Sunday, December 12, 2010

பயங்கர விபத்துமக்கள் நாயகன் ராமராஜன் படுகாயம், டிரைவர் பலி- ஆளுங்கட்சி சதியா??

மதுரை அருகே நடந்த கார் விபத்தில் மக்கள் நாயகன் ராமராஜன் படுகாயம் அடைந்தார்..  கார் டிரைவர் பலியானார்..கரகாட்டகாரன் உட்பட பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்தவர் ராமராஜன்.. ஒரு முறை எம்பியாகவும் இருந்திருக்கிறார்..

கோப்பு படம்

மருத்துவமனையில் சிகிச்சை பெறும் ராமராஜன் (தலையில் அடிபட்டு இருக்கிறது ) 
 சமீபத்தில் ரிலீசான நந்தலாலா படம் ராமராஜன் படம் போல இருப்பதாகவும், படத்தின் இசை ராமராஜன் பட இசை போல இருப்பதாகவும் ஒரு பேச்சு கிளம்பியதால் மீண்டும்  ஸ்டார் அந்தஸ்து பெற்றார்..தற்போது அண்ணா திமுக வில்  நட்சத்திர பேச்சாளராக இருக்கிறார்.. தீவிரமாக கட்சி கூட்டங்களில் கலந்து கொண்டு பேசி வருகிறார்..


இந்த நிலையில்,  நேற்று திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் பொதுகூட்டம் ஒன்றில் பேசினார்.
அதன் பின் திருசெந்தூரில் இன்று நடக்கவுள்ள உறவினர் வீட்டு விசேஷம் ஒன்றில் கலந்து கொள்ள , நேற்று இரவு இன்னோவா காரில் புறப்பட்டார்..
டிரைவர் ராஜரத்தினம் காரை ஓட்டினார்.. உதவியாளர் தாஸ் உடன் இருந்தார்..
அப்போது எதிர்பாராத விதத்தில் நடந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே டிரைவர் பலியானார்..

ராமராஜனும், தாஸும் மதுரை அப்பல்லோ மருத்துவமனைக்கு ,ஆம்புலன்சில் கொண்டு செல்லப்பட்டனர்...
தாஸ் லேசான காயத்துடன் உயிர் தப்பினார்..

ராமராஜனுக்கு படுகாயம் ஏற்பட்டுள்ளது.. அறுவை சிகிச்சை செய்ய முடிவு எடுத்துள்ளனர்..

தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார், ராமராஜன்...

விபத்து செய்தியை கேள்விப்பட்ட கட்சியினர் ஆஸ்பத்திரியில் குவிந்தனர்..

விபத்து காரணம் சதி வேலையா என்று பரபரப்புடன் பேசப்பட்டது..

கடைசியில், சாலை தடுப்பில் மோதி விபத்து ஏற்பட்டது தெரியவந்தது...

தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது...

11 comments:

 1. //சமீபத்தில் ரிலீசான நந்தலாலா படம் ராமராஜன் படம் போல இருப்பதாகவும், படத்தின் இசை ராமராஜன் பட இசை போல இருப்பதாகவும் ஒரு பேச்சு கிளம்பியதால் மீண்டும் ஸ்டார் அந்தஸ்து பெற்றார்..//

  இதுலயும் இந்தக் குசும்பு தேவையா

  ReplyDelete
 2. இதுலயும் இந்தக் குசும்பு தேவையா”

  நாட்டு நடப்பு அப்படி பாஸ்

  ReplyDelete
 3. [ma]என்ன பாஸ்.....வரவர...அ.தி.மு.க-காரனை கொசுக்கடிச்சாக்கூட கலைஞரின் சதிவேலை என்று சொன்னாலும் சொல்வார்களோ....[/ma]

  ReplyDelete
 4. ம்ம்ம்... முழுநீள நகைச்சுவையாக எதிர்பார்த்தேன்...

  ஒரே பத்தி இரண்டு இடத்தில் வருவது போல தெரிகிறது... சரி பார்க்கவும்...

  ReplyDelete
 5. இரண்டாவதாக இணைத்திருக்கும் படம் என்ன... சரியாக புலப்படவில்லை...

  ReplyDelete
 6. ஒரே பத்தி இரண்டு இடத்தில் வருவது போல தெரிகிறது... சரி பார்க்கவும்...”

  நன்றி சகோதரா...

  திருத்தி விட்டேன்...

  ReplyDelete
 7. ”இரண்டாவதாக இணைத்திருக்கும் படம் என்ன... சரியாக புலப்படவில்லை..


  விளக்கம் இணைத்துவிட்டேன் ந்ண்பா

  ReplyDelete
 8. பாவம்...மீண்டும் சினிமாவில் காலூன்ற முயற்சித்தார்...அதற்குள் விபத்தா?..ஆளுங்கட்சிக்கும் இதற்கும் என்னங்க சம்பந்தம்..

  ReplyDelete
 9. நலம் பெற இறைவன் அருள் புரியட்டும்

  ReplyDelete
 10. பாவம்........... விரைவில் நலம் பெறட்டும்........

  ReplyDelete
 11. நிஜமாகவா? இப்பொழுது, இந்த பதிவு வாசித்த பின் தான் தெரியும்.

  ReplyDelete

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா