் புகழ் பெற்ற இலக்கியவாதி என்னுடன் பேசும்போது, இலக்கியவாதி என்பவன் , உலகத்தை பரிசோதனை கூடமாக்கி , தான் ஓர் ஆராய்ச்சியாளனாக செயல்பட வேண்டும் என்றார்.
அந்த அடிப்படையில், பஸ்சில் , சில இளம் பெண்கலிடம் சில சோதனைகள் செய்து பார்த்தபோதுதான் , கவிதை எங்கும் இருப்பதை உணர்ந்தேன்... ( நான் பொறுக்கி அல்ல. இருந்தாலும் சோதனை
அடிப்படையில் இதை செய்ய வேண்டியதாகி விட்டது..இலக்கியத்தை நான் தானே காப்பாற்ற வேண்டி இருக்கிறது ?? )
இதோ சில கவிதைகள்
;-)ஜென் கவிதை - ஒரு கை ஓசை;-)
ஒரு முறை பஸ்சில் ஒரு பெண்ணை உரசினேன்..
அவள் முறைத்தாள்..
நீயும் எஞ்சாய் செய்..
இரு கை சேர்ந்தால்தான் ஓசை என்றேன்..
ஒரு கையிலும் ஓசை வருமே என்றாள்.
எப்படி என்றேன்..
பளார் என ஓர் அறை விட்டாள்...
இதுதான் ஒரு கை ஓசை
தர்ம அடி வாங்கினாலும் ஜென் தத்துவ ஞானம் அப்போது கிடைத்தது....
;-)இறைவனின் திருவிளையாடல்;-)
ஒரு பெண்ணை மேலும் கீழுமாக பார்த்து சொன்னேன்..
என்னே இறைவனின் திருவிளையாடல்..
உன்னிடம் சில பகுதிகளில் கஞ்சன்
சில பகுதியில் வள்ளலாக இருக்கிறானே , என்றேன்..
அவள் சொன்னாள்...
என்னே அவன் திருவிளையாடல்...
முள்ளை மிதித்தும் காலில் குத்தவில்லை..
காலில் புதிய செருப்பு...
செருப்படி வாங்கினேனா இல்லையா என்பது கவிதை தரிசனம் அல்ல. நெருப்பு போல கவிதை பிறந்ததுதான் முக்கியம்...
இதே போல அனுபவம் சார்ந்த பின் நவீனத்துவ கவிதை எழுத பழகுமாறு கேட்டுக்கொள்கிறேன்..
வாக்களிக்க , ta.indli.com/site/pichaikaaran.blogspot.com

Subscribe to:
Posts (Atom)