Sunday, August 25, 2013

அகப்பாடு-1 சீன் படம் வாயிலாக ஞான ரகசியம்

” பிட் படம் பார்க்கணுனு அலைஞ்சியே,, இமாலாயா தியேட்டர்ல கன்னிப்பெண்ணின் காம வெறி போட்டு இருக்காய்ங்க ,, வறீயாடா நாயே “  ஜேம்ஸ் இப்படி கேட்டதுமே எனக்கு கொட்டி விட்டது  , மேலும் பொங்கி வடிந்து விட்டது கோபம். அவன் சொன்ன விஷ்யம் குஜால்தான் என்றாலும் அவன் நாய் என அழைத்தது அவ்வளவாக பிடிக்கவில்லை., ஆனாலும் கோபத்தை காட்டவும் முடியாது.

 இப்படித்தான்  நேற்று கஷ்டப்பட்டு கரக்ட் செய்ய முயன்ற கயல்விழியுடன் பேசிக்கொண்டு இருந்தேன்.  எனக்கு ஏலக்காய் பற்றி தெரியுமே தவிர அப்போதெல்லாம் இலக்கியம் பற்றி தெரியாது.
ஆனாலும் அவள் இலக்கிய ஆர்வலர் என்று என் துப்பறியும் இலாகா கொடுத்த அறிக்கையின் அடிப்படையில் சில இலக்கிய வார்த்தைகளை கஷ்டப்பட்டு படித்து வைத்து இருந்தேன்.  மீயதார்த்த வாதம் , மேஜிக்கல் ரியலிசம் , க்யூபிசம், நிகர்னிலை யதார்த்தம், தப்பித்தலியல் , இருத்தலியல்  என தப்பும் தவறுமாக சில வார்த்தைகளை உதிர்த்து அவளை ஒரு மாதிரி இம்ப்ரஸ் செய்து இருந்தேன்.

அப்படி பேசும்போது ஜேம்சை வர சொல்லி இருந்தேன் .என்ன சொல்ல வேண்டும் என்றும் சொல்லிக்கொடுத்து இருந்தேன்.

“ ஏமான் ,  அக்கா கல்யாணம்.. சேட்டிடம் நகை அடகு வைக்கணும்.. என் மூஞ்சியை பார்த்தா தர மாட்டான். நீங்க உயர் சாதி என முகத்தை தெரிந்து கொண்டு காசு கொடுப்பான் “ என அவன் சொல்ல வேண்டும்.

” ஏமான் என்றெல்லாம் சொல்லகூடாது, பெயர் சொல்லியே கூப்பிடலாம் “ என பெருந்தன்மையாக சொல்லி விட்டு அவன் கூட போவதாக திட்டம்.

திட்டமிட்ட படி கயலுடன் கச்சிதமாக பேசிக்கொண்டு இருந்த போது , அவன் வந்து விட்டான். பெருந்தன்மையுடன் பேச ஆயத்தமானேன்.

“ என்னடா நாயே.  செம்ஸ்டர்ல எல்லா பேப்பரும் ஊத்திக்கிச்சாம்.சொல்லவே இல்லை “ என்றான் ஒத்திகையை மறந்தவனாக.

கயல் “ களுக் “ என அந்த கால நாவல்களில் சிரிப்பது போல சிரித்தது கூட என வருத்தம் இல்லை. அவனைப்பார்த்து அவள் சினேகமாக சிரித்தது வருத்தம் அளித்தது.

அவனை தனியாக அழைத்து சென்றேன்

” என்னடா இப்படி பண்ணிட்ட “ என்றேன்,

“ டேய். அது என்னடா ஏமான்...எனக்கு அந்த வார்த்தையே தெரியாது.அதனால்தான் சொல்ல முடியல.  நல்ல வேளை..ரைமிங்கா இன்னொரு வார்த்தை வாய் வரை வந்துடுச்சு,,அவ முன்னாடி சொல்லாம போனேனே,,அதை நெனச்சி சந்தோஷப்பட்டுக்க “ என்றான்.

அப்படி எல்லாம் டார்ச்சர் செய்தாலும் , அவனால் கிடைக்கும் சில உபகாரங்கள் கருதி அவனை பகைத்து கொள்ள முடியவில்லை.

மறுனாள் வந்தான்.
” சோமான்,..தியேட்டர் வேண்டாம். வீடியோ கேசட் கெடச்சு இருக்கு, உன் ரூமில் வைத்து பார்க்கலாமா “ என்றான்.

அப்போதெல்லாம் வீடியோ கேசட்தான். என் அறையில் மட்டும்தான் கேசட் பார்க்கும் வசதி இருந்தது,
ஆனால் இப்படி மற்றவர்கள் வந்து படம் பார்த்தால் வீட்டு ஓனர் சண்டைக்கு வருவார்.

“ கவலைப்படாதே..அவரையும் படம் பார்க்க அழைப்போம் ..அவரையும் கைக்குள் போட்டு கொள்வோம் “ என்றான்.

 நல்ல ஐடியா..

முதலில் அவர் ஒப்புக்கொள்ளவில்லை/

அவர் பெண்ணாசையே இல்லாதவர் என்றால் அது மிகை இல்லை. 40 வயது ஆகியும் திருமணம் செய்யாமல் வசித்து வந்தார். வீட்டில் எந்த பெண்ணின் படமும் இருக்காது. எந்த பெண்ணையும் தவ்றாக பார்க்க மாட்டார்.
 எங்களுக்கெல்லாம் அவரைப்பார்த்து பிரமிப்பாக இருக்கும்.
சரி..இந்த படம் பார்த்தாலாவது பெண்ணாசை ஏற்பட்டு திருமணம் செய்தால் நல்லதுதானே என்ற நல்லெண்னத்தோடும் , நண்பர்களுடன் படம் பார்க்கும் திட்டதுடனும் அவரை அழைத்து சம்மதிக்க வைத்தோம்.

அந்த சின்ன அறையில் ஜேம்ஸ், வீட்டு ஓனர் , நான் உட்பட பத்து பேர்.

எல்லோரும் தரையில்தான் அமர்ந்து இருந்தோம். அவருக்கு மட்டும் நாற்காலி கொடுத்தோம்.அவர் மறுத்து விட்டு எங்களுடன் தரையில் அமர்ந்தார்.

கொஞ்ச நேரத்திலேயே தூக்கம் வர ஆரம்பித்து விட்டது. சீன் படம் என்றால் , கொஞ்சம் கொஞ்சமாக சூடேற்றி கடைசியில் நிர்வாண நிலை அடைந்தால்தான் அக விழிப்பு, புற விழிப்பு ,  மெய்ஞானம் எல்லாம் கிடைக்கும். இந்த படத்தில் ஆரம்பத்திலேயே சீன் காட்சி. அதன் பின் துரோகம் செய்த பெண்ணின் சோகங்கள்...யாருக்காக துரோகம் செய்தாளோ அவனே துரோகம் செய்தது..அவர்களை கணவன் மன்னிப்பது என்பது போல மிச்சபடம்.
ஹீரோ ஓரியண்டட் படம்

எல்லோருமே பாதியில் தூங்கி விட்டார்கள்..பாவம் , ஓனர் மட்டும் பார்த்து கொண்டு இருந்தார்.

பாவம்..அவரது முதல் பிட் அனுபவம் இப்படி ஆகி விட்டதே என வருத்தமாக இருந்தது.

திடீரென ஏதோ சத்தம் கேட்கவே அவரைப்பார்த்தேன்.

” இப்படிப்பட்ட படங்கள் பார்க்காமல் என் வாழ்க்கையை வீணாக்கி விட்டேனே... ஹீரோ என்ன கலர்..என்ன உடல் கட்டு,,,ம்ம்ம் “ முனகினார் ஓனர்.

நான் திடுக்கிட்டு மற்றவர்களை பார்த்தேன்.

ஓனர் தனியாக அமர்ந்து என்ன செய்து கொண்டு இருக்கிறார் என்பதை அவர்களும் பார்த்து விட்டார்கள் என்பதை அவர்களின் உடல்கள் விறைப்படைவதிலிருந்து, ஆர்வமற்றவர்கள்போல வேறெங்கோ பார்ப்பதிலிருந்து அறிந்தேன்.
7 comments:

 1. ஞான ரகசியம் தலைப்பும்
  கதையும் சொல்லிப் போனவிதமும் அருமை
  தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. கலாய்க்கிறீங்களா அல்லது சீரியசா சொல்றீங்களா...எதுவா இருந்தாலும் நன்றி :)

   Delete
 2. அந்த சின்ன அறையில் ஜேம்ஸ், வீட்டு ஓனர் , நான் உட்பட பத்து பேர்./////

  அட... செம அனுபவம் தான்..

  ReplyDelete
 3. உங்களின் ஞானகுரு ரவியர் மீதான விசுவாசத்தில் இப்படி அற்புதமாக எழுதியிருக்கின்றீர்கள்.
  வாழ்த்துகள்

  ReplyDelete
 4. Yarayo kuthura mathiri theriyudhe thalai....

  ReplyDelete
 5. "ஒரு அபாயகரமான விஷத்தை ஜெமோ பரப்பி கொண்டே இருக்கிறார் . நாம் ஏதாவது சொல்லப்போனால் அவர் விமர்சிகர்கள் உட்பட எல்லோரும் திட்டுகிறார்கள் :-("

  ஓங்க குரு மட்டும் விமர்சனங்களை ஏற்று கொள்ளும் மனம் உடையவரா ??

  பெண்களையே கேவலமாக பேசும் மனம் கொண்டவர்தான் ஓங்க குரு

  ReplyDelete
 6. சீரியசாகத்தான் சொன்னேன்
  தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா