Showing posts with label நிர்மல். Show all posts
Showing posts with label நிர்மல். Show all posts

Tuesday, January 12, 2016

கவிதா சொர்ணவல்லியின் பொசல் சிறுகதை தொகுப்பு - என் பார்வையும் ஒரு விவாதமும்


பெண் எழுத்தாளர்கள் கதை பொதுவாக இரு துருவங்களில் ஒன்றில் இருக்கும்..பெண்ணியம் , புரட்சி என்ற துருவம் ஒன்று..குடும்பக்கதை என்ற துருவம் மற்றொன்று... அதுவும் இல்லாவிட்டால் ஆண் எழுத்தாளர்களை ஃபேக் செய்ய முனையும் கதைகள் இன்னொரு வகை..

கவிதா சொர்ணவல்லியை பொருத்தவரை அவர் சில கொள்கைகளில் பிடிவாதமாக இருக்கக்கூடியவர்... எனவே அவர் கதைகள் ஏதேனும் இசங்கள் சார்ந்தோ , பெண் விடுதலை சார்ந்தோ இருக்கும் என நினைத்தேன்.. அப்படி எழுதும் ஆழ்ந்த அறிவும் தகுதியும் கொண்டவர் அவர் என்பதால் அப்படிப்பட்ட கதைகளை எதிர்பார்த்தே அவரது பொசல் சிறுகதை தொகுப்பை படிக்க ஆரம்பித்தேன்.. ஆனால் என்ன ஒரு ஏமாற்றம்...இனிய ஏமாற்றம்.. அழகு தமிழில் , இனிய நடையில் , பொதுவான மனித உணர்வுகளைப்பேசும் கதைகள் அவை....

ஒரு  மழைக்கால பேருந்து பயணத்தில்  படித்த அந்த தொகுப்பு மழை அனுபவத்தை மேலும் ரசனை மிக்கதாக மாற்றியது


ஒன்பது கதைகள்... ஒவ்வொன்றும் ஒரு விதம்


காதல் கடந்த ஈர்ப்பை கூறும்  நான் அவன் அது  , கிராமத்து கடவுள்களை பற்றிகூறும் விலகிபோகும் கடவுள்கள் , இந்த தொகுப்பில் பலரது ஃபேவரைட் கதையான கதவின் வெளியே மற்றொரு காதல் , தாய் பாசத்தை உணர்வுபூர்வமாக சொல்லும் அம்மாவின் பெயர் , காதலின் கதகதப்பை உணர வைக்கும் எங்கிருந்தோ வந்தான் ,  நவீன வாழ்வியல் சூழலில் நீறுபூத்த நெருப்பாக இருக்கும் காதலை சொல்லும் மழையானவன் , சற்றே பூடகமான கதை அம்சம் கொண்ட யட்சி ஆட்டம் , இலக்கிய ரீதியாக கச்சிதமான எழுத்து நடையைக்கொண்ட பச்சை பாம்புக்காரி , அமானுஷ்யமாக தொடங்கி நெகிழ்ச்சியாக முடியும் டிசம்பர் பூ என ஒவ்வொரு கதையும் மனதில் தென்றலின் குளுமையை வீசிச்செல்கிறது

கதையின் கடைசி வரிகளை அழுத்தமாக அமைப்பது , கதாபாத்திரங்களை வெகு சில வரிகளில் அறிமுகம் செய்வது , கதையின் மன நிலையை ஆரம்பத்திலேயே மனதில் கொண்டு வருவது , இனிமையான நடை என பாசிட்டிவாக பல விஷ்யங்களை சொல்லலாம்..

ஆனால் குறிப்பிட்ட சூழலில் நடக்கும் கதையில் இன்னும் அதிகமான வட்டார சொற்கள் இடம்பெற்றிருக்கலாம்.. பொது தமிழில் இருப்பது சராசரி வாசகனுக்கு வசதிதான் என்றாலும் , யதார்த்த சூழல் சற்று குறைவதாக தோன்றுகிறது

 கிராமத்து சூழலில் கொஞ்சம் குறை இருந்தாலும் மாடர்ன் சூழலை , தற்கால பெண்ணின் மொழியை கண் முன் நிறுத்துவதில் சற்றும் குறை வைக்கவில்லை

வேறு ஏதாவது சொல்லணுமா என்றான்..

  நீண்ட நாட்களாக நீ கேட்ட  உன் மீதான என்  காதல் பற்றிய கவிதை என் கையில் இருக்கிறது..அதில் உனக்கு பிடித்த போன்சாய் செடிகூட இருக்கிறது என சொல்ல நினைத்து , எதுவும் இல்லை என சொல்லி சிரித்தேன் என்பதில் அந்த உணர்வை துல்லியமாக கொண்டு வந்து விடுகிறார்...  அவனது தேவ தூத இறகுகள் நீண்டுதான் இருந்தன.. ஆனால் அதன் பட்டு நூல் அறுந்திருந்தது என பொயட்டிக்காக சொல்ல முடிந்திருப்பது அருமை ( எங்கிருந்தோ வந்தான் )

காதல் என்பது எதிர்பார்ப்பற்றது,, நிபந்தனை அற்றது என்பார் ஜே கிருஷ்ண மூர்த்தி... ஆனால் பெண் அப்படி எளிதாக காதல் வயப்பட்டு விட முடியாது.. காதலை பிரகடனப்படுத்தவும் மூடாது,,,உதாரணமாக ஆட்டோகிராப் படம்போல ஒரு பெண் தன் காதல்களை சொல்லிவிட முடியாது... இதை அழகாக அலசி இருக்கும் கதை கதவின் வெளியே மற்றொரு காதல்... ஒருவருடன் பிரச்சனை வந்தால்தான் இன்னொருவருடன் காதல் வரும் என்பது இல்லை... உண்மையில் வெறுப்பு நிறைந்த இதயத்தில் காதல் வரவே வராது... காதல் நிரம்பிய இதயத்தில் காதல் பூத்துக்குலுங்குவதை யாரும் தடுக்க இயலாது என சொல்லும் இந்த கதை ஒரு பெண்ணின் மனதை துல்ல்லியமாக பிரதிபலிக்கும் தமிழ் சிறுகதைகளில் முக்கியமான கதைகளில் ஒன்று

பேசுபொருள் சார்ந்து எனக்கு பிடித்த கதை இது..ஆனால் சொல்லப்பட்ட விதம் காரணமாக எனக்கு பிடித்த கதை பச்சைபாம்புக்காரி

தன் அப்பாச்சியின் சமையல் சுவைக்கு காரணம் அருவாள் மனைதான் என நினைத்து சிறுமியாக இருக்கும்போதே அதைகேட்கிறாள் நாயகி...கைப்பக்குவத்துக்கு காரணம் பச்சைப்பாம்பை கைகளால் உருவதுதான் என்கிறாள் அப்பாச்சி... இதெல்லாம் கிராமத்து நம்பிக்கை என நினைக்கிறோம்.. ஆனால் கடைசியில் அருவா மனை , பச்சைப்பாம்பு ஆகியவை வேறொரு பொருள் கொள்ளும்போது அவை பிரமாண்டம் ஆகின்றன...  பெண்களால் வழிவழியாக காப்பாற்றப்படும் வாஞ்சை  கண் முன் தோற்றம் கொள்கின்றன

அன்பு என்பது வெகுளித்தனமானது..ஆனால் நாம் அதற்கு வெவ்வெறு பெயர்கள் வைத்துள்ளோம்... உண்மையான அன்பு தீங்கு செய்யாது.. அன்பு எதிர்பார்ப்பற்றது....இதை சொல்லும் அற்புதமான கதை நான் , அவன் , அது...


ஆனால் இதையெல்லாம் மீறி பாட்ஷா டைப் கதைதான் அம்மாவின் பெயர்.. அம்மாவின் பெயர் என்னவென்றே தெரியாத ஒரு மகள்... அவள் பெயர் தெரியும்போது எப்பேற்பட்ட பெண்மணி என பிரமித்துப்போகிறாள்... தன் சுயத்தை மறைத்து , சுயத்தை இழந்து வாழும் நம் ஊர் பெண்களை டிராமட்டிக்காக கண் முன் நிறுத்தும் இந்த அம்மாவின் பெயரையே தலைப்பாக வைத்தது மிகவும் பொருத்தமானது... கடைசி வரிகள் மிகவும் அருமை

இதைவிட இன்னொரு கதை எழுதி விட முடியாது என நினைக்கும்போது கடைசியாக ஒரு கதை...  அது தாய் மீது மகள் கொண்ட அன்பு என்றால் இது தாய் மீது மகன் கொண்ட வாஞ்சை...தாய் மகள் அன்பை ஓர் ஆண் புரிந்துகொள்ள முடியாமல் போகலாம்...ஆனால் மகன் தாய் அன்பை ஒரு பெண் புரிந்துகொள்ள முடியும் என்ற சப் டெக்ஸ்ட் பலரால் மிஸ் செய்யப்படும் வாய்ப்பு அதிகம்..



என்ன ஏன் சாக விட்ட” அப்படின்னுதான் கேப்பாங்கன்னு நினைக்கிறேன். அத அவங்க கேக்றதுக்காகத்தான் நானும் காத்துட்டு இருக்கேன்” என்றான். “கேட்டா என்ன செய்வே” என்றேன் ‘சத்தியமா என் கிட்ட பதில் இல்ல” என்றான் தடவிய டிசம்பர் செடியின் குட்டி முள் கிழித்து என் விரலில் ரத்தம் வடிந்ததை நான் கிருஷ்ணாவிடம் சொல்லி கொள்ளவில்லை.



-----------------------------------------------------

இந்த கதை குறித்து நண்பர் நிர்மலுடன் ஓர் உரையாடல்...



- நண்பா...பொசல் தொகுப்பு எப்படி இருந்துச்சு


வாசித்தேன் நல்லாருந்திச்சி


எந்த அம்சம் உடனடியா ஈர்த்துச்சு


கதைகள் அனைத்தும் first person ல் சொல்லியது பிடித்திருந்தது

உங்க ஃபேவரைட் எது

அவன் அவள் அது. Is really good.

லவ்லி


அம்மா பெயர் is also nice

யட்சி கதை பிடித்திருந்தது


இன்னொரு காதல் கதை என் ஃபேவரைட்..பெண் மனதை துல்லியமா பிரதிபலித்தது...சரி,,,இந்த கதைகளின் மைனஸ் என்ன 



இன்னும் இண்டென்ஸா எழுதிருக்கலாம் still it's good..வட்டார சொற்கள் இன்னும் அதிகம் வந்திருக்கலாம்



ஒருவருடன் காதலில் இருக்கும்போது , இன்னொருவர் மேலும் நேசம் வரலாம் என்று ஒரு பெண் பார்வையிலான கதை எப்படி இருந்துச்சு




அது தீம் நல்லாருக்கு, இன்னும் உள்ளே போயிருக்கலாமோ ந்னு தோனிச்சி.

சூப்பர்...ஆனா எனக்கு பிடிச்சு இருந்துச்சு

எனக்கு பிடித்தது நான் அவன் அது..ஆனா தலைப்பு தான் ஏதோ மலையாள படம் போல இருக்கு

ஹாஹா


 incest லவ்

Attraction.

Infatuation

ந்னு எதுவும் புரியாமல் இருக்கும் attraction




நெறய ஆங்கில வார்த்தைகள் வருதே, அது ஒகேவா. எனக்கு பிடித்திருந்தது.

ஆங்கில வார்த்தைகள் இந்த கதை மாந்தருக்கு பொருத்தமாகவே இருந்தது


Yes agreed I liked it too

ஒரு மாடர்ன் பெண் தூய தமிழில் யோசிப்பதாக எழுதினால் செயற்கையாக இருக்கும்


அம்மாவின் பெயர் மனதில் நிற்கும் கதை

அம்மாவை ஓர் ஆண் பார்ப்பதற்கும் பெண் பார்ப்பதற்கும் வித்தியாசம் இருப்பதை புரிய வைத்தது


யட்சி கதை , மாடனும் மோட்சத்தில் வரும் ஒரு கதை போல இருந்தது

யெஸ் just realised that. ஒரு மகன் அம்மா மீது என்னிக்கும் பொறாமை படமாட்டான்ல

எக்சாக்ட்லி


எனக்கு இந்த இடத்தில் அட்லிஸ்ட் இரண்டு observable act சொல்லிருந்தா அந்த இண்டென்ஸ் வந்திரிக்குமோ?

How does that Jeslouse operate

என் மகளுக்கும் என் மனைவிக்கும் என்னை குறித்து ஒரு போட்டி உண்டு




ஒருத்திய குட் ந்னு மகளுக்கு பிடிக்காது . ஏன் காரில் நானும்மனைவியும் பேசினால் கூட மூக்கை நுழைத்து நானும் அம்மா வுக்கு ஈக்வல்னு நிறுவ முயற்சி செய்வாள்


ஆமா... அது இயல்பானது


இது போல ஏதாச்சும் ....எனி ஹவ் கதையின் தீம் அது இல்ல.

தாய்க்கு ஈக்வல் என மகள் காட்டிக்கொள்ள விரும்பும் தருணங்கள் உண்டு... மகளுக்கு ஈக்வல் என் தாய் காட்டிக்கொள்ள விரும்பும் தருணங்கலும் உண்டு


யெஸ் யெஸ்

இதைத்தாண்டியும் அவர்களுக்குள் வாஞ்சை இருக்கிறது என்பதே அவர்கள் உறவை மிகவும் இண்டென்ஸ் ஆக்குகிறது..


யெஸ்

Jealousy need Not be negative or destructive

யெஸ்ஸ்ஸ்ஸ்


It's a unavoidable feel resulting in comparison

ஆமா... தேவதச்சன் வரிகள் நினைவுக்கு வருகின்றன

உன்னிடமிருந்து பறந்து சென்ற
இருபது வயது என்னும் மயில்
உன்
மகளின் தோள் மீது
தோகை விரித்தாடுவதை
தொலைவிலிருந்து பார்க்கிறாய்
காலியான கிளைகளில்
மெல்ல நிரம்புகின்றன,
அஸ்தமனங்கள்,
சூரியோதயங்கள் மற்றும்
அன்பின் பதட்டம்

Friday, November 7, 2014

இணைய மொண்ணைகளும் பாரடக்சும் - ஒரு பரபரப்பான பேட்டி


அமெரிக்க அதிபர் முதல் லோக்கல் எழுத்தாளர்கள்வரை அனைவருக்கும் அட்வைஸ் கொடுத்தவாறு உலகை கலக்கி வருபவர்கள் இணைய மொண்ணைகள்.  2016ல் ஆட்சியை பிடிக்கும் சூழலும் இருக்கிறது.. இப்படிப்பட்ட மொண்ணைகள் குறித்து , பின் நவீன பின்லேடன் என அழைக்கபடும் நிர்மலுடன் ஒரு பேட்டி..


பின் நவீன பின்கோட் அவர்களே.. மொண்ணைகள் உருவாகிறார்களா , உருவாக்கப்படுகிறார்களா?


பெரும்பாலும் உருவாக்க படுகிறார்கள் அல்லது கஷ்டப்பட்டு உருவாகி கொள்கிறோம். சிலர் இதற்க்காக பயிற்சிக்கெல்லாம் செல்வதாக கேள்வி.

ஒரு மொண்ணை தன்னை மொண்ணை என உணரும்போது என்ன நிகழ்கிறது ?


அக்ட்சுவலா இந்த கேள்வியே தவறு, இதில் இருப்பது பாராடாக்ஸ். உணருதல் முடியாமைதான் ஒரு மொண்ணையின் முதல் குணம். சரி அப்படியே உணர்ந்தாலும் ஃபேக்காகவே இருக்கும். அது ஃபேக்கான உணர்வுதான் என உணர்ந்தால் அன்று முதல் அவன் உலகின் மொன்னைகளின் எண்ணிக்கைகளில் ஒன்றை குறைத்துக் கொள்ளலாம். ஆனால் இன்னும் 100 பேர் வரிசையில் நிற்பதால் கணக்கு சரியா வராது.


 நடிகருடன் பேட்டி என்றால் , நடிக்க வந்திராவிட்டால் என்ன செய்து இருப்பீர்கள் என கேட்பார்கள்.. அந்த பாணியில், ஒரு மொண்ணை மொண்ணையாக ஆகாதிருந்தால் , என்ன ஆகி இருப்பார்? 


இது செம கேள்வி, இதற்கு ஒரு கதை சொல்ல ஆசைப்படுகிறேன். எங்க் ஊர்ல பூச்சின்னு ஒருத்தன் இருந்தான் மாடு மேய்ப்பான், அவனுக்கு வாழ்கையில் ஒரே ஆசைதான் - அது நீயூஸிலாந்தில் சென்று மாடு மேய்ப்பதுதான்.

ஹா ஹா... செம.. ஜென் கதை போல சுருக்கமாக ஆழமாக சொல்லி விட்டீர்கள்.. 


ஜென் பற்றி சமிபத்தில் ஒரு சொற்பொழிவு கேட்டேன், சரியான மழை, பெரும்பாலோனரிடம் கேட்டேன் உங்களுக்கு ஜென் பிடிக்குமா என, அவர்கள் சொன்னார்கள், நாங்கள் மழைக்கு பயந்துல்லா இந்த பக்கம் வந்தோம் என

ஹா ஹா.. இணைய மொண்ணைகளை விஞ்சி விட்டார்களே... இண்டர்னெட் மொண்ணை , நான் - இண்டர்னெட் மொண்ணை .. ஒப்பிடுக 

இண்டர் நெட் மொண்ணைகள் - ரேஸ் குதிரைகள், நான் இண்டர் நெட் மொண்ணைகள் - செக்கு மாடுகள்.



அனைவர் மனதிலும் இருக்கும் ஒரு கேள்வி..  தென்னையால் ஊருக்கு பலன்.. சென்னையால் ஒரு மானிலத்துக்கே பலன். ஒரு மொண்ணையால் யாருக்கு என்ன பலன்? 


மொண்ணையால் எல்லோருக்குமே பலன். எப்படியென்றால் மொண்ணைகள் இல்லையென்றால் இந்த உலகம் இதை விட போரிங்கா போயிடும். ஏதோ ஒரு ஹேப்பனிங் ப்ளேஸ் போல ஆக்கிவிடுவதன் பெறும் பொறுப்பு அவர்களை சாரும்.

ஹா ஹா... சரி.  ஒபாமா, ஜெயமோகன் , ரஜினிகாந்த் என எல்லோர்க்குமே நம் மொண்ணைகள் அட்வைஸ் வழங்குகிறார்கள்.. இந்த மொண்ணைகளுக்கு அட்வைஸ் வழங்க யாரும் இல்லையே என என்றாவது வருந்தி இருக்கிறீர்களா? 


மங்கி சீ, மங்கி டூ என்பது போல சக மொண்ணைகளை பார்த்தே கற்றுக் கொள்கிறார்கள். இணையம் வந்ததால் இந்த மொண்ணைதன்ம் மிகச் சரியாக ஆவனப்படுத்தப்பட்டு வருகிறது என நினைக்கிறேன். வருங்காலத்தில் இன்றைய மொண்ணைகளின் செயலும் சீற்றமுமே அட்வைஸாக இருக்கும். என்பது எனது கணிப்பு

my life is my message என்பது போலவா? 


ஆமாம், ஆனால் அது இந்த காலத்தில் மட்டும்தான், அடுத்து வரும் தலைமுறைகளுக்கு சரியான ஆவனம் இருக்கும்

monnai does not exist என சில அமைப்பியல்வாதிகள் சொல்வது குறித்து? 

மொண்ணைதனம் என்பதே ஒரு அப்ஸ்ட்ராட் தாட் தானே, அதை குறித்து சிலர் அப்படி கூற காரணம், நான் சொல்லி தெரிய போவதில்லை. ஊழல் அரசியல்வாதி என்னிக்காவது ஊழலைப் பற்றி சாதாரனமாக , இயல்பாக பேசிருக்கிறானா. அது போலதான் இதுவும்.



மொண்ணைகளின் அடுத்த வெர்ஷன் எப்படி இருக்கும்?


இன்னும் மொண்ணைதனமாக இருக்கும். உதாரணம் eப்படி மொண்ணைதனமாக இருப்பது பற்றி வகுப்பு எடுக்கப்படும், பாடம் நடத்தப்படும், பயிற்சி ஏடுகள் வெளியிடப்படும், எனென்றால் இன்றைய மொண்ணைகளின் பலமே இதுதான்.

இணைய மொண்ணைகள் அளவுக்கு மற்ற துறை மொண்ணைகள் ஏன் ஃபேமஸ் ஆக முடியவில்லை? 

இணைய மொண்ணைகளின் வெற்றிக்கு இணையத்தில் இருக்கும் மொண்ணைதனம்தான் காரணம். அது ஒரு ஃபெர்கட் மேட்ச். மொண்னைதனத்தை யாருக்கும் தெரியாமல் தைரியமாக வேறு வேறு பெயர்களில் செய்ய முடிகிறதே. எனக்கே சில நேரம் ஆசையாக இருக்குமென்றால் பார்த்துக் கொள்ளுங்கள். இணையம் இஸ் சோ டெம்டிங் , யூ நோ டூ பிகம் எ மொண்ணை.

யாரும் உருவாக்காமல் சொந்தாமாக உருவானவர்கள் மொண்ணைகள்.. வைரஸ்தான் இப்படி உருவாகும்.. எனவே இணைய மொண்ணைகளும் வைரஸ்தான் என கூறப்படுவது குறித்து ? 

வைரஸ் அல்ல அவர்கள் , வைரஸுக்கு தான் வைரஸ் என தெரிய்ம்தானே

ஹா ஹா...
monnai is dead என்ற நிலை என்றாவது வருமா ? 




வராது. என்றே தோன்றுகிறது. ஜன நாயக அரசியல் அமைப்புதான் வருங்காலத்தில் இருக்குமென்றுதானே எல்லோரும் சொல்லிக் கொள்கிறோம்.

கைக்கு கிடைத்த ஏதோ ஒரு புத்தகத்தை படித்து விட்டு ,  இலக்கியம் முழுக்க அறிந்ததை போல சில ஃபில்ம் காட்டினாலும் , மற்ற மொண்ணைகள் கோபிப்பது இல்லை... அவருக்கான உரிமையை அங்கீகரிக்கிறார்கள்.. இந்த ஜன நாயக மாண்பு ஏன் மற்ற துறையில் இல்லை



இந்த கேள்வி ஏதோ இலக்கியம் சம்பந்தம் பட்டதோ/ , எனக்கு புரியவில்லை. இப்படியான கேள்விகளுக்கு பதில் சொல்லுவது கூட நம்மை சில நேரம் மொண்ணைகளாகிவிடும்

கடைசியாக ஒரு கேள்வி.. உலகெங்கும் வாழும் மொண்ணைகளுக்கு உங்கள் மெசேஜ் என்ன? 

ஐ லவ் தெம்




Wednesday, July 31, 2013

எழுத்து தன்னைத்தானே எழுதிக்கொள்ளுமா? - கவிஞர் றியாஸ் குரானாவுடன் கவிதை சார்ந்த உரையாடல்

நானும் நிர்மலும் சும்மாவே பேச்சு பேச்சு என பேசிக்கொண்டு இருப்போம். ஏதாவது புத்தகம் பற்றி என்றால் கேட்கவே வேண்டாம்.


நிர்மல் சென்னை வந்தபோது அவர் தேடிப்பிடித்து வாங்கிய புத்தகங்களில் ஒன்று கவிஞர் றியாஸ் குரானாவின் ”நாவல் ஒன்றின் மூன்றாவது பதிப்பு "
எனும் கவிதை நூல்.

இந்த நூல் குறித்தும் , கவிதைகள் குறித்தும் றியாசிடம் பேசினோம். அதில் இருந்து சில துளிகள்.


******************************************************************

ஆபத்தான ஒரு உலகினுள், பதற்றமின்றி நுழைவதற்கு உதவும் வழிகாட்டிதான் எனது கவிதைகள்.
கவிதை புரிந்துகொள்ளும் ஒரு அம்சமல்ல. புரிந்துகொள்ள முயற்சிப்பதை சிக்கலாக்குவது.
கற்பனையின் விதிகள் எப்போதும் புரிந்துகொள்ளுவதற்கு எதிரானது. ஆனால், ஒருவகை புரிந்துவிட்ட நிலையை உருவாக்குபவை. கடைசியில் எதுவும் துல்லியமாக பிடிபடுவதிலல்லை. இதைச் செய்யும் அனைத்துப் பிரதிகளும் கவிதையின் அனுபவ வெளிக்கு நெருக்கமானதே.


மிகத் துல்லியமாக அர்த்தத்தை ஒரு பிரதி வெளிப்படுத்திவிட்டால் அதன் வேலை அத்தோடு முடிவடைந்துவிடுகிறது. அதற்கு மேல் அதன் சுவரஷ்யம் வற்றிவிடுகிறது.
அது ஒரு திட்டமிட்ட கற்பனைச் செயல்.
கவிதை பிறப்பதில்லை. சிந்திக்கிறோம். அவ்வளவுதான்.



கற்பனைச் செயல் என்பது திட்டமிட்டதுதான். மொழியே திட்டமிட்டு உருவாக்கப்பட்டதுதானே. நாம் அதில்தான் சிந்திக்கிறோம். அப்போது, தானாகவே எப்படி வரும்.
நமது ஆன்மீக புரிதல்கள், தங்களுக்கான அறிவு எங்கோ இருந்து வந்ததாக சொல்லிக்கொண்டதன் தொடர்ச்சியே இது.
அதை, இலக்கியத்திற்கும் பொருத்திவிட்டார்கள்.


கவிதை தன்னை தானே எழுதிக்கொண்டது...எழுத்து தன்னை தானே எழுதியது என்கிறார்கள்... நீங்களோ திட்டமிட்டு எழுதுவ்தாக சொல்கிறீர்களே

ஆன்மீக மனநிலையின் பிடிவாதமான தாக்கத்திலிருந்து ஒருவிதமான தளர்ந்த நிலையை இன்னும் நாம் நெருங்கிவிடவில்லை. அதனால்தான், இன்னும் எங்கிருந்தோ உதிப்பதாக கருதுகிறோம்.


திட்டமிட்டு எழுதுவது craftmanship என்றும் spontaneous ஆக பிறப்பதுதான் படைப்பாற்றல் என்றும் சிலர் சொல்கிறார்களே


திட்டமிடல் என்பது ஆரம்பிப்பதற்கான ஒரு விசயம்தான். அதைத் தொடர்ந்து உருவாகும் கற்பனைகள் எழுத்தை தொடர உதவும். ஒன்றிலிருந்து மற்றயதற்கு தாவிச் செல்ல மிக வேகமாக சிந்தனை திட்டமிடுகிறது. அவை அனைத்தையும் இணைத்தே கற்பனைச் செயல் என்கிறோம். இந்தக் கற்பனைச் செயல் என்பதற்கு நிகரான சொல்லாக தன்னைத்தானே எழுதியது என்று பொருள் கொண்டால் அதை ஏற்க முடியும்.
தன்னைத்தானே கடவுள் உருவாக்கிக்கொண்டார் என்பதுபோன்ற, பின்தங்கிய ஒரு கருத்துத்தான் அது.


கவிதைதான் கலைவடிவங்களில் மிக உயர்ந்தது என்ற தேவதேவன் கருத்து குறித்து என்ன சொல்கிறீர்கள்

ஹா..ஹா... மிக முக்கியமான ஒரு அறிவிப்பாக இதை கருத பலர் இருக்கக்கூடும். அவர்களின் நம்பிக்கையை குறைகூறத் தேவையில்லை. ஆயினும், ஒன்றை யோசித்துப்பாருங்கள். ஒன்றைவிட மற்றையது உயர்ந்தது என கருதும் தேவையும், அதைக் கடைப்பிடிக்கும் அவசியமும் வரலாற்றில் யாரிடம் இருந்து வந்திருக்கிறது? வன்முறையை மனதார ஏற்றுக்கொள்பவர்களிடம்தான். கலை மாத்திரமல்ல மனிதச் செயல்கள் வன்முறை நீக்கத்தைப் பற்றி அக்கறைகொள்ள வேண்டும் எனக் கருதுபவன் நான். எனக்கு எதையும் உயர்ந்தது எனச் சொல்லவோ, அதைக் கடைப்பிடிக்கவோ அவசியம் ஏதுமில்லை. கலை மாத்திரமல்ல, சூ போவதும் முக்கியமான ஒன்றுதான். கலைக்கு கொடுக்கும் அனைத்து இடங்களையும் இதற்கும் வழங்க விரும்புகிறேன். ஒரு அழைக்கும் வசதிகருதியே கலை என்ற பெயரிடலையும் பார்க்கிறேன்.
இப்படிச் சொல்லுவதினுாடாக தேவதேவனின் கவிதைகளை மறுப்பதாக ஆகாது. அவரின் சிந்தனையின் பெரும்பகுதி வன்முறையாக இருக்க முடியாது. அதுகுறித்த புரிதல் இல்லாது இப்படியான ஒரு முக்கியத்துவத்தை கவிதைக்கு அவர் வழங்கியிருக்கலாம். அதுதவிர தான் செயலாற்றும் ஒன்று என்பதாலும் இப்படிச் சொல்லியிருக்கலாம்.





மிக இலகுவானதுதான் எனது கவிதைகள். நுழையுங்கள். உள்ளே வழிகாட்டிகளும் அதற்கான கையேடுகளும் இல்லை.
விரும்பியபடி பயணிக்கலாம்.



கவிதை என்பது திட்டமிட்ட கற்பனைச் செயல் என்பதை அறிவிக்கிறது. ஆனால், அதன் உள்ளக செயற்பாடுகள் முற்றிலும் வேறு ஒன்றை பேச முற்படுவதாக அமைந்தும் இருக்கின்றன.



இங்கு காலைத் தேனீர் என்று ஒரு கவிதை இருக்கிறது பாருங்கள்.


காலாவதியாகிப்போன நாளொன்றின்
காலைப் பொழுதிற்காக
காத்திருக்கிறேன்.

கடந்தது மீள வராது

ஆயினும்
நான் சந்தித்தேயாக வேண்டும்

அந்திப் பொழுதிலிருந்து
பின்நோக்கி நடக்கிறேன்

அல்லது சிந்திக்கிறேன்

கொஞ்ச நேரம்
எதுவும் தெரியவேயில்லை

அது எனது பகல் தூக்கம்

பின்னோக்கி வருவதுபோல்
பாவனை செய்தபோதும்
திடுக்கிட்டு எழுந்துவிட்டேன்

;காரணம்

கனவில் அவள் தந்த கடிதத்தை
வாங்கிச் செல்கிறாள்

அதுபோல இருந்தது

அதுதான் நிகழ்ந்தது

பின்னோக்கி வரும்போது
தந்தது வாங்கியதாக மாறிவிடும் அல்லவா

மன்னியுங்கள்
மீண்டும் சிந்திக்கலாம்

உச்சி வெயில்

சூட்டை அதிகரிக்கும்
ஆடைகளை உடுத்துகிறேன்

நிலத்தினுள் இறங்கிவிட்ட,
நான் குளித்த நீரையெல்லாம்
கிணற்றுக்குள் ஊற்றுகிறேன்

தலைமயிர்களுக்குள் தங்கிய ஈரமும்
வடித்தெடுக்கப்படுகிறது

சந்தையிலிருந்த மிகவேகமாக
சைக்கிளை பின்நோக்கிச் செலுத்துகிறேன்

எல்லோரும் என்னை அதிசயமாகப் பார்த்தபடி
முன்னோக்கிச் சென்றுகொன்டிருக்கின்றனர்

ஏனெனில், அவர்கள்
கடந்துபோன காலைப்பொழுதை சந்திக்கும்
முயற்ச்சியில் இறங்கவில்லை

முதல்முறை சந்தைக்கு போகும்போது
நானும் அவனும்
அருகருகே பேசிக்கொண்டு போனோம்

இப்போது நாங்கள் தனியே பேசிக்கொண்டு
அவன் முன்னோக்கியும்
நான் பின்நோக்கியும் விரைகிறோம்

சரியாக வீட்டில் வந்து நின்றது

பறவைகளின் ஒலிகள்
வெளியில் பரபரப்பாக இருக்கின்றன

தற்போது காலைப்பொழுது

இனி முன்னோக்கிப் பயணிக்கலாம்

ஆவிபறக்க
தேனீர் அருந்திக் கொண்டிருக்கிறேன்

இந்தத் தேனீரைத்
தவறவிட்டதனால்,

ஒரு பகற்பொழுதை
முன்னோக்கியும் பின்னோக்கியும்
கடந்துசெல்ல வேண்டிவந்தது

இரண்டுமுறை.




ஆமாம், வாக்கியங்களை ஒருங்கிணைத்திருக்கிறேன். அதைப் படிக்கும்போது, படிப்பவர் கவிதைக்கான அனுபவத்தை கண்டுகொள்கிறார். அதைக்குறித்து சொல்ல முடிவதில்லை. ஏனெனில், வரிகளைச் சொல்லி எனது கவிதைகளை இன்னொருவருக்கு எடுத்துச் செல்ல முடியாது.
முற்றிலும் ஒரு கவிதைச் சம்பவத்தை கதையாக சொல்லுவதினுாடாகவே மற்றவருக்கு கடத்தலாம்.
அதனால்தான், கவிதை இருப்பதில்லை என்றேன்.

இந்த காலை தேனிர். வாசித்து கொண்டிருக்கிறேன். அருமையாக இருக்கிறது. டைம் ட்ராவல், reversing time.

இந்தக் கவிதையைத் திட்டமிட அதிக நாட்களை செலவிட்டேன்.


தேனீர் ஒரு - Now என எடுத்துகொள்ளலாமா
present moment- அதை தேனீர் என எடுத்துகொள்ளலாமா. அப்படித்தான் எனக்கு தோனுகிறது.



அப்படி எடுத்துக்கொண்டால், அதன் எல்லைகள் விரிவானது.


சாதாரண வாசகர்களும் இக்கவிதையை எதிர் கொள்ளுவர்.
இப்படி.
காலையிலட தேனீரை அருந்து மறந்துவிட்டதை, மலை நேரத்தில் நினைவுக்கு வருகிறது. தவறவிட்டதை அருந்தியே ஆகவேண்டும் என மனம் விரும்புகிறது.அதற்கு தெரியும் வழி என்னவென்றால், மாலையிலிருந்து திரும்பி நடந்துவந்து காலையை சந்திப்பதுதான்.
காலம் என்பது, மூன்று பிரிவுகளாக இல்லை. அது now தான் ஆக, ஒரு முனையிலிருந்து மறுமுனைக்கு செல்லுவது கற்பனைரீதியான சாகசம் அல்ல. அது எதிர்கொள்ளும் புனைவுகளின் சவால்கள் ஒன்றுமே இல்லை. கடந்துபோன சம்பவங்களை பின்னோக்கி வரும்போது எப்படி எதிர்கொள்வது என்பதை ஓரளவு உணர்த்தக்கூடிய சம்பவங்களை உருவாக்குவதுதான்.




கவிதையிருக்கும் நான் மாத்திரமே திரும்பி வருவதாகவும், மற்றைய சம்பவங்கள் அப்படி நடக்காதமாதிரியும் காட்டுவதுதான் எனது கற்பனை உழைப்பு. அதுவே, ஒரு புதிய வெளியை தந்துவிடுவதுபோன்று தோற்றமளிக்கிறது. இதை கவிதையில் செய்திருப்பதால் கவர்ச்சியாக இருக்கிறது அவ்வளவுதான்.



, சாத்தியமின்மையை உணர வைத்தபடியே கற்பனையில் மிதக்க வைப்பதை ரசித்தேன்

ஆமாம். வாசிக்கும்போது மாத்திரமே கவிதையை காணமுடியும். மற்ற நேரங்களில் அது கவிதையாக பின்தொடராது.


அப்போ the now இந்த ”கவிதை” அல்லது செய்யும் அந்த செயல்.




ஆமாம். the now என்பதை கலைத்துப் பார்க்கவும் முடிகிற தருணங்கள் உண்டு. இப்போது, என்பது பல்லாயிரம் நுண்கணங்களால் ஆனது. மறுதலையாகப் பார்த்தால், பல்லாயிரம் நுண்கணங்களைக் கொண்டே இப்போது என்பது இருக்கிறது.
மிலிந்த அரசனின் ரதம்
அதுபோல,பிளட்டோவின் ரதம் குறித்த உரையாடல்.
கதாஉபநிடதம் கூறும் ரதம்.
இவைகள் இந்த இப்போது என்பதை அதிகம் விவாதித்திருக்கின்றன.

மூன்று ரதம் குறித்த கதைகளையும் வாசித்துப்பாருங்கள். அதுதான் நமது ஆன்மா,மற்றும் அறிவியல் குறித்த அனைத்துக் கதைகளையும் பெருக்கிய கதையாடல்.


கண்டிப்பாக வாசிக்கிறேண், றியாஸ். இப்படியான தேனிர் கவிதை இன்னொன்றும் வாசித்தேன். -
மேசை மீது ஆறிகொண்டிருகிறது தேனிர்



ஜென் தேனீர் எப்போதும் ஆறுவதில்லை என்று சொல்லும்.
நான் ஆறிக்கொண்டிருக்கிறது என்று சொல்லுகிறேன்.
ஆறிவிட்டது என அதற்கு பொருளல்ல.


குடித்துவிட்டல் ஆறாதுதானே

ஆறிவிடும் என்பதும் அதன் பொருளல்ல.


இன்ஃபினிட்டி
முடிவுறாக்காலம்



தேனீரைக் குடிப்பதற்கும் நான் இடம் வைத்திருக்கவில்லை அல்லவா?
முடிவுறாக்கால் என்று ஒன்று இல்லை. காலம் முடிவற்றதாகவே இருக்கிறது. அப்படி சிந்தித்துவிடுகிறேன்.


ஆமாம் அதற்க்குள்தான் அவள் எதிர்காலத்தை நோக்கியும் அவன் கடந்த் காலத்தை நோக்கியும் நகர்த்திவிட்டிர்களே.


ஆகவே, தேனீர் ஆறிக்கொண்டிருக்கிறது.


தேனீர் ஆறுவது எனக்கு பிடிக்கவில்லை. ஆனால் என்ன செய்ய என தெரியவில்ல்யே. அதில் வரும் அந்த “ அவள்” நான். எப்போது எதிர்காலத்தை நோக்கியே ஒடுகிறேண்.
இந்த சிந்தனையை தருகிறது அந்த கவிதை.




இரு முனைகளும் ஒரு இடத்திலிருந்து பிரிந்து செல்கிறது என்று ஒன்றை சொல்கிறேன். இப்போது என்பதிலிருந்து இரு புறத்திற்கு செல்லுவதாக. ஆனால், இறந்த காலத்திலிருந்து வளர்ந்து படிப்படியாக எதிர்காலத்தை அடைவதாகவே பொதுவாக நம்பும் இடத்தில் இது விவாதிக்கப்பட வில்லை.



dictionary of khazar நாவலில் இப்படித்தான் சொல்லிருப்பார்.


இதையும் சற்று படித்துப்பாருங்கள்.
துண்டு துண்டாக தென்படும் இடங்களிலிருந்து எல்லாம் காலம் உருப்பெறுவதாக சொல்லியிருப்பாரே.. அல்லது அப்படி அது அமைந்திருக்கும்.


நான் குளிக்கவில்லை


றியாஸ் குரானா

கிட்டத்தட்ட 60 தொடக்கம் 100 வரையான
மழைத்துளிகள்தான் பொழிந்தபடி இருக்கின்றன
ஒவ்வொன்றும்
சுமார் இரண்டடி இடைவெளியில்
பெரும் துளிகளாக விழுந்து
உடைந்து தெறித்தவண்ணமிருக்கின்றன

நிலத்தில் சிதறிவிழும் துளிகள்
கைரேகையளவு நதியாய்
வீதியெங்கும் பெருகியபடி இருக்கையில்,
அதனூடாக பயணிக்க வேண்டிய
நிர்ப்பந்தத்தில் நான் இருக்கிறேன்

நனைந்துவிடாமல் இருக்க
நதியினை எட்டிக் கடந்து நடப்பதும்
துளிகளுக்கிடையிலான இடைவெளியில்
ஒழிந்து
மறுக்கி
மறைந்து பயணிப்பதும்
பெரும் சவாலாகவே இருக்கிறது

தலைக்கு மேலாக
இரைந்துகொண்டு வரும் பெரும் துளிக்கு
இடம்விட்டு
மறுதுளி வருவதற்குள் பாய்ந்து
பா..... அதுவொரு போராட்டம்

இத்தனை சிரமத்திற்கும் மத்தியில்
கொஞ்ச தூரம்போய்
திரும்பிப் பார்க்கையில்தான் அறிந்தேன்
மழை என்னை மட்டுமே குறிவைத்து
பின்தொடரந்து வருவதை

எவ்வளவு வேகமாகச் செல்கிறேனோ
அவ்வளவு வேகமாக
என்னைத் துரத்திக்கொண்டுவருகிறது

இனித் தப்பிக்க வழியில்லை
ஆதலால், நனைந்தேன் என்று
சொல்லலாமா என்று யோசிக்கிறேன்

அருகிலிருக்கும் வீடொன்றில்
நுழைந்தேனென்று சொல்லலாமென பார்த்தால்
அந்த வீட்டுக்குள் நுழைந்ததும்
அங்கும் மழை பொழிந்தது

மழையே கொஞ்சம் நில்..
எனக்கொரு சந்தேகம்
இன்று காலை
நான் குளிக்கவில்லை என்று
யாருனக்குச் சொன்னதெனக் கேட்டேன்

அக்கணமே மறைந்துபோனது

துரத்திக்கொண்டிருந்த மழை



ஆமாம்.
குளிக்கவில்லை கவிதையை நான் வாசித்தவுடன் தோன்றியது மழையை காதலாக, அன்பாக. எப்போது அன்பு காரணப்படுத்தபடுகிறதோ அப்போது அங்கு மழை இல்லை. இது முதல் வாசிப்பில் தோன்றியது.






அது தரும் அர்த்தத்தை யோசிக்கிறீர்கள். நல்லது. ஆனால், அதை உருவாக்க கவிதை எப்படி நகர்கிறது என்பதே ஒரு அலாதியான விசயம்தான்.



மழை என்னை மட்டுமே துரத்துவது காட்சி ரீதியாக ஒரு நிலவியலை உருவாக்குகிறது.
மழைத்துளிகளிடமிருந்து தப்புவது.



இது காதலில் வரும் அயர்சியை முற்றாக நினைவுபடுத்துவதுதான். இப்படி சில காதலுக்குரிய தன்மைகளை இக்கவிதையின் இடையிடையே வைத்திருப்பேன் கவனிக்கப்படுவதில்லை அவை...


ஆனால் முடியவில்லை இருந்தும் துரத்துகிறது. so மழையை நிறுத்தவே அந்த கடைசி கேள்வி. so it is a deliberate act.


அக்கணமே மறைந்தது மழை என்ற கூற்று ஒரு வகை மாயமான புனைவுபோல தோன்றினாலும். காதலும் கணத்தில்தான் மாற்றமடைகிறது. என்பதை கூறுவதுதான்.




எப்படியான மழையாகவிருந்தும் நான் நனையவில்லை என்பதை மீண்டும் வாசகனுக்கு உறுதிப்படுத்தும் இடமும் அதுதான். அதன் பின்னே, கவிதையின் தீவிரமான இரண்டாம்பகுதி நோக்கி கூட்டிச் செல்கிறது கவிதை.
எந்தக் குளுவும் இல்லை.

மழை இயல்பாக பெய்வதுதான். அதிலிருந்து தப்பிக்க நினைக்கிறான் என்பது

ஆனால், சற்று நேரத்தின் பின ஒரு ஆபத்தை சந்திக்கிறான். அதாவது, தன்னை மாத்திரமே மழை துரத்துவதை உணருகிறான். எப்படி அதிலிருந்து தப்பித்தான் (பிரிந்தான்) என்பதாக யோசித்தால் அங்கே காதலுக்கான வாய்ப்பு அதிகமுண்டு. இப்படி யோசித்துப்பாருங்கள்.



ஆயினும், மழையை கவிதைக்குள் கொண்டுவந்திருக்கிறேனெ ஒழிய. இயற்கையான மழையையொ, அதன் தன்மைகளையொ நான் பிரதி பண்ணவில்லை. இந்தக் கவிதைக்கென முற்றிலும் வேறான தன்மைகளையும் பண்புகளையும் கொண்ட மழையை உருவாக்கியிருக்கிறேன்.


யெஸ், இங்கு காதல் என வார்த்தை வந்திருந்தால் இந்த அர்ந்தங்கள் கிடைத்திருக்காது. பன்முகத்தன்மை


மழை என்ற சொல்லைத் தவிர மற்ற அனைத்துமே எனது திட்டமிடலடகள்தான்.
ஆக, புதிய ஒரு மழையை உருவாக்கியிருக்கிறென். இது திட்டமிட்டு கொண்டுவந்த ஒரு மழை.


ஆனால் திட்டமிடாமலேயெ மேலும் சில அர்த்தங்கள் கவிதைக்க்கு அமைந்து விட்டன,,,,author is dead


ஆமா...
ஆசிரியர் இறப்பதில்லை, புதிது புதிதாக பிறக்கிறார் அதனால்தான் முன்பிருந்தவர் இறக்கிறார்.

அவைகளை புரிந்துகொள்வதில் அனைவரும் பங்களிப்புச் செய்வோம்.
தேனீர் ஆறிக்கொண்டிருக்கிறது.
என்பது தலைப்பல்ல. அக்கவிதையின் கிளைமாக்ஸ் வரி.
ஏதாவது ஒரு இடத்தில் வரக்கூடிய ஒரு வரியை தலைப்பாக ஆக்கிக்காட்டியிருப்பேன்.
இது முற்றிலும் புதிய தொழில்நுட்பம்.



அதுபோல, தயவு செய்து இந்தப் பிரதியை வாசிக்க வேண்டாம் என்ற கவிதையும் அப்படித்தான்.



தலைப்பு என்பதும் கவிதையின் ஒரு பகுதியாகவே இருக்க வேண்டும். அதைத்தவிர முக்கியமான வேறு வேலைகள் இருக்கக்கூடாது.

இரவை அணுகுதல்


றியாஸ் குரானா
Non Linear Poem
பனி இறங்கிவர தாமதிக்கின்றன

சட்டென்று
அந்தத் தெருவில் தோன்றுகிறேன்

கிணற்றிலிருந்து எட்டிப் பார்க்க
நிலா முயற்சிக்கிறது

பாடலொன்றை
தெருவெங்கும் துரத்துகிறது காற்று

முன்பின் அறியாத ஒருவனைப்போல்
பரபரப்பாக கவனிக்கப்படுகிறேன்

நாய்க்கூட்டம் நீந்தி வந்து
வேலி இடுக்குகளில் புதைகின்றன

நினைவு தப்பி
கலவரங்கள் மறந்துவிடுகின்றன

என்னைக் கடந்து சென்ற மழை
நான் நின்ற தெருமுனையை அடைந்து
திரும்பி வந்து கொண்டிருக்கிறது

மிக லாவகமாக அடைத்த பின்னும்
கற்பனைக்கு வெளியில் நாயின் வால் அசைகிறது

குறுக்கிடும் சிலரின் கண்கள்
தூக்கிச் சென்ற என்னை
மரத்தில் தொங்கவிடுகின்றன

இழுத்துச் சென்றவர்களின் கைதவறி
கீழே விழுந்து விடுகிறது இரவு

ரகசியமாக பாதுகாத்த பொருட்களைக் கூட
தொலைத்துவிட்டு அவனோடு தேடுவது நல்லது

கற்பனையின் பல தருணங்கள் குழம்பி
திக்கற்ற காட்டில் விடப்படுகிறேன்

படிக்கட்டின் பின்புறம் மறைவாக
கோழைத்தனமான காலடிகள்
ஏறிக்கொண்டிருக்கின்றன

சில நிமிட இரவிலிருந்து
பலவந்தமாக வெளியேற்றப்படுகிறேன்


ஒரேயொரு இரவில் நடந்து விடுவதில்லை




இது முற்றிலும், புதிதான ஒன்று. வழமையாக கவிதைகளை அனுகுவதைப்போன்று இதை அனுக முடியாது. வாசித்துப் பாருங்கள். ஆமமாம் நிர்மல் தோழர்.
எப்படியான பார்வையாளரையும் துரத்திவிடாமல் அனுசரிக்க முடிகிற பிரதியாக இருக்கிறதா எனப்பார்ப்பதையே விரும்புகிறேன். அது கவிதையா இல்லையா என்பதை முதன்மைப்படுத்த தேவையில்லை.


space reversal மாதிரி இருக்கு, வாசிக்கும் போது தரும் உணர்வு இதுவரை ஏற்ப்படாத ஒன்றாக இருக்கிறது.


கற்பனைக்கு வெளியில் நாயின் வால் அசைகிறது


ஆமா, எவ்வளவுதான் அடைத்தாலும் கற்பனைக்கு வெளியே இருக்கிறது என்பது ஒன்று. நாயின் வால் இப்படித்தான் என்பதுபோல் ஒரு தோற்றம் என அது தருகிறது. நாயைத் தவிர வேறு எதன் வாலாக கருதினாலும் இப்படிக் கவர்ச்சி அதற்கு வந்திருக்காது.


புளிய மரத்தில் காகங்கள் வந்து நிற்கின்றன.
மகன் கல்லெறிந்து அவைகளை துரத்த முயற்சிக்கிறான்.
காகங்கள் உசும்பாது அப்படியே நிற்க, மரத்திலிருந்து அனைத்து இலைகளும் பறந்து சென்று சற்றுத் தொலைவிலிருந்து மரத்தில் அமர்ந்தன. ஏமாற்றத்தோடு திரும்பி வந்தான்.


எனக்கு புரியவில்லை. ஆனால் அதன் காட்சி அமைப்பை ஒரளவுக்கு என்னால் கொண்டுவர முடிகிறது.


அவை துண்டுத் துண்டு சம்பவங்கள். எந்தத் தொடர்புமற்றது.



ஒன்றின் பின் ஒன்றாக இருப்பதைத் தவிர வேறு எந்த உறவும் அவைகளுக்கு இல்லை.





ஆனால், இவை ஒரு இரவில் நடந்துவிடுவதில்லை என்ற அறிவிப்பு மாத்திரமே அனைத்தையும் இணைக்கிறது.


அதாவது பல இரவுகளில் நடந்தவற்றை இங்கு தொகுத்து வைத்திருப்பதாக அறிவிக்கிறது.




இதையும் படிச்சுப்பாருங்கள்.


பிம்பங்களோடு ஒரு விடுமுறை நாள்

றியாஸ் குரானா

விடுமுறை நாள் என்பதால்
பிந்தி எழும்பிய நான்
கண்ணாடியின் முன் நின்று பார்க்கிறேன்.
நிலைக் கண்ணாடி
குளமாக மாறியிருந்தது
விரல்களால் தொட்டதும்
கண்ணாடி சுழித்துத் தளம்பியது
விரல்களில் படிந்த ஈரம்
இன்னும் காய்ந்துவிடவில்லை

நிலைக்குத்தாக குளமிருந்தும்
சிறுதுளிகூட வழியவில்லை
மனைவியை அழைத்து
இந்த அதிசயத்தைக் காட்டினேன்

அவள் பார்த்துக் கொண்டிருக்கும்போது
நடந்தவற்றில் சில

அவளாடையிலிருந்த புற்கள்
குளக்கரையில் முளைத்து
பூத்துக் குலுங்கின
கொக்குகள் பறந்துபோய்
கண்ணாடியினுள் அமர்ந்து
மீன்களைத் தேடத்தொடங்கின
ஆடையில் அச்சிடப்பட்டிருந்த
மீன்களெல்லாம் ஒரு துள்ளில்
குளத்தில் வீழ்ந்து நீந்தின
வேலைப்பாடுகள் எல்லாம் அழிந்த
கறுப்பு நிற ஆடையுடன் நின்றவள்
என்னை உரத்துக் கூப்பிட்டாள்

திரும்பிப் பார்க்கிறேன்
தனது பிம்பத்தை அனுப்பி
குளத்தில் குளித்துக்கொண்டிருக்கிறான்
எனது அன்பு மகன்






பிம்பம் - இங்கு வெரும் reflection என பொருள் கொள்ளக் கூடாது என நினைக்கிறேன். சரியா றியாஸ்.


ஆமாம்.



. கண்ணாடி பிரதிபலிக்கும் தனது வேலையை செய்யவில்லை. விடுமுறை அதற்கும்தான். அது தான் விரும்பிய வேலைகளைச் செய்கிறது.
இதுதான் இக்கவிதையின் அற்புதம்.
நானே பலமுறை ரசித்திருக்கிறேன். இதை அறிந்த பின் மீண்டும் படித்துப்பாருங்கள். ...

ற்யாஸ் இது ஒரு வித தவ நிலையில் எழுதியது போல இருக்கிறது. மீண்டும் மீண்டும். The Now, இந்த கணம் பற்றீய விழிப்புணர்வை தருவதாக இருக்கிறது. இதுவே ஜென், வேதம் இலக்கியம் இறைவன் ஆன்மிகம் என எல்லாவற்றயும் இனைப்பதாகவும் இருக்கிறது.
இது உங்களின் திட்டமிடலா. அல்லது விளைவா, அல்லது உங்களின் அனுபவமா?


கற்பனைச் செயல். அதாவது சிந்தனை.
கற்பனையை மேலதிகச் சிந்தனை என்றே நான் அழைப்பேன்.



சூப்பர். இந்த முறை சிந்தனை தவம் போலதான். அதே முறையான சிந்தனையை உங்கள் வாசகனும் அடைவான்.


வாசகனைக் கைவிட்டுவிடாது என்றே நம்புகிறேன். கவிதையின் வெளி வடிவமும், அதில் இருக்கும் மாயமான கவர்ச்சியும் யாரையும் இலகுவில் கவரக்கூடியதுதான். ஆழமான வாசகர்களையும் நெருங்கும் ஆற்றல் உண்டு என்றே நம்புகிறேன்.


இலக்கியம் எப்போதும், துல்லியமான உண்மைகளை வெளிப்படுத்த விரும்புவதில்லை. அவைகளுடன் புனைவுகளையும் இணைத்து தர விரும்புகிறது. ஆனால், அரசியல் நிலவரம் என்பது உண்மைகளை வெளியே கொண்டுவருவதினுாடாக கடக்கப்பட வேண்டிய ஒன்று. ஆகவே, அதற்கு இலக்கியம் எப்போதும் பிரயோசனப்படாது.


இன்னும் உங்கள் கவிதை தொகுதிகளை வாசித்துவிட்டு அதன் அனுபவத்தை பதிவு செய்ய வேண்டும். உங்கள் புத்தகத்தின் முகவுரையில் அந்த scene setting/ land scaping/ The Now பற்றிய சிலாகித்து எழுதியிருக்கலாம்.


இல்லை, அதிகமான விபரிப்புகள் கவிதையை புரிந்துகொள்ளும் தடையை உருவாக்கிவிடும். நாம் காட்டும் வழிகளையெ பயன்படுத்தி அதற்குள் மாத்திரமே நின்று கவிதையை புரிந்துகொள்ள வேண்டிவரலாம்...


Wednesday, November 21, 2012

பிணத்தின் மீது சிறு நீர் கழிக்கும் ஹிந்து நாளிதழ்- நண்பர் நிர்மல் பதிலடி


பால்தாக்கரே மரணத்தை பலர் எதிர் கொண்ட விதம் ஆச்சர்யம் அளித்தது.. சிலர் அவரை தெய்வமாக போற்றினார்கள். சிலரோ தூற்றினார்கள். இந்த நிலையில், தன் வாழ் நாள் முழுதும் தாக்கரேவை திட்டி வரும் நண்பர் நிர்மலில் கருத்து , வித்தியாசமாக இருந்தது.

பார்ப்பனீயத்தை உயர்த்தி பிடிக்கும் ஹிந்துவில், தாக்கரேயை விமர்சித்து ஒரு கட்டுரை வந்து இருந்தது, அதற்கு நண்பர் நிர்மல் அளித்த பதில்..



 
   ஆகிறத பாருங்கலே - நிர்மல் 
.

இந்த கட்டுரையும் சரி அது வெளியிட்ட நேரமும் சரி - ஒரு அழுகலான மனம் 

உடையவனின் படைப்பாகவே எனக்கு தோனுது. எனக்கு பிடிக்கவே 

பிடிக்காத தாக்கரேவை பிடிக்க வைத்துவிட்டது இந்த அதி புத்திசாலியின் 

கட்டுரை. தர்க்கம் சில நேரங்களில் ஒய்வெடுக்கணும் .

அப்படிப்பட்ட தருணம்தான் இது, ஊரில கூட சொல்லுவாங்க ஆகிறத 

பாருங்கப்பான்னு .அதுதான் சரி,


இக் கட்டுரை உரைக்கும் எல்லா அதி புத்திச்சாலித்தனத்துக்கும், 

புத்தி ஜிவித்தன்மைக்கும் இந்த இடம் / நேரம் சரியானாதாக இல்லை.  



மேலும் அது ஒன்றும் யாருக்கும் தெரியாத ரகசியமும் இல்லை,  


சோம்பேறியுமா, கூத்தும், வெட்டி பந்தாவுமாக வாழ்ந்து வந்த கூட்டத்திற்க்கு 

ஒரு ஆள் தன்  நம்பிக்கை ஊட்டியிருக்கிறார் அதுதான் 25 லட்சம் பேர் 

எண்ணிக்கையை காட்டுது. 



அதிகம் படித்தும் அதிக தர்க ஞானங்களை வளர்ந்த நாம் சில 

நேரங்களில் ஒதுங்கிருப்பது நலமென படுகிறது.

பிணத்தின் மேல் ஒன்னுக்கு பேய்துள்ளது இந்த 


கட்டுரை. இப்படிப்பட்ட அதி புத்திசாலிகள்தான் நமக்கு ஓன்றுபட்ட பாரத 

வகுப்பு எடுக்கிறார்கள்.  




Someone told Violence Of Puritans is more harsher than of 
Pornography. - The Violence in this article is immense - ought to be rejected on first sight

Monday, November 19, 2012

வாய்ப்பாட்டு கவிதையும் , நிஜ கவிதையும் - பார்த்ததில் பிடித்தது..

சொந்த பத்திரிக்கை இருக்கும் ஒரே காரணத்தால் , சிலர் கவிஞராக தம்மை அடையாளப்படுத்திக் கொள்ள முடிகிறது.

1 X 2 =2

2X2= 4

3x 2 = 6


என்று வாய்ப்பாடு எழுதுவதுபோல சிலர் எழுதிவிட்டு , இதுதான் கவிதை என சாதிக்கிறார்கள்.

உதாரணமாக , காதலி உங்களை பிரிந்து விட்டாள் என வைத்து கொள்ளுங்கள். ஒரு பேப்பரை கிழித்து எறிவது போல , வெகு சாதாரணமாக , கவனிப்பை ஈர்க்காமல் அந்த பிரிவு நடந்து விட்டது என தோன்றுகிறது..

அது போதும்,. வாய்ப்பாடு கவிதை தயார் . பேப்பர் கிழித்து எரிவது போல என்பதற்கு நிகரான உவமைகளை அடுக்கி கொண்டே போனால் அது கவிதை என சொல்லிக்கொள்கிறார்கள்.



பாருங்கள்..

ஊறுகாயை தொட்டுக்கொள்வது போல...


தண்ணி அடிக்கையில் ஊறுகாயை தொட்டுக் கொள்வது போல 
பெண்கள் மைக்ரோ செகண்டில் சைட் அடிப்பது போல
பேனாவில் மை ஊற்றுவது போல
ஒரு பென்சிலைச் சீவுவதுபோல 
 நாற்காலியில் இருந்து எழுவது போல
மேடையில் இருப்பவர்கள் ,  நாசூக்காக கொட்டாவி விடுவது போல
ஒரு கண்ணாடி டம்ளரை மேஜையில் நகர்த்துவதுபோல

புத்தகத்தை மூடி வைப்பது போல
ஒரு புத்தகத்தின் 167ஆம் பக்க ஓரத்தை படிப்பதுபோல

ஷேவ் முடிந்ததும் மீசையை ட்ரிம் செய்து கொள்வது போல
ஒரு பழைய பயணச் சீட்டைக் கசக்கி எறிவதுபோல

எரி நட்சத்திரம் தோன்றி மறைவது போல
ஒரு தீக்குச்சியை வெறுமனே கொளுத்துவதுபோல

விளக்கை ஏற்றுவது போல 
ஒரு அலைவரிசையிலிருந்து இன்னொரு அலைவிரிசைக்கு மாறுவதுபோல

கம்ப்யூட்டரை ஷட் டவுன் செய்வதைபோல 

நிகழ்கிறது
உன் நீங்குதல்

தடையமில்லாமல்
யாருடைய தூக்கமும் கலைந்துவிடாமல்
நீ எப்போதும் இங்கு இருந்திருக்கவே இல்லை
என்பது போல


இதில் கம்யூட்டர் ஷட் டவுன் என்பது படிமமாம்.. இப்படி சொல்லி , அப்பாவிகளை நம்ப வைக்கிறார்கள்.
உரை  நடையை கவிதை என்று சொல்லி ஏமாற்றுகிறார்கள்.

அதே நேரத்தில் , சில நாவல்களில் உன்னதமான கவிதைகளில் காண முடியும். அந்த வகையில் , எனக்கு மிக மிக பிடித்த கவிதை சாரு நிவேதிதாவின் சீரோ டிகிரியில் இடம் பெற்றுள்ளது..


 நண்பர் நிர்மல் , இதை ஒளி ஓவியமாக யூ ட்யூபில் அப்லோட் செய்து இருக்கிறார். கவிதையின் சாரத்தை முழுக்க முழுக்க உள்வாங்கி , அட்டகாசமாக செய்து இருக்கிறார்,..

பெண்மையை போற்றும் இந்த கவிதை , உங்கள் பார்வைக்கு.






Saturday, January 22, 2011

சாரு நிவேதிதா எந்த இயக்கத்தை சேர்ந்தவர் ? -- Mrinzo நிர்மல்






மனிதனின் வேதனையை , வலியை சாருபோல எழுதியவர்கள் யாரும் இல்லை..
எனவேதான் ஆரம்பகாலத்தில் அவர் இடது சாரி சிந்தனையாளர் என நினைத்தேன்…
பிறகுதான் அவர் எந்த வட்டத்திலும் சிக்காத சுதந்திர எழுத்தாளர் என புரிந்தது…
இந்துத்துவாவை எதிர்ப்பார்..திடீரென ஆன்மிகம் எழுதுவார்…
பெரியாரை போற்றுவார்..

Monday, January 17, 2011

செக்ஸை தீர்மானிப்பது எது??


 நண்பர் நிர்மல் தனக்கே உரிய பாணியில் வழங்கும் இந்த அறிவியல் கட்டுரையை படித்து பாருங்கள்..

___________________________________________________________________

ஒய் குரோமோசோம்- மனித இடப்பெயர்ச்சி வரலாற்றின் கதா நாயகன் - -Mrinzo Nirmal

மனிதர்களின் chromosome எண்ணிக்கை 23 ஜோடி என்று தெரியும், இந்த 23 ஜோடிகளில் ஒரு ஜோடிதான் நமது செக்ஸ்   அதாவது நாம் ஆண் / பெண் என்று தீர்மானிக்கிறது என்பதும் தெரியும்.

 மேலும் ஆண்களின் செக்ஸ் chromosome ஜோடி XY என்றும் பெண்களின் ஜோடி XX என்று குறிபிடுவார்கள். இந்த ஆண்களின் செக்ஸ் chromosome ஜோடியிலுள்ள Y என்ற chromosome ஒரு சிறப்பு தன்மை உள்ளது என்கிறார்கள். 
எப்படியென்றால் எனது Y chromosome  நான் எனது அப்பாவிடமிருந்து பெற்றேன்.
அவர் அவரது அப்பாவிடமிருந்து என     தலைமுறை தலைமுறையாக மாறாமல் அந்த Y-Chromosome வந்துகொண்டிருகிறதாம். சுருக்கமாக சொல்லப்போனால் நான், எனது சகோதரன், எனது அப்பா , தாதா அவரது அப்பா,  பெரியப்பா, சித்தப்பா அவரது ஆண் மக்கள் எல்லோருக்கும் ஒரே Y-Chromosome தான் இருக்கும், ஏன் வாசித்துகொண்டிருக்கும் உங்களுக்கும் எனக்கும் கூட ஒரே Y -Chrmosome இருக்கலாம். இப்படி ஒரே மாதிரியான Y-Chromosme உள்ளவர்கள் தற்போதோ அல்லது சில / பல தலைமுறைகளுக்கு முன்பு ஒரு ஆணிடமிருந்து பெற்றிருப்பார்கள். இப்படி தலைமுறை தலைமுறையாய் வந்துகொண்டிருக்கும் இந்த Y-Chromosome  சில சமையத்தில் சிறு மாறுதல் உண்டாகுமாம் இந்த மாறுதல் சில நூறாண்டுகளுக்கு ஒருமுறை நடக்கலாம் இந்த மாறுதலை Mutation என்று குறிப்பிடுகிறார்கள், இந்த மாறுதல் ஒருமுறை நடந்தால் நமது Y-Chromosome அந்த மாற்றங்களோடுதான் தலைமுறை தலைமுறையாக வந்துகொண்டிருக்கும்.
 
      இந்த மாற்றங்களோடு வந்துகொண்டிருக்கும் Y-Chromosome தான் நமது ஹீரோ, எழுதபடாத மனித இடப்பெயர்ச்சி  வரலாற்றின் கதாநாயகன், இந்த y-Chromosome மாற்றத்தை ஆராய்வதுமுலம் நமது பூர்விகம் எது நமக்கும் உலகில் உள்ள மற்ற மக்களுக்கும் என்ன சம்பந்தம் என்பதை அறியலாம. அதன்படி பார்த்ததில் தற்போது வாழும் எல்லா மனிதர்களும் Africa கண்டத்திலிருந்துதான் இடப்பெயர்ச்சி ஆனார்களாம், அவர்கள் ஆப்ரிக்காவின் கிழக்கு கடற்கரை ஓரமாக நடந்து மத்தியாசியவிற்கு வந்து பின்பு ஐரோப்பா, ரஷ்யா, அலாஸ்கா அதன்   வழியாக அமெரிக்க கண்டம் சென்றார்களாம், மேலும் மத்திய ஆசியாவிலிருந்து இந்தியா கடற்கரை வழியாக ஆஸ்திரேலியா சென்றார்கள் என்கிறார்கள்  இந்த ஆராச்சியாளர்கள். see the map for reference
 
எப்படி மனித இரத்ததை வகைபடித்தினர்களோ அதுபோல இந்த y-Chromosome  வகைபடுத்திவிட்டார்கள். 
உங்களது y-Chromosme  என்ன என்பதை தெரிந்துகொண்டால் உங்களை போல y-Chromosme  உள்ளவர்கள் எங்கிருக்கிறார்கள் எனபது கண்டுபிடித்துவிடலாம், உங்களது mutation marker வைத்து உங்களின் இடப்பெயர்ச்சி  வரலாற்றை எழுதிவிடலாம்.
 
-Mrinzo Nirmal

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா