Tuesday, March 22, 2011

I dont care- Short story by MRINZO NIRMAL

“அப்படீனா நடந்த சம்பவத்திற்கும் உங்களுக்கும் எந்த சம்பதமும் இல்லை. அப்படித்தானே ? “
இப்படி கேட்டது: போலீஸ் கிரைம் பிராஞ்ச் இன்ஸ்பெக்டர் விக்ரம்.இடம் :எங்கள் ஊர் காவல் நிலையம்.நேரம் : : என் கெட்ட நேரம்..
அவனவன், வைகோ செய்தது சரியா.. இந்த வருடம் வெயில் அதிகமா.. ரஜினி யாருக்கு வாய்ஸ் கொடுப்பார் என ஆராய்ச்சி மேற்கொண்டு இருக்கும் போது , அந்த ஜோதியில் நான் மட்டும் கலக்க முடியாமல் இங்கு உட்கார்ந்து இருக்கிறேனே.. எரிச்சலாக இருந்தது….ஊழ் என்பது உண்மையா என்ற தேவை இல்லாத கேள்வி அசந்தர்ப்பமாக மனதில் வந்து போனது..“சார் சம்பவம் சம்பவம் என்று சொல்றிங்களே அப்படி என்ன சம்பவம் சார் நடந்துச்சி.” சற்று சிநேகமாகவே கேட்டேன். அவர் விரோதமாக பார்த்தார்,, செய்வதை செய்து விட்டு , என்ன சம்பவம் என என்னையே கேட்கிறாய என அவர் கண்கள் கேட்டன.”இந்த போட்டோவை பாருங்க” என் முன்பாக சில போட்டோக்களை போட்டார் , அட .. இது தாராசுரத்தில் உள்ள சிற்பங்கள், இதை என் என்னிடம் காட்டுகிறார்… இதை படம் எடுத்து, பதிவு போட்டு, சிலரின் பாராட்டுக்களையும் பலரின் விமர்சனத்தையும் சந்தித்தவன் நான்… என்னிடமே படம் காட்டுகிறாரே ? !ஒவ்வொரு படமாக பார்த்துகொண்டுவந்தவன் திடீரென உறைந்து விட்டேன், எனக்கு மிகவும் பிடித்த , அந்த “ஒரு பெண் முகம் நான்கு ஜோடி கால்கள்” சிற்பம் பெயர்க்கபட்டிருந்தது, அந்த இடத்தில MRINZO 2203111210 என்று சிவப்பு பெயின்ட்டால் எழுதபட்டிருந்தது. விக்ரம் என்னை கூர்மையாக பார்த்தார்” அது எப்படி mrinzo நீங்க அந்த தாராசுரம் பத்தி எழுதின பிறகுதான் இந்த சம்பவம் நடந்திருக்கு. so உங்களுக்கும் இதற்கும் ஏதோ சம்பந்தம் இருக்கணும்.” நான் மறுத்தேன்” சார் எவனோ சின்ன பசங்க பண்ணின குசும்பு சார் ” விக்ரமின் விரோத பார்வை மாறவில்லை ” அப்படியா ..இதை பாருங்க ” இன்னொரு போட்டோவை காண்பித்தார். லப் டப் லப் டப் லப் டப் லப் டப் என்று இயங்கிகொண்டிருந்த எனது இதயம் லப்ப்ப்ப்ப்ப்ப்ப் ……………….. டப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப் என்று அடிக்க ஆரம்பித்தது. போட்டோவிலிருந்து என் கண்களை உடனடியாக விலக்கி விக்ரமை பார்த்தேன். அந்த சிலை இருந்த இடம் அருகில் ஒரு பெரிய கட்சியின் குட்டி தலைவர் பிணம் கிடந்தது,,,,” அவரை கோயிலில் வைத்து கொலை செய்து இருக்கீங்க… ஆன்மிக கொலை ” மெல்லிய கிண்டலுடன் என்னை முறைத்தார் விக்ரம்”சார் நான் எப்படி சார்? நான் இந்தியாவிலேயே இல்லை சார்.” பதறினேன் “எங்களுக்கு தெரியும் ” தனது இருக்கை விட்டு எழும்பினார் விக்ரம். எனது அருகில் வந்து எனது கண்களை நோக்கி பேச ஆரம்பித்தார்அவரது perfume கண்டிப்பா Calvin Klein CKவாகதான் இருக்கணும் என்று நினைத்து கொண்டேன். “mrinzo உங்களுக்கும் இந்த கொலைக்கும் எந்த சம்பந்தமும் இல்லைதான், பின்ன எதுக்கு அந்த கட்சி தலைவர் mrinzo என்று அந்த இடத்தில தன் ரத்தத்தால் எழுதிவைக்கணும்? சொல்லுங்க.” மறுபடியும் விக்ரம். சொல்லுங்க சொல்லுங்க சொல்லுங்க சொல்லுங்க……………………சொல்லுங்க சொல்லுங்க சொல்லுங்க சொல்லுங்க……………………” அட பாவிகளா… அது ரத்தமாடா .. நான் பெயின்ட்நு தானடா நினைத்தேன் ” விவேக் பாணியில் மனதில் புலம்பி கொண்டு ” தெரியல சார் ” அழும் குரலில் சொன்னேன்.” இங்க என்ன ஷூட்டிங்க நடக்குது? வேற யாரும் உங்களுக்கு டப்பிங் பேச மாட்டாங்க … சும்மா வாயசைத்தா போதாது… சத்தமா சொல்லுங்க ” அதிகார குரலில் மிரட்டினார்அப்போதுதான் புரிந்தது எனக்கு தொண்டை வற்றி குரல் வராமல் பேசி இருக்கிறேன்.. வாய் மட்டும் அசைத்து இருக்கிறேன் ” தண்ணி” என கேட்டேன்.. இல்லை வாய் அசைத்தேன்…அது பயன்படாது என உணர்ந்து தண்ணி என்று செய்கை செய்தேன்.தண்ணி வந்தது ,,,அதே நேரம் அந்த நேரம் விகரமுக்கு போன் வந்தது .. ஒரு நிமிஷம் என்று சொல்லிவிட்டு அவரது அறையை விட்டு வெளியே சென்றார்.தண்ணீர் கொண்டு வந்த constable , ” சார் நீங்க MRINZO தானே ? பிச்சைக்காரன் வேண்டுகோளுக்கு இணங்க கிரைம் சப்ஜெக்ட் தேடி போலீஸ் ஸ்டேஷன்னுக்கு வந்திடிங்க்லே, சூப்பர் சார் . நல்லா ரிசர்ச் பண்ணுங்க சார் ..உங்க ஆர்வத்தை நினைத்து பெருமை படுறேன் சார் ” என நிலைமை புரியாமல் பாராட்டிவிட்டு சென்றார்.அப்போது யாரோ ஒருவர் நுழைந்தார்… ” சார்.. நீங்கதானே MRINZO ? உங்க கிட்ட அவசரமா பேசணும் ” அவரை பார்த்தால் என் ஊர் ஆள் மாதிரி தெரியவில்லை… போலிஸ் மாதிரியும் இல்லை… ஒரு வேளை பதிவரோ? சூடான இடுகை போட என்னை தேடி வந்து விட்டாரோ..?” ஹலோ ..முதல்ல நீங்க யாரு நு சொல்லுங்க ? நீங்க பதிவரா? ” வந்தவர் பதட்டமாக இருந்தார் .. ” நிலைமை புரியாம பேசாதீங்க… என்னை பத்தி சொல்ல நேரம் இல்லை… சுருக்கமா சொல்றேன்… நான் ஒரு பதிவர்தான்.. பேரு….. “அவர் சொல்வதற்குள் எனக்கு டென்ஷன் தலைக்கு ஏறியது.. ” சார்.. இவர் யாரை கேட்டு உள்ளே வந்தார்… இது போலிஸ் ஸ்டேஷனா ? பொழுது போக்கு பூங்காவா? ” கத்தினேன்.. கன்ஸ்டபிள் ஓடி வந்தார் .. ” யாரு சார் நீங்க … முதலில் வெளியே போங்க… ” தன் பவரை காட்டினார்..இனி இங்கு இருப்பது ஆபத்து என உணர்ந்த அந்த பதிவர், ” சரி, நான் கிளம்புறேன்… இந்த பைலை உடனடியா படிங்க ” கொடுத்து விட்டு, பதட்டமாக வெளியேறினார்..“ஓகே சார் எப்படியாவது கண்டுபிடிசிடுவோம் சார், ஒன் அவர் கழிச்சி உங்களுக்கு அப்டேட் கொடுக்கிறேன்” என்று நுழைந்தார் விக்ரம்.” கொலை கேஸ் மட்டும் இல்லை… அந்நிய செலாவானி கேஸ் . அளவுக்கு மீறி சொத்து சேர்த்தல் நு பல கேஸ் உங்க மேல பாயும்னு நினைகிறேன் .. MRINZO 2203111210 .. இந்த எண் சுவிஸ் வங்கி நம்பர அல்லது நீங்க வேலைக்கு வைத்து இருக்கும் கொலையாளி நம்பரா ? இந்த கொலை மட்டும் இல்லை Mrinzo, எல்லா சாதி கட்சி தலைவர்களை கடத்திட்டு போயிட்டாங்க அவங்களை கொலை பணிடுவேன்னு மிரட்டல் வந்திருக்கு ” என்று இன்னும்மொரு சுனாமி அலையை என் மீது மோத வைத்தார் விக்ரம்.” எனக்கு ஒன்னும் புரியலை சார், யாரோ ஒருத்தன் தேர்தல் சமயத்தில் எல்லா சாதி கட்சி தலைவர்களை கடத்திட்டு கொலை பணிடுவேன்னு மிரட்டல் விட்டா அதற்க்கு நான் என்ன சார் பண்ணுவேன் சொல்லுங்க “.தண்ணீர் குடித்தால் தொண்டை இயல்பாகிவிட்டது போல ஆனால் அது தெரியாமல் பேசியதில் என் வார்த்தைகள் கொஞ்சம் அதிகமான சப்தத்தோடு வந்து விழுந்து விட்டன .தண்ணி அடிச்சா ரைட்டு .. தண்ணி குடிச்சா தப்பா ?விதி விளையாடுதே !!!விக்ரமுக்கு அந்த தொனி பிடிக்கவில்லை போலும், முறைத்தார்.யாருக்குத்தான் பிடிக்கும். .” மன்னிச்சிடுங்க..ஹி ஹி ” என்று சமாளித்தேன்.எனது வேலை, வடிவேலு ஜோக்கு, நல்லா சாப்பாடு, கொஞ்சம் சரக்கு, நேரம் கிடைக்கும் போது ப்ளாகில் எழுதுவதுமாய் இருந்த என்னை சிற்பம், கொலை, கடத்தல் என்றால் என்னவாகும்.குழம்பிகிடந்தேன்……விக்ரமிற்கு மீண்டும் ஒரு போன் வந்தது. ” ஒரு நிமிஷம் ” கிளம்பினார் என்ன செய்வது …. யோசித்து கொண்டு இருந்த போது , பதிவர் கொடுத்த பைல் கண்ணில் பட்டது.. புரட்டினேன் .. செய்தி தாள் கட்டிங்… என்னவோ கட்டுரை…*************************அதிர்வுள்ள கோயில்கள்…சில கோயில்களில், போட்டோ எடுக்க கூடாது என சட்டம இருக்கும்…அதை பொதுவாக யாரும் மதிப்பதில்லை… ஆனால் சில சக்தி வாய்ந்த கோயில்களில் இதை மதித்தே ஆக வேண்டும்… மீறி எடுத்தால் சில தொந்தரவுகள் வர கூடும்… அனால் இவர்கள் கூட தப்ப வாய்ப்புண்டு… சிலை திருட்டில் ஈடுபடுபவர்கள் தப்ப வாய்ப்பே இல்லை. **** ஊரை சேர்ந்த ஒரு குட்டி கட்சி தலைவரும் , அவரது இரண்டு கூட்டாளிகளும் சிலை திருட்டில் ஈடுபட்டு வந்தது அந்த ஊர் மக்களுக்கு தெரியும்… இந்த நிலையில் அந்த கூட்டாளிகளில் ஒருவன் , மர்மமான முறையில், திருட்டில் ஈடுபட்ட கோயில் அருகிலேயே இறந்து கிடந்தான்.. இறக்கும் தருவாயில், அந்த குட்டி கட்சி தலைவர் பெயரை சருகில் இருந்த சுவரில் எழுதி வைத்து விட்டுத்தான் இறந்தானாம்… ஆனால் ,அந்த குட்டி கட்சி தலைவரை காட்டி கொடுப்பதற்கு அவன் எழுதி இருக்கிறான் என நினைத்து அதை மறைத்து விட்டார்களாம்… உண்மையில், சாகும் தருவாயில் அடுத்து யாருக்கு ஆபத்து என்பது தண்டனை பெறுபவர்களுக்கு தெரியுமாம்… அதை அவர்கள் எதோ ஒரு வகையில் தெரிவிப்பார்கள்… அதை உணர்ந்து , மன்னிப்பு கேட்டால், தப்பிக்கலாம்… ஆனால்,. அப்படி செய்யாததால், அந்த கட்சி தலைவரும் இறந்து விட்டார்.. கண்டிப்பாக அடுத்த ஆபத்து யாருக்கு என அவர் எழுதி வைத்து இருப்பார்… ஆனால் அதை போலிஸ் மறைத்து வருகிறது********************கட்டுரையை படித்த நான் திகைத்தேன்…அட பாவிகளா… சிலையை போட்டோ எடுத்து வலைப்பூவில் போட்டது , வகையாக சிக்க வைச்சுருச்சே டா… யோசித்தேன்… நான் எந்த கெட்ட எண்ணமும் இன்றி அந்த போட்டோவை பப்ளிஷ் செய்தாலும், நானும் ஒரு வகையில் திருட்டுக்கு காரணம் ஆகி விட்டேன் ..அந்த சிலை தீய சக்திகள் கண்ணில் பட நானும் காரணமாகி விட்டேன்.., கடவுள் இருக்கிறாரோ இல்லையோ.. ஒரு இயற்கை சக்தி இருக்கிறது… அதனிடம் மனப்பூர்வமாக மன்னிப்பு கேட்டேன்… இனி சின்ன விதி மீறல்கள் கூட செய்ய மாட்டேன்… கொஞ்சம் கொஞ்சமாக மனதில் தெளிவு பிறக்க ஆரம்பித்தது… இறை சக்தி எனக்கு சாதகமாக மாறுவதை உணர முடிந்தது,, MRINZO 2203111210 அந்த எண் எதையோ சொல்வது புரிய ஆரம்பித்தது.. 22 – 03 – 11 12 10 என்ன இது.. திடீரென புரிந்தது..

 மை காட் 22 – 03 – 11 இன்றைய தேதி.. 12 10 இது மணியாக இருக்க வேண்டும்… இப்போது என்ன மணி ? 12 09 எண் உள்ளுணர்வு ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு என்றது …. அமர்ந்து இருந்த சேரில் இருந்து, பாய்ந்து ஓடினேன் .. நான் எழுந்த அடுத்த நொடி, சேருக்கு மேல் இருந்த கனத்த மின் விசிறி , அறுந்து விழுந்து , அந்த சேரை சட்னி ஆக்கியது.. ஒரு நொடி தாமதித்து இருந்தால்???? விக்ரம் சாவகாசமாக உள்ளே வந்தார் .. ” பழைய பேன் ” மின் விசிறி விழுந்ததை அவர் சீரியசாக எடுத்து கொள்ளவில்லை… ” mrinzo நீங்க போகலாம், இப்பதான் கும்பகோணத்தில் இருந்து போன் வந்தது. அவரை கொலை செய்தது அவர் கூட்டளியாம் …. சிலையை கடத்தும்போது தகராறாம்.. கடத்தல் லாரி ஆக்சிடன்ட் ஆகி இப்ப அவனும் காலி… மரண வாக்குமூலத்துல எல்லாத்தையும் சொல்லிட்டான் … சிலையும் கிடைத்து விட்டது… உங்க பேரை ஏன் எழுதி வச்சார்னுதான் தெரியல… சரி,,விடுங்க,,,, அது தெரிஞ்சு என்ன ஆக போகுது… ஐ டோன்ட் கேர் ” முதல் முறையாக தோழமையுடன் சிரித்தார் விக்ரம்… ” அப்புறம் அந்த சாதி கட்சி தலைவர்கள் கடத்தல் வேறு விவகாரம்… ஆக்சுவல்லி ” என்று ஆரம்பித்தார் “சார் I dont care என்று, thank you ” சொல்லிவிட்டு கிளம்பினேன். கான்ஸ்டபிள் எதிர்பட்டார்..

ஒருவர் வந்து இந்த பைலை கொடுத்தாரே… அவர் பேரு என்ன… அவர் இங்கே எப்படி வந்தாரு… சீக்கிரம் சொல்லுங்க … நான் வெளிநாட்டு கிளம்பி ஆகணும். வேளை இருக்கு ” அவரிடம் கேட்டேன்.. “அவர்தான் சார் பதிவர் பிச்சைக்காரன்.. உங்களுக்கு தெரியும்னு நினைச்சு ,. வேற detail எதுவும் வாங்காம விட்டுட்டேனே சார்

.. டோன்ட் கேர் சார்.. இன்னொரு முறை பார்த்தா விபரம் வாங்கி வக்கிறேன்,,, நல்ல படியா போய்ட்டு வாங்க “என்னால் ஐ டோன்ட் கேர் என சொல்ல முடிவில்லை… இ ஹேவ் டு கேர் லாட் ஆப் திங்க்ஸ் அண்ட் லாட் of people . because lot of people அண்ட் லாட் ஒப் திங்க்ஸ் ( some invisible things too ) கேர் அபௌட் மீ நினைத்தபடியே இந்தியாவை விட்டு கிளம்பினேன்… மனம் நிறைவாக இருந்தது6 comments:

 1. வித்தியாசமான கிர்ர்ர் மினல் கதை

  ReplyDelete
 2. எனக்குக் கிடைச்ச சப்ஜெக்டில் இந்த மாதிரியிலாம் ஜாலியா ட்ரைப் பண்ணி
  பார்க்க முடியாது. இதுவரை எழுதாத அளவுக்கு மிக நீ..ண்ட பதிவு எழுதிக்
  கொண்டிருக்கிறேன். முதல் பகுதி இ.அ. நாளை வெளி வரலாம்.

  ReplyDelete
 3. இதுவரை எழுதாத அளவுக்கு மிக நீ..ண்ட பதிவு எழுதிக்
  கொண்டிருக்கிறேன்."

  epxpectation is too high.... please publish today itself...

  ReplyDelete
 4. ” சார் நீங்க MRINZO தானே ? பிச்சைக்காரன் வேண்டுகோளுக்கு இணங்க கிரைம் சப்ஜெக்ட் தேடி போலீஸ் ஸ்டேஷன்னுக்கு வந்திடிங்க்லே, சூப்பர் சார்//
  நான் இந்த வலையில சிக்க மாட்டேனே!

  ReplyDelete

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா