Sunday, May 5, 2019

ஷத்ருக்கனனும் ராமாயணம் தரும் தத்துவ விளக்கமும்


ஆயிரம் ராமன்கள் வந்தாலும் ஒரு பரதனுக்கு ஈடாகாது என்கிறார் ராமர்..

லட்சுமணன் ராமர் கூடவே இருப்பவன்...

சரி.. அப்படி என்றால் சத்துருக்கனின் முக்கியத்துவம் என்ன?

வரம் கார்ணமாக ராமன் காட்டுக்கு செல்கிறான்.. பரதன் நாட்டை ஆள்கிறான்...   சீதையை லட்சுமணன் , அனுமன் துணையால் மீட்டு மீண்டும் சக்கரவர்த்து ஆகிறான் ராமன்

இதில் சத்ருக்கணன் கேரக்டர் வரவே இல்லை என்றாலும் , பரதன் ஆட்சி செய்தல் , ராமன் மீண்டும் முடி சூடுதல் போன்ற ஒவ்வொரு நிகழ்ச்சியும் சத்துருக்கனன் மூலமாகவே ந்டக்கிறது.. அனைத்தையும் செயல்படுத்துபவன் அவனே..

இது ஒரு புறம் இருந்தாலும் , ராமாயாணத்தை  தத்துவ ரீதியாக அணுகும் ஆனந்த ராமாயணம் போன்றவற்றில் இதற்கு வேறு ஒரு விளக்கம் தரப்பட்டுள்ளது

சுசுப்தி  , சொப்னம் , ஜாக்ரத , துரியம் என நான்கு நிலைகளாக பிரஞ்ஞையை பகுத்துள்ளனர்

துரியம் என்பது முழு விழிப்பு நிலை... இதன் வெளிப்பாட்டு வடிவம்தான் ராமன்..


சுசுப்தி என்பது தான் என்ற உணர்வு உருவாகாத  நிலை.. மனமற்ற நிலை... மனம் என்பது இல்லை என்பதால் துக்கமும் இல்லை.. அழிவும் இல்லை.. சாஸ்வத நிலை... இதன் வெளிப்பாடுதான் ஷத்ருக்கனன்

சொப்னம் என்பதில் பிரஞ்ஞை இருக்கும்.. ஆனால் நான் என்பது இருக்காது.. மரம் செடி கொடி விலங்குகள் எல்லாம் இந்த நிலைதான்,,,,   நான் என்பது இல்லாமல் செயல்பட்ட பரதன் இந்த நிலையில் வருகிறான்

ஜாக்ரத என்பது விழிப்புணர்வு பெற்ற நிலை.. நன்மை தீமை குழப்பங்கள் உருவாகும் நிலை இது.. லட்சுமணன் இந்த நிலைதான்


ஜாக்ரத என்ற விழிப்புணர்வு மனிதனுக்கு அருளப்பட்டு இருந்தாலும் அதை மழுங்கடித்துக்கொள்ளத்தான் தினமும் அன்றாடம் பாடுபடுகிறோம்... பொழுது போக்குகள் , மது , ஸ்மார்ட் போன் என இதற்காக செலவழிக்கிறோம்...


சுசுப்தி என்ற நிலை நல்லதுதான்.. ஆனால் அதை நம்மால் ஈட்ட முடியாது.. என்னதான் முயன்றாலும்  நாம் குழந்தையாக முடியாது.

ஆனால் துரியம் என்ற புத்த நிலையை நம்மால் அடைய முடியும்.. அதற்கு முயற்சி தேவை

 நம் ஆழ் மனம் விரும்புவதும் இதைதான்... ஆனால் அதற்கான உழைப்பை கொடுக்க விரும்பாமல் சொப்ன நிலையை அடைய முனைகிறோம்...

இபப்டி தேவையின்றி நம் ஆற்றலை வீணடிப்பதற்கு பதில் விழிப்புணர்வை சரியாக பயன்படுத்த வேண்டும் என்பதே ஆன்மிக நூல்கள் தரும் செய்தி



Friday, May 3, 2019

தேர்தல் முடிவுகள் - மாமாக்கள் , அண்ணன்கள் , சித்தப்பாக்கள் கணிப்பு

ஒவ்வொரு தேர்தலின் போதும் சில சித்தப்பாக்கள் , மாமாக்கள் , ஒன்று விட்ட அண்ணன்கள் களத்தில் குதிப்பார்கள்..

இவர்கள் பெரும்பாலும் அதிமுக அல்லது திமுகவை சேர்ந்தவர்களாக இருப்பார்கள்.
ஆனாலும் நடு நிலைமையுடன் கட்சி சார்பற்று துல்லியமாக தேர்தல் முடிவுகளை கணிப்பார்கள்..

எப்படி என்றால் , அந்த மாமா திமுக காரர் என்றால் , ஊரே திமுக வெல்லும் என்று சொன்ன தேர்தலில்கூட திமுக வாஷ் அவுட் ஆகும் என சரியாக கணித்திருப்பார்.. அடுத்த தேர்தலில் திமுக ஜெயிக்கும் என்பதையும் சரியாக சொல்லி இருப்பார்...

குறைந்த வித்தியாசத்தில் திமுக் ஆட்சியை இழக்கும் என்றும் சொல்லி இருப்பார்..
\
அந்த தகுதியின் அடிப்படையில் இப்போது திமுக ஜெயிக்கும் என்பார்..

ஒரு வேளை அதிமுக மாமா என்றால் கடந்த கால தேர்தல்களில் அதிமுக தோல்விகளை சரியாக சொல்லி இருப்பார்... இப்போது அதிமுக ஜெயிக்கும் என்பார்.

மாமாக்கள் பிரச்சனை என்னவென்றால் கடந்த கால கணிப்புகள் சரியாக இருக்கும்... தற்போதைய கணிப்புகள் பொய்யாகி விடும்... ஆனால் அது குறித்து விளக்கம் சொல்ல அவர்கள் இருக்க மாட்டார்கள்..

இம்முறை அண்ணன்கள் , மாமாக்கள் கணிப்பு என்ன... பதிவு செய்வோம்.. தேர்தல் முடிந்ததும் விளக்கம் கேட்போம்
------

திமுக 37 தொகுதிகளில் வெல்லும்.. மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும்

--------

தந்தி பாண்டே கணிப்பு


திமுக 25  அதிமுக 15   மத்தியில் பிஜேபி

---------------------------


சூதாட்ட கிளப் கணிப்பு

பிஜேபி கூட்டணி - 300 சீட்டுகள்

----

பார்ப்போம்.. யார் கணிப்பு பலிக்கும் என சில நாட்களில் தெரியும்








Thursday, May 2, 2019

திட்ட சொல்லி ரசித்த பெரியார்


பெரியாரை மேடை தோறும் கடுமையாக தாக்கி பேசி வந்தவர் காங்கிரஸ் இயக்கத்தை சேர்ந்த சின்ன அண்ணாமலை

ஒரு நாள் இருவரும் நேருக்கு நேர் சந்திக்கும் சூழல் வந்தது

சின்ன அண்ணாமலைக்கு தர்ம சங்கடம்

ஆனால் பெரியார் சகஜமாக ஜாலியாக பேசினார்

- கதைகள் சொல்லி கலகலப்பாக பேசுவீர்களாமே... அப்படித்தான் பேச வேண்டும் என்றார் பெரியார்

- ஆமாம் அய்யா.. ஆனால் பெரும்பாலும் உங்களை தாக்கித்தான் பேசுவேன் என்றார் சின்ன அண்னாமலை

- அதனால் என்ன... எதுவுமே யாருமே விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவர்கள் அல்ல என்றுதானே நான் பிரச்சாரம் செய்து வருகிறேன்... கடவுளையே விமர்சிக்கலாம் என்பதுதானே என் கருத்து... எனவே என்னை விமர்சிப்பதை நான் ஏற்கிறேன்.. இன்னும் சொல்லப்போனால் , என் முன்னிலையே என்னை நீங்கள் விமர்சிக்க வேண்டும்.. அதை நான் ரசிக்க வேண்டும்... விழா ஒன்று ஏற்பாடு செய்துள்ளோம்.. வந்து பேசுங்கள் என்றார் பெரியார்

அந்த பெருந்தன்மையில் திகைத்த சின்ன அண்ணாமலை வேறு வழியின்றி ஏற்றுக்கொண்டார்

கருஞ்சட்டை தொண்டர்கள் முன் , பெரியார் முன்னிலையில் பெரியாரை தாக்கி பேசினார்

பெரியார் புன்னகையுடன் ரசித்தார்

திக தோழர்கள் அமைதியாக எந்த பிரச்சனையும் செய்யாமல் கேட்டனர்

பேச்சு முடிந்து விடை பெறும் போது , அன்பு பரிசாக பத்து ரூபாய் அளித்து விடை கொடுத்தார் பெரியார்


இந்த பெருந்தன்மையை அப்படியே பதிவு செய்து தன் மேன்மையை காட்டியுள்ளார் சின்ன அண்ணாமலை

மேதைகள் , பெரியோர்கள்  வாழ்ந்த மண் இது

Wednesday, May 1, 2019

இறைவனின் ஐந்து நிலை - ஆன்மிக அல்சல்





இறை என்பதன் ஐந்து நிலைகளை வைணவ இலக்கியம் இப்படி சொல்கிறது

பூகதஜலம்போலே அந்தர்யாமித்வம்

ஆவரண ஜலம்போலே பரத்வம்

பாற்கடல்போலே வியூகம்

பெருக்காறு போலே விபவம்

அதில்

தேங்கின மடு போலே அர்ச்சாவதாரம்

----

இதற்கு எளிமையாக பொருள் காண்போம் ( மரபார்ந்த பொருள் அறிய வைணவ நூல்களை அணுகலாம் )


நமகு தாகமாக இருக்கிறது.. தண்ணீர் தேடுகிறான்.. ஏனப்பா தேடுகிறாய்.. உன் காலடியிலேயே தண்ணீர் இருக்கிறது.. தோண்டிப்பார் என யாரேனும் சொன்னால் , அவர்கள் சொல்வது போல நிலத்தடி நீர் இருப்பது உணமை என்றாலும் , எப்போது தோண்டி எப்போது குடிப்பது..   உடனடி தாகத்துக்கு நிலத்தடி நீர் உதவாது...  அது போல இறை என்பது உனக்குள் உள்ளது என்ற தத்துவம் உடனடி பயனை தராது...

இறையை உணர மட்டுமே முடியும் என்பது இந்த நிலை


உலகை சுற்றிலும் கடல் உள்ளது என்பது போல உன்னை சுற்றி இருப்பது எல்லாம் இறை வடிவமே என்பது இரண்டாவது நிலை...

இறை என்பதற்கு ஓரளவு வெளிப்படையான நிரூபணம் உள்ளது என்பது இந்த நிலை... கடல் உலகை சுற்றி இருந்தாலும் அதுவும் உடனடி தாகத்துக்கு உதவாது


பாற்கடல் போல , பாலை பார்ப்பது போல , உணரலாம் , பார்க்கலாம் என்ற நிலை மூன்றாவது... இதுவும் உடனடியாக உதவாது


ஆற்று வெள்ளம் போல , உணரலாம் பார்க்கலாம்,, தொடலாம் .. என்பது அடுத்த நிலை... இது ஓரளவு சிலர் தாகம் தீர்க்கும்..  ராமர் கிருஷ்ணர் பரமபிதா அல்லா என்பது இந்த நிலை....

நிலத்தடி நீர் , ஆற்று நீர் போன்றவை முறைப்படி சேகரிக்கப்பட்டு வீட்டு குழாயில் வருகிறது அல்லவா... இதை பார்க்கலாம் உணரலாம் முகரலாம். குடிக்கலாம்...   இதுதான் ஐந்தாம் நிலை

அவதாரங்கள் அல்லது மகான்கள் என்பது இந்த நிலை...  இயேசு , குணங்குடி மஸ்தான் , விசிறி சாமியார் , ரமணர் , சாய் பாபா , காஞ்சி மகான் என எண்ணற்றோரை சொல்லிக்கொண்டே போகலாம்...  நபிகளை இந்த வரிசையில் வைப்பதை இஸ்லாம் ஏற்காது.. நபி என்பவர் இறைவனின் தூதர் மட்டுமே , மகான் என்றெல்லாம் பூஜிக்கலாகாது என்பது இஸ்லாம் .. ஆனாலும் புனித நூலான குர் ஆன் இப்படி நேரடியாக அனுபவிக்கும் நிலைக்கு உதாரணமாக சொல்லலாம்...


நேரடியாக என்னுள்ளே என்னை தேடுகிறேன் என்றாலும் ஓகேதான்... மகான்கள் மூலம் அனுபவிக்கிறேன் என்றாலும் ஓகேதான்



வாஷ் அவுட் ஆவதில் விஞ்சி நிற்கும் கட்சி காங்கிரசா - பிஜேபியா : அலசல்

காங்கிரஸ் வாஷ் அவுட் ஆகும் மா நிலங்கள் ஓகே.. பிஜேபிக்கு இது நிகழாதா ..ஏன் காங்கிரசை மட்டும் எழுதுகிறீர்கள்.. இது நடு நிலையா என சில கேட்கிறார்கள்

சில ஆண்டுகள் முன்பு வரை , பிஜேபி உத்தர்பிரதேசத்தில் மட்டும் வெல்லும் கட்சியாக இருந்தது..  மற்ற எல்லா  மா நிலங்களிலும் வாஷ் அவுட்தான். ஆனால் காங்கிரஸ் எல்லா மா நிலங்களிலும் செல்வாக்குடன் இருந்தது.. எனவேதான் காங்கிரஸ் வாஷ் அவுட் ஆவதை வருத்தத்துடன் பார்த்தோம்..

ஓகே... ஒரு ஒப்பீட்டுக்காக இரண்டு கட்சிகளையும் பார்ப்போம்

ஆந்திரா -  இரண்டு கட்சிகளும் வாஷ் அவுட்

தெலுங்கானா - இரண்டுமே அவுட்

மேற்கு வங்கம் - காங்கிரஸ் அவுட்.. பிஜேபி முதல் முறையாக இரண்டாம் இடம் வெல்ல இருக்கிறது.. மம்தா முதலிடம்

ஒரிசா - இங்கும் காங்கிரஸ் அவுட்.. முதல் முறையாக பிஜேபி இரண்டாம் இடம்வெல்ல இருக்கிறது.. நவீன் முதலிடம்


பஞ்சாப் - காங்கிரஸ் முதலிடம்.. பிஜேபி வாஷ் அவுட் ஆக வாய்ப்புண்டு

பிஹார்-   பிஜேபி முதலிடம்..    காங்கிரஸ் அவுட்

கேரளா - காங்கிரஸ் வெற்றி ,,பிஜேபி வாஷ் அவுட் ஆகக்கூடும் ( அப்படியே வென்றாலும் ஓரிரண்டு வெல்லலாம் )

டெல்லி - பிஜேபி வெற்றி.. காங்கிரஸ் வாஷ் அவுட்


பல வட இந்திய மா நிலங்களில் இரண்டும் முதல் இரண்டு இடங்கள் பெறும். கர் நாடகத்திலும் முதல் இரு இடங்கள்
தமிழகத்தில் இரண்டுமே கொஞ்சம் கொஞ்சம் சீட்டுகள் பெறும்


Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா