Thursday, April 30, 2020

ராமன் என்ற தன்மை ..ஜெயமோகன் சிறுகதை பார்வை


 சிறுகதைகளில் தன்னிலையில் கதை சொல்லும் யுக்தியில் பலவகைகள் உண்டு
அனைத்து கதாபாத்திரஙகளையும் சற்றே விலகல் தன்மையுடன் கவனிக்கும் கதை சொல்லி , முக்கிய கதாபாத்திரமாக கதை சொல்லியே இருப்பது என பல விதங்கள் உண்டு

ஜெயமோகனின் பிடி சிறுகதை முதலில் , கர்நாடக இசை கலைஞரான மதுரை ராமையா என்ற மேதை குறித்தான கதை என தோன்றியது. மறு வாசித்தலில்தான் அது கதை சொல்லியான அனந்தன் என்ற சிறுவனின் தரிசனம்தான் கதை என்பது புலப்பட்டது
அந்த அளவுக்கு அனந்தனின் பாத்திரப்படைப்பு நுணுக்கமாக செதுக்கப்பட்டுள்ளது

ராமன் என்ற கேரக்டர் ஒரு புராண கதை மாந்தராகவோ , தெய்வமாகவோ , மனிதனாகவோ அல்லாமல் அன்பு, கருணை , இடைவிடா போராட்டம் ஆகியவற்றின் குறியீடாக வருகிறது


  ஆனந்தன் அரைத்த தோசைமாவை திரும்ப வாங்க போவதில் கதை ஆரம்பிக்கிறது.

ஊரின் விழாச்சூழல் , அவனது குணாதிசயம் போன்றவை சில வரிகளில் நிறுவப்பட்டு விடுகின்றன.

மாவு அரைக்கும் வீட்டில் முடங்கிகிடக்கும் பெரியவர் , அன்றைய கச்சேரியில் பாடவிருக்கும் மதுரை ராமையாவை திட்டுகிறார். இவனுக்கு இசையும் தெரியாது , ராமையாவையும் தெரியாது என்பதால் வெறுமனே கேட்டுக் கொள்கிறான்

மாவை அரைத்து கொடுக்கும் பானுமதி அநாக்கா ,பத்திரமாக மாவை கொண்டு செல்லும்படி உரிமையுடன் அதட்டுகிறாள். மதுரை ராமு பாடலை கண்டிப்பாக கேட்கும்படி சொல்கிறாள்

வீட்டுக்கு வருகிறான். பாட்டு கேட்க போகிறேன் என்கிறான். அவன் அக்கா அதெல்லாம் நமக்கு புரியாதுடா. நல்லா இருக்காது என்கிறாள். இவனுக்கும் இசை தெரியாதென்றாலும் வீம்புக்காக பிடிவாதம் பிடிக்கிறான். அவள் அவனுக்கு தோசை ஊற்றி சாப்பிட வைத்து , செலவுக்கு காசு கொடுத்து அனுப்புகிறாள்

குடும்பம் சார்ந்த நெருக்கடிகள் இல்லாத, அம்மா சாயல் கொண்ட அன்பை பெறும் ஆரோக்கியமான சூழலில் அவன் இருக்கிறான் , அவனும் அதற்கேற்ப நடந்து கொள்கிறான் என்பது உணர்த்த்ப்படுகிறது

கச்சேரியில் ராமையா பாடுவது ஏதோ சண்டை போடுவதுபோல தோன்றுகிறது. அவர் பாடுவது புரியவில்லை. இதையா பாடல் என்கிறாரகள் என திகைக்கிறான்.

அப்படியே கண்ணயர்ந்து விடுகிறான். ராமர் குறித்து அவர் பாடும் பாடல் புரியாவிட்டாலும் இனம்புரியாத உணர்வுபூர்வமான புரிதல் அவனுள் நிகழ்கிறது. ( பிற்பாடு பாடல் வரிகளின் அர்த்தம் பேச்சு வாக்கில் புரிகிறது..)


அடுத்த நாள் காலை அவர் சிறுவர்கள் புடைசூழ உடற்பயிற்சி செய்ய காண்கிறான். உடற்பயிற்சியின் ஒரு பகுதியாக , குஸ்தியின் பொருட்டு ஒருவரிடம் அழைத்துச் செல்கிறான். போகும் வழியெங்கும் அவரை வியந்து பேசுகிறார்கள். பிச்சைக்காரன் உட்பட அனைவரையும் மதித்துப் பேசுகிறார். பாடிக்காட்டுகிறார்

குஸ்தி பயில்வானுடன் மோதும்போதுதான் நிறைவு அடைகிறார்

கடைசியில் கதை ஆரம்பித்த மாவரைக்கும் வீட்டுக்கு அழைத்துச் செல்கிறான்.  பாடலை கேட்கச் சொன்ன அக்கா , அந்த கச்சேரிக்கு வர முடியவில்லை. இவன் புண்ணியத்தில் அந்த பாடகரே வீடு தேடி வந்து அவளுக்குப் பிடித்த பாடலை பாடுகிறார்;

உங்களுக்கு என்ன பாட்டு வேண்டும் என அந்த வீட்டு பெரியவரிடம் கேட்க, எனக்கா என கேட்டு அவர் அழத் தொடங்குகிறார்

இங்கே கதை முடிகிறது

 அந்த பாடகருக்கோ , அந்த பெரியவருக்கோ பொதுவான இணைப்பு அம்சங்கள் இல்லை.
ஆனால் ஆனந்தன் பார்வையில் இணைப்பு அம்சம் உண்டு

  ஏழையாகிய என்னைத் தேடி வந்தாயோ ராமா என்ற பாடலை அவன் தன் வாழ்வில் முதல்முறையாக முதல்நாள்தான் கேட்டிருக்கிறான்.
முடங்கிக் கிடக்கும் பெரியவர் , இசை மேதையை திட்டியவர் , அவரே வீடு தேடி வந்து என்ன பாட்டு வேண்டும் என கேட்டால் எப்படி உணர்வார் என ஆனந்தனுக்கு மட்டுமே தெரியும். அவனால்தான் உணரமுடியும்.

என்னை தேடி வந்தாயோ ராமா என மனமுருக கேட்ட தியாகராஜர் உணர்வை,பெரியவரும் பெற்றிருப்பார்

அவன் பாரத்தவரை முழுக்க முழுக்க அன்பை மட்டுமே பரப்பிவருகிறார் ராமையா. அந்த அன்பு மட்டும் ராமன் அல்ல.  தன்னை திட்டியவரையும் அரவணைக்கும் தன்மை மட்டும் ராமனல்ல

தனக்கு நிகரான சவாலை ஒவ்வொரு கணமும் தேடிச் செல்லும் அந்த தன்மையும்தான் ராமன் என்பதும் ராமனின் தன்மையை ராமையா அடைந்ததுபோல ஆனந்தன் அடைவதற்கும் சாத்தியம் உண்டு என்பதற்கான குறிப்புகளும் கதையின் சாரம் என நினைக்கிறேன்

தனக்கு இசை அனுபவம் தந்த அக்காவுக்கு ஒரு நல்ல அனுபவம் தர வேண்டும் என்ற ஆசை , சிறுவன் என்றாலும் டீக்காசை தான் தர வேண்டும் என்ற எண்ணம் போன்றவை குறிப்பிடத்தக்கவை

பிடி சிறுகதை..  பிடித்த சிறுகதை




உலோகம் நாவல். கீழ்மையின் சாத்தியம்


ராஜிவ் படுகொலை செய்யப்பட்ட செய்தி அறிந்த , புலிகள் ஆதரவாளர்கள் பலருக்கும் அதை நம்பவே முடியவில்லை.

ஏன் இதை செய்தார்கள் ? இது ஈழப்போராட்டத்துககு மிகப்பெரிய பின்னடைவு அல்லவா ?  புலிகளை கடுமையாக எதிர்த்து வந்த ஜெயலலிதாவுக்கல்லவா அது சாதகமாகும் ? இனியும் அவர்களை எப்படி ஆதரிப்பது என்றெல்லாம் திகைத்தனர்

உண்மையில் அவர்கள் ஏன் அதை செய்தார்கள் என்பது அதை செயல்படுத்தியவர்களுக்கே தெரியாது.

தமக்கு கிடைத்த ஆணையை கண்ணைமூடிக் கொண்டு பின்பற்றி உயிர் நீத்தவர்களைப்போல , அவர்கள் தலைமையும் பிறர் ஆணைகளை பேரங்களை நம்பி ஏமாந்தார்களா என்பது யாருக்கும் தெரியாத ரகசியம்

ஜெயமோகனின் உலோகம் நாவல் , ஈழ அரசியல் குறித்துப் பேசாமல் , ஒரு தலைவரை கொல்வதற்காக இந்தியா அனுப்பப்பட்ட, சார்லஸ் என்ற இயக்கஉறுப்பினர் குறித்தும் , அவன் தன் இலக்கை அடைவது குறித்தும் மட்டுமே பேசும் நாவல்
 அமெரிக்க அதிபரைக் கொல்லும் முயற்சி , அதை தடுக்கும் முயற்சிகள் போன்ற ஆங்கில த்ரில்லர்களை வாசித்திருப்போம்

அது போன்ற ஒரு களம்தான். ஒரு தலைவரை கொல்வதற்கான திட்டமும் , இடர்ப்பாடுகளும்தான் கதை.

ஆனால் அதை திடுக்கிடும் திருப்பங்கள் நிறைந்த கதையாக எழுதாமல் , கொல்பவன் , அவனது நண்பன் , நண்பனின் மனைவி , கொல்லப்பட இருக்கும் தலைவர் , அவர் மனைவி , மகய் என அனைவரையும் ரத்தம், சதை , உணர்வுகள் கொண்ட மனிதர்களாக படைத்திருப்பது வழக்கமான சாகச கதைகளில் இருந்து வேறுபடுத்துகிறது. அதே நேரத்தில் சாகச கதைகளுக்குத் தேவையான பாயி்ண்ட் டூ பாயிண்ட் பேருந்து போன்ற பிசிறுகளற்ற, டைவர்ஷன்கள் அற்ற விறுவிறுப்பையும் தக்க வைத்துள்ளது

 
 ஒரு துப்பாக்கிச்சூட்டில் பாய்ந்த குண்டு , அவன் உடம்பிலேயே நிரந்தரமாக தங்கிவிடுகிறது. அதுதான் உலோகம்.  அவன் ஒரு, குண்டு நிரப்பப்பட்ட துப்பாக்கி என்பதற்குமேல் ஒன்றும் இல்லை . யாரைக்கொல்வது யாரை மன்னிப்பது என்பது துப்பாக்கியின் தேர்வு கிடையாது. அதை யார் கையாள்கிறார்களோ அவர்களது முடிவைத்தான் துப்பாக்கி செயல்படுத்த முடியும்.

   கொலையாளி அலெக்ஸ் பார்வையில் கதை செல்கிறது. ஈழ இயக்கங்களைப்பற்றிய கதை என்றாலும் ஈழ அரசியலோ இயக்கங்கள் குறித்த விமர்சனமோ கதையில் இல்லை

தமிழகம் மற்றும் இந்திய அரசியலே அதிகம் விமர்சிக்கப்படுகிறது. இந்தியாவில் நடக்கும் கதை என்ற தெளிவுடன் கச்சிதமாக தன் எல்லைகளை அமைத்துக் கொண்டது சிறப்பு

விமானச்சத்தம் கேட்டு மனம் பதறுவதும் , இந்தியாவில் விமானச்சத்தம் என்பதற்கு வேறு பொருள் என அமைதி அடைவதும் நுணுக்கமான பதிவு

 நம் மக்கள் ஷேவ் செய்யும்போது ஷேவிங்பிளேட் கிழித்திருக்கலாம். கத்திக்காய அனுபவம்கூட இருக்கும். எனவே யாராவது பிளேடு அல்லது கத்தியைக்காட்டினால் பயமாக இருக்கும். ஆனால் துப்பாக்கியை பார்த்திருக்கமாட்டார்கள். அது என்ன செய்யும் என்ற தெளிவும் இருக்காது. ;
எனவே கத்திக்கு பயப்படுவதுபோல துப்பாக்கிக்கு பயப்பட மாட்டார்கள்.
வேடிக்கை பார்க்கத்தான் நினைப்பார்கள்

இருவரை  கொன்றுவிட்டு ஓடும்போது, அதன் சீரியஸ்னஸ் புரியாமல் வேடிக்கை பார்க்கும் மக்களைக்கண்டு , கொலையாளி தலையில் அடித்துக் கொள்ளும்காட்சி நல்ல பிளாக் ஹ்யூமர்

  வேலையில்லாமலோ, வேலையில் ஓய்வு பெற்றோ சாலை ஓரங்களில் , டீக்கடைசிகளில் ஒரே மாதிரி முகபாவத்துடன் பலரை தினம்தோறும் பார்க்கிறோம். ஒவ்வொரு நாளுமே கடைசி நாளாக இருக்கக்கூடும் என்ற நிலையில் வாழ்பவன் பார்வையில் அவரககள் எப்படி தெரிவார்கள் என்பது போன்ற விவரணைகள் வெகு யதார்த்தம்

அமிர்தலிங்கத்துடன் பேச்சு வார்த்தை நடத்த இயக்கத்தினர் வந்தனர். அவர்களை சோதனையிட காவலர்கள் முயன்றபோது , அவர்கள் நண்பர்கள்தான், சோதனை வேண்டாம் என்கிறார் அமிர்தலிங்கம்

அவர்களை வரவேற்று , தேநீர் தயாரிக்கும்படி மனைவியிடம் சொல்லிவிட்டு , இன்முகத்துடன் பேச ஆரம்பித்த அவரை மறைத்து வைத்திருந்த துப்பாக்கியால் சுட்டுக் கொல்கின்றனர் விருந்தினர்கள். நம்பி அழைத்தவரை இப்படி துரோகம் செய்து கொன்ற அந்த இயக்கம் , வேறு சிலரின் துரோகத்தால் அழிக்கப்பட்டது வரலாறு

எது துரோகம் , எது ராஜதந்திரம் என்பவற்றையெல்லாம் வெல்பவர்கள்தான் முடிவு செய்கிறார்கள்

கலைஞரே கெஞ்சிக்கேட்டபோதும் ஸ்றீசபாரத்தினத்தை கொன்றனர். டெலோ இயக்க சிறுவர்களை உயிருடன் எரித்தனர். வெள்ளைக்கொடியுடன் சரணடைந்த டெலோ இயக்க தலைவர்களை கொன்று குவித்தனர்

  இதை சிலர் ராஜதந்திரம் என கூறக்கூடும்


கடைசிப்போரின்போது, சரணடைய நினைத்த இவர்களை அரசு ராணுவம் கொன்றதை அரசு தரப்பினர் ராஜதந்திரம் என கூறலாம்



உண்மையில் இவையெல்லாம் தெரிந்தே சொல்லும் பொய்கள். ஹென்றி போர்டு சொன்னதுபோல வரலாறு என்பது ஒரு குப்பை , அரத்தமற்ற ஒன்று

  தனக்கு இடப்பட்ட கட்டளைக்கிணஙகக அந்த தலைவரை சுட்டுக் கொல்கிறான் அலெக்ஸ். அவர் அவனை முழுமையாக நம்பியவர்.  நீயா சுடுகிறாய் என்ற அதிர்ச்சி நிறைந்த கண்களுடன் பிணமாக சாய்கிறார் அவர்

  அந்த பிணத்தின் தலையை எட்டி உதைக்கிறான் அவன்

துப்பாக்கி ஒரு கொடூரமான கொலைக்கருவிதான். ஆனால் ஒருவன் சாவில் அது மகிழாது. பிறரது இறப்பை இழிவு செய்யாது

அவன் எட்டி உதைப்பதுடன் கதை முடிகிறது

எந்த ஒரு கொலைக்கருவியைவிடவும் , கொடூர மிருகத்தை விடவும் கீழான இடத்தை அடையும் சாத்தியம் ஒவ்வொரு மனிதனுளும் இருக்கிறது என்ற கோணம் நம்மை திகைக்க வைக்கிறது



ஒரு த்ரில்லர் நாவல் இப்படி யோசிக்க வைப்பது ஆச்சர்யமான ஒன்று





Wednesday, April 29, 2020

பொய் தெய்வங்கள். ஜெயமோகனின் " கைமுக்கு "

ஜெயமோகனின் கைமுக்கு சிறுகதை வெகுவாக யோசிக்க வைத்தது

கைமுக்கு என்றால் என்ன?

அந்த காலத்தில் பின்பற்றப்பட்ட ஒரு சித்திரவதை முறை. குற்றம் சாட்டப்பட்டவர் , கொதிக்கும் எண்ணைய்க்குள் கையை விட்டு, அதில் போடப்பட்டு இருக்கும் சின்ன,அனுமன் சிலையை எடுத்துக்காட்ட வேண்டும். கையில் காயமின்றி சிலையை எடுத்தால் நிரபராதி என கருதப்படுவார்.

இந்தப்பின்னணியில் துவங்குகிறது கதை.
தற்போதையை சித்தரவதை முறைகளைப் பற்றி பேசும் முன்னாள் போலிஸ்காரர் , தனது வாழ்வில் இப்படி ஒருவனை அடித்து வெளுத்த நிகழ்வைச் சொல்கிறார்

    ஜாப் ரைட்டிங் செய்து வருமானம் ஈட்டும் ஏழை ஒருவர் , கஷ்டப்பட்டு தன் மகனை படிக்க வைக்கிறார்

பையன் படித்து , நல்ல வேலை கிடைத்து , வீடு வாங்கி , திருமணம் செய்து, குழந்தை பெற்று வசதியாக செட்டில் ஆகிறான்.

தந்தையையும் தன்னுடன் அழைத்துக கொள்கிறான்.

எல்லாம் நல்லபடியாக செல்கிறது. எதிர்பாரா விதமான சம்பவம் ஒன்றில் பையன் சிக்கியபோதுதான் , அவன் படிப்பு , வேலை எல்லாம் பொய் என தெரிகிறது. அவன் ஒரு திருடன் என தெரிந்து தந்தை நிலைகுலைந்து போகிறான். அவன் மனைவி அவனை,விட்டு விலகி விடுகிறாள்

அப்போதுதான் அந்த போலிஸ்காரர் அவனை அடித்து துவைக்கிறார். ஒரு தந்தையின் நம்பிக்கையை அழித்து,விட்டானே என்பதுதான் அவர் கோபம்

சில வருடங்கள் கழித்து அவனை சந்திக்கிறார். அவன் மகிழ்ச்சியுடன் வசதியாக இருக்கிறான். நல்ல வக்கீல்களும் பணமும் இருப்பதால் பயமின்றி திருட்டை தொடர்கிறான். தந்தையும் அவனது இந்த வாழ்க்கைக்கு பழகி சந்தோஷமாக இருக்கிறார்

அவன் ஏன் திருடன் ஆனான் என்பதுதான் மேட்டர்.

சரியான ஆடை இல்லை. நல்ல"காலணி இல்லை. காசு இல்லை. நல்ல பையன் , அறிவாளி, ஆனால் வறுமை தாளாமல் லேசாக திருட ஆரம்பித்து அப்படியே பழக்கமாகி விட்டது.
இனி அதை விடும் வாய்ப்பு கிடையாது
புலி வாலை பிடித்த கதை

இதில் கைமுக்கு என்பதை போலிஸ் அடியுடன் ஒப்பிட்டு அந்த போலிஸ்காரர் சொன்னாலும் , கைமுக்கு என்பது நம்மை வாட்டி வதைக்கும் சோதனை நெருப்பின் குறியீடு என்பதை புரிந்து கொள்ள முடிகிறது

அந்த கைமுக்கு சோதனையை , அரசன் பரிதாபப்பட்டு நிறுத்திவிட்டான். ஆனால் வாழ்க்கைக்கு அந்த இரக்கம் கிடையாது. life is not  fair. அது கைமுக்கு சோதனையை நடத்திக் கொண்டேதான் இருக்கிறது

எந்த அளவு உயர்வை நாம் நாடுகிறோமோ அந்த அளவு வேதனைகளை வாழக்கை கொடுக்கிறது. அதை சகித்துக் கொண்டுதான் , கொதிக்கும் எண்ணெயில் கைவிட்டு அனுமனை எடுக்க வேண்டியிருக்கிறது

அந்தக்கால கைமுக்கு சோதனையில் வெற்றி பெற ஒரு குறுக்குவழி உண்டு. அதிகாரிகளை கவனித்து விட்டால் போதும். கையில் போலி சிலை ஒன்றை கொடுத்து விடுவார்கள். கொதிக்கும் எண்ணெய்க்குள் கைவிடுவது போல போக்கு காட்டிவிட்டு , போலி சிலையை காட்டி வெற்றி பெற்று விடலாம்;

உண்மை தெய்வத்தை தேடுவதன் வலிகளை தாங்க முடியாமல் பொய் தெய்வத்திடம் சராணகதி அடைவதைத்தானே அன்றாடம் பார்க்கிறோம்
   எளிய உதாரணம் உண்டு. இணையத்தில் தமிழ் எழுத முடியும் என்ற வாயப்பு வந்தபோது அது மிகப்பெரிய எழுச்சியை ஏற்படுத்தியது. உண்மையான ஆர்வத்துடன்தான் பலர் எழுதினர்

ஆனால் அப்படி உண்மையாக எழுதி , அமுத்த கட்டத்துக்கு நகர்வது உழைப்பைக் கோரும் வேலை என பலருக்கும் புரிந்து கொண்டனர்

  பெரும்பாலான இதழ்கள் , ஊடகங்கள் எந்த கட்சியினரின் கைகளில் இருக்கின்றன என்பதை புரிந்து கொண்டு , அதற்கேற்ற அரசியல் சார்புகள் எடுத்து , அதற்கேற்ப தொடர்புகளை வளர்த்துக் கொண்டு , இணைய எழுத்து என்பதில் இருந்து அடுத்த கட்டம் நகர்ந்தனர். இப்படி விளையாட்டாக இறங்கிய அரசியலை இன்று உண்மையாக நம்பத் தொடங்கி அதில் இருந்து வெளிவர முடியாமல் சிக்கிக் கொண்டு விட்டனர்

உண்மையில் கொஞ்சம் சோதனைகளை சமாளித்து இருந்தால் , உண்மை தெய்வத்தையே பார்த்திருக்கலாம். அதாவது தமது தகுதியாலேயே உரிய இடங்களை அடைத்திருக்கலாம்

   இந்த கதையில் வரும் மகன் அந்த கல்லூரி கால அவமானங்களில் இருந்து தப்ப பொய்தெய்வத்தை ஏற்கிறான் என்றால் அது அவன் மட்டும் செய்யவில்லை.
அவனது திருட்டுத் தொழிலுக்காக அவனை விட்டு விலகும் முதல் மனைவி , அவனது திருட்டு சொத்தை அனுபவிக்க தயங்குவதில்லை. நல்ல வேலை என பொய் சொல்லி ஏமாற்றி திருமணம் செய்தது அவளுக்கு ஏற்பட்ட மிகப்பெரிய சோதனைதான். அதைக்கடக்க அவள் கண்டுபிடித்த , அவளுக்கு ஆறுதல் தரும்பொய் தெய்வம் அந்த சொத்துகள்

அவனை பிடிப்பதில் நேர்மையான முனைப்பு காட்டிய போலிஸ் அதிகாரி , ஒரு கஷ்டமான சூழலில் பொய் தெய்வத்திடமே சரணடைகிறார்

தனது மகன் குற்றவாளி என அறிந்து துடிக்கும் தந்தையும் மன சமாதானத்துக்கு தயாராகிறார்

  சரி..  பொய் தெய்வம் என்றால்தான் என்ன ? அவர்கள் ஜெயித்து விட்டார்களே . அந்த சந்தோஷம் போதுமே .   என நினைக்கலாம்

   ஆனால் சோதனைகளை சமாளிக்க அஞ்சி , பொய் தெய்வங்களால் வெற்றி பெற்று , பொய் தெய்வங்களால் சூழப்பட்ட ஒரு உலகை , கொதிக்கும் எண்ணெய்க்கடியில் மறைந்தபடி உண்மை தெய்வம் கவனித்துக கொண்டிருக்கும் என்பதை மறந்து விடக்கூடாது




லங்காராணி .. நிகழாமல்,போன அற்புதம்


சில நூல்களை படிக்கலாம். சிலவற்றை படிக்க வேண்டும். சிலவற்றை படித்தேஆக வேண்டும்

படித்தே ஆக வேண்டிய சில நூல்களுள் ஒன்றுதான் " லங்காராணி" 
அருளர்  எழுதிய இந்த நாவல் , ஈழப் போராட்டத்தின் அரியதொரு ஆவணமாகவே கருதப்படுகிறது.

1977ல் கொழும்பு நகரில் தமிழர்களுக்கு எதிரான இனக்கலவரம் நடந்தது. வசதியாக வாழ்ந்த பலர் அகதிகளானார்கள். ஏற்கனவே துன்பத்தில் உழல்வோரும் அகதிகளானார்கள்.
இப்படிப்பட்ட 1200 அகதிகளை சுமந்து கொண்டு கொழும்பு துறைமுகத்தில் இருந்து லங்காராணி என்ற கப்பல் யாழ்ப்பாணம் நோக்கி கிளம்பியது.

இது இரண்டு நாள் பயணமாகும். இந்த இரண்டு நாட்களில் கப்பலில் நடக்கும் சம்பவங்கள் , விவாதங்கள் , போர்த்திட்டங்கள் , பிரச்சனை குறித்தும் தீர்வு குறித்தும் அலசல்கள்.. இவற்றை அடக்கியதுதான் இந்த நூல்

விடுதலைப்புலிகள் , டெலோ , ப்ளோட் , ஈபிஆர்எல்எப் , ஈரோஸ் என பல போராட்டக்குழுக்கள் இருந்தாலும் இன்றைய சூழலில் தமிழகத்தில் பலருக்கும் புலிகளையும் பிரபாகரனையும்தான் தெரியும்
ஆனால் ஆரம்ப காலங்களில் தமிழகத்தில் பிரபலமாக இருந்தது ஈரோஸ் இயக்கம்தான்

அதன் தலைவர்களில் ஒருவர்தான் லங்காராணி அருளர்

லங்காராணியில் பேசப்பட்ட விஷயங்களை ஆககப்பூர்வமாக விவாதித்து முன்னெடுத்திருந்தால் அங்குள்ள தமிழர்களுக்கு ஒரு விடிவு கிடைத்திருக்கும். ஆனால் ஆரம்பத்தில் சித்தாந்த ரீதியான போராட்டத்தை ஏற்றுக்கொண்ட இயக்கங்கள் பிற்பாடு தன்னிச்சையாக செயல்படத்தொடங்கி அழிவைத்தேடிக் கொண்டதை முன்னுரையில் வருத்தத்துடன் பதிவு செய்கிறார் நூலாசிரியர்

   நூலில் கவித்துவமான தருணங்கள் , மானுட கீழ்மையை கண்முன் நிறுத்தும் தருணங்கள் ஏராளம்

   அகதிகள் அனைவருக்கும் கப்பலில் உணவு வழங்கப்படுகிறது. குறிப்பிட்ட குடும்பத்துக்கு வழங்கும்போது ஒரு பெரியவர் குறுக்கிடுகிறார் " அவர்களெல்லாம் பசி பட்டினிக்கு பழகியவர்கள்.  அவர்களுக்கு என்ன அவசரம் " 
இந்த கீழ்த்தரமான பேச்சு பலரை டெனஷனாக்குகிறது

யாழ்ப்பாணத்துக்கு செல்வதை வெளிநாடு செல்வதாக நினைக்கும் அறியாமை , கபிச்சத்தீவை ஒரு தேசமாக நினைக்கும் அறிவீனம் போன்ற பலவற்றை நூல் ஆவணப்படுத்துகிறது

தனியொருவனாக பகைவர்களை கலங்கச் செய்த சிவகுமாரன்தான் ஈழப்போரில் முதன்முதலாக சயனைட் அருந்தி உயிர்தியாகம் செய்தவர். இவரைப்பற்றிய பகுதிகள் சிறப்பாக உள்ளன


 சிங்கள மொழியை ஆட்சி மொழியாக்கி தமிழனை இரண்டாம்தர குடிமகனாக்கியது மன்னிக்க முடியாத அயோக்கியத்தனம்

ஆனால் அது மட்டும் பிரச்சனை இல்லை. தமிழகத்தில் இருந்து வேலை செய்ய அழைத்துச்செல்லப்பட்ட மலையக மக்களின் வாக்குரிமை பறிக்கப்பட்ட கொடுமைதான் இதற்கெல்லாம் ஆரம்பம்

அது நடந்தபோது இலங்கையின் பூர்விக தமிழர்கள் இதை பெரிதாக நினைக்கவில்லை. அப்போதைய தமிழ்க்கட்சிகளும் அதை பெரிதாக எதிரக்கவில்லை

ஈரோஸ் இயக்கம் அந்த காலகட்டத்தில் இல்லை. 70 களில்அது தொடங்கப்பட்டபோது , ஈழப்போராட்டம் என்பது மலையகத்தமிழர்களையும் உள்ளடக்கியதாகவே இருக்க வேண்டும் என்ற கொள்கையை முன்வைத்தது

இது மொழிப்பிரச்சனை அல்ல. இது வர்க்கப்போராட்டம் , தேசிய இனங்களின் போராட்டம் என்பதை விவாதங்கள் வழியாக சொல்கிறது நூல்

  ஒரு குறிப்பிட்ட பகுதியினரை எதிரிகளாக சித்தரிப்பது ஓட்டு வாங்க பயன்படும் குறுக்குவழி.

தமிழ் நாட்டில் , ஆரிய பிராமண வெறுப்பு வாதமெல்லாம் கைதட்ட உதவுமேதவிர வாக்குகளாக மாறாது..  ( பாகிஸ்தான் எதிர்ப்பு வாதம் வட மாநிலங்களில் வாக்குகளாக மாறுகிறது)

ஆனால் இலங்கையில் தமிழர் வெறுப்புவாதம் சிஙகள அரசியல்வாதிகளுக்கு வாக்குகளைப்பெற்றுத்தருகிறது. அப்பாவி சிங்களனின் வாழக்கைத்தரத்தை உயர்த்தமனமின்றி தமிழ் வெறுபபு வாதத்தை வைத்து தம்மை வளமாக்கிக் கொள்கின்றனர் சிஙகள அரசியல்வாதிகள்.
ஆக . சிங்கள அரசு என்பது சிங்கள பாட்டாளிக்கும் எதிரானதுதான்

சில சுயநல தமிழ் அரசியல்வாதிகளும் இந்த சுரண்டலில் பங்கேற்றவர்கள்தான்

சிங்கள அரசின் இந்த சுரண்டலை ஆயுதப்புரட்சி மூலம் சிங்கள போராளிகள் சிலர் வீழ்த்த முயன்று தோற்றனர். ஏராளமான சிங்கள இளைஞரகள் கொன்று குவிக்கப்பட்டனர்;

அரசியல்வாதிக்கு சிங்களன் தமிழன் என்பதில்லை. அனைவரையும் சுரண்டுவான்

எனவே அங்கு அனைவரும் ஒன்றிணைந்த பாட்டாளி வரக்க புரட்சி நடந்திருந்தால் ,  அப்போது வலுவாக இருந்த தமிழ் அமைப்புகள் ஒற்றுமையாக இருந்திருந்தால் , அப்போது வலுவாக இருந்த கம்யூனிச அகிலத்தின் ஆதரவுடன் உலகின் முன்மாதிரி தேசம் உருவாகி இருக்ககூடும்

லங்காராணி நூல் நிகழாமல் போன ஓர் அற்புதத்தின் ஆவணமாக என்றும் நிலைத்திருக்கும்

Monday, April 27, 2020

காதலின் வகைகள்


கவிதா சொர்ணவல்லியின் நான் அவன் அது என்ற சிறுகதை படித்தேன்


நமக்கு காதல் குறித்து பல்வேறு கற்பிதங்கள் உண்டு

காதலே  பொய்யானது என்ற வகையினர் ஒரு விதம். அதில் பிரச்சனையில்லை


காதலை கொண்டாடுபவர்களிடம்தான் பல்வேறு போலித்தனங்கள்

காதல் தப்பில்லை. ஆனால் சுய ஜாதியாக பார்த்து , ஜாதக பொருத்தம் பார்த்து , வசதிவாய்ப்புகளை பார்த்து காதலிக்க வேண்டும் என்ற தரப்பு உண்ட

பணத்தை மட்டும் பாரத்தால் போதும் என்ற காதல் உண்டு

இன்ன சாதியினரை , இன்ன மதத்தினரை தவிர யாரை காதலித்தாலும் ஓகே என்ற முற்போக்கினர் உண்டு

முறைப்பெண்ணை முறைமாமனை காதலிக்கலாம் என்ற தாராளவாதிகள் உண்டு

தம்பி , இப்படி எல்லாம் அடங்குவதற்கு அது சிற்றாறு அல்ல. அது காதல் என சொல்லும் கதைதான் நான் அவன் அது


பெண்விடுதலை என்பது பெண்மைத்தனத்தை மறுதலிப்பது,என சிலர் நினைக்கிறார்கள். பூ வைப்பது , தன்னை அழகாக்கிக்கொள்வது , பூப்படைதலை கொண்டாடுவது போன்றவையெல்லாம் பெண்ணடிமைத்தனம் என நினைப்பவர்கள் உண்டு. ஆண்கள் போல ஆடை அணிந்து ஆண்களைப் போல இருப்பதுதான் ஃபெமினிசம் என ஆடவர் பார்வையில் பெண்ணியத்தை வரையறுப்போர் உண்டு

அட நாய்களா.  ஒரு பெண் தன்னை"தன் உணர்வுகளை பிறருக்கு அஞ்சாமல் கொண்டாடுவதுதான் இயல்பானது. அதை"நோக்கி வளர்வதுதான் ஆரோக்கியமானது என ஒரு சித்தி பாத்திரம் மூலம் குறிப்பால் உணர்த்துவது அழகு

ஓர் ஆண் தன் மீது கொண்ட அக்கறையை தாழம்பூ பறிப்பதன் மூலம் உணர்கிறாள் என்பதில் அவள் உணர்வும் ஊரின் பின்புலமும் சொல்லப்பட்டு விடுகிறது

அந்த காதல் கல்யாணத்தில் முடிய வாய்ப்பில்லை.  உடல் சாரந்த இன்பம் சாத்தியமில்லை. அதற்காக அது காதல் இல்லாமல் போய்விடாது.

காதல் எங்கும் எப்படியும் இருக்கலாம் என்பதை ஆற்றோரத்தில் வீசும் தென்றல் போன்ற நடையில் சொல்கிறது கதை

  அறியாத வயதில் தெரியாமல் ஏற்படும்ஈர்ப்பு காதலாகுமா என்ற கேள்வி வரலாம்

  அறிந்த வயதில் பல்வேறு கணக்குகள் போட்டு வருவதுதான் காதலா என்ற கேள்வியும் வருகிறது


காதல் என்ற பெயர் , இந்த கதை சூழலில் ,சிலருக்கு அதிர்ச்சியாக இருக்கலாம்

அவர்களையுமேகூட அந்த பெயரற்ற உணர்வை ரசிக்க வைக்கிறது கதை


Sunday, April 26, 2020

எழுகதிர் சூரியனை நோக்கிய பயணம்

ஜெயமோகனின் எழுகதிர் சிறுகதை ஒரு நாவலுக்கான சாத்தியங்களைக் கொண்டது.  பிற்பாடு நாவலாக எழுதப்பட்டாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை

வசதியான குடும்பத்தில் மரியாதைக்குரிய ஒரு தந்தைக்கு மகனாக பிறந்தவன். வசதியான வாழ்க்கையும் வசதிகளும் அவனை ஊதாரி ஆக்கிவிடுகின்றன. குற்றச்செயகளில் ஈடுபடுகிறான். அதைக்க்கண்டிக்க தந்தையையே அடித்து , கொல்ல முயன்று , கடைசி கணத்தில் விட்டுவிடுகிறான்
அவரை காயப்படுத்திய குற்றவுணர்வு அவனை வாழ்நாள் முழுக்க துரத்துகிறது

முழு நேரமாக குற்றச்செயல்களில் ஈடுபடுகிறான்

அப்போது ஶ்ரீகண்டன் என்ற இன்னொரு குற்றவாளியின் சிநேகிதம் கிடைக்கிறது. அவனது ஆளுமையில் மயங்கி நண்பனாகிறான். அவனை ஆராதிக்கிறான்
கோயில் புதையலை கொள்ளையடித்து விட்டு வெளிநாடு தப்பிச் செல்கின்றனர் . வெகு அபூர்வமான வைரம் , தங்கம் என"கிடைத்துள்ளது. அதில் அருணபிந்து என்ற ஒளிமிக்க வைரத்தில்தான் ஶ்ரீக்கு முழு ஆர்வம். பிற,அனைத்தையும் கூட்டாளிக்கு தந்து விட சித்தமாக இருக்கிறான்
ஒரு கட்டத்தில் இருவரும் எதிரிகள் வலையில் சிக்குகின்றனர். இவனை பிடித்து விடுகின்றனர். அருணபிந்து வைரத்துடன் தப்ப முயன்ற ஶ்ரீயை கொன்று விட்டார்கள் என தெரிய வருகிறது

அதன் பின் பல போராட்டங்களுக்குப்பிறகு இந்தியா வந்த விடுகிறான்

சில ஆண்டுகள் கழித்து தற்செயலாக டிவி பார்க்கும்போது கீழ்திசை நாட்டின் தெருவொன்றில் ஶ்ரீ நடந்து செல்வதை காண்கிறான்
ஶ்ரீக்கு மரணமில்லை. வைரத்தின் ஒளி அவனுள் துலங்குவதைப் பார்க்க முடிகிறது

கதை இப்படி முடிகிறது

"அவனிடம் அந்த மணி இருக்கிறது. அருணபிந்து. அல்லது அதன் ஒளி மட்டுமாவது அவனிடம் இருக்கிறது"

அவன் கிழக்குநோக்கிச் சென்றுகொண்டே இருக்கிறான். இதோ ஐம்பதாண்டுகள் ஆகிவிட்டன. ஒருவேளை அவன் இன்னும் சென்றுகொண்டேதான் இருப்பான்."

கதை எனக்கு ஜேகிருஷ்ணமூர்த்தியை நினைவுபடுத்தியது

அவர் கேட்பார் " ஐயன்மீர். ஏன் நம்மில் சிலர் மட்டுமே செயல்புரிவராக இருக்கிறோம். பலர் பார்வையாளர்களாக இருப்பதிலேயே மகிழ்வதன் அபத்தம் ஏன் புரியவில்லை. வாழ்க்கை எனும் அசாதாரண விஷயத்தை தவறாக பயன்படுத்துவதை ஏன் உணர மறுக்கிறோம் "என்று கேட்பார் அவர்

சற்றோப்ப ஒரேமாதிரியான இரண்டு பாத்திரங்கள் கதையில் வருகின்றன. ஒருவன் சூரியனாய் சுடர்விடுகிறான். இன்னொருவன் நரகத்தில் உழல்கிறான்

இருவரும் வசதியான குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்.  பெரிய குற்றச்செயல் ஒன்றால் திசை மாறியவர்கள். முழுநேர குற்றவாளிகள். 

ஆனால் அவர்கள் இருவரையும் ஓர் அம்சம் பிரிக்கிறது

அது என்ன அம்சம் என்பதை இணைய மொண்ணைகளை , இணைய போராளிகளைப் பார்த்தால் புரிந்து கொள்ளலாம்

சிலரது முகநூல் பதிவு இப்படி இருக்கும்

பேருந்தில் நல்ல கூட்டம். அனைவருக்கும் கஷ்டம் என்றாலும் பெண்கள் மிகவும் கஷ்டப்பட்டனர். அதைப் பார்த்தும் பார்க்கமலும் சில ஆண்கள் லேடீஸ் சீட்டை ஆக்ரமித்திருந்தனர். அவர்களுக்குதான் அறிவில்லை.  வேறு யாராவது அதைக் கண்டிப்பார்கள் என்று எதிர்பார்த்தேன். யாருமே உதவவில்லை. மனதுக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது

  இப்படி ஒரு போஸ்ட் போடுவார்கள். லைக்குகள் குவியும்.  உங்கள் உணர்வு புரிகிறது நண்பா என பலர் உருகுவார்கள்

சார் கொஞ்சம் எந்திரிங்க லேடீஸ் உட்காரட்டும் என ஒரு வார்த்தை சொன்லால் போதும். பிரச்சனை முடிந்து விடும். அதை செய்ய மனமில்லாமல் , தான் மனரீதியாக கஷ்டப்பட்டேன் என்பதை ஒரு சாதனையாக எழுதுவதை அடிக்கடி பார்க்கலாம்

 தெருவில் ஓடும் சாக்கடைப்பிரச்சனையை கவுன்சிலர் பார்வைக்கு கொண்டு செல்லும் முனைப்பு இருக்காது. கிழக்கு ஆப்ரிக்க குழந்தைகளை எண்ணி மனம் துடிதுடிப்பதாக எழுதுவார்கள்

இது பெரும்பாலானோர் மனநிலை. அடுத்த கட்டத்தினர் ஒரளவு உழைப்பாரககள். ஆனால் முழுமையாக தம்மை ஒரு செயலுக்கு ஒப்புக்கொடுக்க முடியாதவர்கள்

 வெகு வெகு சிலர்தான் முழுமையாக தமது செயலில் கரைந்து அதுவாகவே மாறுபவர்கள். இவர்கள் இந்த இரண்டாம் கட்டத்தினர் மீது பரிவு கொண்டிருப்பார்கள்.  இரண்டாம் கட்டத்தினர் இவர்கள் மீது மரியாதை வைத்திருப்பார்கள்.

எனவே இந்த உறவு எப்போதுமே சுவாரஸ்யமானதுதான்

இந்தக்கதை இப்படிப்பட்ட, உறவைத்தான் பேசுகிறது

கதை சொல்லியின் கெத்து என்பதே , தன் அப்பாவுக்காக எப்படியெல்லாம் வருந்துகிறேன் தெரியுமா என்ற குற்றஉணர்ச்சிதான். அப்படி வருந்துவதையே தனது மேன்மை என நினைத்துக் கொள்கிறான்

இதே போன்ற தவறை செய்திருக்க வாய்ப்புள்ள ஶ்ரீ , அவனது ஒவ்வொரு செயலுக்கும் வாழ்வின் ஒவ்வொரு நிமிடத்துக்கும் பொறுப்பேற்று சூரியனை நோக்கி பயணிக்கிறான்














Thursday, April 23, 2020

பெரியார் பட சரச்சை இளையராஜா விளக்கம்



ஒருவர் கீழ்மட்டத்தில் இருந்து முன்னேறி வநதால் அதை பலரால் ஜீரணிக்கமுடியாது
;இளையராஜா மீதான தாக்குதல்கள் இப்படிப்பட்டவையே

சில ஆண்டுகளுக்கு,முன் பெரியார் என்ற படத்துக்கு அவர் இசையமைககக மறுத்து விட்டார் என ஒரு தரப்பு புரளி"கிளப்பியது

இதை இந்துக்கள் வரவேற்கிறாரககள் என, பிஜேபி அறிவித்தது

ஆக இரு தரப்பாலும் அவருக்கு தொல்லைதான்

அது பொய்யான தகவல் என அவரே சொன்ன பின்னும் இந்துத்துவரககளும் விடவில்லை. பிறரும் விடவில்லை

ஜீ வி இதழில் இளையராஜா அளித்த விளக்கம் இதோ..

.......

ஒரு திருமணம் நடக்கிறது. அதற்கு ஒரு சமையற்காரரை ஏற்பாடு செய்து விருந்து தயாராகிக் கொண்டிருக்கிறது. கல்யாண வீட்டுக் காரர் திடீரென்று பந்தியின் முன்னால் உட்கார்ந்திருப்பவர்களிடம் 'இங்கே ஒரு பிரபலமான சமையற்காரரை அழைத்திருந்தேன். அவர் வருவதற்கு மறுத்து விட்டார்.' என்று சொன்னால் அங்கே இருப்பவர்கள் என்ன நினைப்பார்கள்? அந்த சமையல்காரரும் இதைக் கேள்விப்பட்டு அதிர்ச்சி அடைந்திருப்பார். காரணம், அவரைத்தான் அந்த சமையல் வேலைக்கு அழைக்கவே இல்லையே! அது போலவே பெரியார் படத்துக்கு இசையமைக்க என்னை யாரும் முறையாக அழைக்கவும் இல்லை.எந்த ஒப்பந்தமும் செய்யவுமில்லை!...
...பாரதி படத்துக்குப் பிறகு ஞானராஜசேகரன் என்னைச் சந்தித்து சுபாஷ் சந்திர போஸ் பற்றி ஒரு படம் எடுக்கிறேன். முதல்கட்ட படப்பிடிப்பில் ஒரு பாடல் காட்சி வருகிறது. அதற்கு நீங்கள் ஒரு பாடல் இசையமைத்து ரெக்கார்ட் செய்து தர வேண்டும் என்று கேட்டார். 'இப்போது உள்ள அரசியல் சூழ்நிலையில் சுபாஷ் சந்திர போஸை எந்தக் கோணத்தில் படம் எடுக்கிறீர்கள்? அரசியல் சாயம் உண்டா? சுதந்திர உணர்வு போராட்டப் படமா? இப்படி படத்தின் நிறம் என்ன என்பதைத் தெரிந்து கொண்ட பிறகுதான் இசை அமைக்க முடியும். எனவே படத்தை எடுத்துக் காட்டுங்கள். பிறகு பார்க்கலாம்' என்றேன்
அவ்வளவுதான்! அதன்பிறகு சில வருடங்கள் கழித்து, அவர் பெரியார் படம் எடுத்துக் கொண்டிருப்பதாகவும் அதற்கு வேறு ஒரு இசையமைப்பாளரை ஏற்பாடு செய்திருப்பதாகவும் நண்பர்கள் மூலம் அறிந்தேன். ஆனால் இப்போதோ பெரியார் படத்துக்கு நான் இசையமைக்க மறுத்துவிட்டேன் என்று வீணாக செய்தி கொடுத்துக் கொண்டிருக்கிறார்....
....நான் காங்கிரஸ்காரனாக இல்லாவிட்டாலும் காமராஜ் படத்துக்கு இசைத்தொண்டு செய்தேன். நான் ஒரு திராவிடக் கழகத்தவன் இல்லையென்றாலும் சுயமரியாதையோடு உள்ளத் தூய்மையோடு பெரியாருக்கு சேவை செய்யத் தயங்கி இருக்க மாட்டேன்.
ஆனால் இந்தப் பெரியார் படத்தை எதற்காக எடுக்கிறார்கள்? அந்தப்படம் குறித்து என்னுடைய மூன்று கேள்விகள் இவைதான்.
1. இது பெரியாரின் கொள்கை விளக்கப் படமா?
2. பெரியாரின் வரலாறா?
3. தந்தை பெரியார் கேரக்டரில் நடிக்கும் சத்யராஜின் படமா?
இந்த மூன்று கேள்விகளுக்கும் நியாயமான விடைகள் இந்தத் திரைப்படத்தில் அமைந்தால், இளையராஜா மட்டுமல்ல....வேறு எந்தக் கொம்பனின் இசையும் பெரியார் படத்துக்குத் தேவையே இல்லை...
....நான் ஆன்மீகத்தை விரும்புகிறவன் என்ற வகையில், பெரியாரின் கடவுள் மறுப்புக் கொள்கைகளில் எனக்கு உடன்பாடு இல்லையென்றாலும், சுய மரியாதையையும், தன்னம்பிக்கையையும் அடிமட்டத்தில் இருந்த மக்கள் மனதில் ஏற்படுத்தி, சாதி கொடுமைகளை அழிப்பதற்காக தன் வாழ்நாட்களையே அர்ப்பணித்த அவரை நான் மதிக்கவில்லை என்றால் நான் உண்மையான தமிழனே அல்ல. என் ரத்தத்தில் ஊறியிருக்கும் இந்த உணர்வு ஒன்றே தந்தை பெரியார் படத்துக்கு நான் இசையமைக்க மறுத்திருக்க மாட்டேன் என்பதற்கு சரியான ஆதாரம் இதை மக்கள் புரிந்து கொள்வார்கள்..."

Wednesday, April 22, 2020

பத்து லட்சம் காலடிகள்.. ஒரு பார்வை


சில கதைகளை திரைப்படங்களை உலகமே கொண்டாடும்.  அந்த படம் வெளிவரும்போதே நாம் பாரத்திருந்தால் அந்த கதையை வெளிவரும்போதே படித்திருந்தால் அது நமக்கு ஒரு தனி மகிழ்ச்சியைத் தரும்

  உலகம் பாராட்ட ஆரம்பிக்கும் முன் நாம் அதன் உன்னதத்தை அறிந்து,விட்டோமே என தோன்றும்

அப்படி ஒரு மகிழ்ச்சியைத்தந்த சிறுகதை ஜெயமோகனின் பத்து"லட்சம் காலடிகள்.

கதை பல தளங்களில் விரியக்கூடியது என்றாலும் ஒரு புரிதலுக்காக இப்படி சொல்லலாம்

கிருஷ்ணன் என்றொரு பிள்ளைப்பூச்சி கொலை செய்யப்பட்டு கிடக்கிறான்.
இவனெல்லாம் ஓர் ஆள் என்று யார் இவனைக் கொன்றது என ஒரு போலிஸ்காரர் (ஔசேப்பச்சன் )கண்டுபிடிக்கமுயல்கிறார்

யாரோ ஒரு மனிதர் இதில் சம்பந்தப்பட்டு இருப்பதாக தோன்றுகிறது. ஆனால் ஒருப்பிள்ளைப்பூச்சியை கொல்வதற்கு முகாந்திரம் இல்லையே

கடைசியில் பல்வேறு தற்செயல்களால் உண்மை தெரிகிறது

அப்துல்லா என்ற மிகப்பெரிய செல்வந்தரின் மகன் ராதாமணி என்ற திருமணமான பெண்ணை அவளது பேரழகுக்காக விரும்புகிறான். அவளுக்காக எதுவும் செய்யத்தயார் என மன்றாடுகிறான்
அவள் மறுத்து விடுகிறாள். தனது பிரசகசனையை கிருஷ்ணன் என்ற பிராமணிடம் சொல்கிறாள்

அவன் இதை அப்துல்லாவிடம் சொல்லி மிரட்டுகிறான். அவருக்கு இவன் ஒரு பொருட்டில்லை என்றாலும் காசு கொடுக்கிறார். அந்த காசுக்காக யாரோ சில பொறுக்கிகள் செய்ததுதான் அந்த கொலை என கண்டுபிடிக்கிறார் அந்த போலிஸ்

இன்னொன்றையும் அப்துல்லா சொல்கிறார்.. தன் மகன் செய்தது தவறு என்பதால் , தான் கட்டிக்காத்து வரும் மாண்பை காக்கும் பொருட்டு , தன் மகனையே கொன்று விட்டது தெரியவருகிறது.  பிரமிப்புடனுடம் மரியாதையுடனும் அவரைப் பார்க்கிறார் போலிஸ்காரர்

""அப்போதெல்லாம் மாப்பிளாக் கலாசிகள் ரயில்வே வேகன்களை தூக்கிய காட்சிதான் நினைவுக்கு வரும். மூத்த உஸ்தாத் என்னிடம் சொன்னார், ஆயிரத்துக்கு ஆயிரம் கால்வைப்புகள், அவ்வளவுதான் என்று. ஆயிரம் பெருக்கல் ஆயிரம். பத்துலட்சம் காலடிகள். ஆனால் அதில் ஒன்று, ஒன்றே ஒன்று, தவறாகப் போய்விட்டால் அவ்வளவுதான். தவறு பெருகிப்பெருகி கப்பல் மீண்டும் கடலுக்குள் சென்றுவிடும்""

தன்னை ஒரு இறைச்சித்துகளாக நினைத்து வீண்பேச்சு பேசி , தின்று துய்த்து வாழ்ந்து மறைவோர் உண்டு.

நீண்டதொரு பாரம்பரியத்தின் ஒரு இணைப்பு சங்கிலியாக தன்னை நினைப்போரும் உண்டு

பேரிடர் காலத்திலும் நியாயமான விலைக்கு பொருட்களை விற்போரை காண்கிறோம் அல்லவா.   தாம் செய்யும் சிறு தவறும் கொண்ட அந்த நீட்சியை அழித்து விடும் என்பது அவர்களுக்குத் தெரியும்.

இந்த கதையில் அப்துல்லா ஒரு தவறான அடியை வைக்ககூடாது என நினைத்து தன் மகனை கொன்று விடுகிறார்

ஔசேப்பச்சன் கண்களுக்கு  அவர் மாமனிதனாக பேரழகாக தெரிகிறார்

அவர் கண்களையே பார்த்துக்கொண்டிருந்தேன். ஒரு அராபிய தங்ஙள் போல, ஒரு சூஃபி போல, ஒரு சுல்தான்போல. மீண்டும் அதே எண்ணம், என்ன ஓர் அழகு.

நான் அவர் முகத்தைப் பார்த்தேன். அதே புன்னகை, அதே தெளிந்த அழகிய விழிகள்

இதே போன்ற செயலைத்தான் ராதாமணியும் ஆற்றுகிறாள்

அவள் சுலபமாக பணக்காரனை ஏற்றிருக்கலாம்.
எப்படி அப்துல்லா தன் பாரம்பரிய மாண்பை காக்கிறரோ அது போல அவளுக்கும் கலாச்சார ரீதியான ஒரு தொடர்ச்சி இருக்கிறது. தனக்கு கிடைக்கப்போகும் சுகபோகத்துக்காக ஒரு தவறான காலடியை எடுத்து வைக்க அவள் விரும்பவில்லை

ஆனால் ஔசேப்பச்சன் கண்களுக்கு இவள் ஒரு அபலையாகவே , தவறானவளாகவே தெரிகிறா

(அவள் கண்கள்! தோழர்களே, கதையெழுதும் பாதிமலையாளிப் பாண்டியே, ஒன்று தெரிந்துகொள். சிலசமயங்களில் மனித மனதை நேருக்குநேராகப் பார்த்து நாம் நடுங்கிவிடுவோம்.)

உண்மையில் அந்த போலிஸ்காரன் ஒரு பெண்மை உட்பட அனைத்தையுமே இளக்கரமாக பார்க்ககூடியவன்

அவன் எனவே அவளைப்பற்றிய அவன் பார்வையை அப்படியே ஏற்க வேண்டியதில்லை என்ற சுதந்திரத்தை வாசகனுக்குத் தருகிறது கதை











Saturday, April 18, 2020

ஜெயமோகனின் சூழ்திரு சிறுகதை குறித்து...

சூழ்திரு என்றொரு சிறுகதை படித்தேன்.
ஜெயமோகனின் நல்லதொரு படைப்பு

அந்த கதை குறித்த என் பார்வை

...

அன்புள்ள ஜெ
சூழ்திரு கதை சற்றே பூடகமாக அமைந்திருந்தது..

அனைவருக்குமே குறிப்பிட்ட செல்வங்கள் அருளப்பட்டு இருக்கின்றன. உதாரணமாக இந்த கதையில் வரும் பையன் ஆனந்தனுக்கு சரஸ்வதி கடாட்சம் வாய்த்துள்ளது (லச்சுமி கடாச்சம் உண்டா?””அப்டி இல்லை. ஆனா அம்மைய மாதிரி கவிதை வாசிப்பு உண்டு…”லச்சுமியும் சரஸ்வதியும் ஒண்ணுல்லா)

இவனது உயரங்களை தந்தை அடையமுடியாமல்கூட போகலாம். அது தேவையுமன்று

அவர் தன்னை அறிந்தவர். தன் வாழ்க்கையை ஒரு அரசர் போல வாழ்கிறார். தனக்கு கிடைக்கவிருக்கும் நல்லனுபவம் தன் தோழர்களுக்கும் கிடைக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர். அவரை திருமணத்துக்கு அழைத்தவருடன் பெரிய நட்பு இல்லை என்றாலும் அழைத்தவர் உட்பட அனைவருமே அவரை உயர்வான இடத்தில்வைத்துப் பார்க்கின்றனர்;

தானும் தந்தைபோல உயர்ரசனைகளை பேண விரும்பும் பையன் ஸ்டைலான சட்டை அணிகிறான். சமையலில் எதைப்பாராட்ட வேண்டும் என தந்தைக்கு பாடமெடுக்க முயல்கிறான்

தான் தனது தந்தை கிடையாது. அவர் வேறு என்ற புரிதல் அவனை என்ன செய்திருக்கும் என யோசிக்க வைத்தது கதை. அவன் தனது சுயத்தை கண்டறிய இது ஒரு துவக்கமாக அமைந்திருக்கக்கூடும்.. இந்த திறப்பு நிகழக்கூடிய நுண்ணுணர்வு அவனிடம் உண்டு என்பதைத்தான் , தந்தை சமையல்காரரிடம் தவறாக பேசிவிடக்கூடாது என பதைபதைப்பு காட்டுகிறது. அது அவன்,வாழ்வின் ஒரு உச்சதருணம்

சிலர் தம்மை இலக்கியவாதிகள் என நினைத்துக் கொண்டு பேசிக் கொண்டு இருப்பார்கள். அனைவருக்குமே அது வெறும் பாவனை என தெரிந்து கேலியுடன் பார்ப்பார்கள். சம்பந்தப்பட்டவர்களுக்கு மட்டும் தெரியாது

அவரை சூழ்ந்துள்ள செல்வம் வேறு ஏதாவது ஒன்றாக இருக்கலாம். பேச்சாற்றல் , நிர்வாகத்திறன் , வியாபாரம் , பொதுச்சேவை என அவர்களை அவர்களுக்கு அடையாளம் காட்டும் தருணம் எடைமிக்கது. அப்படி ஒரு தருணத்தை இந்த கதையில் அந்த பையன் பார்வையில் காண முடிந்தது

என்றென்றும் அன்புடன்
பிச்சைக்காரன்

Thursday, April 16, 2020

வீழ்வது நாமாக இருந்தாலும் வாழ்வது ஆங்கிலமாக இருக்கட்டும் டிரம்ப் ஆவேசம்

நமது பாணியில் அமெரிக்காவிலும் நிவாரணப் பொருட்களில் அதிபர் பெயர் பொறிக்கப்பட்டிருப்பது அந்நாட்டில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது
இது எதில்போய் முடியும் என நமக்குத்தானே தெரியும்

...............

வாழைமட்டை அமெரிக்கனின் அக்கிரமம் ..  அதிபர் டிரம்ப் ஆவேசம்


கரோணாவால் பாதிக்கட்டோருக்கு நிவாரணம் வழங்கப்படுவது தெரிந்ததே.  வாழும் ஷேக்ஸ்பியர் , ஆங்கில இனக்காவலர் இதய தெய்வம் ட்ரம்ப் ஆணைக்கிணங்க இது வழங்கப்படுகிறது என்று அவற்றில் எழுதப்பட்டு இருப்பது சர்ச்சைக்குள்ளாகியுள்ளது. இது தொடரகபாக ட்ரம்ப் வெளியிட்ட அறிக்கை

உடன்பிறப்பே..

இன்றைய தினம் கொரோனாவால் கொத்துகொத்தாக மடியும் கொடூரத்தை கொஞ்சம் குறைப்பதற்காக , வாட்டத்தை போக்கும் வாடைக்காற்றாக , கடலில் கதிகலங்கும் கப்பலுக்கு கலங்கரை விளக்காக , நிவாரணம் வழங்க உத்தரவிட்டேன். 
அதில் என் பேர் இருப்பதை வைத்து போர் ஒன்றை சிலர் தொடங்கி இருப்பதைப் பார்க்கும்போது , அமெரிக்கா இன்னும் ஒரே நாடாக இருந்திடத்தான் வேண்டுமா என நாம் கேட்காவிட்டாலும் மக்கள் கேட்க மாட்டார்களா.
ஆங்கிலத்தாய்க்கு வானளாவிய தங்கச் சிலை , மக்கள் வருத்தம்போக்க ஹாலிவுட் படங்களுக்கு வசனம் என பல நல்வாழ்வுத்திட்டங்கள் பரிசீலனையில் இருக்கும்போது , சிலர் பெயர் பொறுப்பை கண்டு பொருமுவதை பார்க்கும்போது அமெரிக்கன் இப்படி வாழைமட்டைபோல சுரணையின்றி இருக்கிறானே என தோன்றுகிறதல்லவா. அக்கிரமக்காரர்கள் நயவஞ்சகர்கள் என்ன சொன்னாலும் , வீழ்வது நாமாக இருந்தாலும் வாழ்வது ஆங்கிலமாக இருக்கட்டும் என்பதை மனதில் தாங்கி தொடரந்து உழைப்போம்

அன்புடன்

டொனால்ட் ட்ரம்ப்

Wednesday, April 15, 2020

நாஞ்சில் நாடனின் மழை


சிறுகதை என்பது ஒரு கருத்தைச் சொல்வதன்று.  ஓர் அனுபவத்தை கொடுத்தால் போதும்.

நாஞ்சில் நாடன் சிறுகதைகள் இந்த அனுபவத்தை தர தவறியதில்லை

பேச்சியம்மை என்ற சிறுகதையும் ஓர் அற்புதமான வாசிப்பனுபவம் நல்கியது

மழையில் ஆரம்பித்து மழையில் முடியும் கதை என்பதை மறந்துவிட்டுப் படித்தால் கதை இப்படி ஒரு புரிதலை தருகிறது

தன் மகனின் சின்ன வயதிலேயே கணவன் அவளை விட்டு எங்கோ போய்விடுகிறான்.

அவள் கஷ்டப்பட்டு , தன் உடைமைகளை விற்று , கடன் வாங்கி மகனை படிக்க வைக்கிறாள். அமெரிக்காவுக்கு வேலை கிட்டி போய்விடுகிறான் மகன்

அவனுக்கு திருமணம் செய்து பார்க்க விரும்புகிறாள்
அவனோ இங்கு வரவில்லை. உரிய பதிலும் தரவில்லை. கணவனைப்போல,மகனும் தன்னை விட்டு பிரிந்து விட்டான். பிச்சை போடுவது போல காசு அனுப்புகிறான் என,உணர்கிறாள். உன் காசு இனி வேண்டாம். இனி யாருமே
வேண்டாம் என முடிவெடுக்கிறாள். இனி வருமானத்துக்கு வழி இல்லை. தன் சொத்தை விற்று சாப்பிடுகிறாள். அனைத்தும் காலி,ஆனதும் வெறும் கைகறுடன் அவ்வூர் ஆலயத்தில் , கிடைப்பதை சாப்பிட்டு , யாருமற்றவளாக வாழ ஆரம்பிக்கிறாள்.

மகனின் காசை தூக்கி எறிந்த அந்த சுயமரியாதைதான் கதை என தோன்றுகிறது

ஆனால் நல்லவர் கெட்டவர் என பாராமல் எந்த எதிர்பார்ப்புமின்றி பெய்ரும் மழையின் பின்னணியில் கதையைப் படித்தால் வேறு,ஒரு புரிதலை அளிக்கிறது கதை
இங்கே இன்னொரு விஷயம்
கவிஞர் வாலி ஒரு கவிதையில் , மழை தூற்றலும் நின்றது..  பிறர் தூற்றலும் நின்றது என எழுதியிருப்பார்

அந்த நூல் வெளியீட்டுவிழாவில் பேசிய வைரமுத்து , தூற்றல் என்பது தவறு,. தூறல் என வரவேண்டும் என்றார். அநத சரச்சை சில மாதங்கள் நீடித்தது

இந்த கதையில் மழை குறித்த இந்த வர்ணனையை இந்த பின்புலத்தில் ரசித்தேன்
""""மழைக்கும் அதன் அடர்வு பொறுத்துப் பெயர்கள் உண்டு. தூற்றல், தூறல், தூவானம், சரமழை, அடைமழை, பெருமழை. சிறு தூறலை, நெசவாளர் நூறாம் நம்பர் மழை என்பார்கள். நூலின் சன்ன ரகம் போல என்ற பொருளில்"


பேச்சியம்மையின் மனம் அந்த மழையப் போல , வாரி வழங்கும் தன்மை கொண்டது என்ற குறிப்புதான் கதை முழுதும் விரவி இருக்கிறது

ஓடிப்போன (?) கணவன் மீண்டும் வர வேண்டும் என்ற ஆசை அவளிடம் கிஞ்சித்தும் இல்லை
அவளது ஒரே ஆசை மகனது திருமணம்தான். அதுகூட அவளுக்காக அல்ல.  தன் கடமையை முடித்துவிட்டு ஆலய கைங்கர்யங்கள் செய்யலாமே என்பதுதான் திருமண ஆசைக்கு காரணம்

அது நடக்காது என தெரிந்தபின் அதை மறந்துவிட்டு தன்னால் இயன்ற அளவு பொதுப்பணிகள்"செய்து கொண்டு பற்றற்று வாழ ஆரம்பிக்கிறாள் அவள்

அவள் மகன் நன்றி மறந்தவன் அல்லன். இந்திய வாழ்க்கை பிடிக்காதிருக்கலாம். மண வாழ்வு ஈடுபாடின்மை , சுயபால் திருமண ஆசை என அவன் இங்கு வராததற்கு நியாயமான காரணங்கள் ஆயிரம் இருக்கலாம். அவை கதையில் வருவதில்லை . அவளால் கிழிக்கப்பட்ட கடிதங்களில் காரணங்கள் இருக்கலாம்

வழக்கமான பெற்றோர்கள் அவனது ஆசையை தெரிந்து கொண்டு , அவை தவறு என கன்வின்ஸ் செய்ய முயல்வாரககள். அல்லது அமெரிக்காவில் பையன் இருக்கிறான் என்ற பெருமையுடன் அவன் காசில் வசதியாக வாழ்வார்கள்.
பொதுவாக இவர்களை வெற்றியாளர்கள் என நினைப்போம்

ஆனால் வேறு எந்த உயிரியுமே இப்படி பிறர்வாழ்வை கட்டுப்படுத்த முயல்வதே இல்லை

எப்படி கணவனை இயல்பாக மறந்து தன்பாதையில் நடக்கலானாளோ அதே போல மகனையும் இனி வர வேண்டாம் , கடிதமோ காசோ வேண்டாம் என விலக்கி வைத்து விட்டு நடைபோடும் பேச்சியம்மைதான் வாழ்வில் ஜெயித்தவள் என தோன்றுகிறது


மழையுடன் தன்னை அடையாளப்படுத்திக் கொள்கிறாள் எனற குறிப்புடன் கதை முடிகிறது;


""கச்சான் சற்று வலுத்து அடித்தது. அடைமழையுடன் காற்று கலகலத்துப் பேசியது.
நனைந்துவிடாமல், சுவரும் திண்டும் கூடும் இடத்தில் குறுகி உட்கார்ந்து, வலுக்கும் மழையை ஊடுருவிப் பார்த்தவாறு இருந்தாள் பேச்சியம்மை"

அவள் தரிசித்த மழையை நாம் தரிசிக்க அவளாக மாறினால்தான் முடியுமோ!!











Monday, April 13, 2020

சீன அதிபருடன் ஒரு தமிழன்

கம்யூனிச வரலாறு என்பது புதிர்களும் மர்மங்களும் கொண்டது

ரஷ்யப்புரட்சி முடிந்து லெனின் ஆட்சியில் அவருக்கு நெருக்கமாக இருந்தவர் டிராட்ஸ்கி. ஆனால் லெனினுக்குப் பிறகு ஆட்சிக்கு வந்தவர் ஸ்டாலின். டிராட்ஸ்கி நாடு கடத்தப்பட்டார். துரோகியாக சித்தரிக்கப்பட்டார். கடைசியில் கொல்லப்பட்டார்

அதன்பிறகு ஆட்சிக்கு வந்த குருச்சேவ் , ஸ்டாலின் ஆட்சியை கடுமையாக விமர்சித்தார். சில ஆண்டுகளில் பதவி நீக்கம் செய்யப்பட்டார். வல்லரசின் அதிபர் 400 ரூபிள் பென்ஷனுடன் சிறிய வீடு ஒன்றில் அரசு கண்காணிப்பில் தன் கடைசி காலத்தை கழித்தார்

சோவியத் யூனியனின் நண்பனாக இருந்த சீனா , பிறகு அதன் எதிரியானது.

இதுபோன்ற சர்வதேச நிகழ்வுகள் , இந்யா இலங்கை போன்ற நாடுகளின் கம்யூனிஸ்ட் கட்சிகளிலும் பிளவுகளை நிகழ்த்தியது

இலங்கை பொதுவுடமை கட்சியின் அடையாளமாக விளங்கிய என். சண்முகதாசனின் " ஒரு கம்யூனிச போராளியின் அரசியல் நினைவுகள் " நூல் இலங்கையின் அரசியல் செயல்பாடுகளைப் பற்றி மாறுபட்ட பார்வையை அளிக்கிறது

கம்யூனிச வரலாறு மட்டுமல்ல . தமிழர் பிரச்சனை குறித்தும் யாழ் நூலக எரிப்பு போன்ற சம்பவங்கள் குறித்தும் அரிய ஆவணமாக திகழ்கிறது நூல்

ஜெயவர்த்தன , பிரேமதாச , ராஜபக்சே என அனைவரும் தமிழர்களை அழிக்க வேண்டும் என்பதே நோக்கமாக கொண்டவர்கள் என நினைக்கிறோம்

உண்மையில் அவர்களது நோக்கம் சிங்களர் நலனும்கூட அல்ல. அரசியல்வாதிகளின் ஒரே நோக்கம் தன்னலமும் தமது குடும்பத்தினர் நலனும்தான். அதற்காக தமிழனையும் கொல்வார்கள். சிங்களர்களையும் கூட்டம்,கூட்டமாக கொல்லத் தயங்க மாட்டார்கள் என்ற வரலாற்று உண்மையை பதிவு செய்கிறார் நூலாசிரியர்

மாவோ இவருக்கு நேரம் ஒதுக்கி தனியாக இவருடன் உரையாடிய நிகழ்வு ஒரு தமிழனாக நம்மை பெருமைப்பட வைக்கிறது

தொப்புள்கொடி உறவு போன்ற வீர,வசனங்கள், இந்திய ராணுவ நடவடிக்கை போன்றவை அங்குள்ள தமிழர்களுக்கு துன்பத்தைதான் தருகிறது என்பதை படம் பிடித்துள்ளார்

வர்க்க போராட்டம் ,தொழிற்சங்க போராட்டங்கள் , கல்லூரி காலத்தில் காட்டிய தலைமைப்பண்பு , சிறைவாசம் என ஏராளமான விஷயங்கள் பதிவாகியுள்ளன

கம்யூனிஸ்ட்டாக இருந்தாலும் நேர்மையுடன் சோவியத் யூனியனையும் சீனாவையும் விமர்சித்துள்ளார்

நேர்மையான நூல்

Saturday, April 11, 2020

சுஜாதா தேசிகனின் அபுனைவுகள்


கல்லூரி ஹாஸ்டலில்தான் , முதன்முதலாக பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த சகவயதினருடன் பழகும் வாய்ப்பு பெரும்பாலானோர்க்கு கிடைக்கும்.

அங்கிட்டு, இங்கிட்டு , ஏனுங்க ,கீது என்பது போன்ற வட்டாரச் சொற்கள் மற்ற பகுதியினருக்கு வேடிக்கையாகத் தோன்றும். விளையாட்டாக கேலிகள் நடக்கும்.  காலப்போக்கில் ஒருவரிடம் இருந்து இன்னொருவர் பல சொற்களை கற்றுவிடுவார்கள். ஒருவரது வட்டார வழக்கத்தை இன்னொருவர் ரசிப்பார்கள்

இன்றைய தகவல் தொடர்பு,வளர்ச்சியில் வட்டார சொற்களை பயன்படுத்துவதை தகுதிக்குறைவு என நினைத்து பலரும் பொது தமிழையே முயல்கின்றனர். இதன்விளைவாக பல்வேறு அழகிய தமிழ்ச்சொற்கள் புழக்கத்தில் இருந்து மறைகின்றன

யார் எழுத்தைப் படித்தாலும் எந்த வேறுபாடும் தெரிவதில்லை. அதே அரசியல் , அதே சினிமா கிசுகிசு , அதே பாலியல் சீண்டல்கள் என ஒரு நபரின் நகலாகவே பலரும் எழுதுகின்றனர்.

இதில் பிராமணர்கள் சற்று வேறுபட்டவர்கள்.  தாங்கள் பிராமணர்கள் இல்லை என காட்டிக் கொள்வதே அவர்களது முழு நேரம் வேளையாக இருக்கும். நானெல்லாம் மூணு,வேளையும் கறி தின்பவன் , அந்த தள்ளுவண்டில பீப் பிரை போடுவான். என்ன டேஸ்ட் தெரியுமா என்றெல்லாம் பேசி தமது அடையாளத்தை மறைக்க முயல்வார்கள்

இவையெல்லாம் தேவையேயில்லை. நம் பிறப்பு என்பது நம் சாதனை அன்று. அது குறித்து பெருமிதம் அடையவோ அதை மறைக்க முயல்வதோ அவசியமற்றது.

நாம் யார் என நேர்மையாக அடையாளப்படுத்திக் கொள்வதுதான் வலுவான சொல்லாடலின் முதல் படி என்கிறார் அரிஸ்டாட்டில்

சுஜாதா தேசிகனின் என் பெயர் ஆண்டாள் என்ற நூலின் முன்னுரையில் எழுத்துலக பிதாமகரான கடுகு இதை குறிப்பிட்டுள்ளார்.  எழுத்தின் நடை நூலாசிரியர் ஒரு கணிப்பொறியாளர் என்பதைக் காட்டிக கொடுக்கிறது என்கிறார் அவர்  ;

இதை எழுத்தாளனின் முத்திரையாகப் பார்க்க வேண்டும். அவரது ஆன்மிக தேடல் , தொழில் சார்ந்து கிடைக்கும் பரந்துபட்ட அனுபவம் , தமிழார்வம் , சுஜாதா மீதான காதல் , பிரபந்த அறிவு , அறிவியல் வேட்கை , நகைச்சுவை உணர்வு என அனைத்தும் கலந்து நல்லதொரு வாசிப்பனுபவம் அளிக்கிறது.

 நண்பர் தேசிகன் என சுஜாதா எழுதியதை படித்தபோது அந்தப்பெயரையும் , சுஜாதா நண்பர் என்பதையும் வைத்து , சுஜாதாவின் சமவயதினர்போல என்றுதான் நினைத்தேன்.

இது இயல்புதான். பெயர் உருவாக்கும் மனச்சித்திரம் குறித்து ஒரு கட்டுரை இருக்கிறது.  அட ஆமால , என வியக்க வைக்கும் கட்டுரை.  எழுத்து அந்தரத்தில் தொங்ககூடாது. மண்ணில் நடக்க வேண்டும் என்பார் சுஜாதா.   அதற்கு நல்ல உதாரணம் இதில் உள்ள கட்டுரைகள்

பையனுக்கு பெயர் வைக்க யோசிக்கும்போது , வேதாந்த் என்று வைக்கலாம் என மனைவி யோசனை கூறுகிறார். வேதாந்த தேசிகன் என புகழ் பெற வாய்ப்பிருக்கிறது என்று சொல்லி அசர வைத்தார் என்ற வரியைப்படித்து வாய்விட்டு சிரித்து விட்டேன்
இப்படி ஆங்காங்கு மிளிரும் நகைச்சுவை , எதிர்பாரா திருப்பங்கள் போன்றவை வெகு அழகு

நடக்கும்போது பூக்களைப் பார்த்தேன். ஆனால் பறிக்கவில்லை என்று படிக்கும்போது , இயற்கை நேசர் போல என மனம் ஒரு நொடியில் அதை புரிந்து கொள்கிறது. பறிக்காததற்கு காரணம் அவை எட்டாத தூரம் என அடுத்த வரியை படிக்கையில் புன்னகையை தவிர்க்க முடியாது

லைட் ரீடீங் என்றால் கள்ளக்காதல் , கிசுகிசு போன்ற தரமற்ற எழுத்து என சிலர் புரிந்து வைத்துக்கொண்டு எழுதுகிறார்கள்

லைட் ரீடிங் என்பது உயர்ந்த விஷயங்களை இலகுவான நடையில் சொல்வது

பல்வேறு பிரபந்தங்களை அதன்  தமிழ்ச்சுவையை தமிழ்ச்சொற்களை எளிதாக இந்நூல் நமக்கு கற்பித்து விடுகிறது.  பொழுதுபோக்கு நடையில் இப்படி எஜுகேட் செய்வது பெரிய விஷயம்

அவரது கதையில் ஒரு மறக்க முடியாத கதை.  அருமையான குறும்படம்
பையன் காப்பி அடித்து மாட்டிக் கொள்கிறான். அப்பாவை அழைத்து வந்து டிசி வாங்கிச் செல் என கண்டிப்பாக சொல்கிறார்.

அடுத்த நாள் பையனும் அப்பாவும் செல்கின்றனர். தலைமையாசியரிடம் தனியாக ஏதோ பேசுகிறார் தந்தை. அதன்பின்  பிரச்சனை சால்வ்,ஆகிறது
பையனை உணவகம் அழைத்து சென்று அவனுக்கு தோசையும் தனக்கு இட்லியும் ஆர்டர் செய்கிறார். தோசை விற்கும்விலையில் அதை சாப்பிட தன் சம்பாத்தியம் இடமளிக்கவில்லை. நன்றாக படித்தால்தான் சம்பாதிக்கமுடியும் என்கிறார்
ஆண்டுகள் செல்கின்றன. அப்பா ஓய்வு பெற்றுவிட்டார். பையன் சம்பாதிக்க ஆரம்பித்து விட்டான்.
அதே ஹோட்டல் செல்கின்றனர். இப்போது தனக்கு தோசை ஆர்டர் செய்துகொள்கிறார் அப்பா
அன்னிக்கு தலைமைஆசிரியரிடம் என்ன சொல்லி சமாளிச்சீங்க கேட்கிறான் பையன்
ஒரே ஒரு பொய் சொன்னேன் என்கிறார் அப்பா

அழுத்தமான அற்புதமான கதை

தனது ஒரு,மாத சம்பளத்தின் கணிசமான பகுதியை பையனின் ஓவிய ஆர்வத்துக்காக , உபகரணங்கள் வாங்க அவனையே எடுத்துக் கொள்ளும் சம்பவம் குறித்த கட்டுரை நெகிழ வைத்தது.  அந்த கதை அற்புதமாக அமைந்த காரணம் புரிந்தது

ஆலயங்கள் பற்றிய கட்டுரைகள் அனைத்தும் நேரில் சென்ற அனுபவம் அளித்தன.  உடல் நலம் , தேச நிலை எல்லாம் சாதகமாக இருக்கும்போதே பார்த்தால்தான் உண்டு என்ற உணர்வு ஏற்பட்டது

ஸ்டெம் செல் குறித்த கட்டுரை வெகு அளிமையாக விஷயத்தை விளக்கியது

நமக்கு கிடைத்திருப்பது ஒரு வாழ்க்கை. எழுத்தின் மூலம் மட்டுமே பல வாழ்க்கைகளை அறிய முடியும். அதுதான் எழுத்தின் சிறப்பு.

ஆனால் பிற சாதியினர் பற்றிய ஒரு சித்திரம் எழுத்தில் வருவது அரிதாக மாறி வருகிறது. சாதிப்பெருமிதமோ , சாதி குறித்தான தன்னிரக்கமோ இல்லாமல் இயல்பான ஒரு சித்திரத்தை அளிப்பது அவசியமான அறிவியக்க செயல்பாடுகளில் உண்டு.

அந்தவகையில் இந்த நூலின் பல விஷயங்கள் வெகு இயல்பாக இன்பர்மட்டிவாக இருந்தன

நூலாசிரியர் பணி நிமித்தம்வெளிநாடு
செல்கிறார். அந்த நிறுவனத்தின் பெண் ஊழியர் தேவையான உதவிகளை பணிவுடன் செய்கிறார். பணி முடிந்து கிளம்பும்போதுதான் அவர் யாரென தெரிகிறது. அந்த கடைசி வரி ஒரு சிறுகதைத்தன்மையை அற்புதமான அனுபத்தை அளிக்கிறது

சுஜாதா பற்றிய கட்டுரைகள் அனைத்தும் அரிய ஆவணங்கள்.

மொத்தத்தில் கண்டிப்பாக அனைவரும் படிக்க வேண்டிய நூல்

குறை என்று பாரத்தால் இவ்வளவு அற்புதமான தமிழாளுமை கொண்ட நூல்களில் ஆங்காங்கு ஒருமை பன்மை பிழைகள். தட்டச்சும்போது ஏற்படும் கவனப்பிழை.  நூலின் மதிப்பை இதை பாதிக்காது என்றாலும் பல பத்திரிக்கைகளே எழுத்துப்பிழைகளை பொருட்டாக நினைப்பதில்லை என்றாலும் சுஜாதா மாணவர் என்ற முறையில் , ப்ரூப் பார்ப்பதில் கவனம் தேவை
பெங்களூர் பெண்களைப் பார்க்கையில் வைரமுத்துவின் பாடல்வரி ( வெளியில் சொல்லமுடியாத வரி)மனதில் ரீங்காரமிட்டது என்ற வாக்கியம் ஒட்டுமொத்த நூலின் தொனிக்கு சம்பந்தமற்று துருத்துகிறது

காம்ப்ரமைஸ்கள் செய்து கொண்டிருந்தால் , இலக்கியவிழாக்கள் , மேடைகள் என பதினைந்து நிமிட புகழ் பெற்றிருக்கலாம்

சமரசமற்ற தேசிகன் எழுத்து அற்ப புகழை நாடாமல் நீண்ட நெடிய தமிழ் எழுத்து பாரம்பர்யத்தில் இடம் பெற விழைகிறது.









Thursday, April 9, 2020

சுஜாதா மாணவரின் சிறுகதை தொகுப்பு


தமிழ் எழுத்துலகில் மகத்தான சாதனையாளர் சுஜாதா.

அவர் என்னவெல்லாம் யோசித்தார் , அவரை எழுத்தாளராக செதுக்கிய நிகழ்வுகள் யாவை போன்றவற்றையெல்லாம் சொல்லத்தக்க நபராக நம்மிடம் இருப்பவர் சுஜாதா தேசிகன். இப்படி தன்,வாழ்வு ஆவணமாக வேண்டும் என்ற நோக்கத்துடன் சுஜாதா இவரிடம் நிறையப் பேசியிருக்கிறார்.

சுஜாதாவுடன் இப்படி நேரம் செலவிட வைண்டும் என்பதற்காகவே , வளமான வெளிநாட்டு வாழ்க்கையை துறந்தவர் இவர் . சுஜாதாவும் இவரை மட்டுமே அணுக்கத் தோழராக அங்கீகரித்து இருந்தார்

சுஜாதா மறைவுக்குப்பின் இவரை வைத்து சுஜாதா பற்றிய அரிய ஆவண நூல்களைக் கொண்டு வந்திருக்கலாம். ஆனால் ஜாதிய வன்மங்கள் , குறுகிய மனம் , அரசியல் போன்ற காரணங்களால் அது நடக்கவில்லை. சில அரசியல்வாதிகள் தமது தொடர்புகளை வைத்து தம்மை சுஜாதாவின் ஏஜெண்டுகளாக முன்நிறுத்தி ஊரை ஏமாற்றுகிறார்கள்

சுஜாதா பற்றிய கட்டுரைகள் மட்டுமல்ல , தேசிகனது எல்லா அபுனைவுகளுமே அருமையாக இருக்கும்.

குமுதம் , கல்கி , விகடன் போன்ற பிரபல இதழ்களில் வெளியாகும் இவரது கதைகள் நன்றாக இருந்தாலும் , ஒட்டுமொத்த தொகுப்பாக இவரது கதைகளை படித்தால்தான் இவரை மதிப்பிட முடியும்

எனவே அப்பாவின் ரேடியோ என்ற சிறுகதை தொகுப்பை படித்தேன்

படிக்க ஆரம்பித்தால் முழு தொகுப்பையும் ஒரே மூச்சில் படித்து விடலாம். அந்த அளவுக்கு சுவாரஸ்யம் , வார்த்தைச் சிக்கனம் , சூழலின் சித்தரிப்பு , பாத்திரமாக்கல் என சுஜாதாவின் நேரடி மாணவன் என்பதை நிரூபிக்கிறார்

இந்த நல்ல தன்மைகளை வலுவற்ற கதைக்கருவில் வீணாக்குவதும் நடந்திருக்கிறது. இறுதி திருப்பத்தை மட்டுமே நம்பி எழுதுவதால் இந்த விபத்து நிகழ்கிறது

23 கதைகளில் மூன்று கதைகள் இந்த வகையில் வருகின்றன. சுஜாதா இருந்திருந்தால் அந்த கதைகளை தொகுப்பிலிருந்து நீக்க சொல்லியிருப்பார்

வாழ்க்கையின் ஒரு குறிப்பிட்ட கணத்தை"கணத்தின் ஒரு துளியை மட்டும் சொல்வது சிறுகதைகளுக்கே உரிய சிறப்பம்சம். அந்த பாணியிலான நல்ல கதைகள் சில இருக்கின்றன.

படிமங்களை , குறியீடுகளை செயற்கையாக உருவாக்குவது நல்லதல்ல. இயல்வாக எழுதும்போது பல்லாயிரம் ஆண்டுகளாக நம் ஜீனில் உறைந்துள்ள மனப்பதிவுகள் குறியீடுகளாக வெளிவரும்
அந்த வகையில் அப்பாவின் ரேடியோ , தோசை , பெருங்காயம் , பிப்ரவரி மழை , துக்கடா ஆகிய கதைகளை இலக்கிய ரீதியாக வெற்றிபெற்ற கதைகள் எனலாம்

குறிப்பாக பெருங்காயம் என்ற கதையை இன்றைய சூழலில் அனைவருமே படிக்க வேண்டும்

வெளிநாட்டில் வசதியாக வாழும் பிராமண இளைஞன் தன் தந்தையின் இறுதி ஆசையை நிறைவேற்றும் பொருட்டு அவரது பூர்விக வீட்டை தேடிக் கண்டுபிடித்து வாங்கும் பொருட்டு தமிழகம் வருகிறான்

பேருந்தில் பக்கத்து சீட்டில் ஓர் இஸ்லாமியர். ஏதோ ஒரு ஒவ்வாமை. வேண்டா வெறுப்பாக அமர்ந்துள்ளான். அவர் பேச்சுக் கொடுத்தும் பேசுவதில்லை

கடைசியில் அவாவரும் அதே கிராமம்தான் என தெரிகிறது. அவர் உபசரிப்புக்கிணங்கி அவர் வீட்டிலேயே குளித்து தயாராகிறான். கோயில் திறக்கும் நேரம் சாமி கும்பிட்டு வாங்க என,அனுப்புகிறார்

இது எங்க ஊர்  கோயில் திறப்பு, பிரசாதம் , உற்சவம் எல்லாம் தனக்கு தெரியும் என அந்த ஊர்க்காரன் என்பதை பெருமையாக சொல்கிறார்

அவன் தேடி வந்த வீடு அவரது தம்பியின் வீடுதான் என தெரிய வருகிறது.
தீ
எவ்வளவு காசு ஆனாலும் தந்து வாங்கி கொள்கிறேன் என கேட்கிறான்

ஆலயத்தில் எழுதியிருக்கே..ஆழ்வார் பாசுரம்  திருவுக்கும் திருவாகிய செல்வா
அதுபோல இந்த ஊருக்கு எந்த காசும் ஈடாகாது.  இந்த ஊர் , சூழல் , கோயில் இதையெல்லாம் விட்டு போக முடியாது. நீங்க எப்ப வேணும்னாலும் விருந்தாளியா வாங்க . நம்ம வீட்லயே தங்கிக்கோங்க என இன்முகத்துடன் சொல்லி அனுப்புகிறார் இஸ்லாமியர்

இயல்பாக மனித இயல்பை சொன்ன கதை .

கடைசியாக அவரது தாயார் ஒன்று சொல்வார். அதுதான் கதையின் சிகரம்

இவற்றைத்தவிர பூவா தலையா என்ற யதார்த்தவாத கதையும் சிறப்பு

சுஜாதாவை பெருமையடைச் செய்யும் தொகுப்பு
சுஜாதாவின் சகோதரின் முன்னுரை கூடுதல் சிறப்பு



லைட்வெளிச்சம், நடுசெண்டர் இலக்கண குறிப்புகள்

தோட்டம்துரவு , கண்ணீரும்கம்பலையும்

சென்ற பதிவின் தொடர்ச்சியாக இன்னொரு விஷயம்

வாயும்வயிறுமாக , பாத்திரம்பண்டம் என்றெல்லாம் பேச்சு வழக்கில் கேட்கிறோம்.

ஆனால் தற்போதைய எழுத்துகளில் இவற்றை அவ்வளவாக பார்க்க முடியவில்லை. காரணம் பலர் இவற்றை கிராமத்து கொச்சைப் பேச்சு வழக்கு என நினைக்கிறார்கள்

உண்மையில் இப்படி இருசொற்களை இணைத்துச் சொல்வது இலக்கணத்துக்கு உட்பட்டது. ஒரு விஷயத்தை அழகுபடச் சொல்ல இது உதவுகிறது
இப்படி இணைத்து எழுவதற்கு இணைச்சொற்கள் என்று பெயர்

நேரிணை

எதிரிணை

செறியிணை

என இதில் பிரிவுகள் உண்டு

நோய்நொடி
குற்றம்குறை
சீரும்சிறப்பும்
பேரும்புகழும்

என ஒரே பொருள்கொண்ட சொற்கள் இணைவது நேரிணை
நோய் நொடி இரண்டுக்கும் என்ன சம்பந்தம்

இரண்டுக்குமே வேர்ச்சொல் ஒன்றுதான்

நொய் நோய் நொடித்துப்போதல் நொந்துபோதல் என இரண்டும் ஒரே குடும்பத்தின் கிளைகள்தான்

அல்லும்பகலும் , குறுக்குநெடுக்காக என அதிர்ச்சொற்களை சேர்ப்பது எதிரிணை

ஒரு சொல்லை அழகுபடுத்த இன்னொரு சொல்லைப்போடுவது செறிவிணை

கன்னங்கரிய , செக்கச்செவேல் , பச்சப்பசேல் போன்றவை செறிவிணை;

இதில் ஒரு டுபாக்கூர் பிரிவும் உண்டு

உப்பு என்ற சொல்லை அது கல் உப்பு அன்று , தூளாக்கப்பட்ட உப்பு என துல்லியமாக குறிப்பிட உதவும் சொல் சால்ட்உப்பு

ஒரு இடத்தின் நடுப்பகுதியை இன்னும் துல்லியமாக குறிப்பிட உதவும் சொல் நடுசெண்டர்

லைட்வெளிச்சத்துல பாரு என்றால் மின்விளக்கு , குழல்விளக்கு , அலைபேசி விளக்கு போன்றவற்றின் ஒளி என்று பொருள்

நேரிணையின் டுபாக்கூர் வடிவம் இது






பத்தும் பறந்திடும் என்றால் ??



தோட்டம்துரவு , சுத்தபத்தம் , கண்ணீரும்கம்பலையும் , பத்து பாத்திரம் என்றெல்லாம் பேசுகிறோம்

ஒரு ரைமிங்குக்காக இப்படி சேர்த்துச் சொல்கிறோமா என்றால் இல்லை. அனைத்துமே பொருள்கொண்ட சொற்கள்தான்

பத்துப்பாத்திரம்  தேய்த்தல்

பத்து என்றால் சோறு , சோற்றுப்பருக்கை என பொருள்


சாம்பார் ரசம் சைட் டிஷ் என்றெல்லாம் இருந்தால்தான் சோறு இறங்குகிறது

கடும்பசியில் இருந்தால் எதுவுமே தேவையில்லை . சோறு (பத்து ) நிமிடத்தில் காலியாகி விடும்

இதுதான்  பசி வந்தால் பத்தும் பறந்து போகும் என்ற பழமொழி


சுத்தபத்தம் என்பதில் வரும் பத்தம் என்ற சொல் தூய்மை என்பதைக் குறிக்கிறது

அபத்தம் என்பதற்கு எதிர்மறைச் சொல் பத்தம்


கண்ணீரும் கம்பலையும்

கம்பலை என்றால் பேரோசை

கண்ணீரும் அழுகைச்சத்தமும் என்ற பொருள்


தோட்டம் துரவு

துரவு என்பது கிணறை குறிக்கிறது

கிணறு நீர்ப்பாசன வசதியுடன்கூடிய தோட்டம்

மேலும் பலவற்றை அடுத்தடுத்து பார்ப்போம்

Wednesday, April 8, 2020

இட்லி தமிழர் உணவா


 தமிழரின் பாரம்பரியமான உணவான இட்லியின் இயற்பெயர் இட்டவி.  மாவை பாத்திரத்தில் இட்டு , அவிப்பதால்,இட்டவி என பெயர் பெற்றது.  தமிழினப் பகைவர்கள் அதை இட்லி என மாற்றி விட்டனர் என ஒரு நாளிதழில் படித்தேன்

பிச்சு சாப்பிடுவதால் பிச்சா என பெயர் பெற்று , அது மருவி பிஸ்ஸா என மாறியது அன்று சொல்வது எவ்வளவு அபத்தமோ அது போல மேற்கண்ட கூற்றும் அபத்தமே


இட்லி நமது உணவு கிடையாது.  சங்க காலத்தில் யாரும் இதை சாப்பிட்டதில்லை

இந்தோனேசியாவில் கெட்லி என்ற பெயரில் சாப்பிடப்பட்ட உணவுதான் இட்டலிகே என்ற பெயரில் இந்தியாவுக்கு வந்தது. கடைசியில் தமிழ் நாட்டில் இட்லி என மருவியது

நாம் பெருமைப்படத்தக்க விஷயங்கள் பல உண்டு. முதல் குரங்கு தமிழ்க்குரங்கு என்பது போன்ற போலி பெருமிதங்கள் வேண்டாம்.








Tuesday, April 7, 2020

சோப்பின் நட்பால் பிழைக்கும் நம் உயிர்


சோப் குறித்தும் அது எப்படி வேலை செய்கிறது என்பதையும் பள்ளியில் படித்திருப்போம். மறந்திருப்போம்

சோப் போட்டு கை கழுவுஙககள் என்கிறாரகள்..  சும்மா கை கழுவினால் போதாதா ? போதாது

ஏன் ?

எண்ணெயும் தண்ணீரும் ஒன்றுடன் ஒன்று கலக்காதல்லவா

ஒரு குடுவையில் இரண்டையும் ஊற்றினால் தண்ணீர் மீது அடுக்கி வைத்ததுபோல எண்ணைய் மிதக்கும்.

சோப்புக்கரைசலை ஊற்றினால் இரண்டும் கலந்து விடும்

எப்படி நடக்கிறது



சோப்பின் மூலக்கூறை ஒரு சின்ன புழுவாக உருவகித்துக கொள்ளுங்கள். அதன் தலைப்பகுதி தண்ணீரை நேசிக்கும். வால்ப்பகுதி தண்ணீரை வெறுக்கும்

தண்ணீரை வெறுக்கும்பகுதி எண்ணெயுடனும் நேசிக்கும்பகுதி தண்ணீருடனும் சேரும். இப்படியாக இரண்டையும் சோப்புக்கரைசல் இணைக்கிறது

எண்ணெய் படிந்த கையை தண்ணீரில் கழுவினால் எண்ணெய் போகாது. காரணம் அவற்றின் மூலக்கூறுகளுக்கு தண்ணீரைப் பிடிக்காது. எனவே தண்ணீரில் கரைந்து வெளியேறாது. கையில் மண் இருந்தால் தண்ணீரில் கழுவினால் போய் விடும். மண் மூலக்கூறுகள் தண்ணீரின் நண்பர்கள்

எண்ணெய் படிந்த கரத்தை சோப்பில் கழுவும்போது , சோப் மூலக்கூறின் தலை எணணையைப் பிடித்துக கொள்கிறது..  இப்போது தண்ணீரால் கழுவினால் வால்ப்பகுதி தண்ணீருடன் அடித்துச் செல்லப்படும்போது , தலையையும் அது,கவ்வியுள்ள எண்ணெயையும் இழுத்துச் செல்கிறது. கை சுத்தமாகிறது

இதனால்தான் சோப்பு போட்டு கை கழுவச் சொல்கிறார்கள்

இரு தரப்பினருடனும் நட்பு பாராட்டும் சோப்பின் தன்மை  நம் உயிர் காக்கிறது

உலக வரலாறை எழுதும் கிருமிகள். ஜெயமோகனின் ஆடகம்

ஜெயமோகனின் ஆடகம் என்றொரு சிறுகதை படித்தேன்

ஆடகம்..  வித்தியாசமான பெயர்.  தூய பொன் என்று பொருள்

ஆனால் கதை விஷத்தைப் பற்றி பேசுகிறது.. உண்மையில் விஷமும் அமுதமும் ஒரே மூலப்பொருட்களால் ஆனதுதான்.  மூலப்பொருட்களின் அளவைப் பொருத்து விஷமென்றோ,அமுதமென்றோ ஆகிறது

கதை நாயகனுக்கு வாழ்வில் எந்த ஆர்வமும் இல்லை. மரணத்தைப் பற்றியே கனவு காண்கிறான்..
மழைப்பொழிவு,மிகு ஆகும்பே என்ற ஊருக்கு தற்கொலை செய்து கொள்ளும் பொருட்டு செல்கிறான்

யானையையே கொல்லத்தக்க ,,கடும் விஷமிக்க ராஜநாகங்கள் அங்கு இருப்பதை அறிந்து நாகம் கடித்து சாக விழைகிறான்

விரும்பியபடி பாம்பு கடித்து நினைவிழக்கிறான்.

அந்த விஷம் அவனை கொல்லவில்லை. அமுதமாக செயல்பட்டு அவனுக்கு,புதிதொரு வண்ணமயமான வாழ்க்கை வழங்கி இருப்பதை கதையின் பிற்பகுதியில் அறிகிறோம்;

மழைமிகு பிரதேசம் , வனம் , பாம்பு ஆகியவை இயற்கையின் குறியீடுகள் என வாசித்தால் மெல்லிய திடுக்கிடல் ஏற்படுகிறது
Guns, Germs, and Steel என்றொரு நூல்

ஏன் ஐரோப்பா உலகை ஆள்கிறது . ஏன் கருப்பின மக்கள் துன்பத்தில் உழல்கின்றனர்.   எல்லா வளமும் செல்வங்களும் அமெரிக்கா போன்ற சில நாடுகளில் ஏன் குவிந்தது.  ஆப்ரிக்கா ஏன் வறுமையில் வாடுகிறது.

என்பது போன்ற கேள்விகளை நூல் ஆகிறது

அனைவரும் சமமான மனிதர்கள்தான். ஆனால் இந்த சமநிலையை குலைத்து வெள்ளையர்களை உயரத்துக்கு எடுத்துப் போனதில் நோய்க்கிருமிகளுக்கு முக்கிய பங்குண்டு என்கிறது நூல்

இயற்கை ஏதோ,ஒரு கணக்கிட்டு அவர்களை செல்வந்தர்களாக வல்லரசுகளாக மாற்றிவிட்டது. கண்ணுக்குப் புலப்படாத கிருமிகள்தான் அவர்களை வாழ வைத்த தெய்வம் என்பது நூலின் செய்தி

ஆடகம் கதையில் , சாக விரும்பும் ஒருவனை வளம்பட வாழ வைக்க இயற்கை முடிவு செய்து விட்டது. அவனை அந்த பாம்பு சற்று அதிகம் கடித்திருந்தால் அவன் செத்திருப்பான். கடிக்காது போயிருந்தால் வேறு வகைகளில் தற்கொலை செய்திருப்பான்.  சரியான அளவு கடித்து சரியான விஷத்தை இறக்கி அவனை வாழ வைத்து விட்டது

உண்மையில் அவன் இதைக் கேட்கக்கூட இல்லை

   ஒரு கணத்தின் ஒரு துளியில் இவ்வளவு விஷம் போதும் என நாகம் முடிவெடுக்கும் அந்த ஒரு சொல்லற்கரிய ஒரு காலாதீத இடைவெளியில்தான் உலக வரலாறே நிகழ்கிறது போலும்


pandemic Endemic என்ன வித்தியாசம்


சில கவிதைகளை கதைகளை செய்திதாள் நடையில் இருப்பதாக சொல்கிறோம்

பழகிப்போன கதைக்களன்கள் , பழகிப்போன சொல்லாட்சிகளை வைத்து எதையோ எழுதி ஒப்பேற்றுவது .

ஆங்கிலத்தில் செய்திதாள்களின் வார்த்தைப் பிரயோகங்களேகூட நம் ஊர் self styled இலக்கியவாதிகளைவிட நன்றாகவே இருக்கும்
pandemic epidemic endemic போன்ற வாரத்தைகளை கவனமாக பயன்படுத்துகிறார்கள்

தினமணியில் தீநுண் கிருமி அன எழுதுகிறார்கள்.  நல்ல சொல் தேர்வுதான்

ஆனால் தொற்று நோய் என்ற பயன்பாடு சரியன்று

நோய்கள் இரு வகை. தொற்று நோய் தொற்றா நோய்

சாதாரணமான ஜலதோஷம் தொற்று நோய்தான்.  அதை குறிப்பது போல கொரோனாவையும் தொற்று நோய் என சொல்லலாகாது

pandemic என ஆங்கிலத்தில் சரியாக எழுதுகிறார்கள்.  pandemic என்றால் பக்கத்து நாடுகளுக்கும் பரவும் நோய்


இதே நோய் சீன நகரில் மட்டுமே பரவியிருந்தால் அது epidemic

கட்டுமீறி பரவலை குறிக்க இந்த சொற்கள்.








Monday, April 6, 2020

கம்பனும் பேரறிஞர் அண்ணாவும்

கம்பனை தமிழகத்தில் பிரபலப்படுத்த பலர் உழைத்தனர். உழைத்து வருகின்றனர்

அவர்களுள் அறிஞர் அண்ணாவுக்கு முக்கிய இடம் உண்டு

வாசிப்பு பழக்கம் அதிகமற்ற அன்றைய சூழலில் கம்பனை ஒரு விவாதப் பொருளாக்கியது அறிவுலகுக்கு பெருமை சேர்ப்பது

அவர் கம்பனின் கவித்திறனை குற்றம் சொல்லவில்லை. சில பகுதிகள் தமிழ்ப்பண்பாட்டுக்கு ஒவ்வாதது என்றார்
அதை வைத்து விவாதங்கள் நடந்தன. கம்பன் மக்களிடம் பரவலாக சென்றடைந்தான்

அது பழைய கதை;
ஆனால் இன்றும்கூட கம்பனை திட்டுவோர் உண்டு

இப்படி  தன்னை திட்டுவார்கள் என கம்பனே யூகித்து இருக்கிறான் என்பது,ஓர் ஆச்சர்யம்


இதோ அவனது பாடல்

.வையம் என்னை இகழவும், மாசு எனக்கு
எய்தவும், இது இயம்புவது யாது எனின்,-
பொய் இல் கேள்விப் புலமையினோர் புகல்
தெய்வ மாக் கவி மாட்சி தெரிக்கவே.


உலகம் என்னைத் திட்டும். என் மேல் மாசு கற்பிக்கும். ஆனாலும் இதைப் படைக்கிறேன். ஏன் தெரியுமா ?

பொய்மையற்ற மேதைமையால்"படைக்கப்பட்ட இந்த காவியம் மக்களை அடைய வேண்டும். அதனால்தான் திட்டுவார்கள் என தெரிந்தும் படைக்கிறேன்

சூப்பர்ல ?

இதில் இன்னொரு ட்விஸ்ட்

சிலர்,இப்பாடலுக்கு இன்னொரு,விளக்கமும் தருவதுண்டு

பொய்யில்,புலவர் என,வள்ளுவரைச் சொல்வோமல்லவா

குறள் நெறியை மக்களிடம் கொண்டு சொல்லவே இதை எழுதுகிறேன் என்ற பொருளும் இதற்குண்டு

கம்பராமாயணத்தில் குறள்,அடிப்படையிலான பாடல்கள் ஏராளம்

கொரோனாவில் தப்பி பிழைத்தால் அவற்றை எழுத ஆசை





Sunday, April 5, 2020

ராவணனுக்காக ஒரு பாடல்

கம்பராமாயணத்தில் பல இடங்கள் வெகு அழகு

உதாரணமாக வாலி மீது ராமனுக்கு பகை ஏதும் இல்லை. சொல்லப்போனால் வாலியின் நட்புதான் அவனுக்கு நல்லது

ஆனால் சூழல் காரணமாக சுக்ரீவனை நண்பனாக ஏற்று உனக்காக எதையும் செய்வேன் என கமிட் ஆகி விடுகிறான்.

இந்த நட்புக்காக நெறியை மீறி வாலியை கொல்கிறான்.

ஆயுதமற்ற எதிரியை கொல்லக்கூடாது என ராவணனை கொல்லாமல் , தன் விஷயத்தில் நெறியைப்பேணும் ராமன் , நண்பனுக்காக நெறியை மீறுகிறான் என்பது ஒரு சுவையான முரண்

ராவணனுக்கு இது போல ஒரு பில்ட்அப் காட்சி

லட்சுமணால் அவமானப்படுத்தப்பட்டு ராவணனிடம் வருகிறாள் சூர்ப்பனகை. அவள் நிலையைக் கண்டு ராவணன் துடிக்கிறான்..  அது ஒரு மனிதனின் இயல்பான எதிர்வினைதான்

ஆனால் விரைவிலேயே அதிலிருந்து மீண்டு ஒரு மன்னனாக மாறி , விசாரிக்கிறான் என்பது அவனது,பாத்திரத்தை மேன்மையாக்குகிறது

சும்மா இருக்கும் உன்னை யாரும் தண்டிக்கப்போவதில்லை. நீ ஏதோ அத்துமீறி இருக்கிறாய். என்ன குற்றம் செய்தாய் என சீறுகிறான்,என அழகாக எழுதுகிறார் கம்பர்

ஆயிடை எழுந்த சீற்றத்து அழுந்திய
     துன்பம் மாறி,
தீயிடை உகுத்த நெய்யின்,
     சீற்றத்திற்கு ஊற்றம் செய்ய,
'நீ இடை இழைத்த குற்றம் என்னைகொல்,
     நின்னை, இன்னே,
வாயிடை இதழும் மூக்கும் வலிந்து
     அவர் கொய்ய?' என்றான்




Saturday, April 4, 2020

அழிவும் நீயே அன்பும் நீயே

ஶ்ரீருத்ரம் குறித்து எழுதியிருந்தேன் அல்லவா.

இன்றைய சூழலுக்கு பொருத்தமாக சில மந்திரங்களை படிக்க ஆச்சர்யமாக இருந்தது.

அதன் பொருள் பின்வருமாறு

மக்களும் பசுக்களும் நோய்ப்பட வேண்டாம்

நாங்கள் வாழ்வாங்கு வாழ்வோமாக


எங்கள் ஆயுள் மீது , விலங்குகள் மீது , பணியாட்கள் மீது கோபம் வேண்டாம்

உரிய பூஜைகள் செய்வோம்


ருத்திரரே  எங்கள் பெரியவர்களையும் குழந்தைகளையும் துன்புறுத்தாதீர்கள்

வாலிபர்களை துன்புறுத்த வேண்டாம்

சிசுக்களை துன்புறுத்த வேண்டாம்

தந்தைமார்களை தாய்மார்களை துன்புறுத்த வேண்டாம்

எங்கள் உடல் அவயங்களை துன்புறுத்த வேண்டாம்;

அழிவும் ஆக்கமும் உன்னால் விளைவது

கோப முகம் வேண்டாம். அன்பு முகத்தை எஙகள்பால் காட்ட இறைஞ்சி வேண்டுகிறோம்

கோபத்தால் ஏவப்பட்ட உன் கணைகள் எங்களை விட்டு விலகிச் செல்லட்டும்;

எதிரிகளை அழிக்கவல்ல ஆயுதங்களை வைத்துவிட்டு . அழகுக்காக மட்டும் அதை ஏந்திக் கொள்வீராக


பூமியிலும் பூமிக்கடியிலும் பூமிக்கு மேலும் உலவும் உனது ருத்திர கணங்கள் எங்களை அழிக்கலாகாது என வேண்டுகிறோம்




போலி அறிவுஜீவிகளுக்கு கிடைக்காத அறிவு போல . கம்பன் பாடல்

நம் ஆட்கள் பலருக்கு ஞானத் தேடலோ அறிவுத் தேடலோ அறிவியல் ஆர்வமோ இருப்பதில்லை

தனக்கு ஒரு அடையாளம் தேவை
என்பதற்காக இந்து முஸ்லிம் கிறிஸ்தவன் நாத்திகவாதி ஆத்திகவாதி மொழிஆர்வலன் என ஒரு லேபிளை தேடுகிறார்கள்

உண்மையான அறிவுத் தேடலில் இருப்போருக்கு இந்த லேபிள்கள் அவசியமில்லை

கம்பர் வெகு அழகாக ஒரு பாடலில் இதைச் சொல்கிறார்.  ஒரு பிரச்சாரமாக அல்லாமல் வெகு இயல்பாக சொல்வது மனதை கவர்கிறது;

அருந்ததி மலை என்ற மலை குறித்து சுக்ரீவன் தன் கூட்டத்தாருக்கு சொல்கிறான்

அந்த மலைக்கு சென்று சேர்வது கஷ்டம். எப்படிப்பட்ட  கஷ்டம் தெரியுமா ,,

என் கடவுள் பெரிது.  என் சித்தாந்தம்தான் பெரிது என அடித்து்க் கொள்கிறார்களே.  அவரகள் உருப்படுவது எவ்வளவு கஷ்டமோ அந்தஅளவு கஷ்டம் என்கிறார்

பாடலைப் பாருங்கள்

அரன் அதிகன்; உலகு அளந்த அரி அதிகன்''
என்று உரைக்கும் அறிவிலோர்க்குப்
பர கதி சென்று அடைவு அரிய பரிசேபோல்,
புகல் அரிய பண்பிற்று ஆமால்;
சுர நதியின் அயலது, வான் தோய் குடுமிச்
சுடர்த் தொகைய, தொழுதோர்க்கு எல்லாம்
வரன் அதிகம் தரும் தகைய, அருந்ததி ஆம்
நெடு மலையை வணங்கி, அப்பால்.

சிவன் பெரியவன் பெரியவன் திருமால்
பெரியவன் என சண்டையிடும் மூடர்கள் அடைய முடியாத ஞானம்போல அந்த,மலை அடைவதற்கரியது
வானளாவிய சிகரம் கொண்டது. வேண்டிய வரம் தரவல்லது. அப்படிப்பட்ட அருந்ததி மலையை வனங்கி பயணத்தை  தொடருஙகள்

எப்படி ,பாடல்





Friday, April 3, 2020

கவுண்டமணியும் கம்பனும்

நான்கு வரிகளில் ஒரு குறும்படம்

கம்பன் எனும் கலைஞன்

ஓவிய உருவ! நாயேன் உளது ஒன்று பெறுவது உன்பால்;
பூ இயல் நறவம் மாந்தி, புந்தி வேறு உற்றபோழ்தில்,
தீவினை இயற்றுமேனும், எம்பிமேல் சீறி, என்மேல்
ஏவிய பகழி என்னும் கூற்றினை ஏவல்' என்றான்

ராமனால் வஞ்சகனால் வீழ்த்தப்பட்ட வாலி , ராமா , உன் தகுதிக்கு நீ இப்படி செய்திருக்ககூடாது என நாகரிகமாக பேசுகிறான். கடைசியில் சொல்கிறான்

ஓவியம் போன்ற அழகனே. எனக்கொரு வரம் கொடு. என் "தம்பி நல்லவன்தான். ஆனால் மது அருந்தினால் கொஞ்சம் அடாவடி செய்வான். தவறிழைக்காத என்னை கொன்றது போல , தவறேசெய்தாலும் அவனை கொன்றுவிடாதே

ராமன் , வாலி , சுக்ரீவன் ஆகிய மூவரின் குணநலன்களும் வந்து விடுகிறதல்லவா

ஒரு படத்தில் கவுண்டமணியை செந்தில் பெண்வீட்டாருக்குஅறிமுகம் செய்வார்

மாப்பிளைக்கு எந்த கெட்ட பழக்கமும் இல்லை. தங்கமானவரு

அவர்கள்  கேட்பார்கள்

வெத்தல பாக்குகூட போட மாட்டாரா

போடமாட்டார் எப்பவாச்சும் தம் அடிக்கும்போது வாசனய மறைக்க போடுவார்

தம்  அடிப்பாரா ?

எப்பவும் இல்ல. எப்பவாச்சும் "தண்ணி அடிக்கும்போது லேசா தம் அடிப்பார்

என்னது தண்ணியா ?

அட .. இவரு என்ன குடிகாரரா. எப்பவாச்சும் பொண்ணுங்ககூட போகும்போது தண்ணி அடிப்பார்


இதைக்கேட்டு பெண் வீட்டார் துரத்தி அடிப்பார்கள்

அதுபோல எப்பவாச்சும்
தண்ணி அடிப்பதைத்தவிர சூதுவாது தெரியாத தம்பியை பத்திரமாக பார்த்துக் கொள்ள சொல்கிறான் வாலி

எழுத்தாளனுக்கு யானை ஊர்வலம் அளித்த நூல்

சுஜாதா அலை வீசிய அந்தகாலகட்டத்தில் வேறு பலரும் எழுதி வந்தனர்

என்ன பெரிய சுஜாதா..  நாங்க நினைச்சா அவரு மாதிரி எழுதுவோம் என,சவால் விட்டு பலரும் அவர் மாதிரியே எழுதினர்.

இன்றும்கூட பலருக்கும்  சுஜாதா மாதிரி
எழுதுவதுதான் கனவு

அந்த சூழலில் தனக்கென ஒரு பாணியை வகுத்துக் கொண்டு ஒரு விஐபி அந்தஸ்துடன் உலவினார் ஓர் எழுத்தாளர்

ஒரே நேரத்தில் பல பத்திரிக்கைகளில்
எழுதினார். வாசகர் கடிதங்கள் மூட்டை மூட்டையாக குவியும்.

ஶ்ரீரங்கம் பொதுமக்கள் இவரை யானையில் அமர வைத்து ஊர்வலம் நடத்தி கெளரவித்தனர். இவரது பல கதைகள் திரைப்படங்களாகின

இத்தகைய பெருமைகளுக்கு சொந்தக்காரர் புஷ்பா தங்கதுரை..;

இவர் கதைகளை குழந்தைகள் படிக்கலாகாது என்று பெற்றோர்கள் தடுத்து வைத்ததால் இன்றைய இணையவாசிகள் பலருக்கு இவர் பரிச்சயமின்றிப் போய் விட்டார்

ஸ்டைலிஷான நடை , இயல்பான உரையாடல் இருந்தாலும் உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை. அதற்கு காரணம் இவர் தபால் துறையில் கணக்கராக இருந்தவர். சுஜாதா போல ஒரு,அதிகாரியாக இருந்திருந்தால் அவர் வேறு லெவலில் இருந்திருப்பார்

தான்,எழுதவந்த நேரத்தில் எழுதிக்கொண்டிருந்த சுஜாதாவைப் பிடிக்கும். ஆனால் அவர் தாக்கம் என்னுள் வரக்கூடாது என கவனமாக இருந்தேன்.,,பிறரின் ஆபாச வக்கிர நடை,கூடாது என்றும் நினைத்தேன் என ராஜேஷ்குமார் ஒரு பேட்டியில் சொல்வார். அவர் சொல்லும் "பிறர்" புஷ்பா தங்கதுரைதான்

ஆபாச எழுத்தாளர் ஒருவருக்கு மக்கள் ஏன் யானை ஊர்வலம் நடத்தினர் ?

அதற்குகாரணம் ஶ்ரீவேணுகோபாலன் என்ற தன் இயற்பெயரில் அவர் எழுதிய நூல்கள்தான்

அந்த நூல்களில் ஒன்று. மதுரா விஜயம்

ஆலயங்கள் மூடப்பட்டு மக்கள் வழிபட முடியாத சூழலில் நடக்கும்கதை. தற்போது கிட்டத்தட்ட அதே சூழல். அனைத்து மத வழிபாடுகளுமே தடைப்பட்ட சூழல். இந்த தற்செயல் ஒற்றுமை ஆச்சர்யமளித்தது

  அந்நியர் கைகளில் சாமி சிலைகள் சிக்கி அழிந்துவிடக்கூடாது என மக்கள் கொண்டிருந்த உறுதி. அதற்காக செய்த,தியாகங்கள் போன்றவை கற்பனைக்கும் எட்டாதவை.

எதிரிகள் படையெடுப்புக்கு ஆளான, ஶ்ரீரங்கத்தில் இருந்து அந்த ஊர் ஆலய உற்சவ மூர்த்தியை அங்கிருந்து எடுத்துச் சென்று பல்வேறு ஊர்களை மறைத்து வைப்பதும் அவர்களை எதிரிகள் வேட்டையாட முயல்வதும் கதை.  இவர்களது அடுத்த தலைமுறையும் இந்த போராட்டத்தில் ஈடுபட்டு கடைசியில் மீண்டும் மதுரையிலும் ஶ்ரீரங்கத்திலும் அதனதன்,மூர்த்திகளை ஸ்தாபிப்பதுதான் கதை

ஹரிஹரர் , புக்கர் ஆகியோரால் நிறுவப்பட்ட விஜயநகர பேரரசுதான் மதுரையை மீட்டது.

புக்கர் தமிழ் மன்னன் இல்லை. அவர் கனவில் மதுரை மீனாட்சி தோன்றி , தமிழர்களை விடுவிக்க ஆணையிட்டதால் , அதை சிரமேற்கொண்டவன் அவன்

அவனது மகன் குமார கம்பணன் இநதப்போரில் முக்கியப்,பங்கு,வகித்தான். அவனது,மனைவி கங்காதேவி மதுரை விடுவிப்பை நேரில் காணும் பொருட்டு அவன் அருகிலேயே இருந்தாள்.

அந்த அனுபவங்களை வைத்து அவள் எழுதிய காவியம்தான் மதுரா விஜயம்

அதை அழகுபடுத்தி ஶ்ரீவேணுகோபாலன் படைத்த தமிழ்க்காவியம் இந்த மதுரா விஜயம் நாவல்

அழகு தமிழ் வார்த்தைகளில் வரலாற்றைக்கண் முன் நிறுத்துகிறார்;
ஏராளமான சுவையான சம்பவங்கள்;
;ஶ்ரீரங்கத்தில் நிறுவ வேண்டியது எந்த சிலை என ஒரு பிரச்சனை வருகிறது. பல ஆண்டுகளுக்கு முன் அகற்றப்பட்ட சிலை என்பதால் இதுதான் அந்த சிலை என சாட்சி சொல்ல யாரும் இல்லை.
கடைசியில் கண்பார்வையற்ற ஒரு,முதியவர் இதுதான் ஒரிஜினல் சிலை என லாஜிக்கலாக கண்டுபிடிக்கிறார். இப்படி சுவையான பகுதிகள் ஏரா
ளம்

இந்த அரும்பணி பலரது தியாகத்தால் சாத்தியமானது. குறிப்பாக தேவதாசி,பெண் ஒருவர் செய்த தியாகம் கண் கலஙகச் செய்யும்


ஶ்ரீரங்க காரர்களான வாலி , சுஜாதா , ராகிரங்கராஜன் போன்றோருக்கு தராத உச்சகட்ட  மரியாதையை இவருக்கு அவ்வூர் மக்கள் தந்தது இவரது எழுத்துவன்மைக்கு சான்று

இவர் கையொப்பமிட்ட மதுரா விஜயம் பிரதியைநான் அடைந்த பெரும்பேறாக நினைக்கிறேன்








Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா