Friday, December 31, 2010

சந்தல் படுகொலையும் ஜீரோ டிகிரி சிந்தனையும் …

எளிதான வாசிப்பில் ஆரம்பித்து சாரு நிவேதிதா போன்ற இலக்கிய வாசிப்புக்கு வந்து சேர்பவர்கள் பலர்… ஆரம்பத்திலேயே சாரு போன்றவர்களிடம் இருந்து வாசிப்பை ஆரம்பிப்பவர்கள் சிலர்..
அந்த சிலரில் ஒருவர்தான் நண்பர் நிர்மல்..
சந்தல் போராட்டம் (The Santhal revolt 1855 )குறித்தும் படுகொலை குறித்தும் சென்ற பதிவில் எழுதினார்…
அதன் தொடர்ச்சியாக , ஜீரோ டிகிரி நாவல் படித்த பாதிப்பில் , அந்த பிரச்சினையை அலசுகிறார் அவர் , இந்த பதிவில்..
ஒரு நாவல் இந்த அளவுக்கு பாதிப்பை ஏற்படுத்த முடியும் என்பது ஆச்சர்யமளிக்கும் விஷயம் ..
இனி வருவது அவர் கருத்து



*********************************************************************************
சந்தல் கதையை எனக்கு  சொன்ன நண்பனிடம் நான் கேட்ட கேள்விகளுக்கு என்ன பதில் சொன்னான் என்று யாரும் பின்னூட்டங்களில்  கேட்கவில்லை. ஆனாலும்  நண்பன் சொன்ன பதிலை இங்கு தருகிறேன்.
அவன் நான் கேட்ட இந்த கேள்விகளை சமுகத்தில் உள்ள  பலரிடம் கேட்டானாம்… அதற்கு அவன் கிடைத்த பதிலையும்  எனக்கு  சொன்னான்.
   இந்த சந்தல் கலகம் அன்றைய இந்தியாவில் எந்த பதிப்பும் ஏற்படுத்தவில்லை.சிதறிக்கிடந்த  இந்தியாவை இந்த 10000  உயிர்கள் பிரிட்டிஷ் ஆட்சியை எதிர்த்து ஒன்றுபடுத்தவில்லை,
 
உயிர் பலி அதிகம் என்றாலும் எந்த சம்ப்வம் அப்படி ஒன்றும் அன்றைய இந்தியாவில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை .எனவே இந்த கலகம் சுதந்திர போரட்டத்தின் முதல் போர் என்று சொல்லமுடியாது.
  இந்த Genocide ஏன் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை?
  •     ஒரு communist சொன்னானாம் :
”.இது அன்றைய உயர்    சாதி   முதலாளித்துவ தலைவர்களின் சதி, அவர்கள்தான் இதை பற்றி மறைத்துவிட்டார்கள்
  • ஒரு அறிவியல் மாணவன் சொன்னானாம்
"Survival Of the Fittest".
  • ஒரு ஊடகக்காரன் சொன்னானம்
" அந்த காலத்தில் இப்போது போல media coverage இருந்திருக்காது .
  • அரசியல்வாதி சொன்னானாம் ”இது அன்றைய காங்கிரஸ் கட்சியின் சூழ்ச்சி
  • ஒரு தத்துவவாதி சொன்னானாம்
இந்த Genocide  மட்டும் அல்ல எந்த genocid உம் பாதிப்பு ஏற்படுத்தாது, ஏன் என்றால் ஒவ்வரு மனிதனும் ஒரு தொடர்பில்லாத உயிரினம், ஒருவரது வலி  மத்தவரது வலி அல்ல, மத்தவரது மரணம் என்றும் என்னொருவனது மரணம் ஆகாது ”
            மேலே சொன்ன காரணங்கள் எல்லாம் சரியா தவறா என்று தெரியாது. ஆனால் தன்னை பொறுத்தவரை, அன்று வாழ்ந்த மனிதர்களும் சரி, இன்று வாழும் மனிதர்களும் சரி, அனைவரது செயல்களும், அதை தீர்மானிக்கிற அவர்களது சிந்தனையும்   சரி, அந்த சிந்தனையும் தீர்மானிக்கிற பார்வையும் சரி எல்லாம் ஒரு குறுகிய கோணமாக இருக்கிறது.எந்த அளவு குறுகியது என்றால் "ZERO DEGREE" அளவு.
ஜீரோ டிகிரி அளவு கோணம் எப்படி இருக்கும் ஒரு புள்ளியாய், அசைவற்று ஒரு கோட்டில் பயணித்தபடி இருக்கும். இந்த ஜீரோ டிகிரி மனசும்  அந்த ஜீரோ டிகிரி சிந்தனைதான் .தனது குழந்தையை மட்டும் குழந்தையாய், தனது மதம், தனது கருத்து, தனது சாதி   மட்டும் தனது சொத்தாய் சுயநலமாக  வாழ வைக்கிறது. இந்த சுயநல சொத்தின் மீது எப்போது சேதம் ஏற்படுகிறதோ அப்போது மட்டும் நம் உணர்வுகள் தாக்கப்படுகின்றன,
அப்போது நாம் ஆற்றும்  எதிர்வினைகளால் அதை சரித்திரம் ஆக்கிவிடுகின்றோம். இந்த சரித்திர மறுப்பு, மறைப்பு அந்த 10000 உயிர்களுக்கு, Rwanda, sarajevo, Jews, Armenia, illanga, ஆர்த்திக்கு, அவந்திகாவிற்கு, .. என அனைத்துக்கும் நாம் தான் காரணம், நமது ஜீரோ டிகிரி பார்வை, சிந்தனை, செயல் தான் காரணம்.
அதற்கு நாம் பொறுப்பு ஏற்றுக்கொள்ளவேண்டும்  என்று கூறினான் எனது நண்பன். 
 
அந்த பொறுப்புதான், மனிதனை மனிதன் கொல்லகூடாது எனபது, என்னால் மனிதர்களை கொல்லமுடியாது என்றாகும், அதுதான் பிறகு மனிதனை மனிதன் கொல்லவே முடியாது என்றாகுமாம்.
       இந்த ஜீரோ டிகிரி   சுயநல சொத்தினால்தான் 10000 பழங்குடியினரின் உயிர் இந்தியாவை ஒன்று சேர்க்காமல், பன்றி கொழுப்பும், மாட்டு கொழுப்பும் ( 1857 சிப்பாய் கலகம்)  ஒன்று சேர்த்தது, இந்த ஜீரோ டிகிரி சிந்தனையால்தான் இந்தியாவில் நடந்த இந்த Genocide பற்றி நாம் முக்கியம் கொடுத்து  பேசுகிறோம்,   இந்த காரணம்தான் ஒரு சாதி தலைவரின் சிலைக்கு செருப்பு மாலை அணிவித்தால் மனிதர்களின் தலை நிலத்தில் வீழ்கிறது, இந்திரா காந்தி சுட்டு கொன்றபோது சீக்கியர்களை கொன்று குவித்தனர், இந்த ஜீரோ டிகிரி மனதால் எது moral/ எது  immoral , எது காதல் / எது காமம் என்று குழம்பி கடகின்றோம். 
ஜீரோ டிகிரி குறிகிய கோணம்மென்றால், நமது கோணம் எவ்வளவு   டிகிரி அகலபடுத்தமுடியும்? 360 degrees. அதாவது ஒரு வட்டம். 360 = 3 + 6+ 0 =9. நமது பார்வை 360 degrees  வரை அகல தயாராக இருந்தால் மட்டும்தான் , நமது படிப்பு, நமது மதம், நமது கோட்பாடு, நமது செயல், நமது தத்துவங்கள் நமது அற நூல்கள் நமது வட்டத்தின் ஆரத்தை அதிகபடுத்தி இந்த உலகம் வரை, இந்த பிரபஞ்சம் வரை பெரிதாக்கும்.
இந்த கருத்தை practical செய்து பார்க்கவிரும்புவர்கள் இந்த website க்கு சென்று swap angle ஐ 0 முதல் 360 வரை மாற்றி பார்க்கவும்.
http://jsdraw2d.jsfiction.com/demo/circleellipse.htm
Width:, Height:, Start Angle(degree):, Swap Angle(degee):
இது எனது தனிப்பட்ட தற்போதைய  கருத்து, இது  எனது அனுபவம், அறிவு என்ற நீளம் அகலம் சார்ந்து இருக்கும்  , இதுதான் கருத்து  என்றில்லை. எனக்கு  இது மாறலாம்.  
இப்படி என்னால் ஜீரோ  டிகிரி நாவலை படிப்பதற்கு முன்பு கண்டிப்பாக சிந்தித்திருக்க  முடியாது.
-
- Mrinzo Nirmal

10 comments:

  1. Super! :-)
    இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  2. Super! :-)
    இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  3. சந்தல் கலகத்தை பற்றி நான் தெரிந்துகொண்டது Zero Degree மூலமாகதான், எங்கே அதை பற்றி சொல்லிருக்கு, யாருகாவது தெரியுமா? கண்டுபிடிதவ்ர்களுகும், கண்டுபிடிகபோகிரவர்களுகும் மற்றும் அனைத்து அன்பு நண்பர்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்.

    ReplyDelete
  4. இன்பம் தொடர! இதயம் குளிர!
    துன்பம் தொலைய! தொல்லைகள் மறைய!
    நண்பர்கள் வாழ்த்த! நானிலம் போற்ற!
    இனிய இந்த வருடம்! இன்பம் இன்னும் சேர்க்கட்டும்!
    என்றும்வல்ல இறைவன், இணைந்து இறை பாலிக்கட்டும்.

    ReplyDelete
  5. இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  6. இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

    ந்ன்றி

    ReplyDelete
  7. உருத்திரா said...

    வாழ்த்தை வித்தியாசமாக சொன்னதற்கு நன்றி

    ReplyDelete
  8. இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்”

    நன்றி ஜீ

    ReplyDelete
  9. நன்றி நிர்மல்

    ReplyDelete
  10. பாஸ் எப்படி தொடர்ந்து இவ்வளவு பதிவுகள் எழுதுகிறீர்கள்? ஒரு பதிவை ஆங்கிலம் --> தமிழில் தட்டச்சு செய்யவே எனக்கு கடுப்பு ஆகுது :)

    ReplyDelete

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா