Monday, April 25, 2011

சாய் பாபா அருள் ( ஆயுள் ) வாக்கு மர்மம்

தொலைக் காட்சிகளிலும், பதிவுலகிலும் கடந்த சில நாட்களாக ஆக்ரமித்து இருப்பது பாபா பற்றிய செய்திகள்தான்..

அலுப்பூட்டும் வகையில் நிறைய வருவதால், பலர் இவற்றை படிப்பதில்லை...

எனவே எல்லாவற்றையும் தொகுத்து இந்த பதிவு...


  • சித்து வேலை பேர்வழி மரணம்
  • கடவுள் மரணமடைந்தார்,,, பக்தர்கள் குழப்பம்
  • 96 வயது வரை வாழ்வேன் என அவர் சொன்னது பொய்யாகி விட்டது.
  • அவர் நல்லது செய்து இருக்கிறார் என்பது முக்கியம் இல்லை... அவர் சித்து வேலை செய்து மக்களை ஏமாற்றி விட்டார் .. 
  • அவரிடம் சென்றவ்ர்கள் அனைவரும், தைரியம் இல்லாதவர்கள்.. தன்னம்பிக்கை அற்றவர்கள்
  • இந்தியாவில் தலைவர்கள் எல்லோருமே நல்லதுதான் செய்கிறார்கள்..எனவே இவர் மட்டும் நல்லது செய்தார் என சொல்வது தவறு... 
இது போனறவை ஒரு புறம்


  • அவர் சித்து வேலை செய்கிறார் என்பதற்காக அவரிடம் செல்லவில்லை... அது எங்களுக்கு பொருட்டே அல்ல
  • உடல் அழிய கூடியதுதான்,, எனவே அவர் உடல் என்றாவது அழியும் என்பது தெரிந்துதான் இருந்தது... எனவே இந்த சம்பவம் நம்பிக்கையில் மாற்றம் ஏற்படுத்தவில்லை...
  • நாம் ஆங்கில முறைப்படி ஆண்டுகளைக் கணக்கிட்டு, சாய் பாபாவுக்கு தற்‌போது வயது 86 என்று கூறுகிறோம். ஆனால் ஹிந்து முறைப்படி சந்திரனை அடிப்படையாக கொண்டே ஆண்டு நிர்ணயிக்கப்படுகிறது. அதாவது ஆங்கில முறைப்படி ஒரு மாதம் என்பது 30 அல்லது 31 நாட்கள். ஆனால் ஹிந்து முறைப்படி பூமியை சந்திரன் ஒருமுறை சுற்றி வரும் காலம்தான் ஒரு மாதம் என கணக்கிடப்படுகிறது. சந்திரன் ஒருமுறை பூமியைச் சுற்றி வர 27.3 நாட்கள்தான் ஆகிறது. அந்த அடிப்படையில் கணக்கிட்டால் சாய் பாபாவுக்கு தற்போது வயது 94 ஆகிறது. மேலும் ஹிந்து வழக்கப்படி அவர் பிறந்த ஆண்டே முதல் வயதாக கருதப்படுவதால் சாய் பாபாவுக்கு 95 ஆகிறது. எனவே சாய் பாபா தமது ஆயுள் குறித்து தெரிவித்த வாக்கு பொய்க்கவில்லை...
இந்த இரு தரப்பு கருத்துக்கள்தான் மீண்டும் மீண்டும் எழுதப்படுகின்றன.. 

பொது நன்மை கருதி வெளியிடுவோர் : பிச்சைக்காரன் டாட் பிளாக்ஸ்பாட் டாட் காம் 

Sunday, April 24, 2011

தமில் மொளியை வலர்க்கும் மாநகராட்சி – 2



          தமில் மொளியை , நம் மாநகராட்சி எப்படியெல்லாம் கஷ்டப்பட்டு வலர்க்கிறது என சில மாதங்கள் முன் பார்த்தோம்….

தமில் மொளியை வலர்க்கும் மாநகராட்சி

பலர் பிரமுகர்கள் , தலைவர்கள், தமிழ் அறிஞர்கள் வரக்கூடிய இடத்தில் இப்படி தமிழ் கொலை செய்து இருந்தனர்…
இதைத்தான் நம் பதிவில் பார்த்தோம்.. இன்று அந்த பக்கம் சென்ற எனக்கு இன்ப அதிர்ச்சி… அந்த பிழைகள் திருத்தப்பட்டு இருந்தன…
வாவ் ,,, தவறை சுட்டி காட்டுவது போல , நல்லதை பாராட்டுவதும் நம் கடமை என்பதால், அதை படம் எடுக்க ஆரம்பித்தேன்…
கொஞ்ச நேரத்திலேயே ஏமாற்றம்… சில மட்டும்தான் திருத்தப்பட்டு இருந்தன…
அப்படி திருத்தப்பட்டவை மட்டும் உங்கள் பார்வைக்கு,,,
சென்னை5 



 tamillசென்னை2
அன்று , பிழையுடன்                 இன்று, திருத்தம்

3tamil   சென்னை1



இதில் இன்னொரு கொடுமை…
ஒரு படத்தில் வன்ன பறவைகள் என எழுதி இருந்தார்கள்… தவறான சிலவற்றை திருத்தாமல் விட்டு இருக்கும் இவர்கள், வன்ன பறவை என்ற சரியான வார்த்தையை திருத்தி இருக்கிறார்கள்…
அட ஆண்டவா…
வன்னம் என்றால் என்ன, வண்ணம் என்றால் என்ன என்பது தெரியாமல் இப்படி செய்து இருக்கிறார்களே என நினைத்த படி கிளம்பினேன்…


chennai3

Friday, April 22, 2011

சாய் பாபாவுக்காக , கலைஞர் பிரார்த்தனை!!!!!

புட்டபர்த்தி சத்யா சாய் பாபா உடல் நலம் இன்றி இருப்பதை ஒட்டி , ஒவ்வொருவரின் எதிர் வினைகளை ஒரு பார்வையாளானாக கவனிப்பது நிறைய பாடங்கள் கற்று தருகிறது..




ஒரு சம்பவம் , எப்படி எல்லாம பார்க்கப்படுகிறது?



இந்தியாவை மட்டம் தட்ட கிடைத்தது ஒரு வாய்ப்பு என்ற கோணத்தில் இதை செய்தியாக்குகின்றன வெளி நாட்டு மீடியாக்கள்...



மரணம் என்பது பயப்பட வேண்டிய ஒன்றல்ல என்ற கோணத்தில் இதை அணுகுகிறார்கள் இந்திய ஆன்மீக வாதிகள்... யாராக இருந்தாலும் உடல் என்பது ஒரு நாள் அழிந்துதான் போகும்... இதில் பரபரப்படிடைய எதுவும் இல்லை என்கிறார்கள் இவர்கள்...



நடப்பது அனைத்தும் தெய்வ லீலைகளின் ஓன்று என்கிறார்கள் சாய் பாபா பக்தர்கள்...



சாய் பாபா உடல நிலை குறித்து தவறான தகவல்கள்தான் வருகின்றன... அவரை வைத்து சிலர் வியாபாரம் செய்கின்றனர்.. கடந்த சில மாதங்களாகவே அவர் ஒரு கைதி போலத்தான் இருக்கிறார் என்கின்றனர் சிலர்..



இந்த நிலையில் முரசொலியில் கலைஞர் தன கருத்தை கூறி இருக்கிறார்...

*************************************************

சாய் பாபா உடல நலம் பாதிக்கப்பட்டு இருக்கிறாரே?



கலைஞர் : சாய் பாபா தமிழர்கள் மீதும் தமிழ் நாடு மீதும் அன்பு கொண்டவர்... என் மேல் தனிப்பட்ட முறையில் மரியாதை கொண்டவர்.. தமிழ் நாட்டுக்கு தண்ணீர் கொண்டு வர அவர் உதவியதை மறுக்க முடியாது.. என் வீட்டுக்கே வந்து வெகு நேரம் பேசி கொண்டு இருந்தார்.. விழாவில் கலந்து கொண்டோம்.. அவர் உடல் நலம் பெற அவர் பக்தர்கள் பிரார்த்தித்து வருகின்றனர்.. அவர்கல் பிரார்த்தனை பலிக்க வேண்டும் என நானும் உளமார வேண்டுகிறேன்.







Wednesday, April 13, 2011

வாக்களிப்பு அதிகம் என்றால் வெற்றி யாருக்கு? - தேர்தல் அலசல்

தேர்தல் முடிந்து விட்ட நிலையில், வரலாறு காணாத ஓட்டு பதிவு கட்சிகளை குழப்பி இருக்கிறது.

வாக்களிப்பு அதிகம் என்றால் என்ன அர்த்தம் என்பது ஒவ்வொரு நாட்டுக்கும், மா நிலத்துக்கும் வித்தியாசப்படும்..

இடைத்தேர்தலில் வாக்களிப்பு அதிகம் என்றால் அது வேறு விஷயம். பக்கத்து ஊர்களில் இருந்தெல்லாம் ஆட்களை கூட்டி வந்து வாக்களிக்க செய்வார்கள் என்பதால் ஓட்டு கூடும். ஆனால் பொது தேர்தலில் அப்படி செய்ய முடியாது..

சரி,

தமிழ் நாட்டில் இது வரை வாக்களிப்பு எப்படி இருந்தது ?

அசைக்க முடியாத சக்தியாக இருந்த காங்கிரஸ் வீழ்த்தப்பட வேண்டும் என்ற அலை காரணமாக 1967ல் 76 சதவிகிதம் வாக்கு பதிவானது.

1971 ல் எந்த அலையும் இல்லை.. ஆளும் கட்சியே வென்றது... வாக்கு சதவ்கிதம் குறைந்தது ( 72 % ).. அந்த தேர்தலில் வாக்களிப்பு அதிகரித்து இருந்தால் , எதிர் கட்சி  காங்கிரஸ் வென்று இருக்கும்.

1977 ல் தி மு க அரசு கலைக்க பட்டு இருந்தது.. அலை வீசி இருந்தால், வாக்களிப்பு அதிகரித்து இருந்தால், தி மு க வென்று இருக்கும்.. ஆனால் வாக்களிப்பு குறைவு ( 61.58 % ) ..
எனவே தி மு க தோல்வி. அதிமுக வென்றது

1980ல் அதிமுக அரசு கலைக்க பட்டு  இருந்தது... வாக்களிப்பு அதிகரித்தால், அனுதாப அலை என்று பொருள்..
அதே போல வாக்களிப்பு அதிகரித்தது ( 65.42 % ) . அதிமுக வென்றது

1984 ல் இந்திராகாந்தி அனுதாப அலை வீசியது. வாக்களிப்பு கூடியது (73.47 % ) காங்கிரஸ் கூட்டணி வென்றது..

1989 ல் ,  எந்த அலையும் இல்லை..(69.79% ) அதிமுக இரண்டாக போட்டி இட்டதால், திமுக தன் வழக்கமான வாக்குகளை பெற்று வென்றது

1991ல் ராஜீவ் அனுதாப அலையால் அதிமுக வென்றது ( 63.84 % ) இதை மீறி திமுக வெல்ல வேண்டுமானால் , திமுக கலைக்கப்ப்ட்ட அனுதாப அலை வீசி , வாக்களிப்பு அதிகரித்து இருக்க வேண்டும். அப்படி நடக்கவில்லை

1996 ல் ரஜினி வாய்ஸ் , அதிமுக எதிர்ப்பு அலை ஆகியவற்றால் ஓட்டு அதிகரித்தது ( 66.95 % ) . வழக்கமான ஓட்டு மட்டும் பதிவாகி இருந்தால் , அதிமுக - காங்கிரஸ் வென்று இருக்கும்.. ஆனால் அலை வீசியது... தி மு க வென்றது

2001 அலை எதுவும் இல்லை... வழக்கமான ஒட்டுக்கள்தான்..( 59 % _. கூட்டணி பலத்தால் அதிமுக வென்றது

2006ல் விஜயகாந்த் புதிய வாக்காளர்களை கவர்ந்து இழுத்ததால் , வாக்களிப்பு கூடியது ( 70 % ) .. அலை அற்ற தேர்தலில், கூட்டணி பலத்தால் தி முக கூட்டணி  வென்றது

****************************************

இந்த தேர்தலில் அதிக வாக்குகள் பதிவாகியுள்ளன. ( 76 % )
எனவே அலை வீசி இருப்பது தெரிகிறது...

கடந்த காலத்தை வைத்து பார்க்கும்போது, மாற்றத்துக்கான அறிகுறியாகவே தெரிகிறது...



இடங்களுக்கு இஸ்லாம் கொடுக்கும் முக்கியத்துவம் - முகமது இஸ்மாயில்


    
உலகில் பல மதங்கள் உண்டு..  ஒவ்வொன்றுக்கும் ஒரு இயல்பு உண்டு. அதில் கட்டுப்பாட்டுக்கும் , சமரசம் செய்து கொள்ளாத தன்மைக்கும், அறிவு சார்ந்த தேடலுக்கும் பெயர் பெற்றது இஸ்லாம் மதம் என்பது என் கருத்து ( அடுத்த பதிவில் நான் ஏன் அப்படி நினைக்கிறேன் என எழுத இருக்கிறேன் )
  
   புனித நூல்கள் என்பது அனைவருக்கும் பொதுவானவையே.. அதில் இருக்கும் ஞான கருத்துக்களை கற்பது அனைவரின் பிறப்புரிமை..

     அந்த வகையில், நான் புனித குர் ஆன் நூலை ஆர்வமாக படிப்பவன் நான். மதம் என்பதை தாண்டி ஒரு தன்னம்பிக்கை நூலாக, நிர்வாக நூலாக , கவிதை புத்தகாமாக அது திகழ்வதை கண்டு பிரமிப்பாக இருக்கிறது..

    ஆனால் இஸ்லாம் என்ன சொல்கிறது என சரிவர புரிந்து கொள்ளாமல் , தன்னை இஸ்லாமியன் என காட்டி கொள்ள குறுக்கு வழியை மேற்கொண்டுள்ளனர் , சிலர் எகிப்து நாட்டில். 
      தர்க்காக்களை இடித்தல் , அல்லாஹ் வழியில் நடந்து அடக்கம் ஆனவர்களை மரியாதை இல்லாமல் பேசுதல் போன்றவை இஸ்லாமிற்கு எதிரானது என புரியாமல் , அப்படிப்பட்ட காரியங்களை செய்து வருகின்றனர்.

    இப்படி செய்வதை இஸ்லாம் ஏற்கவில்லை என நான் படித்ததை வைத்து எழுதி இருந்தேன்.. 

ஆனால் என்னை விட அதிகம் படித்த சகோதரர் முகமது இஸ்மாயில் இன்னும் சிறப்பாக பின்னூட்டத்தில் எழுதியுள்ளார்.

 அவரது கருத்து இதோ, உங்கள் பார்வைக்கு,

*********************************************
       
கண்ணியப்படுத்துதல் வேறு. கடவுளாக நினைப்பது 
வேறு 
- முகமது இஸ்மாயில் 


டங்களுக்கு இஸ்லாத்தில் நிறைய முக்கியத்துவம் உண்டு.
உதாரணமாக ஹஜ் கடமையானது இப்ராஹீம் நபியவர்களின் குடும்பத்தாரை நினைத்து செய்ய கூடிய கடமையாகும்.
இப்ராஹீம் நபியவர்களது குடும்பம் எந்த இடத்தில் தியாகத்தை செய்ததோ அதே இடத்திற்கே போய் நினைவு கூர சொல்வதிலிருந்தே இடத்திற்கான முக்கியத்துவம் விளங்கி விடுகிறது.
குரான் ஷரீஃப்ல ஒரு வசனம் வரும், ”அந்த இடத்திலேயே (ஹுனாலிக என்ற அரபி வார்த்தை) ஜகரிய்யா தம் இறைவனிடம் பிரார்த்தனை செய்வதாகக் கூறினார் (At the very place Zakariyya prayed to his Lord) “இறைவனே! உன்னிடமிருந்து எனக்காக ஒரு பரிசுத்தமான சந்ததியைக் கொடுத்தருள்வாயாக! நிச்சயமாக நீ பிரார்த்தனையைச் செவிமடுத்தருள்வோனாக இருக்கின்றாய்..”
மேலே கண்ட வசனமானது குரான் ஷரீஃப் – ஸீரத்துல்ஆல இம்ரான் (இம்ரானின் சந்ததிகள்) – வசனம் 38ல் இடம் பெற்ற வசனமாகும்.
அதாவது ஜகரிய்யா நபியவர்கள் அன்னை மர்யம் (அலை) (மதர் மேரி) அவர்களின் மிஹ்ராபுக்கு (இடத்திற்கு) வந்த போதெல்லாம் அங்கே உணவு இருப்பதை கண்டார்கள்.
’இங்கே தான் யாருமே வருவதில்லையே, உங்களுக்கு உணவு எப்படி கிடைத்தது? என்று கேட்டதற்கு மர்யம் (அலை) அவர்கள் ‘இது எனக்கு அல்லாஹ்விடமிருந்து கிடைத்தது’ என்பதாக சொல்கிறார்கள்.
அந்த இடத்தை புனிதமான இடமாக உணர்ந்ததனால் தானோ என்னவோ ஜகரிய்யா நபி அந்த இடத்திலேயே பிரார்த்தனை செய்கிறார்கள்.
அன்னை மர்யம் (அலை) ஒரு நபியே அல்ல, ஆனால் அவர்கள் அமர்ந்திருந்த இடத்திற்கு உரிய மரியாதை கிடைத்தது.
அதே போல் குரான் ஷரீஃபில் பிறிதொரு இடத்தில்,
(இதையும் எண்ணிப் பாருங்கள்; “கஃபா என்னும்) வீட்டை நாம் மக்கள் ஒதுங்கும் இடமாகவும் இன்னும் பாதுகாப்பான இடமாகவும் ஆக்கினோம்; இப்ராஹீம் நின்ற இடத்தை – மகாமு இப்ராஹீமை – தொழும் இடமாக நீங்கள் ஆக்கிக் கொள்ளுங்கள்” (என்றும் நாம் சொன்னோம்) இன்னும் “என் வீட்டைச் சுற்றி வருபவர்கள், தங்கியிருப்பவர்கள், ருகூஃ செய்பவர்கள், ஸுஜூது செய்பவர்கள் ஆகியோருக்காகத் தூய்மையாக அதனை வைத்திருக்க வேண்டும்” என்று இப்ராஹீமிடமிருந்தும், இஸ்மாயீலிடமிருந்தும் நாம் உறுதி மொழி வாங்கினோம்.
குரான் ஷரீஃப் 2:125
இப்ராஹீ நபியவர்கள் நின்ற இடத்தையே முக்கியமானதாக குறிப்பிட்டு இங்கே சொல்லப்படுகிறது.
இறைவனுக்கு தன் வாழ்க்கையை அர்ப்பணித்தவர்களின் அடக்கஸ்தலமும் இந்த அர்த்தத்திலேயே கண்ணியப்படுத்தப் படுகிறது.
ஆனால், ஒரு குழப்பத்தார் மன்னிக்கவும் கூட்டத்தார், அடக்கமாகியிருப்பவர்களை அல்லாஹ்வாக கருதப்படுகின்றனர் என்று அவர்களாகவே முடிவு செய்து கொண்டு இது போன்ற இடிசேவையில் இறங்குகின்றனர்.
மிர்ஜா குலாம் காதியானி என்பவர் தன்னை நபியென்று கூறிக் கொண்டு சில குழப்பங்களை ஏற்படுத்தினார்.
ஆனால், ஹஜ்ரத் முஹம்மது (ஸல்) அவர்களை இறுதி நபியாக ஏற்றுக் கொண்ட தர்காவுக்கு ஜியாரத்திற்கு செல்பவர்கள் இவரை ஏற்றுக் கொள்வதில்லை.
மிர்ஜா என்பவரை நபியாகவே ஏற்றுக் கொள்ளாதவர்கள், இறைவனின் மெய்யடியார்களை இறைவனாக ஏற்றுக் கொண்டார்கள் என்று இவர்கள் சொல்வது வெளிப்படையான முரண் என்பதும் இவர்களாகவே இட்டுக் கட்டுவது என்பதும் தவிர வேறில்லை.

A.Mohamed Ismail

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா