Tuesday, January 29, 2019

தடம் மாறாத போராளி - ஜார்ஜ் ஃபெர்னாண்டஸ்



ஜன  நாயகத்தையே ஒட்டு மொத்தமாக குழி தோண்டி புதைக்க நடந்த முதலும் கடைசியுமான முயற்சி இந்திரா காந்தி காலத்தில் நடந்தது

எமர்ஜென்சி கொண்டு வரப்பட்டு அனைத்து ஜன நாயக அமைப்புகளும் முடக்கப்பட்டன..


தற்போது வட கொரியா இருப்பதுபோல தன் தலைமையில் ஒரு சர்வாதிகார ஆட்சியை கொண்டு வந்து , தேர்தல்களை அழித்து விட்டு , ஒற்றை கட்சி முறையை கொண்டு வர இந்திரா முயன்றார்

ஜெயப்பிரகாஷ் நாராயணன் உள்ளிட்ட பலர் போராடி அந்த சூழ்ச்சியை முறியடித்து மீண்டும் ஜன நாயகத்தை நிலை நாட்டினர்

 ஜெபி போன்ற சோஷலிஸ்ட் கட்சித்தலைவர்கள் இல்லையென்றால் இன்றைய இந்திய ஜன நாயகமே கிடையாது.. ஆனாலும் அப்படி ஒரு கட்சியே இன்று மறக்கப்பட்டு விட்டது

ஆனாலும் ஜெபி , கிருபாளினி , அச்சுத் பட்டவர்த்தன் , பிரபுதாஸ் பட்வாரி , மது தண்டவதே , அசோக் மேத்தா போன்ற சோஷலிஸ்ட் தலைவர்கள் பெயர்களுக்கு இருக்கும் மரியாதை வேறு யாருக்கும் கிடைக்க வாய்ப்பில்லை.. அவர்கள் வரிசையில் ஜார்ஜ் ஃபெர்னாண்டஸ் , மது லிமாயி , சுரேந்திர மோகன் போன்ற தலைவர்கள் அரிய பங்காற்றியுள்ளர்...

தமிழத்தைப்பொருத்தவரை திமுக.வும் அந்த தலைவர்களுடன் சேர்ந்து , எமர்ஜென்சியை எதிர்த்தனர் என்பது வரலாற்று உண்மை... என்றென்றும் திமுகவுக்கு பெருமை சேர்க்கும் நிகழ்வு அது..



ஆனால்  , எமர்ஜென்சிக்குப் பிறகு வந்த தேர்தலில் இந்தியாவே இந்திராவுக்கு எதிராக வாக்களித்தாலும் தமிழகம் காங்கிரசுக்கு ஆதரவாகவே வாக்களித்தது

காங்கிரசின் பலத்தை உணர்ந்த திமுக , எமர்ஜென்சி கொடுமைகளை மறந்து விட்டு  , (அப்பாவி தொண்டர்களின் தியாகத்தை மறந்து விட்டு )நேருவின் மகளே வருக , நிலையான ஆட்சி தருக என காங்கிரசில் ஐக்கியம் ஆனது.

மிசாவில் கைதான பல திமுகவினர் , தமது பெயருக்கு முன் மிசா என பெருமையாக போட்ட்டுகொண்டனர்.,.. இந்திராவை குளிர்விக்கும் பொருட்டு , இந்த மிசா அடைமொழி கைவிடப்பட்டது...  பேட்ட படத்தில் மிசா வை மறந்த இந்த சம்பவத்தை கேலி செய்திருப்பதை கவனித்து இருப்பீர்கள்


காலப்போக்கில் வட இந்தியாவிலும் பலர் காங்கிரசை நோக்கி சென்றனர்


கடைசிவரை காங்கிரஸ் எதிர்ப்பில் உறுதியாக இருந்தவர்கள் வெகு சிலர்தான்.  அவர்களில் முக்கியமானவர் ஜார்ஜ் ஃபெர்னாண்டஸ்

இந்திராவை எதிர்த்து கடுமையாக போராடிய அவர் கடைசி மூச்சு வரை எந்த காம்ப்ரமைசும் செய்து கொள்ளவில்லை

அவரது காங்கிரஸ் எதிர்ப்புக்கு ஓர் உதாரணம்

அப்போது காங்கிரசும் இடதுசாரிகளும் ஒன்றிணைந்து செயல்பட்ட கால கட்ட்டம்..  பாராளுமன்ற விவாதத்தில் ஜார்ஜ் பேசினார்

இந்தியாவை அழிப்பதையே நோக்கமாக கொண்ட கட்சி காங்கிரஸ்... ஊழல் , அராஜகம் போன்றவற்றையே தன் கொள்கையாக கொண்டது என பேச பேச கம்யூனிஸ்ட்களும் காங்கிரசும் எதிர்த்து குரல் கொடுத்தனர்.. அடிப்படை அற்ற குற்றச்சாட்டு , அவதூறு என கம்யூனிஸ்ட் தலைவர்கள் ஆவேசமாக பேசினார்

ஜார்ஜ் தனக்கே உரித்தான குறும்புடன் சொன்னார்... “ நான் இது வரை வாசித்தது உங்கள் ( கம்யூனிஸ்ட் ) தேர்தல் அறிக்கையைத்தான்,,  தேர்தலின்போது ஊழல் கட்சியாக இருந்த காங்கிர்ஸ் இப்போது உங்கள் நண்பன் ஆகி விட்டது... இது உங்களுக்கே நல்லதல்ல... “

அவர் சொன்னதன் பொருளை பிற்காலத்தில் இடது சாரிகள் உணர்ந்தனர்...  இன்று மேற்கு வங்காளத்தில் அவர்கள் செல்வாக்கு போய் விட்டது... கேரளாவில் மட்டும் ஆட்சி செய்யும் மா நில கட்சியாக சுருங்கி விட்டது கம்யூனிஸ்ட்.. காரணம் காங்கிரஸ் சகவாசம்

அவர் ராணுவ அமைச்சராக இருந்தபோதுதான் , பொக்ரான் அணுகுண்டு பரிசோதனை வெற்றிகரமாக நிகழ்ந்தது

ரயில்வே ஸ்ட்ரைக்கை வெற்றி கரமாக நடத்திய அவர் பிற்காலத்தில் ரயில்வே துறை அமைச்சரானார்


காங்கிரசை எதிர்த்து வென்ற ஜனதா , ஜனதா தள , பிஜேபி கூட்டணி அமைச்சரவைகளில் இருந்த இவர் மட்டுமே காங்கிரஸ் எதிர்ப்பு என்பதில் உறுதியாக இருந்தார்

பரம்பரை ஆட்சியையும் சர்வாதிகாரத்தையும் எதிர்த்த இவர் பெயர் காரணம் சுவார்ஸ்யமானது.. ஃபெர்னாண்டஸ் என்பது குடும்ப பெயர்.. ஜார்ஜ் என்பது ?
அதுதான் சுவாரஸ்யம்.. இவர் அன்னை ஜார்ஜ் மன்னரின் தீவிர ரசிகர்.. அந்த அன்பின் காரணமான இவருக்கு வைக்கப்பட்ட பெயர்தான் ஜார்ஜ் ஃபெர்னாண்டஸ்

மன்னர் பெயர் தாங்கிய இவர் , சர்வாதிகார ஆட்சியை தூக்கி எறிவதில் முன் நின்றார் என்பதுபொரு வரலாற்று ட்விஸ்ட்

பேச்சாற்றல் மிக்கவர் , பல மொழிகளில் ஆளுமை கொண்டவர், பல்வேறு மா நிலங்களில் செல்வாக்கு கொண்டவர் என இவரைப்பற்றி சொல்லிக்கொண்டே போகலாம்


அவர் தலை சீவுவதில் அக்கறை கொண்டவர் அல்லர்.. அவரிடம் சீப்பே கிடையாது... எப்போதும் எளிய தோற்றம் கொண்டவர்.. சகஜமாக பொது இடங்களில் உலவுபவர்  ‘ சார் . நீங்க ஜார்ஜ் ஃபெர்னாண்டஸ் மாதிரியே இருக்கீங்களே என பலர் அவ்வப்போது சொல்வதுண்டு.. ஆமாம் ஜி.. எல்லோரும் அப்படித்தான் சொல்றாங்க.. “ என அலட்டிக்கொள்ளாமல் பதில் அளிப்பார் அவர்





அன்றைய எதிர்ப்பாளர்கள் பலர் இன்று காங்கிரஸ்  நண்பர்களாகி விட்ட நிலையில் அவர்கள் இவரை ஹீரோவாக நினைக்காவிடினும் மக்கள் மனதில் என்றும் அவர் ஒரு  ஹீரோவாக போராளியாக இருப்பார்


Former Minister George Fernandes being arrested during the Emergency period.

1 comment:

  1. ஈரோட்டில் 1989 என்று நினைவு. பாசிஸ்ட் எதிர்ப்பு இயக்க மாநாட்டில் அவர் அருகில் சென்று பார்த்தேன். மிக எளிமையானவர்

    ReplyDelete

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா