Tuesday, May 4, 2010

ஏப்ரலில், என்னை கவர்ந்த டாப் பைவ் புத்தகங்கள்ஏப்ரல் மாதம் படித்த புத்தகங்களில், என்னை கவர்ந்த புத்தகங்கள்... சிறந்த புத்தகங்கள் சிலவற்றை பட்டியல் இட வில்லை.... அவை தரமற்றவை என்று அர்த்தம் இல்லை... இப்போதைய மன நிலையில், அவ்வளவாக கவரவில்லை.. பின்பு பட்டியல் இட படும் ..

1 தொழிலில் நிச்சயம் வெற்றி பெற - கே கே ராமசாமி
..ஷார்ப் பம்ப் நிறுவனத்தை உருவாக்கியவரின் சுய சரிதை, அனுபவ தொகுப்பு....

எளிய தமிழில், அருமையாக படைத்து இருக்கிறார்கள்... விரிவான பதிவு விரைவில் எதிர்பாருங்கள்...

தொழிலில் நிச்சயம் வெற்றி பெற - நிச்சயம் படிக்க வேண்டிய புத்தகம்


2 simply fly - captain gopinath

ஏர் டெக்கான் விமான சேவையை ஆரம்பித்து , இந்தியாவில் விமான போகக் வரத்து துறையில் புரட்சி ஏற்படுத்தியவரின் , சுய சரிதை...சின்ன சின்ன விஷயங்கள் , எப்படி பெரிய விளைவுகளை ஏற்படுத்துகின்றன என நன்றி மறக்காமல் சொல்லி இருப்பது, நூலுக்கு நம்பக தன்மை ஏற்படுத்துகிறது.... விரிவான பதிவு , விரைவில்...
simply fly - எண்ணங்களை உயர பறக்க வைக்கும் நூல்

3
விடுதலைப் புலிகள்-மருதன் பிரபாகரன்: வாழ்வும் மரணமும் - பா ராகவன்
ராஜீவ் கொலை வழக்கு - ரகோத்தமன்


இந்த மூன்று புதகங்களுயும் ஒன்றாக படித்தால் நல்லது... தமிழனின் வீரம், திறமை, இலங்கையில் அவர்கள் சந்திக்கும் கொடூரம், விடுதலை போர், சகோதர யுத்தம் என மிகபெரிய விஷயங்கள் ...

ராஜீவ் காந்தி கொலை- பாதுக்காப்பு குளறு படிகள், அதிகார வர்கத்தின் அலட்சியம், என ஒருபுறம்... திறமையான அதிகாரிகள் ஒரு புறம் என கொலை வழக்கின் மர்மங்கள் விறு விறுபாக சொல்ல பட்டுள்ளன , ரகோத்தமன் நூலில்....

4 இந்து ஞான மரபில் ஆறு தரிசனங்கள் - ஜெயமோகன்..

இந்து மதத்தை பாராட்டுவோரும் , தூற்றுவோரும் படிக்க வேண்டிய புத்தகம்... எல்லோரும் படிக்க முடியாது... இந்த துறையில் ஈடு பாடு உள்ளவர்கள் படிக்க வேண்டிய புத்தகம்... ஆசிரியரின் உழைப்பு ஒவ்வொரு பக்கத்திலும் தெரிகிறது... சில தமிழ் சொற்களுக்கு அர்த்தம் தெரியவில்லை...

ஆறு தரிசனங்கள் - பொது தரிசனம் அல்ல... சிலருக்கு மட்டும் விசேஷ தரிசனம்


5 கலைவாணி : ஒரு பாலியில் தொழிலாளியின் கதை - எழுது வடிவம் ; ஜோதி நரசிம்மன்

இந்தியா இன்னும் செல்ல வேண்டிய தூரம் நிறைய இருக்கிறது என்பதை பளிச் என உணர வைக்கும் புத்தகம்... அடுத்தடுத்து , கஷ்டங்களை மட்டுமே சந்தித்த பெண்ணின் கதை.... இவரை போன்ற பெண்களை தவறாக நினிக்கும் நாம், இவர்கள் உருவாக நாமும் கூட காரமாக இருக்க கூடும் என சிந்திக்க வைத்து, இவர்களை ஆபாசமாக அல்ல - அனுதாபத்துடன் பார்க்க வேண்டும் என புரிய வைகிறது...
கலைவாணி : ஒரு பாலியில் தொழிலாளியின் கதை : களைந்து போன கனவின் கதை


************************
special entry

நம்பர் ஒன் சேல்ஸ் மேன் - சோம வள்ளியப்பன்

இந்த துறையில் இருபவகளுக்கு, நம்பர் ஒன் புத்தகம் இதுதான்.... மிக தெளிவாக, உடனடி பலன் அளிக்கும் வகையில், சர்வ தேச தரத்துடன் எழுதப்பட நூல்...

நம்பர் ஒன் சேல்ஸ் மேன் -நம்பர் ஒன் புத்தகம்

2 comments:

 1. சார் இந்த புத்தகங்களின் பதிப்பகங்கள் விவரம் சேர்த்து எழுதினால் நன்றாக இருக்கும்,
  மருதன் எழுதிய புத்தகம் படித்துவிட்டேன், அவர் விடுதலைபுலிகளை பற்றி ஒரு அவசர கதியில் தொகுத்த மாதிரி இருக்கும்.
  பா.ராகவன் எழுதியது பிரபாகரன் பற்றிய சரியான பார்வை அல்ல.
  பகிர்வுக்கு நன்றி ..

  ReplyDelete
 2. boss, I will provide publication details ... thanks for the valuale feed back..

  ReplyDelete

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா