Tuesday, August 16, 2011

தமிழர்களுக்கு பிடிக்காத டாப் ஃபைவ் வார்த்தைகள்

மற்ற மொழியினரை விட , அன்றாட வாழ்வில் அதிக வார்த்தைகள் பயன்படுத்துவது தமிழர்கள்தான்.. காரணம் மற்ற மொழியினர் அவரவர் தாய் மொழியில் பேசுவார்கள்.. நம்மவர்கள் தமிழ் , ஆங்கிலம் என இரண்டிலும் -அரைகுறையிலாவது -பேசுவார்கள்.

இப்படி பேசினாலும் இவர்கள் ஐந்து வார்த்தைகளை பயன் படுத்துவதே இல்லை என்பது வியப்பூட்டும் ஒன்று.. இதை பலர் உற்று கவனித்து இருக்க வாய்ப்பில்லை..எனவே பொது நலன் கருதி , தமிழர்களுக்கு பிடிக்காத ஐந்து வார்த்தைகளை தொகுத்து தருவதில் பிச்சைக்காரன் டாட் பிலாக்ஸ்பாட் டாட் காம் பெருமைப்படுகிறது....


1 ஆச்சர்யப்படுத்திய வார்த்தை

சில ஆண்டுகளுக்கு , என் வாழ்வில் முதன் முதலாக  ஒரு வெளினாட்டு தூது குழுவினருடன் அலுவலக பணிக்காக ஒரு விருந்தில் கலந்து கொண்டேன். அப்போதுதான் இப்படி ஒரு வார்த்தை இருப்பதே எனக்கு தெரிய வந்தது..

ஆனால் ஏன் இந்த வார்த்தையை பயன் படுத்துகிறார்கள்.. இதன் அர்த்தம் என சரியாக புரியவில்லை.. பிறகு ஒருவரிடன் கேட்டு அர்த்தம் தெரிந்து கொண்டேன்...

sorry என்றால் வருந்துகிறேன் என அர்த்தமாம்.. அவர்கள் எதற்கெடுத்தாலும் வருத்தப்ப்டுவது புதுமையாக இருந்தது...  தெரியாமல் மேலே உரசிவிட்டால்., பேச்சின் போது இடையூறு ஏற்படும் நிலை உருவாக்கினால், சொன்ன நேரத்தை விட இரண்டு நிமிடங்கள் தாமதமாக வந்தால் என அவர்கள் வருத்தம் தெரிவிப்பது , ஆச்சரியமாக இருந்தது.. நம் ஊரில் , கூட்ட்டதில் நடக்கும்போது யார் மீதாவது மோதினால் , எருமை மாடு போல செல்வோமே தவிர வருதம் தெரிவிக்க மாட்டோம்...

நாம் பயன்படுத்தாத வார்த்தை - சாரி, வருந்துகிறேன்

டிப்ஸ் - இந்த வார்த்தையை அவ்வபோது பயன்படுத்தி பாருங்கள்...  மற்றவர்களை ஆச்சர்யப்படுத்தலாம்..

எசாரிக்கை - அதிகமாக இதை பயன்படுத்தாதீர்கள்.. உங்களை பலவீனமானவராக நினைத்துக்கொள்வார்கள்

2 . நன்றி மறந்த தமிழன்
 இந்த வார்த்தையை , சென்ற தலை முறையினர் பயன்படுதுவதில்லை.. இப்போது பரவாயில்லை... இளம் தலைமுறையினர் பயன்படுத்துகிறார்கள்.. தேங்க்ஸ் - நன்றி என்பதே அந்த வார்த்தை...  முன் பின் தெரியாதவருக்கு , ஒரு சிறிய உதவி செய்திருப்பீர்கள்... அவர் அதை அலட்சியமாக ஏற்றுக்கொண்டு நகர்ந்து செல்வார்... நன்றி சொல்ல மாட்டார்..

பெரிய உதவிக்கும் நன்றி கிடைக்காது..  ஆனால் இளைஞர்கள் நன்றி சொல்லாவிட்டாலும் தேங்க்ஸ் சொல்கிறார்கள்... நல்லது...

டிப்ஸ் - இந்த வார்த்தையை பயன்படுத்தினால் , உங்களுக்கு உதவியருக்கு மகிழ்ச்சி ஏற்படும். அடுத்து உதவி கேட்டால் செய்ய வாய்ப்பு இருக்கிறது

எச்சரிக்கை - டிக்கட் தரும் கண்டக்டருக்கெல்லாம் தேங்க்ஸ் சொல்லாதீர்கள்... அவர் அதிர்ச்சி அடையக் கூடும்.. நாம் இன்னும் அந்த அளவுக்கு வளரவில்லை

3 வாழ்க ஆங்கிலம்

இந்த வார்த்தையும் சென்ற தலைமுறையில் புழக்கத்தில் இல்லை... ஆங்கில வளர்ச்சியால் பயன்பாட்டுக்கு வந்த வார்த்தை இது..

யாரிடமாவது உதவி கேட்கும்போது, அல்லது ஒன்றை செய்ய சொல்லும்போது, ப்ளீஸ் என்று ஆரம்பித்து சொல்வது இப்போது நடைமுறைக்கு வந்து இருக்கிறது,,,,  ஆனால் தயவு செய்து என்ற வார்த்தை ஒழிந்தே போய் விட்டது...

டிப்ஸ் - அலுவலக பயன்பாட்டில் கூட , சென்ற தலைமுரையினர் , ப்ளீஸ் என்பதை பயன்படுத்துவதில்லை. இது தவறு...

எச்சரிக்கை - அப்படிப்பட்டவர்களிடன் இந்த வார்த்தையை பயன்படுத்தீர்கள்..எதிர் விளைவே ஏற்படும்...


4 எல்லாம் தெரிந்த ஏகாம்பரம்

    இது மிகவும் முக்கியமான வார்த்தை... அலுவலகம், குடும்பம், சாலையில் வழி கேட்பது போன்ற பல சந்தர்ப்பங்களில் இந்த வார்த்தை பயன்பாடு இல்லாமையால் பெரும் தொல்லைகள் ஏற்படும்... ஒரு விஷயம் தெரியாது என நம் மக்கள் சொல்லவே மாட்டார்கள்...

            தெரியாத ஒன்றைக்கூட தெரியும் என்பது போல காட்டிக்கொள்ள விரும்புவதால் ஏற்படும் பிரச்சினைகள் பல... ஒருவரிடம் வழி கேட்கிறீர்கள்.. அவருக்கு தெரியாவிட்டாலும், ஏதோ ஒரு பதிலை சொல்லி உங்களை அனுப்புவார்.. ஆனால் தெரியாது என மட்டும் சொல்ல மாட்டார்..

சில அலுவலகங்களில் ஒரு விண்ணப்பத்துக்காக  சென்று இருப்பீர்கள்.. சம்பந்தப்ப்ட்டவர் தனக்கு அது தெரியாது என சொல்ல மாட்டார்.. ஆனல் தன் அறியாமையை மறைக்கும் பொருட்டு , உங்கள் விண்ணப்பத்தில் தவறு இருக்கிறது என்பது போல எதையாவது பேசி அனுப்புவார்..

டிப்ஸ்- ஒருவருக்கு ஒன்று தெரியாது என்பதை அவர் பேசுவதை வைத்து முடிவெடுத்து, சீக்கிரம் அவரிடம் இருந்து தப்பிக்க பாருங்கள்..

எச்சரிக்கை- உண்மையிலேயே விஷயம் தெரிந்தவர்களை சந்தேகப்பட்டு விடாதீர்கள்

5 முடியாதது எதுவும் இல்லை..

தன்னம்பிக்கை நூல்களை படித்து படித்து, எல்லாம் தன்னால் முடியும் என நினைக்க ஆரம்பித்து விட்டது தமிழகம்.. தன்னால் செய்ய முடியாத வேலையை ஏற்று கொள்வார்கள் சிலர்...

உதாரணமாக ஒரு சட்டை தைக்க நினைக்கிறீர்கள்.. இந்த தேதிக்குள் தர  முடியாது என சொல்ல மாட்டார் டெய்லர்.. முடியும் என சொல்லி விடுவார் ... ஆனால் சொன்ன நேரத்தில் தராமல் இழுத்தடிப்பார்,,,  அவர் முடியாது என சொல்லி இருந்தால் நாம் வேறு யாரிடமாவது வேலையை கொடுத்து இருக்கலாம்

டிப்ஸ் - பத்து நிமிடம் என்பது ஆபத்தான வார்த்தை... பத்து நிமிடத்தில் முடித்து விடுகிறேன்.. பத்து நிமிடத்தில் செய்து விடுகிறேன் என யாராவது சொன்னால், அந்த வேலை முடியாத ஒன்று என்ப்தை உணர்ந்து கொள்ளுங்கள்

எச்சரிக்கை - இந்த விஷயத்தில் யாரும் திட்டமிட்டு தவறு செய்வதில்லை... தமிழர்களின் டைம் கான்ஷியஸ் குறைபாடே இது.. எனவே தேவையில்லாமல் டென்ஷன் ஆகாதீர்கள்

4 comments:

 1. அப்பாடா இங்கு இலங்கையில் பரவாயில்லை போல நீங்கள் சொன்ன வார்த்தைகளை நாம் அனேகமாகவே பயன்படுத்துவோம். நீங்கள் எழுதியிருப்பதுதான் ஆச்சரியமாக இருக்கிறது.

  ReplyDelete
 2. தமிழர்களின் ஆங்கில மோகத்தை தமிழ் படிக்காத குழந்தைகளை கடுமையாக சாடியிருப்பார் சாரு(அதிகாரம் அமைதி சுதந்திரம்)

  ReplyDelete
 3. மொதல்ல எல்லா பெற்றோர்களும் தங்கள் பிள்ளைகள் தமிழை கட்டாயம்காக ஒரு பாடமாக படிக்க வைக்க வேண்டும்!!

  ReplyDelete
 4. நன்றி வணக்கம்
  இதை சொல்ல வைத்தாலே போதும்

  அண்ணா பேருந்து நிலையம் ,அண்ணா பூங்கா , பெரியார் வளைவு , அண்ணா நகர் இப்படி பல வார்த்தைகள் பேச்சு வழக்கில் உள்ளன

  ReplyDelete

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா