Friday, October 31, 2014

போஸ்ட் ஆஃபிஸ் நினைவுகள் - அழியும் கலை

போஸ்ட் கவர் வாங்க தபால் நிலையம் போனேன்..  அந்த காலத்தில் எல்லாம் போஸ்ட் ஆஃபிஸ் கூட்டத்தால் நிரம்பி வழியும்.  பேனா ஓசி கேட்பவர்கள் , அட்ரஸ் எழுதி தந்து உதவுபவர்கள் , விண்ணப்ப்ப படிவ நிரப்புதல் நிபுணர்கள் என சில “ கலைஞர்கள் “ ( இப்போது அவர்கள் வழக்கொழிந்து விட்டார்கள் )  அங்கு இருப்பார்கள். 4.15க்க்கு கடைசியாக தபால் பெட்டி திறக்கப்படும் பட்சத்தில்  , 4.30க்கு போஸ்ட் செய்தால் ,  அடுத்த நாள்தான் எடுக்கப்படும். இதை லாகவமாக கணக்கிட்டு , தபால் பெட்டியில் போடாமல் நேரடியாக அதற்கான அலுவலரிடம் லெட்டரை கொடுத்து விட்டு வருவது அந்த காலத்தில் சாமர்த்தியமான விஷயமாக கருதப்படும்.

    இப்போது நான் சந்தித்த சில சிறுவர்களிடம் தபால் பெட்டியை பார்த்திருக்குறார்களா என ஆய்வு நடத்தினேன். பலர் பார்த்தது இல்லை. சிலர் வீட்டு மின் வைக்கப்பட்டு இருக்கும் கடிதபெட்டிகளை , தபால் பெட்டி என நினைத்ததும் தெரியவந்தது.  தபால் பெட்டி என்பது தபால் நிலையத்தில் மட்டும் இருக்காது.. ஆங்காங்கு இருக்கும் ,  நம் ஏரியாவில் எங்கு இருக்கிறது என தெரிந்து வைத்திருப்பது அந்த கால சிறுவர்களின் அவசிய தேவையாகும் .  பெரியவர்கள் ஏதாவது எழுதி , ஓடிப்போய் போஸ்ட் செஞ்சுட்டு வாப்பா என சிறுவர்களைத்தான் அனுப்புவார்கள்.   இன்றைய சிறுவர்களுக்கு அப்படி போஸ்ட் செய்த அனுபவம் இல்லை. அதேபோல லெட்டர் என்பதன் அனுபவம் இல்லாத பெரியவர்களும் உண்டு ..  பிறந்த ஊரிலேயே படித்து வேலையும் பெற்று இருப்பார்கள்.   எனவே கடிதம் எழுத வாய்ப்பு இருந்து  இருக்காது.  வேலைக்கு செல்லும்போது , கைபேசி , இணையம் என வந்து இருக்கும் . எனவே லெட்டர் என்பதே அவர்கள் வாழ்க்கையில் இருந்திராது.

 வெளியூரில் படித்தவர்களுக்கு வீட்டில் இருந்து எழுதுவார்கள். விடுமுறைக்கு வீட்டுக்கு வரும்போது நண்பர்கள் எழுதுவார்கள்.  இணையம் வந்தவுடன் இந்த தேவை அகன்று விட்டது.

அன்புள்ள , அன்புடையீர் , நலம் நலமறிய ஆவல் என ஒவ்வொருவரும் ஒவொரு “ நடை “ யை பின்பற்றுவதை கவனிப்பது சுவையாக இருக்கும். ஏன் இப்பெல்லாம் லெட்டரே போடறது இல்லை என கேட்பதும் , பதில் போடாததற்கு சண்டை போடுவதும் இப்போது  நகைச்சுவையாக தோன்றலாம்.

போஸ்ட் ஆஃபிசுக்கு கவர் வாங்க போனபோது இந்த நினைவுகள் வந்தன. ஆனால் அந்த போஸ்ட் ஆஃபிசில் கவர் இருப்பு இல்லை.  ஒரு சராசரி மனிதன் இதை கேட்டவுடன் உடனே கொரியரை நாடுவான்.  அடுத்த முறையும் கொரியரே செல்வான். இப்படி கொஞ்சம் கொஞ்சமான தபால் துறை வாடிக்கையாளரை இழந்து ஒரு கட்டத்தில் தந்தியை போன்ற முடிவை சந்திக்கலாம்.  அதன் பின் கொரியர் நிறுவனங்களும் , அலைபேசி சேவை நிறுவனங்களும் இஷ்டத்துக்கு கொள்ளை அடிக்கும்.

சதுரங்க வேட்டை ஹீரோ போல ஒருவர் அமெரிக்காவில் உண்மையாக வாழ்ந்தார். அவர் தன் வாழ்க்கை வரலாற்றை எழுதியுள்ளார்.  அதில் அவர் ஒன்று சொல்கிறார்.

மக்களை ஏமாற்றுவது மிக எளிது.  கேள்வி கேட்பவர்களை ஏமாற்ற முடியாது. ஆனால் நம் மக்கள் பதில் சொல்வதிதான் ஆர்வமாக இருக்கிறார்கள் . இவர்களை ஏமாற்றுவது மிக எளிது என்பதால் எனக்கு அது போரடித்து அதில் இருந்து விலகி விட்டேன் என்கிறார்.


இலவச எஸ் எம் எஸ் ,  இலவச நெட் என்றெல்லாம் ஆசை காட்டி அலைபேசியை மக்களுக்கு பழக்கி விட்டு , இப்போது அவர்கள் ரத்தத்தை உறிஞ்ச ஆரம்பித்து இருப்பது நம் மக்களுக்கு இன்னும் தெரியவில்லை.  சேவைக்கு காசு வாங்கத்தானே செய்வார்கள் என அவர்கள் சார்பாக இவர்களே பதில் சொல்கிறார்கள்.

தகவல் தொடர்புக்கு இணையம் நல்ல வழிதான். ஆனால் நாம் அதற்கு அடிமையாகபோனால் , ஒரு கட்டத்தில் இணைய சேவை நிறுவனங்களும் நம்மை ஆதிக்கம் செய்யத்தான் நினைக்கும்.

எனவே போஸ்ட் கவர் அங்கு இல்லாவிட்டால் பரவாயில்லை என இன்னொரு தபால் நிலையம் சென்று கவர் வாங்கினேன். கிராமங்களிலும் , புற நகர் பகுதிகளிலும் இன்னும் தபால் நிலையங்கள் உயிர்ப்புடன் உள்ளன. சென்னை நகரத்திலும்கூட  தபால் சேவையை பலர் பயன்படுத்துவதை காண மகிழ்ச்சியாக இருந்தது. ஊழியர்கள் கனிவுடன் பேசி சேவை அளிப்பது கூடுதல் மகிழ்ச்சி.  முகவரி முழுமையாக இல்லாவிட்டாலும்கூட எப்படியாவது போய் சேர்ந்து விடுகிறது. கொரியரில் இதை எதிர்பார்க்க முடியாது.

வட மானில கிராமங்கள் . எல்லைப்புற மானிலங்களுக்கு என் அலுவலகத்தில் இருந்து பொருட்களையோ கடிதங்களோ அனுப்பும்போது  ஸ்பீட் போஸ்ட்டையே பயன்படுத்துவோம். காரணம் கொரியர் நிறுவனங்கள் சேவை அங்கு இருக்காது.   மற்ற இடங்களில் கிடைக்கும் லாபத்தை வைத்து சில இடங்களில் நஷ்டம் வந்தாலும் பரவாயில்லை என தபால் துறை செயல்பட்டு வருகிறது.   கொரியர் நிறுவங்களோ வசதியான இடங்களில் மட்டுமே செயல்பட்டு வருகின்றன.  இப்படி லாபம் பறிபோனால் , தபால் துறையும் சில சேவைகளை நிறுத்த வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகும். ஏழைகளும் , கிராமவாசிகளும் வெகுவாக பாதிக்கப்படுவார்கள்.

இது சம்பந்தமாக பிரதமருக்கு நான் எழுதிய கடிதம்....

Dear Modi ji... 

The idea of using radio to communicate with people is great Similarly using postal services also should be encouraged. one can communicate from kashmir to kanyakumari with just a 50 paise post card. But many people now a days not aware of this and they are depending on private sector for communication. Gradually it will kill postal services which will affect rural people. new services and awareness programmes are need of hour for postal department.







3 comments:

  1. ஆம் அய்யா,
    தாங்கள் கூறுவது முற்றிலும் உண்மைதான்.
    நாம் யாருக்காவது கடிதம் அனுப்பிவிட்டுக் குறிப்பிட்ட நாட்களுக்குப் பின் தபால்காரனுக்காகக் காத்திருக்கும் அனுபவமும் இதனோடு சேர்ந்ததுதான்.
    மைதா மாவுப்பசை..
    மணியாடர் பார்ம்..
    நீல நில இன்லாண்ட் லெட்டர்,
    பிறகு ,
    எங்கள் காலத்தில் பொியவர்கள் கடிதம் எழுதத் தொடங்கும் போது
    “ இப்பவும் “ என்று தொடங்கும் விதம்
    என்று பல நினைவுகளைத் தங்களின் பதிவு நினைவூட்டியது.
    அருமையான பதிவு.
    த ம 1
    நன்றி

    ReplyDelete
    Replies
    1. mm..ஆமா...கடிதத்துக்காக , வாழ்த்து கார்டுகளுக்காக காத்திருப்பது இனிமையானது

      Delete
  2. மலரும் நினைவுகள்! தாங்கள் சொல்லிச் சென்றவிதம் நல்ல சுவாரஸ்யம். கிராமத்தில் மரத்தில் கட்டி வைக்கப்பட்ட அந்த சிவப்பு தபால் பெட்டியை மறக்க முடியுமா?
    Tha.ma.2

    ReplyDelete

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா