Sunday, May 15, 2011

கணிப்பு தவறியது ஏன்? நக்கீரன் கோபால் விளக்கம்

தேர்தலும் கருத்து கணிப்பும் பிரிக்க முடியாதவை... பலரும் கருத்து கணிப்புகளை வெளியிடுகிறார்கள்...

சில பலிக்கின்றன.. சில பலிப்பதில்லை...

தாம் சொன்னது நடந்து விட்டால், அந்த பெருமையை ஏற்றுகொள்ளும் பத்திரிக்கைகள், அது நடக்காவிட்டால், விளக்கம் எதுவும் அளிப்பதில்லை..

இந்த நிலையில் நக்கீரன் கணிப்புகள் வெளி வந்து இருந்தன.. அந்த அடிப்படையில், திமுகதான் வெல்லும் என தேர்தல் முடிவு வெளிவரும் சற்று முன்பு கூட நம்பிக்கையுடன் சொல்லிக்கொண்டு இருந்தார் நக்கீரன் கோபால்..

ஆனால் அவர் நம்பிக்கை பொய்த்தது...

ஓகே...இதற்கு விளக்கம் அளிப்பாரா , அல்லது இதை அப்படியே மறந்து பத்திரிக்கை “ தர்மத்தை “ காப்பாரா என எதிர்பார்த்த எனக்கு இன்ப அதிர்ச்சி..
முதல் பக்கத்திலேயெ , நடந்த த்வறுக்கு வருத்தம் தெரிவித்து இருக்கிறார்..

அவரை பாராட்டுவது நம் கடமை..வேறு யாரும் இப்படி செய்து நாம் பார்த்தது இல்லை...

இதோ.. அவர் விளக்கம்

************************************

வருத்தம்

சென்ற தேர்தல்களில் நக்கீரன் கணிப்புகள் நூற்றுக்கு நூறு சரியாக இருந்ததை வாசகர்களும், அரசியல் பிரமுகர்களும், மக்களும் மறக்கவில்லை.. ஆனால் இந்த முறை தவறி விட்டது.

கருத்து கணிப்புகளை மேற்கொள்வதற்கு என்ன நடைமுறைகள் மேற்கொள்ளப்படுமோ அதே விஞ்ஞான முறையையே கையாண்டோம். முடிவுகளை பாரபட்சமின்றி வெளியிட்டோம்..

தற்போது ஏன் சர்வே தோற்றது என்பதை ஆராய்ந்தோம். சாம்பிள்களில் தவறா, எடுக்கப்பட்ட முறை தவறா, சர்வே முடிவை தொகுதிகளாக மாறுவதில் தவறா என வல்லுனர்களிடம் கேட்டோம். இதெல்லாம் சரியாகவே இருப்பதாக அவர்கள் கூறினர்.
பிறகு ஏன தோல்வி ஏற்பட்டது என ஆராய்ந்தோம்.. நாம் தனியார் நிறுவனங்களை நம்பாமல் நேரடியாக சர்வே செய்தோம். சர்வே படிவத்தின் தலைப்பில் நக்கீரன் என்ற பெயர் இருந்தது. எனவே மக்கள் உண்மையான முடிவை சொல்லாமல், ஜெயலலிதாவுக்கு நக்கீரன் எதிரி என கருதி, மாற்றி சொல்லி இருக்கிறார்கள் என்ற முடிவுக்கு வந்துள்ளோம்.. இதனால்தான் கணிப்பு தவறி விட்டது..

என்ன காரணம் சொன்னாலும் தவறு தவறுதான். இதை நேர்மையுடன் ஒப்புக்கொண்டு நக்கீரன் தன் வருத்தத்தை தெரிவித்து கொள்கிறது. வாசகர்கள் தொடர்ந்து ஆதரவு அளீக்க வேண்டும் என கேட்டு கொள்கிறது.

*******************************************************

 நக்கீரனுக்கு நம் பாராட்டுக்கள்....


6 comments:

  1. நம்பிட்டோம் கோபால் சார்

    ReplyDelete
  2. ஒவ்வொரு மனுஷனுக்கும் ஒவ்வொரு ஃபீலிங்...

    ReplyDelete
  3. அடுத்தது வடிவேலு.........

    ReplyDelete
  4. முக்காடு கிடைக்கலியா இல்ல தாவரதுக்கு ரெடியா

    ReplyDelete
  5. //சர்வே படிவத்தின் தலைப்பில் நக்கீரன் என்ற பெயர் இருந்தது. எனவே சொல்லி இருக்கிறார்கள்//
    நம்மை யாரும் கணித்துவிடகூடாது என்பதில் நாம் சிரத்தை கொள்கிறோம், மேலும் மற்றவனை குழப்புவதில் நமக்கு ஒரு கிக் இருக்கத்தான் செய்கிறதும், இவை தமிழர்களின் விஷேச குணங்களோ?

    ReplyDelete
  6. கோபால் மீசைல தீய வக்க..நாங்க என்ன அவ்ளோ இளிச்சவாயங்களா?

    ReplyDelete

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா