Monday, April 25, 2011

சாய் பாபா அருள் ( ஆயுள் ) வாக்கு மர்மம்

தொலைக் காட்சிகளிலும், பதிவுலகிலும் கடந்த சில நாட்களாக ஆக்ரமித்து இருப்பது பாபா பற்றிய செய்திகள்தான்..

அலுப்பூட்டும் வகையில் நிறைய வருவதால், பலர் இவற்றை படிப்பதில்லை...

எனவே எல்லாவற்றையும் தொகுத்து இந்த பதிவு...


  • சித்து வேலை பேர்வழி மரணம்
  • கடவுள் மரணமடைந்தார்,,, பக்தர்கள் குழப்பம்
  • 96 வயது வரை வாழ்வேன் என அவர் சொன்னது பொய்யாகி விட்டது.
  • அவர் நல்லது செய்து இருக்கிறார் என்பது முக்கியம் இல்லை... அவர் சித்து வேலை செய்து மக்களை ஏமாற்றி விட்டார் .. 
  • அவரிடம் சென்றவ்ர்கள் அனைவரும், தைரியம் இல்லாதவர்கள்.. தன்னம்பிக்கை அற்றவர்கள்
  • இந்தியாவில் தலைவர்கள் எல்லோருமே நல்லதுதான் செய்கிறார்கள்..எனவே இவர் மட்டும் நல்லது செய்தார் என சொல்வது தவறு... 
இது போனறவை ஒரு புறம்


  • அவர் சித்து வேலை செய்கிறார் என்பதற்காக அவரிடம் செல்லவில்லை... அது எங்களுக்கு பொருட்டே அல்ல
  • உடல் அழிய கூடியதுதான்,, எனவே அவர் உடல் என்றாவது அழியும் என்பது தெரிந்துதான் இருந்தது... எனவே இந்த சம்பவம் நம்பிக்கையில் மாற்றம் ஏற்படுத்தவில்லை...
  • நாம் ஆங்கில முறைப்படி ஆண்டுகளைக் கணக்கிட்டு, சாய் பாபாவுக்கு தற்‌போது வயது 86 என்று கூறுகிறோம். ஆனால் ஹிந்து முறைப்படி சந்திரனை அடிப்படையாக கொண்டே ஆண்டு நிர்ணயிக்கப்படுகிறது. அதாவது ஆங்கில முறைப்படி ஒரு மாதம் என்பது 30 அல்லது 31 நாட்கள். ஆனால் ஹிந்து முறைப்படி பூமியை சந்திரன் ஒருமுறை சுற்றி வரும் காலம்தான் ஒரு மாதம் என கணக்கிடப்படுகிறது. சந்திரன் ஒருமுறை பூமியைச் சுற்றி வர 27.3 நாட்கள்தான் ஆகிறது. அந்த அடிப்படையில் கணக்கிட்டால் சாய் பாபாவுக்கு தற்போது வயது 94 ஆகிறது. மேலும் ஹிந்து வழக்கப்படி அவர் பிறந்த ஆண்டே முதல் வயதாக கருதப்படுவதால் சாய் பாபாவுக்கு 95 ஆகிறது. எனவே சாய் பாபா தமது ஆயுள் குறித்து தெரிவித்த வாக்கு பொய்க்கவில்லை...
இந்த இரு தரப்பு கருத்துக்கள்தான் மீண்டும் மீண்டும் எழுதப்படுகின்றன.. 

பொது நன்மை கருதி வெளியிடுவோர் : பிச்சைக்காரன் டாட் பிளாக்ஸ்பாட் டாட் காம் 

Sunday, April 24, 2011

தமில் மொளியை வலர்க்கும் மாநகராட்சி – 2          தமில் மொளியை , நம் மாநகராட்சி எப்படியெல்லாம் கஷ்டப்பட்டு வலர்க்கிறது என சில மாதங்கள் முன் பார்த்தோம்….

தமில் மொளியை வலர்க்கும் மாநகராட்சி

பலர் பிரமுகர்கள் , தலைவர்கள், தமிழ் அறிஞர்கள் வரக்கூடிய இடத்தில் இப்படி தமிழ் கொலை செய்து இருந்தனர்…
இதைத்தான் நம் பதிவில் பார்த்தோம்.. இன்று அந்த பக்கம் சென்ற எனக்கு இன்ப அதிர்ச்சி… அந்த பிழைகள் திருத்தப்பட்டு இருந்தன…
வாவ் ,,, தவறை சுட்டி காட்டுவது போல , நல்லதை பாராட்டுவதும் நம் கடமை என்பதால், அதை படம் எடுக்க ஆரம்பித்தேன்…
கொஞ்ச நேரத்திலேயே ஏமாற்றம்… சில மட்டும்தான் திருத்தப்பட்டு இருந்தன…
அப்படி திருத்தப்பட்டவை மட்டும் உங்கள் பார்வைக்கு,,,
சென்னை5  tamillசென்னை2
அன்று , பிழையுடன்                 இன்று, திருத்தம்

3tamil   சென்னை1இதில் இன்னொரு கொடுமை…
ஒரு படத்தில் வன்ன பறவைகள் என எழுதி இருந்தார்கள்… தவறான சிலவற்றை திருத்தாமல் விட்டு இருக்கும் இவர்கள், வன்ன பறவை என்ற சரியான வார்த்தையை திருத்தி இருக்கிறார்கள்…
அட ஆண்டவா…
வன்னம் என்றால் என்ன, வண்ணம் என்றால் என்ன என்பது தெரியாமல் இப்படி செய்து இருக்கிறார்களே என நினைத்த படி கிளம்பினேன்…


chennai3

Friday, April 22, 2011

சாய் பாபாவுக்காக , கலைஞர் பிரார்த்தனை!!!!!

புட்டபர்த்தி சத்யா சாய் பாபா உடல் நலம் இன்றி இருப்பதை ஒட்டி , ஒவ்வொருவரின் எதிர் வினைகளை ஒரு பார்வையாளானாக கவனிப்பது நிறைய பாடங்கள் கற்று தருகிறது..
ஒரு சம்பவம் , எப்படி எல்லாம பார்க்கப்படுகிறது?இந்தியாவை மட்டம் தட்ட கிடைத்தது ஒரு வாய்ப்பு என்ற கோணத்தில் இதை செய்தியாக்குகின்றன வெளி நாட்டு மீடியாக்கள்...மரணம் என்பது பயப்பட வேண்டிய ஒன்றல்ல என்ற கோணத்தில் இதை அணுகுகிறார்கள் இந்திய ஆன்மீக வாதிகள்... யாராக இருந்தாலும் உடல் என்பது ஒரு நாள் அழிந்துதான் போகும்... இதில் பரபரப்படிடைய எதுவும் இல்லை என்கிறார்கள் இவர்கள்...நடப்பது அனைத்தும் தெய்வ லீலைகளின் ஓன்று என்கிறார்கள் சாய் பாபா பக்தர்கள்...சாய் பாபா உடல நிலை குறித்து தவறான தகவல்கள்தான் வருகின்றன... அவரை வைத்து சிலர் வியாபாரம் செய்கின்றனர்.. கடந்த சில மாதங்களாகவே அவர் ஒரு கைதி போலத்தான் இருக்கிறார் என்கின்றனர் சிலர்..இந்த நிலையில் முரசொலியில் கலைஞர் தன கருத்தை கூறி இருக்கிறார்...

*************************************************

சாய் பாபா உடல நலம் பாதிக்கப்பட்டு இருக்கிறாரே?கலைஞர் : சாய் பாபா தமிழர்கள் மீதும் தமிழ் நாடு மீதும் அன்பு கொண்டவர்... என் மேல் தனிப்பட்ட முறையில் மரியாதை கொண்டவர்.. தமிழ் நாட்டுக்கு தண்ணீர் கொண்டு வர அவர் உதவியதை மறுக்க முடியாது.. என் வீட்டுக்கே வந்து வெகு நேரம் பேசி கொண்டு இருந்தார்.. விழாவில் கலந்து கொண்டோம்.. அவர் உடல் நலம் பெற அவர் பக்தர்கள் பிரார்த்தித்து வருகின்றனர்.. அவர்கல் பிரார்த்தனை பலிக்க வேண்டும் என நானும் உளமார வேண்டுகிறேன்.Wednesday, April 13, 2011

வாக்களிப்பு அதிகம் என்றால் வெற்றி யாருக்கு? - தேர்தல் அலசல்

தேர்தல் முடிந்து விட்ட நிலையில், வரலாறு காணாத ஓட்டு பதிவு கட்சிகளை குழப்பி இருக்கிறது.

வாக்களிப்பு அதிகம் என்றால் என்ன அர்த்தம் என்பது ஒவ்வொரு நாட்டுக்கும், மா நிலத்துக்கும் வித்தியாசப்படும்..

இடைத்தேர்தலில் வாக்களிப்பு அதிகம் என்றால் அது வேறு விஷயம். பக்கத்து ஊர்களில் இருந்தெல்லாம் ஆட்களை கூட்டி வந்து வாக்களிக்க செய்வார்கள் என்பதால் ஓட்டு கூடும். ஆனால் பொது தேர்தலில் அப்படி செய்ய முடியாது..

சரி,

தமிழ் நாட்டில் இது வரை வாக்களிப்பு எப்படி இருந்தது ?

அசைக்க முடியாத சக்தியாக இருந்த காங்கிரஸ் வீழ்த்தப்பட வேண்டும் என்ற அலை காரணமாக 1967ல் 76 சதவிகிதம் வாக்கு பதிவானது.

1971 ல் எந்த அலையும் இல்லை.. ஆளும் கட்சியே வென்றது... வாக்கு சதவ்கிதம் குறைந்தது ( 72 % ).. அந்த தேர்தலில் வாக்களிப்பு அதிகரித்து இருந்தால் , எதிர் கட்சி  காங்கிரஸ் வென்று இருக்கும்.

1977 ல் தி மு க அரசு கலைக்க பட்டு இருந்தது.. அலை வீசி இருந்தால், வாக்களிப்பு அதிகரித்து இருந்தால், தி மு க வென்று இருக்கும்.. ஆனால் வாக்களிப்பு குறைவு ( 61.58 % ) ..
எனவே தி மு க தோல்வி. அதிமுக வென்றது

1980ல் அதிமுக அரசு கலைக்க பட்டு  இருந்தது... வாக்களிப்பு அதிகரித்தால், அனுதாப அலை என்று பொருள்..
அதே போல வாக்களிப்பு அதிகரித்தது ( 65.42 % ) . அதிமுக வென்றது

1984 ல் இந்திராகாந்தி அனுதாப அலை வீசியது. வாக்களிப்பு கூடியது (73.47 % ) காங்கிரஸ் கூட்டணி வென்றது..

1989 ல் ,  எந்த அலையும் இல்லை..(69.79% ) அதிமுக இரண்டாக போட்டி இட்டதால், திமுக தன் வழக்கமான வாக்குகளை பெற்று வென்றது

1991ல் ராஜீவ் அனுதாப அலையால் அதிமுக வென்றது ( 63.84 % ) இதை மீறி திமுக வெல்ல வேண்டுமானால் , திமுக கலைக்கப்ப்ட்ட அனுதாப அலை வீசி , வாக்களிப்பு அதிகரித்து இருக்க வேண்டும். அப்படி நடக்கவில்லை

1996 ல் ரஜினி வாய்ஸ் , அதிமுக எதிர்ப்பு அலை ஆகியவற்றால் ஓட்டு அதிகரித்தது ( 66.95 % ) . வழக்கமான ஓட்டு மட்டும் பதிவாகி இருந்தால் , அதிமுக - காங்கிரஸ் வென்று இருக்கும்.. ஆனால் அலை வீசியது... தி மு க வென்றது

2001 அலை எதுவும் இல்லை... வழக்கமான ஒட்டுக்கள்தான்..( 59 % _. கூட்டணி பலத்தால் அதிமுக வென்றது

2006ல் விஜயகாந்த் புதிய வாக்காளர்களை கவர்ந்து இழுத்ததால் , வாக்களிப்பு கூடியது ( 70 % ) .. அலை அற்ற தேர்தலில், கூட்டணி பலத்தால் தி முக கூட்டணி  வென்றது

****************************************

இந்த தேர்தலில் அதிக வாக்குகள் பதிவாகியுள்ளன. ( 76 % )
எனவே அலை வீசி இருப்பது தெரிகிறது...

கடந்த காலத்தை வைத்து பார்க்கும்போது, மாற்றத்துக்கான அறிகுறியாகவே தெரிகிறது...இடங்களுக்கு இஸ்லாம் கொடுக்கும் முக்கியத்துவம் - முகமது இஸ்மாயில்


    
உலகில் பல மதங்கள் உண்டு..  ஒவ்வொன்றுக்கும் ஒரு இயல்பு உண்டு. அதில் கட்டுப்பாட்டுக்கும் , சமரசம் செய்து கொள்ளாத தன்மைக்கும், அறிவு சார்ந்த தேடலுக்கும் பெயர் பெற்றது இஸ்லாம் மதம் என்பது என் கருத்து ( அடுத்த பதிவில் நான் ஏன் அப்படி நினைக்கிறேன் என எழுத இருக்கிறேன் )
  
   புனித நூல்கள் என்பது அனைவருக்கும் பொதுவானவையே.. அதில் இருக்கும் ஞான கருத்துக்களை கற்பது அனைவரின் பிறப்புரிமை..

     அந்த வகையில், நான் புனித குர் ஆன் நூலை ஆர்வமாக படிப்பவன் நான். மதம் என்பதை தாண்டி ஒரு தன்னம்பிக்கை நூலாக, நிர்வாக நூலாக , கவிதை புத்தகாமாக அது திகழ்வதை கண்டு பிரமிப்பாக இருக்கிறது..

    ஆனால் இஸ்லாம் என்ன சொல்கிறது என சரிவர புரிந்து கொள்ளாமல் , தன்னை இஸ்லாமியன் என காட்டி கொள்ள குறுக்கு வழியை மேற்கொண்டுள்ளனர் , சிலர் எகிப்து நாட்டில். 
      தர்க்காக்களை இடித்தல் , அல்லாஹ் வழியில் நடந்து அடக்கம் ஆனவர்களை மரியாதை இல்லாமல் பேசுதல் போன்றவை இஸ்லாமிற்கு எதிரானது என புரியாமல் , அப்படிப்பட்ட காரியங்களை செய்து வருகின்றனர்.

    இப்படி செய்வதை இஸ்லாம் ஏற்கவில்லை என நான் படித்ததை வைத்து எழுதி இருந்தேன்.. 

ஆனால் என்னை விட அதிகம் படித்த சகோதரர் முகமது இஸ்மாயில் இன்னும் சிறப்பாக பின்னூட்டத்தில் எழுதியுள்ளார்.

 அவரது கருத்து இதோ, உங்கள் பார்வைக்கு,

*********************************************
       
கண்ணியப்படுத்துதல் வேறு. கடவுளாக நினைப்பது 
வேறு 
- முகமது இஸ்மாயில் 


டங்களுக்கு இஸ்லாத்தில் நிறைய முக்கியத்துவம் உண்டு.
உதாரணமாக ஹஜ் கடமையானது இப்ராஹீம் நபியவர்களின் குடும்பத்தாரை நினைத்து செய்ய கூடிய கடமையாகும்.
இப்ராஹீம் நபியவர்களது குடும்பம் எந்த இடத்தில் தியாகத்தை செய்ததோ அதே இடத்திற்கே போய் நினைவு கூர சொல்வதிலிருந்தே இடத்திற்கான முக்கியத்துவம் விளங்கி விடுகிறது.
குரான் ஷரீஃப்ல ஒரு வசனம் வரும், ”அந்த இடத்திலேயே (ஹுனாலிக என்ற அரபி வார்த்தை) ஜகரிய்யா தம் இறைவனிடம் பிரார்த்தனை செய்வதாகக் கூறினார் (At the very place Zakariyya prayed to his Lord) “இறைவனே! உன்னிடமிருந்து எனக்காக ஒரு பரிசுத்தமான சந்ததியைக் கொடுத்தருள்வாயாக! நிச்சயமாக நீ பிரார்த்தனையைச் செவிமடுத்தருள்வோனாக இருக்கின்றாய்..”
மேலே கண்ட வசனமானது குரான் ஷரீஃப் – ஸீரத்துல்ஆல இம்ரான் (இம்ரானின் சந்ததிகள்) – வசனம் 38ல் இடம் பெற்ற வசனமாகும்.
அதாவது ஜகரிய்யா நபியவர்கள் அன்னை மர்யம் (அலை) (மதர் மேரி) அவர்களின் மிஹ்ராபுக்கு (இடத்திற்கு) வந்த போதெல்லாம் அங்கே உணவு இருப்பதை கண்டார்கள்.
’இங்கே தான் யாருமே வருவதில்லையே, உங்களுக்கு உணவு எப்படி கிடைத்தது? என்று கேட்டதற்கு மர்யம் (அலை) அவர்கள் ‘இது எனக்கு அல்லாஹ்விடமிருந்து கிடைத்தது’ என்பதாக சொல்கிறார்கள்.
அந்த இடத்தை புனிதமான இடமாக உணர்ந்ததனால் தானோ என்னவோ ஜகரிய்யா நபி அந்த இடத்திலேயே பிரார்த்தனை செய்கிறார்கள்.
அன்னை மர்யம் (அலை) ஒரு நபியே அல்ல, ஆனால் அவர்கள் அமர்ந்திருந்த இடத்திற்கு உரிய மரியாதை கிடைத்தது.
அதே போல் குரான் ஷரீஃபில் பிறிதொரு இடத்தில்,
(இதையும் எண்ணிப் பாருங்கள்; “கஃபா என்னும்) வீட்டை நாம் மக்கள் ஒதுங்கும் இடமாகவும் இன்னும் பாதுகாப்பான இடமாகவும் ஆக்கினோம்; இப்ராஹீம் நின்ற இடத்தை – மகாமு இப்ராஹீமை – தொழும் இடமாக நீங்கள் ஆக்கிக் கொள்ளுங்கள்” (என்றும் நாம் சொன்னோம்) இன்னும் “என் வீட்டைச் சுற்றி வருபவர்கள், தங்கியிருப்பவர்கள், ருகூஃ செய்பவர்கள், ஸுஜூது செய்பவர்கள் ஆகியோருக்காகத் தூய்மையாக அதனை வைத்திருக்க வேண்டும்” என்று இப்ராஹீமிடமிருந்தும், இஸ்மாயீலிடமிருந்தும் நாம் உறுதி மொழி வாங்கினோம்.
குரான் ஷரீஃப் 2:125
இப்ராஹீ நபியவர்கள் நின்ற இடத்தையே முக்கியமானதாக குறிப்பிட்டு இங்கே சொல்லப்படுகிறது.
இறைவனுக்கு தன் வாழ்க்கையை அர்ப்பணித்தவர்களின் அடக்கஸ்தலமும் இந்த அர்த்தத்திலேயே கண்ணியப்படுத்தப் படுகிறது.
ஆனால், ஒரு குழப்பத்தார் மன்னிக்கவும் கூட்டத்தார், அடக்கமாகியிருப்பவர்களை அல்லாஹ்வாக கருதப்படுகின்றனர் என்று அவர்களாகவே முடிவு செய்து கொண்டு இது போன்ற இடிசேவையில் இறங்குகின்றனர்.
மிர்ஜா குலாம் காதியானி என்பவர் தன்னை நபியென்று கூறிக் கொண்டு சில குழப்பங்களை ஏற்படுத்தினார்.
ஆனால், ஹஜ்ரத் முஹம்மது (ஸல்) அவர்களை இறுதி நபியாக ஏற்றுக் கொண்ட தர்காவுக்கு ஜியாரத்திற்கு செல்பவர்கள் இவரை ஏற்றுக் கொள்வதில்லை.
மிர்ஜா என்பவரை நபியாகவே ஏற்றுக் கொள்ளாதவர்கள், இறைவனின் மெய்யடியார்களை இறைவனாக ஏற்றுக் கொண்டார்கள் என்று இவர்கள் சொல்வது வெளிப்படையான முரண் என்பதும் இவர்களாகவே இட்டுக் கட்டுவது என்பதும் தவிர வேறில்லை.

A.Mohamed Ismail

ஃப்ளாஷ் நியூஸ்: யாருக்கு ஓட்டு? – ரஜினிகாந்த், சூர்யா பேட்டி


 வழக்கமாக தேர்தலில் வாய்ஸ் கொடுக்கும் ரஜினி, இந்த தேர்தலை பொறுத்தவரை எதுவும் பேசவில்லை..

இந்த நிலையில் தேர்தல் நடக்கும் நாளான இன்று அவர் தன் மவுனத்தை கலைத்தார்.
நிருபர்களிடன் பேசிய அவர் இந்த தேர்தலில் ஊழல்தான் முக்கிய பிரச்சினையாக இருக்கும் என்றார். அடித்த்ட்டு மக்கள் , விவசாயிகள்  ஆகியோர் இந்த தேர்தலில் முக்கிய பங்கு வகிப்பார்கள் என்றார்.

உங்கள் ஓட்டு யாருக்கு , எந்த கட்சி வெல்லும் போன்ற கேள்விகளுக்கு அவர்  நேரடியாக பதில் அளிக்கவில்லை.
எந்த கட்சி வெல்லும் என சொல்ல விரும்பவில்லை.. இந்த தேர்தல் தமிழ் நாட்டுக்கு மிக முக்கிய தேர்தல் என்பதை மட்டும் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.
ஊழலுக்கு எதிராக இயக்கம் எதுவும் ஆரம்பிக்கும் உத்தேசம் இல்லை.. அதைத்தான் அண்ணா ஹசாரே செய்கிறாரே? அதை ஆதரிக்கிறேன். அவர் உண்ணாவிரதம் இருந்த போது சந்திக்க நினைத்தேன். முடியாமல் போய் விட்ட்து என்றார்.

தமிழ் நாடு முழுதும் விறுவிறுப்பாக வாக்கு பதிவு நடந்து வருகிறது... ஏதோ ஓர் அலை வீசுவது தெளிவாக தெரிகிறது..
ஆளும் கட்சி ஆதரவு அலையா ? எதிர்ப்பு அலையா என தெரியவில்லை..
இது ஆளும் கட்சிக்கு எதிரான அலை என சீமான் தெரிவித்தார்.
மக்கள் குடும்பம் குடும்பமாக வாக்களித்து வருகின்றனர். கண்டிப்பாக ஆட்சி மாற்றம் நிகழும் என்றார் அவர்.
நடிகர் சூர்யா பேசுகையில், ஊழல்தான் இந்த தேர்தலில் முக்கிய பிரச்சினை..அந்த அடிப்படையில் வாக்களித்தேன் என்றார் 

Sunday, April 10, 2011

நோ பாஸ்போர்ட்- இலங்கை அடாவடி

வெளி நாடுகளில் "அகதி"  என்ற அந்தஸ்துக்கு விண்ணப்பித்துள்ளவர்களுக்கு இலங்கை நாட்டின் பாஸ்போர்ட் வழங்கப்படாது என அந்த நாட்டு அரசு முடிவு செய்துள்ளது. இது உடனடியாக அமுலுக்கு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இலங்கையில் நடந்த யுத்தம் காரணமாக இல்ங்கையில் இருந்து வந்த பலருக்கு அமெரிக்கா , இங்கிலாந்து போன்ற நாடுகளில் அடைக்கலம் வழங்கப்பட்டது. 

அகதி என்ற அந்தஸ்து அங்கு வழங்கப்பட்டது.

இது போன்றவர்கள் இங்கிலாந்தில் நிரந்தரமாக வசிக்க முடியும். ஒரு வருடம் கழித்து இங்கிலாந்து பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்க முடியும். 

மீண்டும் இலங்கைக்கு செல்ல விரும்பினால் லண்டனில் இருக்கும் இலங்கை தூதரகம் மூலம் இலங்கை பாஸ்போர்ட் வாங்கி வந்தனர்..

இந்த நிலையில் இங்கிலாந்தில் அகதி அந்தஸ்துக்கு விண்ணப்பித்துள்ளவர்களுக்கு இலங்கை நாட்டின் பாஸ்போர்ட் வழங்கப்படாது என இல்ங்கை அறிவித்துள்ளது. 

இத்னால் பலர் நாடற்ற நிலைக்கு ஆளாகும் நிலை ஏற்பட்டுள்ளது..


Friday, April 8, 2011

புனித ஸ்தலங்கள் இடிப்பு- எகிப்தில் இஸ்லாம் விரோத செயல்கள் ஆரம்பம்
 நல்ல விஷ்யம் ஒன்று நடந்தால், இலவச இணைப்பாக கெட்ட விஷ்யமும் சேர்ந்து நடப்பது உலக இயல்பு.

இதைத்தான் அமிர்தம் தேடும்போது நஞ்சும் சேர்ந்து கிடைத்ததாக சொல்வார்கள்.

எகிப்தில் மக்கள் புரட்சி வென்றது நல்ல விஷ்யம். ஆனால் அதற்கு பின் நடக்கும் சில விஷ்யங்கள் இஸ்லாமிய கொள்கைகளுக்கு விரோதமாக இருக்கின்றன. எனவே ஆன்மீகவாதிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.


முபாரக்கின் வெளியேற்றத்திற்கு பிறகு, எகிப்தில், இஸ்லாமியர்களின் வழிபாட்டு தலமான தர்காக்கள் இடிக்கப்படுகின்றன. 

 இதை செய்வது மாற்று மதத்தினர் அல்லர்.. இஸ்லாம் சொல்வதை முழுதும் அறியாமல் , இஸ்லாமியர்கள் சிலரே இந்த கொடும் செயலை செய்வதுதான் இதில் இருக்கும் வேதனை 

"தர்காக்கள் ஹராமென்று அவர்கள் கூறுகின்றார்கள். ஆனால் இப்படி நடந்து கொள்வது தான் ஹராம் என்று அவர்களுக்கு புரியவில்லை" என்று கல்யுப் நகரவாசியான ஹுசைன் அஹமத் வேதனையுடன் கூறினார்.. அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட இமாமான அப்துல் ஹே, இது குறித்து பேசும் போது,  "தர்காக்களை அகற்ற அவர்கள் கையாண்ட முறைகள் தவறுதான். புத்தகங்களை தாங்களாக படித்து ஒரு முடிவுக்கு வருகின்றனர். இது தவறான பாதைக்கு வழி வகுக்கும். ” என்றார் 
    

பாகிஸ்தானில் நடைபெறும் தர்காக்களுக்கு எதிரான செயல்களை போலவே எகிப்திலும் நடைபெறுவதாக ராய்டர்ஸ் தெரிவிக்கின்றது. கடந்த ஞாயிற்றுகிழமையன்று எகிப்தின் மற்றொரு நகரமான டாலாவில் ஒரு தர்காவுக்கு தீ வைக்கப்பட்டது. 


அல்லாவின் பாதையில் நடந்து வாழ்ந்து காட்டிய மகான்களின் அடக்க ஸ்தலம்தான் தர்க்கா. சாதாரணமாக இறப்பது வேறு.. அவர்கள் நிலை வேறு என்கிறது புனித நூலான அல்குர் ஆன் .. 
அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்பட்டோர்களை இறந்தோர் என சொல்லாதீர்கள். அவர்கள் உயிருடன் தான் உள்ளனர். எனினும் உணர மாட்டீர்கள் - அல்குர் ஆன் 2.154 


அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்பட்டோர்களை இறந்தோர் என எண்ணாதீர்கள். அவர்கள் இறைவனிடம்  உயிருடன் தான் உள்ளனர்.உணவளிக்கப்படுகின்றனர் - அல்குர் ஆன் 3.169 


ஒரு நல்லடியார் கப்ரில் அடக்கம் செய்யப்பட்டவுடன் கேள்விகள் கேட்கப்படும். அவர் சரியாக பதில் சொல்லுவார்.அதன் பின்னர் “ புது மணமகனைப்போல  நீ உறங்கு. அல்லாஹ் உன்னை எழுப்பும்வரை உறங்கு “ என சொல்லப்படும் என நபிகள் நாயகம் ( ஸல் ) அவர்கள் கூறினார்கள் 


ஆதாரம் :  
அஹ்மத் , திரிமதீ நூல்கள்
அல்லாவை தவிர யாரையும் வணங்க கூடாது என்பது இஸ்லாம் நெறி. எனவே மகான்களை வணங்குதல், அவர்கள் அற்புதங்கள் செய்வதாக சொல்வது எல்லாம் தவறு என நினைக்கின்றனர் சிலர். ஆனால், இது போன்ற அற்புதங்களுக்கு குர் ஆனிலேயே சான்றுகள் இருக்கின்றன.

அதே போல ஒரு மகான் அற்புதம் செய்கிறார் என்றால் அதற்கு காரணம் அல்லாஹ்தான்.. எனவே இவற்றை மறுப்பது இறைவனையே மறுப்பது போலாகும் என்பது இவர்களுக்கு புரியவில்லை..

எந்த ஒரு தூதரும் அல்லாஹ்வின் விருப்பம் இன்றி அற்புதம் நடத்த முடியாது .ஒவ்வொரு தவணையும் பதிவு செய்யப்பட்டுள்ளது - அல்குர் ஆன் 13.18
 நாங்கள் உங்களை போன்ற மனிதர்கள்தான், ஆயினும் த்னது அடியார்களில் தான்  நாடியவர் மீது அல்லா அருள் புரிகிறான். அல்லாஹ் விருப்பம் இன்றி எந்த ஓர் அற்புதத்தையும் எங்களால் கொண்டு வர முடியாது - அல்குர் ஆன் 14.11

அல்லாஹ்வை அஞ்சி கொள்ளூங்கள். ஒரு வஸீலாவை தேடிக்கொள்ளுங்கள் அவன் பாதையில் அறப்போர் செய்யுங்கள். வெற்றி பெறுவீர்கள்- அல்குர் ஆன் 5.35

அடக்கஸ்தலங்களுக்கு செல்லுமாறுதான் இஸ்லாம் சொல்கிறதே தவிர , அதை இடிக்குமாறு சொல்லவில்லை..

எனவே இது போன்ற செயல்களில் - தர்க்காக்களை இடிப்ப்து போன்றவற்றில் ஈடுபடுவது - இஸ்லாம் நெறிக்கு விரோதமானது என இஸ்லாம் அறிஞர்கள் கருதுகின்றனர்..
 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: கப்ருகளை ஸியாரத் செய்ய நான் தடை செய்திருந்தேன். முஹம்மத் தன் தாயாரின் கப்ரை ஸியாரத் செய்ய அனுமதிக்கப் பட்டுவிட்டார். எனவே நீங்களும் ஸியாரத் செய்யுங்கள். அறிவிப்பவர்: புரைதா (ரலி) ஆதாரம்: திர்மிதி 974


 நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் கூறினார்கள்:
கப்ருகளை  ஸியாரத்  செய்யுங்கள். ஏனெனில்  நிச்சயமாக  அது  இவ்வுலகத்தில்  பற்றற்ற  நிலையை உண்டாக்கி  மறுவுலக  வாழ்வைப்  பற்றிய  நினைவையும்  ஏற்படுத்த  வல்லது. 

இப்னு மாஜா - 1569, மிஷ்காத் - 154
கண்மணி நாயகம் சல்லலாஹு அலைஹி வசல்லம் அன்னவர்கள் கூறினார்கள்:
உங்களை (முதலில்) கப்ருகளை ஸியாரத் செய்ய தடை செய்திருந்தேன். (தடை நீக்கப்பட்டது இனிமேல்) அவைகளை ஸியாரத் செய்யுங்கள்.

புரைதா ரலியல்லாஹு அன்ஹு 

முஸ்லிம், திர்மிதி, ஹாகிம், அபூதாவூத், இப்னு ஹிப்பான்.


நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் ஒவ்வொரு ஆண்டின் ஆரம்பத்திலும் ஷுஹதாக்களின் கப்ருகளை ஸியாரத் செய்பவர்களாக இருந்தார்கள். மேலும் அபூபக்கர், உமர், உஸ்மான் (ரலியல்லாஹு அன்ஹுமா) ஆகியோரும் அப்படியே செய்பவர்களாக இருந்தார்கள்.

தபரானி 3 - 241


கண்மணி நாயகம் சல்லலாஹு அலைஹி வசல்லம் அன்னவர்கள் கூறினார்கள்:
என் தாயின் கப்ரை ஸியாரத் செய்ய என் இறைவனிடம் அனுமதி கேட்டேன். எனக்கு அனுமதியளித்துள்ளான். எனவே, நீங்களும், கப்ருகளை ஸியாரத் செய்யுங்கள். ஏனெனில், அது மரணத்தை நினைவுபடுத்தும். 
அபூஹுரைரா ரலியல்லாஹு அன்ஹு 
முஸ்லிம், திர்மிதி, அபூதாவூது, நஸயீ.


நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் தமது மனைவிமார்களில் ஆயிஷா நாயகி (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களின் முறை வரும் பொழுதெல்லாம் நள்ளிரவின் கடைசிப் பகுதியில் (தஹஜ்ஜது நேரத்தில்) ஜன்னத்துல் பகீஉக்குச் சென்று ஸியாரத் செய்து அங்கு அடங்கியிருக்கக் கூடியவர்களுக்கு பிழை பொருக்கத்தேடி விட்டு வரும் பழக்கத்தை கொண்டர்வர்களாக இருந்தார்கள். 

முஸ்லிம் 1 - 313, மிஷ்காத் 154 


கண்மணி நாயகம் சல்லலாஹு அலைஹி வசல்லம் அன்னவர்கள் கூறினார்கள்:
எவர் ஒவ்வொரு வெள்ளிக்கிழமை தோறும் தனது பெற்றோர்களில் இருவரையோ அல்லது ஒருவரையோ ஸியாரத் செய்து வந்தால் அவரின் பாவங்கள் பொறுக்கப்படுவதுடன் நல்லவர் என்றும் எழுதப்படும். 

பைஹகி, மிஷ்காத் - 154


நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் மதீனாவில் உள்ள கப்ருகளுக்கு அருகே சென்றார்கள். அப்பொழுது தங்களின் திரு முகத்தை கொண்டு கப்ருவாசிகளின் மீது முன்னோக்கி சலாம் கூறினார்கள். 

மிஷ்காத்: 2 – 407


நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் தனது தாயாரின் கப்ரை ஸியாரத்து செய்தார்கள். மேலும் அவ்விடத்திலே அழுதார்கள். அவர்களின் அழுகையை பார்த்து சூழ இருந்த ஸஹாபாக்கள் கண்ணீர் சொரிந்தார்கள். 

முஸ்லிம், மிஷ்காத் - 154


நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் கூறினார்கள்:
எவராவது கப்ருஸ்தானக்களுக்கு சென்று சூரா யாசீன் ஓதினால் கப்ராளிகளை தொட்டும் வேதனை லேசாக்கப்படுகிறது. மேலும் ஓதியவருக்கு அந்த கப்ராளிகளின் எண்ணிக்கையளவு நன்மைகள் கிடைக்கின்றன. 

அனஸ் ரலியல்லாஹு அன்ஹு 
மிஷ்காத் 4 – 382


ஆயிஷா நாயகி ரலியல்லாஹு அன்ஹா அவர்கள் புனித ரவ்லா ஷரீஃப் சென்று நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களையும், அபூபக்கர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களையும் பர்தா அணியாமலேயே ஸியாரத் செய்பவர்களாக இருந்தார்கள். பின்னர் உமர் ரலியல்லாஹு அன்ஹு அதில் அடக்கம் செய்யப்பட்டபோது பர்தா அணிந்து ஸியாரத்து செய்பவர்களாக இருந்தார்கள். 

மிஷ்காத் – 154


அன்னை பாத்திமா நாயகி ரலியல்லாஹு அன்ஹா ஒவ்வொரு வெள்ளிக்கிழமை தோறும் ஹம்ஸா ரலியல்லாஹு அன்ஹு அவர்களை ஸியாரத் செய்து வந்ததார்கள்.

முஸ்னத் அப்துர் ரஸ்ஸாக் 3-572, முஸ்தத்ரக் 1-377மக்காவில் அடங்கப்பட்டிருக்கும் அப்துர் ரஹ்மான் ரலியல்லாஹு அன்ஹு அவர்களை ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அன்னவர்கள் மக்காவுக்கு சென்று ஜியாரத் செய்து வருபவர்களாக இருந்தார்கள்.

அபி முலைகா ரலியல்லாஹு அன்ஹு
மிஷ்காத் - 149 முஸ்னத் அப்துர் ரஸ்ஸாக் 3 - 5079

Sunday, April 3, 2011

கிரிக்கெட்- ராஜபக்சேவின் வெற்றியும் , சிலரின் அப்பாவித்தனமான மகிழ்ச்சியும் ..

உலக கோப்பையை இந்தியா கைப்பற்றியது மகிழ்ச்சியளிக்கும் விஷயம்.

மெக் கிராத் , வார்னே, இம்ரான்கான், ரிச்சர்ட்ஸ், அரவ்ந்த் டி சில்வா, போன்ற உலகத்தரம் மிக்க வீரர்கள் இல்லாமல் இந்த போட்டி டல் அடித்தாலும், சச்சின் டெண்டுல்கர், முரளிதரன், போன்றோரால் கொஞ்சமாவது இந்த போட்டிக்கு மரியாதை இருந்தது.

தோனியின் கேப்டன்சி அருமையாக இருந்தது..

எனவே சிறந்த அணிதான் வென்று இருக்கிறது..

மழை, விதிகள், அம்பயர் தவறுகள் என்று அதிர்ஷ்டத்தின் அடிப்படயில் இல்லாமல் , திறமை அடிப்படையில் வெற்றி பெற்றி இருப்பது திருப்தி அளிக்கிறது..

ஒரு காலத்தில் கிரிக்கெட்டில் ஆதிக்கம் செலுத்திய வெஸ்ட் இண்டீஸ் போன்ற நாடுகளில் இப்போது கிரிக்கெட்டில் ஆர்வம் காட்டுவதில்லை..எனவே தற்போது கிரிக்கெட் என்பது , ஆசிய நாடுகளின் விளையாட்டு ஆகி விட்டது..எனவே இந்த வெற்றியில் பெரிய பெருமை எதுவும் இல்லை என சிலர் சொன்னாலும், இதிலாவது இந்தியா முன்னணியில் இருப்பது மகிழ்ச்சிதான்..

 

அதெல்லாம் வேறு விஷயம்..

ஆனால் சிலர் ராஜபக்சே தோற்று விட்டார் என அப்பாவித்தனமாக மகிழ்வதை பார்த்தால் பாவமாக இருக்கிறது..

உலகமெங்கும் மனித உரிமை, போர் நடத்தை விதி முறைகள் என்றெல்லாம் பேசப்படும்போது, நம் ஊரில் அதைப்ப்ற்றியெல்லாம் எந்த அக்கறையும் இன்றி இருக்கிறோம்..

இலங்கையில் நடந்த கொடூரங்கள் வேறு எந்த இனத்துக்கு எதிராகவும் நடந்து இருந்தால் நம்மை போல இருந்திருப்பார்களா என்பது விவாதத்துக்குரிய விஷயம்..

ராஜபக்சேவுக்கு தண்டனை வேண்டும் என்று கேட்க முடியாவிட்டாலும், குறைந்த பட்சம் விளக்கம் கேட்க கூட நம்மால் முடியவில்லை..

அவர் ஜாலியாக வந்து கிரிக்கெட் பார்க்க முடிகிறது.. அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து பேச முடிகிறது என்றால் அது அவருக்கு வெற்றி..

இதை புரிந்து கொள்ளாமல் அவர் தோல்வி அடைந்து விட்டதை போல சிலர் அப்பாவித்தனமாக நினைப்பதை பார்த்து வருத்தமாக இருக்கிறது…

விளையாட்டில் நாம் ஜெயித்தாலும், ராஜதந்திரத்தில் ஜெயித்தது அவர்தான்…

கிரிக்கெட்டில் திறமையான அணி வெற்றி பெற்றுள்ளது.. புத்திசாலித்தனம் ஜெயித்தது…

ஆனால், இதை ராஜபக்சேக்கு எதிரான வெற்றியாக நினப்பது புத்திசாலித்தனமா?

விதியே விதியே தமிழ் சாதியை என்ன செய்ய நினைத்தாய்?

Saturday, April 2, 2011

கவரிமான் தற்கொலை செய்யுமா? – ஆச்சரியமூட்டும் தகவல்கள்


நாங்கெல்லாம் கவரிமான் பரம்பரை என சொல்ல கேட்டு இருக்கிறோம்… நாமும் அவ்வப்போது இது போல சொல்லி இருக்கிறோம்.
ஒரு முடி உதிர்ந்தாலும், அதற்கு பின் கவரிமான் உயிர் வாழாது… தன் மானம் போய் விட்டதே என வருந்தி உடனடியாக இறந்து விடும்.. அது போல மானம் மிக்கவர்கள் நாங்கள் என சிலர் சொல்வதுண்டு..
இதன் அடிப்படையில் கவரிமான் என்ற திரைப்படம் சில ஆண்டுகளுக்கு முன் வந்தது…
சிவாஜி கணேசன் , ஸ்ரீதேவி நடிக்க எஸ் பி முத்துராமன் இயக்கி இருந்தார்… இசைஞானி இசை.. அதில் ஒரு பாடலை நான் அவ்வப்போது கேட்டு ரசிப்பதுண்டு..

Friday, April 1, 2011

தேர்தல் வெற்றி யாருக்கு? - கருத்து கணிப்பு முடிவுகள்


இது வரை நடந்த தேர்தல்களில் விறுவிறுப்பு குறைவான தேர்தல் என்றால் அது இந்த தேர்தல்தான்...பணம் கொடுத்து ஓட்டு வாங்கி விடலாம் என சிலர் நினைப்பதால், ஒரு தரப்பு பிரச்சாரத்தில் மந்தமாக இருப்பதால்,  எதிர் தரப்பும் மந்தமாக இருக்க வேண்டிய நிலை..


இந்த நிலையில், இந்தியா டுடே கருத்து கணிப்பு வெளியிட்டுள்ளது..


பணம் கொடுப்பது, தேர்த்தல் முடிவில் மாற்றம் ஏற்படுத்தாது என்கிறது கருத்து கணிப்பு

PROJECTIONS FOR ASSEMBLY ELECTIONS 2011
TAMIL NADU
WEST BENGAL
Alliance
Vote%
Seats
ADMK+
50
164
DMK+
45
68
Others
5
2
Total
100
234
Alliance
Vote%
Seats
LEFT
43
101
TMC+
44
182
Others
12
11
Total
100
294
KERALA
ASSAM
Alliance
Vote%
Seats
LDF
40
41
UDF
48
96
Others
12
3
Total
100
140
Alliance
Vote%
Seats
INC
32
46
AGP
25
38
BJP
12
15
AUDF
14
15
Others
16
12
Total
100
126

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா