Saturday, August 31, 2013

தங்க மீன்கள் , இமயம், இலக்கியம், சாருவா ஜெயமோகனா- ரகளையாக நடந்த மினி சந்திப்பு


 நேற்று ( 31.08.2013 ) எதிர் பாராத திடீர் சந்திப்பு.   சாருவின் முக்கிய தளபதிகளை ஒன்றாக சந்தித்து பேசியது இனிய அனுபவம்.

சாருவை இலக்கிய நிகழ்ச்சிகளிலும் , வட்ட சந்திப்புகளிலும் , தனிப்பட்ட முறையிலும் சந்தித்து இருக்கிறேன். ஆனால் குடும்ப நிகழ்ச்சியில் சந்தித்தது இல்லை.

பின் நவீனத்துவம் , இலக்கியம் , இசை , சினிமா என வாழ்ந்து வரும் அவர் இது போன்ற நிகழ்ச்சிகளில் எப்படி நடந்து கொள்கிறார் என்று தெரிந்து கொள்ள ஆவலாக இருந்தது.

ஆனால்  அவரது இன்னொரு பரிமாணத்தை தெரிந்து கொண்டது மகிழ்ச்சிகரமான ஓர் அனுபவமாக அமைந்தது.

இலக்கியம் என்பதை தாண்டி அனைவரையும் சமமாக மதிக்கும் அவரது பண்பு வியக்க வைத்தது.

பல வி ஐ பிகள் , நெருங்கிய நண்பர்கள் வந்து இருந்தனர். அவர்களை எந்த அளவுக்கு கவனித்தாரோ அதே அளவுக்கு கவனிப்பை எல்லோருக்குமே கொடுத்தார் .

 நாங்கள் எல்லாம் பார்த்து பேசி விட்டு கிளம்ப்ப  ஆயத்தமாக இருந்தோம்.  நேரம் ஆகிவிட்டதால் , சாருவும் அவசரமாக கிளம்ப வேண்டி இருந்தது. அவரும் கிளம்ப்ப தயாராக இருந்தார்.

அப்போது கடைசி நேரத்தில் நண்பர் ராஜராஜேந்திரன் வந்து சேர்ந்தார் .  மாலை நான்கு கிளம்பி , டிராபிக்கில் சிக்கி, ஒன்பது மணிக்கு வந்தார். இந்த பிரச்சினைக்காகத்தான், டிரெயின் பிடித்து வாருங்கள் என கணேசன் அன்பு சொல்லி இருந்தார். ஆனால் , மற்றவர்கள் சொல்வதை கேட்காதே.. நீயே முடிவெடு என சார்த்தரோ வேறு யாரோ அவரிடம் சொன்னார்களாம்..அதன் அடிப்படையில் கஷ்டப்பட்டு பஸ்ஸிலேயே வந்து சேர்ந்தார்.

அப்படி கடைசி நேரத்தில் வந்த அவரையும் சாரு அன்பாக அழைத்து சென்று , மூன்றாம் மாடியில் இருக்கும் உணவு கூடத்துக்கு அழைத்து சென்றார்.

லேட் ஆச்சே என்று அருகாமை பகுதியில் இருப்பவர்கள் டென்ஷன் ஆனார்களே தவிர , அங்கிருந்து வெகு தூரம் செல்ல வேண்டிய சாரு உபசரிப்பை - ஒரு வி அய் பிக்கு தரும் வரவேற்பை- ராஜராஜேந்திரனுக்கு கொடுக்க தவறவில்லை.

நடிகரும் இயக்குனருமான பார்த்தீபன் , நெருங்கிய உயிர் நண்பர் அராத்து போன்றோருக்கும் மற்றவர்களுக்கும் இடையே எந்த பாரபட்சமும் காட்டாமல் - அதாவது காட்ட தெரியாமல்- இருந்த அவரை பார்த்து ஆச்சர்யமாக இருந்தது.
ஒரு நண்பரை அறிமுகப்படுத்துவது போல எங்களுக்கெல்லாம் பார்த்திபனை அறிமுகம் செய்து வைத்தார்.

இமயமலை பயண அனுபவங்கள் , கொஞ்சம் இலக்கியம். தங்க மீன்கள் சிறப்பு விமர்சனம் என ரகளையாக சந்திப்பு சென்றாலும் அதை எல்லாம் outshine செய்து விட்டார் இன்னொருவர்.

அவர்தான் அராத்துவின்  அடுத்த வாரிசு . குட்டிப்பையன்... செமையாக டிரைனிங் கொடுத்து வைத்து இருக்கிறார்.

உனக்கு பிடித்தது ஜெயமோகனா , சாருவா- எழுத்தாளர்கள் ஏன் சண்டை போட்டு கொள்கிறார்கள்... தமிழ் இலக்கியத்தின் எதிர்காலம் என்ன ., ஜெயமோகன் எழுத்து குறித்து உன் கருத்து என்ன போன்ற இலக்கிய கேள்விகளுக்கு அப்பாவின் இடுப்பில் தொற்றியபடி , மழலை மொழியில் அவன் கொடுக்கும் பதில்கள்.ம்ம்... சிரித்து சிரித்து வயிறு வலி வந்து விட்டது..

விடீயோ பேட்டி எடுக்கலாம் என நினைத்தேன்.. கண் திருஷ்டி போல ஏதேனும் ஆகி விடக்கூடும் என்ற பகுத்தறிவு சிந்தனையால் அதை கைவிட்டேன்.

அராத்துவின் சினிமா விமர்சனங்களை எழுத்தில் படிப்பதை விட, நேரடியாக ஆக்‌ஷன் காட்சிகளுடன் அவர் சொலவதை கேட்பது செம அனுபவம்.

டூயட் இல்லாமல் எடுத்து விட்டால் நம் ஆட்கள் நல்ல படம் என நினைத்து கொள்கிறார்கள் , வெளினாட்டுக்கு வேலைக்கு செல்வது போல 1000 ரூபாய் சம்பளத்துக்காக வெளியூருக்கு வேலை தேடி செல்லும் அபத்தம், சின்ன குழந்தையை  படிக்க சொல்வதுல் காட்டப்படும் செயற்கைத்தன்மை. ஓவர் ஆக்டிங் , யாழை தேடி அலைந்து லேப்டாப்பை பறிக்கும் காமெடி , இவ்வளவு கஷ்டப்பட்டு கடைசியில் கொடுக்கும் மெசேஜ் என சீன் பை சீனாக செம ஓட்டு ஓட்டினார்.  யாரும் குழந்தைகளை இந்த படத்துக்கு அழைத்து செல்லக்கூடாது. இது குழந்தைகளுக்கு உகந்ததல்ல என ஒரு மெசேஜ் கொடுத்தார்.

விரிவாக எழுதுவார் என நினைக்கிறேன்.

சாரு இனிமேல் சினிமா விமர்சனம் எழுதுவாரா என தெரியவில்லை..ஆனால் தங்க மீன்கள் போன்ற படங்களுக்கெல்லாம் எழுதுவதை விட அவர் எழுதாமல் இருப்பதே நல்லது என்று தோன்றியது.

இந்த மினி சந்திப்பு மாக்சிமம் மகிழ்ச்சி அளித்தது என்று சொன்னால் மிகை இல்லை...

Thursday, August 29, 2013

அகப்பாடு-4 சொப்பன சுந்தரியால் வந்த கிறக்கம்

‘பாப்பா போட்ட தாப்பா ’ என்று விதிவசத்தால்தான் அந்தப்படத்துக்குத் தலைப்பு இருந்திருக்கவேண்டும். சொப்பன சுந்தரியும் , ஜில்ஜில்ராணியும்  நடித்தபடம். சொப்பனசுந்தரி அந்தப்படத்தில் இயற்பெயரிலேயே  நடித்தார். 

. எனக்கு பொதுவாக கிளுகிளுப்பு படங்கள்  மீது விசேஷ ஈர்ப்பு இருந்த நாட்கள். கிளுகிளுப்பு வாழ்க்கையை நானும் அந்தரங்கமாகக் கனவுகண்டேன். மீண்டும் விஜயலட்சுமியில் திரையிட்டிருந்தார்கள். மாட்டினிக்கு டிக்கெட் எடுப்பதற்காக வரிசையில் நின்றுகொண்டிருந்தேன்.
முன்னால் நின்ற மனிதர் தலையில் துண்டைபோட்டிருந்தார். மனைவிக்கு தெரியாமல் சினிமா பார்ப்பவராக இருக்கும். இந்த மாதிரி திரையரங்குகளில் இந்தமாதிரி பிட்டு படங்களைப்பார்க்கவருபவர்கள் இரண்டுவகை. பிட்டு படம்  எதானாலும்  நாக்கை தொங்கப்போட்டுக்கொண்டு பார்த்துக்கொண்டே இருக்கக்கூடியவர்கள்.( என்னைப்போல )
 சினிமாவே பார்க்காமல் ஆட்டுக்கு குழையொடிக்கவோ வாழைக்குலை விற்கவோ வந்த இடத்தில் தவறிப்போய் சபலப்பட்டுவிடுபவர்கள். இவர் முதல்வகையாகத் தோன்றினார்.
பாட்டா உள்ளே பதமாக டிக்கெட் கிழித்து நிதானமாகக் கொடுத்துக்கொண்டிருந்தார். ரூபாய்நோட்டின் மதிப்பை அவர் உள்ளுணர்வாலேயே மதிப்பிட்டுக்கொண்டிருக்கிறார் என்று தோன்றியது. அப்போதுதான் நாகமணி ஓடிவருவதைப் பார்த்தேன். வேட்டியை தூக்கிக் கட்டியபடி லேசாக விந்தியவன்போல ஓடி வந்தான். ஆனால் என்னையும் தாண்டி அவன் சென்றபோதுதான் அவன் என்னைப்பார்க்கவரவில்லை என உணர்ந்தேன்.
‘லே நாகு…லே ‘
அவன் என்னைப்பார்த்தான். அப்போதும் அவன் என்னை அடையாளம் கண்டுகொள்ளவில்லை.
‘லே நாகு இஞ்சலே…லே’
நாகமணி சட்டென்று என்னை நோக்கி ஓடிவந்து என்னருகே நின்றான். மூச்சிரைத்தான்.
‘என்னலே?’
‘ஆஸ்டலுக்குப்போறேன்ல’
‘எதுக்கு ? இப்பம் உனக்கு சோலி இல்லியா?’
‘ நான் அடிச்சுப்போட்டேன்’
ஹா ஹா....
நான் சிரித்து விட்டேன் . எங்கள் அணியினருக்கு அடி வாங்கித்தான் பழக்கமே தவிர , யாரையும் அடித்ததில்லை.. ஆனால் அவனை அடித்தோம் இவனை அடித்தோம் என சும்மா ஊரில் சீன் போடுவோம். ங்கொய்யால , என்னிடமே சீன் போடுறானே..
எதற்கும் விசாரிப்போம்.
”யாரைடா அடிச்சே “ விசாரித்தேன்

“ கண் டாக்டர்டா..அவரைப் பார்க்க ஹாஸ்பிட்டல் போய் இருந்தேன். வெயிட் பண்ற நேரத்துல , பொழுதுபோக்க்குகாக நீ கொடுத்த சரோஜா தேவி புக் படிச்சுக்கிட்டு இருந்தேன். ஒரு கதை படிக்கும்போது என்னை அறியும்போது கண்ல தண்ணீ வற மாதிரி சிரிச்சுட்டேன் . ஹாஸ்பிடல்ல என்ன சிரிப்புனு கோபமா கேட்டு அடிச்சுட்டார்டா “ என்றான்.

சரோஜா தேவி புக் படித்து கண்ல தண்ணீ வந்துச்சா... ஒரு வேலை அடிபட்டதுல புத்தி கலங்கிருச்சா.
“ என்னலே..கண்லயா தண்ணீ வந்துச்சு?:”

“ அட..ஆமால...கண்லதான் தண்ணீ வந்துச்சு “

“ என் பேர சொன்னியால? என் ஜாதிக்கு ஒரு மரியாதை உண்டும்.. சொல்லி இருந்தா அடிச்சு இருக்க மாட்டார் “

அவன் அழுகை அதிகமானது/

“ சும்மா இருந்தாலும் ஒரு அடியோட விட்டு இருப்பாரு..உன் பேரு சொன்னதும்தான் செம கடுப்பு ஆகிட்டாரு... எட்டி எட்டி உதைச்சார்ல... ரத்தம் ரத்தமா கக்கினேன்ல..அதனால்தான் திரும்ப ஒரு அடிச்சுட்டேன்,,இப்ப என்னை கொல்ல துரத்திக்கிட்டு வர்ராணுங்கலே  “ அழுதான்.,

”அப்படி அந்த சரோஜா தேவியில என்ன கதைல படிச்ச? ” நான் கேட்டதும் ஒரு பக்கத்தை எடுத்து நீட்டினான் .. நான் படிக்கலானேன்.


ஒரு பெண் பாவ மன்னிப்பு கேட்டு சாமியாரிடம் வந்தாள்.
“ என்னமா பாவம் செஞ்ச?”
” என் காதலனை தே** **னே நு திட்டிட்டிட்டேன் “
“ என்னம்மா இப்படி செஞ்சுட்ட,,ஒரு பொண்ணு இப்படி கெட்ட வார்த்தை பேசலாமா..இதெல்லாம் கடவுளுக்கு பிடிக்காது.. நான் ஒரு போதும் இப்படி சொன்னது இல்லை.. சரி..ஏன் திட்டுன?”

  “ நானும் அவரும், இப்ப நீங்களும் தனியா இருக்க்ற மாதிரி, தனியா இருந்தோம் “
 “ சரி “
“ இதே சேலைதான் , அப்பவும் கட்டி இருந்தேன்...அப்ப தற்செயலா அது இப்படி நழுவிடுச்சு “

சொல்லிக்கொண்டே நழுவ விட்டாள்.

”  அவன் டிரசை எடுத்து கொடுக்காம, என்னையே உத்து பார்த்தான் “

“ சரிமா..அதுக்காக திட்ட்றது தப்பு”
“ இல்லை சாமி...அவன் பார்த்தது மட்டும் இல்லை.. என்னை லேசா தொட்டான் “

சாமியார் அருகில் வந்து தொட்டார்.
“ இப்படி தொட்டு இருப்பான்...இதுக்கு போய் திட்டலாமா..தப்புமா “
“இல்லை சாமி...தொட்டது மட்டும் இல்லை....என் ஆடைகளை எல்லாம் அவிழிக்க ஆரம்பிச்சான் “

சாமியார் டென்ஷன் ஆகி , அவள் ஆடைகளை அவிழ்த்தார்.

“ இப்படி அவுத்து இருப்பான்...பிடிக்கலைனா பிடிக்லைனு சொல்ல வேண்டியதுதானே ...ஏன் திட்டின?”

“ அதோட நிறுத்தி இருந்தா பரவா இல்லை... அவனும் தன் ஆடைகளை அவுத்துட்டான் “

சாமியார் டென்ஷன் ஆகி தன் ஆடைகளை களைந்தார்... “ இதுக்காக அவனை திட்டினியா..தப்புமா “ என்றார்.

“ இப்படி நிறுத்தி இருந்தா பரவா இல்லையே... என்னோட .ம்ம்ம்... மேட்டர் பண்ணிட்டான் “
சாமியாருக்கு கடும் கோபம். அவளை அருகில் வர செய்து செய்து முடித்தார்.”
” பிடிக்கலைனா நிறுத்த வேண்டியதுதானே...இப்ப நாம் செஞ்ச மாதிரி செஞ்சு இருக்கான்,..அதுக்கு போய் திட்டலாமா?”

“ இல்லை சாமி...இப்படி செஞ்சு முடிச்சுட்டு அவன் ஒண்ணு சொன்னான்..அதனால்தான் திட்டினேன்...”

“ அப்படி என்னமா சொன்னான்?”

“ அவனுக்கு எய்ட்ஸ் இருப்பதா சொன்னான்...அதனால்தான் திட்டினேன் ..தப்பா சாமி?”

சாமியார் அலறினார்      “ தே**     **னே”


படித்து முடித்து விழுந்து விழுந்து சிரிக்கலானேன்.

“டேய்,..என்னை கொல்ல வர்ராணுங்க..சிரிக்கிறியா? “ கடுப்பானான் அவன்...

“ சரி,,,வால  ...உன்னை எப்படியாவது காப்பத்துடுறேன் “ என்றேன்.

“ சரி ..வால...இந்தால சாடிருவோம் “

“ சாடுறதுனா என்னலே?”
” சாடுறதுனா ஓடுறதுலே”
“ நானும் இந்த ஊர்தான்...இந்த மாதிரியெல்லாம் சொன்னதே இல்லை... நீ சும்மா மலையாளத்துல பேசிட்டு , வட்டார பாஷைனு ஊரை ஏமாத்துனா சவட்டிபுடுவேன்ல”

” இப்ப இதுவால முக்கியம்./ சாடுறத , சாடுறதுனு சொல்லலாம்..தப்பிக்கிறதுனும் சொல்லலாம்.. நீ சொல்ற மாதிரியும் சொல்லலாம்.. இப்ப வால...இந்தால சாடிருவோம்” 

இருவரும் உயிரை கையில் பிடித்து கொண்டு ஓடினோம்.

பின்னால் துரத்தி வரும் சத்தம் கேட்டது

எங்களைப்பார்த்துவிட்டான். ‘லே அந்நா போறான்லே…அவந்தாம்லே….’
வேறு குரல்கள் மெல்ல கேட்டன.
‘கூட இன்னொருத்தனும் இருக்கான்லே

கண் மண் தெரியாமல் ஓடினோம்.

ஒரு வீடு திறந்து இருந்தது.. ஒரு வயதாவனர் மட்டும் இருந்தார். 

“ அய்யா...எங்களை சில ரவுடிப்பசங்க துறத்திகிட்டு வராங்க..கொஞ்சம் ஒளிஞ்சுக்குறோம் “ 

அவரை கெஞ்சினேன்.

“ ம்ம்..சரி வாங்க”
உள்ளே அழைத்து சென்று ஓர் அறையில் வைத்து பூட்டினார்.

இருவரும் மூச்சு வாங்கியபடி அமர்ந்தோம்.

“ அங்கே பார்ல... “அவன் கத்தினான்.

“ என்னல?”
” அந்த போட்டோவ பார்ல..அவர் தான் கண் டாக்டர் ,.. அவர் வீட்டுக்கே வந்துட்டோம்ல”

நான் பதறிப்போய் கதவை திறக்க எத்தனித்தேன் . அதற்குள் கண் டாக்டர் வீட்டுக்குள் வந்து விட்டார்.
” அப்பா..ரெண்டு பொறுக்கிங்க நம்ம வீட்டு பக்கம் வந்தாங்களா?”
அவர் கேட்க வய்தானவர் சொன்னார் “ ஆமாம்பா... முகத்தை பார்த்தாலே சந்தேகமா இருந்துச்சு... அந்த ரூம்ல பூட்டி வச்சு இருக்கேன் “

கண் டாக்டர் கோபமாக சொன்னார் “ என்னை அடிச்சவனை கூட மன்னிச்சுடுவேன்... கூட்டுக்கிட்டு ஓடி வந்தானே...அவனை இந்த பெல்ட் பிய்ற வரை அடிக்க போறேன்...என்ன ஓட்டம்..ராஸ்கல் “

 நான் நடுங்கியவாறு ஜன்னலை பார்த்தேன். பெல்ட்டை கழட்டிக்கொண்டு இருந்தார். முகத்தில் கோபம் பெருகி கொப்பளித்துக்கொண்டிருந்தது . எனக்கு கண்கள் கூசி கண்ணீர் வழிய ஆரம்பித்தது.

Wednesday, August 28, 2013

சாருவின் இமயமலை பயணமும் ஜெயமோகனின் பரங்கிமலை பயணமும்- நிர்மலுடன் ஓர் உரையாடல்


உயிரை பணயம் வைத்து சாரு நிவேதிதாவும் அவர் அணியினரும் இமயமலை பயணம் முடித்து வந்தது பரபரப்பாக பேசப்பட்டது. காரணம் இப்போதுதான் ஒரு பேரழிவை உத்தர்கண்ட்  சந்தித்த நிலையில் , இந்த பயணம் ரத்து ஆகி விடும் என்றே பலர் நினைத்தார்கள்.

ஆனால் பயணம் திட்டமிட்டபடி சிறப்பாக நடந்தது.

எழுத்தாளர் ஜெயமோகன் பரங்கிமலைக்கு ஒரு நாள் பிக்னிக் போனாலே அது குறித்து ஒன்பது நாள் கட்டுரை எழுதுவார். மலைகளின் வழியே ஆன்மீக தரிசனம் என்பது போல எழுதிக் குவிப்பார். ஆனால் இத்தனை பெரிய பயணம் மேற்கொண்டும் சாரு ஸ்பாட் ரிப்போர்ட் ஏன் கொடுக்கவில்லை என சிலர் கேட்டவண்ணம் இருந்தனர்.

சாரு எது செய்தாலும் தானும் செய்து பார்க்க முனையும் ஜெமோ தானும் இமயமலை போவதாக அறிவித்துள்ளார். கண்டிப்பாக பக்கம் பக்கமாக எழுதுவார்.

இது குறித்து நண்பர் நிர்மலிடம் உரையாடியதில் இருந்து...


*********************************************************8

 நிர்மல் :  அகப்பாடுனு தொடர் எழுதறீகளே...
அது என்ன அகப்பாடு
புரியலியே


பிச்சை:

உங்க தலைவர் ( ஹா ஹா ) புறப்பாடுனு அர்த்தம் இல்லாம ஒரு தொடர் எழுதிக்கிட்டு இருக்கார்..அவரை விட கேவலமா , ஆபாசமா  எழுதலாம்னு டிரை பண்றேன்..முடியல அகதரிசனம் எனும் அக்கப்போர்ஒ, ஒகே
அது சரி
புறப்பாடு என்றால் இமய மலை புறப்பாடாஆமா,,,அவர் அங்கேயே செட்டில் ஆனா நல்லதும்ம்ம்


ஜெ மோ ஒரு நாள் டூர் போனா ஒம்பது நாள் எழுதுவார்


சாருவின் ப்யணம் & ஜெமோ பயணம். பின் நவீனத்துவம் & நவீனத்துவம்.
இந்த ப்யணம் எனபதை பிரதி ( Text) என வைத்தால். எப்படியிருக்கும்


பிரதியை ரசிப்பவனுக்கும், பிரதியை நோட்ஸ் எடுக்கும் மேடைப்பேச்சாளருக்கும் இருக்கும் வித்தியாசம்தான்


யெஸ்
author and writer


‘இமயமலை போய் அதன் வாழ்க்கையை வாழ்பவன் ஒரு விதம்,,அங்கும் போய் நோட்ஸ் எடுத்து ஸ்டேட்டஸ் போடுபவன் ஒரு விதம்’


yes

அதாவது சாரு இமயமலை போனால் , அங்கு சாரு மறைந்து இமயமலையாகவே ஆகி விடுகிறார். ஜெமோ போனால் , அங்கு மலை இருப்பதில்லை...ஜெமோதான் இருப்பார்


யெஸ்
Author is dead, in case of charuஎக்சாக்ட்லி
உதாரணமாக நீங்கள் சென்னை வந்தால் , சென்னை டிராபிக் சென்னை உணவகம் என சென்ன்னை உங்களுக்குள் நிகழவ்தை நீங்கள் அனுமதிக்க வேண்டும்.... உங்க ஊர் வாழ்வையே இங்கு வாழ முனைந்தால் , சென்னை பய்ணமே தேவை இல்லையே


யெஸ்
இங்குள்ள சிலர் ஐரோப்போ சுற்றூலா செல்லுவார்கள். 10 நாட்களில் 12 நாடுகள் செல்வார்கள்
எப்படி அது முடிகிறது என தெரியவில்லை
சென்னை டிராபிக் கஷ்டம்தான் ..இல்லை என சொல்லவில்லை..அதற்காக ஒரு ஸ்டார் ஹோட்டலில் ரூம் போட்டு, ஸ்டேட்டஸ் போடுவது , சென்னை வந்ததாகவே கருதப்படாது


யெஸ்
கரெக்ட்


ஒரு விமானம் பிடித்து இமயமலையின் ஒரு பாதுகாப்பான இடதுக்கு போய் அமர்ந்து , இமயத்தின் வழியே என தான் படித்ததை எழுதுவார்
ஆனால் சாரு , இமயமலை வாழ்வை வாழ்ந்து விட்டு வந்து இருக்கிறார்


யெஸ்


என்றாவது ஒரு நாவலில் அது வீரியத்துடன் வெளிவரும்.. அதாவது அவர் பயணம் , நம் ஒவ்வொருவரின் அனுபவம் ஆகி விடும்..ஆனால் ஜெமோவை பொருத்தவரை , மற்றவர்களின் அனுபவங்கள்தான் அவர் பயணமாக இருக்கும்


இல்லை அனுமானங்கள்

ஆமா
ஒரு உணவை சாப்பிடும்போதே அதை ரசித்து செய்தால்தான் முழுமையாக ரசிக்க முடியும்... பயணத்தின்போது நோட்ஸ் எடுத்து ஸ்பாட் ரிப்போர்ட் கொடுப்பதெல்லாம் இலக்கியவாதி செய்யும் வேலை அல்ல
பயணத்தை ரசித்து உள்வாங்கி , அந்த அனுபவத்தை வாசகனுக்கு கடத்த வேண்டும் என்றால் பயணத்தை முழுமையாக செய்ய வேண்டும்’

இந்த கவிதையை பாருங்கள்..இந்த அளவு உணர்வுகளை வார்த்தைகளால் வெளிப்படுத்த எந்த அளவுக்கு தவம் செய்து இருக்க வேண்டும் என யோசியுங்கள்..அறிவு ஜீவித்தனம் ஒருக்காலும் இந்த உணர்வை அனுபவிக்க முடியாது//
எத்தனை நாட்கள் கடந்திருக்கும் என்ற
கணக்கு தப்பிவிட்டது
மறிமான் கூட்டங்கள் அலை அலையாய் நிழல் 
ரூபமென பாய்ந்து சென்று கொண்டு இருக்கின்றன
பனிச்சிகரங்களில் லயமாகி நிற்கிறேன்
நிசப்தம்
வார்த்தைகள் அற்றுப்போன ஏதுமற்ற
சூன்யம்
கருந்துளைக் கணம்
புறச்சூழலின் மிதக்கும் நுரைத்தன்மையிலிருந்து
விலகிவிடத் துடிக்கிறேன்
இந்த வாழ்வின் அத்தனை வார்த்தைகளையும்
தள்ளிவிட்டு இதோ இங்கே மண்டியிட்டு
நிற்கிறேன் உன்னை நேசித்தபடி
இந்த கணத்தில் சுவாசமும் உறைந்து’
போகுமோ
‘சொல்
- சீரோ டிகிரி

Tuesday, August 27, 2013

அகப்பாடு-3 அகதரிசனம் எனும் அக்கப்போர்


 என் பெயர் மா****  .  வயது 22. நான் பஜார் குறுக்கு சந்தில் இருக்கும் ஒரு சிற்றறையில் தங்கி இருக்கிறேன். அதற்கு வாடகை 3000 ரூபாய். சிற்றறைக்கு 3000 அதிகம் என நினைப்பீர்கள். ஆனால் அந்த ஓனரின் மனைவியை பார்த்தால் உங்கள் நினைப்பை மாற்று கொள்வீர்கள். ஆம் அந்த அளவுக்கு பேரழ்கி. அமலா பால், காஜல் , நஸ்ரியா உட்பட அனைவர் அழகையின் சேர்த்து ஓர் அழகை உருவாக்கினாலும் அப்படி ஓர் அழகை படைப்பது அரிது. அவள் பெயர் மலையரசி...ஆனால் அந்த பெயர் அவளுக்கு பொருத்தமாக இல்லை என்பது என் தாழ்மையான கருத்து. அவளுக்கு நான் வைத்துள்ள பெயர் மு...

இந்த நேரத்தில் தட தட என கதவு தட்டப்பட்டது.

அடச்சே...முக்கிமான நேரத்தில் யார் இது.. இங்கிதம் இல்லாமல் கதவை தட்டுவது எந்த நாய் என பார்ப்பதற்காக கதவை திறந்தால் , வெளியே அசோக் நின்று கொண்டு இருந்தான்.

அந்த அறைக்கு வாடகை கொடுப்பவனே அவன் தான். வேறு போக்கிடம் இன்றி ப்ளாட்ஃபாரத்தில் தங்கிகொண்டு இருந்த என்னை\ இங்கே தங்க வைத்து இருக்கிறான் என்றால் அதற்கு காரணம் என் அறிவுக்கு அவன் கொடுக்கும் மரியாதை.

அவன் என் அறிவை எப்படி உணர்ந்து கொண்டான் என்பது ஒரு சுவையான வரலாறு.

ப்ளாட்ஃபார்மில் இருந்து துரத்தி அடிக்கப்பட்டு , சுற்றிக்கொண்டு இருந்த காலம். மழைக்கு பாதுகாப்பாக அசோக்கின் அறை முன்பு ஒண்டி கொண்டு இருந்தேன்.

 நேரத்தை வீணாக்காமல் , ஒரு பின் அடிக்கப்பட்ட மஞ்சள் பத்திரிக்கையை (ப்ளாட்ஃபாரத்தில் வாங்கியது ) படிக்க ஆரம்பித்தேன்.

அப்போது தன் அறைக்கு வந்த அசோக்  என்னை வினோதமாக பார்த்தான். அடாத மழையிலும் விடாது படிக்கும் என் ஆர்வம் அவனை கவர்ந்து இருக்க வேண்டும்.

அசோக் ஒரு பீடி பற்றவைத்துக்கொண்டான். புகையை மூக்குவழியாக ஆசுவாசமாக விட்டபடி ”நீ என்னவாக்கும் மக்கா இருந்து படிக்கே?’ என்றான்.
நான் ‘சும்மா…’ என்றேன்.
‘நேரம்போக்குக்காலே?’
‘இல்ல…இது அறிவாக்கும்’
அவன் என்னை ஓரமாகப் பார்த்து ‘அறிவுண்ணாக்க?’ என்றான்
‘அறிவுண்ணா…இந்த இது இருக்குல்லா…’
‘என்னல வச்சு சவிட்டுதே? என்னல அறிவு சொறிவு?’

ங்கொய்யால....  ஊர்ல எல்லோரும் என்னை அறிவு கெட்ட நாயேனு திட்டுவார்கள்... ஆனால் இவனோ அறிவு என்றால் என்னவென்றே தெரியாத நாயாக இருக்கிறானே..
இதைப் பார்தத்ததும் எனக்கு ஆறுதலாக இருந்தது.. நம்மை விட முட்டாள்கள் இருக்கிறார்கள் என்ற அகதரிசனம் மகிழ்ச்சியாக இருந்தது. 

“ அறிவு அப்படீனா , ஒரு விஷ்யத்தை எப்படி சமாளிக்கிறோம்னு அப்படீங்கறதுதான்.. எப்படி பதிலடி கொடுக்குறோம்..எப்படி பிரச்சனையை தீர்க்கிறோம் அப்படினு பல விஷ்யம் இருக்கு. உனக்கு உதாரணம் மூலம் அறிவை விளக்குறேன்.

     ஒரு பெண் ரத்த வங்கிக்கு ரத்த தானம் செய்ய போய்க்கொண்டு இருந்தாள். ல்ஃப்ட்டில் ஏறும்போது ஒரு ஆள் மீது மோதி சாரி என்றாள். அவன் : பரவாயில்லை... எங்கே அவசரமா போறீங்கஅவள் : ரத்த வங்கிக்கு போறேன் . ஒரு முறை ரத்தம் கொடுத்தா 100 ரூபாய் கொடுப்பாங்க
அவன் : ஹா ஹா...   அய்யோ அய்யோ.. 100 ரூபாயா.. நான் விந்து வங்கிக்கு போறேன். ஒரு முறை விந்து தானம் பண்ணா 1000 ரூபாய் கொடுப்பாங்க.
இதை கேட்டதும் அவள் கோபமாக வீட்டுக்கு போய் விட்டாள். 
அடுத்த நாள், அதே லிஃப்ட்டில் அவன் மீது மோதினாள்..சாரி என்றாள்
அவன் : அட.. நீங்களா? நேத்துதானே ரத்த தானம் செஞ்சீங்க..இன்னிக்கு கொடுக்க முடியாதே.அவளால் வாய் திறக்க முடியவில்லை.  வாயை மூடியவாறு , ஒரு பேப்பரில் எழுதிக்காட்டினாள்“ நானும் விந்து தானம் செய்யத்தான் வந்து இருக்கிறேன் “


பார்த்தாயா...அந்த பெண் எப்படி பதிலடி கொடுத்தாள்..இதுதான் அறிவு என்றேன்.

அசோக் என்னே அறிவு என வியந்து, தன் அறையிலேயே என்னை தங்க வைத்து விட்டான். 

எனவே அவன் இங்கிதம் இல்லாமல் கதவை திட்டினாலும் கோபம் வரவில்லை. அல்லது கோபத்தை காட்ட முடியவில்லை
” என்னடா இவ்வளவு அவசரம் ?” என்றேன்.

” உனக்கு விபரமே தெரியாதா.. நம் கல்லூரி நடத்திய சிறுகதை போட்டியில உனக்குதாம்ல முதல் பரிசு கெடச்சு இருக்கு “ என்றான்.

எனக்கு நம்பவே முடியவில்லை.

சஸ்பென்ஸ், ஆன்மீகம், செண்டிமெண்ட் ,  பாலுணர்வு என எல்லாம் கலந்த கதை எழுத வேண்டும் என்பது போட்டியின் விதி. பலரும் பக்கம் பக்கமாக எழுதினார்கள்.

எனக்கு எதுவும் தோன்றவில்லை. கடைசியில் ஒரு வரியில் கதை எழுதி அனுப்பினேன்.

“ கடவுளே.. நான் கர்ப்பம் “ அழகிய பெண் கத்தினாள். 

இதுதான் நான் எழுதிய கதை.

 நடுவர்கள் கதை புரியாமல் என்னை கூப்பிட்டு அனுப்பினார்கள்.

“ என்னலே கதை இது..ஒண்ணும் புரியல..விதிகள் ஒண்ணையும் பூர்த்து செய்யல..சவட்டிப்புடுவேன் சவட்டி” என்றார் மூத்த நடுவர்.

 நான் என் அறிவை நம்புபவன் .விளக்கினேன்.

” நடுவர்களே...என் கதையில் பிழையில்லை.

பாருங்க... கடவுளே- இதில் ஆன்மீகம் இருக்கு
                      கர்ப்பம் - செண்டிமெண்ட்
                     அழகிய பெண் - பாலுணர்வு

எப்பூடி...என்றேன்.. எல்லோரும் கைதட்டினார்கள்..ஆனால் மூத்த நடுவர் விடவில்லை.

“ சஸ்பென்ஸ் எங்கேலே “ என்றார்.

”அந்த கர்ப்பத்துக்கு காரணம் யார்.,.அதுதான் சஸ்பென்ஸ் ” என்றேன் .

அந்த நடுவர் மூர்ச்சை அடைந்தார்.

அந்த கதைக்காக பரிசு...எனக்கு மகிழ்ச்சியில் பேச்சு வரவில்லை.

“ உன்னை என் கிராமத்துக்கு கூட்டி போய் என் வீட்ல விருந்து கொடுக்கறேன்ல...வாலே :” என்றான் அசோக்.
யார் சாப்பாட்டுக்கு கூப்பிட்டாலும் நான் நாக்கை தொங்க போட்டுக்கொண்டு போய் விடுவது வழக்கம்.

ஆனால் கொஞ்சம் பிகு செய்ய விரும்பினேன்.
“ நானெல்லாம் ரொம்ப ஆச்சரமாக்கும்,, வேண்டாம்ல “ என்றேன்.
”அதெல்லாம் பார்த்துக்கிடலாம் ” என்று சொல்லி அழைத்து சென்றான்.

கிராமங்களுக்கே உரிய அழகிய வீடு. எல்லோரும் என்னை ஏமான் என சொல்லி அழைப்பார்கள் என எதிர்பார்த்தேன். ஆனால் அப்படி எல்லாம் இல்லாமல் சாதாரணமாகத்தான் வரவேற்றார்கள்.

வெள்ளித்தட்டில் சாதம் பரிமாற முனைந்தார்கள்.

பதறிப்போய் தடுத்தேன்.

” நானெல்லாம் ரொம்ப ஆச்சரமாக்கும்.. வாழை இலைலதான் சாப்பிடுவேன் “ என்று கறாராக சொன்னேன்.
“ தம்பி..இது புது தட்டுப்பா,...உனக்காக வாங்கினோன் “ அசோக்கின் அப்பா கெஞ்சி பார்த்தார்.

இல்லை..ஒப்புக்கொள்ளாதே..என் அறிவு எச்சரித்தது..
“முடியாது... வாழை இலைதான் “ அடம் பிடித்தேன்.

கடைசியில் எங்கிருந்தோ வாழை இலை கொண்டு வந்து பரிமாறினார்கள்.

கொஞ்சம் பழைய இலை மாதிரி இருந்தது..ம்ம்.. பரவாயில்லை.. பசி ருசி அறியாது என்பார்கள்... ஆனால் சுவை ஒரு மாதிரி இருந்ததை நான் கவனிக்க தவறவில்லை.

ஒரு வழியாக சாப்பிட்டு முடித்தேன்.

” அம்மா...அசோக் சாப்பிட்டுட்டான்..இலையை கழுவி வீட்ல வைங்க “ என்றான் அசோக்.

திடுக்கிட்டேன்.

“ இலைய கழுவி வைக்க போறியா...என்னடா சொல்றா? “  அழுகை கலந்த குரலில் கேட்டேன். 

” ஆமாம்ல... எங்க கிராமத்துல இலை கிடைக்காது...ரொம்ப நாள் முன்னாடி டவுன்ல இந்த இலை வாங்கிட்டு வந்து வச்சு இருக்கோம்.. நாய்களுக்கு, பன்றிகளுக்கு இதில் சாப்பாடு போடுவோம்.. சாப்ப்பிட்டதும் கழுவி வச்சுறுவோம்..  முதல் முறையா ஒரு மனிதன் சாப்பிட்டு இருக்கான்.,. இபப்டி ஒரு சாப்பாட்டை சாப்பிட்டு இருக்கியால “ என்றான் 

’இல்ல’ என்றேன் கண்ணீருடன்.
சிலகணங்கள் அமைதி. ‘அறிவாக்கும்’ என்றான் அசோக்

அகப்பாடு-2 அமலா பாலும் , அக தரிசனமும்

  அமலா பால் படத்தை பார்த்து ,  தினம்தோறும் என்று சொல்ல முடியாவிட்டாலும் வாரம் ஒரு முறையாவது , அல்லது மாதம் இருமுறையாவது , அல்லது எப்போதெல்லாம் மூடு வருகிறதோ அப்போதெல்லாம்  , ஆசைதீர ரசிப்பது என் வழக்கம். எனக்கு அருமை மூலம் உள்ளொளி கிடைக்க அமலா பால் காரணமாவார் என நான் நினைத்ததே இல்லை.

ஒரு நாள் என் அறைக்கு வந்த நண்பன் அருமை , பால் தனக்கு பிடிக்கவே பிடிக்காது என்று சொன்னது அதிர்ச்சி அளித்தது.  அவனை ஏன் வர சொன்னேன் என இங்கே சொல்லியாக வேண்டும்.

தீபாவளிக்கு என்னை வர சொல்லி ரொம்ப நாட்களாகவே கேட்டு கொண்டு இருந்தான். ஏமான் , எங்க வீட்டுக்கெல்லாம் வர மாட்டீங்களா  என சோகத்துடன் அவன் கேட்பதை பார்த்தால் பாவமாக இருக்கவே ஒப்புக்கொண்டேன்.அதற்கு காரணம் நல்லெண்ணம் மட்டும் அல்ல. மாசக்கடைசி... கையில் காசு இல்லை. எனவே எங்காவது விருந்துக்கு போனால் ரெண்டு நாள் சாப்பாடு மிச்சம் ஆகுமே என்பதுதான் முக்கிய காரணம்.

பக்கத்தில்தான் வீடு. அவன் பைக்கிலேயே சென்றோம். பெட்ரோல் அவன் செலவு என்பதை சொல்ல தேவையில்லை.

மிகவும் வசதி குறைவான வீடு.. ஆனால் நான் இருக்கும் பிளாட்ப்பாரத்தை விட நன்றாகத்தான் இருந்தது. மதிய வேளை. பசித்தது.

என் முகத்தை பார்த்தே நான் ஆச்சார சீலன் என்பதை அவன் அம்மா புரிந்து கொண்டு விட்டார்.

“ நாங்க தினமும் நான் வெஜ்தான் சாப்பிடுவது...உங்களுக்கு எப்படி ? “ என்றார்.

பதறிவிட்டேன்.

” நாங்க எல்லாம் சுத்த ஆச்சாரம்...ஆம்லெட் சாப்பிடுவது என்றாலும், வெங்காயம் சேர்க்க மாட்டேன். அந்த அளவுக்கு ஆச்சாரம். ரத்த பொறியல் , குடல், கிட்னி, மீன் வறுவல் என என்ன வேண்டுமானாலும் சமையுங்கள்..ஆனால் வெங்காயம் வேண்டாம். ஆச்சாரம், அனுஷ்டானம் முக்கியம் “ என்றேன்.

என் ஆச்சாரத்தை பார்த்து வியந்து போனார்கள்.

தீபாவளி ஒரு நாள்தான்  என்றாலும், மூன்று நாள் தங்கி மூன்று வேளையும் சாப்பிட்டு அவர்களே கெஞ்சி கேட்ட பின் தான் வீட்டை விட்டு கிளம்பினேன்.

அப்படி சாப்பாடு போட்ட அவனுக்கு ஒரு நாளாவது ஒரு ட்ரீட் கொடுக்கலாம் என்றுதான் அறைக்கு வர சொன்னேன்.

வந்தவன் அறையெங்கும் ஒட்டப்பட்டு இருந்த அமலா பால் படங்களை பார்த்து கொண்டு இருந்தான்.
“ என்னடா ,அப்படி பார்க்குற...டீ ஏதாவது சாப்பிட்றியா ?” என்றேன் அவன் அதை மறுப்பான் என்ற நம்பிக்கையில்.

“ எனக்கு பால் பிடிக்காதுடா “ என்றான்.

திடுக்கிட்டேன். அமலா பாலை பிடிக்காதவன் ஒருவன் இருக்க முடியும் என்பதே ஒரு பெரிய அக விழிப்பை ஏற்படுத்தியது போல இருந்தது.

” ஏண்டா “ என்றேன் பரிதாபமாக.

பாலு மாட்டுக்க சலமாக்கும்’ என்றான். 
” அப்படீனா ?” விழித்தேன்.
அவன் அமலா பாலை சொல்லவில்லை.. பசும்பாலை சொல்கிறான் என்பது புரிந்தது... ஆனால் முழுமையாக புரியவில்லை.
‘பாலு பசுவுக்க கண்ணீராக்கும்’ என்று விளக்கினான்
அவன் விளக்கம் இன்னும் குழப்பியது.
”என்னதாண்டா சொல்ற .” என்றேன் .
’ பாலைக்குடிச்சா மலங்கூளியம்மையும் குளிகன்சாமியும் சபிச்சுப்போடும்’

வெட்கம் பார்க்காமல் அவன் காலிலேயே விழுந்து விட்டேன்.

“ டேய் ..சொல்றதை தமிழில் சொல்றா... “ என்றேன்.

அவன் மனம் இரங்கி தமிழில் சொன்னான்

“ நாம் பால் குடிப்பதாக நினைக்கிறோம்..உண்மையில் நாம் குடிப்பது  சிறு நீரைத்தான்”  என்றான் .

வாந்தி வருவது போல இருந்தது..

” என்னடா சொல்றா “ அதிர்ச்சியுடன் கேட்டேன்.

அங்கே பார் என காட்டினான்.,

மொண்டி என்ற நாட்டு பசு மேய்ந்து கொண்டு இருந்தது.அதன் பாலைத்தான் நான் வாங்கி சாப்பிட்டு வருகிறேன்.

“ அதில் என்னடா இருக்கு ?” என்றேன்.

“ அது என்ன தின்னுது பார்...கண்ட குப்பைகள்.. புல்..அந்த புல்லில்தானே நாம் ஒண்ணுக்கு அடிக்கிறோம்..அதை எப்படி தின்னுது பார். உவ்வே...இது கொடுக்கும் பாலைத்தான் நாம் குடிக்கிறோம் “ என்றான்.

எனக்கு அக தரிசனம் கிடைத்தது போல இருந்தது.

இத்தனை நாள் பசு பால் கொடுக்கும் என்பதை தெரிந்து வைத்து இருந்தேன்..அது என்ன சாப்பிடும் என்பது தெரியாமல் போயிற்றே.

மிகவும் துக்கமாக இருந்தது.

சட் என முடிவு எடுத்து , அந்த மொண்டியை இழுத்து வந்து என் அறையின் முன் புறம் கட்டினேன்..இரும்பு வேலியை பூட்டினேன்.

” அருமை...இன்னிக்கு ஃபுல்லா இதை இங்கே அடைச்சு வச்சு , முழுக்க முழுக்க பால் பொருட்க்ளை மட்டுமே இதுக்கு கொடுக்கப்போறேன். நாளை காலை இது கொடுக்கும் பால் , உண்மையான பால்..அதில் உனக்கு காஃபி போட்டு தந்தால்தான் என் மனம் ஆறும் “ உணர்ச்சிகரமாக பேசியை என்னை பார்த்து அருமை ஆனந்த கண்ணீர் விட்டான்.

வெண்ணெய். நெய், பால் என மொண்டிக்கு கொடுத்தேன்..அதனால் சாப்பிடமுடியவில்லை. வலுக்கட்டாயமாக ஊட்டினேன். அதன் கண்ணீர் என் மனதை மாற்றவில்லை. இனி குப்பையை தின்று அது தரும் பால் எனக்கு தேவையில்லை. அதன் வாயில் புனலை வைத்து பாலை ஊற்றினேன். இரவு முழுக்க அது கண்ணீர் விட்டபடி இருந்தது.


மறுநாள் காலை நான் கண்விழித்ததே அருமை  சொன்ன செய்தியைக் கேட்டுத்தான். பதறியடித்து ஓடியபோதே நான் அழுதுகொண்டிருந்தேன். அறையின் முன்பக்கம் சிமிண்ட் குப்பைத்தொட்டி மீது மிதித்து ஏறி மறுபக்கம் குதிக்கமுயன்ற மொண்டி, இரும்பு வேலிகளில் ஒன்றில் கழுவேறி அமர்ந்திருந்தது.Sunday, August 25, 2013

அகப்பாடு-1 சீன் படம் வாயிலாக ஞான ரகசியம்

” பிட் படம் பார்க்கணுனு அலைஞ்சியே,, இமாலாயா தியேட்டர்ல கன்னிப்பெண்ணின் காம வெறி போட்டு இருக்காய்ங்க ,, வறீயாடா நாயே “  ஜேம்ஸ் இப்படி கேட்டதுமே எனக்கு கொட்டி விட்டது  , மேலும் பொங்கி வடிந்து விட்டது கோபம். அவன் சொன்ன விஷ்யம் குஜால்தான் என்றாலும் அவன் நாய் என அழைத்தது அவ்வளவாக பிடிக்கவில்லை., ஆனாலும் கோபத்தை காட்டவும் முடியாது.

 இப்படித்தான்  நேற்று கஷ்டப்பட்டு கரக்ட் செய்ய முயன்ற கயல்விழியுடன் பேசிக்கொண்டு இருந்தேன்.  எனக்கு ஏலக்காய் பற்றி தெரியுமே தவிர அப்போதெல்லாம் இலக்கியம் பற்றி தெரியாது.
ஆனாலும் அவள் இலக்கிய ஆர்வலர் என்று என் துப்பறியும் இலாகா கொடுத்த அறிக்கையின் அடிப்படையில் சில இலக்கிய வார்த்தைகளை கஷ்டப்பட்டு படித்து வைத்து இருந்தேன்.  மீயதார்த்த வாதம் , மேஜிக்கல் ரியலிசம் , க்யூபிசம், நிகர்னிலை யதார்த்தம், தப்பித்தலியல் , இருத்தலியல்  என தப்பும் தவறுமாக சில வார்த்தைகளை உதிர்த்து அவளை ஒரு மாதிரி இம்ப்ரஸ் செய்து இருந்தேன்.

அப்படி பேசும்போது ஜேம்சை வர சொல்லி இருந்தேன் .என்ன சொல்ல வேண்டும் என்றும் சொல்லிக்கொடுத்து இருந்தேன்.

“ ஏமான் ,  அக்கா கல்யாணம்.. சேட்டிடம் நகை அடகு வைக்கணும்.. என் மூஞ்சியை பார்த்தா தர மாட்டான். நீங்க உயர் சாதி என முகத்தை தெரிந்து கொண்டு காசு கொடுப்பான் “ என அவன் சொல்ல வேண்டும்.

” ஏமான் என்றெல்லாம் சொல்லகூடாது, பெயர் சொல்லியே கூப்பிடலாம் “ என பெருந்தன்மையாக சொல்லி விட்டு அவன் கூட போவதாக திட்டம்.

திட்டமிட்ட படி கயலுடன் கச்சிதமாக பேசிக்கொண்டு இருந்த போது , அவன் வந்து விட்டான். பெருந்தன்மையுடன் பேச ஆயத்தமானேன்.

“ என்னடா நாயே.  செம்ஸ்டர்ல எல்லா பேப்பரும் ஊத்திக்கிச்சாம்.சொல்லவே இல்லை “ என்றான் ஒத்திகையை மறந்தவனாக.

கயல் “ களுக் “ என அந்த கால நாவல்களில் சிரிப்பது போல சிரித்தது கூட என வருத்தம் இல்லை. அவனைப்பார்த்து அவள் சினேகமாக சிரித்தது வருத்தம் அளித்தது.

அவனை தனியாக அழைத்து சென்றேன்

” என்னடா இப்படி பண்ணிட்ட “ என்றேன்,

“ டேய். அது என்னடா ஏமான்...எனக்கு அந்த வார்த்தையே தெரியாது.அதனால்தான் சொல்ல முடியல.  நல்ல வேளை..ரைமிங்கா இன்னொரு வார்த்தை வாய் வரை வந்துடுச்சு,,அவ முன்னாடி சொல்லாம போனேனே,,அதை நெனச்சி சந்தோஷப்பட்டுக்க “ என்றான்.

அப்படி எல்லாம் டார்ச்சர் செய்தாலும் , அவனால் கிடைக்கும் சில உபகாரங்கள் கருதி அவனை பகைத்து கொள்ள முடியவில்லை.

மறுனாள் வந்தான்.
” சோமான்,..தியேட்டர் வேண்டாம். வீடியோ கேசட் கெடச்சு இருக்கு, உன் ரூமில் வைத்து பார்க்கலாமா “ என்றான்.

அப்போதெல்லாம் வீடியோ கேசட்தான். என் அறையில் மட்டும்தான் கேசட் பார்க்கும் வசதி இருந்தது,
ஆனால் இப்படி மற்றவர்கள் வந்து படம் பார்த்தால் வீட்டு ஓனர் சண்டைக்கு வருவார்.

“ கவலைப்படாதே..அவரையும் படம் பார்க்க அழைப்போம் ..அவரையும் கைக்குள் போட்டு கொள்வோம் “ என்றான்.

 நல்ல ஐடியா..

முதலில் அவர் ஒப்புக்கொள்ளவில்லை/

அவர் பெண்ணாசையே இல்லாதவர் என்றால் அது மிகை இல்லை. 40 வயது ஆகியும் திருமணம் செய்யாமல் வசித்து வந்தார். வீட்டில் எந்த பெண்ணின் படமும் இருக்காது. எந்த பெண்ணையும் தவ்றாக பார்க்க மாட்டார்.
 எங்களுக்கெல்லாம் அவரைப்பார்த்து பிரமிப்பாக இருக்கும்.
சரி..இந்த படம் பார்த்தாலாவது பெண்ணாசை ஏற்பட்டு திருமணம் செய்தால் நல்லதுதானே என்ற நல்லெண்னத்தோடும் , நண்பர்களுடன் படம் பார்க்கும் திட்டதுடனும் அவரை அழைத்து சம்மதிக்க வைத்தோம்.

அந்த சின்ன அறையில் ஜேம்ஸ், வீட்டு ஓனர் , நான் உட்பட பத்து பேர்.

எல்லோரும் தரையில்தான் அமர்ந்து இருந்தோம். அவருக்கு மட்டும் நாற்காலி கொடுத்தோம்.அவர் மறுத்து விட்டு எங்களுடன் தரையில் அமர்ந்தார்.

கொஞ்ச நேரத்திலேயே தூக்கம் வர ஆரம்பித்து விட்டது. சீன் படம் என்றால் , கொஞ்சம் கொஞ்சமாக சூடேற்றி கடைசியில் நிர்வாண நிலை அடைந்தால்தான் அக விழிப்பு, புற விழிப்பு ,  மெய்ஞானம் எல்லாம் கிடைக்கும். இந்த படத்தில் ஆரம்பத்திலேயே சீன் காட்சி. அதன் பின் துரோகம் செய்த பெண்ணின் சோகங்கள்...யாருக்காக துரோகம் செய்தாளோ அவனே துரோகம் செய்தது..அவர்களை கணவன் மன்னிப்பது என்பது போல மிச்சபடம்.
ஹீரோ ஓரியண்டட் படம்

எல்லோருமே பாதியில் தூங்கி விட்டார்கள்..பாவம் , ஓனர் மட்டும் பார்த்து கொண்டு இருந்தார்.

பாவம்..அவரது முதல் பிட் அனுபவம் இப்படி ஆகி விட்டதே என வருத்தமாக இருந்தது.

திடீரென ஏதோ சத்தம் கேட்கவே அவரைப்பார்த்தேன்.

” இப்படிப்பட்ட படங்கள் பார்க்காமல் என் வாழ்க்கையை வீணாக்கி விட்டேனே... ஹீரோ என்ன கலர்..என்ன உடல் கட்டு,,,ம்ம்ம் “ முனகினார் ஓனர்.

நான் திடுக்கிட்டு மற்றவர்களை பார்த்தேன்.

ஓனர் தனியாக அமர்ந்து என்ன செய்து கொண்டு இருக்கிறார் என்பதை அவர்களும் பார்த்து விட்டார்கள் என்பதை அவர்களின் உடல்கள் விறைப்படைவதிலிருந்து, ஆர்வமற்றவர்கள்போல வேறெங்கோ பார்ப்பதிலிருந்து அறிந்தேன்.
Sunday, August 18, 2013

திரை உலகை திசை மாற்றிய இரு திரைப்படங்கள்

ஜெயகாந்தன் படைப்புகளில் மறக்க முடியாத ஒரு குறு நாவல்தான் ஊருக்கு நூறு பேர்.
மறக்க முடியாத நாவல் என சம்பிரதாயமாக சொல்ல வில்லை. உண்மையில் என் அனுபவத்தை சொல்கிறேன் . பள்ளி வயதில் ஒரே ஒரு முறைதான் இதைப் படித்தேன். மலையாண்டி காவலரை கிண்டல் செய்வதற்காக தான் வைத்து இருக்கும் கார்ல் மார்க்ஸ் படத்தை தன் தாத்தா என சொல்லி அவனை நம்ப வைப்பது , கவலைப்படாமால் தூக்கு மேடை ஏறுவது என பல விஷயங்கள் இன்னும் நினைவில் இருக்கின்றன

தொடர்ந்து படிக்க

திரை உலகை திசை மாற்றிய இரு திரைப்படங்கள்

இயக்குனர் அம்ஷன் குமாருடன் சிறப்பு பேட்டி

மீபத்தில் லீனா மணிமேகலையின் குறும்பட திரையிடலுக்கு சென்று இருந்தேன். திரையிடல் முடிந்ததும் கலந்துரையாடல், விவாதங்கள் நடந்தன.
பெரும்பாலும் பாராட்டி பேசினாலும் ஒரு பெண் ஆவேசமாக எதிர் குரல் எழுப்பினார். இன்னும் எத்தனை காலத்துக்கு தலித்துகளை பரிதாபத்துக்குரியவர்களாகவே காட்டப்போகிறீர்கள். அவர்களிடம் பாசிடிவ் அம்சங்களே இல்லையா என்பது அவர் பேச்சின் சாராம்சம்.
அதன் பின் லீனா அதற்கு பதில் அளித்தார் என்பது வேறு விஷ்யம். இந்த கட்டுரை லீனாவைப் பற்றியது அல்ல.
அந்த பெண் பேசிய கருத்தில் எனக்கு உடன்பாடு உண்டு. தலித்துகள் சொல்லவொண்ணா கொடுமைகள் அனுபவிப்பது உண்மைதான். அதை கவனத்துக்கு கொண்டு வருவதும் ஏற்கத்தக்கதே,
ஆனால் அவர்களை பாசிட்டிவாக காட்டுவதும் , அவர்களிடம் இருக்கும் பாசிட்டிவ் அம்சங்களை காட்டுவதும் , அவர்கள் வாழ்க்கையில் இருக்கும் அழகியல் , நட்பு, காதல் , அன்பு போன்றவற்றை காட்டுவதும் அவசியம்தானே. ஆனால் பெரும்பாலும் யாரும் இதை செய்வதில்லை.
அம்ஷன் குமாரின் ஒருத்தி திரைப்படம், தலித் பெண் ஒருத்தியைப் பற்றிய படம் என கேள்விப்பட்டபோது, அவரும் இப்படித்தான் எடுத்து இருப்பார் என நினைத்தேன். ஆனால் அந்த படம் கிரா அவர்களின் கிடை குறுநாவலை தழுவி எடுக்கப்பட்டது என தெரியவந்தபோது லேசான ஆர்வம் வந்தது. கிரா என்றாலே கரிசல் மண்ணின் அழகியல் , நுட்பமான சித்திரிப்பு , நகைச்சுவை போன்றவைதான் நினைவுக்கு வரும்.

மேலும் படிக்க ....

Thursday, August 15, 2013

கேமராவை பற்றி பேசுவது குழந்தைத்தனமானது- லீனா பரிசளிப்பு விழாவில் இயக்குனர் பாலு மகேந்திரா ருசிகரம்

சினிமாவில் கேமராவைப் பற்றி பேசுவது , எழுத்தைப் பற்றி பேசாமல் பேனாவைப் பற்றியும் பேப்பரைப் பற்றியும் பேசுவது போன்றது என இயக்குனர் பாலு மகேந்திரா பேசினார்.

லீனா மணிமேகலைக்கு தமிழ் ஸ்டுடியோ சார்பில் லெனின் விருது வழங்கும் விழா  சென்னையில் நடந்தது. மழை தூறிய மாலை வேளையிலும் அரங்கு நிரம்பி வழிந்தது. இயக்குனர் ஹரிஹரன் , பாலாஜி சக்தி வேல் , லெனின் , பாலு மகேந்திரா, பத்திரிக்கையாளர் அசோகன் , நடிகர் சார்லி , அழகிய பெரியவன் , சிவகாமி ஐ ஏ எஸ் போன்றோர் ஆழமான , செறிவான உரைகள் வழங்கினர். ஒரு விஷ்யத்தை உண்மையான ஆர்வத்துடன் பேசினால் , எத்தனை கடினமான மேட்டர் என்றாலும் கூட்டம் அமைதியாக கேட்கும் என்பதை நிரூபிக்கும் வகையில் கிட்டத்தட்ட இரவு பத்து மணி வரை கூட்டம் கொஞ்சமும் கலையவில்லை. இன்னும் கொஞ்சம் பேச மாட்டாரா என நினைக்கையில் லெனின் சார் அவராகவே போதும் என நிறுத்தி விட்டார்.

போலியான அலங்காரப்பாராட்டாக இல்லாமல் , ஒவ்வொருவரும் மனதில் இருந்து பேசினார்கள். மாற்று கருத்தையும் முன் வைத்தார்கள்.

லீனா மணிமேகலையை திமிர் பிடித்த , சும்மா பரபரப்புக்கு எழுதும் எழுதும் ”பெண்ணீய”  எழுத்தாளர் என்றே ஒரு காலத்தில் நினைத்து வந்தேன். அதன்பின் அவர் எழுத்துகளை படிக்க்க ஆரம்பித்ததும் அவர் மீது ஒரு மரியாதை வந்தது.

அதன் பின் அவ்வ்வபோது அவர் பேச்சுகளை கேட்பதுண்டு. கணீர் என பேசுவார். ஆனால் இன்றுதான் முதன் முதலாக அவர் நெகிழ்ந்து போய் , குரல் தடுமாறி பேசியதை கேட்டேன்.

முதலில் பேசிய இயக்குனர் ஹரிஹரன் டிஜிட்டல் யுகத்தின் சாத்தியங்களை பேசினார். இனிமேல் இண்டர் ஆக்டிவ் சினிமாக்கள் வரும். பார்வையாளனும் படத்தில் பங்கு பெற முடியும், ஒரு காட்சியை நிறுத்தி, அந்த காட்சி நடக்கும் இடத்தை எக்ஸ்பாண்ட் செய்து பார்க்க முடியும், இப்படி பல வசதிகள் கிடைக்கும். அந்த வகையில் இரண்டு மணி நேர படத்தை இரண்டு மாதங்கள்கூட பார்க்கலாம் என்றார்.

சிவகாமி அய் ஏ எஸ் தன் அனுபவங்கள் சிலவற்றை கூறி லீனாவின் ஆவணப்படங்களைப் பற்றி பேசினார். கவிதைகள் குறித்தும் சொன்னார்.


பாலாஜி சக்திவேல் பேசுகையில் லீனாவின் தேவதைகள் படத்தை சிலாகித்து பேசினார். ஒத்திகை பார்த்து நடிப்பதை ஷூட் செய்வதை விட , டிஸ்கவரி சானலில் சிங்க வேட்டையை காத்திருந்து பதிவு செய்வது போல ஷூட் செய்யும் சினிமாக்கள் இனி தமிழில் அதிகம் வரும் என்றார்.

காமடி நடிகராக நாம் அறிந்த சார்லியின் இன்னொரு முகத்தை இன்று பார்த்தேன்,. சிறப்பான ஓர் உரையை வழங்கினார். அவர் திறமையை தமிழ் சினிமா இன்னும் சரியாக பயன்படுத்தவில்லை என தோன்றியது.

எனக்கு மாற்று சினிமா தெரியாது. சோற்று சினிமாதான் தெரியும் என ஆரம்பித்து அவர் பேசிய ஒவ்வொர் வார்த்தைக்கும் கைதட்டலால் அரங்கம் அதிர்ந்தது. நோவா கதை சொல்லி அட்டகாசமாக பேச்சை முடித்தார்.


அழகிய பெரியவன் அடுத்து பேசினார். ஒவ்வொரு வார்த்தையும் கணீர் என இருந்தது.

மேல்னிலையாக்கல் என்பதைப் பற்றி தீர்க்கமான ஓர் உரை வழங்கினார்.

மதுரை வீரன் கதை ஒடுக்கப்பட்ட ஒருவன் பற்றிய கதை. அதை எப்படி மேல் நிலை ஆக்குக்கிறார்கள். அவன் தேவ லோகத்தில் செய்த தவறு காரணமாக , ஒரு சாபத்தால் ஒடுக்கப்பட்டவனாக பிறந்தான் என கதை கட்டி உள்ளதை உள்ளபடி பார்க்க முடியாமல் செய்கிறார்கள்.

இந்த மேல் நிலையாக்கத்தை லீனாவின் படங்கள் உடைக்கின்றன என்றார்.


பாலு மகேந்திரா பேசுகையில் லீனா தன் கேமிராவை தூரிகையாக பயன்படுத்தி மாடர்ன் ஆர்ட் வரைகிறார் என்றார்.

 நான் இரவு நேர சென்னையை பார்த்து அசந்து போனேன். பகல் நேர சென்னையை விட முற்றிலும் மாறு பட்டு இருந்தது. அதை படமாக்க முடிவு செய்தேன். இரவு சென்னையை சும்மா ஷூட் செய்வதில் பயன் இல்லை. இரவு சென்னையை நான் பார்த்தபோது அடைந்த உணர்வை படமாக்க வேண்டும்., அதாவது கேமிராவை தூரிகை ஆக்கி , நான் விரும்பும் ஓவியம் தீட்டினேன்.

மெஷின்கள் ஒரு போதும் படம் எடுக்காது.படைப்பாளிதான் முக்கியம். எனவே தயவு செய்து கேமிராக்கள் பற்றி என்னிடம் பேசாதீர்கள். ஒரு கவிஞனிடம் போய் பேனாவைப்பற்றியும் , பேப்பர் பற்றியுமா பேசுவீர்கள்.?

ஒவ்வொரு படைப்புக்கும் பணம் , புகழ் என்பது போன்ற ஒரு நோக்கம் இருக்கும், நான் இப்போது எடுத்து வரும் படத்துக்கு ஒரு நோக்கம் உண்டு. நான் இறந்த பின்பும் பல ஆண்டுகள் அந்த படம் பேசப்பட வேண்டும். அதுதான் அதை படைத்ன் நோக்கம் என்றார்.


லீனா சற்றே உணர்ச்சி வசப்பட்ட நிலையில் ஏற்புரை வழங்கினார்.

கடைசியாக பேசிய லெனின் ஒரு குழந்தையின் உற்சாகத்துடன் பேசினார். அவர் பேசியவற்றை அப்படியே வெளியிட்டால் ,ஒன்று அவருக்கு பிரச்சினை வரும். இல்லை என்றால் எனக்கு பிரச்சினை வரும்.

என் வாழ் நாளில் கேட்ட மிகச்சிறந்த உரைகளில் ஒன்று.

தன் அனுபவத்தை சாறாக்க்கி அவர் புகட்டிய தமிழ் விருந்து இரவு முழுதும் நீடித்து இருந்தாலும் கேட்பதற்கு அனைவரும் தயாராகவே இருந்தனர்.

ஆனால் அவர் ஒரு பாடலுடன் பேச்சை முடித்து ஏமாற்றம் அளித்தார். இன்னும் ஒரு மணி நேரம் பேசி இருக்கலாம்.

சிறப்பான ஒரு நிகழ்ச்சியில் , மேதைகள் பேச்சைக் கேட்ட நிறைவுடன் கிளம்பினேன்,

Wednesday, August 14, 2013

பெண்களை ஊருக்கு நேர்ந்து விடும் தமிழக கிராமம்- வெட்கம் கெட்டு சுதந்திரம் கொண்டாடும் ”படித்தவர்கள்”


 அந்த காலத்தில் சுதந்திர தினம் என்றால் மிட்டாய் வாங்குவதற்காக பள்ளி சென்ற அனுபவம் இன்னும் பசுமையாக நினைவில் இருக்கிறது
வீட்டுப்பாடமோ, படிப்போ இல்லாமல் சும்மா பள்ளிக்கு செல்வது ஒரு வித்தியாசமான அனுபவமாக இருக்கும்

அதன் பின் கொஞ்ச  நாள் உண்மையிலேயே நாட்டுப் பற்று எல்லாம் இருந்தது. தேச விடுதலை வரலாறு , தேசத்தலைவர்கள் பற்றியெல்லாம் தேடி தேடி படித்தேன்.

ஆனால் யதார்த்த வாழ்வை சந்தித்த பின் , சுதந்திர நாள் மீது வெறுப்போ விருப்போ இல்லாமல் போய்விட்டது
என்னை பொறுத்தவரை அது ஒரு விடுமுறை தினம்  மட்டுமே.

இன்றும் ஒரு விடுமுறை தினமாக சாதாரணமாக போய் இருக்கும். ஆனால் காலையில் பார்த்த சுகி சிவம் பேச்சு என்னை எரிச்சல் அடைய வைத்து விட்டது.  ஒரு மிடில் கிளாஸ் மன நிலையை அவர் பிரதிபலித்தார். நம் நாட்டில் நாம் அனுபவிக்கும் சுதந்திரத்தை வேறு பல நாடுகளில் மக்கள் அனுபவிப்பதில்லை என பேசினார்.
இவர் சொல்லும் “ நாம் “ யார் என புரிந்து கொள்வது இன்றைய தேவை.

இவரைப் போலத்தான் நானும் நினைத்து வந்தேன்.

ஆனால் சமீப காலமாக நான் சந்தித்த மனிதர்கள், பார்த்த படங்கள் , சென்ற ஊர்கள் , விவாதங்கள் எல்லாம் என் மனதை மாற்றி விட்டன.

அந்த காலத்தில் நம் அறிவு ஜீவிகள் சில நாடுகளுக்கு போய் விட்டு வந்து அந்த நாடு பூலோக சொர்க்கம் என எழுதுவார்கள். அப்படி சொல்பவர்கள் யாரும் பொய் சொல்வதில்லை. அங்கு சந்தித்த சிலருடன் பேசி அப்படி எழுதுவார்கள்.

ஆனால் சில ஆண்டுகளில் அந்த நாடுகளில் புரட்சி ஏற்பட்டு ஆட்சியாளர்கள்
தூக்கி எறியப்பட்டதை பார்த்தோம். அந்த நாடுகளில் நிலவிய அவலம் பிறகுதான் தெரிய வந்தது

 நம் ஆட்களும் பொய் சொல்லவில்லை. அவர்கள் சந்தித்தவர்களும் பொய் சொல்லவில்லை. பின் ஏன் உண்மை நிலையை அவர்களால் எழுத முடியாமல் போயிற்று ?

அந்த நாடுகளில் உயர் பதவியில் இருந்தவர்களை இவர்களால் சந்திக்க முடியவில்லை. ஏழைகளுடன் உரையாடும் மொழியோ தெரியவில்லை.

எனவே குமாஸ்தாவாக இருந்த மிடில் கிளாஸ் மக்களையே சந்தித்து பேசினார்கள். அந்த நாட்டு கொடுங்கோல் ஆட்சியின் கொடுமைகளை அவர்கள் அனுபவிக்காததால் அல்லது தெரியாததால், அந்த நாட்டு ஆட்சியாளர்களை பாராட்டி பேட்டி கொடுத்தனர். நம் ஆட்கள் அதை நம்பி இங்கே எழுதி விட்டார்கள்.

அதன் பின் மக்கள் புரட்சி ஏற்பட்ட பின் தான், அந்த நாட்டின் கொடுமைகள் அந்த குமாஸ்தாக்களுக்கே தெரிய வந்தது.

சுகி சிவம் சொல்லும் நாம் என்பது இந்த குமாஸ்தாக்க்ளைத்தான்,

என்ன வேண்டுமானாலும் ஃபேஸ் புக்கில் எழுத முடிகிறது. எங்கு வேண்டிமானாலும் ஊர் சுற்ற முடிகிறது..எந்த இடத்துக்கும் வேலை தேடி செல்ல முடிகிறது என்பதையே நம் குமாஸ்தாக்கள் சுதந்திரம் என நினைத்து கொள்கிறார்கள்.

இந்த வசதி எல்லோருக்கும் கிடைக்கவில்லை என்பது இவர்களுக்கு தெரியாது. இன்னும் பல ஊர்களில் சிலர் கோயில்களுக்கு போக முடியவில்லை/ டீக்கடைகளில் எல்லொரும் போல டீ சாப்பிட முடியவில்லை.
அவர்கள் எப்படி போனால் என்ன ,, நான் சுதந்திரமாக இருக்கிறேனே என சொலவ்து அற ரீதியாக மட்டும் தவறல்ல.. சுய நல ரீதியாக பார்த்தாலும் , தவறுதான்.

பொறுமை இழந்து அவர்கள் போராட தொடங்கினால் நமக்கும் சேர்த்துதான் அடி விழும்.

சமீபத்தில் லீனா மணிமேகலையின் மாத்தம்மா என்ற ஆவணப்படம் ஒன்று பார்த்தேன்.

தமிழ கிராமம் ஒன்றில் ஒரு கொடூரமான பழக்கம். ஏதாவது பிரச்சினை என்றால் அவர்கள் வீட்டு பெண் குழந்தையை மாத்தம்மா எனும் கடவுளுக்கு நேர்ந்து விட்டு விடுவார்கள் , ஒரு வேண்டுதலாக.

அதன் பின் அந்த பெண் குழந்தை ஊருக்கு பொது சொத்தாகி விடும். நடனம் ஆடி மக்களை மகிழ்வித்து தன் காலத்தை ஓட்ட வேண்டும்.

பருவம் அடைந்ததும் திருமணம் செய்ய முடியாது. செய்யவும் கூடாது. அவள் ஊருக்கு பொது சொத்து .திருமணம் இன்றி யாருடனாவது சேர்ந்து குடும்பம் நடத்தலாம். ஆனால் எந்த சட்ட பாதுகாப்பும் இல்லை.  கூட வாழ்பவன் எப்போது வேண்டுமானாலும் போய் விடுவான்.

அவளுக்கு என்ன சுதந்திரம் கிடைத்து விட்டது..இப்படி ஓர் ஊர் இருப்பது நம் அதிகாரிகளுக்கு தெரியாதா?

இப்படி நம்மை சுற்றி ஆயிரம் பேர் இருக்கையில் நாம் ஆனந்த சுதந்திரம் கொண்டாடினால் நம்மை வருங்கால சமுதாயம் காறித்துப்பி விடும்.

படிக்காத மக்கள் யாரும் ஆனந்த சுதந்திரம் கொண்டாடுவதில்லை. பெரும் பணக்காரர்களும் கொண்டாடுவது இல்லை
மற்றவர்களுக்கு நல்ல கருத்துகளை எடுத்து போய் சேர்க்க வேண்டிய படித்தவர்கள்தான் இந்த குழந்தைத்தனமான செயலை செய்து வருகிறார்கள்.

அனைவருக்கும் வெட்கம் கெட்ட சுரணை கெட்ட அற்பத்தனமான சுதந்திர தின வாழ்த்துகள்
ஜெய் ஹிந்த்Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா