நன்றி மறப்பது நன்றன்று என வள்ளுவர் சொன்னார் . ஆனால் சொந்த வாழ்க்கை , பொது வாழ்க்கை , சமூகம் என எங்குமே இதை , நன்றியை, பார்க்க முடிவதில்லை .
இந்தியாவில் ஜனநாயகம் இனி இல்லை என்ற நிலை எமர்ஜென்ஸி காலத்தில் உருவானது. அப்போது அரசுடன் போரிட்டு , ஜனநாயகத்தை மீட்டவர் ஜெயபிரகாஷ் நாராயணன் . இன்று எத்தனைபேருக்கு அவரை தெரியும் ?
ஈழ போரின் உன்னத வீரன் உமா மகேஸ்வரனை எத்தனை பேர் நினைவு வைத்திருக்கிறார்கள் ?
அதே போல , உலகை பாசிச சக்திகளிடம் இருந்து காப்பாற்ற வித்திட்ட ரஷ்ய புரட்சியை எத்தனை பேர் அறிவார்கள் ?
கொடுங்கோலன் ஜார் மன்னனை வென்று புரட்சியாளர்கள் ஆட்சியை கைப்பற்றினர் என்ற அளவுக்கு சிலருக்கு தெரிந்து இருக்கும்.. ஆனால் அன்று அவர்களுக்கு ஜார் மன்னர்களை தவிர பல்வேறு எதிர்ப்புக்ள் இருந்தன.. அவற்றை மீறித்தான் அங்கு கம்யூனிச ஆட்சி வந்தது என்பது பரவலாக அறியப்படாத ஒன்று..
வரலாற்றின் அந்த முக்கியமான கணத்தை படம் பிடிக்கும் புத்தகம்தான் உலகை உலுக்கிய பத்து நாட்கள்... இதை எழுதியவர் ஒரு ரஷ்யர் அல்லர்... ஜான் ரீடு என்ற அமெரிக்கர்... அமெரிக்கராக இருந்தாலும் ரஷ்யாவை நேசித்தவர் . அவரை கவுரவிக்கும் பொருட்டு, அவர் மறைந்ததும் , செஞ்சதுக்கத்தில் அடக்கம் செய்யப்பட்டார்.( கிரெம்ளின் சுவர் அருகே )
ரஷ்யாவில் மன்னர் ஆட்சி நடந்தபோது விவசாயிகளும் , தொழிலாளிகளும் எந்த உரிமைகளும் இல்லாத ஓர் உடமைப்பொருட்களாகத்தான் கருதப்பட்டு வந்தனர். மன்னர்களில் நல்லவர்களும் இருந்தனர். கெட்டர்வர்களும் இருந்தனர். ஆனால் எளிய மக்களை பற்றி கவலைப்பட அவர்களுக்கு நேரம் இல்லை.. விழிப்புணர்வும் இல்லை. இதை எதிர்த்து அவ்வப்போது கிளர்ச்சிகள் நடந்தாலும், தெளிவான திட்டங்கள் இல்லாமை , வலுவான தலைமை இல்லாமை போன்ற காரணங்களால் எதிர்ப்பு வலுவாக இல்லை..
இந்த நிலையில்தான் , மார்க்சீய தத்துவத்தில் ஈடுபாடும் , என்ன செய்ய வேண்டும் என்ற தெளிவும் கொண்ட லெனின் , டிராட்ஸ்கி போன்றோர்களின் தலைமையில் புரட்சி வடிவம் பெற்றது..
மன்னர் ஆட்சியை பற்றி சொல்ல வேண்டும் என்றால் பல நேரங்களில் மன்னர்களை பொம்மையாக வைத்து விட்டு, வேறு ப்லரின் மறைமுக ஆட்சி நடந்த்தது. குறிப்பாக கடைசி மன்னர் நல்லவராக இருந்தாலும் , அவர் கட்டுப்பாட்டில் எதுவும் இல்லை. அவர் அனுமதி இல்லாமலேயே , ரத்த ஞாயிறு என்ற கொடூரம் நிகழ்ந்தது. மேலும் முதலாம் உலகப்போரில் பல இன்னல்களை ரஷ்யா சந்த்தித்து வந்தது.
ரஸ்புட்டின் என்ற சாமியார் பற்றியும் கொஞ்சம் சொல்ல வேண்டும். அரச குடும்பத்தில் சிலருக்கு , தீர்க்க முடியாத நோய்களை தீர்த்து வைத்து , அரசருடன் நெருக்கமானார் அவர் .அந்த நெருக்கம் அதிகாரிகள் சிலருக்கு பிடிக்கவில்லை . கொல்ல முயற்சித்தனர் . முடியவில்லை . என்னை அரச குடும்பம் கொன்றால் , அந்த குடும்பம் கூண்டோடு அழியும் என சொன்னார் ரஸ்புட்டின் . கடைசியில் விஷம் வைத்து , துப்பாக்கியால் சுட்டு , ஆற்றில் வீசி கொன்றனர் . அவரது பிணம் மீட்க பட்டு எரியூட்டப்பட்டது . அப்போது அந்த பிணம் எழுந்து உட்கார்ந்தது என்பார்கள் .
அவர் சொன்னது போலவே விரைவில் அரச குடும்பம் அழிக்கப்பட்டு மாற்று அரசாங்கம் ஏற்பட்டது . இந்த இடைக்கால அரசிடம் இருந்து போல்ஷேவிக்குகள் ஆட்சியை கைப்பற்றியதுதான் புகழ் பெற்ற அக்டோபர் புரட்சி . இந்த புரட்சியின் முக்கிய கணங்களை கண் முன் நிறுத்துகிறது புத்தகம் . டிராஸ்கியின் மேதமையை ஜான் ரீடு குறிப்பிடுகிறார் . அதை மறைக்காமல் வெளியிட்டு இருக்கும் அலைகள் பதிப்பகம் பாராட்டுக்குரியது. சில நாடுகளில் அவற்றை சென்சார் செய்து விட்டனர் . தமிழாக்கம் மிக அருமை
புரட்சி என்பது ஒட்டு மொத்தமாக ஏற்பட வேண்டும் . தனியொரு நாட்டில் புரட்சி நடந்தால் அது வெகுநாள் நீடிக்காது என்ற டிராட்ஸ்கியின் கருத்து அன்று கிண்டல் செய்யப்பட்டது. சோவியத் யூனியன் வீழ்ந்த நிலையில் அது சிந்திக்க வைக்கிறது
வெர்டிக்ட் . படிக்க வேண்டிய புத்தகம்
உலகை உலுக்கிய பத்து நாட்கள் அலைகள் வெளியீட்டகம்
Subscribe to:
Post Comments (Atom)
Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com
விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....
Blog Archive
-
▼
2011
(189)
-
▼
July
(10)
- பெண்கள், அவதூறு , துரோகி , மது- சாரு FAQ ( அடிக்க...
- இளம்பெண்ணும்& துரோகியும்- சாரு சந்திப்பில் நான் க...
- உலகை படைத்தது கடவுளா? அறிவியலா?- 1
- இலக்கியவாதி ஆகிறார் நித்யானந்தர்- சாருவுக்கு எதிரா...
- சலுகை விலையில் சாரு புத்தக திட்டம் -அப்டேட்
- சாரு நிவேதிதாவின் புத்தகம் இலவசமாக - அதிரடி சலுகை ...
- உலகை உலுக்கிய புத்தகம் _ இப்போது தமிழில்உலகை உலுக்...
- சலுகை விலையில் சாரு புத்தகம்
- ஞானிகள் நாய்களை விரும்புவது ஏன்? - சாரு நிவேதிதா
- சாரு- வாழும் வரலாறு
-
▼
July
(10)
நிச்சயம் இந்த புத்தகத்தை வாங்கனும்னு நினைச்சேன்.நினைவூட்டியதற்கு நன்றி.அருமையான புத்தகம்தான்
ReplyDelete