Wednesday, March 9, 2011

அதிகாலையில் எழ வைத்த சாரு நிவேதிதா !!

 சிறிய வயதில், நான் முதல் முதலில் படிக்க தொடங்கியது ராஜேஷ்குமார் கதைகள்தான்.. (பள்ளிகூட பருவத்தில் )
கல்கண்டில்தான் கதை படிப்பது ஆரம்பித்தது. சஸ்பென்ஸ் கதையில் வல்லவரான அவர் எழுத்து சின்ன வயதில் என்னை கவர்ந்தது..  கல்கண்டு வெளிவரும் தினத்துக்காக ஆவலுடன் காத்து இருப்பேன்.
அந்த தினம் வந்துவிட்டால், பரபரப்பாக புத்தகத்தை வாங்கி , தொடர்கதையை , வரும் வழியிலேயே படிக்க ஆரம்பிப்பேன்.

அது ஒரு காலம்.

அதன் பின், தொடர்கதை ஆர்வம் சிறிது சிறிதாக குறைய ஆரம்பித்து , ஒரு கட்டத்தில் முற்றிலும் நின்றது.
பத்திரிக்கை படிக்கும் ஆர்வமும் குறைந்து விட்டது..

நாவல்கள் படிக்க ஆரம்பித்ததும், நல்ல புத்தகங்கள் படிக்க ஆரம்பித்ததும், பத்திரிக்கைகள் படிக்க நேரமில்லாமல் போனது.. ஆனாலும் அன்றாட செய்திகளை அறிய அவ்வப்போது படிப்பேன்.

ஆனால் பதிவுலகம் அறிமுகமானபின். அனைத்து தர்ப்பு செய்திகளும் நேர்மையான பார்வையில் இங்கேயே கிடைப்பதால், பத்திரிக்கைகள் என்னை பொறுத்தவரை முக்கியத்துவம் இழந்தன,. ( இலக்கிய பத்திரிக்கள், ஒரு குறிப்பிட்ட துறை சம்பந்தமான பத்திரிகைகள் வேறு வகை.. அவற்றை தேடி தேடி படிப்பது இன்றும் என் வழக்கம் )

இந்த நிலையில் , அல்ட்டிமேட் ரைட்டர் சாருவின் கட்டுரை தொடர் துக்ளக்கில் வர ஆரம்பித்து இருப்பது, என் ஆர்வத்தை மீண்டும் தூண்டியது..

இன்று துக்ளக் வரும் என்பதால், அதற்காகவே சீக்கிரம் எழுந்தேன்... அப்போதுதான் , புத்தகம் வாங்கி படித்து விட்டு , வேலைக்கு கிளம்ப முடியும்...

வெகு நாள் கழித்து இப்படி ஆர்வமாக காத்து இருந்து அவர் கட்டுரையை படித்த என்னை சாரு ஏமாற்றவில்லை..
அருமையான எழுத்து..

துக்ளக்குக்காக ஒரு தனி ஃபார்மேட் அமைத்து கொண்டு , தனக்கே உரிய சமரசமற்ற , துணிச்சலான , இன்ஃபர்மேட்டிவான எழுத்தை வழங்கி இருந்தார் அவர்..

நகைச்சுவை , கிண்டல் பற்றி சொல்லவே வேண்டாம்.. கலக்கல்..

இன்றைய பொழுதையே மகிழ்ச்சியாக ஆக்கியது அவர் எழுத்து..

அவர் கட்டுரையின் சில வரிகள், இதோ உங்கள் பார்வைக்கு

********************************************


 • ஒரு நாள் மந்தை வெளி பஸ் டெப்போவில் ஒரே போலீஸ் பட்டாளமாக இருந்தது. முதல் மந்திரியின் பேரனுக்கும், கொள்ளுப்பேரனுக்கும் பாதுகாப்பு கொடுக்க வேண்டிய போலீசுக்கு இங்கென்ன வேலை என ஆச்சரியத்துடன் விசாரித்தேன்.. • 35 ஆண்டு அரசியல் வாழ்வில் அண்ணன்மார்கள் சேர்க்காத பணத்தை மூன்றே ஆண்டுகளில் உலக இலக்கியம் படித்த தங்கை சேர்த்து விட்டாரே
 •        சென்னையில் சர்வதேச தரம் கொண்ட பள்ளியில் படிக்கும் சிறுமி ( ஐந்தாம் வகுப்பு ) தான் ஒரு ஆர்னிதாலஜிஸ்ட் ஆக போவதாக என்னிடம் சொன்னாள்.. ஆர்னிதாலஜி என்ற வார்த்தைக்கு அர்த்தம் தெரிய எனக்கு 40 ஆண்டுகள் ஆயிற்று
 • சோஷியல் எவாலூயேஷன் என ஒரு பெண்மணி எழுதி இருந்தார். அதற்கு என்ன அர்த்தம் என்றேன். சமூக மதிப்பீடுகள் என்றார். அது சோஷியல் வால்யூஸ் என்றல்லவா இருக்க வேண்டும் என்றேன். விழித்தார் அவர்.
இது தவிர ஜி நாகராஜன் , Michael Foucault குறித்து எழுதி இருப்பது இன்ஃபர்மேட்டிவாக இருந்தது...


மனதுக்கு நிறைவாக இருந்தது....


 

9 comments:

 1. நீங்கதான் சரியான ஆளு! துக்ளக் கட்டுரைய ஸ்கேன் பண்ணி போடுங்க! ;)

  ReplyDelete
 2. Arumaya irundhadhu. Avlo creative writera, actor vijay kuda compare pani kalayukumbodhu dha konjam mana varuthamaavum, konjam siriputuravidhamagavum iruku. Ellarum comment adikira nerathule, neenga avarudaya good qualities sollumbodhu konjam sandhosama iruku. His blog is incisive. I read it but I never tried his books. Recently bought "Zero Degree". After went through a page, i'm eager to finish it. Planning to cut all works and commitments for two days and finish it. Once I go through i'll write.
  (but udham sei le, cbi role irukumnu edhirpaarthe, harmonium mattum vasichitu poitare)

  ReplyDelete
 3. அந்தக் கட்டுரையிலிருந்து இன்னும் கொஞ்சம் போடுங்க பாஸ்!

  ReplyDelete
 4. //கல்கண்டு வெளிவரும் தினத்துக்காக ஆவலுடன் காத்து இருப்பேன்//
  பைலட் பிரேம்குமாரின் காதல் தீவு ஆவலாய்ப் படித்த ஞாபகம் வருகிறது.
  ஆமாம் லேனா எங்கே, கல்கண்டு இன்னும் வருகிறதா.
  (மன்னிக்கவும், பல காலங்கள் ஆகி விட்டன பத்திரிக்கைகள் பார்த்து)

  ReplyDelete
 5. @arabu thamizhan..

  Have u read that story ? pilot premkumar..

  yes..yes.. i also remember..

  ReplyDelete
 6. @sengivi..

  wait some time.. i will publish

  ReplyDelete
 7. @lathamagan..

  wait .. I will publish

  ReplyDelete
 8. Once I go through i'll write. "

  please write... eagerly waiting

  ReplyDelete
 9. ithellam oru periya vishayama? poda dubukku.....

  ReplyDelete

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா