Thursday, January 31, 2019

அழகிரியை நெகிழ வைத்த ரஜினி


 தகவல் தொடர்பு கலை குறித்து ஓர் ஆங்கில் நூல் வாங்கினேன்..  அதன் உள்ளடக்கத்தைப் போல் , அதை சொன்ன விதமும் மனதைக் கவர்ந்தது... ஒரு விஷ்யத்தை எத்தனை பக்கங்களில் வேண்டுமானாலும் சொல்லலாம்..


ஆனால் இரண்டே வரிகளில் ஒரு செய்தி... அருகில் ஒரு கருத்துப்படம்.. அவ்வளவுதான்..  சொல்லும் விஷ்யம் எளிதாக மனதில் பதிகிறது

உதாரணமாக இப்படி ஒரு பாடம்.. 
ஒரே வார்த்தையை அடிக்கடி பயன்படுத்தாதீர்கள்... உங்களை ஃபேக் என நினைத்து விடுவார்கள்

 இதற்கு கருத்துப்படம்..

ஒரு பேட்ஸ்மேன் டிஃபன்ஸ் ஆடுகிறார்.. வர்ணனையாளர் சூப்பர் என்கிறார்... ஃபோர் அடிக்கிறார்.. அதற்கும் சூப்பர்... சிக்ஸ் அடித்தால் அதற்கும் சூப்பர்

இப்படி செய்தால் அந்த வர்ணனையாளரின் நம்பகத்தன்மையே வெகுவாக பாதிக்கப்படும்

வெற்றிகரமான மனிதர்கள் இப்படி இல்லாமல் மொழியை சிறப்பாக பயன்படுத்துவார்க்ள்

உதார்ணமாக , அண்ணன் மு க அழகிரி பிறந்த நாளுக்கு ரஜினி சொன்ன வாழ்த்து செய்தியை பாருங்கள்.. வாழ்த்துகள் என பொதுவாக சொல்லாமல் வித்தியாசமான வார்த்தைகளை பயன்படுத்தினார்

 நீங்கள் ஒரு நேர்மையான, நல்ல மனிதர். அரசியல் காலண்டரில் கடைசிப் பக்கம் என்பது யாருக்குமே கிடையாது. எதிர்காலத்தில் நீங்கள் எழுந்து வருவீர்கள் - ரஜினிகாந்த்


இது அழகிரியை  நெகிழ வைத்தது...  நடு நிலையாளர்களை ரசிக்க வைத்தது


-------


Wednesday, January 30, 2019

பொன்னீலன் சொல்லும் குட்டிக் கதை


சாதிக்கொடுமைகள் ஒழிய வேண்டும் என்பது அனைவரின் எண்ணமாகும்

ஆனால் இதற்கான மன நிலை யாரிடமும் இல்லை.. பார்ப்பான் ஒழிக என பிராமணர்களை திட்டுதற்கு ஒரு கருவியாக சாதி ஒழிப்பு கோஷத்தை பலர் பயன்படுத்துகிறார்களே ஒழிய , மாற்றம் தம்மிடம் தொடங்க வேண்டும் என உணர்வதில்லை

ஆதிக்க குணம் கொண்ட சில இடைச்சாதியினரின் இந்த பண்பு குறித்து எழுத்தாளர் பொன்னீலன் தரும் ஒரு உதாரணத்தை கவனியுங்கள்...

---------------

தென்னக கிராமம் ஒன்று... பிராமண சமூகத்தை சென்ற ஒரு பெண் இறந்து விடுகிறாள்.. அவளை சுடுகாட்டில் எரிப்பதற்காக கொண்டு வருகிறார்கள்..சடங்குகள் முடிந்ததும் அனைவரும் கிளம்பி விட்டனர்.... தற்செயலாக அங்கு வந்த ஒருவன் , அவள் இறக்கவில்லை என அறிந்து அவளை காப்பாற்றி விடுகிறான்..

ஆனால் அவள் தன் வீட்டுக்கு போக மறுக்கிறாள்...என்னை பேய் என கருதுவார்கள் என்கிறாள்... அவனும் அந்த லாஜிக்கை ஏற்று அவளை மணந்து தன்னுடன் வைத்துக்கொள்கிறான்

மகிழ்ச்சியாக வாழ்கிறார்கள்

தன் வீட்டுக்கு தன் குழந்தையுடன் செல்ல வேண்டும் என்கிறாள் அவள்... அவனோ , தான் அந்த ஊருக்கு வருவதை ஆதிக்க சாதியினர் விரும்ப மாட்டார்கள் என்கிறான்

ஆனாலும் அவள் வலுக்கட்டாயமாக  அவனை அழைத்து செல்கிறாள்

அவள் வீட்டில் அனைவருக்கும் திகைப்பு.. ஆச்சர்யம்.. இறந்தவள் மீண்டும் வந்து விட்டாளே !
மகிழ்ச்சியுடன் பேசி விட்டு செல்கையில் ஆதிக்க சாதிக்காரர்கள் பார்த்து விடுகிறார்கள்...அவனை கொல்ல முயல்கிறார்கள்.. இனி வரக்கூடாது என எச்சரித்து அனுப்பி விடுகின்றனர்

இன்னொரு முறையும் வந்து பிடிபடுகிறான்..

அவனைக்கொல்ல அனுமதி கேட்டு மன்னனுக்கு ஆள் அனுப்புகிறார்கள்


வாதி சார்பில் ஒருவன்... பிரதிவாதி சார்பில் ஒருவன் என இருவர் செல்கின்றனர்


அவனை கொல்ல வேண்டாம் என்கிறான் மன்னன்.. இருவரும் கிளம்பினர்..

குற்றம் சாட்டப்பட்டவனின் ஆள் சற்று கண்ணயர்ந்து விட , ஆதிக்க சாதியினரின் ஆள் முன்னதாக சென்று விடுகிறான்


கொல்வதற்கு மன்னன் அனுமதி அளித்து விட்டதாக பொய் சொல்லி அவனை கொல்ல வைத்து விடுகிறான்

தாமதமாக வந்த அப்பாவியின் நண்பன் கதறி அழுது விட்டு தற்கொலை செய்து கொல்கிறான்

அந்த பெண்ணும் இறந்து விடுகிறாள்

அந்த மூவருக்கும் ஆலயம் கட்டப்படுகிறது


இதுதான் கிரா சொல்லும் கதை

என்னதான் மனுதர்மம் , வர்ணாஸ்ரமம் என பிராமணர்களை திட்டினாலும் ராஜாவை மிஞ்சிய ராஜ விசுவாசியாக ஆதிக்க சாதியுனர்தான் பல இடங்களில் ஆணவ கொலை , சாதிக் கொலை என செயல்பட்டு வருகின்றனர்

Tuesday, January 29, 2019

தடம் மாறாத போராளி - ஜார்ஜ் ஃபெர்னாண்டஸ்ஜன  நாயகத்தையே ஒட்டு மொத்தமாக குழி தோண்டி புதைக்க நடந்த முதலும் கடைசியுமான முயற்சி இந்திரா காந்தி காலத்தில் நடந்தது

எமர்ஜென்சி கொண்டு வரப்பட்டு அனைத்து ஜன நாயக அமைப்புகளும் முடக்கப்பட்டன..


தற்போது வட கொரியா இருப்பதுபோல தன் தலைமையில் ஒரு சர்வாதிகார ஆட்சியை கொண்டு வந்து , தேர்தல்களை அழித்து விட்டு , ஒற்றை கட்சி முறையை கொண்டு வர இந்திரா முயன்றார்

ஜெயப்பிரகாஷ் நாராயணன் உள்ளிட்ட பலர் போராடி அந்த சூழ்ச்சியை முறியடித்து மீண்டும் ஜன நாயகத்தை நிலை நாட்டினர்

 ஜெபி போன்ற சோஷலிஸ்ட் கட்சித்தலைவர்கள் இல்லையென்றால் இன்றைய இந்திய ஜன நாயகமே கிடையாது.. ஆனாலும் அப்படி ஒரு கட்சியே இன்று மறக்கப்பட்டு விட்டது

ஆனாலும் ஜெபி , கிருபாளினி , அச்சுத் பட்டவர்த்தன் , பிரபுதாஸ் பட்வாரி , மது தண்டவதே , அசோக் மேத்தா போன்ற சோஷலிஸ்ட் தலைவர்கள் பெயர்களுக்கு இருக்கும் மரியாதை வேறு யாருக்கும் கிடைக்க வாய்ப்பில்லை.. அவர்கள் வரிசையில் ஜார்ஜ் ஃபெர்னாண்டஸ் , மது லிமாயி , சுரேந்திர மோகன் போன்ற தலைவர்கள் அரிய பங்காற்றியுள்ளர்...

தமிழத்தைப்பொருத்தவரை திமுக.வும் அந்த தலைவர்களுடன் சேர்ந்து , எமர்ஜென்சியை எதிர்த்தனர் என்பது வரலாற்று உண்மை... என்றென்றும் திமுகவுக்கு பெருமை சேர்க்கும் நிகழ்வு அது..ஆனால்  , எமர்ஜென்சிக்குப் பிறகு வந்த தேர்தலில் இந்தியாவே இந்திராவுக்கு எதிராக வாக்களித்தாலும் தமிழகம் காங்கிரசுக்கு ஆதரவாகவே வாக்களித்தது

காங்கிரசின் பலத்தை உணர்ந்த திமுக , எமர்ஜென்சி கொடுமைகளை மறந்து விட்டு  , (அப்பாவி தொண்டர்களின் தியாகத்தை மறந்து விட்டு )நேருவின் மகளே வருக , நிலையான ஆட்சி தருக என காங்கிரசில் ஐக்கியம் ஆனது.

மிசாவில் கைதான பல திமுகவினர் , தமது பெயருக்கு முன் மிசா என பெருமையாக போட்ட்டுகொண்டனர்.,.. இந்திராவை குளிர்விக்கும் பொருட்டு , இந்த மிசா அடைமொழி கைவிடப்பட்டது...  பேட்ட படத்தில் மிசா வை மறந்த இந்த சம்பவத்தை கேலி செய்திருப்பதை கவனித்து இருப்பீர்கள்


காலப்போக்கில் வட இந்தியாவிலும் பலர் காங்கிரசை நோக்கி சென்றனர்


கடைசிவரை காங்கிரஸ் எதிர்ப்பில் உறுதியாக இருந்தவர்கள் வெகு சிலர்தான்.  அவர்களில் முக்கியமானவர் ஜார்ஜ் ஃபெர்னாண்டஸ்

இந்திராவை எதிர்த்து கடுமையாக போராடிய அவர் கடைசி மூச்சு வரை எந்த காம்ப்ரமைசும் செய்து கொள்ளவில்லை

அவரது காங்கிரஸ் எதிர்ப்புக்கு ஓர் உதாரணம்

அப்போது காங்கிரசும் இடதுசாரிகளும் ஒன்றிணைந்து செயல்பட்ட கால கட்ட்டம்..  பாராளுமன்ற விவாதத்தில் ஜார்ஜ் பேசினார்

இந்தியாவை அழிப்பதையே நோக்கமாக கொண்ட கட்சி காங்கிரஸ்... ஊழல் , அராஜகம் போன்றவற்றையே தன் கொள்கையாக கொண்டது என பேச பேச கம்யூனிஸ்ட்களும் காங்கிரசும் எதிர்த்து குரல் கொடுத்தனர்.. அடிப்படை அற்ற குற்றச்சாட்டு , அவதூறு என கம்யூனிஸ்ட் தலைவர்கள் ஆவேசமாக பேசினார்

ஜார்ஜ் தனக்கே உரித்தான குறும்புடன் சொன்னார்... “ நான் இது வரை வாசித்தது உங்கள் ( கம்யூனிஸ்ட் ) தேர்தல் அறிக்கையைத்தான்,,  தேர்தலின்போது ஊழல் கட்சியாக இருந்த காங்கிர்ஸ் இப்போது உங்கள் நண்பன் ஆகி விட்டது... இது உங்களுக்கே நல்லதல்ல... “

அவர் சொன்னதன் பொருளை பிற்காலத்தில் இடது சாரிகள் உணர்ந்தனர்...  இன்று மேற்கு வங்காளத்தில் அவர்கள் செல்வாக்கு போய் விட்டது... கேரளாவில் மட்டும் ஆட்சி செய்யும் மா நில கட்சியாக சுருங்கி விட்டது கம்யூனிஸ்ட்.. காரணம் காங்கிரஸ் சகவாசம்

அவர் ராணுவ அமைச்சராக இருந்தபோதுதான் , பொக்ரான் அணுகுண்டு பரிசோதனை வெற்றிகரமாக நிகழ்ந்தது

ரயில்வே ஸ்ட்ரைக்கை வெற்றி கரமாக நடத்திய அவர் பிற்காலத்தில் ரயில்வே துறை அமைச்சரானார்


காங்கிரசை எதிர்த்து வென்ற ஜனதா , ஜனதா தள , பிஜேபி கூட்டணி அமைச்சரவைகளில் இருந்த இவர் மட்டுமே காங்கிரஸ் எதிர்ப்பு என்பதில் உறுதியாக இருந்தார்

பரம்பரை ஆட்சியையும் சர்வாதிகாரத்தையும் எதிர்த்த இவர் பெயர் காரணம் சுவார்ஸ்யமானது.. ஃபெர்னாண்டஸ் என்பது குடும்ப பெயர்.. ஜார்ஜ் என்பது ?
அதுதான் சுவாரஸ்யம்.. இவர் அன்னை ஜார்ஜ் மன்னரின் தீவிர ரசிகர்.. அந்த அன்பின் காரணமான இவருக்கு வைக்கப்பட்ட பெயர்தான் ஜார்ஜ் ஃபெர்னாண்டஸ்

மன்னர் பெயர் தாங்கிய இவர் , சர்வாதிகார ஆட்சியை தூக்கி எறிவதில் முன் நின்றார் என்பதுபொரு வரலாற்று ட்விஸ்ட்

பேச்சாற்றல் மிக்கவர் , பல மொழிகளில் ஆளுமை கொண்டவர், பல்வேறு மா நிலங்களில் செல்வாக்கு கொண்டவர் என இவரைப்பற்றி சொல்லிக்கொண்டே போகலாம்


அவர் தலை சீவுவதில் அக்கறை கொண்டவர் அல்லர்.. அவரிடம் சீப்பே கிடையாது... எப்போதும் எளிய தோற்றம் கொண்டவர்.. சகஜமாக பொது இடங்களில் உலவுபவர்  ‘ சார் . நீங்க ஜார்ஜ் ஃபெர்னாண்டஸ் மாதிரியே இருக்கீங்களே என பலர் அவ்வப்போது சொல்வதுண்டு.. ஆமாம் ஜி.. எல்லோரும் அப்படித்தான் சொல்றாங்க.. “ என அலட்டிக்கொள்ளாமல் பதில் அளிப்பார் அவர்

அன்றைய எதிர்ப்பாளர்கள் பலர் இன்று காங்கிரஸ்  நண்பர்களாகி விட்ட நிலையில் அவர்கள் இவரை ஹீரோவாக நினைக்காவிடினும் மக்கள் மனதில் என்றும் அவர் ஒரு  ஹீரோவாக போராளியாக இருப்பார்


Former Minister George Fernandes being arrested during the Emergency period.

Monday, January 28, 2019

ரஜினி குறித்து விஜய்

இளைய தளபதி விஜய் நடித்த பழைய படங்களில் ரஜினி படங்களின் தாக்கம் அதிகமாக இருக்கும்

இதற்கெல்லாம் சிகரம் வைத்தாற்போல் சந்திரமுகி வெற்றி விழாவில் ரஜினி மீதான தன் மரியாதையை அழகாக வெளிப்படுத்தினார்... பேச்சாளர் பெயர் பட்டியலில் அவர் பெயர் இல்லை என்றாலும் அவராகவே கலந்து கொண்டார்... அந்த வருகைக்கு மரியாதை செலுத்தும்பொருட்டு அவரை பேச அழைத்தனர், அழகாக பேசினார்

ஆனால் கடந்த சில வருடங்களாக ஒரு விலகல் ஏற்பட்டது... கலைஞர் விழாவில் அஜித் பேச்சுக்கு ரஜினி கைதட்டியது , பில்லா படத்தை தொடங்கி வைத்தது போன்ற நிகழ்வுகள் ரஜினியை அஜித்துடன் நெருக்கமாக காட்டவே மெல்ல விஜய் விலகினார்

தற்போது பேட்ட விஸ்வாசம் மோதலில் , அஜித் ரசிகர்ல்களின் போக்கால் மீண்டும் ரஜினி குறித்து பேச ஆரம்பித்துள்ளார் விஜய்

குமுதம் இதழில் பத்து கேள்விகளுக்கு பதில் அளித்துள்ளார்...அதில் நான்கு பதில்கள் ரஜினி ரெஃபெரன்ஸுடன் உள்ளன

நீங்கள் பார்த்த முதல் படம் ?

விஜய் - தலைவர் அறிமுகமான அபூர்வ ராகங்கள்


நீங்கள் பெற்ற முதல் வாழ்த்து?

சூப்பர் ஸ்டார் ரஜினி என் முதல் படத்தை தொடக்க்கி வைத்து வாழ்த்தி பேசினார்.. உனக்கு கடவுள் அருள் இருக்கிறது...தந்தை ஆதரவு இருக்கிறது....இன்னும் கடினமாக உழை.,,, உயர் இடத்தை அடைவாய் என வாழ்த்தினார்..அதுதான் நான் பெற்ற முதல் வாழ்த்து

நீங்கள் சந்தித்த முதல் வி ஐ பி?

நான் சிகப்பு மனிதன் படப்பிடிப்பில் சூப்பர் ஸ்டார் ரஜினியை சந்தித்தது என் முதல் வி ஐ பி அனுபவம்


நீங்கள் பேசிய முதல் வசனம்?


என் அம்மாவை அன்று அடித்தபோது சும்மா இருந்தேன்,,,இனி அடித்தால்? கூட்டி கழித்துப் பாரு... கணக்கு சரியா வரும் என ராதாரவி முன் பேசினேன்

Sunday, January 27, 2019

பிச்சைஃபைட் என்றால் என்ன ? எடுத்துக்காட்டுடன் விளக்குகபிச்சைஃபைட்... (pichaified)

பன்னாட்டு நிறுவனத்தில்   மேலதிகரியாக பணி புரியும் ஒரு நண்பனை சந்தித்தேன்.,., இணைய நண்பர்களையே அதிகம் சந்திக்கும் சூழலில் , ” நேரடி “ நண்பனை இப்படி சந்தித்து வெகு நாட்கள் ஆகி விட்டன


இல்லத்தில் சந்திப்பதோ ஹோட்டல் அறையில் சந்திப்பதோ உவப்பாக இல்லை... பேசுவதற்காகவே ஒரு ரயில் பயணம் மேற்கொண்டோம்... பிளாட்ஃபாரத்தில் தேநீர் அருந்தியபடி பல விஷயங்களை விவாதித்தோம்..

ஸ்டார் ஹோட்டலில் செமினார் தலைமை ஏற்று நடத்துவதற்காக சென்னை வந்துள்ள அவன் , பிளாட்ஃபார்ம் விவாதத்திலும் உற்சாகமாக கலந்து கொண்டது மகிழ்வளித்தது...

இலக்கியம் , கிரிக்கெட், சினிமா என பல திசைகளில் விவாதம் சிறகடித்தது


  • இங்கிலாந்துக்கு எதிராக வெஸ்ட் இண்டீஸ் அணி அபார வெற்றி பெற்றுள்ளது கிரிக்கெட் ரசிகர்களுக்கு மகிழ்வளிப்பது
  • ஆஸ்திரேலியாவை இந்தியா வெல்ல முக்கிய காரணம் புஜாரா மற்றும் மயங்க் அகர்வால் ஆகியோரின் அபார ஆட்டமாகும்... சுவாரஸ்ய நிகழ்வாக இவர்கள் இருவரும் எதிரெதிர் அணிகளில் ஆடும் சூழல் உருவானது.. ரஞ்சிக்கோப்பையின் முக்கியமான ஆட்டம் ஒன்றில் கர்னாடக சௌராஷ்ட்ர அணிகள் மோதின,, ஆட்டம் சூடு பறந்தது....  முடிவை கடைசி வரை கணிக்க முடியவில்லை... அகர்வால் , புஜாரா என இருவருமே அவரவர் அணிகளுக்கு சிறப்பான பங்களிப்பை அளித்தனர்.. 20 -20 போன்ற தமாஷ்களை விட இது போன்ற ஆடடங்களில்தான் வீரர்களின் கேரக்டர் வெளிப்படுகிறது

  • அபூர்வ ஆலயங்கள் குறித்த நூல் ஒன்று கிடைத்தது... அதை அடிப்படையாக கொண்டு கிராமங்களுக்கு சென்றேன்.... பண்டைய சிவாலயம் ஒன்றைக் கண்டு மகிழ்ந்தேன்...பூட்டப்பட்டு இருந்தது..அக்கம்பக்கத்தார் என் மீது பரிவு கொண்டு பூசாரியை வரவழைத்து , கோயிலை திறந்து சாமி தரிசனம் செய்ய வைத்தனர்... அவர்கள் அன்பில் ஆண்டவனைக் கண்டேன் 


  • கண்ணில் கட்டி வந்து செம வலி.. வலியை மறக்க நிம்மதியாக தூங்கினேன்... காஃபி அருந்த சென்ற போது , கருவாட்டு கூடைக்கார பெண்மணி , கண்ணில் என்னப்பா தம்பி என்றார்... அவர் என் சம வயதினராக இருக்கலாம்... சின்னவராக இருக்கலாம்.. பெரியவராக இருக்கலாம்... அவர் தம்பி என்பது சார் என அழைப்பது போல ஒரு வழ்க்குச்சொல் என நினைத்துக்கொண்டேன்... அல்லது அந்தச்சொல் பரிவை , ஒரு விலகலுடன் கூடிய அன்பை , உரிமையை , தன் உயர்வை காட்டுவதாகவும் இருக்கலாம்...  கண்கட்டி, நாமக்க்ட்டியை அரைத்து பூசி இருக்கிறேன் என்றேன்.. அது சரிப்படாது என சொல்லி விட்டு , ஒரு மருத்துவ டிப்ஸ் கொடுத்தார்... இரவில் அதை செய்தேன்..காலையில். அறவே குணமாகி விட்டது
அவருக்கு நன்றி சொல்ல தேடுகிறேன்.., நாம் நன்றி சொல்ல நினைக்கும் பலரை பார்க்கவே முடிவதில்லை... அவர்கள் நமக்கு செய்தது பிறர்க்கு நாம் செய்வதுதான் நன்றிக்கடன் என நினைத்துக்கொண்டேன்


 

Thursday, January 24, 2019

அராத்துவின் பொண்டாட்டியில் சாரு , ஜெயமோகன் , எஸ் ரா , ராஜேஷ்குமார்


 சில மாதங்களுக்கு முன்பு , திமுக பேச்சாளர் ஒருவர் நடத்தும் இலக்கிய ( ? !! ) பத்திரிக்கையில் ஒரு சிறுகதை வெளிவந்தது... மதுரைப் பகுதியை சார்ந்த ஒரு நாட்டுப்புற கலைஞரின் தனிப்பட்ட வாழ்வு அவர் பெயரைக் குறிப்பிட்டு , அவரது அந்தரங்க விஷ்யங்கள் கதை என்ற பெயரில் வெளி வந்திரிந்தது...இது அந்தப் பகுதி மக்களிடம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது...

இலக்கிய வட்டாரமே வெட்கி தலை குனிந்தது,,, மஞ்சள் பத்திரிக்கைகளில்கூட , கிசுகிசு பாணியில் ஒளிவு முறைவாகத்தான் எழுதுவார்கள்... இப்படி நேரடியாக ஒரு கலைஞனை இழிவு படுத்தி ஊடக அறத்தை மீறி இருந்தது அந்த இதழ்,,,


   பிரபலங்கள் பெயரை இப்படி நேரடியாக குறிப்பிட்டு தனிப்பட்ட விஷ்யங்ககளை எழுதுவது இலக்கியமாகாது


   இப்படி நிஜத்தை அப்பட்டமாக எழுதுவது தவறு என்றால் , தமது பகல் கனவுகளை பிரபலங்கள் பெயரில் எழுதுவதும் தவறுதான்

   அல்லது சும்மா ஒரு சுவாரஸ்யத்துக்காக பிரபலங்கள் பெயரையும் தன் பெயரையும் கதாபாத்திரங்களுக்கு வைப்பவர்கள் இருக்கிறார்கள்..

இப்படி எதுவும் இல்லாமல் , கலாப்பூர்வமாக தமது படைப்புகளில் நிஜ மனிதர்களை உலவ விடுபவர்கள் பலர் உண்டு.. இப்படி வெற்றி அடைந்த படைப்புகளும் பல உண்டு


அந்த வெற்றிகரமான படைப்புகளில் ஒன்றாக சேர்கிறது அராத்துவின் பொண்டாட்டி நாவல்


பல பெயர்களை குறியீட்டு ரீதியாக பயன்படுத்தி இருக்கிறார்... கற்பனைக்கும் நிஜத்துக்கும் நடுவில் அழகாக கையாண்டு இருக்கிறார்...கொஞ்சம் பிசகி இருந்தாலும் காமெடி ஆகி இருக்கும்...அல்லது ஆரம்பத்தில் சொன்னதுப்போல வக்கிரம் ஆகி இருக்கும்


சரி ..கதையில் வரும் சில பாத்திரங்களையும் அவற்றின் குறியீட்டு முக்கியத்துவத்தையும் பார்ப்போம்

பொண்டாட்டி நாவலின் சில பாத்திரங்கள்

1. ஜெயமோகன்

சில உள் நோக்கங்கள் இருந்தாலும் மிகச்சிறந்த புத்திசாலி... விபரம் தெரிந்தவன்   அவனுடைய கிளாஸ் யாருக்கும் வராது..

2 சாரு நிவேதிதா

மகாபாரதத்தில் இளவரசர்களின்  போரிடும் திறமை குறித்த கண்காட்சி ஒன்று நடக்கும்...அர்ச்சுனனின் திறமையை பார்த்து அனைவரும் அசந்து போய் நிற்பார்கள்..இவனை விட திறமைசாலி உலகிலேயே இல்லை என நடுவர் அறிவிப்பார்... ஏன் இல்லை என ஒரு குரல் கேட்கும்... யார் என அனைவரும் பார்ப்பார்கள்..அங்கே கர்ணன் வந்து கொண்டு இருப்பான்...அர்ச்சுனனை மிஞ்சிக் காட்டுவான் கர்ணன்

அதுபோல நாவலில் பல பாத்திரங்கள் வந்து போகும்...கடைசி நேரத்தில் எண்டர் கொடுக்கும் சாரு கேரக்டர் அதுவரை உச்சத்தில் இருந்த ஜெயமோகன் கேரக்டரையே அசைத்துப்பார்க்கும்... 

ஜெயமோகன் கேரக்டரின் எதிர் துருவம் இந்த கேரக்டர்..

3 எஸ் ராமகிருஷ்ணன்

இரண்டு கேரக்டர்களின் சம நிலை இந்த பாத்திரம்

4 ராஜேஷ்குமார்


மேற்சொன்ன மூவரும் என்னதான் அப்பாடக்கர்கள் என்றாலும் நடைமுறை புத்திசாலி இந்த கேரக்டர்தான்


5 செல்வகுமார் கணேசன்

கண்ணியம் கடமை கட்டுப்பாட்டுக்கு ஓர் உதாரணம்


6 கருப்பு

வெளிப்படையான தன்மை

7 கணேசன் அன்பு

passion


இப்படி ஒவ்வொரு கேரக்டரும் ஒவ்வொன்றை பிரதிபலிக்கின்றன
இந்த நாவலில் பல வரிகளை ரசித்தேன்

1 சூரியனைப் பார்த்ததும் குளத்தில் இருந்த தாமரைகள் மீண்டும் தாமரைகள் ஆகின

2 பத்து நிமிடம் முன்புதான் சிறு நீர் கழித்திருந்தாலும் மீண்டும் சிறு நீர் கழிக்க கிளம்பினான்..அந்த அதிகாலையில் செய்வதற்கு வேறு என்ன இருக்கிறது

2 மலர் மலர்வதை எப்படி காண முடியாதோ அதே போல , கொண்டiைக்கடலை கொண்டக்கடலை என கூக்குரல் எப்போது ஒக்கேனக்கல் என மாறுகிறது என்பதையும் காண முடியாது
Wednesday, January 23, 2019

பதில் கிடைக்காத கடிதங்கள்


இணையம் அறிமுகம் ஆன ஆரம்ப காலங்களில் ஈமெயில் என்பது மிகப்பெரிய ஆச்சர்ய்மாக இருந்தது... 

ஒரு நொடியில் உலகின் எந்த மூலையில் இருப்பவருக்கும் தகவல் தெரிவிக்கலாம் என்பது மிகப்பெரிய மகிழ்ச்சி...

ஆனால் என்ன சிக்கல் என்றால் நம் நண்பர்கள் உறவினர்கள் என் யாருக்குமே அப்போது மெயில் ஐ டி இராது...    யாருக்கு மெயில் அனுப்புவது என் தெரியாது...   யாராவது வெகு சிலர் மட்டுமே மெயில் ஐடி உருவாக்கி இருப்பார்கள்

அவர்களுக்கு மெயில் அனுப்புவோம்.. ஆனால் அப்போது கம்ப்யூட்டர் பரவலாக இல்லை என்பதால் உடனடியாக மெயில் பார்க்க மாட்டார்கள்... ஃபோனும்கூட அதிகம் இல்லை என்பதால் லெட்டர் எழுதி , மெயில் அனுப்பிய விபரத்தை சொல்ல வேண்டும்...   அந்த லெட்டர் கிடைத்து விஷ்யம் தெரிந்து அவர்கள் மெயில் பார்த்து நமக்கு பதில் கிடைக்க 10 நாட்கள் ஆகும்

அதன் டெக்னாலஜி வளர்ந்து விட்டது...அனைவரும் தினம் தோறும் அல்ல... ஒவ்வொரு நிமிடமும் மெயில் பார்த்தனர். உடனடியாக பதில் கிடைத்தது

அதன் பின் இன்னும் அதிகமாக டெக்னாலஜி வளர்ந்தது... மீண்டும் பழைய நிலை உருவாகிவிட்டது.. பத்து நாட்கள் கழித்துதான் ரிப்ளை வருகிறது

வாட்சப் போன்ற வசதிகள் வந்து விட்டதால் பலர் மெயில் பார்ப்பதே இல்லை..   மெயில் அனுப்பிவிட்டு லெட்டர் போடும் பழைய கலாச்சாரம் மீண்டும் உருவாகி விட்டது.


ஓகே ,,,,மு மேத்தாவின் கவிதை ஒன்று


முகவரி எழுதிய 

அவன் கையெழுத்து சரியில்லை

கடிதம் ஒன்று

அனாதையாகிவிட்டது


சென்சிப்லிட்டியுடன் பொண்டாட்டி


புத்தக கண்காட்சியில் ஒரு அரசியல் பிரமுகரின் ஸ்டால் இருந்தது,,  ஆரம்ப காலத்தில் எழுதிய சில கவிதைகள் காரணமாக இன்னும் அவர் தன்னை இலக்கியவாதி என்றே அடையாளப்படுத்திக் கொள்கிறார்,, புத்தக கண்காட்சியின் போது அவ்வப்போது தன் கட்சி மற்றும் தோழமை கட்சி பிரமுகர்களை தன் ஸ்டாலுக்கு அழைப்பார்... அந்த பிரமுகர்களுடன் கட்சியினரும் வருவதால் அந்த இடமே கும்பலால் சூழப்பட்டு விடும்... அருகில் இருக்கும் ஸ்டால்காரர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு பபாசியிடம் புகார் அளித்தனர்... அந்த புகாரை ஒரு எள்ளலுடன் கடந்து சென்றார் அந்த உரிமையாளர்

சென்சிப்லிட்டி  , பிறர் உணர்வுகளை புரிந்து கொள்ளும் திறன் இனமைதான் இதுபோன்ற பிரச்சனைகளுக்கு காரணமாகும்

அராத்து எழுதியுள்ள பொண்டாட்டி நாவல் இந்த சென்சிப்லிட்டி  குறித்து ( அது இனமை குறித்து )பேசுகிறது

ஜெயமோகன் என்று ஒரு கேரக்டர்.... காக்டெய்ல் கலக்குவதில் அவன் காட்டும் அக்கறை ஒரு கவிதை....அவன் நல்லவனா இல்லையா என்பது வேறு,,, ஆனால் ஒவ்வொரு விஷ்யத்திலும் அவன் காட்டும் அக்கறை , விருந்தோம்பல் , பிறர் மீதான அக்கறை போன்றவை நாம் நல்லவன் என கருதும் என பலருக்கு இருப்பதில்லை.... நல்லவன் என்பதையே ஒரு தகுதியாக நினைக்கிறோம்,.,, அதில்தான் பல பிரச்சனகள் எழுகின்றன


சென்சிப்லிட்டி குறித்து பேசும் இந்த நாவல் அதே சென்சிப்ல்டியுடன் உருவாக்கப்பட்டுள்ளது ...    எழுத்துப்பிழைகள்  , வாக்கியப்பிழைகள் , ஒற்றுப்பிழைகள் இல்லாமல் இப்படி இரு புத்தகம் படித்து பல யுகங்கள் ஆகின்றன.... நாளிதழ்கள் , வார இதழ்கள் என யாருமே இதில் அக்கறை காட்டாத நிலையில் , பிழைகளே இருக்கலாகாது என்ற கவனத்துடன் செதுக்கப்ப்பட்டுள்ளதற்காகவே எத்தனை முறை வேண்டுமானாலும் பாராட்டலாம்

சில இடங்களில் வேண்டுமென்றே சில பிழைகள் , சில வெற்றிடங்கள் , சில தட்டையான சித்தரிப்புகள் உருவாக்கப்பட்டுள்ளது அழகு... அதற்கான காரணங்கள் கதையின் போக்கிலேயே தெரிந்து விடுகின்றன


பேட்ட பட விமர்சனத்தில் , சிம்ரன்  கேரக்டர் என பாதியிலேயே காணாமல் போகிறது என கேட்டிருந்தார் ....  சின்னி ஜெயந்த்  உட்பட ஒவ்வொரு கேரக்டர் குறித்தும் விளக்கமாக படம் எடுக்கவா முடியும் என எண்ணிக்கொண்டேன்

ஆனால் இந்த கதையில் , அனாவசியமாக எந்த கேரக்டரும் இல்லை என்பதைக் காணும்போது  , ஒரு படைப்பாளியாக அந்த விமர்சனத்தை வைக்கும் உரிமை அராத்துவுக்கு உண்டு என நினைத்துக்கொண்டேன்

உதாரணமாக கதையின் நாயகி ஒரு ரயிலில் பயணிக்கிறார்... அந்த ரயிலின் இயக்குனர் பெயர் கேஷுவலாக சொல்லப்படுகிறது...  ஆனால் அது அனாவசிய அறிமுகம் இல்லை என பிறகு தெரிகிறது


தேவையற்ற ஒரு வார்த்தை , ஒரு கேரக்டர்கூட இல்லாத நாவல் ..அராத்து கோஷ்டியினரின் இமயமலைப்பய்ணம் வெகு இயல்பாக கதையுடன் கலப்பது வெகு அழகு.,,,

 நதி உறைந்து விட்டால் மீன் என்னாகும் , மரணம் என்பது என்ன ,... மீண்டும் உயிர்ப்பிக்க முடியும் என்றால் அந்த இடைப்பட்ட காலம் என்ன என்பது போன்ற வரிகள்


தனிமை என்றால் என்ன..,,   தனிமை நம்மை எப்படி மாற்றும் என்பது போன்ற வரிகளில் ஆழமான பார்வை தெரிந்தாலும் அடுத்த நொடியே அதை எழுத்தாளரே பகடி செய்து காலியாக்குவதேல்லாம் வேறு லெவல்

ஃபேக் நாவல்கள் பல படித்திருக்கிறோம்... ஜேஜே சில குறிப்புகள் , நாளை மற்றுமொரு நாளே போன்ற சிலவற்றை ஃபேக் எழுத்துக்கு உதாரணமாக சொல்லலாம்..,,

ஃபேக் என சொன்னாலும் அவை கண்டிப்பாக படிக்க வேண்டியவை,,,, படிக்கவேகூடாத குப்பைகளும் ஏராளம் உண்டு

ஆனால் தன்னைத்தானே ஃபேக் நாவல் என அதிரடியாக அறிவிக்கும் முதல் நாவல் என்ற பெருமை இந்த நாவலுக்கு உண்டு

பகல் கனவுகள் , எழுத்துப்பிழைகள்  , வாக்கியப் பிழைகள் , அமெச்சூர்த்தனமான சிந்தனைகள் , பெண்களை இழிவு செய்யும் கருத்துகள் நிரம்பிய எழுத்துகள் பல இன்றைய சூழலில் நாவல் என்ற பெயரில் வருகின்றன


அவைகளை நாவல் என அழைத்தால் கண்டிப்பாக பொண்டாட்டி நாவலை ஃபேக் நாவல் என்றுதான் சொல்ல வேண்டும்


57 ரூபாய்க்கு பெட்ரோல் போட்டுவிட்டு  , நம் ஆட்கள் 2000 ரூபாயை கொடுப்பார்கள்... சில்லறை எண்ணி கொடுக்கும் வரை பின்னால் நிற்பவர்கள் காத்திருக்க வேண்டும்... - சுரணையின்மை


நிகழ்ச்சிக்கு வருவதாக சொல்லிவிட்டு , வர தவறுவது சுரணையின்மை


நாம் செய்வது பிறருக்கு பிடிக்கவில்லை என அவர் முகபாவத்தின் மூலம் அறிந்து கொள்ள தவறுவது சுரணையின்மைகாதல் என்பது மதித்தல் என்று ஜே கிருஷ்ணமூர்த்தி சொன்னதை சற்று வேறு விதத்தில் சொல்கிறது நாவல்

   மொத்தமாக இல்லாமல் தனி தனி சிறுகதையாக படித்தாலும் நன்றாக இருக்கிறது.. தனி தனி வரிகளுமே கூட அவ்வளவு அழகு

இது எல்லோருக்குமான நாவல் என சொல்ல மாட்டேன்... ஓரளவு பக்குவம் தேவை...சிறுவர்களுக்கு ஏற்றதல்ல....

உள்ளடக்கம் , உருவாக்கம் , சந்தைப்படுத்தும் விதம் , சிரத்தை என அனைத்திலும் சென்சிபிலிட்டியை காட்டும் நாவலைப்படிதத்தில் மகிழ்கிறேன்
Tuesday, January 22, 2019

அஜித் படம் இயக்க விஜயிடம் அனுமதி - இயக்குனர் அனுபவம்


வசூலில் விஞ்சி நிற்பது பேட்டயா விஸ்வாசமா என விவாதம் அனல் பறக்கிறது,,,   டீனேஜ் பருவத்தில் இது சுவையான விவாதமாகும்..  வரவேற்கத்தக்கதும் கூட.. காரணம் எல்லோருமே இதை கடந்துதான் வந்திருப்போம்

ஆனால் சில வியாபாரிகள் இந்த விவாதத்தை தமக்கு சாதகமாக பயன்படுத்துவது தவறு...

காரணம் இதில் எல்லாம் கற்றுக்கொள்ள ஒன்றும் இல்லை,, வசூல் வெற்றி என்பது படத்துக்கு பெருமையோ சிறுமையோ அல்ல

உதாரணமாக நாயகன் படத்தை விட மனிதன் படம்தான் அதிக வசூலைப் பெற்றது.,,,,அதனால் நாயகன் படத்தின் பெருமை குறைந்து விட்டதா என்ன? இரண்டு படங்களையும் விட விஜய்காந்தின் உழவன் மகன் பல இடங்களில் நல்ல வசூல்...  ஆனால் ஒட்டுமொத்தமாக பார்த்தால் மனிதன் மாபெரும் வெற்றிப் படம்.. நாயகன் என்றும் நினைவுகூரப்படத்தக்க முக்கியமான படம் ....

அவ்வளவு ஏன் ? தளபதி குணா ஆகிய படங்களை விட சில இடங்களில் “ தாலாட்டு கேட்குதம்மா “ “ பிரம்மா “ படங்களின் வசூல் அதிகம்,,  ஆனால் ஒட்டுமொத்தமாக பார்த்தால் தளபதி மெகா ஹிட்... குணா மிகச்சிறந்த கிளாசிக்

அவ்வளவு ஏன் ? பல சந்தர்ப்பங்களில் ராமராஜன் படம் அப்போதைய முன்னணி நாயகர்கள் அனைவரையுமே வசூலில் மிஞ்சியதும் உண்டு... எனவே வசூல் அக்கப்போர்கள் எல்லாம்  நீண்ட கால நோக்கில் எந்த முக்கியத்துவமும் அற்றவை.. ஆனால் அவை தவறு என்பதல்ல.. சின்ன வயதில் அது சிறந்த பொழுதுபோக்குதான்

ரசிகர்கள் இப்படி சண்டையிட்டாலும் கலைஞர்கள் அப்படி இருப்பதில்லை.

இயக்குனர் பேரரசு எழுதிய ” என்னை பிரமிக்க வைத்த பிரபலங்கள் “ என்ற நூல் படித்தேன்..   ரஜினி , கமல் , அஜித் , விஜய் , எம் ஜி ஆர் , கலைஞர் , ராஜேஷ் , மனோரமா , பாரதிராஜா , பாக்யராஜ் உட்பட பலர் குறித்து எழுதியுள்ளார்.


கமல் , ரஜினியை இயக்கிய எஸ் பி எம் போல விஜய் அஜித் என பணிபுரிந்தவர் அவர்..  அவரிடம் நிறைய எதிர்பார்த்தோம் .. ஆனால் குடும்ப பிரச்சனைகள் அவர் வளர்ச்சிக்கு தடை போட்டன,,  மீண்டு வருவார் என எதிர்பார்ப்போம்...


அந்த புத்தகத்தில் பல விஷயங்கள் சுவாரஸ்யமாக உள்ளன...


இவர் எழுதிய சிறுகதை ஒன்றை தாய் இதழில் படித்துதான் ராம நாராயணன் இவரை தன் உதவியாளராக சேர்த்துக்கொண்டு திரைப்பயணத்தை ஆரம்பித்து வைத்தார்

அதன் பின் தனியா பிரிந்த பின்னும் கூட , ஏதேனும் பிரச்சனை என்றால் என்னிடம் மீண்டும் வா என் அன்பாக கூறி அனுப்பிய அன்புள்ளம் கொண்டவர் ராம நாராயணன்.. ஏன் எப்போதும் மிருகங்களை வைத்து எடுக்கிறீர்கள்.. சமுதாய சிந்த்னைகளை காட்டலாமே என்று கேட்டதற்கு “ சோறு “ என்றொரு நல்ல படம் எடுத்து பல மாதங்கள் சோற்றுக்கு கஷ்டப்பட்ட கதையை சொன்னாராம் அவர்


நடிகர் விஜய் பல நல்ல இயக்குனர்களை உருவாக்கியுள்ளார்.. எந்த சிபாரிசும் இல்லாமல் , தான் சொன்ன கதையை மட்டுமே நம்பி தனக்கு திருப்பாச்சி பட வாய்ப்பை  அளித்ததை நன்றியுடன் பதிவு செய்துள்ளார்..  அடுத்து சிவகாசி பட வாய்ப்பும் அளித்து , படம் வென்றதும் கார் ஒன்றை பரிசளித்ததையும் சொல்லி இருக்கிறார்அப்போது ஏ வி எம் நிறுவனம் இவரை அழைத்து அஜித் படத்தை இயக்கும் வாய்ப்பை அளித்தது... விஜயால் அறிமுகம் ஆன தன்னை அஜித் ஏற்பாரா என அச்சத்துடன் ,  நான் தான் இயக்குனர் என அஜித்திடம் சொன்னீர்களா என கேட்டார்,.,, ஆமாம் ..,,சொன்னோம்.. அவருக்கும் மகிழ்ச்சிதான் என்றது ஏவி எம் நிறுவனம்


எதற்கும் விஜயிடம் இதை சொல்லிவிடுவோம் என அவரிடம் சொன்னதற்கு “ ரொம்ப மகிழ்ச்சினா.,,, நல்ல விஷ்யம்.... இதை எல்லாம் என்னிடம் சொல்லி அனுமதி வாங்க வேண்டியதில்லை... எனக்கு சந்தோஷம்தான் “ என சொன்னது மட்டும் அன்றி , பட பூஜைக்கு வந்து வாழ்த்தினார் விஜய்..

அஜித் வீட்டுக்கு பல முறை டிவி எஸ் 50யில் சென்றிருக்கிறார் பேரரசு,,, ஷாமிலி குழந்தை நட்சத்திரமாக ராம நாராயாணன் படத்தில் நடித்தபோது பழக்கம் என்பதால் ஒரு துணை இயக்குனராக குடும்ப நண்பராக சென்றிருக்கிறார்... இப்போது இயக்குனராக , அவரிடம் கதை சொல்வதற்கு அவர் வீட்டுக்கு விஜய் பரிசளித்த காரில் சென்றதை நெகிழ்ச்சியுடன் பதிவு செய்துள்ளார்


பாரதிராஜாவை கிரக பிரவேசத்துக்கு அழைத்தபோது அன்றைய தேதியில் பிசி என்றார் பாரதிராஜா... உங்களுக்கு வசதியான தேதியை சொல்லுங்கள் என்று கேட்டு அந்த தேதியில் கிரகபிரவேசத்தை வைத்தார் பேர்ரசு..

பாரதிராஜா வந்து பார்த்தபோது வீடு விழாக்கோலம் பூண்டிருந்தது. ஆனால் வேறு விருந்தினர்கள் யாரும் இல்லை... என் விழாவுக்கு நீங்கள் மட்டும் வந்தால்போதும் என்பதால்தான் இந்த ஏற்பாடு.,,காரணம் உங்களைப் பார்த்து உருவானவன் நான் என சொல்லி அவரை நெகிழச்செய்திருக்கிறார் பேர்ரசு

ரஜினி ரசிகனான இவர் சின்ன வயதில் 60 கிமீ சைக்கிள் மிதித்து மதுரையில் ரஜினி படம் பார்த்தவர்

அப்படிப்பட்ட ரஜினி இவர் படங்க்ளை பார்த்து விட்டு ( திருப்பாச்சி , சிவகாசி ) போன் செய்து பாராட்டியதை பெருமையாக நினைக்கிறார்.,,  ரஜினிக்கு பிரத்யேகயமாக திருப்பதி படம் திரையிட்டப்பட்டு அவருடம் படம் பார்த்ததையும் சொல்லி இருக்கிறார்


வாலி , வைரமுத்து போன்றோருடனான அனுபவம் , இவர் பாடால் குறித்து விஜ்யின் கமெண்ட்,,,  நெகிழ வைத்த எஸ் பி எம்  , ஆச்சர்ய்படுத்திய மணிர்த்னம் என பல தகவல்கள்’

கண்டிப்பாக படியுங்கள்


என்னைப் பிரமிக்க வைத்த பிரபலங்கள் - இயக்குநர் பேரரசு
பக்.160; ரூ.110; 
கற்பகம் புத்தகாலயம்

Monday, January 21, 2019

பொலிவான புத்தக கண்காட்சி


புத்தக கண்காட்சியில் வழக்கத்தை விட கூட்டம் சற்று குறைவு..இதை ஆரோக்கியமான மாற்றமாகவே பார்க்கிறேன்.. வேடிக்கை பார்க்கும் கூட்டம் குறைவது நல்லதுதான்

அப்படி குறைந்தாலுமேகூட , ஸ்டால்களில் இருக்கும் கூட்டத்தை விட , வெளியே தின்பண்டங்கள் ஸ்டால்களிலும் வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை கடைகளிலும் கூட்டம் அதிகம்..

சொற்பொழிவுகளுக்கு என ஒரு கூட்டம் கூடுகிறது... பல சொற்பொழிவுகள் சிறப்பாக இருந்தன,. ஆனாலும் வாக்குகளைப் பிரிப்பது போல , புத்த கூட்டத்தை இப்படி பிரிக்கலாமா என்ற கேள்வியும் எழுந்தது

பல அபூர்வமா ரஷ்ய புத்தகங்கள் ஒரு ஸ்டாலில் கிடைத்தன...ஒரு புத்தகம் 100 ரூபாய் என்றல்ல... 1000 என்றாலும் வாங்க பலர் தயார்தான்,, ஆனாலும் கூட 10 ரூபாய் , 20 ரூபாய், 5 ரூபாய் என விலை வைத்திருந்தனர்..

கொள்கை அடிப்படையில் நடத்தப்படும் பதிப்பகங்களுக்கும் வியாபார ரீதியிலான பதிப்பகங்களுக்கும் இடையேயான வித்தியாசம் இதுதான்

புதியவர்கள் பலர் எழுத்தாளர்களாக ஆகி இருப்பது வரவேற்கத்தக்கது... புது தலைமுறை எழுத்தாளர்கள் பலர் எழுத்துகள் கவர்ந்தன

அதே நேரத்தில் கிளாசிக் எழுத்தாளர்கள் நூல்களைப் பார்க்கையில் எப்படி இத்தனை நாள் படிக்கத்தவறினோம் என்ற எண்ணம் ஏற்பட்டது

குறிப்பாக எம் எஸ் கல்யாண சுந்தரத்தை நான் அறிய நேர்ந்ததை என் அதிர்ஷ்டமாக நினைக்கிறேன்.. பகல் கனவு , இருபது ஆண்டுகள் ஆகிய இரு நாவல்களுமே அருமை... விரிவாக பிறகு எழுதுவேன்

 உடல் மொழி என்பது குறித்து இறையன்பு பேசினார்.

பேசும் தலைப்புக்கேற்ப , மேடையின் நடுப்பகுதிக்கு மைக்கை கொண்டு வரச்சொல்லி பேசினார்.. அதற்கான காரணத்தையும் சொன்னார்... அழகு

படித்த  புத்தகங்கள் குறித்து  பிறகு எழுதுவேன்
 

ரஞ்சித் பாலச்சந்தர் ஷங்கர் - ரஜினி இயக்குனர்கள் -2ரஜினியை வைத்து 3 உலகளாவிய ஹிட் கொடுத்த ஷங்கர் உன் குருட்டுக் கண்களுக்கு தெரியவில்லையா என ஒரு நண்பர் பின்னூட்டம் இட்டு இருந்தார்


ரஜினியை அறிமுகம் செய்த பாலச்சந்தர்  , ரஜினியின் சமூக அக்கறைய வெளிக்கொணர்ந்த ரஞ்சித் , ரஜினியின் உலகாளவிய புகழை நிரூபித்த ஷங்கர் ஆகியோரை தனியாக பட்டியலிட விரும்பியே அதில் சேர்க்கவில்லை

இப்போது இவர்களைப் பார்ப்போம்

கே பாலச்சந்தர்

மிகச் சிறந்த இயக்குனர்.. பேர் சொல்லும் அளவுக்கு பல படங்கள் எடுத்துள்ளார்.. ஒரு பல்கலைக்கழகம் இவர்

கமல்தான் இவருக்கு நெருக்கமாக இருந்திருக்க வேண்டும்.. ஆனால் ரஜினி மீது அவர் ஆரம்ப காலத்தில் பரிவும் அக்கறையும் எந்த எதிர்பார்ப்பும் இல்லாத அன்பை மட்டுமே காட்டுகிறது... சினிமாத்துறையின் பல கலைகள் அறிந்த , சிவப்பு நிறமுள்ள , சொந்த சாதியைச் சேர்ந்த கமல் என்ற ஒருவர் இருக்கும்போது ரஜினி மீது ஏன் அவ்வளவு அக்கறை காட்டினார் என்பது மனதை நெகிழச்செய்கிறது...

ஒரு அளவுக்கு மேல் ரஜினியை வளர்த்த பின்  , இனி அவரை தன்னால் கையாள முடியாது  என உணர்ந்து எஸ் பி எம் , கே எஸ் ரவிகுமார் என பிற இயக்குனர்களை இயக்கச்செய்து படம் தயாரித்த இவர் பெருந்தன்மையை சினிமா உலகம் மட்டுமல்ல,,, பொதுவான வரலாறும் மறக்காது...


கமலையும் ரஜினியையும் ஒன்றுபோல நேசித்த இவர் , தன் படங்களில் இருவரையும் பேலன்ஸ் செய்து நடிக்க வைத்திருப்பார்...

இப்படி இரு சிகரங்களை உருவாக்கிய இவர் சாதனையை இனி யாருமே செய்ய முடியாது


ரஞ்சித்


முள்ளும் மலரும் படத்துக்குப் பின் ரஜினியின் யதார்த்த நடிப்பை கபாலி படத்தில் வெளிக்கொணர்ந்தவர் இவர்... ஹீரோயிசமும் இயல்பாக அமைந்திருக்கும்,,,  ரஜினிக்கு புதிதாக ரசிகர்களை சேர்த்து தந்த படம் கபாலி

படத்துக்கு கிடைத்த வரவேற்பால் மீண்டும் காலா படத்தில் இணைந்தனர்...

 நிலம் எங்கள் உரிமை என அழுத்தமாக சொன்ன படம்...  வெகு நாட்களுக்குப்பின் தமிழ் சினிமா ஒரு ஆழமான வில்லனைப் பார்த்தது...  சமூக அக்கறை கொண்ட ஒரு படத்தில் ஒரு முன்னணி நாயகன் நடிப்பது இதுவே முதல் முறை.. அதை முன்னுதாரணமாகக்கொண்டு மேலும் பல படங்கள் வர வேண்டும்/

புத்தம் குறித்த லேசான அறிமுகம் கொடுத்த படம்... ( புத்தம் குறித்து பிறகு விரிவாக எழுதுவேன் )

இந்த காம்பினேஷனை மீண்டும் காண ஆசை

ஷ்ங்கர்

சிவாஜி படத்தில் வரும் அதிரடிக்காரன் பாடல் இன்னும் அடிக்கடி கேட்கும் பாடலாக உள்ளது

குழந்தை ரசிகர்களை மீண்டும் ரஜினியிடம் ஈர்த்தவை ஷங்கர் படங்கள்..  எந்திரன் படமெல்லாம் உலகளவில் ஹிட் ஆன படம்

அந்த பட கதாபாத்திரங்களை மட்டும் வைத்துக்கொண்டு முற்றிலும் வேறுபட்ட ஒரு கதையை  ( 2.0 )கொடுத்தது ஷங்கரின் கிரியேட்டிவிட்டி

வில்லன் என்றால் அவனை வெறுக்கும் காட்சியமைப்புகள் தேவை என ஃபார்முலாவை அடித்து நொறுக்கிய படம்... வில்லனை நாம் இந்த அளவுக்கு நேசிக்கும் ஒரே படம் இதுவாகவே இருக்கும்... இலக்கியவாதிகளின் பங்களிப்பு எந்த அளவுக்கு ஆக்கப்பூர்வ விளைவை ஏற்படுத்தும் என்பதை ஜெயமோகன் காட்டி இருந்தார்


சுஜாதா , ஜெயமோகன் , பாலகுமாரன் என அறிவார்தவர்களை அருகில் வைத்திருப்பது ஷங்கரின் பலம்’’

3.0 படம் வர வேண்டும் என்பது பலரின் விருப்பம்

ரஜினி இயக்குனர்கள் அலசல் - 1

( அடுத்த பதிவு - மகேந்திரனும் ரஜினியும் )

பி வாசு , கே எஸ் ரவிகுமார், சுரேஷ் கிருஷ்ணா - ரஜினி இயக்குனர்கள். ஓர் அலசல்


இப்படி ஒரு மெயில் எனக்கு வந்திருந்தது..

அன்புள்ள பிச்சை..

ஒப்பிடுக.... ராஜசேகர்  , கே எஸ் ரவிகுமார் , பி வாசு , எஸ் பி முத்துராமன் , சுரேஷ் கிருஷ்ணா , கார்த்திக் சுப்புராஜ்

---------------------------------------------

அனைவருமே சிறந்த ரஜினி பட இயக்குனர்கள்தான்.. கலைப்படம் , திகில் படம் , மசாலா படம் என்ற வகைகள் இருப்பது போல ரஜினி படம் என்றொரு வகை இருக்கிறது... அதில் மேற்கண்ட இயக்குனர்கள் அனைவருமே கில்லாடிகள்தான் என்றாலும் அவரர்களுக்கு என சில தனித்தன்மைகள் உள்ளன

எஸ் பி முத்துராமன்

ரஜினியை உருவாக்கியவர் இவர்...  மசாலா படங்கள் மட்டுமன்றி ஸ்ரீ ராகவேந்திரர் உட்பட வித்தியாசமான படங்கள் பல எடுத்தவர்.. ராகவேந்திரர் படமெல்லாம் சினிமா என்பதைக் கடந்து ஆலயங்களில்கூட பார்க்கும் ஆவணப்படம் ஆகி விட்டது..என்றும் அவருக்கு புகழ் சேர்க்கும் படம் அது...

புவனா ஒரு கேள்விக் குறி படத்தில் ரஜினியை ஹீரோ ஆக்கினார்..ஆறிலிருந்து அறுபது வரை  , எங்கேயோ கேட்ட குரல் என ரஜினியின் நடிப்பின்மீது நம்பிக்கை வைத்து வித்தியாசமான படங்களைத்தந்தார்

மனிதன், முரட்டுக்காளை , ராஜா சின்ன ராஜா, குரு சிஷ்யன் , அதிசயப் பிறவி என ரஜினி என்றால் நினைவுக்கு வரும் பல படங்களைக் கொடுத்தவர் எஸ் பி எம்..

இவ்வளவு பெரிய இயக்குனரான இவர் , அந்த பந்தா சற்றும் இன்றி , பல பொது நிகழ்ச்சிகளில் ஓர் இளைஞன் போல ஓடியாடி வேலை செய்வதை பார்த்தால் பிரமிப்பாக இருக்கும்,, ஒரு இலக்கிய மேடையை சினிமா செட் போல அழகாக வடிவமைத்து இருந்ததை பார்த்து பிரமித்து இருக்கிறேன்,,

கமல்ஹாசனுக்கும் வேண்டியவர் இவர்... ஒரே கால கட்டத்தில் ரஜினி கமல் என இருவருடன் பணியாற்றிய சாதனைக்குரிய்வர்

அந்த சந்தர்ப்பங்களில் சில நேரங்களில் வாய்தவறி ரஜினியை கமல் என்றும் கமலை ரஜினி என்றும் அழைத்து விடுவாராம்

எப்ப பாரு,, கமல் நினைப்புதானா என ரஜினி கேலி செய்வாராம்

ரஜினிதான் உங்கள் செல்லப்பிள்ளை என கமல் கேலி செய்வாராம்

இது போன்ற பல அனுபவங்களை அவர் பேசிக் கேட்பது தனி அனுபவம்


ராஜசேகர்

அதிரடிப்பட நாயகனாக இருந்த ரஜினியின் நகைச்சுவை நடிப்பை வெளிக்கொணர்ந்தவர் இவர்...  தம்பிக்கு எந்த ஊரு படத்தின் பாப்பா போட்ட தாப்பாவை யாரும் மறக்க முடியாது..   இளைஞர்களின் நடிகராக இருந்த ரஜினியை பெண்களிடமும் குழந்தைகளிடமும் கொண்டு சேர்த்தவர் இவர்..,, சத்யராஜின் நடிப்பை சிறப்பாக வெளிக்கொணர்ந்த பெருமையும் இவருக்கு உண்டு ( காக்கிச் சட்டை)

விக்ரம் , காக்கிச்சட்டை என கமலுக்கும் நெருக்கமானவர் என்றாலும் ரஜினியுடன் தான் அதிகம் பணியாற்றி இருக்க்கிறார்.. தர்மதுரை படத்தின் நூறாவது நாள் கொண்டாட்ட கால கட்டத்தில் இவர் அகால மரணம் அடைந்தது சினிமாவுக்கு பேரிழப்பு

அம்மா.. நீங்க தமிழ் நாட்டுக்கு ராணி மாதிரி,,, நான் தமிழ் நாட்டுக்கே.... சரி வேண்டாம்,,, அதை நானே சொல்லக்கூடாது என அந்த காலத்திலேயே எழுதி கைதட்டல் வாங்கியதை மறக்க முடியாது

பி வாசு

கண்ணா , நான் நினைச்சா உன் இடத்துக்கு... அதாவது தலைவன் என்ற இடத்துக்கு - சுலபமா வந்துற முடியும்.. ஆனால் எனக்கு தேவையும் இல்லை... விருப்பமும் இல்ல... நான் எப்பவுமே வேலைக்காரன் தான் என பஞ்ச் எழுதியவர்,, பணக்காரன்  உழைப்பாளி இவற்றை எல்லாம் விட சந்திரமுகி இவர் புகழை என்றும் பேசும்

கே எஸ் ரவிகுமார்


முக்கியமான ஒரு காலகட்டத்தில் முத்து படத்தை இவர் இயக்குகிறார் என்ற செய்தி பலருக்கும் ஆச்சர்யம் அளித்தது.,,, ஆனால் எந்த நெருக்கடிகளும் இல்லாமல் வெகு நேர்த்தியாக படம் எடுத்து மாபெரும் வெற்றி ஈட்டினார்.. ரகுமானிடம் வெகு சிறப்பான இசையை வாங்கினார்,,  படையப்பாவில் சிவாஜியை பயன் படுத்திய அழகும் மரியாதையும் நெகிழ வைப்பது..  லிங்காவில் சற்று ஏமாற்றி விட்டார்

ஆனாலும் ரஜினி ரசிகர்களுக்கு மனதளவில் நெருக்கமானவர் இவர்

சுரேஷ் கிருஷ்ணா

 மேற்சொன்ன அனைவருக்குமே ரஜினியை நீண்ட நாட்கள் தெரியும்... ஆனால் இவர் திடீரென உள்ளே வந்தவர்... வசந்த் இயக்க மறுத்ததால் அண்ணாமலை பொறுப்பை ஏற்றவர்,,, அந்த பொறுப்பை அவர் திறம்பட செய்த விதம் பிரமிக்கத்தக்கது...அவர் உருவாக்கிய டைட்டில் கார்ட் இன்றுவரை நிற்கிறது...  பாட்ஷா படம் எல்லாம் வேறு லெவல்... பாபா படமுமேகூட ஒரு டிரண்ட் செட்டர்தான்....  மீண்டும் இவர் இயக்க்கத்தில் ரஜினியை பார்க்கும் ஆவல் பலருக்கும் உண்டு...


கார்த்திக் சுப்புராஜ்


ராஜாதிராஜா , சிவா , ஊர்க்காவலன் , அருணாச்சலம் இயக்குனர்களை இந்த பட்டியலில் சேர்க்கவில்லை.. ராஜாதிராஜாவெல்லாம் மிகப்பெரிய ஹிட் .. ஆனால் அந்த இயக்குனர்  ( ஆர் சுந்தர்ராஜன் ) ஒரே ஒரு ரஜினி  படம்தான் எடுத்தார் என்பதால் இதில் சேர்க்கவில்லை

ஆனால் கார்த்திக் சுப்புராஜ் ஒரே ஒரு ரஜினி படம் எடுத்தாலும்  ,  தன் ரத்தம் சதை நரம்பு எல்லாம் ரஜினியிசம் கலந்து இருப்பதை நிரூபித்து விட்டார்...

மேற்சொன்ன அனைத்து படங்களின் சிறப்பம்சத்துடன் , தன் முத்திரையையும் பதித்த இவர் , கண்டிப்பாக மீண்டும் ஒரு படத்தில் ரஜினியுடன் இணைய வேண்டும்


ரஞ்சித , ஷங்கர் , பாலச்சந்தர்Friday, January 18, 2019

டொரண்டினோ+ரஜினி ரசிகன் = பேட்ட


பேட்ட படம் டைட்டில்கள் ஓடத் தொடங்கின.. ரஜினி பெயருக்கு கிடைத்த கைதட்டலுக்கு நிகராக விஜய் சேதுபதி பெயருக்கும் கிடைத்தது.. முதன் முதலில் அவர் திரையில் தோன்றும்போது அவருக்கு கிடைத்த கைதட்டல் ரஜினியை விடவும் விஞ்சி நின்றது.,,   ஓர் இயக்குனராக கார்த்திக் சுப்புராஜ் வென்று விட்டார் என்பதை உணர்ந்த கணம் இது.,  காரணம் பேட்ட படம் ரஜினி ரசிகர்களை தாண்டி அனைவரையுமே திரையரங்கிற்குள் ஈர்த்துள்ளது,,,,  அதற்கு காரணம் ரஜினியை முழுமையாக பயன்படுத்தியது மட்டுமல்ல,,, ரஜினியை மட்டுமே நம்பியிராமல் திரைக்கதையை வலுவாக அமைத்திருப்பதே வெற்றிக்கு காரணம்

இந்தெ வெற்றியில் இருந்து பாடம் கற்க பலர் விரும்பவில்லை... சில தோல்விப் படங்களை முன்னுதாரணமாக காட்டி இது போல ஏன் எடுக்கவில்லை என விமர்சிக்கிறார்கள்...  தோல்விப்படம் எடுப்பது எப்படி என அவருக்கு பாடம் எடுக்கிறார்கள்.

 நமக்கு தோல்வியாளர்கள் குறித்து கவலை இல்லை... ஆனால் வெற்றியை குறித்தும் அதற்குப்பின் இருக்கும் உழைப்பு , அர்ப்பணிப்பு , பேரார்வம் போன்றவை குறித்து தெரிந்து கொள்ள வேண்டும்...

கார்த்திக் சுப்புராஜ் ஒரே நாளில் உருவான அற்புதம் அல்ல... குறும்படங்கள் மூலம் தன்னை பட்டை தீட்டிக்கொண்டவர்...

சில திரையிடல்களில் நான் கலந்து கொண்டிருக்கிறேன்.. ரஜினியை இயக்கும் அளவுக்கு பெரிய ஆள் ஆவார் என அப்போதே கணித்தேன் என சொல்ல விரும்பவில்லை...

பீட்சா படம் எனக்கு பிடித்தாலும்கூட அவரை முழுமையாக நான் உணர்ந்தது ஜிகர்தண்டா படத்தில்தான்.. அப்போதுதான் முதல் முறையாக ரஜினியுடன் அவர் இணைவது குறித்து பலருக்குமே ஓர் ஆர்வம் ஏற்பட்டது... அந்த அளவுக்கு நேர்த்தியாக எடுத்திருந்தார்

இப்போது பேட்ட..    ப்ழைய ரஜினியை மீண்டும் பார்க்கிறோம் என பலர் மகிழ்கிறார்கள்

ஆனால் இதுவரை பார்க்காத ரஜினியையும் பல இடங்களில் அற்புதமாக காட்டி இருக்கிறார்.. ஃபேஸ் ஆஃப் , ஜாங்கோ அன்செய்ண்ட் போன்ற  படங்களை பார்த்த பல ரஜினி ரசிகர்களுக்கு இந்த கேரக்டர் ரஜினிக்கு செமய்யா சூட் ஆகுமே என நினைத்திருப்பார்கள்... அந்த ஆசையை ஒரு ரசிகனாக நிறைவேற்றி இருக்கிறார் கார்த்திக் சுப்புராஜ்

குவெண்டின் டொரண்டினோ ஒரு தமிழ் படத்தை இயக்கினால் எப்படி இருக்குமோ அப்படி இருக்கிறது பேட்ட

தமிழ் படங்களிலேயே உழன்று கொண்டிருக்கும் நம் விமர்சகர்கள் பலருக்க்கு இந்த நுட்பம் பிடிபடவில்லை...

அவர்கள் பல ஹாலிவுட் படங்களைப் பார்ப்பது உண்மைதான்... ஆனால் அதை தமிழ் ரசிக மனோபாவத்துடன் பார்க்கிறார்கள்


அதனால்தான் பேட்ட படத்தின் முழு வீச்சை பலர் உணரவில்லை

கண்டிப்பாக பேட்ட  ஒரு டிட்ரண்ட் செட்டர் என்பதை வரும் ஆண்டுகள் நிரூப்பிக்கும்


Sunday, January 13, 2019

திமுக ,பிஜேபி ... சகல கட்சிகளையும் கலாய்க்கும் “ பேட்ட “


பேட்ட படம் அனைத்து ரசிகர்களையும் கவர்ந்து வெற்றிகரமாக ஓடுகிறது என்றால் அதற்கு ரஜினியின் சிறப்பம்சங்களை முழுமையாக படத்தில் கொண்டு வந்த கார்த்திக் சுப்புராஜை எவ்வளவு பாராட்டினாலும் தகும்

ரஜினி படம் என்றால் கண்டிப்பாக ஓடி விடும் என மிதப்பில் இல்லாமல் திரைக்கதை , வசனம் , ஒளிப்பதிவு , இசை என அனைத்து துறைகளுமே சிறப்பாக செயல்பட்டிருப்ப்பதற்கும் இயக்குனரை பாராட்டலாம்..

Rajinikanth’s ‘Petta’ comes on the heels of his blockbuster ‘2.0’. Photo: PTI

வழக்கமான தமிழ் படங்களில் படம் முடிய பதினைந்து நிமிடங்களுக்கு முன்பே முடிவு தெரிந்து விடும். ரசிகர்கள் கிளம்ப ஆயத்தமாகி விடுவார்கள்

எஸ் பாலச்சந்தர் இயக்கத்தில் சிவாஜி நடிப்பில் வெளியான அந்த நாள் ,தனுஷ் நடிப்பில் வெற்றி மாறன் இயக்கத்தில் வெளியான பொல்லாதவன் போன்ற வெகு சில படங்களில்தான் கடைசி ஷாட்டில் படம் முடியும்,,,

ரஜினி படத்தில் இப்படி ஒரு கிளைமேக்சைப் பார்ப்பது இதுதான் முதல் முறை

படம் முழுக்க விரவி இருக்கும் பிளாக் ஹ்யூமர் படத்தின் மிகப்பெரிய பலம்... படம் முடியும் வரை திரையரங்கு ரசிகர்களின் சிரிப்பொலியால் அதிர்ந்து கொண்டே இருக்கிறது

எந்த பாரபட்சமும் இன்றி அனைத்து கட்சிகளையும் கலாய்த்திருக்கிறார்கள்

பிஜேபி , சிவசேனா போன்ற கட்சிகளை விமர்சித்து இருப்பது ஒரு பக்கம் என்றால் எமர்ஜென்சியை கொண்டு வந்த காங்கிரஸ் , மிசா கொடுமைகளை மறந்து சமரசமான திமுகவையும் கேலி செய்திருப்பது ஆச்சரயம்.. சன் குழுமம் இவற்றை அனுமதித்து இருப்பது பேராச்சர்யம்

கலாச்சார காவல் , பசு பக்தி என பிஜேபியை .. ஆணவ கொலை என சாதிய கட்சிகளை  இப்படி கட்சிசார்பு நிலை எடுக்காமல் விமர்சித்து இருப்பது நல்ல வரவேற்பை பெற்றுள்ளது


Tuesday, January 1, 2019

ஷங்கரின் கார்.. ரஜினியின் தலைமை

படித்தவற்றில் பிடித்தவை


 நடு நிலையாக இருக்க வேண்டிய ஊடகவியலரான நீங்கள் ரஜினியை தலைவர் என அழைத்தது சர்ச்சைக்குள்ளாகி இருக்கிறதே?

ரங்கராஜ் பாண்டே :  கருணா நிதியை பலர் கலைஞர் என அழைக்கிறார்கள்... ஜெயலலிதாவை அம்மா என அழைக்கிறார்கள்.. அதுபோலத்தான் ரஜினியை தலைவர் என அழைப்பதும்.. இதனால் நடு நிலை பாதிக்கப்படாது... எல்லாவற்றுக்கும் மேல் நான் ஒரு ரஜினி ரசிகன்


------

இயக்குனர். வெங்கடேஷ்

ஒரு நாள் இயக்குனர் ஷங்கர் என்னை தன் இல்லத்துக்கு அழைத்தார்... சூரியன் படத்தில் இருவரும் துணை இயக்குனர்களாக பணியாற்றினோம்.. ஜெண்டில்மேன் படத்தில் இணை இயக்குனராக அவரிடம் பணியாற்றினேன்.. அதனால் பழக்கம் உண்டு.. ஏன் அழைக்கிறார் என தெரியாமல் அவர் வீட்டுக்குப் போனேன்..

போனதும் உங்க காரை அனுப்பிச்சுருங்க... நாம பேசி முடிக்க நேரமாகும். நானே டிராப் செய்கிறேன் என்றார்..

 நேரம் போவது தெரியாமல் பேசினோம்.. கடைசியில் என் வீட்டில் தன் காரில் டிராப் செய்தார்

அதற்கு அழைத்தார் என கேட்கவேயில்லையே என நினைவுக்கு வந்தது... அவரிடமே கேட்டேன்... “ நீங்க சொல்ல் வந்த விஷ்யத்தை சொல்ல விடாமல் நானே பேசிட்டேன் போலயே “ என்றேன் நகைச்சுவையாக

அவர் தன் காரை காட்டினார்...புத்தம் புதிய ரோல்ஸ் ராய்ஸ்

விலை உயர்ந்த கார்... எல்லோரும் வாங்க முடியாது... சமூக அந்தஸ்து இருப்போரை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு மட்டுமே விற்பார்கள்

” ரொம்ப மகிழ்ச்சி ஷங்கர் என்றேன்

நீங்கள் மகிழ்வீர்கள் என அறிவேன்..அதனால்தான் அழைத்தேன் என சொல்லி விட்டு புறப்பட்டார்

துணை இயக்குனர்களாக இருந்தபோது என்னிடம் சொன்னார்.. : ஒரு நாள் கண்டிப்பாக புகழ் பெற்ற இயக்குனர் ஆவேன்...ரோல்ஸ் ராய்ஸ் வாங்குவேன் என்றேன்

அவர் கனவு பலித்தது மகிழ்ச்சி...அதை பழைய நண்பனான என்னை நினைவு வைத்து பகிர்ந்தது கூடுதல் ம்கிழ்ச்சி

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா