Friday, May 31, 2019

மேதையின் அற்பத்தனமும் மற்க்கப்பட்ட விஞ்ஞானியும்

வரலாறு என்பது ஒரு குப்பை என்பார் ஹென்றி ஃபோர்டு

உண்மைதான்,, வரலாறு என நாம் படிப்பவை எல்லாம் , யாராவது  ஒரு சாரார் அவர் பார்வையில் இருந்து சொல்லும் கற்பனையைத்தான்

உதாரணமாக , சீனா இந்தியா மீது படையெடுத்து நட்பு துரோகம் செய்தது.. என படித்துள்ளோம்

அப்படி எல்லாம் இல்லை..  வல்லரசுகளுக்கு ஆதரவாக நாம் செயல்பட்டதால் தனது பாதுகாப்புக்காக சீனா படையெடுத்தது.. வெற்றி பெற்றாலும்கூட , அப்பாவியை துன்புறுத்தவேண்டாம் என அதுவாகவே பின் வாங்கி விட்டது என்கிறார்கள் சில கம்யூனிஸ்ட்கள்...

எனவே வரலாறு என்பதை நம்ப முடியாது

சர் ஐசக் நியூட்டன் மிகப்பெரிய அறிவியல் மேதை என படித்திருப்போம்

ஹூக் விதி என  லேசாக படித்திருப்போம்

உண்மையில் ராபர்ட் ஹூக்தான் மிகப்பெரிய  மேதை

பெண்டுலம் கடிகாரம் , நுண்ணோக்கி , ஹெலிகாப்டர் , வானியல் , பூமியின் சுழற்சி , ஒளியியல் போன்ற பலவற்றில் கில்லாடி

ஆனால் பொறாமை காரணமாக இவரது பல ஆய்வு பேப்பர்களை நியூட்டன் இருட்டடிப்பு செய்து விட்டார்.. இவரது பல கண்டு பிடிப்புகளை தன் பெயரில் வெளியிட்டுக்கொண்ட்டார் நியூட்டன்

 நாம் மேதை என நினைப்பவர் இப்ப்படி அற்பத்தனமாக நடந்துள்ளார்

அதுகூட பரவாயில்லை... எத்தனையோ அரிய கண்டுபிடிப்புகள் வெளிசத்த்துக்கு வராமல் மறைந்தே போய் விட்டன

வானியல் விந்தை - ஒழுங்கின்மைக்குள் ஓர் ஒழுங்கு

சூரியனில் இருந்து ஒவ்வொரு கோளும் எவ்வளவு தொலைவில் இருக்கின்றன என்பதை வானியல் அலகு என்பதை வைத்து சொல்லுகிறார்கள்

வானியல் அலகு என்றால் என்ன?

பூமிக்கும் சூரியனுக்கும் இடையேயான தூரம்தான் வானியல் அலகு..

இதன் மதிப்பு ஒன்று.. 

ஆகவே ஒன்றை விட அதிகமான வானியல் அலகு என்றால் , பூமியை விட அதிக தூரத்தில் அந்த கிரகம் இருக்கிறது என அறியலாம்

ஒரு வானியல் அலகு = 93 மில்லியன் மைல் / 150 மில்லியன் கிலோ மீட்டர்

புதன் - சூரியன் தூரம் - .387 வானியல் அலகு   .387 AU

வெள்ளி ---   0.722

பூமி  ----        1

செவ்வாய் - 1.52

வியாழன்     - 5.2

சனி  - 9.58

யுரெனஸ்   - 19.2
 

நெப்டியூன் -- 30.1

சரி.. இதை எளிதாக நினைவில் கொள்வது எப்படி ?

ஸ்மார்ட் போனில் கூகிள் செய்வது எளிதுதான் என்றாலும் , இந்த தூரங்களுக்குள் இருக்கும் ஒரு பேட்டர்னை கண்டு பிடித்தவர்களின் ஆர்வத்தை புரிந்து கொள்ளும் பொருட்டு விளக்கம்

0  3  6   12   24

இதை நினைவில் கொள்ளுங்கள்

இவற்றுடன் நான்கை கூட்டி , 10 ஆல் வகுத்து விடுங்கள்

 நமக்கு கிடைப்பது

0.4   0.7  1    1.6    5.2   10   19.6     38


கிட்டத்த்ட்ட தூரங்கள் மேட்ச் ஆகின்றவா அல்லவா

பார்ப்பதற்கு ஒழுங்கினமை போல தெரிந்தாலும் அவற்றுக்குள் ஓர் ஒழுங்கு இருப்பது ஆச்சர்யம்

யார் இப்படி நிர்வகிக்கிறார்கள் என்பதுதானே மனித இனத்தின் இடை விடாத தேடல் !!


Wednesday, May 29, 2019

ஆடாமல் ஜெயித்த கிரிக்கெட் வீரர் - கிரிக்கெட் உலக கொடுமைகள்1983 உலக கோப்பை வெற்றியில் கபில் தேவின் ஃபைனல் கேட்ச்சை ( விவியன் ரிச்சர்ட்ஸ் விக்கெட் ) , மொஹிந்தர் அமர் நாத்தின் கடைசி ஓவர்களை யாரும் மறக்க முடியாது

அதேபோல சுனில் வால்சனுக்கும் அவரது நண்பர்கள் உறவினர்களுக்கு 1983 உ கோப்பையை மறக்க முடியாது

காரணம் அந்த போட்டியில் வென்று கோப்பையுடன் புகைப்படத்தில் காட்சி அளிப்பவர்களுள் அவரும் ஒருவர்..

ஆம்..அந்த அணியில் இடம் பெற்றிருந்த வீர்களில் இவரும் ஒருவர். ஆனால் ஒரு மேட்ச் சில் கூட விளையாடும் வாய்ப்பு கிடைக்கவில்லை

ரோஜர் பின்னி , மதன்லால் , கபில்தேவ் போன்ற சீனியர்கள் இருக்கும்போது சின்ன பையனான எனக்கு வாய்ப்பு கிடைக்காததில் வருத்தம் இல்லை.. இப்போது நான் சீனியர் சிட்டிசனாகி விட்டேன் என்பதால் இப்போதும்கூட வருத்தம் இல்லை என்கிறார் இவர்

ஆந்திராவை சேர்ந்த வீரரான இவர் தற்போது ஐபிஎல் போட்டிகளில் டெல்லி அணியின் மேனேஜராக இருக்கிறார்

அதேபோல தமிழக வீரர் வி வி குமார்.. திறமைசாலிதான்.. ஆனாலும் போதிய வாய்ப்புகள் கிடைக்கவில்லை

வாய்ப்பு கிடைத்த முதல் தொடரில் அருமையாக பந்து வீசினார்

அடுத்து இங்கிலாந்துக்கு எதிரான தொடர்

முதல் இன்னின்க்சில் சிறப்பாக பந்து வீசினார்

இரண்டாம் இன்னின்க்சில் ஒரு ஓவர் கூட வீசவில்லை

அடுத்த டெஸ்ட்டில் வாய்ப்பு தருவதாகவும் , பந்து வீசும் ஸ்டைல் ரகசியமாக இருந்தால்தால் அடுத்த டெஸ்ட்டில் எதிராளிகளை அச்சுறுத்த முடியும் என்றும் கூறி பந்து வீச வேண்டாம் என்றார் அணித்தலைவர்

ஆனால் என்ன கொடுமை என்றால் , அவர் வாழ்க்கையில் அடுத்த வாய்ப்பு என ஒன்று வரவே இல்லை

அதேபோல மதுரை வீரர் வெங்கட்ரமணா..

திறமையான பந்து வீச்சாளர்

கிரிக்கெட் உலக அரசியலால் இவருக்கும் வாய்ப்புகள் அமையவில்லை

இப்படி வாய்ப்புகள் அமையாமல் ,  காணாமல் போனோர் எண்ணிக்கை கிரிக்கெட்டில் அதிகம்.. வாழ்க்கையிலும்கூட

சாதி ரீதியாக கிருஷ்ணசாமியை அசிங்கப்படுத்திய நிருபர்- தேவை திராவிட மறுமலர்ச்சி


புதிய தமிழகம் கிருஷ்ணசாமி சமீபத்தில் பத்திரிக்கையாளர்களை சந்தித்தார்

அப்போது அவர் , தேர்தல் தனக்கு நிறைவு அளிப்பதாக சொன்னார்

முன்பெல்லாம் தான் சார்ந்த தேவேந்திர குல வேளாளர் சமூகத்தினரிடம் மட்டுமே வாக்கு கேட்க முடியும்.. அவர்கள் மட்டுமே வாக்களிப்பார்கள்

ஆனால் கொஞ்சம் கொஞ்சமான நிலை மாறி வருகிறது.. திமுக கூட்டணியில் போட்டியிட்டபோது பல மாறுதல்களை பார்த்தேன்

இன்று முழுக்கவே நிலை மாறி விட்டது...  அனைத்து சமூகத்தினரும் என்னை மரியாதையுடன் பார்க்கிறார்கள்.. அனைவரும் என்னை ஏற்கிறார்கள்...இந்த மாற்றம் ஆரோக்கியமானது.. நல்லதொரு சமூக மாற்றம் நிகழ்ந்துள்ளது என்றார்

அப்போது ஒரு நிருபர். அதெல்லாம் இல்லை..  உங்களை ** , **** ( சில சாதிகளை சொன்னார் ) ஏற்கவில்லை.. அதனால்தான் தோற்றீர்கள் என்றார்

 நான் மட்டும் தோற்றிருந்தால் , அப்படி சொல்லலாம்.. ஆனால் ஒட்டு மொத்தமாக எங்கள் அணி தோற்றுள்ளது/ ஆகவே இது சாதி ரீதியான தோல்வி அல்ல..  என்றார் கிருஷ்ணசாமி

அந்த நிருபர் விடாமல் , சாதி ரீதியாக கேட்டு கிருஷ்ணசாமியை அவமானப்படுத்தினார்
கிருஷ்ண சாஇ டென்ஷனாகி , சாதி ரீதியாக தாக்குதல் நடத்தும் உன் உள் நோக்கம் புரிகிறது.. நீ என்ன சாதி என்றார்


பார்க்கும் நமக்கே வருத்தமாக இருந்தது

வளர்ந்து வரும் ஒரு சமூகம்.. அதன் தலைவரை இப்படி அசிங்கபடுத்தும் தைரியம் எப்படி வருகிறது

உட்கட்சி பூசல்களால் , திராவிட இயக்கம் சற்று சோர்ந்துள்ளதால் நடக்கும் விளைவுகள் இவை

ஓர் அண்ணாவோ , எம் ஜீ ஆரோ இருந்திருந்தால் , கண்டிப்பாக இது நடந்திருக்காது

திராவிடம் மீண்டும் உயிர்க்கட்டும்.. சாதி திமிர் ஒழியட்டும்Tuesday, May 28, 2019

திராவிட இயக்கம் - அவதூறுகளும் விளக்கமும்

திராவிட இயக்கத்தால்தான் தமிழ் நாடு கஷ்டப்படுகிறது... வரலாறு காணாத ஊழல்கள் நடக்கின்றன என்கிறார்கள் சிலர்


திராவிட இயக்கிய ஆற்றியுள்ள , ஆற்றி வரும் பணிகள் குறித்தும் திராவிட இயக்கம் பேணி வரும் கடமை , கண்ணியம் , கட்டுப்பாடு குறித்தும் பலர் அறியாததே இதற்கு காரணமாகும்


இன்னொன்றும் இருக்கிறது ,  டிராஜேந்தரின் லதிமுக , தினகரனின் அமமுக என யார் என்ன தப்பு செய்தாலும் பழியை திராவிட இயக்கத்தின்  மேல் போடுவதும் இதற்கு காரணம்..


சைதை துரைசாமி , பொன்னையன் போன்ற பழைய கால திராவிட இயக்கத்தினரிடம் பேசினால்தான் பல உண்மைகள் தெரியவரும்..

தமிழ் நாடு என்ற பெயருக்கே காரணம் திராவிட இயக்கம்தான்,,   இட ஒதுக்கீடு , போக்குவரத்து வசதிகள் என பல விஷ்யங்கள் அண்ணா , எம் ஜி ஆர் போன்றோரால்தான் சாத்தியமாகின


அண்ணா ஒரு முறை கல்லூரி கூட்டம் ஒன்றுக்கு தலைமை வகித்தார்.. சிம்மாசனம் போன்ற பெரிய நாற்காலி போடப்பட்டு இருந்தது..    இதில் நான் அமரும் தகுதி இல்லை.. மாணவர்கள்தான் மன்னர்கள் என பெருந்தன்மையாக பேசினார்

எம் ஜி ஆர் பேசுகையில் மாணவர்கள் நினைத்தால் பல மாற்றங்கள் நிகழும் என்றார்

அண்ணா மறைவுக்கு பின் திராவிட இயக்க பெருந்தலைகளான மதியழகனுக்கும் நெடுஞ்செழியனுக்கும் இடையே அடுத்து யார் என போட்டி நிலவியது

இவர்களுள் அண்ணாவால் அடையாளம் காட்டப்பட்டவர் நெடுஞ்செழியன் தான்

ஆனால் சம்பந்தம் இல்லாமல் கலைஞர் தலைமைக்கு வந்தார்

காரணம் எம் ஜி ஆர் கொடுத்த ஆதரவு..கலைஞரின் தமிழ் மீதும் திறனை மீதும் எம் ஜி ஆருக்கு இருந்தது

ஊழலற்ற ஆட்சி என்பது மட்டுமே எம் ஜி ஆரின் நிபந்தனையாக இருந்தது

ஆனால் , கோதுமை ஊழல் , பாலம் கட்டுவதில் ஊழல் என பிரச்சனைகள் உருவெடுக்கவே , எம் ஜி ஆர் கணக்கு கேட்டு , அதிமுக பிறந்தது

அதன் பின் திராவிட இயக்க கொள்கைகளை அண்ணாயிசம் என்ற பெயரில் நிறைவேற்ரலானார் எம் ஜி ஆர்

ஓர் உதாரணம்..

முனு குறிப்பிட்ட கல்லூரி விழா மூலம் திராவிட இயக்கம் மீது ஈடுபாடு கொண்டு எம் ஜி ஆருடன் இணைந்து செயல்படலானார் பொன்னையன்

அதிமுக தேர்தலில் நிற்கும்போது மக்கள்  நலபணிகள் குறித்து இவருடன் விவாதித்தார் எம் ஜி ஆர்

கிராமங்கள் முன்னேறினால்தான்  மா நிலம் முன்னேறும்.. கிராமங்கள் முன்னேற நல்ல சாலைகள் தேவை என்றார் பொன்னையன்..பஸ் மேற்கூரைகளில் கிராம விளை பொருட்களை ஏற்றும் உரிமை வேண்டும் என்றெல்லாம் சொன்னார் அவர்

இதை நினைவில் கொண்ட எம் ஜி ஆர் , அதிமுக ஆட்சிக்கு வந்ததும்,  நெடுஞ்சாலைத்துறை மற்றும் போக்குவரத்து என இரண்டையும் பொன்னையனிடம் கொடுத்தார்

இன்று தமிழகம் வட மானிலனங்களை விட சிறப்பான சாலைகள் பேருந்துகள் என இருப்பதற்கு காரணம் எம் ஜி ஆரின் திராவிட ஆட்சிதான்என்னதான் குடும்ப ஆதிக்கம் ஊழல் குற்றச்சாட்டுகள் இருந்தாலும் பெயரளவுக்காவது திராவிட இயக்க கொள்களைகளை கலைஞரும் நிறைவேற்றவே செய்தார்

தற்போது ஒதுங்கியுள்ள சைதை துரைசாமி , ஏ சி எஸ் போன்றோர் மீண்டும் களாமாட வரும் சூழலில் திராவிட இயக்கம் மீண்டும் புத்துயிர் பெறும்

Monday, May 27, 2019

கருத்து கணிப்புகளும் பொய்யர்களும்

சாம்பிளிங் என்பது உலகளவில் ஏற்கப்பட்ட அறிவியல் முறையாகும்..

பத்து ஆயிரம் நட்டுகள் ஒரு பட்டறை தயாரிக்கிறது என்றால் அனைத்தையும் செக் செய்வது தே வையற்றது

மாதிரிக்கு சிலவற்றை மட்டும் சோதித்து அதன் அடிப்படையில் ஒட்டு மொத்த தயாரிப்பு குறித்து தெரிந்து கொள்ளலாம்

அதுபோலத்தான் கருத்து கணிப்புகள்...

ஒரு லட்சம் மக்கள் என்ன முடிவு எடுத்தனர் என்பதை 100 பேரிடம் கேட்டு தெரிந்து கொள்ள முடியும்

ஆனால் அந்த 100 ஆட்களை எப்படி தேர்ந்தெ டுப்பது என்பது முக்கியம்

தினகரன் கடசிக்காரர்கள் அதிகமாக வசிக்கும் தெருவில் 100 ஆட்களை கேட்டால் சரியாக வராது

இந்தியாவை பொருத்தவரை இந்த இயல் நன்கு வளர்ந்து விட்டது..

கருத்து கணிப்புகள் துல்லியமாக இருக்கின்றன

பிஜேபியை கடுமையாக விமர்சிக்கும் ஆங்கில இந்து கூட  பிஜேபிதான் வெல்லும் என துல்லியமாக கணி த்தது

ஒவ்வொரு கடசிக்கும் அவர்கள் கொடுத்த வாக்கு சதவிகிதம்கூட வெகு துல்லியமாக இருந்தது

நம் ஆட்களை சிலர் , கருத்து கணி ப்பெல்லாம்  சும்மா.... பங்கு சந்தை சதி.... டிரம்ப் செய்யும் சதி என்றெல்லாம் எந்த ஆதாரமும் இல்லாமல் சொன்னார்கள்..

கருத்து கணிப்பு சரி என தெரிந்த பின்பும் , தாங்கள் சொன்ன பொய்க்கு தார்மிக பொறுப்பு ஏற்கவில்லை

ஒரு கடசி ஜெயிக்க வேண்டும் என நினைக்கலாம்.. ஆத ரிக்கலாம்..   அது ஜன நாயக  உரிமை.

ஆனால பொ ய் சொல்வது  உரிமை அல்ல..    அது எதிர்தரப்புக்கே  நன்மை அளிக்கும்

உதாரணமாக கீழ்க்கணட பொ ய் செய்தியை பாருங்கள்.. அப்பட்டமான பொய்

யாரையும் நம்மால் திருத்த முடியாது.. ஆனால் பொய்யர்களிடம் கவனமாக இருப்பது முடியும்..

---------------------------------------------------------------


மோடியின் ரேடார் விஞ்ஞானம், டிஜிட்டல் கேமிரா, ஈமெயில், இன்றைய பத்திரிக்கையாளர் சந்திப்பு என அவரை மிகக் குறுகிய காலத்தில் மொத்தமாகத் திட்டமிட்டுக் காலி செய்கிறார்கள் என்று தோன்றுகிறது. அவரை மிகப் பூதாகரமாக ஊதிப்பெருக்கியவர்களே இன்று ஏதோவொரு காரணத்திற்காக அந்தப் பிம்பம் சுக்கு நூறாக உடைந்து போக அனுமதிக்கிறார்கள். அதிகாரம், பணம், ஊடகபலம் மிக்க அவர்கள் நினைத்தால் ‘டேமேஜ் கண்ட்ரோல்’ செய்ய முடியும். ஆனால் அப்படிச் செய்யாமல் விளையாடிக் கொண்டிருப்பதன் பின்னணி மே 23க்குப் பிறகு நமக்குப் புரியக் கூடும். Its not just PR disaster!

குளவிகளின் தாகம்


சிறிய குழியின் அடிப்பகுயில் இருந்த ஈரத்தை குளவி"ஒன்று உறிய முனைவதை கண்டேன்,    அதை சற்றே பறக்க செய்து விட்டு குழியை நீரால் நிரப்பினேன்

காத்திருந்தது போல குழியை பாய்ந்து வந்து மொய்த்தன குளவி கூட்டம்

அவற்றுக்கு இவ்வளவு தாகம்"எடுக்கும் என்பதை அறிந்த"நாள்

Sunday, May 26, 2019

நோபல் பரிசு விஞ்ஞானி காலமானார்

Murray Gell-Mann at the World Economic Forum Annual Meeting, 2012. Wikipedia

ஒரு பொருளை சின்னதாக உடைத்தால் அதன் மிகச்சிறிய பகுதி அணு என்பது பலருக்கு தெரியும்..

அணு என்பது மிக சிறியது என்றாலும் அதை விட சிறியது எலக்டாரான் , ப்ரோட்டான் ந்யூட்ரான் என்பதும் தெரியும்

ப்ரோட்டானையும் விட சிறியது இருக்கிறது ...

அதைப்பற்றி பேசும் நுண் அறிவியலில் முக்கியமான  விஞ்ஞானிகளில் ஒருவர் முரே ஜெல் மேன்..

யூத இனத்தை சார்ந்த வந்தேறியான இவர் அமெரிக்காவில் பிறந்தார்.. 24.05.2019 அன்று இருந்தார்

அணுவை விட சின்ன துகளை க்வார்க் என்கிறார்கள்.. இந்த பெயரை சூட்டியவர் இவர்தான்

அடுத்த முறை க்வாண்டம் அறிவியல் நூல்களை படிக்கையில் க்வார்க் என்ற பெயரை பார்க்கும்போது இவரை நினைத்துக்கொள்ளுங்கள்

அவரது ஆய்வுகளுக்காக நோபல் பரிசு பெற்றவர்

ஆள் கலகலப்பானவர்.. சற்றே திமிர் பிடித்தவரோ என எண்ண வைப்பவர்

என்னால் அதிக தூரத்தை பார்க்க முடிகிறது.. காரணம் நான் என் முன்னோர்களின் தோள்களில் நின்று உலகை பார்க்கிறேன் என சிலர் அடக்கமாக சொல்வதுண்டு

இவர் சொல்வது வேறு.. என்னால் மற்றவர்களை விட அதிக தூரத்தை பார்க்க முடிகிறது.. காரணம் மற்றவர்களை விட நான் உயரமானவன்

ஒருவர் புகழுக்கு அவர் பேச்சு அல்ல.. செயலே அளவுகோல் என்ற குறள் விதியின் படி , இவர் தன் ஆய்வுகளால் ஆராய்ச்சிகளால் நினைவுகூரப்படுவார்


பல நூல்களும் எழுதியுள்ளார்

சார். உங்க புக் படிச்சேன்.. அப்படியே விறுவிறுப்பா இருந்துச்சு.. கொஞ்சம்கூட போரடிக்கல என யாராவது என்னிடம் சொன்னால் , அவனுக்கு அல்லது அவளுக்கு அந்த புத்தகம் புரியவில்லை போல என எண்ணிக்கொள்வேன் என்பார் இந்த மேதை

Saturday, May 25, 2019

ராஜிவ் நினைவகமும் ராகுல் விலகலும்

காங்கிரஸ் தோல்விக்கு பொறுப்பேற்று ராகுல் பதவி விலக நினைப்பது சரி என தோன்றவில்லை..

அவர் மிகவும் ஆக்கப்பூர்வமான பிரச்சாரத்தையே முன்னெடுத்தார்...

ஆனால் கூட இருந்தவர்களின் பொறுப்பற்ற பேச்சுகள் , அதீத இந்து எதிர்ப்பு பிரச்சாரத்தால் , இந்து ஓட்டுகளை வலுக்கட்டயமாக மோடி பக்கம் தள்ளியது , மூன்றாவது அணி என்ற பெயரில் சில கட்சிகள் ஓட்டை பிரித்தது போன்றவையே தோல்விக்கு காரணமாகும்

வழக்கமாக காங்கிர்ஸ் மீது பரிவு கொண்ட கேரளா , தமிழ் நாட்டில் காங்க்ரஸ் கூட்டணி வென்றுள்ளது

தெலுங்கானா பிரிப்பு விவகாரம் காரணமாக ஆந்திர மக்கள் காங் மீது கோபமாக இருப்பதால் , அங்கு வெல்ல முடியவில்லை

தெலுங்கானாவை பிரித்து கொடுத்த நன்றியை அவர்கள் காங்கிரஸ் மீது காட்டுவதை விட டிஆர் எஸ் மீது காட்டுவதால் அங்கும் தோல்வியே


இதை எல்லாம் காங்கிரஸ் மாற்ற வேண்டும்

மற்றபடி , காஷ்மீர் முதல் கன்னியாகுமரி முதல் வாக்கு வங்கி கொண்ட காங்கிர்ஸ் மீண்டும் எழும் என்பது உறுதி


காங்கிர்ஸ்காரர்கள் மட்டுமல்லாது அனைவருமே ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ராஜிவ் நினைவகம் செல்ல வேண்டும்


அழகான , அமைதியான , பாதுகாப்பான இடம்...


ராஜிவ் காந்தியின் தியாகம் வீண் போகக்கூடாது

மதச்சார்பின்மை , அறிவியல் வளர்ச்சி , கல்வி போன்ற அவர் கனவுகள் மெய்ப்பட உழைக்க வேண்டும் .. ராகுல் இதை உறுதி செய்ய வேண்டும்

Friday, May 24, 2019

பிஜேபிக்கு நன்றி சொல்லும் திமுக

அ தி மு க பிளவுபடாமல் இருந்து இருந்தால் , அதிமுகதான் வென்று இருக்கும் என்று தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன

பிஜேபி நினைத்து இருந்தால் அதிமுக பிளவை தடுத்திருக்கலாம்

ஆனால் அப்படி தடுத்து இருந்தால் , இன்னும் 20 ஆண்டுகளுக்கு தினகரன் ஒரு வலுவான தலைவராக அசைக்க முடியாத தலைவராகி இருப்பார்.

காங்கிர்ஸ் ஆளும் கட்சியாக இருந்தால், தினகரனை வளர்த்து விட்டு அவரிடம் அதிக சீட்கள் பெற முயன்று இருக்கும்.

ஆனால் வளர்த்து விட்டவர்களை மதிக்கும் பண்பு அரசியலில் அரிது

எனவேதான் தோற்றாலும் பரவாயில்லை என தினகரன் மீது பாராமுகமாகவே இருந்து வருகிறது பிஜேபி

இதன் பலன் தற்போதைக்கு திமுகவுக்கு கிடைத்துள்ளது

எனவே இந்த வெற்றிக்கு திமுக நன்றி சொல்ல வேண்டியது பிஜேபிக்குதான்


உண்மையான திராவிட இயக்கம் எது - அட்டகாசமான தீர்ப்பு தந்த தமிழக மக்கள்


தேர்தல் முடிவுகளை அதிமுக , திமுக , பாஜக , காங்கிரஸ் என அனைத்து அலுவலகங்களிலுமே ஸ்வீட் கொடுத்து கொண்டாடியதை மக்கள் ஆச்சர்யமாக பார்த்தனர் என சில  நாளிதழ்கள் செய்தி வெளியிட்டுள்ளன

இப்படி ஒரு நிலை - அனைவருமே மகிழும்படிதான் தேர்தல் முடிவு இருக்கும் என சொன்ன ஒரே வலைத்தளம் நம் வலைத்தளம்தான் என்பதை தொடர்ந்து படிப்பவர்கள் உணர்ந்திருப்பார்கள்

இப்படி சரியாக கணித்தேன் என்றால் அதற்கு காரணம் , இந்த கட்சி ஜெயிக்க வேண்டும் , இது தோற்க வேண்டும் என்பதெல்லாம் இல்லாமல் , நடு நிலையுடன் மக்கள் எண்ணத்தை கவனித்தேன் அவ்வளவுதான்

எதிர்பார்த்த தேர்தல் முடிவுகள்தான்

உண்மையான திராவிட இயக்கம் எது என்பதற்கான விடையும் கிடைத்துள்ளது


பாராளுமன்ற தேர்தலில் பிஜேபி அணியை தோற்கடித்து இது திராவிட மண் என மக்கள் காட்டியுள்ளனர்

அதே நேரத்தில் , சட்டசபை தேர்தலில் அதிமுகவுக்கு வாக்களித்து , அதிமுகதான் உண்மையான திராவிட இயக்கம் என்பதையும் நிரூபித்துள்ளனர்

அதிமுக மீதான அதிருப்தியாலும் பிளவு காரணமாகவும் எம் ஜி ஆர் விசுவாசிகள் பலர் வாக்களிக்கவில்லை

அப்படி இருந்தும் அதிமுக என்ற பெயருக்காகவே , திராவிட இயக்க பிதாமகன் எம் ஜி ஆரின் மரியாதைக்காகவே வாக்குகள் குவிந்துள்ளன

22 இடங்களில் நடந்த தேர்தலில் ஆட்சிக்கு தேவையான , 9 இடங்களில் அதிமுக வென்றுள்ளது

அது மட்டும் அல்ல.. தோற்ற 13 இடங்களில் நான்கில் திமுகவை விட அதிக வாக்குகள் அதிமுக பிரிவுகளுக்கு கிடைத்துள்ளன


ஆண்டிப்பட்டி

திமுக வெற்றி            - 66 , 310 வாக்குகள்

அதிமுக + அமமுக -  84,518


திருப்பரங்குன்றம்

வென்ற திமுக             - 85 ,376

அதிமுக + அமமுக -  1, 14,116


ஒட்டபிடாரம் 

வென்ற திமுக              - 73,241

அதிமுக + அமமுக       - 82,812


பெரியகுளம்

வென்ற திமுக               - 66,986

அதிமுக + அமமுக       - 72,201


ஆக , 22ல் அதிமுக 13ல் முன்னணி பெற்று திராவிட இயக்கம் என்றால் அதிமுக என காட்டியுள்ளது

பலவீனமான தலைமை , அதிருப்தி , கட்சி பிளவால் பலர் வாக்களிக்க வராமை என்பதை எல்லாம் தாண்டி இத்தனை வாக்குகள் என்றால் , நீட் தேர்வு , ஈழ படுகொலை , ஸ்டெர்லைட் போன்றவற்றில் காங்கிரசின் துரோகத்தை சரியாக மக்களிடம் கொண்டு போய் சேர்க்கும் ஆளுமை திறன் அதிமுகவில் இருந்திருந்தால் 22லுமே வென்று இருக்கும்

ஜெ இருந்திருந்தால் , 22 மட்டும் அல்லாது , பாராளுமனறத்திலும் தனித்து நின்று அனைத்தையும் வென்று இருப்பார் என்பதுதான் 2014 காட்டும் உண்மை

மக்கள் திராவிட இயக்கத்துக்கு ஆதரவான மன நிலையில் இருந்தாலும் அதை ஏற்கும் நிலையில் அதிமுக இப்போதைக்கு இல்லை என்பது வருந்தத்தக்கது


சோனியாவின் காலடியில் தமிழகத்தை வைக்க நினைப்பதை தடுக்கும் பொறுப்பு "திராவிட சிந்தனையாளர்களுக்கு உள்ளது
Thursday, May 23, 2019

அன்றே சொன்னது நடந்துள்ளது- அனைவரும் வென்ற தேர்தல்எங்கள் கட்சிதான் ஜெயிக்கும் என உதார் விடுபவர்கள் பலர் மக்களுடன் பழகுவதில்லை.. எனவே கள யதார்த்தம் தெரியாது

நம்மை பொருத்தவரை , தேர்தல் முடிவுகள் எல்லோருக்குமே மகிழ்ச்சி அளிக்கும்படி கலவையாக இருக்கும் என்பது தெரிந்தே இருந்தது.. அதை முன்பே படித்து இருப்பீர்கள்

அதிமுக , திமுக , காங்கிரஸ் , பிஜேபி என அனைவருமே ஸ்வீட் அளித்து கொண்டாடுகிறார்கள்.. வினோதமான சூழல்தான்

போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் வெற்றி என திமுக மகிழ்கிறது

மா நிலக்கட்சியான் எனக்கு எம் பி தேர்தல் பொருட்டு அல்ல..  சட்டமன்ற இடைத்தேர்தலில் ஜெயித்து விட்டோம்.. இதை விட வேறு என்ன வேண்டும் என அதிமுக மகிழ்கிறது

தமிழகத்தை பொருத்தவரை காங்கிரஸ் நல்ல வெற்றிகளை பெற்றுள்ளது.. அவர்களும் மகிழ்கிறார்கள்

மத்தியில் வென்றுள்ளதால் பிஜேபியும் மகிழ்ச்சியாக உள்ளது

குறிப்பிடத்தக்க வாக்குகளை பிரித்ததால் , அமமுக , கமல் கட்சி , நாம் தமிழர் என அவர்க்ளுக்கும் மகிழ்ச்சியே

தமிழகத்தை ஆளும் தகுதி அதிமுகவுக்குதான் உள்ளது என தீர்ப்பளித்த மக்களுக்கு நன்றி என்கிறார் எடப்பாடி

அபார வெற்றிக்கு நன்றி என்கிறார் ஸ்டாலின்

இப்படி அனைவரையுமே வெல்ல வைத்த தேர்தல் இதுவாக மட்டுமே இருக்க முடியும்

Tuesday, May 21, 2019

பழைய எடைக்கற்கள் இனி செல்லாதா - அறிவியல் அலசல்


ஒரு கிலோ என்பதன் வரையறை மாறி விட்டது என சென்ற பதிவில் பார்த்தோம்.. அப்படி என்றால் இனி பழைய எடை கற்கள் செல்லாதா என்றால் அப்படி அல்ல..  பழைய எடைகள் மாறாது.. ஆனால் வரையறை மாறிவிட்டது


ஒரு கிலோ வெங்காயம் வாங்குகிறோம்.. அது ஒரு கிலோதான் என்பதை கடைக்காரரின் ஒரு கிலோ கல் மூலம் உறுதி செய்கிறோம்.. அவரது கல் ஒரு கிலோதானா என்பதை உறுதி செய்ய ஆய்வுச்சாலைகளில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள ஒரு கிலோ கல்லுடன் ஒப்பிட்டு அறியலாம்..

கடையில் இருக்கும் எடை கல் காலப்போக்கில் எடை குறைந்து விடும் என்பதால் , அதை சோதிக்க ஆய்வுச்சாலைகளில் மாதிரி எடைக்கல் இருக்கும்..

ஆய்வுச்சாலைகளில் இருக்கும் எடைக்கல்லை சோதிக்க , அவற்றை விட இன்னும் பாதுகாப்பான் ஆய்வுச்சாலைகள் உண்டு. இவற்றுக்கெல்லாம் தலைமையகம் ஃபிரான்ஸ் நாட்டில் உள்ளது.. அங்கிருக்கும் கல் ஒரு கிலோ என எதைக்காட்டுகிறதோ அதுதான் உலகமெல்லாம் ஒரு கிலோ

இப்படித்தான் நூறு ஆண்டுகளுக்கும் மேல் இருந்தது

ஆனால் அந்த கல் திருடப்பட்டால் ,.அல்லது எடை குறைந்தால் , கூடினால் என்ன ஆவது?

எனவே பழைய முறையை மாற்றி , இனி பிளாங்க் மாறிலியை அடிப்படையாக கொண்டு எடையை நிர்ணயிக்க முடிவு செய்துள்ளனர்


இதன் மதிப்பு 6.626 069… × 10–34    
 அலகு ஜூல்ஸ் செகண்ட்

இதன் மதிப்பு எடை , மீட்டர் மற்றும் நொடி ஆகியவற்றை சார்ந்தது


மீட்டர் என்பதை ஒளி குறிப்பிட்ட நேரத்தில் கடக்கும் தூரம் என துல்லியமான வரையறை செய்துள்ளார்கள்


ஒரு நொடி என்பதை சீசியம் அணுவை வைத்து அணு கடிகாரத்தை பொறுத்து துல்லியமாக வரையறுது விட்டனர்


மீட்டர் தெரியும்..  நொடி தெரியும்... பிளாங்க் மாறிலியும் தெரியும்.. எனவே மிச்சம் இருக்கும் எடையை சுலபமாக கண்டு பிடிக்கலாம்


மீட்டரோ , நொடியோ மாறப்போவதில்லை என்பதால் , கிலோ என்பதும் என்றைக்கும் மாறபோவதில்லை.. ஒவ்வொரு முறையும் ஃபிரான்சுக்கு சென்று சோதிக்க வேண்டிய அவசியமும் இல்லை என்பதே புதிய வரை முறையின் அனுகூலம்இனி ஒரு கிலோ என்பதன் அர்த்தம் மாறுகிறது

ஒரு கிலோ என்பதை எப்படி நிர்ணயிக்கிறே ாம் ?  கடைககாரரிடம் இருக்கும்  ஒரு கி ே லா எடைக்கல் ஒரு கி ே லா என நினைககி ே றாம்... 
அந்த கல்லின்  எடை சரி தா னா என அவர்கள் அவ்வப் ே பாது  செக் செய்யவேண்டும்...
இதற்கு என  சோதனை நிறுவனங்கள் உண்டு    அவர்கள்  தம்மிடம் உள்ள எடைக்கல்லுடன் ஒப்பிடுவர்
அதை சோதிக்க மாநில அளவில் தேசிய அளவில்  அமைப்புகள்,,உண்டு..,,எல்லாவற்றுக்கும் தலைமையகம், பிரான்சில் உள்ளது.,,அங்கு ஆய்வகத்தில் பாதூகாப்பாக இருக்கும் ஒரு கிலோ கல்தான்  ஒரு கிலோ என்பதற்கான அளவுகோல்
கடந்த,நூறு ஆண்டுகளாக இருந்த இந்த வரையறை தற்போது மாற்றப்பட்டுள்ளது
இனி பிளாங்க்,மாறிலி என்பதை அடிப்படையாக வைத்து கிலோ வரையறுக்கப்படும் (6.626x10 -34)


ஒரு கிலோ கல்

ஒட்டுமொத்த,ராஜினாமா ???

தோல்விகளை ஏற்கும் வழக்கம் இப்போதெல்லாம் எந்த,கட்சியிலும் இல்லை.. 
ஜெ முதல் ராகுல்"வரை யாரும் ஏற்பதில்லை


இந்த நிலையில் பிஜேபி வென்றால்  அதை  ஏற்காமல் நீதிமன்றம் செல்லவும் எதிரணி ஒட்டுமொத்தமாக ராஜினாமா செய்யவும் திட்டமிட்டிருப்பதாக சொல்கின்றனர்.
lets wait and see

Monday, May 20, 2019

ராஜிவ் காந்தியும் மண்டல் கமிஷனும்

இன்று ராஜிவ் காந்தியின் நினைவு தினம்.. அதையொட்டி , அவர் குறித்து கம்யூனிஸ்ட் தலைலவர்களில் ஒருவரும் பத்திரிக்கையாளரும் எழுத்தாளருமான தா . பாண்டியன் அவர்கள் நூலில் இருந்து ஒரு பகுதி

----

அப்போது விபி சிங் பிரதமர். ராஜிவ் எதிர்க்கட்சி தலைவர்.. நான் காங்கிரஸ் கூட்டணியில் இடம்பெற்று அவர்கள் உதவியால் பாராளுமன்ற உறுப்பினராக இருந்தேன்

மண்டல் கமிஷன் குறித்து விவாதம் நடந்து கொண்டு இருந்தது

ராஜிவ் அழுத்தமாக உரையாற்றிக்கொண்டு இருந்தார்

மண்டல் கமிஷன் பரிந்துரைகளை அமல் படுத்துவதில் இருந்த தன் கருத்து வேற்றுமைகளை பேசினார்

எனக்கோ பயங்கர அதிர்ச்சி.. கருத்தியல் ரீதியாக கொள்கை  ரீதியாக காங்கிரஸ் கட்சி மண்டலுக்கு ஆதரவானதுதானே, இப்போதுமேகூட அவர் ஆதரவாக பேசினாலும் , எதிர்த்து பேசுவது போலத்தானே வார்த்தைகள் அமைந்துள்ளன... இது சமூக நீதிக்கு எதிரானனவராக அவரை தோன்றச்செய்யுமே என்றெல்லாம் எனக்கு குழப்பம்

கூட்டம் முடிந்து பாராளுமன்ற உறுப்பினர்களுடன் உரையாடினார்..அனைவருமே அவர் பேச்சை பாராட்டினார்

- பாண்டியன் ஜி..உங்க கருத்தை சொல்லுங்க என்றார்

- சொன்னால் தவறாக எடுத்துக்கொள்ள மாட்டீர்களே என்றேன்

- சொல்லுங்க.. நானாகத்தானே கேட்கிறேன் என்றார்

- மண்டல் கமிஷனை எதிர்ப்பதுபோல உங்கள் பேச்சு இருந்தது...இது தவறு என்றேன்

- இல்லையே.. அந்த கமிஷன் அறிக்கை எனக்கு உடன்பாடுதான்.. ஆனால் அது இப்போது அது கொண்டு வரப்பட்ட நோக்கம்.. கொண்டு வரப்பட்ட விதம் தவறு... நடைமுறைச்சிக்கல்களைத்தானே பேசினேன் என்றார் அவர்

- இருக்கலாம்.. ஆனால் அதை நீங்கள்  எதிர்ப்பதாகத்தான் செய்தி வெளியாகும்...  முதன் முதலாக அரசியல் சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்டது இட ஒதுக்கீடுகாகத்தான்... அதை செய்தவர் உங்கள் தாத்தா நேரு.. மண்டல் கமிஷன் உருவாக்கப்பட்ட்து மொரார்ஜி காலத்தில் என்றாலும் அதை முறைப்படுத்தி துரிதப்படுத்தி மண்டல் அறிக்கையை பெற்றவர் உங்கள் என்னை இந்திரா காந்தி...  இப்படி சமூக நீதியில் அக்கறை கொண்ட பாரம்பரியத்தில் வந்த உங்களை சமூக நீதிக்கு எதிரானவராக சித்தரிக்கும் வாய்ப்பை ஏற்படுத்தி விடாதீர்கள் என்றேன்

- ஆம்.. தவறு நடந்து விட்டது.. திருத்திக்கொள்கிறேன் என்றார் அவர்

அனைத்து காங்கிரஸ் தலைவர்களும் என்னை பாராட்டினர்

இதை நீங்களே சொல்லி இருக்கலாமே என்றேன் நரசிம்ம ராவிடம்

- காங்கிரஸ் கலாச்சாரம் உனக்கு தெரியாது என்றார் அவர் சிரித்தபடியே

தன் கட்சி தயவால் எம் பி ஆனவன் என நினைக்காமல் , எளியவனான என் பேச்சை மதித்த ராஜிவை என்னால் மறக்க முடியாது

---

பிகு....

மண்டல் கமிஷனுக்கு உரிமை கோர வேண்டிய காங்கிரஸ் அதை ம்றந்து விட்டது...  உண்மையான அக்கறையுடன் மண்டல் கமிஷனை அமைத்தவர்கள் மொரார்ஜியும் பிறகு இந்திராவும்.. ஆனால் அரசியல் காரணங்களுக்காக விபி சிங் தான் மண்டல் கமிஷனுக்காக  நினைவுகூரப்படுகிறார்’


Sunday, May 19, 2019

கூடா நட்பு 2.0 -ஸ்டாலின் அதிரடி

கருத்துக்கணிப்புகள் என்பவை அறிவியல்பூர்வமானவை என்றாலும்கூட  , அவை பொய்த்துப்போவதும் நடக்கிறது

ஆஸ்திரேலியா , அமெரிக்கா, பிரிட்டன் போன்ற வளர்ந்த நாடுகளிலேயேகூட , இப்படி பொய்த்துள்ளன

ஆயினும் மக்கள் மன நிலயை அறிய கருத்துக்கணிப்புகள் ஒரு அறிவியல் கருவியாக பயன்பட்டு வருகிறது

நம் ஊரை பொறுத்தவரை , சாதகமான கணிப்பு வந்தால் மகிழ்வதும் பாதகமாக வந்தால் வாக்கு மெஷின் முதல் சம்பந்தப்பட்டவர் குடும்பம் வரை அனைவரையும் திட்டுவது இயல்பு..

2019 தேர்தலில் பிஜேபி வெற்றி என கணிக்கிறார்கள்..

 நமக்கென்னவோ அந்த அளவு வெற்றி சாத்தியமா என தெரியவில்லை.. மெஜாரிட்டிக்கு சற்று குறைவான இடங்கள் பெற்று திமுக தயவு தேவைப்பட்டால் அன்ன ஆகும்?

அதிமுக அரசை கலைக்கிறோம் என உறுதி அளித்தால் , திமுக ஆதரவு கொடுக்கலாம்.. அப்படி கொடுத்தால் , இணைய மொண்ணைகள் கேட்கும் கேள்விகளுக்கு எப்படி பதில் அளிப்பது என ஸ்டாலின் குழம்பலாம்.அவருக்கு நம் ஐடியா

---------------------------

திடீரென பிஜேபிக்கு ஆதரவளிக்க்க முடிவு செய்தது ஏன் ?

ஸ்டாலின் - இது திடீர் உறவல்ல.. ஏற்கனவே வாஜ்பாய் -கலைஞர் காலத்தில் மலர்ந்திருந்து சில எதிரிகள் சதியால் , மறைந்திருந்து , மீண்டும் மலர்ந்து இருக்கும் பாரம்பரியமான உறவுதான் இது

இது சந்தர்ப்பவாத கூட்டணி என்கிறாரே ஓபிஎஸ் ?

இது லட்சியக்கூட்டணியாகும்.. தமிழகத்தின் ஊழல் ஆட்சி ஒழிந்திட , நல்லாட்சி மலர்ந்திட உருவாகியுள்ள லட்சிய உறவு இது

பிஜேபியுடன் பேச்சு வார்த்தை நடத்துவதை நிரூபித்தால் அரசியலை விட்டு விலகுவேன் என சொல்லி இருந்தீர்களே

யாரை மகிழ்விக்க இப்படி கேட்கிறீர்கள் என்பது எனக்கு தெரியும்

திமுக போட்டியிட்ட பெரும்பாலான இடங்களை வென்றுள்ளது,. காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் அதிமுக வென்றுள்ளது...  காங்கிரசுடன் கூட்டணி வைக்காமல் தனித்து நின்றிருந்தால் நல்லது என்ற கருத்து குறித்து ?

உங்கள் கேள்வியிலேயே பதில் உள்ளது

இந்திய அளவில் காங்கிரசின் படுதோல்வி குறித்து ?

இனப்படுகொலை நிகழ்த்திய காங்கிரசை மன்னிக்க மக்கள் ஒன்றும் சோற்றால் அடித்த பிண்டங்கள் அல்ல என்பதையே முடிவுகள் காட்டுகின்றன..எனவேதான் காங்கிரஸ் நட்பை கூடா நட்பு என கலைஞர் குறிப்பிட்டார்.. மேலும் திமுக இருக்கும் இடத்தில் மதவாதம் இருக்காது என்றும் அவரே சொல்லி இருக்கிறார்..அந்த அடிப்படையில் பிஜேபி திமுக உறவு மலர்ந்துள்ளது

ஆனால் அதிமுக ஆட்சியை கலைக்க வலியுறுத்துவது சுயாட்சிக்கு எதிரானது ஆகாதா?

ஏற்கனவே இப்படி ஒரு முன்னுதாரணத்தை ஏற்படுத்தியவ்ர்களும் அதை ஏற்றுக்கொண்டவர்களும் அவர்கள்தான்


Saturday, May 18, 2019

சினிமா உலகம் கண்டு வரும் மாற்றம்எழுபதுகளில் வெளியான பாடல்கள் வரவேற்பு பெறாததற்கான காரணங்களை அலசினோம் அல்லவா...

எம் எஸ் வி , கே வி மகாதேவன் போன்றோர் எழுபதுகளில் சூப்பரான பாடல்கள் கொடுத்திருந்தாலும் பெரும்பாலான பாடல்கள் பிரபலமாகவில்லை

அதே போல பல எழுதுபதுகள் நாயகர்களும் பெரிய் அளவில் சோபிக்கவில்லை

என்ன ட்விஸ்ட் என்றால் விஜயகுமார் சிவகுமார் போன்றார் எழுதுபதுகளில் எண்பதுகளில் சோபிக்காவிட்டாலும் , பிற்கால வாழ்க்கையில் பிரபலத்துவம் எய்தினார்கள்... குறிப்பாக விஜயகுமார் தந்தை வேடங்கள் , வில்லன் வேடங்கள் என ஸ்டார் அந்தஸ்து பெற்றார்..

சிவகுமாரோ சினிமாவை தாண்டி புகழ் பெற்றார்

ஜெய்கணேஷ் தொலைக்காட்சியில் பிரபலமாக இருந்தார்

முத்துராமனுக்கு இந்த வாய்ப்பெல்லாம் கிடைக்கவில்லை... சீக்கிரமே இறந்து விட்டார்...

அவர் மகன் கார்த்திக் ,  தந்தையை மிஞ்சி புகழ் பெற்றார்.. ஆனால் , தந்தைக்கு பெருமை சேர்க்காத வகையில் அவரது பிற்கால செயல்பாடுகள் அமைந்து வருகின்றன


எண்பதுகளில் ரஜினி கமல் சத்யராஜ் விஜயகாந்த் பிரபு கார்த்திக் ஆகிய சிலரே ஆதிக்கம் செலுத்தினர்..

ஆனால் இன்று இன்னிலை மாறி ஆரோக்கியமான சூழல் உள்ளது

ரஜினி , கமல் , அஜித் , விஜய் , சிம்பு  , தனுஷ் , ஆர்யா , சூர்யா , கார்த்தி , ஜெயம்ரவி என எல்லோருக்குமே ஸ்டார் அந்தஸ்து இருப்பது ஆச்சர்யம்,

குறிப்பிட்ட சிலர் கைகளில் பட உலகு சிக்காமல் எல்லோரும் வாழ்வது நல்லது

 

Friday, May 17, 2019

பாவப்பட்ட 70S- மறக்கப்பட்ட பாடல்கள்


எம் ஜி ஆர் , சிவாஜி , ஜெமினி பாடல்களை அவ்வப்போது கேட்கிறோம்..

கேட்டதுமே பாடலை அடையாளம் காண முடியும்..

ஆனால் எழுபதுகளில் வந்த பல பாடல்களை நம்மால் அடையாளம் காண முடியாது

எழுபதுகளிலும் சிவாஜி எம் ஜி ஆர் நடித்தாலும் பெரும்பாலான படங்கள் ஜெய்கணேஷ்  , முத்துராமன்,  விஜயகுமார் , சிவகுமார் நடித்த பட்ங்களாகும்

இவர்கள் மாஸ் நடிகரகள் இல்லை என்பதால் , இந்த படங்கள் பெரிய அளவில் பேசப்படுவது இல்லை .. 

சிவாஜி நடித்த 70கள் படங்கள் பலவும்கூட அவர் ரசிகளாலேயே கூட பேசப்படுவது இல்லை


ஆக , 70கள் என்பது ரஜினி கமல் யுகம் ஆரம்பமாவதற்கும் , சிவாஜி எம்ஜிஆர் யுகம் முடிவதற்கும் இடைப்பட்ட காலம் என்பதால் , நட்சத்திர பலம் இல்லாத காலமாகி விட்டது...

பல அற்புதமான பாடல்கள் இந்த கால கட்டத்தில் வந்துள்ளன.. ஆனால் மேற்சொன்ன காரணத்தால் பிரபலமாகவில்லை

----

இன்றைய ஆன்மிக சிந்தனை

காஞ்சி பெரியவர்

வட மொழியில் கூட்டெழுத்துகளை தமிழில் பிரித்து எழுதுகிறோம்.. க்ரு ஷ்ணா என்பதை கிருஷ்ணா என்கிறோம்.. அங்கே க்ரு என ஒரே எழுத்தாக வருகிறது.. க் முதலில் வரக்கூடாது என்பதால் கி என எழுதுகிறோம்

புரோகிதர் என்பது ப்ரோகிதர் என்பதன் தமிழ் வடிவம் என சிலர் நினைக்கிறார்கள்

இல்லை.. அது புரோகிதர்தான்

புரோ என்றால் முன்பு.. இதம் என்றால் நல்லவற்றை சொல்லுதல்

தீங்கு வருவதற்கு முன்பே , நல்லவற்றை சொல்லி வழி நடத்துபவர்தான் ப்ரோஹிதர்

Tuesday, May 14, 2019

இலக்கியமும் துணை நூல்களும்


பல முக்கியமான இலக்கிய நூல்களை நன்கு புரிந்து கொள்ளும் பொருட்டு ரீடர் என துணை நூல்கள் வெளியாகும்.. அதைப்படித்தால் அந்த இலக்கிய நூல் குறித்த ஆழமான பார்வை கிடைக்கும்..

இது கோனார் நோட்ஸ் போன்ற விளக்க உரை அன்று,  ஆழமான பார்வையை தரும் முயற்சி.. டொனால்ட் பார்த்தெல்மே போன்றோர் சிறுகதைகளை புரிந்து கொள்ள இது உதவும்

ரேமண்ட் கார்வர் , கதீட்ரல் என ஒரு கதை எழுதி இருக்கிறார்.. யாராவது விளக்கினால்தான் அந்த கதையின் அழகு தெரியும்,,  இலக்கிய மேடைகளில் இது போன்ற கதைகளை , ஒரு மணி நேரம்கூட அலசுவார்கள்.. அது போன்ற நிகழ்ச்சிகளுக்கு செல்ல முடியாதவர்களுக்கு துணை நூல்கள்தான் உதவுகின்றன

தமிழில் மூல நூல்களே விற்பனைக்கு தடுமாறும் சூழலில் துணை நூல்களுக்கான தேவை இல்லாதிருந்தது,, ஆனால் இன்று படித்தவர்கள் அதிகமாக உருவாகும் சூழலில் வாசிப்பு அதிகமாகி உள்ளது.. எனவே துணை நூல்களும் வெளியானால் நல்லதுதான்

ஆனாலும் இப்படிப்பட்ட துணை நூல்கள் அவ்வப்போது வந்து கொண்டுதான் உள்ளன

சில ஆண்டுகளுக்கு முன்பு வெளியான , கி ராஜ்நாரயணனின் எழுத்துலகம் என்ற நூலை ஓர் உதாரணமாக சொல்லலாம்

பிரேம் ரமேஷ் தொகுப்பில் வெளியான நூல் இது.. கிராவின் சிறுகதை , நாவல் , குறு நாவல் என அனைத்து எழுத்துகளையும் பற்றிய ஒரு குறுக்கு வெட்டுப்பார்வையை நூல் அளிக்கிறது

கிரா வை எப்படி புரிந்து கொள்வது ,.எப்படி அணுகுவது , பின் நவீனத்துவ சூழலில் வட்டார வழக்கு கதைகளின் இடம் என பல விஷயங்களை ஓர் ஆழமான கட்டுரையில் விளக்கி இருக்கிறார்கள் பிரேம் ரமேஷ்

என்னதான் எழுத்துலக துரோகிகள் என்றாலும் அவர்களது படைப்பாற்றலை குறைத்து மதிப்பிட முடியாது


அவர்களது துரோகத்தை மதிப்பிட்டு தண்டனை அளிப்பது இயறகையின் வேலை..

நம வேலை அவர்கள் படைப்பாற்றலை  மதிப்பிடுவது மட்டுமே..

அந்த வகையில் இது சிறப்பான நூல் எனலாம்

கி ராஜ் நாரயாணன் எழுத்துலகம் - பிரேம் ரமேஷ்

Monday, May 13, 2019

அரிய ரகசியத்தை சொல்லும் நாவல் - இலக்கிய அலசல்


இப்படி ஒரு நடு நிலையான அரசியல் மற்றும் சமூக விமர்சன நாவலை படித்து எத்தனை நாளாகிறது என்ற வியப்புதான் பூரண சந்திர தேஜஸ்வியின் -சிதம்பர ரகசியம் என்ற கன்னட நாவலை படிக்கும்போது ( நான் படித்தது  பா கிருஷ்ணசாமியின் தமிழ் மொழி பெயர்ப்பு  ) ஏற்படுகிறது

இஸ்லாமியர் இந்துக்கள்  தலித் பிராமணர்கள் பிற்படுத்தப்பட்டோர் அரசூழியர்கள் காட்டுவாசிகள்  ஆன்மிகவாதிகள் பகுத்தறிவுவாதிகள்
என யாரையுமே விட்டு வைக்கவில்லை.. அவ்வளவு ஏன் ,.. எழுத்தாளர்களையுமே விட்டு வைக்கவில்லை.. அனைவருமே கேலி செய்யப்படுகின்றனர்

கர் நாடகத்தின் ஒரு கிராமத்தில் நடக்கிறது கதை.. ஏலக்காய் ஆய்வு மையத்தின் தலைவர் ஜோகிஹல் கொல்லப்பட்டு இருக்கிறார்.. அவர் ஏன் கொல்லப்பட்டார்... ஏலக்காய் உற்பத்தியை நிர்ணயிக்கும் காரணி எது என்பதை துப்ப்றிய ( ? ) ஷியாம் நந்தான் அங்காடி என்ற உளவுத்துறை அதிகாரி அந்த ஊருக்கு வருகிறார்...

அந்த ஊரில் ஒரு கல்லூரி இருக்கிறது...மாணவர்கள் பகுத்தறிவு இயக்கம் நடத்துகின்றனர்... ( டாக்டர் கோவூர் நாவலில் அவ்வப்போது வருகிறார் )

அந்த ஊரில் ஏற்படும் இஸ்லாமிய செல்வாக்கை ஒடுக்க இந்துக்கள் போட்டியாக மந்திரங்கள் ஓதுகின்றனறனர்

 என்ன ட்விஸ்ட் என்றால் பகுத்தறிவு இந்துயிசம் இஸ்லாமியிசம் என எதுவுமே அந்த்தந்த சித்தாங்களுக்குமே உண்மையாக இருப்பதில்லை.. எல்லோருக்குமே ஒரு சுய நல செயல்திட்டம் இருக்கிறது.. அதற்கு ஒரு முகமூடியாக சித்தாத்தங்களை பயன்படுத்துகின்றனர்

கிருஷ்ண கௌடா என்பவர் வீட்டின் மீது இரவில் கற்கள் விழுகின்றன.. சாதி பிரச்சனையா. வர்க்கப்பிரச்சனையா... காதல் விவகாரமா.. பேயா ... கற்களுக்கு எது காரணம் என யாருக்கும் புரியவில்லை


ஜோகிஹல் இறந்து விட்டார் என்பதற்கு என்ன ஆதாரம் என்று ஒரு பிரச்சனை வேறு கிளம்புகிறது

உண்மை என்பது என்ன .., நடப்பதா அல்லது பலரும் சொல்வதா என்ற விவாதங்கள் நடக்கின்றன

இய்றகையை மனிதன் இப்படி அழித்துக்கொண்டே சென்றால் என்ன ஆவது என்ற கேள்வியும் பிறக்கிறது..


கொலையாளி யார்.. கற்களை வீசியது யார் என்ற ரகசியங்களை கண்டு பிடிக்கும் முன் காதல் விவாகரத்தை முன் வைத்து ப்ழைய பகைகளை தீர்த்துக்கொள்ள கலவரம் தூண்டி விடப்படுகிற்து

அறிவி ஜீவிகள் , பணக்காரர்கள்  வியாபாரிகள் என அனைவரும் அதில் சிக்கிக்கொள்ளும்போது அதில் இருந்தெல்லாம் விலகி உயர்ந்த ஒரு இடத்தில் நிற்கின்றனர் இந்த பிரச்சனைகளுக்கு காரணமான காதலர்கள்

இப்படி கவித்துவமாக முடிகிறது நாவல்

இப்படி முடிந்தால் அது சினிமாட்டிக்.. ஆனால் இந்த காதலையுமே கூட கேலிதான் செய்கிறார் நாவல் ஆசிரியர்.

உண்மையில்  அது காதலே அல்ல.. வெறும் வயதுக்கோளாறு என்பதை சொல்லி , காதல் என்பதை புனிதப்படுத்தாமல் பார்த்துக்கொள்கிறார்

ஆக  , என்ன சொல்ல வருகிறார் என்பது பூடகமாகவே விடப்பட்டுள்ளது


மதங்கள் , இசங்கள் , நம்பிக்கைகள் , நம்பிக்கை இன்மைகள் , பகை , காதல் என எல்லாமே இயற்கை தன் வளர்ச்சிக்காக மனிதனை ஆடச்செய்ய பயன்படுத்தும் கருவிகள்தான் என்ற உண்மைதான் சிதம்பர ரகசியமோ என தோன்றுகிறது

உதாரணமாக , கோடிப்பேரை கொல் என சொன்னால் நாம் கொல்ல மாட்டோம்.. உன் சாதிக்கு  மொழிக்கு இனத்துக்கு மதத்துக்கு எதிரி அவர்கள் என நம்மை தூண்டினால் கோடி மக்களை கொல்வோம்...


இதைத்தான் நாவல் சொல்கிறது என சொல்லவில்லை.. இப்படி பல சிந்தனைகளை தூண்டுகிறது நாவல்

படித்துப்பாருங்கள்

சிதம்பர ரகசியம் - பூர்ண சந்திர தேஜஸ்வி

Sunday, May 12, 2019

சோற்றால் அடித்த பிண்டங்கள்- ரசிகர்களுக்கு தோனி கடிதம்

ஐபிஎல் ஃபைனலில் சென்னை அணி தோல்வி அடைந்தது தெரிந்ததே...

ஆனால் இது குறித்து தோனி எழுதிய கடிதம் பலருக்கு தெரியாது ..

அவர் கடிதம் பின்வருமாறு

---------------------------

உடன் பிறப்பே

இன்றைய தினம்
ஆரிய அணியான மும்பை அவர்க்ளாக ஒரு போட்டி நடத்தி அவர்களாகவே அம்பயரிங் செய்து அவர்களாகவே முடிவை அறிவித்த கேலிக்கூத்தை பார்த்திருப்பாய்.
148 ரன்கள் எடுத்த அந்த அணிக்கு 20 கோடி பரிசாம்.. ஒரு ரன் குறைவாக எடுத்த நம் அணிக்கு ஒரு ரூபாய் -அல்லது ஒரு லட்ச ரூபாய்- குறைத்து கொடுப்பதுதானே சரியாக இருக்க முடியும்... ஆனால் நமக்கு அதில் பாதி ரூபாய்தான் கொடுத்துள்ளனர்..

ஒட்டு மொத்த போட்டிகளை கணக்கில் கொண்டால் , நம் அணிதான் அதிக ரன்களை பெற்றுள்ளது

சென்ற ஆண்டு போட்டிகளை விட , சற்றொப்ப 3% அதிக ரன்களை பெற்றுள்ளது

அஃதன்னியில் அதிக விக்கெட்டுகளும் கைப்பற்றியது நம் அணிதான்..

ஸ்கோர் போர்டுகளை முன்பு போல கைகளால் எழுதும் முறையும் , எடுக்கும் ரன்களுக்கேற்ப விகிதாச்சார பரிசு பகிர்வும் நடை முறைக்கு வந்தால் சென்னை அணிதான் வெல்லும் என நாம் சொல்லாவிட்டாலும் நடு நிலையாளர்கள் சொல்ல மாட்டார்களா

இது போன்ற அபத்தமான விதிகள் இருக்கும் வரை இனியும் போட்டிகளில் கலந்து கொளவ்தா என்பதை பொதுக்குழு விவாதிக்கும்

இதை தட்டிக்கேட்காத ஹைதரபாத் டெல்லி அணிகள் இப்படி சோற்றால் அடித்த பிண்டங்கள் ஆகி விட்டார்களே அன வருந்தத்தான் முடியும்

அன்புடன்

தோனி

Friday, May 10, 2019

பாடல் அனுபவம் - கண்ணதாசன் சிவாஜிசில அனுபவங்களை குறிப்பிட்ட காலத்தில் பெற்றால்தான் உண்டு.. இல்லையேல் நிரந்தரமாக அதை இழந்து விடுவோம்..


அப்படிப்பட்ட அனுபவங்களில் ஒன்றுதான் சிவாஜி எம் ஜி ஆர் படங்களை திரையரங்குகளில் அந்தந்த ரசிகர்கள் மத்தியில் பார்ப்பது


சின்னஞ்சிறு வயதில் இந்த படங்களை அப்படி பார்த்தது மங்கலாக நினைவில் இருக்கிறது

கல்லூரி கால கட்டத்தில் நிறைய படம் பார்த்தேன்... அப்போது ப்ழைய பட்ங்கள் மறு வெளியீடாக புத்தம் புதிய காப்பியாக திரையிடப்படும் சூழல் இருந்தது

இப்போதெல்லாம் புதிய படங்களுக்கே கூட்டம் வருவதில்லை.. அப்போது பழைய படங்களைக்கூட திரளாக ரசிப்பார்கள்

அப்படிப்பார்த்த படங்களில் ஒன்றுதான் தெய்வ மகன்... சிவாஜி நடிப்புக்கு முகபாவத்துக்கு ரசிகர்களின் கைதட்டலுடன் படம் பார்த்தது நல் அனுபவம்..

இனி அவ்வனுபவம் கிடைக்க வாய்ப்பில்லை.. பழைய படங்கள் திரையிடப்படுவது அரிது.. தாத்தா காலத்து சிவாஜி ரசிகர்களோ நம் மாமாக்கள் கால ரசிகர்களோ படம் பார்க்க வருவதும் அரிது

எனவே அரிய அனுபவமாகவே அப்படம் பார்த்த்தை கருதுகிறேன்

கேட்டதும் கொடுப்பவனே கிருஷ்ணா கிருஷ்ணா பாடலை வெகுவாக ரசித்தார்கள்.. நானும் ரசித்தேன்

தினத்தந்தியில் அப்பாடல் குறித்து கண்ணதாசன் மகனான அண்ணாதுரை கண்ணதாசன் எழுதியுள்ளார்

தாமரை உயரம் தண்ணீர் அளவு
உள்ளத்தளவே உலகளவு
காவிரி ஆறு கரைபுரண்டாலும்
காக்கைக்கு தேவை மூக்களவு”''
 

இதுதான் கண்ணதாசன் முதலில் எழுதிய வரிகள்.. அனைவருக்கும் பிடித்து விட்டது.. ஆனால் பணியாளர் ஒருவர் புரியவில்லை என சொல்லி விட்டாராம்.. உடனேயே அதை மதித்து , புதிதாக கண்ணதாசன் எழுதிய பாடல்தான் கேட்டதும் கொடுப்பவனே பாடல்

கலைஞர் மனம் கவர்ந்த போராளி சபாரத்தினம்

 ஒரு காலத்தில் தமிழகத்தில் ஈழ விடுதலைப்போரின் முகமாக தமிழகத்தில் இருந்தது டெலோ இயக்கம் தான்...  தன்னுடைய பாலைவன ரோஜாக்கள் படத்தில் நாயகனின் பெயருக்கு கலைஞர் சூட்டிய பெயர் சபாரத்தினம்

சிறீ சபாரத்தினத்தை கௌரவிக்கும் வகையில் அந்த பெயரை சூட்டி இருந்தார்

எம் ஜி ஆர் விடுதலைப் புலிகளை ஆதரித்தார்

அப்போது எம் ஜி ஆர் முதல்வர் என்பதால் விடுதலைப்புலிகளுக்கு பொருளதவி செய்ய முடிந்தது,,, விளைவாக புலிகள் மற்ற இயக்கங்களைவிட பலம் பெற்றனர்.. ஒரு கட்டத்தில் மற்ற இயக்கதவரை கொல்ல ஆரம்பித்தனர்...


சபாரத்தினம் என் சகோதரர் போன்ற்வர் ..அவரை ஒன்றும் செய்யாதீர்கள் என்ற கலைஞரின் வேண்டுகோளையும் மீறி அவரை கொலை செய்தனர் புலிகள்


ஒரு வேளை சபாரத்தினம் சாகாமல் இருந்திருந்தால் ஈழ தீர்வு விரைவில் ஏற்பட்டு இருக்கலாம்

அதன் பின் கால மாற்றங்களால் அவரை எல்லோரும் மறந்து விட்டார்கள்போல என நினைத்தேன்

ஆனால் அவர் கொலை செய்யப்பட்ட நினைவு நாளை ஒட்டி பரவலாக சுவரோட்டிகளை பார்க்கும்போது ஆச்சர்யமாக இருந்தது

எந்த கட்சிகள் ஆதரவும் இன்றி மக்கள் தன்னிச்சையாக இப்படி ஒரு போராளிக்கு மரியாதை செய்வது ஆச்சர்யம்தான்

போராளிகள் புதைக்கப்படுவது இல்லை... விதைக்கப்படுகின்றனர்

Thursday, May 9, 2019

காலச்சுவடு இதழும் மகேந்திரனும்


இம்மாத இலக்கிய இதழ்களில் காலச்சுவடு சிறப்பாக அமைந்துள்ளந்து


தலையங்கள் , இலம்ங்கை குண்டு வெடிப்பு குறித்த களந்தை பீர் முகம்மது அவர்களின் நடு நிலை பார்வை , சிறுகதைகள் என தரமான இதழாக வெளி வந்துள்ளது

குறிப்பாக மகேந்திரன் குறித்த இரண்டு கட்டுரைகளும் சிறப்பு

பெரும்பாலான பத்திரிக்கைகளில் உதிரிப்பூக்கள் , முள்ளும் மலரும் போன்ற சில படங்களை வைத்து எழுதி இருந்தனர்...

கை கொடுக்கும் கை , அழகிய கண்ணே , சாசனம் என எல்லா படங்களையும் பார்த்து அ முதல் அஃ வரையிலான பார்வையை பதிந்துள்ளது சிறப்பாக இருந்தது

குறிப்பாக கை கொடுக்கும் கை படத்தில் குத்தாட்டாம் , ஹீரோயிச சண்டை என மகேந்திரன் பாணியில் இருந்து வெகுவாக விலகி இருக்கும்.. ஆனால் ரஜினி படமாகவும் இராது...   ஏன் இந்த குழப்பம்  நேர்ந்தது என தன் நூலில் மகேந்திரன் சொல்லி இருப்பார்

ஆனால் விமர்சகனுக்கு விளக்கங்கள் தேவை இல்லை.. படத்தை விமர்சிப்பதுதான் அவன் வேலை.

அந்த வகையில் பாரபட்சமின்றி விமர்சித்துள்ளனர்

அதை நான் ஏற்கவில்லை என்றாலும் அதன் நேர்மையை சந்தேகிக்கவில்லை


மொத்தத்தில் இம்மாத தேர்வு - காலச்சுவடு

Tuesday, May 7, 2019

ராமானுஜர் - குரு துரோகமும் நடு நிலை தரிசனமும்

ராமானுஜருக்கு சின்ன வயது முதலே ஆன்மிக தேடல் இருந்தது

உரிய குருவை தேடலானார்... அவருக்கு கிடைத்த பலரும் போலி குருவாகவே இருந்தனர்

கடைசியில் திருக்கோஷ்டி நம்பிகள்தான் உரிய குரு என உணர்ந்தார்..


அவரை அணுகினார்... அவரோ இவரை ஏற்கவில்லை...

விடாமல் தினமும் அவரை அணுகினார்.. கடைசியில் குரு மனம் இளகினார்..

உன் விசுவாசம் உன்னை ரட்சித்தது என இயேசு சொல்வது போல உன் தேடல் உன்னை காத்தது என கூறி மகிழ்ந்த குரு , அவருக்கு மந்திர தீட்சை அளித்தார்...  இந்த மந்திரத்தை யாருக்கும் சொல்லக்கூடாது...சொன்னால் மீளா நரகம் அடைவாய் என்றார்  குரு,.

எவ்வளவு இனிய மந்திரம்.. எவ்வளவு சுகம்,, இதை எல்லோரும் அனுபவிக்கட்டுமே ... நாம் நரகம் போனால்தான் என்ன என நினைத்த ராமானுஜர் கோபுரம் மீதேறி எல்லோருக்கும் கேட்கும்படி மந்திரத்தை சொன்னார்

குரு கண்ணீர் வடித்தார்...  தேடல் இல்லாதவர்களுக்கு இப்படி சும்மா பொதுக்கூட்டம் போல சொன்னால் என்ன பயன் கிடைக்கும்.. சும்மா இந்த காதில் வாங்கி அந்த காதில் விட்டு விடுவார்கள்...  தேடி வருபவனுக்கு , அவனை நன்கு சோதித்த பின்பே உபதேசம் அளிக்க வேண்டும்...   நான் ஒரு ராமானுஜனை உருவாக்கியதுபோல , உன்னால் உருவாக்க முடியாமல் போய் விட்டது பார்... ஆயிரம் பேருக்கு சொன்னாய்.. என்ன பயன் என்றார் குரு

ராமானுஜருக்கு தன் தவறு புரிந்தது..

 நரகம் போவாய் என மிரட்டாமல் விளக்கமாக குரு சொல்லி இருக்கலாமே என நினைத்துக்கொண்டார்


மறைத்து வைப்பதாலும் பயனில்லை... சும்மா பிரச்சாரம் செய்தும் பயனில்லை... நடு நிலை தேவை என்ற ஞானம் பிறந்தது


இறை வேறு ,, பக்தன் வேறு என்பது ஒரு பார்வை

நானே இறைவன் என்பது ஒரு பார்வை

 நடு நிலையான ஒரு பார்வையை இவர் பிரபலமாக்கினார்.

நீ இறை அம்சம்தான்... உன்னை அறிந்தால் இறையை அறியலாம்தான்.. ஆனா நீ கடவுள் அல்ல... கடவுளை அடைய வேண்டிய கடவுளின் துளி நீ என்றார்


இந்த பார்வை  பிரபலமானது


குரு துரோகம் செய்தாலும் , அவர் நோக்கம் நல்லது என்பதால் , புகழ் பெற்றார்

ஆனாலும் குரு பேச்சை மீறினால் உருவாகும் தீமைகளை கண்களால் காணும் அனுபவமும் பெற்றார்.. அதுதான் குரு சொன்ன மீளா நரகமோ...

ராவணன் சீதைக்கு அண்ணனா? - இலக்கிய பார்வை

ராமர் சீதை லட்சுமணன் ஆகிய கதாபாத்திரங்களை அடிப்படையாக கொண்டு எண்ணற்ற ராமாயணங்கள் எழுதப்பட்டுள்ளன..   இலக்கிய ரீதியாக உச்சம் தொட்ட கம்ப ராமாயணமும் , ஆன்மிக ரீதியாக உச்சம் தொட்ட வால்மீகி ராமாயணமும் பலருக்கும் தெரியும்.. ஆனால் மற்ற ராமாயண வடிவங்களும் உள்ளன

புலவர் குழந்தை அவர்களின் ராவண காவியம் இது போன்ற மாற்று ராமாயண வடிவங்களில் உண்டு..  மொழி ஆளுமைக்காக இது முக்கியத்துவம் பெற்று நினைவு கூரப்படுகிறது


இதன் கதை சுருக்கம்

ராவணன் ஒரு தமிழ் மன்னன்.. நிர்வாகம் , வள்ளல்தன்மை , காதல் , அன்பு , தனி மனித ஒழுக்கம் போன்றவற்றில் சிறந்தவன்

ஆரியர்கள் செய்யும் வேள்விகள் தமிழ் மரபுக்கு எதிராக இருப்பதாக கருதி தாடகை போன்ற தமிழ் அரசிகள் அதை தடுக்க முயன்று ராமனால் கொல்லபடுகிறார்கள்..


சீதையுடன் காட்டுக்கு வரும் ராமன் , ராவணனின் தங்கையை கொன்று விடுகிறான்

ராமனுக்கு பாடம் புகட்டும் பொருட்டு , சீதையை கடத்துகிறான் ராவணன்.. கடத்திவந்து , ஒரு அண்ணன் போல அன்புடன் அவளை பார்த்துக்கொள்கிறான்..

ராமன் தனது கொலைகளுக்கு மன்னிப்பு கேட்டால் போதும்.. உரிய மரியாதையுடன் சீதையை விட்டு விடுவதாக சொல்கிறான்

ஆனால் ராமன் ஒப்புக்கொள்ளவில்லை.. போர் நடக்கிறது.. ராவணன் சூழ்ச்சியால் வெல்லப்படுகிறான்

அதன் பின் சீதையுடன் இணையும் ராமன் , ஒரு கட்டத்தில் அவள் மீது சந்தேகப்பட்டு காட்டுக்கு அனுப்பி விடுகிறான்

எளிமையான இந்த கதை எவ்வகையிலும் கம்ப ராமாயணத்துடன் ஒப்பிடத்தக்கது அல்ல..  ராமனை புகழும் பொருட்டு காவியம் எழுதிய கம்பர் ராமனின் சிறுமையையும் ராவணனின் மேன்மையையும் நடு நிலையுடன் சொல்கிறார்..

ஆனால் இந்த நூலில் முழுக்க முழுக்க ராவணன் புகழ் பாடப்படுகிறது...


ஆனாலும் ராவணன் கெட்டது செய்ததில் ஒரு நியாயம் உள்ளது என வாதிடாமல் , கதையையே சற்று மாற்றி , ராவணனை சீதைக்கு அண்ணன் ஆக்கி இருப்பது ஒரு எழுத்தாளராக புலவர் குழந்தைக்கு பெருமைதான்.. மொழி ஆளுமையும் அபாரம்


வெறும் பிரச்சார கதைதான் என்றாலும் , வெறும் அவதூறுகளை மட்டுமே நம்பி எழுதும் பல எழுத்துகள் மத்தியில் , இந்த கதை வித்தியாசப்படுகிறது

கம்ப ராமாயணம் கடல் என்றால் ராவண காவியம் என்பது ஸ்பூன் தண்ணீர்

ஆனால் வேறு பல ராமாயண அவதூறுகள் ஸ்பூன் தண்ணீர் என்றால் ராவண காவியம் என்பது ஏரி தண்ணீர்


Sunday, May 5, 2019

ஷத்ருக்கனனும் ராமாயணம் தரும் தத்துவ விளக்கமும்


ஆயிரம் ராமன்கள் வந்தாலும் ஒரு பரதனுக்கு ஈடாகாது என்கிறார் ராமர்..

லட்சுமணன் ராமர் கூடவே இருப்பவன்...

சரி.. அப்படி என்றால் சத்துருக்கனின் முக்கியத்துவம் என்ன?

வரம் கார்ணமாக ராமன் காட்டுக்கு செல்கிறான்.. பரதன் நாட்டை ஆள்கிறான்...   சீதையை லட்சுமணன் , அனுமன் துணையால் மீட்டு மீண்டும் சக்கரவர்த்து ஆகிறான் ராமன்

இதில் சத்ருக்கணன் கேரக்டர் வரவே இல்லை என்றாலும் , பரதன் ஆட்சி செய்தல் , ராமன் மீண்டும் முடி சூடுதல் போன்ற ஒவ்வொரு நிகழ்ச்சியும் சத்துருக்கனன் மூலமாகவே ந்டக்கிறது.. அனைத்தையும் செயல்படுத்துபவன் அவனே..

இது ஒரு புறம் இருந்தாலும் , ராமாயாணத்தை  தத்துவ ரீதியாக அணுகும் ஆனந்த ராமாயணம் போன்றவற்றில் இதற்கு வேறு ஒரு விளக்கம் தரப்பட்டுள்ளது

சுசுப்தி  , சொப்னம் , ஜாக்ரத , துரியம் என நான்கு நிலைகளாக பிரஞ்ஞையை பகுத்துள்ளனர்

துரியம் என்பது முழு விழிப்பு நிலை... இதன் வெளிப்பாட்டு வடிவம்தான் ராமன்..


சுசுப்தி என்பது தான் என்ற உணர்வு உருவாகாத  நிலை.. மனமற்ற நிலை... மனம் என்பது இல்லை என்பதால் துக்கமும் இல்லை.. அழிவும் இல்லை.. சாஸ்வத நிலை... இதன் வெளிப்பாடுதான் ஷத்ருக்கனன்

சொப்னம் என்பதில் பிரஞ்ஞை இருக்கும்.. ஆனால் நான் என்பது இருக்காது.. மரம் செடி கொடி விலங்குகள் எல்லாம் இந்த நிலைதான்,,,,   நான் என்பது இல்லாமல் செயல்பட்ட பரதன் இந்த நிலையில் வருகிறான்

ஜாக்ரத என்பது விழிப்புணர்வு பெற்ற நிலை.. நன்மை தீமை குழப்பங்கள் உருவாகும் நிலை இது.. லட்சுமணன் இந்த நிலைதான்


ஜாக்ரத என்ற விழிப்புணர்வு மனிதனுக்கு அருளப்பட்டு இருந்தாலும் அதை மழுங்கடித்துக்கொள்ளத்தான் தினமும் அன்றாடம் பாடுபடுகிறோம்... பொழுது போக்குகள் , மது , ஸ்மார்ட் போன் என இதற்காக செலவழிக்கிறோம்...


சுசுப்தி என்ற நிலை நல்லதுதான்.. ஆனால் அதை நம்மால் ஈட்ட முடியாது.. என்னதான் முயன்றாலும்  நாம் குழந்தையாக முடியாது.

ஆனால் துரியம் என்ற புத்த நிலையை நம்மால் அடைய முடியும்.. அதற்கு முயற்சி தேவை

 நம் ஆழ் மனம் விரும்புவதும் இதைதான்... ஆனால் அதற்கான உழைப்பை கொடுக்க விரும்பாமல் சொப்ன நிலையை அடைய முனைகிறோம்...

இபப்டி தேவையின்றி நம் ஆற்றலை வீணடிப்பதற்கு பதில் விழிப்புணர்வை சரியாக பயன்படுத்த வேண்டும் என்பதே ஆன்மிக நூல்கள் தரும் செய்திFriday, May 3, 2019

தேர்தல் முடிவுகள் - மாமாக்கள் , அண்ணன்கள் , சித்தப்பாக்கள் கணிப்பு

ஒவ்வொரு தேர்தலின் போதும் சில சித்தப்பாக்கள் , மாமாக்கள் , ஒன்று விட்ட அண்ணன்கள் களத்தில் குதிப்பார்கள்..

இவர்கள் பெரும்பாலும் அதிமுக அல்லது திமுகவை சேர்ந்தவர்களாக இருப்பார்கள்.
ஆனாலும் நடு நிலைமையுடன் கட்சி சார்பற்று துல்லியமாக தேர்தல் முடிவுகளை கணிப்பார்கள்..

எப்படி என்றால் , அந்த மாமா திமுக காரர் என்றால் , ஊரே திமுக வெல்லும் என்று சொன்ன தேர்தலில்கூட திமுக வாஷ் அவுட் ஆகும் என சரியாக கணித்திருப்பார்.. அடுத்த தேர்தலில் திமுக ஜெயிக்கும் என்பதையும் சரியாக சொல்லி இருப்பார்...

குறைந்த வித்தியாசத்தில் திமுக் ஆட்சியை இழக்கும் என்றும் சொல்லி இருப்பார்..
\
அந்த தகுதியின் அடிப்படையில் இப்போது திமுக ஜெயிக்கும் என்பார்..

ஒரு வேளை அதிமுக மாமா என்றால் கடந்த கால தேர்தல்களில் அதிமுக தோல்விகளை சரியாக சொல்லி இருப்பார்... இப்போது அதிமுக ஜெயிக்கும் என்பார்.

மாமாக்கள் பிரச்சனை என்னவென்றால் கடந்த கால கணிப்புகள் சரியாக இருக்கும்... தற்போதைய கணிப்புகள் பொய்யாகி விடும்... ஆனால் அது குறித்து விளக்கம் சொல்ல அவர்கள் இருக்க மாட்டார்கள்..

இம்முறை அண்ணன்கள் , மாமாக்கள் கணிப்பு என்ன... பதிவு செய்வோம்.. தேர்தல் முடிந்ததும் விளக்கம் கேட்போம்
------

திமுக 37 தொகுதிகளில் வெல்லும்.. மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும்

--------

தந்தி பாண்டே கணிப்பு


திமுக 25  அதிமுக 15   மத்தியில் பிஜேபி

---------------------------


சூதாட்ட கிளப் கணிப்பு

பிஜேபி கூட்டணி - 300 சீட்டுகள்

----

பார்ப்போம்.. யார் கணிப்பு பலிக்கும் என சில நாட்களில் தெரியும்
Thursday, May 2, 2019

திட்ட சொல்லி ரசித்த பெரியார்


பெரியாரை மேடை தோறும் கடுமையாக தாக்கி பேசி வந்தவர் காங்கிரஸ் இயக்கத்தை சேர்ந்த சின்ன அண்ணாமலை

ஒரு நாள் இருவரும் நேருக்கு நேர் சந்திக்கும் சூழல் வந்தது

சின்ன அண்ணாமலைக்கு தர்ம சங்கடம்

ஆனால் பெரியார் சகஜமாக ஜாலியாக பேசினார்

- கதைகள் சொல்லி கலகலப்பாக பேசுவீர்களாமே... அப்படித்தான் பேச வேண்டும் என்றார் பெரியார்

- ஆமாம் அய்யா.. ஆனால் பெரும்பாலும் உங்களை தாக்கித்தான் பேசுவேன் என்றார் சின்ன அண்னாமலை

- அதனால் என்ன... எதுவுமே யாருமே விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவர்கள் அல்ல என்றுதானே நான் பிரச்சாரம் செய்து வருகிறேன்... கடவுளையே விமர்சிக்கலாம் என்பதுதானே என் கருத்து... எனவே என்னை விமர்சிப்பதை நான் ஏற்கிறேன்.. இன்னும் சொல்லப்போனால் , என் முன்னிலையே என்னை நீங்கள் விமர்சிக்க வேண்டும்.. அதை நான் ரசிக்க வேண்டும்... விழா ஒன்று ஏற்பாடு செய்துள்ளோம்.. வந்து பேசுங்கள் என்றார் பெரியார்

அந்த பெருந்தன்மையில் திகைத்த சின்ன அண்ணாமலை வேறு வழியின்றி ஏற்றுக்கொண்டார்

கருஞ்சட்டை தொண்டர்கள் முன் , பெரியார் முன்னிலையில் பெரியாரை தாக்கி பேசினார்

பெரியார் புன்னகையுடன் ரசித்தார்

திக தோழர்கள் அமைதியாக எந்த பிரச்சனையும் செய்யாமல் கேட்டனர்

பேச்சு முடிந்து விடை பெறும் போது , அன்பு பரிசாக பத்து ரூபாய் அளித்து விடை கொடுத்தார் பெரியார்


இந்த பெருந்தன்மையை அப்படியே பதிவு செய்து தன் மேன்மையை காட்டியுள்ளார் சின்ன அண்ணாமலை

மேதைகள் , பெரியோர்கள்  வாழ்ந்த மண் இது

Wednesday, May 1, 2019

இறைவனின் ஐந்து நிலை - ஆன்மிக அல்சல்

இறை என்பதன் ஐந்து நிலைகளை வைணவ இலக்கியம் இப்படி சொல்கிறது

பூகதஜலம்போலே அந்தர்யாமித்வம்

ஆவரண ஜலம்போலே பரத்வம்

பாற்கடல்போலே வியூகம்

பெருக்காறு போலே விபவம்

அதில்

தேங்கின மடு போலே அர்ச்சாவதாரம்

----

இதற்கு எளிமையாக பொருள் காண்போம் ( மரபார்ந்த பொருள் அறிய வைணவ நூல்களை அணுகலாம் )


நமகு தாகமாக இருக்கிறது.. தண்ணீர் தேடுகிறான்.. ஏனப்பா தேடுகிறாய்.. உன் காலடியிலேயே தண்ணீர் இருக்கிறது.. தோண்டிப்பார் என யாரேனும் சொன்னால் , அவர்கள் சொல்வது போல நிலத்தடி நீர் இருப்பது உணமை என்றாலும் , எப்போது தோண்டி எப்போது குடிப்பது..   உடனடி தாகத்துக்கு நிலத்தடி நீர் உதவாது...  அது போல இறை என்பது உனக்குள் உள்ளது என்ற தத்துவம் உடனடி பயனை தராது...

இறையை உணர மட்டுமே முடியும் என்பது இந்த நிலை


உலகை சுற்றிலும் கடல் உள்ளது என்பது போல உன்னை சுற்றி இருப்பது எல்லாம் இறை வடிவமே என்பது இரண்டாவது நிலை...

இறை என்பதற்கு ஓரளவு வெளிப்படையான நிரூபணம் உள்ளது என்பது இந்த நிலை... கடல் உலகை சுற்றி இருந்தாலும் அதுவும் உடனடி தாகத்துக்கு உதவாது


பாற்கடல் போல , பாலை பார்ப்பது போல , உணரலாம் , பார்க்கலாம் என்ற நிலை மூன்றாவது... இதுவும் உடனடியாக உதவாது


ஆற்று வெள்ளம் போல , உணரலாம் பார்க்கலாம்,, தொடலாம் .. என்பது அடுத்த நிலை... இது ஓரளவு சிலர் தாகம் தீர்க்கும்..  ராமர் கிருஷ்ணர் பரமபிதா அல்லா என்பது இந்த நிலை....

நிலத்தடி நீர் , ஆற்று நீர் போன்றவை முறைப்படி சேகரிக்கப்பட்டு வீட்டு குழாயில் வருகிறது அல்லவா... இதை பார்க்கலாம் உணரலாம் முகரலாம். குடிக்கலாம்...   இதுதான் ஐந்தாம் நிலை

அவதாரங்கள் அல்லது மகான்கள் என்பது இந்த நிலை...  இயேசு , குணங்குடி மஸ்தான் , விசிறி சாமியார் , ரமணர் , சாய் பாபா , காஞ்சி மகான் என எண்ணற்றோரை சொல்லிக்கொண்டே போகலாம்...  நபிகளை இந்த வரிசையில் வைப்பதை இஸ்லாம் ஏற்காது.. நபி என்பவர் இறைவனின் தூதர் மட்டுமே , மகான் என்றெல்லாம் பூஜிக்கலாகாது என்பது இஸ்லாம் .. ஆனாலும் புனித நூலான குர் ஆன் இப்படி நேரடியாக அனுபவிக்கும் நிலைக்கு உதாரணமாக சொல்லலாம்...


நேரடியாக என்னுள்ளே என்னை தேடுகிறேன் என்றாலும் ஓகேதான்... மகான்கள் மூலம் அனுபவிக்கிறேன் என்றாலும் ஓகேதான்வாஷ் அவுட் ஆவதில் விஞ்சி நிற்கும் கட்சி காங்கிரசா - பிஜேபியா : அலசல்

காங்கிரஸ் வாஷ் அவுட் ஆகும் மா நிலங்கள் ஓகே.. பிஜேபிக்கு இது நிகழாதா ..ஏன் காங்கிரசை மட்டும் எழுதுகிறீர்கள்.. இது நடு நிலையா என சில கேட்கிறார்கள்

சில ஆண்டுகள் முன்பு வரை , பிஜேபி உத்தர்பிரதேசத்தில் மட்டும் வெல்லும் கட்சியாக இருந்தது..  மற்ற எல்லா  மா நிலங்களிலும் வாஷ் அவுட்தான். ஆனால் காங்கிரஸ் எல்லா மா நிலங்களிலும் செல்வாக்குடன் இருந்தது.. எனவேதான் காங்கிரஸ் வாஷ் அவுட் ஆவதை வருத்தத்துடன் பார்த்தோம்..

ஓகே... ஒரு ஒப்பீட்டுக்காக இரண்டு கட்சிகளையும் பார்ப்போம்

ஆந்திரா -  இரண்டு கட்சிகளும் வாஷ் அவுட்

தெலுங்கானா - இரண்டுமே அவுட்

மேற்கு வங்கம் - காங்கிரஸ் அவுட்.. பிஜேபி முதல் முறையாக இரண்டாம் இடம் வெல்ல இருக்கிறது.. மம்தா முதலிடம்

ஒரிசா - இங்கும் காங்கிரஸ் அவுட்.. முதல் முறையாக பிஜேபி இரண்டாம் இடம்வெல்ல இருக்கிறது.. நவீன் முதலிடம்


பஞ்சாப் - காங்கிரஸ் முதலிடம்.. பிஜேபி வாஷ் அவுட் ஆக வாய்ப்புண்டு

பிஹார்-   பிஜேபி முதலிடம்..    காங்கிரஸ் அவுட்

கேரளா - காங்கிரஸ் வெற்றி ,,பிஜேபி வாஷ் அவுட் ஆகக்கூடும் ( அப்படியே வென்றாலும் ஓரிரண்டு வெல்லலாம் )

டெல்லி - பிஜேபி வெற்றி.. காங்கிரஸ் வாஷ் அவுட்


பல வட இந்திய மா நிலங்களில் இரண்டும் முதல் இரண்டு இடங்கள் பெறும். கர் நாடகத்திலும் முதல் இரு இடங்கள்
தமிழகத்தில் இரண்டுமே கொஞ்சம் கொஞ்சம் சீட்டுகள் பெறும்


Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா