இது ஒரு முட்டாள் சமுதாயம் என நான் சொன்னதற்கு பலர் எதிர்ப்பு தெரிவித்தனர். பாரத பண்பாடு, கல் தோன்றி மண் தோன்றாத... என்றெல்லாம் சொன்னார்கள்.
நம் நாட்டை விமர்சிப்பது அதை அசிங்கப்படுத்தவதற்கு அல்ல.. இது தற்போதைய இழிவு நிலையில் இருந்து தப்பிக்க வேண்டும் என்பதே என் விருப்பம்..
ஒரு வெளி நாட்டுக்காரர் நம் நாட்டுக்கு ஒரு முறை வந்து பார்த்தால் போதும் , நம் நாட்டைப்பற்றிய கேவலமான மனச்சித்திரம் பதீவாகி விடும். டிராபிக்கை மதிக்காத வாகன ஓட்டிகள், நடு ரோட்டில் மல ஜலம் கழிக்கும் படித்த சமுதாயம், அடித்து பிடித்து பேருந்தில் ஏறும் காட்டுமிராண்டித்தனம் , ப்ளூ ஃபில்ம் போன்ற டிவி நிகழ்ச்சிகள் , மஞ்சள் பத்திரிக்கைகள் போன்ற வார இதழ்கள் போன்றவற்றை பார்க்கும் புதிய்வர் யாருக்கும் இது ஒரு காட்டு மிராண்டி தேசம் என்ற எண்ணமே தோன்றும்.
நம் ஆட்களை வெளி நாட்டிற்கு செல்லும்போது இளக்காரமாக பார்ப்பதற்கு காரணம் இதுதான். சில நாடுகள் வெளிப்படையாக காறித்துப்புகின்றன. சில நாடுகள் நாகரிகம் காரணமாக அப்படி செய்வதில்லை.
நம் ஆள் ஒருவன் அவர்களை பார்க்க சென்றால் கூல் ட்ரிங் சாப்பிடுங்கள் , ஏதாவது சாப்பிடுங்கள் என அவன் உபசரிப்பான். அட்டா... நமக்கு என்ன மரியாதை என நம் ஆள் புளகாங்கிதம் அடைவான்.
உண்மையில் அவன் நோக்கம் உபசரிப்பு இல்லை.. இந்தியன் என்றால் நாற்றம் எடுத்தவன் என அவன் மனதில் பதிந்து இருக்கிறது. அதை மறைக்கவே வாசனையாக எதையாவது நம் ஆளை சாப்பிட வைக்கிறான்.
நம் ஆள் புத்திசாலிதான் , நாற்றம் இல்லாதவன் தான்.. ஆனால் இந்தியாவின் சமூக நிலை அவனை அப்படி நினைக்க வைக்கிறது..
இன்றைய தகவல் தொடர்பு தொழில் நுட்ப வளர்ச்சியில் , நேரில் வந்து பார்த்துதான் இந்தியாவின் அசிங்கங்களை தெரிந்து கொள்ள வேண்டும் என்பதில்லை. ஒரு செகண்டில் உலகம் முழுதும் செய்தி போய் விடுகிறது.
டெல்லியில் ஒரு பெண்ணுக்கு நிக்ழந்த அவலம்தான் , பிபிசி சிஎன் என் போன்ற வலைத்தளங்களில் தலைப்பு செய்தி ஆக இருந்தது.. இந்தியா என்பது ஒரு காட்டுமிராண்டி நாடு என்பது உலகம் முழுதும் தெரிந்து விட்டது.
இதில் தமிழ் நாடு தனி முத்திரையை பதித்தது என்பது நமக்கு பெருமை சேர்க்கும் விஷ்யம்..
- இலங்கையில் தமிழர்கள் படு கொலை நடந்த போது இங்கு எந்த வித சலனமும் இல்லை . சில இயக்கங்கள் பதறினவே தவிர , பெரும்பான்மை சமூகம் சலனம் இன்றி இருந்தது.
- அங்கு பாலியல் கொடுமைகள் நடந்ததாக செய்தி வெளியாகி உலகமே பதைபதைத்து போனது.. ஆனால் தமிழகம் டீவியில் சினிமா டான்ஸ் பார்த்துக் கொண்டு அமைதியாக இருந்தது.
- விக்டன் குழுமத்தில் இருந்து , ஓர் ஆபாச பத்திரிக்கை வெளியாவதை ஞாநி போன்றோர் கண்டித்தனர். அச்சு விபச்சாரம் என்றார்கள்.. ஆனால் பொது மக்களிடையே எந்த சலனமும் இல்லை.
- மீனவர்கள் இலங்கை கப்பல் படையால் பெரும் துன்பத்துக்கு ஆளானார்கள் . ஒரு சலனமும் இல்லை.
- பெண்களை போகப் பொருட்களாக காட்டும் விளம்பரங்கள் , தொலைக்காட்சி விளம்பரங்கள் வெளிவந்த போதும் எந்த சலனமும் காட்டவில்லை.
- டெல்லியில் ஒரு சகோதரி பாதிக்கப்பட்டது கண்டிக்கத்தக்கது. வேதனைக்குரியது.. அதற்காக அந்த ஊரில் பெரிய அளவில் எதிர்ப்பு காட்டியது அவர்களின் சுரணை உணர்வை காட்டியது. ஆனால் அதே கால கட்டத்தில் இங்கு அது போல பல சம்பவங்கள் நடந்தன / நடந்து கொண்டு இருக்கின்றன. ஆனால் நம் மக்களுக்கு அதெல்லாம்கூட கோபம் ஏற்படுத்தவில்லை.
இப்படி பொறுமையின் சிகரமாக இருந்த நம் மக்கள் , ஒரு விஷ்யத்தில் சீறி எழுந்தார்கள். பெரும் போராட்டம் , கேலி சித்திரங்கள் , கடும் கண்டனங்கள் ..
மேற்கண்ட விஷ்யங்களை எல்லாம் விட கொடுமையான விஷ்யம் என்ன நடந்து விட்டது.
பெண்கள் , இஸ்லாமிய பெண்கள் போல கண்ணியமாக உடை அணிந்தால் நல்லது என ஒருவர் சொல்லி விட்டாராம். இதற்குத்தான் இவ்வளவு களேபரங்களும்..
பெண்களுக்கு எதிராக ஒவ்வொரு இடத்திலும் தினம் தோறும் விதம் விதமாக அ நீதி நடந்து வருகிறது. அதை எல்லாம் விட்டு விட்டு இதற்கு எதிராக கிளர்ந்து எழும் மக்கள்..
எங்கே போய் முட்டிக்கொள்வது ?
இதற்கு மாற்றாக ஒரே ஒரு வழிதான் இருக்கிறது என்று சொன்னால் மதப்பிரச்சாரம் என தவறாக என்னை சித்திரிக்க முயல்கிறார்கள்...
பேசாமல் நானும் கவர்ச்சிப்படம் , அடல்ட்ஸ் ஜோக், சினிமா கிசு கிசு என எழுதி விட்டு, ஆடை சுதந்திரத்தில்தான் பெண் சுதந்திரம் இருக்கிறது என எழுதி பெண்ணூரிமை காவலான மாறி விடலாமா என யோசிக்கிறேன்.
