Wednesday, June 30, 2010

பதிவர் உண்மை தமிழன் பெயரில் கோயில்!!!!! - நிதி உதவி தேவை

ஒரு வாரம் ஒரு வேலையாக லீவு எடுத்து இருந்தேன்... அந்த வேலை ஒரே நாளில் முடிந்து விட்டதால், வேறு என்ன செய்வது என தெரியவில்லை.. போர் அடித்தது..

ஆர்வமூட்டும் அளவுக்கு சினிமா எதுவும் ரிலிஸ் ஆக வில்லை.. ராவணன் இரு முறை பார்த்து தொலைத்தாகி விட்டது..

இந்த நிலையில் , திட்டக்குடி என்ற படத்தை பற்றி அண்ணன் கேபிள் சங்கர் எழுதிய விமர்சனம் ஆரவத்தை தூண்டியது.. நெகடிவாக எழுதி இருந்தாலும், பிட் பட ரேஞ்சுக்கு அவர் வர்ணித்து எழுதிய அழகு , மனதை கொள்ளை கொண்டது..

ஆனாலும், ஒரு பிட் படத்தை பார்க்க அவ்வளவு தூரம் போக வேண்டுமா என்ற சோம்பலும் இருந்தது...

அப்போதுதான், நண்பர் உண்மை தமிழன் , அவருக்கே உரிய அழகுடன், படம் இலக்கியத்தரம் வாய்ந்தது , சிறுகதை போல இருக்கிறது என்றெல்லாம் எழுதி இருப்பதை பார்த்தும், ஆர்வம் அதிகமானது...

இருவர் வெவ்வேறு விதமாக சொல்வதால், எதுதான் உண்மை என தெரிந்து கொள்ளும் ஆர்வம் ஏற்பட்டதற்கு என்னை குறை சொல்ல முடியாது... எனக்கு இந்த வாரம் வேறு வேலை எதுவும் இல்லை...

எனவே கிளம்பினேன் , படத்துக்கு....

அட ஆண்டவா...

எல்லோரும் எதோ கத்தி கொண்டே இருப்பது போல தோன்றியதே தவிர, நான் எதிர்பார்த்த காட்சி எதுவும் வரவில்லை.... ஒன்றும் வித்தியாசமக இல்லை... எல்லா படங்களிலும் இருப்பதுதான்...

சுருக்கமாக சொன்னால், நம்ம டேஸ்டுக்கு இல்லை...

இலக்கியம் மாதிரியும் இல்லை... அட ஆண்டவா..

இந்த படத்தை பொறுமையாக பார்த்து , இதை இலக்கியம் என்று வேறு சொன்ன , நண்பர் உண்மை தமிழனுக்கு , கோயில் கட்டி கும்பிட உத்தேசித்து இருக்கிறேன்...

அனைவரும் நிதி உதவி செய்யுமாறு, பணிவுடன் கேட்டு கொள்கிறேன்...

இந்த கோயிலில் வழிபட்டால், சகிப்பு தன்மை, எதையும் தாங்கும் இதயம் போன்றவை கிடைக்கும்...

Tuesday, June 29, 2010

தியான பயிற்சி வகுப்புகளுக்கு செல்வது ஏமாற்றத்தில் முடிவது ஏன் ? - ஜே கிருஷ்ணமூர்த்தியுடன் ஒரு கலந்துரையாடல்


அந்த சாமியார் சரி இல்லை..இன்னொரு சாமியாரிடம் போய் தியானம் கற்க போகிறேன் என எழுத்தாளர் சாரு நிவேதிதா சொன்னதும் ஆச்சர்யம் ஏற்படவில்லை.. நாம் எல்லோரும் செய்வதுதான் இது..

தியான வகுப்புகளுக்கு செல்வது என்று பேஷன் ஆகி விட்ட சூழ் நிலையில், இதை பற்றி, நம்ம ஜே கிருஷ்ணமூர்த்தி என்ன சொல்றார்னு பார்ப்போம்..

அவருடன் ஒரு விவாதம்

( பல ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது இது.. இன்னும் பொருத்தமாக இருக்கிறது... )

**************************************************************************


Q: சார். எல்லோரும் தியானம் , யோகா எல்லாம் பண்றாங்க.. கிளாஸ் எல்லாம் போறாங்க

எனக்கும் இதை பத்தி தெரிஞ்சுக்க ஆசிய இருக்கு,, .. தியானம் னா என்ன?

K: சார், தியானம் பான போறேன்னு சொல்லிட்டு தியானம் செய்ய முடியாது.. நேத்து அரை மணி நேரம் தியானம் செஞ்சேன் ,, சுபர இருந்துச்சு னு சொன்னிங்கன்னா, நீங்க ஒன்னும் பண்ணலைன்னு அர்த்தம்.

Q: என் உணர்வே இல்லாம தியானம் செஞ்சேன் சார்.. எதோ ஒரு சொல்லில் அடங்காத அமைதி கிடைத்தது..இது தியானமா ?

K: சார், நான் சொன்னதை கவனிசீங்களா ?

Q: ஆமா , சார்

K: தியானத்தை நீங்க செய்யவே முடியாது... அதன் அழகு உங்களுக்கு புரியாமல், செயற்கையாக எதையாவது செய்யலாம்.. அனால் தியானம் அப்படி அல்ல ..

Q: முயற்சி செய்றேன்

K: சரி,,, ஏன் தியானம் செய்யணும்... ?

Q: கோபமா இருக்கேன்னு... கஷ்டத்துல இருக்கேனா , தியானம் செஞ்சா , மனம் அமைதி ஆகும்

K: இது தியானம் அல்ல.. கோபத்தை கட்டு படுத்துதல்..

Q: ஆனாலும் இது பயன்படுதே , சார்

K: ஆமா,, ஆமா.. பயன் மிக்கதுதான்.. அனால் இதை தியானம் என சொல்ல வேண்டாம் .

Q: ஆனால் கண் மூடி உட்கார்ந்தா, நல்ல இருக்கே !!

K: நீங்க தியானம் செய்றேன்னு உட்கார்ந்தா, அது தியானம் அல்ல.. இதை ஏற்க கஷ்டமா இருக்கலாம்..ஆனா இதுதான் உண்மை

Q: சார், என்னை துரத்தும் எண்ணங்களில் இருந்து, நான் செய்யும் தியானம் என்னை காப்பாத்துது.. என் கவலைகளை மறக்க செய்யுது

k : ஓஹோ..எண்ணங்கள் இல்லாம போகணும்.,,,, கவலை மறக்கணும்... இதற்கு தியானம் தேவை இல்லையே .. ஒரு சினிமாவுக்கு போனால் போதுமே ..ஹா ஹா ..Q: சார், தீவிர யோசிப்பின் மூலம்தான் உண்மையை அறிய முடியுமா?

K: எண்ணங்களின் தன்மை அறிந்து கொள்ளும்போது, எண்ணம் தனக்குரிய இடத்தில் தன்னை வைத்து கொள்ளும்... எண்ணமே இருக்க கூடாது எனபது இல்லை.. அதற்கு என இடம் உண்டு.. இந்த தெளிவு இருந்தால், தியானம் என்ற பெயரில் எதையாவது செய்து, மனதின் என்ன ஓட்டத்தில் இருந்து தப்பிக்க வேண்டி இருக்காது..

Q: இந்த நிலைதான் தியான நிலையா?K: ஹா ஹா ...மூச்சை கட்டு படுத்துவது, மந்திரம் சொல்வது, இதெல்லாம் தியானம் இல்லை.. இந்த பயிற்சி செய்தால் , தியான வகுப்பில் கலந்து கொண்டால், மிக பெரிய அனுபவம் கிடைக்கும் , கடவுள் தரிசனம் கிடைக்கும் என்றெல்லாம் சில சாமியார்கள் சொல்ல கூடும்.. சில பயிற்சிகளையும் சொல்லி தர கூடும்...

இந்த பயிற்சிகளை செய்யும் போது, ஒரு வித அமைதி கிடைக்கும், சில அனுபவங்கள் கிடைக்கும்..

" அப்பாட,,கடைசியில் எனக்கு எதோ கிடைத்து விட்டது..இந்த சாமியார் என்னை ஏமாற்றவில்லை என நினைத்து கொள்கிறீர்கள்.. இல்லையா?

ஆனால் இது எல்லாமே மனதின் தந்திரம்தான். மனதின் இந்த இயல்பை புரிந்து கொண்டால், மனதை அதற்குரிய இடத்தில் வைக்கும் ஆற்றல் கிடைக்கும். இல்லை என்றால், மனதின் பிடியிலேயே சிக்கி கொண்டு, ஒவ்வொரு "தியான " முறையாக செய்து பார்த்து ஒவ்வொரு அனுபவமாக பெரும் விளையாட்டில் சிக்கி கொள்வீர்கள்..

Q: எண்ணமே இல்லாத நிலைதான் உயர்ந்த நிலையா.. ?

K: எண்ணமே இல்லாத நிலை அம்னீசியா . ஹா ஹா

Q: சைக்கோ அனலிசிஸ் , ஒருவகை தியானமா ?

K: ரொம்ப மோசமா போய்க்கிட்டு இருக்கு... சைக்கோ அனலிசிஸ் என்பது மனதை ஆராயும் மனோ தத்துவ முறை... மனம் என்பது மனமே ஆராயும் வினோத நிலை இது... கூட்டு பயிற்சி என்றெல்லாம் பல பயிற்சிகள் இருக்கின்றன... இதெல்லாம் தியானம் என சொல்ல முடியாது..

பாருங்கள்.. தியானம் என்ற விஷயத்தை எவ்வளவு காமடி ஆக்கி விட்டார்கள் . ஹா ஹா

Q: என்னத்தை ஆராயாமல், சும்மா ஒரு சாட்சியாக பார்க்க சொன்னிர்கள்.. இதில் எண்ணம் இல்லையா... மனம் ஈடுபடவில்லியா?

K: கவனிப்பவர் என யாரும் இல்லாமல், கவனிப்பு மட்டும இருக்க வேண்டும்.. சரி தவறு என எண்ணத்தை பிரிக்க வேண்டாம்.. எந்த அர்த்தமும் கொடுக்க வேண்டாம்... அப்போது நான் என்ற உணர்வு இருக்காது..

Q: எவ்வளவு நேரம் இப்படி செய்ய வேண்டும்? எந்த திசையை நோக்கி அமர வேண்டும்? என்ன சாப்ட வேண்டும்? எந்த நேரத்தில் செய்ய வேண்டும்...இதை பற்றி எல்லாம் சொல்லுங்க சார்

K: இப்படி எல்லாம் முறை படித்தி செய்தால், அது தியானமே அல்ல... நான் சொன்னதை நீங்கள் கவனிக்கவே இல்லை ...

Q: நீங்க எப்ப தியானம் பண்ண ஆரம்பிசீங்க?

K: ஏற்கனவே சொல்லிட்டேன்.. திரும்பவும் கேட்கறீங்க.. தியானம் பண்ண யாரும் தீர்மைத்து விட்டு பண்ண முடியாது.. அப்படி செய்தால் அது தியானம் அல்ல.. வேறு யாரும் சொல்லி தந்து பண்ணுவது தியானம் அல்ல.. ஒரு முறையை பின் பற்றுவது தியானம் அல்ல.. ஒரு குருவோ சாமியாரோ சொல்லி தந்ததை செய்வது , பொழுது போக உதவும்..ஆனால், அது தியானம் அல்ல.

Q: சார் .. தன்னந்தனியா போகும் போது, அழகான பூ ஒன்றை பார்த்து என்னையே நான் மறக்குறேன்.. பாத்து நிமிடம் கழித்த பின் சுய நினைவுக்கு திரும்புகிறேன்..தினமும் அந்த பூவை பரற்கும் போது அதே அமைதி கிடைக்கிறது... இது தியான நிலையா?K: இல்லை

Q: நமக்குள் ஆத்மா என ஒன்று இருக்கிறது... இது எதனாலும் பாதிக்கப் படாது..

K: இதெல்லாம் மனதின் கற்பனைதான்... இப்படி திட்டவட்டமாக , ஆத்மா இருக்கிறது - இல்லை, கடவுள் இருக்கிறார்- இல்லை , என நினைத்தால், உண்மையை உணர முடியாது...

சரி, இவ்வளவு நேரம் பேசியதை பற்றி சுருக்கமமாக சொல்லி முடித்து கொள்ளலாமா ?

Q: சரி.

K: எண்ணம் என்பதற்கும் தியானம் என்பதற்கும் உள்ள உறவை விவாதித்தோம்... எண்ணத்தை கட்டு படுத்துவது தியானம் அல்ல என பார்த்தோம்..

ஒரு குறிப்பிட்ட குருவை பின்பற்றி அவர் சொல்வத்தை செய்வது, மனதுக்கு மகிழ்ச்சியை தரும்... உடலுக்கும் கூட சுகமாக இருக்கலாம்.. ஆனால் இதுவெல்லாம் தியானம் அல்ல. .. இது எல்லாமே மனதின் விளையாட்டுதான்..

லவ் என்ற விஷயத்தில் மட்டும் தான் நான் என்ற உணர்வு இல்லாமல் போகிறது...

திட்டமஈட்டு தியானம் செய்யும் கிடைக்கும் காட்சிகள் எல்லாம் மனதின் மாய தோற்றங்கள் தான்.

உங்களுக்கு உண்மையிலேயே ஆர்வம் இருந்தால், தியானம் என்பதை கண்டு பிடிக்க முடியும். எண்ணம் , சிந்தனை, ஆசை எல்லாவற்றிற்கும் உரிய இடம் இருக்கிறது.. அதனோடு சண்டை போட வேண்டாம்.

அந்த நிலையில் , உண்மையான தியானம் என்பது கிளாஸ் சென்று கற்று கொள்ளும் விஷயம் அல்ல என்பது புரியும்.

மனதில் அன்பு இருந்தால், அன்பு மிக்க சமுதாயம் உருவாகும்.. அது இல்லாமல், நான் தியானம் செய்தேன் என சொல்வதில் அர்த்தம் இல்லை .. எதனை ஆசிரம் சென்றாலும், எத்தனை சாமியார்களை பார்த்தாலும் பயன் ஒன்றும் ஏற்பட போவதில்லை...

நிதர்சனம் என்ற உண்மை நிலை வேறு , உண்மை என்பது வேறு..

Monday, June 28, 2010

ஓஷோவையே நடுங்க வைத்த சிந்தனை உலக தீவிரவாதி !!!


நாம் பல புத்தகங்கள் படிக்கிறோம்.. பலரடன் பேசுகிறோம்.. சிலரை படிக்கும் போது , மகிழ்ச்சியாக இருக்கும்... நாம் தேடிய ஒன்று கிடைத்தது போல இருக்கும்...

நான் யு ஜி கிருஷ்ணமுர்த்தியை படித்ததும் எனக்கு வருத்தமாக இருந்தது... இத்தனை நாள் இவரை பற்றி படிக்காமல் இருந்து விட்டோமே என்று...

பரபரப்பு பதிவரான நண்பர் செந்தில்தான், யு ஜி அவர்களை பற்றி சொல்லி , படிக்க சொன்னார்.. அவரை நன்றியுடன் நினைத்து கொண்டேன்...

நாம் பார்த்த சிந்தனையாளர்களில், யு ஜி கிருஷ்ண முர்த்தி முற்றிலும் வேறு பட்டவர்.. சிந்தனை உலக தீவிரவாதி என்றே சொல்லலாம்.. எதற்கும் கட்டுப்படமாட்டார்... அடி பணிய மாட்டார்..

ஓஷோ புத்தகங்கள் அனைத்தையும் படித்தவர்களுக்கு தெரியும்... அவர் புத்தி சாலிதான்.. ஆனால் நேர்மையானவர் அல்ல..

ஜே கேயை பொறுத்தவரை, நேர்மையானவர் என்ற போதிலும், அவர் கருத்துக்களை யார் வேண்டுமானாலும் தங்களுக்கு ஏற்ப பயன்படுத்தி கொள்ளும் வகையில், கருத்துக்கள் இருக்கும்.. அவரை குறை சொல்ல வில்லை... அவர் நியாயமாக சொல்லி இருந்தாலும், சில வார்த்தைகள் குழப்பமான அர்த்தம் தருவதால் இந்த நிலை...

அவர் கடவுள் இல்லை என்று சொல்கிறார் என சிலரும், ஆன்மா, மறு பிறப்பு, கடவுள் என எல்லாவற்றையும் ஏற்கிறார் என சிலரும் எளிதாக நிருபிக்கும் வகையில் சில வார்த்தைகள் இருக்கும் ...

உண்மையில் அவர் இரண்டுக்கும் அப்பாற்பட்டவர்...

ஆனால், யு ஜி கிருஷ்ணமுர்த்தியை பொறுத்தவரை, அவர் கருத்துக்கள் தெளிவாக, எளிமையாக இருக்கும்... எனவே வேறு யாரும் அதை அவர்களுக்கு ஏற்றவாறு மாற்ற முடியாது..

இன்னொன்று, அவரை பற்றி தெரிந்து கொள்வதற்கே, ஓர் உயர்ந்த மனநிலை தேவை.. அது பலருக்கு இருக்காது என்பதால், அவர் கருத்துக்கள் அதே உண்மைத்தன்மையுடன் நீடித்து வருகின்றன,, என்றுமே அப்படித்தான் இருக்கும்...

" நான் எதையும் புதிதாக சொல்ல போவதில்லை... நான் சொல்வதற்கு காப்புரிமை எதுவும் இல்லை... தேவை பட்டால், நான் சொன்னதை , நீங்களே கண்டுபிடித்து சொன்னதாக வேண்டும் என்றாலும் சொல்லிக் கொள்ளுங்கள் " என்ற அவர் அலட்சியமாக சொல்வது நம்மை வியக்க வைக்கிறது...

இந்த ஆன்மிக வாதிகள் பண்ணும் பந்தா இருக்கிறதே... அதை எல்லாம் எதிர்த்து நின்றவர் அவர்....

உண்மை நிலை இருக்கிறது...மோட்சம், தன்னை அறிதல் என்றெல்லாம் இருக்கிறது.. அது எல்லோருக்கும் புரியாது என்றெல்லாம் படம் காட்டுவார்கள்...

அவர்களை எல்லாம் பார்த்து பயந்து விடாதே என்ற உற்சாகத்தை அளிப்பவர்தான் இவர்...

உலகத்தையே கலக்கியவர் ஓஷோ... ஒரு கட்டத்தில் அவர் சீடர்கள், கிருஷ்ணமுர்தியின் பேச்சை கேட்டு, மனம் மாற தொடங்கினர்..

பயந்து போன ஓஷோ, தன சீடர்கள் யாரும் , கிருஷ்ணமுர்த்தியை பார்க்க கூடாது என அறிவிப்பே வெளியிட்டார்.. வேறு யாருக்கும் அவர் இப்படி பயந்ததாக சரித்திரம் இல்லை...

கற்பனையான ஒன்றில் உன் சக்தியை வீணடிக்காதே... ஒரு பூவை பார்த்து ரசிக்க முடிகிறதல்லவா.. அதே போல எதையும் உணரும் ஆற்றல் உன்னில் இருக்கிறது .. வேறு யாருடைய தயவும் உனக்கு தேவை இல்லை என்று சொல்லும் அவரை பற்றி சொல்ல நிறைய இருக்கிறது...

அவ்வப்போது பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்...

ராவணன் - தவறு செய்வது மணிரத்னமா , விமர்சகர்களா

மணி ரத்னம் என்றால் நல்ல படமாகத்தான் இருக்கும், என நினைத்து ராவணன் படம் சென்றேன். நல்ல ஆரம்பம்.. நல்ல ஒளி பதிவு என்று சென்றது.

அஜித் நடித்த வாலி போல , பர பரப்பான கதை களம் .. விறு விறுப்பாக இருக்கும் என நினைத்தால், பயங்கரமாக போர் அடித்தது... எந்த விதத்திலும் நன்றாக இல்லாததால் ஆழ்ந்து கவனிக்கவில்லை.. அதை பற்றி எழுதவும் இல்லை,. ( கொஞ்ச நேரம் தூங்கி தொலைத்து விட்டேன் !! )

அதன் பின் பதிவர்களின் விமர்சனம் பார்த்தேன்.. (இப்போதெல்லாம், பத்திரிக்கைகளின் விமர்சனத்தை விட பதிவர்களின் விமர்சனம் தான் நேர்மையாக இருக்கிறது... )

அனைவருமே, சினிமா என்ற முறையில் பார்க்காமல், பழம்குடியினரை இழிவு படுத்துகிறார், வீரப்பன் கதை , முதலாளிகளின் கைபிள்ளை ஆகி விட்டார் என்றெல்லாம் சொல்வவதை பார்த்து ஆச்சர்யமாக இருந்தது..

ஒரு பெரிய பிரசினை எடுத்து கொண்டு, மொன்னையாக தீர்வு சொல்லி இருக்கிறார். பிரச்சினையை தட்டையாக அணுகி இருக்கிறார் என்றெல்லாம் பலர் எழுதியாக போது, மணி ரத்னம் எதற்காக தீர்வு சொல்ல வேண்டும்..இது ஒரு முக்கோண காதல் கதை தானே என்று தோன்றியது.

பதிவர்கள் தவறாக விமர்சிக்கிறார்களா அல்லது மணிரத்னம் மேல் தவற என புரியவில்லை...

நாம்தான் படத்தை சரியாக பார்க்கவில்லை போல என நினைத்து மீண்டும் ஒரு முறை நேற்று பார்த்தேன்..

ஞாயிற்று கிழமை , எந்த குப்பை படம் என்றாலும் கூட்டமாக இருக்கும்.. ஆனால் , நேற்று ராவணம் படம் ஓடும் எந்த தியேட்டரிலும் கூட்டம் இல்லை...

இன்னொரு முறை பார்த்த போதுதான், ஒரு நல்ல கதையை வீணடித்து இருக்கிறார் என புரிந்தது...

ராமாயணன், ஒடுக்கப்பட்டோர், முதலாளித்துவம் என்றெல்லாம் குழப்பாமல் , ஒரு ஆகஷன் படமாக எடுத்து இருக்கலாம்..
அல்லது, ராமயணத்தில் வரும் ராவணன் தான் நல்லவன், ராமன் ஓர் அயோக்கியன் என்று உறுதியாக காண்பித்து , திராவிட இயக்க பாணியில் எடுத்து இருக்கலாம்..

அல்லது ஒடுக்கப்பட்டோரின் வேதனை, அவர்கள் போராட்டம் , காதல் வயப்பட்டாலும், கொள்கைக்காக காதலை தியாகம் செய்தல் என்று இருந்தால், விக்ரம் கதாபாத்திரம் மேல் மரியாதை வந்து இருக்கும்..

ஐஸ்வர்யா ராய், மீண்டும் விகரமை போய் சந்தித்து என்ன சாதிக்க போகிறார் என இயக்குநருக்கே புரியவில்லை...

எனவே , கூட்டி கழித்து பார்த்தல், மணிரத்னம் மேல்தான் தவறு, பதிவர்கள் மேல் தவறு இல்லை என தீர்ப்பு வழங்குகிறேன்.

Friday, June 25, 2010

சினிமா என்பது க்ரியேடிவ் சம்பந்தப்பட்ட கலையா ?


எதிலும் வித்தியாசமான பார்வை கொண்டவர் இவர். .. உண்மை என்பதன் அருகில் இவர் கருத்துக்கள் நம்மை அழைத்து செல்லும்...
இவரை ஆன்மிக வாதிகளும் ஏற்பதில்லை, .. நாத்திகவாதிகளும் ஏற்பதில்லை. ஏன் என்றால், எந்த சட்ட திட்டத்துக்கும் அடங்காதவர் இவர்..

இப்ப்டோது இருக்கும் கார்பரேட் சாமியார்கள் அனைவருக்கும் வழிகாட்டி ஓஷோ தான்.. அந்த ஓஷோவையே நடுங்க வைத்தவர் இவர்.
அவர்தான் யு ஜி கிருஷ்ணமூர்த்தி.
அவரை பற்றி எழுத வேண்டும் என்பது நீண்ட நாள் ஆசை. நம் பதிவர் நண்பர் சொன்னதில் இருந்து படிக்க ஆரம்பித்தேன்... தகவல்கள் திரட்ட ஆரம்பித்தேன்...

அனால், முழுதும் உள்வாங்கி எழுதினால்தான், நேர்மையான எழுத்தாக இருக்கும் என்பதால், அரைகுறையாக எழுத விரும்பவில்லை... எனவேதான் தாமதம் ஆனது...

அவர் என்னதான் சொல்கிறார் என அறிவது அனைவருக்கும் அவசியம் என நினைக்கிறேன்..

**********************************************************************
சினிமா போன்ற துறைகளில் இருப்பது படைபாற்றலே இல்லை என்கிறார் இவர். இதற்கெல்லாம் க்ரியேடிவிடி என்பதே தேவை இல்லை... ஒரு கதை, சுவையான திருப்பம், திடிக்கிடும் முடிவு என்பதை எல்லாம் வருங்காலத்தில் கம்ப்யூட்டரே செய்து விடும் ..
நாளை யாரும் சினிமா பார்க்கா விட்டால், பாட்டு கேட்கா விட்டால், சினிமா எடுக்கவோ , பாட்டெழுதவோ யாரும் முன் வர மாட்டார்கள்.
அதாவது , சினிமா என்பதெல்லாம் ஒரு தொழில் நுட்ப வேலை தான். அந்த அளவுக்கு பாராட்ட வேண்டியதுதான். அதற்காக , கலைஞர்கள், படைப்பாளிகள் என்று சொல்வதெல்லாம் , நம்மை நாமே எமாற்றிகொள்ளும் விஷயம்.

யாருடைய பாராட்டையும் எதிர்பார்க்காமல், ஒரு ரோஜா பூக்கிறதே .. அதை போல இயல்பாக பூப்பதுதான் படைப்பாற்றல்.. ஒன்றை அடிப்படையாக வைத்து, பழசின் அடிப்படையில் செய்ய படுவது , கிரியேட்டிவிட்டி அல்ல.

******************************************************
சிந்தனை, வாழ்க்கை, மரணம், தேடல், ஆன்மிக ஏமாற்று வேலை, ஒப்ஷோ, ஜே கே பற்றியெல்லாம் இவரது அதிரடி கருத்துக்கள் , சிந்திக்க வைக்கின்றன..
போக போக ஒவ்வொன்றாக பார்க்கலாம் ...

மீண்டும் சிந்திப்போம் ..

Wednesday, June 23, 2010

அமானுஷ்ய அதிர்ஷ்ட கல் !!!!!


" அம்மா.. அப்பா எங்கே மா "

மழலை குரலில் கேட்ட மகளை கண்ணிருடன் பார்த்தாள் ரம்யா... தன் பேராசை தன் கணவனை பலி வாங்கி விட்டது என சொல்ல முடியவில்லை... சொன்னாலும் புரிகிற வயசு மகளுக்கு இல்லை ..
அது பேராசையா அல்லது அப்பாவித்தனமா என இன்னும் புரியவில்லை.. இதை யாரிடம் சொன்னாலும் நம்பவும் மாட்டார்கள்.. தலையை பிய்த்து கொண்டாள்..
************************************************************************************

அன்று சமைத்து கொண்டிருந்த போதுதான், மிளகாய் பொடி தீர்ந்து விட்டத்து நினைவுக்கு வந்ததது... வாங்குவதற்காக கடிக்கு சென்றாள்.. தாடி , மீசையுடன், பரதேசி போல காணப்பட்ட ஒருவர் , சாலை ஓரத்தில் கிடப்பதை பார்த்தாள்... அனாலும் நின்று பார்க்க வில்லை...

திரும்ப வரும்போதும் அவர் அங்கேயே இருப்பதை பார்த்தாள்.. யாரும் கவனிக்க வில்லை...

அருகே சென்றாள்...

" தண்ணி.. தண்ணி.. " முனகினார் அவர்..

கையில் இருந்த தண்ணீர் பாட்டிலை கொடுத்தாள்..

கொஞ்சம் குடித்ததுமே , அவருக்கு தெம்பு வந்து எழுந்து அமர்ந்தார்...

" யாரும் அக்கறை காட்டாத என் மேல் அக்க்கரை காட்டியதற்கு நன்றி... சின்ன உதவி என்றாலும் , எனக்கு இது , இப்போது பெரிய உதவி...உனக்கு எதாவது செய்யணுமே "
தன் அழுக்கு துணி பையை துழாவினார்...

" அதெல்லாம் ஒன்னும் வேண்டாம் " புறப்பட முயன்றாள்..

அவர் மூன்று கற்களை எடுத்தார்...

" இதை வச்சுக்க,,,, நீ கேட்கும் மூன்று விஷயங்களை , இந்த கற்கள் நிறை வெற்றி தரும்... கல்லை வீசி எரிந்து, நீ விரும்புவதை கேட்கலாம்.. ஒரு கல் ஒரு முறை எறிந்ததும் சக்தி இழக்கும் " சொல்லியபடி நடந்து சென்றுவிட்டார்

***********************************************************************

" ஹே... இதெல்லாம் எதாவது துஷ்ட சக்திகள் வேலையா இருக்கும்... நம க்கு வேண்டுவதை உழைத்து சம்பாதிப்போம்... வரம் எல்லாம் வேண்டாம் "
கணவன் கர்ஜித்தான்..

" ஒரே ஒரு மோரை மட்டும் கேட்கலாம் ங்க.. பொண்ணு படிப்பு செலவுக்கு பயன்படும் "

அவனுக்கு விருப்பம் இல்லாமல் சம்மதித்தான்...

ஒரு கல்லை எடுத்து கொண்டாள்..
என்ன கேட்பது?
பணம்?
ஒரு லட்சம்? இரண்டு லட்சம்? பத்து கோடி?
ரொம்ப கேட்க வேண்டாம்..ரொம்ப குறைவாகவும் வேண்டாம்..

" எனக்கு பத்து லட்சத்து பத்து ரூபாய் , இன்னும் ஒரு வாரத்தில் வேண்டும் " கண் மூடி கேட்டு கல்லை வீசி எறிந்தாள். பத்து ரூபாய் யை வேண்டுமென்றே செர்த்துய் கொண்டாள்.... வரத்தை இப்படித்தான் சோதிக்க வேண்டும்....

திடீரென, பயங்கர காற்று வீசியது,, கதவுகள் அடித்து கொண்டன..

" என்னடி ... காசு கொட்டுதா " கணவன் கிண்டலடித்தான்...

" ஒரு வாரம் நு சொல்லி இருக்கேன் .. பொருத்து இருந்து பாருங்க "

**********************************************************************************************************
" மேடம்... ஒரு விபத்து.... உங்க கணவர் மேல லாரி மோதிருச்சு... அவர் பாக்கட்ல உங்க நம்பர் இருந்துச்சு... சரி மேடம்... ஸ்பாட்லயே எல்லாம் முடிஞ்சுருச்சு "

அந்த செய்தி இடி போல அவள் மேல் விழுந்தது ...

************************************************************************************

ஒரு வாரம் கழித்து கணவன் அலுவலகத்தில் இருந்து சிலர் வந்தனர்..

" உங்க கணவர் மாதிரி ஒரு நல்லவரை, உழைப்பாளியை பார்க்க முடியாது... அவர் இழஓஐ எதுவும் ஈடு செய்ய முடியாது.. இருந்தாலும், சக ஊழியர்கள் எல்லாம் கொஞ்சம் நிது திராடு இருக்கோம்... அலுவலகம் தர வேண்டிய பணம், இன்சூரன்ஸ் பணம் எல்லாம் இதில் இருக்கு " கொடுத்து விட்டு சென்றனர்...

அந்த பணத்தை பார்க்க கூட அவளுக்கு பிடிக்கவில்லை...
எடுத்து வைப்பதற்காக , அதை பார்த்தாள்... எவ்வளவு இருக்கிறது?
பார்த்ததும் அதிர்சியில் உறைந்தாள்

அதில் இருந்தது, பத்து லட்சத்து பத்து ரூபாய்...

********************************************************************
தன் மகள், அப்பாவை கேட்கும்போதெல்லாம், தான்தான் அவன் சாவுக்கு காரணமோ என தோன்றியது...

திடீரென ஓர் எண்ணம்...

கல்லை எடுத்தாள்..

" இன்னும் ஐந்து நிமிடத்தில் என் கணவன் என் முன் உயிருடன் வர வேண்டும் "

கல்லை எறிந்தாள்..

திடீரென பயங்கர காற்று.... இருள் சூழ்ந்தது....
" அம்மா .. என்னக்கு பயமா இருக்கு " மகள் அலறினாள்...
மகளின் முகம் பயத்தால் வெளிறி போய் இருந்தது....

கதவை யாரோ தட்டினார்கள்...
கணவன் தட்டுவது போலவே இருந்தது.

மகள் பயத்தில் சுருண்டு விழுந்தாள்..

" ஐயோ . எதாவது ஆபத்தா.இயற்கைக்கு மாறாக செனறால், என்னவெல்லாமோ நடக்கிறதே....

சட் என முடிவு செய்தாள்...

" என் கணவன் இறந்தவனாகவே இருக்கட்டும்.... மீண்டும் வர வேண்டாம் "

கல்லை எறிந்தாள்...

கதவு தொடர்ந்து தட்டபடவே , திறந்தாள்....

வெளியே .....

........


...........

யாரும் இல்லை !!!!!!

Monday, June 21, 2010

கூண்டு கிளி

உண்மையான ஞானி யார் , போலி எது என அறிவு ஜீவிகளும் கூட குழம்பும் கால கட்டத்தில், மிக எளிய லிட்மஸ் டெஸ்ட் ஒன்றை நண்பர் கே.ஆர்.பி.செந்தில் நம் பதிவுக்கான பினஊடத்தில் சொல்லி இருந்தார் .

"உண்மையான சித்தர்கள் யாசிக்க மாட்டார்கள்.. கிடைத்ததை சாப்பிடுவார்கள் அல்லது சாப்பிடாமல் இருப்பார்கள்.."

அருமை... ஆனால், அது சிறிய பின்ஊட்டம் என்பதால் பலர் படிக்கவில்லை... அது நல்ல கருத்து என்பதை விட , தெரிந்து கொள்ள வேண்டிய உண்மை என்பதால், இந்த பதிவு..


சித்தர்கள்., ஞானிகள் என்பவர்களை தேடி நான் அலைந்த காலம் உண்டு.. செந்தில் சொன்னது போல , ஞானிகள் மார்க்கெட்டிங் செய்வத்தில்லை... நம்மிடம் அவர்களுக்கு ஆவது ஒன்றும் இல்லை.. நாம் தான் அவர்களை தேடி செல்ல வேண்டும்... போனதும் நம்மை சேர்த்து கொள்ள மாட்டார்கள்,, விரட்டி அடிக்க பார்ப்பார்கள்... அவர்கள உண்மையானவர்கல்தனா, என சந்தேகம் தோன்றும் அளவுக்கு கூட கொடூரமாக , இரக்கமே இல்லாமல் துரத்தி அடிப்பார்கள்...
அதாவது, நாம் குருவை தேர்ந்தெடுக்க முடியாது.. குருதான் நம்மை தேர்ந்தெடுக்க வேண்டும்...

அப்படி ஒரு சித்தருடன் ஒன்றாக இருந்து பலவற்றை கற்று கொண்ட நண்பர் ஒருவர், ஞானிகள் எதிர்பார்ப்பது நம் காசை அல்ல.. புகழையும் அல்ல... நமக்கு தகுதி இருந்தால் , சொல்லி தருவார்கள்.. பயிற்சி கடுமையாக இருக்கும்.. பொழுது போக்குக்காக எல்லாம் இதை கற்க முடியாது என்றார்...

எதாவது ஒரு பயிற்சி சொல்லி தாருங்களேன் என கேட்டேன்... அங்கு நடப்பதை வெளியே சொல்ல முடியாது... உனக்கு தகுதி இருந்தால், நீயே அழைக்க படுவாய்,,, நீயே கற்பாய்... நட்பு என்பது வேறு.. இது வேறு என்று சொல்லி விட்டார்...

ஒரு முறை மரியாதைக்குரிய , பலராலும் அறியப்பட்ட ஒரு ஞானியை ( பெயர் வேண்டாம் ) , சந்திக்க நானும் நண்பரும் சென்றோம்... இருவரும் முதல் முறையாக செல்கிறோம்... அந்த ஞானி என்னை பார்க்க மறுத்து விட்டார்... நண்பருக்கு எப்படியோ வாய்ப்பு கிடைத்து பார்த்தார்....
அதனால், அவர் மேல் கோபம் இல்லை... சரி, நமக்கு தகுதி இல்லை என நினைத்து கொண்டேன்... எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் , அவர் விரும்பி அழைத்தால்தான் பார்க்க முடியும்..

அப்படி இருந்த ஞானியை, சில சீடர்கள், மார்க்கெட்டிங் சாமியாராக மாற்றினர்...

அவரை தேடி பெரிய மனிதர்கள் வந்தது போய் , மார்க்கெட்டிங் செய்வதற்காக அவர் பணக்காரர்களை தேடி வரும் நிலை ஏற்பட்டது... ஒரு நாத்திகாவதியான நண்பன் வீட்டுக்கு அவர் வரும்போது, (முன்பு அவரை பார்க்கமுடியாத என் ஏமாற்றத்தை தெரிந்த வைத்து இருந்த அவன் , நல்ல எண்ணத்தில் ) என்னை வீட்டுக்கு அழைத்தான்... அவரை பார்த்தல் நான் சந்தோஷ படுவேன் என்பது அவன் எண்ணம்... ஆனால்., அந்த நிலையில் அவரை பார்க்க விரும்பவில்லை...


ஞானி என்ற கம்பீரம் சரிந்து விட்டதாக என் எண்ணம் ..

தன்னை குனபடுத்திய , தனக்கு பயிற்சிகள் அளித்த நித்யனந்தரை , இன்று திட்டுகிறார்கள் என்றால், அங்கு குரு- சிஷ்ய மனோபாவம் இல்லை என்பதே அர்த்தம்... விற்பனையாளன்- வாடிக்கையாளன் என்ற உறவுதான் தெரிகிறது...

எனக்ககேன்னவோ, உண்மை என்பதை , கிளாஸ் எடுத்து சொல்லி கொடுக்க முடியாது என்றே தோன்றுகிறது... கிளாஸ் முடிவில், இவன் ஞானி ஆகிவிட்டன என சான்றிதழ் வேறு கொடுப்பது எல்லாம் அபத்தம்...

உண்மையை என்பதை அவரரவர் தான் கண்டுபிடிக்க முடியும்... அதற்கான வழி ஒவ்வொருவருக்கும் மாறுபடும்..

Sunday, June 20, 2010

மனிதனை படைத்த கடவுள், கஷ்டத்தை ஏன் கொடுத்தான் ?

கடவுள் இருக்கிறாரா இல்லையா என்பதற்குள் நான் புக விரும்பவில்லை... ஆனால், பலதரப்பட்ட சிந்தனையை உங்கள் முன் வைக்க விரும்புகிறேன்... உங்கள் தேடலுக்கு இவை உதவ கூடும்... எதை தேடுவது , எதை மறுப்பது, எது இலக்கு என்பதை எல்லாம் தீர்மானித்து கொள்ள வேன்டியது நீங்கள்தான்..

நான் எதையும் பிரச்சாரம் செய்யவில்லை... ஒரு பார்வையாளனாக , பகிர்ந்து கொள்கிறேன்..
இன்று பார்க்க இருப்பது , கிறிஸ்தவ மதம் சார்ந்தது

********************

ஏவாள் தோட்டத்தில் பாம்பை சந்திதாள். இந்த பழத்தை சாப்பிடு என்று ஆசை காட்டியது பாம்பு..கடவுளின் எச்சரிக்கை நினைவுக்கு வர, மறுத்தாள் ஏவாள்.
"இதை சாப்பிட்டால் உன் அழகு கூடும். அழகு இல்லாவிட்டால், ஆதாம் வேறு பெண்னை நாட கூடும் என்றது பாம்பு..

" சும்ம சொல்லாதே. இங்கு என்னை விட்டால், வேறு பெண் இல்லை "

பாம்பு அவளை அழைத்து சென்று, கிணற்றை காட்டியது. " பார், அவன் ஒரு பெண்ணை மறைத்து வைத்து இருக்கிறான் "
தன் அழகான உருவத்தை பார்த்தாள் .
அவள் மனதில் பொறாமை, பயம், கோபம் எல்லாம் தோன்ற , பழம் சாப்பிட ஒப்புக்கொண்டாள்.

(நாம் செய்யும் பல தவறுகளை , மிகவும் சரியானது என நினைத்துதான் செய்கிறோம்..)


***************************
உலகில் நிலவும் அமைதி இன்மை, சண்டைகளை பார்த்து மனம் நொந்த நோவா இறைவனிடம் முறையிட்டார்
" கடவுளே.. உலகில் இவ்வளவு கஷ்டம் இருக்கும், ஏற்ற தாழ்வுகள் இருக்கும், பிரச்சினை இருக்கும் என்பதெல்லம் அறியும் ஆற்றல் படைத்தவர் நீங்கள். பின் ஏன் இப்படி படைத்தீர்கள்? . மனிதனை படைத்தது, அவனை கஷ்டப்படுத்தி ரசிப்பதர்காகவா? "

கடவுள் பேசினார்

" நல்லோரின் பிரார்த்தனைகளுக்கு எப்போதும் பலன் உண்டு. உங்கள் வேலையை நீங்கள் உணர வேன்டும் என்பதற்காகவே இப்படி செய்தேன். நீயும் , உன் வ்ழிதோன்றல்களும், ஒன்றும் இல்லாத இந்த உலகில் இருந்து . புதிதாக ஒன்றை படைப்பீர்கள். நீங்கள் எல்லோரும் சேர்ந்து அமைப்பதுதான், உலகம்.. செயலுக்கும் , விளைவுக்கும் நீங்களே பொறுப்பு. மனிதனை படைத்து மட்டுமே நான். துன்பங்களுகு நான் காரணம் இல்லை. அவனே அதை உருவக்கி கொள்கிறான் ."

*************

சாத்தான் , தன் நண்பர்களுடன் பேசிகொண்டிருந்த போது, ஒரு மனிதன் எதொ ஒன்றை தரையில் இருந்து எடுப்பதை பார்த்தனர்..

" அவன் உண்மையின் ஒரு துண்டை கன்டுபிடித்து விட்டான் "

சாத்தானின் நன்பர்கள் , கவலை பட்டனர். ஒரு துளி உண்மை போதுமானது. அவன் ஆன்மா காப்பாற்றப்படும். நரகத்திற்கு வரும் ஆட்களின் எண்ணீககையில் ஒன்று குறையும்.

சாத்தான் சிரித்தது " கவலை வேண்டாம். அவன் அந்த ஒரு துளி உணமயை வைத்து என்ன செய்வான் தெரியுமா? உண்மையை சொல்லி தருகிறேன்.. நான் தான் மீட்பன் ,குரு , கட்வுள் என்று சொல்லி ஒரு கூட்டத்தை சேர்க்க ஆரம்பிப்பான். கடைசியில் எல்லொரும் நம்மை வந்து சேர்வர்கள்.. எப்பொதும் நடப்பதுதானே !!! "

கனவே , கலையாதே - ஒரு குழப்பவாதியின் டைரி குறிப்பு

" காலைல முதல் வேலையா ,அவளை பார்க்கணும் "

அவளை பார்க்க நண்பன் அழைத்தது, மகிழ்சிதான் என்றாலும் என்னால் முழுதாக மகிழ முடியவில்லை....

அவளை நான் லவ் செய்வதும் , ஆனால் காதலை சொல்ல தயங்கியதும், கடைசியில்நண்பன் உதவிக்கு வர சம்மதித்ததும் இப்போது தேவையில்லாத விஷயம்...

" நாளை காலை பார்க்க போகலாம் " என்று சொன்னானே , அதில் தான் சிக்கல்..

இரவு ரொம்ப நேரம் பேசிகொண்டிருந்தோம்... லேசா தண்ணி வேறு...அப்படியே தூங்கி விட்டோம்...

இப்போது எனக்கு என்ன குழப்பம் என்றால், " காலி அவளை பார்க்க போகலாம் " என்று உண்மையில் சொன்னானா , அல்லது கனவா ?

அவனை நேரடியாக கேட்கவும் மான பிரசின்னையாக இருந்தது....அனால், அது உண்மையாக இருந்தால், சீக்கிரம் கிளம்பியாக வேண்டும்...

என்ன செய்வது... அவனை , சுற்றி வளைத்து கேட்டேன் ..என்னடா,, இன்னிக்கு பிளான் மாற்றமில்லையே..

நான் சொன்னால் சொன்ன்னதுதான் , என்ற படி பேப்பர் படிக்க ஆரம்பித்தான் அவன்...

அவன் எந்த பிளானை சொல்கிறான்...அவளை பார்ப்பது என்றால், சீக்கிரம் கிளம்பவேண்டும்/... ஒரு வேலை வேறு எதாவது சொல்கிறானோ . நான்தான் கனவு கண்டு குழம்புகிறேனோ...

"கடவுளே ..காப்பாத்து " வாய் விட்டு அலறினேன்...


" என்னடா,,எதாவது கனவா"

நண்பர்கள் ஆர்வமாக அருகில் வந்தனர்..

அட..சீ...எல்லாம் கனவா...

மறுபடி குழப்பம்... இதுவாவது உண்மையா... அல்லது இதுவும் கனவா...

ஒரு வேளை , காலையில்கிளம்பு சொன்னதுதான் உண்மைய... இதுவெல்லாம் கனவா...

கனவு எப்போது கலையும்?

நடந்ததை அப்பிடியே பதிவிட தொடங்கினேன்,..

அனாலும் , இதுவும் கனவுதானோ என்ற குழப்பம் இருந்து கொண்டே இருந்தது...

Friday, June 18, 2010

உமர் ( ரலி ) தொழுகை செய்ய மறுத்து ஏன் ?- வரலாற்று பக்கங்கள்.

வரலாற்று பக்கங்களை சற்று பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன் ..
**************************************************************


இஸ்லாத்தின் இரண்டாம் ஜனாதிபதி, உமர் ( ரலி ) அவர்கள் ஆட்சி காலம். ஜெருசலேமில் உள்ள கிறிஸ்துவ ஆலயம் ஒன்றில் , கிறிஸ்துவ நண்பர்களுடன் பேசி கொண்டு இருந்தார் அவர்..
மாலை ஆகி விட்டதால், தொழுகை செய்ய தன இல்லம் செல்ல விரும்பினார், உமர் (ரலி ).. நண்பர்களோ, அங்கேயே ம அவர்கள் ஆலயத்திலேயே தொழுமாறு கேட்டு கொண்டனர்..

உமர் தோழா மறுத்து காரணம் சொன்னார்..

இங்கேயே , பக்கத்தில் ஒரு இடத்தில் தொழ எனக்கு ஆட்சேபம் இல்லை... நான் தொழுது விட்டு சென்று விடுவேன்... ஆனால், உமர் தொழுத இடம் என இதற்கு பெயர் ஏற்பட்டு விட்டால், வருங்காலத்தில், விபரம் தெரியாத என் சமயத்தினர், முன்பு இது பள்ளிவாசலாக இருந்த ஒன்று... கிறிஸ்தவ ஆலயம் அல்ல. என வாதிட கூடும்... பிரச்சினையை நான் விடும்பவில்லை, என சொல்லி விட்டு, வேறு இடத்தில் தொழுகையை நிறைவேற்றினார்...

அந்த இடம் , மஸ்ஜிதே உமர் ( உமரின் பள்ளி ) என அழைக்க படுகிறது ....

***********************************************************************************************************

இவர் ஆட்சி காலத்தில், அமர் ( ரலி ) என்பவரை, எகிப்துக்கு கவர்னராக நியமித்து இருந்தார்,.,,

நல்லாட்சி நடந்து வந்தது... கிறிஸ்தவர்களும், முஸ்லிம்களும் ஒறுமையாக நடந்து வந்தனர்...
அப்போது கசப்பான நிகழ்வு ஒன்று நடந்தது... அனைவராலும் நேசிக்கப்படும் இயேசு நாதரின் சிலையை யாரோ, சேத படுத்தி விட்டனர்.. முகம் சேதப்படுத்த பட்டிருந்தது...
கிறிஸ்தவர்கள் கொதித்து எழுந்தனர்... கவர்னரிடம் ம் முறை இட்டனர்...

வருத்தப்பட்ட அமர், நீங்கள் என்ன நஷ்ட இட்டு கேட்கிறீர்களோ, அதை தர உத்தர விடுகிறேன் என்றார்..

" என்ன நஷ்ட ஈடு தந்தாலும், எண்கள் கோபம் தீராது... முகமது நபியின் சிலையை நிறுவி அதை சேத படுத்துவதுதான் , எங்களுக்கு ஆறுதலாக அமையும் என்றனர் அவர்கள்...

பதறி போனார் ஆளுநர்... உருவ வழிபாடு கூடாது என்பதுதான் , எங்கள் கொள்கை... வேண்டுமானால், நான் பொது இடத்தில் நிற்கிறேன்... என் முகத்தை சேத படுத்தி கொள்ளுங்கள் : என்றார் அவர்.

அதே போல் பொது இடத்துக்கு வந்தார்... கத்தி தர பட்டது...

கூட்டதில் இருந்த உண்மை குற்றவாளிக்கு மனசாட்சி உறுத்தவே , அவரை ஒன்றும் செய்யாதீர்கள்,,, மத நல்லிணக்கத்தை கெடுக்க , நான் தான் அப்படி செய்தேன் " என கதறினான்...

அனைவரும் உண்மையை உணர்ந்தனர்....

***********************************************
இஸ்லாம் என்ற இனிய மார்க்கம் போதிப்பது அமைதியையும் அன்பையும்தான்....

Thursday, June 17, 2010

தேடுதல் தேடுதல் என்கிறார்களே.. என்ன தேடுகிறார்கள்? jo Amalan Rayen Fernando

நண்பர் jo Amalan Rayen Fernando சில கேள்விகள் கேட்டு இருந்தார்.. சித்தர்களை பற்றி எழுதும் ஒருவரது பதிவில் இவர் கேட்ட கேள்விக்கு பதில் அளிக்கவில்லை என ஆதங்க பட்டு இருந்தார்... அவர் சற்று பிசியாக இருந்திருக்க கூடும்... விட்டு விடுங்கள்...
நண்பர் கிண்டலுக்காக கேட்டதாக நான் கருதவில்லை... விஷயம தெரிந்து கொள்ள கேட்கிறார் என்றே எடுத்து கொண்டு பதில் அளிக்கிறேன்..

*****************************************************************************************

தேடுதல் தேடுதல் என்கிறார்களே.. என்ன தேடுகிறார்கள்? ஏன் தேட வேண்டும்?

தேடித்தான் ஆக வேண்டும் என்ற கட்டாயம் இல்லை... இப்போது இருப்பதே போதும் என்று நினைத்தால், அப்படியே வாழலாம்...
அனால் ஒன்றை தேட ஆரம்பித்தால் அதை கண்டிப்பாக அடையலாம். எதை தேடுவது என்பதை நாம்தான் முடிவு செய்ய வேண்டும்....

அருணகிரிநாதர் தேடியதையே, நாம் தேட வேண்டும் என்ற அவசியம் இல்லை.. பிறகு ஏன் அவரை பற்றி எழுதுகிறேன் என்றால், ஒரு வேளை அவர் தேடியதையே, தேடும் சிலருக்கு அது பயன் பட கூடும் என்பதால்...
அவர் தேடியது என்ன என்றே புரிய விட்டாலும் பாதகமில்லை... நமக்கு என்று என்ன தேடுதல் இருக்கிறதோ , அதற்கு எது உதவும் என பார்த்து , அந்த விஷயங்களில் கவனம் செலுத்தலாம்...

சிறந்த கண்டு பிடிப்பு , மக்களின் ஏழ்மையை ஒழித்தல், நல வாழ்வுக்கான வழியை கண்டுபிடித்தல், கடவுள் நம்பிக்கையை ஒழிக்கும் வழியை காணுதல், என தேடல் எப்படியும் இருக்கலாம்...
தேடலே இல்லாமலும் இருக்கலாம்.

அருணகிரிநாதரை பற்றி சொல்லுங்கள் ..

நாவல் எழுதினால்தான், முழுதாக சொல்ல முடியும். இருந்தாலும் சுருக்கமாக...

அவர் தன அக்காவல் , அன்பாக வளர்க்கப்ட்டார்... சிறு வயதிலே அறிவு கூர்மையுடன் விளங்கினார்.
சிறு வயடஹில் அவர் தேடல், மகிழ்ச்சியான வாழ்வு என்பதாக இருந்தது.... பெண்களுடன் உல்லாசமாக இருப்பது மகிழ்ச்சிக்கு வழி என நினைத்தார்.... அவர் தேடியது கிடைத்தது... மகிழ்ந்தார்... பணம் முழுதும அதற்கே செலவழித்தார்.... நோயில் விழுந்தார்... ஆனாலும், மழ்சியை பெண்களிடம் தேடினர்....
பணம் முழுதும் செலவழிந்த நிலையில், அதே பெண்கள் அவரை திரும்பி பார்க்கவில்லை.... மகிழ்ச்சியாக இருந்த விஷயம், துன்பமானதாக மாறியதை உணர்ந்தார்... காசு இல்லாத நிலையிலும பெண்ணுக்காக அலைந்த அவரை பார்த்து , அக்காவுக்கு கோபம்.... எண்டா இப்படி அலையற... நானும் பெண்தானே ... என்னை எடுத்துக்கோ, என கோபமாக கத்தவே, அருணகிரிநாதருக்கு, தன் தவறு புரிந்தது...

பெண் என்பது போதை வஸ்து அல்ல... இன்பம் தர அமைக்க பட்டதும் அல்ல... ஒரு கால கட்டத்தில் இன்பமாக்ள தோன்றும் தற்காலிக விஷயம் என தோன்றியது..

எப்போதும் இன்பம் தருவது முருகனின் அருளே என தோன்றியது..தேடினார்.. அடைந்தார்....
இடையில் ஒருமுறை, தேவியை வழிபடும் ஒரு அமைச்சருடன் பிரசினை ஏற்பட்டு, நீங்கியது... தேவி வழிபடும் சரியானதுதான்... அனால், அவரின் தேடல் வேறு ..அவ்வளவுதான்..

அப்படீன்நா , முருகனின் அருளை பெறுவது தான் வாழ்வின் நோக்கமா?

இல்லை. அவரை பொறுத்த வரை அப்படி தோன்றியது... உங்களுக்கும் அப்படி தோன்றினால், அவர் பாடல்களை படித்து உட்பொருட்களை கண்டு பிடிக்க பாருங்கள்... அவர் தேடியது தவறு என தோன்ற கூடும்... பாதகமில்லை.... உங்களுக்கு எது சரி என தோன்றுகிறதோ அதை தேடுங்கள்...

ஏசுவோ, நபியோ, ரமணரோ , பாபா வோ, அல்லது கீதையோ, அல்லது இது எல்லாமே தவறு என்று சொல்வதோ - எதை வேண்டுமானாலும் தேர்ந்தெடுக்க உங்களுக்கு உரிமை உண்டு

சித்தர்கள் கடவுளை ஏற்பவர்களா அல்லது மறுப்பவர்களா ?

அவர்களில் பல வகை உண்டு... ஒட்டு மொத்தமாக வகை படுத்த முடியாது..

அவர்கள்தான் உலகை வெறுத்து போய் விட்டார்களே. .. நாம் ஏன் அவர்களை கொண்டாட வேண்டும்..?

எல்லோரும் அவர்களை கொண்டாட வேண்டாம்... அவர்கள் தேடல், உங்கள் தேடலுடன் ஒத்து போனால், அந்த சித்தரை கொண்டாடலாம்...

பொறுக்கி பதிவரும் , சிறுவா புரி முருகன் கோயிலும்

ஆலயம் செல்வது நல்லதா ? இல்லையா?

இந்த கேள்விக்கு பொதுவான பதில் சொல்ல முடியாது..

1 சிலருக்கு வாழ்க்கை என்பதே குருவாக இருக்கும். சகலமும் சொல்லித்தரும். அவர்கள் அனுபவமே அவர்களுக்கு போதுமானது.
இவர்களுக்கு கடவுள் , கோயில், குரு, ஆன்மீகம் என்பதெல்லாம் தேவை இல்லை.. இவை இல்லாமலேயே , அவர்கள் முழுமையாக வாழா முடியும். ஆனால், இது போன்ற தெளிவு இல்லாமல், போலி நாத்திக வாதம் பேசினால், சமுதாயத்திற்கு இழப்பில்லை, அவர்களுக்கு இழப்பு..

2 சிலருக்கு, ஏதோ ஒரு கடவுள் மீது , ஒரு குரு வின் மீது ஈர்ப்பு ஏற்படலாம். ( கால் வலியை குணப்படுத்தினார் என்று ஒருவர் மேல் ஏற்படும் ஈர்ப்பு அல்ல. அதற்கு மருத்தவ்ரே போதும் ) . உண்மையான தேடல் இருக்கும் போது, உண்மையான வழிக்காட்டி கிடைப்பார் அது கடவுளாகவும் இருக்கலாம் , மனிதராகவும் இருக்கலாம். .. அவருக்கு உண்மையாக இருக்க வேண்டும். ..

3 என்னை போல பொறுக்கியாக இருப்பது மூன்றாவது வழி. "நர"கல் பதிவர் போன்ற பொறுக்கி வேலை செய்வதை சொல்ல வில்லை..
நல்ல விஷயங்கள் எங்கிருந்தாலும் , ஒவ்வொன்றாக பொறுக்கி , மனதில் சேர்த்து கொள்வது. இந்த சாமி, அந்த சாமி , இந்த கருத்து, அந்த கருத்து என்றெல்லாம் இல்லாமல் , அறிவே கடவுள், உயிரே கடவுள், சிவனே முதல் தெய்வம், கடவுளை நம்புகிறவன் காட்டு மிராண்டி, பெண் ஏன் அடிமையானாள், சுயநலத்தின் மேன்மை, அன்பே ஆண்டவன், உண்மைக்கு பாதை இல்லை,. உனக்கு நீயே குரு என்று எல்லாவற்றையும் , விருப்பு வெறுப்பு இல்லாமல் ஒரு பார்வையாளனாக பார்ப்பது , பிச்சைக்காரன் போல எல்லாவற்றையும் சேர்த்து கொள்வது ஒரு வழி.ஆலயமும் செல்ல வேண்டும், நாத்திக கூட்டமும் செல்ல வேண்டும் ஒரு பார்வையாளனாக ..

அந்த வகையில், ஒரு கோயில் பற்றி , எனக்கு தெரிந்ததை , பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

முருகன் கோயில் பல இருந்தாலும், அருணகிரிநாதரால் பாடப்பட்ட கோயிலுக்கு , தனி மதிப்பு உண்டு.
அவரால் நான்கு பாடல்கள் பாடப்பட்ட சிறப்பு உடையது சிறுவாபுரி, பால சுப்ரமணிய சுவாமி திருக்கோயில்..
சென்னைக்கு அருகில் உள்ள , இயற்கை அழகு கொஞ்சும் ஒரு இடம்தான் சிறுவாபுரி. ( சென்னை - நெல்லூர் - கல்கத்தா நெடுஞ்சாலை )
நான் ஒரு வேலையாக கும்மிடிபூண்டி செல்லும் போது, இங்கு செல்ல வாய்ப்பு கிடைத்தது.

1 பாற்கடலில் எடுத்த , அமுதை தேவர்கள் சாப்பிட்ட பின், இங்கிருந்து தான் டேக் ஆப் ஆனார்கள்

2 லவன்- குசன் ஆகியோர் , ராமரை வென்ற இடம்
3 சூரபத்மனை வென்ற பின், முருகன் இளைப்பாறிய இடம்..

சரி.. அருணகிருனாதர், பாடிய பாடல் என்ன ? படித்து பாருங்கள்,,, பக்திக்காக இல்லா விட்டாலும் , பாட்டின் இனிய தமிழுக்காக

அண்டர்பதி குடியேற மண்டசுரர் உருமாற
அண்டர்மன மகிழ்மீற ...... வருளாலே

அந்தரியொ டுடனாடு சங்கரனு மகிழ்கூர
ஐங்கரனு முமையாளு ...... மகிழ்வாக

மண்டலமு முநிவோரு மெண்டிசையி லுளபேரு
மஞ்சினனு மயனாரு ...... மெதிர்காண

மங்கையுட னரிதானு மின்பமுற மகிழ்கூற
மைந்துமயி லுடனாடி ...... வரவேணும்

புண்டரிக விழியாள அண்டர்மகள் மணவாளா
புந்திநிறை யறிவாள ...... வுயர்தோளா

பொங்குகட லுடனாகம் விண்டுவரை யிகல்சாடு
பொன்பரவு கதிர்வீசு ...... வடிவேலா

தண்டரள மணிமார்ப செம்பொனெழில் செறிரூப
தண்டமிழின் மிகுநேய ...... முருகேசா

சந்தமு மடியார்கள் சிந்தையது குடியான
தண்சிறுவை தனில்மேவு ...... பெருமாளே.

சிருவாபுரியில் வீற்று இருக்கும் செல்வா.. ஏன் முன் முன்னால் வா என அன்புடன் அழைக்கிறார், அருணகிரியார் ...

**************************************************

ஆறு வாரம் , ஒரே கிழமை சென்று வழிபட்டால் நல்லது என்றார்கள்..

*******************
ஒரு நண்பர் தரும், மேலதிக தகவலை, உங்கள் பார்வைக்கு வைக்கிறேன்

Anonymous said... சிறுவாபுரி நல்ல அமைதியான கோவில். சொந்த வீடு கட்ட,வாங்க இந்த கோவிலில் மனமுருகி வேண்டினால் நிச்சயம் நடக்கும் என்று பலர் சொல்ல கேள்விப்பட்டிருக்கிறேன். இது ஒரு மேலதிக தகவல் மட்டுமே.
நாத்திக,பகுத்தறிவு ஆசாமிகள் உங்கள் கும்மிக்காக அல்ல.

Guru

*******************


அந்த பகுதியில், தர்க்கா ஒன்று இருக்கிறது... இஸ்லாமிய நண்பர்கள் அதை பற்றி தகவல் கொடுத்தால் அனைவருக்கும் பயன்படும்.... நான் சென்ற நேரம் அங்கு யாரும் இல்லை..

Tuesday, June 15, 2010

உன்னத வாழ்வுக்கு உதவும் தூண்டு விசை - ஜேம்ஸ் ஆலன்


ஜேம்ஸ் ஆலனின் கட்டுரை ஒன்றை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். ( அடைப்பு குறிக்குள் நம்ம சொந்த கருத்து )

*******************************************

தனி மனித மேம்பாட்டுக்கு வழி வகுக்கும் ஆற்றல் மிக்க தூண்டு விசை , உறுதி எடுத்து கொள்ளல் அல்லது சபதம் செய்தல் என்ற விஷயம் ( இனி தண்ணி அடிக்க மாட்டேன். தினமும் படிப்பேன், தினமும் எழுதுவேன் என்பது போல ) ..
இது இல்லாமல் பெரிய விஷயங்கள் எதுவும் சாதிக்க முடியாது. உறுதிமொழி இல்லாத வாழ்க்கை , நோக்கம் இல்லாத ஒன்று.. நோக்கம் இல்லாத ஒரு வாழ்க்கை சிறப்பானதாக அமையாது.. தெளிவாகவும் , கவனமாகவும் தயாரிக்கப்பட்ட உறுதி மொழி இல்லாமல், வாழக்கையில் முன்னேற முடியாது..
தவறான விஷயங்களுக்கும் உறுதி மொழி எடுக்க முடியும் என்றாலும் ( அவனை அவமானப்படுத்தாமல் விட மாடேன் என்பது போல ) நல்ல விஷயகளை செய்பவர்களுக்குதான் உறுதி மொழி, உற்ற நண்பனாக இருக்கிறது.. எனவே இதை நல்ல விஷயங்களுக்கு எப்படி பயன்படுத்துவது என்பதை மட்டும் சொல்ல போகிறேன் ( நாளையில் இருந்து தினமும் தண்ணி அடிப்பேன் என யாரும் உறுதி மொழி எடுத்து கொள்வதில்லை . பெரும்பாலும் நல்ல விஷயங்களுகுதான் இது பயன்படுகிறது )

ஒருவன் ஒரு உறுதி , சபதம் எடுத்து கொள்கிறான் என்றால் என்ன அர்த்தம்,.? தற்போதைய நிலை அவனுக்கு பிடிக்க வில்லை. தனது குணத்தையும், வாழ்வையும் தீர்மானிக்கும் , மனம் என்ற விஷயத்தில் இருந்து, சிறந்த ஒன்றை எதிர்பார்க்கிறான்.அதற்கான பொறுப்பை வேறு யாரிடமும் கொடுக்காமல் தானே பொறுப்பை ஏற்க முடிவு செய்து விட்டான் என அர்த்தம். . அந்த சபதத்திற்கு உண்மையாக இருக்கும் பட்சத்தில் , சிறப்பான நிலையை அடைந்தேதீருவான்.
பெரிய ஞானிகளின் சாதனைகளை பார்த்தோம் என்றால் அதற்கு பின் அவர்கள் சபதம் இருக்கும்.
சிறந்த பாதை ஒன்றில் நடக்க தீர்மானித்ததும், பல பிரச்சினைகள் வரத்தான் செய்யும். ஆனாலும் , சோதனை எனும் இருளை கிழிக்கும் ஒலிகீற்றாக நம் லட்சிய தீபம்ஒளிர்ந்து வழி காட்டும்
ஒரு சபதம் என்பது வெறும் ஆசை அல்ல. ஒரு நல்ல நோக்கத்தை அடைய, எது வந்தாலும் பின் வாங்காமல் போராடுவேன் என்ற உறுதியான தீர்மானம் தான் உண்மையான உறுதி மொழி. . இதை கவனமாக உருவாக்க வேண்டும்.
அரைகுறை மனத்துடன் செய்யப்படும் சபதம் , சபதமே அன்று. கிடைக்கும் முதல் வாய்ப்பிலேயே , இது உடைந்து விடும் ( சீக்கிரம் எ ந்திரிக்கனும்னுதான் நினைச்சேன்..ஆனா, குளிர் அதிகம் ,.,அதான் ஒரு நாள் வேண்டாம்னு னு இழுத்து போர்த்தி தூங்கிட்டேன் )

ஒரு சபதத்தை உருவாக்க பொறுமையுடன் செயல்பட வேண்டும் . அவசரம் கூடாது. என்ன பிரச்சினைகள் வர கூடும் என யோசிக்க வேண்டும். அதற்கு தயராக வேண்டும். என்ன சபதம் செய்கிறோம் என முழுமையாக புரிந்து கொள்ள வேண்டும். ஒருவன் , பயமோ சந்தேகமோ இல்லை என்பதை உறுதி செய்து கொண்டு , அதற்கு பின் உறுதி எடுத்து கொண்டால், கண்டிப்பாக தன லட்சியத்தை அடைந்தே தீருவான்.

அவசர சபதம் , ஆடி போய் விடும் ..
தாக்கு பிடிக்கும் தந்திரத்தை, மனமே நீ கற்று கொள்..

உயர்ந்த சபதம் ஒன்றை எடுத்து கொண்ட மறு கணமே , அதற்கு சவால்கள் துவங்கும். சோதனை ஆரம்பிக்கும். வாய்ப்புகள் தேடிவரும் . ( சும்மா இருக்கும் போது கூட , வாரத்துக்கு  ஒரு நாள் தண்ணி அடித்து , நிம்மதியாக இருப்போம். தண்ணி அடிக்க மாட்டேன் என சபதம் செய்தவுடன் தான், தண்ணி அடிக்க பல அழைப்புகள் தேடி வர ஆரம்பிக்கும் ) இந்த சவால்களை சந்திக்க முடியாமல், சபதத்தை கை விட்டோர் பலர்.,

ஆனால், இந்த சவால்கள் நமக்கு தேவையான ஒன்றுதான், இவை நம் எதிரி அல்ல .. நண்பர்கள்தான் என புரிந்து கொள்ள வேண்டும்.
சபதத்தின் இயல்பு என்ன ? திடீரென ஓட ஆரம்பிக்கும், நீரோட்டம் அல்ல.. ஏற்கனவே , ஒரு திசையில் ஓடி வீணாகும் நீரோட்டடத்தை, நமக்கு தேவையான திசையில், பாதை அமைத்து திருப்பி விடுவது போன்றது.

பழைய பாதையை அடைத்து, புதிய பாதை அமைத்தாலும், நீர் அந்த அடைப்பை உடைத்து , பழைய பாதையிலேயே செல்ல முயலும். மண் சுவர்களை உடைக்க அது முயலும். நாம் பொறுமையாக மண் சுவர்களை வலுப் படுத்தி, நீரை, புதிய நீரோட்டத்திற்கு , பழக்க வேண்டும்..

அதன் பின், சுவர்களை உடைக்க பயன் பட்ட நீரின் விசை, இன்னிசையுடன் ஓடி நமக்கு பயன் தர ஆரம்பிக்கும். இதுதான் இயற்கை விதி. இதுதான் மனதிலும் செயல் படுகிறது.
தன இஷ்டம் போல செயல் பட்ட மனதை,. ஒரு நல்ல விஷயம் நோக்கி திருப்பி விடும் போது, அது திமிறத்தான் செய்யும். இது இயல்பான ஒன்று என்பதை புரிந்து கொள்ள வேண்டும். மண் சுவறை வலுபடுத்தி, தண்ணீரை கட்டுக்குள் கொண்டு வந்தது போல, மனதை வலுப்படுத்தி, தன லட்சியம் நோக்கி மனதை செயல்பட செய்ய வேண்டும்.
ஆற்றல் மிக்க எண்ணங்கள், தவறான திசையில் ஓடி வீணானது. இனி நல்ல திசையில் ஓடி, இன்னிசை தரும்.

வாழ்வில் முன்னேற விரும்பும் ஒருவன் , பிறரை முன்னேற்ற விரும்பும் ஒருவன், சுய சோதனைகள் செய்து கொள்ளட்டும். சபதம் எடுக்கட்டும். அந்த சபதத்திற்கு உண்மையாக இருக்கட்டும். அவனுக்கு கண்டிப்பாக வெற்றி கிடைத்தே தீரும். எவ்வளவு தவறு செய்து இருந்தாலும்,இலக்கு இல்லாமல் இருந்து இருந்தாலும், ஒருவன் உயர்ந்த நிலையை அடைய விரும்பிவிட்டால், அவனுக்கு பிரபஞ்ச விதி பாதுகாப்பாக இருந்து, அவனை வெற்றி அடைய வைத்து விடும் .. தளராத சபதம் முன், தடைகள் தூள் தூளாகும்..

Monday, June 14, 2010

நேரங்கெட்ட நேரத்தில் , கருவறை போராட்டம் - பெரியார் என்ன சொல்லி இருப்பார் ?இலங்கை தமிழர்களின் திக்கற்ற நிலை.. அதை கண்டு கொள்ளாமல் இருப்பது, ஆதரவு கொடுப்பது என்பது அவர்கள் மனசாட்சிக்கும் , கொள்கைக்கும் உட்பட்டது.. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கொள்கை இருக்கலாம். அது தவறல்ல.

ஆனால், இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக குரல் கொடுக்க வேண்டியவர்கள் சரியாக செயல் படுகிறார்களா என்பதே கேள்வி.

அங்கே உயிருக்கு போரடிடி கொண்டிருக்கும் நிலையில், பெரியவர் பழ . நெடுமாறன் அவர்கள், கோயிலில் அர்ச்சனை செய்ய போராட்டம் நடத்தியதாக வந்த செய்தியை பார்த்ததும் " அட இயற்கையே " என நொந்து கொள்ள தோன்றியது..

துன்பப்படும் தமிழர்களுக்காக , அணித்து தமிழர்களையும் - ஆன்மிக வாதிகள், நாத்திக வாதிகள், இடது சாரிகள், வலது சாரிகள் என அனைவரையும் - ஒன்றிணைப்பது தானே அவரது முதல் வேலையாக இருக்க வேண்டும் ? இப்போது போய் , இந்த போராட்டம் நடத்துவது, நமக்குள் பிளவைதானே ஏற்படுத்தும்..

இது தேவையே இல்லாத போராட்டம் என்பதில்லை.. உயிருக்கு போராட்வனுக்கு , முதலுதவி செய்து விட்டு சாமிக்கு பூ போடலாமே..

கடவுளை மற.. மனிதனை நினை என்றது சொன்ன பெரியார் இன்று இருந்தால், நேரங்கெட்ட நேரத்தில் நடந்த இந்த போராட்டத்தை கண்டித்து இருப்பார்...

மற்ற எல்லோரும் , இலங்கை தமிழர்களுக்காக போராடுவதை தவிர மற்ற வேலை களும் செய்கிறார்களே ( செம்மொழி மாநாடு, கொட நாடு பயணம் ) என நெடுமாறன் கேட்க கூடாது..

அவர்கள் இலங்கை தமிழர் பிரச்சினையை தங்கள் பிராதான கொள்கையாக முனிறுத்த வில்லை... நெடுமாறன் அப்படியல்ல.. கவனம் சிதர்மல் இருப்பதுதான், அவருக்கு பலம் சேர்க்கும்..

Sunday, June 13, 2010

தியாகி

கடவுள் இருக்கிறாரா , இல்லையா " என்ற என்னை நோக்கி மையமாக சிரித்த அவர் , ஏன் திடீரென எழுகிறார் என புரியாமல் பார்த்தேன்.

வடபழனி சிக்னலில் நின்ற பஸ்சில தாவி ஏறிய சிலரில் நானும் ஒருவன்,.. நல்ல கூட்டமென்றாலும், சிலர் இறங்கியதால், எனக்கும் அந்த பெரியவருக்கும் சீட் கிடைத்தது..

பெரிய மனிதராக இருந்ததால், அவருக்கேற்ற படி பேச்சு கொடுக்க ஆரம்பித்தேன். .. அவர் என்னை பார்க்காமல் , இன்னொருவரை பார்த்து எழுந்ததும் எனக்கு போன்றும் புரியவில்லை.. ஓடி போய் சீட் பிடித்து விட்டு, இப்போது ஏன் எழுகிறார்? தெரிந்தவராக இருக்குமோ?

" சார், உக்காருங்க சார் "

" அட பரவா இல்லைங்க "

" சார்.. என்னை விட நீங்க பெரியவரா இருக்கீங்க... நீங்க நின்ன எனக்கு கஷ்டமா இருக்கு " என்று சொல்லி அந்த பெரியவரை உட்கார வைத்தார் இந்த பெரியவர்..

எனக்கு ஒரு மாதிரியாக இருந்தது.. இருவருமே வயதானவர்கள்தான்.. சில வருடங்கள் வித்தியாசம் இருக்கலாம்.,.. ஆனால் அவர் காட்டிய மனித நேயத்தை நான் அல்லவா காட்டி இருக்க வேண்டும்? பேசாமல் இருவரையும் உட்கார செய்து விட்டு நான் நின்று கொண்டு வந்திருக்கலாம்..,, நான் ஒரு முடிவுக்கு வருவதற்குள், நான் இறங்க வேண்டிய இடம் வந்து விட்டது ...
"
*********************************
மறுநாள் ஒரு கொள்கை முடிவு எடுத்தேன்... ஒரு பலசாலி தன பலத்தை , பலவீனமானவர்களை அன்பாக நடத்துவதன் மூலம் தான் காட்ட வேண்டும் என் என் முன்னாள் குரு சொல்லுவார் ... அந்த குரு இப்போது சிறையில் இருந்து தப்பி விட்டாலும் , என் இதய சிறையில் அவர் இருப்பதால் , அவர் அறிவுரையை செயலில் காட்ட தீர்மானித்தேன் .

திருவல்லிக்கேணி செல்லும் பஸ்ஸில் ஏறியதில் இருந்தே, யாராவது வயதானவர்கள் இருக்கிரார்களா.. என கண்கள் தேடிக்கொண்டு , இருந்தன.. ஓர சீட்டில் அமர்ந்திருந்த இளம்பெண்ணின், கண்களும், மூக்குத்தியும் சற்று நேரம் கண்ணை கைது செய்து அங்கேயே வைத்து விட்டதால், கோடம்பாக்கம் வரும்போதுதான், அந்த பெரியவரை கவனித்தேன்,.. பாவம்.. தள்ளாடிய படி நின்று கொண்டுருந்தார்.. வயதின் தளர்ச்சி...

பெரியவரே..இப்படி உட்க்கருங்க.. என எழுந்து இடம் கொடுத்தேன்.. அதற்குள் சிலர் உட்கார முயன்றனர்.. அவர்களை தடுத்து, பெரியவரை வலுகட்டாயமாக உட்கார வைத்தேன்..
பெரியவருக்கு நன்றி உணர்ச்சியில் வார்த்தை வரவில்லை.. ஏதோ சொல்ல துடித்தார்... " நான் உங்க பையன் - சாரி பேரன் மாதிரி ( இமேஜ் !!! ) .. ரிலாக்ஸா வாங்க "
என்றேன் ..

கையில் இருந்த பிரசாதத்தை கொடுத்தேன்... ஏதோ சொல்ல முயன்று இருமினார் ....
இன்னும் ஜெமினி , மவுன்ட் ரோட் , எல் ஐசி என திருவல்லி கேணி செல்ல நேரம் அதிகம் ஆனாலும் , பெரியவருக்காக தியாகம் செய்தது பெருமையாக இருந்தது .

அதற்குள்,. பயணிக்க l சிலர் , தங்கள் புத்தகங்கள பொருட்களை அவர் மடியில் வைத்து அவரை காவலாளி ஆகினர் ...

அவர் இடத்தில் நான் இருந்து , இ ந்த சுமையை தாங்க விரும்பினேன் ... ஆனால், இருக்கைகள் பல இருந்தாலும் , ஒருவன் ஒரு நேரத்தில் , ஒரு இருக்கை யில்தான் அமர முடியும் என்பது இயற்கையின் அவல சுவை என்ற முன்னாள் குருவின் தத்துவம் , இங்கு சரியாக பொருந்துவதை உணர்ந்தேன் ...

ஜெமினி நிறுத்தத்தில் பஸ் நிற்கும்போது தற்செயலாக அந்த பக்கம் வந்த கண்டக்டர் , பெரியவரை பார்த்து திடுகிட்டார்..
" என்ன பெரியவரே... கடம்பாகத்துல இறங்கணும்னு சொல்லி , ஜெமினி வரை வந்துடீங்களே.. நான் கொஞ்சம் பி சியா இருந்துட்டேன்... தம்பி நீங்க லாவது இறக்கி விட்டு இருக்க கூடாத... கூட்டத்துல இறங்க முடியாது "

மடியில் சுமையுடனும், வாயில் பிரசாத்துடனும்,. பெரியவர் என்ன பார்த்த பரிதாப பார்வையை சந்திக்க முடியாமல் , கண்களை வேறு பக்கம் திருப்பினேன்..

Saturday, June 12, 2010

மனிதனுக்கு , குரு அவசியமா ?

அந்த சாமியார் , என் கால் வலியை குணமாக்கினார்.. எனவே அவரை கடவுளாக நம்ப ஆரம்பித்தேன்... பிறகு தொலைகாட்சியில் அவரை தப்பாக காட்டினார்கள்.. அவரை தவறானவர் என உணர்ந்தேன் என்று சொல்பவர்களை பார்க்கிறோம்..
குரு என யாரும் தேவை இல்லை... நீயே உனக்கு குரு.. நீ தெளிவாக இருந்தால் ,எங்கிருந்து வேண்டுமானாலும் கற்று கொள்ளலாம்... என்கிறார் ஜே கிருஷ்ணமுர்த்தி...

இந்த நிலையில், குரு கீதை என்ற நூலை படிக்க வய்ய்ப்பு கிடைத்தது..

பகவத் கீதை தெரியும்? குரு கீதை?

சிலருக்கு தெரிந்து இருக்கலாம்.. ஆனால் எனக்கு புதுதாக இருந்தது..

பகவத் கீதை என்பது, அர்ஜுனனுக்கும், கிரிஷ்ணருக்கும இடையேயான உரையாடல்.. அர்ஜுனின் கேள்விகள்.. கிருஷ்ணர் பதில்கள்.

குரு கீதையை பொறுத்த வற்றை, இது பார்வதிக்கும், சிவனுக்கும் இடையேயான உரையாடல்.. பார்வதி கேள்விகள், சிவன் பதில்கள்..

ஒரு குரு என்பவர் வாழ்க்கைக்கு அவசியம் என்கிறது நூல்...

கடவுளின் கோபத்துக்கு ஆளானால், குரு காப்பார்... குருவின் கோபத்துக்கு ஆளானால், யாரும் காக்க முடியாது என்பது இதில் உள்ள ஒரு பஞ்ச்...

பணம் வேண்டும், கால் வலி சரியாக வேண்டும் என்பதெற்கெல்லாம் குருவை தேடினால், தவறான ஆட்களிடம் சிக்குவாய்.. அது குருவின் தவறு அல்ல.. உன் தவறு..

உன் தேடல் சரியாக இருக்கும் பட்சத்தில், சரியான குரு அமைவார்... அவர்வைக்கும் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்... கட்சி மாறுவது போல , ஒரு குருவ்டம் இருந்து இன்னொரு குரு என சென்றால், சாகும் வரை உனக்கு விமோசனம் இல்லை என்கிறது குரு கீதை...

மேலும் நிறைய இருக்கிறது... பல விரிவுரைகள் இருக்கின்றன.. நான் படித்த புத்தகம் நன்றாக இருந்தது... சில தியான முறைகளும் நன்றாக உள்ளளன... மைசூரிலிருந்து ஒரு தமிழ் புத்தகம்...

அதை எல்லாம் விளக்கி சொல்லி , ஆன்மிக பிரச்சாரம் செய்வது என நோக்கம் அல்ல... படித்ததை பகிர்ந்து கொண்டேன் .. அவ்வளவுதான்... இது ஒரு பார்வை மட்டுமே... மாற்று பார்வைகளை அடுத்த பதிவுகளில் விவாதிப்போம்...

இரட்டை வேடமிடும் பதிவர்களும் செம்மொழி மாநாடும்

செம்மொழி மாநாட்டை சிலர் ஆதரிக்கலாம்.. சிலர் எதிர்க்கலாம்.. அது அவரரவர் விருப்பம்.. நமக்கு ஒன்றும் இல்லை..

ஆனால், இதை எதிர்ப்பவர்களை இரட்டை வேடம் போடும் கபட வேதா தாரிகள் என ஒரு பத்திரியாள பதிவர் எழுதி இருப்பது சிந்தனையை தூண்டியது.. அவரை போன்றவர்கள் எழுது உலகத்துக்கு லக்கியா , அன் லக்கியா என தெரியவில்லை...

இரட்டை வேட அரசியல் வாதிகள் , திடீரென வானத்தில் இருந்து குதித்து வருகிறார்களா.. அல்லது நம்மில் இருந்து தோ ன் றுகிரார்களா ?

நாம் நேர்மையாக நடந்து கொள்கிறோமா ?

1 மலம் அள்ளும் தொழில் புனிதமானது என்றார் ஒரு தலைவர்... அப்படியா, நீங்கள் அதை செய்வீர்களா என கேட்டார்கள்.. இல்லை , நான் ஆதரிக்கிறேன்,.,ஆனால் செய்ய மாட்டேன் என்றார் அவர்... அதே போல , அரசு பள்ளிகளில் உலக தர படிப்பு வழ ங் கபடுகிறது என எழுதினார் ஒரு பதிவர்.. சும்மா ஆதரிக்கிறேன். நான் யாரையும் சேர்க்க மாட்டேன் என பல்டி அடித்தார் . இரட்டை வேடம் இல்லையா ..

2 . இலங்கை தமிழர்களுக்கு கண்ணீர் விடுவார்களாம்... அதற்கு குரல் கொடுக்காத தமிழக அரசை ஆதரிப்பார்க்கலாம்..இரட்டை வேடம் இல்லையா..

3 சமுக மாற்றத்துக்கு குரல் கொடுப்பார்களாம்.. "நர" கல் பதிவருக்கு ஆதரவு கொடுப்பார்களாம் .. இரட்டை வேடம் இல்லையா..

4 பகுத்தறிவு பேசுவார்களாம்.. ஆன்மீக எழுத்தாளரை ஆதரிக்கலாம் .. இரட்டை வேடம் இல்லையா...


ஆக, சமுகத்தை குறை சொல்வதை விட்டு விட்டு, நம்மை திருத்து கொண்டால் போதும்.. சமுகம் திருந்தி விடும்
.

Friday, June 11, 2010

தினமும் என்னை கவனி


" சிங்கம் படத்துல , என் இதயம் பாட்டை போடுங்க " என்று எப் எம்மில் கேட்பது போல என்னிடம் கேட்ட ஜோசப் மீது எரிச்சலாக வந்தது. பெரியவர்., அனுபவசாலி, இங்கிதம் தெரிந்தவர். இப்படி செல் போனில் பாட்டு கேட்பதை தவறாக சொல்லவில்லை.. ஆனால், கூட்டமான பஸ்ஸில் , கஷ்டப்பட்டு சீட் கிடைத்து உட்கார்ந்து இருக்கும் நிலையில் , இப்படி கேட்பது கொஞ்சமும் சரி இல்லை. அதுவும் புது பாட்டுதான் வேண்டுமாம்..

பைக் சர்விஸ் விட்டு இருந்ததால், இருவரும் பஸ்ஸில் அலுவலகம் செல்ல வேண்டிய நிலை. பக்கத்து வீடு.. நிண்ட நாள் பழக்கம். என் பைக்கில்தான் எப்போதும் செல்வோம். ஒரு வாரம் மட்டும் பஸ் ...

பைக்கில் செல்லும் பொது, நான் பாட்டு கேட்டால், அதை கண்டிப்பார்.. கவனம் சிதறும் என்பார்... ஆனால், பஸ்ஸில் அவர் பாட்டு கேட்க விரும்பும் ரசனை எனக்கு பிடிக்கவில்லை... பேசாமல், நாளைக்கு செல் போனை வீட்டிலேயே வைத்து விட்டு வர வேண்டும் என தீர்மானித்தேன்..
*********************
அடுத்தநாள்.. செல் போனை கொண்டு வந்தேன்.. ஆனால் , மெமரி கார்டை கழட்டி வைத்து விட்டேன்...

பஸ்சில் அமர்ந்ததும்., ராவணன் பாட்டு போடுப்பா என்றார்.

" சார், மெமரி கர்ட்ல ஏதோ ப்ராப்ளம்.. பாட்டு கேட்க முடியாது " என்றேன் .

செல் போனை வாங்கி பா ர்த்த அவர் ஏமாற்றத்துடன் தி ரு ப்பி கொடுத்தார் ...
எனக்கே சற்று பாவமாக இருந்தது.. பாவம் எதோ ஆசை படுகிறார். இன்னும் ரெண்டு நாள் பஸ் பயணம்தானே.. இசை விருதை நாளை கொடுக்க வேண்டும் என நினைத்துகொண்டேன்.
************

பேருந்தில் இருந்து இறங்கினோம்... அடித்து பிடித்து இறங்குவது பெரிய போராட்டம்... வழியில் சற்று தாமதமாகி விட்டது .. எதோ ஊர்வலம்..

" அலுவலகத்துக்கு போன் செஞ்சு தாமதம் னு சொல்லிடு ப்பா" என்றார்..

சாட்டை பையில் கை விட்டு , போனை எடுக்க எத்தனித்த நான், அதிர்ந்தேன்.. போனை காணோம்... புது போன்..

அவரும் பதறினார்.. பஸ்ஸில் , கூட்டத்தில் விழுந்துருச்சா.. யாராச்சும் பிக் பாக்கட் அடிசுட்டங்கள...

புது போன் சார் .. பரிதாமாக சொன்னேன்...

என்னப்பா பண்றது..ஜாக்ரதைய இருக்கணும்... நானே ரெண்டு போனை தொலைச்சு இருக்கேன்... பஸ் ல வந்து உனக்கு எனக்கும் பழக்கம் இல்லை.. அதான் , பஸ்ல வர்ற சில நாட்கள், தினமும் கவனமா இருக்கணும் னு , பாட்டு போட சொன்னேன்... எங்காவது விழுந்த கூட , உடனே தெரிஞ்சுடும்.. அப்பவே எடுத்துடலாம்.. நம்ம கேட்ட நேரம், இன்னிக்கு, பாட்டு மிஸ் ஆயிடுச்சு என்றார்...

அவர் அனுபவ அறிவு புரிந்தது... பாட்டு கேட்க அல்ல... செல்லை காப்பாற்ற , பாடு பட்டு இருக்கிறார் என்பதை உணர தாமதமாகி விட்டது...

வினவு தோழர்கள் , நரகல் சக்திகள் - அடாவடி பழக்கங்கள் யாருக்கு ?

சொல்ல பயன்படுவோர் மேலோர்.. கரும்பு போல கொல்ல பயன்படும் கீழ் ...
***************************************************************

கட்சி, ஜாதி, அமைப்பு, இயக்கம் இதற்கெல்லாம் அப்பாற்பட்டு இருப்பதுதான் உண்மைக்கு வழிகாட்டும் என்பது ஒரு பார்வை. இதை பற்றி நிறைய எழுது இருக்கிறேன்.

இயக்கத்தை, சாதியை , மதத்தை பாராட்டியோ எதிர்த்தோ பயன் இல்லை என்பது என் கருத்து.. குறிப்பாக, பிராமணர்களை எதிர்ப்பது பேஷனாக ஆகி விட்டது... இதை வெறுப்பவன் நான்...

ஆனால், வினவு தோழர்களை ஒரு வன்முறை இயக்கம் போல சித்தரிக்கும் ஒரு முயற்சி நடப்பதை பார்க்கும் போது, நடுநிலையாளர்களின் பார்வையும் பதிவு செய்யப்பட வேண்டும் என்ற நோக்கத்தில் இதை எழுத வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது..

பழைய வரலாறுகளை எல்லாம் புரட்ட விரும்பவில்லை.. அது எல்லோருக்கும் தெரிந்ததுதான்.

புதிய விஷயத்தை பார்ப்போமே. ..

சமிபத்தில் , ஒரு நர(கல்) பதிவர் , தன விஷத்தை கக்கி அனைவரையும் இழிவு படுத்தினார்.

அப்படிதான் செய்வோம்.,என்ன வேணும்னாலும் செய்து கொள் என சவாலும் விட்டனர் அவர் தரப்பினர். .. எதிர்த்தவர்களை நையாண்டியும செய்தனர்... இந்நிலையில், வினவு தோழர்களின் எதிர்ப்பு கிளம்பியது... அதை கேட்டதும் தான், நரகல் பதிவரின் சுருதி சற்று இறங்கியது. ..

அவர்கள் அணுகுமுறையை நாம் ஏற்கிறோமா இல்லையா என்பது முக்கியம் அல்ல.. அது பயன் அளித்தது என்பது முக்கியம்...


இதி இரண்டு விஷயமா இருக்கிறது...

பேருந்து டிக்கட் விலையை எதிர்த்து சில அமைப்பினர் போராட்டம், சாலை மறியல் நடத்தினால், பேருந்தை பயன் படுத்துபவர்களே கூட அதை எதிர்ப்பார்கள். பயணம் தடை படுகிறதே என்ற தற்காலிக இடைஞ்சல் அவர்களுக்கு பிடிக்காது...அவர்களுக்காகத்தான் போராட்டம் என்பது அவர்களுக்கு புரியாது.

விலை ஏற்றத்தால் பயன் பெறுபவர்களும் எதிர்ப்பார்கள்.. அதை புரிந்து கொள்ள முடியும்...

முதல் எதிர்ப்புதான் பரிதாபகரமானது...

சில ஜாதி வெறியர்கள், வினவு தோழர்களை அடாவடி பேர்வழிகள் சொல்வதை கூட , புரிந்து கொள்ள முடிகிறது..

ஆனால், நடு நிலை யாளர்கள் கூட இப்படி பேசுவது பரிதபகரமானது...


வினவு தோழர்களும் , அவர்கள் இயக்கமும் நல்லதுதான் செய்கின்றன.. ..
அவர்கள் வழிமுறைகள் பிடிக்காமல் இருக்கலாம்... அனால் அதற்கான தேவை இல்லாமல் செய்வது, ஆதிக்க சக்திகள் கையில்தான் இருக்கிறது..

எனவே , நடுநிலையாளர்கள் அறிவுரை சொல்ல வேண்டியது, வினவுக்கு அல்ல.. நரகல் பதிவர் போன்ற ஆதிக்க சக்திகளுக்கு..

ஆதிக்க கும்பலின் அடாவடி பழக்கம்தான் அனைத்துக்கும் அடிப்படை...

Thursday, June 10, 2010

தொடர்ந்து வா. தொட்டு விடாதே

எனக்கு பயமா இருக்குடி . தினமும் ஒருத்தன் என்னை ஃபாலோ பண்றான் .
நடுங்கிய கமலாவை அன்புடன் பார்த்தாள் ரோஸி. அவளது பலாசுளை உதடுகள் நடுங்கின .
அவள் சொல்வதை சாதரணமாக எடுத்து கொள்ள முடியாது. அழகானவள் . பணக்காரி வேறு. ஆபத்து எப்படியும் வரலாம் .
இனிமே தனியா போகாதே. நானும் கூட வறேன் என சொல்லி, உயிர் தோழி என்பதை நிரூபித்தாள் ரோஸி.
***
தினமும் கமலா வீட்டுக்கு சென்று , அங்கிருந்து இருவரும் ஒன்றாக செல்வது வழக்கம் ஆயிற்று. கமலா சொன்னது உண்மைதான் . அவர்களை ஒருவன் பின்தொடர்வதே உணர முடிந்தது.
அவனை பார்த்தா படிச்சவன் மாதிரி இருக்கு. ஆனா பொறுக்கி தனம் பண்றான் . தூக்கி போட்டு மிதிக்கணும்போல இருக்கு. ஆனா இங்கே வாங்கி கட்டிகிட்டு வேறு எங்கேயாச்சும் வாலாட்டுவான் . அவனை விட்டு பிடிப்போம். அது வரை உனக்கு துணையா நான் இருக்கேன் . ரோஸியின் திட்டத்துக்கு ., பயத்துடன் தலையாட்டினாள் கமலா. * *
* *
இதுக்குதான் காத்திருந்தேன் . பரபரப்பாக பிரேக் வயரை கழட்டினாள் ரோஸி. பைக்கை நிறுத்தி விட்டு , எங்கோ சென்று விட்டான் . அவளுக்கு வசதியாக போனது.
எங்காவது மோதி சாகட்டும்

சதியை அறியாமல் ஸ்டைலாக வண்டியை எடுத்தவன் , பேய் வேகத்தில் வந்த லாரியை பார்த்து பிரேக் போட முயன்று, தடுமாறி., ஒரு பாட்டி மீது மோதி விழுந்தான் .
அவன் அடிபட்ட சந்தோஷத்தை விட , பாட்டி அடிபட்டது கஷ்டமாக இருந்தது. அவளை தூக்கி கொண்டு மருத்துவமனை ஓடினார்கள்
**
ஒரு வாரம் கழித்துதான் ரோஸியை பார்க்க முடிநதது. பாட்டி குணமாகி விட்டாளாம்.
இருவரும் நடந்தனர் . அதோ பாருடி. கொஞ்ச நாள் அடங்கி கிடந்த அவன் , திரும்பவும் ஃபாலோ பண்றான் . கமலா சுட்டி காட்டினாள் . நேருக்கு நேர் சந்திக்க முடிவு செய்தாள் ரோஸி.
**
மூவரும் காபிக்கு ஆர்டர் கொடுத்து விட்டு அமர்ந்து இருந்தனர் . நீங்க யாரு? எங்களை ஏன் ஃபாலொ செய்றீங்க கடுமையாக கேட்டாள் ரோஸி.
அவளை தீர்க்கமாக பார்த்தபடி பேச ஆரம்பித்தான்
தப்பா நினைச்சிடீங்க . நான் 'உங்களை' ஃபாலோ பண்ணல . 'உன்னை' ஃபாலோ பண்றேன் . உன் தைரியம் , தோழமை பண்பு , பாட்டியை அன்பா கவனிச்ச அன்பு
இதிலெல்லாம் மனசை பறி கொடுத்துட்டேன் .
நல்ல வேலை. நல்ல குடும்பம் . செக் பண்ணி பாத்துட்டு., கல்யாணம் செஞ்சுட்டு லவ் பண்ணலாமா , லவ் செஞ்சு கல்யாணம் செய்யலாமா னு முடிவு பண்ணு.
கமலா மேடம் . ரெண்டு நாள் தனியா போன உங்களுக்கு துணையா வந்தேன் . அதுக்கு தேங்ஸ் சொல்ல வேண்டாம் . நான் உங்க அண்ணன் மாதிரி.
திகைத்து போனாள் கமலா

Wednesday, June 9, 2010

உன்னிடம் மயங்குகிறேன் .உள்ளத்தால் நெருங்குகிறேன்


" அவளை விவாகரத்து செய்ய போறேண்டா "

நான் சொன்னதை நம்ப முடியாமல் பார்த்தான் அஹமது.

" என்னடா சொல்ற? எல்லோரும் பொறாமை படர மாதிரி நல்ல வாழ்க்கை கிடைச்சி இருக்கு.. ஏன் லூசு மாதிரி பேசற ? " பரிவுடன் கேட்டான்.

" டேய்... என்னை பத்தி நல்ல தெரிஞ்சவன் நீ..உன் கூட மனசு விட்டு பேசத்தான் இந்த ஹோட்டலுக்கு வர சொன்னேன். கீதா நல்ல பொண்ணுதான். படிச்சவ, நல்ல வேளையில் இருக்கா.. பாரம்பரியம் மிக்க குடும்பம்.. பணக்காரி வேற.. அழகு , சொல்லவே வேண்டாம். அழகான துப்பாக்கியும் உண்டு.. அழகான கவிதையும் உண்டு.. அவள் அழகு கவிதை போன்ற அழகு. பல கலைகளில் ஆர்வம் உண்டு அவளுக்கு..
இப்ப என்ன பிரச்சினைனா, இவ்வளவு சிறப்பு மிக்க அவள் என்னை ஏன் தேர்ந்தெடுத்தா ? நான் நல்லவன் தான், அனால் சராசரி குடும்பத்தை சேர்ந்த சராசரி ஆள்.. சராசரி படிப்பு, சராசரி வேலை. காதல் திருமணமும் இல்லை.. அதான் குழப்பம் "

' இதில் என்னட குழப்பம் .. எது எப்படியோ, நல்ல மனைவி கிடச்சா சந்தோஷம்தானே டா " குழம்பினான்

" இதுல ஏதாசும் சதி இருக்குமோ நு சந்தேக படறேன் ... என்னை சும்மா டம்மி மாதிரி பயன் படுத்த பாக்குரங்கள. இல்லை அவள் கிட்ட எதாச்சும் குறை இருக்கா ... நேத்து கூட அவளோட அத்தை பையனை பார்த்தேண்ட.. வீட்டுக்கு வந்தான். சும்மா அந்த கால கமல் மாதிரி அழகா இருக்கான.. பணக்காரன் வேற... அவனை எல்லாம் வீடு என்னை எண்டா தேர்ந்தெடுத்தா? "

" அட லூசு... ஜாலியா எஞ்சாய் பண்ணாம என்னடா இப்படி தொல்லை பண்ற... "

" சிரியஸ் நஸ் தெரியாம பேசற... இன்னும் பச்சையாகவே சொல்றேன்... அவளக்கு திருமணத்துக்கு முன் எதோ முறை தவறிய தொடர்பு இருந்திருக்கு... அதனால்தான், தெரிஜவங்களை எல்லாம் விட்டுட்டு, ஏமாளியான என்னை பிடிச்சு இருக்காங்க நு சந்தேக படறேன் "

சடாரென கையை ஓங்கி விட்டான் அஹமது.. நல்ல வேளை.. நிதானத்துக்கு வந்து விட்டான்.. எதுவும் பேசாமல், சடாரென வெளியேறினான்.. இதற்கு அடித்து இருக்கலாம்..

********************************************************

சந்தேகம் என்னை அரித்து கொண்டிருந்தது...

கீதா திடிரென அழைத்தாள் " என்னங்க.. உங்க பிறந்த நாள் வர போகுது.. நாம் சேர்ந்து கொண்டபோற முதல் பிறந்த நாள். வாங்க போயி, எனக்கு நகை, வளையல், சேலை, அப்புறம் உங்களுக்கு ஒரு சட்டை எடுக்கலாம் " அழைத்தாள்..

பல்லை கடித்து கொண்டேன்.. செர்ந்த்பு கொண்டதற முதல் பிறந்த நாலா..அல்லது இதுதான் கடைசியா.. இருந்தாலும் கிளம்பினேன்..

***************************

எனக்கு பல ஆடைகளை பார்த்தாள்.. அவள் சொன்ன எதுவும் பிடிக்கவில்லை... விலை உயர்ந்த ஒரு சட்டை, பேன்ட். எடுத்து கொண்டேன்..

அனால், அவள் தேர்வு ரொம்ப சிக்கலாக இருந்தது.. விலை உயர்ந்த வளையல், விலை உயர்ந்த ஒரு நெக்லஸ் எடுத்து கொண்டாள் ...

ஏழை கடைக்குள் நுழைந்தோம்... எவ்வளவு செலவழிக்க போகிறாளோ என திகிலுடன் சென்றேன்..

அதிக நேரம் எடுக்க வில்லை... ஒரு சேலையை தேர்வு செய்தாள் . எனக்கே சற்று வியப்பு " என்னடி , இவ்வளவு மலிவான விலையில் சூஸ் பண்ணி இருக்க.. இன்னும் கொஞ்ச காஸ்ட்லிய எடு .. அப்பத்தான் மதிப்ப இருக்கும் ":

" இல்லைங்க ..இதுதான் பிடிச்சு இருக்கு "

" என பேசற..எவ்வளவு அழகழகா , காஸ்ட்லியான சேலை எல்லாம் இருக்கு ..அதை எடு ..இதை போய் ஏன் பிடிச்சுருக்கு நு சொல்ற "

" காஸ்ட்லிய இல்லையா நு முக்கியம் இலிங்க... எனக்கு இதுதான் பிடிச்சு இருக்கு... உங்களுக்கு அது அழகா தோணலாம்.. எனக்கு இதுதான் அழகா தோணுது... எனக்கு எது பிடிக்குதுன்னு எனக்குத்தானே தெரியும்... இதை எப்படி விளக்றது நு எனக்கு புரியலைங்க " பாவமாக சொன்னாள்..

" எனக்கு புரியுது " என்றேன் நான்..உண்மையிலேயே எனக்கு புரிந்து விட்டது

Monday, June 7, 2010

கொஞ்ச நேரம் கொஞ்சலாமாஅலுவலகத்தில் இருந்து களைப்பாக வீடு திரும்பிய கணவனை கொல்ல வேண்டும் போல இருந்தது. கொலை என்பது கோபத்தினால் அல்ல.. அன்பினால்.

மாலதிக்கு , ராஜாவை மிகவும் பிடிக்கும். அவன் சுறுசுறுப்பு, அன்பான பேச்சு, நகைசுவை உணர்ச்சி என எல்லாம் பிடிக்கும். திருமணம் ஆகி 3 ஆண்டுகளில் சண்டை எதுவும் இல்லை.. ஆனால் அவன் வேலை வேலை என அலைவது மட்டும் பிடிக்கவில்லை..

இன்று கூட வெளியே போகலாம் என சிக்கிரம் வர சொல்லி இருந்தால், ஏதோ மீட்டிங் என சொலி தாமதமாக வந்தான். சண்டை போட கூட வாய்ப்பு இல்லை.. உட்கார்ந்த படியே தூங்கி விட்டான் ..

எழுப்பினாள்.. கொஞ்சுவான் என எதிர்பார்த்தாள்.." டிஸ்டர்ப் பன்னதடீ..டயர்ட இருக்கு " தூங்கி போனான்,..

************************************************

" உன் நிலைமை புரியுதுடீ... ஆனா, அவர் நிலைமையையும் பாரு. குடும்பம் நல்ல நிலைக்கு வரணும்தானே ராப்பகலா பாடு படுறார்.." தோழி சுமதி அட்வைஸ்

" அதெல்லாம் சரிடி.. ஆனா, பணம் சம்பத்திப்பது மட்டும்தான் வாழ்க்கையா ? " மாலதி எதிர் வாதம் செய்தாள்

" பணம்தான் வாழ்க்கை இல்லை.. ஆனா பணமும் தேவை.. சரி ஒன்னு செய்... அவர் சுமையை நீயும் பகிர்ந்துக்கோ,,, இனிமே ஓவர் டைம் எல்ல்லாம் செய்ய வேண்டாம்னு சொல்லிடு... அந்த இழப்ப ஈடு கட்ட, நீ டுயுஷன் எடுத்து சம்பாதி... தையல் வேலை தெரியுமே. அதில் சம்பாதி.. அவருக்கு வேலை சுமை குறையும் ..உன் கூட அன்ப பேச நேரமும் , தெம்பும் இருக்கும் "

நல்ல ஐடியாவாக தோன்றியது

***********************************

ஒரு வாரமாக சீக்கிரம் வேலை விட்டு வருவதால், ராஜாவுக்கு உடலும் மனமும் உற்சாகமாக இருந்தது.. கவிதை கூட எழுத தோன்றியது... இன்று அவளை அசத்த வேண்டும்...மல்லி பூ, அல்வா எல்லாம் வாங்கி கொண்டு உற்சாகமாக வீடு வந்தான்...

" மாலு ..இங்கே வாயேன் " அன்பாக அழைத்தான்...

" ஒரு நிமிஷம் " என சொல்லி விட்டு தையலை தொடர்ந்தாள்.. யுயுஷன் தாமதம்கி விட்டதால், தையல் வேலையும் தாம்தகிறது..

ஒரு வழியாக முடித்தாள்.. காத்து இருந்த ராஜ, அவளை கொஞ்சுவதற்கு நெருங்கினான்...

" தையல் வேலை முடித்த தையலே... இதோ , பூவுக்கு பூ சூட்டுகிறேன்" மல்லி பூவை எடுத்த ராஜா திடுக்கிட்டான்... அவள், சேரில் உட்கார்ந்த படியே தூங்கி இருந்தாள்

" ஹே ..என்ன இது " எழுப்பினான்..

" சாரிங்க... களைப்பா இருக்கு.... குட் நைட் "

அவன் தழுவதற்குள், நித்திரை அவளை தழிவியது

Sunday, June 6, 2010

நான்வெஜ் சாப்பிடாத நல்ல வளர்ப்பு._ஜே கே உரையாடல்

நான் வெஜ் சாப்பிடாத , நல்ல வளரப்பு மிக்க சிலர் , கொடுரமாக நடப்பதை பார்க்கிறோம். இது பற்றி ஜே கிருஷ்ணமூர்த்தியுடன் ஒரு சந்திப்பு
* *
"ஒரு விஷயத்தை பத்தி உங்ககிட்ட டிஸ்கஸ் செய்ய வந்து இருக்கோம் . நம் பசியை தீர்க்க ஒரு உயிரை கொல்லலாமா ? அசைவ உணவை என்னால ஏத்துக்க முடியல"
"நானும் உயிரை கொல்வதை விரும்பல . ஆனா அப்பப்ப அசைவ உணவு சாப்பிடுவது தவிர்க்க முடியாதது ."

"ஒரு நாள் என் பையன் புறாவை வேட்டையாடி கொண்டு வந்தான் . அவனுக்கு பெருமையாகவும் இருந்தது. குற்ற உணர்ச்சியும் இருந்தது. இதெல்லாம் தப்பில்லைனு அவனுக்கு உணரத்தினேன் . இரவு அந்த புறாவை வறுத்து சாப்பிட்டோம்"

"சொல்லுங்க சார் . உணவுக்காக உயிரை கொல்லலாமா கூடாதா"

கொலை எனற பெரிய விஷயத்தில் ஒரு சின்ன பகுதிதான் உணவுக்காக கொல்வது என்ற விஷயம் . (நான்வெஜ் சாப்பிடாதால் மட்டும் ஒருவன் நல்லவன் அல்லன் )பெரிய விஷயத்தை புரிந்து கொள்ளாததால்தான் ,சிறியவை முக்கியத்துவம் பெறுகின்றன . எனவே இதை விரிவாக ஆராய வேண்டும்

"புரியுது சார்"

வார்த்தையால் கொல்வது பயத்தில் கொல்வது கொள்கைக்காக நாட்டுக்காக மதத்துக்காக கொல்வது என்றெல்லாம் இருக்கிறது

"வார்த்தையால் கொலை செய்ய முடியுமா"

வார்த்தைகளால் ஒருவர் புகழை அழிக்கலாம் . நிம்மதியை குலைக்கலாம் அசிங்கபடுத்தலாம் ( பெண்மையை அசிங்கபடுத்திய பதிவரை போல ) உங்கள் பெண்ணையோ பையனையொ இன்னொருவருடன் ஒப்பிட்டு பேசுவதும் ஒரு வித கொலை தான் . கோபத்தில் கொலை செய்தால் தண்டனை. நாட்டுக்காக செய்தால் பரிசு . பாராட்டு . நல்ல கொலை தவறான கொலை என்பதை எப்படி தீர்மானிப்பது.

"இது தனி மனிதனை பொறுத்த விஷயம்"

அப்படி எளிதாக சொல்ல முடியாது. யுத்தத்தை நீங்கள் விரும்பாமல் இருக்கலாம் . ஆனால் நீங்கள் கட்டும் வரி பணத்தின் மூலம் கொலையை யுத்தத்தை மறைமுகமாக ஆதரிக்கிறீர்கள்


"அப்படீனா வரி கட்ட கூடாதா"

மறுபடியும் , சிறிய பகுதிக்கே முக்கியத்துவம் தருகிறீர்கள் . முழுமையாக பாருங்கள் . கொல்வது என்பது ஒரு பகுதிதான் . நம் மனதில் மறைந்திருக்கும் கொடூரம் , வன்முறை இதுதான் முக்கிய பிரச்சினை. இது வெவ்வேறு முறைகளில் வெளிப்படலாம் . காலில் முள் குத்தினால் ., உடனே செயலாற்றுவதே போல , அன்பு நிறைந்த உள்ளம் செயல் பற்றி தெளிவாக இருக்கும். சக உயிர்கள் மேல் இரக்கம் காட்டும் .

Saturday, June 5, 2010

பிரச்சினையை புரிந்து கொள்ளாத இனிய உண்மை தமிழனும், " கொடிய" வினவு தோழர்களும்

நான் தினமும் படிக்க விரும்பும் பதிவுகளில் ஒன்று உண்மை தமிழனின் பதிவு.. நல்லவர்..இனியவர். யாரையும் புண்படுத்த நினைக்காதவர் என்பதால், அவர் மீது ஒரு மரியாதை உண்டு ..

ஆனால், தற்போதைய பிரசின்னையை புரிந்து கொள்ளாமல், இதை திசை திருப்பும் வேளையில் இறங்கி இருப்பது சற்று வருத்தமாக இருக்கிறது ..

பிரச்சினையை விளக்க விரும்பவில்லை... அதை அவர் எப்படி பார்க்கிறார் என்பதை மட்டும் சொல்கிறேன்..

இதை இரு பதிவர்களின் சண்டை என்ற அளவில் மட்டும் பார்க்கிறார்.

அல்ல, இது ஒட்டு மொத்தாமாக பெண்களை அச்சுறுத்தும் ஒரு நிகழ்வு.

அந்த பெண் பதிவர் ஒன்றும் தவறாக எழுதவில்லை.. பிரதமரின் பேட்டியையே கிண்டல் செய்யும் உரிமை எல்லோருக்கும் உண்டு., சமிபத்தில் கூட , முதல்வரின் குஷ்பு பற்றிய பேச்சை எல்லோரும் கிண்டல் செய்தார்கள்.. இதே போல ஒரு பதிவரின் பேட்டியை நகைசுவையோடு கிண்டல் செய்தால் , ஆபாசமாக திட்டுவதா... ? இது அக்கிரமம் அல்லவா..


பெரியவர் டோண்டு , லூசுத்தனமாக ஒன்றை சொல்லி இருக்கிறர் .." அப்படியாவது நையாண்டி செய்யப்பட்டவர் செய்தவர்களுக்கு நெருங்கிய நண்பரா? அப்படி ஏதும் இருப்பதாகத் தெரியவில்லையே. அப்படியிருக்க ஏன் இந்த நையாண்டியெல்லாம்? இது என்ன ஒரு மச்சினி அக்கா புருஷனை கிண்டல் செய்யற மாதிரின்னு நினைச்சிருப்பாங்களோ? "

அட பாவிகளா.. என்ன ஒரு ஆணாதிக்க புத்தி,,,, ஒரு சோ ராமசாமி கருணாநிதியை கிண்டல் செய்தால் ரசிக்கிறீர்கள்.. சோனியாவை , மன்மோகனை கேலி செய்தால் புகழ்கிறீர்கள்..

அதே பணியில் ஒரு பெண் விமர்சித்தல் , அது உங்களுக்கு பிடிக்கவில்லை.. ஆபாச திட்டுக்கு அவர்கள்தான் தூண்டுதல் என்பது போல உளறுகிறீர்கள்...

இது போன்ற கருத்துக்கள் எல்லாம் , பெண்களை மிரட்டுவது போலவும், ஒதுங்கி இருக்க சொல்வது போலவும் இருக்கிறது.

( நான் பிராமணர்களை வெறுப்பவன் அல்ல.. அனால் , ஒரு பிரச்சினை என வரும்போது, அவர்கள் கக்கும் விஷம் , பெரியாரின் தேவை இன்னும் இருக்கிறது என தோன்ற வைக்கிறது )


இந்த நிலையில்தான் வினவு தலையிட்டதால் தான் , சற்று தெளிவு ஏற்பட்டது... ஆரம்பத்தில் , இதை இலக்காரமா கத்தான் , ஆணாதிக்க வாதிகள் அணுகினர். சட்ட நடவடிக்கை, டிரவுசர் நடவடிக்கை எல்லாம் முடிந்தால் எடுத்துகொள் என ஏகடியம் பேசினார். யார் பெயரையும் சொல்லாத வெறும் புனைவுதான் என சட்டம் பேசினார்கள் ..

இந்த வகையில் வினவின் தலையீட்டுக்கு, தமிழ் பதிவுலகம் கடமை பட்டுள்ளது...

"ஆனால் ஒரு இனிய மாலை நேரத்தில் சரவணபவனிலோ அல்லது எதாவது ஒரு காபி ஹவுஸிலோ சந்தித்து டிபனுக்கும் காப்பிக்கும் இடையிலான இடைவெளியில் நாசூக்காக “சாரி” சொல்லி முடித்துக் கொள்ளும் பிரச்சினை அல்ல இது"

என மிக சரியான நிலையை அவர்கள் எடுத்துள்ளனர்... ஆம். வெறும் சாரி என்பது மட்டும் இப்போது ஏற்பட்டுள்ள அச்ச உணர்வை போக்காது..

சம்பந்தபட்ட நரகல் நடை பதிவரை இழிவு படுத்த வேண்டியதில்லை... அனால், அவர் உட்பட அனைவரும் அமர்ந்து பேசி , இனி மேலாவது பெண்கள் பாதிக்கபட்மல் இருக்க என்ன செய்ய வேண்டும் என முடிவு செய்ய , ஒரு கூட்டத்துக்கு உண்மை தமிழன் ஏற்பாடு செய்வதே அனைவருகும் நல்லது..பாதிக்க பட்ட பெண் பதிவர் என்ன நினைக்கிறார் என்பதையும் கேளுங்கள்..

மற்றபடி எல்லா பிரச்சினையும் இணைத்து பேசுவது வினவு தோழர்களுக்கு இழப்பல்ல.. நமக்குதான் இழப்பு.. இப்போதுதான் கொஞ்சம் கொஞ்சமா பெண்கள் வெளி உலகுக்கு வர ஆரம்பிச்சு இருக்காங்க... அவர்களுக்கு ஏற்பட்டுள்ள அச்சத்தை நீக்குவதுதான் நம் முதல் கடமை..

மற்றவற்றை அடுத்துகவனிக்கலாம்..எல்லாவற்றையும் ஒன்றாக கலப்பது வாதத்துக்கு நன்றாக இருக்கலாம்,, ஆனால், நடைமுறை பயன் இல்லை

பத்திரிக்கை பின் புலம் கொண்ட எழுத்தாளர் ஆதரவு கோஷ்டி, ஜாதி வெறி கோஷ்டி, ஆணாதிக்க கோஷ்டி என்ற முப்பெரும் நோய் கிருமிகளுக்கு எதிராகவும் , சாமான்யர்களுக்கு ஆதரவாகவும்தான் , வினவு தோழர்கள் இருக்கிறார்கள் என்பதை உண்மை தமிழ புரிந்து கொள்ளாததுதான் விந்தை..

துப்பாக்கி கொடிய ஆயுதம்தான்.. அனால், நல்லவர்களை காக்கும் போது , அதை ஆதரிக்க வேண்டும்..

எனவே இந்த விஷயத்தை பொறுத்த வரை, கொடிய வினவு தோழர்களை ஆதரிக்க வேண்டும்..

Friday, June 4, 2010

சில நேரங்களில் சில பதிவர்கள்

நாம் யாரை அல்லது எதை போற்றுகிறோமோ, ஆராதிக்கிரோமோ, அதன் பண்புகள் நமக்கும் வந்து விடும் என்பது ஒரு உளவியல் தத்துவம்..

சமிபத்து சில நிகழ்சிகள் இதை உணர்த்துவதாக இருக்கிறது..

ஒரு பதிவர் நரகல் நடையில் , ஒரு கதை எழுதினார். அவரது நோக்கம் தெளிவாக தெரிந்தது... யாரை காய படுத்த நினைத்தாரோ , அவரை காய படுத்தி விட்டு பிறகு பாதுகாப்பு கருதி, பதுங்கி கொண்டார்.

இதை ஒவ்வொருவரும் எப்படி எதிர் கொள்கிறார்கள் என்ற பார்வைதைதான் பதிவர்களை அல்ல- ஒட்டு மொத்த மனிதர்களை புரிந்து கொள்ள உதவுகிறது..

1 ஒரு இரட்டை வேட எழுத்தாளரின் ரசிகர்கள், அந்த எழுத்தளரை போலவே , தெளிவில்லாத கருத்தை சொல்லி பிரச்சினையை சிக்கலாக்கினர்கள் ( நரகல் நடை பதிவரும், அந்த எழுத்தாளரின் ரசிகர்தான் ) ..

தம்பி , நீ எழுதுனது தப்பு என அறிவுரை சொல்லி திருத்துவதை விட்டு விட்டு, மூல காரணத்தை ஆராய்ந்து , படிப்புக்கும் , சிந்திக்கும் திறனுக்கும் சம்பந்தம் இல்லை என் காட்டினார்கள் இவர்கள். இதை ஆரம்பித்தது அந்த பெண் பதிவர்தான். பெண் என்றால் என்ன வேண்டுமானாலும் சொல்லலாமா என வெட்டி வாதம் செய்தனர்..
அந்த பெண் பதிவர் ஆபாசமாக எதுவும் எழுதவில்லை.. கிண்டலான தொனியில் கருத்தை சொல்லி இருந்தார். பிடிக்கவில்லை என்றால், அவர் கருத்தைதானே கிண்டல் செய வேண்டும்? அதை விட்டு விட்டு ஆபாச அரச்சனையில் இறங்குவது தவறு என அந்த ரசிகர் கூட்ட பதிவர்களுக்கு புரியவில்லை... இவர்களை போன்றவர்களை நம்பித்தான் பத்திரிகை உலகம் இருக்கிறது என்பது சற்று பயமாக இருக்கிறது...
ஊருக்கெல்லாம் அட்வைஸ்.. தனக்கு எந்த நெறியும் இல்லை என்ற எழுத்தாளரின் கொள்கைக்கு அப்படியே ஒத்து போகிறார்கள் இவர்கள்..

2 பதிவர் உண்மைத்தமிழன், நான் மதிக்கும் பதிவர்களில் ஒருவர்.. ரசிப்பவரும் கூட.. ஆனால் , இந்த விஷயத்தில் அவர் பார்வையில் தெளிவு இல்லை.. ஒருவன என்னை தாக்கினால், யாரவது என்னை காப்பாற்றுவார்களா, என்று தான் நான் பார்ப்பேன்... இதுதான் இயல்பு.. ஆனால், உதவிக்கு கரம் நீட்டுபவர்களை திட்டி, யாரும் உதவ வேண்டாம் என சொல்லி, தான் சாமாதான புறா என நிருபிக்கும் தமிழர்களின் இயல்பை இவர் காட்டி இருக்கிறார்.. உதவி வேண்டாம்/ வேண்டும் என சொல்லவேண்டியது பாதிக்க பட்டர்வர்கல்தானே தவிர இவரல்ல..இவருக்கு ஏன் இந்த வேண்டாத வேலை... ? பாவம்..நல்லதுதான் நினைத்து இருக்கிறார்.. ஆனால், சரியான கருத்தை சொல்ல வில்லை..

3 படிப்பு கூட சில சமயங்களில் நல்ல சிந்தனையை தர கூடும் என்ற நம்பிக்கை தருவது, மாதவராஜின் தீராத பக்கங்கள்..

4 பாதிக்கப்படவர்கள் வலி அதிகம்.. அதை எப்படி குணப்படுத்துவது என ஆரோக்கியமாக சிந்திப்பதுதான், அந்த நரகல் நடை பதிவருக்கும் கூட நல்லது.. அப்படி அணுகாமல், ஜாதி பற்றுடன் அணுகி தமது ஜாதி பற்றை காட்டி உள்ளனர் சில பதிவர்கள்..

மொத்தத்தில், பல பதிகர்களின் சுய முகத்தை அறிய உதவி இருக்கிறது இந்த விவகாரம்

Tuesday, June 1, 2010

கன்னம் தொடும் கவிதை ஓசை

" அட பாவி... அவ-- சாரி- அவுங்கலை எதிர்த்து ஏன்டா ரிபோர்ட் கொடுத்த ? இன்னிக்கு உனக்கு தீபாவளிதான் " சக நண்பனின் எச்சரிக்கை, வயிற்றில் புளியை கரைத்தது..

ஆனாலும் நான் தப்பு செய்ததாக தோன்றவில்லை. எங்கள் நிறுவனம யந்திர பாகங்கள் உற்பத்தி செய்யும் நிறுவனம்.நாங்கள் சந்தை படுத்தும் பிரிவில் இருந்தோம். நான் அப்போதுதான் சேர்ந்திருந்தேன். ஹரிதா என்னை விட சீனியர். நல்ல பெயர் அவளுக்கு..ஆனால் அவள் கொடுத்த ஒரு ஐடியா எனக்கு பிடிக்கவில்லை. அதை ஏற்க கூடாது என என் தரப்பு வாதங்களை சொல்லி இருந்தேன். இலவச பொருட்கள் கொடுத்து இது போன்ற பொருட்களின் விற்பனையை உயர்த்த முடியாது என்பது என் கருத்து. சர்விஸ், டெலிவரி போன்றவற்றை முதன்மை படுத்துவோம் என்பது என் வாதம். இந்தியாவில் இலவசம்தான் இறைவன் என்று அவள் வாதிட்டாலும், என் தரப்பையே நிர்வாகம் ஏற்றது. புதியவனானா எனக்கு பெருமைதான். ஹரிதவின் பனி வரல்லாற்றில் இது முதல் தோல்வி..

இந்நிலையில்தான், வெங்கட் என்னை பயமுறுத்தினான்..

" அவளை பத்தி உனக்கு தெரியாது.. செலவாக்கான ஆள் அவ.... எதிர்த்து பேசுன சீனியரையே, ஒரு வாட்டி செருப்பால அடிச்சு இருக்க... அவ கிட்ட ஜாக்கிரதையா இரு .." என்றான அவன். அவன் சொன்ன சீனியரை எனக்கும் தெரியும்.. இயந்திர துறையில் இருந்தாலும், இலக்கியமாக வாழ்பவர். இனிமையானவர். அன்பாக பழகுபவர்.. அவரை போய்... ஹரிதா மேல் பயம் ஏறபட்டது.... கோபம் எல்லாம் வரவில்லை.. நமக்கு ஏன் ஊர் வம்பு.. ஒதுங்கி போவோம் என முடிவெடுத்தேன்..

********************

என் இன் பாக்சை திறந்த எனக்கு அதிர்ச்சி... ஹரிதவிடம் இருந்து மெயில்.. என்ன வாக இருக்கும்..பயந்து கொண்டே படித்தேன்..

டியர் சார், வரும் நடை பெறவுள்ள தொழில் நுட்ப கண்காட்சியில் நாம் பங்கு பெறலாமா... எப்படி பட்ட பங்களிப்பு நன்றாக இருக்கும் என்பதை பற்றி என் கருத்துக்களை எழுதியுள்ளேன்... படித்து விட்டு உங்கள் கருத்தை சொல்லவும்- ஹரிதா.

அட ஆண்டவா... என்கிட்டே ஏன் கருத்து...சீனியர் எத்தனை பேர் இருக்கிறார்கள்... ஆழம் பார்க்கிறாளா ?

என்னை பொறுத்தவரை , அந்த கண்காட்சியில் கலந்து கொள்வதை விட, நேரடி விசிட் தான் நல்லது என நினைத்தேன்.. அந்த கண்காட்சிக்கு எங்கள் வாடிக்கையாளர்கள், வாய்ப்புள்ள வாடிக்கையாளர்கள் வருவது குறைவாகத்தான் இருக்கும் என்பது என் கணிப்பு... இருந்தாலும், அவளை எதிர்க்க விரும்பவில்லை...

டியர் மேடம், உங்கள் கருத்து அபாரம்.. அதை அப்படியே நிறைவேற்ற என் ஆதரவு என்றும் உண்டு என் எழுதி அனுப்பினேன்..

******************

" சார் ,,,உங்க கிட்ட நிறைய எதிர்பார்த்தேன்..இப்படி ஏமாத்திட்டீங்களே " சற்று கோபத்துடன் என்னிடம் சொன்னால் அவள். தன அறைக்கு வர சொல்லி குளிர் பானம் கொடுத்து விட்டு , கோப வார்த்தைகள் வீசியதை நான் எதிர்பார்க்கவில்லை..

அவளுக்கு ஜால்றாதனே அடித்தோம்..அப்புறம் என்ன .. எனக்கு புரியவில்லை..

சிக்ஸ் கேப்ஸ் திங்கிங் எல்லாம் உங்களுக்கு தெரியும் என எனக்கு தெரியும்..அதான் உங்க கருத்தை கேட்டேன்... ஒரு விஷயத்தின் நன்மைமை யை நான் பார்த்தால், நீங்க எதிர் கருத்தை சொல்லணும்..என்ன தடிகள வரும்,,நு பார்க்கனும்... இன்னொருவர அதில் என்ன உற்சாக அம்சங்கள் இருக்கு,,வளர்ச்சி வாய்புகள் இருக்குனு சொல்லணும்... ஒவ்வொரு விதமா பார்த்து கடைசியில ஒரு முழுமையான முடிவுக்கு வரலாம்.. அ தை விட்டுட்டு, நான் சொன்னதையே திருப்பி சொல்ல நீங்க எதுக்கு " பொரிந்தாள் அவள்..

நான் மௌனமாக என் கையில் இருந்த பைலை கொடுத்தேன்..அதில் அவள் கேட்டபடி, எல்லா கோணத்தையும் அலசி இருந்தேன்.. அசந்து போனாள்..
சுப்பர்.. இதை ஏன் முன்னாடியே கொடுக்கல... என் கருத்தின் தவறுகள் எனக்கு நல்ல புரியுது...அதை மாத்திக்கிறேன்..தேங்க்ஸ் என்றாள்..

இவ்வளவு நல்லவள், இன்னொரு நல்லவரான இலக்கியவாதியை ஏன் அடித்தாள்..
சற்று தயங்கி கேட்டே விட்டேன்... உங்களுக்கு எதிர் கருத்து பிடிக்காதுன்னு , இலக்கியவாதி இளவரசன் சொன்னாருங்க என்றேன்..

மெல்ல புன்னகைத்தாள்.."உங்க கிட்ட அப்படி சொல்லிடான்களா.. அவர் ஒரு கருத்தை சொன்னால் எதிர் கருத்தை சொல்வது என் வழக்கம்.. இன்னொரு கோணத்தை பார்க்க வேண்டும் என்பதற்காக.. அவர் என் கருத்துடன் மோதி இருக்க வேண்டும்.. அவர் கருத்து வென்றாலும் எனக்கு சந்தோஷம்தான்.. அனால், அவர் என் எதிர்ப்பை சமாளிக்க முடியாமல், என் பெண்மை யை அசிங்க படுத்த முயன்றார். என் உயர்வுக்கு காரணம் என் திறமை இல்லையம்.. என் அழகுதானாம், பலர் மயக்கித்தான் என் காரியத்தை சாதிக்கிறேனம்.. என் கருத்தை நிலைநாட்டி இல்லையம்..இப்படி வாய்க்கு வந்த படி பேசினார்/.... அதுதான் செருப்படி" என்றாள்

இருவரும் சீனியர் என்பதால், பிரசினை அமுக்கப்பட்டது என்பதை புரிந்து கொண்டேன்.

" அவரா அப்படி பேசினார்? அவர் அப்படி எல்லாம் பேசி நான் கேட்டது இல்லையே " நான்.

" சாதாரண நிலையில் எல்லோரும் இலக்கியம் பேசலாம்.. இனிமையாக இருக்கலாம்... ஒரு சிக்கலின் போதுதான், உண்மையான தன்மை வெளியாகிறது .. கோபம் அவர் அறிவை மறைக்கவில்லை,, அவர் அறிவை வெளிப்படுத்தியது அவர் என்னை மட்டும் இழிவு படுத்தவில்லை.. ஒட்டு மொத்த பெண் இனத்தை அல்லவா
இழிவு படுத்திவிட்டார் . ஒவ்வொரு அணுக்குள்ளும் பெண்தன்மை இருக்கிறது..பெண்ணுக்குள்ளும் ஆண் தன்மை இருக்கிறது... அதே போல, ஒரு பெண்ணை சார்ந்து அன்ன்களும், ஒரு ஆணை சார்ந்து பல பெண்களும் இருப்பது இயல்பு. இந்நிலையில், ஒரு பெண்ணை இழிவு படுத்துகிறோம் என நினைப்பதே தவறு.. அவளை இழிவு படுத்தும் பொது, பல ஆண்களையும்தான் இழிவு படுத்துகிறீர்கள்.. நான் செருப்பை கையில் எடுத்ததை ஆதரித்து ஆண்கள்தான் என்பது உங்களுக்கு தெரியுமா.. என்ன இருந்தாலும், அவரை அடித்தி இருக்க கூடாது என்றுதான் பெண்கள் சொன்னார்கள் " பொரிந்து தள்ளினால் அவள்,.

அவருடன் பல இலக்கிய விவாதங்கள் செய்துள்ளேன்.. அனால், அவர் வாங்கிய செருப்படிஓசைதான், சிறந்த கவிதையாக என் காதில் ஒலித்தது

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா