Friday, June 14, 2019

பாரதியாரின் தம்பியிடம் துணிகர கொள்ளை - குற்றவாளிகள் யார் ?

Nellaiappar.jpg (275×389)

பாரதியார் தம்பி என அழைக்கப்பட்டவர் பரலி நெல்லைப்பர்..இவர் மட்டுமல்ல.. இவர்தம் அண்ணன் தம்பியரும்கூட அந்த காலத்தில் தேச விடுதலைக்கு உழைத்தனர்..

வ உ சி , பாரதியார் ஆகியோருடன் நெருக்கமாக இருந்தனர்

பரலி நெல்லையபர் வ உ சி யின் கப்பல் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.. அவரே ஒரு பணியாளர்தான் என்றாலும் பாரதியார் உரிமையுடன் பொருளதவி கேட்கும் அளவுக்கு பாரதிக்கு நெருக்கமாக இருந்தார்

பாரதியார் காலமான போது அவர் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்ட வெகு சிலரில் இவரும் ஒருவர்.. பாரதி உடலை சுமந்தவர்களில் ஒருவர்

சுதந்திர போராட்டத்தில் பல முறை சிறைக்கு சென்றுள்ளார்

பத்திரிக்கை நடத்தியுள்ளார்.. நூல்கள் எழுதியுள்ளார்

சேவை நோக்கத்தில் செய்த தொழில்களால் பொருள் கரைந்தது

வறுமையில் வாடிய இவர் நிலையை காமராஜர் கவனத்துக்கு கொண்டு சென்றார் பாரதியின் புதல்வியார் சகுந்தலா

பதறிப்போன காமராஜர் சென்னை குரோம்பேட்டையில் 5 ஏக்கர் நிலம் வழங்கினார்.

அதில் ஒரு பகுதியை  விற்று தன் கடன்களை அடைத்தார்.. கொஞ்சத்தை தலித் மக்களுக்கு எழுதிக்கொடுத்தார்.   மிச்சம் இருந்த 5000 ஆயிரம் சதுர அடி இடத்தை பள்ளி அமைக்க உயில் எழுதி வைத்தார்

ஏழை குழந்தைகள் படிக்க இந்த பள்ளி வெகுவாக உதவியது
தற்போதைய நிலை ( 14.06.2019)

1998ல் இந்த பள்ளியை நகராட்சி மூடி விட்டது

மரங்கள் சூழ்ந்த அந்த அழகிய இடம் இப்போது சமூக விரோதிகள் தங்கிச்செல்லும் கூடாரமாகி விட்டது

மீண்டும் பள்ளி நடத்த வேண்டும் என மக்கள் கோரிக்கை எழுப்பவே ,  நகராட்சி ஒரு முடிவுக்கு வந்தது

அந்த இடத்தை தெரு நாய்களை பிடித்து கருத்தடை செய்யும் இடமாக மாற்ற நடவடிக்கை எடுத்தது

மக்கள் கடுமையாக எதிர்க்கவே அந்த திட்டம் கை விடப்பட்டது

கை விடப்பட்ட அந்த இடத்தை கைப்பற்ற அரசியல்வாதிகள் சிலர் முயற்சி செய்கின்றனர்
பரலியார் திருமணம் செய்து கொள்ளவில்லை.. ஆனால் பூங்கோதை என்ற பெண்ணை தத்தெடுத்தார்

அவரது மகன் தான்  (பரலியாரின் மகள் வழி பேரன் ) ஒரே வாரிசு என்பதால் , அவர் சாவதற்காக காத்திருக்கின்றனர் . அவர் மறைந்ததும் ,  அந்த இடம் அபகரிக்கப்பட்டு விடும்

ஒரு தியாகிக்கு இப்படி ஒரு துரோகம் செய்ய நம் அரசியல்வாதிகள் முயற்சித்தாலும் , குமரி அனந்தன் மட்டும் தன்னால் இயன்ற அளவு இந்த இடத்தை மீட்க முயன்று வருகிறார்

மீண்டும் பள்ளி நடத்த அல்லது பரலி நெல்லையப்பர் நினைவு மண்டபம் அமைக்க முயற்சிகள் செய்து வருகிறார்

திருடர்கள் ஜெயிப்பார்களா.. தியாகி ஜெயிப்பாரா என பொறுத்து இருந்துதான் பார்க்க வேண்டும்

சில ஆண்டுகள் கழித்து , குரோம்பேட்டை , பாரதிபுரம் , நெல்லையப்பர் தெரு சென்று பாருங்கள்..

பள்ளி இதே நிலையில் இருக்கிறதா... புதிய பள்ளி / நினைவு மண்டபம் இருக்கிறதா அல்லது பல அடுக்கு குடியிருப்பு வளாகம் இருக்கிறதா என பாருங்கள்


 நம் கண் முன்னே ஒரு கிழவனின் சொத்தை சிலர் அடித்து பிடுங்கினார்கள் என்பதற்கு சாட்சியாக , எதற்கும் அந்த தற்போதையை நிலையை ஒரு முறை  நேரில் சென்று பார்த்து விடுங்கள்


பிகு..
குமரி அனந்தனை இலக்கிய நிகழ்ச்சிகளில் அவ்வப்போது பார்க்கலாம்

ஒரு நாள் , கசங்கிய ஆடை , சவரம் செய்யப்படாத முகம் , பலவீனமான உடலுடன் , ஒருஇலக்கிய நிகழ்ச்சிக்கு வந்து விட்டு , ஆட்டோக்காரர் ஒருவருடன் பேரம் பேசிக்கொண்டு இருந்தார்.. எம் ஜி ஆர் , கலைஞர் , இந்திரா காந்தி , ரஜினி , நரசிம்ம ராவ் என பலருடன் நெருக்கமாக இருந்தவரா இவர் என திகைப்புடன் நான் அவரை பார்ப்பதை கவனித்த ஒருவர் , என்னருகே வந்து என்னை மெல்ல தட்டிக்கொடுத்தார்
என் உணர்வுகளை அவர் புரிந்து கொண்டதை அறிந்து கொண்டேன்

No comments:

Post a Comment

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா