Wednesday, December 8, 2010

பெண்ணாக ”பிரமோஷன்” பெறும் ஆண்- வீடியோவுடன் அறிவியல் வினோதங்கள் ( அடல்ட்ஸ் ஒன்லி )

  “அந்த “ விஷயம் , எப்படியெல்லாம் விதம் விதமாக உயிரினங்களில் நடக்கிறது என பார்த்து வருகிறோம்..
இயற்கையில் விந்தைகள் ஆயிரம்…
கற்க கற்க வியப்பு அதிகரிக்கத்தான் செய்யுமே தவிர குறையாது..
சரி..  மேலும் சிலவற்றை பார்ப்போம்..
1. காதலினால் துன்பம் தீரும்
சமீபத்தில் ஒரு சாமியார்- நடிகை வீடியோ ரிலீசாகி பரபரப்பு ஏற்பட்டது..சாமியாருக்கு கிடைத்த அந்த நல்வாய்ப்பினால் ஏற்பட்ட பொறாமையே அவர் மீதான எதிர்ப்புக்கு காரணம் என்று சொன்னால் மிகை இல்லை.
நான் சொல்ல வந்தது வேறு..
சென்சார் செய்யப்படாத முழு வீடியோவை பார்த்தது வெகு வெகு சிலரே..
அதில் ஒரு காட்சியில், சாமியார் ஏதோ ஒரு  மாத்திரையை வாயில் வைத்து சுவைப்பார்…
அப்போது நடிகை “இன்னொன்றை” வாயில் வைத்து சுவைத்துக்கொண்டு இருப்பார்..
இதை சற்று வயிற்றெரிச்சலோடு சாரு நிவேதிதா எழுதி இருந்ததை மறந்திருக்க மாட்டீர்கள்.
அந்த நடிகை செய்வது போல விலங்கினங்கள் எதுவும் செய்து பார்த்து இருக்க மாட்டீர்கள்..
ஆனால், விலங்கு இனம் ஒன்றின் இந்த பழக்கம் உண்டு…
சிம்ப்ன்சி போன்ற மனித குரங்கு இனம் ஒன்று “ அந்த “ விஷயத்தைத்தான் பேச்சு வார்த்தை, ஒப்பந்தம், வரவேற்றல் போன்ற எல்லா விஷயங்களுக்கும் பயன்படுத்துகிறது..


சண்டை என்பது அறவே இல்லாததால்தான் அந்த இனத்தில் அழிவு குறைவு..
இந்த இனம்தான் மனிதனாக மாறி இருக்க வேண்டும் என்கிறார்கள் விஞ்ஞானிகள்.
சமாதான வாழ்வு இதன் தனி சிறப்பு..
எதிரி வலுவுள்ளவானாக இருந்தால், உடனே இதமாக , பதமாக, சுகமாக செய்து விட்டு விடும்
அதன் பின் சண்டையேது?…பிரச்சினையேது ?
சமாதானம்தான்…

2. ”அதற்கு” நடக்கும் அக்கப்”போர்”
”அதை” சமாதான ஆயுதமாக அவர் பயன்படுத்தினால் , “ அதை “  அக்கப்போராக பயன்படுத்தும் சிற்றுயிர் தட்டைபுழு ..
இதவும் இருபால் உயிரி…
அந்த உறுப்பும் இருக்கும்… இந்த உறுப்பும் இருக்கும்..
“ அதை “  “அதற்கு “ மட்டும் பயன்படுத்தாமல் , ஓர் ஆயுதமாகவும் பயன்படுத்தும் இது..
இரு புழுக்கள் ஆவேசமாக சண்டையிடும்.. கத்தி சண்டை போல இந்த ஆயுதத்தை வைத்து சண்டையிடும்…
இந்த ஆயுதத்தால் குத்துப்படாமல் தற்காப்பு செய்து கொண்டு இன்னொன்றை தாக்க முயலும்..
கடைசியில் ஒன்று குத்தப்பட்டவுடன் போர் முடிவுறும்..
”குத்துப்”பட்ட புழு கர்ப்பம் அடையும்…
ஆண் பெண் என இல்லாமல் இப்படி நடப்பது ஒரு வினோதம்
3 பெருசுக்குத்தான் மவுசு
ஃபிரிகேட்பறவை, நம் மயில் பாணியை பின்பற்ற கூடியது…
மயில் தோகையை காட்டி மயக்குவதுபோல இது பலூனை காட்டி மயக்குகிறது தன் இணையை..
கழுத்தருகே பலூன் போன்ற அமைப்பு இருக்கும்..
மூடு வரும்போது, அதை பெருதாக்கி , பளபளபள வென காட்டி நடனமாடும்..
பெரிதாக இருக்கும் பலூனுக்கு வரவேற்பு அதிகம்..
இதைக்கண்டு ம்யங்கி வரும் இணையுடன், பிறகென்ன , உல்லாசம்தான்..
தன் இறகால், அதன் கண்ணை மூடிவிடும் ஆண்,
வெட்கத்தால் அல்ல…
வேறு பெரிய பலூனை பார்த்து மனம் மாறி சென்று விடக்கூடாதே !!
4 பெண்ணாக பிரமோஷன் பெறும் ஆண்..
கிளௌன் ஃபிஷ் என்ற மீனுக்கு ஆண் பெண் என்பது உறுப்பை பொறுத்தது அல்ல..
பிறக்கும் எல்லா மீனுக்கும் ”எல்லா உறுப்பும்” இருக்கும் ..
இருப்பதிலேயே பெரிய மீன் , பெண் என்ற பதவியை ஏற்று அந்த பெண்ணாக செயல்படும்..
அதை விட சிறிய மீன் , ஆண்.. இது ஆண் “ வேலையை” செய்யும்..
அதையும் விட சின்ன மீன் எடுபிடி வேலைகளுக்கு அனுப்பபடும்..
அந்த பெண் மீன் இறக்க நேரிட்டால், இந்த ஆண் மீன் பதவி உயர்வு பெற்று பெண் என்ற பதவிக்கு வரும்..
எடுபிடி மீன் ஆண் என்ற பதவியை அடைந்து , தன் “ பணியை” இனிதே ஆரம்பிக்கும்..
5 ஈருடல் ஓருயிர்
ஏஞ்சல் ஃபிஷ் என்ற மீன் ஆய்வாளர்களுக்கு ஒரு புதிராகவே இருந்தது..
அதில் ஆண் இனத்தையே பார்க்க முடியவில்லை…
ஒரே குழப்பம்…
விடை இப்போதுதான் கிடைத்து..
அந்த மீன் வகையில், ஆண் இனம் தனித்து செயலப்டும் அளவுக்கு உடல் அமைப்பு இல்லை.
எனவே தகுந்த நேரம் பார்த்து, பெண் மீனுடன் ஒட்டிக்கொண்டு விடும்
காலப் போக்கில், அது பெண்ணின் ஒரு உறுப்பாகவே மாறிவிடும்..
ஒட்டும்போதே , “ அதற்கு “ பக்கத்தில் ஒட்டிக்கொள்வதால், தேவைப்படும்போது “ அதன் “ “பணி “ பயன்படுத்திக்கொள்ளப்படும்..
இப்படி ஆயிரம் ஆயிரம் செய்திகள் இயற்கையிடம் உள்ளன..

12 comments:

 1. அன்பு நண்பரே,
  இப்படி ஒரு தலைப்பு இதற்கு வைத்திருக்க வேண்டாம் என்பது என் கருத்து. நீங்கள் அடல்ஸ் ஒன்லி என்று தலைப்பில் போட்டாலும் அனைத்து தரப்பினரும் புளங்கும் இடம் என்பதால் மட்டுமே இதைச் சொல்கிறேன். தவறெனில் மன்னிக்கவும்.

  ReplyDelete
 2. அன்பு நண்பரே,
  இப்படி ஒரு தலைப்பு இதற்கு வைத்திருக்க வேண்டாம் என்பது என் கருத்து"

  உங்கள் உணர்வுக்கு மதிப்பளிப்பது என் கடமை..

  உடனடியாக தலைப்பை மாற்றி விடுகிறேன்.

  தங்கள் அன்புக்கு நன்றி ...

  ReplyDelete
 3. மாற்றி விட்டேன் நண்பரே..

  ReplyDelete
 4. மிக்க மகிழ்ச்சி. சத்தமாகச் சொல்ல வேண்டும் போலிருக்கிறது " நண்பேண்டா " :)

  ReplyDelete
 5. மிக்க மகிழ்ச்சி. சத்தமாகச் சொல்ல வேண்டும் போலிருக்கிறது " நண்பேண்டா " :"

  எனக்குத்தான் அதிக மகிழ்ச்சி..

  நண்பன் என்பவன் சிரித்து மகிழ மட்டும் அல்ல.

  தவறுகளை இதமாக சுட்டிக்காட்டுபவனும்தான்.

  நண்பேண்டா...

  ReplyDelete
 6. நல்ல தகவல்கள்! எல்லாமே புதுசு! வாழ்த்துக்கள்! தொடருங்கள்! :-)

  ReplyDelete
 7. நல்ல தகவல்கள்! எல்லாமே புதுசு! வாழ்த்துக்கள்! தொடருங்கள்! :-)

  நன்றி நன்றி

  ReplyDelete
 8. புது தகவல்கள்!”

  நன்றி

  ReplyDelete
 9. அடிக்கடி அது அது என்று குறிப்பிட்டிருக்கிறீர்களே... அது எது...?

  ReplyDelete
 10. அடிக்கடி அது அது என்று குறிப்பிட்டிருக்கிறீர்களே... அது எது...?


  ”அது”தான்...

  ReplyDelete

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா