Thursday, March 24, 2011

ஷங்கருக்கு கமல் கொடுத்த ஜாதி வெறி ஐடியா- சாரு நிவேதிதா

 

 

அல்ட்டிமேட் ரைட்டர் சாரு என்றாலே நேர்மை என்பதுதான் அர்த்தம்.

கமல் என்றாலே விமர்சனத்தை ஏற்காதவர் என்று அர்த்தம்.

இதனால்தான், பலரும் கமலை பாராட்டியே எழுதுவது வழக்கம்..

ஆனால் எதை பற்றியும் கவலைப்படாமல் , நேர்மையாக சாரு எழுதிய குருதி புனல் விமர்சனம் , கமலை அதிர்ச்சிக்குள்ளாக்கியது….

அந்த விமர்சனத்தில் பின் குறிப்பாக வந்த பகுதி இதோ உங்கள் பார்வைக்கு…..

( முழு விமர்சனம் படிக்க பலர் விருப்பம் தெரிவித்து இருக்கிறார்கள்.. அவர்கள் விருப்பத்துக்கு மதிப்பளித்து முழு விமர்சனம் அடுத்து வெளியிடப்பட இருக்கிறது )

****************************************

ஜெனிடில்மேன் படம் இட ஒதுக்கிட்டுக்கு எதிரான பொய் பிரச்சாரத்தை மிக வெளிப்படையாக முன் வைத்த படம். இப்படத்தின் கதையில் முதலில் பிராமண இளைஞனே கத்தியை தூக்குவதாக இருந்ததாம். அது வேண்டாம் என ஆலோசனௌ வழங்கினார் கமல்.

பிராமாணர்கள் கத்தியை தூக்கினார்களா இல்லையா என்பதற்கு வரலாறு சான்றாக நிற்கிறது. அதையும் நம்பமுடியாமல் போனால் மனு சாஸ்திரம் எழுத்து வடிவில் சாட்சியாக நிற்கிறது. ஒடுக்கப்பட்டவர்களின் வரலாறு குறித்து ஒடுக்கியவர்கள் வழி வந்தவர்கள் சாட்சியம் சொல்ல முடியுமா? அல்லது ஒடுக்கப்பட்டவ்ர்கள் சாட்சியம் சொல்ல முடியுமா?

மாவட்டத்திலேயே முதல் மதிப்பெண் வாங்கிய பிராமண மாணவனுக்கு மருத்துவ கல்லூரியில் இடம் இல்லை என்ற பச்சை பொய்யை சொன்ன ப்டம் ஜெண்டில்மேன்.

சேர்க்கைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் பட்டியலில் தன் பெயர் இல்லாமல் அதிர்கிறான் அந்த பிராமண பையன். அப்போது அவனுக்கு பின்னால் தன் பெயர் பட்டியலில் இருக்க கண்டு குதியாட்டம் போடுகிறான் ஒரு கறுப்பு மாணவன். இதன் அர்த்தம் என்ன?

மதிப்பெண் குறைவாக இருந்தாலும் கறுப்பு மாணவனுக்கு சீட் கிடைக்கும். மாவட்டத்திலேயெ முதல் இடம் பெற்றாலும் பிராமண மாணவனுக்கு சீட் இல்லை.

இதை உண்மை என எடுத்து கொண்டால் இன்றைக்கு சமூகம் முழுதும் எங்கே பார்த்தாலும் சூத்திரர்களும் , தலித்துகளும்தானே இடம் பெற்று இருக்க வேண்டும். ஆனால் நிலை அப்படி இல்லையே..

எத்தனை பிராமணர்கள் மலம் அள்ளுகிறார்கள்? எத்தனி பேர் கொத்தடிமைகளாக இருக்கிறார்கள்.?

ஆனால் இதற்கு மாறாக ஒரு அய் அய் டி யை எடுத்து கொண்டால் முக்கால்வாசி பேர் பிராமண்ர்களாக இருக்கிறார்கள்.

ஆக மலம் அள்ளுபவன் மலம் அள்ளுபவனாகவே இருக்க வேண்டும் என்பதுதானே கமல் வாதம்.

“ நான் சொன்ன மாற்றத்தை ஷங்கர் செய்து விட்டார் என பிறகு அறிந்தேன் “ என்கிறார் கமல். அதாவது கதானாயகன் பிராமனன் போல காட்டப்பட்டாலும் கடைசியில் அவன் சூத்திரன் என தெரிகிறது. “இட ஒதுக்கிட்டை பிராமணன் எதிர்ப்பதை விட அ-பிராமனன் எதிர்ப்பது நல்லது ” என்பது கமல் சொல்லி ஷங்கர் செய்த மாற்றம். சூதிரன் கையை எடுத்து அவன் கண்ணைக் குத்தி கொள்ள செய்வதுதான் சரி என சொல்லி கொடுத்து இருக்கிறார் கமல்.

6 comments:

 1. ஷங்கர் ஒரு பச்சை அயோக்கியன் என்பது முற்றிலும் அறிந்த விஷயமே... எனினும் கமலை அந்த வரிசையில் சேர்க்க முடியாது... கருத்து சொல்கிறேன் பேர்வழி என்று தனக்கு மென்மேலும் புகழைத் தேடிக்கொள்ளும் ஒரு புகழ்போதை பிரியர், சந்தர்ப்பவாதி என்ற பட்டியலில் கமலை சேர்த்துக்கொள்ளலாம்...

  ஆனால் இந்த இடுகையை படிக்கும்போது வேதாளம் முருங்கைமரத்தில் இருந்து இறங்கி மீண்டும் சாருவின் முதுகில் ஏறிக்கொண்டது போல தோன்றுகிறது...

  ReplyDelete
  Replies
  1. கமல் ஒரு கலை வித்தகர் அவரை குறைத்து மதிப்பிடுவது மல்லாந்து படுத்துக் கொண்டு உமிழ்வதற்கு சமம்

   Delete
 2. பிரபாகரா , சிலர் செய்யும் கமல் ஆதரவு பிரச்சாரம் உன்னை பாதிக்கவில்லை என அறிந்து மகிழ்ந்தேன் .

  ReplyDelete
 3. ஏண்ணே.. படம் வந்து ரொம்பவருஷம் ஆகிப்போச்சே..!!

  ஒரு படத்தில இவ்வளவு பிரச்சனை இருந்திருக்கா?..
  இப்பதான் புரிஞ்சது..!!
  :-)

  ReplyDelete
 4. பிராமனன் என்ன வேசம் போட்டாலும் கடைசியில் பிராமணன் தன் ORIGINAL குணத்தை காட்டுவார்கள் உதாரணமாக ஷங்கர் கமல் SV.SEKAR,So.RAMASAMY,KURUMORTHI.

  Maharaja

  ReplyDelete
 5. என்னதான் நீங்க சொன்னாலும்....கமல்..கமல்தான்!! ஒரு சில குறைகள் இல்லாத மனிதரே இல்லை. கமல் மாதிரி தூய தமிழ் பேசும் அடிப்படை தகுதி உள்ள முன்னணி நடிகர் யார்??????????????????? ஆனால் தமிழனுக்கு போராடுவதாக மார் தட்டுவார்கள். முதல் படத்திலேயே தேசிய விருது வாங்கிய உலக நாயகனின் சாதனை என்றும் அவர் புகழ் பாடும்!!!

  ReplyDelete

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா