Thursday, August 26, 2010

எந்திரன் ஹீரோயின் ஐஸ்வர்யா ராய்,,ஹீரோ யாருப்பா? ரஜினிக்கு வந்த சோதனை - ஆடியோ விழா காமடி

எந்திரன் ஆடியோ ரிலிஸ் பலர் கண்டு களித்தாலும், ஹிந்தி ஆடியோ ரிலீசை பலர் கவனிக்கவில்லை..
உண்மையில் அதுதான் சூப்பராக இருந்ததது,,, ரஜினியின் பேச்சு வெளிப்படையாகவும் , சம்பிரதாயம் அற்றும் இருந்தது... நேமையாக பேசினார்.

என்னதான் பேசினார்?

" ரகுமான் புனித்ததன்மை நிறைந்தவர்,,, ஆன்மிக கடல்,,நன்றாக இசை அமைத்துள்ளார்..

எனக்கு ஜோடியாக நடிக்க ஒத்து கொண்டதற்கு ஐஸ்வர்யா ராய்க்கு நன்றி... நான் மிகைபடுத்தவில்லை,, உண்மையிலேயே நன்றி..

சமிபத்தில் என் சகோதரன் வீட்டுக்கு சென்று இருந்தேன்,, நான் இருப்பதை கேள்விப்பட்டு என்னை பார்க்க ஒரு ராஜஸ்தானி வந்தார்.. அவர்க்கு அறுபது வயது இருக்கும்..

என்ன எப்படி இருக்கீங்க என ஜாலியாக விசாரித்தார்.. என்ன முடியை காணோம் என கிண்டலடித்தார்,, (சிரிப்பு )

அதன் பின் ரிடைர்ட் லைப் நல்ல எஞ்சாய் பண்றீங்களா என கேட்டார்..

நான் ஒய்வு பெறவில்லை,,, ஒரு படத்தில் நடித்து வருகிறேன்... ஐஸ்வர்யா ராய் தான் கதாநாயகி" என பெருமையாக சொன்னேன்..

அவருக்கு பயங்கர சந்தோசம்.. " அப்படியா , நல்லது ,, ஐஸ்வர்யா கதாநாயகி... அவருக்கு ஜோடி யார் " என ஆர்வமாக கேட்டார் .. ( சிரிப்பு..கைதட்டல் )

திகைத்து போன நான் , " நான்தான் ஜோடி " என்றேன் ..

அவர் அரண்டு விட்டார் " என்ன... நீதான் ஜோடியா ? " என்றவருக்கு சில நிமிடங்கள் பேச்சே வரவில்லை ...

கடைசி வரை அவருக்கு அதை ஏற்க முடியவில்லை...

ஐஸ்வர்யா ரைக்கு நன்றி ,,,

படம் உண்மையிலேயே நன்றாக வந்து இருக்கிறது..

ஆனால் இது போல சொல்வதற்கு எனக்கு கூச்சமாக இருக்கிறது.. ஒரு உணவு சமைத்து பரிமாறினால், சாபிட்டவ்ர்கல்தான் , உணவு நன்றாக இருக்கிறது என சொல்ல வேண்டும்...
சமைதவர்களே அதை பற்றி பேசி பயனில்லை..

ஷோலே பெரு வெற்றி அடைய காரணம் படம் நன்றாக இருந்ததுதான்...

அதே போல இதுவும் வெற்றி பெரும்.. இந்தியாவிலேயே அதிக செலவில் தயாரிக்கப்பட்ட படம் என்பதால் மட்டும் அல்ல... நன்றாக எடுக்கப்பட்ட படம் என்பதால்..

இவ்வாறு ரஜினி பேசினார்

***************************************

வாக்களிக்க
http://ta.indli.com/site/pichaikaaran.blogspot.com

Tuesday, August 24, 2010

அடல்ட்ஸ் ஒன்லி கவிதையில் அசலும் நகலும் -இலக்கிய அக்கப்போர்

அன்புள்ள பதிவர் பிச்சைக்காரன் அவர்களுக்கு ..

மண்டபத்தில் உட்கார்ட்ந்து யாரிடமும் கேட்காமல் நானே சொந்தமாக சில அஜால் குஜால் கவிதைகள் எழுதி இருக்கிறேன். படித்து விட்டு உங்கள் கருத்தை சொல்லுமாறு கேட்டு கொள்கிறேன்..


. . .. ;-)பழசும் புதுசும் ;-)...

வேலை முடிந்ததும்

காசை குறைவாக கொடுத்தேன்..

“ அவ்வளவுதான் தர முடியும் ..

கட்டில் பழசு” என்றேன்...

கட்டில்தான் பழசு,
கட்டழகி அல்ல என்று வந்தது பதில்...




;-)பதிலடி;-)

இளமையாக காட்டிக்கொள்ளும்

மனைவியை கிண்டலடிக்க

நினைத்தான்..

விருந்து ஒன்றில்

” ஆறு குழந்தைக்கு அம்மாவே “
என அன்பாக அழைத்தான்...

கடுப்பான மனைவி

பழிவாங்க நினைத்தாள்

“ கொஞ்சம் பொறுங்கள், வருகிறேன்

நான்கு குழந்தைக்ளுக்கு அப்பாவே “ என்றாள்



அன்புடன் ,
தமிழ் வெறியன்


அன்புள்ள தமிழ் வெறியன் அவர்களுக்கு..

எழுச்சியுடன் நீங்கள் எழுதிய கவிதை உணர்வு என் பதிலை படித்ததும் அடங்கிவிடும் என அஞ்சுகிறேன்..

தமிழ் இலக்கிய மரபில் அஜால் குஜால் கவிதைகளுக்கு தனி இடம் உண்டு .. வேலை இல்லாத சிலரால் துவக்கப்பட்ட இந்த கவி மரபு அதன் பின் வேலையை விட்டு விட்டு எழுதும் அளவுக்கு

பரிணாம வளர்ச்சி அடைந்தது.

இது போன்ற கவிதைகளை உணர்வு பூர்வமாக எழுத வேண்டும். யோசித்து எழுதக்கூடாது. அனுபவத்தில் இருந்து எழுதுவதுதான் நிஜம்..மற்றதெல்லாம் நகல்...

சிலர் ஆங்காங்கு குஜால் வார்த்தைகளை போட்டுவிட்டால் , அது கவிதை என நினைக்கிறார்கள்..இது தவறு ...

கேரளாவின் புகழ் பெற்ற இலக்கியவாதி என்னுடன் பேசும்போது, இலக்கியவாதி என்பவன் , உலகத்தை பரிசோதனை கூடமாக்கி , தான் ஓர் ஆராய்ச்சியாளனாக செயல்பட வேண்டும் என்றார்.

அந்த அடிப்படையில், பஸ்சில் , சில இளம் பெண்கலிடம் சில சோதனைகள் செய்து பார்த்தபோதுதான் , கவிதை எங்கும் இருப்பதை உணர்ந்தேன்... ( நான் பொறுக்கி அல்ல. இருந்தாலும் சோதனை

அடிப்படையில் இதை செய்ய வேண்டியதாகி விட்டது..இலக்கியத்தை நான் தானே காப்பாற்ற வேண்டி இருக்கிறது ?? )
இதோ சில கவிதைகள்

;-)ஜென் கவிதை - ஒரு கை ஓசை;-)

ஒரு முறை பஸ்சில் ஒரு பெண்ணை உரசினேன்..
அவள் முறைத்தாள்..

நீயும் எஞ்சாய் செய்..

இரு கை சேர்ந்தால்தான் ஓசை என்றேன்..

ஒரு கையிலும் ஓசை வருமே என்றாள்.

எப்படி என்றேன்..

பளார் என ஓர் அறை விட்டாள்...

இதுதான் ஒரு கை ஓசை



தர்ம அடி வாங்கினாலும் ஜென் தத்துவ ஞானம் அப்போது கிடைத்தது....


;-)இறைவனின் திருவிளையாடல்;-)


ஒரு பெண்ணை மேலும் கீழுமாக பார்த்து சொன்னேன்..

என்னே இறைவனின் திருவிளையாடல்..

உன்னிடம் சில பகுதிகளில் கஞ்சன்

சில பகுதியில் வள்ளலாக இருக்கிறானே , என்றேன்..

அவள் சொன்னாள்...

என்னே அவன் திருவிளையாடல்...

முள்ளை மிதித்தும் காலில் குத்தவில்லை..

காலில் புதிய செருப்பு...

செருப்படி வாங்கினேனா இல்லையா என்பது கவிதை தரிசனம் அல்ல. நெருப்பு போல கவிதை பிறந்ததுதான் முக்கியம்...
இதே போல அனுபவம் சார்ந்த பின் நவீனத்துவ கவிதை எழுத பழகுமாறு கேட்டுக்கொள்கிறேன்..


வாக்களிக்க , ta.indli.com/site/pichaikaaran.blogspot.com

Sunday, August 22, 2010

பாலகுமாரன் நாவல்களும் மற்ற நாவல்களும் ஒரே வகைதானா ?

இலக்கியம் என்பது என்ன? யார் எழுதுவது இலக்கியம்? இலக்கியம் என்பது மனிதனுக்கு தேவையா என்பதெல்லாம் எப்போதும் இருக்கும் கேள்விகள்தான்..

அதில் எழுத்து சித்தர் பால குமாரன் அவர்களை இலக்கியவாதிகல் தம் ஆட்டத்தில் சேர்த்துகொள்வதில்லை... அதனால் அவருக்கு நஷ்டமில்லை.. வாசகர்களும் இதை பொருட்படுத்துவதில்லை..

ஒரு இலக்கியவாதி , தன் பார்வையில் பாலகுமாரன் எழுதுவது இலக்கியம் அல்ல என சொல்லலாம். அதை வைத்து விவாதம் நடப்பது நல்லதுதான்.. பாலகுமாரன் அவர்களின் சிறப்பை சொல்ல
இத்தைகைய விவாதங்கள் உதவும்.

ஆனால் ramji_yahoo போன்றவர்கள் பாலகுமாரன் எழுத்தை படித்தாலும் இன்பமாக இருக்கிறது... ஒரு மர்ம நாவல் படித்தாலும் இன்பமாக இருக்கிறது ..எனவே எல்லாம் ஒன்றுதான் என்று சொல்வதை

ஏற்க முடியாது..

யோசித்து பார்த்தால் பலரும் இப்படி நினைப்பது தெரிய வருகிறது.. எனவேதான் இந்த பதிவு,,,

என்னை பொருத்தவரை எல்லா புத்தகங்களும் படிப்பதை விரும்புகிறேன்.. சமீபத்தில் கூட கிரைம் சக்கரவர்த்தி ராஜேஷ் குமாரின் , பூவில் ஒரு சூறாவளி ரசித்து படித்தேன்.. சுவையாக எழுதி

இருந்தார்..அவர் சாதனையை பாராட்ட விரும்புகிறேன்..

அதற்காக அந்த நாவலும் உடையாரும் ஒரே மாதிரியானதுதான் என சொல்ல முடியாது...

இதில் உயர்வு தாழ்வு என்ற பிரச்சினை இல்லை... ஒவ்வொரு மனனிலையின்போதும் ஒவ்வொரு வகை புத்தகம் தேவைப்படும்.. அந்த நேரத்து தேவையை ஒரு புத்தகம் பூர்த்தி செய்கிறதா
என்பதை பொருத்தே அதன் வெற்றி தோல்வியே தவிர , மற்ற எழுத்தாளருடன் ஒப்பிட்டு அல்ல..


பாலகுமாரன் நாவல்கள் இலக்கியமா இல்லையா என்பது வேறு பிரச்சினை..

ஆனால் அவர் எழுத்து போல மக்களுக்கு நெருக்கமான எழுத்து வேறு எதுவும் இல்லை என திட்டவட்டமாக சொல்லலாம்..அவரது சமீபத்து நாவலான உடையாரில் கூட அவரது துள்ளலான நடை இருப்பது ஆச்சரியப்படத்தக்கது...

வெறுமே வரலாற்று தொகுப்பாக இல்லாமலும் அதே சமயம் வர்ணனைகள்- குறிப்பாக பெண்ணை வர்ணித்தல்- என்ற பானியில் இல்ல்லாமல், நிர்வாகம், பண்பாடு , மேலாண்மை , தத்துவம் ,

பெண் விடுதலை, மதித்தல், காதல் , ஆன்மீகம் , சாதி சண்டை, பொறி இயல் என எல்லாம் கலந்து கொடுத்து இருக்கிறார்.

படித்து முடித்த பின் ராஜராஜசோழன் நம் மனதி சிம்மாசனம் இட்டு அமர்ந்து கொள்கிறார்..அந்த நாவலை பற்றி விரிவாக பிரகு எழுதுவேன்...

அதற்காக பாலகுமாரன் நாவல்கள் மட்டும்தான் உயர்ந்தவை..மற்றவை தாழ்ந்த்தவை என சொல்லவில்லை...

பாலகுமாரன் நாவல்கள் தனிதுவம் வாய்ந்தவை... அதயும் மற்ற நாவல்களையும் ஒரே பட்டியலில் சேர்க்க கூடாது ..


ஒவ்வொன்றின் தேவையும் வேறு வேறு.. பாலகுமாரன் நாவல்களின் தேவையே இல்ல்லாமல் இருப்பவர்களும் இருக்க கூடும்... அதை தவறு என சொல்ல முடியாது...

Wednesday, August 18, 2010

பாலகுமாரன் உடையாரா ?

தமிழில் அவர்தான் இப்போது பெரிய எழுத்தாளர்... இவர்தான் சுஜாதாவின் இடத்தை நிரப்புகிறார் என்றெல்லாம் இலக்கியவாதிகளும் அவர்களது ரசிகர்களும் சச்சரவிடும் நிலையில், ஒருவர்மட்டும்

- இவர்களையெல்லாம் விட அதிகளவு வாசகர்களை கொண்டவர் - ஒதுங்கி இருப்பது ஆச்சரியமூட்டும் விஷயம்.

அவராகவே எழுத்தை குறைத்துக்கொண்டாரே தவிர , அவர் எழுத்தின் வசீகரம் அப்படியே இருக்கிறது...
இலக்கிய அக்கப்போரில் இவர் ஈடுபடுவதும் இல்லை. இலக்கியவாதிகளும் தம் ஆட்டத்தில் இவரை சேர்த்துக்கொள்வதில்லை.

ஒரு காலகட்டத்தில் கட்சி ஆரம்பிக்கும் அளவுக்கு அவர் மேல் ஈர்ப்பு இருந்தது.

அவர்தான் எழுத்தாளர் திரு பாலகுமாரன் அவர்கள்

இப்போது அவர் எழுத்து தளர்வடைந்து விட்டது போல சிலர் நினைக்கிறார்கள்..


அப்படி எதுவும் நடக்கவில்லை..ஆனாலும் ஏன் அப்படி ஒரு கருத்து பரவியது?

சிலருக்கு எப்போதுமே பாலகுமாரன் எழுத்தை பிடிக்காது.. ஆகவெ அவர்களுக்கு இப்போதும் அவர் எழுத்தை பிடிக்காது... இதில் ஆச்சர்யப்பட எதுவும் இல்லை. தவறும் எதுவும் இல்லை..

ரசனை ஒரே மாதிரி இருக்க வேண்டியதில்லை.


ஆனால் முன்பு படித்த சிலர் இப்போது படிக்காமல் இருக்க என்ன காரணம் ?

அவர் தீவிரமாக எழுதிய காலத்தில் ரசிகர் மன்றம் வைத்து செயல்படும் அளவுக்கு வேகமாக இருந்த இளைஞர்கள் , இன்று குடும்ப அளவிலும் தமது அலுவலக பணியிலும் மும்முரமாகிவிட்டனர்.

இப்போது அவர் தொடர் எழுதும் பத்திரிக்களை தேடி வாங்கும் நிலையில் அவர்கள் இல்லை.. ( ஒரு காலத்தில் குப்பை பத்திரிக்கையை கூட அவர் எழுத்துக்காகவே மட்டும் வாங்கும்
நிலை இருந்தது ) முன்பு போல முழு நாவல்கள் , கட்டுரை தொகுப்புகள் வெளியாவதில்லை என்பதால், ஒருவித தொய்வு ..

எனவே அவர் முன் போல எழுதுவதில்லை என பலரும் நினைக்கிறார்கள்.

இன்னொரு விதமானவர்கள் இருக்கிறார்கள்.. மெர்க்குரி பூக்கள், இரும்பு குதிரைகள் போன்றவற்றை படித்தவர்க்ள், அதே போல கதையை அவர் மீண்டும் மீண்டும் எழுத வேண்டும் என எதிர்பார்க்கிறார்கள்.

அவர் வேறு ஒரு களத்தை தேர்ந்தெடுத்தால் , ஐயோ இது அது போல இல்லையே ..அவர் தன் இயல்பான நடையை இழந்து விட்டார்களே என்கிறார்கள்..

இந்த நிலையில்தான் , நான் உடையார் நாவலை படிக்க ஆரம்பித்தேன்..

அசந்து விட்டேன்... அவர் படைப்பில் மாஸ்டர் பீஸ் என்றால் அது இதுதான்..

அவரது வேறு எந்த நாவலை படிக்காவிட்டாலும் பரவாயில்லை..இதை அனைவரும் படிக்க வேண்டும்..( உடையார் பற்றி விரிவாக பிறகு எழுதுவேன் )

வரலாற்று கற்பனை கதையாகவோ, அல்லது வரலாற்று தொகுப்பாகவோ இல்லாமல் , ஒரு வித்தியாசமான பாணியை தேர்ந்தெடுத்துள்ளார் பாலகுமாரன்.

மனித வாழ்வின் ஒவ்வொரு கட்டமும் முக்கியம்தான்.. குழந்தை பருவம், டீன் ஏஜ், இளமை பருவம், மத்திய வயது, முதுமை என ஒவ்வொன்றுக்கும் ஒரு அழகு உண்டு..

ஆனால் மேலை நாட்டு பதிப்பால், இளமை பருவம் மட்டுமே சிறந்தது என்ற கருத்து இங்கும் பரவுகிறது... சின்னஞ்சிறுவர்களும் வயதுக்கு மீறிய பேச்சுக்கள், செயல்கள் என இருப்பதும் ( ஆனால்

செயற்கௌ ஆபரேழன் மருந்து என்ற அளவுக்கு இன்னும் போகவில்லை ) வயதான பெருசுகளும் இளமை ஆட்டத்தை மீண்டும் அனுபவிக்க நினைப்பதும் , எழுத்தாளர்கலூம் கூட

வயதுக்கு ஏற்ற முதிர்ர்சி இல்லாமல் செயல்படுவதும் நான் அன்றாடம் காணும் ஒன்றுதான்..

வயதுக்கேற்ற முதிர்ச்சியுடன் எழுதும் , செயல்படும் ஒரே எழுத்தாளர் பாலகுமாரன் என்றுதான் தோன்றுகிறது

அவர் ஓர் உடையார் . அன்பு , அறிவு மற்றும் முதிர்ச்சி உடையார்

Saturday, August 14, 2010

இலக்கியப் பிழை -அடல்ட்ஸ் ஒன்லி

என்ன எழுதி என்ன டாக்டர் பண்றது... என் மனைவி இப்படி இருக்கறப்ப, என்னால என் எழுத்துக்கு கிடைக்ற பாராட்டை முழுசும் கொண்டாட முடியல.. அவள் மன நோயாளியா இருக்றது ரொம்ப
கஷ்டமா இருக்கு டாக்டர்.. அடுத்த வாரம் எனக்கு ஜனாதிபதி அவார்டு கொடுக்குறாரு... அதை கூட கேன்சல் பன்னிடலாம்னு யோசிக்கிறேன் “


டாக்டர் , எழுத்தாளர் குமரப்பனை பரிவுடன் பார்த்தார்...

“ ஒண்ணும் கவலைப்படாதீங்க... சரி ஆகிடும், கடந்த சில மாதங்களா நல்ல முன்னேற்றம் தெரியுது.. இப்ப அழைச்சுட்டு வந்து இருக்கீங்களா ? “

” ஆமா டாக்டர் ... ”

“ நர்ஸ் .. வெளியே பேஷண்ட் - இவர் மனைவி- வெயிட் செய்றாங்க.. கூட்டி வா “

வள்ளி உள்ளே நுழைந்தாள்.. முகம் வாட்டமாக இருந்தது....

“ வாங்கம்மா..உட்காருங்க “

“ வணக்கம் டாக்டர் “

“ வணக்கம் மா... போன முறையை விட இப்ப பரவாயில்லையா ? “

” பரவாயில்லை டாக்டர் “

” அப்படியா.. சில டெஸ்ட் செய்யணும் ..இது என்ன புத்தகம் ? “

“ என் கணவர் எழுதிய புத்தகம் டாக்டர்.. “

குமரப்பன் முகம் பிரகாசமானது...

“ நல்ல முன்னேற்றம் டாக்டர்.. என் புத்தகத்தை ஐடண்டிஃபை செய்ற அளவுக்கு வந்துட்டா... விட்டா மதிப்புரை எழுதிடுவா போலயே “ குதூகலித்தான்..

டாகடரும் திருப்தியாக புன்னகைத்தார்...

“ பாருங்க மேடம். நல்ல முன்னேற்றம் தெரியுது... தன்னம்பிக்கைதான் முக்கியம்... எல்லாம் சரி ஆகிடும்... சரி மேடம்.... அடுத்த கேள்வி.. இன்சப்ஷன் பேய் படமா.. கனவுகள் பற்றிய படமா”

அவள் திகைத்தாள்... கணவன் முகத்தையும் , டாகடர் முகத்தையும் மாறி மாறி பார்த்தாள்...
“ கனவுகள் படம் டாக்டர்.. “

குமரப்பன் உற்சாகத்தில் கைதட்டியே விட்டான்...

டாகடர் திருப்தியுடன் அடுத்த கேள்விக்கு சென்றார்..

“ உங்க கணவரும் , ஓர் இளம்பெண்ணும் தனியா ஒரு ரூம்ல இருக்குறாங்க,,, இருவரில் ஒருவர் மட்டும் பலான படம் பார்க்கணும் என்ற சூழ்நிலை ... யார் பார்த்தால் நல்லது ..? “

அவள் சற்று யோசித்தாள்..

“ என் கணவர் பார்த்தால் நல்லது “

டாக்டர் திடுக்கிட்டார்.. குமரப்பனும் திகைத்தான்...

“ என்ன இப்படி சொல்றீங்க...? அவர் பார்த்து மூடு வந்தால், அந்த பெண்ணுக்கு ஆபத்தாகி விடுமே ? ! “

வள்ளி சொன்னாள்.. “ அந்த பெண் பார்த்து அவளுக்கு மூடு வந்து விட்டால், என் கணவருக்கு ஆபத்தாகி விடுமே ? “

இப்போது டாகடரே கைதட்டி விட்டார்...

“ டாகடர் ..உங்களை நான் ஒரு கேள்வி கேட்கலாமா? “

“ அஃப்கோர்ஸ்..கேளுங்க .கேளுங்க “

“ ஆர் யூ பிரம் கேரளா ? “

“ அட.. எப்படி சரியா சொல்றீங்க “

“ கேரள மக்கள்தான் அறிவாளிகளை மதிக்க தெரிஞ்சவங்க.,,, அதை வச்சுத்தான் சொன்னேன் “


குமரப்பன் முகத்தில் பெருமிதம்...

“ ஒகே மேடம்.. சங்க இலக்கியம் சார்ந்து ஒரு கேள்வி “

”” ஃபூக்கா, லெவி ஸ்ட்ராஸ், தெரிதா , காப்ரியேல் மார்க்கேஸ், மிலோராத் பாவிச் , விட்ஜெண்ஸ்டைன் , அப்படீனு எதாச்சும் கேளுங்க... நடிகர் சங்கம் இருப்பதே வீண்,,அந்த சங்கத்துக்கு
இலக்கியம் வேறா ? “

டாக்டர் செய்வதறியாமல் சில கணங்கள் திகைத்தார்...

” சரி மேடம்.. கடைசியா ஒரு கேள்வி... இது ஒரு மாதிரியான கேள்வி... கோச்சுக்க கூடாது... உங்க ரெஸ்பான்ஸ் பார்ப்பதுதான் இதன் நோக்கம்...
ஒரு புதிர்... இது உடலின் ஒரு பகுதி... உணர்ச்சி நிலையில் சாதாரண நிலையை விட அளவில் பெரிதாகும்... என்ன அது ? “


வள்ளி சற்றே திகைத்தாள்..

வெட்கத்துடன் “ தெரியலை டாக்டர் “

டாகடர் புன்னகைத்தார் “ கண்ணின் விழி என்பதுதான் சரியான விடை.. நீங்கள் நினைத்தது தவறு.. ஆனாலும் உங்க சிந்தனை சக்தியை பாராட்டுறேன் “

வள்ளி ஒரு வினாடி அவரை பார்த்தாள்...

தன் கணவன் பேண்ட் பாக்கெட்டில் கை விட்டாள்.. எதையோ தடவிப் பார்த்தாள் .

“ டாகடர் நான் ஒண்ணு கேக்குறேன்.. இவர் பேண்ட்டுக்குள் ஒன்றை இப்போது தொட்டு பார்த்தேன்.. எங்கும் நுழைய கூடியது இது.. இதில் ' பூ ' இருக்கும்... சொரசொரப்புத்தன்மை உண்டு...

சுற்றளவு ரெண்டு இன்ச் இருக்கலாம். அது என்ன ? .’ “

டாகடர் அயர்ந்து விட்டார்... பதில் தெரிந்தாலும் அதை சொல்ல விரும்பவில்லை.. அவள் கணவன் அடித்தாலும் அடித்து விடுவான்...

நாயகன் கமல் ஸ்டைலில் “ தெரியலையேயே.. யே “ என்றார்..

“ ஐந்து ரூபாய் காயின் எனபதுதான் சரியான விடை... நீங்க நினைத்தது தவறு... ஆனாலும் உங்க சிந்தனை சக்தியை பாராட்டுறேன் “

டாகடர் எழுந்து நின்று கைதட்டினார்....

“ குமரப்பன்..உங்க மனைவி என்னையவே மடக்கிட்டாங்க...ஷீ இஸ் ஆல்ரைட் நவ்... உங்க கவலை இனி இல்லை... கொஞ்சம் வெளியெ வெயிட் செய்ங்க... சில அட்வைஸ் சொல்லி அனுப்பிசுடுறேன் “

குமரப்பன் வெளியேறினான்...

“ மேடம்.. வலைபதிவுகளையும் , தமிழ் இலக்கியத்தையும் படிச்சு உங்க கணவர் மன நிலை பாதிக்கப்பட்டுடுச்சு... தமிழ் நாட்டுல எழுத்தை மதிப்பதில்லை, ஊர்ல இருக்குற எல்லா பொண்ணுங்களும்

தன்னையே சைட் அடிக்கிறாங்க... தனக்கு விருது தரப்போறாங்க,, நேரங்கெட்ட நேரத்துல செக்ஸ் ஜோக் சொல்றதுதான் இலக்கியம்... அப்படீனு பல தவ்றான கருத்துக்கள்
அவர் மனசுல பதிஞ்சு போச்சு... இதை நீங்க ஒத்துக்கலைனதும் உங்களுக்கு மன நிலை சரியில்லைனு உங்க மேலயே பழியை போட்டுட்டாரு..

உண்மையில் அவர் மேலதான் பிரச்சினை.. இதற்கு நிவாரனம் அவர் போலவே நீங்களும் பேசறதுதான்.. இப்படி பேசுனாத்தான் அவருக்கு ஆறுதலா இருக்கும்..போக போக சரி ஆயிடுவாரு..

அதுவரைக்கும் அவரு வலைப்பதிவுகள் எதுவும் படிக்காம பார்த்துக்கோங்க.. குறிப்பா pichaikaaran.blogspot.com அப்படீங்கற பிரபல வலைபதிவை படிக்க விடாதீங்க “

Thursday, August 12, 2010

கடவுள் ஏன் கல்லானான் ?

அவன் சொன்ன ”காம வெறி” குஜால் ஜோக்கை கேட்டு சிரித்து முடிக்கும்போதுதான், அவன் கையில் அவன் கொண்டு வந்த பை மிஸ் ஆகி இருப்பதை உணர்ந்தேன்..

ஒரு வேலை பைக்கிலேயே வைத்து விட்டானா.....

அவன் சொன்ன ஜோக்கின் தாக்கம் குறைய ஆரம்பித்தது..

”யாரையும் அனுமதிக்க வேண்டாம் “ கண்டிப்ப்பாக சொல்லி விட்டு வேலையில் மூழ்கி இருந்தேன்..

நான் ஒரு சோம்பேறி. வேலையில் இறங்க மாட்டேன். ஆனால் இறங்கி விட்டால் என்னை தடுக்க் முடியாது. எழுத்தாக இருந்தாலும் சரி.. வடிவமைப்பு ஆக இருந்தாலும் சரி..அல்லது டெண்டர் கோருவது பற்றி

தகவல் சேர்ப்ப்பாக இருந்தாலும் சரி..

கனினி முன் அமர்ந்து இருந்த என்னை, ரிஷப்ஷன் குரல் அழைத்தது....

“ சார்..உங்களை பார்க்க.... “


“ யாரக இருந்தாலும் அனுமதிக்க வேண்டாம் “

“ சார்..உங்க நண்பராம். பெயர் சேகராம் “

ஒ..அவனா... கல்யாண மாப்பிள்ளை...

“ சரி.. வர சொல்லுங்க “


கல்யான களையுடன் முகம் பளிச்சிட்டது...

“ என்னடா.. ஆஃபிசுக்கே வந்துட்ட... சாய்ன்காலம் வீட்டுக்கு வர்ரேனு சொல்லி இருந்தேனே “

“ ஜெவல்ஸ் வாங்கனும்டா மச்சான்... நீ கூட இருந்தா நல்லா இருக்கும்... கைல கேஷ் வேற நிறைய இருக்கு “


சற்று யோசித்தேன் ... “ சரி வா , போகலாம் “

*********************************************************************************************************************

முதலில் துணி கடைக்கு சென்றோம்... துணியை விட , அங்கு இருந்த காசாளர் பெண் அவனை கவர்ந்து விட்டாள்...

“ கடலை போட்டது பொதும் .. வா “ முணுமுணுத்தென்... மனதின்றி என்னுடன் வந்தான்...

ஜிகர்தண்டா சாப்பிட்டு விட்டு செல்லலாம் என முடிவெடுத்து, கடையில் நுழைந்தோம்....

பையன் படு உற்சாகமாக இருந்தான்... “ ஒரு ஜோக் டா மச்சி..

ஒரு பெண் டாக்டரிடம் சென்றாள்.. டாக்டர் எனக்கு பாலுணர்வு கட்டுக்கடங்மால் போய்க்கிட்டு இருக்கு. யாராவது சாதரணமா பெசினால் கூட செக்ஸ் அர்த்தம் தான் தோணுது.. அதான் சிகிச்சைக்கு வந்தேன் ..

டாகடர் அவளை பரிவுடன் பார்த்தார்.. “ நல்ல ஸ்பெஷலிஸ்டை பாரும்மா... என் கிட்ட வேண்டாம்.. இங்கே ஃபீஸ் அதிகம் “

“ எவ்வளவு ஃபீஸ் ? “

“ ஒரு மணி நேரத்துக்கு என் ஃபீஸ் 200 ரூபாய் “

அவரை செக்சியாக பார்த்தப்டி கேட்டாள்.. “ ஃபுல் நைட்டுக்கு உங்க ஃபீஸ் எவ்வளவு ? “

அட ஆண்டவா , ஹ ஹா.. என்று சிரித்த எங்களை அனைவரும் திரும்பி பார்த்தனர்..

அப்போதுதான் அவன் கை பை மிஸ் ஆகி இருப்பதை கவனித்தேன்..

” டேய். பேக் எங்கடா ? பைக்ல வச்சுட்டீயா ?’

அதிர்ச்சிசுயுடன் என்னை பார்த்தான்..

ஓ காட்... தெரியலைடா.. எங்கே போச்சு...

கலவரம் எங்களுக்குள் புகுந்தது... முகம் குப் என வியர்ட்து விட்டது....

“ அய்யொ ..எங்கே விட்டோம் .. கேஷ் இருந்துச்சே..ஐய்யொ,,கவன குரைவா இருந்துட்டொமே..பெசாம கார்டை யூஸ் செஞ்சு இருந்து இருக்கலாம்.. கேஷ் கொண்டு வந்தது தப்ப்பா போச்செ...

மனம் புலம்பியது...

“ வாடா.. அந்த துணி கடைக்கு போய் பார்க்கலாம் “

கடவுளை வேண்டிகொண்டே பைக்கில் பறந்தோம்..




அங்கே விட்டு இருந்தாலும், அங்கேயே இருக்குமா.. பலர் வரும் இடம்.....


அந்த காசாளர் பெண் ஆர்வத்துடன் எங்களை பார்த்தாள்...

அவளை சைட் அடிக்க மூடு இல்லை....

சட் என அவன் முகம் பிரகாசமானது.... அந்த பை அவள் அருகில் இருந்த மேஜையிலே வைக்க பட்ட நிலையிலேயே இருந்தது... அன் பிலீவபிள்....

யாரும் கவனிக்க வில்லை போலும்... கவனித்தாலும், அது அந்த பெண்ணுடையது என நினைத்து எடுக்காமல் இருந்திருக்கலாம்..

உற்சாகமாக கிளம்பினோம்..

“ அதை என்கிட்ட கொடு.. நான் வச்சுக்கிரேன்..” பைய வாங்கி நெஞ்சுடன் அனைத்துகொண்டேன்...

“ டேய்.. நேரம் சரியில்லை... இன்னொரு நாள் கூட வாங்கிக்கலாம்.. நேர வீட்டுக்கு போ “ என்றென்..

” இல்லைடா.. கடவுளுக்கு நன்றி சொல்லணும் “

என் பதிலுக்கு காத்திராமல், ஒதுக்குப்புறமாக இருந்த கோயில் முன் வண்டியை நிறுத்தினான்..

எனக்கு ஈடுபாடே வரவில்லை... ஏதோ தவறு நடப்பது போலவே தோன்றியது...பையை இறுக்கமாக பிடித்தப்டி இருந்தேன்.. என் டென்ஷன் அவனுக்கு கிண்டலாக இருந்தது...


வழிபாட்டை முடித்து வெளியெ வந்தோம்..

என்னடா ..பை பத்திரமா இருக்கா?

கிண்டலாக கேட்டான்...

“ பாரு பத்திரமா இருக்கு..சீக்கிரம் வா .. போகலாம்.. வீடு போய் சேர்ந்தால் தான் நிம்மதி “ என்றேன்..

வெளியே வந்தோம்...

அப்போதுதான் கவனித்தோம்...

நிறுத்தி இருந்த புத்தம் புதிய பைக் திருடப்பட்டு இருந்தது...

Sunday, August 8, 2010

INCEPTION உண்மையான ஒரு விமர்சனம்

இன்சப்ஷன் படம் வந்தாலும் வந்தது... பலரும் விமர்சனம் எழுதி குவித்து விட்டார்கள்..

ஒவ்வொருவரும் ஒவ்வொரு கதையை, சம்பவத்தை கற்பனை செய்து கொண்டு எழுதியதை படித்து பலரும் குழம்பி இருப்பீர்கள் .. ஓர் எழுத்தாளர் இந்த பிரச்சினையில் மாட்டிக்கொண்டு , இனி விமரசனம் எழுத

மாட்டேன் என கோபித்து கொண்டதுதான் , நாம் கண்ட பலன்..


சரி.. உன்மையான விமர்சனத்தை படிக்க விரும்புவர்களுக்கு இதை சமர்ப்பிக்கிறேன்...

***********************************************************************************
கதா நாயகன் காப் என்பவன் பெரிய மந்திர்வாதி... கூடு விட்டு கூடு பாயும் கலையில் கில்லாடி ..

அவ்வப்போது வன் உடலில் இருந்து அவன் ஆவி மட்டும் புரப்பட்டு சென்று மற்றவர்கள் உடலில் புகுந்து புகுந்து கொண்டு முக்கியமான ரகசியங்களை திருடி விடும்... மீண்டும் இவன் உடலுக்குள் புகுந்து கொண்டு அந்த ரகசியத்தை

இவனுக்கு தெரிவிது விடும்... அது மட்டும் அல்ல... மற்ற உடல்களில் இவன் ஆவி இருக்கும் போது, இந்த ஆவியின் கட்டுப்பாட்டில்தான் அந்த உடல்கள் இருக்கும்...

புரியவில்லையா? விளக்குகிறேன்...

நம் மொபைல் போனில் இருக்கும் சிம் கார்டை இன்னொரு மொபைலில் பொருத்தி விட்டால், அந்த் போன் இந்த சிம் கார்ட் கட்டுப்பட்டில் இருக்கும் அல்லவா? அந்த போனில் இருக்கும் நம்பர்களை , சிம் கார்டில் பேக் அப் எடுத்து கொண்டு

நம் போனில் பயன்படுத்திக்கொள்ளலாம் அல்லவா... அதை போலத்தான்...

இந்த தொழிலுக்கு உதவியாக அவனது குருனாதர் கொடுத்த பம்பரத்தை பயன்படுத்தி கொள்கிறான்..

அமெரிக்க ஜனாதிபதியின் மகள் இந்த திறமையால் கவரப்பட்டு தனக்கும் பயிற்சி தருமாறு வற்புருத்துகிறாள்.. வேறு வழியின்றி சம்மதிக்கிறான்.. மால் என்ற அந்த பெண்னை தர்கொலை செய்து கொள்ளுமாறும்

, அப்போதுதான் அவள் ஆவியாகி மற்ற உடல்களில் புக முடியும் எனவும் சொல்ல்லி தர்கொலைக்கு தூண்டுகிறான்.. இந்த கலையில் தற்கொலை பயப்பட வேண்டிய ஒன்றல்ல..

ஜாலியாக செத்து செத்து விளயாடலாம்..

அவள் தற்கொலை செய்து ஆவியாகிறாள் ( அதன் பின் ஆவி வடிவில் படம் முழுதும் வருகிறாள் )

ஆனால் இதை புரிந்து கொள்ளாத அமெரிகக் அரசு அவனை நாடு கடத்திகிறது....


ஆனால் தேசபக்தி மிக்க ஹீரோ தாய் நாடு திரும்ப துடிக்கிறான்...

இதை அறிந்த வில்லன், அவனை அமெரிக்க ஜனாதிபதி ஆக்க தன்னால் முடியும் என்ரும் , தன் எதிரியின் உடலில் புகுந்து அவனை தர்கொலைக்கு தூண்ட வேண்டும் என சொல்ல ஹீரொ ஒப்பு

கொள்கிறான்..

இந்த முயற்சியில் அவனுக்கு உதவும் கல்லூரி மாணவியான ஏரியன் அவனை காதலிக்க ஆரம்பிக்கிறாள்...எதிர்பாராத விதமாக, அவனை ஒரு பெண் ஆவியும் காதலிப்பதை கண்டு பிடிக்கிராள்..

மாபெரும் கண்ணாடி உன் நின்று அலன்காரம் செய்தாலும் , தன்னல் ஆவி பெண்ணின் அழக்கு ஈடாக முடியாது என புரிந்து கொள்கிறாள்..

அதன் பின் அவல் என்ன முடிவெடுதாள்..ஆவி என்ன முடிவு எடுத்த்து... ஹீரொ என்ன முடிவு எடுதார்,...

என்பதை விறு விறுப்பாக சொல்லி இருக்கிறார்கள்...

பல ஆஸ்கார் விருதுகள் படத்துக்கு கிடைக்கும்..

நான் பார்த்திலேயே இப்படி ஒரு படத்தை கண்டதில்லை...

வசனங்கள் அருமை...

பாடல்கள் இல்லாதது ஒரு குறை....

இசை நம் மனதை என்னவோ செய்கிறது.......

உலகில் இப்படி ஒரு வந்ததே இல்லை என உறுதியாக சொல்லலாம்..இனிமேலும் இப்படி இரு படம் வர முடியாது....

Wednesday, August 4, 2010

aunty யின் காம வெறியும் , பாண்டியின் இலக்கிய வெறியும் ... அடல்ட்ஸ் ஒன்லி



(இந்த கதையில் வரும் பெயர்கள் , சம்பவங்கள, இடங்கள் அனைத்தும் கற்பனையே... )

" என்னது, பலான படம் பாக்குறதுக்கு உனக்கு சம்பளமா?" வாயை பிளந்தனர் பாண்டியின் சகாக்கள்...
அந்த காலத்தில் நம்முடன் சேர்ந்து மது தியேட்டரில் பிட்டு படம் பார்த்தவன் இன்று சீனைசென்னை சென்று பெரிய ஆளாகி , மீண்டும் ஊருக்கு வந்ததை பாராட்டாமல் இப்படி பொறாமை படுவது பாண்டிக்கு சற்று ஏமாற்றமாக இருந்தது...

"சென்னை சென்று எப்படி எல்லாம் கஷ்டபட்டோம்.. எப்படி எல்லாம் சாதனை செய்தோம்.. இன்று எந்த கண்டிஷனில் ஊருக்கு வந்து இருக்கிறோம் , என தெரியாமல் இப்படி நினைக்கிறார்களே !!! "

பாண்டியின் சிந்தனை சிறகுகள் பின்னோக்கி பறந்தன...

********************************************************************************************************************************************************************
பசங்களுடன் சேர்ந்து ஊர் சுற்றுதல், சீன் படம் பார்த்தல் என இருந்தாலும் நன்றாக படிப்பவன் பாண்டி... எந்த தேர்வு எழுதினாலும் பக்கம் பாகாமாக எழுதுவான்... அடிஷனல் சீட் கொடுத்து , தேர்வு நடத்துபவரே திணறி போவார்... நண்பர் அணியில் அவன் மட்டும் படிப்பை முடித்து சென்னைக்கு வேலை தேடி வந்தான்...


வேலைக்கான தேர்வுகள் அவனுக்கு ரசிக்க வில்லை .... எழுத வாய்ப்பு இல்லை.. சும்மா டிக் அடிப்பது.... அவனுக்கு ஒத்து வரவில்லை...

வேறு வேலை தேடினான்...

ஒரு பத்திரிகை அலுவலகம் சென்றான்...

" வாங்க தம்பி " ஆசிரியர் மன்னாரு வரவேற்றார்...

அமர்ந்தான் பாண்டி...

" எனக்கு நூல் விமர்சனம் எழுத ஆள் தேவை... இதோ, இந்த மேஜைல இருக்கிற புத்தகத்தை படிச்சுட்டு , எழுதி காட்டுங்க.. எனக்கு பிடிச்சு இருந்தா வேலை... "

மேஜையை காட்டிவிட்டு அவர் சென்று விட்டார்...

விமரசம எழுதி பழக்கம் இல்லை.. ஆனால் எழுத்துதான் கை வந்த கலை ஆச்சே.. நம்பிக்கையுடன் படிக்க ஆரம்பித்தான்... பெரிய புத்தகம்...


கலையில் சென்ற மன்னாரு மாலைதான் வந்தார்.. எழுதியதை காட்டினான் பாண்டி...

எல்லோரும் சும்மா நாலு வார்த்தைகள் எழுதி மன்னரை எரிச்சல் படுத்துவார்கள்... இவன் எழுதியது நாற்பது பக்கம்... அசந்து போய் படிக்க ஆரம்பித்தார் ..

அருமை , அருமை...அட என சொன்னவாறே படித்தார்... விமர்சனத்தை படித்தவுடன் அவருக்கே அந்த நாவலை படிக்க வேண்டும் என்ற ஆவல் ஏற்பட்டது...

" சுப்பர் தம்பி " என்றவரே நாவலை எடுத்தவர் , அதிர்ச்சி அடைந்தார்....

புத்தக கவர் பிரிக்கபடமலேயே இருந்தது... " அட பாவி... புத்தகம் படிக்காமலேயே விமரசனமா... யாரை ஏமாற்ற பாக்குற/.. என் அனுபவமும , உன் வயசும் ஒன்னு....ராஸ்கல்.. கெட் அவுட் "அலறினார்..

" சார்.. பொய் சொல்லி வாழ வேண்டிய அவசியம் எனக்கு இல்லை ... படிச்சுதான் எழுதுனேன் " ரோஷத்துடன் சொன்னான் பாண்டி...

" எதை படிச்ச ? "

" இதோ. மேஜை மேல இருந்த இந்த புத்தகத்தைதான் " அவன் காட்டிய புத்தகத்தை பார்த்து திகைத்து போனார் மன்னாரு

"இந்த புத்தகத்துக்கு நாற்பது பக்க விமர்சனமா ?? !!! " அவன் காட்டிய புத்தகத்தை திகைப்புடன் பார்த்தார்..

அவன் காட்டியது............ டெலிபோன் டைரக்டரி !!!!!!!!!

மீண்டும் விமர்சனத்தை படிக்க ஆரம்பித்தார்..

" நான் லீனியர் பாணியில் கதை எங்கு ஆரம்பிக்கிறது எங்கு முடிகிறது என தெரியாமல் அருமையாக எழுதப்பட்டுள்ளது... பின்நவினத்துவ எழுத்துக்கு உதாரணம் இதுதான்... மண்ணின் மனத்துடன் பல கேரக்டர்கள் நம்முன் நடமாடுகின்றன.... ஒவ்வொரு அத்தியாயத்தையும் நமபர் அடிப்படையில் பிரிக்காமல் , எழுத்தின் அடிப்பதையில் பிரித்து இருப்பது , எழுத்தாளரின் கிரியேட்டிவிட்டியை காட்டுகிறது.... ஊரின் ஒவ்வொரு தெருவுக்கும்செல்லும் உணர்வை நாவல் ஏற்படுத்துகிறது.."

என்பது போல நாற்பது பக்கம் சென்றது,,

கடைச்யில் முத்தாய்ப்பாக எழுதி இருந்தான்..

பிளஸ் : பலதரப்பட்ட கேரக்டர்கள் இருப்பது

மைனஸ் : சம்பவங்கள் அதிகம் இல்லாதது

வெர்டிக்ட் ; வித்தியாசமாக எழுத நினைப்பவர்களும், எழுத்தை பயில நினைப்பவர்களும் ஒருவாட்டி படிக்கலாம் ...

ஆடி போய் விட்டார் மன்னாரு.... " யு ஆர் அப்ப்பாயன்ட் டேட் "

*************************************************************************************************************************************

அதன் பின் பாண்டியின் இலக்கிய பாய்ச்சல் ஆரம்பித்தது... மகிழ்ந்துபோன மானாறு அவனை பல இடங்களுக்கும் கூட்டி செல்ல ஆரம்பித்தார்..

ஒரு முறை அவனை பலான தியேடருக்கு கூட்டி சென்றார்...

"படம் எப்படி? " அவனிடம் இடைவேளையின்போது கேட்டார்..

" டைரக்ஷன் சரி இல்லை சார் "

" இந்த படத்துல ஆக்ஷன்தனே முக்கியம் " என நினைத்து கொண்ட அவர், அவனை புரியாமல் பார்த்தார்...

" கதாநாயகனோட குறி , கதாநாயகிக்கு தெரியாமல் இருந்தால்தான் கதை நல்ல இருந்து இருக்கும்... தெரியற மாதிரி இருப்பது சரி இல்லை "

ஆடி போனார் மன்னாரு...

" குறி எப்ப தெரிஞ்சுது? " நாம் சரியாய் பாக்கலை போல என நினைத்து கொண்டார்...

" காதலிக்கும் போது, அவனோட குறி , அதாவது நோக்கம் உடல்சுகம்தான் னு , அவன் பார்வை காட்டி கொடுதுடுது... ..கேமிர அந்த இடத்துல சூப்பர் "

" ஒ.. அந்த குறியா ? " சற்று நிம்மதி அடைந்தாலும், அவனது வித்தியாசமான பார்வை அவரை கவர்ந்தது..

" இனி மேல் , ஊர்ல இருக்குற எல்லா பிட் படத்தையும் பார்த்து விமர்சனம் எழுதுவதுதான் உன் வேலை . டபுள் சாலரி உனக்கு " என்றார்...

*********************************************************************************************************************************************

ஜாலியாக படம் பார்ப்பது வேறு.. ஆனால் விமரசனத்துக்காக பார்க்க போவது டென்ஷனாக இருந்தது,,,,

பக்கத்தி சீட்டில் ஒரு லோக்கல் அரசியல்வாதி இருந்ததை பார்க்க ஆசாரியாமாக இருந்தது...

" நான் பத்திரிக்கையாளன்... உங்களை பார்த்ததில் சந்தோசம் " கைகுல்க்கினான்.. அவர் சற்று சங்கடமாக கை குலுக்கினார்...

படம் சூடு பிடிக்க தொடங்கியது...

அவர் மெதுவாக பேச்சு கொடுக்க ஆரம்பித்தார்...

" சார்.. என்னோட தம்பி... ? "

" சொல்லுங்க சார்.. அவரும் அரசியல்ல இருக்காற... தேர்தல்ல நிக்க போறாரா... " குடும்ப அரசியல் என கவர் ஸ்டோரி செய்யும் ஆவலில் கேட்டான்...

" ஆமா... தம்பி நிக்கிறான்... நீங்கதான் கை கொடுக்கணும் ..உதவியா இருக்கும்..நானும் கைம்மாறு செய்றேன் "

" இதெல்லாம் யோசிச்சிதான் சொல்ல முடியும் . ஆசிரியரை கேட்கணும் " அவன் பந்தாவாக சொல்ல அவர் ஏமாற்றம் அடைந்தார்...

கொஞ்ச நேரம் கழித்து , பேச்சு கொடுத்தான்... " சரி சார்.. அவன்ர் தேர்தல்ல ஜெயிக்க நான் கை கொடுக்க தயார் "

" ஒன்னும் வேண்டாம்... அவன் சுயேச்சையாகவே ஜெயிச்சுட்டான் "........

அவர் எழுந்து செல்வதை புரியாமல் பார்த்தான் பாண்டி...

***************************************************************************************************************************


அவன் விமர்சனம் பரபரப்பை ஏற்படுத்தியது... புத்தகத்தின் பாதி பக்கங்கள் அவனுக்கு ஒதுக்கப்பட்டன.. ஒவ்வொரு காட்சியையும் ரசித்து எழுதுவது பெரிய வரவேற்பை பெற்றது...

ஆனால் ஆரம்ப காலத்தில் அனுபவம் இல்லாமல் தவறு செய்தான்...

தியேட்டருக்கு செல்லும் வழியில் , ஒரு கோழி குஞ்சுதனியாக கத்தி கொண்டு இருப்பதை பார்த்தான்... இதை வீட்டுக்கு எடுத்து சென்றால் வறுத்து சாப்பிடலாமே ..

நைசாக பேன்ட் பாக்கெட்டில் எடுத்து வைத்து கொண்டான்..

எல்லோரும் அவனையே பார்ப்பது போல தோன்றியது... பேன்ட் பக்கெட்டில் கோழி குஞ்சு முண்டி கொண்டு இருப்பது எரிச்சலாக இருந்தது... " அனுபவமில்லாமல் திருட கூடாது,, "

அவன் அருகில் பள்ளி மாணவர்கள் சிலர் மனது படத்தை ரசித்து கொண்டு இருந்தனர்.... அவர்களை பார்த்த பாண்டி திடிக்கிட்டான்.. அவர்களும் கோழி குஞ்சை திருடி பாக்கெட்டில் வைத்து இருந்ததும், அது முண்டி கொண்டு இருப்பதும் ,தெரிந்தது..

" அட திருட்டு பசங்களா " நினைத்து கொண்டான்...

அதில் ஒருவன கோழி குஞ்சை கொன்று விட்டன போல... ரத்தம் வடிவது போல தோன்றியது..

" ஐயோ..கோழி குஞ்சை கொன்னுட்டான் ": தன்னை மறந்து கூவ, அவர்கள் அதிர்ந்து போய் பார்த்தனர்..

" யோவ்... படத்தை பாருய்ய... இதை எல்லாம பாக்குறது.. " எரிச்சலுடன் எழுந்து சென்றனர்.. அதில் இருந்து யார் பிரச்சினையிலும் தலை இடாமால் , படம் மட்டும் பார்க்கஆரம்பித்தான்.
***************************************************************************************************************************


தமிழ்நாட்டில் ஒரு அதிர்வை உண்டாக்கியது அவன் எழுத்து.. பலான படங்களுக்கு ஓர் இலக்கிய அந்தஸ்து கிடைத்தது...

நல்ல படங்கள் பிளப் ஆக தொடங்கின...

பெரிய நடிகர்கள் பயந்தனர்... அந்த பத்திர்க்கையை தட்டி வைக்க முடிவு செய்தனர் ..

*****************************************************************************************************************************

" சார்..இனி மேல் இது போல எழுத மாட்டோம் சார் " மன்னாரு பம்மினார்...

" பிட்டு படத்தை இப்படியா ரசித்து எழுதுவீங்க... எம்பது பக்கத்துக்கு சிறப்பு மலர் வேற .. என் தம்பி படம் வர்ற நேரத்துல உங்கள மாதிரு ஆளுங்களை நினைச்ச பயம் இருக்கு... இனிமே எழுத மாட்டோம் எழுதி கொடுத்துட்டு, தேவையான பணம் வாங்கிட்டு போங்க "

பாண்டி எழுத ஆரம்பித்தான்..

திடிரென எழுதுவதை நிறுத்தி விட்டு யோசிப்பதை பார்த்த மன்னாரு குழம்பினார் ..

" என்ன ஆச்சுப்பா ? "

"அடிஷனல் சீட் வேணும் சார் "

மன்னாரு மயக்கம் அடைந்தார் .

********************************* a short story by pichaikkaaran.com *************************************************************

Tuesday, August 3, 2010

துரோகி 2 (தொடரச்சி )

( முதல் பகுதியை படித்து விட்டு இதை படிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் )

தொடர்ச்சி......

திடீரென எனக்கு ஐடியா தோன்றியது...

பிரெம் ஆனந்தை , டைரி முழுதும் பிரேமா பிரேமா என்றெ குறிப்பிட்டு இருந்தான்.. அவனுடன் வேலை பார்க்கும் சக ஊழியரின் பெயரும் பிரேமா...

மனதில் விஷபாம்பு படம் எடுத்து ஆடியது...

அதை அப்படியே ரோஜாவிடம் காட்டினேன்.. வனுக்கும் பிரேமாவுக்கும் கள்ள தொடர்பு இருப்பதாக இட்டு கட்டினேன்....

********************************************************************************************************************************************
சண்டை நடக்கும் , பிரச்சினை பெரிதாகும் என்றுதான் நினைத்தேன்... ஆனால், ஆனால், --- ரோஜா தற்கொலை வரை போவாள் என சற்றும் எதிர்பார்க்கவில்லை...கண்வனின் போக்கு பிடிக்காத்தால்

தற்கொலை... அதிர்ந்து போனேன்..

என் பொறாமையால் ஒரு உயிரை கொன்று விட்டேனே... நண்பனுக்கு துரோகம் செய்த எனக்கு என்ன தண்டனை கொடுக்கலாம்... ரோஜா எவ்வளவு நல்லவள்... யாரையும் காட்டி கொடுக்காமல், உடல் நலம்

சரியில்லாத்தால் தற்கொலை செய்து கொள்வதாக எழுதி வைத்து விட்டு போய் சேர்ந்து விட்டாளே...

தனியாக அமர்ந்து யோசித்து கொண்டு இருந்த போதுதான் அவன் வந்தான்...

“ உன்கிட்ட பேசணும் “

” சொல்லு “

“ எல்லாத்துக்கும் காரணம் நீதான் நு எனக்கு தெரியும் “:

அட பாவி... என்ன செய்ய போகிறான்..போலிசுக்கு போக போகிறானா...

“ நான் கேட்க விரும்புவது ஒண்ணே ஒண்ணுதான்... ”

” என்ன ? “ குரல் நடுங்கியது

” எனக்கும் பிரேமாவுக்கும் கள்ள தொடர்பு இருப்பது உனக்கு எப்படி தெரிந்தது? நான் தண்ணி அடிப்பது , மத்த தில்லாலன்கடி வேலை செய்வதெல்லாம் யாருக்கும் தெரியாதே.
நீ எப்படி தெரிஞ்சுகிட்ட ? ..இது மட்டும்தான் தெரியுமா.. இல்லை ரோஜா உண்மையில் எப்படி செத்தாள் ங்றதும் தெரியுமா ? “

--------------------------------------- a short story by pichaikaaran.blogspot.com ---------------------------------------------------------------------------------------------------------------------

துரோகி 1

”உன்னிடம் கொஞ்சம் பேசணும் ”
தீவிரமான முகத்துடன் ரஞ்சன் என் அறைக்குள் வந்ததும் என்னை திகில் சூழ்ந்தது.
அவனுக்கு செய்த துரோகத்துக்கு அவன் என்னை என்ன செய்தாலும் தகும்.
அவனை முதல் முதல் பார்த்தது வட பழனி சிக்னல் அருகில். இரவு நேரம். வார இறுதி. பைக்கில் வந்து கொண்டு இருந்தேன். சாப்ட்வேர் எஞினியர் போல தோற்றம் அளி மூவர் என் முன் பைக்ககிள் சென்று
கொண்டு இருந்தார்கள். உற்சாகமான துள்ளலுடன் சென்ரனர். “ நல்ல சம்பளம்.. நல்ல வேலை .. பசங்க எஞ்சாய் பண்றாங்க” பொறாமையுடன் நினைத்துக் கொண்டேன் .
இருக்கும் வரை இங்கெ துள்ளுவாங்க..அமெரிக்காவில் வேலை கிடைத்தால் பறந்துடுவானுங்க...
சிக்னல் அருகில் போக்குவரத்து போலீஸ் அனைவரையும் மடக்கியது.

டாக்குமண்ட், லைசன்ஸ் , குடித்து இருக்கிறார்களா என்று சோதனை செய்தனர். அவர்கள் அதை பற்றியெல்லம் சட்டை செய்யாமல், காசை விட்டு எறிந்து விட்டு கிளம்ப துடித்தனர்.

என்னை சற்று நக்கலாக பார்த்தது போல தோன்றியது.. என்னிடம் காசும் இல்லை.. லைசன்சும் இல்லை. என்ன செய்வது என யோசித்து கொண்டு இருந்தேன்.

என்னை முறைத்த காவலர், சரி சரி போங்க என்றார். கேள்வி எதுவும் கேட்காமல், ஒன்றும் செக் பண்ணாமல் அனுப்புவது எனக்கு சங்கடமாக இருந்தது..

“ நானும் ரவுடி..என்னையும் கைது பண்ணுங்க “ என்று வடிவேல் பாணியில் மனதில் கெஞ்சினாலும், என்னிடம் எதுவும் பெயராது என்று முடிவெடுது என்னை அனுப்புவதிலேயெ குறியாக இருந்தனர்.

நொந்து நூடுல்சான நான் கிளம்பினேன். சாப்ட்வேர் அணி ஆளுக்கு ஒரு திசையாக பறந்தனர். ஒருவன் மட்டும் என் முன் சென்று கொண்டு இருந்தான்.

திடீரென அவன் பைக்கில் இருந்து ஏதோ ஒன்று கீழே விழுந்தது. ஏதாவது விவாகரமான மேட்டரா என ஆவலுடன் பார்த்தேன்.
எதிர்பாராத ஒன்று . கீழே விழுந்தது ஒரு தமிழ் நாவல் . சுந்தர ராமசாமியின் “ ஜே ஜே சில குறிப்புகள் “ .. இவனுகெல்லம் எதுக்கு இது என தோன்றினாலும் அவனிடம் அதை கொடுத்து விட மனசாட்சி தூண்டியது...



வளசரவாக்கம் அருகில்தான் அவனை பிடிக்க முடிந்தது...

“ பாஸ்..உங்க புத்தகம் “ கொடுத்தேன்

அவனுக்கு ஆச்சரியம் . இதை கொடுக்க பிரயத்தனப்பட்ட்டது அவன் மனதை தொட்டு விட்டது...

” தமிழின் முதல் பின் நவீனத்துவ நாவல் ..இதை நீங்கள் படிப்பது சந்தோஷம் ..அதான் விரட்டி வந்து கொடுத்தேன் “ என்றேன்..

“இதை பின் நவீனத்துவம் என ஒத்து கொள்ள முடியாது ..” என்று அவன் பேச ஆரம்பித்தான்... எனக்கு பிரமிப்பாக இருந்த்தது... ஆனாலும் பொறாமையும் அதிகரித்தது...

“ என் பேரு ரஞ்சன் “

” குமார் “ இருவரும் கை குலுக்கி அப்போது பிரிந்தோம்..

***********************************************************************************************************

பின் கொஞ்சம் கொஞ்சமாக நெருங்கினோம். அப்போது நான் ஒரு ரூமில் வாடகைக்கு இருந்து வந்தேன். எல்லோரும் சேர்ந்து ஒரு வீடு வாடககிக்கு எடுத்து தங்கினால் , செலவும் குறைவு , வசதியும் அதிகம் என்று
கணக்கிட்டு , ஒரு வீட்டை பிடித்தோம்..

நான் தினமும் ஏழு மணிக்குத்தான் கண் விழிப்பேன்,. அவன் 4.30க்கே எழுந்து , குளித்து தியானம் செய்து, பூஜை வேறு செய்து முடிப்பான்... சாப்ட்வேர் துறையில் இருந்தாலும் , இப்படி ஆச்சாரமாக இருப்பது
எனக்கு அவன் மேல் பொறாமையைத்தான் அதிகரிக்க செய்தது..

*******************************************************************************************************************

“ நம்ம காதல் உண்மைதான்.. ஆனால் வாழ்க்கையில் சில சமரசங்கள் செஞ்சுதான் ஆகனும்... உங்க இத்யம் உங்க இத்யம் பெருசுதான்.. ஆனால் எங்க அப்பா , நல்ல சம்பளத்துல வேலை பார்க்குற மாப்பிலையை

பார்த்துடார் “

ரோஜா சொல்வதை கலக்கமாக கேட்டுக்கொண்டு இருந்தேன்.
ப்ணம்தான் வாழ்க்கை ..

இதுதான் வீட்ல பார்த்து இருக்குற மாப்பிள்ளை யோட போட்டோ “


போட்டாவை பார்த்து அதிர்ந்தேன் . ரஞ்சன் ....

அவன் மேல் இருந்து வந்த பொறாமை , கொலை வெறியாகவே மாறியது...

*************************************************************************************************************************
அவன் முன் போலவே பழகி வந்தான். நாண் இருக்கும் வீட்டுக்கு அடிகடி வருவான். விவாதிபோம்.. ஆனால் அவன் வீட்டுக்கு நான் எப்போதாவது ஒரு முறைதான் போவேன்..

ஒரு நாள் மாலை அவசரமாக வந்தான்.. “ மச்சான் .. அவசரமா மீட்டிங் இருக்கு ... என் வீட்ல இந்த பெட்டியை கொடுத்துடு... நான் வர லேட் ஆகும் நு சொல்லிடு... வீட்ல போன் பிராப்ளம் ..பேச முடியல



ஒகே”


வீட்டில் அவன் மனைவி ரோஜா வரவேற்றாள்...
“ இந்த பெட்டியை கொடுக்க சொன்னான் “ கொடுத்தேன்..

“ அவர் எங்கே ? “

” வீக் எண்ட் பார்ட்டி “ குறுக்கு புத்தி வேலை செய்தது

அவள் முகம் மாறியது...

“ அவர் ட்ரின்க்ஸ் எடுத்துக்குவாரா “

“ எப்பவும் இல்லை./..சில சமயம் சந்தோஷமா இருக்கனும்னு நினைக்ரபோ மட்டும் “

அவள் அதிர்ந்தாள்

“ சந்தோஷம்னா “

“ இதெல்லாம் உனக்கு- சாரி - உங்களுக்கு தெரிஞ்சு இருக்கும்னு நினச்சு உளறிட்டேன்... சாரி “ பறந்தேன்..

**************************************************************************************************************************

அவனுக்கு எதிரான ஆயுதம் சிக்கிய மகிழ்ச்சியில் திளத்தேன்.. அவ்வப்போது , இல்லாதது பொல்லாதது சொல்லி குடும்பத்தில் பிரச்சினை ஏற்படுத்தினேன்..

ஆனால் என்னதான் சோகமாக இருந்தாலும் , குடிக்க மறுத்து விட்டான்.. நான் மட்டும் தனியாக குடித்து அவன் வேதனையை கொண்டாடினேன்..

அவன் போகும்போது டைரியை விட்டு சென்றதை லேட்டாகத்தான் பார்த்தேன்.
என்ன எழுதி இருக்கிறான்.. ?
ஒன்றும் சுவையாக இல்லை,,, நன்பர்களை பற்றி எழுதி இருந்தது சற்று சுவையாக இருந்தது... குறிப்பாக , சக நண்பம் பிரேம் ஆனந்துடன் செய்த கலாட்டாக்கள்..
திடீரென எனக்கு ஐடியா தோன்றியது...
பிரெம் ஆனந்தை , டைரி முழுதும் பிரேமா பிரேமா என குறிப்பிட்டிருந்தான (தொடரும

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா