Thursday, December 16, 2010

எழுத்தாளனை கொண்டாடினால் ஏன் இந்த எரிச்சல்? (புதிய படங்களுடன் )

இது வரை எந்த ஒரு புத்தகத்துக்கும் இல்லாத வகையில் சாருவின் தேகம் நாவல் பெற்றுள்ள கவனம் தமிழ் எழுத்தை ரசிக்கும் பலருக்கு உற்சாகம் ஏற்படுத்தி உள்ளது..
சாரு வாசகர்களுக்கு கூடுதல் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது..
ஒரு புத்தக வெள்யீட்டு விழா இந்த அளவு பேசப்படுவது தமிழ் இலக்கிய வரலாற்றில் இதுதான் முதல்முறை..
இது சாருவுக்கு மட்டும் அல்ல… அனைத்து எழுத்தாளர்களுக்குமே பெருமை சேர்க்கும் விஷயம்..


   ஒருவன் வதைகளை மட்டுமே தன் வாழ்வில் சந்தித்து வந்தால் , அவன் வேறு யாரையாவது துன்புறுத்தி சற்று ஆறுதல் பெறுவான்.. இதை ஆறுதல் என்று கூட சொல்ல முடியாது… அது ஒரு நோய் வாய்ப்பட்ட மன நிலை… 
        அப்ப்டி துன்புறுத்த முடியாத நிலையில் மனதளவில், எழுத்தளவில் மற்றவரை காயப்படுத்த முயல்வான்…அதுவும் முடியவில்லை என்றால் தன்னைதானே துன்புறுத்தி கொள்வான்…
      ஒரு நெகடிவ் மன்ப்பான்மையில் வாழும் நமக்கு யாரும் சந்தோஷமாக இருந்தால் சற்று எரிச்சல் வரத்தான் செய்யும்…
ஆனால் சாரு விழாவின் வெற்றி பலரை எரிச்சலின் எல்லைக்கோட்டுக்கே தள்ளி சென்று விட்டதை காண முடிகிறது..
மிகவும் வருத்தமாக இருக்கிறது…
ஓர் எழுத்தாளனை ஏன் இப்படி கொண்டாடுகிறீர்கள்.. ஏன் இப்படி விசில் அடிக்கிறீர்கள்.. ஏன் கைதட்டுகிறீர்கள்.. ஏன் மகிழ்ச்சியாக இருக்கிறீர்கள்… என்றெல்லாம் பாய்கிறார்கள்..
ஒருவர் மகிழ்ச்சி இன்னொருவருக்கு இந்த அளவுக்கு துன்பம் தருகிறது என்பது நகைப்புக்கு உரிய ஒன்று..
பாரதி இருந்தவரை அவரை கொண்டாடாமல் கொன்று போட்ட நாடு இது.. இன்றும் பல இலக்கியவாதிகள் நிலை அதுதான்.. எனவே இப்போதாவது எழுத்தாளர்கள் கொண்டாடப்பட்டால் மகிழ வேண்டுமே தவிர , வயிற்றெரிச்சல் படக்கூடாது…
ஒருவர் கொண்டாடப்பட்டால் அதை பார்த்து பொறாமைப்படாமல் , நீங்கள் உங்களுக்கு பிடித்த எழுத்தாளரை கொண்டாடி விட்டு போங்களேன்…
இன்னொன்று..எழுத்தாளர்களுக்குள் கருத்து வேற்றுமை இருக்க கூடும்.. அவர்களுக்குள் சர்ச்சைகள் இருக்க கூடும்..
ஆனால் அதை வைத்து , ஒரு எழுத்தாளரின் வாசகன் , இன்னொருவர் மேல் காழ்ப்புணர்ச்சி கொள்வது தேவை அற்றது… இது ரஜினி-கமல் போட்டி அல்ல…
     அன்றைய விழாவில் புதிய வாசகர்கள் பலர் உற்சாக மன நிலையில் வந்து இருந்தனர்…  அவ்ர்கள் வருகை , சாருவின் வழக்கமான வாசகர்களுக்கே கூட தெரியாது…
                        அவர்கள் கொண்டாட்டங்களில் கொஞ்சம்தான் வெளியே தெரிந்து இருக்கிறது…இதற்கே இந்த எரிச்சல் என்றால் , முழுதும் வெளியே வந்து இருந்தால் பொறாமை தீயிலேயே கருகி இருப்பார்கள் போல…
                           என்னை பொறுத்தவரை, சிலர் , குறிப்பாக பெண்கள் தம் போட்டோக்கள் வெளிவருவதை விரும்ப மாட்டார்கள் என்பதால் அதை எல்லாம் தவிர்த்து விட்டேன்…
அதே சமயம் இன்னொன்றையும் சொல்வது என் கடமை..
பீர் அபிஷேகம் செய்தார்கள் என்றால் , அத்துடன் அவர்கள் போய்விடவில்லை…  விழாவில் தம்மாலான உதவிகள் செய்தார்கள்.. கண்ணியத்துடன் விழாவில் கலந்து கொண்டார்கள்…
புத்தகங்கள் வாங்கினார்கள்… வாங்கியதோடு படித்தும் விட்டார்கள்.. படித்து கொண்டும் இருக்கிறார்கள்…
அவ்ர்கள் சாரு புத்தகம் தவிர மற்ற புத்தகங்களும் படிக்க கூடியவர்கள்…
படிப்பதும் மகிழ்ச்சியே,,,  வாழ்வை கொண்டாடுவதும் மகிழ்ச்சியே…
இதை குறை சொல்பவர்களில் எத்தனை பேர் படிக்கிறார்கள் என தெரியவில்லை…
இதைதவிர, தேகம் நாவலை அரைகுறையாக படித்து விட்டு விமர்சனம் வேறு எழுதுகிறார்கள் சிலர்..
அதில் இருக்கும் கவிதைகள் நாவலுக்கு பொருத்தம் இல்லையாம்..
கவிதை புரியவில்லையா அல்லது நாவல் புரியவில்லையா என தெரியவில்லை…
வதை பற்றிய நாவலில் பாலியல் சித்திர்ப்பு ஏன் என இலக்கியம் தெரிந்த ஒருவர் எழுதி இருப்பதை பார்த்து ஆச்சரியாமாக இருந்தது,,,
மரணத்துக்கும் செக்சுக்கும் இருக்கும் தொடர்பு மிகவும் நுட்பமானது….
இலக்கியம் தெரிந்த ஒருவருக்கே இது புரியவில்லை என்பது ஆச்சரியம்தான்..
வதை பற்றிய நாவல் என்றவுடன், புத்தகம் முழுக்க விதம் விதமான வதைகள் பற்றி சொல்லப்படும் என்ற  ஒரு ஃபாண்டசி நாவல் எதிர்பார்ப்புடன் படிக்க ஆரம்பித்ததன் விளைவு அது..
இந்த நாவலை சற்று கூர்ந்து படித்தால், இபப்டிப்பட்ட பொறாமை எண்ணங்கள் நீங்கும் என உறுதியாக சொல்லுவேன்…
இலக்கிய பார்வையில் அல்லாமல், மனோதத்துவ ரீதியில் , ஆன்மிக ரீதியில் இந்த நாவல் பற்றிய என் பார்வை அடுத்த பதிவில்…

பி கு ) பொறாமை தீயில் வேகும் சிலருக்கு ஓர் அறிவிப்பு.. வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதுபோல சாரு ரசிகர்கள் இன்னொரு விஷ்யம் செய்ய இருக்கிறார்கள்.. வெயிட் அண்ட் சீ 

image image image

7 comments:

 1. This comment has been removed by the author.

  ReplyDelete
 2. கண்ணை கட்டுதுங்க காலை வாருகிறேன் வாசிக்க..

  [ma][im]http://picasaweb.google.com/lh/photo/rCoIQtEiabMh2UI3bK4IKi9j97G3bgYlzpJdIyM-C88?feat=directlink[/im][/ma]

  ReplyDelete
 3. கண்ணை கட்டுதுங்க காலை வாருகிறேன் வாசிக்க.."

  welcome

  ReplyDelete
 4. ஒருவர் கொண்டாடப்பட்டால் அதை பார்த்து பொறாமைப்படாமல் , நீங்கள் உங்களுக்கு பிடித்த எழுத்தாளரை கொண்டாடி விட்டு போங்களேன்…
  [co="red"]I agree 100% with this[/co]

  ReplyDelete
 5. ஏதாவது செய்வதாய் இருந்தால், சொல்லுங்க நானும் சேர்ந்து கொள்கிறேன்.

  ReplyDelete
 6. arangil over kootam pola....

  ReplyDelete

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா