Monday, January 21, 2019

ரஞ்சித் பாலச்சந்தர் ஷங்கர் - ரஜினி இயக்குனர்கள் -2



ரஜினியை வைத்து 3 உலகளாவிய ஹிட் கொடுத்த ஷங்கர் உன் குருட்டுக் கண்களுக்கு தெரியவில்லையா என ஒரு நண்பர் பின்னூட்டம் இட்டு இருந்தார்


ரஜினியை அறிமுகம் செய்த பாலச்சந்தர்  , ரஜினியின் சமூக அக்கறைய வெளிக்கொணர்ந்த ரஞ்சித் , ரஜினியின் உலகாளவிய புகழை நிரூபித்த ஷங்கர் ஆகியோரை தனியாக பட்டியலிட விரும்பியே அதில் சேர்க்கவில்லை

இப்போது இவர்களைப் பார்ப்போம்

கே பாலச்சந்தர்

மிகச் சிறந்த இயக்குனர்.. பேர் சொல்லும் அளவுக்கு பல படங்கள் எடுத்துள்ளார்.. ஒரு பல்கலைக்கழகம் இவர்

கமல்தான் இவருக்கு நெருக்கமாக இருந்திருக்க வேண்டும்.. ஆனால் ரஜினி மீது அவர் ஆரம்ப காலத்தில் பரிவும் அக்கறையும் எந்த எதிர்பார்ப்பும் இல்லாத அன்பை மட்டுமே காட்டுகிறது... சினிமாத்துறையின் பல கலைகள் அறிந்த , சிவப்பு நிறமுள்ள , சொந்த சாதியைச் சேர்ந்த கமல் என்ற ஒருவர் இருக்கும்போது ரஜினி மீது ஏன் அவ்வளவு அக்கறை காட்டினார் என்பது மனதை நெகிழச்செய்கிறது...

ஒரு அளவுக்கு மேல் ரஜினியை வளர்த்த பின்  , இனி அவரை தன்னால் கையாள முடியாது  என உணர்ந்து எஸ் பி எம் , கே எஸ் ரவிகுமார் என பிற இயக்குனர்களை இயக்கச்செய்து படம் தயாரித்த இவர் பெருந்தன்மையை சினிமா உலகம் மட்டுமல்ல,,, பொதுவான வரலாறும் மறக்காது...


கமலையும் ரஜினியையும் ஒன்றுபோல நேசித்த இவர் , தன் படங்களில் இருவரையும் பேலன்ஸ் செய்து நடிக்க வைத்திருப்பார்...

இப்படி இரு சிகரங்களை உருவாக்கிய இவர் சாதனையை இனி யாருமே செய்ய முடியாது


ரஞ்சித்


முள்ளும் மலரும் படத்துக்குப் பின் ரஜினியின் யதார்த்த நடிப்பை கபாலி படத்தில் வெளிக்கொணர்ந்தவர் இவர்... ஹீரோயிசமும் இயல்பாக அமைந்திருக்கும்,,,  ரஜினிக்கு புதிதாக ரசிகர்களை சேர்த்து தந்த படம் கபாலி

படத்துக்கு கிடைத்த வரவேற்பால் மீண்டும் காலா படத்தில் இணைந்தனர்...

 நிலம் எங்கள் உரிமை என அழுத்தமாக சொன்ன படம்...  வெகு நாட்களுக்குப்பின் தமிழ் சினிமா ஒரு ஆழமான வில்லனைப் பார்த்தது...  சமூக அக்கறை கொண்ட ஒரு படத்தில் ஒரு முன்னணி நாயகன் நடிப்பது இதுவே முதல் முறை.. அதை முன்னுதாரணமாகக்கொண்டு மேலும் பல படங்கள் வர வேண்டும்/

புத்தம் குறித்த லேசான அறிமுகம் கொடுத்த படம்... ( புத்தம் குறித்து பிறகு விரிவாக எழுதுவேன் )

இந்த காம்பினேஷனை மீண்டும் காண ஆசை

ஷ்ங்கர்

சிவாஜி படத்தில் வரும் அதிரடிக்காரன் பாடல் இன்னும் அடிக்கடி கேட்கும் பாடலாக உள்ளது

குழந்தை ரசிகர்களை மீண்டும் ரஜினியிடம் ஈர்த்தவை ஷங்கர் படங்கள்..  எந்திரன் படமெல்லாம் உலகளவில் ஹிட் ஆன படம்

அந்த பட கதாபாத்திரங்களை மட்டும் வைத்துக்கொண்டு முற்றிலும் வேறுபட்ட ஒரு கதையை  ( 2.0 )கொடுத்தது ஷங்கரின் கிரியேட்டிவிட்டி

வில்லன் என்றால் அவனை வெறுக்கும் காட்சியமைப்புகள் தேவை என ஃபார்முலாவை அடித்து நொறுக்கிய படம்... வில்லனை நாம் இந்த அளவுக்கு நேசிக்கும் ஒரே படம் இதுவாகவே இருக்கும்... இலக்கியவாதிகளின் பங்களிப்பு எந்த அளவுக்கு ஆக்கப்பூர்வ விளைவை ஏற்படுத்தும் என்பதை ஜெயமோகன் காட்டி இருந்தார்


சுஜாதா , ஜெயமோகன் , பாலகுமாரன் என அறிவார்தவர்களை அருகில் வைத்திருப்பது ஷங்கரின் பலம்’’

3.0 படம் வர வேண்டும் என்பது பலரின் விருப்பம்

ரஜினி இயக்குனர்கள் அலசல் - 1

( அடுத்த பதிவு - மகேந்திரனும் ரஜினியும் )

No comments:

Post a Comment

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா