Monday, December 30, 2013

சில முஸ்லீம்களின் கண்டிக்கத்தக்க செயல் - ஒரு விவாதம்குட் மார்னிங் , குட் ஈவ்னிங் என்பதை GM , GE என எழுதுகிறார்கள்..ஓகே.. ஆனால் இஸ்லாமியர்கள் சிலர் இந்த பாணியில் , தம் முகமன்களை சுருக்கி எழுகிறார்களே... இஸ்லாம் அறிஞர்கள் இதை ஏற்கிறார்களா... சுருக்கி எழுதினாலும் படிப்பவர் , அதை முழுதாகப்படிப்பார்.. எனவே ஏற்கலாம் என்கிறார்களா.. அல்லது சுருக்க கூடாது என்கிறார்களா

sallallahu alayhi wasallam என்பதை SAW , Peace be upon him என்பதை PBUH என்றெல்லாம் எழுதுவது நியாயமா.
( மற்ற மதங்களுக்கான பிரத்தியேக முகமன்கள் இல்லை..அவர்களுக்கு இது பொருந்தாது என்பதால்தான் இஸ்லாமிய அறிஞர்களுக்கு மட்டும் இந்த கேள்வி )

**********************************************
ரஃபீக் அகமது 


ஒருவரை ஒருவர் சந்திக்கையில் முகமன் கூறுவது பற்றி இஸ்லாம் ஒரு சக சகோதரரை சந்திக்க/உரையாட நேர்ந்தால் "அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹூ" என்று கூறுங்கள் என்று அறிவுறுத்துகிறது. இதற்கு "தங்கள் மீது இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக!" என்கிற அழகான பொருள் பொதிந்திருக்கும் வாழ்த்தைக் காணலாம்.

ஸலாம்' எனும் வார்த்தை 'ஸலெம' எனும் மூல வார்த்தையிலிருந்து வருகிறது. இதற்கு, தீய மற்றும் கேடானவற்றை விட்டு ஒருவர் தன்னை வேறுபடுத்திக் கொள்வது என்று பொருள் வரும். ஆக, நாம் ஒருவரை மற்றொருவர் வாழ்த்தும் போது, "உனக்கு எவ்வித தீங்குகளும் என்புறத்திலிருந்து வராது; உனக்கு எந்த கேடானதும் வரக்கூடாது; உனக்கு எந்த தீங்கும் ஏற்படக்கூடாது;" என்ற பிரார்த்தனையாக இது மாறுகிறது.
இதைவிட வருந்ததக்க விஷயம் என்னவென்றால்... முஸ்லிம்களில் சிலர் ஸலாத்தினை முறையாக சொல்ல, உச்சரிக்கவும் அறியாதவர்களாக உள்ளதுதான்.
சிலர் இதற்கான பதிலை 'ஸ்லாமலைகும்' /'ஸ்லாமகும்' / ஸ்லாம் என்று அவசரமாக ஏதெனும், ஒரே மூச்சில் முனகி முடித்துவிடுகின்றனர் .இன்னும் சிலர் சந்திக்கும் போது பதில் கூறுவதைப் பற்றி பெரிதாக கருதாமல் இருந்து விடுகின்றனர்... இன்னும் சிலர் அதற்கு கையால் சைகை காட்டி முடித்து விடுகின்றனர்.

மேலும் ஒருவருக்கொருவர் ஸலாம் சொல்லிக் கொள்பவர்களிலும் கூட தயக்கத்தையும், கஞ்சத்தனத்தை கடைபிடிப்பதையும் காணமுடிகிறது.அப்படி முகமனை சுருக்கி கூறுவது முற்றிலும் கண்டிக்கப்படவேண்டிய தவறான செயல்


Tuesday, December 24, 2013

இணையத்தை கலக்கும் “ ஒரு நண்பர் “ - பரபரப்பான ஒரு காமெடி விவாதம்


 நடிகர்கள் , அரசியல்வாதிகள் பலர் இணையத்தில் இருந்தாலும் , நிரந்தர ஹீரோவாக இருப்பவர் “ ஒரு நண்பர் “ மற்றும்  “ ஒரு நண்பி “  என்ற கற்பனை கேரக்டர்களே...

ஆரம்பத்தில் பெயர் சொல்லாமல் ஓர் உண்மை சம்பவத்தை சொல்ல விரும்பினால் , ஒரு நண்பர் என குறிப்பிட்டு சொல்லிக்கொண்டு இருந்தார்கள்.. போக போக , எதையாவது கற்பனையாக யோசித்து ஒரு நண்பர் அப்படி செய்தார் இப்படி சொன்னார் என எழுத ஆரம்பித்தார்கள்..

ஒருவரை அறிவாளியாக காட்டிக்கொள்ள உதவுவது என்ற கேரக்டர்.. பெண்கள் மத்தியில் தான் பாப்புலர் என காட்டிக்கொள்ள உதவுவது ஒரு நண்பி கேரக்டர் என்பது ஒரு ஸ்டாண்டர்டாக உருவெடுத்துள்ளது...  ஒரு நாளில் யார் அதிக பட்ச புருடாவை , அதிக சுவாரஸ்யத்துடன் சொல்லப்போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பினால்தான் இன்று பலர் இணையத்துக்கே வருகிறார்கள்.

அந்த ஒரு நண்பர் குறித்து நடந்த பரபரப்பான விவாதம் உங்கள் பார்வைக்கு..

( இந்த புருடா கேரக்டர் புழக்கத்துக்கு வரும் முன்பு , நான் எழுதிய சில உண்மை சம்பவங்களும் இதில் மேற்கோள் காட்டப்பட்டுள்ளன , சில எதிரிகளால் :)   )

*********************************************************
Mynthan Shiva
'ஒரு நண்பர்'அவார்டு,'ஒரு நண்பி'அவார்டு குடுத்துகிட்டிருந்த இவருக்கே ஒரு 'கன்னட பொண்ணு'அவார்டு குடுக்கிறத நெனைக்கும்போது மனசு அதியுச்சம் அதியுச்சம் என்று கூச்சல் போடுகிறது..!

Pichaikaaran Sgl
நண்பர் வீட்டுக்கு சென்றபோது அவரது புத்தகம் ஒன்றை புரட்டிகொண்டுருந்தேன் . ஆங்காங்கு விதவிதமான வண்ணங்களில் ஹைலைட் , அண்டர்லைன் , சிறு குறிப்புகள் என ரசனையுடன் புத்தகத்தை பயன்படுத்தியிருந்தார் . அந்த குறிப்புகள் சுவாரஸ்யமாக இருந்தன . ஆனால் நான் என் புத்தகங்களில் எழுதுவதோ அண்டர்லைன் செய்வதோ இல்லை. (டெக்னிகல் புத்தகம் , தொழில் சார்ந்த புத்தகங்களை இங்கு சொல்லவில்லை ) மறுவாசிப்பையும் ஃப்ரெஷாக ஆரம்பிப்பது எனக்கு உகந்தது . எது சரியான முறை என தெரியவில்லை
Mynthan Shiva https://www.facebook.com/pichaikaaran/posts/595858670457924

Pichaikaaran Sgl
சில வாரங்களுக்கு முன் , ஒரு நண்பர் ஒரு சினிமா பாடலை சிலாகித்து எழுதினார்.. நான் அந்த பாடலில் தவறு இருப்பதாக ஆதாரத்துடன் கமெண்ட் போட்டேன். அவரும் சில சமாதானங்கள் சொன்னார்..இதற்கிடையில் வேறு சிலர் எனக்கு மெசெஜ் அனுப்பி, என் கமெண்டுகள் அவர்களை புண்படுத்துவதாக சொன்னார்கள்... நமக்கு ஏன் வம்பு என நானும் அவற்றை அழித்து விட்டேன்,,,ஆனால் இப்போது யோசித்தால் , நான் செய்தது கோழைத்தனம் என தோன்றுகிறது...என் கருத்தை வைத்து விவாதம் செய்வதவர்களை அவமதித்துவிட்டேனோ என ஒரு ஃபீலிங்


Mynthan Shiva 'ஒரு நண்பன்'சீரிஸ்ல ஏகப்பட்டது இருக்கும் போல https://www.facebook.com/pichaikaaran/posts/600862329957558

Pichaikaaran Sgl
நான் அரைடிரவுசர் போட்ட பள்ளி மாணவனாக இருந்த போது என்னைவிட கேவலமாக படிக்க கூடிய ஒரு நண்பனுக்கு , அரைபரீட்சையில் கொஞ்சம் காப்பி அடிக்க உதவி செய்தேன். அக மகிழ்ந்து போன அவன் எனக்கு பிரதியுபகாரம் செய்ய உறுதி பூண்டு சைக்கிளில் எங்கோ ஒரு காட்டுப்பகுதிக்கு அழைத்து சென்றான்,..என்ன எழவுடா இது என குழம்பிக்கொண்டே சென்றேன். அங்கே ஒரு கைவிடப்பட்ட வீட்டில் ஒரு பகுதியை ஆக்ரமித்து அவன் வைத்து இருந்த நூலகத்தை பார்த்து அசந்து போனேன்..ங்கொய்யால டைப் டைப்பாக பல்வேறு புத்தகங்கள்,,ப்டங்கள்... சரோஜாதேவி, மருதம், விருந்து , திரைச்சித்ரா , ***க ***க இன்பம் , காமினி ** **** , என தனி நபராக அவன் சேமித்து வைத்த கலெக்‌ஷனை இப்போது நினைத்தாலும் பிரமிப்பாக இருக்கிறது.. அந்த சின்ன வயதில் அவனுக்கு ஒரு ஹீரோ அந்தஸ்து கிடைத்து விட்டது... ஆனால் இப்போதைய நெட் யுகத்தில் , எல்லாமே நெட்டில் வந்து விடுவதால் , இப்போதைய சிறுவர்கள் மத்தியில் அது போன்ற கலைஞர்களுக்கு மதிப்பு இல்லை என்பது வருந்தத்தக்கது
Pichaikaaran Sgl அதியுச்சம்- இந்த நேரத்துல இந்த வார்த்தை தேவையா


Mynthan Shiva அதியுச்சம் ஏதும் அசிங்கமான வார்த்தையா சகோ?


UmamaheshVaran Lao Tsu Mynthan Shiva பின்ன....அண்ணனுக்கு கோவம் வராதா ?.... அவரு உருவாக்கி ரீல் விட்டுகிட்டு இருந்த கற்பனை கதாபாத்திரத்தை நீங்க எல்லாம் ஆட்டைய போடா நினைத்தால் ??? டாஆஆஆஆமிட்


Mynthan Shiva ஒரு நண்பர்,ஒரு நண்பி,ஒரு கன்னட நண்பி எல்லாமே அண்ணனோட கற்பனை கதாபாத்திரங்களா? ஐயையோ...நல்ல காலம் நான் கன்னட நண்பி வரைக்கும் போகலை.. நண்பர் நண்பியுடன் நிறுத்திக்கொண்டேன்..எனிமே சூதானமாத்தான் க.க.பாத்திரத்தோட பழகணும்பா
Janakiraman Mohan எனக்கு இப்போ என்ன பேசுறதுன்ன தெரியலன்னா கூட ஒரு நண்பர் அப்படின்னு ஆரம்பிச்சு ஏதாச்சும் பேசிகிட்டு இருந்தேன். இப்போ அதுவும் போச்சா? #ஒரு நண்பர் பாறைகள்
UmamaheshVaran Lao Tsu எனக்கு உமா என்றூ ஒரு நண்பன் இருந்தான். அந்த ஒரு நண்பனுக்கு மைந்தன் என்று ஒரு பேஸ் புக் நண்பன் ஒருவன் இருந்தான் அவனோட இந்த போஸ்ட்டை பத்தி அந்த " ஒரு நண்பன் " கிட்ட கேட்டேன்.

தனக்கு சொந்தமான கதாபாத்திரத்தை மற்றவர்கள் செய்தால் கோவம் வரும். இதை தனக்கு ஒரு நண்பன் செய்ததாக என்னுடைய ஒரு நண்பனின் ஒரு நண்பன் கூறினான்.

அந்த ஒரு நண்பன் கூரியதை தான் உனக்கும் கூறுகிறேன் மை டியர் ஒரு நண்பா.

வேணுமா பாரேன். அண்ணன் பிச்சையின் ஒரு நண்பர் வந்து இதை டைம் லைனில் இருந்து டெலீட் செய்வார் ஒரு நண்பா

#ஒரு நண்பர் பாறைகள்
UmamaheshVaran Lao Tsu பிச்சை அண்ணனின் ஒரு நண்பர் அவரது கம்மெண்டையே அவசரத்தில் லைக் பண்ணிவிட்டார் pls check thala
Mynthan Shiva /அண்ணன் பிச்சையின் ஒரு நண்பர் வந்து இதை டைம் லைனில் இருந்து டெலீட் செய்வார் ஒரு நண்பா // ROFL ஹஹஹா அந்த நண்பருக்கும் அண்ணன் பிச்சைக்கும் என்ன சம்பந்தம்? அப்பிடின்னு நான் என்னோட 'ஒரு நண்பர்'கிட்ட கேட்கலாம்னு இருக்கேன்
Pichaikaaran Sgl ங்கொய்யால...ஒரு நண்பர் ஊரை விட்டே ஓட போறார் # இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா
Janakiraman Mohan நண்பனின் நண்பன் எனக்கும் நண்பனே இந்த வரிகள் கூட #ஒரு நண்பர் பாறைகளில் இருந்து சுட்டது தான் என்று இத்தனை நாட்களாய் நினைத்துக் கொண்டிருந்தேன். ஒரு மைந்தன் நண்பர் சொன்ன போது தான் தெரிகிறது இது வேறன்னு
21 hours ago · Unlike · 4


UmamaheshVaran Lao Tsu கிரிக்கெட் விளையாட பல டீம் இருக்கின்றன... ஆனால் எல்லா டீமிலும் extras என்று ஒருவனே விளையாடி ரன் அடிப்பதைப் பார்த்து ஆச்சரியப்பட்டு இருக்கிறேன்.
அதே மாதிரி உனக்கு, எனக்கு, பிச்சை அண்ணனுக்கு எல்லாருக்கு " ஒரு நண்பர் " என்ற காமன் நண்பர் இருப்பது மிக்க சந்தோஷம்
Mynthan Shiva Janakiraman Mohan நீங்க வேற...'நண்பர்'ங்கிற வார்த்தை எங்கு வந்தாலும் அங்கு அண்ணன் பிச்சையின் டச் இருக்கும் கட்டாயம்..! வேணும்னா நீங்க கடந்துவந்த 'நண்பர்'களை மறுபடியும் கடந்து பாருங்க
Pichaikaaran Sgl எல்லா டீமிலும் extras என்று ஒருவனே விளையாடி ரன் அடிப்பதைப் பார்த்து ஆச்சரியப்பட்டு இருக்கிறேன்.- ஹா ஹா ஹா...செம செம...ஹா ஹா
21 hours ago · Like · 3


Mynthan Shiva Dont under estimate the power of the Common man 'ஒரு நண்பர்'
Janakiraman Mohan ஒருத்தி பாறைகள் என்று நேற்று சில பதிவுகள் போட்டார். அதற்கும் நண்பர் பாறைகளுக்கும் ஏதாவது தொடர்பு இருக்குமோ?
UmamaheshVaran Lao Tsu Janakiraman Mohan see this sir

http://www.youtube.com/watch?v=1Nl28Kee0c8
Janakiraman Mohan ஒருத்தி ஒருவனை நினைத்துவிட்டால் என்று தான் பாஸ் வருது, ஒருத்தி ஒரு நண்பனை என்று வரவில்லை.. பாட்டை மாற்றுங்கள்.
ஒரு நண்பன் இருந்தால் ஒரு நண்பன் இருந்தால் கையேடு பூமியை சுழற்றிடலாம்

Sunday, December 22, 2013

சென்னையில் சில அழகு காட்சிகள்

சூரிய அஸ்தமனம்

சூரியனின் சிவப்புக்குள் பறவையின் சிறகடிப்பு

 வானம் எனக்கொரு போதி மரம்

 நீர் இன்றி அமையாது அழகு

ஒளியின் ஜாலம்

இரவின் மடியில்

கிரகம் ஒன்று தெரிகிறதா

Friday, December 20, 2013

அன்று பெய்த மழையில்- நண்பர் நிர்மல் வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவம்

கீழ்கண்ட சம்பவம் நண்பர் வாழ்க்கையில் உண்மையாக நடந்ததாம்... அவருக்கே உரிய பின் நவீனத்துவ சிந்தனையை பயன்படுத்தி அதை எளிய வடிவில் நமக்கு தருகிறார்.

*********************************************************


டுபாக்கூர் ஃபில்ம்ஸ் வழங்கும்

நிர்மலின்   ......


அன்று பெய்த மழையில்


காட்சி1   மதிய வேளை / க்ளினிக் உட்புறம்


ஒட்டடை அடிக்கப்படாத ஓர் அறை . நாமே தண்டம்.. நமக்கு ஏன் இன்னொரு முண்டம் என்ற குடும்ப கட்டுப்பாடு பஞ்ச் டயலாக் அடங்கிய போஸ்டர் கிழிந்து தொங்குகிறது... க்ளினிக் என்பதை  நிரூபிக்க ஆங்காங்கு இது போன்ற படிக்க முடியாத கேவலமான பழைய சுவரொட்டிகள்

டாக்டர் பலவேஷம் எம் பி பி எஸ் என்று எழுதப்பட்ட பெயர் பலகை , சாயம்போய் மேஜையில் இருக்கிறது. நாற்காலியில் குண்டான வடிவில் ஒரு டாக்டர் தூங்கி கொண்டு இருக்கிறார் ( வயது 60 ).பக்கத்தில் அவர் அசிஸ்டெண்ட் வயது 25. அவனும் தூக்கம்
இருவர் உள்ளே நுழைகிறார்கள்.( வயது 30, 32) .. டீ ஷர்ட் பேண்ட்...இன்னொருவர் இன் செய்யப்பட்ட நேவி ப்ளூ ஷர்ட்


 நிர்மல் : சார் சார்..
டாக்டர் திடுக்கிட்டு கண் விழிக்கிறார்

டாக்டர் : யெஸ்?

நிர்மல் : டாக்டரை பார்க்கணும்..

டாக்டர் : அப்படியா? அப்படி யாரும் இங்கே இல்ல...நேரா போயி லெஃப்ட்ல கட் செஞ்சீங்கனா, ஒரு டாஸ்மாக் வரும் ...அப்படியே இயற்கை கழிவுகளை மிதிக்காம கொஞ்ச தூரம் போனீங்கனா


அசிஸ்டண்ட் கண் விழித்து பதறிப்போகிறான்..
( மெதுவான குரலில் ) சார்... நீங்களும் டாக்டர்தான்... வேற யாருக்கோ வழி சொல்றீங்க? யாரு பெத்த பிள்ளையோ..உங்களைத்தான் நம்பி வந்து இருக்காங்க

டாக்டர் சுதாரித்து கொள்கிறார் : யெஸ்..ஐ ஆம் டாக்டர் ஹியர்... என்ன பிரச்சனை... சொல்லுங்க..தீர்த்துடலாம்

 நிர்மல் : இவர் பேரு ஒரு நண்பர்.. ரெண்டு நாளா கண் வலி . எதையும் சரியா பார்க்க முடியலயாம்

டாக்டர் : அதுக்கு ஏன் இங்க வந்தீங்க.. பக்கத்து தெருல ஒரு லேடி டாக்டர் இருக்காங்க... அவங்கதான் கண் மருத்துவர்... அவங்கள போய் பாருங்க
ஒரு நண்பர் : போய் பார்க்க டிரை பண்ணினேன் டாக்டர்... ஆனா அவங்களையும் சரியா பார்க்க முடியல...கண் வலி

 நிர்மல் : என்னது லேடி டாக்டரா? சரி.. நீங்க பேசிக்கிட்டு இருங்க.. நான் போய் பார்த்துட்டு வந்திடுறேன்.

ஒரு நண்பர் : ங்கொய்யால... சவட்டிபுடுவேன்ல... பேசாம உட்காரு

டாக்டர் : வாட் நான்சென்ஸ் நிர்மல்..ஏன் இப்படி அலையிறீங்க..பொறுப்பு வேண்டாம்? ச்சே.. ஸ்டுபிட்ஸ்... சரி... நீங்க ரெண்டு பேரும் பேசிக்கிட்டு இருங்க ... நான் போய் அவங்களை பார்த்துட்டு வரேன்.. லேசா கண் வலிக்கிற மாதிரி இருக்கு

 நிர்மல் : கண் வலிக்குதா...உடம்பு வலிக்கிற மாதிரி செஞ்சுடுவோம்..மொத நண்பனுக்கு மருந்து கொடுங்க.. ரொம்ப கஷ்டப்படுறான்.. நேத்துக்கூட இங்கே வந்தோம்... நீங்கதான் இல்ல.

டாக்டர் : அது ஒண்ணும் இல்ல சார்... நேத்து கமல் படம் பார்த்து ஒரே தலைவலி... அதுதான் ஒரு நல்ல டாக்டரா பார்க்க போயி...

அசிஸ்டண்ட் : ( மெதுவான குரலில் )டாக்டர்..உண்மையை உளறாதீங்க
டாக்டர் : ஆமாமா..இல்லைஇல்லை... நேத்து ஒரு மெடிக்கல் கான்ஃபர்ன்ஸ் போனேன்..சரி..அதெல்லாம் இருக்கட்டும்..லெட் மீ கம் டு த பாயிண்ட்... இப்ப என்ன பிரச்சனை

 நிர்மல் : டாக்டர்...ரோட்ல நடந்தா , பொண்ணுங்க மட்டுமே கண்ணுக்கு தெரியுறாங்க.. ஆம்பளைங்க தெரிவதே இல்லை...இது கிட்ட பார்வையா...தூர பார்வையா...

டாக்டர் : இது கிட்ட பார்வை இல்ல ... கெட்ட பார்வ

எப்பூடீ என்பது போல அசிஸ்டண்டை பார்க்கிறார்.. அசிஸ்டெண்ட் டாக்டர் காலை தொட்டு கும்பிடுகிறான்

ஒரு நண்பர் : டாக்டர் எனக்கு ரெண்டு நாளா கண் வலி

டாக்டர்  கூர்ந்து கவனிக்கிறார் :ம்ம்ம்.....  நீங்க கண்ல வலினு நெனக்கிறீங்க...ஆனா கண்ல எந்த பிரச்சினையும் இல்லை... கண்ணுக்கு கீழே கட்டி வந்து இருக்கு... இதை மருத்துவ மொழில கற்கட்டி அதாவது ஸ்டோன்ஹக் அப்படீனு சொல்லுவாங்க

எப்பூடி என அசிஸ்டண்டை பார்க்க , அவன் டாக்டர் காலை தொட்டு கும்பிடுகிறான்

டாக்டர் : இதுக்கு மருந்து இன்னும் கண்டு பிடிக்கப்படல..ஆனா என் ஆராய்ச்சி மூலமா தீர்வு கண்டு பிடிச்சு இருக்கேன்..மழைல நனையணும்... கண்ல மழைத்தண்ணி படணும்... உடனே சரியாகிடும்..இதுதான் மருந்து..ஓகே கன்சல்ட்டிங் ஃபீசை வச்சுட்டு கிளம்புங்க

இருவரும் கிளம்புகிறார்கள்


அசிஸ்டண்ட் : அப்பாடா... ராத்திரி சாப்பிட காசு தேத்தியாச்சு...ஓக்கே டாக்டர்.. நெக்ஸ்ட்?
டாக்டர் : ரெஸ்ட் ( மீண்டும் கண் அயர்கிறார் )
காட்சி 2 மாலை நேரம் 7 மணி ..சாலை

நிர்மல் : நம்ம ஊர்ல எப்பல மல வந்துச்சு... உன் கன்னு நெரந்தரமா நொல்லக்கன் தான் ல

ஒரு நண்பர் : அய்யோ...இப்ப என்னடே பண்றது

 நிர்மல் : யாருக்கும் அடங்காதது பீருக்கு அடங்கும்ணு ஒரு சொலவடை இருக்குல

ஒரு நண்பர் : வடையா..வடையா...எங்கேடே ....   சொல்லவே இல்ல... எங்கேடே வச்சு இருக்க

நிர்மல்: ஓ ஷிட்... அலயாதடே... சொலவடைனா  வேறடே

ஒரு நண்பர்: தெரியலைனா தமிழ் சொல்லித்தாடே

நிர்மல் : தமிழ் நாட்ல இருக்கிற எல்லோருக்கும் தமிழ் கத்து தருவது என் வேலை இல்லடே..முதலில் நான் கத்துக்குறேன்.. சரி வா...பீர் அடிப்போம்... அதுலயே கற்கட்டி கரைஞ்சுடும்
காட்சி 3 காலை 10 மணி நிர்மல் வீடு

போன் அடிக்கிறது... தூக்கத்தில் இருந்து திடுக்கிட்டு எழுகிறார்

நிர்மல் : ஹலோ

ஒரு நண்பர் ( குரல் மட்டும் ) : நிர்மல்...கண் வலி சரியா போச்சுல

நிர்மல் : வாவ்..எல்லாம் பீர் மகிமை

ஒரு நண்பர் ( குரல் மட்டும் ) : பீர் மகிமையா மழை மகிமையானு தெரியல.. நேத்து ஃபுல்லா வெயிலுடே..ஆனா சொன்னா நம்ப மாட்ட..காலங்காத்தால் பயங்கர மழை.. எல்லாம் கடவுள் அருள் டே... மழைல நனஞ்சுட்டு கண்ணாடில பார்க்குறேன்.. கற்கட்டிய காணோம்

நிர்மல் : மழையா..ஆச்சர்யம்டே...  என்னே கடவுள் மகிமைகாட்சி 4

ஸ்விட்சர்லாந்து , ஸ்வீடன் . அயர்லாந்து போன்ற நாடுகளில் இருவரும் சாமி பாட்டு பாடியபடி வலம் வருகிறார்கள்காட்சி 5

மாலை .. டாஸ்மாக்

நிர்மல்: வாவ்.. நிஜமாவே கற்கட்டிய காணோமே..என்னால நம்பவே முடியல..எப்படிடே காலங்காத்தால உங்க வீட்ல மட்டும் மழை பெஞ்சுச்சு

ஒரு நண்பர் : (சட்டைய கழட்டுகிறார்) பாருடே...உனக்கே புரியும்.

 நிர்மல் : என்னடே இது..கற்கட்டி சரியா போச்சு..ஆனா உடம்பு ஃபுல்லா கட்டியா இருக்கு?

கொசுவர்த்தி சுருள் சுழல்கிறது.

ஃபிலாஷ் பேக்
காட்சி 6

ஒரு நண்பர் வீடு

ஒரு நண்பர் : பீர் மகிமையா மழை மகிமையானு தெரியல.. நேத்து ஃபுல்லா வெயிலுடே..ஆனா சொன்னா நம்ப மாட்ட..காலங்காத்தால் பயங்கர மழை.. எல்லாம் கடவுள் அருள் டே... மழைல நனஞ்சுட்டு கண்ணாடில பார்க்குறேன்.. கற்கட்டிய காணோம்

நிர்மல் ( குரல் மட்டும் ) : மழையா..ஆச்சர்யம்டே...  என்னே கடவுள் மகிமை
போன் பேசி முடிந்ததும் ஒரு நண்பர் மனைவி வருகிறார்

மனைவி : யோவ்.. மச்சினியை பொண்ணு பார்க்க வறாங்க.. சீக்கிரம் வாயானு சொன்னா , நீ எவனோடயோ சேர்ந்து தண்ணி அடிச்சுட்டு, லேட்டா வந்த...பத்து மணி வரை தூங்குறியேனு தண்ணிய ஊத்தினா. மழை வந்திச்சு பில்ட் அப் கொடுக்கிறீயா... இதெல்லாம் சரிப்படாது....  கீதா. அங்கே துடைப்பம் இருக்கு பாரு..எடுத்திட்டு வா
( நண்பர் அலறல் சத்தம்..  பக்கத்து வீட்டில் கொத்துபுரட்டோ  போட்டு கொண்டு இருக்கிறார்கள்காட்சி 7
நிர்மல் ( கேமராவை பார்த்து பேசுகிறார் ) : நண்பரோட கண் வலியை எப்படி தீர்த்து வச்சேன் பார்த்தீங்களா... கட்டி, பிட்டி , பீப் பீப் ( சென்சார் ) - இதுல என்ன பிரச்சனைலாம் என்கிட்ட வாங்க...முடிச்சுறேன்.. யாம் இருக்க பயம் ஏன்? நிர்மல் இருக்க பயம் ஏன்?

- A STORY BY NIRMAL-


தலைமுறைகள் திரைப்படம்- தலைமுறைகளை தாண்டி நிற்க போகும் அற்புதம்


நடிப்பு: பாலு மகேந்திரா, சசிகுமார், ரம்யா சங்கர், மாஸ்டர் ஸ்ரீகாந்த், இயக்குநர்
எம் சசிகுமார்

இசை: இளையராஜா

தயாரிப்பு: எம் சசிகுமார்

எழுத்து- ஒளிப்பதிவு- எடிட்டிங்- இயக்கம்: பாலு மகேந்திரா

கதை     :  காதல் கல்யாண சண்டை
யால் பிரிந்து வாழும் மகன் குடும்பம் மீண்டும் தந்தை வீட்டுக்கு செல்கிறது.. தமிழ் தெரியாத பேரன். ஆங்கிலம் தெரியாத தாத்தா..இரு வெவ்வேறு தலைமுறைகள் எப்படி ஒன்றை ஒன்று நிரப்பிக்கொள்கின்றன...

வகைப்பாடு  : பொழுதுபோக்கு ,யதார்த்தம் ,மாற்று சினிமா, குப்பை , பிரச்சாரம்

************************************************************************பொதுவாக , ஒரு படத்துக்கு டிக்கட் கிடைக்கவில்லை என்றால் வருத்தம் ஏற்படும். ஆனால் தலைமுறைகள் படத்துக்கு பெரிய தியேட்டர்களில் டிக்கட் கிடைக்கவில்லை என்றபோது மகிழ்ச்சியே ஏற்பட்டது.. கடைசியில் கோயம்பேடு ரோகிணியில் பார்த்தேன்.

இந்த படத்துக்கு என வந்தவர்கள் சிலர் என்றால் , பிரியாணி படத்துக்கு டிக்கட் கிடைக்காமல் வந்தவர்கள் , சும்மா தெரியாமல் வந்தவர்கள் என்றும் ஒரு சாரார் இருந்தனர்.. சள சள என பேசிக்கொண்டு இருந்தனர்.. பேசாமல் இன்னொரு ஷோவுக்கு பெரிய தியேட்டர் எதற்காவது போயிருக்கலாமே என நினைத்துக் கொண்டேன்.

படம் ஆரம்பித்து முதல் காட்சியிலே முக்கிய கதாபாத்திரங்கள் அறிமுகம் ஆகி , முதல் நிமிடத்திலேயே கதை நகர ஆரம்பித்து விடுகிறது. மருத்துவர்களாக இருக்கும் கணவன் மனைவி , அவர்கள் குழந்தை , காதல் கல்யாணம் என்பதால் கணவனின் அப்பாவுடன் பிரிவு என்பதெல்லாம் வெகு சில நிமிடங்களில் ரத்தினச்சுருக்கமாக சொல்லப்பட்டு விடுகிறது.

கணவனும் மனைவியும் வீட்டில் ஆங்கிலேயத்திலேயே பேசிக்கொள்பர்கள்.. அவர்களது குட்டிப்பையனும் அப்படியே. தன் தந்தைக்கு உடல் நலம் சரியில்லை என அவரைப்பார்க்க அவன் வெகு நாட்கள் கழித்து தந்தையை பார்க்க போகிறான் என்பது ஆரம்பம்.

இப்போது நம் மனதில் கதைப்போக்கு குறித்து ஓர் அனுமானம் ஏற்படும்..வயதான நோய் வாய்ப்பட்ட ஆங்கிலம் தெரியாத தந்தை , ஆங்கிலம் மட்டுமே பேசும் அடுத்த தலைமுறையில் சிக்கி கஷ்டப்படுவார் போல என நினைப்போம்.
ஆனால் இது போன்ற மெலோடிராமாக்களுக்கான வாய்ப்பு பல இருந்தாலும் , எல்லாவற்றையும் தவிர்த்து இருக்கிறார் இயக்குனர்.. தமிழ் தெரியாத பேரன் என்பதற்காக ஆங்கிலத்துக்கு எதிரான பிரச்சாரப்படமாக்கி விடாமல் , இந்த இயல்பான சூழலை எப்படி எதிர்கொள்கிறார்கள் என அட்டஹாசமாக காட்சிப்படுத்தி இருக்கிறார்.

குறியீட்டு படங்கள் , திடுக்கிடும் திருப்பங்கள் நிறைந்த படங்கள் , கண்ணீர் சிந்த வைக்கும் குடும்ப சித்திரங்களை கண்டு களித்த நமக்கு அவ்வபோது ஏற்படும் சில அனுமானங்களை ஏமாற்றி விட்டு , யதார்த்தமாக படம் செல்கிறது..இப்படி ஏமாறுவது நமக்கு பிடித்தும் இருக்கிறது..

 நிகழ்வுகளை , உணர்வுகளை எப்படி காட்சி படுத்துகிறார்கள் என்பதே படம்.. நம் ஊரை பொருத்தவரை பரபரப்பான காட்சிகள் , எதிர்பாரா திருப்பங்கள் இவ்ற்றையே படம் என நினைக்கிறோம்.

 வைல்ட் ஸ்ட்ராபெரீஸ் படம் பார்த்தால் , அந்த உள் முக பயணம் எப்படி வெளி உலக பயணத்துடன் லிங்க் ஆகிறது என உணர்வுபூர்வமாக சொல்லி இருப்பார்கள். காரில் கிளம்பும் பெரியவர் கடத்தப்படுகிறார் மருமகளால் கொல்லப்படுகிறார் என்றெல்லாம் திடுக்கிடும் திருப்பங்கள் இல்லாமல் ஒரு இம்பாக்ட்டை மட்டும் ஏற்படுத்திச்செல்லும் அந்த படம்.. மிகை உணர்ச்சிகளுக்கு வேலை இல்லாமல் அப்படி எடுக்கப்பட்ட ஒரு தமிழ் படத்தை பார்ப்பது பெருமையாக இருந்தது.  நம்மை கண்ணீர் கடலில் தள்ள வேண்டும் என இயக்குனர் முயலவே இல்லை.. ஆனாலும் வேறு காரணங்களுக்காக , உணர்வு பூர்வமாக நம் கண்கள் கலங்குகின்றன..

உதாரணமாக ஒவ்வொரு மனிதனும் பால் குடித்து வளரும் , தாய்மைக்கான அந்த உறுப்பை சினிமாவில் எப்படியெல்லாம் வக்கிரமாக காட்டுகிறார்கள்..அந்த நாய்களை செருப்பால் அடிப்பது போல காட்டி இருப்பார் ஒரு காட்சியில்..

அந்த சிறுவன் தன் அத்தை தன் குழந்தைக்கு பால் கொடுப்பதை பார்க்கிறான்..என்ன இது என குழந்தைத்தனமாக கேட்கிறான்.. எல்லா தாயும் இப்படித்தாண்டா பால் கொடுப்பார்கள்... நீயும் உன் தாயிடம் இபப்டி பால் குடித்து வளர்ந்தவன் தான்... அதற்கான உறுப்புதான் இது என விளக்குகிறார் அத்தை.

அந்த சிறுவன் மெதுவாக வந்து தன் தாயை பார்க்கிறான். தாய்க்கு இந்த விஷ்யம் எதுவும் தெரியாது..   தன் ரத்தத்தை உணவாக கொடுத்தவளல்லவா இவள் என்பது போன்ற உணர்ச்சி , பல்வேறு யோசனைகள் அவன் முகத்தில் தெரிகின்றன.. அவன் என்ன நினைக்கிறான் என்பது நமக்கு தெரிவதில்லை.. அவன் எதுவும் பேசுவதும் இல்ல... மெல்ல அருகில் வந்து தன் தாய்க்கு ஒரு மெல்லிய முத்தம் கொடுத்து விட்டு ஓடி விடுகிறான்..  நான் முன்பு சொன்னேன் அல்லவா , சளசள பேச்சு சப்தம்- எல்லாம் அடங்கி ஒரு கனத்த மவுனம் திரையரங்கில் நிலவியது...பின் சுதாரித்துக்கொண்டு கை தட்டினார்கள். எல்லோரும் உணர்ச்சி வசப்பட்டு இருந்ததை உணர முடிந்தது.

ஆனால் ஒன்று ,, வழக்கம்போல இளையராஜா முன்னணி இசை அமைத்து , படத்துக்கு மிகை உணர்ச்சி கொடுத்து இருக்க முடியும்.. ஆனால் வரலாறு காணாத அதிசயமாக குறைந்த பட்ச இசை - எங்கு தேவையோ அங்கு மட்டும் - என பிரமிக்க வைத்து விட்டார். மற்ற இடங்களில் பறவைகள் சப்தம் , விலங்குகளின் குரல் , நீர் ஓசை , இரவின் ஓசை என ஒலியியல் குறிப்புகள் கச்சிதமாக உள்ளன . சிறுவன் முதன் முதலாக தாத்தா வீட்டுக்கு வந்து சுற்றி பார்ப்பது , தந்தைக்கு ஹார்ட் அட்டாக் என மனைவியிடம் சொல்வது போன்ற காட்சிகளில் பின்னணி இசை அட்டகாசம்... சில மாதங்கள் கழித்து அந்த பிஜிஎம் யூ ட்யூபில் வலம் வரும் என்பது என் எண்ணம்.. இந்த படத்துக்காக இளையராஜா என்றென்றும் பெருமைப்பட்டுக்கொள்ளலாம் ( பாடல்கள் ஏதும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது )

பாரம்பரிய பெருமைகள் தெரியாமல் , தமிழ் தெரியாமல் இருக்கும் பேரனுக்கு எல்லாம் கற்றுக்கொடுத்து , ஒரு நல்ல பேரனாக உருவாக்குகிறார் என அழகாக சொல்லி இருப்பது சூப்பர்தான்.. ஆனால் ஒரு நல்ல தாத்தா எப்படி உருவாகிறார் என்பதையும் சேர்த்து சொல்வதில்தான் பாலுமகேந்திரா நிற்கிறார்.. ஒரு குழந்தை பிறக்கும்போது , ஒரு தாயும் பிறக்கிறாள் என்பதை நுட்பமாக சொல்கிறது படம்.. தாத்தாவில் ஏற்படும் வளர்சிதை மாற்றம் , பேரனிடம் ஏற்படும் மாற்றம் என இரு தலைமுறைகளுக்கிடையே இருக்கும் தொடர்பை ஓர் இடத்தில் அழகாக காட்சிப்படுத்தி இருப்பார்.

தாத்தா எப்போதும் ஓய்வெடுக்கும் இடத்தில் பேரன் அவரைப்போலவே படுத்து தூங்கி கொண்டு இருப்பான்..தாத்தா மெல்ல அருகில் வந்து மூடிகிடக்கும் அவன் கையை திறந்து பார்ப்பார்..உள்ளே ஒரு மிட்டாய்...அதை எடுத்து சுவைத்தவாறு கிளம்புவார்... பேரன் மனதில் தாத்தாவும் , தாத்தா மனதில் பேரனும் முழுமையாக குடியேறி ஆக்ரமித்து விட்டார்கள் என்பதை இதை விட கவிதையாக சொல்லி விட முடியாது..

வெளியே இருக்காரே , அந்த ஆள் யாரு என தன் மாமாவை பையன் விசாரிப்பது , நீங்க யாரு சார் என அண்ணனை தங்கை கேட்பது , நீ யாருப்பா என பேரனை தாத்தா கேட்பது , அவர் என்ன கேட்கிறார் என்பது கூட புரியாமல் பேரன் விழிப்பது என பிரச்சார நெடி துளியும் இன்றி இன்றைய உறவு அடையாளங்கள் தொலைவதை ஹைக்கூ போல சுருக்கமாக சொல்கிறார்.

தான் ஆற்றுக்கு எதற்கு போகிறேன் என ஆங்கிலத்தில் சொல்ல முடியாமல் தாத்தா , ஆறு என்றால் என்ன என விளக்க முடியாத அம்மா என ஒவ்வொரு காட்சியும் அழகு..

தமிழ் தெரிந்த கணவனும் மனைவியும் ( அவளுக்கு முதலில் தமிழ் தெரியாது..பிறகு கற்றுக்கொண்டாள் ) ஆங்கிலத்தில் பேசுவதை வெறுப்பு தொனியில் காட்டாமல் , அதுதான் யதார்த்தம் என சொல்கிறது படம். இந்த கிராமத்துக்கு வந்து யார் சேவை செய்ய போகிறார்கள் என கணவன் கேட்க , நான் செய்வேன் என்கிறாள் அவள்... இந்த கிராமத்தில் படித்தால் , தன் மகன் தேற மாட்டான் என கணவன் சொல்ல , இதில் படித்துதானே டாக்டர் ஆனீர்கள் என்கிறாள் மனைவி... கல்வி அறிவற்ற உங்கள் தாயே உங்களை சிறப்பாக வளர்க்கும்ப்போது , என்னால் என் மகனை இங்கு சிறப்பாக வளர்க்க முடியாதா என்கிறாள் மனைவி.. வழக்கமாக இது போன்ற படங்களில் வில்லன்கள் ஆங்கிலம் பேசுவார்கள்..ஆனால் இவர்கள் ஆங்கிலம் பேசினாலும் நல்லதுதான் செய்கிறார்கள் என்ற நடு நிலை பார்வை சூப்பர்... அவர்கள் பேசுவது எளிதாக புரியக்கூடிய இந்திய ஆங்கிலம் என்றாலும் இந்த காட்சிகள் கிராமங்களில் எடுபடுமா என்பது தெரியவில்லை  ..

பிடித்த காட்சி என சொன்னால் படம் முழுதையும் சொல்ல வேண்டும் என்றாலும் ஒன்றே ஒன்றை சொல்கிறேன்..

ஒரு சாமி சிலையை காட்டி இது என்ன என்கிறான் பையன்...சாமி என்கிறார் தாத்தா...இல்லை இது கல் என்கிறான் பையன்..

அடுத்த காட்சி ,...ஒரு போட்டோவை காட்டி இதுதான் நான் என்கிறான் பையன்... இல்லைப்பா..இது வெறும் பேப்பர் என்கிறார் தாத்தா..பரபரப்பான விவாதம்..இதில் தாத்தா சிலவற்றை கற்கிறார்,..பேரன் சிலவற்றை கற்கிறான்..

 பெண்மையை கேலி செய்வதையே நகைச்சுவை என நினைக்கும் நமக்கு , இதில் வரும் இயல்பான ஹாஸ்யம் நிம்மதி அளிக்கிறது... அனா ,ஆவன்னா சொல்லி தருகிறார் தாத்தா/// அதை பேரன் பேனா இல்லாமல் வேறொன்றை (?! ) பயன்படுத்தி எழுதி ( !! ) பார்ப்பதையும் , அதை பார்த்த தாத்தா தானும் முயன்று பார்ப்பதையும் தியேட்டரில் பாருங்கள்..

நல்ல ஒலியமைப்பு கொண்ட தியேட்டரில் பார்த்தால் , முழுமையாக ரசிக்கலாம்..

தாத்தாவாக பாலுமகேந்திரா வாழ்ந்து இருக்கிறார்... மற்றவர்களும் இயல்பான நடிப்பு/.சுருக்கமான வசனங்கள்... தங்கை ,இரண்டாவது தங்கை , தங்கை கணவன் , பால்ய நண்பன் என ஒவ்வொரு கேரக்டரும் முழுமை...உதாரணமாக நண்பரை எடுத்துக்கொண்டால் , அவருக்கு ஒரு கதை..கல்யாணத்துக்கு சாட்சி கை எழுத்து போட்டு பெரியவரால் வெறுக்கப்படுகிறார்... தங்கையை எடுத்துக்கொண்டால் , அண்ணன் கல்யாணத்தால் அவள் வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது... பெண் குழந்தை வேண்டும் என்பதற்காக கஷ்டப்படுகிறாள் என ஒவ்வொரு கேரக்டரும் உயிர்ப்புடன் உள்ளன.

ஒளிப்பதிவு கேட்கவே வேண்டாம்.. ஒளி ஓவியம்..விடியற்கால சூர்ய ஒளி , மழை நேர வெளிச்சம் என ரசித்து ரசித்து எடுத்து இருக்கிறார்..


அந்த பேரன் பெரியவானாகி ஒரு விழாவில் - 2032ல் ( இயக்குனர் சசிகுமார் ) பரிசு பெறுகிறான்.பேச அழைக்கிறார்கள்..மைக் முன் வருகிறான்...தாத்தாவைப்பற்றி பேச சொல்கிறார்கள்...யோசிக்கிறான்..பல காட்சிகள் மனதில் ஓடுகின்றன... கடைசியில் எதுவும் பேச முடியாமல் மௌனமாக கை கூப்புகிறான்...

படத்தைப்பற்றி என் கருத்தை கேட்டால் , மவுனமாக கைகூப்புவதை தவிர வேறு எப்படியும் பாராட்ட முடியாது.

வெர்டிக்ட்...

தலைமுறைகள் - தலைமுறைகள் தாண்டி நிற்க போகும் அற்புதம் 

Thursday, December 19, 2013

தமிழை அழித்த எழுத்தாளர் சுஜாதாநமக்கு தமிழ் ஆளுமை இல்லாமை போனதற்கு தெரிந்தோ தெரியாமலோ சுஜாதா காரணமாகி விட்டார்... உதாரணமாக இந்த பாடலை பாருங்கள்

"வாரார் ஆயினும் வரினும் அவர் நமக்கு
யார் ஆகியரோ? தோழி! நீர
நீரப் பைம்போது உளரி, புதல
பீலி ஒண்பொறிக் கருவிளை ஆட்டி
நுண்முள் ஈங்கைச் செவ்வரும்பு ஊழ்த்த
வண்ணத்துய்ம்மலர் உதிர, தண்ணென்று
இன்னாது எளிதரும் வாடையொடு
என் ஆயினாள் கொல் என்னா தோரே?"

இதற்கு அவர் பாணி விளக்க உரை இப்படி இருக்கும் - தாமதமான காதல் , இல்லாத காதலுக்கு சமம்.

அட அஞ்சு வார்த்தையில் சொல்லி விட்டாரே என நாம் மகிழ்ந்து கொள்வோம்... அதன் பின் தூய தமிழ் விளக்க உரைகளை படித்தால் எரிச்ச்சலாக இருப்பதாக தோன்றும்..ஆக நம் தமிழ் சொற்கள் ஆளுமை இல்லாமலேயே போய் விடும்.. யோசித்தால் கஷ்டமாக இருக்கிறது

எளிமையே சிறப்பு ( அதாவது குறைந்த சொற்களை வைத்து சமாளிப்பதே சிறப்பு ) என்ற மன நிலை நமக்குள் பரவி விட்டது... இங்ஙனம் , ஐயன்மீர் , கூறானின்றான், இஃதிங்ஙனம் என்றெல்லாம் எழுதுவதில்லைகொடுத்தான் என சொல்லுங்கள்.. நல்கினான்..ஈந்தான் வேண்டாம் என அவர் சொல்லியதால் , வேறு யார் இப்படி எழுதினால் கிண்டல் செய்ய ஆரம்பித்து விட்டோம்... ஆகவே இந்த சொற்கள் எல்லாம் அழிந்தே விட்டன.. கிட்டத்தட்ட 100 சொற்களை வைத்தே தமிழை எழுதி வருகிறோம்... ஆங்கிலத்தில் இந்த நிலை இல்லை...


ஆங்கில நாளிதழ் இண்டர்வியூவுக்கு போகிறீர்கள்..உங்களை ஒரு கட்டுரை எழுதி காட்ட சொல்கிறார்கள்..Go , come, give போன்ற நூறு அடிப்படை வார்த்தைகளை வைத்து  மட்டும் கட்டுரை எழுதினால் நீங்கள் ரிஜக்டட்... தமிழ் நாளிதழுக்கு போகிறீர்கள்.... இங்ஙனம். இவ்வாறே , அஃது , வேட்டற்பொருட்டு என அன்றாட நூறு வார்த்தைகளுக்கு அப்பாற்பட்டு எழுதினால் நீங்கள் ரிஜக்டட்

Wednesday, December 18, 2013

சினிமாவை கலையாக பார்க்க , கடலோரத்தில் ஒரு கலக்கல் துவக்கம்


அலுவலகம் அருகே அலைகடல்

தமிழ் ஸ்டுடியோ அமைப்பின் புதிய அலுவலக திறப்பு விழா சென்றேன்...சமீப காலத்தில் நான் கலந்து கொண்ட இனிய நிகழ்வுகளில் ஒன்று...
ரசனையாக இடத்தை தேர்ந்து செய்து இருக்கிறார் அருண்... வாகன இரைச்சலுக்கு பதில் அலைகளின் இரைச்சல் , புகை மூட்டத்துக்கு பதில் பறவைகள் இன்னிசை என அற்புதமான இடம்..

அருண் வழக்கமாக வழி சொல்வதில் சொதப்பி எங்காவது சுற்ற வைப்பார்.. ஆனால் இந்த முறை சரியாக சொல்லி விட்டார்.

உள்ளே போனதும் , ஒரு படம் திரையிடப்பட்டது...பர்மா ராணி என்ற யுத்த கால படம்.. யுத்த கால பட பிரதிகள் ஏதும் இப்போது நம்மிடம் இல்லை.. இந்த படம் மட்டும் எப்படியோ யாராலோ எங்கோ காக்கப்பட்டு வந்து இருக்கிறது...இந்த அபூர்வமான படத்தை அரங்கில் பார்த்தது மகிழ்ச்சி..

அதன் பின் செவிக்கு உணவு பரிமாறப்பட்டது...கவிஞர் ரவி சுப்ரமண்யம் அவர்களின் இசை நிகழ்ச்சி.. வித்தியாசமான பாடல்களை தேர்ந்தெடுத்து பாடினார்..பாரதியார் பாரதிதாசன் என பயணித்து சில கவிதைகளுக்கும் இசை அமைத்து பாடியது க்ரியேட்டிவாக இருந்தது...


லீனா மணிமேகலை , அம்ஷன்குமார், ஆர் ஆர் சீனிவாசன் , அறந்தை மணியன் உட்பட பலர் பேசினர்... ஃபார்மலாக பேசாமல் பல்வேறு தளங்களில் அறிவு பூர்வமாக பேசினார்கள்... பிரபல பதிவர்கள் , எழுத்தாளர்கள் , இயக்குனர்கள் கலந்து கொண்டாலும் பேசவில்லை...

சினிமா என்பது பொழுது போக்கு சாதனமோ , பணம் சம்பாதிக்கும் மெஷினோ அன்று..அது ஒரு கலை...  நாம் நம்மை பார்த்துக்கொள்ளும் ஒரு கண்ணாடி ,,வாழ்க்கையின் பிரதிபலிப்பு என்பதை சொல்ல சிலராவது இருப்பது மகிழ்ச்சி அளித்தது

செவிக்கு உணவு முடிந்ததும் வயிற்றுக்கு உணவு ஈயப்பட்டது...எல்லாம் இயற்கை உணவில் விளைவிக்கப்பட்ட பொருட்களால் சமைக்கப்பட்டது...அவ்வளவு சுவையாக இருந்தது.... ஃபினிஷிங் டச்சாக பாயாசம் ( சேமியா பாயாசம் அன்று )..


ஜில்லென்ற சூழல் , இயற்கை கொஞ்சும் சூழல்..அதை விட்டு வர மனமே இல்லை...  தொடர்ந்து பிரமுகர்கள் வந்து கொண்டு இருந்தனர்... நானும் ஓரிருவரும் கடற்கரைக்கு சென்று பேசிக்கொண்டு இருந்தோம்... கூட்டத்தோடு கூட்டமாக மாலை வேளைகளில் செல்வது வேறு... இரவின் அமைதியில் , கடற்கரையில் அமர்வது வேறு..
அவ்வளவு பெரிய கடல்...மேலே அவ்வளவு பெரிய வானம்... அதில் நாம் மட்டும் என்பது உன்னத உணர்வு..

அடுத்த  நிகழ்ச்சிக்கு கண்டிப்பாக போக வேண்டும் என நினைத்தவாறு கிளம்பினேன்..இயற்கை தேனீர்
குளிருக்கேற்ற ஐஸ்க்ரீம்


இரவு நேர கடற்கரை


செவிக்கு உணவு இட்டபின் வயிற்றுக்கு உணவு

Saturday, December 14, 2013

இவன் வேற மாதிரி- ஓநாயும் ஆட்டுக்குட்டியும் படத்துக்கு அண்ணன்

இவன் வேற  மாதிரி - worthless but watchable

 நடிப்பு        - விக்ரம் பிரபு , சுரபி , வம்சி கிருஷ்ணா , 
 இயக்கம் - எம் சரவணன்
 இசை        - சத்யா 

கதை - சட்ட அமைச்சரை பழி வாங்கும்பொருட்டு அவர் தம்பியை கடத்துகிறான் கதா நாயகன் ( தன் முகம் காட்டாமல் )...  இதன் மூலம் அமைச்சரை பதவி இழக்க செய்கிறான்.தன்னை கடத்தியவனை பழி வாங்க அந்த தம்பி முயல்கிறான்.. அவன் கையில் சிக்கிய நாயகியை காப்பாற்ற நாயகன் முயல்கிறான்... வென்றது யார் என்பதே கதை

******************************************************************

ஒரு காப்பி பேஸ்ட் படம் ( ஊடகங்கள் பில்ட் அப் கொடுத்த ) படம் பார்க்க போய் இருந்தேன்...வெகு நேரம் டிக்கட் தரவே இல்லை... என்னை சேர்த்து எட்டு பேர் மட்டுமே இருந்தனர்... ஷோ கேன்சல் சார்...வேணும்னா வேற படம் டிக்கட் தரவா என்றார்கள்... வேறு படம் பார்த்தேன்,.

இப்படிப்பட்ட நிலையில் , இ வே மா பார்க்க போனபோது இன்ப அதிர்ச்சி... செகண்ட் ஷோவுக்கே செம கூட்டம்..அனைவருக்கும் படம் பிடித்து இருந்தது..அதற்கு சில காரணங்கள்..

1. வக்கிரமான காட்சிகள் இல்லை
2/ஆபாச காமெடி இல்லை
3அதீத வன்முறை இல்லை
4 காப்பி பேஸ்ட் விவகாரம் இல்லை

ஒரு சாதாரண படம் வந்தாலே இப்போதெல்லாம் வித்தியாசமாக இருக்கிறது...இசை , பாடல்கள் , நடிப்பு உறுத்தாமல் இருக்கிறது.. கண்டிப்பாக படம் ஹிட் தான்..
ஹிட் , ஃபிளாப் என்பதை மறந்து விட்டு படம் எப்படி என அலசலாம்...

சர்வ வல்லமை பொருந்திய சட்ட அமைச்சர் , கல்லூரியில் அவரே போய் சீட் கேட்கிறாராம்...இல்லை என்றதும் சம்பந்தப்பட்ட்டவரை ஒன்றும் செய்யாமல் சுமமா ஒரு கலவரத்தை உண்டாக்குக்கிறார்... அதனால் அவர் என்ன சாதித்தார் என்ன புரியவில்லை..

அவர் வளர்ச்சிக்கு காரணமான தம்பி சிறைத்தண்டனை பெறுகிறானாம்..இந்தியாவில் இது நடக்காது....அப்படியே நடந்தாலும் , அவனை எப்படியாவது தப்ப வைக்கத்தானே முயல்வார்.. இவர் அப்படி செய்வதில்லை... 14 நாள் பரொலில் அவனை விடுவிக்கிறாராம் ..அதுவும் அவரே ஜாமீன் கை எழுத்து போடுகிறார்... அவ்வளவு பெரிய ஆள் தன் தம்பிக்கு செய்யும் பெரிய உபகாரம் இதுதானாம்..

சரி... அவன் பெரிய தண்டனை பெற்று 15 நாள் கிரேஸ் டைம் கிடைத்தால் எப்படியேல்லாம் எஞ்சாய் செய்வான்..அல்லது பதட்டமாக இரும்பான்..இவனோ வெகு கேஷுவலாக காலேஜ் ஸ்டூடண்ட் போல ஊர் சுற்றிகொண்டும் , சில்லறை குற்றங்கள் செய்து கொண்டும் இருக்கிறான்...ஜிம்முக்கு போய் பொறுப்பாக உடற்பயிற்சி செய்கிறான்..பெண்ணை பார்த்து சும்மா விசில் அடிக்கிறான்... அவன் சைக்காலஜி புரியவே இல்லை...

அவனை நாயகன் கடத்தி ஐந்து நாட்கள் தனியாக அடைத்து வைக்கிறான்.. நமக்கெல்லாம் ஒரு நாளிலேயே மீசை தாடி வளர்ந்து விடும்..அவனோ ஒரு வாரமும் அன்றலர்ந்த மலர் போல ஃபிரஷாகவும் எனர்ஜெடிக்காகவும் இருக்கிறான்..

ஹீரோ பஸ்சில் போகும்போது ஒவ்வொரு முறையும் ஹீரோயின் அதே பஸ்சிலேயே எப்படியோ வந்து விடுகிறார்.. ஒவ்வொரு முறையும் ஏதேனும் கொடுக்கல் வாங்கல் ந்டக்கிறது..இயக்குனர் பஸ்சிலேயே போய் இருக்க மாட்டார் என நினைக்கிறேன்...வெகு செயற்கையான காட்சிகள்... கொஞ்சம் கவி நயத்தோடு , ரசனையோடு அந்த காட்சிகளை அமைத்து இருக்கலாம்...காதல் மனதில் ஒட்டவே இல்லை....

ஓனாயும் ஆட்டுக்குட்டியும் படத்தில் , ஓ நாய் கேரக்டர் மேல்தான் வில்லன் கோஷ்டிக்கு கோபம்.. ஓனாய் கேரக்டர் போலீசில் சரண் அடைந்து இருந்தாலோ , தற்கொலை செய்து கொண்டு இருந்தாலோ , அல்லது வில்லனிடன் சரண் அரைந்து இருந்தாலோ மற்றவர்கள் அனைவரும் தப்பித்து இருப்பார்கள்..ஆனால் அவனோ தானும் அழிந்து தனக்கு வேண்டியவர்களையும் அழிக்கிறான்...

இந்த படத்தில் எல்லோருமே அந்த ஓனாயை விட முட்டாள்தனமாக  நடந்து கொள்கின்றனர்...     வில்லனும் , நாயகனும் ஒருவரை ஒருவர் பிடிக்க முயல்கின்றனர்...ஆனால் இருவரும் புத்திசாலித்தனமாக எதுவும் செய்வதில்லை...தற்செயலாக இருவரும் சந்திக்கின்றனர்..

சரி....அப்படியே சந்தித்தால் , ஹீரோ என்ன செய்ய வேண்டும்...பின்னாடியே போலீஸ் வருகிறார்கள்...அவர்களிடன் ஒப்படைப்பதில்லை...எங்கோ அவனை அழைத்து செல்கிறான்...

இப்படி எல்லாம் இருந்தும் , தற்போதைய படங்களை ஒப்பிட்டால் , பார்க்கும்படியான படம் தான்...

ஒரு வாட்டி பார்க்கலாம்..

இவன் வேற  மாதிரி- ரோல் மாடல் அன்று


Thursday, December 12, 2013

சிவாஜி கணேசன் மிகை நடிப்பு கலைஞரா?- ஞாநி விளக்கம்

திரு ஞாநி அவர்கள் பொது மக்களுடன் இணைந்து செயல்படுவதில் விருப்பம் உள்ளவர்... வி ஐ பி முதல் சாமான்யன் வரை யாராக இருந்தாலும் ஒரே மாதிரி பேசக்கூடியவர்..  ஃபேஸ் புக்கில் அவர் முன் வைக்கும் கருத்துகள் , அதிலேயே முடங்கிப்போகக்கூடாது என்பதால் சிலவற்றை இங்கு பதிவேற்றுகிறேன்...


****************************************************************

        என் கேள்வி : முன்னாள் காதலி அல்லது முன்னாள் காதலன் என்ற சொற்பிரயோகம் எனக்கு எப்போதுமே குழப்பம்தான் . நாம் காதலிக்கும் ஒருவரை காதலிப்பதை என்றாவது ஒரு நாள் நிறுத்துதல் சாத்தியமா ? காதல் என தவறாக நினைத்த உறவில் இருந்து வெளி வந்த பின் சம்பந்தப்பட்டவரை முன்னாள் காதலன் என்றோ காதலி என்றோ எப்படி சொல்வது ? It was never a love at all .ஞாநி
இதில் ஒரு சிக்கலும் குழப்பமும் இல்லை. ஒரு காலகட்டத்தில் அன்பு காட்டியவர் மீது இன்னொரு காலகட்டத்தின் வெறுப்பே ஏற்பட வாய்ப்புண்டு. அதனால் அன்பு காட்டிய தருணத்தில் அது பொய் என்றோ இப்போதைய வெறுப்பு பொய் என்றோ அர்த்தமல்ல. அந்தந்த நேரத்தில அதுவே நிஜம், உண்மை. எனவே முன்னாள் நண்பர், முன்னாள் எதிரி போல முன்னாள் காதலரும் சாத்தியமே.

           செய்தி : 
அந்த காலத்தில் எல்லாம் முதல் நாளே படத்துக்கான வசனத்தை கொடுத்து விடுவார்கள் . இவன் (பாரதிராஜா) எனக்கு ஷுட்டிங் ஸ்பாட்டில்கூட வசனம் கொடுக்கவில்லை . கை வீசி நடங்க . அப்படி பாருங்க . எதுவும் பேசாதீங்க அப்படீனான் . என்னடா பண்றான் இவன் அப்படினு நெனச்சேன் . ஆனா படம் பார்த்து மிரண்டு போய்ட்டேன் - முதல் மரியாதை குறித்து சிவாஜி கணேசன்

அருண் வேந்தன் :சிவாஜி மீது சொல்லப்பட்ட மிகை நடிப்பு என்ற குறைபாட்டை தூக்கி எறிந்த படம்...பாரதிராஜாவும் மிகை நடிப்பு பிரியர்தான்...எப்படி இது நடந்தது என்பது புரியாத புதிர்..


Kirubasankar Manoharan : .எப்படி இது நடந்தது என்பது புரியாத புதிர்..//எல்லா கலைவடிவத்திலும் இது போன்ற மிராக்கில் நடந்துகொண்டுதான் .இருக்கின்றன.. மோனோலிசா புகைப்படம் கூட அப்படி தானோ என்று எனக்கு அடிக்கடி தோன்றும்...

ஞாநிஅந்தப் படம் மொத்தமாகவே ஒரு மிகை உணர்ச்சிப் படம்தான். வேறு படங்களில் சிவாஜி மட்டும் உணர்ச்சிப் பிழம்பாக இருக்கும்போது மிகையாக தோன்றும். இதில் எல்லாமே மிகைப் பாத்திரங்கள். அதை யதார்த்தப்படம் என்று நம்பவைத்தது மட்டுமே பாரதிராஜாவுக்கு வெற்றி.இதே கதையை மகேந்திரன் கையாண்டிருந்தால் எப்படி இருந்திருக்கும் என்று யோசித்துப் பார்க்கவேண்டும். உதிரிப்பூக்களில் விஜயன் பாத்திரத்தையும் அஸ்வினி பாத்திரத்தையும் அவர் கையாண்ட தொனி முதல் மரியாதையில் இருந்திருந்தால் அது நல்ல முயற்சி என்று சொல்லியிருக்கலாம். சிவாஜி நடிகராக தன்னை முழுக்கவும் இயக்குநருக்கு ஒப்புக் கொடுப்பவர். மிகை தோன்றினால் அதற்கு அவர்களே பொறுப்பு. துளியும் மிகை இன்றி சிவாஜி நடித்த பல படங்கள் உள்ளன.

Wednesday, December 11, 2013

நடிகரின் வாழ்க்கையை முடித்து வைத்த திரைப்படம்

ரத்தினக்குமார் - நேரம் சரியில்லாத படம்

 நடிப்பு         : பியூ சின்னப்பா , எம் ஜி ஆர், பானுமதி , மாலதி, என் எஸ் கே, துரைராஜ் , மதுரம்
 இயக்கம்   : கிருஷ்ணன் பஞ்சு
இசை           : ஜி ராம நாதன் , சுப்புராமன்
தயாரிப்பு    : முருகன் டாக்கீஸ்
பாடல்கள்   : பாப நாசம் சிவம் , சுரபி
வசனம்        : வேலாயுதம்கதை     :  பிச்சைக்காரனுக்கு அதிர்ஷடவசமாக ராஜயோக வாழ்க்கை கிடைக்கிறது..  நன்றி இல்லாமல் நடந்து கொண்டு , மீண்டும் பிச்சைக்காரன் ஆகிறான்

வகைப்பாடு  : பொழுதுபோக்கு ,யதார்த்தம் ,மாற்று சினிமா, குப்பை , பிரச்சாரம்

***********************************************************************

சில படங்களில் சில நடிகர்கள் நடித்து இருக்க கூடாது.. சில பாடல்களை சில பாடகர்கள் பாடி இருக்க கூடாது என சொல்வார்கள்...அறிவியல் பூர்வமானது அன்று என்றாலும் வியப்பளிப்பது...

 நான் ஒரு ராசி இல்லாத ராஜா என்ற பாடலில் இருந்து டி எம் எஸ் வீழ்ச்சியை சந்தித்தார் ( ஒரு தலை ராகம் )

கே ஆர் ராமசாமி , நான் பாட மாட்டேன் என்றொரு படத்தில் பாடினார். அதுவே அவர் கடைசி பாடலாக அமைந்தது..( துளி விஷம் படம் )

ராசாத்தி என் உசிரு என்னதில்லை என்ற பாடலை பாடிய - அப்போது வேகமாக முன்னுக்கு வந்துகொண்டு இருந்த - ஷாகுல் ஹமீது விபத்தில் காலமானார் (  திருடா  திருடா )

அந்த வரிசையில் வரும் படம்தான் ரத்தினகுமார் ( 1949)..தோல்விகளால் துவண்டு இருந்த பியூசின்னப்பாவுக்கு , உத்தம புத்திரன் படம் வாழ்வளித்தது என முன்பு பார்த்தோம். இந்த படம் கதையே சரி இல்லை... ஓரளவு இவர் வாழ்க்கையை பிரதிபலிப்பது போலவும் , வீழ்ச்சியை காட்டுவது போலவும் இருந்தது..

இந்த படத்தில் பானுமதி என் எஸ் கே போன்றோர் இருந்தும் , அருமையான பாடல்கள் இருந்தும் , படம் ஓடவில்லை... அவர் வீழ்ச்சி தொடங்கியது... இது வந்து இரண்டு ஆண்டுகளில் அவர் காலமானார். இதன் பின் வந்த வனசுந்தரி படமும் சராசரி படம்தான்.. அவர் இறப்புக்கு பின் இன்னொரு படம் கடைசியாக ரிலீஸ் ஆனது.

அவருக்கு வீழ்ச்சியளித்த படம் என்றாலும் , படம் நன்றாகவே உள்ளது.

ஹீரோ ரத்னகுமார் ஓர் அனாதை...பிச்சை எடுக்கிறான்... இன்னொரு அனாதை பிச்சைக்காரியை மணம் செய்து கொண்டு ஓரளவு முன்னேறி வருகிறார்கள்..இந்த நிலையில் தன் மகனை சின்ன வயதில் பறிகொடுத்த மன்னர் தன் தங்கை மகளை இளவரசியாக முடிசூட்டுகிறார்.. ரத்னாவுக்கு சில மந்திர சக்திகள் கிடைக்கின்றன... அதனை வைத்து இளவரசியை கைக்குள் போட முடிகிறான்..தன் மனைவியை துரத்தி அடிக்கிறான்.. ஒரு கட்டத்தில் அந்த சக்தி போய் விடுகிறது... தவறை உணர்கிறான்.. தூக்கு தண்டனை விதிக்கபடும் கடைசி நேரத்தில், இவனே தொலைந்து போன இளவர்சன் என தெரிய வந்து காப்பாற்ற படுகிறான்..

மொத்தம் இருபது பாடல்கள் !!! அனைத்தும் அருமை...

எங்கிருந்தோ வந்தான் என்ற பாரதி பாடல் சாயலில் ஒரு பாடல்..கேலி மிக செய்வாள் என்ற அந்த பாடல் அருமை..

இளவரசியை காதலிக்க முயலும் நபர் ஒரு பிச்சைக்காரன் என கண்டுபிடிக்கும் கடமை தவறாத வீரர் யார் தெரியுமா?

ம்ம்.. எம் ஜி ஆர் தான் அந்த சின்ன வேடத்தில் வருகிறார்..

படத்தில் சுவையான ஒரு காட்சி..

பாழடைந்த சத்திரத்தில் ஒரு பேய் ஹீரோவை துரத்தும்... ஒரு பாறையை கையில் வைத்துக் கொண்டு போட்றுவேன்..என மிரட்டும்...கெஞ்சி பார்க்கும் ஹீரோ ஒரு கட்டத்தில் ., சரி போட்டு தொலை என்பார்..
அது பாறையை தூக்கி போடும்..உள்ளே பார்த்தால் வைரங்கள் , வைடூரியங்கள். தங்கம் என இருக்கும்...

என் எஸ் கே வழக்கம்ப்போல அழகான காமெடி...

பானுமதியும் , மாலதியும் இரு ஹீரொயின்கள்..அழகு..

இந்த படத்தை தயாரித்தது மதுரையை சேர்ந்த முருகன் டாக்கீஸ் நிறுவனமாகும்...

ரத்தினக்குமார் - ரம்பம் இல்லை 

Tuesday, December 10, 2013

கமல்பாணி ஹீரோயிசத்தில் வந்த முதல் திரைப்படம்

உத்தம புத்திரன்  - தமிழிம்  முதல் இரட்டை வேட  ஹீரோயிச படம்

 நடிப்பு         : பியூ சின்னப்பா , எம் வி ராஜம்மா , பாலையா, என் எஸ் கிருஷ்ணன் , மதுரம் , காளி ரத்திரனம்

 இயக்கம்   : டி ஆர் சுந்தரம்

தயாரிப்பு   : மாடர்ன் தியேட்டர்ஸ்

கதை     :  அரசருக்கு பிறந்த இரட்டை குழந்தைகள் . ஆட்சிக்கு வந்து விடும் கெட்ட சகோதரனை வீழ்த்தி நல்ல சகோதரன் ஆட்சியை பிடித்து மக்களுக்கு நல்லது செய்கிறான்..

வகைப்பாடு  : பொழுதுபோக்கு ,யதார்த்தம் ,மாற்று சினிமா, குப்பை , பிரச்சாரம்

**************************************************************************

தமிழ் சினிமாவின் முதல் இரட்டை வேட படம் என கருதப்படும் படம் உத்தம புத்திரன் ( 1940 ).  ஆனால் 1935லிலேயே துருவன் என்ற படத்தில் இரட்டை வேடம் வந்து விட்டது என்கிறார் திரைப்பட அறிஞர் தியடோர் பாஸ்கரன். ஆயினும் போதிய ஆதாரங்கள் இன்மையால் , உத்தம புத்திரன் படத்தையே முதல் இரட்டை வேட படமாக அதிகாரபூர்வமாக   ஏற்று இருக்கிறார்கள்..

  நமக்கு இந்த பட பிரதிகள்தான் கிடைக்கின்றன என்பதால் , இதைத்தான் அந்த கால ரசனைக்கு ஓர் ஆவணமாக கருத வேண்டி இருக்கிறது.. மேலும் இந்த படம்தான் கமல்பாணி ஹீரோயிச நடிப்புக்கு ஒரு டிரண்ட் செண்டராகவும் அமைந்து இருக்கிறது.

கமல்பாணி ரஜினிபாணி என இரண்டு பாணிகள் என்றென்றும் நம் ரசனையில் உண்டு..இதில் எது உயர்ந்தது எது தாழந்தது என அந்தந்த ரசிகர்கள் அவர்களுக்கு சாதகமாக சொல்வார்கள்..

ஆனால் நடு நிலையுடன் பார்த்தால் , இதில் உயர்வு தாழ்வு ஏதும் இல்லை...சிலரை காரணம் இன்றி பிடித்து விடும்..பெரிய பிளஸ் பாயிண்ட் இல்லாததேகூட அவரை நம்முடன் அடையாளப்படுத்திக்கொள்ள செய்து விடும்.. நம்மில் ஒருவராக அவரை நினைத்துக்கொள்வோம். 
அழகு , திறமை. முறையான நடிப்பு பயிற்சி , நடனம் என கமலின் ப்ளஸ்களில் ஒன்றுகூட இல்லாத ரஜினி தனது தனித்துவ திறமையால் கமலையும் மிஞ்சி ஜெயிக்கிறார் இல்லையா ...இது ஒரு பாணி..

முதல் இடம் இரண்டாம் இடம் என அலட்டிக்கொள்ளாமல் பல்துறை திறமையை தொடர்ந்து முன் வைத்து தனக்கு என ஓர் இடத்தை உறுதி செய்வது ஒரு பாணி. இன்றைக்கும் தன் பாணியை விட்டுக்கொடுக்காமல் , தொடர்ந்து கற்று , தொடர்ந்து புதிய முயற்சிகளை கமல் செய்கிறார் இல்லையா...இது ஒரு பாணி...

இந்த இரண்டாவது பாணியை தமிழ் சினிமாவில் உருவாக்கிய முதல் நடிகர்தான் பி யூ சின்னப்பா..
அன்றைய நிலையில் நம்பர் ஒன் தியாகராஜ பாகவதர்.. உங்களுடன் ஒரு நாள் மனைவியாக வாழ்ந்து விட்டு அடுத்த நாள் தற்கொலை செய்து கொள்கிறேன்..என்னை ஏற்று கொள்ளுங்கள் என அவருக்கு பெண்களிடம் இருந்து கடிதங்கள் குவியுமாம்.  அவர் சீவிய சீப்பை போற்றி பாதுகாத்த ஆண்கள் , அவர் செல்வாக்கை கண்டு நேருவே வியந்தது என பல சம்பவங்கள்...
ஆனால் அவர் நடிப்பு , நடனம் . சண்டை என்றெல்லாம் பல்துறை திறமைகளை காட்டியவர் அல்லர்..  ரஜினி, எம் ஜி ஆர் போல இனம் தெரியாத ஈர்ப்புதான் அவர் பலம்..

அந்த கால கட்டத்தில் , அவருக்கு போட்டியாக இன்னொரு துருவமாக ஜொலித்தவர் பி யூ சின்னப்பா...

நடனம். சண்டை , பாடல் என இவர் ஒரு சகலகலா வல்லவர் ( கமல்போல ) ... ஆயினும் இவர் படங்கள் சரியாக ஓடவில்லை.. நல்ல பெயரும் கிடைக்கவில்லை..பேசாமல் ஊருக்கு போய் ஆன்மீக தேடலில் ஈடுபடலானார்.. மவுன விரதம் , உண்ணா நோன்பு என இறைவனை நோக்கி இறைஞ்சினார்.. காக்கா உட்கார பழம் விழுந்ததோ அல்லது கடவுள் கண் திறந்தாரோ தெரியவில்லை... மாடர்ன் தியேட்டர்ஸ் சுந்தரம் , இவர் வீடு தேடிப்போய் , உத்தம புத்திரன் படத்துக்கு புக் செய்தார்..அதன் பின் அவருக்கு ஏறு முகம்தான்..

அவர் ஊரான புதுக்கோட்டையில் வீடுகளாக வாங்கிப்போட்டார்...பயந்து போன அன்றைய புதுக்கோட்டை மன்னர் , இனி யாரும் அவருக்கு வீடு விற்க கூடாது என சட்டம் போட்டார் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்..

அந்த அளவுக்கு ஒரு டிரண்ட் செட்டர் படம் உத்தம புத்திரன்..

அரசருக்கு இரட்டை குழந்தைகள் ... அரசரை கன்வின்ஸ் செய்து , ஒரு குழந்தையை பிரித்து விடுகிறான் மந்திரி...இன்னொரு குழந்தையை தன் கைப்பாவையாக வளர்த்து , ஆட்சியை அனுபவிக்கிறான்.. அந்த இன்னொரு குழந்தை வீரனாக இன்னொரு இடத்தில் வளர்கிறது..

சுயபுத்தி இல்லாமல் , கொடுங்கோலாக செயல்படும் இவனை ஒரு கட்டத்தில் சகோதரன் எதிர்க்கிறான்..இரும்பு முகமூடி அணிவித்து அவனை ஜெயிலில் தள்ளி விடுகிறான் இந்த கெட்ட மன்னன்...அதில் இருந்து தப்பி , எப்படி நீதியை நிலை நாட்டபடுகிறது...கெட்ட புத்திரனை , உத்தம புத்திரன் எப்படி வென்றான் என்பது கதை..

அந்த காலத்தில் முதன்முதலாக இரட்டை வேடத்தில் , ஒரே தோற்றத்தில் இருவர் , பேசுவது சண்டையிடுவதை பார்க்கையில் நம் தாத்தாக்கள் எப்படி மகிழ்ந்திருப்பார்கள் என நினைக்க ஆச்சர்யமாக இருக்கிறது..

பாடல் , சண்டை என ஜொலிக்கிறார் பி யூ சின்னப்பா. இவர் ஒரே காட்சியில் பல வேடத்தில் தோன்றிய இன்னொரு படத்தையும் , அதன் ஒளிப்பதிவாளரைப்பற்றியும் இன்னொரு இடுகையில் பார்க்கலாம்..

அபூர்வ சகோதர்கள் படமும் இரட்டை வேட படம் என்றாலும் அதில் உணர்வுகள் , செண்டிமெண்டுகள் பிரதானமாக இருக்கும்..படம் ஷார்ட்டாகவும் இருக்கும்.

இது சற்று நீளமான படம்,..மூன்றரை மணி நேரம் ஓடுகிறது... எத்தனை பாடல்கள் என எண்ண முடியவில்லை... இரு சகோதரர்களும் ஆவேசமாக வாக்குவாதம் செய்து அப்படியே பாட ஆரம்பித்து விடுகிறார்கள்...காமெடியனை சிலர் விசாரிக்க , அவன் தன் பதிலை பாட்டாகவே பாடி விடுகிறான்..

ஓர் அணாவுக்கு அந்த காலத்தில் டிக்கட் வாங்கிபோய் அமர்ந்து விட்டால் , பாட்டு கச்சேரி , டான்ஸ் என பல்வித கொண்டாட்டங்கள்..ஒரே டிக்கட்டில்!!! நன்றாக எஞ்சாய் செய்து இருக்கிறார்கள்..

யுத்த காலத்தில் படத்தை இரண்டு மணி நேரமாக குறைக்க பிரிட்டிஷ் அரசு ஆணையிட்டபோது , திரையுலகம் கொதித்து போய் விட்டதாம்... சுதந்திர போராட்டத்தைவிட அதி தீவிரமாக இதை எதிர்த்து போராடினார்களாம்...

படத்தின் இன்னொரு முக்கியம் அம்சன் வில்லன் பாலையா நடிப்பு... இவர் ஒரு சகாப்தம் என்றே கருதுகிறேன்.. சினிமாவின் ஆரம்ப கட்டத்தில் இருந்து நடித்து பல காலம் தொடர்ந்தவர்... வில்லன் , ஹீரோ , காமெடி ,, கடைசியில் தந்தை என எல்லாவற்றிலும் கலக்கியவர் இவர்... இந்த படத்திலும் அழகு..

நீளமாக வசனங்கள் இல்லை...ஷார்ட் அண்ட் ஸ்வீட் ....மந்திரிக்கு அழகு வரும்பொருள் உரைத்தல்.. நீங்களோ வாயிலில் நின்று வருபவர்கள் குறித்து உரைக்கிறீர்களே..வெட்கமாக இல்லை - ஓர் எ.கா...

கெட்ட அரசனை சற்று காமெடியாக அமைத்து இருப்பது சிறப்பு... இளவரசியை ( ராஜம்மா ) சென்று பார்க்கக்கூட சோம்பல்.. தன் இரட்டை வேட சகோதரனை தன் போல நடித்து ( ?! ) காதலிக்க ( !?) அனுப்புகிறான்.. காதல் ஒர்க் அவுட் ஆனதும் கல்யாணம் மட்டும் செய்து கொள்ளலாம் என்ற ராஜதந்திரம் !!!

அந்த கால பாடல்கள் ஏராளமாக இருந்தாலும் , அனைத்தும் தரமாக இருந்தன... இன்று போல , பெண்ணின் உடலைக்காட்டி மயக்க வேண்டும் என்ற அவசியம் இல்லாமல் , உண்மையான திறமைசாலிகளின் கைவண்ணத்தில் பாடல்கள் ஜொலிக்கின்றன... 

அதில் செந்தமிழ் நாடெனும் போதினேலே என்ற பாடல் சூப்பர் ஹிட்...ஆங்கிலேயர் ஆட்சியாளர்கள் கண்களில் மண்ணைத்தூவி விட்டு இந்த பாடலை இடம் பெற செய்து இருக்கிறார் சுந்தரம்..

கதையுடன் சேர்ந்து வரும் காளி என் ரத்தினம் காமெடி அழகு..தனி காமெடி டிராக்கில் வரும் என் எஸ் கே காமெடியோ பட்டாசு..இன்றைய சென்சார் அதை அனுமதிக்காது...டீவியிலும்கூட ஒளிபரப்ப முடியாது...உடனே ஆபாச காமெடியா என நினைக்காதீர்கள்..இல்லை...சமூக சாடல் , சீர்திருத்த காமெடி... பிளாக் ஹ்யூமர் டைப்பில் கலக்கி இருப்பார்..

மொத்தத்தில் ,
  உத்தம புத்திரன் - உள்ளம் கவர்ந்த புத்திரன்


Sunday, December 8, 2013

ஹாலிவுட் பாணியில் ஒரு தமிழ் படம்

பர்மா ராணி (1943) -  தேச ( ?!! ) பக்தி படம் 

 நடிப்பு         : ஹொன்னப்ப பாகவதர், டிஆர் சுந்தரம், கேஎல்வி வசந்தா , என் எஸ்கே, மதுரம், பாலையா , காளி என் ரத்தினம், ராஜகாந்தம் மற்றும் பலர்

 இயக்கம்   : டி ஆர் சுந்தரம்

தயாரிப்பு   : மாடர்ன் தியேட்டர்ஸ்
கதை     :  ஜப்பான் எனும் அழிவு சக்தியிடம் இருந்து உலகை காக்க பிரிட்டிஷ் அரசு செய்யும் முயற்சிகளுக்கு உதவும் தேச பக்தர்கள் கதை

வகைப்பாடு  : பொழுதுபோக்கு ,யதார்த்தம் ,மாற்று சினிமா, குப்பை , பிரச்சாரம்


************************************************************************8

இது சிறந்த படம் என்ற வரிசையில் வராது.. ஆனால் அபூர்வமான படங்கள் என்ற வரிசையில் வரும்.. இந்த பாணி படங்களின் பிரதிகள் எல்லாம் அழிந்து விட்டன..இந்த பட பிரதி மட்டும் எப்படியோ எஞ்சி இருக்கிறது.


ஓர் அரிய ஆவணமாக திகழ்கிறது இந்த படம்..இப்போதைய ஹாலிவுட் படங்களில் உலகை காக்கும் ரட்சகனாக அமெரிக்காவை காட்டுகிறார்கள் இல்லையா.. இந்த ரட்சகன் ஸ்டேட்டசை அடைய அன்றைய பிரிட்ட்டன் முயன்றது ஆவணமாகி இருக்கிறது.. இது போன்ற படங்கள் அன்று பல வந்துள்ளன.. ஆனால் அந்த பிரிண்டுகள் இன்று இல்லை... எனவே பிரிட்டிஷ் அரசுக்கு ஆதரவான ஒரு படத்தை பார்ப்பது விசித்திரமான மன நிலையை ஏற்படுத்தியது..

இது போன்ற படங்களை நம் ஆட்கள் விரும்பி எடுக்கவில்லை.. உலகபோர் நடந்த அன்றைய கால கட்டத்தில் பிரிட்டன் அரசு இப்படி ஓர் உத்தரவு போட்டு இருந்தது.. மூன்று படங்கள் எடுத்தால், அதில் ஒரு படம் இது போல இருக்க வேண்டும் என்பது விதி..

அந்த விதிக்கு உட்பட்டு இந்த படம் எடுத்தாலும், உண்மையில் இது ஆங்கிலேய அரசுக்கு எதிரான படமாக எடுத்ததில் நிற்கிறார் டி ஆர் சுந்தரம்..

கதைப்படி பர்மா ஜப்பான் ஆதிக்கத்தில் இருப்பதாக காட்டி , ஆக்கிரமிப்பு ஜப்பானை எதிர்ப்பது போல , ஆக்கிரமிப்பு பிரிட்டனுக்கு எதிராக மறைமுகமான பிரச்சாரம் செய்கிறார்..

கதைபர்மாவில் நடக்கிறது... ஆசியாவின் ரட்சகன் என்ற போர்வையில் உலகை விழுங்க துடிக்கும் ஜப்பான், பர்மாவை பிடித்து விடுகிறது,,, பர்மாவை விடுவிக்கும் பொருட்டு , ( பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் இருந்த ) இந்திய விமான படை தாக்குதல்  நடத்துகிறது... அதில் ஒரு வீரர் ( பாலையா ) ஜப்பான் ராணுவத்திடம் பிடிபடுகிறார்.. குமார் ( ஹொன்னப்ப பாகவதர் ) என்ற படை வீரன் தன் சகாக்களை ஒளித்து வைத்து விட்டு , பர்மா அமைச்சர் ஒருவர் இல்லத்தில் அவருக்கு தெரியாமல் த்ஞ்சம் புகுகிறான். அவர் மகளுடன் ( வசந்தா ) காதல் ஏற்படுகிறது... பர்மாவில் பிரிட்டனின் உளவாளி பெண் ஒருவள் இருக்கிறாள்..பர்மா அதிகாரிக்ளின் திட்டத்தை கண்டறிந்து , இந்தியாவுக்கு செய்தி அனுப்புவது இவள் வேலை.. இவளுடன் இணைந்து செயல்பட்டு ,  பர்மாவின் கண்களில் மண்ணை தூவி விட்டு, பிரிட்டிஷ் அரசு கொடுத்த வேலையை செய்து முடிப்பதே கதை.. இந்த வேலைக்கு கதானாயகி உதவியாக இருக்கிறாள்..

பிரச்சார படம் என்றாலும் , அந்த கால கட்டத்தில் ஒரு வித்தியாசமான படம்.. ஒரு த்ரில்லர் பாணியில் , அதிக வசனங்கள் இல்லாமல் , ஆங்கில படம் போல எடுத்து இருக்கிறார்கள்..இரண்டு மணி நேர படம்... அந்த கால கட்டத்தில் 11,000 அடிக்குள் படத்தை முடிக்க வேண்டும் என்ற உத்தரவு இருந்தது,,, இந்த பாணியில் எடுக்கப்பட்ட படங்களில் சிறந்த படம் என பாராட்ட்டப்பட்ட படம் இது..

பத்து பாடல்கள்..எல்லாம் இனிமை... இரண்டு பாடல்கள் நகைச்சுவை பாடல்கள்..இன்றும் சிரிக்க வைக்கின்றன...

என் எஸ் கே மதுரம் , காளி என் ரத்தினம் ராஜ காந்தம் என இரு நகைச்சுவை ஜோடிகள்... பிரச்சார நெடி இல்லாமல் எடுக்கப்பட்ட படம் என்றாலும் பெரிதாக ஓடவில்லை..சுந்தரம் கவலைப்படவில்லை...இது சும்மா கணக்கு காட்ட எடுக்கப்பட்ட படம்தானே..

ஹிட்லரை கேலி செய்யும் விதத்தில் ஒரு கேரக்டரை உருவாக்கி அதில் தானே நடித்து இருக்கிறார் டீ ஆர் சுந்தரம்... வில்லனாக வரும் ஜப்பானிய ராணுவ அதிகாரி இவர்தான்...புத்த பிட்சுவாக செருக்களத்தூர் சாமா வழக்கம்போல சிறப்பாக செய்து இருக்கிறார்..

பர்மா ராணி - பாதுகாக்கப்பட வேண்டிய ஆவணம்
*****************************************
டெயில் பீஸ்1

இந்தியா சுதந்திரம் பெற்ற பின் அமைந்த அரசாங்கம்  , இந்த படத்தை சென்னை மகாணத்தில் திரையிடுவதை தடை செய்து விட்டது :)

டெயில் பீஸ்2

டி ஆர் சுந்தரம் இந்த படம் தவிர இன்னொரு படத்தில் நடித்து இருக்கிறார்.. அவர் தயாரித்த படங்களில் பயங்கர ஸ்ட்ரிக்ட்... ஷூட்டிங் ஆரம்பித்து விட்டால் , ஸ்டுடியோ கதவுகள் அடைக்கப்பட்டு விடும்,யாரும் உள்ளே போகவும் முடியாது,,வெளியே வரவும் முடியாது...ஒரு படத்தில் ஹீரோ பி யூ சின்னப்பா வர நேரம் ஆகவே, அவரை தூக்கி விட்டு சுந்தரமே நடித்தார்... எம் ஜி ஆரின் அலிபாபாவும் நாற்பது திருடர்களும் படம் எடுத்தது இவர்தான்... எம் ஜி ஆர் 20 நாட்கள் வரவே இல்லை... 21 வது நாள் வந்தார்... நாளையில் இருந்து சரியாக வருகிறேன் என்றார்... தேவையே இல்லை...படம் எடுத்து முடித்தாயிற்று என படத்தை ஸ்கிரீன் செய்து காட்டினார் சுந்தரம்..சில காட்சிகளை குறைத்து, சில காட்சிகளை டூப் வைத்து ஷூட் செய்து , படத்தை முடித்து இருந்தார் சுந்தரம்.. சகல வசதிக்ள் கொண்ட ஸ்டுடியோவாக விளங்கிய மாடர்ன் தியேட்டர்ஸ் இன்று இல்லை..சேலத்தில்,  வரலாற்றின் எச்சமாக அதன் முகப்பு மட்டும் இருக்கிறது

Friday, December 6, 2013

இரட்டை வேட (தமிழ்) படங்களின் எவரெஸ்ட் - அபூர்வ சகோதரர்கள்

அபூர்வ சகோதரர்கள் (1949) - நான் ஸ்டாப் எண்டர்டெய்னர் 

 நடிப்பு         : எம் கே ராதா , பானுமதி ,  நாகேந்திர ராவ், சோமு மற்றும் பலர் &                              ஜெமினி நிறுவன கலைஞர்கள்
 இயக்கம்   : ஆச்சார்யா

தயாரிப்பு   : ஜெமினி ஸ்டுடியோ ( எஸ் எஸ் வாசன் )

கதை           :  1. சதியால் பிரிக்கப்பட்ட அரசரின் இரு குழந்தைகள் ,                                                         பெரியவர்கள்  ஆனதும் , ஒன்று சேர்ந்து சதிகாரனை பழி                                               வாங்குகிறார்கள்..

                      2. தன் சகோதரனின் நிழலாக வாழ சபிக்கப்பட்டு , தன்                                                    இருத்தலுக்கு அர்த்தம் இன்றி வாழும் சகோதரன் , 
                      தான் இல்லாமல் போவதன் மூலம் தன் இருத்தலுக்கு அர்த்தம்                                    தேடிக்கொள்கிறான்..
வகைப்பாடு  : பொழுதுபோக்கு , யதார்த்தம் , மாற்று சினிமா, குப்பை

*******************************************************************************

இளையராஜாவுக்காக படங்கள் ஓடிய காலகட்டம் உண்டு.. அதுபோலவே நடிகர்களுக்காகவே ஓடிய கால கட்டங்கள் உண்டு... ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு துறை ஆதிக்கம் செலுத்துவதும் , அவர்கள் பெயராலேயே படங்கள் அடையாளப்படுத்துவதும் தமிழக பாணி..இளையராஜா படம் , பாலச்சந்தர் படம் , ரஜினி படம் , கமல் படம் - அவ்வளவு ஏன் .சிலுக்கு படம் என்று அடையாளப்படுத்தப்பட்டு ஓடிய படங்கள் உண்டு..

பழைய படங்களைப் பொருத்தவரை காசு போடும் தயாரிப்பாளர்கள்தான் ராஜாவாக இருந்து இருக்கிறார்கள்... ஜூபிட்டர் பிக்சர்ஸ் , மாடர்ன் தியேட்டர்ஸ், ஜெமினி என அந்த காலத்தில் கொடி கட்டி ப்றந்தார்கள்..இவர்கள் படம் என்றால் நம்பி பார்க்கலாம் என்ற அளவுக்கு பிராண்ட் இமேஜ் இருந்தது... தயாரிப்பாளர் பெயர் வரும்போது திரையரங்கில் கைதட்டுவார்கள் என்றால் இன்று நம்ப கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருக்கும்..

சில படங்களின் டைட்டிலை  பார்த்தால் , தயாரிப்பாள்ர் இயக்குனர் தொழில் நுட்ப கலைஞர்கள் பெயர்கள் எல்லாம் போட்டு முடித்த பின்புதான் ,  நடிகர்கள் பெயர் மொத்தமாக வருகிறது...ஹீரோ , வில்லன் , காமெடியன் என எல்லா பெயரும் ஒரே பட்டியலில் வருகிறது.. என்ன ஒன்று , ஹீரோ பெயர் பட்டியலில் முதலாவதாக வருகிறது..

அந்த வகையில் ஜெமினி நிறுவனத்தின் முக்கியமான படங்களில் ஒன்று அபூர்வ சகோதரர்க்ள்  ..( ஆங்கிலத்தில் Strange Brothers !! ) 
ஜெமினி நிறுவன தயாரிப்பு என்ற பிராண்ட் இமேஜை தாண்டி இன்னொரு சிறப்பும் படத்துக்கு உண்டு...இதை இயக்கிவர் பல வெற்றிப்படங்களைத்தந்த ஆச்சார்யா ..ஆச்சார்யாவைப் பற்றி இதில் கொஞ்சம் தெரிந்து கொள்ளலாம்

இது முழுக்க முழுக்க பொழுதுபோக்காக இருக்க வேண்டும் என்ற தெளிவு , காட்சிகளின் பிரமாண்டம் , தேர்ந்த நடிப்பு , அசத்தும் தொழில் நுட்பம் என காலத்தை வென்று நிற்கிறது படம்..கிராஃபிக்ஸ் இல்லாத அந்த காலத்திலேயே இரட்டை வேடத்தை அழகாக எடுத்து இருக்கிறார்கள்..ஒரே ஃபிரேமில் இயல்பாக தோன்றுவது , கிராஸ் செய்வது , அடிப்பது போன்றவற்றை வெகு நேர்த்தியாக எடுத்து இருக்கிறார்கள்..

பியானோ இசையில் ஒரு பாடல் , வெகு வெகு ஸ்டைலிஷாக இருக்கும்..எல்லா பாடல்களுமே கனவு உலகத்துக்கு , ஏதோ ஒரு காலத்துக்கு நம்மை எடுத்து சென்று விடுகின்றன..

வில்லனுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதை...இந்த வில்லன் கேரக்டருக்கு முக்கியமான கதானாயாகன் யாரையாவது போடலாம் என்றுதான் நினைத்தார்கள்..பி யு சின்னப்பா. ரஞ்சன் போன்ற அன்றைய பெரிய தலைகளை கேட்டு , அது சரியாக வரவில்லை... கடைசியில் , கன்னட திரையுலகில் கலக்கி வந்த நாகேந்திர ராவை புக் செய்தனர்...

இந்த படத்தின் முதுகெலும்பு இவர்தான்... எம்ஜிஆர் , சிவாஜி படங்களில் வருவது போன்ற வில்லன் அல்லர்.. யதார்த்தமான , காமெடி கலந்த சத்யராஜ் பாணியிலான வில்லன்...அந்த காலத்தில் எப்படி இப்படி ஒரு வில்லன் என தெரியவில்லை...
பானுமதி வெகு அழகாக மட்டும் அல்ல..புத்திசாலியாகவும் காட்டப்படுகிறார்..லவ்லி...எம் கே ராதா மிகை அற்ற நடிப்பில் கவர்கிறார்..டாக்டர் , வேலையாள் போன்ற உயிர்ப்பான கேரக்டர்கள் மனதில் நிற்கின்றன..

இரு சகோதரர்கள் பிரிந்து கடைசியில் சேர்வது என்ற கான்சப்டை எத்தனை முறை பார்த்து விட்டோம்... ரஜினி , கமல் , எம் ஜி ஆர் , சிவாஜி , அஜீத் ( வடிவேலு !!! ) என இந்த கான்சப்ட்டில் நடிக்காத நடிகர்கள் இல்லை..இதற்கெல்லாம் ஆரம்ப புள்ளியாக அமைந்த படங்களில் இதுவும் ஒன்று ( உத்தம புத்திரன் படம் குறித்து பிறகு பேசலாம் )...

அடையாள குழப்பம், காமெடி , கிரைம் என பலர் பல விதமாக இந்த கான்சப்டை பயன்படுத்தினாலும் , வாழ்க்கையின் அபத்தத்தை தொட்டுக் காட்டிய விதத்தில் இந்த படம் கொஞ்சம் தனித்து தெரிகிறது...

வாழ்வதற்கு சபிக்கப்பட்டு , எந்த ஆதரவும் இல்லாமல் , உலகில் தூக்கி எறியப்படுவன் மனிதன் என்ற கான்சப்ட் தொட்டுக்காட்டப்படுகிறது..பாட்டு , டான்ஸ் , சண்டை , காதல் இவைகளுக்கு மத்தியில் இந்த மனித அவலம்- என்னை கேட்காமல் என்னை யார் உலகத்துக்கு வந்தது. , எனக்கு யார் இந்த வாழ்க்கையை கொடுத்தது என்ற கேள்வி - உள்ளூர இருப்பதே படத்தின் வெற்றிக்கு காரணம் என நினைக்கிறேன்.

பிரிக்கப்பட்ட சகோதரர்கள்... ஒருவன் காட்டில் வளர்க்கப்படுகிறான்... வசதியற்ற சூழல்... சற்று வசதியான நிலையில் வாழும் தன் சகோதரன் எங்கோ அனுபவிக்கும் வலி , சோகம் போன்றவற்றை இவன் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் உணர்ந்தவண்ணம் இருக்கிறான்.
அவனுக்கு வலித்தால் இவனுக்கு வலிக்கிறது...அவனை ஒரு பெண் தொட்டால் , அந்த இன்ப உணர்ச்சி இவனுக்கு ஏற்படுகிறது..
அதாவது இவனுக்கு என வாழ்க்கை இல்லை.யாரோ ஒருவனின் நிழலாக வாழும் நிலை...

நேசிக்கும் பெண்ணிடம் இவன் கேட்கும் கேள்வி அவலச்சுவை நிரம்பியது,,,என்னை ஏன் புறக்கணிக்கிறாய்.. எல்லா விதத்திலும் நானும் அவனும் ஒன்றுதான்... ஒரு வேளை நீ என்னை முதலில் பார்த்து இருந்தால் , என்னைத்தான் காதலித்து இருப்பாய்... என அவன் ஆவேசப்படுவது மனித அவலமாகும்..

தகுதி இன்றி ஒன்று கிடைக்காமல் போவது வேறு..எல்லாம் இருந்தும் , வெறும் சந்தர்ப்பத்தால் , ஏதோ ஒரு சின்ன அபத்தத்தால் , கிடைக்க வேண்டியது கிடைக்காமல் போவது என்ன ஒரு அவலம்.. யோசித்தால் வாழ்கையின் அபத்தம் புரியும்... ஒரு கால்பந்து போட்டி, இரு அணிகள் மோத தயாராக இருக்கின்றன... இரண்டும் வலுவான அணிகள்.. திடீர் என , போட்டியெல்லாம் வேண்டாம் , எனக்கு இந்த அணி பிடித்து இருக்கிறது,அவர்களுக்கு கோப்பையை கொடுத்து விடுங்கள் என சொல்வது எவ்வளவு அபத்தமாக இருக்கும்...தோற்றவர் பார்வையில் அது எப்படிப்பட்ட ஒரு அவலம்... ஆனால் இப்படிப்பட்ட அவலமும் அபத்தமுமே வாழ்க்கை..

ஒரு கட்டத்தில் தன் சகோதரனை கொன்று விடலாமா என்றுகூட நினைக்கிறான்.. ஆனால் , அதில் இருக்கும் முரண் புரிகிறது,,,கடைசியில் தான் இல்லாமல் போவதன் மூலம் , தன் இருப்பை உறுதி செய்கிறான்...

வில்லனை கொல்வது கடைசி காட்சி அன்று... இவனது தியாகமே கடைசி காட்சி...

எக்சிஸ்டென்ஷியலிசம் , சார்த்தர் என ஆழமாக போக வேண்டிய சப்ஜெக்ட்டை , ஒரு பொழுதுபோக்கு படமாக அமைத்ததுதான் இயக்குனரின் கெட்டிக்காரத்தனம்..அதே நேரத்தில் அந்த ஆழமான தன்மையையும் அண்டர்லைன் செய்ய தவ்றவில்லை...

ஒரே ஒரு பத்து பைசா சுண்டி விடுவதில் , ஒருவன் வாழக்கையே அழிகிறது என்ற கான்சப்டை கமல் ஹாசன் ஆளவந்தானின் சொல்ல முயன்று இருப்பார்.... வழக்கமாக படத்தின் குறைகளை மறைக்க தொழில் நுட்பத்தை பயன்படுத்துவார்கள்..ஆனால் ஆள வந்தானில் கமல் தன் அழகான கான்சப்ட்டை மறைக்க , அதாவது படத்தின் பலத்தை மறைக்க , தொழில் நுட்பத்தை பயன்படுத்தி இருப்பார்.

இந்த படத்தில் அந்த விபத்து நேரவில்லை.. அழகான ஆழமான படம்,
இன்னொரு முக்கிய அம்சம் உறுத்தாத பின்னணி இசை.. பல இடங்களில் இசையே இல்லை..இயல்பான ஒலிகள் மட்டுமே ..சூப்பர்...

படத்தில் விரவி இருக்கும் அழகியல் குறிப்பிடத்தக்கது.. இதே படம் ஹிந்தியிலும் , தெலுங்கிலும்கூட சூப்பர் ஹிட் ஆனதையும் சொல்ல வேண்டும்...ஹிந்தியில் இயக்கியது எஸ் எஸ் வாசன்...

அபூர்வ சகோதரர்கள்- தமிழில் வந்த அபூர்வமான திரைப்படம் 


டெயில் பீஸ்

இந்த படம் The Corsican Brothers நாவலை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டது ( இது இதே பெயரில் படமாக்கப்பட்டு சென்னையில் சூப்பர் ஹிட் ஆனது...எனவேதான் தமிழில் எடுத்தார்கள் )...தமிழ் சினிமா ஆரம்ப நிலையில் இருந்தபோது , பல்வேறு மொழி கலைச்செல்வங்களை இங்கு கொண்டு வந்து சேர்க்க வேண்டிய அவசியம் இருந்தது...

ஆனால் இன்று வெளி நாட்டு படங்கள் சுலபமாக கிடைக்கும் நிலையில் , தமிழ் சினிமா வளர்ந்து விட்ட நிலையில், இன்றும் வெளி நாட்டு படங்களை பார்த்து எடுப்பது , அதுவும் அனுமதி வாங்காமல் எடுப்பது கேலிக்குரியது...கண்டனத்துக்கு உரியது...

மேதைகள் ஒன்றிணைந்த அபூர்வமான கமல்ஹாசன் திரைப்படம்

ஒரு ஊதாப்பூ கண்  சிமிட்டுகிறது - மேதைகளின் சங்கமம்
 
நடிப்பு - கமல் , சுஜாதா , விஜயகுமார், வீராசாமி
இசை  - வீ .தட்சிணாமூர்த்தி
கதை   - புஷ்பா தங்கதுரை
இயக்கம் - எஸ் பி முத்துராமன்
கதை - தன் காதலிக்காக கொலை செய்து ஜெயிலுக்க்கு போகும் இளைஞன் , விடுதலை ஆகும்போது அவள் வேறு ஆணை மணந்து விட்டாள்... ஒரு கட்டத்தில் கணவனை விட்டுவிட்டு பழைய காதலனுடன் செல்ல முடிவு செய்கிறாள்... கிளைமேக்சில் ”பண்பாடு ”

காக்கப்படுகிறது

*****************************************************************************
தமிழின் டாப் 100 படங்களை பட்டியல் இட்டால் இந்த படம் அதில் இடம்பெறாது...  ஆனாலும் எழுத்தில் தனக்கென ஒரு பாணி வைத்து இருந்த புஷ்பா தங்கத்துரை , இளையராஜாவே சாமி என மரியாதையுடன் அழைத்த மேதை வி தட்சிணாமூர்த்தி , இன்னும் தன் பாணியில் சமரசம் செய்யாமல் நடித்து வரும் கமல் , கவியரசர் கண்ணதாசன் என்ற  நான்கு மேதைகள் ஒன்றிணைந்த அபூர்வ படம் என்ற வகையில் இந்த படம் பற்றி லேசாக பேசலாம்.

வாரப்பத்திரிக்கைகள் , தொடர்கதைகள் கொடிகட்டிப்பறந்த அந்த நாட்களில் சுஜாதா தன்னிகரற்ற ஸ்டாராக விளங்கினார்.. வித்தியாசமான நடை , புதுமையான கரு என மக்களை ஈர்த்தார்...கூடுதல் அட்ராக்‌ஷனாக வார்த்தை விளையாட்டுகள்..

உதாரணமாக டைப் அடித்தேன் என எழுத மாட்டார்..டைப்பினேன் என்பார்..அன்பளித்தேன், டயலினேன் என்றெல்லாம் எழுதுவார்...

அவன் படியில் இருந்து    ற

          ங்

                கி

                          னா

                                      ன்


என எழுதுவார்...

பழைய வார்த்தைகளை வேண்டுமென்றே பயன்படுத்துவார்... எனக்கு விருது வழங்கினார்கள்.. நான் தன்யனானேன் என்பார்.


இதை எல்லாம் விளையாட்டாக செய்தாரே தவிர இதுதான் தன் பலம் என நினைக்கவில்லை..

ஆனால் அப்போது இருந்த எழுத்தாளர்கள் பலர்., இதுபோலவே வார்த்தை விளையாட்டுகளில் ஈடுபட்டு சுஜாதா போல தாங்களும் எழுதுவதாக நினைத்துக் கொண்டனர்...

க்ளிஷேக்களை தவிர்க்க சுஜாதா முயன்றார்..ஆனால் இவர்களோ சுஜாதாவின் வார்த்தைகளையே க்ளிஷேக்கள் ஆக்கி விட்டார்கள்..கடைசிவரை இரண்டாம் தர எழுத்தாளர்க்ளாகவே இருந்தனர்...( இலக்கியம் சார்ந்து செயல்பட்டவர்க்ளை இங்கு சொல்லவில்லை.. நாம் பேசுபது வணிக / வெகு ஜன எழுத்தாளர்க்ளை ).

இதில் தமது அடையாளத்தை விட்டுக்கொடுக்காமல் எழுதியவர்களும் உண்டு,...உதாரணம் ராஜேஷ் குமார்...அதேபோல , புஷ்பா தங்கத்துரையும் , முற்றிலும் வேறுபட்ட தன் பாணியை என்றும் விட்டுக்கொடுக்கவில்லை...

கடைசிவரை (உண்மையான ) பிரம்மச்சாரியாக வாழ்ந்த அவர் , காமரச எழுத்தில் சிறந்து விளங்கினார்... அவரது முக்கியமான நாவல்களில் ஒன்றுதான் , ஒரு ஊதாப்பு கண் சிமிட்டுகிறது.. கதையில் கவர்ச்சிக்கான ஸ்கோப் அதிகம்.அப்போதைய கமலில் காதல் இளவரசன் இமேஜுக்கு பொருத்தமான கதை என்பதால் , இந்த கதையை படமாக்கி இருக்கிறார்கள்..

மர்ம நாவல்களுக்கே உரிய பரபரப்புடன் படம் ஆரம்பிக்கிறது... கமல் தான் சிறையில் இருந்து வருவதாக சொல்லி அதிர்ச்சி அளிக்கும்போது டைட்டில் ஓட ஆரம்பிக்கிறது...அவர் அப்பா உட்பட அனைவரும் அவரை வெறுக்கிறார்கள்... அவர் ஏன் சிறைக்கு சென்றார்..அவரை ஏன் வெறுக்கிறார்கள் என்ற ஃபிளாஷ்பேக் மெல்ல விரிகிறது..

ஊதாப்பூவாக கண் சிமிட்டி ஓர் இளைஞனின் வாழ்க்கையில் சூறாவளி ஏற்படுத்திய பெண்ணின் கதை...

”கற்புக்கு “ பங்கம் வராமல் முன்னாள் காதலனுடன் ஒரு நாள் மனைவியாக வாழ்வது, இன்னொரு பெண் கமலை மயக்க , புழுக்கத்தை காரணமாக சொல்லி , ஆடைகளை களைவது என அந்த கால கமல் ரசிகர்களுக்கு விருந்து படைத்து இருக்கிறார்கள்..

இப்படி எல்லாம் செய்து விட்டு மெசேஜ் சொல்லி பண்பாட்டை காப்பாற்றி விடுகிறார்கள்...

ஒரு கில்மா படத்தின் விளிம்பைத்தொட்டாலும் , இந்த படத்துக்கு ஒரு மரியாதையை தருவது தட்சிணாமூர்த்தியின் இசை...

கமலும் அவர் காதலியும் முதன் முதலாக பார்ப்பது , பார்வையால் காதலை வளர்ப்பது என ஒரு பத்து நிமிடத்துக்கு இசையாலேயே கதை சொல்லி இருப்பார்...அதுவும் கர்னாட்டிக் பாணியிலான இசையில்...சூப்பர்..

இவர் இளையராஜா உட்பட பலருக்கு குருவாக இருந்தவர்... ஜேசுதாஸ் இவரைப்பற்றி உயர்வாக பேசுவார்...கொஞ்ச நாள் சாமியாராக இருந்து விட்டு வந்தவராம்.. ப்லரும் இவரை சாமி என்றே அழைப்பார்கள்..

முறுக்கு  ,கை முறுக்கு என டீ கே கலாவின் அட்டகாசமான குரலில் ஒரு பாடல், ஆண்டவன் இல்லா உலகம் எது..ஆசைகள் இல்லா இதயம் எது என டீ எம் எஸ் குரலில் ஒரு பாடல்.. மேலும் கண்ணதாசன் வரிகளில் ஒரு எவர்க்ரீன் பாடல்

நல்ல மனம் வாழ்க 
நாடு போற்ற வாழ்க 
தேன் தமிழ் போல் வான் மழை போல் , 
சிறந்து என்றும் வாழ்க 

பூவுலக லட்சியங்கள்
பூப்போன்றே வாடும்
தெய்வசொர்க்க நிச்சயம்தான்
திருமணமாய் கூடும்.பொருத்தமென்றால் புது பொருத்தம்
பொருந்திவிட்ட ஜோடி
நான் புலவன் என்றால் 
பாடிடுவேன் கவிதை ஒரு கோடி 


மண வாழ்க்கை அமைவ்தற்கோ 
மனைவி வாய்க்க வேண்டும் 
குலமகளாய்க் கிடைப்பதற்கோ 
கொடுத்து வைக்க வேண்டும் 

நல்ல மனம் வாழ்க 
நாடு போற்ற வாழ்க 

அருமைகளும் பெருமைகளும் 
நிறைவதுதான் இன்பம் -நீ
அத்தனையும் பெற்றுவிட்டாய் 
ஆனந்தமாய் வாழ்க 

நல்ல மனம் வாழ்க 
நாடு போற்ற வாழ்க


இதை சிறப்பான படம் என சொல்ல முடியாது..ஆனால் நினைவுகூரத்தக்க படம்
         

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா