Wednesday, September 30, 2020

சூடுபிடிக்கும்,அமெரிக்கத்தேர்தல்

 அமெரிக்கத் தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ள நிலையில் , போட்டியாளர்கள் டிரம்ப் மற்றும் ஜோ பிடன் ஆகியோரின் கருத்துமோதல் நிகழ்ச்சி நேற்று நடந்தது

இது அமெரிக்கத் தேர்தல்களில் வழக்கமான அம்சமாகும்.

ஒபாமா இரண்டாவது முறையாக போட்டியிட்டபோது அவர் தோல்வியுறும் சூழல்தான் இருந்தது

அப்போது விவாதங்களில் ரோம்னி செய்த தவறுகளால் ஒபாமா முன்னிலை பெற்றார்.

அது குறித்த என் பதிவு

ஆனால் சென்ற தேர்தலில் , விவாதங்களில் சோபிக்காதபோதும் டிரம்ப் வென்றார்.

இந்தப்பின்னணியில் நேற்றைய விவாதம் ஆர்வமாக எதிர்பார்க்கப்பட்டது

ட்ரம்ப் மீது பல அதிருப்திகள் இருந்தாலும் கொரானாவை அவர் கையாண்ட விதம் அவர் செல்வாக்கை கணிசமாகக் குறைத்து விட்டது


இவற்றுக்கெல்லாம் விவாதத்தில் என்ன பதில்,சொல்வார் , எப்படி சமாளிப்பார் என்பது சஸ்பென்சாக இருந்தது

டிரம்ப் மிகப்பெரிய தொழிலதிபராக இருந்தவர்   பிசினஸ் நூல்கள் பல எழுதியுள்ளார். முழுக்க நஷ்டமடைந்து கோடிக்கணக்கான கடனில் மூழ்கிய சூழலிலிருந்து உயிர்த்தெழுந்த வரலாறு இவருக்குண்டு.


அதுபோல ஏதாவது செய்து சமாளிப்பார் என்று தோன்றியது

விவாதம்,ஆரம்பிக்கும் முன் பிடன் எளிதாக டாமினேட் செய்வார் என்ற சூழல் இருந்தது


ஆனால் டிரம்ப் வித்தியாசமான ஒரு பாணியை கையாண்டார்;

நம் ஊர் தொலைக்காட்சி விவாதங்கள்போல , தனி மனித,தாக்குதல் , பிறர் பேச்சில் குறுக்கிடல் , அப்பட்டமான பொய் என நம் ஊர் அரசியல்வாதிகள் போல இறங்கினார்;

திகைத்துப்போன பிடன் ஒருகட்டத்தில் ஷட் அப் என  ஆவேசமாக எகிறினார்


ஒருங்கிணைப்பாளாரால் இந்த தெருச்சண்டையை கட்டுக்குள் வைக்க முடியவில்லை


அமெரிக்க தேர்தல் வரலாற்றில் இப்படி ஒரு மோசமான விவாதம் நடந்ததில்லை என்று பெருவாரியினர் கருதுகின்றனர்.


ட்ரம்ப் ,நிருவ முயன்றது இதைத்தான். தான் நல்லவன் என காட்ட முடியாது.  நானும் மோசமானவன் எதிரியும் மோசமானவன் என்று காட்ட முயன்று அதில் வென்றுள்ளார் டிரம்ப்


கருத்துக்கணிப்புகளின்படி பிடன்தான் முன்னிலையில் இருக்கிறார். ஆனால் இருவருக்கிடையிலான வித்தியாசம் குறைவுதான் 

டிரம்ப்பின் இன்னோரு வியூகம் , தேர்தல் நேர்மையாக நடக்காது என்ற கருத்தாக்கத்தை உருவாக்கி தேர்தல்மீது ஆர்வம் குன்றச் செய்து தனக்கு எதிரான வாக்காளர்களை குழப்பி வாக்களிக்கவிடாமல் செய்தல்.;

இவையெல்லாம் வெற்றிபெறுமா என பொறுத்திருந்து பார்ப்போம்










Friday, September 18, 2020

அகாலிதள் இடத்தில் தமிழக கட்சிகள் இருந்தால்??

 மத்திய அரசு கொண்டுவந்துள்ள மூன்று மசோதாக்கள் தங்கள் மாநில நலனை பாதிப்பதாகக்கூறி அதை எதிர்த்து அமைச்சர் ஹர்சிம்ரத் கவுர் பாதல் ராஜினாமா செய்துள்ளர். அகாலிதள் கட்சியைச் சேர்ந்தவர் இவர்.

இவர் இடத்தில் நம் கட்சி உறுப்பினர்கள் இருந்திருந்தால் எப்படி இருந்திருக்கும் ?

..............

தமிழகத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தும் மசோதாவை அரசு கொண்டு வந்துள்ளதே ?

ஆம். எங்கள் வருத்தத்தை பிரதமரிடம் சொல்லி விட்டோம்

சொன்னது சரி.. ஆனால் தமிழகத்தை அழிக்கும் மசோதாவை நிறைவேற்றி விட்டார்களே ?

ஆம். இது குறித்து கட்சிப் பத்திரிக்கையில் கண்ணீரகவிதை எழுதி இருக்கிறேன்  தமிழக நலனில் விட்டுக்கொடுப்பது என்ற பேச்சுக்கு இடமில்லை


அதை எதிர்த்து உங்கள் கட்சி அமைச்சர் மத்திய அமைச்சரவையில் இருந்து ராஜினாமா செய்வாரா?

அவரை ராஜினாமா செய்ய வைத்து விட்டு , யாரை அங்கே அமர்த்தத் துடிக்கிறீர்கள் என எனக்குத் தெரியும்


தமிழர்களை அழித்தாலும் பரவாயில்லை. மத்திய அரசுக்கு ஆதரவை வாபஸ் மாட்டோம் என்பது சரியான நிலைப்பாடா,?


அந்த மசோதாவில் இருந்து தமிழகத்துமட்டும் விலக்கு தேவை என வழக்கு தொடர்ந்திருக்கிறோம். மற்றபடி,ஆதரவை"வாபஸ் வாங்கும் பேச்சுக்கே இடமில்லை

( சில ஆண்டுகளுக்குப் பிறகு. விவசாயிகள் தற்கொலை செய்திகள் )

நீங்கள் கொண்டு"வந்த மசோதா விவசாயிகளின் சாவுக்கு காரணமாகிறதே ?


அது நாங்கள்"கொண்டு"வந்ததல்ல. அதை எதிர்த்து அப்போதே கவிதை எழுதியிருக்கிறோம். தமிழகத்துக்கு விலக்கு உண்டு என கோர்ட் உத்தரவு வாங்கினோம்;

அந்த தீர்ப்பு செல்லாது என உங்கள் கூட்டணி கட்சி தீர்ப்பு,வாங்கியபோதுகூட ஆதரவை நீங்கள் விலக்கவில்லையே. 

அப்போதைய பிரதமருக்கு நாங்கள் கடிதம் எழுதியதை மறந்துவிட்டீர்களா


தற்போது விவசாயிகள் சாகிறார்களே ?

அதை தடுத்திருக்க வேண்டியது தற்போதைய ஆளும்கட்சிதான்




Wednesday, September 16, 2020

நீட்.. பெருமை திமுகவுக்கா அதிமுகவுக்கா?

 நீட் தேர்வு நல்லதா கெட்டதா என தெரியவில்லை.  உண்மையிலும் கட்சிகளுக்கும் தெளிவில்லை. எனவேதான் வாய்ஜாலம் காட்டுகின்றனவேதவிர , செயலில் எதையும் காட்டுவதில்லை.

ஓகே..  ஒருவேளை நீட் தேர்வு நல்லது,என தெரியவந்தால் யாரைப் பாராட்ட வேண்டும்?

வரலாற்றைப்புரட்டுவோம்

ஆளாளுக்கு மருத்துவக்கல்லூரி நடத்தி சர்ட்டிபிகேட் வழங்கினால் இந்திய டாக்டர்களுக்கு உலகளவில் மதிப்பிருக்காது என்பதற்காக இந்திய,அளவில் ஒரு ஸ்டாண்டர்டை உருவாக்க 2010ல் காங்கிரஸ் திமுக கூட்டணி ஆட்சி நினைத்தது. அப்போது சுகாதாரத்துறை துணை அமைச்சராக இருந்தவர் திமுகவைச் சேர்ந்த காந்திசெல்வன்

இதற்கான அறிவிப்பை இந்திய மருத்துவ கவுன்சில் கெசட்டில் வெளியிட்டுள்ளது

அதன்படி,தேர்வு நடத்த தயாரானபோது காங்கிரஸ் அல்லாத மாநில அரசுகள் அதை எதிர்த்தன. கட்டப்பஞ்சாயத்துப்பேசி தேர்வை ஓராண்டு தள்ளி வைத்தனர்


ஆனால் தனியார் மருத்துவக்கல்லூரிகள் கோர்ட்டுக்கு சென்று நீட்டுக்கு எதிராக தடையாணை பெற்றனர்

நீட் மரணமுற்றது


இதை எதிர்த்து காங்கிரஸ் திமுக கூட்டணி அரசு மேல்முறையீடு செய்து நீட் உயிர்த்தெழ வழி வகுத்தது

இந்த கால கட்டங்களில் ஜெயலலிதா இதை தீவிரமாக எதிர்த்து வந்தார்

ஆனால் மத்தியில் அவருக்கு அப்போது செல்வாக்கு இல்லை

மத்தியில் ஆட்சியில் இருந்த திமுக அதை தடுக்க முனையவில்லை.;

மாறாக ஜெயலலிதாவுக்குப் போட்டியாக அவர்களும் நீட் தேர்வுக்கு எதிராக அறிக்கை விட்டனர்

மத்தியில் அப்போது செல்வாக்கில்லாத ஜெ அறிக்கை விடுவது ஓகே. ஆனால் மத்திய அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த திமுக அதை தடுக்க,முயற்சி செய்யாமல் பெயரளவுக்கு அறிக்கை விட்டு காமெடி செய்தது

அதன்பிறகு அதிமுக ஆட்சிக்கு வந்தது. ஜெ அப்போதும் நீட்டுக்கு எதிராகவே இருந்தார்.


ஆனால் அவரது உடல்நிலை , அவர் மறைவு , கட்சிக்குழப்பங்கள் போன்றவற்றால் அதிமுகவும் உரிய முறையில் நீட்டை எதிர்த்து நடவடிக்கை எடுக்கவில்லை


நீட்டை விதைத்து அதை மரமாக்கிய பெருமை திமுகவுக்கு உண்டு. வளர்ந்த மரத்தை வெட்டத்தயங்கிய பெருமை அதிமுகவுக்கு உண்டு




 



Monday, September 14, 2020

சந்தர்ப்பவாதமே நல்லது !! கவிஞர் வாலியும், சில சினிமா கலைஞர்களும்

 

கவிஞர் வாலி  தன் கட்டுரையொன்றில் இங்கனம் குறிப்பிடுகிறார்

------------------------

இந்தக் கடிதம் கொண்டுவரும் பையனிடம் இருபதோ முப்பதோ கொடுத்து அனுப்பினால் நலமாயிருக்கும்..!’

இப்படி ஒரு கடிதத்துடன் என் வீட்டிற்கு ஒரு பையன் வரும் போதெல்லாம், எனக்கு வியர்த்துக் கொட்டும். எவ்வளவு பெரிய எழுத்தாளர்; எப்படியிருந்தவர்.. அவருக்கா இப்படிஒரு சிரமம்..?

# 2 ஒரு கம்பெனியில் பாட்டு ‘கம்போஸிங்’. எம்.எஸ்.வி-யுடன் அமர்ந்திருக்கிறேன். கம்பெனி மாடியில் குடியிருக்கும் ஒருவர் ‘ஹாய் வாலி ..!’ என்று இறங்கி வருகிறார்.

சிரிக்கச் சிரிக்க அளவளாவி விட்டு, ”வாலி..! உன் டிரைவரை விட்டு, ஒரு பாக்கெட் ‘பர்க்லி’ சிகரெட் வாங்கிண்டு வரச் சொல்லேன். என்னோட பிராண்ட் 555 வாங்க இப்பெல்லாம் வசதியில்லே..!”

எவ்வளவு பெரிய நடிகர்..! எம்.ஜி.ஆர், சிவாஜி படங்களில் அவர்களை விட அதிகம் சம்பளம் வாங்கியவர்! படுக்கையறைக்கே கார் வருகிற மாதிரி பங்களா கட்டியவர்! எங்கே போனது அந்த வாழ்வும் வளமும்..?

# 3 என் வீட்டு வாசலில் ஒரு டாக்ஸி. ஒரு நடிகை. ஒரு காலத்தில் தமிழ்திரையுலகின் முடிசூடா அரசி. என்னைப் பார்க்க வந்தவர், ‘வாலி சார்.. எனக்கு ஒரு நாடகம் எழுதிக் கொடுங்க; ஒரு ட்ரூப் வெச்சு, நடத்தலாம்னு இருக்கேன்’ என்று மெல்லிய குரலில் சொன்னார்.

# 4 சென்னை எழும்பூர் ரயில் நிலையம். சிமென்ட் பெஞ்சில் ஒருவர் அமர்ந்திருக்கிறார். இன்றைய தலைமுறைக்கு அவரைத் தெரியவில்லை. நான் கவனித்து விட்டேன்.

ஓடிப் போய் அவரருகே சென்று, ‘நமஸ்காரம் அண்ணா..! நானும் உங்க மாதிரி திருச்சிக்காரன் தான். இப்போ, சினிமாவில பாட்டு எழுதிண்டிருக்கேன். என் பேரு வாலி’ என்று அறிமுகப்படுத்திக் கொண்டு, அவரை வணங்குகிறேன்.

‘ஓ நீங்கதான் அந்த வாலியா..?’ என்று என் கைகளைப் பற்றுகிறார். அவர் தொட மாட்டாரா என்று தமிழர்கள் ஏங்கித் தவமிருந்த காலம் ஒன்று உண்டு. இன்று அவர் என்னைத் தொடுகிறார். நான் சிலிர்த்துப் போகிறேன்.

அவர் தொட்டதால் அல்ல. எந்த ரயில்நிலையத்தில் அவர் ரயிலிருந்து இறங்கவிடாமல் மக்கள் அலை மோதினார்களோ அங்கே கவனிக்க ஆளில்லாமல் தனியாக அவர் அமர்த்திருந்த நிலையை பார்த்து.

காலம் எப்படியெல்லாம் தன் ஆளுமையை காட்டுகிறது. எண்ணிப் பார்க்கிறேன், அந்தப் பழைய நிகழ்வுகளை:-

கடிதம் அனுப்பிப் பணம் கேட்டவர், ‘கண்ணகி’க்கு உயிர் கொடுத்த, உலகு புகழ் உரையாடல்களை எழுதிய திரு. இளங்கோவன்.


என்னிடம் சிகரெட் கேட்டவர் ‘மாடி வீட்டு ஏழை’யான திரு.சந்திரபாபு அவர்கள்.


நாடகம் எழுதித் தரக் கேட்டவர் – நடிகையர் திலகம் திருமதி.சாவித்திரி அவர்கள்.

எழும்பூர் ரயில் நிலையத்தில் எவர் கவனத்தையும் ஈர்க்காமல் அமர்ந்திருந்தவர் – தமிழ் சினிமாவின் முதல் சூப்பர் டூப்பர் ஸ்டார் – திரு. எம்.கே. தியாகராஜ பாகவதர்.

இவர்களைவிடவா நான் மேலானவன்?

அன்று முதல் நான், ‘நான்’ இல்லாமல் வாழப் பயின்றேன்.!


--------------

  வறுமையில் தள்ளப்பட்ட கலைஞர்களைப்பார்த்தபின் சந்தர்ப்பவாதம் என்பது தவறில்லை என்ற முடிவுக்கு அவர் வந்ததை நேர்மையாக ஒப்புக்கொண்டது பாராட்டத்தக்ககது..


அந்தக்காலத்தில் திமுக ஆட்சி நடந்தபோது இனியொரு வாய்ப்பு கிடைக்காது என நினைத்ததுபோல வீராணம் ஊழல் , மஸ்டர் ரோல் ஊழல் , பூச்சிக்கொல்லி மருந்து ஊழல் , குளோபல் தியேட்டர் மோசடி என புகுந்து விளையாடினர்



அப்போது கலைஞரை விமர்சித்து வாலி எழுதிய பாடல் இது

மக்கள் நலம் மக்கள் நலம் என்றே சொல்லுவார்

தம் மக்கள் நலம் ஒன்றேதான் மனதில் கொள்ளுவார்


வீட்டுக்கெல்லாம் வெளிச்சம் போட கொடுத்த பணத்திலே

தாங்கள் வெளிச்சம் போட்டு வாழ்ந்து விட்டார் நகர சபையிலே

ஏழைக்கெல்லாம் வீடு என்று திட்டம் தீட்டினார்

தாங்கள் வாழ்வதற்கு ஊர் பணத்தில் வீடு கட்டினார்

ஏய்பவர்க்கே காலம் என்று எண்ணி விடாதே

பொய் எத்தனை நாள் கை கொடுக்கும் மறந்து விடாதே

இப்படி எம்ஜிஆர் படத்தில் எழுதினார்.




எம்ஜிஆர் மறைந்தபின் திமுக ஆட்சிக்கு வந்தபின் கலைஞரைப் பாராட்டி இப்படி எழுதினார்




நீ பாலுாட்டும் தாயானாய்


நான் வாலாட்டும் நாயானேன்


இப்படி சந்தர்ப்பவாதமாகப்பேசி கடைசி"வரை வளமாக வாழ்ந்தார்


,.......

தியாகராஜபாகவதரும் இப்படி நடந்து கொண்டிருந்தால் வசதியாக வாழ்ந்திருக்கலாம்

அம்பிகாபதி படத்தில் நாயகனாக நடித்தவர் அவர். பிற்காலத்தில் அதே படம் சிவாஜியை நாயகனாக வைத்து எடுக்கப்பட்டது. அம்பிகாபதியின் அப்பாவாக நடிக்க கோரி அவரை அணுகினர். 


நான் நாயகனாக நடித்த கதையில் சிறு வேடத்தில் நடிக்க மாட்டேன் என சுயமரியாதையுடன் மறுத்துவிட்டார்.  அவர் நாயகனாக நடித்தபோது பெற்ற ஊதியத்தைவிட அதிகம் தர  முன்வந்தும் ஏற்கவில்லை


சந்திரபாபு என்ற அருங்கலைஞனும் எம்ஜிஆரை எதிர்த்துப் பேசியதால் வறுமைக்கு ஆளானார்


அந்த கட்டுரையில் வரும் சாவித்திரியும் இளங்கோவனும் சுயமரியாதைமிகு கலைஞர்கள்


அவர்கள் வரலாற்று நாயகர்கள். வாலியோ வறுமைக்கு அஞ்சி சந்தர்ப்பவாதி ஆகி விட்டார்.



இன்று திமுகவைப் பாராட்டினால் ஊடக வாய்ப்புகள்  , பிஜேபியைப் பாராட்டினால் அரசு விருதுகள் என்ற தற்கால சூழலில் பெரும்பாலான படைப்பாளிகள் திமுக அல்லது பிஜேபி சார்பு நிலைக்கு சென்று விட்டனர் கைமேல் பலனும் பெறுகின்றனர்.

ஆனால் உண்மையான"படைப்பாளிகளுக்கு பாரதியின் இவ்வரிகளே வேதம்


பொய்மை, இரட்டுறமொழிதல், நயவஞ்சனை, நடிப்பு இவற்றால் பொருட்டிப் பிழைத்தல் நாய்ப் பிழைப்பென்று கொள்வேன்.

− பாரதியார்

Saturday, September 5, 2020

வானொலி நினைவுகள்

 ஒரு காலத்தில் அதிகம் விற்பனையான நூல்களில் வானொலிப் பெட்டி தயாரிப்பு மற்றும் பழுதுபார்த்தல் நூலும் ஒன்று

அந்தக்காலத்தில் அந்த அளவு வானொலிப் பெட்டிக்கான தேவை இருந்தது.  செய்திகள் , சினிமாப்பாடல் , கர்நாடக இசை , கிராமிய இசை , சான்றோர் சிந்தனை , விவசாயம் , அறிவியல் , நாடகம் என ஒரு முழுமையான தகவல் தொடர்பு சாதனமாக அது மிளிர்ந்தது.

அந்த வரவேற்பு காரணமாக பலர் தமக்கான  வானொலியை தாமே செய்து கொண்ட வழக்கமும் இருந்தது.

தனித்தனி பொருட்களாகவும் வாங்கி இணைக்கலாம் அல்லது ஏற்கனவே இணைக்கப்பட்ட அமைப்பை வாங்கி , வயரை இணைத்து , நமக்குப்பிடித்தமான அழகான வெளிப்புற பெட்டியை வாங்கி அதற்குள் இதை பொருத்திவிடின் சூப்பரான வானொலிப் பெட்டி ரெடி. 

அல்லது இதற்கென இருக்கும் உள்ளூர் தச்சர்களிடம் ஆர்டர் செய்து மரத்தினாலான வானொலிப்பெட்டி வாங்கிவைத்துக் கொண்டால் வீட்டுக்கு அது தனி,அழகைத்தரும்

அல்லது புகழ் பெற்ற நிறுவனங்களின் வானொலிப் பெட்டியை நேரடியாக வாங்கிக் கொள்ளலாம்

டிவி வருகைக்குப்பின் படிப்படியாக வானொலி செல்வாக்கிழந்தது.

ஆனால் காலையில் பள்ளிக்கு வேலைக்கு கிளம்பும்போதுகூட வானொலியைக் கேட்டவாறே தமது பணியைச் செய்யும் சுகம் டிவியில் இல்லையென்பதால் சாட்லைட் ரேடியோ , பண்பலை வானொலி என வானொலி மீண்டும் தலைதூக்க முயன்றது


ஆனால் அலைபேசியிலேயே பாடல் கேட்கும் வசதி கொண்ட ஆண்ட்ராய்டு போன்களால் மீண்டும் வானொலி பின்னடைவைச் சந்தித்தது. சாட்லைட் ரேடியோ எடுபடவில்லை

ஆனால் நாமே பதிவு செய்து நாமே கேட்பதில் த்ரில்  இல்லை. எதிர்பாராமல் காதில் விழும் அரிய பாடல்கள் அளிக்கும் த்ரில் என்பது வேறு

இது டிவியில் சாத்தியமில்லை. பல அரிய பாடல்களின் ஒளி வடிவம் இருக்காது. உரிமம் இருக்காது; எனவே டிவியில்,குறிப்பிட்ட பாடல்களையே மீண்டும் மீண்டும் ஒளிபரப்புவர்

இதனால் பலரும் வானொலியை நாட ஆரம்பித்துள்ளனர்

தனியார் நிகழ்ச்சிகளுடன் போட்டியிடும் வகையில் அகில இந்திய வானொலியும் சூப்பரான நிகழ்ச்சிகளை வழங்குகிறது

கட்சி சார்பற்ற செய்திகள் ,  இலக்கிய உரைகள் என தரமாகவும் சுவையாகவும் கலக்குகின்றனர்

எந்த தொழில் நுட்ப வளர்சசி வானொலியை அழித்ததோ இன்று அதுவே வானொலிக்கு உதவுகிறது

முன்பெல்லாம் திருச்சி நிலைய ஒளிபரப்பை அந்தப் பகுதி நேயர்களேகேட்க இயலும். மதுரை , நெல்லை , தர்மபுரி என அவரவர்களே கேட்க முடியும்


இன்று அங்கனம் இல்லை. இந்தியாவின் எந்த நிலைய ஒளிபரப்பையும் app நிறுவிக்கொண்டால் உலகின் எம்மூலையில் இருந்தும் கேட்கலாம்

சார்ஜ் செய்யத்தக்க வானொலிகள் இருக்கின்றன.  வாங்கி விட்டால் பைசா செலவற்ற என்டர்டயிண்ட்மெண்ட் , நம்பகமான செய்திகள் என  மாதச்சந்தா போன்றவை இன்றி அனுபவிக்கலாம்


இதனால் மீண்டும் வானொலி புத்துயிர் பெற்றிருப்பது வரவேற்கத்தக்கது







Friday, September 4, 2020

சோ தர்மனின் சூல்.. சுயநலத்தால் அழியும் இயற்கை

 நமது கிராம நிர்வாக முறை − குறிப்பாக நீர் மேலாண்மை − வெகு அற்புதமானது.

ஊருணிகள் , ஏரிகள் , குளங்கள் , கண்மாய்கள் என வடிவமைத்து , தலை,போகிற வேலை என்றாலும் அதை,விட்டுவிட்டு , ஆண்டுக்கொரு முறை கிராமத்து மக்கள் அனைவரும் சாதி , பொருளாதார வித்தியாசமின்றி ஒன்றுகூடி கண்மாயை தூர்வாரும் ஊர்க்கட்டளை என மழையை மட்டுமே நம்பி விவசாயம் செய்து வயிராற உண்டவர்கள் நாம்

கண்மாய்களை சீரழித்தால் குடும்பத்தில் ஊமைக்குழமை பிறக்கும் என்ற ""மூடநம்பிக்கை " கொண்ட முன்னோர்கள் காலத்தில் வறட்சி கிடையாது

இதெல்லாம் மூடநம்பிக்கை ,  ஏரிகளை மூடி கட்டிடங்கள் கட்டினால் காசு கிடைக்கும் என்று தெரிந்து கொண்ட அறிவாளிகள் அதிகாரம் பெற்றதும் நீர் நிலைகள் அழிய ஆரம்பித்தன

கடந்த ஐம்பது ஆண்டுகளில் ஏராளமான கண்மாய்கள் ஏரிகள் அழிக்கப்பட்டு தமிழகம் பாலைவனமாகி வருகிறது

இது குறித்து ஆய்வுகள் செய்து சோ. தர்மன் எழுதியுள்ள நாவல் "சூலி"


எப்படி,ஒரு தாய் ஓர் உயிரை பூமிக்கு கொணர்கிறாளோ அதுபோல ஒரு கண்மாய் உலகுக்கு எத்தனைஎத்தனை உயிர்களை புவிக்கு அளிக்கின்றன


ஆரா, உளுவை, கெண்டை, பாம்புக்கெண்டை, கூனக்கெண்டை, அயிரை, கெளுறு, கொரவை, விலாங்கு, விரால், ஊளி, தேழி என எத்தனை மீன்கள் , அவற்றை நாடி வரும் பறவைகள் , அதைச்சுற்றி வாழும் தாவரங்கள் என வாழ வைக்கும் தாய்தான் கண்மாய்


மனசாட்சியின்றி இதை அழித்த கட்சியினரை நோவதா , அழிவது நம் குழந்தைகள்தான் என தெரிந்தும் அழிவுக்கு துணைபோகும் மக்களை நோவதா ?


அரசர் காலத்தில் நீர்நிலை பராமரிப்புக்கு கொடுக்கப்பட்ட முக்கியத்துவத்தை அழகாக சித்தரித்துள்ளார் தர்மன்

உருளைக்குடி கிராமத்துக்கு தாயாக விளங்கிய கண்மாயை அரசாங்கங்கள் அழிப்பதை கண்முன் காட்டுகிறார்


ரத்தமும் சதையுமான பாத்திரங்கள் ,  பறவைகள் மரங்கள் பற்றிய சுவையான தகவல்கள் , சுவாரஸ்யமான சம்பவங்கள் என நல்ல வாசிப்பனுவம் தருகிறது சூலி







Thursday, September 3, 2020

கார்ட்டூனுக்காக மிரட்டப்பட்ட தேமுதிக . பாசிச பாதையில் தமிழகம்



 

 திமுக மற்றும் அதிமுக கூட்டணிக்காக தேமுதிக காத்திருப்பதுபோல தினமலர் கார்ட்டூன் வெளியிட்டது

இது தேமுதிகவினரிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது

நாங்க ஏன் பிறரை கெஞ்ச வேண்டும்.  பழம் நழுவி பாலில் விழாதா என பிற கட்சியினர்தான் எங்களை கெஞ்சினார்கள் என்பதை நீங்களே சுட்டிக்காட்டியிருக்கிறீர்களே என தேமுதிக ( சுதீஷ்) , தினமலர் 2016ல் வெளியிட்ட காா்ட்டூனை வெளியிட்டது 

இதற்கு தினமலர்தான் டென்ஷனாகியிருக்கவேண்டும். அல்லது தினமலர் மேல் அனைவரும் டென்ஷனாகி இருக்க வேண்டும்.

ஆனால் சம்பந்தமின்றி தேமுதிக மேல் அனைவரும் பாய்ந்து அக்கார்ட்டூனை நீக்கச்செய்து விட்டனர்

நில மாதங்கள் முன் கார்ட்டூனிஸ்ட் மதியை மிரட்டி அவர் வேலையைப் பறித்தனர்;

திராவிட அரசியல் குறித்து நாவல் எழுதினால் தான் உயிரோடு நடமாட முடியாது என சாரு நிவேதிதா சொன்னது,நினைவுக்கு வருகிறது











Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா