Friday, March 2, 2012

அணு உலை, மனுஷ்யபுத்திரன், கலைஞர் -- ஞாநியுடன் எக்ளூசிவ் உரையாடல்

அணு உலை குறித்து , அரசியல் விமர்சகர் ஞாநியுடன் பேசியதில் இருந்து...Gnani Photo

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++


அணு உலை போராட்டத்தை நேர்மையாக நீங்கள் அணுகுகிறீர்கள்..மனுஷ்யபுத்திரன் போன்ற துரோகிகளை  உங்கள் அணியில் சேர்ப்பதால் , உங்கள் அணியின் நம்பக்தன்மை குறைகிறதே... நீங்கள் தனி ஆளாக திமுக அரசை எதிர்த்தபோது, அவர் கனிமொழி அட்டைப்படம் போட்டவர்

ஞாநி 


இதில் என் அணி என்றெல்லாம் எதுவும் கிடையாது. அணு உலையை எதிர்க்கும் படைப்பாளிகள் எல்லாரையும் ஒரு சேர குரலெழுப்பச் செய்து அரசு கவனத்தை ஈர்க்கவேண்டுமென்பது நண்பர் அருள் எழிலன், சந்திரா ஆகியோரின் முயற்சி. அவ்வளவுதான்


அணு உலையை நாம் ஏற்காவிட்டால், அதை ஏற்க சீனா தயாராக இருக்கிறது என்கிறார்களே

ஞாநி 
ஏற்றுவிட்டுப் போகட்டும். நமக்கென்ன
மின் உற்பத்திதானே , தொழில் வளர்ச்சிக்கு ஆதாராம்... அணு உற்பத்தி மூலம் இந்தியா வளர்ந்து விடக்கூடாது என சீனா நினைக்கிறதாமே..அதாவது இந்தியாவில் அணு உலை வரக்கூடாது என்பதே சீனாவின் ஆசை என்கிறார்கள்


ஞாநி 
அணு உலைக்கும் உற்பத்திக்கும் வளர்ச்சிக்கும் ஒரு சம்பந்தமும் இல்லை. என் தளத்தில் ஏன் இந்த கொலை வெறி என்ற சிறு நூல் ஓ பக்கங்கள் வகையின் கீழ் உள்ளது.அ தைப் படியுகள். எல்லா கேள்விகளுக்கும் பதில் உள்ளதுஅணு உலைக்கு கலைஞர் ஆதரவு தருகிறாரே


ஞாநி 


என் புத்தகத்திலேயே அவரைப்பற்றி இருக்கிறதே. படிக்கவில்லையா?படித்தேன்.. ஆனால் தற்போது ஆணித்தரமாக ஆதரவு தெரிவுத்துள்ளார்.. உலை எதிர்ப்பு ஜெயலலிதாவின் சதி என்பது போல சொல்லி இருப்பது இதுவே முதல் முறை


ஞாநி 


1988-89லேயே அவர்தான் ஆதரித்துவிட்டாரே.. இப்போதைய போராட்டம் தொடங்கியபோது கூட போதிய பாதுகாப்புடன் திறக்கும்படிதான் அறிக்கை விட்டாரு.. இப்ப இதை வெச்சிகிட்டு இடைத்தேர்தல்ல, தன் பாலிடிக்ஸுக்கு ஏதாவது உதவுமான்னு பார்க்கறாரு. முடிஞ்சா இன்னும் பலமா அறிக்கை விடறேன். பதிலுக்கு, கனிமொழி கேசுல நீதிபதியை தூக்கமுடியுமான்னு கூட கேக்க நினைப்பாரு... அவர் அரசியல்ல பொதுநலம் சுத்தமா இல்லாமப் போய் ரொம்ப நாளாச்சு.தினமலருக்கு என்ன உள்னோக்கம் இருப்பதாக நினைக்கிறீர்கள். உதயகுமார் கும்பல் சதி அம்ப்லம் என்றெல்லாம் , செய்தி வெளியிடுகிறதே


ஞாநி 
தினமலர் பிஜேபிபார்வை உடைய பேப்பர். அணுகுண்டு அணு ஆயுதங்களில் தீவிர நம்பிக்கை உள்ள அரசியல் அவர்களுடையது. அவர்கள் நிச்சயம் அணுசக்தியை அது அணு ஆயுதத்துக்கான முகமூடிதானே) எதிர்ப்பவர்களை அவதூறு செய்யத்தான் செய்வார்கள். தவிர, கிறித்துவ மீனவர்கள் பெருவாரியாக எதிர்ப்பில் ஈடுபடுவதால், தினமலரின் இந்துத்துவ மனதால் தாங்கமுடியாது.

No comments:

Post a Comment

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா