Friday, December 31, 2010

சந்தல் படுகொலையும் ஜீரோ டிகிரி சிந்தனையும் …

எளிதான வாசிப்பில் ஆரம்பித்து சாரு நிவேதிதா போன்ற இலக்கிய வாசிப்புக்கு வந்து சேர்பவர்கள் பலர்… ஆரம்பத்திலேயே சாரு போன்றவர்களிடம் இருந்து வாசிப்பை ஆரம்பிப்பவர்கள் சிலர்..
அந்த சிலரில் ஒருவர்தான் நண்பர் நிர்மல்..
சந்தல் போராட்டம் (The Santhal revolt 1855 )குறித்தும் படுகொலை குறித்தும் சென்ற பதிவில் எழுதினார்…
அதன் தொடர்ச்சியாக , ஜீரோ டிகிரி நாவல் படித்த பாதிப்பில் , அந்த பிரச்சினையை அலசுகிறார் அவர் , இந்த பதிவில்..
ஒரு நாவல் இந்த அளவுக்கு பாதிப்பை ஏற்படுத்த முடியும் என்பது ஆச்சர்யமளிக்கும் விஷயம் ..
இனி வருவது அவர் கருத்து

Thursday, December 30, 2010

கர்நாடக இசைமீது சாதாரண மனிதனின் கோபம்

 

லகின் மற்ற இசைகளுக்கும் கர்னாடக இசைக்கும் ஓர் அடிப்படை வேறுபாடு உண்டு.

இந்த இசை மட்டுமே ஒரு குறிப்பிட்ட மக்களுக்கான இசை என்ற முத்திரையை சரியாகவோ தவறாகவோ பெற்று விட்டது…

 

இது குறித்து நண்பர் Mrinzo நிர்மலின் பார்வையை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்..

 

**********************************************************************

 

ர்நாடக இசையின் மாதம் இது, நம்மால இந்த இசையை ரசிக்க முடியவில்லையே என்ற ஆதங்கம் எழுகிறது.  நம்ம ஊர் சாஸ்த்ரிய இசை என்று புகழ்கிறோம்.அது தமிழில் இல்லை என்று வருந்துகிறோம்.

நம்ம ஊர்லதான் இருக்கு என்றாலும் நாம் அந்நியப்பட்டுகிடக்கிறோம். ஓர் இசையை இப்படியா சமுகத்தின் பெருவாரியான மக்களிடம் இருந்து அந்நியபடுத்துவது.

இதெல்லாம் உங்களோட Problem , அந்த இசையின் problem இல்லை என்று சொல்லுவாங்க.

சரி எங்களுக்கு ரசனை இல்லைதான், அதை ரசிக்கிறவர்கள் எதை ரசிக்கிறார்கள்? யார் ரசிக்கிறார்கள்? இப்படித்தான் தொன்று தொட்டு இந்த இசை அந்நியப்பட்டு கிடந்ததா?

.

எனக்கு கோபமெல்லாம் அது தமிழில் பாடவில்லை என்றோ அது ஒரு சிறு குழுவின் கையில் இருக்கிறதோ இல்லை.

எனக்கு கோபமெல்லாம் அது ஏன் பக்தியை தவிர எந்த பாடலுக்கும் அங்கு இடமில்லை?

உலகில் உள்ள எல்லா சாஸ்திரிய சங்கீதம் போலத்தானே இதுவும்.

கடவுளுக்கு இந்த இசையை மட்டும்தான் பிடிக்கும்போல...

பக்தியை பிரித்து இந்த இசையை பார்க்கமுடியவில்லையே?

சரி இந்த இசை ஒரு மேட்டுகுடி இசையென்று வைத்து கொள்ளவோம்,

நீங்க தலித்தை, தீண்டாமையை, தொழிலாளியை பற்றி பாடவேண்டாங்க

அதுக்கு நாட்டுப்புற பாட்டு இருக்கு,  

atleast உங்க சகோதரி பற்றி, பெறந்த குழதையை பற்றி, ஒரு நட்பை பற்றி, சாப்பாடை,உங்க சோகத்தை, உங்க காதல் அதன் வெற்றி , தோல்வியை பற்றி, மனிதனை பற்றி இப்படி எவள்ளவோ பற்றி பாடலாம்ல.

இந்த ஹிந்துஸ்தானி இசையை பாருங்க..

பக்திக்கு பஜன், காதலுக்கு கவிதைக்கும் சோகத்துக்கும் கசல், கொண்டாட்டத்துக்கு கவாலி என்று எப்படி பல கோணங்கனில் பரந்து கிடக்குது.

ம்ம்,ஒரு வேளை இந்த இசை கடவுளின் காதல், கடவுளின் செயல் அவரது கருணை, அன்பு மேலும் நூறாண்டுக்கு முன்பு நடந்தவற்றை பற்றி மட்டும்தான் பாடமுடியுமோ?

பக்தி இருக்கவேண்டியதுதான் ... அதற்கு இப்படியா? 100 ஆண்டு கழித்து ஓர் ஆராய்ச்சியாளன் இந்த இசையை வைத்து நமது சமுகத்தை ஆராய்ந்து எழுதினால் என்ன எழுதுவான்?

- Mrinzo Nirmal

-

Wednesday, December 29, 2010

மனதை கலங்க வைக்கும் கொடூரமும், மறைக்கப்பட்ட வரலாறும்

 நாம் வரலாறு என படிப்பது சில சமயம் கட்டுக்கதைகளாக இருக்க கூடும். உண்மையான வரலாறு கட்டுக்கதையாக தோன்றக்கூடும்.

மறைக்கப்பட்ட, மறக்கப்பட்ட வரலாறுகள் எத்தனையோ உண்டு.

கொடூரங்கள், ஆக்கிரமிப்புகள், வதைகள் என இவற்றின் பேட்டர்ன் ஒரே மாதிரி இருக்கும் என்பதைத்தான் சாரு நிவேதிதாவின் தேகம், சீரோ டிகிரி போன்றவை சொல்கின்றன.

 நம் மண்ணில் நடந்த எத்தனையோ சம்பவங்கள் நமக்கு தெரிவதில்லை..
அந்த வகையில், நம்மிடம் இருந்து மறைக்கப்பட்ட , இதயத்தை கலங்க வைக்கும் , வரலாற்று தகவலை, நண்பர்  நிர்மல் நம்முடன் பகிர்ந்து கொள்கிறார்.

********************************************************************


Tuesday, December 28, 2010

exclusive report: சாருவுக்கு ”இன்சல்டிங்” மெசேஜ் அனுப்பிய மனுஷ்யபுத்திரன் - கலகலப்பான புத்தக வெளியீட்டு விழா தொகுப்பு

 சாரு என்றால் எல்லோரையும் திட்டுபவர் என்ற பெயர் பரவியிருக்கிறது..உண்மையில் நான் அப்படிப்பட்டவன் அல்ல.  என சாரு கூறினார்.

இதற்கு முன்பும் , இதற்கு பிறகும் என்ற கவிதை தொகுப்பு நூல் ( எழுதியவர் : கவிஞர் மனுஷ்யபுத்திரன் ) வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது...

அந்த கவிதைகளை பற்றி பிறகு விரிவாக எழுதுவேன்..

இப்போது விழா பற்றிய சுருக்கமான தொகுப்பு , உங்கள் பார்வைக்கு


சுகம் கொடுக்குற பொண்ணுக்கும் மனசு இருக்கு...- -Mrinzo Nirmal

ஜில்லா விட்டு ஜில்லா வந்த கதைய கேளுங்க, சுகம்கொடுக்குற பொண்ணுக்கு மனசு இருக்கு பாருங்க.

 ஈசன் படத்தில் ஜேம்ஸ் வசந்தன் இசையில்   தஞ்சை செல்வி படிய பாட்டை கேட்டீர்களா.?


 எனக்கு தெரிஞ்சி "சுகம் குடுக்குற பொண்ணு" என முதல்  முறையா ஒரு பொண்ணு சொலற மாதிரி நம்ம தமிழ் படத்தில் வந்தது இதுதான் முதல் முறை என்று  நினைகேறேன். ஒரு பொண்ணோட கதைதான் பாட்டு, அந்த பாட்டு சொல்லும் அர்த்தத்திற்கு Irony யான ஒரு background music.


 கதைய கேட்கும் போது ஏற்படும் உணர்வை அந்த rhythem  மறைகிறது, இதுதான் நம்ம ஸ்டைல், சோகத்தை சொன்னாலும் ஒரு கும்மாளத்தோடு சொல்லுறது. இந்த Back  ground music ....



  • அந்த பெண் அவளது வறுமையை தனது உடலால் வென்றதை சொல்லுதா?!!! 
  • விபச்சாரம் பாவம்.. அதை செய்பவர்கள் பாவி என்று சொல்லும் கலாச்சார கனவான்களுக்கு குடுக்குற மரண அடியா?


  •  என்னோட கனவுகள் உடைந்துபோனாலும் மத்தவங்க   கனவுகளுக்காக    இந்த கூத்தா?!!



இப்படி பல நெனைப்பு நமக்கு ஏற்படுது இந்த பாட்டை கேட்கும்போது.  


இந்த தஞ்சை செல்வி என்ற பாடகியை பார்க்கணும்னா...  http://www.cinefundas.com/2010/11/22/thanjai-selvi-speaks-about-easan ,


--Mrinzo Nirmal

Monday, December 27, 2010

பின்னூட்ட புதையல்

பின்னூட்டங்கள் என்றால் தேவையில்லாத விஷ்யங்கள், அவதூறுகள் என்ற நிலை ஒரு காலத்தில் இருந்தது…

இப்போதெல்லாம் பதிவுகளை விட பின்னூட்டங்கள் சிறப்பாக அமைவது அவ்வப்போது நடக்கிறது..
எழுத்தாளர் சாரு என் பதிவுகளை பாராட்டாமல், அதற்கு வந்த பின்னூட்டத்தை பாராட்டியதால் , பின்னூட்டம் இட்டவர்களை பார்த்து பொறாமை படவில்லை :)
மகிழ்ச்சிதான் அடைந்தேன்.

Saturday, December 25, 2010

மன்மதன் அம்பு,ஒரு மாறுபட்ட பார்வை -Mrinzo Nirmal.

மன்மதன் அம்பு படு தோல்வி படம் என எழுதியிருந்தேன். தோல்வியில் கவுரமான தோல்வி என்பதும் உண்டு.. ஆனால் மன்மதன் அம்பு படத்தின் தோல்வி கேவலமான தோல்வி என நான் சொன்னதை, நண்பர் பிரபாகரன் உள்ளிட்டோர் ஏற்கவில்லை..
நான் நடு நிலை தவறி விட்டதாக குற்றம் சாட்டினார்கள்..

ஆனால் பிரபாகரன் சினிமா பார்க்க சென்ற போது, 600 சீட் கொண்ட தியேட்டரில், ஊழியர்கள் உட்பட வெறும் ஆறு பேர் இருப்பதை பார்த்து நான் சொன்னது உண்மை என அறிந்தார்..
படம் பார்த்து முடித்ததும், என்னை விட கடுமையாக படத்தை விமர்சித்தார்..

இளையராஜா செய்தது சரியா?- விவாத தொகுப்பு

கவிதையை மொழி பெயர்ப்பது எளிதல்ல…
அர்த்தம்தான் முக்கியம் என நினைத்து , சில வார்த்தைகளை கூட்டவோ குறைக்கவோ செய்தால் , விமர்சனம் எழும்..
வார்த்தைக்கு வார்த்தை மொழி பெயர்த்தால், மூல கவிதையின் உணர்ச்சி இதில் இல்லை என அதையும் திட்டுவார்கள்..
அந்த அடிப்படையில் தாகூர் கவிதை மொழி பெயர்ப்பு விவாகாரத்தை பதிவிட்டேன்…
அதில் என் பதிவில் அலசியதை  விட சிறப்பாக அலசியது பின்னூட்டங்கள்தான்..
சிலர் பதிவை மட்டும் பார்த்து விட்டு பின்னூட்டங்களை பார்க்காமல் சென்று விடுவார்கள் ..
அவர்களுக்காகவும், 
ஒரு கட்டுரை எழுத தேவையான உழைப்பை பின்னூட்டத்திற்கு தந்த நண்பர்களுக்கு கருத்து அனைவரையும் சென்றடைய வேண்டும் என்பதற்காகவும் , அவர்கள் கருத்தை தனி பதிவாக தருவதில் பெருமைப்படுகிறேன்.
தானே சொந்தமாக முயற்சித்த செல்வாவையும், அதை மனமார பாராட்டிய தம்பி கூர்மதியனையும் , ஆக்க பூர்வமான கருத்துக்கள் சொன்ன நண்பர்களையும் பாராட்ட வார்தைகள் இல்லை…



Friday, December 24, 2010

மன்மதன் அம்பு கேவலமான தோல்வி.. கே எஸ் ரவிகுமாரின் வாட்டர்லூ ?

மயில் ஆடுவதை பார்த்து வான்கோழி ஆட நினைத்து அவமானப்பட்டதாம்..
அது போல , எந்திரனுக்கு இணையாக படம் எடுக்க நினைத்த கமலின் படம் கிண்டலுக்கு உள்ளாகி இருக்கிறது..
புரியாத புதிர், சேரன் பாண்டியன் போன்ற வெற்றி படங்கள் இயக்கியவர் கே எஸ் ரவிகுமார்,,
அதன் பின் வந்த நாட்டாமை அவர் இயக்கிய முதல் பிரமாண்ட படம்..
அப்பொதெல்லாம் கமல் இவரை பொருட்டாக நினைத்ததில்லை… ஆனால் ரஜினி அவருடன் இணைந்து பணி புரிய முன்வந்தார்.. அந்த கால கட்டத்தில் இது விசித்திரமான கூட்டணியாக பார்க்கப்பட்டது..
அந்த படதின் வெற்றி கமலை சிந்திக்க வைத்தது..
அதன் பின் கே எஸ் ரவிகுமாருடன் அவரும் இணைந்து பணி புரிய ஆரம்பித்தார்..



Thursday, December 23, 2010

இளையராஜாவுக்கு மரணதண்டனை? – அடுத்த சர்ச்சை ..

 


இசை ஞானி இளையராஜாவை சர்ச்சைக்கு இழுக்காதவர்கள் யாரும் இல்லை ..
வீட்டுக்கு போன தனக்கு தண்ணீர் தரவில்லை என அதைக்கூட பிரச்சினையாக்கினார் இயக்குனர் மிஷ்கின் ..
இதை கூட பிரச்சினை ஆக்குபவர்கள் , இலக்கிய விவகாரம் கிடைத்தால் விட்டு விடுவார்களா?
தாகூர் எழுதிய பிரபல கவிதைகளில் ஒன்று mind without fear

Tuesday, December 21, 2010

உலகின் முதல் கிறிஸ்தவ நாடு எது? சென்னைக்கும் அதற்கும் என்ன சம்பந்தம் ? - Mrinzo

அரண்மனைக்காரன் தெரு என்று ஒரு தெருவை பார்த்ததும் பெயர் வித்தியாசமாக இருக்கிறதே என பார்த்தேன்.. அதன் பின் அது ஆர்மினியன் தெரு என தெரிய வந்தது...
அது என்ன அர்மினியா ? அதன் வரலாறு என்ன ?
அதற்கும் சென்னைக்கும் என்ன தொடர்பு?
உலகின் முதல் கிறிஸ்தவ நாடு எது போன்ற பல சுவையான , வரலாற்று தகவலை நம்முடன் பகிர்ந்து கொள்கிறார் , Mrinzo நிர்மல் ..
இவர் நம் பிலாக்கில் எழுதிய சிரோ டிகிரி விமர்சனம் , டி டெக்ஸ்ட் போன்றவை பரவலானா வரவேற்பு பெற்றன... எனவே தொடர்ந்து எழுதுமாறு கேட்டு கொண்டேன்.. 
எனக்கோ விஷமம் தெரியும்..ஆனால் விஷயம் தெரியாது.. விஷயம் தெரிந்தவர் எழுதும் கட்டுரையும் இதில் இடம் பெறட்டுமே என்ற எண்ணமே அவரை எழுத காரணம்..
சரி, அவர் கட்டுரை இதோ உங்கள் பார்வைக்கு.


*********************************************************
  வரலாற்று பார்வை 
ர்மினியா என்ற ஒரு நாடு இருக்கிறது, அது ரஷ்ய federation இல் இருந்த ஒரு நாடு, இப்போது அது ஒரு சுதந்திர நாடு.


இந்த அர்மினியாவிற்கும் Genocide கும் , நமக்கு தெரியாத ஒரு கொடூர சம்பந்தம்  உண்டு, 18 ஆம் நுற்றாண்டில் நடந்த ottaman மன்னர்களால் இந்த அர்மேனியர்கள் திட்டமிட்டு படுகொலை செய்யபட்டார்கள்.
இந்த அர்மினியர்கள்தான் உலகில் தங்களை முதல் கிறிஸ்துவ நாடு என்று தங்களை பிரகடனபடுத்தி கொண்டவர்கள் அதாவது முதலாவது நுற்றாண்டில்.

 இது ரோமர்கள் கிறிஸ்துவத்தை தழுவதற்கும் முன்பு.
மதத்தின் பெயரால் நடந்த 18 ஆம் நுற்றாண்டு  படுகொலை இன்றும் தொடர்கிறது. அன்றைய   Ottaman empire இன்றைய Turky எனப்படும் நாடு. இந்த மனித படுகொலைகளை பற்றி எழுதி கொண்டே  போகலாம்,

 ந்த அர்மினியாவுகும் சென்னைக்கும் எதாவது சம்பந்தம் உண்டா?

இந்த அர்மேனியர்கள் பல நுற்றாண்டுகளுக்கு முன்பு இந்தியா வந்துள்ளார்கள், அதாவது Vasko da Gamma இந்தியாவிற்கு வருவதற்கு முன்பு.
 சென்னையிலுள்ள "St Thomas Mount" ஒரு அர்மேனியார்தான் என்ற ஒரு மாற்று செய்தி உண்டு, மேலும் கணிசமான அர்மேனியர்கள் வாழ்ந்து வந்துள்ளனர்,

அர்மேனியர்கள் தெரு என்ற ஒரு தெரு இருக்கிறது, அங்கு St Mary;s church என்ற ஒரு 240 வருட பழைய தேவாலயம் ஒன்றும் உள்ளது,




 Kojah Petrus Woskan என்ற சென்னை வாழ் அர்மினியார்த்தன் சைதாபேட்டை Marmalong பாலம் ( அந்த பாலத்தை மறைமலை அடிகள் பாலம் என சிலர் "தமிழ்" படுத்தி இருக்கின்றனர்..ஆனால் வரலாற்று காரணம் கூறும் கல் வெட்டு பக்கத்திலேயே இருக்கிறது - பதிப்பாசிரியர் )




  மற்றும் St Thomas மௌண்டின் 164படிக்கட்டை கட்டியவர்.
ராயபுரதிலுள்ள Arthoon Road எனபது ஒரு அர்மேனியர் பெயரால் இன்றும் அழைக்கப்படுகிறதாம் அடுத்த முறை சென்னை வரும்போது இந்த இடங்களுக்கு செல்லவேண்டும்.

Mrinzo நிர்மல்



"உண்மையை" அமைதியாக்கிய அவாள், "வயரை" வருத்தப்பட வைத்த நடிகர்- பதிவுலக கிசுகிசு

1 "உண்மை" க்கு வந்த சோதனை

எதிலுமே "உண்மையாக" இருக்கும் பதிவர் அவர்..மிகவும் நல்லவரும் கூட... அன்பாக பழக கூடியவர் அவர் ..

அவரது சமிபத்திய போக்கு பதிவுலகில் சற்று குழப்பத்தை ஏற்படுத்தியது..

ஒரு முக்கிய தலைவரின் படம் சமிபத்தில் ரிலிஸ் ஆனது.. பரவலான வரவேற்பும் பெற்றது..

Monday, December 20, 2010

தேகமும் சந்தேகமும்- நண்பர் யுவ கிருஷ்ணா உள்ளிட்டோருக்கு விளக்கம்

தேகம் நாவல் ஒரு சிறந்த நாவல் என ஏற்கனவே எழுதி விட்டேன்... மீண்டும் ஏன் என சிலர் கேட்கலாம்...

சில காரணங்கள் இருக்கின்றன..

பலர் இந்த நாவலை படித்து விட்டாலும், சிலர் மட்டுமே சரியான பார்வையை முன் வைத்துள்ளனர்..

 பலர் ஒரு சராசரி நாவல் போல புரிந்து கொண்டு விமர்சனம் எழுதி விட்டனர்..

சிறுவயதில் சமுதாயத்தால் கஷ்டப்படும் ஒருவன்,  இளைஞன் ஆன பின் ஒரு தாதாவிடம் சேர்ந்து கொடும் செயல் செய்கிறான். நடுவில் காதல்.. கடைசியில் ஹேப்பி எண்டிங்...
இப்படி தட்டையாக புரிந்து கொண்டவர்கள் பலர் உண்டு...

பெண் மூட்டை பூச்சிக்கு "அது " கிடையாது.. பிறகு எப்படி "அது" - வினோத ஜல்சா தகவல்கள் - படிக்க வேண்டாம் (அடல்ட்ஸ் ஒன்லி )

தினமும் இலக்கியம் பேசுகிறோம்.. நாட்டு நலனுக்காக கவலைப்படுகிறோம்..

ஒரு நாளாவது இப்படி இல்லாமல் கொஞ்சம் " வேறு " மாதிரி பேசலாமே என்பதற்காகத்தான் இந்த பகுதி...

வாரத்தின் ஒரு நாள் மட்டுமே இந்த பகுதி...
தலைப்பிலேயே எச்சரிக்கை கொடுக்கப்படும்...

Saturday, December 18, 2010

கருத்து கணிப்பு தந்த அதிர்ச்சியும் , எடுக்கப்பட்ட முடிவும்…

யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையம் என்பது என் பாலிசி..
அந்த வகையில், நான் ஜொள்ளு விட்டு ரசித்த சில மேட்டர்களை அவ்வப்போது பகிர்ந்து கொண்டேன்..
இதற்காக பரவலான ஆதரவு கிடைத்தாலும் கடும் மிரட்டலையும் சந்திக்க வேண்டி வந்தது..
ரசிக்கிறார்களா வெறுக்கிறார்களா என்ற குழப்பத்துக்கு விடை காண கருத்து கணிப்பு நடத்தினேன்..
அதன் முடிவுதான் இப்போது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி விட்டது…
என்ன அதிர்ச்சி?

Thursday, December 16, 2010

தேகம் நாவல் - சாதாரண வாசகன் பார்வையில் ....

ரு ரஜினி படம் ரிலீஸ் ஆனது போல சாருவின் "தேகம்" நாவல்  ரிலீஸ் ஆனது தமிழ் இலக்கிய வரலாற்றில் நடந்திராத ஒன்று..
அதே போல, ஒரு நாவல் இந்த அளவுக்கு விவாதிக்கப் படுவதும் இதுவே முதல் முறை..

புத்தகத்தை ஸ்டாலில் பார்த்ததும் எனக்கு சற்று ஏமாற்றமே ஏற்பட்டது...
அவரது ராசலீலா போன்றவற்றை படித்த எனக்கு சிறிய நாவல் என்பது கொஞ்சம் ஏமாற்றமே..
ஆனால், இந்த நாவலின் சிறப்புகளில் அதன் சிறிய அளவும் ஓன்று என்பதை படித்து முடித்த பின் உணர்ந்தேன். 
நமக்கெல்லாம் , பெரிய நாவலை பார்த்தாலே சற்று பயம் வந்து விடும்.. படிக்க படிக்க ஆர்வம் வரும் என்பது வேறு விஷயம்.. ஆனால் அப்படி படிப்பவர்கள் சிலரே..

இந்த நாவலை பொறுத்தவரை, பார்த்ததுமே வாங்க தோன்றும்... வாங்கியதுமே படிக்க தூண்டும்...

How to Deconstruct Text -With "Zero Degree" Example- mrinzo

சீரோ டிகிரியை ரசித்த படித்த Mrinzo அதை ரசிக்கும் வகையிலும் வெளிப்படுத்துகிறார்..
அதை பலரும் ரசிப்பதை உணர முடிந்தது...

அவரை மேலும் எழுத சொல்லி பலர் கேட்டனர்...

அந்த வகையில், அவரது இன்னொரு கட்டுரையை தருவதில்  பெருமை படுகிறேன்...

அவருக்கு நன்றி... 

எழுத்தாளனை கொண்டாடினால் ஏன் இந்த எரிச்சல்? (புதிய படங்களுடன் )

இது வரை எந்த ஒரு புத்தகத்துக்கும் இல்லாத வகையில் சாருவின் தேகம் நாவல் பெற்றுள்ள கவனம் தமிழ் எழுத்தை ரசிக்கும் பலருக்கு உற்சாகம் ஏற்படுத்தி உள்ளது..
சாரு வாசகர்களுக்கு கூடுதல் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது..
ஒரு புத்தக வெள்யீட்டு விழா இந்த அளவு பேசப்படுவது தமிழ் இலக்கிய வரலாற்றில் இதுதான் முதல்முறை..
இது சாருவுக்கு மட்டும் அல்ல… அனைத்து எழுத்தாளர்களுக்குமே பெருமை சேர்க்கும் விஷயம்..

Wednesday, December 15, 2010

mrinzo nirmal வழங்கும் சாருவின் காமரூப கதைகள்- ஒரு பார்வை

சாருவின் முக்கிய படைப்புகளில் ஒன்று காம ரூப கதைகள்...

இதை படித்து விட்டேன்,,, ஆனால் என் உணர்வுகளை எழுத முடியவில்லை... அதாவது எழுத தெரியவில்லை..

இந்த நிலையில், நண்பர்  நிர்மல் தன் கருத்துக்களை பதிவு செய்துள்ளார் ஒரு பின்னூட்டம் வழியாக..

பெரும்பாலானோர் பின்னூட்டத்தை படிப்பதில்லை..எனவே தனி பதிவாக அவர் கருத்தை வெளியிடுவதில் பெருமைப்படுகிறேன்...

Tuesday, December 14, 2010

mrinzo வழங்கும் சீரோ டிகிரி குறித்த விவாதம்


தமிழின் முக்கிய நாவல்களில் ஒன்று சாரு நிவேதிதா சீரோ டிகிரி…
அதைப்பற்றி சில காலம் முன் என் கருத்தை எழுதி இருந்தேன்..
அதை படிக்க இதை சொடுக்கவும்..
ஸீரோ டிகிரி- அற்பமா அற்புதமா..

அதற்கு mrinzo வழங்கிய பின்னூட்டம் மிக சிறப்பாக இருந்தது…
அதை பலர் படிக்க வாய்ப்பில்லை என்பதால், தனி பதிவாக அதை தருவதில் பெருமை படுகிறேன்..
அவர் தன் பெயர் மற்றும் மற்ற விபரங்கள் சொன்னால் நன்றி சொல்ல வசதியாக இருக்கும்…

Monday, December 13, 2010

Exclusive Report : பீர் அபிஷேகம், புதிய பட்டம்- கொண்டாட்ட மன நிலையில் நடந்த சாரு நிவேதிதா விழா (பிரத்தியேக படங்களுடன் )

சாரு நிவேதிதாவின் ஏழு நூல்கள் வெளியீட்டு விழா சென்னை ,காமராஜ் அரங்கில் நடந்தது…
இலக்கிய விழா போல அல்லாமல் ஒரு கொண்டாட்டமாக , உற்சாகமாக , அதே சமயம் இலக்கியம் சார்ந்த அறிவு பூர்வ சொற்பொழிவுகளுடன்  நடந்தது குறிப்பிடத்தக்கது…
அந்த அறிவுபூர்வ உரையாடல்களை நான் தொகுத்து தருவதை விட , மற்றவர்கள் சொன்னால் நன்றாக இருக்கும்… அதை மற்ற நல்ல பதிவர்கள் சொல்வார்கள்.. அதை படித்துக்கொள்ளுங்கள்…


saru5
படம்:1 கனிமொழி, தமிழச்சி தங்கபாண்டியன் ஆகியோரை வரவேற்கும் எழுத்து சித்தர் பாலகுமாரன் அவர்கள்

அதைத்தவிர்த்து விட்டு , அங்கு நிலவிய உற்சாக மன நிலையை மட்டும் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்..
இலக்கிய விழா என்றால் அது வயதானவர்கள் செல்வது, போரடிக்கும் விஷ்யம் என்பதே பொது கருத்து..
அப்படி இல்லை என்று கல்லூரி மாணவர்கள் சந்திப்பு போல நடந்த அந்த விழாவின் சில சுவையான அம்சங்களை மற்றும் தொகுத்து தருகிறேன்..


Sunday, December 12, 2010

வயர் பதிவர் என்ன சொல்கிறார் ? - பதிவுலக கிசுகிசு

1. பதிவுலகில் சில திறமை மிக்க சீனியர் பதிவர்கள் உண்டு... அவர்களை சந்தித்து பேசினால்  பல விஷ்யங்கள் தெரிந்து கொள்ளலாம் என்பது *** பதிவரின் அனுபவம்..
இதை அனைவரும் பயன்படுத்தி கொள்ளும் வகையில், அனைவரும் பங்கு பெறும் வகையில் , ஒரு மெகா சந்திப்பை நடத்துமாறு மூத்த பதிவர்களை வற்புறுத்தி பார்த்தாராம் இவர்...
வெயில், மழை, வேலை என பல காரணங்களை சொல்லி அவர்கள் இதை செய்யவில்லையாம்..
இதனால் மனம் வெறுத்து போன பதிவர், பல விஷ்யங்களில் கில்லாடியான , சீனியர் பதிவரான வயர் பதிவரை மட்டுமாவது அழைத்து , ஆர்வம் மிக்க புதிய பதிவர்களுடன் கலந்துரையாடல் நடத்த முயன்று வருகிறாராம்.
இது நடந்தால் பதிவுலகில் முதல் முறையாக ஒரு வித்தியாசமான இடத்தில் இந்த நிகழ்வு நடக்குமாம்.. சம்பந்தப்பட்ட பதிவர் அந்த இடத்தை பார்த்து திருப்தி அடைந்தாராம்...


2. அதிகம் எழுதாத பதிவர் ஒருவருடன் இலக்கிய சர்ச்சை செய்து விட்டு பதிவர் இரவு நேரம் வீடு திரும்பினாராம்..
லைசன்ஸ் இல்லை, டாக்குமெண்ட் இல்லை, ஹெல்மட் இல்லை, பற்றாக்குறைக்கு “அது “ வேறு..

வழியில் போக்கு வரத்து காவலர் ஒருவர் மடக்க, இன்று ஒரு அமௌவுண்ட் அவுட் என நினைத்தாராம்..
ஆனால் நல்ல வேலையாக, சில மென்பொருள் ஊழியர்கள் அந்த பக்கம் வரவே , இவரை விட அதில்தான் ஆதாயம் என உணர்ந்து இவரை விட்டு விட்டார்களாம்..
அவர் மென்பொருளை வாழ்த்திக்கொண்டே வீடு போய் சேர்ந்தாராம்..

3 பார்ப்பதில் ஆர்வம் கொண்ட பதிவர், இயக்க தலைவர்  பெயர் கொண்ட பதிவரை, சீர்திருத்த தலைவர் படம் பார்க்க அழைத்தாராம்..
அவர் தான் ரொம்ப பிசி என சொல்லி அழைப்பை நிராகரித்து விட்டாராம்..
ஆனால் , ஹோட்டல் பதிவர் அழைத்ததும் உடனடியாக கிளம்பி படம் பார்க்க சென்று விட்டாராம்..
இதனால் சற்று குழம்பி போனாராம் பார்க்கும் பதிவர்..
ஆனால் ஹோட்டல் பதிவர் என்ன நடந்தது என தெளிவாக விளக்கம் அளிக்கவே , புரிதல் ஏற்பட்டதாம்..

விரைவில் மூவரும் சந்திக்க இருக்கிறார்களாம்...

பிரத்தியேக செய்தி : சாரு புத்தக வெளியீட்டு விழா, அனைவரும் வருக

 

எழுத்தாளர் சாருவை ரசிக்கலாம் அல்லது வெறுக்கலாம்.. ஆனால் புறக்கணிக்க முடியாது…

பலரை தமிழ் புத்தகங்கள் படிக்க வைத்தவர் அவர் என்றார் அது மிகையாகாது…

எனக்கு அவர் மீது சில விமர்சனங்கள் இருந்தாலும் அவர் புத்தகம் அனைத்தையும்  படித்தவன், படித்து கொண்டு இருப்பவன் நான்,,

அவர் மீது சில விமர்சனங்கள் கொண்ட நானே இப்படி என்றால், தீவிர ரசிகர்கள் பற்றி சொல்லவே வேண்டியதில்லை…

நாளை அவர் புத்தகங்கள் வெளி வரும் நிலையில், ஒரு வாசகன் என்ற அளவில் சில  காணோளிகள், படங்கள் , இன்னொரு சுவையான விஷயம் போன்றவற்றை பகிர்ந்து கொள்ள விரும்பினேன்…

ஆனால் அது விழா முடிந்த பின் அதை சொன்னால்தான் இன்னும் நன்றாக இருக்கும் என்பதால், நாளை இரவு வரை காத்து இருங்கள்…

அனைவரும் விழாவிற்கு வருக வருக என அழைக்கிறேன்…

 

*************************************************************************************************************

 

சாரு நிவேதிதாவின் ஏழு நூல்கள்

December 12th, 2010

டிசம்பர் 13 வெளிவரும் சாரு நிவேதிதாவின் 7 நூல்கள்

வெளியீட்டு அரங்கில் நூல்களின் மொத்த விலை ரூ 500 மட்டும்

தேகம்

நாவல்

ரூ.90

வதைத்தலுக்கும் வதைக்கப்படுதலுக்கும் இடையேதான் மனிதகுலத்தின் சமூக, பண்பாட்டு வரலாறுகள் எழுதப்படுகின்றன. வலியை உற்பத்தி செய்வதிலிருந்தே அதிகாரம் உற்பத்தி செய்யப்படுகிறது என்பதை எப்போது மனிதர்கள் கண்டுபிடித்தார்களோ அன்றிலிருந்து சித்தரவதையின் தொழில் நுட்பம் நுணுக்கமாக தொடர்ந்து மாறுதடைந்து வந்திருக்கிறது. சிதரவதைகள்மூலம்  ஒரு உடலை இன்னொரு உடல் முழுமையாக வெற்றிகொள்ளும்போது நிகழ்வது ஒரு புராதனமான மிருக இச்சையா அல்லது அதற்குள் ஒரு நீதிமுறை செயல்படுகிறதா என்கிற கேள்வியை எதிர்கொள்கிறது இந்த நாவல். சாடுநிவேதிதா இந்த நாவல்மூலம் காட்டும் உலகம் கடும் மனச் அதிர்ச்சியை ஏற்படுத்துவதன் காரணம் அந்த உலகத்தை ஒரு பகுதியாக ஒவ்வொருவரும் இருக்கிறோம் என்பதுதான்.

சரசம் சல்லாபம் சாமியார்

நித்யானந்தர் குறித்து

ரூ.85

மதங்கள் தங்களது வராலாற்றுப் பாத்திரத்தை இழந்த பிறகு புதிய வழிபாட்டுக் குழுக்கள் அந்த இடத்தை கைப்பற்றிக் கொள்ள விழைகின்றன. கடவுள்கள் மனிதர்களிடமிருந்து அன்னியமான பிறகு மனிதக் கடவுளர்கள் எங்கெங்கும் அவதரிக்கின்றனர். நித்யானந்தர் போன்றவர்கள் இன்று  ஆன்மீகத்தை ஒரு மாபெரும் வர்த்த்க நிறுவனமாக மாற்றியிருக்கின்றனர். தங்களது புனித முகமூடிகளுக்குப் பின்னே நிகழ்த்தும் நிழல் நடவடிக்கைகள் எளிய மனிதர்களின் அந்தரங்கத்தை ஆழமாக காயப்படுத்துவது மட்டுமல்ல அவர்களை எவ்வாறு பிறழ்வுகொண்டவர்களாகவும் மாற்றுகிறது என்பதை சாருநிவேதிதா இந்த நூலில் விரிவாக முன்வைக்கிறார்.

குமுதம் ரிப்போட்டரில் வெளிவந்து பரபரபாக வாசிக்கப்பட்ட தொடர் நூல் வடிவம் பெறுகிறது.

ஷேக்ஸ்பியரின் மின்னஞ்சல் முகவரி

சிறுகதைகள்

ரூ.60

சாருநிவேதிதாவின் கதைகள் தமிழ்ச் சிறுகதைகளின் இலக்கணங்களை தயக்கமின்றி கலைப்பவை. வழக்கமான கதை சொல்லும் முறைமையினை  கடந்து செல்வதன் மூலம் அவர் தனக்கே உரித்தான ஒரு பிரத்யேக மொழியில் தனது புனைவுலகை உருவாக்குகிறார். நவீன வாழ்க்கைமுறையின் அபத்தங்களை, மனித உறவுகளின் விசித்திரத்தன்மையை இக்க்கதைகள் வெகு சுவாரசியமாக எழுதிச்செல்கின்றன.

கலையும் காமமும்

விவாதங்கள்

ரூ.100

சாரு நிவேதிதா தனது வாசகர்களுடன் தொடர்ந்து உரையாடிக்கொண்டே இருக்கிறார். தன்னைப் பற்றியும் பிறரைப் பற்றியும் இருக்கக் கூடிய அபிபராயங்களை பாசாங்குகள் ஏதுமின்றி இந்த விவாதங்களில் முன்வைக்கிறார். சாருவைப் பற்றி பிறர் முன்வைக்கும் குற்றச்சாட்டுகள்கூட அவர் தன்னைப் பற்றி வெளிப்படையாக சொல்லிக்கொண்டவையிலிருந்தே உருவாக்கபடுகின்றன என்பது அவரது சுதந்திரமான மன நிலைக்கு ஒரு சாட்சியம். இந்த நூல் அந்த மன நிலைக்கு ஒரு நிரூபணம்

மழையா பெய்கிறது

சர்ச்சைகள்

ரூ.95

சாருநிவேதிதா இந்த நூலில் உருவாக்கும் சர்ச்சைகள் வழியே எழுப்பும் அடிப்படைக் கேள்விகள் ஒரு தமிழ் எழுத்தாளன் சந்திக்கக்கூடிய அவமானங்களைப் பற்றியவை. அவன் தனது இருப்பையும் எழுத்து இயக்கத்தையும் தக்கவைத்துக் கொள்ள போராடும் அபத்தமான சூழல் பற்றியவை.

கடவுளும் சைத்தானும்

கட்டுரைகள்

ரூ.60

சாரு இந்த நூலில் விவாதிக்கும் பல பிரச்சினைகள் நமது கலாச்சார மதிப்பிடுகளோடும் நுண்னுணர்வுகளோடும் தொடர்புடையவை. குடி, கவிதை, பூங்கொத்துகள், உடல் குறைபாடுகள், கசப்புகள், பிரியங்கள் என பல்வேறு தளங்களில் இவை கூர்மையான கேள்விகளை எழுப்புகின்றன.

கனவுகளின் நடனம்

சினிமா பார்வைகள்

ரூ.110

இதைப் படிக்கும் ஒருவருக்கு தமிழ் சினிமா பற்றி மிகவும் எதிர்மறையாக எழுதப்பட்ட கட்டுரைகள் என்று தோன்றக்கூடும்.. தமிழ் சினிமாவை மிக அதிகமாக நேசிப்பதாலேயே இப்படிப்பட்ட கட்டுரைகளை எழுதினேன். கடந்த 30 ஆண்டுகளாக சர்வதேச சினிமாவின் தீவிரமான ரசிகன் என்ற முறையில் இதையெல்லாம் சொல்லியாக வேண்டியிருக்கிறது. உண்மையில் இந்த விமர்சனங்களுக்கு ஆளானவர்கள் எனக்கு நன்றி தெரிவிக்க வேண்டும். ஆனால் நிலைமை அப்படி இல்லை. அவர்கள் என்மீது கோபப்படுகிறார்கள்.  உங்கள் எடையை 200 கிலோவாகக் காண்பிக்கும் எடை எந்திரத்தின் மீது கோபப்படுவீர்களா? நான் யாரை விமர்சித்து எழுதுகிறேனோ அவர்கள் மீது எனக்குத் தனிப்பட்ட முறையில் எந்தவித கோபமோ அல்லது நட்புணர்வோ கிடையாது. என்னுடைய கவனமெல்லாம் அந்த சினிமாவைப் பற்றி மட்டுமே இருக்கிறது.

சாரு நிவேதிதா

(முன்னுரையிலிருந்து

பயங்கர விபத்துமக்கள் நாயகன் ராமராஜன் படுகாயம், டிரைவர் பலி- ஆளுங்கட்சி சதியா??

மதுரை அருகே நடந்த கார் விபத்தில் மக்கள் நாயகன் ராமராஜன் படுகாயம் அடைந்தார்..  கார் டிரைவர் பலியானார்..



கரகாட்டகாரன் உட்பட பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்தவர் ராமராஜன்.. ஒரு முறை எம்பியாகவும் இருந்திருக்கிறார்..

கோப்பு படம்

மருத்துவமனையில் சிகிச்சை பெறும் ராமராஜன் (தலையில் அடிபட்டு இருக்கிறது ) 
 சமீபத்தில் ரிலீசான நந்தலாலா படம் ராமராஜன் படம் போல இருப்பதாகவும், படத்தின் இசை ராமராஜன் பட இசை போல இருப்பதாகவும் ஒரு பேச்சு கிளம்பியதால் மீண்டும்  ஸ்டார் அந்தஸ்து பெற்றார்..

Saturday, December 11, 2010

பதிவுலகை கலக்கும் மூட நம்பிக்கைகள் - விளக்கங்கள்

ஒரு  ooril  ஒரு சாமியார் இருந்தார்..
ஒரு நாள் பூஜை செய்யும் போது, பூனை ஓன்று தொந்தரவு செய்து  கொண்டே இருந்தது...எரிச்சலடைந்த அவர் , பூனையை அருகில் இருந்த தூணில் கட்டி வைத்து விட்டு தன்  வேலையை தொடர்ந்தார்..
வழ க்கம்போல தாமதமாக வந்த சீடன் பூனை கட்டப்பட்டு இருப்பதை பார்த்து குழம்பினான்..
விளக்கம் கேட்பதற்குள் சாமியார் வெளியூர் போய் விட்டார்..
அதன் பின் அந்த பூஜை செய்யும் வேலை , சீடனுக்கு வந்து சேர்ந்தது..
சாமியார் செய்தபடியே செய்ய நினைத்த அவன், தெருவில் , தன் இணையுடன் டூயட் பாடிக்கொண்டு   இருந்த பூனையை வலு கட்டாயமாக பிடித்து வந்து தூணில் கட்டி வைத்து விட்டு, அதன் பின் பூஜை செய்தான்...
நாளடைவில் இது ஒரு நடைமுறை ஆகிவிட்டது..
அந்த ஊரில் இருந்த பூனைகள் எல்லாம் வெளியூருக்கு ஓடி   போய் விட்டன.. அப்படி இருந்தும தேடி பிடித்து கொண்டு வந்து கட்டுவது ஒரு செயல் முறை ஆகிவிட்டது..
கொஞ்ச நாள் கழித்து திரும்பி வந்த சாமியார், தன் சீடர்கள் புதிதாக ஏதோ செய்வதை பார்த்து அசந்து விட்டார்.. விளக்கம் கேட்க கூச்சப்பட்டு , அவரும் பூனை கட்டும் முறையை தொடர ஆரம்பித்தார் ..

இப்படித்தான் நம்பிக்கைகள் உருவாக்கி நிலை பெறுகின்றன...
பதிவுலகில் இப்படிப்பட்ட நம்பிக்கைகள் அதிகம்...
அதில் பல தவறானவை ..
 பல ஆண்டுகள் ஆராய்ச்சிக்கு பின் , நாம் கண்டுபிடித்தவற்றை  பொதுநலன் கருதி வெளியிடுவதில் பெருமை படுகிறோம்..
 *****************************
1 ஞாயிற்று கிழமை பதிவிட கூடாது.. யாரும் படிக்க மாட்டார்கள்..
            ஊரில் இருக்கும் எல்லா நிறுவனங்களிலும் கம்ப்யூட்டர் பயன்படுத்துவது போலவும், அந்த நிறுவனங்களில் இருப்பவர்கள் , முழு நேர வேலையாக பதிவுகளை பார்வையிடுவதாகவும் நினைத்து கொண்டு எழுந்த நம்பிக்கை இது..

       யார் இதை கிளப்பி விட்டது..
                 மென்பொருள் துறை பதிவர்கள்..  தம்மை போல பிறரை நினைத்து இப்படி ஒரு மாபாதகத்தை செய்தனர்..

உண்மை நிலை :
                                 மென்பொருள்  துறையில் இல்லாத பதிவர்கள்தான் அதிகம்.. இவர்களுக்கு நிறுவனங்கள் லப் டாப் கொடுத்து விடும்...
 விடுமுறை நாட்களில் , லேப் டாப்பை வைத்து கொண்டு வீட்டு வேலை செய்வதில் இருந்து தப்பிப்பது இவர்கள் யுக்தி...
        எனவே ஞாயிறு அன்றுதான் அதிகாமான பதிவுகள் பார்வையிடப்படுகின்றன...


2  காலை 9  மணியில் இருந்து மாலை 5 மணிக்குள் பதிவிட்டால் பலர் படிப்பார்கள்..
    பள்ளிக்கால பசுமை நினைவுகளால் எழுந்த நம்பிக்கை இது..

கிளப்பியது யார் : அரசு வேலை பார்க்கும் பதிவர்கள்

உண்மை நிலை:

இப்போதெல்லாம் யாரும் சரியான நேரத்துக்கு அலுவலகம் செலவ்தில்லை.. செல்வது போல கணக்கு காட்டுவது எளிதாகிவிட்ட நிலையில், இது தேவை அற்றது..
பாத்து மணிக்கு வந்து சேர்ந்து, தூங்கி எழுந்து, டி வடை சாப்பிட்டு , வேலையை ஆரம்பிக்கவே , மாலை ஐந்து மணி ஆகி விடும்.. அப்புறம் எப்படி வீட்டுக்கு போவது..
ஐந்து மணிக்கு மேல்தான் வேலையை ஆரம்பிப்பார்கள்...  அவ்வப்போது பதிவுகளையும் பார்ப்பார்கள்.. எழுதுவார்கள்..
இந்த நேரத்தில் மற்ற நாட்டை சேர்ந்தவர்களும் பணியை ஆரம்பிப்பார்கள்... (அவர்கள் நம்மை போல அல்ல )

எனவே மாலை நேரத்துக்கு மேல்தான் நல்ல நேரம்..

3 அவ்வபோது புரட்சிகர கருத்துக்களை எடுத்து வைத்தால் , மக்கள் மனதில் ஓர் இடம் கிடைக்கும்,,,

கிளப்பியது யார் : அதிகம் படிப்பவர்கள்

உண்மை நிலை :
இன்டர்நெட் யுகத்தில் எல்லோருமே நெட்டில் படிக்க ஆரம்பித்து விட்டதால், எல்லோருக்குமே புரட்சிகர கருத்துக்கள் தெரிந்து விட்டன... எனவே இப்படி பேசினால் யாரும் நம்புவதில்லை

4 எல்லோருடைய எழுத்தையும் பாராட்டினால் நம்மையும் பாராட்டுவார்கள்...

கிளப்பியது யார் : படிக்காமல் பின்னூட்டம் இடுவோர் சங்கம்...
உண்மை நிலை : சில நேரங்களில் எழுதியவருக்கே தான் எழுதியது பிடிக்காது... அப்போது போய் நாம் பாராட்டினால், நம் அறிவின் மீது அவருக்கு சந்தேகம் வந்து விடும்

5 "அந்த " எழுத்தாளரை நட்பாக்கி கொண்டால் , நம்மை பிரபல படுத்துவார்

கிளப்பியது யார் : இலக்கிய பதிவர்கள்..

உண்மை நிலை : வெளிநாட்டு சரக்கு என லோக்கல் சரக்கை கொடுத்து ஏமாற்ற நினைத்த பதிவரை , நேரடியாக கேட்ட வார்த்தையில் திட்டி தீர்த்தார்.. இதனால் அவரை நட்பாக்கும் முயற்சி தோற்றது..

இந்த ஐடியா வேலைக்கு ஆகாது.,..
இந்த எழுத்தாளரும், போட்டி எழுத்தாளரும் ஒருவரை ஒருவர் பிரபலபடுத்தி கொள்வார்களே தவிர, பதிவர்களை பிரபலபடுத்த மாட்டார்கள்..
அவர்களுக்குள் கனவான் ஒப்பந்தம் இருக்கிறது...
6 கண்ணை மூடிக்கொண்டு எல்லா பதிவுகளுக்கும் மைனஸ் ஒட்டு போட்டுவிட்டால், நம் பதிவு பிரபலமாகி விடும்

கிளப்பியது  யார் : காசு வாங்கி கள்ள ஊட்டு போடுவதை சைட்  தொழிலாக வைத்து இருக்கும் பதிவர்கள்
உண்மை நிலை :  ஒருவர் மைனஸ் வாங்கினால் மட்டும் போதாது... நாமும் பிளஸ் வாங்க    வேண்டும்... எனவே இந்த ஐடியா செல்லாது... செல்லாது

7 புரியாமல் எழுத வேண்டும்

கிளப்பியது யார் : விபரம் புரியாதவர்கள்

உண்மை நிலை : பிரபஞ்ச சிறகை கட்டிக்கொண்டு, உலகில் பார்ப்பவன், பிரக்ஞையின் பிதற்றல், படிமங்களின் தரிசனம் என்றெல்லாம் எழுதினால் ஆரம்பத்தில் எல்லோரும் பாராட்டுவார்கள்..
ஆனால் காலப்போக்கில் , ஒரே பதிவை மீண்டும் மீண்டும் படிப்பது போல ர்ஹோன்ற ஆரம்பித்து விடும்..
தவிர , பிரபல எழுத்தாளர்களே இப்படி எழுத ஆரம்பித்து  விட்டதால், பதிவர் என்ற அடையாளம் கிடைக்காமல் போய் விடும்..

8 உலக திரைப்படங்களுக்கு விமர்சனம் எழுத வேண்டும்

கிளப்பியது யார் : மலிவு விலையில், வி சி டி கிடைக்கும் இடம் தெரிந்து வைத்து இருப்பவர்கள்
உண்மை நிலை : இப்போதெல்லாம் நம் ஆட்கள் ஆங்கில படங்ககளை பார்த்துதான் எடுக்கிறார்கள்.. எனவே உலக திரைப்பட விமர்சனம் தமிழ் பட விமர்சனம் போலவேதான் இருக்கும்...


 { விரைவில் இரண்டாம் பாகம் )

Friday, December 10, 2010

சிறுகதைப் போட்டி பரிசளிப்பு விழாவும், பதிவர் ஆதியின் கோபமும்…-ஸ்பாட் ரிப்போர்ட்

My Photo
ஒருவர் உங்களை கோபமாக திட்டும்போது மகிழ முடியுமா?
முடியாது என்றுதான் நினைத்து வந்தேன், நேற்று பதிவர் ஆதிமூலகிருஷ்ணன்  என்னை திட்டும் வரை..
அவர் ஏன் என்னை திட்டினார்..  அவர் யாரையும் திட்டமாட்டாரே ! அதுவும் நல்லவனும், அறிவாளியும் ( ? !! ) , இலக்கியவாதியுமான (**@@ ? !! ) என்னை ஏன் திட்டினார்?..

Thursday, December 9, 2010

உடல்பசியை தீர்க்கும் ஆட்டை வயிற்றுபசிக்கு கொன்றால் தண்டனை- கிளுகிளுப்பு சட்டங்கள்- அடல்ட்ஸ் ஒன்லி

சில நாடுகளில் , சில பிரிவு மக்களிடையே வினோதமான சட்டங்கள் உண்டு,,,

அதை பற்றி ஒரு பார்வை…..
பதினெட்டு வயத்துக்கு குறைந்தவர்கள், இந்த கோட்டை தொட்டு கும்பிட்டு விட்டு, வேறு நல்ல பதிவரின் ,இடுகையை பார்வையிட செல்லுமாறு கேட்டுக்கொள்ளபடுகிறார்கள்

____________________________________________________________

சில பதிவர்களின் பஞ்ச் டயலாக்கும் , நம் கேள்விகளும்

சில நேரங்களில் பதிவுகளை விட, பதிவின் தலைப்புக்கு பக்கத்தில் அவர்கள் எழுதி இருக்கும் பஞ்ச் டயலாக் நம்மை கவர்ந்து விடும்...
இவன் சிரிப்பதில்லை.. எரித்து விடுப்வன்..
மனித வடிவில் மாமிருகம்

உயிரைகொடுப்பவன் அல்ல ..எடுப்பவன்
என்று மிரட்டுவது போலவோ..

கண்ணீரை சுமந்து கவிதைக்காக காத்து இருப்பவள்
முடியா பயணத்தில் , முடிவோடு ஒரு பயணி
காலசக்கரம் நின்றாலும், இவன் கவிதைச்சரம் நிற்காது
என்பது போலவோ தம் பஞ்ச் டயலாக்கை வைத்து இருப்பார்கள்..
இதை எப்படி முடிவு செய்கிறார்கள்.. எப்படி யோசிக்கிறார்கள் என்பதெல்லாம் அவர்க்ளுக்குத்தான் தெரியும்..
ஆனால் சிலவற்றை பார்க்கும்போது, சில கேள்விகள் கேட்க தோன்றும்..
இதை பின்னூட்ட்த்தில் கேட்க அந்த ஆப்ஷன் இல்லை என்பதால், இங்கு கேட்கப்படுகிரது....

Wednesday, December 8, 2010

உண்மைதமிழனின் புனிதப்போர் குறும்படம்- ஜோரா? போரா ?

சமீபத்தில் ஒரு நல்ல புத்தகம் ஒன்று படித்தேன்.
படித்து முடித்ததும்தான் யார் எழுதியது என கவனித்தேன்…’
எழுதியவர் சுதந்திர போராட்ட வீரர் சுப்ரமணியம் சிவா..
அவர் எழுத்தாளர் என்பதே எனக்கு அப்போதுதான் தெரியவந்தது.. ஆச்சர்யமாக இருந்தது…
அந்த புத்தகம் பற்றி பிறகு எழுதுவேன்..
இப்போது நான் சொல்லவந்தது வேறு..

பெண்ணாக ”பிரமோஷன்” பெறும் ஆண்- வீடியோவுடன் அறிவியல் வினோதங்கள் ( அடல்ட்ஸ் ஒன்லி )

  “அந்த “ விஷயம் , எப்படியெல்லாம் விதம் விதமாக உயிரினங்களில் நடக்கிறது என பார்த்து வருகிறோம்..
இயற்கையில் விந்தைகள் ஆயிரம்…
கற்க கற்க வியப்பு அதிகரிக்கத்தான் செய்யுமே தவிர குறையாது..
சரி..  மேலும் சிலவற்றை பார்ப்போம்..
1. காதலினால் துன்பம் தீரும்
சமீபத்தில் ஒரு சாமியார்- நடிகை வீடியோ ரிலீசாகி பரபரப்பு ஏற்பட்டது..

Tuesday, December 7, 2010

குஞ்சு பொறிக்க **சை இழக்கும் ஆண், சம்பந்தம் இல்லாத “சைஸ்”- இயற்கையின் குறும்புகள்- அடல்ட்ஸ் ஒன்லி

 நண்பர் ஒருவருடன் பேசிக்கொண்டு இருந்தேன்... அவர் பெயரையோ வேறு க்ளுவோ கொடுக்க விரும்பவில்லை..

ஆரோக்கியமான விவாதம் செய்து கொண்டு இருந்த போது அவர் எடுத்து வைத்த கருத்து ஒன்று என்னை திக்குமுக்காட செய்து விட்டது...

“ நமக்கு “ அந்த “ உறுப்பு அங்கு இல்லாமல் உள்ளங்கையில் இருந்தால் நன்றாக இருந்திருக்கும் ” என்று சொல்லிவிட்டு , அவர் ஒரு விளக்கம் கொடுத்தார் பாருங்கள்..அப்படியே நடு ரோட்டில் அவர் காலில் விழுந்து கும்பிட வேண்டும் போல இருந்தது...
பட் அந்த விளக்கம் எனக்கு பிடித்து இருந்தது

( பாஸ்... உங்க பெயரை சொல்லல... உங்க கருத்தை மக்களிடம் பகிர்ந்து கொள்ளாவிட்டால் வரலாறு என்னை மன்னிக்காது என்பதால் இதை சொல்ல வேண்டி இருக்கிறது.. .சாரி.. ஹி ஹி )

Monday, December 6, 2010

ரத்த சரித்திரம்  -வன்முறையை ரசித்து மகிழும் ஒரு சமூகம்

ரத்த சரித்திரம் படம்..


இதன் பூர்வீகம் என்ன... வரலாறு என்ன ... இயக்குனரின் திறமை... கொலை செய்ய பயன் படுத்தும் யுக்திகள்...

கொலை செய்யபடும் இடத்தின் முக்கியத்துவம், கொலை செய்ய தூண்டப்படும் கதாபாத்திரத்தின் நியாயங்கள், எதிர் தரப்பு கேரக்டரின் கொலைக்கு கூட சரியான காரணம் சொல்லும் இயக்குனரின் நடுநிலை பார்வை, பல அப்பாவிகளை கொன்று குவிப்புக்கு காரணமானவர்கள் இந்த படத்தை பார்த்து கண்ணீர் விட்ட உருக்கமான தகவல்கள் என்று எழுத்துலகம் பரபரப்பாக இருக்கிறது..

மகாத்மா காந்தி மரண செய்தியை விசில் அடித்து வரவேற்ற சிறுவர்கள்


மீபத்தில் ஒரு பொது நிகழ்ச்சிக்கு சென்று இருந்தேன். அது என்ன நிகழ்ச்சி என்பது முக்கியமில்லை.. நான் சொல்லப்போகும் சம்பவம் ஓர் உதாரணம்தான்..எங்கு வேண்டுமென்றாலும் நடக்க முடியும்..
நான் நிகழ்ச்சியை கவனிப்பதுடன், ஆடியன்ஸ் அந்த நிகழ்ச்சியை எப்படி ரசிக்கிறார்கள் என்பதையும் கவனித்து வந்தேன்..
குறிப்பாக சிறுவர்களின் ரெஸ்பான்ஸ் சூப்பராக இருந்தது..
ஒரு குறிப்பிட்ட தலைவரைப்பற்றி பேசினார்கள்…  அந்த தலைவர் உண்மையிலேயே ஒரு மகத்தான மனிதர்…
அவர் செய்த சாதனைகளைப்பற்றி பேசும் போது, கைதட்டல், விசில் என அமர்க்களப்பட்டது விழா அரங்கம்..
ஆனால் மிக அதிகளவில் வரவேற்கப்பட்ட ஒரு விஷயம், அந்த தலைவரின் சாதனையோ, அவர் திறமையோ அல்ல..

உலகிலேயே நீளமான “அந்த” உறுப்பு கொண்ட பறவை – கிளுகிளு அறிவியல் ( வயது வந்தோருக்கு மட்டும்)

மனிதனுக்கு இருக்கும் ஒன்று பறவைக்கு இல்லை..
ஃபீலிங்ஸ் ?
அதை சொல்லவில்லை…
இன்னொன்று…
ஆம்.. நீங்கள் நினைப்பது சரிதான்..
”அது”தான்..
ஆனால் பறவைக்கும்  “ அது “ உண்டு என கண்டுபிடித்துள்ளனர் விஞ்ஞானிகள்…  இதில் உலக சாதனை செய்துள்ளது ஒரு பறவை.
அறிவியல் கண்டுபிடிப்பு என்ற வகையில் அதை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்..
தவறாக எடுத்துக்கொள்ள வேண்டாம்..

Saturday, December 4, 2010

நந்தலாலா சர்ச்சை, நர்சிம் "நச்" விளக்கம் - தாக்கம் இன்றி படைப்பு இல்லை

 
   நர்சிமிடம் விளக்கம் கோரும் அவசியம் என்ன ?
ஒரு நல்ல இயக்குனரான மிஷ்கினின் நந்தலாலா படம் ஒரு தரப்பில் பாராட்டை அள்ளி குவித்தாலும், எதிர்ப்பும் வரலாறு காணாத அளவுக்கு வலுவாக எழுந்தது என்பதை யாரும் மறுக்க முடியாது..
இந்த எதிர்ப்பு எழுந்ததற்கு வலுவான ஓர்  உளவியல் காரணம் உண்டு…
ஒரு படைப்பை காப்பி அடித்தல் என்பதற்கும் , ஒரு படைப்பின் பாதிப்பில் இருந்து ஒரு படைப்பை உருவாக்குவதற்கும் நுண்ணிய வேறுபாடு உண்டு..
படைப்பு என சொல்லும்போது அது சினிமா மட்டும் அல்ல… உடனே படைப்பு என்றால் இலக்கியமா என்றால் அதுவும் க்ரியேட்டிவ் வொர்க்தான் என்றாலும் அது மட்டுமே படைப்பு அல்ல..

Friday, December 3, 2010

அம்பேத்கர் திரைப்படம்- ஒரு நடுநிலை பார்வை

இந்திய வரலாற்றில் முக்கியமான ஒரு தலைவர் அம்பேத்கர்.. வரலாற்றின் முக்கிய கால கட்டத்தில் வாழ்ந்தவர்.. பெரிய சாதனைகள் செய்த்வர்.. மக்களுக்கு , அதிலும் நலிந்தவர்களுக்கு சேவை ஆற்றியவர்.
பல சிக்கல்களுக்கு பின் தமிழில் படம் வெளிவந்துள்ளது..
நான் வாழ்க்கை வரலாறுகளை விரும்பி படிப்பவன் என்ற முறையில் இந்த படத்தின் மீது ஆர்வம் ஏற்பட்டது…
மற்றவர்கள் பார்த்து கருத்து சொல்லட்டும் .பிறகு பார்க்கலாம் என நினைத்தேன்…

Thursday, December 2, 2010

ஒரு நல்லவரை, தலைவரை தெரிந்து கொள்வோம்- அம்பேத்கர் சினிமா .

தனக்காக சிந்திக்காமல் , தான் சார்ந்த மக்களுக்காக சிந்திப்பவனே தலைவன்..




இன்று நாம் அப்படிப்பட்ட தலைவர்கள் யாரையும் பார்க்க முடிவதில்லை..



ஒரு காலத்தில் அப்படிப்பட்ட தலைவர்கள் இருந்து இருக்கிறார்கள் என்பது நமக்கெல்லாம் ஆசர்யம் அளிக்கும் விஷயம்..



தலைவர்களில், நல்ல தலைவர்கள் சுயநல தலைவர்கள் என்று இருவிதம உண்டு...



இன்று நாம் பார்ப்பது சுயநல தலைவர்கள்..இவர்களை விட்டு விடுவோம்..



நல்ல தலைவர்களின் சிந்தனைகளை தெரிந்து கொள்வது, வாழ்க்கயை தெரிந்து கொள்வது எல்லோருக்குமே நல்லது..



நாம் இந்தியனாக இருக்கலாம்.. அதற்காக ஓர் அமெரிக்க தலைவனின் வாழ்க்கையை தெரிந்து கொள்ள கூடாது என்பது இல்லை...



ஒரு தலைவனைப் பற்றி தெரிந்து கொள்ளும் பொது அவன் சார்ந்த சமுகத்தையும், அவனது சமகால வரல்லாற்றையும் தெரிந்து கொள்கிறோம்..



இந்த விதத்தில் , அம்பேத்கார் படம் நாம் எல்லாம் பார்க்க வேண்டிய படம்...


ஒரு தொட்டியில் இருக்கிறது .
அதில் எந்த இடத்தில் இருந்து தண்ணீர் எடுத்தாலும் , மொத்த தன்ணீர் குறையும்..



அதே போல சமுகத்தில், ஒரு தரப்பினர் கஷ்டப்பட்டால், ஒட்டு மொத்த சமுகத்த்துக்கும்தான் பாதிப்பு..

எனவேதான் சமுக நீதி என்பது முக்கியமாகிறது...

அப்படி பார்த்தால்., அம்பேத்கார் அனைவருக்கும் பொதுவான ஒரு தலைவர்தான்...

அதெல்லாம் கூட வேண்டாம், ..

அவரை தலைவாராக கூட ஏற்க வேண்டாம்... அவர் வரலாற்றில் ஒரு முக்கியமானவர் என்பதை யாரும் மறுக்க முடியாது..



அவர் என்னதான் சொன்னார்.. என்னதான் செய்தார் என்பதை தெரிந்து கொள்வது முக்கியமான ஒன்று...



அம்பேத்கார் படம் பார்ப்பது அந்த வகையில் அவசியமாகிறது...



எந்த கட்சி சார்போ, இயக்க சார்போ, மத சார்போ, இன சார்போ இல்லாமல் ஒரு பார்வையாளனாக இந்த படத்தை படத்தை பார்க்க , நடுநிலையாளர்களை , இந்த பார்வையாளன் அழைக்கிறேன்...

Tuesday, November 30, 2010

தமிழ்மணம் டாப் 20 பதிவர்கள்- ஒரு வரி பார்வை

தமிழ் மணம் டாப் 20 , முதல் பத்து பதிவர்களை பார்த்தோம்.. டாப் 20 பதிவர்கள் முதல் பாகம் படிக்க இதை சொடுக்கவும்

அடுத்த பத்து பதிவர்கள்.. அதன் பின் ஒரு வரி விளக்கம் அனைவருக்கும்…

11. philosophy prabhakaran

பதிவுலகத்திலும், வெளி உலகத்திலும் நாம் பார்க்கும் ஒரு விஷயம்..
வயதான சிலர் , தாம் இளமையானவர் என காட்டிக்கொள்வதற்காக செய்யும் சில வேலைகள்..  செக்ஸ் ஜோக் அடிப்பது, வயதுக்கு ஒவ்வாத முறையில் பேசுவது , செய்வது என , பதிவர்கள் முதல் எழுத்தாளர்கள் வரை எங்கெங்கும் காண முடியும்..

அம்பேத்கர் திரைப்படம் வெளியீடு

அம்பேத்கர்...




நாட்டுக்காக போராடியவர்களில் ஒருவர்... அரசியல் சட்டத்தை வடிவமைத்தவர்..



உழைப்பு, திறமை, நல்ல எண்ணம் என அனைத்தும் கொண்டவர்..



அவரை சிலர் , தங்களுக்கு மட்டும் தலைவர் என அடையாலப்படுத்துவது எனக்கு ஏற்புடையது அல்ல.. அவர் இந்திய தலைவர்களில் ஒருவர் என்பது என் கருத்து...



 அம்பேத்கர் ஒரு ரோல் மாடல் .. அவரை பற்றி அனைவரும் தெரிந்து கொள்ளவேண்டும்..



இதற்கு நல்ல வாய்ப்பாக , அவரை பற்றிய திரைப்படம் திரை இடப்பட இருக்கிறது..



அது பற்றிய செய்தி இதோ உங்கள் பார்வைக்கு,,,, நண்பர் உண்மை தமிழனின் அனுமதியுடன், அவர் கட்டுரை இங்கே வெளியாகிறது

******************************************************************



அம்பேத்கர் திரைப்படம் வெளியீடு - திரையரங்குகள், நேரம் மாற்றம்..!




அம்பேத்கர் படம் பற்றிய பதிவைப் படித்துவிட்டு பின்னூட்டத்தில் வாழ்த்திய அன்பர்களுக்கு நன்றி.. தொலைபேசியில் பலரும் அழைத்து திரையரங்குகள் பற்றிய சந்தேகங்களைக் கேட்டார்கள். மேலும் ஐநாக்ஸ் திரையரங்கு பற்றி இறுதி முடிவு எடுக்காததால் தியேட்டர் நிர்வாகமும் நேற்று முன்தினம் வரையிலும் கருத்து சொல்லாமல் இருந்தது.

இந்த நிலையில் மேலும் நான் விசாரித்தபோது சில தகவல்கள் தெரிந்தன. பிரபல தயாரிப்பாளர் விஸ்வாஸ் சுந்தருக்குக் கொடுத்திருந்த மூன்றாண்டு தவணைக் காலம் கடந்த செப்டம்பர் மாதத்துடன் முடிவடைந்துவிட்டதால் தற்போது அம்பேத்கர் திரைப்படத்தின் தமிழ்ப் பதிப்பின் விநியோக உரிமை திரைப்பட வளர்ச்சிக் கழகத்துக்கே திரும்பவும் கிடைத்துவிட்டது.

தற்போது படம் திரையிடல், விளம்பரங்கள் போன்றவற்றை திரைப்பட வளர்ச்சிக் கழகமே செய்து வருகிறது. நேற்று இன்னும் கூடுதலாக சில திரையிடல் வசதிகளை திரைப்பட வளர்ச்சிக் கழகம் செய்திருப்பதாகத் தெரிகிறது.

சென்னையில் சத்யம், ஐநாக்ஸ், எஸ்கேப், அபிராமி ஆகிய திரையரங்குகளில் மதியக் காட்சியில்(Noon Show) மட்டும் அம்பேத்கர் படம் திரையிடப்படுகிறதாம். வரும் 4, 5 ஆகிய இரண்டு நாட்களில்(சனி, ஞாயிறு) மட்டும்தானாம்.

ஆல்பர்ட் திரையரங்கில் வரும் டிசம்பர் 3-ம் தேதி வெள்ளிக்கிழமை முதல் தினம்தோறும் ஒரு வாரத்திற்கு காலை காட்சியாக(11.30 மணிக்கு) மட்டும் அம்பேத்கர் திரைப்படம் திரையிடப்படுவதாக நேற்று மாலை முடிவான, இறுதியான செய்தியாகக் கூறினார்கள்.

இது பற்றி இன்று வெளியான 'தினத்தந்தி', 'தினகரன்' பத்திரிகைகளில் தேசிய திரைப்பட வளர்ச்சிக் கழகம் விளம்பரமும் வெளியிட்டுள்ளது.


அம்பேத்கர் திரைப்படத்தின் தமிழ்ப் பதிப்பின் வெளியீட்டு விழா வரும் டிசம்பர் 3-ம் தேதி காலை 11 மணிக்கு சென்னை எழும்பூர், ஆல்பர்ட் தியேட்டர் வளாகத்தில் கோலாகலமாக நடைபெறும் என்று தமிழக முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தினர் கூறுகின்றனர். சென்னைவாழ் பதிவர்களை இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க வருமாறு அன்போடு அழைக்கிறேன்.

காலை காட்சி மட்டும்தான் என்பது நமக்கு மிகவும் சிரமமானதுதான். வார நாட்களில் செல்ல முடியாது என்றாலும்.. டிசம்பர் 4, 5(சனி, ஞாயிறு)தேதிகளில் காலை, மதியம் என இரண்டு காட்சிகள் இருக்கின்றன. இதில் ஏதேனும் ஒரு நாளில் சிரமத்தைப் பொருட்படுத்தாமல் திரையரங்கிற்குச் சென்று படத்தினை கண்டுகளிக்கும்படி அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.


Posted by உண்மைத் தமிழன்(15270788164745573644)

தமிழ்மணம் டாப் 20 பதிவர்கள்- என் பார்வையில்

தமிழ் மணம்  ஒவ்வொரு வாரமும், டாப் 20 வலைபதிவுகளை தேர்ந்தெடுத்து வெளியிட்டு வருகிறது..

இந்த பதிவுகளை பற்றி என் கருத்து என்ன? நான் இந்த பதிவுகளை எப்படி பார்க்கிறேன்... இவை எந்த அளவு என்னை கவர்ந்துள்ளன அல்லது எரிச்சலூட்டுகின்றன... ? என்னை இவை எப்படி பாதித்தன் .. இவற்றுடன் எனக்கு இருக்கும் உள்ள உறவு என்ன ?

ஒரு சுருக்கமான பார்வை இது...

நான் படிக்கும் எல்லா பதிவுகள் பற்றியும் அடுத்து எழுதுவேன்..

அதற்கு ஒரு தொடக்கமாக இது இருக்கட்டும்...




டாப் 20 தமிழ்மண பதிவுகள் , என் பார்வையில்.. ( இவை தீர்ப்பு அல்ல ,,விமர்சனமும் அல்ல...என்னை எப்படி பாதித்துள்ளன என்ற என் தனிப்பட்ட கருத்துக்கள் )



1 வினவு..

இவர்களின் சமூக பார்வை எனக்கு பிடித்தமானவை... பெரும்பாலும் ஏற்கத்தக்க கருத்துக்கள்தான்..

போபால் பிரச்சினைகள் இவர்கள் காட்டிய தீவிரம் முக்கியமான ஒன்று...

பிடிக்காதது என்னவென பார்த்தால், தேவை இல்லாத பிரச்சிநைகளில் தம் சக்தியை வீணடிப்பது..

உதாரணமாக, இருக்காட்டுகோட்டையில் நச்சு வாயு விபத்து ஏறபடட்போதே, அனைத்து நிறுவனக்களின் பாதுகாப்பையும் பற்றிய விழிப்புனரவை தூண்டி இருக்க வேண்டும்..

அதை செய்யாமல், அப்போது வந்த எந்திரன் படத்தை பற்றி பேசிக்கொண்டு இருந்ததால், சிறிது காலம் கழித்து அம்பிகா என்ற தொழிலாளி இறப்பதை தடுக்க முடியாமல் போய் விட்டது.. இதர்கு காரணம் பாதுகாப்பு குளறுபடிகள்.. இன்னும் இதே போன்ற பாதுகாப்பு குளறுபடிகள் நீடிக்கின்றன



2 உண்மை தமிழன்

எழுத்து சினிமா என பல்துறை வல்லுனாரக இருந்த போதிலும், அதையெல்லாம் மீறி ஒரு நல்ல மனிதர் என்பதே இவர் அடையாளம்...

இவர் சொலவதற்கு நிறைய விஷயங்கள் இருக்கின்றன... அதை கஷ்டப்பட்டு சுருக்கி எழுகிறார்.. அபப்டி சுருக்கி எழுதியதே,பக்கம் பக்கமாக இருக்கும்....

இவரிடம் பத்து நிமிடம் பேசினால், ஒரு மணி நேரம் நூலகத்தில் இருந்த எபக்ட் கிடைக்கும் என்பது என் அனுபவம் ...
வேறு எங்குமே படிக்க முடியாத விஷயங்களை இவர் பதிவில் படிக்கலாம்..

நாளை வலை பதிவு வரலாறு எழுதப்பட்டால், அதில் முக்கிய இடம் இவருக்குத்தான்..  சுஜாதா பதிவு உள்ளிட்ட பல பதிவுகள், எழுத்துலகின் உச்சம் என்று சொல்லலாம்..

இவரிடம் பிடிக்காதது, அவ்வபோது உணர்ச்சிவசப்பட்டு தவறான கருத்து கூறுவது..

லேட்டஸ்ட் உதாரணம், என்கவுண்டர் விவகாரம்..

பதிவுலக வரலாறில் அதிக நெகடிவ் ஒட்டு வாங்கிய பெருமை இதன் மூலம் அண்ணனுக்கு கிடைத்தது..

இன்னும் கூட பலர் தேடி சென்று நெகடிவ் ஓட்டு குத்துகிறார்கள்...

நந்தாலாலா படம் குறித்து நான் விமர்சனம் வைத்தபோது, கேபிள் சங்கர் பொறுமையாக விளக்கம் அளித்தார்..
அண்ணன் உண்மை தமிழனோ, பிடித்தால் பார், இல்லைனா போ, யாருக்கும் நஷ்டம் இல்லை என சொல்லி விட்டார்...
அந்த அளவுக்கு படத்தை நேசிக்கிறார்,, கலை படைப்பை காதலிக்கிறார் என அதை புரிந்து கொண்டேன்...
இதுவும் என்னை பொறுத்தவரை ஒரு மறக்க முடியாத அனுபவம்..



3 கொஞ்சம் வெட்டி பேச்சு ( சித்ரா )

நகைசுவைக்கு  என்றே ஒரு வலைபதிவு என்றால் அது இதுதான்..

புண்படுத்தல், கீழ்தரமான உணர்வுகளை தூண்டி விடுதல், போன்றவை இல்லாமல் சிரிக்க வைக்க முடியும் என காட்டியவர் இவர்...இவரது பழைய பதிவுகளை கூட அவ்வபோது படிப்பேன்.. எப்போதும் சிரிக்க வைக்கும் இவர், சமிபத்தில் அழவும் வைத்து விட்டார்...
ஒரு குறிப்பட்ட பதிவு, என் பெர்சனல் வாழ்க்கையிலும் மிகவும் பயன்பட்டது... அந்த நேரத்தில் உதவியாகவும் இருந்தது...  விரிவாக பிறகு சொல்கிறேன்...
இவர் பதிவில் குறை என்ன

கடைசியில் சொல்கிறேன்



4 கே ஆர் பி செந்தில்



இவரது தெளிவான சிந்தனை எனக்கு பிடிக்கும்,,, சில கருத்துக்களை நான் ஏற்பதில்லை என்ற போதிலும், அவர் நம்புவதை அவர் சொல்கிறார் என்ற விதத்தில் அவர் கருத்துக்கள் எனக்கு முக்கியமானவை..

ஆன்மிகம், பணம் பற்றி அவர் ஒரு வாக்கியத்தில் விளக்கம் கொடுப்பது எனக்கு பிடிக்கும்... ( அது என்ன என்பது என் பதிவு ஒன்றின் பின்னூட்டத்தில் பார்க்கலாம் )அவர் எழுதும் தொடர் கட்டுரைகளுக்கு ரசிகன் நான்,,

எதிர் கருத்துக்களை அவர் கவனிப்பதில்லை என்பது என்னை பொறுத்தவரை ஒரு குறை...



5 நண்டு@நொரண்டு

யதார்த்தமான கருத்துக்களுக்கு சொந்த காரர் இவர்.. எழுத்தில் பண்பை கடைபிடிப்பவர்...

இவர் எழுத்தை படியுங்கள் என யாருக்கு வேண்டுமானாலும் தைரியமாக refer செய்யலாம்..

இதுதான் ஒரு விதத்தில் என்னை பொறுத்தவரை குறையும் கூட... நான் எதிர்பார்க்கும் சில விஷயக்கள், இதில் இருப்பதில்லை ( ஹி ஹி )



6 தீராத பக்கங்கள் மாதவராஜ்

சமூக பார்வை கொண்டவர்... புதியவர்களை ஊக்குவிப்பவர்...

நான் எழுத ஆரம்பித்தபோது, என்னை தன் பதிவின் மூலம் அறிமுகம் செய்தவர்...

எல்லாம் பிடித்து இருந்தும், பாலில் விஷம் கலந்தது போல, அவரது ஒரு நிலைப்பாடு எனக்கு பிடிக்காது..

ஊரில் நடக்கும் எல்லா பிரச்சினைகளுக்கும் ரஜினியும், எந்திரனும்தான் காரணம் என நினைப்பது, இவர் அனைத்தயுமே உணர்ச்சி வசப்பட்டுதான் பார்ப்போரோ என நினைக்க வைக்கிறது..

7 மனிதாபிமானம் துமிழ்

இந்த பதிவை மற்ற பதிவுகள் வரிசையில் வைக்க முடியாது... நிறைய விஷயங்கள் தெரிந்து கொள்ள முடியும்...

ஆனால் பயனுள்ள விஷ்ய்கள் தரும் இவர், அவ்வபோது ( நமக்கே தெரிந்த ) தேவையில்லாத விஷயங்களையும் சொல்வது எனக்கு பிடிக்காது



8 : பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.... ஜாக்கி சேகர்



எழுத்தாளர் ஜெயமோகனை "கவர்ந்த" பதிவு ஒன்று இருக்கிறது என்றால் அது இவர் பதிவுதான்... அந்த அளவுக்கு சுவையாக எழுத கூடியவர்,,, தினமும் படிக்கும் பதிவுகளில் இதுவும் ஒன்று..

ஆனால் நான் எதிர்பார்க்கும் சில விஷயங்களை இவர் எழுதுவதில்லை



9 கேபிள் சங்கர்..

சினிமா, கவிதை, கதை என இவரிடம் ரசிப்பதற்கு பல இருந்தாலும், நான் ரசிப்பது...

ஹி ஹி...சாப்பாடு கடை எனும் பகுதிதான்.

ஒரு காலத்தில், நான்  கம்ப்யூட்டர் பயன்படுத்துவது குறைவாக இருந்து.. வலை பூக்கள் படிப்பதும் குறைவே...

ஆனால் ஒரு பதிவை விடாமல் படித்தேன் என்றால் ,அது அந்த சாப்பாட்டு கடைதான்..

அவர் சொன்னதில் பலவற்றில் சாப்பிட்டும் இருக்கிறேன்..

பிடிக்காதது என்ன என்று பார்த்தால், அதீத மனித பண்பு..

அது என்ன ..அதனால்  நான் எப்படி ஏமாற்றம் அடைந்தேன் இப்போது சொலவது தேவையற்றது..

ஆனால், அது உயர் பண்புகளில் ஒன்று என்பதை மறுக்க முடியாது... அது ஒரு தவறு அல்ல...
தன தொழில் மேல் இருக்கும் ஆர்வம் , சரளமான எழுத்து , மற்றவரை மதிக்கும் பண்பு  என அவரிடம் கற்க வேண்டியவை நிறைய உள்ளன,,,
ஆனால் நான் சொன்ன அந்த மைன்ஸ் பாயின்ட் என்னிடம் இருக்க கூடாது என்பதில் நான் இன்னும் உறுதியானதற்கும் அவர்தான் காரணம் ;-)


10 நனைவோமா? ம.தி.சுதா

பல்வேறு தகவல்கலை வாரி வழங்கும் இவர் எழுத்தை தொடர்ந்து படிப்பவன் நான்.. பெரும்பாலான கருத்துகளில் எனக்கு உடன்பாடுதான்..

இவரிடம் எனக்கு பிடித்தது, இவர் எழுத்து ஸ்டைல்...

பிடிக்காதது, கடைசியில் சொல்கிறேன்...



இன்னும் பத்து பதிவுகள் பற்றி அடுத்த பதிவில் சொல்வேன்...

Monday, November 29, 2010

எரிகல், சூரியன், நாய் – தகவல் களஞ்சியம்

 

  • 1993 ல் , எரிகல் தாக்கி ஒரு செயற்கைகோள் அழிந்தது..இப்படி நிகழ்வது அபூர்வம்..

 

  • உலகில் அதிகமாக பயன்படுத்தப்படும் உலோகம் இரும்பு.. அதற்கு அடுத்த இடம் தாமிரம்…

 

 

  • கடல், நிலப்பகுதி என உலகில் இருக்கும் எல்லா தங்கமும் தோண்டி எடுக்கப்பட்டு விட்டால்,  பூமியில் இருக்கும் ஒவ்வொருவர்க்கும் இரண்டு கிலோ தங்கம் கொடுக்கலாம்…

 

  • ஐ பி எம் சேர்மனாக இருந்த தாமஸ் வாட்சனிடம் கம்ப்யூட்டர் விற்பனை வாய்ப்பு பற்றி கேட்கப் பட்டது…

       அதிக பட்சம் ஐந்து கம்ப்யூட்டர்கள் விற்பனை ஆகலாம்          என்றார் அவர்… 1943ல் நடந்தது இது…

  • 60 கி மீ வேகத்தில் ஒரு கார் பயணப்பட்டால், அது பூமியின் அருகில் இருக்கும் ( சூரியனை தவிர வேறு ) நட்சத்திரத்தை அடைய 48 மில்லியன் ஆண்டுகள் ஆகும்…       அதாவது 6,85,000 தலைமுறைகள் ஆகும்…

 

  • சூரியன் , பால்வெளி மண்டலத்தை ஒரு முறை சுற்றி வரும் காலம் காலம் , காஸ்மிக் ஆண்டு என அழைக்கப்படுகிறது ..

        இதற்கு 225 மில்லியன் ஆண்டுகள் ஆகும்..

..

  • எரிகல்லால் தாக்கப்பட்ட இறந்த ஒரே உயிரினம் என்ற பெருமையை ஒரு நாய் பெற்றுள்ளது…

          1911ல் எகிப்தில் இது நடந்தது…

 

  • சனி கிரகத்தின் அடர்த்தி, தண்ணீரை விட குறைவு,, தண்ணீரை விட லேசானது இது…

அதாவது, ஒரு மாபெரும் பாத்திரத்தில் தண்ணீரை நிரப்பினால் , அதில் சனி கிரகம் மிதக்கும்…

.

  • முதலையால் வாயை மூடி மூடி திறக்க முடியும்.. ஆனால் பக்கவாட்டில் அசைக்க முடியாது..

********************************************************************************************************

ஓக்கே… ரிலாக்ஸ் செய்ய ஒரு புதிர்..

ஒரு முப்பது வயது ஆள் , 25 வயது பெண்ணை திருமணம் செய்து கொண்டான்.. இருவருக்கும் அது முதல் திருமணம்…

இனிய வாழவு வாழ்ந்த பின், தன் ஐம்பதாவது வயதில் அவள் இறந்தாள்..

மனைவியை இழந்த சோகத்தில் வாழந்த அவன் , தன் 80 ஆவது வயதில் இறந்தான்..

மனைவி இல்லாமல் எத்தனை ஆண்டுகள் அவன் இந்த பூமியில் வாழ்ந்தான் ?

( க்ளு ..ஒரு ட்விஸ்ட் இருக்கிறது…. )

Sunday, November 28, 2010

விண்வெளிக்கு போன வில்லேஜ் ஆளு- வரிவிலக்கு தேவைப்படாத சிறுகதை

 

பாரும்மா…. அவசரப்படாம யோசித்து கை எழுத்து போடு.. உன் வாழ்க்கையே மாற்றி அமைக்கும் விஷ்யம் இது “

விஞ்ஞானி ஜோசப் சொல்ல, காயத்ரி மெல்ல சிரித்தாள்..

“ எனக்கு வேறு வழி இல்லை சார்.. நீங்க இதுக்காக கொடுக்கும் பணம் எனக்கு முக்கியம்… யோசிக்கும் நிலையில் நான் இல்ல, “

ஜோசப் அவளை அன்புடன் பார்த்தார்..

”பாரு மா… பணத்துக்காக செய்வதா நினைக்காதே,,, நீ செய்வது ஓர் அற்புதமான காரியம்,,, மனித வரலாற்றுல இது ஒரு மாபெரும் சாதனை “

“ சார்… என் வேதனைதான் எனக்கு பெருசு… நீங்க சரியான விஷயம்தான் செய்வீங்கனு எனக்கு தெரியும்…  அதனால சாதனை பற்றி கவலை இல்லை..”image

” இருந்தாலும் நீ என்ன செய்யபோறேனு உனக்கு தெரியணும்…உனக்கு புரியறமாதிரி எளிமையா சொல்றேன் ..

பிளாக் ஹோல் பற்றி கேள்விப்பட்டு இருக்கலாம்… இதன் ஈர்ப்பு அபரிமிதமா இருக்கும்… ஒளியைக் கூட விட்டு வைக்காது…

ஒரு விதத்தில் உலகின் அழிவு என்பது பிளாக் ஹோல்தான்.. எளிமையாக சொல்ல வேண்டும் என்றால் நடசத்திரத்தின் எரிபொருள் தீர்ந்த நிலையில் கருந்துளையாக மாறும்… வெள்ளை குள்ளர்கள் என்று ஒரு விஷ்யமும் உண்டு..

இதை ஆராய்வது எளிதல்ல…  இதன் எல்லைக்குள் நுழைந்தால் மீண்டும் வெளியே வர முடியாது “

டீ அருந்தி சற்று ரிலாக்ஸ் செய்து விட்டு அவர் தொடர்ந்தார்..

” இன்னொரு பண்பும் உண்டு.. இதன் அருகில் செல்ல செல்ல நம நேரம் மெதுவாக செல்ல தொடங்கும்… அதாவது , எளிமையாக சொல்ல வேண்டும் என்றால், பூமியில் ஒரு வருடம் ஆனால், அதன் செல்பவருக்கு ஒரு மாதம்தான் ஆகி இருக்கும் .. ஒளியின் வேகவும் , இதன் ஈர்ப்பு வேகமும் ஒன்றாக இருப்பதால் இது நிகழ்றது….

ஆனால் இதை ஆராய முடியாமல் இருந்தது…

இந்த நிலையில்தான், பிரபஞ்சம் ஒரு கட்டத்தில் அழிந்து விட்டு மீண்டும் புதிதாக துவங்கும் என்பது கண்டுபிடிக்கப்பட்டது..

அப்படி பார்த்தால், பிளாக் ஹோலுக்கு எதிராக வெண் துளை என ஒன்று இருக்க வேண்டும் என்பது உறுதியாகிறது.. இப்படி ஒன்று இருப்பதை யாரும் ஏற்கவில்லை.. இப்போது ஏற்றுத்தான் ஆக வேண்டும்..

 

இதற்கு பிளாக் ஹோலுக்கு எதிரான பண்பு இருக்கும்.. இது எல்லாவற்றையும் தள்ளிவிட பார்க்கும்.. இப்படி தள்ளப்பட்ட ஒன்றுதான் இந்த பிரபஞ்சம்… நம் பூமி.. நம் இந்தியா.. நம் தமிழ் நாடு..

எல்லா நட்சத்திரங்களும் கருந்துளையால் ஈர்க்கப்பட்டு காணாமல் போகும்.. பிறகு வெண் துளையால் துப்ப்பட்டு , மீண்டும் உருவாகும்… மீண்டும் அழிவு… மீண்டும் உருவாதல்… எல்லையற்ற விளையாட்டு என ஆன்மீக ரீதியாக புரிந்து கொண்டாலும் எனக்கு ஆட்சேபம் இல்லை….

 image

இந்த வெண் துளையை  முதன் முதலில் ஆராய போவது நாம்தான் “

காயத்ரி திகைத்தாள்..

“ நான் போய் என்ன ஆராய்வேன்..எனக்கு என்ன தெரியும் ? “

“ ஆரய்ச்சியாளர்கள் போக தயங்குறாங்க… ஆனால் அதன் அருகில் செல்ல செல்ல ,  கருந்துகளுக்கு எதிரான விளைவு ஏற்படும்.

அதாவது நேரம் வேகமாக செல்ல ஆரம்பிக்கும்…  உனக்கு பத்து வருடம் ஆனால், இங்கு இருப்பவர்களுக்கு ஒரு மாதம்தான் ஆகி இருக்கும் “

காயத்ரிக்கு புரியவில்லை

“ இதனால் என்ன பிரச்சினை ? “

“ அங்கு இருபது வருடம் இருந்து விட்டு, இங்கு வந்தால் , இங்கே இருப்பவர்களுக்கு இரண்டு மாதங்கள்தான் ஆகி இருக்கும் ..

இன்னும் எளிமையாக சொன்னால், நீ போய் விட்டு வரும்போது, உன் வயதும் உன் அம்மா வயதும் ஒன்றாக ஆகி இருக்க கூடும்… உன் அண்ணனை விட உனக்கு அதிக வயதாகும் வாய்ப்பும் இருக்கிறது ..

தன் இளமையை, வயதை இப்படி இழக்க யாரும் விரும்பவில்லை… எனவே தான் பெரும் பணம் கொடுத்து உன்னை ஒப்பந்தம் செய்துள்ளோம்..

நீ ஆராய்ச்சி எல்லாம் செய்ய வேண்டியது இல்லை… போய் விட்டு , ஒரு வருடம் கழித்து இங்கே வந்தால் போதும்.. அதாவது எங்களுக்கு ஒரு வருடம்.. என் கணக்குப்படி  நீ அப்போது ஐம்பது வயது பெண் ஆகி இருப்பாய்..

இது மட்டும் நடந்தால், பெரு வெடிப்பு கொள்கை உள்ளிட்ட பலவும் அடிபட்டு போய் விடும்.

வெண் துகள்தான் அனைத்துக்கும் ஆதாரம் எனபதை பாட திட்டத்தில் சேர்க்கலாம் “

காயத்ரி திகைத்தாள்..

“இப்போது எனக்கு இருபது வயது..  ஒரு வருடம் கழித்து எனக்கு ஐம்பது வயது.ஆகி விட கூடும்.

கல்யாணம், காதல் எல்லாம் கன்வாக போகும்..

ஆனால் பணம் முக்கியம்… குடுமபம் முக்கியம்.. இந்த தியாகம் செய்துதான் ஆக வேண்டும் “

“ எனக்கு ஓக்கே சார்  ..

ஆனா ஒண்ணு சார்… நீங்க கொடுக்க்ற பணம் , என் அப்பா கான்சர் ஆப்பரேஷனுக்கும், தங்கை படிப்புக்கும் சரியா போகும்.. ஒரு வருஷம் கழித்து வரும் என் வாழ்க்கை என்ன ஆகும் ? “

“ உன் பெர்சனல் வாழ்க்கை பற்றி நீதான் முடிவெடுக்கணும்.. ஆனால் வேலை பற்றி கவலை வேண்டாம்… நேராக இங்கே வா.. நான் இங்கேயே உனக்கு ஒரு வேலை போட்டு தரேன் “

 

கிராமத்தில் இருக்கும் குடும்பத்தினருக்கு எப்படி விளக்குவது என தெரியவில்லை…

ஆனால் பணம் கிடைத்தது சந்தோஷமாக இருந்தது…

அண்ணன் அருண் மிகவும் மகிழ்ந்தான்…

“ அப்பாவை நல்ல ஆஸ்பத்திரில சேர்க்கலாம்.. கோமதியை நல்ல காலேஜ்ல சேர்த்து , அவ ஆசைப்ப்ட்ட மாதிரி டாகடர் ஆக்கலாம்.  அம்மாவுக்கு ஒரு நல்ல வீட்டை கட்டி குடி வைக்கலாம்.. நான் பார்த்துக்றேன் “ என்றான் உற்சாகத்துடன்…

வெளி நாடு செல்வதாக சொல்லி கிளம்பினாள்…

”உன்னை நினைத்து ரொம்ப பெருமை படுறேன்மா… நம்ம இந்தியா உலக அரங்கில் தலை நிமிர்ந்து நிற்க நீ உதவ போற… தமிழ் நாடு தலை நிமிர போகுது…” 

லட்சிய வெறியுடன் பேசிய ஜோசப்பை பெருமிதத்துடன் பார்த்தாள்..

 

பணத்துக்காக செல்லும் நினைப்பு மாறி, இந்தியா வல்லரசு ஆக தான் ஒரு கருவியாக இருப்பதை நினைத்து உற்சாகத்துடன் கிளம்பினாள்…

1.12.2010….

விண்கலம் தன் சரித்திர பயணத்தை தொடங்கியது…

2012

மீண்டும் தன் கிராமத்தை நோக்கி சென்று கொண்டிருத்தவளுக்கு , தன்னை எப்படி குடும்பத்தினர் எதிர் கொள்வார்கள் என பார்க்க ஆவலாகவும், டென்ஷனாகவும் இருந்தது.,..

இவர்களை பார்த்த பின்புதான் , ஜோசப் சாரை பார்க்க வேண்டும்.. இங்கு இரண்டு வருடங்கள் ஆகி இருந்தாலும், தன்னை பொறுத்த வரை எத்தனை காலம் கடந்துள்ளது என்பதை அவர்தான் கணிக்க முடியும்..

அவளுக்கு என்னவோ பல யுகங்கள் போனது போல இருந்தது…

’கிராமமும் , மக்களும் அப்படியேதான் இருக்க போகிறது… நாம்தான் வெகு காலம் கடந்து சென்று விட்டோம்…’

கிராமத்தில் நுழைந்ததுமே அந்த வித்தியாசத்தை கவனித்தாள்..

கிராமத்துக்கு அழகு சேர்த்த குன்று அங்கே இல்லை…

சின்னஞ்சிறிய கற்குவியல்தான் காணப்பட்டது.. கல் ஏற்றுமதிக்காக அதை உடைக்கிறார்கள் என்பது புரிந்தது…

ஒரு குன்றையே வீழ்த்தி விட்டார்களே…

வேதனையுடன் நினைத்து கொண்டாள்…

மரங்களும் கூட காணவில்லை…

புதிய அடுக்குமாடி கட்டடங்கள் எழும்பி கொண்டு இருந்தன…

இவ்வளவு விரைவாக இபப்டி அழிவா..

தன் வீடு இருந்த தெரு அடையாளம் தெரியாத அள்வு மாறி இருந்தது…

அவளுக்கு தெரிந்த யாரும் இல்லை…

ஒரு பெரியவரை அணுகினாள்.

“ ஐயா,இங்கே ராமையானு ஒருத்தர் வீடு இருந்ததே..அவங்க எங்கே? “

அவர் கண்ணை சுருக்கி யோசித்தார்..

“ ஓ ..அவரா..  பாவம்.,.. அவர் வயலை அரசு கையகப்படுத்தி , அவர் பிழைப்பில் மண்ணை அள்ளி போட்டதால , தற்கொலை செஞ்சுகிட்டாரு..பாவம்..

அவர் பொண்ணு ஸ்கூல் படிப்பை முடிக்கிறதுக்கு முன்பே எவனைடோவோ ஓடி போச்சு,,,, ”

அதிர்ந்தாள் அவள்..

காதலிக்கும் வயசா அவளுக்கு… சாகும் வயசா அப்பாவுக்கு,.. அய்யோ…

“ அவர் பையன் சொத்தை எல்லாம் குடிச்சே அழிச்சு எங்கே போய் தொலைச்சுட்டான்… கவனிக்க ஆள் இல்லாம , அந்த அம்மாவும் போய் சேர்ந்துட்டாங்க “

தன்னை விட இவர்களுக்குத்தான் காலம் வேகமாக ஓடி இருக்கிறது…

விரக்தியுடன் விண்வெளி ஆய்வு மையத்தில் நுழைந்தாள்…

முன்பே செய்து இருந்த ஏற்பாடுகளால், நுழைவதில் பிரச்சினை இல்லை..

“ யாரைமா பார்க்கணும் “

“ விஞ்ஞானி ஜோசப் “

“ ஓ அவனா,,, இந்தியாவை வல்லரசு ஆக்குறேனு அப்படி இப்படினு கதை விட்டு , மக்கள் பணத்தை தின்னான்..

கடைசில, விஞ்ஞானிகள் மா நாடு ஊழல்ல மாட்டி இப்ப ஜெயில இருக்கான் … அவனோட சேர்ந்த கும்பலே கம்பி எண்ணுது.,..அவனுங்க செஞ்ச ஆராய்ச்சி எல்லாம் குப்பை தொட்டிக்கு போய்டுச்சு“

பல ஆண்டுகளில் நடக்க வேண்டிய தீமைகள் , சில ஆண்டுகளிலேயே முடிந்து விட்டதே..

ஒரு வேளை வெள்ளை துளை இங்குதான் இருக்கிறதா? நாம் இருப்பதே அதில்தானா?

அடிப்படைகள் சரி இல்லாமல் வல்லரசு கனவு காண்பது அபத்தம்…

இந்த ஆராய்ச்சிக்கு உடன்பட்டதே தவறு…

“ சரிமா… நீங்க யாரு “

அவள் விரக்தியுடன் சொன்னாள்

“: நான் யாரும் இல்லை “

தளர்வுடன் வெளியேற தொடங்கினாள்…

நந்தலாலா- கேபிள் சங்கர் அவர்கள் விளக்கம்

 
நந்தலாலா படத்தை பற்றி கேபிள் சங்கர் அவர்களுக்கு கடிதம் எழுதி இருந்தேன்..
அவர் சினிமா பற்றிய ஆழ்ந்த அறிவு கொண்டவர் என்பதாலும் , வருங்கால தமிழ் திரைதுறையில் முக்கிய பங்களிப்பை வழங்க இருப்பவர்களில்  ஒருவர் என்பதாலும்  , அவர் கருத்து எனக்கு முக்கியமாக தோன்றியது.. முக்கியமாக சொல்வதை, உணர்ச்சி வசப்படாமல் தெளிவாக சொல்லக்கூடியவர் அவர்..
எனவேதான் அவருக்கு கடிதம் எழுதினேன்…
  அவர் விளக்கமாக அளித்த பதில் அனைவருக்கும் பயன்படும் என்பதால், அவர் பதில் இதோ உங்கள் பார்வைக்கு…
உடனடியாக விளக்கம் அளித்த அவருக்கு , உங்கள் அனைவர் சார்பாக நன்றி…
*********************************************************************************************

நந்தலாலா- அண்ணன் கேபிள்ஜி க்கு ஒரு மெயில் …

இனிய நண்பர் கேபிள் அவர்களுக்கு.,
நலமா ?image
எப்போதும் பின்னூட்டம் வழியாக உங்களுடன் உரையாடும் நான் இப்போது மெயில் அனுப்ப காரணம் ந்ந்தலாலா எனும் டெம்ப்ளேட் படம்...
உங்களது பெரிய பிளஸாக நான் கருதுவது, சராசரி மனிதனை புரிந்து வைத்து கொண்டுள்ள தன்மைதான்..

Saturday, November 27, 2010

LOVE PARADOX- வரி விலக்கு தேவையில்லாத சிறுகதை

ன்று ஞாயிற்று கிழமை… ரீமா வீட்டில்தான் இருப்பாள்.. நம் மனதில் இருப்பதை அவளிடம் சொல்லிவிட வேண்டும் “
சற்று டென்ஷனாகத்தான் அவள் வீட்டுக்கு சென்றான் ரகு…
நல்ல வேளை.. அவள் வீட்டில் இருந்தாள்
அதை விட நல்ல வேளை… வேறு யாரும் இல்லை..
“ வாங்க..என்ன திடீர்னு ..” அன்புடன் வரவேற்றாள்..
“ கொஞ்சம் பேசணும் “ தயங்கினான் அவன்..
டீ சாப்பிடபடியே மெல்ல சொன்னான் ..
“ ஐ லவ் யூ “

நந்தலாலாவா, நொந்தலாலாவா- சராசரி ரசிகன் பார்வையில்…

ஒரு சராசரி தமிழனுக்கு ஆயிரம் பிரச்சினைகள்…
சரி, கொஞ்ச நேரம் படமாவது பார்க்கலாம் என்று பார்த்தால் அதே குத்து பாட்டு, அதே அறிமுகப்பாட்டு அதே  ப்ஞ்ச் டயலாக் ,ஃபார்முல படங்கள்தான் பார்க்க கிடைக்கின்ற்ன..
இதை பார்க்க, ட்ராஃபிக்கில் நீந்தி சென்று, பெட்ரோல் செலவு செய்து தியேட்டருக்கு சென்று பார்க்க வேண்டுமா என பலர் திரை அரங்கே செல்வதில்லை…

Friday, November 26, 2010

 எந்திரன் பாரடக்ஸ் &; இன்னும் பல சுவையான பாரடக்ஸ் – படு பயங்கரமாக யோசிக்க நினைப்பவர்களுக்கு மட்டும்

எந்திரன் படம் பார்த்து ரசித்து வருகிறோம்..
படத்தின் விறுவிறுப்பில் அதில் வரும் ஒரு சுவையான வசனத்தை கவனிக்க தவறி விட்டோம்..
என்ன அது ?
ரோபோ ரஜினியை கேள்வி கேட்டு சோதிப்பார்கள் அல்லவா?
அப்போது ஒரு கேள்வி..( எளிமை கருதி கருத்தை மட்டும் வைத்துக்கொண்டு கேரக்டர்களை மாற்றி இருக்கிறேன் )
முயலுக்கும் ஆமைக்கும் போட்டி வைத்தால் , ஆமைதான் வெற்றி பெறும் என தர்க்க ரீதியாக நிரூபிக்கப்பட்டு இருக்கிறதே என்பது கேள்வி..  ( நாம் கேள்வி பட்டு இருக்கும் முயல்- ஆமை கதை அல்ல.. தர்க்க ரீதியான முடிவு )
அது பாரடக்ஸ் என ரஜினி பதில் அளிப்பார்..
அது என்ன பாரடக்ஸ் என்பதையும் இது போன்ற இன்னும் சில சுவையான முரண்பாடுகளையும் பார்க்கலாமா?

பயங்கரமாக யோசிக்க விரும்புபவர்கள் களத்தில் இறங்குங்கள்


Thursday, November 25, 2010

தேவே கவுடாவை குழப்பிய சாய் பாபா- சுவையான தகவல்கள்



த்ய சாய் பாபாவின் 85 ஆவது  பிறந்த நாளை முன்னிட்டு, தினமணி சிறப்பு இதழ் ஒன்றை வெளியிட்டுள்ளது..
அதிலிருந்து சில சுவையான பகுதிகள் உங்கள் பார்வைக்கு..

( இவை என் கருத்துக்கள் அல்ல... என் கருத்துக்களை பிரதிபலிப்பவையும் அல்ல..  ஒரு பார்வையாளனாக நான் பார்த்ததை பகிர்ந்து கொள்கிறேன் )

***********************************************************************
பிரதமரா , முதலமச்சரா ?  



பெங்களூரில் ஒரு விழா. கர்நாடக முதல்வர் தேவே கவுடா உள்ளிட்ட பிரமுகர்கள் மேடையில் இருந்தார்கள்.. பாபா அருளாசி வழங்க தன பேச்சை ஆரம்பித்தார்..

இந்த ஐந்து அறிவியல் உண்மைகள் உங்களுக்கு தெரியுமா?

சில அறிவியல் உண்மைகள் உங்கள் பார்வைக்கு,.
முதலில் அந்த உண்மைகளை பார்க்கலாம். அதற்கு பிறகு அதன் பின் இருக்கும் டெக்னிக்கல் விஷயங்களை பார்க்கலாம்..
1. காரில் தப்பி செல்லும் ஒருவனை உடனடியாக கொல்ல வேண்டுமானால் , சுலபமான வழி , அந்த காரின் பெட்ரோல் டேங்கை துப்பாக்கியில் சுடுவதுதான்.. இதனால் கார் தீப்பற்றி வெடித்து சிதறும்… ( பல சினிமாக்களில் இந்த டெக்னிக்கை பயன்படுத்துகின்றனர் )
2. மின்னல் ஒரே இடத்தை இரு முறை தாக்காது
3. எல்க்ட்ரிக்கல் கார் பயன்படுத்தினால் , சுற்றுச்சூழல் சீர்கேடு இருக்காது..
4  நிலவின் ஒரு பகுதியில் சூரிய ஒளி படுவதே இல்லை.. அது எப்போதும் இருட்டாக இருக்கும்.
5 பரிணாம வளர்ச்சி என்பது தாழ்ந்த நிலையில் இருந்து உயர்ந்த நிலைக்கு செல்வதே ஆகும்.. அதுதான் உலகில் இருக்கும் எல்லா உயிர்களிலும் நடந்து வருகிறது..எல்லா உயிர்களும் சிறப்பான நிலையை நோக்கி செல்கின்றன..
இந்த உண்மைகளைப்பற்றி அலசுவதற்கு முன் ஒரு விஷயம்..

உலகம் எங்கும் ஒரே கதைதான்- நிர்வாகம் அலட்சியம், சுரங்கத்தில் தொழிலாளர்கள் ஒட்டுமொத்தமாக பலி- நியுசிலாந்து கொடூரம்

நியுசிலாந்தில், ஐந்து நாட்களாக சுரங்கத்தில் சிக்கி , உயிருக்கு போராடிய தொழிலாளர்கள் அனைவரும் (இருபத்து ஒன்பது பேர் ) , காப்பாற்ற வழியின்றி இறந்தது அந்த நாட்டில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தி உள்ளது... நாடே துக்கத்தில் மூழ்கி இருப்பதாக அந்த நாட்டு பிரதமர் வேதனை தெரிவித்துள்ளார்..




கடந்த வெள்ளியன்று , நிலக்கரி சுரங்கத்தில் வேலை செய்து கொண்டு இருந்த தொழிலளர்கள், மீத்தேன் வாயு வெடித்து சிதறியதால், சுரங்கத்தில் சிக்கினர்... இருவர் மட்டும் அதிர்ஷ்ட வசமாக தப்பினர்..



பதினேழு வயது முதல் அறுபது வயது வரையிலான தொழிலார்கள் இவர்கள்...



உடனடியாக இவர்களை காப்பாற்றுமாறு, அவர்களின் உறவினர்கள் முறையிட்டனர்..



மீண்டும் மீத்தேன் வெடிப்பு ஏற்பட கூடும் என்ற பயம் மீட்பு பணியினரின் வேலையை தாமதப்படுத்தியது...



எனவே நச்சு வாயுக்களை கண்டு பிடிக்கும் எலெக்ட்ரானிக் கருவிகளும் , ரோபோக்களும் பயன்படுத்தப்பட்டன..



சிக்கியவர்கள் காப்பாற்றுங்கள் என அழுது புரண்டனர்.. ஆனால் சிக்கியவர்கள் உயிருடன் இருக்க வாய்ப்பில்லை... இப்போது மீட்பு படையை அனுப்ப்பினால், அவர்களும் சேர்ந்து இறக்க நேரிடும் என்று நிர்வாகம் தயங்கியது.. எனவே இழுபறி நீடித்தது..



கடைசியாக, அவர்களின் கோரிக்கைக்கு செவி சாய்த்து மீட்பு படை அனுப்ப முடிவு எடுக்கப்படபோது, இன்னொரு முறை மீத்தேன் வெடிப்பு நிகழ்ந்தது...



சுரங்க முதன்மை நிர்வாகி பீட்டர் விட்டால் கூறுகையில், " அனைவரும இறந்து விட்டார்கள்... இறந்த உடல்களை எடுப்பது கூட முடியாத காரியம்.. மீண்டும் விபத்து நிகழலாம் .. இரண்டாவது விபத்துக்கு முன்பே அவர்கள் இறந்து இருப்பார்கள்.. மீட்பு படையை அனுப்பி இருந்தால் அவர்களு சேர்ந்துதான் இறந்து இருப்பார்கள்.. எனவே நாங்கள் தாமதம் செய்ததாக சொல்வது தவறு " என்றார்..



இறந்தவர்களின் உறவினர்களோ , "உடனடியாக செயல்பட்டு இருந்தால் காப்பாற்றி இருக்கலாம்.. இனி உண்மை வெளிவர வாய்ப்பில்லை.. இரண்டாம் விபத்துக்கு முன் தாங்கள் உயிருடன் இருந்ததாக சாட்சி சொல்ல யார்டும் வரப்போவதில்லை " என சோகத்துடன் சொல்கின்றனர்..



நம் நாடு சிறிய நாடு... இதில் இத்தனை பேர் ஒட்டு மொத்தமாக இறந்தது , நமக்கு பெரிய இழப்பு.. நம் சகோதர்களை இழந்து நாடே சோகத்தில் மூழ்கி உள்ளது என நியுசிலாந்து பிரதமர் தெரிவித்துள்ளார்..



உலகம் எங்கும் பாதிக்கப்படுவது அப்பாவி தொழிலாளர்கள் தான் போல ...

Wednesday, November 24, 2010

ஜெயமோகனும் சைன்ஸ் ஃபிக்‌ஷனும்

ஜெயமோகன் என்றால் நம் நினைவுக்கு வருவது, தத்துவ விசாரணை ,இலக்கிய ஆய்வு மற்றும் ஆழ்மன தரிசனங்கள், படிமங்கள், தொன்மங்கள் , பரப்பிலக்கியம் போன்ற வினோதமான வார்த்தைகள்.. மற்றும் குமரி மாவட்ட தேன் தமிழும், கொஞ்சும் மலையாளமும் நினைவுக்கு வரும்..

அறிவியல் கதைகள் என்றால் நம் நினைவுக்கு வருவது, வேற்று கிரகவாசிகள், வினோத உயிரிகள், விண்வெளி பயணம் , வெளி நாட்டினர் ஆராய்ச்சி போன்றவை..
இரண்டும் வேறு வேறு டிபார்ட்மெண்ட்… இவை இரண்டும் ஒன்று சேரும் நான் நினைத்து பார்த்தது இல்லை…

Tuesday, November 23, 2010

மந்திரப் புன்னகை- எனது பார்வையில்

 மந்திரப் புன்னகை
எல்லா கெட்ட பழக்கங்களும் உள்ள புத்திசாலி எஞ்சினியர்  என்று ஆரம்பமே அமர்க்களம்..   இந்த கேரக்டரை சாஃப்ட்வேர் எஞ்சினியர் அல்லது கால்
செண்டர் ஸ்டாஃப் என சொல்லாமல் விட்டதே வித்தியாசமாக இருக்கிறது.
அயன் ராண்ட் நாவலில் வரும் கதாநாயகன் போல என நினைக்கும்போதே அப்படி இல்லை என தெரிகிறது.
யாருடனும் ஒட்டாமல் வாழும் இவன் , ஒரு பெண்ணை நேசிக்க ஆரம்பிக்கிறான்.. அவளும் நேசிக்கிறாள்…
பொறுக்கியான உன்னை ஒரு பெண் காதலிக்கிறாள் என்றால் அவளும் உன்னைப்போல ஒரு சாக்கடையாகத்தான் இருக்க முடியும்,, அவ்ளை நம்பாதே என அவர் தந்தை எச்சரித்தும் அவளையே திருமணம் செய்ய முடிவு செய்கிறான்..
இந்த நேரத்தில் அவள் இன்னொருவருடன் படுக்கையில் இருப்பதை பார்த்து அதிர்கிறான்… நாமும் அதிர்கிறோம்…

Monday, November 22, 2010

எண்ணங்களுக்கு அப்பால்… – ஜே கிருஷ்ணமூர்த்தி

தத்துவ ஞானி ஜே கிருஷ்ணமூர்த்தின் நாள் குறிப்பு இங்கே …  (அடைப்புக்குறிக்குள் இருப்பது, அடியேனின் கமெண்ட் ..ஹி ஹி)

*************************************************************************************************
image
அவர் ஓர் அறிஞர். ப்ல புத்தகங்களை படித்தவர்.. ஏதாவது பேசும்போது, அவற்றில் இருந்து அனாயசமாக மேற்கோள் காட்டுவார். புத்தகம் சொல்வதை தவிர இவருக்கு என்று தனியாக சிந்தனை இருக்கிறதா என நமக்கு தோன்றும்.
           அவருக்கு என்று அல்ல.. உண்மையில் சொந்த சிந்தனை , சுய சிந்தனை என்று ஒன்று கிடையாது. எல்லா சிந்தனையுமே ஏதாவது ஒரு அச்சில் வார்க்க்கப்பட்டதுதான் . ( பெரியார் பாசறையில் வளர்ந்தவர்கள், கடவுள் இல்லை என நம்புவார்கள்.. ஓர் ஆன்மீக சூழ்  நிலையில் வளர்பவர்கள் , கடவுள் இருக்கிறார் என நம்புவார்கள்.. இரு தரப்புமே தாம் சுய சிந்தனையாளர்கள் என்றுதான் நினைத்துக்க்கொள்வார்கள் )
          நம் சுற்றுப்புறமே நம் சிந்தனையை உருவாக்குகிறது.. எனவே சுதந்திரமான சிந்தனை என்று ஒன்று கிடையாது.. சிந்தனை நமக்கு தெளிவையும் அளிக்காது.

Sunday, November 21, 2010

பதிவர் நர்சிம் எனக்கு தந்த கவிதையும், கவுரவமும்

ஒரு காலத்தில் கம்ப்யூட்டர் என்றால் ஆங்கில மொழியை பயன்படுத்தி இயக்கப்படும் ஒரு கருவி என்ற எண்ணமே எனக்கு இருந்து வந்தது..
வெவ்வேறு மாநிலங்களில் பணியாற்றி வந்த நிலையில், தமிழுக்கும் கம்ப்யூட்டருக்கும் சம்பந்தம் உண்டு என நான் நினைத்ததே இல்லை..
அதன் பின் தமிழ் நாட்டுக்கு வந்த பின் , சில சமயம் தமிழ் பிரிண்ட் அவுட் தேவைப்படும்போது , தமிழ் வசதி இருக்கும் கடைகளை தேடி அலைந்த காலம் எல்லாம் உண்டு..
தற்செயலாகத்தான் தமிழில் எழுதப்படும் வலைப்பூக்கள் பற்றி எனக்கு தெரியவந்தது…
அட,,, இத்தனை விஷயங்கள் தமிழில் எழுதுகிறார்களே என்ற பிரமிப்பு ஏற்பட்டது…
அதன் பின் ரசித்து படிக்க ஆரம்பித்தேன்… பத்திரிக்கைளை விட பதிவகள் என் இதயம் கவர்ந்தன…
குறிப்பாக நர்சிம் போன்ற பதிவர்களின் எழுத்துக்களை பார்க்கும்போது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கும்…
என் தமிழ் ஆர்வம் மீண்டும் உயிர் பெற்றது இது போன்ற எழுத்துக்களால்தான் .
அந்த கால கட்டத்தில் என்னிடம் கணிணி இல்லாததால் , அலுவலகத்தில் மட்டுமே வலைப்புக்களை படிக்க முடியும்… எனவே சில பதிவுகளை பிரிண்ட் எடுத்து வைத்துக்கொள்வது வழக்கம்..
அப்படி பிரிண்ட் எடுக்கும் எழுத்துக்களில்  பதிவர் நர்சிமின் எழுத்துகளும் ஒன்று..
நான் ஏன் அப்படி சொல்கிறேன் என்று அவர் கவிதைகள், கதை போன்றவற்றை படித்தால் , உங்களால் புரிந்து கொள்ள முடியும்..
குறிப்பாக அவரது, குறுந்தொகை, சங்க இலக்கிய விளக்கங்கள் எத்தனை முறை வேண்டுமானாலும் படிக்கலாம் . இதை க்ளிக் செய்து படித்து பாருங்கள்
அவர் கவிதை போல ஒரு கவிதையை என் வலைத்தளத்திலும் பிரசுரித்தால் நன்றாக இருக்குமே என நினைத்து பல நாட்கள் முயன்று பார்த்தேன்..
முடியல..
அவர் கவிதை போல அவர் மட்டுமே எழுத முடியும் என உணர்ந்து அவரிடமே கேட்டேன்..My Photo
அவர் தந்த கவிதை , இதோ உங்கள் பார்வைக்கு ..
அவர் எனக்கு தந்தது கவிதை மட்டுமல்ல… கவுரவுமும் கூட ….

படித்தவற்றில் பிடித்தவை..

 

 

சென்ற வாரம் படித்தவற்றில் பிடித்தவை..

 

1. பொய்த்தேவு- க  நா சுப்ரமணியம்

                  ஒரு கஷ்டமான சூழலில் பிறக்கும் சோமுப்பயல்  , சோமு பண்டாரமாக பரிணாம வளர்ச்சி அடைந்து இறப்பது வரையிலான வாழ்க்கையைப்பற்றிய தேடல்தான் நாவல்..

                      படிக்கலாமா வேண்டாமா என்ற ஆழ்ந்த யோசனைக்குப்பின் தான் படிக்க ஆரம்பித்தேன்.. ஆனால் படிக்க ஆரம்பித்ததும்தான் இதை இத்தனை நாள் தவற விட்டது தவறு என உணர்ந்தேன்..

               புரியும்படியான ச்ரளமான எழுத்து…  சீரான கதைப்போக்கு..

                கடவுள்  இருக்கிறார் , இல்லை என்ற விளையாட்டு ஒரு்புறம்,,, அதை விட்டு விடுவோம்..

கடவுள் இருக்கிறார் என சொலபவர்களுக்கும், இல்லை என சொல்ப்[அவர்களுக்கும், இந்த பிரச்சினையில் அக்கரையே இல்லாத ஒருவர்களுக்கும் ஒரு பொதுத்தனமை இருக்கிறது..

                           இந்த மூன்று பிரிவில் ஒன்றில்தான் நாம் இருப்போம்.. நம்மை வழினடத்துவது என்ன என பார்த்தால், நம் சிந்தனைகள், லட்சியங்கள், ஆசைகள் , கனவுகள் போன்றவைதான்… ஆகவே இவைதாம் நம் தெய்வங்களாக இருக்கின்றன…

ஒரு கட்டத்தில்  நாம் ஆராதிக்கும் பாலுணர்வு, எதிர்பால் கவர்ச்சி போன்றவை , இன்னொரு கால கட்டத்தில் அலுப்பால மாறக்கூடும்.. பணம் , புகழ் போன்றவையும் ஒரு கட்டத்தில் தெய்வமாக இருக்கலாம்.. ஒரு கட்டத்தில் பொய் தெய்வமாக மாறலாம்… 

                 ஒவ்வொரு நொடியிலும் கூட நம் தெய்வங்கள் மாறிக்கொண்டே இருக்கலாம் ..

இந்த கணம் தெய்வமாக இருப்பவை அடுத்த கணம் பொய்த்தேவாக மாறலாம்…

ஆழ்ந்த பாதிப்பை ஏற்படுத்தும் நாவல்… சிறிய நாவல்தான் ..தைரியமாக படிக்கலாம்….

கண்டிப்பாக படிக்கவேண்டிய நாவல்..

 

2. இயேசுவின் தோழர்கள்..- இந்திரா பார்த்தசாரதி..

கம்யூனிஸ்ட் நாடுகளில் சொர்க்கம் குடி இருக்கிறது என ஒரு காலத்தில் நம்பப்பட்டது…

அதன் பின் , சோவியத் யூனியன் வீழ்ந்த நிலையில் , கம்யூனிசம் என்றால் கொடூரம் என்ற கருத்து வலுப்பட்டது..

உண்மையில் அங்கு வாழ்க்கை என்ன, அங்கு என்ன பிரச்சினை என்றெல்லாம் சரியாக சொல்லும் நாவல்கள் இல்லை..

      இந்த நாவல் கம்யூனிஸ்ட் ஆட்சி நடந்த போலந்து நாட்டில் நிகழ்கிறது…

பிரச்சார நெடி எதுவும் இல்லாமல் , யதார்த்தமாக இருப்பது நாவலின் சிறப்பு…

போலந்தை பற்றி தெரிந்து கொள்வதை விட நம்மை பற்றி அதிகம் தெரிந்து கொள்கிறோம்- சிந்திக்க ஆரம்பிக்கிறோம்..

விறு விறுப்பான நாவல்…

 

     ஒரு கவிதை

ஏடன் தோட்டத்தில்

கிளையொன்றில் அமர்ந்த

குருவிக்கு

நினைப்பில் தட்டியது

அடடே நேற்று இங்கொரு

ஆப்பிள் இருந்ததே

அப்புறம் அதற்கு

மறந்து போச்சு

- தேவதச்சன்

மரண ஆராய்ச்சி – எட்கர் ஆலன்போ சிறுகதை

             imageன்ன நடந்தது என்ன சம்பந்தப்பட்ட நாங்கள் யாரும் சொல்ல விரும்பவில்லை.. சொன்னாலும்  யாரும் நம்பப்போவதில்லை . நடந்தது நமப முடியாத ஒன்றுதான் ,, நாங்களே எதிர்பாராத ஒன்றுதான்..
        

Friday, November 19, 2010

கருப்பு பூனை – எட்கர் ஆலன் போ சிறுகதை

சின்ன விஷயங்கள் ஒன்று சேர்ந்து , எப்படிப்பட்ட பெரிய விபரீதங்களாக மாறும் என்பதற்கு என் வாழ்க்கை ஓர் உதாரணம்..
வீட்டில் நடந்த சாதாரண விஷயங்கள் , பயங்கரமான சம்பவங்களாக முடிந்ததைப்பற்றி இப்போது நான் சொன்னால் நீங்கள் நம்பலாம் , நம்பாமல் போகலாம்..
ஆனால் நடந்த்தை நடந்தபடி சொல்வது என் கடமை… நாளையே நான் இறந்து போகலாம்,,, மரணதண்டனை விதிக்கப்படலாம்… அதற்கு முன் இந்த உலகத்திற்கு என்ன நடந்த்து என்பதை சொல்லி விட்டால் என் ஆன்மாவுக்கு சற்று அமைதி கிடைக்கும்..
போதுமான அளவு மனக்கஷ்டங்களையும், துயரங்களையும், பயங்கரங்களையும் பார்த்து விட்டேன்..

*****************************

Sunday, November 14, 2010

பால் குடிப்பதில் இவ்வளவு விஷயமா?

கன்னம் என்பது அன்பு வ்ந்தால் முத்தம் கொடுப்பதற்கும் , கோபம் வந்தால் அறை விடுவதற்கும் மட்டும் பயன்படும் ஒரு உறுப்பு என நினைக்கிறோம்…
அதுதான் கிடையாது.. நாம் எப்படி குடிக்கிறோம் என்பதை கன்னம்தான்

Saturday, November 13, 2010

பறவைகளுக்கு இப்படியும் ஓர் ஆபத்து.. இப்படியும் ஒரு தீர்வு

பறவைகளுக்குத்தான் எத்தனை எத்தனை ஆபத்துக்கள்?
செல்போன் டவரால் குருவிகளுக்கு ஆபத்து.. வறுத்து சாப்பிடும் ஆசாமிகளால் புறாவுக்கு ஆபத்து.. பூனைகளால் ஆபத்து.. சுற்று சூழல் சீர்கேடுகளால் ஆபத்து..
இது போன்று பறவைகளை அழிக்கும் பல விஷ்யங்கள் உங்களுக்கு தெரியும்..
ஆனால் பறவைகளை தினந்தோறும் கொன்று கொண்டு இருக்கும் ஒரு விஷ்யம் பரவ்லாக தெரிய வாய்ப்பில்லை..
பறவைகளை கொல்லும் அந்த எதிரி யார் தெரியுமா?

Friday, November 12, 2010

சிறுமியை கர்ப்பமாக்கிய போலிஸ் அதிகாரி- விடுதலை செய்து நீதி நூல்களை படிக்க வைக்குமாறு கருத்து கந்தசாமிகள் கோரிக்கை

சிறுமியிடம் தவறாக நடந்து கொண்ட போலிஸ் அதிகாரிக்கு மன நிலை சிகிச்சையும், நீதி போதனையும் அளிக்க வேண்டும் என்று கருத்து கந்தசாமிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்...
ஆதரவற்ற சிறுமியின் காப்பாளர்கள் , ஈவு இரக்கமற்ற அந்த பாவிக்கு கடவுள்தான் தண்டனை கொடுக்க வேண்டும் என புலம்பினர்..

இந்த கொடூர சம்பவம் பற்றிய விபரம் ...

Thursday, November 11, 2010

இதயம் பேசுகிறது (திகில் கதை மன்னன் எட்கர் ஆலன் போ சிறுகதை )

எட்கர் ஆலன் போ…  ஒவ்வொரு வரியையும் ரசிக்க வைப்பவர் இவர்.. திகில் கதை மன்னர்….
இவர் எழுததை படிப்பது ஒரு தனி அனுபவம்… ஒவ்வொரு விஷயதையும் கவனித்து எழுதி, அவற்றை மறக்க முடியாமல் செய்பவர்..
அவர் கதைகளில் , ஒன்றை இங்கே தமிழில் தருகிறேன்
*************************************************************
இதயம் பேசுகிறது
***********************************************************************************

Wednesday, November 10, 2010

ஆற்று நீர்-கடல் சங்கமம், மின்சாரம் ஆக போகிறது

estuary

எங்கிருந்தோ ஓடி வரும் ஆறு கடலில் கலந்து தன் பயனத்தை முடிவு செய்கிறது…

சுத்தமான ஆற்று நீர் கடலில் கலந்ததும் , கடலின் உப்பு சுவையை பெறுகிறது,,,

இதை எல்லாம் பார்க்கும்போது கவிதை தோன்றலாம்., வாழ்வியல் தத்துவம் தோன்றலாம்…

சிலருக்கு அறிவியல் கண்டுபிடிப்பு தோன்றி இருக்கிரது..

இப்படி ஆற்று நீர் கடலில் கலக்கும் இடத்தில் இருந்து மின்சாரம் தயாரிக்க முடியும் என்கிறார்கள் நெதர்லாந்து விஞ்ஞானிகள்..

சுற்றுசூழல் கெடாது, உயிரின்ங்களுக்கு ஆபத்தும் இல்லை…  ஆற்று நீர் கடலில் கலக்கும் இடத்தில் மின்சாரம் தயாரிக்கும் கலக்கலான முறை ரெடி என்கிறார்கள் இவர்கள்..

 

காற்றாலை மூலம் மின்சாரம் கிடைப்பது காற்று வீசுவதை பொறுத்தது.. சில சமயங்களில் காற்று வீசாமல் மின்சாரம் தடைப்படலாம்.. ஆனால் இந்த புதிய முறை மூலம் தடையில்லா மின்சாரம் கிடைக்கும்..

University of Groningen and the University of Twente ஆகிய பல்கலை விஞ்ஞானிகள் இந்த முறையை ஆராய்ந்து வருகின்றனர்..

 

ரிவர்ஸ் எலக்ட்ரோடயலிஸ் முறையில் மின்சாரம் தயாரிப்பதுதான் திட்டம்..

அது என்ன ரிவர்ஸ் எலக்ட்ரோடயலிஸ்  ?

எலக்ட்ரோடயலிஸ் என்பதன் எதிர் தொழில் நுட்பம்தான் ரிவர்ஸ் எலக்ட்ரோடயலிஸ் .

எலக்ட்ரோடயலிஸ் என்றால் என்ன ?

அது ஒன்றும் இல்லை… கடல் நீரை குடி நீரை மாற்றுவதாக அவ்வப்போது படம் காட்டுகிறார்கள் அல்லவா ? அதுதான் இது…

கடல் நீரில் மின்சாரத்தை பாய்ச்சும்போது , அதில் இருக்கும் உப்புத்தனமை வெளியேறி நல்ல நீர் கிடைக்கும்… இந்த முறைதான்  எலக்ட்ரோடயலிஸ் ..

இதை மாற்றி செய்தால் ? அதாவது நல்ல நீரையும் , உப்பு நீரையும் கலந்தால் ?

எஸ்.. நீங்கள் நினைப்பது சரிதான்.. மின்சாரம் உண்டாகும்…

எளிமையாக சொல்ல வேண்டும் என்றால்…

உப்பு நீர் + மின்சாரம் = நல்ல நீர்

உப்பு நீர்+ நல்ல நீர் = மின்சாரம்…

ஒரு செல்லில் இருந்து 50 மில்லி வோல்ட் மின்சாரம் கிடைக்கும்,,, இது மிகவும் குறைவுதான்..

இது போல பல செல் அமைத்தால் , போதுமான மின்சாரம் கிடைக்கும்…

இந்த முறை மூலம் , 2012க்குள் 200 கிலோவாட் மின்சாரம் மின்சாரம் தயாரிப்பு நிலையம் ஒன்றை அமைக்க ஹாலந்து விஞ்ஞானிகள் முயன்று வருகின்றனர்..

ஆரம்ப காலத்தில் இதற்கான செலவு அதிகமாக இருக்கும்.. போக போக குறைந்து விடும் என்கிறார்கள்..

காலம் காலமாக , கடலில் கலந்து கொண்டு இருக்கும் ஆற்று நீர் இனிமேல் புதிய பணி ஒன்றையும் செய்யப்போகிறது என்பது மகிழ்ச்சி அளிக்கும் விஷ்யம்..

இந்த முறை மூலம் சுற்று சூழல் கெடுதி அறவே இல்லை என்பது கூடுதல் மகிழ்ச்சி

Tuesday, November 9, 2010

அடுத்தவர் வேதனை,வெறும் செய்திதானா?- என்கவ்ன்டரும் அறிவுஜீவி பதிவர்களும்

நான் சென்னைக்கு வந்த புதிது...
மவுன்ட் ரோடின் ஒரு இடத்தில் பயங்கர கும்பல்...
என்னவென பார்த்தால், ஒரு இளம் பெண் ரத்த வெள்ளத்தில் கிடைக்கிறார்...
மோதிய லாரி டிரைவர் எஸ்கேப்...
அரைமணி நேரம் உயிருக்கு போராடிய பின் அந்த பெண் இறந்து இருக்கிறார் என தெரிய வந்தது..

அது வரை அனைவரும்,பொறுமையாக நின்று அந்த பெண் கொஞ்சம் கொஞ்சமாக அடங்குவதை பார்த்து கொண்டு நின்று இருந்து இருக்கிறார்கள்..
அதை சீன் பை சீனாக விவரிக்க வேறு செய்தார்கள்...
கவருமண்டு சரியில்லைசார், வெளி நாட்டில் ippadi நடக்காது என்றெல்லாம் தர்க்கம் செய்து கொண்டு இருந்தார்கள்..
எனக்கு மாபெரும அதிர்ச்சியாக இருந்ததது...
கிராமங்களிலோ,. மதுரை,கோவை,திருச்சி போன்ற நகரங்களிலோ இப்படி நடக்காது.. எதாவது உதவி செய்ய முயல்வார்கள்...

நகர வாழ்க்கையும் ,படிப்பும் நம்மை வெறும் யோசிப்பு எந்திரங்களாக மாற்றி விட்டன....

கோவையில் சிறார்கள் கொடுன்செயல்லுக்கு ஆளானதும் கோவை நகரமே துக்கம் அடைந்தது..
நமது பதிவுலக அறிவு ஜீவிகளுக்கு அது வெறும் இன்டர்நெட் செய்தி மட்டுமே...
குளிரூட்டாப்பட்ட அறையில் கோக் சாப்பிட்டபடி , அந்த செய்தியை படித்தனர்... அவர்கள் டேஸ்ட்டுக்கு செய்தி இல்லாததால் அதை மறந்தும் போனார்கள்..
ஆனால் சம்பவத்தை நேரில் பார்த்த கோவை மக்களுக்கு அதை மறக்கமுடியவில்லை...
எப்படியும் கொலையாளி ஒரு அற்பமான தனடைனுயுடன் வெளி வந்து விடுவான் என அனைவருக்கும் தெரிந்தே இருந்தது..
இந்த நிலையில் கொலையாளி இறந்து விட்டான் என தெரிந்ததும், கடவுல்தனடனை கொடுத்து விட்டன என சிலரும்,இயற்கையின் பொயட்டிக் ஜஸ்டிஸ் என சிலரும் ஆறுதல் பட்டு கொண்டனர்...
அவன் என்கவுண்டரில் செத்தாநா , விபத்தில் செத்தானா என்பது அவர்களுக்கு முக்கியாமாக இல்லை..

ஆனால் இந்த எ சி அரை அறிவு ஜீவிகளுக்கு , இந்த பிரச்சினையில் எந்த லவும் உணர்வு பூர்வ தொடர்பு இல்லாத அறிவாளிகளுக்கு , சட்டம பற்றிய கவலை வந்து விட்டடது...

நாங்க எல்லாம் எதுக்கு இருக்கோம், சட்டம் எதுக்கு இருக்கு..எதுவும் பிரசிஜர் படிதான் செய்யணும்,, சட்டத்தின் மாட்சி என்ன ஆவது என்றெல்லாம், கண்ணிருடன் , சற்று ஆறுதல் அடைந்தவர்களை கிண்டல்செய்ய தொடங்கினர்..
பேசாமல் எல்லோரையும் என்கவுண்டர் செய்து விட்டால் கோர்ட் செலவு மிஞ்சுமே என இடக்கு பேசினார்...

அய்யா அறிவு ஜீவிகளே... என்கவுண்டர் செய்ய வேண்டும் என்பது பாதிக்கப்பட்டோர் நோக்கம் இல்லை...

சட்டப்படி நீதி வேண்டும் என்பதுதான்..

அதற்கு முன் ஒரு விபத்தில் குற்றவாலி இறந்து விட்டால்,அனைவரையும் விபத்துக்கு உள்ளாக வேண்டும் என்பது அல்ல...
ஒரு மனித மிருகம் ஒழிந்தது என்ற ஆறுதல் ஏற்படும்... அவ்வளவுதான்..
இதை புரிந்து கொள்ளாமல் கிண்டல் செய்வது,படிப்பு என்பது மனதினை பக்குவபடுதுவது அல்ல.. பதர் ஆக்குவது என்றே எண்ண வைக்கிறது...

இது உணர்ச்சி பூர்வமான நிலைதான்...

இதை அனுபவித்தவ்ர்களுத்தன் அந்த வலி தெரியும்ம்...
வழியை உணராதவர்கள்,எ சி அறையிலமர்ந்து சமஊக சீர்திருத்தம்,குர்ரவளிகளுக்கு அளிக்க வேண்டிய சலுகை என்றெல்லாம் பேசி கொண்டு இருக்க வேண்டியதுதான்...

என்னை பொறுத்தவரை,பெண்களுக்கு , சிறுவர்களுக்கு எதிரான குற்றங்களுக்கு மிக கடுமையான தண்டனை வேண்டும் ...
குற்றமே நடக்காத சமுதாயம் வேண்டும்ம்..
அதை நிகழ்த்தாவரை, வான் முறைக்கு ஆதரவு பெருகத்தான் செய்யும்.,.. போலிஸ் என்கவுண்டர் செய்துதான் பிரச்சினை முடிய வேண்டும் என நினைக்காமல், வன்முறை குழுக்க்களுக்கு ,மக்கள் இந்த அதிகாரத்தை கொடுக்கும்நிலை வந்தால் ஆச்சரிபடுவதற்கு இல்லை...

அப்படி ஒரு நிலை வர கூடாது...
விரைவான விசாரணை,தீர்ப்பு உறுதி செய்யப்பட வேண்டும்..

அந்த நிலை இன்று இல்லை.. எனவே பாதிக்கப்பட்டோர் இப்படி ஆருதலடைகின்றன்ர்...
இதை கிண்டல் செய்வது மனித நேயம் அல்ல...

நம் குழந்தைகள் பாதிக்கப்பட்டு இருந்தால், நமக்கும் இந்த நிகழ்வு ஆறுதலளித்து இருக்கும்...
தம்குழந்தைகள் பாதிக்கப்படாத நிலையிலேயே, பிறர் குழந்தையை தம் குழந்தையாக நினைத்த கோவை மக்களின் உணர்வை நம்மால் புரிந்து கொள்ள முடியாதுதான்..

உணர்ச்சி வேகத்தில் கொலையாளிக்கு கண்ணீர் விடும் , பரிதாப பதிவுலகம்.

கூட்டமான பேருந்தில் செல்கிறோம்..

யாராவது நம் பத்து பைசா பர்சை அடித்து விட்டு தப்ப முயன்றால் என்ன செய்வோம்… ?

தர்ம அடி கொடுக்க முயல்வோமா இல்லையா?

திருடியவனின் கஷ்டம், சமூக அவலம், அவனை இப்படி ஆக்கிய சூழ் நிலை எல்லாவற்றையும் ஆராய வேண்டும் என கோருவோமா?

அப்படியே அவன் தப்பி விட்டாலும், அந்த நாயை பிடித்து கொல்ல வேண்டும் என துடிப்போமோ இல்லையா..

ஒரு பத்து பைசா பர்சுக்கு இந்த ஆர்ப்பாட்டம்..

இதுவே , இன்னொருவருக்கு இழப்பு என்றால் நம் பார்வை எப்படி இருக்கும்..

ஏன் அவனை போட்டு அடிக்கிறீங்க? அடிப்பதுதான் இதற்கு தீர்வா? பிடிபட்டதால் இவனை அடிக்கிறோம்.. பிடிபடாத திருடர்களை என்ன செய்ய போகிறோம்…

சமூகத்தை சீர்திருத்துவதுதான் இதற்கு தீர்வு..

இப்படி எல்லாம் டீ கடை பானியில் வெட்டி நியாயம் பேசுவோம், பர்ஸை பறி கொடுத்தவன் அடுத்தவன் என்றால்..

இதே பாணி கருத்து வெள்ளம்தான் இப்போது பதிவுலகில் பாய்ந்து வருகிறது..

கோவை மக்கள் அன்பாக பழக கூடியவர்கள்.. சண்டை போட்டால் கூட கண்ணியமான வார்த்தைகளை பயன்படுத்த கூடியவர்கள்..

ஒரு சிறுவனும், சிறுமியும் கொடும் செயலுக்கு உள்ளான போது , தம் குடும்பத்திலேயே இழப்பு ஏற்பட்டது போல துடித்து விட்டனர்…

சென்னை போன்ற பெரு நகரங்களில் இது ஜஸ்ட் ஒரு பரபரப்பு செய்தி மட்டுமே…ஆனால் கோவையில் அப்படி இல்லை..

இந்த நிலையில் , கொலையாளிகள் கைது செய்யப்பட்டனர்.,,,,

அவர்களை கொலையாளிகள் என சொல்ல கூடாது.. குற்றம் சாட்டப்பட்டவர்கள் என்றுதான் சொல்ல வேண்டும் என் பதிவுலக அறிவு ஜீவிகள் சட்ட நுணுக்கத்தை ஆராய்ந்த நிலையில், படிக்காதோர், சாதாரண மக்கள் , போன்றோர் , இந்த குழந்தைகளை எப்படி கொல்ல மனம் வந்தது என கதறினர்.. கொலையாளிகள் முகத்தில் காறி துப்பினர்..

புழல் சிறையில் அங்கு இருந்த கைதிகளே இவர்களை தாக்க முயன்றனர்..

அவர்களுக்கெல்லாம் பதிவுலகமோ, அறிவு பூர்வ தர்க்கங்களோ தெரி்யாது…

இந்த நிலையில் கொலையாளி ஒருவர் இறந்தது, இவர்களுக்கு ஓர் ஆறுதலாக இருந்தது…

இதற்கு காரணம் இருக்கிறது..

நம் ஊரில் ஒரு குற்றத்திற்கு தண்டனை வாங்கி தருவது அவ்வளவு எளிதல்ல…

டில்லியில் , பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்ட ஒரு பெண்னின் வழக்கு நடந்து ஓர் அற்பமான தண்டனை வழங்கப்பட்டது..

இன்னொரு பெண் பாதிக்கப்பட்டு, சுய நினைவு இன்றி வாழ்கிறார்.. வழக்கு முடியவில்லை..

தமிழ்னாட்டில், நாவரசு என்ற மாணவர் கண்ட துண்டமாக வெட்டி கொல்லப்பட்டார்.. யாருக்கும் தண்டனை இல்லை ….

ஆலடி அருணா கொலை உள்ளிட்ட பல கொலை வழக்குகளும் இப்படித்தான்..

இந்த பின்னனியில், ஏதோ ஒரு வகையில் குற்றவாளி இறந்தது, இந்த கையலாகாத சமூகத்தில் வாழும் மக்களுக்கு ஒரு சிறிய ஆறுதலை அளித்தது,,

 

அவ்வலவுதான்.. பொங்கி எழுந்தனர் பதிவுலக மஹாத்மாக்கள்…

கொலையை கொண்டாடும் மக்கள், உணர்ச்சி வசப்பட்ட பரிதாப ஜீவன்கள் , கொலையாளியின் பரிதாபம் என கொட்டி தீர்த்து விட்டனர்..

அட ஆண்டவா,,, பாவம்,, குழந்தையை இழந்தவர்களுக்கு ஒரு அப்பாவித்தனமான ஓர் ஆறுதல்…. மீண்ட உயிர் வர போவதில்லை.. ஆனால் சிறிது காலம் கழித்து கொலையாளி சுதந்திரமாக வருவதை பார்க்கும் அவலம் இல்லாமல் , உடனே இறப்பதை பார்த்ததும், சிறிய ஆறுதல்..

இதை கொண்டாட்டம் என கொச்சைப்படுதுவது, நம் இதயம் எவ்வளவு தூரம் இறுகி இருக்கிறது என்பதை காட்டுகிறது…

இது ஒரு தீர்வு என யாரும் சொல்லவில்லை.. என்கவுண்டர் இல்லாமல் வேறு வகையில் முடிவு வந்து இருந்தாலும், இய்றகையின் நீதி என்றுதான் எடுத்து கொண்டு இருப்பார்கள்..

அதை புரிந்து கொள்ளாமல், எல்லா குற்றங்கலுக்கும் என்கவுண்டர்தான் தீர்வா என குதர்க்கம் பேசுகின்றனர்.

அய்யா, அறிவு ஜீ்விகளே… சாதாரன மனிதன் நிரந்தர தீர்வை பற்றி யோசிக்கவில்லை…

நம் குடும்பதில் ஒரு இழப்பு.. அந்த பாதிப்பை ஏற்படுதியவன் இறந்தது ஒரு வித ஆறுதலை தருகிறது ..அவ்வளவுதான்..

யாரோ ஒரு குடும்பத்தில் நிகழ்ந்த துக்கத்தை , தம் குடும்ப துக்கமாக நினைத்த அந்த அன்பு உள்ளங்களின், கோவை மக்களின் பாதம் தொட்டு வணங்குகிறேன் ..

வெட்டி நியாயம் பேசும் பதிவுலகை நினைத்து பரிதாப படுகிறேன்…

Sunday, November 7, 2010

யார் கண்ணுக்கும் தெரியாமல் ரகசியமாக சைட் அடிக்கும் தொழில் நுட்பம்

 

மற்றவர்களின் கண்களுக்கு தெரியாமல் , அவர்கள் முன்பே நடமாட முடிந்தால் , அவ்ர்களை கண்காணிக்க முடிந்தால் , வாழ்க்கை எவ்வளவு சுவாரஸ்யமாக இருக்கும் !!!!

எதிரிகளை உளவு பார்க்கவும் முடியும்… நமக்கு பிடித்தவர்களை , அவர்களுக்கு தொல்லை கொடுக்காமல், அருகில் இருந்து ரசிக்கவும் முடியும்..

கதைகளில் மட்டுமே சாத்தியமாக இருந்த இந்த பண்பை அறிவியல் நடைமுறையில் சாத்தியமாக்க இருக்கிறது..

ஒரு குறிப்பிட்ட ஆடையை அணிந்து கொண்டால் , யார் கண்ணிலும் பட மாட்டீர்கள்.. கடன் கொடுத்தவர்கள் கண்ணில் பட மாட்டீர்கள் என்பது மட்டும் அனுகூலம் அல்ல..

நாம் காதலிக்கும் பெண்ணை அவள் வீட்ற்கு சென்று பேசி விட்டு , யார் கண்ணிலும் படமால் திரும்பி வந்து விடலாம் என்ற அனுகூலமும் இருக்கிறது..

மேலும் சில சீரியஸ் அனுகூலங்களும் இருக்கின்றன…

இப்படிப்பட்ட ஆடைக்கு தேவையான துணிக்கான ஆதார பொருளை கண்டு பிடித்துள்ளதாக ஸ்காட்லாந்து விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர்.

அறிவியல்ரீதியாக இது எப்படி சாத்தியமாகும் ?

இதை புரிந்து கொள்ள , ஒரு பொருளை நாம் பார்ப்பதற்கு பின் இருக்கும் அறிவியலை புரிந்து கொள்ள வேண்டும்.

ஒளி அதாவது வெளிச்சம் ஒரு பொருளின் மீது படும்போது என்ன நடக்கிறது என்பதை பொறுத்தே , தமன்னாவை சிவப்பாகவும் , கிளியை பச்சையாகவும் பார்க்கிறோம்..

ஏழு வண்ணங்கள் சேர்ந்ததுதான் எல்லா நிறமும் உண்டாகிறது..  400 நானோ மீட்டர் முதல் 700 நானோ மீட்டர் வரை அலை நீளம் கொண்ட வண்ணங்களையே நம் கண்களால் பார்க்க முடியும்..

வயலட் நிறம் குறைவான அலை நீளம் கொண்டது… சிவப்பு அதிக அலை நீளம் கொண்டது… மற்ற நிறங்கள் இதற்கு இடப்ப்பட்டவை..

ஒரு பொருள் எல்லா நிறத்தையும் விழுங்கிவிட்டு, சிவப்பை மட்டும் பிரத்திபலித்தால் , அந்த பொருள் சிவப்பாக இருக்கிறது என்கிறோம்… அதாவது ஒளி ஒரு பொருளின் மீது பட்டு எப்படி பிரதிபலிக்கிறது என்பதே அந்த பொருளின் நிறம்..

சரி, ஒளி இப்படி ஒரு பொருளின் மீது பட்டு பிரத்திபலிக்காமல், அதை சுற்றி சென்று விட்டால் என்ன ஆகும் ? அதாவது தன் ஓடு பாதையில் இருக்கும் கல்லின் மீது மோதி திரும்பாமால்,. அந்த கல்லை சுற்றி ஓடும் நீர் போல..

 

image

 

நடைமுறையில் அப்படி ஒளி செல்லாது… கண்ணாடி போன்ற பொருட்களை ஒளி ஊடுருவி செல்லும்.. மற்ற எல்லா பொருட்களும் ஒளியை கவர்ந்து விடும்… கொஞ்சம் பிரதிபலிக்கும்….

ஒளியை விலக செல்லும் பொருட்கள்தான் இந்த ஆராய்ச்சியின் இலக்கு…

இது போன்ற பொருட்களை முன்பே கூட சிலர் உருவாக்கி இருக்கின்றனர்,.,,,

ஆனால் அந்த பொருட்கள் ஆராய்ச்சி கூடங்களில் மட்டுமே பயன்படும்… அவற்றை நம் விருப்பதிற்கேற்ப வளைக்கவோ, மாற்ற்வோ முடியாது…

நெகிழ்வு தன்மை கொண்ட பொருளை இவர்கள் உருவாக்கி இருக்கின்றனர் என்பதால்தான் இந்த பதிவு,…

Andrea di Falco of the University of St. Andrews ஆண்ட்ரியா டி ஃபால்கோ தலைமையில் செயிண்ட் ஆண்ட்ரிவ்ஸ் பல்கலையில் இந்த பொருளை உருவாக்கி இருக்கின்றனர்..

சாதாரணமாக எல்லா இடங்களிலும் கிடைக்கும் பாலிமர் மற்றும் சிலிக்கானை பயன்படுத்தி இதை தயாரித்துள்ள்னர்..

இதை பயன்படுத்தி செய்யப்பட்ட காண்டாக்ட் லென்ஸ் எதிர்பார்த்த ரிசல்ட்டை தந்தது..

இந்த பொருளை பயன்படுத்தி செய்யப்பட்ட கண்ணாடியை அணிந்தால், நாம் கண்ணாடி அணிந்து இருப்பது வெளியே தெரியாது…

  நாம் ஆடை அணிவது மற்றவர்கள் கண்களுக்கு சிறப்பாக தெரிய வேண்டும் என்பதற்காகத்தான்.,..

ஆனால் மற்றவர் கண்களுக்கு தெரிய அவசியமில்லாத ஆடைகளும் உண்டு… இந்த பயன்பாட்டுக்கும் , இந்த தொழில் நுட்பம் பயன்படும்..

இந்த பொருளை பயன்படுத்தி நாம் முழுதுமே கூட யார் கண்ணுக்கும் தெரியாமல் மறைந்து விடலாம்…  யார் கண்ணுக்கும் தெரியாமல் அழகிய பெண்களை சைட் அடிக்கலாம் என்பதும், அவர்கள் பின் சுற்றலாம் எனபதும் உண்மைதான்…

ஆனால், நாம் இந்த அளவுக்கு கஷ்டப்படுகிறோம் என்பது அந்த பெண்ணுக்கு தெரியாவிட்டால் பயனில்லாமல் போய் விடும்..

தவிர, இந்த ஆராய்ச்சியின் நோக்கம் இதுவல்ல..

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா