Sunday, October 4, 2020

சூரியனை குளிர்விக்க ப்ரிசரால் முடியுமா ? சிறுகதைப்பார்வை

 ஃப்ரீசருக்குள் உறங்கும் வெய்யில் -(எழுதியவர் நறுமுகை தேவி) சமீபத்தில் நான் ரசித்துப்படித்த கதைகளில் ஒன்று

நம்மை நேசிப்பவர்களல்தான் நமது நுண் ரசனைகளைப் புரிந்து கொள்ள முடியும்.

  பனிபடர்ந்த புல் வெளியை ரசித்தல் , புத்தக வாசம் ,  மெல்லிய இசை என எதுவாக இருக்கலாம்

குளிர்காலத்திலும் ஏசியைப்போட்டுக்கொண்டு , அந்தக்குளிரில் போர்வைக்குள் சுருண்டு,கிடப்பது சிலருக்குப்பிடிக்கும்ஶ   குளிர்காலத்துல எதுக்கு ஏசி என குடும்பத்தினர் கத்துவார்கள்.

இப்படி  ஒரு நுண் ரசனையைப்பற்றிய கதை இது.  தனது அந்த ரசனையை மதிப்பவர்கள் மீதான,அன்பு என்றும் மாறாது. அவர்களுக்கு மரணமும் கிடையாது என்பதை , ப்ரீசரில் வைத்து சூரியனைக்குளிர்வித்த முடியாது என்ற கவித்துவமான தலைப்பு சுட்டுகிறது

கதையில் சூரியனும் வெயிலும் ஒரு கதாபாத்திரமாகவே வருகின்றன

தேவா என்ற குடும்பத்தலைவியின் பார்வையில் கதை விரிகிறது

அவள் அப்பா நல்ல,"தரமான  சிறப்பான கம்பளிப்போர்வையின் ரசிகர். பண்டிகைகளுக்கு புத்தாடை எடுப்பதைவிட புதுப்போர்வைகள் வாங்கக்கூடியவர்

நல்ல தூக்கம் என்பது நல்ல போர்வையில் இருக்கிறது என நம்புபவர்

இதை அவர் மனைவி எப்படி பார்க்கிறார் தேவா எப்படி பார்க்கிறாள் என்பது இதை அழகான சிறுகதை ஆக்குகிறது

அப்பாவின் வறுமைமிகு இளமைக்காலத்தில் குளிரில் கஷ்டப்பட்டு இருப்பார். நல்ல போர்வைக்கான,அன்றைய ஏக்கத்தை இப்படி தீர்த்துக் கொள்கிறார் என எளிமையாக அதை புரிந்து கொள்கிறார் அம்மா

ஆனால் தேவாவைப் பொறுத்தவரை போர்வை என்பது வெறும் உலகியல்"சார்ந்த விஷயம் அன்று.  அது ஒரு சிறிய சூரியன்.  சூரியனுக்கே தெரியாமல் சற்று வெயிலைத் திருடி வந்து தேவைப்படும்போது வழங்கும் உறுதுணை.  வெயிலை சேமித்து வைத்து அதைத் தேவைப்படும் சூடான தின்பண்டம்போல வழங்க அப்பா கண்டுபிடித்த ஒரு கருவிதான் போர்வை


உண்மையில் இந்த ரசனை , இந்த நுண்ணுவர்வு அவளது ஒட்டு மொத்த ரசனையை , வாழ்வியல் சமூகம் சாரந்த நுண்ணுணர்வை உயர்த்தியுள்ளது என கதையின் போக்கில் உணர்கிறோம்

போர்வை என்பது சூரியனின் படிமமாக மாறி . அது அப்பாவாக உருவெடுக்கிறது.

சூரியனை ப்ரீசரால் குளிர வைத்து விடாது அதுபோல அப்பா என்றும் மரணிக்க முடியாது என அவள் உணர்வது பூடகமாக சொல்லப்பட்டு கதை முடிகிறது

நறுமுகைதேவி கவிஞர் என்பதால் பல வரிகளில் அழகு மிளிர்கிறது


சிறப்பான கதை


No comments:

Post a Comment

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா