Tuesday, May 7, 2019

ராமானுஜர் - குரு துரோகமும் நடு நிலை தரிசனமும்

ராமானுஜருக்கு சின்ன வயது முதலே ஆன்மிக தேடல் இருந்தது

உரிய குருவை தேடலானார்... அவருக்கு கிடைத்த பலரும் போலி குருவாகவே இருந்தனர்

கடைசியில் திருக்கோஷ்டி நம்பிகள்தான் உரிய குரு என உணர்ந்தார்..


அவரை அணுகினார்... அவரோ இவரை ஏற்கவில்லை...

விடாமல் தினமும் அவரை அணுகினார்.. கடைசியில் குரு மனம் இளகினார்..

உன் விசுவாசம் உன்னை ரட்சித்தது என இயேசு சொல்வது போல உன் தேடல் உன்னை காத்தது என கூறி மகிழ்ந்த குரு , அவருக்கு மந்திர தீட்சை அளித்தார்...  இந்த மந்திரத்தை யாருக்கும் சொல்லக்கூடாது...சொன்னால் மீளா நரகம் அடைவாய் என்றார்  குரு,.

எவ்வளவு இனிய மந்திரம்.. எவ்வளவு சுகம்,, இதை எல்லோரும் அனுபவிக்கட்டுமே ... நாம் நரகம் போனால்தான் என்ன என நினைத்த ராமானுஜர் கோபுரம் மீதேறி எல்லோருக்கும் கேட்கும்படி மந்திரத்தை சொன்னார்

குரு கண்ணீர் வடித்தார்...  தேடல் இல்லாதவர்களுக்கு இப்படி சும்மா பொதுக்கூட்டம் போல சொன்னால் என்ன பயன் கிடைக்கும்.. சும்மா இந்த காதில் வாங்கி அந்த காதில் விட்டு விடுவார்கள்...  தேடி வருபவனுக்கு , அவனை நன்கு சோதித்த பின்பே உபதேசம் அளிக்க வேண்டும்...   நான் ஒரு ராமானுஜனை உருவாக்கியதுபோல , உன்னால் உருவாக்க முடியாமல் போய் விட்டது பார்... ஆயிரம் பேருக்கு சொன்னாய்.. என்ன பயன் என்றார் குரு

ராமானுஜருக்கு தன் தவறு புரிந்தது..

 நரகம் போவாய் என மிரட்டாமல் விளக்கமாக குரு சொல்லி இருக்கலாமே என நினைத்துக்கொண்டார்


மறைத்து வைப்பதாலும் பயனில்லை... சும்மா பிரச்சாரம் செய்தும் பயனில்லை... நடு நிலை தேவை என்ற ஞானம் பிறந்தது


இறை வேறு ,, பக்தன் வேறு என்பது ஒரு பார்வை

நானே இறைவன் என்பது ஒரு பார்வை

 நடு நிலையான ஒரு பார்வையை இவர் பிரபலமாக்கினார்.

நீ இறை அம்சம்தான்... உன்னை அறிந்தால் இறையை அறியலாம்தான்.. ஆனா நீ கடவுள் அல்ல... கடவுளை அடைய வேண்டிய கடவுளின் துளி நீ என்றார்


இந்த பார்வை  பிரபலமானது


குரு துரோகம் செய்தாலும் , அவர் நோக்கம் நல்லது என்பதால் , புகழ் பெற்றார்

ஆனாலும் குரு பேச்சை மீறினால் உருவாகும் தீமைகளை கண்களால் காணும் அனுபவமும் பெற்றார்.. அதுதான் குரு சொன்ன மீளா நரகமோ...

2 comments:

  1. ஆனாலும் குரு பேச்சை மீறினால் உருவாகும் தீமைகளை கண்களால் காணும் அனுபவமும் பெற்றார்.. அதுதான் குரு சொன்ன மீளா நரகமோ.??????

    ReplyDelete
  2. ஆனாலும் குரு பேச்சை மீறினால் உருவாகும் தீமைகளை கண்களால் காணும் அனுபவமும் பெற்றார்.. அதுதான் குரு சொன்ன மீளா நரகமோ...???????????

    ReplyDelete

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா