Sunday, September 18, 2011

வினாடியும் நொடியும் ஒன்றா? - தமிழ் படும் பாடு


தமிழர்கள் அந்த காலத்திலேயே பல் துறைகளிலும் கில்லாடிகளாக விளங்கினர் என்பது பலருக்கு தெரியாது.. கணிதம், பொறியியல், கட்டடவியல், மருத்துவம் என அவர்கள் தொடாத துறை இல்லை.

தஞ்சை பெரிய கோயில் இன்றும் நம்மை பிரம்மிக்க வைக்கிறது என்றால், அதற்கு காரணம் அன்றைய தொழில் நுட்பம்..

அன்றைய கண்க்கீடுகள், அளவைகள்,  உலோகவியல், கட்டடம் கட்டும் முறை பற்றியெல்லாம் இன்னொரு பதிவில் விரிவாக அலச உத்தேசம்..

அன்று கூறிய சில, கால வெள்ளத்தால் எப்படி மாறி இருக்கிறது என்பதை மட்டும் ஷார்ட் அண்ட்  ஸ்வீட்டாக இப்போதைக்கு பார்க்கலாம்..

___________________________________________________


ஓர் ஆங்கில புத்தகதை பெருமைக்காக புரட்டியபோது, சில ஆங்கில சொற்களுக்காக அகராதியை நாடினேன்.. செகண்ட் என்ப்தற்கு அதில் அர்த்தம்,  வினாடி அல்லது நொடி என்று இருந்தது..

வினாடியும் நொடியும் ஒன்றுதான் என நினக்கிறோம்.. தப்பு..

கண் சிமிட்டும் நேரம் என்கிறோமே... இரண்டு முறை கண்  சிமிட்டும் நேரம்தான், நொடி என வரையறை செய்துள்ளனர்...  எனவே செகண்ட் என்ற ஆங்கில சொல்லுக்கு இணையானது நொடிதான்.

வினாடி என்றால்?

14.4 செகண்ட் சேர்ந்தால் ஒரு வினாடி.

60 வினாடி = ஒரு நாழிகை ( 24 நிமிஷம் )  ( சித்த நாழில வந்துட்றேன் என்ற வார்த்தை பிரயோகத்தை சிலர் கேட்டு இருக்கலாம்.)

60 நாழிகை = ஒரு நாள்


கால வெள்ளத்தில் பொருள் சிதைந்து விட்டது... அர்த்த மாறிய வேறு சிலவற்றை பார்க்கலாம்
____________________________________

வக்கத்தவனுக்கு வாத்தியார் வேலை... போக்கத்தவனுக்கு போலீஸ் வேலை..

வாக்கு கற்றவனுக்கு  வாத்தியார் வேலை.. போக்கு கற்றவனுக்கு போலீஸ் வேலை என்பது இப்படி மாறி விட்டது

______________________________________________________


காக்கா பிடித்தல்...

கைய காலை பிடிச்சி வேலையை முடித்தேன் என்பது , கால்கையை பிடித்தேன் என்பதுதான் காக்கா பிடித்தேன் என மாறி விட்டது... காக்கா வலிப்பு என்ப்தையும் கவனிக்கவும்..

____________________________________________


சோழியன் குடுமி சும்மா ஆடுமா?

கிராமங்களில் பார்க்கலாம்.. தலையில் பானையை சுமந்து செல்பவர்கள் , தலை மேல் ஒரு துணியை வாட்டமாக அமைத்து அதற்கு மேல் பானையை வைப்பார்கள்..இந்த துணிக்கு சும்மாடு என்று பெயர்..

ஒருவனுடைய குடுமி என்னதான் அடர்த்தியாக  இருந்தாலும் அது சும்மாடு ஆக முடியாது.
சோழியன் குடிமி சும்மாடு ஆகுமா என்பதுதான் திரிந்து சோழியன் குடுமி சும்மா ஆடுமா? என மாறி விட்டது

****************************


13 comments:

  1. நல்ல பதிவு. நீண்ட நாள் சந்தேகம் நீங்கியது.

    ReplyDelete
  2. நன்றி நண்பா ....உபயோகமுள்ள தகவலுக்கு.........

    ReplyDelete
  3. அட நல்ல பகிர்வு விளக்கமுங்க...

    அன்புச் சகோதரன்...
    ம.தி.சுதா
    மங்காத்தாவை வெல்ல வைத்த விஜய் ரசிகர்கள்

    ReplyDelete
  4. இது கொஞ்சம் சமஸ்கிருதம் - தமிழ் சம்பந்தப்பட்ட சிக்கல் என்றே தோன்றுகிறது... முதலில் நாழிகை என்பது தமிழ்தானா...?

    ReplyDelete
  5. வினாடி, நொடி தகவல் அருமை. மிக்க நன்றி.

    ReplyDelete
  6. பழைய கால மொழிகள் எப்படில்லாம் திரிந்து விட்டது?

    ReplyDelete
  7. வினாடியும் நொடியும் ஒன்று என்றல்லவா
    நினைத்திருந்தேன். நன்றி.

    'மெய்யென்று மேனியை யார் சொன்னது'
    இதில் ஏதும் உண்டோ மயக்கம்

    ReplyDelete
  8. தங்கள் பிள்ளைகள் கண்டிப்பாக தமிழ் எழுத படிக்க கற்று கொள்ள வேண்டும் என்கிற எண்ணம பெற்றோர்களுக்கு இருக்க வேண்டும்!அது சுத்தமா இல்லை!!புள்ள இன்குலீசுதான் பேசனும்னு வீண் ஜம்பம் அடிக்கும் பெற்றோர்கள்தான் அதிகம் !

    ReplyDelete
  9. தம்பி டீ இன்னும் வரலை... என் கேள்விக்கான பதில் எங்கே...

    ReplyDelete
  10. @பிரபாகரன் உங்கள் கேள்விக்கான பதிலை ஓரிரு வரிகளில் சாதாரணமாக எழுத விரும்பவில்லை . இலக்கிய ஆதாரங்களுடன் எழுதவுள்ளேன் . அந்த அளவுக்கு சிறப்பான கேள்வி . @பிரபாகரன் உங்கள் கேள்விக்கான பதிலை ஓரிரு வரிகளில் சாதாரணமாக எழுத விரும்பவில்லை . இலக்கிய ஆதாரங்களுடன் எழுதவுள்ளேன் . அந்த அளவுக்கு சிறப்பான கேள்வி .

    ReplyDelete
  11. @ பார்வையாளன்
    // உங்கள் கேள்விக்கான பதிலை ஓரிரு வரிகளில் சாதாரணமாக எழுத விரும்பவில்லை . இலக்கிய ஆதாரங்களுடன் எழுதவுள்ளேன் . அந்த அளவுக்கு சிறப்பான கேள்வி . //

    நல்லது காத்திருக்கிறேன்...

    ReplyDelete

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா