Friday, April 30, 2010

"சார்...மனித வாழ்வின் நோக்கம் என்ன?"




கடவுளை நம்பியும் பார்த்திட்டோம், திட்டியும் பார்த்துட்டோம், - காசையும் பார்த்துட்டோம், கஷ்டத்தையும் பார்த்துட்டோம்,,ஆனாலும் வாழ்க்கைல ஒன்னு குறையுது... வாழ்க்கைனா என்ன.. வாழ்கையின் நோக்கம் என்ன ?

ஜே கிருஷ்ணமூர்த்தியுடன் சில இளைஞர்கள் உரையாடுகிறார்கள்,,, தயவு செய்து கவனமாக படிக்கவும் ( அடைப்பு குறியில் நம்ம விளக்கம் ..பிடிக்கவில்ல்லை என்றால், எடுத்து விடுகிறேன் )


******************************************************

" சார்.. சுத்தி வளைக்காம கேட்குறேன். எங்க கேள்வி ரொம்ப எளிமையானது..எளிமையா ஒரு பதில் சொல்லுங்க... மனித வாழ்வின் நோக்கம் என்ன? " ( பிறக்குறோம்.. சாபிட்றோம்..தூங்குறோம்..லவ் பண்றோம்... சண்டை போடறோம், குழந்தை பெத்துகுறோம் .. .. இயக்கம் ,கட்சி, இதேல சேர்ந்து பாக்குறோம்..கடவுளை நம்புறோம்... கடவுளை நம்ப மறுக்குறோம்..அனாலும் என்ன ..கடைசியில் ஒரு நாள் சாகுறோம்

என்ன வாழ்கை இது? வாழ்வின் நோக்கம்தான் என்ன ?)

இதை ஏன் கேட்குறீங்க? யாரவது இதுதான் வாழ்வின் நோக்கம் னு சொன்னால் அதை அப்படியே எத்துக்கிட்டு, அதுக்கு தகுந்த மாதிரி வாழ்வை அமைச்சுக்கலாம்.. அப்படிதானே ? "

" இதை ஏன் கேட்குறோம்னா , நாங்க ரொம்ப குழம்பி போய் இருக்கோம்... யாரவது ஒருவர் கிட்ட இதை பத்தி பேசணும்னு தோனுச்சு... சில பேரு எல்லாம் தெரிஞ்ச மாதிரியும், எங்களுக்கு ஒன்னும் தெரியாத மாதிரியும் , அறிவுரை குடுக்றாங்க,,, இதெல்லாம் வேலைக்கு ஆகாது.. சாதாரணமா பேசும் ஒருத்தர் கிட்ட பேசணும் னு தோனுச்சு... அதான் உங்க கிட்ட கேட்குறோம்.. "

" அர்த்தமுள்ள வாழ்வு வாழ ஆசை படறோம்..அதே சமயம் , எதாவது கட்சி, இயக்கம், ஆன்மிகம் , கடவுள் இதெல்லாம் ஒரே மாதிரித்தான் இருக்கு... இங்கே வந்த்டோம்.. நீங்க என்ன சொல்ல போறீங்க ?"

சரி.. யாரவது ஒருவர் இதுதான் வாழ்வின் நோக்கம் னு , உங்களுக்கு பிடிக்ற மாதிரி சொல்லிட்டா ஏத்துக்கேவீங்களா ?

" ஆமா .. அது உண்மை னு தோணுச்சுனா , ஏத்துக்குவோம் "

அப்படியா?

"ஆனா, வந்து... இதை புரிஞ்சுக்ற தகுதி எங்களுக்கு இருக்கா-ணு தெரியல"

அதுதான் விஷயம்... எல்லோரும் குழப்பத்துல இருக்றதா சொன்னீங்க... மனசு குழப்பமா இருந்தா, அதை வைச்சு , இது போன்ற பெரிய விஷயங்களை புரிந்து கொள்ள முடியுமா

" ஏன் முடியாது.. ஆமா.. நாங்க குழம்பி போய் இருக்கோம்... மறுக்கல..ஆனா, குழம்பி போனவன் ஒன்னும் கத்துக்க முடியாதுனு சொன்னா, நாங்க என்னதான் பண்றது... "

என்னதான் முயன்றாலும், குழப்பத்தோட ஒரு கேள்வியை அணுகினால், விடையும் குழப்பமாகத்தானே கிடைக்கும் ?

" என்ன தான் சார் சொல்ல வர்றீங்க ? "

எந்த முடிவையும் வற்புறுத்த, நாம இப்ப பேசல.. ஒன்னு ஒன்ணா , நிதானமா விவாதிப்போம்... மனசு குழப்பமா , தெளிவில்லாம இருந்தா, அதை வச்சு தெளிவா சிந்திக்க முடியுமா ? இதை முதலில் கண்டு பிடிப்போம்...

" உண்மைதான் சார்.. தெளிவில்லாத மனதின் சிந்தனையும் தெளிவு இல்லாமல்தான் இருக்கும்''

தெளிவில்லாத ஒரு மனம் ஒரு குருவை தேடினால், கிடைக்கும குரு அதற்கேற்பத்தானே இருப்பார் ( மனதில் ஆயிரம் ஆசைகளை வைத்து கொண்டு தேடினால், நித்யானந்தா, ஓஷோ , பிரேமானந்தா போன்றவர்கள்தானே கிடைப்பார்கள் !! ) .. தலைவர்களும் அப்படித்தான் இருப்பார்கள் ( ஒரு முட்டாள் தலைவனை தேர்ந்தெடுத்தால், அந்த முடிவு முட்டாள்தனமாகத்தான் இருக்கும் )

" இதை ஒத்துகொள்ள கஷ்டமா இருக்கு "

உண்மைதான்,என்ன, நாம் எல்லோரும் நம்மை புத்திசாலிகள், உலக பிரச்சினையை தீர்க்க நம்ம கிட்ட தேர்வு இருக்கு... நாம் நல்லாத்தான் இருக்கோம்..உலகம் தான், என்ன செய்யனும்னு தெரியாம இருக்கு னு நினைக்றோம்.. நம்ம கிட்ட என்ன தவறு இருக்குனு யாரும் பார்ப்பது இல்ல

" எத்தனையோ பேரு பேசி கேட்டு இருக்கேன்... நீங்க சொல்றதுதான் கரக்ட் னு தோணுது "

தெளிவு இல்லாதவர்கள் தான் இப்படி சொல்வார்கள்

" என்ன சார், இப்படி சொல்லீட்டீங்க..பல கருத்துக்களை கேட்டு, அதில் சிறந்ததை தேர்ந்து எடுத்தால்தானே தெளிவு பிறக்கும் "

உங்களுக்கு தெளிவு இருந்துச்சுனா , இப்படி தேர்ந்தெடுக்க மாட்டீர்கள்

" ஆஹா.. உங்க பாயிண்ட் புரியுது .. சார் என்ன சொல்றார்னா, நீ ஒரு பொண்ண உண்மையில் லவ் செஞ்சா, எந்த குழப்பமும் இல்லாம அவளை கல்யாணம் செஞ்சுக்குவ... தேர்ந்தெடுப்பு என்ற கேள்வியே இல்லை.. நீதான் தெளிவா இருக்கியே... காதல் என்பது இல்லைனாத்தான், யாரை கல்யாணம் பண்ணலாம், நம்ம காதல் தப்பா அப்படீன்னு ஆயிரம் கேள்வி... ஒரு வகைல, தெளிவுக்கு இன்னொரு பெயர் காதல்.. என்ன்ன நான் சொல்றது? "

" காதல் னு நீங்க எதை சொல்றீங்க னு தெரியல.. அதை பத்தி இப்ப பேச வேண்டாம்.. நீங்க இங்கே வரும்போது, வாழ்கையின் நோக்கம் என்ன அப்படீன்னு ஒரு விஷயத்தை ஷாப்பிங் செய்ய வந்தீங்க .. இல்லியா... இதே போல பலர் கிட்ட கேட்டு இருப்பீங்க,,, அந்த பதில்கள் உங்களுக்கு திருப்தி தரல.. ஒரு கடைல பொருள் பிடிக்கலேன்னா அடுத்த கடைக்கு போற மாதிரி, இன்னொரு கருத்தை வாங்க வந்து இருக்கீங்க.. உங்களுக்கு குழப்பம்.. அதுனாலதான், எதாவது ஒன்னை உறுதியா பிடிச்சுக்க விரும்புறீங்க..
( சிலர் ஆன்மிக வாதிகளை பிடிக்கலாம். சிலர் கட்சிகளை, எதாவது தொழிலை, வலை பதிவை கூட பிடித்து கொண்டு இதுதான் வாழ்வின் லட்சியம் என சொல்லலாம் )

" உங்க பாயிண்ட் புரியுது சார் "

பொறுமையா இன்னும் பாப்போம்.. நம்ம மனம் குழப்பமா இருக்கு,,, சின்னத்தனமா சிந்திக்குது..அற்பமா இருக்கு..இல்லையா

" அப்படி சொல்ல முடியாது... மனதின் ஒரு பகுதி மிருகமா இருந்தாலும், இன்னொரு பகுதி நல்ல தன்மைகள் நிரம்பி இருக்கு... மிருகம் என்ற கெட்ட பகுதியை நாம் வெல்ல முடியும் "

அப்படித்தான் நம்புறோம்.. ஆன்மானு ஒன்னு இருக்கு... நன்மை தீமைகள் அதை பாதிக்காது.... வெளி மனம், உள்மனம் என்றெல்லாம் இருக்கு அப்படீல்லாம் நினைக்றோம்.. இப்படி சொல்லி கொடுத்து இருக்காங்க... இது எல்லாமே முட்டாள் மனதின் சிந்தனைகள்தான் ..

" அப்ப நாங்க என்னதான் செய்யனும் "

அவசரப்படாதீங்க... இதுதான் செய்யணும் னு எந்த அவசியமும் இல்லாமல் கூட இருக்கலாம்... எல்லாவற்றையும் சரியாக புரிந்து கொண்டால், உங்கள் நடவடிக்கையே வேறு மாதிரி இருக்க கூடும்

" வாழ்வை சரியாக புரிந்து கொண்டால், என்ன செய்யனும்னு அதுவே சொல்லித்தரும் னு சொல்றீங்க... சரி,,, வாழ்க்கைனா என்ன ?"

அழகு, துன்பம் குழப்பம், , மரம், அதோ அங்கு பறக்கும் பறவை, சுட்டு எரிக்கும் சூரியன், குளிர்மிகு நிலவு என எல்லாமே வாழ்க்கைதான்,,, ஒரு தெளிவற்ற மனம் வாழ்வை எப்படி அனுகிகிறது என்பதுதான் முக்கியம்,, வாழ்வை பற்றிய விளக்கங்கள் அல்ல..

" வாழ்வில் நாம் சந்திக்கும் குழப்பங்கள் துயரங்கள் எல்லாம் மனதின் பிரதிபலிப்பு என புரியுது.. வாழ்வு என்பதில் இருந்து விலகி நின்று பார்த்தால்தான் தெளிவு பிறக்கும் னு தோணுது... எப்படி விலகி நின்று பார்ப்பது "

உண்மையை சொல்லனும்னா, நீங்க வாழ்க்கை என்பதை விட்டு விலகி தான் இருக்கீங்க,,, குப்பன் அப்படீங்கற நீங்க மாறாத, சிறப்பான ஒன்று போலவும், மற்ற எல்லாம் திருந்த வேண்டும் மாற வேண்டும் எபது போலவும் நினைக்கிறீங்க... மற்ற எல்லாவற்றையும் பார்க்கும் ஒரு சாட்சியாக, பார்வையாளனாக உங்களை நினைத்து கொள்கிறீர்கள்... (நீங்கள் வேறு - மற்ற எல்லாம் வேறு )..இப்படி தனியாக இருக்கும் நீங்கள், முழுமையை எப்படி புரிந்து கொள்வீர்கள் ?

" என்னை பத்தியே எனக்கு புரியல..உலகத்தை பத்தி புரிஞ்சுக்க முயற்சி பண்றேன்..ஹ்ம்ம் "

ஒரு முட்டாள் கண்டுபிக்கும் கடவுளும் முட்டாளாகத்தான் இருக்க முடியும் ... மனதை செம்மை படுத்தாமல், கடவுள் இருக்கிறாரா இல்லையா.. உண்மைனா என்ன , நல்ல அரசாங்கம்னா என்ன . இப்படியெல்லாம் கேட்டுகிட்டு இருக்கோம்

" ஆமா சார்.. கேட்க கஷ்டமா இருந்தாலும், உண்மையை உணர முடியுது.. என்னதான் செய்றது "

கொஞ்சம் கொஞ்சமா மாறலாம்னு நினைக்காம, இப்பவே - இந்த கணமே எல்லாத்தையும் தூக்கி எறிங்க... மனம் என்கிற குப்பை தொட்டில சேர்த்து வைத்து இருக்ற அனைத்து குப்பைகளையும் காலி செய்யுங்க... இதுவரை நீங்க அறிந்து வைத்துள்ள எல்லாம், புதிதாக அறிவதை தடை செய்கிறது

" சரி ..எல்லாத்தையும் தூக்கி போட்டுட்டா எனக்கு என்ன கிடைக்கும் "

நல்லா கேட்டீங்க போங்க... எதாச்சும் கிடைத்தால்தான் , துறப்பேன் என சொல்வது உண்மையில் துறத்தல் அல்ல... அது ஒரு வியாபாரம்தான்.. எல்லாவற்றையும் விட்டு விட்டால் என்ன கிடைக்கும் என ஒரு முட்டாள் மனது யோசித்தால், முட்டாள்தனமான விடைகள் தான் கிடைக்கும் ...( கடவுள் தெரிவார், பேரமைதி கிடைக்கும், ஆன்மிக ஆற்றல் கிடைக்கும் )....
அறிவு என்பதே கற்பிதம்தான்,,,, பழமைதான்... அறிந்ததில் இருந்து விடுதலை ஆனால்தான், இதுவரை அறியாததை காண முடியும்

" யோசிக்காம அப்படி கேட்டுட்டேன்... எங்களுக்கு பிடிச்ச மாதிரி பேசி, எங்களை சமாதான படுத்தும் வகையில் மேலோட்டமா பேசல.. நன்றி .... சார், நீங்க சொன்னதின் உண்மையை அறிவு பூர்வமா இல்லாம , இதய பூரவமா உணர முடியுது... உண்மையை உணர்ந்து விட்டால், அதற்கு பிறகு என்ன செய்வது என்ற கேள்வி இல்லை..என்ன செய்வது என்பதை அந்த உணர்வே தீர்மானிக்கும்... அந்த உணர்வுதான் முக்கியம்... சார், உங்களை பார்க்க இன்னொரு முறை வரலாமா ? "

Tuesday, April 27, 2010

போலி கம்யுனிஸ்ட்கள் அல்ல .- முத்திரை பதித்த இடதுசாரிகள் வேலை நிறுத்தம்

பொதுவுடைமை கருத்துக்களை அரசியல அரங்கில் ஒலிக்க செய்யும் கட்சிகள்தான், சி பி ஐ மற்றும் சி பி ஐ எம் ..

பல கஷ்டங்களுக்கு இடையில், கட்சி நடத்தும் இவர்களை ஆதரிக்கவிட்டலும் பரவயில்லை... கிண்டல் செய்பவர்கள் அதிகம்....

புரட்சி பேசிவிட்டு, சீட் பெற பேரம் பேசுபவர்கள், ஆடம்பர அரசியல செய்ய தெரியாதவர்கள் என பல பாமர கருத்துகள் உண்டு...

சிலர் ஒரு படி மேலே சென்று, உழைக்கும் மக்களை இவர்கள் பிரநிதுவ படுத்தவில்லை, இவர்கள் போலி கம்யூனிஸ்ட்கள் என கிண்டல் செய்வதை பார்த்து, உம்னையில் இவர்களுக்கு ஆதரவு இல்லையோ என சாமான்யர்கள் நினைபதுண்டு..

இந்நிலையில், பொது வேலை நிறுத்தம் அறிவிக்கப்பட்டது.... மதுரைக்கு வில்லுக்கு அளித்ததே, இவர்கள் மேல் ஒரு நம்பிக்கையை ஏற்படுத்தியது...

தமிழ் நாடு முழுதும், வேலை நிறுத்தம் வெற்றி என்றால், சி பி எம்மின் வெற்றி தனியாக தெரிந்து இருக்காது...

மென்பொருள் மக்கள் மற்றும் சண் டிவி தமிழர்கள் அதிகம் வசிக்கும் சென்னை போன்ற ஊர்களில், வேலை நிறுத்ததிற்கு அதிகம் ஆடஹர்வு இல்லை...

அனால், சி பி வலுவாக உள்ள, திருப்பூர், ஈரோடு , நகப்பிடினம் போன்ற இடங்களிலும், உழைக்கும் மக்கள் வசிக்கும் ஊர்களிலும், வேலை நிறுத்தத்திற்கு அமோக ஆதரவு..

முழு அடைப்பு செய்தால், விலைவாசி இரங்கி விடமோ என சிலர் அசட்டுத்தனமாக கேட்கலாம்.. அனால், வெட்டி பேச்சு பேசாமல், கட்டுபாடுடன் எதிர்ப்பை காட்டியதன் மூலம், இடது சாரி கட்சிகள் மக்கள் மதிப்பில் உயர்ந்துள்ளன....

ஒட்டு மொத்தமாக பந்த் பெரிய வெற்றி என சொல்ல மூடியாது... அனால், எதிர்த்தரப்பின் வாயை பந்த் செய்வதில், இடது சாரிகள் வெற்றி பெற்று உள்ளனர் என்றே நடுநிலையாளர்கள் கருதுகின்றனர் .

ஊருக்கு உபதேசமா? அரசு பள்ளிகள் கட்டுரை கிளப்பும் சந்தேகம்!!!!

தமிழ் தமிழ் என ஊருக்கு உபதேசம் செய்யும் அரசியல் வாதிகள், தங்கள் வாரிசுகளை ஆங்கில பள்ளிகளில் படிக்க வைப்பது நாம் அறிந்தது தான்... அனால், நாம் பெரிதாக அலட்டி கொள்வதில்லை.... எல்லோரும் அப்படித்தான் என நினைத்து கொண்டு சமாதானம் அடைவோம்...

ஆனால், நான் விரும்பி படிக்கும் தமிழ் பத்திரிக்கை ஒன்றும் இந்த பாணியில் இறங்கி உள்ளது சற்று வருத்தாமாக இருக்கிறது..

சென்னை மாநகராட்சி பள்ளிகளில் , கல்வி தரம் தனியார் பள்ளிகளை விட சிறப்பாக இருப்பதாகவும், மாணவர்களுக்கு களவு கற்கும் சூழல், அரசு சென்னை பள்ளிகளில் இருப்பதாகவும் , அந்த பத்திரிகையில் கட்டுரை வெளியிட பட்டிருகிறது...

அது உண்மையாக இருந்தால் சந்தோஷம்தான்....

ஆனால், அது உண்மை என அந்த பத்திரிக்கை நம்புகிறதா. அதை எழுதிய நிருபர் நம்புகிறார என்பதுதான் கேள்வி...

எழுதிய நிருபரோ, அல்லது பதிரிகையின தூண்களோ தங்கள் குழந்தைகளை, அரசு பள்ளிகளில் சேர்ப்பர்களா அல்லது தனியார் பள்ளிகளில் சேர்ப்பர்களா என்பது கேள்வி குறிதான்...

பத்திரிகைகள் தாங்கள் உண்மை என நம்புவதை மட்டுமே பிரசுரிக்க வேண்டும் என்பதே வாசகர்களின் வேண்டுகோள்...

எனது சந்தேகம் தவறானது என தெரிய வந்தால், மகிழ்ச்சிதான் .... அல்லது, வாசகர்களின் குழநதைகள், அரசு பள்ளிகளில் படிக்க வேண்டும்..தங்கள் குழந்தைகள் தனியார் கல்வி வசதியை பெற வேண்டும் என நினைத்தால், வருத்த படுவதை தவிர என்ன செய்ய முடியும் ???

Sunday, April 25, 2010

சிந்தனை, பகுத்தறிவு மூலம் உண்மையை அறிந்து விட முடியுமா




சிந்தனை, பகுத்தறிவு மூலம் உண்மையை அறிந்து விட முடியுமா... ஒரு தலைவன் நமக்கு எல்லா பதில்களையும் தர முடியுமா,அன்பு என்றால் என்ன என்பதை போன்ற கேள்விகளுக்கு, ஜே கிருஷ்ணமுர்த்தியின் இந்த உரையாடல் பதில் அளிக்க கூடும்ம்... கவனமாக படியுங்கள்....

************************************************
இரு இளைஞர் களுடன் உரையாடுக்றார், ஜே கே




"சார்... உங்க கிட்ட ஒரு கேள்வி கேட்கலாமா?"

தாரளமா...

"நேசம் அன்பு, காதல்னா என்ன?"

இந்த வார்த்தை பற்றிய விளக்கம் வேண்டுமா...

"காதல்னா எப்படி இருக்கணும்னு பல கருத்துக்கள் இருகின்ன்றன... எல்லாம் குழப்பமா இருக்கே "

என்ன கருத்துக்கள்...

"காமம் கலக்க கூடாது..பேராசை கூடாது... எல்லோரையும் , தன்னைப்போல நேசிக்கணும்... பெற்றோரை நேசிக்கணும்...."

மற்றவர் கருத்து இருக்கட்டும்... உங்களுக்கு இதை பத்தி கருத்து இருக்கா..

"நான் நினைப்பதை சொல்வது கஷ்டம்... கடவுளை நேசிபதுதன் உண்மயான அன்பு..அன்பில் காமம் கலக்க கூடாது..ஒருவரை ஒருவர் நேசிக்கணும்,, அன்பே சிவம்,.,இரக்கமே இறைவன்.."

இந்த கருத்துக்கள் எல்லாம், நம் சூழ்நிலையை பொறுத்து உருவாகின்றன.. இவை எல்லாம் , தேவையா என சிந்திக்க வேண்டாமா...

"அப்படீனா , ஒரு கருத்தை ஏற்று கொள்வதே தப்பா ...."

சரி, தப்பு என்று சொல்வதும் ஒரு வகை கருத்துதானே... இந்த கருத்துக்கள் எல்லாம் எப்படி உருவாகின்றன என கவனித்தால், இதன் முக்கியத்துவம் புரியும்...

"கொஞ்சம் விளக்குங்க..."

நாம் எந்த சூழ்நிலையில் வளர்ந்தொமோ, அதுதானே நம் சிந்தனையை உருவாக்குகிறது.... ( ஒரு " பகுத்தறிவாதி குடும்பத்தில் பிறந்த ஒருவர், கடவுள் இல்லை என்பார்... ஆன்மிக வாதி குடும்பத்தில் பிறந்த ஒருவர் வேறு மாதிரி சொல்லுவர் )
இதை எல்லாம் தாண்டி, உண்மை என்ன என்று நாம் பார்ப்பது இல்லை...நம்புவது, நம்பாமல் இருப்பது, முடிவுகள், சிந்தனைகள், கருத்துகள்,எல்லாமே, நம் சூழ்நிலையை பொறுத்ததுதான்..இல்லையா ?

"ஆமா... இதில் என்ன தப்பு.."

சரி,,தப்பு அப்படீங்கறதே கருத்துதானே.. உண்மை என்பது கருத்தகளை பொருத்தது அல்ல..

"சார்..என்னதான் சொல்ல வர்றீங்க..."

அன்பு, காதல் என்பதை பற்றி உங்களுக்கு சில கருத்துக்கள், அபிபராயங்கள் இருக்கு..இல்லியா....

"ஆமா..
"
அவை உங்கள்ளுக்கு எப்படி கிடைத்தது...

"பல சிந்தனையாளர்கள் , ஞானிகள் எழுத்துக்களை படிச்சேன்...நானும் சிந்தனை செய்து, இந்த முடிவுகளுக்கு வந்தேன்..."

அவுங்க சொன்னதுல , உங்களுக்கு பிடிச்சதை ஏதுக்குடீங்க

"ஆமா... என் பகுத்தறிவை பயன் படுத்தி, உண்மையை தேர்ந்து எடுத்தேன்.."

எதை அடிப்படைய வச்சு தேர்ந்தெடுத்தீங்க ?

"என்னுடைய அறிவு..."

அறிவு நா என்ன... உங்களை மடக்க இப்படி கேட்கல... அன்பு என்பதை பத்தி, அபிராயங்கள், முடிவுகள், கருத்துக்கள் எல்லாம் எப்படி உருவாகுதுன்னு பார்க்க போறோம்,, அவ்வளவுதான்.. சரி சொல்லும்ங்க.. அறிவு ந எனா?

"பல புத்தகங்களை படித்து கற்பதுதான் அறிவு.. பல தொழில் நுட்பங்கள் , அறிவியல், தகவல்கள் இதை எல்லாம் கற்பது கூட அறிவு தான்..."
"
அறிவு என்பது , கொஞ்சம் கொஞ்சமாக சேர்கப்டுவது... இல்லையா... ஒரு வேளை, உங்கள் கலாச்சாரம், அன்பு என்பதெல்லாம் சும்மா டுபக்கொர்... எல்லாம் உடல் சார்ந்தது
தான், என சொல்லி கொடுத்து இருந்தால், நீங்களும் அதை தான் சொல்லுவீர்கல் ..இல்லையா...

"இல்லை..அவ்வப்போது நாங்களாகவும் சிந்திப்போம்..."

சிந்தனை என்பதே, ஒரு கருத்தில் இருந்து இன்னொரு கருத்திற்கு செல்வதுதான்... மனம் என்பது, அன்பு என்பதை பற்றிய கருத்துக்கள், முடிவுகளால், பதிக்கப்பட்டுள்ளது,,, இல்லையா..

"ஆமா... சரி அன்பு னா என்ன.."

ஒரு அகராதில பார்த்தா, வில்லகம் கிடைக்கும்.. ஆனா விளக்கம் என்பது உண்மை உணரவை பிரிய வைக்காது...உங்க அறிவுக்கு யற்ப, சிலவற்றை ஏற்கலாம், சிலவற்றை மறுக்கலாம்...

"அப்படீனா, உண்மை அறியவே முடியாதா.."

சிந்தப்பதன் மூலம் , உண்மையை அறிய முடியாது... அன்பு னா என்னனு சிந்திச்சு கண்டு பிடிக்க முடியுமா

"சிந்திக்காம எப்படி கண்டு பிடிப்பது..".
"
சிந்திப்பதுனா ஏன்னா...

"ஒரு விஷயத்தை பற்றி படிப்பது... விவாதிப்பது... ஒரு முடிவுக்கு வருவது..."

இது அன்புன என்ன னு உங்களுக்கு உணர்துச்சா...

"ஆமா.. சிந்திப்பதன் ன் மூலம், மனம் தெளிவாச்சு... ஒரு முடிவுக்கு வர முடிஞ்சது..."

அதவது, சில கருத்துக்கள், மற்றவற்றை விட தனியா தெரிஞ்சது... அப்படிதானே...

"ஆமா..."

அன்பு என்ற வார்த்தை , அன்பு அல்ல... விளக்கங்கள் எதுவும் உண்மையை உணர்த்தாது..

அன்பு, கடவுள், உண்மை போன்றவற்றை அறிய வேண்டும் என்றால், முன் கூட்டிய முடிவுகள், நம்பிக்கைகள, எதுவும் இருக்கா கூடாது... ( முன்பே கடவுள் இருக்கிறர் என்றோ இல்லை என்றோ முடிவு செய்ய கூடாது )
புத்தகங்கள், விளக்கங்கள், நபிக்கைகள், தலைவர்கள் போன்றவர்த்ரை தள்ளி வைத்து விட்டு, சுய தேடலுக்கான பயணத்தை தொடருங்கள்...
நேசியுங்கள்- அன்பு என்றால் எப்படி இருக்கா வேண்டும் , எப்படி இருக்க கூடாது என்பதை பற்றி அபிப்ராயங்களில், சிக்கி கொள்ளாதீர்கள்..
நீங்கள் அன்பு செலுத்தும் போது, எல்லாம் சரியாக நடக்கும்...
வேறு யாரும் உங்களுக்கு போதிக்க முடியாது...

உங்களுக்கு போதிக்க நினைப்பவனுக்கு எதுவும் தெரியாது... தெரிந்தவனுக்கு சொல்ல முடியாது...

Friday, April 23, 2010

புலிகளின் இரண்டு கண்கள்





தமிழ் ஈழ விடுதலை போரில், முதல் முதலில் வீழ்த்தப்பட்ட எதிரி யார்?

சிங்கள போலீஸ் ?

சிங்கள ராணுவ வீரர்?

சிங்கள கட்சி தலைவர்?
தமிழர்களை துன்புரிதிய ஒரு சிங்கள வெறியன்?

நீங்கள் இதில் எந்த விடையை சொல்லி இருந்தாலும், அது தவறு...
துரையப்பா என்ற தமிழர்தான், ஈழ போரின் முதல் பலி என்பது போன்ற , பரவலாக அறிய படாத தகவல்களை , நடுநிலையுடன் அலசி இருக்கும் புத்தகம் தான்,.மருதன் எழுதியுள்ள, விடுதலை புலிகள் என்ற நூல்..

. சிங்கள பேரின வாதத்தை கட்டு படுத்த முடியாத அரசியல் வாதிகள், தமிழர் நலனை புறக்கணிப்பதும், வாத்தைலளால் விளக்க முடியாத துன்பங்களை தமிழர்கள் அடை தும், மனித குலத்துக்கே ஒரு களங்கம்.

அமைதி வழியில் சிலர் தீர்வு காண முயற்சித்து, வெற்றி பெற முடியாத நிலையில், ஆயுத தீர்வு என்ற முடிவுக்கு பிரபாகரன் தள்ள படுகிறார் என்பது நன்றாக விளக்க படுகிறது... வேறு வழியே இல்லாத நிலையில் தான், ஆயுதம் ஏந்த வேண்டிய அவசியம் ஏற்பட்டது...

ஆனால், கொள்கை அடிப்படயில் இல்லாமல், ஒரு தனி மனிதனின் விருப்பு வெறுப்புக்கு ஏற்றாவரு, போராட்டம் நடத்த பட்டது உலகிலயே இதிதான் முதல் முறை என தோன்றுகிறது....

உண்மை வீரர் உமா மகேஸ்வரன், காதலில் விழுந்த போது, அதை ஒரு பிரச்சினை ஆக்கி, அவரை வெளியேற்றியது, விடுதலை போரில் ஒரு பெரும் பின்னடைவு..

பின், பிரபாகரனே காதலில் விழுந்து, கல்யாணம் செய்து கொள்வது, அவர் முன்பு எடுத்த முடிவு தவறு என உணர்த்துகிறது...

வரலாறு என்பதே அபத்தம் தான்... தி நகர் சண்டையில் , சற்று வேறு விதமான முடிவு ஏற்பட்டு இருந்தால், உலக தமிழர்களின் தலைவராக, உமா மகேஸ்வரனைதான் , இன்றி அடையாளம் காட்டி இருப்போம்...

ஒழுங்கு , கட்டு ப் பாடு, என எல்லா விதத்திலும் தனித்துவமாக புலிகள் அமைப்பு செயல்பட்டதையும், கடும் பயிற்சி எடுத்து கொண்டதையும் ,வரலாறு கண்டிப்பாக பாராட்டும்..

ஆனாலும், எதிரி யார் என்ற தெளிவு இல்லாமல், துரோகி என முடிவு எடுத்து, சொந்த சகோதரர்களையே கொன்று குவித்ததும, இந்நூலில் பதிவு செய்யபட்டுள்ளது...

அமைதி வழியில் போராடிய அமிர்த லிங்கம், கொல்லப்பட்டதை படிக்கும் போது, இதெல்லாம் ஏன் என நமக்கு கஷ்டம்க இருக்கிறது..
என்ன இருந்தாலும், தனக்கு சரி என பட்டதைத்தான் பிரபாகரன் செய்து இருக்கிறாரா..சுயநலம் என்று எதுவும் இல்லை , உண்மையான போராளி என்று நூல் விளக்குகிறது...

கும்பிட்ட கைக்குள் துப்பாக்கி, மலர் மாலையில் வெடி குண்டு என்றெல்லாம், சிலரை கொன்று குவிக்கும் போது, அவர்களை துரோகிகள் என்று முடிவெடுத்து தண்டிக்கும் அதிகாரத்தை தாங்கள் எடுத்து கொள்வது நியாயமா என்று சிந்தித்து இருந்தால், தம்மையும் சிலர் தண்டனைக்குரியவர்கள் என முடிவேக்க கூடும் என்ற உண்மை அவர்களுக்கு புருந்திரிக்க கூடும்...

கடைசியில் , கருணா என்ற தமிழனே, அவர்களுக்கு சவால் ஆனதுதான் வரலாறு...

இவளவு திறன், திட்டமிடல், உழைப்பு, விமான படை உருவாகும் ஆற்றல் எல்லாம் கொண்ட புலிகள், சிங்கள பேரின வாத எதிர்ப்பை மட்டும் இலக்காக கொள்ளாமல், சிங்கள பேரின வாத எதிர்ப்பு மற்றும சக போராளிகள் எதிர்ப்பு, இரண்டையும் இரண்டு கண்களாக கொண்டு போரிட்டதுதன், உலக வரலாற்றின் மாபெரும் சோகம்....

புத்தகம் : விடுதலை புலிகள்

ஆசிரியர் : மருதன்
வெளியீடு : கிழக்கு பதிப்பகம்

Wednesday, April 21, 2010

நான் பேச நினைப்பதெல்லாம் , நீ பேச வேண்டும்



" அவ கிட்ட இதை எப்படி சொல்றதுன்னு தெரியலைமா.. ஆனா நானே சொல்லிகறேன்...." என்று அம்மாவை , உறவினர் வீட்டில் தங்க வைத்து விட்டு, நான் மட்டும் தீபிகா வீடு சென்றேன்... ஆனால் எப்படி ஆரம்பிப்பது என தெரியவில்லை..

திருமணம் நிச்சயம் ஆன நாளில் இருந்து எதனை முறை பேசி இருப்போம்.,,,, என்னவெல்லாம் பேசி இருப்போம்.... அனால், இன்று?

" ஹாய்.. என்ன திடீர்னு வீட்டுக்கு வந்து இருக்கீங்க... வீட்ல யாரும் இல்லைங்கறது அப்படி தெரியும்" குறுப்புடன் கேட்டால்..

" ஒரு முக்கியமான விஷயம் பேசணும் " அவள் சொன்னதை ரசிக்காமல் சொன்னேன்...

" டீ சாப்பிடிகிட்டே பேசலாம் "

" அதெல்லாம் வேண்டாம் "

எப்படி ஆரம்பிப்பது....?

அவள் என் பைலை புரட்டினால்..உள்ளே ஒரு மெடிக்கல் ரிபோர்ட்... என்ன இது.... புரட்டினால்..

சட் என அதை பிடிங்கினேன்..அதற்குள் லேசக படித்து விட்டால்...

" ஒஹ்... கான்சர்... யாருக்கு " அதிசுயுடன் கேட்டாள்..

சற்று யோசித்த பின் சொன்னேன்..

" எனக்குத்தான்... குணமாக வாய்ப்பு இருக்காம்...ஆன நிறைய செலவ்கும்,,, என் பிசினசை தொடர முடியாது ..அதான் கல்யாணத்தை நிறுத்த சொல்ல வந்தேன்... உங்க அப்பா இருந்தா அவர் கிட்டே சொல்லலாம் நு வந்தேன்... வேறு யாராவது கல்யாண செஞ்சுக்கோ...சாரி..செஞ்சுக்கோங்க... வர்றேன் "

திடுகிட்டல் அவள்...

" லூசு மாதிரி பேசாதீங்க.... உங்க நல்ல மனசு, நல்ல குடும்பம் , இதை எல்லாம் பார்த்துதான் , கல்யாணத்துக்கு ஒத்துகிட்டேன்... உங்களை கணவாணவே மன்சவில் எதுகிட்டேன்... இனி எப்படி பிரியறது "

" பிரக்டிகல பேசு ... கல்யாணம் பண்றது சந்தோஷமா இருப்பதர்காததன்... என்னை கட்டி கிட்ட, போராட்ட தான்... வேண்டாம்..."

" இலிங்க...கல்யாணம் என்பது, சந்தோசம் , துக்கம் ரெண்டையும் பகிர்ந்து கொள்ரதுக்குதான்... ஒரு வேளை, நீங்க இதை சொல்லாம ஏமாத்தி இருந்து, நான் கண்டு பிடிச்சு இருந்தா, கல்யாணத்தை, உடனே நிறுத்தி இருப்பேன்... இப்ப உங்களை மதிக்றேன்..காதளிக்றேன்..இந்த கல்யாணம் கண்டிப்பா நடக்கும்..சரி..எனக்கு வேளை இருக்கு.... நான் கிளம்புறேன்..."என் பதிலை எதிரபாராமல், மின்னல் என தன அறைக்கு சென்றாள்..

***********

உறவினர் வீடு சென்றேன்.... அம்மாவுடன், அப்பாவும் இருந்தார்..

" என்னப்பா.... நீங்க எப்படி இங்கே ? " -அவர் உடல் நலம் பதிகப்படவ்ர் என்பதால், இங்கு வருவதையோ, எதற்கு வந்து இருக்றோம் என்பதையோ அவரிடம் சொல்லவில்லை.... இனிமேல் சொல்லலாம்...
அம்மா சொல்ல ஆரம்பித்தல்...

" தீபிகாவை நம்ம எல்லோருக்கும் பிடிச்சு போச்சு... நல்ல வசதியான குடும்பம்..நல்ல பொண்ணு.... நேத்து திடீர்னு அவுங்க அப்பா , போன் செஞ்சார்... அவர் பிசினசல, எதிர்பாராத நஷ்டமாம்... மீண்டு வர வாய்ப்பே இல்லயம்... இப்ப என் பொண்ணு கலயந்த்தை நான் சொன்ன மாதிரி, பிரமாண்டம பண்ண முடியாது... நகை எதுவும் போட முடியாது... அதுன்னால , இந்த கலயாந்தை நிறுத்திடலாம்... வேற பொண்ணு பார்த்துகொக நு சொன்னாரு "

அப்பா அதிர்ந்த்கார்... " நீங்க என்ன சொன்னிங்க .என் கிட்ட ஏன் டிஸ்கஸ் பண்ணல.. "

" இந்த விஷயம் அவரு பொண்ணுக்கு கூட தெரியாதாம்... அவ கிட்ட எப்படி சொல்றதுன்னு தெரியல..கலயனம்னு ரொம்ப சந்தோஷ பட்ட... உங்களை அவளுக்கு ரொம்ப பிடிச்சு போச்சு.அவ கனவை கலைக்க என்னக்கு தைர்யம் இல்ல... நீங்களே சொல்லிடுங்க ..அம்மா இல்லாத பொண்ணு சொன்னாரு " அம்மாசொன்னால்...

" என்ன முடிவு எடுக்கனும்னு சரியா தெரியலைப்பா... அவளோட நேர்ல பேசலாம்னு , நான் மட்டும் அவ வீட்டுக்கு போனேன் ..அதெல்லாம் சரி..இந்த மெடிக்கல் ரிபோர்ட், என் பைல எப்படி வந்தது "

" இது என் நண்பநோடதுட... கை தவறி உன் கிட்ட வந்துச்சு..சரி அதை விடு..அதை பத்தி இப்ப என்ன ...சொல்லு... அவ என்ன சொன்ன.. நி என்ன முடிவு எடுத்த ? "

" நான் பேச நினைத்தை அவளே பேசிட்டா.. நான் பேசுறதுக்கு ஒன்னும் இல்லை.. "
என் புன்னகை அவர்கள்களுக்கு என் முடிவை உணர்த்தி விட்டது என்பதை அவர்கள் புன்னகை உணர்த்தியது

****************************************

இன்னொனுதாங்க அது- டிரஜெடியில் முடிந்த ராஜீவ் பாதுகாப்பு காமடி



ஒரு படத்தில், கிணறு காணவில்லை என வடிவேலு செய்யும் அல்லபரையை பார்த்து சிரித்து இருக்கிறோம்... ( அரசு இயந்திரம் !!!! )

அனால், நமது அரசு இயந்திரம் இதை விட காமெடிகளை தினமும் அரங்கேற்றி வருகிறது.... ஒரு முக்கியமான கொலை வழக்கில் , இது போன்ற தவறுகள் எப்படி எல்லாம் டார்ச்சர செய்கின்றன என விளக்குகிறார் ஆசிரியர்..(ராஜிவ் கொலை வழக்கு - மர்மம் விலகும் நேரம்,)

முக்கிய பிரமுகர்களுக்கு மாலை அணிவிக்கும் நபர்களது, விபரங்களை , காவலர் குறிப்பேட்டில் , குறித்து வைக்க வேண்டும் என்பது நடை முறை..எதாவது பிரச்சினை என்றால், இதை refer செய்வர்ர்கள்...ராஜீவ் வழக்கிலும், அவருக்கு மாலை அணிவிப்பவர் பேரை அறிய, குறிப்பதை கேட்டு இருக்கிறார்கள்..அதில் உள்ள பெயரை வைத்து, மாலை அணிவிப்பறை கோழி அமுக்குவது போல அமுக்கி விடலாம் அல்லவா... அனால் வந்து சேர்ந்தது, குறிப்பேடு அல்ல, ஒரு குப்பை காகிதம்... ஒரு துண்டு சீட்டில், சும்மா கடமைக்காக, குப்பு சாமி,. கோவிந்தசாமி , சுப்பன் குப்பன் என்று கிறுக்கி இருந்தது... இதை வைத்து யாரை விசாரிப்பது....
கண் பார்வை பதிக்கபட்ட ஒருவருக்கு , ரெண்டு கண்ணும் சுப்பரா இருக்கு என சான்றிதழ் வழங்கி , ஓட்டுனர் உரிமம் கொடுத்து உள்ளனர்... சம்பந்த பட்ட நபர் , சிக்கலில் மாட்டும்போதுதான், இது தெரிய வந்தது.. ரெண்டு கண்ணும் நல்ல தெரியும் நு சான்றிதழ் கொடுத்து இருக்கேன்களே..ஒரு கண்ணுதானே தேர்யுது என்று கேட்டல், இன்னொரு கனுதங்க அது என்பது போல சமாளித்து இருக்கிறார் அந்த மருத்துவர்....
விசா இல்லாமல், நம் தலைவர் இலங்கைக்கு சென்றதை பற்றி விசாரிக்க முயன்றார்கள்... " அவிங்க யாருக்கு விசா கொடுத்தாயிங்க ...எப்பவும் சும்மா போறது தானே... இதை எல்லாம் பெருசு பன்னதீன்கண்ணே ..என்று வழக்கை ஊற்றி மூடினார்கள் நம் ஆட்கள்....
ராஜீவ் காந்தி ஸ்ரீபெரும்புதூர் வர தம்தம் ஆனது.. எப்போது வருவார் என காவலர்களுக்கு தெரியவில்லை... அனால், கொலையாளிகள் , சரியான நேரம் அறிந்து வைத்து இருந்தார்கள்
புலிகளுக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை என என்னிடம் சம்பளம் வாங்கும் புலி தலைவரே என்னிடம் ரகசியமாக சொல்லி விட்டார் என சிரிப்பு போலிஸ் போன்று பேசிய உயர் அதிகாரி...
என பல பொருபின்மைகளை கடந்து, குற்றவாளிகளை கண்டு பிடித்தது எப்படி என விரி விறுவிறுப்பாகவும், பெர்மித்தடனும் சொல்லி இருகிறார ஆசிரியர்...

புலிகளின் வியுகம் அசர வைகிறது.... வீ பீ சிங் கூட்டத்தில், practice ஆட்டம் அடியது வியக்க வைகிறது....

இடஹ்யும் மீறி , அமைப்பின் குறைபாடுகள் தான், கொலைக்கு காரணம் என்கிறார் நூல் ஆசிரியர்...
இதை தடுத்து இருந்தால், அது அப்போது புலிகளுக்கு தோல்வி தான்... அனால், நீண்ட கால பார்வையில், அது ( கொலை முயற்சியில் தோல்வி) அவர்களுக்கு அது நன்மைதான் செய்து இருக்குமோ என தோன்றிகிறது...

உண்மை , கற்பனையை விட விநோதமானது...

ஹரி பாபுவின் அன்னை தேனீர் சாப்பிடுகிறீர்களா என கேட்ட போது , இவர்கள் மறுத்து இருந்தால், வழக்கின் போக்கே திசை மாறி இருக்கலாம்..
மரகதம் சந்திர சேகர் மீது , ராஜீவுக்கு தனிப்பட்ட மரியாதையை, அன்பு இல்லை என்றால், வரலாறே மாறி இருக்க கூடும்...
ராஜீவ் , தன கட்சியினர் மேல் வைத்த அன்பு , ஒரு பெண் கொண்ட காதல், ஒரு போராளி குழு, புலி உறுபினர் மேல் வைத்த நம்பிக்கை- என எல்லா நல்ல பண்புகளும் , கெடுதலாக முடிவது மாபெரும் வினோதம்...
இதை அப்படியே சினிமாவாக எடுத்தல், படத்தில் லாஜிக் இல்லை என நம் பதிவர்கள் எழுதுவார்கள்.

" ஒரு விதத்தில், இவர் தாணு இடத்தில் இருந்து, இப்போது இல்லாமல் ஆகி இருக்க வேண்டியவர் " போன்று பல இடங்களில் தமிழ் கொஞ்சி விளையாடி, நம்மை ரிலாக்ஸ் செய்கிறது...

வாழப்பாடி ராமமூர்த்தி அந்த ஊர் வேண்டாம், அங்கு தங்க வேண்டாம், வர வேண்டாம் என்றெலாம் கெஞ்சுவது, ராஜீவ் விமானம் தாமதம் ஆவது எல்லாம் மனதை நெகிழ வைகிறது....

இலங்கை மக்களின் இணை அற்ற வீரர் பத்மநாபா படு கொலையின் மர்மங்களும் விலகுவது, அழகாக விவரிக்க பட்டுள்ளது...

நம் அரசு இயந்திரம், சரியானவர் தலைமை அமைந்தால், திறமையாக செயல்படும் என்று நூல் ஆசிரியர் அவர்களை பெருமை படுத்த மறக்க வில்லை...

கண்டிப்பாக படிக்க வேண்டிய புத்தகம்

நம் வேலையே நாமும் உருப்படியாக செய்ய வேண்டும் என்ற என்னத்தை, அரசு அதிகாரிகளுக்கு உன்றத்துகிறதோ இல்லையோ, நமக்கு அந்த எண்ணத்தை ஏற்படுத்துவது, நூலாசிரியரின் உழைப்புக்கு வெற்றி


book title : ராஜிவ் கொலை வழக்கு - மர்மம் விலகும் நேரம்,
ஆசிரியர் : ரகோத்தமன் (தலைமைப் புலனாய்வு அதிகாரி - சிபிஐ ஓய்வு)
வெளியீடு : கிழக்கு பதிப்பகம்

Tuesday, April 20, 2010

ஊருக்கு உழைப்பவன்

எல்லோர்க்கும் நன்மை செய்கிறேன்,,
என்னை புரிந்து கொள்ளத்தான் ஆள் இல்லை
***

இறைவன் இல்லை என
இங்கிலாந்து தெருக்களில்
பிட் நோட்டிஸ் விநியோகித்தேன்,,,

என்னப்பா செய்கிறாய்..
கேட்டார் பெரியார்..

உங்கள் பாணியில் சமூக சேவை செய்கிறேன் அய்யா
என்றேன் நான்...

வெங்காயம்... உன் தாய் நாட்டில், அவதி படுவோர் ஆயிரம்..
அவர்களை நினை...ஆண்டவனை மற...

நான் சொன்னதை வெறும் சடங்காக்கி
என் கொள்கைகளை முடக்காதே என்றார்...

*********

ஆண்டவனை நினைத்து தியானம் செய்தேன்...
என்னப்பா செய்கிறாய்...என்றான் இறைவன்...

இறை நிலை அடைய , தவம் செய்கிறேன் என்றேன்...

துன்ப படும் உயிர்களுக்கு , அன்பு காட்டு
இன்ப நிலை தானே வந்தெய்தும் என்றார் அவர்...

******
பெண் உரிமையை நிலை நாட்ட வேண்டும் ,

பெண் அவயங்களை எழுதி காட்டு,
தலைவர்களையும் இழிவு படுத்து...

பெண் விடுதலை வந்து விடும் என்றேன் நான்..

அட மூடனே ....
கிராமங்களில் பெண் படும் துயர் அநேகம்...
முடிந்தால் எதாவது நன்மை செய்..
இல்லை மூடி கொண்டு இரு...

என்னை விலகி சென்றாள் என் தோழி

*******
எல்லோர்க்கும் நன்மை செய்கிறேன்,,
என்னை புரிந்து கொள்ளத்தான் ஆள் இல்லை

இந்த வார " டாப் 5 " கேள்விகள்

நாடு நடப்பை கூர்ந்து கவனிப்பவர்களுக்கு, சில கேள்விகள் மனதில் தோன்றும்... ஆனால் யாரிடம் கேட்பது என தெரியாது... அவர்கள் நண்மைக்காக அந்த கேள்விகளை தொகுத்து அளிப்பதில் பெருமை படுகிறோம்

*************************************


1. ஈழத்தில் மக்கள் யுத்தத்தில் ரத்தம் சிந்தி கொண்டு இருந்தபோது, இன்னும் கொடுமைகளை அனுமதித்து கொண்டு இருக்கும்போது, அதை வெளியுலக்கு எடுத்து சொல்வதை விட்டு விட்டு , வெகு சுலபமாக , கடவுள் இருக்கிறார் அல்லது கடவுள் இல்லை என பிரச்சரம் செய்வது உண்மையான பகுத்தறிவா அல்லது உண்மையான ஆன்மீகமா ?

2. முக்கிய பிரமுகர் சென்னை வருவது, மாநில முதல்வருக்கு தின தந்தி படித்து தான் தெர்யுமா ?

3 ஒரு வயதான தாயார் இந்திய வந்தால், இந்தியாவின் பாது காப்பு பாதிக்க படுமா?

4 ம.... , யோ...., சு.. என்றெல்லாம் ஒரு பெண் எழுதினால் கவிதை... பொது உடமை தோழர்கள் பேசினால் ஆபாசமா ?

5 மாநிலமே ஒரு பிரச்சினையை விவாதிக்கும் போதுய், கூட்டணியை மனதில் வைத்து, அந்த பிரச்சினையில் அமைதி காப்பது , எதிர் கட்சிக்கு அழகா ?

Monday, April 19, 2010

பிரபாகரனின் அன்னையைக்கு அனுமதி மறுப்பு. - டாக்டர் கலைஞர் மத்திய அரசுக்கு கடும் எச்சரிக்கை..



வயதான ஒரு தாயார் , திருப்பி அனுப்பப்பட்ட சம்பவம் கடும் அதிருப்தியை மக்களிடையே ஏற்படுத்திய சூழ்நிலையில், புரட்சி தலைவியும், கலைஞரும் எதூவும் பேச வில்லை...
நேற்று அவர் தன நிலையை தெளிவு செய்தார் ...
மாண்பு மிகு கலைன்ஞர் அவர்களுக்கும் , இந்த விஷயம்,நம்மை போல தின தந்தி படித்துதான் தெரியும் என்று பரிதாபமாக குறிப்பிட்டார்..

அவரை திருப்பி அனுப்பி இருக்க கூடாது என்றும்.., மத்திய அரசுக்கு கடிதம் எழுதி போஸ்ட் செய்ய போவதாக கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்...

இன்று போஸ்ட் கார்ட் வாங்கி விடுவார் என தெரிகிறது.. அதை தடுக்க உளவுத்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது...

இது பற்றி விவாதம் நடந்த போது புரட்சி தலைவியின் கட்சியினர் டீ சாப்பிட போய் விட்டனர் ....

Sunday, April 18, 2010

ஆரம்பம்- ஒரு தமிழன் கொலையில் .முடிவு- ஒரு தமிழன் கையில், - கண் முன் சோக வரலாறு



இன்னும் சில ஆண்டுகள் கழித்து , அப்போதுள்ள இளம் தலை முறை நம்மை இப்படி கேட்க கூடும்....

ஒரு வரலாற்று நாயகனின் தாய் , சிகிச்சைக்கு வந்த பொது, உங்கள அரசு அவரை திருப்பி அனுப்பியதாமே.. அபோது நீங்கள் எல்லாம் என்ன செய்து கொண்டு இருந்தீர்கள்..

தன மக்களுக்கு ஒரு தனி அரசு நடத்தும் அளவுக்கு வல்லமை பெற்ற ஒரு தலைவன் , சிக்கலில் இருந்தபோது , நீங்கள் யாரும் உதவவில்லியா?

அவர் நல்லவரா கெட்டவரா என்பது வேறு பிரச்சினை.. அனால் அவர் முக்கியமான சகாப்தம்..அவருக்கு உரிய முக்கியத்துவம் உங்க காலத்தில் ஏன் கொடுக்க படவில்லை..

.
தமிழ் நாட்டு தமிழர்கள் தான் இப்படி இருந்தீர்கள்... அவர் பிறந்த மண்ணில் பிறந்து, அங்கிருந்து வெளி நாடு செல்லும் வசதி படைத்த சிலர் கூட, அவரது முக்கிய போராட்டத்தின் போது, அதை கண்டு கொள்ளாமல்., நான் ஏன் கடவுளை நம்பவில்லை... கடவுள் இருக்கிறாரா .இல்லையா என்று நாத்திக பிரசாரங்களையும், எந்த சாமியை எப்படி கும்பிட வேண்டும், என்பது போன்ற ஆத்திக பிரச்சாரங்களையும் செய்து பொழு போக்கி வந்தாரகலாமே.. இதெல்லாம் முக்கியம் தான்.ஆனால் வாழ்வா சாவ என்று ஒருவர் போராடும் நிலையில் , இதெல்லாம் முக்கியமா...

இப்படி எல்லாம் வரலாறி காரி துப்பி விடுமோ, என்ற அச்சம் " பிரபாகரன் - வாழ்வும் மரணமும் " என்ற நூலை படித்து முடித்த போது ஏற்பட்டது...

பிரபாகரன் விடுதலை வீரர் அல்லது ராஜிவை கொன்றவர் என்ற எளிய அறிமுகம் தான் நம்மில் பலருக்கு இருக்கும்... ஒரு முழுமையான பார்வை இல்லாததுதான், இன்று அவர் தாய் திருப்பி அனுப்படும் துணிச்சலை, அரசுக்கு தந்துள்ளது என்றால் மிகை இல்லை...

இலங்கை தமிழர் முழு வரலாறு என்று இல்லாமல், பிரபாகரன் என்ற தனி மனிதனை புரிந்து கொள்ளும் நோக்கத்தில் எழுதப்பட்ட நூல்தான், பிரபாகரன் - வாழ்வும் , மரணமும்...

ஒரு தமிழரை கொல்வதில் ஆரம்பிக்கும் அவரது வரலாறு , ஒரு தமிழரால் காட்டி கொடுக்கப்பட்டு , முடியும் போது, விதியே- தமிழ் சாதியை என் செய்ய நினைத்தை என்று கலங்கத்தான் முடிகிறது...

எந்த நியாயங்களுக்கும் கட்டு படாத சிங்கள அரசு, கொடூரத்தின் உச்சியை சந்திக்கும் தமிழர்கள், ஆயுதம் தவிர வேறு வழியே இல்ல்லாத , துரதிர்ஷ்ட நிலை, பல போராளி குழுக்கள் போராட்டம், ஒவ்வொருவரும் தம் நிலைதான் சிறந்தது , அதை மற்றவர் ஏற்க வேண்டும் என்ற அபத்தமான எதிர்பார்ப்பு என சோகங்களை மட்டுமே தமிழ் இனம் சந்தித்து இருப்பதை உணர்த்துகிறார் நூல் ஆசிரியர்...

பிரபாகரனை தூற்றவ , போற்றவோ செய்யாமல், நடுநிலையாக எழுதப்பட்டு இருப்பது சிறப்பு...

பிரபாகரன் என்ற மனிதனுக்குள் எத்தனை உன்னத கனவுகள், தமிழ் ஈழ வங்கி, கப்பல் வணிகம், விமான படை , என்றெல்லாம் படிக்கும்போது, தமிழன் என்ற முறையில் பெரிமிதமாக இருக்கிறது... அவருக்குள் இருக்கும் காதல், குழந்தை தனம் என்பது புதிதாக இருக்கிறது....

அனால் எதுவும் பயன் பாடாமல் பொய் விட்டது தான் சோகம் .. இந்நிலைக்கும் அவரே காரணம் ஆகி விட்டாரா என்றும் தோன்றுகிறது...

சக போராளி காதலித்தபோது, சட்டம் பேசியவர், தான் காதலித்தபோது சட்டத்தை மறந்ததை, வராலறு சற்று கேலியாகத்தான் பார்க்கும் .. காதல் வேறு , பால் உணர்வு வேறு, காதலை எதிர்க்கவில்லை, திருமணத்தில் முடியாத காதலை எதிர்க்கிறேன் என்பதெல்லாம் தமிழ் நாடு அரசியல் வாதிகள் பேச்சு போல் உளது...

இந்த பிரச்சினை, பிரபாகரனுக்கு எல்லா விதத்தலும் நிகரான உமா மகேஸ்வரன் மரணத்தில் முடிந்தது, தமிழ் இனத்திற்கு ஒரு பேர் இழப்பு....

பிரபாகரன் மாவீரதன்...அனால் அவரை போன்ற பல மாவிரர்கள் இருந்தனர்... சக தமிழர்களாலேயே அழிகபட்டனர் என்பதுதான் சோகமான வரலாறு..

வென்றவர் வரலாற்றைத்தான், நாம் நம்புவோம்... அந்த அடிப்படையில் , மாவீரன் மாத்தையா , மரண தண்டில் இறந்தான் என்று தான் வரலாறு பதிவு செய்யும்... அவனுன் தன பாணியில், போராடினான் என்பது மறக்க படும்...

இது போன்ற விவகாரங்களில், நூலாசிரியர் பார்வை நடு நிலையாக இல்லை...
ஒவ்வொருவரும் , தம் இலக்கை அடைய, சில பொருந்தா கூட்டணிகள் அமைத்தனர்... இந்திய ராணுவத்துடன் கூட்டடணி அமைத்தது அப்படி இருக்க கூடும்...அவர்கள் தோற்றவர் கல் என்பதால் , துரோகிகள் என்று அர்த்தம் இல்லை.,..அவர்கள் பார்வையில், அவர்களும் மாவிரர்கல்தான்... ( உமா மகேஸ்வரனை கொன்றது விடுதலை புலிகள் அல்ல அன்பது எவ்வளவு தூரம் சரி என்று தெரியவில்லை )

அவ்வளவு ஏன், ஒரு கட்டத்தில், பிரபாகரன் கூட, பிரேமா தாசவுடன் கூட்டு சேர வில்லையா....

இதை தவிர்த்து விட்டு பார்த்தால், நூல் நடு நிலையாக உள்ளது....

அமைதி பூங்காவான இந்தியாவில் கூட, சில ராணுவ வீர்கள் , பெனகலிடம் அத்து மீறி நடந்து கொண்டு கைதாவது , வழக்கமான செய்திதான்... சாதாரண மக்களுக்கு அந்த சில ராணுவ வீர்களின் இயல்பு தெரியும.... பதட்டமான இலங்கையில், அப்பாவி தமிழ் பெண்களிடம் அவர்கள் எப்படி நடந்து கொண்டு இருப்பர்கள் என்பதை நம்மால் உணர முடிகிறது... இந்த விஷயத்தில் ராஜிவை யாரும் எச்சரிக்காதது ஒரு வரலாற்று சோகம்..
அவர் சற்று கவனத்துடன் இருந்து இருந்தால் , வரலாறே மாறி இருக்க கூடும்...

புரட்சி தலைவர் - கலைஞர் போட்டியில், பிரபாகரனுக்கு புரட்சி தலிவர் அருள் கிடைத்தது... அந்த அருள், உமா மகேஸ்வரனுக்கோ , மற்ற போராளி குழுகளுகோ கிடைத்து இருந்தால், பிரபாகரன் நிலைக்கு அவர்கள் வந்து இருக்க கூடும்... இலங்கை வரலாறே மாறி இருக்கலாம்.
புரட்சி தலைவி, கலைன்ஞர் போன்றவர்கள் கடைசி நேரத்தில் சற்று புத்தி சாலித்தனமா செயல் படு இருந்தால், தமிழ் இனம் பெருமை படும் அளவுக்கு முடிவு அமைந்திருக்க கொட்டும்..

இதெல்லாம் , வெறும் கற்பனைகள் தான்...

மாபெரும் வீரம், வல்லமை கொண்ட ஓர் இனம் , ஒற்றுமை இல்லாததால் பின்னடவை சந்தித்து உள்ளது என்பதே எதார்த்தம் என்பதை பளிச் என சொல்கிறது புத்தகம்...

இலங்கை தமிழர் போராட்டத்திற்கான காரன்கள் அப்படியே உள்ளன.. அவர்கள் வீழ்ச்சிக்கு காரணகளும் அப்படியே உள்ளன

**************************

ராகவன் அவர்கள் எழுத்தை, நடையை பொறுத்தவரை , சொல்ல புதிதாக ஒன்றும் இல்லை... எல்லோரும் அறிந்த விறு விறு விறு விருப்பான நடை.... இரவி பதினொன்றுக்கு, சும்மா படம் பார்க்க புத்தகத்தை புரட்ட ஆரம்பித்தேன்... படித்து முடித்து விட்டுதான் புத்தகத்தை கீழி வைத்தேன்...

ஓர் வரலாற்று நாயகனை புரிந்து கொள்ள விரும்பும் அனைவரும் படிக்க வேண்டிய புத்தகம்... இளம் எழுத்தாளர்கள், எழுத்தை கற்று கொள்ளவும் படிக்கலாம்..

புத்தகம் : பிரபாகரன் - வாழ்வும் மரணமும்
ஆசிரியர் : பா ராகவன்
வெளியீடு : கிழக்கு பதிப்பகம்

Saturday, April 17, 2010

காதல் இல்லை என்று சொன்னால் , பூமியும் இங்கில்லை




பாரில் அமர்ந்து கொண்டு , ஹிந்தி நண்பரின் ஜோக்கிற்காக விழுந்து ஜிழுந்து சிரித்து கொண்டிருந்த பொது தான், சௌம்யா நினைப்பு வந்தது....
டில்லி வந்து இரண்டு மாதங்கள் ஆகி விட்டன,,, இன்னும் ஒரு மாத வேலை இருக்கிறது.... சென்னையில் இருந்து கிளம்பும்போது, இருவருக்மே, மிகவும் கஷ்டமாக இருந்தது... மூன்று மாத பிரிவு என்பதை கொஞ்சம் கூட தாங்க முடியவில்லை.... அனால் வேறு வழியில்லை...

டில்ல்லி வந்த புதிதில், சிறிது கஷ்டமாக இருந்தாலும், புது இடம், புது நண்பர்கள் என வாழ்கை சுவையானது... சென்னையை விட இதை அதிகமாக ரசிக்க ஆரம்பித்தேன்.... சென்னையில் சைட் அடித்தாலும், இங்கு சைட் அடிப்பது சற்று வித்தியாசமாக இருந்தது... இந்த வாய்ப்பு மும்பே கிடைக்காமல் பொய் விட்டதே என ஏங்கினேன்...

இப்போது சௌம்யா என்ன செய்து கொண்டு இருப்பாள் ? இலக்கியம் தான் எங்களை இணைத்தது.... இலக்கிய கூட சந்திப்பு, சுவையான விவாதங்கள் - பின் நாம கல்யாணம் செஞ்சுகிட்ட நல்ல இருக்கும்லே - இதுதான் எண்கள் சுருக்கமான பிளாஷ் பேக் ..
பிருவு துயரம் என்ற திருகுரல் அதிகாரத்தை எத்தனை முறை விவாதித்து இருப்போம்.. பாவம் அவள்,,,, அவிடம் பேசுவோம் என போன் போட்டேன்... ரெண்டு நாளாக பேசவில்லை...

" ஹெலோ " எதிர் முனையில் வீணை ஒலித்தத்து...
" என்னடி பண்ற "

" திடீர்நு எங்க ஆபீஸ் ல , கொடைக்கானல் புரோக்ராம் போட்டு, எல்லோரும் போயிட்டு வந்தோம்...எவ்வளவு சூப்பரா இருந்துச்சு தெரியுமா... அழகளான பூக்கள், இனிய காற்று , தொட்டு செல்லும் மேகங்கள்.... நாம ஒரு நாள் போகணும் " அவள் பேசி கொண்டே போனாள்..

எனக்கு சற்று ஏமாற்றமாக இருந்தது... என்னை நினித்து ஏங்கி கொண்டு இருப்பாள் என நினைத்தேன்... அனால் இவள் படு ஜாலியாக இருக்கிறாளே...

****************************
சென்னை திரும்பினேன்.. நானும் அவளும் ஓர் உயர் ரக உணவகத்தில் அமர்ந்து இருந்தோம்...
" டில்லில இருந்து நீங்க வாங்கிட்டு வந்த பொருட்களை பர்ர்ப்பதை விட, உங்களை மீண்டும் பார்ப்பது தான் எனக்கு சந்தோஷமாக இருக்கு " காதலுடன் பேசினால் அவள்...

அவளை பார்ப்பதே ஒரு சந்தோசம்... அவளுக்கு வாங்கிய ஆடைகளை கொடுத்து மகிழ்ந்தேன்..

இந்த டிரெஸ்ஸை போடு..இந்த டிரஸ் க்கு எல்லாம் ஒரு புது அழகு வரட்டும் "

என் பேச்சுக்கு அவள் தத்து அவளுக்கே உரிய புன்னகை ....

" உங்க டிரஸ் செலெக்ஷன் சுப்பர் பா.. உங்க ஷர்ட் , பான்ட் ஆளை அசத்துது...எல்லா பொண்ணுகளும் உங்களைதான் பார்க்குறாங்க... " எனக்கு பெருமையாக இருந்தது...

சாப்பிடும் பொது புரை ஏறியது... " நான் சொல்லல... ? பல பொண்ணுங்க உங்களைத்தான் நினைக்கிறாங்க... ஏன் பா, இப்படி எல்லோரையும் மயக்குறேங்க.. நீங்க ரொம்ப மோசம் " செல்லமாக சிணுங்கினாள்...

அவள் சிநுங்களை ரசித்தபடி, அவள் கன்னத்தை செல்லமாக கிள்ளினேன்...

********************

" நீங்க எடுத்து கொடுத்த சேலை சுப்பர் பா... எனக்கு ரொம்ப பிடிச்சு இருக்கு "

" really u look like angel "

" இப்படித்தான் எங்க சீனியரும் சொன்னாரு... இருபது வருஷத்துக்கு முன்னாடி , இப்படி என்னை பார்த்து இருந்தா, என்னை தான் கல்யாணம் செஞ்சு இருப்பேன்னு சொன்னாரு "

என் முகம் லேசாக மாறியது...

" ஹே... அவர் எனக்கு அப்பா மாதிரி பா.. ஜஸ்ட் ஜோக்,, "

உன் கூட வேலை பார்க்குற ரவிய பத்தி அடிக்கடி சொல்லுவியே... அவன் என்ன சொன்னான்...

சற்று கவலையுடன் என்னை பார்த்தாள்.. அவன் ஒரு நல்ல நண்பன் பா.. அவனை பத்தி இப்ப என்ன பேச்சு...

சற்று குழப்பத்துடன் விடை பெற்றேன்..

****************************

" ஹே... அரை மணி நேரமா, உனக்கு போன் ட்ரை பண்றேன்..பிசி டோன் வருது.. எவன் கூட பேசிகிட்டு இருந்த....

" ப்ளிஸ்... நிதானமா பேசுங்க... நம்ம கல்யாணத்துக்கு அப்பா ஒத்துக்கல... வேற பையன் பார்துட்டராம்... அவர் கூட தான் சண்டை போட்டுட்டு இருந்தேன்... ஆனா, ஒரு சந்தேக பேர்வழிக்காக நான் ஏன் சண்டை போடணும் நு தோணுது...
நமக்கு சரி பாடு வராது... அவர் இஷ்டப்படியே நான் வேற யாரையாவது கலைய்னம் பணிகிட்டு சந்தோஷமா இருக்கேன்... குட bye


*****************************************

உனக்கு இவ்வளவு திமிர... என் மனம் எரிந்தது... என் கூட சுத்திட்டு , எவனையோ கல்யாணம் பண்ணிக்க போறியா... விட மாட்டேன்....
நாம ஒண்ணா சுத்துனதுக்கு எல்லாம் ஆதாரம் இருக்கு..அதை காட்டி , உன் கலயனத்தை நிருதுறேண்டி... ஈஎலோர் முன்னாடியும் உன்னை அசிங்க படுத்தறேன்.. எல்லா ஆதாரமும் என் கிட்ட இருக்கு....அவ்வளவு சுலபமா என்னை கழட்டி விட முடியாது...

என் இதயம கர்ஜித்தது..

*************************88

" நிறுத்தி என்னடா பண்ண போற ? " நிதானமாக கேட்டார் அப்பா.. அவரிடம் நான் எதையும் மறைப்பதில்லை,,, என் முதல் நண்பர் அவர்தான்...

" அவளை நானே கல்யாணம் செஞ்சுக்குவேன் "

" ஏன் ? "

" என்ன அவளை நான் காதலிக்கிறேன் "

" நீ காதலிகிற ஒருத்தரை , நீ எப்படி காய படுத்த முடியும்? அப்படீன உண்மையில் அவளை நீ காதல்லிகவே இல்ல... உன் உடமையாத்தான் அவளை பார்த்து இருக்க.... "

" என்ன சொல்றீங்க ? அப்ப காதல்ன என்ன ? "

" காதல் நா, புரிந்து கொள்ளுதல்... விட்டு கொடுத்தல். மதித்தல்... .எதிர் பார்ப்பின்றி இருத்தல்... உன் விருப்பம் போல , உன் எதிர்பாப்பு போல ஒருவர் நடந்து கொள்ள வேண்டும் என எதிர்பார்த்தால், அது காதலே அல்ல... உன் விருப்பத்தை நிறைவேற்றும் ஒரு கருவியாகத்தான் அவரை நினைக்கிறாய்.. அவரை அப்படியே ஏற்பதுதான் காதல்... "

எனக்கு லேசாக புரித்து..

" சௌம்யா ...உன்னை உண்மையிலேயே காதலிக்கிறேன்... உன் ரசனைகளை, நட்புகளை, உன் முடிவெடுக்கும் திறனை மதிக்கிறேன்...

நான் இல்லாத வாழ்வுதான் உனக்கு சிறந்தது என நீ முடிவெடுத்தால், அந்த முடிவை நான் மனதார ஆதரிக்கிறேன்... உன் திருமணத்துக்கு எதாவது உதவி தேவை பட்டால் , எனக்கு சொல்.. செய்கிறேன்.. அதே போல என்னுடன் வாழ்வதுதான் சிறந்தது என முடிவெடித்ததால், அந்த முடிவையும் நான் மகிழ்வோடு ஏற்பேன்... எந்த போராட்டம் வந்தாலும் சமாளித்து உன் கை பிடிப்பேன் ... "


கொல்லை புறத்தில் மூட்டிய நெருப்பில், நானும் அவளும் சேர்ந்து எடுத்த புகை படங்கள், எழுதிய கடிதங்கள் எல்லாம் எரிந்து கொண்டு இருந்தன... அவளை இப்போதுதான் உண்மையாக காதலிப்பது போல தோன்றியது.....

" டேய்... சௌம்யா அபபா , அவரு பொண்ணோட ஆசையா மதிச்சு , கல்யாணத்துக்கு ஒதுகிட்டாராம்... உன்னை பார்க்க வீட்டுக்கு வந்து இருக்கார்..நீ சின்ன பையனாட்டம், தீ மூட்டி விளையாண்டுகிட்டு இருக்க... " அப்பாவின் குரல் , இன்ப தேன் வந்து காதில் பாய்ந்தது போல இருந்தது.....

ஓர் இயக்கமோ , கட்சியோ , ஒரு தலைவரின் சிந்தனைகளோ நமக்கு நன்மை செய்யுமா?



என்னதான் நல்ல கருத்துக்களை சொன்னாலும், மதம் என்ற விஷயம், நமக்கு நன்மையை விட தீமைகளைத்தான் தந்து இருக்கிறது என்பது வரலாறு... மதத்தில் தவறில்லை, அதை பின்பற்றுபவர்கள்தான் தவறு செய்கிறார்கள் என சமாதானம் சொன்னாலும், மத கலவரங்கள், கொலைகள் என்பதெல்லாம் கண் முன் தெர்யும் சாட்சியங்கள்..

மதம் ,ஆன்மீகம் என்பது தவறு .. ஆனால் , , ஒரு இயக்கம், ஒரு கட்சி ஒரு சித்தந்தம் நல்லது செய்யும் என்பது வேறு சிலரின் முடிவு... இதி சரியா என்று அலசுகிறார் , ஜே கிருஷ்ண முர்த்தி ...


******************************************
செய்தி தாள்களிலும் , பத்திரிகைகளிலும் ( தற்போது பதிவிகளிலும் :-) ) அரசியல் செய்திகள் தாம் அதிக இடம் பிடிக்கின்றன.. வெளி சூழ்நிலைதான் நம் வாழ்வை தீர்மானிப்பதாக தோன்றுகிறது..
பதவி, கொடி போன்றவை முக்கியம் ஆகி, வாழ்க்கை என்பதை பின்னுக்கு தள்ளி விட்டன..
ஒரு இயக்கம , கட்சி அல்லது சமுக சீர்திருத்த நடவடிக்களில் ஈடுபட்டு நம்மை மறப்பது, வாழ்க்கை என்பதை புரிந்து கொள்வதை விட எளிது...

நம் அன்றாட வாழ்வின் வெறுமையில் இருந்து - ஆன்மிகம் அல்லது சமுக நடவடிக்கையில் ஈடுபட்டு- கௌரவமாக தப்பித்து செல்கிறோம்...

நம் இதயம் சிறிதாக இருந்தாலும், உலக அரசியல், உலக புரட்சி , ஆன்மிக புரட்சி என்றெல்லாம் பேச முடியும்...

நமது அமைதி அற்ற மனம், எதாவது ஒரு சித்தந்தில் ஈடுபடுவதன் மூலம் அமைதி அடிகிறது ( ஆத்திகன், நாத்திகன், வலது சாரி, இடது சாரி , கட்சிகள் :-) )

நாம் எப்படி இருகிறோம அதுதான் சமுதாயம் ஆகிறது... நாம் சமுதாயத்தை மாற்றி அமைப்பதன் மூலம் மாற்றம் கொண்டு வர நினைக்கிறோம்...

ஒரு விளைவுக்கான காரணம் என்ன என்பதை மறந்து, விளைவுகளை பற்றி மட்டுமே நாம் யோசிக்கிறோம்..
ஆன்மிகமோ, பொருளாதார சித்தாதங்களோ, இயக்கங்களோ ஒரு போதும் நம் வாழ்வை மாற்றி அமைக்காது...
இதெல்லாம் வெறும் பொழுது போக்குதான்...

ஆழமான , முழுமையான விழிப்புணர்வுதான், வாழ்வின் அழகை நமக்கு உணர்த்தும்...

( ஒவ்வொரு மனிதனும், நல்லவனாக மாறி விட்டால், ஒட்டு மொத்த சமுதாயமே நல்ல சமுதாயம் ஆகி விடும் அல்லவா.. நாம் ஒரு கொள்கையை , சித்தந்ததை வைத்து கொண்டு மற்றவர் திருந்த வேண்டும் என்று எதிர் பார்ப்பது அபத்தம்,.,, ஏனென்றால், அவர் நாம் திருந்த வேண்டும் என எதிர் பார்க்கிறார்

தகுதி இல்லாத என் பதிவு




கும்மிடிபூண்டியில் பதிவர் சந்திப்பு- முக்கிய தீர்மானம் நிறைவேற்றம்


கும்மிடிபூண்டி யில் இருந்து சென்னை வந்து கொண்டு இருந்தேன்,,, நல்ல வெயில்.... குளிர் பானம் அருந்த , கடையை தேடியவாறு, முன்னேறிக்கொண்டு இருந்தேன்..

வழியில் ஒரு டாஸ்மாக் என்னை கொஞ்சம் கவனி என்று அழைத்தது... சரி..என பரிதாபப்பட்டு நுழைந்தேன்....

சீசன் டைம் என்பதால், கிங் பிஷர் உள்ளிட்ட எந்த பிராண்டும் இல்லை... புதிதாக ஏதோ ஒன்றை காட்டினார்கள்... பரவிய்ல்லை சார்..நல்லா இருக்கும் என்று சிபாரிசு செய்தனர் பக்கத்தில் இருந்த இரு வாடிக்கையாளர்கள்...

சிட் டிஷ் போன்றவை வாங்கிவீடு பார்த்தால், சில்லறை பிரச்னை... மூன்று ரூபாய் கொடுத்து உதவினார்னக் அவர்கள்... அவர்களை அபோதுதான் முதன் முறையா பார்கிறேன்.... ஆனாலும் உதவுய்கிறாக்கள் என்ற நட்புணர்ச்சியுடன் பேச ஆரம்பித்தேன்...

அதில் ஒருவர் , வலை பதிவு எல்லாம் படிக்கிறார் என அறிந்தேன் ..எப்போதாவது பின்னூட்டம் இடுவாராம்...

அப்படி பார்த்தால் , அது ஒரு வலை பதிவர் சந்திப்பா என நினைத்து கொண்டேன்... நெடுஞ்சாலையில், லேசான போதையில் வண்டி ஓட்டுவது போன்ற சுகம் வேறு எதிலும் இல்லை என்று அந்த சந்திப்பில் தீர்மானம் நிறைவேற்றி சபை கலைந்தது..
ஒரு முறை அப்படி இலேசாக தண்ணி அடித்து விட்டு ஒட்டி பாருங்கள்... அதை வார்த்தைகளால் விளக்க முடியாது....
****************************************

இதை பதிவேற்றம் செய்வதற்குள் திடுக்கிடும் திருப்பம்... நானும் , இன்னொரு நண்பரும், இரவு நேரம், திருமழிசை யில் இருந்து ஆவடி சென்று கொண்டு இருந்தோம்,,இருவரும் சற்று அதிகாமான போதையில் இருந்தோம்....

அவன் ஓட்டினான்,,, எதிரே ஒரு பள்ளம்... அவன் திரும்பி ஏதோ பேசினான்,,, அவன் பள்ளத்தை கவனித்து விட்டன என நான் நினைத்தேன்..இல்லை... அதில், விழுந்து இருவருகுக் லேசான அடி..வேகம் குறைவு, வேறு வாகனங்கள் இல்லை என்பது எங்களை சிறிய காயத்துடன் காப்பற்றியது....

***************************

தண்ணி அடிப்பது தவறல்ல... அனால், தண்ணி அடித்து விட்டு வாகனம் ஓட்டுவது தவறு என்று அறிவுரை கூற எனக்கு வயதில்லை..தகுதி இல்லை... ஆனாலும் சொல்கிறேன்... வேண்டாம் இந்த பழக்கம்..

**(*****

இதை படித்து ஒருவராவது திருந்த வேண்டும் அல்லவா..ஆம் ஒருவர் திருந்தி விட்டார்..இனி அவர் குடித்து விட்டு வண்டி ஓட்ட மாட்டார்..*
***********
அவர் நான் தான் ...

பதிவேற்றம் செய்யாத அந்த பதிவு, பதிவேற்றம் செய்ய தகுதி அட்ட்றது என்பதை இயற்கை அல்லது இறை எனக்கு உணர்த்தியது , நான் மறக்க முடியாத இயற்கையின் லீலை

Friday, April 16, 2010

ஜெயலலிதாவுக்கு பதி பக்தி இருக்கிறதா? - டாக்டர் கலைஞர் ஆவேச பேச்சு



செய்தியும் , சிந்தனையும்

யார் யாருக்கோ பதி பக்தி இல்லை என ஜெயலலிதா அம்மையார் பேசுகிறாரே....!! எம் ஜி யார் உடல் நலம் குன்றியள நிலையில், இவர் பதி பக்தியுடன் நடந்து கொண்டாரா ? கணவன் உடல் நலம் குன்றினால், உடல் நலம் மேம்பட , மனைவி பிரார்த்தனை செய்வாள்... உடல் நலம் பெற போராடுவாள்.... அனால் அம்மயார், எம் ஜி ஆருக்கு எதிராக ராஜீவுக்கு கடிதம் எழுதினார்.. இதுவா பதி பக்தி - மாண்பு மிகு முதல்வர், முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் பேச்சு

புரட்சி தலைவியும், புரட்சி தலைவரும் திருமனம் ஆகி குடும்பம் நடத்தினார்கள? சொல்லவே இல்லை??!!!

கார் ஒன்று நிலை தடுமாறி, மின் கம்பத்தின் மீது மோதியது... பார்த்தவர்கள் பதறினர்.. தீ பிடிக்க போகிறது என பயந்தனர்..அனால் அப்போது மின்சாரம் இல்லாததால், அதிர்ஷ்டவசமாக அனைவரும் தப்பினர்..

தமிழ் நாடு மின்சார வாரியத்துக்கு , வாழ்த்துக்கள்...

மிருகவதை தடை சட்டத்தால், மிருகங்களை வைத்து படம் எடுக்க முடியவில்லை.. ராம நாராயணன் வருத்தம்..

குழந்ந்தை வதை தடை சட்டம் இல்லை... அவர்களை கொடுமை படுத்தி படம் எடுங்கள்..தடை இல்லை...


*****************************************
இன்றைய சிந்தனை
" கடவுளுக்கு பிடித்தது எது ""

" பிரார்த்தனை... "

" பிடிக்காதது ? "

" மற்ற மனிதர்களை வார்த்தைகளால் , செய்கையால் துன்புறுத்துவது "

" கடவுளை தூற்றுவது தான் , கடவளுக்கு பிடிக்காது என்றல்லவா நான் நினைத்தேன் "

" கடவுளை தூற்றினாலும் கூட, அவரரிடம் எப்போது வேண்டுமாலும் மன்னிப்பு கேட்டு கொள்ளலாம்... அவர் எங்கும் இருப்பவர்.. ஆனால், ஒரு மனிதனை காயபடுத்தி விட்டால், மன்னிப்பு கேட்பது கடினம்.. நாளை அவன் எங்கு இருக்கிறான், நாம் எங்கு இருப்போம் என யாருக்கும் தெரியாது..மீண்டும் சந்திப்போமா என்பதும்தெரியாது"

மதியார்க்கும் மதிப்பவர்க்கும் மதிகொடுக்கும் மதியே


" என்னம்மா... சாமிக்கு பூ கட்டி முடிச்சுட்டியா ? "
அப்பாவின் குரலை கேட்டதும் வேகமாக பூ தொடுக்க ஆரம்பித்தாள் ரேவதி....

தினமும், சாமிக்கு பூ மாலை சாத்தி, பூஜை செய்ய வேண்டும் என்பது அந்த வீட்டில் எழுதப்படாத விதி...

தினமும் சாமி கும்பிடுவதா, அல்லது அதிர்ஷ்டமா, அல்லது உழைப்பா, என்றெலாம் தெரியவில்லை...அந்த குடும்பம் நன்றாக இருப்பது என்னவோ நிஜம்...

" உன்னை ஒரு நல்ல இடத்துல கட்டி கொடுதுட்ட, பகவான் நினைப்பிலேயே என் காலத்தை ஓட்டிடுவேன் " என அடிகடி சொல்லுவார்....

***
அன்று நல்ல மழை... ரேவதியும் அம்மாவும் மட்டும் இருந்தார்கள்... அப்பா கோயில் சென்றி இருந்தார்....

வெளியே ஏதோ முனகல் சத்தம்... ரேவதி எட்டி பார்த்தாள்.. யாரோ ஒரு முதியவர்... குளிரில் நடுங்கி கொண்டு இருந்தார்.... ரேவதிக்கு பாவமாக இருந்தது... வீட்டில் அப்பா வேறு இல்லை... எப்படி உதவுவது...

சரி ...பரவயில்லை என நினிதவள், ' அய்யா..கொஞ்சம் அந்த பைக் பக்கத்துல வந்து உட்காருங்க... மழை மேலே படாது என்று, பைக் நிறுத்தும் இடத்தில் உட்கார வைத்தாள்"

" பாவம் டீ ..மழை நிற்கும் வரை இருந்துட்டு போகட்டும்,," அம்மாவும் ஆதரவு கரம் நீட்டினாள்....

அதற்குள் அப்பாவும் வந்து விட்டார்... " ஒரே மழை..எப்படியோ வந்துட்டேன் ... அது யாரு ? ":

" மழைல யாரோ கஸ்த்ட பட்டங்க... அதன் வெளியிலேயே, உட்கார வச்சேன் "

" சரிம்மா... யாரையும் நம்ப முடியாது.... எச்சரிக்கைய இருக்கணும் ..சரி மழை நின்னுடுச்சு... அவரையும் கூப்பிடு ..சாபிடிடு கிளம்பட்டும் "

அனைவரும் சாப்பிட அமர்ந்தோம்.... அம்மா பரிமாறினாள்..

" அய்யா பெரியவரே..உங்களுக்கு பிடிச்ச சாமியை, ரெண்டு நிமிஷம் பிரார்த்தனை பண்ணுங்க..இல்லேன்னா, நான் சொல்ற ஸ்லோகம் சொல்லுங்க... சாப்பிடலாம் "

பெரியவர் சிரித்தார்... " நன்றிங்க... ஆனா , நான் சாமி எல்லாம் கும்பிடுவது இல்லை... எம்பது வருஷமா இப்படித்தான் இருக்கேன்... கடவுள் இல்லைனு உறுதியா நம்புறேன் "

ரேவதிக்கு குழப்பமாக இருந்தது... " பார்க்காத கடவுளை, இல்லை என்றோ இருக்கிறார் என்றோ நம்புவது பைத்திய கார தனம் அல்லவா... எந்த நம்பிக்கையும் இல்லாமல் இருந்தால்தானே உண்மை தெரியும் ?"

அப்பாவுக்கு பெரியவர் சொன்ன பதில் எரிச்சல் மூட்டியது....
" நான் பல வருஷமா சாமி கும்டிட்றேன்..வீட்ல சில விதிகளை கடை பிடிக்றேன்... நான் கும்புட்ற சாமிய தான் கும்பிடனும்னு சொல்லல... ஏதோ ஒரு சாமிய . கும்பிடுங்க... சாப்பிடலாம் "

பெரியவர் புன்னகைத்தார்... " எனக்கு அதுல எல்லாம் நம்பிக்கை இல்லை"

"அப்படீனா, நீங்க கிளம்பலாம்... போயிட்டு வாங்க...." கண்டிப்பாக சொன்னார் அப்பா....

பசியுடன் உட்கார்ந்து இருந்த முதியவர், ஏக்கத்துடன் சாப்பாட்டு தட்டை பார்த்தபடி எழுந்தார்...

திடீரென பூஜை அறையில் இருந்து குரல் கேட்டது....

உள்ளே யாரும் இல்லையே... எப்படி குரல் வருகிறது? கடவுளா...?

" அருமை பக்தா.... நான் இருப்பதை நம்பாதவனுக்கு, என்னை தூற்றுபவனுக்கு, எம்பது வருடங்களாக நான் உணவு கொடுத்து வருகிறேன்.... ஒரே ஒரு நாள் அவனுக்கு நீ உணவிட மாட்டாயா ? அப்படிஎன்றால், நீ என்னை பற்றி என்னதான் புரிந்து கொண்டாய் ?"

அப்பாவுக்கு புரியவில்லை..ரேவதிக்கு புரிந்தது போல இருந்தது.

*************************************************

Thursday, April 15, 2010

சுஜாதாவை போல ஒருவர்-

இர‌ண்டு நாளில் இலக்கிய‌ த‌மிழ் க‌ற்று கொள்வ‌து எப்ப‌டி ?

த‌மிழ் நாட்டில் வாழும் பெரும்பால‌னொர், த‌மக்கு த‌மிழ் தெரியும் என‌ நினைத்து கொள்கிரார்க‌ள் ..ஆனால் திடிரென‌ ஒரு நாள் வ‌லை ப‌திவுக‌ளோ , இல‌க்கிய‌மொ ப‌டித்தால்தான், த‌ன்க்கு இன்ன்னும் த‌மிழ் தெரிய‌வில்லை என‌ தெரிய‌ வ‌ரும்... அவ‌ர்க‌ள் ந‌ன்மைக்காக‌ , சில‌ த‌மிழ் சொற்க‌ளுக்கு அர்த்த‌ம் கொடுப்ப‌தில் பெருமை ப‌டுகிரொம்...


இல‌க்கிய‌ம்
_ கெட்ட‌ வார்த்தையால் திட்டி கொள்வ‌து

இந்தியா _ வ‌ல்ல‌ர‌சு ஆகி விட்ட‌ ஒரு நாடு


த‌மிழ் எழுத்தாள‌ர்க‌ள் _ பிரான்ஸ் இல‌க்கிய‌ம் எழுதுப‌வ‌ர்க‌ள்... ஆன்மீக‌ம் எழுதுப‌வ‌ர்க‌ள்

சுஜ‌தாவுக்கு அடுத்த‌ நில‌யில் உள்ள பிர‌ப‌ல‌ எழுத்தாள‌ர்...ஆண்டுக்கு ப‌தினைந்து விற்கும் புத்த‌க‌ம் எழுதுப‌வ‌ர்

அறிவு ஜீவி எழுத்தாள‌ர்‍ ... புரியாத‌ த‌மிழில் எழுதுப‌வ‌ர்



சாமியாரை ந‌ம்பி ஏமாறுத‌ல் .... சாமான்ய‌ன் ஏமாந்தால், சாமான்ய‌னின் த‌வறு
எழுத்தால‌ர் ஏமாந்த்தால், சாமியாரின் த‌வ‌று

பிர‌ப‌ல‌ ப‌திவ‌ர‌க‌ள் _ "பிர‌ப‌ல‌ எழுத்தாள‌ரின்" ர‌சிக‌ர்க‌ள்


ப‌திவுல‌க‌ ஒற்றுமை _ ச‌க‌ ப‌திவ‌ர்க‌ளின் புத்த‌க‌த்தை , உழைப்பை இழிவு செய்வ‌து

காத‌ல் ‍ _ ப‌ண‌க்கார‌க‌ளுக்கு மட்டும் தோன்ற‌ வேன்டிய‌ உண‌ர்வு

ஏழ்மை _ த‌ன்ன‌ம்பிக்கை , உழைப்பு இன்மையால் ஏற்ப‌டுவ‌து

இழிவு ‍ ..... முதுகெலும்பு இல்லாத‌வ‌ர்க‌ள், த‌ன்க‌ல் த‌வ‌றால் அடைவ‌து

த‌மிழ் நாட்டின் முக்கிய‌ பிர‌ச்சினை ‍ ... க‌ட‌வுள் இருக்கிறாரா இல்லையா ...

ப‌திவ‌ர் ச‌ங்க‌ம் ‍ .... யாராவ‌து ஒருவ‌ர் க‌டும் முய‌ற்சியால் உரு பெற்ற‌ பின், சேர்ந்த்து கொள்ள‌ வேன்டிய‌ ஒன்று... அதுவ‌ரை , கேலி செய்யப்ப‌ட‌ வேன்டிய‌ ஒன்று

இன்னும் ப‌ல‌ சொற்க‌ளுக்கு விள‌க்க‌ம் பிற‌கு த‌ர‌ப்படும்....


பொது ந‌ல‌ன் க‌ருதி வெளியிடுவோர் ‍ pichaikaaran.blogspot.com

Monday, April 12, 2010

முப்பது நாளில் பிரபல பதிவர் ஆவது எப்படி ? - நிறைவு பகுதி

"

முப்பது நாளில் பிரபல பதிவர் ஆவது எப்படி ??பகுதி 1


"அங்காடி தெரு" வின் ஆயிரம் குறைகள்


அங்காடி தெரு , படம் வந்தாலும் வந்தது... அதை சிலர் ஒரேடியாக பாராட்ட, சிலர் ஒரேடியாக திட்ட ஆரம்பித்தனர்..
படம் பார்த்த நமக்கு, இதில் எல்லாம் படித்த பின், ஒரே குழப்பம்.. இப்போது யாரவது, அந்த படம் நல்ல படமா இல்லையா என கேட்டால், " தெ ரியலையே ஏஏ" என்றுதான் சொல்ல முடியும் போல...
எனினும் பொது நலன் கருதி, எல்லோரும் என சொல்கிறார்கள் என தொகுத்து தர வேண்டிய மாபெரும் பணியை, நானே செய்கிறேன்... வேறு வழி?

*************************
உண்மையில் படத்தில் ஆயிரம் தவறுகள் இருகின்ட்ன்றன... இசை சரி இல்லை... அப்படி சொல்வடஹி விட , படத்தோடு ஓட்ட வில்லை...

குறிப்பாக, நாயகனும் , நாயகியும், கடையில் டுயட் பாடுகிறார்களாம்.. அது விடியோவில் பதிவாகி விடுகிறதாம்.. ( பாட்டோடு !!! )

ஐயோ...ஐயோ...

இன்னும் சொல்லி கொண்டே போகலாம்... அனால், நம் மக்கள் அதை எல்லாம் விட்டு விட்டு , மாற்றி யோசித்து நம்மையும் குழப்பி, அவர்களையும் குழம்பி விட்டர்கள்...
சரி... இதோ குழப்பங்களும், விளக்கங்களும்

************************

ஏன் படம் முழுக்க அகார்களுக்கு கெட்டது மட்டுமே நடக்கிறது? இயல்பாக இல்லையே?

ஒரு சராசரி மனிதனுக்கு, நல்லது மட்டுமோ , கெட்டது மட்டுமோ , தொடர்ந்து நடந்து கொண்டிருக்காது... அனால், ஒரு சில பாவ பட்ட மனிதர்கள், தொடர்ந்து கஷ்டம் மட்டுமே படுகிறார்கள் அல்லவா? அவர்களில் சிலரை பற்றித்தான் படம்...

பணக்காரர்கள் என்றால் கேட்டவர்கலாகத்தான் இருப்பார்களா..

இல்லை... கெட்டவர்கள் எல்லா இடத்திலும் தான் இருப்பார்கள்... பணக்காரர்கள் நல்லவர்களாகவும் இருப்பதுண்டு... கெட்டவர்களாகவும் இருப்பதுண்டு... இந்த படத்தில், இருப்பவர் கெட்டவர்களில் ஒருவர்..அவ்வளவுதான்

அவ்வளவு கஷ்டபடுபவர்கள் ஏன் புரட்சி செய்யவில்லை... ஒருவர் கூடவா புரட்சி செய்ய மாட்டார் ?

புரட்சி செய்தால் நல்லதுதான்.. ஆனால் செய்ய முடிவதில்லை என்பதுதான நடைமுறை.... இதை விட இழிவுகளை தாங்கி கொண்டு, வாழ வேண்டிய நிலை பலருக்கு உள்ளது...

சாதாரண விமர்சனத்தை கூட எதிர்க்கும் நிலையில் பணி பிரியும் நம்மை போன்றவர்களுக்கு, அவர்கள் ஏன் எல்லாவற்றையும் சகித்து கொண்டு வாழ்கிறார்கள் என்பது புரியாதுதான் ( ஒரு முறை , ஒரு நிறுவன அதிகாரி என் தவறை சுட்டி காட்டிய போது, கோபத்துடன் ஒரு வாரம் லீவு போட்டேன்.. பிறகு அவர் வருத்தம் தெரிவித்ததும் பணிக்கு திரும்பினேன் - இத்தனைக்கும் தவறு என் மேல்தான் )

இந்தியாவில், ஏன் இதுவரை புரட்சி நடக்கவில்லை என்பதற்கு பல காரணங்கள் இருக்கின்றன...

ஓகே... அட்லீஸ்ட் படத்திலாவது , யாரவது எதிர் குரல் கொடுப்பது போல காட்டி இருக்கலாம் அல்லவா ?

எப்படி சமுகம் இருக்கிறது என்பதை படைப்பது ஒரு வகை... எப்படி இருக்க வேண்டும் என படைப்பது இனொரு வகை... எப்படி இருக்க முடியும் என்று கூட சொல்லலாம் ... ( எதிலும் சேராத படங்களும்உண்டு )

எல்லா வகை படங்களும் வருவது நல்லதுதான்...

எதிர் குரல் கொடுப்பதை, சினிமாத்தனம் இல்லாமல் , ஆழ்ந்த சிந்தனையுடன் யாரவது எடுத்தால் , இந்த படத்திற்கு கிடைக்கும் வரவேற்ப்பு , அதற்க்கும் கிடைக்கும்...
**********************8

பொது நன்மை கருதி வெளியிடுவோர் : pichaikaaran.blogspot.com

Sunday, April 11, 2010

கடவுளை கண்டேன் ( சாரு நிவேதிதா மன்னிக்கவும் )


தலைப்பை பார்த்ததும் , சாரு பாணியில், யாரவது ஸாமியரை௮ பார்த்து விட்டு , கதை விடுகிறேனா என நினைக்க வேண்டாம்...

இது கொஞ்சம் , குளிர்ச்சியான விஷயம்.. கடைசில சொல்றேன்...

*******************

செய்தி 1 நான் திருஆசகம், தேவாரம் சொற் பொழிவு ஆற்றுபவன்.,... ஆன்மீக வாதி, ... நான் எப்படி அவரை ஏமாற்றுவேன் ...- சிரிப்பு நடிகர் பேட்டி

செய்தி 2 அறிவியல வளர்ந்துள்ள சூழ்நிலையில், அதையும் மூட நம்பிக்கைக்கு பயன் படுத்துகின்றனர் மக்கள்... நல்ல நேரத்தில் குழந்தை பெற வேண்டும் என்பதறக்க, மருத்துவரை நச்சரித்து, இயல்புக்கு மாறாக முன்பே குழந்தை பெற்று கொள்கின்ன்டறனர்...

இப்படி செய்பவர்களில், பெரும்பாலானோர், படித்தவர்கள் தான்...


**********************************௮௮

ஒருவர் ஆன்மிகக வாதியா, நாத்திகவாதியா, படித்தவரா, படிக்காதவர என்பதும் , பொது அறிவு என்பதும், நேர்மை என்பதும் வேறு...

அவரவர் செயலை வைத்துதான் ஒருவரை மதிப்பிட வேண்டும்... அவர் என்ன வாதி. என்ன படித்தார், எதை நம்புகிர்ரர், எதை நம்பவில்லை என்பது முக்கியம் இல்லை...


*****************************௮

ஒரு ஜோக்

" உங்க கடைல, சிகரட் விக்கிறிங்க..ஆனா , இங்கு புகை பிடிப்பதை அனுமதிக்க மறுக்றீங்க... முரண்பாடா இருக்கே "

கடை கார பெண் : நான் காண்டம் கூடத்தான் விக்கிறேன்..அதுக்காக அதை இங்கே உபயோகிக்க அனுமதிக்க முடியுமா ?

************************************௮





" அருகில் இவள் அருகில் இவள் அருகில் வர உருகும்
கரிய குழல் மேனியவள் கானமயில் சாயல்

பெரிய தனம் இடை சிறிது பேதை இவள் ஐயோ
தெரிவில் இவள் நின்ற நிலை தெய்வம் எனலாமே....

அவளை பக்கத்துல்ல பார்த்த, மனசு அப்படியே உருகுது..அவள் அழகு உடலும், கரு கரு முடியும்,. ஐயோ... வர்ணிக்க வார்த்தை இல்லை.,... அவள் ரோட்ல நடந்து போறத பார்த்தா, அழகு தேவதையை, தெய்வத்தை பார்த்தது போல இருக்கு.,,,

ரசனையுடன், அந்த காலத்தில் பாடி வச்சு இருக்கான் தமிழன்....

சங்கத்திலே ஒரு குறை இருந்தாலும், சிரிப்பினில் குறைவதுண்டோ




"தமன்னா இடுப்புக்கு மயங்குனது, தகிக்ற அடுப்புல விழ வச்சுருச்சே " மங்குனி மருதப்பன் , தூக்கத்தில் இருந்து என்னை எழுப்பி சொன்னதை கேட்டு இப்படித்தான் நினைத்து கொண்டேன்... ஞாயிற்று கிழமை தூக்கம் போச்சே என்ற கவலையும் சேர்ந்தது..

வழக்கமாக, ரூமில் இருக்கும் கணிப்பொறியை நான் சீண்டுவதில்லை... பையா படம் பார்த்ததில் இருந்து, மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள் என பார்க்கும் ஆர்வம் எழுந்தது...
எனக்கு படம் பிடித்து இருந்த்யது.... அனால் மங்குனி " இதெல்லாம் படமா ' என கிண்டல் செய்தான்....

கூகுல் சென்று பையா என தட்டச்சினேன்... பல விமர்சங்கள் தோன்றி அசத்தின... பெரும்பாலும் படத்தை திட்டி இருந்தார்.. சிலர் மட்டும் பாராட்டி இருந்தனர்... அதிலும் ஒருவர் தமன்னா இடுப்பை புகழ்ந்து இருந்தது எனக்கு பிடித்து இருந்தது.... சூப்பர் விமர்சனம் என பின்னூட்டம் இட விரும்பினேன்... அது, பெயர் , கடவு சொல் எல்லாம் கேட்டது... தமன்னாவுக்கு ஆதரவு கொடுக்க வேண்டும் என்ற வெறியில், பிதிதாக , கணக்கு தொடங்கி, முதல் பின்னூட்டமாக, உங்கள் விமர்சனம் அள்ளி கொள்ள தூண்டியது ..தமன்னா இடுப்பு , கிள்ளி கொள்ள தூண்டியது என எழுதி , அத்துடன் அதை மறந்தேன்...

இன்று ஞாயிறு என்பதால் , நிம்மதியாக தூங்கி கொண்டு இருந்தேன்.... அப்போதுதான், மங்குனி என்னை எழுப்பினான்... "என்னனே , பொறுப்பு இல்லாம தூங்குரஈங்க... சங்க கூட்டத்துக்கு நேரம் ஆச்சு "

" என்னடா சங்கம் ..என்ன கூட்டம் "

" பதிவர்கள் சங்க கூட்டம்னே "

" அதுக்கும் , எனக்கும் என்னடா சம்பந்தம் "

" அன்னிக்கு நீங்க , அண்ணி இடுப்பு சூப்பர்னு பின்னஊடம் போட்டீங்கள் ல .. இப்ப நீங்களும் பதிவர்னே... உங்களையும் invite செஞ்சு இருக்காய்ங்க .. போகலேன்னா பிரச்சினை ஆயிடும் "

தூக்கம் போனது எரிச்சலாக இருந்தாலும், அவன் அண்ணி என்று சொன்னது கொஞ்சம் ஆறுதாலக இருந்தது... இப்படி அவன் சொல்லுவது ஓசி டீக்குதான் என்றாலும், சந்தோஷமாக இருந்தது...

" சாப்பாடு வாங்கி தருவாய்ங்க லாடா "

" அதெல்லாம் தெரியல... வாங்க ..போகலாம் ..நேரம் ஆச்சு "

*******************************

கடற்கரை அருகில் , சங்க கூட்டம் என சொல்லி இருந்தாலும், ர்ந்த இடத்தில் என கண்டு பிடிக்க முடியவில்லை....

படித்தவர் போல் தோன்றிய ஒருவரிடம் கேட்டோம்...

" சார்..இங்க பதிவர்கள் கூட்டம்.. எங்கே "

" இன்னிக்கு லீவு தம்பி... பத்திர பதிவு எழுத்தர்கள் இன்னிக்கு இருக்க மாட்டாங்க... நாளைக்கு , ஆபீஸ் போய்டுங்க... அங்கே ராமனுஜம் எனக்கு தெரிஞ்சவன் தான்... உயரமா, கண்ணாடி போட்டுண்டு இருப்பான் "

அரம்பமே சரி இல்லையே... சரி லோக்கல் ஆள் யார்கிட்டயாவது கேட்போம்...

" அய்யா... இந்த இன்டர்நெட்... "

" எனாது ? " எங்களை விநோதம்க பார்த்தார் லுங்கி....

" இந்த வலை பதிவில எழுது வாய்ங்கள்ள... அந்த கூட்டம் எங்கே நடக்குது ?' செந்தமிழில் கேட்டேன் நான்..

" அதுவா,,, நேர போங்க... " என்ருய் கை காட்டினார் அவர்..

காட்டிய திசையில் சென்றோம்... அங்கு பத்து பேர் மட்டுமே இருந்தனர்... என்னடா சங்கத்துல, பாத்து பேர்தானா .. இங்கேவ கூட்டம் நடக்குது "

என்னை நக்கலாக பார்த்தான் , மங்குனி..." அண்ணே.. இது மீன் பிடிகிற வலை , காய பூட்டு இருக்க்னக.. நாம நினைகிற வலை இல்ல "

அடங்கொய்யால. என நினிதபடி சுற்றி அலைந்தோம்..ஓரிடத்தில், காரசாரமாக சத்தம் கேட்டது... " அட இதுதான் சக கூட்டமா," உள்ளே சென்று அமர்ந்தோம்...

என்ன பேசுகிறார்கள்... எதை பற்றி ஒன்றும் புரியாமல் உட்கார்ந்து இருந்தோம்...

" உங்க கருத்தை தைரியமா சொல்லுங்க" ஒருவர் மன்குணியை கேட்க, அவன் திகைத்து போனான்.. அனால், சமாளித்து எழுந்தான்..

" ஒரு முடிவுக்கு வர்றதுக்கு முன்னாடி, யோசிக்கணும்... யோசிக்ரதுகு முன்னாடி பேசிக்க கூடாது, பெசிடதுகு அப்புறம் யோசிக்க கூடாது.... எனவே, சங்க முடிவை யாருக்காகவும் மாற்ற கூடாது... இந்த முடிவை, நாங்கள் , முழுமையா ஆதரிக்றோம் " என் சார்பாக அவனே பேசி அமர, எனக்கே அவனை பார்க்க சற்று பொறாமையாக இருந்தது...

கூட்டம் முடிந்தாலும், என்ன முடிவு எடுத்த்தார்கள் ..எதை நாம் ஆதாரித்தோம் என இருவருக்கும் புரியவில்லை...

முன்பே ஆதரித்து விட்டதால், யாரிடமும் கேட்கவும் கூச்சமாக இருந்தது...

எல்லோரும் போகும் வரை காத்து இருந்தோம்... ஒரே ஒருவர் , இருந்தார்.. அவரை தயங்கிய படி அணுகினோம்..

" சார், நீங்க சங்கத்துல இருக்கிங்கள ? " முதலில் அவர் யார் என தெரிந்து கொள்ளும் நோக்கத்தில் கேட்டோம்..

" நான் சங்கத்துல இருக்கேனா, இல்லையாங்கறது எப்ப பிரச்சினை இல்லை... சங்கம் இருக்கா .. இல்லையா ..அதுதான் கேள்வி ..அதுக்குத்தான் இன்னிக்கு கூட்டம் "

இருக்குதா , இல்லையா நகர சந்தேகத்துல, இருக்ற சங்கத்துக்கு கூட்டிகிட்டு வந்துட்டிஎட, நாயே என மன்குணியை மனதில் சபித்தவாறே, " அப்ப சங்கம்னு ஒன்னு இல்லியா " அப்பாவியா கேட்டேன்..

" சங்கம் இல்லைன்னு எப்ப சொன்னேன்..இருந்தா நல்லா இருக்கும்னுதான் சொன்னேன் "

**************************************************

அறைக்கு செல்ல நேரமாகி விட்டதால், நானும் மன்குனியும் அன்று இரவு சாப்பிடாமல், பட்டினியாகத்தான் தூங்கினோம்

Saturday, April 10, 2010

விலை மாதுடன் , ஓர் இரவு


* இந்தியா வல்லரசு ஆகி விட்டது... எல்லோரும் செழிப்பாக இருக்கிறார்கள்...
* கஷ்டம் என்பது எப்போதாவதுதான் வரும்... ஒரு மனிதனுக்கு அடுத்தடுத்து கஷ்டம் வருகிறது என்று சொல்வதெல்லாம் செயற்கை தனம்....
* ஒரு புத்தகம் சினிமா என்றால், சோகமான விஷயங்களை சொல்ல கூடாது.... சைகோ மனநிலை கொண்டவர்களுக்கு மட்டும் தான் சோகமான விஷயங்கள்... சும்மா பொழுது போக்கு விஷய்னகளுடந்தான், புத்தகமோ சினிமாவோ இருக்க வேண்டும்....
* மற்றவர் சோகத்தை நாம் ஏன் பார்க்க வேண்டும் ? உணர வேண்டும்.. ? அபச்சாரம் அபச்சாரம்... கல் நெஞ்சு கொண்டவர்கள் தான் மற்றவர் கஷ்டத்தை தெரிந்து கொள்ள ஆசை படுவார்கள்...


அங்காடி தெரு பட விமர்சனத்தில் , அறிவு ஜீவிகள் கருத்தை படித்து , நானும் ஒரு கட்டத்தில் இதை எல்லாம் ஏற்கும் நிலைக்கு வந்து சேர்ந்தேன்...

இந்நிலையில், கலைவாணி என்ற பெண்ணின் ( பாலியல் அடிமையாக இருந்தவர் ) புத்தகத்தை நேற்று இரவு படித்தேன்.... எதார்த்தம் என்பது , நாம் கற்பனை செய்து வைத்து இருப்பதை விட கொடூரமானது, ந்த ஒரு சினிமாவிலும் இந்த கொடுமைகளை , விளக்க முடியாது.....

நிம்மதியாக , ஒரு கிராமத்தில் வாழ்ந்து கொண்டு இருந்த இளம் பெண்.... அவளுக்கு திருமணம்.... கணவனின் கொடுமை... துரோகம்... அக்கா கணவனின் பாலியல் தொந்தரவு, .... இதற்கிடையில் மண முறிவு... இன்னொரு திருமணம்.... அத்தானின், தொடரும் பாலியல் தொந்தரவு, குழந்தை பிறப்பு, இந்த கணவனும் பிரிதல், சினக்ப்பூர் செல்லுதல், பாலியல் " தொழிலில்" தள்ள படுத்தல், மீண்டும் இந்தியா வந்த பின்னும், அதே தொழில் செய்ய நிர்பந்தம், ... இதில் கூட காசு கொடுக்க ஏமாற்றும் கயவர்கள், மீண்டும் திருமணம், ஏமாற்றம், மகன் இறப்பு என்று சோகங்களை மட்டுமே பார்த்த பெண் தான் கலைவாணி...

இதை திரைப்படமாக எடுத்து இருந்தால், இப்படி எல்லாம் உண்மையில் நடக்காது என்பார்கள் அறி வி ஜீவிகளும் , வசதியான நிலையில் இருக்கும் வலை பதிவர்களும்...

அனால், வழக்கை என்பது , arivu ஜீவியும் அல்ல ..வலை பதிவரும் அல்ல.... சில சமயம் இனிமையாகவும், சில சமயம் கொடூரமாகவும் இருக்கும் ஒரு புதிர்...

அவர் கஷ்டங்களை நாம் உணரும் போது , நாம் காணும் பாலியல் தொழிலாளிகள் எல்லாம், எவ்வளவு கஷ்ட்டபடிகிரர்கள் என்ற கோணத்தில் சிந்திக்க முடிகிறது..... அவர்களை, இலக்காரமாகவோ, கவர்ச்சி பொருளாகவோ இனி பார்க்க கூடாது என தோன்ற வைகிறது இந்த புத்தகம்....

பாலியல் பற்றி புத்தகம் இருந்தாலும், ஆபாச வர்ணனைகளோ , கிளர்ச்சி ஊட்டும் படங்களோ இல்லாதது சிறப்பு .....
அதே போல , நல்லவர்களும் , அவர் வாழ்கையில் உண்டு என்று காட்டி இருப்பதும் சிறப்பு


படிக்க எளிமையான , சீரான நடையை தேர்ந்து எடுத்துள்ளார் , எழுத்து வடிவம் கொடுத்துள்ள ஜோதி நரசிம்மன்..
அவரை பற்றி குறிப்பு எதிவும் கொடுக்காதது ஒரு குறை....

நாவல் போல , எழுதி இருப்பது படிக்க எளிதாக இருந்தாலும், இந்த நடை, ஒரு பாலியல் தொழிலாளியின் நேரடியான உணர்வை நீர்த்து போக செய்துள்ளது என்றும் தோன்றுகிறது... ஆனால், பரவாயில்லை.... அவர்களின் கஷ்டத்தை மக்களிடம் கொண்டு பொய் சேர்ப்பதுதான் , நூலின் நோக்கம் என்றால் , அதில் வெற்றி பெற இந்த நடை உதவி இருக்கிறது...

புத்தகம் என்பது, அறிவை வளர்க்க, பொழு போக்க, கற்று கொள்ள என்றெல்லாம் இருந்தாலும், சக உயிர்களின் கஷ்டங்களை உணர்த்தவும் பயன் பட முடியும் என்று இப்புத்தகம் உணர்த்துகிறது....


*******************************************

பாலியல் தொழிலாளி என்ற சொல் சரியா ? என்று எனக்கு சந்தேகமாக இருக்கிறது... மென் பொருள் தொழில், ஓட்டுனர் தொழில் என்பது போல எந்த பெண்ணும இதை ஆர்வமாக கற்று கொண்டு செய்வதில்லை.... சில ஆண்கள் , அவர்களை பயன் படுத்துகிறார்கள் .. அவ்வளவுதான்... ஏதோ , பெண்கள் , ஆரவமாக் இந்த தொழில் செய்வது போன்ற தொனி , இந்த சொல்லில் இருக்கிறது...

விலை மாது என்பதும் தவறு தான்... வேறு சொல் தெரியாததால் இதே சொல்லை பயன் படுத்தி இருக்கிறேன்...
எந்த பெண்ணையாவது , அல்லது பெண்மை நேசிக்கும் எந்த ஆணையாவது இந்த சொற்கள் புண் படுத்தி இருந்தால் மன்னிக்கவும் ...


********************

சானியாவும், எலிசபத் டைலரும்


செய்தி.... பழம்பெரும் நடிகை , எலிசபத் டைலர் அடுத்த திருமணத்துக்கு தயாராகிறார்... இது இவரது ஒன்பதாவது திருமணம் ஆகும்...

செய்தி...... சானியா , ஏகனவே திருமணம ஆன ஒருவரை, மணந்து கொள்ள முடிவு செய்திருப்பது, சிலருக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்துயுள்ளது.... இஸ்லாம் மதத்தில் , பல தார வழக்கம் என்பது இயல்புதான் என்று பரவலான கருத்து இருந்தாலும், இந்து மதத்தை சேர்த்த ஆண்கள், ஒன்றுக்கு மேற்பட்ட திருமனகளை செய்து கொள்வது, ஆய்வில் தெரிய வந்துள்ளது.....

*************************************

எதிர் பாலரை ரசிப்பது என்பது இயல்பான ஒன்று.... எல்லை மீறாமலும், அடுத்தவரை கஷ்டபடுத்தாமலும் , எதிர்பாளர் ரசிப்பது மனித இயல்பு, மனித உரிமை...

அதே போல , திருமண உறவு பிடிக்காவிட்டால், அல்லது காதல் சரி படாது என தோன்றினால், அதை முறித்து கொவதுதான், அறிவு பூர்வமான செய்கை.. சட்ட சிக்கல் இல்லாவிட்டால், யாருக்கும் பாதிப்பு இல்லாவிட்டால், பல தார மணம் என்பதும் அவரவர் தனிப்பட்ட விருப்பம்..அவரது உரிமை....

ஆனால், தமிழ்நாட்டை பொறுத்தவரை, இந்த உரிமைகள எல்லாவற்றையும், ஆண்கள் மட்டுமே எடுத்து கொள்வதுதான் நடக்கிறது....

பலரை சைட் அடிப்பதை ஒரு ஆண் பெருமையாக சொல்லிகொள்ளலாம்... தன சகோதரியோ, மனைவியோ அப்படி சொல்லி கொள்வதை அனுமதிப்பான, என்பது சற்று சங்கடமான கேள்வி

ஒரு பெண் பலரை மணந்து கொண்டு, ஒரு ஆண் போல பெருமையாக , தமிழ்நாட்டில் வாழ முடியுமா?

***************************************************************************************************************************************

ஒரு பாடல்....

பெண்ணியலார் எல்லாரும் கண்ணின் பொது உண்பர்
நண்ணேன் பரத்த நின் மார்பு...


நேத்து நானும் , என் மனிவியும் வெளியே போனோம்.... ஊர்ல எல்லா பொண்ணுங்களும் என்னை சைட் அடிச்சாங்க...... அதுனால என் மனைவுக்கு என் மேல செல்ல கோபம் ..என் கூட பேச மாட்டேனுட்டா ... அப்புறம் , சினிமாவுக்கு கூட்டிகிட்டு பொய் சமாதான படுத்தினேன்... என்று பெருமையாக தன் அழகை , கவர்ச்சியை ஒரு ஆண் கூறிகொள்வது போல இந்த குறள் அமைந்துள்ளது....

தன் மனைவி , சாதரணமாக மற்றவருடன் பேசுவதை கூட அனுமதிக்காத, இன்றைய ஆண் வர்க்கம், இதே போல தன் மனைவி பெருமை அடித்து கொண்டால் , என்ன செய்யும் என்று தெரியவில்லை....

மேலே சொன்ன குரலை தொடன்ர்தந்து வரும், மற்ற குறள்களும் அன்றைய ஆணாதிக்க மனப்பான்மையை படம் பிடித்து காட்டுகிறது..செல்ல சிணுங்கலுடன் சமாதானம் ஆகும் மனைவி, பலரை சைட் அடிப்பதை பெருமையாக நினைக்கும் ஆண் என குறள் பட்டையை கிளப்புகிறது....

ஆனால், உலகம் மாறி கொண்டு இருக்கிறது.... பெண்களும் பொருளாதார சுதந்திரம் அடைந்து வருகின்றனர்.....

இன்னும் பத்து ஆண்டுகள் கழித்து, வெளி நாடு பாணியில், விளையாட்டு வீராங்கனை , ஏழாவது திருமணம் என செய்தி வரலாம்...

யாரை நினச்சுடி தும்முற என கணவன் செல்லமாக சண்டை போடும் நிலை வரலாம் ( இப்போது போல சீரியாசாக கேட்க முடியாது)

சமுதாய புரட்சியும் குழந்தையும்


அந்த குழந்தைக்கு பசி...

அழுது கொண்டு இருந்தது...

உணவூட்ட யாரும் இல்லை....

சாமி சிலைக்கு பால் அபிஷேகம் செய்தனர் சிலர்...

இந்த பாலை, குழந்தைக்கு கொடுத்திருக்கலாமே...

என்ன மோசமான சமுதாயம்.....

வேதனை பட்டார் கடவுள் மறுப்பாளர்....



புது பட ரிலீஸ்...

கதனாயனுக்கு பால் அபிசேகம் செய்தனர் ரசிகர்...

அடடா..இதை குழந்தைக்கு கொடுத்து இருக்கலாமே...

என்ன மோசமான சமுதாயம்

வேதனை பட்டனர் ஆன்மீக வாதிகள்....




ஆடமபர காரில் வந்து இறங்கினார், கடவுள் மறுப்பு தலிவர்...

குழந்தை பசியால் துடிக்கும் போது கார் சவாரியா..

மோசமான சமுதாயம் ...

கொதித்தனர் ரசிகர் மன்றத்தினர்....




நடுத்தர வர்க்கம் , சமுதாய பார்வை இல்லாமல்

சுயநலமாக இருக்கிறது...

முதலாளிகளை திட்டி அலுத்து போன இடது சாரிகள் அங்கலாய்க்க,

வெட்டி பேச்சு பேசாமல் , இவர்கள் உழைத்தால்
குழந்தை பசி தீரும் ...சமுதாய பார்வை இல்லாதவர்கள்

என்றது நடுத்தர வர்க்கம்



சமுதாயம் என்ன என்றால் என்ன என்று புரியாமல்,
குழந்தை இன்னும் அழுகிறது..
உணவூட்ட யாரும் இல்லை...

ஆவியுடன் ஒரு பேட்டி


" மச்சான்... இந்தியா வல்லரசு ஆயிடிச்சு நு , எல்லோரும் சொல்றாங்க..அது உண்மையா.. ப்ளீஸ் டா ..கேட்டு சொல்லு "

" என் லவ்வு வொர்க் அவுட் ஆகுமா.. கேட்டு சொல்லுடா"

" அடுத்து யாரு ஆட்சிடா.. கேட்டு சொல்லுடா மாப்பிள... "

அவனவன் தன் கோரிக்கைளை சொல்லி , என்னை டென்ஷன் ஆக்கி கொண்டிருந்தனர்... பேயுடன் பேசும் கலையை கற்று கொண்டது தப்பா போச்சே என நினைத்து கொண்டேன்,...
அதுவும் அரை குரயாகத்தான் கற்றேன்... குரு நாதர் சொன்னபடி, மந்திர பலகை, பூ, சாம்பல்,. கோழி எலும்பு எல்லாம் வைத்து மந்திரம் சொல்லியும் ஆவி எதுவும் வரவில்லை... போராடிக்கொண்டு இருந்தேன்..

இதெல்லாம் , வீண் வேலை ..ஆவியும் கிடையாது ..ஒன்றும் கிடையாது... நான் ஐ பீ எல் மேட்ச் பார்க்க, சேப்பக் போறேன், சொல்லியபடி கிளம்பினான் பரமசிவம்...

டேய்..ஹெல்மெட் போட்டுட்டு போடா... போலீஸ் நிக்குது என்ற நண்பர்களின் பேச்சை கேட்காமல் பைக்கில் பறந்தான்,...

ஒரு மணி நேரம்... நான் போராடி கொண்டே இருந்தேன்... நண்பர்கள் சிறிது சிறிதாக , நம்பிக்கை இழக்க ஆரம்பித்தனர்...

திடீரேனே , மல்லி பூ வாசம் அறையை சூழ்ந்தது...
ஆவி வந்துடுச்சு நான் முனு முணுமுணுத்தேன்...

மந்திர பலகையில் கை வைத்தேன்... கேட்கும் கேள்விக்கு ஏற்ப, அதயொல் உள்ள எழ்துகளில், கை அதுவாக நகரும்..அதுதான், ஆவியுடன் பேசும் முறை...

நண்பர்கள் கேள்வி கேட்க துடித்தனர்.. ரஜினி அரசியலுக்கு வருவாரா... தமிழில் ஒரு நல்ல பொழுது போக்கு படம் வருமா... வேலை கிடைக்குமா....

டேய்..இருங்கட,,, முதலில் ஆவியை பற்றி விசாரிப்போம் என்றபடி, முதல் கேள்வியை நானே கேட்டேன்..


ஆவியே... உன் பெயர் என்ன,.... எப்போது இறந்தாய் ..ஏன் இறந்தாய்

ஆவி பதில் அளித்ததது " என் பெயர் பரமசிவம்... ஹெல்மெட் போடாததால், அரை மணி நேரம் முன் இறந்தேன் ...

Friday, April 9, 2010

ராணுவ "வீரர்களின் " வெறித்தனம்


ஒரு செய்தி....

புனே யில், ஒரு பெண் தான் விரும்பும் ஒரு ஆணுடன் , இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டு இருந்தார்...

வழியில், எரிபொருள் பிரச்சினை காரணமாக , வண்டி நின்று விட்டது.. அந்த நேரம் அந்த பக்கமாக வந்த, தேசத்தை காக்கும், ராணுவ வீர்கள்வீரர்கள் ( ! ? ) , யாரும் இல்லாத இடத்தில் ஒரு பெண்ணும் , ஒரு ஆணும் தனியாக இருப்பதை பார்த்து விட்டனர்..அவர்களுக்குள் இருந்த மிருகம் விழித்தது... அந்த ஆணை அடித்து சாய்த்து விட்டு அந்த பெண்ணிடம் மிருகத்தனத்தை காட்டினர்...
தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர்....

*********************************************
ஒழுக்கமின்மை எல்லா இடத்திலும் இருக்கிறது... அனால் , எல்லோரும் சமுகத்தை மாற்ற வேண்டும் என விரும்பிக்றோம்....நாம் எல்லோரும் சேர்ந்தது தானே சமுகம்... ? நாம் மாறாமல் இருந்து கொண்டு, சமுகத்தை மாற்ற வேண்டும் என்றால், சமுகம் என்று தனியாக எதாவது இருக்கிறதா என்ன?

சமுக புரட்சி பேசும் , வலை பதிவர்களாகிய நாம், பெண்ணை கவர்ச்சி பொருளாக , நம் பதிவில் வெளியிடவில்லையா.... நடிகையும் இடுப்பை கிள்ள வேண்டும் போல் இருந்தது என எழுதவில்லையா... ? நாம் மனதவில் செய்வதை , அந்த ராணுவ " வீரர்கள் " , உண்மையில் செய்தனர்.. நமக்கும் , அவர்களுக்கும் அடிப்படையில் என்ன வித்தியாசம்....?

இந்த செய்தியை , ஆணாதிக்க மனப்பான்மையுடன் , ஒரு நாளிதழ் வெளியிட்டுள்ளது.... பெண்ணின் கற்பை அழித்து விட்டார்களாம்... அந்த வார்த்தையே ஒரு ஆண் ஆதிக்க வார்த்தை... கற்பு என்பது மனம் சார்ந்தது..ஆண் , பெண் என இருவருக்கும் பொதுவானது...
பெண்ணை இழிவு படுத்துவதில், மத வேறுபாடு, கடவுளை நம்புவது - இல்லை என நம்புவது, வேலை வேறுப்பாடு என்றெல்லாம் எதுவும் இல்லை.... எல்லோரும் இப்படித்தான் இருக்கிறோம்..சமுகம் மாற வேண்டும் என போலியாக பேசுகிறோம்... சமுகம் என்பது நாம் தான் ...

இது போன்ற வழக்குகள், உடனடியாக விசாரிக்கப்பட்டு, ஒரு மாதத்துக்குள் கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும்...

************************************************************************************

ஒரு பாடல்

எத்துனை ஆற்றுள் இடுமணல் நீர்த்துளி
புற்பனு உக்க மரத்து இலை நுண்மயிர்
அத்துனையும் பிறர் அம்சொளினார் மனம்
புக்கனம் என்று பொதி அறையப்பட்டார்..

அணுக்கும் கற்பு நிலை வேண்டும் என என்றே வலியுறுத்திய தமிழ் பாடல் இது... " வளையாபதி " யில் உள்ளது...
மனதளவிலும் கூட , உனக்கு உரிமை இல்லாத பெண்ணை தவறாக பார்கதே... என்று கூறும் இப்ப்பாடல், ஆற்று மணல், புல்லின் பனித்துளி, மரத்தின் இலைகள், உடலில் உள்ள மயிர்கால்கள் எப்படி எண்ணில் அடங்காத அளவில் உள்ளதோ, அதே போல, கற்பில ஆண்களும் எண்ணில் அடங்காத அளவில் உள்ளனர் என ஆண்களுக்கு சூடுவைக்கிறது

"ஜிட்டு" வை கொஞ்சம் தொட்டு பார்ப்போமா ?




உலகத்துலேயே கொடுத்து வச்சவர்ணா, அவரு நம்ம ஜிட்டு கிருஷ்ணமுர்த்திதான்...
அவர் சொல்றது, மேலோட்டமா படிச்சா புரியாது... அதை பயன் படுத்திக்கிட்டு, கடவுள் இருக்கிறர் என நம்புபவர்களும், இல்லை என நம்புபவர்களும், அவர் தங்கள் கட்சிதான் , என சாதிக்கின்றனர்..

பகுத்தறிவு மற்றும் ஆன்மீக அன்பர்களின் ஒருமித்த ஆதரவை பெற்ற ஒரே celebrity , உலகிலேயே இவர் மட்டும்தான்...

இவர் மதம் என்பதையும் ஏற்கவில்லை... கட்சி, இயக்கம் போன்றவற்றையும் ஏற்கவில்லை....

கடவுள் என்பதையும் ஏற்கவில்லை... தலைவன் , அவன் கொள்கை என்பதையும் ஏற்கவில்லை...

ஆனால், கடவுள், மதம் என்பதை ஏற்கும் ஆன்மிக நண்பர்கள், கட்சி, இயக்கம், கொள்கை என்பதை ஏற்கும் பகுத்தறிவு நபர்கள், இதை எல்லாம் மறந்து விட்டு, அவரை சொந்தம் கொண்டாடுவது, நல்ல நகைசுவை...

சரி... அவர் நூலில் இருந்து , ஒரு சுருக்கமான பகுதி... உங்கள் பார்வைக்கு... ( வரிக்கு வரி மொழி பெயர்ப்பு, என்ற பாணியில் இல்லை )



இந்த சமுகத்தை மாற்றி அமைக்க போறேன்


" அரசியல் வாழ்க்கையில் எவ்வளவோ பார்த்து விட்டேன்.. இப்போது உண்மையிலயே இந்த சமுகத்துக்கு, நாட்டுக்கு நல்லது பண்ண விரும்புகிறேன் ... இதில் எந்த குறுக்கு புத்தியும் இல்லை... சமுகத்தில் இருந்து என்ன பெற்றேனோ அதில் கொஞ்சமாவது திருப்பி கொடுக்க நினைக்கிறன் "

" தப்பா நினைக்கலேன்னா ஒன்னு கேட்குறேன் ... கொடுக்கல் வாங்கலை பத்தி ஏன் பேசுறீங்க? "


சமுகத்தில் இருந்து எனக்கு எவ்வளவோ கிடைச்சு இருக்கு.. அதை திருப்பி கொடுக்கணும் "

" சமுகத்துக்கு ,நாட்டுக்கு என்னவெல்லாம் கடன் பட்டு இருக்கீங்க "

என்னிடம் உள்ள எல்லாம் : வங்கி கணக்கு ..படிப்பு ,, நல்ல பெயர் --- அடேங்கப்பா..இன்னும் எவ்வளவோ

" உண்மையில் நீங்க சமூகத்திடம் இருந்து எதையும் எடுத்துக்கல... ஏன்னா , நீங்களும் சமுகத்தில் ஒருவர்தானே.. உங்களுக்கும் சமூகத்துக்கும் சம்பந்தம் இல்லாமல் இருந்து, நீங்க ஒரு தனி ஆளா இருந்த, நீங்க சமூகத்துக்கு எதாச்சும் கொடுக்கலாம்... ஆனா நீங்க இந்த சமுகத்தின் ஒரு பகுதி... யார் கிட்டயாச்சும் கடன் வாங்குனா, திருப்பி கொடுக்கலாம்..அனால், நீங்களே சேர்ந்து உருவாக்கி இருக்ற சமுகத்துக்கு என்ன கொடுக்க முடியும்
இந்த நாடுதான் சார், எனக்கு பணம் , உடை உணவு எல்லாம் கொடுத்துச்சு... நான் ய்டசும் திருப்பி செய்யணும்... இல்லைனா நான் நன்றி கெட்டவன் ஆயிடுவேன்.. நல்லது எதாச்சும் செய்யணும்.. எனக்கு பேர் வராட்டியும் பரவாயில்ல

நீங்க என்ன சொல்ல வர்ரிங்கனு புரியுது... ஆனா, நீங்க எல்லாத்தையும் கொடுத்தாலும், உங்க கடனை தீர்க்க முடியுமா.. ஏழைகளுக்கு உதவல்லாம்...நாட்டுக்கு நிதி வழங்கலாம்... ஆனாலும், உங்க கடமை முடியாது.... ஏன்னா , சமுகத்துக்கு பணம் கொடுத்தா, அது நீங்க உங்களுக்கே கொடுத்தா மாதிரிதான்... நீங்களும் சமுகத்தில் ஒரு பகுதிதானே.... அதாவது, நீங்களே கொடுத்து, நீங்களே வாங்கிகிரீங்க.சமுகம் என தனியா எதுவும் கிடையாது ... .

ஆமா..நானும் ஒரு பகுதிதான்..நான் சமுகத்தின் நல்லது , கேட்டதுக்கு காரனம இருக்கேன்...கேட்டதை நீக்கிட்டு நன்மையை நிலை நாடுவேன்

நல்லது நா என்ன... எல்லோரும் நல்லதுன்னு ஒத்துகிறது... மரியாதை தருவது ..சமுக அமைப்பில், அந்த உத்தமர் என்ற நிலையை அடிய விரும்புரின்ங்க .இல்லியா ?

மனிதனை சிறை வைத்துள்ள சமுக அமைப்பை மாற்றி அமைக்க விரும்புறேன்

சமுக அமைப்பை உருவாக்கியதே மனிதன்தானே... மனிதனும்,, சமுகம அமைப்பும் ஒன்றை ஒன்று சார்ந்தது...இந்த அமைப்புக்குள் மற்றம் என்பது, உண்மையில் மாற்றமே இல்ல.... நீங்க இந்த சமுகத்தை சார்ந்தவனாக இருக்கும் வரை, , இந்த சமுகம் மோசம் அவதற்குதான் நீங்கள் உதவ முடியும் சமுகத்தை மற்ற விரும்பினால், சமுகத்தில் இருந்து நிஇங்கள் வெளியே வர வேண்டும் ...சமுகம் என்பது என்ன... பொருள் சேர்ப்பது, முன்னேற விரும்புவது, சாதிக்க விரும்புவது , போட்டி, பொறமை .. இதில் இருந்து நீங்க விடுபட வேண்டும்...

அதாவது நான் துறவி ஆகணுமா

இல்ல..ஒரு துறவி மேம்போக்க பார்க்கும்போது உலகை துறந்தாலும், உள்ளுர அவரும் சமுகத்தின் ஒரு அங்கம் தான்... எதாவது சாதிக்கணும் , இன்னும் சிறந்தவர மாறனும் என்ற ஆசை அவர் கிட்டியும் இருக்கும்


அஆமாமா

அன்பு என்பதை உணர்ந்தால்தான் , வாழ்கையை முழுமையாக வாழ முடியும்...

ஆமா சார் ... நாம் நேசிப்பதில்லை..நம் மனம் அவ்வளவு எளிமையாக இல்லை...

ஏன் ? ஏன்னா. உங்க நோக்கம் எல்லாம், கடமைகள், மாற்றங்கள் , சமுகத்தில் ஒரு நல்ல பெயர், இன்னும சிறந்த நிலையை அடைவது போன்றவைதான்... இந்த உலகத்திற்கே நீங்கள்தான் மையம் என நினைத்து கொள்கிறீர்கள்...

ஒரு மரத்தை , ஒரு மலரை , ஓடும் நதியை பார்த்து ரசிக்க உங்களுக்கு நேரம் இல்லை.. அப்படியே பார்த்தாலும், அந்த பார்வையில் அன்போ அழகோ இருப்பதில்லை..உங்கள் மனதில் உள்ள குப்பைகளோடு அவற்றை பார்கிறீர்கள் "


ஆமா சார்... சரி, அப்ப நான் என்னதான் செய்றது...

மனசுல கள்ளம் கபடம் இல்லாம, சும்மா எல்லாத்தையும் பார்த்துகிட்டு இருங்க என்ன பண்றதுன்னு உங்களுக்கே தெரியும்..

பெரியாரிஸ்ட்டுகள் பதில் சொல்வார்களா ?


பெரியார் என்றால் , நமக்கு நினைவு வருவது , அவரது கடவுள் எதிர்ப்பு கொள்கைகள்தாம்...
கடவுளை நம்புபவன் முட்டாள்..காட்டு மிராண்டி என்ற அவர் பொன்மொழிகளை தெரியாதவர்கள் இருக்க முடியாது..


இன்று பலருக்கு, கடவுள் இருக்கிறாரா இல்லையா என்பது ஒரு பிரச்சினை கிடையாது..


இவர்கள் ஆன்மீக புத்தகங்களும் படிப்பதில்லை... (அதில் கடவுள் , கடவுள் என இருக்கும் )


பெரியாரையும் படிப்பதில்லை ( அதில் கடவுள் இல்லை... இல்லை என்றுதான் இருக்கும்)


ஆக, கடவுளை பற்றிய அக்கறை இல்லாதோர் , பெரியாரை படிக்க ஆர்வம் காட்டுவதில்லை...
என்னை பொறுத்தவரை, நான் கடவுள் இருக்கிறார் என்றோ , இல்லை என்றோ நம்பவில்லை... அதை பற்றி எந்த கருத்தும் இல்லை..


இந்நிலையில், பெண் ஏன் அடிமை அனால் என்ற பெரியார் புத்தகம் படிக்க நேர்ந்தது...


காதல், மறுமணம் , திருமணம்,. கற்பு என எல்லாமே பெண்ணுக்கு எதிராக எப்படி பயன்படுத்தபடுகிறது என்பதை அவர் விளக்கும் போது. பிரம்மித்து போனேன்...அந்த காலத்தில் எப்படி முற்போக்காக சிந்தித்து இருக்கிறார்...


அவர் சும்மா, கடவுள் இருக்கிறாரா , இல்லையா என சிந்திக்கவில்லை... மக்கள் நலனைத்தான் சிந்தித்தார்.. என்பது அந்த சிறிய புத்தகத்தை படித்தால் தெர்யும்...
பெண்ணை அடிமைபடுதுவதில், கடவுள் நம்பிக்கை உள்ளவர் , இல்லை என்பவர் எல்லாம் ஒரே மாதிரி தானே இருக்கின்றனர்?
அவரை ஒரு சிந்தனை வாதி என அறிமுகபடுத்தாமல், ஒரு நாத்திகவாதி என அறிமுகபடுத்துவது சரியானதா என உண்மையில் பெரியாரை நேசிப்பவர்கள்சொல்வார்களா ? ( அவர் கொள்கை பற்றி எந்த புரிதலும் இல்லாமல், சுயலாபத்துக்காக அவர் பெயரை பயன்பத்துபவர்களுக்கு இதில் எந்த அக்கறையும் இருக்க போவதில்லை என்பது வேறு விஷயம் )

Thursday, April 8, 2010

தொடரும் அலட்சியம்... தொடரும் விபத்துகள்


ஒரு செய்தி _

சரியான அறிவுப்பு பலகை இல்லாமல், சாலைகள் இருப்பதால் , நடக்கும் விபத்துகளை பற்றி இப்போதுதான் எழுதினேன்..

அதே பாணியில் பல்லாவரத்தில் ஒரு விபத்து... கட்டி முடிக்கபடத பாலம்.... உள்ளூர் மக்களுக்கு அது தெர்யும்... தெரியாத ஒருவர் , அதில் ஏறி சென்றால் என்ன ஆகும்... பாதியில் தொங்கும் பாலத்தில், அதி வேகமாக செல்லும் பொது திடீரென நிறத்த முடியாது....
இப்படி ஒரு விபத்து நடந்து இருக்கிறது... ஒரு அறிவிப்பு பலகை, இதை தடுத்து இருக்கும்...

ஒரு பாடல்...

சிறு வயதில், மற்றவர் சைக்கிள் ஓட்டும்போது, நமக்கும் ஒரு சைக்கிள் வேண்டும் என ஏக்கமாக இருக்கும், .. உலகத்தில் நாம்தான் பரிதாபமான ஆள் என தோன்றும்..ஒரு வழியாக சைக்கிள் கிடைத்தவுடன், " சைக்கிள் எல்லாம் இப்ப சாதரணமா ஆகி போச்சு.... யார் வேண்டுமானாலும் வாங்கலாம் என நினைப்போம்...
நமக்கு ஒன்று கிடைத்தவுடன், எல்லோருக்கும் அது கிடைத்து விடுகிறது..என்பதுதான் நம் நினைப்பு..அப்படி சிலருக்கு கிடைக்கவில்லை,என்றால், அவர்கள் அதை பெரும் அளவுக்கு உழைக்காதவர்கள், திறமை இல்லாதவர்கள், சோம்பேறிகள் என்றுதான் நினைப்போம்...
இந்தியாதான் வல்லரசு ஆகி விட்டதே... இன்னும் ஏன் கஷ்டம் , ஏழ்மை என்றெல்லாம் சொல்கிறார்கள் என ஒரு சராசரி மனதுக்கு புரியாது...
நாம் நாளை, கஷ்ட நிலைக்கு சென்றால் நம் நிலையும் இதுதான் .. நம்மை யாரும் பொருட்படுத்த போவதில்லை, என்ற உண்மையை இந்த பாடல் விளக்குகிறது...

கெட்டேம் இது எம் நிலை என்று சார்தற்கண்
நட்டார் அல்லார் நனிமிகுபவர் சுற்றம்
பெட்டது சொல்லி பெரிது இகழ்ந்து ஆற்றவும்
எட்ட வந்து ஓரிடத்து ஏகி நிற்பவே


ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்றான , வளையாபதியில் இது இடம் பெற்றுள்ளது


ஒருவர் கஷ்டபட்டலோ, ஒருவர் விபத்தில் சிக்கினாலோ, அந்த இடத்தில் நாம் இருந்திருக்கவும் வாயப்பு இருந்தது என்பதை நாம் உணர்வதில்லை என்பது ஒரு வினோதம்

எனக்கு பிடித்த டாப் 5 புத்தகங்கள்-மார்ச்



சென்ற மாதம் படித்ததில் , எனக்கு பிடித்த டாப் 5 புத்தகங்கள்...

1 பெண் ஏன் அடிமை ஆனாள் ? - பெரியார்

ஆண்டாண்டு காலமாக , பெண்ணை எப்படி எல்லாம் ஏமாற்றி வருகிறோம் என்று விளக்குகிறார் பெரியார் ... அந்த காலத்திலயே , முற்போக்காக சிந்தித்திருப்பது பிரம்மிக்க வைக்கிறது....

என் மதிப்பீடு : மதிப்பிட அனுபவம் /வயது பத்தாது ..

2 outliers - gladwel

தன்னமபிக்கை, உழைப்பு, திறமை இருப்பவர்கள் தான் ஜெயிக்கிறார்கள..அல்லது வேறு காரணம் இருக்கிறதா....

என் மதிப்பீடு : outstanding

3 கர்நாடக சங்கீதம் - ஓர் எளிய அறிமுகம்

இனிமையான தமிழில் , ஒரு நல்ல புத்தகம்...

டாக்டர் .மகாதேவன் ரமேஷ் தமிழில் : ரா .கிரிதரன்

என் மதிப்பீடு : இனிய அறிமுகம்


4 மார்க்கெட்டிங் யுத்தங்கள் - எஸ்.எல்.வீ மூர்த்தி

சுவையான தகவல்களாலும், சீரான நடையாலும் புத்தகம்... பயன் மிக்கது ...

மார்கெடிங் துறையின் மாயாஜாலங்கள் , விறு விறுப்புடன் தர பட்டுள்ளன ...

என் மதிப்பீடு : இனிப்பான சத்து மாத்திரை

5 discover the diomand in you - அரிந்தம் சௌத்ரி

சுருக்கமாக எழுதப்பட்ட நூல் என்பது இதன் சிறப்பு.. அரை மணி நேரத்தில் படித்து விடலாம்...

என் மதிப்பீடு : energy tonic

Wednesday, April 7, 2010

AR ரகுமான் நன்றி மறந்தாரா? outliers அலசல்




எல்லா புகழும் இறைவனுக்கே.... ar ரகுமான் ( நான் மற்றவர்களை விட பெரிய இடம் அடைய , இறைவன்தான் காரணம் )
தன்னம்பிக்கையும் உழைப்பும் இருந்தால் , வானையும் வளைக்கலாம்- வைரமுத்து
( நான் பாடல் ஆசிரியர் ஆனதுக்கு காரணம் , என் தனம்பிக்கை , என் உழயுப்பு, என் திறமை )
சில மொக்கை பதிவராக, மொக்கை புத்தகம் வெளியிட்டு , தமிழ் தாயை இழிவு படுத்தி விட்டனர் _ பதவி உயர்வு பெற்ற சில பதிவர்கள் ( நாங்கள் எழுதுவதுதான் நல்ல எழுத்து ..அதன் காரணமாகத்தான் எங்களுக்கு எழுது துறையில் பதவி உயர்வு கிடைத்துள்ளது)

புத்தக கண்காட்சியில் அதிகம் விற்பனை ஆவது , தன்னம்பிக்கையும் ஆன்மீகமும்தான்- செய்தி ( கடவுளும், தன்னம்பிக்கையும் தான் வெற்றியை நிர்ணயிக்கின்றன )

**********************************************************

பெரிய மனிதர்களின் வாழ்கை வரலாறை படித்தால், எல்லாம் ஒரே மாதிரியாக இருப்பதை காணலாம்... இளமையில் தும்பம், தன்னமிக்கயுடன் உழைப்பு, பின் வெற்றி..( சிலருக்கு கடவுளோ அல்லது மகானோ உதவி இருப்பார்கள் )

படிக்கும் பொது நமக்கு ஒரு கேள்வி வரும்... அதே கடவுளை நம்பும் பலர் . கஷ்டபடுவது ஏன்.... தன்னம்பிக்கை , திறமை உழஈபு எல்லாம் கொண்ட சில விவசாயிகள் சாப்பாடுக்கு கூட கஷ்டப்பட்டு தற்கொலை செய்வது ஏன்.... அவர்களிடம் பொய், கனவு கான் ..இந்திய வல்லரசு ஆகி விட்டது என சொல்ல முடியுமா....

இதற்கெல்லாம் பதில் தருகிறது OUTLIERS .....

மால்கம் கிளாட்வெல் நன்கு ஆராய்ந்து தெளிவாக எழுதி உள்ளார்...

வெற்றிக்கு காரணம் , உழைப்பு, தனம்பிக்கை , திறமை மட்டும் அல்ல , என பல ஆதாரங்களை காட்டி விளக்கி ஆச்சர்ய படுத்திகிறார்....

நாம் பிறக்கும் மாதம் கூட நமது வெற்றியில் பங்கு வகிக்கிறது என அவர் சொல்லும் போது , ஜோசியம் போல தோன்றுகிறது... அனால், அது எப்படி என விளையாட்டு அணியை காட்டி விளக்கும்போது, அவர் பார்வை வியக்க வைகிறது...

பிறந்த ஆண்டு, நமது குடும்ப சூழ்நிலை , வரலாற்று காரணங்கள் என பல விஷயங்கள் நமது வெற்றியை நிர்ணயிகின்றன....
பில் கேட்ஸ் சாதித்தார் என்றால், சிறு வயதில் அவருக்கு அதற்கான வாய்ப்புகள் கிடைத்தன... அவர் பணக்கார குடும்பத்தில் பிறந்ததால்தான் அது சாத்தியம் ஆனது... அவர் பிறந்த கால கட்டமும் சாதகமாக அமைந்த்தது.... ஒரு இருபது வருடம் முன்பு பிறந்து இருந்தால் , கதை வேறு..

அனால், அவர் வெற்றிக்கு காரணம் என்ன அவரிடம் கேட்டல் என்ன சொல்வார்? எல்லாம் ஒரு அதிர்ஷ்டம் என்றா சொல்லுவார் ?
தன்னம்பிக்கை , உழைப்பு என்றுதான் சொல்லுவார்...

இன்னொரு உதாரணம்... நீங்கள் பெரிய வேலை ஒன்றுக்கு வினபித்து இருக்கிறிர்கள்.... நிறுவனத்தில் இருந்து நியமன உத்தரவு வருகிறது... அதை வாங்கிய, கல்வி அறிவு இல்லாத உங்கள் தாயார் அது என்ன என்று தெரியாமல், உங்களிடம் சொல்ல மறந்து விடுகிர்ரர்... உங்கள் வாழ்கை அதனால் திசை மாறி விடும் அல்லவா...

அவர் புத்தகத்தில் இதை சொல்லவில்லை.. இதை விட பயங்கரமான உதாரணங்களை தருகிறார்...
சரியான வாய்ப்பு இல்லாமல் , நாம் இழந்த மேதைகள் , அறிவாளிகள் பலர் உள்ளனர்... அறிவை விட, சந்தர்ப்பங்கள் தான் நம்மை உருவாக்கின்றன...

நெல்லை கிராமத்தில் பிறந்த ஒரு ஏழை சிறுவன், சமூகத்துடன் கொள்ளும் தொடர்புக்கும், நகரத்தில், பிறந்த ஒரு சிறுவன் சமொகத்துடன் கொள்ளும் தொடர்புக்கும் வேறு பாடு இருக்கும் ..அது அவர்கள் வாழ்க்கையை வேறு வேறு திசையில் செலுத்தும்...

இவ்வளவு எழதும் ஆசிரியர், தான் ஒரு நல்ல நிலை அடைய, வரலாற்றும் காரணங்கள் , முன்பு பலர் செய்த தியாகங்கள் தாம் காரணம் என நன்றியுடன் சொல்வது நம்மை நெகிழ வைக்கிறது.. நம்மில் எதனை பேர் இப்படி இருக்கிரோம்ம்...
தனிப்பட்ட சிலர் செய்த உதவியையும் அவர் குறப்பிட தவறவில்லை..

these were histories gifts to my family- and if it had been extended to others , how many more would now live a life of fulfilment , in a beatiful house high on a hill?
என்று அவர் முடிக்கும் போது லேசாக கண்கள் கலங்குவது போல் இருக்கிறது...

மணிரதனதிற்கும் இளைய ராஜாவுக்கும் பிரச்சினை வராவிட்டால், ரகுமானுக்கு ரோஜா வாய்ப்பு கிடைத்தி இருக்குமா... அதனால்தானே அவர் இந்தியா முழுதும் அறிமுகம் ஆனார்...?
மணி இல்லாவிட்டாலும், வேறு படத்தில் அறிமுகம் ஆகி இருக்க கூடும்... ஆனால் ரோஜாவில் கிடைத்த பரவலான அறிமுகம் கிடைத்து இருக்குமா... ? அப்போது ஏற்பட்டு இருந்த, மின் அணு புரட்சியும், இசை துறைக்கு சாதகமாக இருந்தது என்பதை மறக்க கூடாது....
ரகுமானின் தந்தை இசை துறையில் இருந்ததும், ஒரு advatage .. சிறு வயதில் இருந்தே , இசையில் தயார் ஆக இது பயன் பட்டது ..இந்த வாய்ப்பு பலருக்கு கிடைக்காது

ஆனால் அவர் இதை எல்லாம் ஒப்பு கொள்ள மாட்டார்... அதே சமயம் , அவர் தன்னக்கம் மிக்கவர் என்பாதால், என் உழைப்புதான் என் முன்னேற்றத்திற்கு காரணம் என சொல்லாமல் , இறைவன்தான் காரணம் என்கிறார்....

பலரும் இதே பாணியில் நடந்து கொள்ள காரணம் , அவர்கள் நன்றி மறந்தவர்கள் என்பது அல்ல....
இதை எல்லாம் ஆராய நேரம் இல்லாதவர்கள் என்பதுதான் காரணம்...

நம் வெற்றிக்கு, பலரும் மறைமுகமாக உதவி இருக்கலாம்..அதே போல நம்மை விட கில்லாடிகளும் , வாய்ப்பு இல்லாமல் , கஷ்டபட்டுகொண்டு இருக்கலாம்...

ஒரு சின்ன உதாரணம்... நீங்கள் ஒரு மீட்டிங் செல்கிறீர்கள்... வாகனம் பழுதாகி விட்டது... யாரோ ஒருவர் தா வண்டியில் உங்களை கூடி வந்து விடுகிறார்... சிறுது நேரத்தில் அவர் முகம் மறந்து விடும்... கடவுள்தான் , எனை கொண்டு வந்து சேர்த்தார் என சொல்லலாம்..என் positive மெண்டல் attitute தான் கொண்டு வந்து சேர்த்தது என் சொல்லலாம்...
ஆனால் இந்த புத்தகம் படித்தவுடன் அப்படி இருக்க மாட்டிர்கள்....

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா