Saturday, September 5, 2020

வானொலி நினைவுகள்

 ஒரு காலத்தில் அதிகம் விற்பனையான நூல்களில் வானொலிப் பெட்டி தயாரிப்பு மற்றும் பழுதுபார்த்தல் நூலும் ஒன்று

அந்தக்காலத்தில் அந்த அளவு வானொலிப் பெட்டிக்கான தேவை இருந்தது.  செய்திகள் , சினிமாப்பாடல் , கர்நாடக இசை , கிராமிய இசை , சான்றோர் சிந்தனை , விவசாயம் , அறிவியல் , நாடகம் என ஒரு முழுமையான தகவல் தொடர்பு சாதனமாக அது மிளிர்ந்தது.

அந்த வரவேற்பு காரணமாக பலர் தமக்கான  வானொலியை தாமே செய்து கொண்ட வழக்கமும் இருந்தது.

தனித்தனி பொருட்களாகவும் வாங்கி இணைக்கலாம் அல்லது ஏற்கனவே இணைக்கப்பட்ட அமைப்பை வாங்கி , வயரை இணைத்து , நமக்குப்பிடித்தமான அழகான வெளிப்புற பெட்டியை வாங்கி அதற்குள் இதை பொருத்திவிடின் சூப்பரான வானொலிப் பெட்டி ரெடி. 

அல்லது இதற்கென இருக்கும் உள்ளூர் தச்சர்களிடம் ஆர்டர் செய்து மரத்தினாலான வானொலிப்பெட்டி வாங்கிவைத்துக் கொண்டால் வீட்டுக்கு அது தனி,அழகைத்தரும்

அல்லது புகழ் பெற்ற நிறுவனங்களின் வானொலிப் பெட்டியை நேரடியாக வாங்கிக் கொள்ளலாம்

டிவி வருகைக்குப்பின் படிப்படியாக வானொலி செல்வாக்கிழந்தது.

ஆனால் காலையில் பள்ளிக்கு வேலைக்கு கிளம்பும்போதுகூட வானொலியைக் கேட்டவாறே தமது பணியைச் செய்யும் சுகம் டிவியில் இல்லையென்பதால் சாட்லைட் ரேடியோ , பண்பலை வானொலி என வானொலி மீண்டும் தலைதூக்க முயன்றது


ஆனால் அலைபேசியிலேயே பாடல் கேட்கும் வசதி கொண்ட ஆண்ட்ராய்டு போன்களால் மீண்டும் வானொலி பின்னடைவைச் சந்தித்தது. சாட்லைட் ரேடியோ எடுபடவில்லை

ஆனால் நாமே பதிவு செய்து நாமே கேட்பதில் த்ரில்  இல்லை. எதிர்பாராமல் காதில் விழும் அரிய பாடல்கள் அளிக்கும் த்ரில் என்பது வேறு

இது டிவியில் சாத்தியமில்லை. பல அரிய பாடல்களின் ஒளி வடிவம் இருக்காது. உரிமம் இருக்காது; எனவே டிவியில்,குறிப்பிட்ட பாடல்களையே மீண்டும் மீண்டும் ஒளிபரப்புவர்

இதனால் பலரும் வானொலியை நாட ஆரம்பித்துள்ளனர்

தனியார் நிகழ்ச்சிகளுடன் போட்டியிடும் வகையில் அகில இந்திய வானொலியும் சூப்பரான நிகழ்ச்சிகளை வழங்குகிறது

கட்சி சார்பற்ற செய்திகள் ,  இலக்கிய உரைகள் என தரமாகவும் சுவையாகவும் கலக்குகின்றனர்

எந்த தொழில் நுட்ப வளர்சசி வானொலியை அழித்ததோ இன்று அதுவே வானொலிக்கு உதவுகிறது

முன்பெல்லாம் திருச்சி நிலைய ஒளிபரப்பை அந்தப் பகுதி நேயர்களேகேட்க இயலும். மதுரை , நெல்லை , தர்மபுரி என அவரவர்களே கேட்க முடியும்


இன்று அங்கனம் இல்லை. இந்தியாவின் எந்த நிலைய ஒளிபரப்பையும் app நிறுவிக்கொண்டால் உலகின் எம்மூலையில் இருந்தும் கேட்கலாம்

சார்ஜ் செய்யத்தக்க வானொலிகள் இருக்கின்றன.  வாங்கி விட்டால் பைசா செலவற்ற என்டர்டயிண்ட்மெண்ட் , நம்பகமான செய்திகள் என  மாதச்சந்தா போன்றவை இன்றி அனுபவிக்கலாம்


இதனால் மீண்டும் வானொலி புத்துயிர் பெற்றிருப்பது வரவேற்கத்தக்கதுNo comments:

Post a Comment

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா