Friday, March 4, 2011

தமிழின் முதல் டிடிஎஸ் படம் குருதிபுனலா? கேபிள் சங்கர் தந்த தவறான தகவல்

அண்ணன் கேபிளின் எழுத்துக்களை ரசித்து படிப்பவர்களில் நானும் ஒருவன்..

சமீபத்தில் ஒரு இடுகையில் இப்படி எழுதி இருந்தார்..

 

”தமிழ் சினிமா தொலைக்காட்சியின் பின்னே அமிழ்ந்து போயிருக்கக் கூடிய அபாயத்தை காப்பாற்றிய பெருமையில் நிச்சயம் கமலுக்கு பெயர் உண்டுதான்.

டால்பி டிஜிட்டல் சர்ரவுண்ட் சவுண்ட் எனும் புதிய டிஜிட்டல் ஒலியமைப்பு உலகெங்கும் பிரபலமாகிக் கொண்டிருந்த நேரத்தில், கமல் அபிராமி இராமநாதனுடன் பேசிக் கொண்டிருந்த போது, ஏன் நம் தியேட்டர்கள் அந்த ஒலியமைப்பை ஏற்படுத்தக்கூடாது? என்று கேட்ட போது, அபிராமி இராமநாதன் அவர்கள் “நான் அதை நிறுவுவதற்கு தயார். ஆனால் அந்த தொழில் நுட்பத்தில் தமிழில் எத்தனைப் பேர் படமெடுக்கிறார்கள்? என்று கேட்டவுடன், கமல் தான் எடுப்பதாய் சொல்லி ஆரம்பித்தப்படம் தான் குருதிப்புனல். தமிழின் முதல் டால்பி டிஜிட்டல் ஒலியமைப்புடன் வந்த படம்..”

 

இதில் முதல் வரி சும்மா நகைச்சுவை என விட்டு விடலாம்..

தமிழ் சினிமாவை அழிப்பதில்தான் கமல் தன் முழு சக்தியை பயன்படுத்துகிறார் என்பதும், பல தயாரிப்பாளர்களை அழித்தவர் அவர் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான்..

ஆள வந்தான் , என்னை அழிக்க வந்தான் என அப்பட தயாரிப்பாளர் கண்ணீர் பேட்டி கொடுத்ததை யாரும் மறந்திருக்க முடியாது…

எனவே -தமிழ் சினிமா தொலைக்காட்சியின் பின்னே அமிழ்ந்து போயிருக்கக் கூடிய அபாயத்தை காப்பாற்றிய பெருமையில் நிச்சயம் கமலுக்கு பெயர் உண்டுதான்.- என்ற வரியை பொருட்படுத்த வேண்டியதில்லை..

ஆனால் முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பது போல , தமிழின் முதல் டிடிஎஸ் படம் குருதி புனல் என ஒரு தவ்றான தகவலை தந்துள்ளது அதிர்ச்சி அடைய வைத்தது,,,

கமல் பற்றி அல்ட்டிமேட் ரைட்டர் என்ன சொல்கிறார் என பார்ப்போம்..

 

நடிகர் கமல்ஹாசனுக்கு ஆஸ்கர் இன்னும் கிடைக்காமல் இருப்பது பற்றி உங்கள் கருத்து?

சாரு நிவேதிதா பதில்:
ஒரிஜினல் நடிப்பு, ஒரிஜினல் படம் ஆகியவற்றுக்குத்தான் ஆஸ்கர் கொடுக்கிறார்கள். காப்பி அடிப்பவர்களுக்கும், மிமிக்ரி கலைஞர்களுக்கும் இன்னும் ஆஸ்கரில் தனிப்பிரிவு ஏற்படுத்தப்படவில்லை. ஏற்படுத்தப்பட்டால் கமலுக்குத்தான் முதல் ஆஸ்கர். அதுவரை கலைஞர் என்றும், புரட்சித் தலைவி என்றும் சொல்வது போல் உலக நாயகன் என்று சொல்லி ஒன்றுமறியாத அப்பாவிகளான தமிழ் ஜனங்களை ஏமாற்றிக் கொண்டிருக்க வேண்டியதுதான். வேறு வழியில்லை.

இப்படி பட்ட கமல் , கேபிளின் இந்த பாராட்டுக்கு தகுதியானவரா?

இல்லை……இல்லவே இல்லை…

தமிழின் முதல் டி டி எஸ் படம் கருப்பு ரோஜா என்பதே வரலாற்று உண்மை….

இதோ விபரம்…

கருப்பு ரோஜா
Karuppu Roja


நடிக+நடிகைகள்:-ராம்கி, அமர் சித்திக், யோசிகா, வினிதா, ஸ்ரீகாந்த், கரிகாலன், சார்லி, கவிதாஸ்ரீ, கோகிலா, "மேஜிக்"ராதிகா, ஜானகி, அருள்மணி, பிரபாகர், வீரராகவன், வைத்தி, டி.ராஜன் மற்றும் பலர்.
இவர்களுடன்:-அலெக்ஸ் (குதிரை)
இசையமைப்பு:-எம்.எஸ்.வி.ராஜா
தயாரிப்பு:-திருமதி.இந்துமதி + கே.கருணாமூர்த்தி
கதை+திரைக்கதை+இணை இசை+பாடல்கள்:-ஆபாவாணன்
இயக்கம்:-ஜே.பன்னீர்

Karuppu Roja is a  Tamil feature film produced by Ayangaran International]]. It starred Ramki and Vinitha.

It was the first film in India to use DTS audio.

பாருங்கள்  : http://en.wikipedia.org/wiki/Karuppu_Roja

 

இந்த விபரம் கேபிள் அண்ணனுக்கு தெரியாததல்ல…

கமலை பாராட்ட கூடாது என சொல்லவில்லை…

 

சரியான ஏதாவது காரணத்துக்காக பாராட்டி இருக்கலாமே..

இப்படி தவறாக பாராட்டுவது கமலுக்கு எந்த விதத்திலும் பெருமை சேர்க்காது..

12 comments:

 1. kuruthi punal was relesed on 1995,karupu roja came in 1996.so which one is true

  ReplyDelete
 2. முதலில் ஆரம்பிக்கப்பட்ட படம் கருப்பு ரீஜாதான்..
  டி டி எஸ் என்ற வார்த்தை அந்த படம் மூலம்தான் பிரபலமானது...

  பணபிரச்சினையால் அது வெளி வர தாமதமாகவே, கமல் அந்த ஐடியாவை தனது போல காட்டி கொண்டு விட்டார்..

  இதுதான் வரலாறு..

  இவ்வளவு கஷ்டப்பட்டும் , இரு பட்ங்களும் ஓடவில்லை... ஆனால், கறுப்பு ரோஜா பேசப்பட்டது..குருதி புனல் தமிழின விரோத படம் என கருதப்பட்டு புறக்கணிக்கப்பட்டது

  ReplyDelete
 3. ஏன் பாஸ்.. அசின் உள்ளம் கேட்குமேல முதல்ல நடிச்சாலும் m.kumaran s/o mahalakshmiல பேர் போடும் போது அறிமுகம்னு தானே போட்டாங்க..

  அதனால வெளிவந்தது வச்சு சொல்றது ஒண்ணும் தப்பில்ல.. கேபிள் அண்ணனை குறை சொல்றதுக்கு முன்னாடி கமல் மீது இருக்கும் வெறுப்பை கொஞ்சம் ஓரமாக ஒதுக்கி வையுங்கள்..

  ReplyDelete
 4. \\முதலில் ஆரம்பிக்கப்பட்ட படம் கருப்பு ரீஜாதான்..
  டி டி எஸ் என்ற வார்த்தை அந்த படம் மூலம்தான் பிரபலமானது...

  பணபிரச்சினையால் அது வெளி வர தாமதமாகவே, கமல் அந்த ஐடியாவை தனது போல காட்டி கொண்டு விட்டார்..

  இதுதான் வரலாறு..\\ வரலாறு முக்கியம் அமைச்சரே என்ற tag line மிஸ்ஸிங்:-)

  ReplyDelete
 5. ஏங்க dts -க்கும் டால்பிக்கும் வித்யாசம் தெரியாம சும்மா அடிச்சி விடுறிங்க???

  ReplyDelete
 6. அவருக்கு வேற வேலை கிடையாது.. அங்க இங்க இருந்து காபி அடிச்சிட, தப்பு தப்பா தமிழில் டிபே அடிச்சிட்டு போற ஆளு.. ஒரு எழவும் தெரியாது.. இது அவருகிட்ட பழகுன எல்லாருக்கும் தெரியும் சிலர் சொல்லி இருக்காங்க, சிலர் போய ஒயரே'ன்னு விட்டுட்டாங்க.. ரெண்டு புக்கு போட்டா பெரிய ஆளுன்னு நினச்சிக்குறாங்க.. எளவு வாந்தி எடுத்து வச்சிருக்கு எல்லாத்துலயும்.. இதுல எளவெடுத்த அஹம்பாவக்க்.. வேறா.. இவ்வளவு வார்த்தைக்கு வார்த்தை "எழவு,வாந்தி" என்று சொல்வதால் பொறாமை என்றோ, வயிற்தேரிச்ச்சல் என்றோ யாரும் தவறாக முடிவெடுத்துவிடாதீர்கள்.. பாலகுமாரனோ, சுஜாதாவோ, ஜெயமொஹனோ, கூட நெருங்க முடியாத தூரத்தில் இது இருக்கின்றது.. இதைப்பார்த்து நன்ற எழுத வரும் சிலரும் அகம்பாவக்கினட்ட்ரில் விழுந்து விடாதீர்கள்.. தனக்கு ஒன்றுமே தெரியாது என்று தெரிந்திருப்பவன் புத்திசாலி.. தனக்கு ஒன்றுமே தெரியாத போதும், அது தெரியாமல், தனக்கு எல்லாம் தெரியும் என்று தன்னையே எமாற்றிக்கொண்டிருப்பவம்.. அடி முட்டாள்..

  ReplyDelete
 7. @ சைத்தான் : உங்க கமெண்ட் ஐ தூக்கி விட்டுட்டார்..

  கேபிள் சங்கர் சொல்லறார் : எவேவனோ என்னை அடிச்சு பெரிய ஆள் ஆகி இருக்கான்.. நீயும் என்னை அடிச்சு பெரிய ஆள் ஆகலாம்னு பார்கிராய்?

  ReplyDelete
 8. ஐயா.. ஒரு பதிவு எழுதறதுக்கு முன்னாடி, அதுவும் ஒருத்தர் செய்தது தப்புன்னு குத்தம் சொல்லறதுக்கு முன்னாடி, கொஞ்சூண்டு விஷயம் என்னான்னு தெரிஞ்சிக்கோங்க.. DTS வேறு Dolby வேறு.. இந்த லிங்க் பாருங்க..
  http://www.timefordvd.com/tutorial/SurroundSound.shtml
  “கறுப்பு ரோஜா” முதல் DTS படம்.. “குருதிபுனல்” முதல் Dolby படம்..

  நீங்க ஒத்துக்கிட்டாலும் இல்லாவிட்டாலும் கமலின் புகழை உங்களால் ஒன்னும் செய்ய முடியாது..

  சாரு நிவேதிதாவை அல்டிமேட் ரைட்டரென நீங்க சொல்லி அவரை நக்கலிடிக்கிறீங்களா இல்ல, உங்க இலக்கிய ஞானமே அவ்வளவு தானா???

  @ Anonymous.. ராசா.. யாரு ராசா நீ?? சார் நீங்க தான் சூறப்புலியாச்சே.. யாருன்னு சொல்லிட்டே வரவேண்டியது தானே??? கேபிள் தப்பு தப்பா டைப் அடிப்பாருன்னு சொல்லகூட உங்களால தப்பில்லாம சொல்ல முடியல.. இதெல்லாம் தேவையா??? அவரு எழுதின 2 புக்கை முதல்ல நீங்க படிச்சீங்களா??? பொறாமைக்கு அளவுண்டு பாஸ்...

  ReplyDelete
 9. தங்களுக்கு ஏன் கமலை பிடிப்பதில்லை என்று முழுமையான விபரமான ஒரு பதிவை சீக்கிரம் போடுங்கள் தலை

  ReplyDelete
 10. பிச்சைக்காரன் ஏன் இந்த காழ்ப்பு? யார் மீது இந்த கோவம்?
  கேபிள் போன்ற ஒரு படைப்பாளியை, நல்ல மனிதரை நான் இந்த வலைத்தளத்தில் பார்த்ததில்லை. கொஞ்சம் கூட இமேஜ் பார்க்காமல் எல்லோரிடமும் பழகுபவர். குறை சொல்வதற்கு முன்பு யோசிக்க வேண்டும்.

  //பதிவுலகில் சமீபகாலமாய் ஒரு வியாதி. எதையும் முழுதாய் படிக்காமல் உடனடி ஹிட்ஸுக்காக அரைவேக்காடுத்தனமாய் பதிவிடுவது. சினிமா வியாபாரம் தொடரில் தமிழின் முத்ல் டால்பி டிஜிட்டல் படத்தை எடுக்க முனைந்தவர்களில் கமல் , அபிராமி ராமநாதன், தேவி, மற்றும் ஏவிஎம் இராஜேஸ்வரி திரையரங்கு உரிமையாளர்களுக்கு பங்கிருக்கிறது என்று எழுதியிருந்தேன். அதற்கு தமிழின் முதல் டி.டி.எஸ் படம் குருதிபுனல் என்று தவறான தகவல் அளித்துவிட்டேன் என்று பதிவிட்டிருக்கிறார். டி.டி.எஸ்ஸுக்கும், டால்பி டிஜிட்டலுக்கும் வித்யாசம் தெரியாதவர்கள் எல்லாம் அதை பத்தி பதிவிட்டு, ஹிட்டடித்து என்னத்தை பு.. போகிறார்கள்? என்றே தெரியவில்லை.//

  ஏதோ ஒரு அனானி வந்து வாந்தி எடுத்து விட்டு போய் இருக்கிறது? பாவம் பயந்த சுவாபம் போல.......

  இதற்கு என்ன பதில் சொல்ல போகிறீர்கள்? மற்ற படி உங்களை போலவே அவதூறாக பேச எனக்கு மனமில்லை இத்தோடு முடித்துக் கொள்கிறேன்.

  ReplyDelete
 11. பிச்சைக்காரன் ஏன் இந்த காழ்ப்பு? யார் மீது இந்த கோவம்?
  கேபிள் போன்ற ஒரு படைப்பாளியை, நல்ல மனிதரை நான் இந்த வலைத்தளத்தில் பார்த்ததில்லை. கொஞ்சம் கூட இமேஜ் பார்க்காமல் எல்லோரிடமும் பழகுபவர். குறை சொல்வதற்கு முன்பு யோசிக்க வேண்டும்.

  //பதிவுலகில் சமீபகாலமாய் ஒரு வியாதி. எதையும் முழுதாய் படிக்காமல் உடனடி ஹிட்ஸுக்காக அரைவேக்காடுத்தனமாய் பதிவிடுவது. சினிமா வியாபாரம் தொடரில் தமிழின் முத்ல் டால்பி டிஜிட்டல் படத்தை எடுக்க முனைந்தவர்களில் கமல் , அபிராமி ராமநாதன், தேவி, மற்றும் ஏவிஎம் இராஜேஸ்வரி திரையரங்கு உரிமையாளர்களுக்கு பங்கிருக்கிறது என்று எழுதியிருந்தேன். அதற்கு தமிழின் முதல் டி.டி.எஸ் படம் குருதிபுனல் என்று தவறான தகவல் அளித்துவிட்டேன் என்று பதிவிட்டிருக்கிறார். டி.டி.எஸ்ஸுக்கும், டால்பி டிஜிட்டலுக்கும் வித்யாசம் தெரியாதவர்கள் எல்லாம் அதை பத்தி பதிவிட்டு, ஹிட்டடித்து என்னத்தை பு.. போகிறார்கள்? என்றே தெரியவில்லை.//

  ஏதோ ஒரு அனானி வந்து வாந்தி எடுத்து விட்டு போய் இருக்கிறது? பாவம் பயந்த சுவாபம் போல.......

  இதற்கு என்ன பதில் சொல்ல போகிறீர்கள்? மற்ற படி உங்களை போலவே அவதூறாக பேச எனக்கு மனமில்லை இத்தோடு முடித்துக் கொள்கிறேன்.

  ReplyDelete
 12. நீங்க முதலில் சொந்தமா சிந்திந்து எழுதுங்க ... கேபிள் சங்கரை குறை சொல்லியே பதிவு போடதிர்கள்..

  ReplyDelete

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா