Tuesday, August 1, 2017

அந்நியன்-ஓர் விவாதம்

வாசக சாலை நடததும் வாராந்திர நிகழ்வான நாவல் விமர்சனக் கூடடம் இன்று வெகு சிறப்பாக சென்னை அசோக் நகரில் நடந்தது...அலசப்பட்ட நூல் காம்யூவின்  அநநியன்

நல்ல விஷயங்களை எகத்தாளம் பேசுவது  உன்னதங்களை கேலி செய்வதை ஹீரோயிசமாக நினைப்பது  புத்தக கண்காட்சி போன்ற நிகழ்வுகளுக்கு மறந்தும் சென்று விடக்கூடாது என பிடிவாதமாக இருப்பது போன்றவற்றை பார்க்கையில் ஒரு வித சோர்வு ஏற்படும்....இந்த மொண்ணைத்தனமான சூழலில் இது போன்ற நிகழவுகள் நம்பிக்கையை மீட்டளிக்கின்றன

வணக்கம்..  நூல் ஆய்வுக் கூட்டம் நடக்கிறது.. ஆர்வமிருப்பின் கலநத கொள்ளுங்கள்..பயனுள்ளதாக இருக்கும் என நண்பர் Arun Dir சிலருக்கு அழைப்பு விடுத்தார்...அவருக்கும் குடும்ப வேலைகள்..அலுவல் கமிட்மென்ட்ஸ் பொழுதுபோக்குகள் டிவி நண்பர்கள் அழைப்பு என எல்லாம் உண்டு.. ஏன் அவற்றை விட்டு விட்டு களப்பணி ஆற்றுகிறார் என்றால் தேடிச் சோறு தினம் தின்று வெட்டிப்பேச்சுகள் பேசி வேடிக்கை மனிதராய் சாகும் சராசரி வாழ்வின் வெறுமை அவருக்குத் தெரியும்...இங்கே ஒரு பிளாஷ்பேக்

சென்ற ஆண்டு புத்தக கண்காட்சியில் இதே போன்ற நிகழ்வுக்கு பலரை அழைத்தார்.. என்ன பாஸ்...எனக்கெல்லாம் அழைப்பில்லையா என்றேன்

உங்களுக்கெல்லாம் எதற்கு அழைபபு... இது உங்கள நிகழ்ச்சி....நீங்கள்தான் பிறரை அழைக்க வேண்டும்..என்றார்

கூட்டம் நடத்துவோர்க்கு தேவையான உயரிய பண்பும் உழைப்பும் அவரிடம் உண்டு... இன்றைய நிகழ்வை சிறப்பாக ஒருங்கிணைத்தார
நாவல் குறித்து பேசவிருக்கும திலீபன்  நான் விரும்பி படிக்கும் இலக்கிய இதழின் ஆசிரியர் என்பது எனக்கு இனிய அதிர்ச்சியாக இருந்தது.

அறிவுரைகள்
கேட்டு அலுத்த காதில்
குயிலோசை

என்றொரு ஹைக்கூ உண்டு...அதுமாதிரி , துரோகிகளையும் அறிவிலிகளையும் மண்டூகங்களையும் மதியிலிகளையும் இலக்கிய இதழ்ஆசிரியர்களாக பார்த்து நொந்து போயிருந்த கண்களுக்கு உண்மையான இலக்கிய ஆர்வம் கொண்ட ஓர் இளைஞரை காண்பது ஆறுதலாக இருநதது...

அந்நியன் நாவல் எதைபபற்றியது என ஒரே வரியில் விளக்கி விட்டு அதன்பின் நூலுக்குள் சென்றார் ஒரு பிரதி குறித்து ஒரு வரியில் உங்களால் விளக்க முடியாவிடில் அது உங்களுக்குப் புரியவில்லை என்று பொருள் எனபது தங்கவிதி

பிரதான கதாபாத்திரத்தின் தன்மை கிளைப்பாத்திரங்கள் அவற்றுடன் பிரதான பாத்திரத்தின் தொடர்பு என வெகு அழகாக பேசினார்
ஒரு நாள் முழுமையாக வாழந்தால்  போதும்...அந்த நினைவுகளில் நூறு ஆண்டுகள் வாழலாம் என்ற அழகான வரியை விளக்கினார்.  இம்சை அரசன் வடிவேலுவின வசனத்தை பொருத்தமாக பயன்படுததி கலகலப்பூட்டினார்...இக்கதையின் பாதிப்பில் ஒரு தமிழ்ப் படத்தில் இடம்பெற்ற காட்சியை நினைவு கூர்ந்தார்..
மிக செறிவான விரிவான உரை... பார்வையாளர்களின் கேள்விகளுக்கு அதிக நேரம் இல்லை... ஆனாலும் காம்யூவின் பாதிப்பில் உருவான சில தமிழ்ப படைப்புகள் அலசப்பட்டன..

பல் வலி காரணமாக என் மேலான கருத்துகளையோ கேள்விகளையோ எடுத்து வைக்க முடியவில்லை..
மிக நல்ல நிகழ்வு....சார்ந்தோர்க்கு நன்றி  

No comments:

Post a Comment

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா