Sunday, December 12, 2010

பிரத்தியேக செய்தி : சாரு புத்தக வெளியீட்டு விழா, அனைவரும் வருக

 

எழுத்தாளர் சாருவை ரசிக்கலாம் அல்லது வெறுக்கலாம்.. ஆனால் புறக்கணிக்க முடியாது…

பலரை தமிழ் புத்தகங்கள் படிக்க வைத்தவர் அவர் என்றார் அது மிகையாகாது…

எனக்கு அவர் மீது சில விமர்சனங்கள் இருந்தாலும் அவர் புத்தகம் அனைத்தையும்  படித்தவன், படித்து கொண்டு இருப்பவன் நான்,,

அவர் மீது சில விமர்சனங்கள் கொண்ட நானே இப்படி என்றால், தீவிர ரசிகர்கள் பற்றி சொல்லவே வேண்டியதில்லை…

நாளை அவர் புத்தகங்கள் வெளி வரும் நிலையில், ஒரு வாசகன் என்ற அளவில் சில  காணோளிகள், படங்கள் , இன்னொரு சுவையான விஷயம் போன்றவற்றை பகிர்ந்து கொள்ள விரும்பினேன்…

ஆனால் அது விழா முடிந்த பின் அதை சொன்னால்தான் இன்னும் நன்றாக இருக்கும் என்பதால், நாளை இரவு வரை காத்து இருங்கள்…

அனைவரும் விழாவிற்கு வருக வருக என அழைக்கிறேன்…

 

*************************************************************************************************************

 

சாரு நிவேதிதாவின் ஏழு நூல்கள்

December 12th, 2010

டிசம்பர் 13 வெளிவரும் சாரு நிவேதிதாவின் 7 நூல்கள்

வெளியீட்டு அரங்கில் நூல்களின் மொத்த விலை ரூ 500 மட்டும்

தேகம்

நாவல்

ரூ.90

வதைத்தலுக்கும் வதைக்கப்படுதலுக்கும் இடையேதான் மனிதகுலத்தின் சமூக, பண்பாட்டு வரலாறுகள் எழுதப்படுகின்றன. வலியை உற்பத்தி செய்வதிலிருந்தே அதிகாரம் உற்பத்தி செய்யப்படுகிறது என்பதை எப்போது மனிதர்கள் கண்டுபிடித்தார்களோ அன்றிலிருந்து சித்தரவதையின் தொழில் நுட்பம் நுணுக்கமாக தொடர்ந்து மாறுதடைந்து வந்திருக்கிறது. சிதரவதைகள்மூலம்  ஒரு உடலை இன்னொரு உடல் முழுமையாக வெற்றிகொள்ளும்போது நிகழ்வது ஒரு புராதனமான மிருக இச்சையா அல்லது அதற்குள் ஒரு நீதிமுறை செயல்படுகிறதா என்கிற கேள்வியை எதிர்கொள்கிறது இந்த நாவல். சாடுநிவேதிதா இந்த நாவல்மூலம் காட்டும் உலகம் கடும் மனச் அதிர்ச்சியை ஏற்படுத்துவதன் காரணம் அந்த உலகத்தை ஒரு பகுதியாக ஒவ்வொருவரும் இருக்கிறோம் என்பதுதான்.

சரசம் சல்லாபம் சாமியார்

நித்யானந்தர் குறித்து

ரூ.85

மதங்கள் தங்களது வராலாற்றுப் பாத்திரத்தை இழந்த பிறகு புதிய வழிபாட்டுக் குழுக்கள் அந்த இடத்தை கைப்பற்றிக் கொள்ள விழைகின்றன. கடவுள்கள் மனிதர்களிடமிருந்து அன்னியமான பிறகு மனிதக் கடவுளர்கள் எங்கெங்கும் அவதரிக்கின்றனர். நித்யானந்தர் போன்றவர்கள் இன்று  ஆன்மீகத்தை ஒரு மாபெரும் வர்த்த்க நிறுவனமாக மாற்றியிருக்கின்றனர். தங்களது புனித முகமூடிகளுக்குப் பின்னே நிகழ்த்தும் நிழல் நடவடிக்கைகள் எளிய மனிதர்களின் அந்தரங்கத்தை ஆழமாக காயப்படுத்துவது மட்டுமல்ல அவர்களை எவ்வாறு பிறழ்வுகொண்டவர்களாகவும் மாற்றுகிறது என்பதை சாருநிவேதிதா இந்த நூலில் விரிவாக முன்வைக்கிறார்.

குமுதம் ரிப்போட்டரில் வெளிவந்து பரபரபாக வாசிக்கப்பட்ட தொடர் நூல் வடிவம் பெறுகிறது.

ஷேக்ஸ்பியரின் மின்னஞ்சல் முகவரி

சிறுகதைகள்

ரூ.60

சாருநிவேதிதாவின் கதைகள் தமிழ்ச் சிறுகதைகளின் இலக்கணங்களை தயக்கமின்றி கலைப்பவை. வழக்கமான கதை சொல்லும் முறைமையினை  கடந்து செல்வதன் மூலம் அவர் தனக்கே உரித்தான ஒரு பிரத்யேக மொழியில் தனது புனைவுலகை உருவாக்குகிறார். நவீன வாழ்க்கைமுறையின் அபத்தங்களை, மனித உறவுகளின் விசித்திரத்தன்மையை இக்க்கதைகள் வெகு சுவாரசியமாக எழுதிச்செல்கின்றன.

கலையும் காமமும்

விவாதங்கள்

ரூ.100

சாரு நிவேதிதா தனது வாசகர்களுடன் தொடர்ந்து உரையாடிக்கொண்டே இருக்கிறார். தன்னைப் பற்றியும் பிறரைப் பற்றியும் இருக்கக் கூடிய அபிபராயங்களை பாசாங்குகள் ஏதுமின்றி இந்த விவாதங்களில் முன்வைக்கிறார். சாருவைப் பற்றி பிறர் முன்வைக்கும் குற்றச்சாட்டுகள்கூட அவர் தன்னைப் பற்றி வெளிப்படையாக சொல்லிக்கொண்டவையிலிருந்தே உருவாக்கபடுகின்றன என்பது அவரது சுதந்திரமான மன நிலைக்கு ஒரு சாட்சியம். இந்த நூல் அந்த மன நிலைக்கு ஒரு நிரூபணம்

மழையா பெய்கிறது

சர்ச்சைகள்

ரூ.95

சாருநிவேதிதா இந்த நூலில் உருவாக்கும் சர்ச்சைகள் வழியே எழுப்பும் அடிப்படைக் கேள்விகள் ஒரு தமிழ் எழுத்தாளன் சந்திக்கக்கூடிய அவமானங்களைப் பற்றியவை. அவன் தனது இருப்பையும் எழுத்து இயக்கத்தையும் தக்கவைத்துக் கொள்ள போராடும் அபத்தமான சூழல் பற்றியவை.

கடவுளும் சைத்தானும்

கட்டுரைகள்

ரூ.60

சாரு இந்த நூலில் விவாதிக்கும் பல பிரச்சினைகள் நமது கலாச்சார மதிப்பிடுகளோடும் நுண்னுணர்வுகளோடும் தொடர்புடையவை. குடி, கவிதை, பூங்கொத்துகள், உடல் குறைபாடுகள், கசப்புகள், பிரியங்கள் என பல்வேறு தளங்களில் இவை கூர்மையான கேள்விகளை எழுப்புகின்றன.

கனவுகளின் நடனம்

சினிமா பார்வைகள்

ரூ.110

இதைப் படிக்கும் ஒருவருக்கு தமிழ் சினிமா பற்றி மிகவும் எதிர்மறையாக எழுதப்பட்ட கட்டுரைகள் என்று தோன்றக்கூடும்.. தமிழ் சினிமாவை மிக அதிகமாக நேசிப்பதாலேயே இப்படிப்பட்ட கட்டுரைகளை எழுதினேன். கடந்த 30 ஆண்டுகளாக சர்வதேச சினிமாவின் தீவிரமான ரசிகன் என்ற முறையில் இதையெல்லாம் சொல்லியாக வேண்டியிருக்கிறது. உண்மையில் இந்த விமர்சனங்களுக்கு ஆளானவர்கள் எனக்கு நன்றி தெரிவிக்க வேண்டும். ஆனால் நிலைமை அப்படி இல்லை. அவர்கள் என்மீது கோபப்படுகிறார்கள்.  உங்கள் எடையை 200 கிலோவாகக் காண்பிக்கும் எடை எந்திரத்தின் மீது கோபப்படுவீர்களா? நான் யாரை விமர்சித்து எழுதுகிறேனோ அவர்கள் மீது எனக்குத் தனிப்பட்ட முறையில் எந்தவித கோபமோ அல்லது நட்புணர்வோ கிடையாது. என்னுடைய கவனமெல்லாம் அந்த சினிமாவைப் பற்றி மட்டுமே இருக்கிறது.

சாரு நிவேதிதா

(முன்னுரையிலிருந்து

1 comment:

  1. வருவதற்கு ஆசை தான். என்னைப் போன்று தமிழ் நாட்டை விட்டு வெளியே இருப்பவர்களால் இயலுவதில்லை என்றாலும் அவரது புது நூல்களை எதிர் நோக்கி...

    ReplyDelete

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா