Wednesday, January 23, 2019

சென்சிப்லிட்டியுடன் பொண்டாட்டி


புத்தக கண்காட்சியில் ஒரு அரசியல் பிரமுகரின் ஸ்டால் இருந்தது,,  ஆரம்ப காலத்தில் எழுதிய சில கவிதைகள் காரணமாக இன்னும் அவர் தன்னை இலக்கியவாதி என்றே அடையாளப்படுத்திக் கொள்கிறார்,, புத்தக கண்காட்சியின் போது அவ்வப்போது தன் கட்சி மற்றும் தோழமை கட்சி பிரமுகர்களை தன் ஸ்டாலுக்கு அழைப்பார்... அந்த பிரமுகர்களுடன் கட்சியினரும் வருவதால் அந்த இடமே கும்பலால் சூழப்பட்டு விடும்... அருகில் இருக்கும் ஸ்டால்காரர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு பபாசியிடம் புகார் அளித்தனர்... அந்த புகாரை ஒரு எள்ளலுடன் கடந்து சென்றார் அந்த உரிமையாளர்

சென்சிப்லிட்டி  , பிறர் உணர்வுகளை புரிந்து கொள்ளும் திறன் இனமைதான் இதுபோன்ற பிரச்சனைகளுக்கு காரணமாகும்

அராத்து எழுதியுள்ள பொண்டாட்டி நாவல் இந்த சென்சிப்லிட்டி  குறித்து ( அது இனமை குறித்து )பேசுகிறது

ஜெயமோகன் என்று ஒரு கேரக்டர்.... காக்டெய்ல் கலக்குவதில் அவன் காட்டும் அக்கறை ஒரு கவிதை....அவன் நல்லவனா இல்லையா என்பது வேறு,,, ஆனால் ஒவ்வொரு விஷ்யத்திலும் அவன் காட்டும் அக்கறை , விருந்தோம்பல் , பிறர் மீதான அக்கறை போன்றவை நாம் நல்லவன் என கருதும் என பலருக்கு இருப்பதில்லை.... நல்லவன் என்பதையே ஒரு தகுதியாக நினைக்கிறோம்,.,, அதில்தான் பல பிரச்சனகள் எழுகின்றன


சென்சிப்லிட்டி குறித்து பேசும் இந்த நாவல் அதே சென்சிப்ல்டியுடன் உருவாக்கப்பட்டுள்ளது ...    எழுத்துப்பிழைகள்  , வாக்கியப்பிழைகள் , ஒற்றுப்பிழைகள் இல்லாமல் இப்படி இரு புத்தகம் படித்து பல யுகங்கள் ஆகின்றன.... நாளிதழ்கள் , வார இதழ்கள் என யாருமே இதில் அக்கறை காட்டாத நிலையில் , பிழைகளே இருக்கலாகாது என்ற கவனத்துடன் செதுக்கப்ப்பட்டுள்ளதற்காகவே எத்தனை முறை வேண்டுமானாலும் பாராட்டலாம்

சில இடங்களில் வேண்டுமென்றே சில பிழைகள் , சில வெற்றிடங்கள் , சில தட்டையான சித்தரிப்புகள் உருவாக்கப்பட்டுள்ளது அழகு... அதற்கான காரணங்கள் கதையின் போக்கிலேயே தெரிந்து விடுகின்றன


பேட்ட பட விமர்சனத்தில் , சிம்ரன்  கேரக்டர் என பாதியிலேயே காணாமல் போகிறது என கேட்டிருந்தார் ....  சின்னி ஜெயந்த்  உட்பட ஒவ்வொரு கேரக்டர் குறித்தும் விளக்கமாக படம் எடுக்கவா முடியும் என எண்ணிக்கொண்டேன்

ஆனால் இந்த கதையில் , அனாவசியமாக எந்த கேரக்டரும் இல்லை என்பதைக் காணும்போது  , ஒரு படைப்பாளியாக அந்த விமர்சனத்தை வைக்கும் உரிமை அராத்துவுக்கு உண்டு என நினைத்துக்கொண்டேன்

உதாரணமாக கதையின் நாயகி ஒரு ரயிலில் பயணிக்கிறார்... அந்த ரயிலின் இயக்குனர் பெயர் கேஷுவலாக சொல்லப்படுகிறது...  ஆனால் அது அனாவசிய அறிமுகம் இல்லை என பிறகு தெரிகிறது


தேவையற்ற ஒரு வார்த்தை , ஒரு கேரக்டர்கூட இல்லாத நாவல் ..



அராத்து கோஷ்டியினரின் இமயமலைப்பய்ணம் வெகு இயல்பாக கதையுடன் கலப்பது வெகு அழகு.,,,

 நதி உறைந்து விட்டால் மீன் என்னாகும் , மரணம் என்பது என்ன ,... மீண்டும் உயிர்ப்பிக்க முடியும் என்றால் அந்த இடைப்பட்ட காலம் என்ன என்பது போன்ற வரிகள்


தனிமை என்றால் என்ன..,,   தனிமை நம்மை எப்படி மாற்றும் என்பது போன்ற வரிகளில் ஆழமான பார்வை தெரிந்தாலும் அடுத்த நொடியே அதை எழுத்தாளரே பகடி செய்து காலியாக்குவதேல்லாம் வேறு லெவல்

ஃபேக் நாவல்கள் பல படித்திருக்கிறோம்... ஜேஜே சில குறிப்புகள் , நாளை மற்றுமொரு நாளே போன்ற சிலவற்றை ஃபேக் எழுத்துக்கு உதாரணமாக சொல்லலாம்..,,

ஃபேக் என சொன்னாலும் அவை கண்டிப்பாக படிக்க வேண்டியவை,,,, படிக்கவேகூடாத குப்பைகளும் ஏராளம் உண்டு

ஆனால் தன்னைத்தானே ஃபேக் நாவல் என அதிரடியாக அறிவிக்கும் முதல் நாவல் என்ற பெருமை இந்த நாவலுக்கு உண்டு

பகல் கனவுகள் , எழுத்துப்பிழைகள்  , வாக்கியப் பிழைகள் , அமெச்சூர்த்தனமான சிந்தனைகள் , பெண்களை இழிவு செய்யும் கருத்துகள் நிரம்பிய எழுத்துகள் பல இன்றைய சூழலில் நாவல் என்ற பெயரில் வருகின்றன


அவைகளை நாவல் என அழைத்தால் கண்டிப்பாக பொண்டாட்டி நாவலை ஃபேக் நாவல் என்றுதான் சொல்ல வேண்டும்


57 ரூபாய்க்கு பெட்ரோல் போட்டுவிட்டு  , நம் ஆட்கள் 2000 ரூபாயை கொடுப்பார்கள்... சில்லறை எண்ணி கொடுக்கும் வரை பின்னால் நிற்பவர்கள் காத்திருக்க வேண்டும்... - சுரணையின்மை


நிகழ்ச்சிக்கு வருவதாக சொல்லிவிட்டு , வர தவறுவது சுரணையின்மை


நாம் செய்வது பிறருக்கு பிடிக்கவில்லை என அவர் முகபாவத்தின் மூலம் அறிந்து கொள்ள தவறுவது சுரணையின்மை



காதல் என்பது மதித்தல் என்று ஜே கிருஷ்ணமூர்த்தி சொன்னதை சற்று வேறு விதத்தில் சொல்கிறது நாவல்

   மொத்தமாக இல்லாமல் தனி தனி சிறுகதையாக படித்தாலும் நன்றாக இருக்கிறது.. தனி தனி வரிகளுமே கூட அவ்வளவு அழகு

இது எல்லோருக்குமான நாவல் என சொல்ல மாட்டேன்... ஓரளவு பக்குவம் தேவை...சிறுவர்களுக்கு ஏற்றதல்ல....

உள்ளடக்கம் , உருவாக்கம் , சந்தைப்படுத்தும் விதம் , சிரத்தை என அனைத்திலும் சென்சிபிலிட்டியை காட்டும் நாவலைப்படிதத்தில் மகிழ்கிறேன்




No comments:

Post a Comment

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா