Wednesday, December 19, 2012

கமலும் , கவுதம் மேனனும்- பிறந்த நாள் சந்திப்பில் சாரு ருசிகரம்


தெளிவு குருவின் திருமேனி காண்டல்
தெளிவு குருவின் திருநாமம் செப்பல்
தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல்
தெளிவு குருஉரு சிந்தித்தல் தானே.

திருமந்திரம் - 139.சாருவின் பிறந்த நாளை முன்னிட்டு , சென்னை நகரின் டிராஃபிக்கில் நீந்தி , மாமல்ல புரத்துக்கு வந்து சேர்ந்ததும் பெருமையாக உணர்ந்தேன். காரணம் கேக் இன்னும் வெட்டப்பட்டு இருக்கவில்லை. ஆனால் அறைக்குள் நுழைந்ததும் என் பெருமை சற்று அடி வாங்கியது.

காரணம் நெல்லை, மதுரை , திண்டுக்க்கல் போன்ற வெளியூர் வாசகர்கள் எல்லோருக்கும் முன்பே வந்து விட்டார்கள் . நானும் ஜோதியில் கலந்தேன்.

மிகவும் ரசனையுடன் பிறந்த நாள் கொண்டாட்டத்துக்கான இடம் ஏற்பாடு செய்ய்ப்பட்டு இருந்தது. கடலலைகளின் சங்கீதம் , பிறந்த நாள் விழாவுக்கான தீம் ம்யூசிக்கை இலவசமாக வழங்கி கொண்டு இருந்தது.

கொஞ்ச நேரத்தில் சாருவும் வந்து விடவே , சபை களைகட்டியது.  சாப்பாட்டுக்கான ஆயத்தங்கள் ஆரம்பித்தன . ஒரு பெரிய மீனின் விலையை கேட்டோம்  .  மயக்கம் வர வைக்கும் அளவுக்கு விலை இருந்தது. ஆனாலும்  பேரம் பேசி , கொண்டாட்ட மன நிலையை குலைக்காமல் ஓரளவு விலையை குறைத்து ஆர்டர் செய்யப்பட்டது.


கொஞ்சம் கொஞ்சமாக ஆட்கள் வந்து சேர்ந்து விட்டனர். பர்த் டே பேபி சாரு , கேக் வெட்டினார். இந்த கைதட்டலையும் , களேபரத்தையும் பார்த்த அயல் நாட்டு அழகிகள் சிலர் ‘ யார் இவர் “ என சாருவை கவனிக்க ஆரம்பித்தார்கள் . சாரு சற்று தனித்து சிக்கியதும் அவரிடம் ஏதோ பேசினார்கள். பிறந்த நாள் வாழ்த்து சொன்னதாக அவர் சொன்னார். நானும் நம்பி விட்டேன்.


சாரு வாசகர் வட்ட சந்திப்புக்கே உரித்தான , வெஜிடபிள் சாலட் இந்த முறையும் இடம் பெற்றது. முன்பெல்லாம் , நான் வெஜ் தான் அதிகம் மூவ் ஆகும் , சாலட் அப்படியே இருக்கும்.

ஆனால் இந்த முறை அனைவரும் சாலட்டைத்தான் விரும்பி சாப்பிட்டார்கள். இயற்கை உணவின் மீது ஈர்ப்பு ஏற்பட்டு விட்டால் , நான் வெஜ் எல்லாம் தானாகவே ஈர்ப்பை இழந்து விடும்போல..


சாரு மனம் விட்டு பல விஷயங்களை பகிர்ந்து கொண்டார் .

சீரோ டிகிரி 

சீரோ டிகிரியை இன்னும் சரியாக யாரும் புரிந்து கொள்ள வில்லை என்று ஆதங்கப்பட்டார்.  ஒரு பக்கத்தில் இருக்கும் விஷ்யங்க்ளில் , ஒரு வருடத்துக்கான சிந்தனை இருக்கிறது . நம் மக்கள் சும்மா ஸ்கிப் செய்து விடுகிறார்கள் என்றார்.

சீரோ டிகிரி ,  புதிய பொலிவுடன் மீண்டும் வெளியிடப்படுவதாக தெரிவித்தார். மறு பதிப்பு அல்ல. சில விஷ்யங்கள் திருத்தப்பட்டு , சில சேர்க்கப்பட்டு , முற்றிலும்  புதிதாக வரப் போகிறதாம் .

ஆன்மீக குறுங்கதைகள் 

அராத்து எழுதி வரும் தற்கொலை குறுங்கதைக்ளுக்கு ”பதிலடி ” யாக ஆன்மீக குறுகதைகள எழுதப்போவதாக பலத்த கைதட்ட்களுக்கிடையே அறிவித்தார் சாரு. அதற்கு சாம்பிளாக ஓர் ஆன்மீக குறுங்கதை சொன்னார். அது ஒரு நிஜக்கதை. ஓர் ஆன்மீக மேதையைப் பற்றிய அந்த கதை வெளிவந்தால் , பெரிய பரபரப்பு ஏற்படும் என்பது உறுதி.

அயல் நாட்டு அழகிகள்

 நாங்கள் சாப்பிட்டுகொண்டு இருந்த மேஜைக்கு பக்கத்தில் வெளி நாட்டு பெண்கள் சிலர் உணவருந்திக் கொண்டு இருந்தனர். சற்று தாமதமாக அதில் சேர்ந்து கொண்ட ஓர் இளம்பெண்ணை பார்த்து திடுக்கிட்டேன். டவல் மட்டும் அணிந்து வந்து இருந்தார். குளித்து விட்டு அப்படியே வந்து விட்டார் போல, பாவம் , ஆடை அணிய நேரம் இருந்திருக்காது என நினைத்து கொண்டேன். ஆனால் அந்த டவல்தான் ஆடை என்பது கொஞ்ச நேரம் கழித்து புரிந்தது. கைதட்டல்கள், உரைகள், கேக் கட்டிங் போன்ற களேபரங்களை அவர்கள் ஆவலுடன் ரசித்து வந்தனர். கை கழுவ சாரு சென்ற போது அவரிடன் ஏதோ பேசினார்கள். தனக்கு வாழ்த்து சொன்னதாகவும் , வேறு ஏதும் பேசவில்லையென்றும் சாரு சொன்னார். நானும் ந்ம்பிவிட்டேன்.


இசையெனும் கலை

சாரு பரிந்துரைத்த சில ஆங்கில பாடல்கள்  லேப்டாப் மூலம் ஒலிக்க செய்யப்பட்டது.  அதற்கு சற்று முன்புதான் , இலக்கியம் மூலம் சொற்களை கடந்த ஓர் உன்னத உலக்குக்கு செல்லும் அனுபவம் குறித்து பேசிக்கொண்டு இருந்தோம். அந்த இசை அந்த இசையை நேரில் காட்டியது. அதன் பின் பேசிய சாரு, மற்ற கலைகள் மனிதன் படைததவை. இசை என்ற கலை , கடவுள் படைதத்து என்றார்.கமலும் , கவுதம் மேனனும்

 நீதானே என் பொன் வசந்தம் பற்றி பேச்சு திரும்பியது. “ வேட்டையாடு விளையாடு படம் நன்றாக இருந்தது. கமலை மேனேஜ் செய்து, கமலை வைத்தே ஒரு நல்ல படம் கொடுத்து விட்டாரே. கண்டிப்பாக இவர் சிறந்த இயக்குனர் என நினைத்தேன். நீ.எ.பொ. வ மூலம் அந்த நம்பிக்கையை கெடுத்து விட்டார்” என்றார் சாரு.

கடல் அலைகளுடன் போட்டியிட்ட இசை அலை

      இலக்கியம் , சினிமா , இசை என பல விஷயங்கள் விவாதிக்கப்பட்டன. இந்த நேரத்தில் சாருவின் நண்பர் திரு சோமன் வந்து அவரும் கலந்து கொண்டார். உணவு முடிந்த பின் அனைவரும் , கடற்கரை சென்று அமர்ந்தோம். மணி இரவு 11.30.கடற்கரைக்கு பல முறை சென்று இருந்தாலும்,  நள்ளிரவில் கடற்கரையில் அமர்ந்து இலக்கியம் பேசுவது புதிய அனுபவம். க்ண்ணுக்கெட்டிய தூரம் வரை வேறு யாரும் இல்லை. அவ்வளவு பெரிய கடல், வானத்தில் கண் சிமிட்டும் நட்சத்திரங்கள் , மற்றும் இலக்கியம்... வேறு எதுவும் இல்லை.


இந்த உன்னத அனுபவத்தை மேலும் சிறப்பாக்கியது திரு.சோமனின் இசை  விருந்து. சாருவின் வேண்டுகோளுக்கிணங்கி சில பாடல்கள் பாடி அதன் இசை நுணுக்கங்களை விளக்கினார்.  கர்னாடக இசையில் அமைந்த சில சினிமா பாடல்களை விளக்கினார். அந்த பாடலில், என்ன ராகம் அமைந்துள்ளது என்பதை விளக்கிய விதம் அற்புதமாக இருந்தார். சங்கீத மும்மூர்த்திகள், ஒவ்வொருவரின் பாணி, ஹிந்துஸ்தான் இசைக்கும் கர்னாடக இசைக்கும் இடையேயான வேறுபாடு என கேட்க கேட்க அற்புதமாக இருந்தது.

கிரிக்கெட்டை சும்மா ரசிப்பது வேறு, அதன் விதிகளை புரிந்து கொண்டு ரசிப்பது வேறு என்று அவர் சொன்னதன் அர்த்தம் புரிந்தது

நடனம் 
  
அதன் பின் , கடற்கரையில் நடன நிகழ்ச்சி தொடங்கியது. இசை ஒலிக்க செய்யப்பட்டு, நடனம் ஆரம்பித்தது, அப்போதே இரண்டு மணி இருக்கும். ஒவ்வொருவருவாக தூங்க கிளம்பி சென்றனர். சாரு சற்றும் களைப்படையாமல் ஆடிக்கொண்டு இருந்தார். கடைசி வரை சிலர் மட்டுமே அவருடன் தாக்குப்பிடித்தனர்.


     இதுவரை நடந்த சந்திப்புகளில் அல்ட்டிமேட் சந்திப்பாக இது அமைந்து இருந்தது என்றால் மிகை இல்லை

No comments:

Post a Comment

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா