Friday, May 7, 2010

ஒரு செக்ஸ் கதை - ( வயது வந்தவர்களுக்கு மட்டும் )

" நான் எங்கு இருக்கறேன் ... " என்று மயக்கம் அடைந்து எழும் எல்லோரையும் போல நானும் கேட்டேன்/... அனால் பதில் சொல்ல பக்கத்தில் யாரும் இல்லை... கடற்கரை ஒர்ரம் தனியாக இருந்தேன்.... ஒரு சவாலுக்காக, தனியக கப்பலில் புறப்பட்டது ஞாபகம் இருக்கிறது... பிறகு விபத்து நடந்தது லேசாக நினைவு வந்தது... இது இந்தியாவா ? வெளி நாடா ?

சந்தேகத்துடன் நடக்க தொடங்கினேன்... " ரஜினி அரசியலுக்கு வருவாரா ? " குரல் கேட்டு எனக்கு ஆச்சர்யம்... தமிழர்கள்... அவர்களை நெருங்கினேன்... " ஒன்னும் பயபடதே... இது இந்தியா இல்லை... அனால், நீ இங்கேயே இருக்கலாம்... வெளி உலகத்துடன் எந்த தொடர்பும் கூடாது.... முடியாது... "

உண்மையில் அந்த " நாடு " நன்றாக இருந்தது... எல்லா வசதிகளும் உண்டு... எனக்கு தனி வீடு ஒதுக்கினார்கள்... பிடித்த வேலை உடனடியாக கிடைத்தது... இனி மேல் இதுதான் என் ஊர்.. எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது..

இரண்டு நாளில் எனக்கு ஒரு வித்தியாசம் தெரிந்தது.... பெண்கள் யாரையும் என்னால் பார்க்க முடியவில்லை...

*********

வேலை யில் முதல் நாள்... ஒரு படிவம் நிரப்ப வேண்டும்... பெயர் , வயது எல்லாம் நிரப்பினேன்... செக்ஸ் : என்ற இடம் மட்டும் அடிக்க பட்டு இருந்தது....

என்ன இது என வியப்பாக கேட்டேன்.. இந்த ஊரில் அந்த இடத்தை நிரப்ப வேண்டிய அவசியம் இல்லை.... என்று புன்னகிதார் பணியாள் ..

ஏன்

" இங்கு இருப்பது ஆண்கள் மட்டும்தான்.. இங்கு இருப்பது ஒரு செக்ஸ் தான் "

அதிர்ந்தேன்.....

****************

ஒரு விஞ்ஞானி காதல் தோல்வி அடைந்ததும், பெண்கள் மேல் வெறுப்படைந்து பெண்கள் இல்லாத உலகை உருவாகியதும், க்ளோனிங் மூலம் வம்ச விருத்தி ஏற்பாடு நடப்பதால், பெண்களின் தேவை உணர படுவது இல்லை என்றும் தெரிந்து கொண்டேன்....

மற்றபடி, வெளி உலகை விட எல்லா வசதிகளும் உண்டு .." அந்த " பசியை தீர்க்க கூட அறிவியல் முறையில் வழி உண்டாம்.. அட பாவிகளா.... அறிவியல் மகத்துவம் என்னை வியக்க வைத்தது,... அந்த ஊரின் வளர்ச்சி என்னை மயக்கியது...

***********************************௮
ஆனாலும் எல்லோர் கண்களிலும் ஏதோ ஒரு ஏக்கத்தை காண முடிந்தது... ... என்ன என்று புரியவில்லை....

எல்லா வளமும் இருப்பதால், எந்த கவலைகளும் இல்லை... யாரவது இறந்தால் கூட யாரும் அழுவது இல்லை... எல்லாம் இயந்திர கதியில் இருந்தது...

இதை எல்லாம் உருவாகிய விஞ்ஞானியை பார்க்க ஆசையாக இருந்தது .. ஆனால் அவர் அங்கு இல்லை... அவரை பதவி நீக்கம் செய்து விட்டு, எதிர் கோஷ்டி ஆட்சிக்கு வந்து விட்டதாம்.. அவர் எங்கு இருக்கிறர் என தெரியவில்லை

*****************************

"சார்... அதிர்ஷ்ட குழுக்களில், உங்களுக்கு உல்லாச பயணம் பரிசு ...உல்லாச கப்பலில் கொஞ்ச தூரம் சென்று வரலாம்.... அனால், இந்த நாடு கண்காணிப்பில் இருப்பீர்கள்... வேறு எங்கும் தப்பி செல்ல முடியாது " அரசு ஊழியன் சொன்னபோது, எனக்கு சிரிப்பு வந்தது... உல்லாச உலகை விட்டு விடு செல்ல நான் என்ன முட்டள ? கண்டிப்பா திருப்பி வர்றேன் "

கப்பலில் ஏறினேன்,,,

கப்பலில் எல்லா வசதிகளும் உண்டு.... வெகு அருமை... திடீரென புயல்.... என் போதாதா நேரம்... மீண்டும் விபத்து..

************

ஏதோ ஒரு இடத்தில் ஒதுங்கினேன்... எங்கும் ஏழ்மை மிகுந்த ஊர் போல தெரிந்தது.... வெறுப்பாக இருந்தது....

ஒரு முதியவரை அணுகினேன் ..." தம்பி..அந்த ஊர்ல இருந்து வர்றவங்க , இப்படி வந்து மாடிக்றது எப்பவும் நடக்குரட்துதான்... பக்கத்துக்கு தீவல போய் விட்டுடுவோம்.. அவங்கலுக்கு சொந்தமான தீவு அது... அவுங்க வந்து கூப்பிடுகுவாங்க... இங்கே அவுங்க வர முடியாது " என்றார்.. பக்கத்தில் அவரது மனைவி... இந்த வயதிலும் அவர்களுக்குள் காதல் இருப்பது புரிந்தது...

ஐயா,, இந்த ஊர்ல கஷ்டபட்ரதுகு , உங்க மனைவியை விட்டுடு , அங்கே வந்துடுங்க... ஜாலிய இருக்கும் " என்றேன்..

" தம்பி ..வாழ்க்கைங்கறது, சும்மா ஜாலிய இருப்பது மட்டும் அல்ல.. ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு மற்றவர் துன்பங்களை துடைத்தல்... வெறுப்பின் அடிப்படையில், வாழ்வது வாழ்வல்ல...
என்னை ஒரு பொண்ணு எமாதிடானு எனக்கு கோபம் இருந்துச்சு... அனால், அந்த பொண்ணு நிலைல இருந்து பார்த்தல் அவ செஞ்சது சரி நு தோனுச்சு..இப்ப இவளை கட்டிகிட்டு , வாழ்வை நல்லா வாழறேன்..இதன் இன்பங்களும் துன்பங்களையும் ரசிக்றேன் ..

நீ சொல்ற சொர்க்க பூமியல எல்லாம் இருக்கலாம்,... அனால் அங்கு இருப்பது வாழ்வு அல்ல "

சொர்க்க புரி போகும் வழி தெரிந்தும் , போகாமல் இருக்கிறாரே... எனக்கு வியப்பு...

" அய்யா ..நீங்க யாரு "

" நான்தான் அந்த ஊரை உருவாக்கிய விஞ்ஞானி "
************************************************************௮௮

"ஒரு செக்ஸ் " கதை - by pichaikaaran

15 comments:

 1. வித்தியாசமான கதை.. !
  ஆனால் வயது வந்தவர்களுக்கு மட்டும் என்ற குறிப்பு ஏன்?

  ReplyDelete
 2. இந்த கதையை ரசிக்க கொஞ்சம் மேச்சுரிடி வேண்டும் என கருதியதே அந்த குறிப்பு கொடுக்க காரணம்... தாங்கள் ரசித்ததுக்கு நன்றி... that shows your maturity

  ReplyDelete
 3. take care of spelling mistakes, plz. But Title will grab you more visitors thro SEO.

  ReplyDelete
 4. நல்ல கதை பார்வையாளன். இயற்க்கைக்கு மாறாய் எதுவும் நிலைக்காது

  ReplyDelete
 5. நல்ல கற்பனை வளம் தொடர்ந்து எழுதுங்க?வாழ்க வளமுடன்

  ReplyDelete
 6. " நல்ல கதை பார்வையாளன். இயற்க்கைக்கு மாறாய் எதுவும் நிலைக்காது"  " நல்ல கற்பனை வளம் தொடர்ந்து எழுதுங்க?வாழ்க வளமுடன் "

  thank you

  ReplyDelete
 7. " take care of spelling mistakes"

  sure.. thank you for feed back

  ReplyDelete
 8. great ... நல்லா இருக்குங்க .........

  ReplyDelete
 9. நல்லா இருக்கு... But 18+ Not....

  ReplyDelete
 10. " நல்லா இருக்கு... But 18+ Not.... "

  i belive children dont need this story ..

  ReplyDelete
 11. ///i belive children dont need this story ..///

  O Realy... He He... OK OK..

  ReplyDelete
 12. i hope your artical based on SAAGA VARAM ( Mr.Iraianbu IAS - book) - anyway nice keep it up.

  ReplyDelete

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா