Showing posts with label சாரு. Show all posts
Showing posts with label சாரு. Show all posts

Monday, December 23, 2024

முரகாமியும் சம கால எழுத்துச்சூழலும்

முரகாமியின் The City and The Uncertain walls குறித்த விமர்சனம் இந்தியன் எக்ஸ்பிரசில்  படித்தேன். நாவலின் போதாமைகள் குறித்த கச்சிதமான பார்வை.


இன்றைய எழுத்துச் சூழலின் முக்கியமான பிரச்சனைகள்தான் இவை..  ஊடு பாய்தல் என்ற கலை  "in someone's shoes" என்ற அனுபவம் பலருக்கு இல்லை.


நானூறு பக்க நாவல் என்றால் நானூறு பக்கமும் ஒரே அரசியல், ஒரே ஃபேண்டசி, எதிர் பாலனரைப் பற்றி ஒரே பார்வை..


இங்குதான் சாருவின் நான் தான் ஔரேங்ஸேப் போன்றவை தனித்து நிற்கின்றன.. ஔரங்ஸேப் குறித்து அதில் குறைந்தது மூன்று விதமான கதையாடல்கள் உண்டு. சாருவுக்கு எதிரான அவருக்குப் பிடிக்காத கோணமும் உண்டு

ஒகே.. முரகாமி குறித்த விமர்சனம் உங்கள் பார்வைக்கு


...................

முரகாமியின் உலகில் ஒரு பெண்ணின் உண்மையான இருப்பு இல்லாதது நாவலை ஹலோசென்ட்ரிக் ஆக்குகிறது மற்றும் ஆணின் ஈகோ, கற்பனைகள் மற்றும் துக்கம் அடிப்படையில் அமைந்துள்ளது


. அவனது வருத்தம் ஒரு பிரச்சனை இல்லாவிட்டாலும், பெண்களின் இருப்பை பலி கொடுத்து அது உருவாக்கப்பட்டுள்ள விதம்,  ஆரோக்கியமான கதை சொல்லல் இன்மையை  வாசகனை மிஸ்செய்ய வைக்கிறது.


நாவலை படித்து முடுப்பது அலுப்பூட்டும் அனுபவமாக உள்ளது.


  நாவல் மிகவும் பெரியது, கதைக்கு சம்பந்தமற்ற பல விவரிப்புகள் மீண்டும் மீண்டும் தேவையற்று இடம்பெறுகின்றன. கதைக்களத்தில் சிறிது சேர்க்கும் பல மறுபடியும். 


ஆர்வமூட்டும் வாசிப்பு அனுபவத்தை தருவதைவிட , 200 அல்லது அதற்கு மேற்பட்ட பக்கங்களாக நாம் ஏற்கனவே அறிந்துள்ள அவனது தனிமை, தேக்கம் மற்றும் தனிமை ஆகியவற்றை   பலமுறைகள் சொல்லிம்   வாசகனை களைப்படைய வைக்கிறது.


 முரகாமி மார்க்வெஸ் மற்றும் ப்ரூஸ்ட் போன்ற பல்வேறு எழுத்தாளர்களைக் குறிப்பிடுகிறார். ஆனால் கேள்வி எஞ்சியுள்ளது: நாவல் அதன் மகத்துவத்தை அதன் வாசகர்களை நம்ப வைக்க தன்னை காட்டிக்கொள்கிறதா? இல்லை என்பதே பதில். மார்க்வெஸ் தனது படைப்புகளில் இல்லாததாக கருதும் எல்லைகளை   மங்கலாக்க்கல் என்பது  அடிக்கடி நிகழ்ந்து நாவல் தட்டையாக்குகிறது


. இதேபோல், ப்ரூஸ்டியன்  புலனின்ப கோட்பாடும்  குழப்பியடிக்கப்பட்டுள்ளது, ஏனெனில்,In Search of Lost Time  கதையில் நிகழ்ந்த மேஜிக் இதில் செயல்படாமல் , முரகாமியின் கதையோட்டம்  முழு பலத்துடன் வாசகரிடம் வந்து சேரவில்லை.

முரகாமி கதையாடலில் , ஒரு புத்திசாலித்தனமான வாசகன் இறுதியில் ஒரு புள்ளிக்கு வந்து விட்டான், அவருடைய கதைக்களங்கள், அவரது யூகிக்கக்கூடிய கதாபாத்திரங்கள் திருப்பங்கள் போன்றவை இப்படித்தான் இருக்கும் தெருந்து விட்டது

. இந்நாவலில் பேய் கதை சொல்லிடம், 'இன்னொரு விஷயத்தை என்னால் சொல்ல முடியும்-நம்பிக்கையை கைவிடாதே. நீங்கள் எதையாவது உறுதியாக, ஆழமாக நம்பினால், முன்னோக்கி செல்லும் பாதை தெளிவாகிவிடும்' என்று  சொல்கிறது


முரகாமி தனது வாசகரிடம் அவரைப் பற்றியும் அவரது புத்தகங்களைப் பற்றியும் இதைதான் சொல்ல விரும்புகிறாரோ என தோன்றுகிறது.


 . அவரது எழுத்தின் மகத்துவத்தின் மீதான நம்பிக்கை இல்லையென்றால், அவரது நாவல் இனியும் வெற்றி பெறுமா?

.......




Saturday, September 17, 2022

ஜெயமோகனும் சாருவும் கனிந்து விட்டார்களா?

 சாரு   கனிந்து  விட்டார்   ஜெயமோகன்   கனிந்து  விட்டார்  என  ஒரு வித  எதிர்மறைத்  தொனியில்   சிலர்  விஷ்ணுபுரம்   விருதை  முன்வைத்து  பேசுவதைக்  காண  முடிகிறது

      மனம்  கனிந்து  அதில்  அன்பு  நிறைந்திருந்தால்தான்  ஒருவன் எழுதவே முடியும்.  எனவே  ஆரம்பத்திலேயே  இருவரும்  பக்குவப்பட்ட  கனிந்த  நிலையில்தான்  இருந்திருக்கிறார்கள்

   ஜெயமோகனுக்கும்  சாருவுக்கும்  ஆகாது  ,   பரம்பரை  வைரிகள்  என்பவையெல்லாம்   பாமரத்தனமானவை

சில  ஆண்டுகள் முன் 

சாருவின்  நண்பரும்  எழுத்தாளருமான அராத்து  நூல்  வெளியீட்டில்  எடந்த, தயக்கங்களும்  இன்றி  கலந்து  கொண்டார்

அந்த நிகழ்வில்,,ஜெ  ஆற்றிய, உரையின் யூட்யூப் வீடியோ  இன்றளவும்  வெகுவாக பார்வையிடப்படுகிறது.    அது  தனியாகவே  நூல்  வடிவம் பெறத்தக்கது

அதில் ஜெயமோகனும்  சாருவும்  ஒருவர்மீது ஒருவர்  காட்டிய  அன்பும்  நெருக்கமும்  ஆச்சர்யம்  அளித்தது


      ஜெயமோகனை   தாழ்த்திப் பேசினால்  சாருவிடம் நெருக்கமாகிவிடலாம்  என  நினைத்த  ஒருவர்  ஜெயமோகனைப்பற்றி கேலியாக  சாருவிடம்  கேள்வி  கேட்டார்

    தன்னைக்  கேலி  செய்தால்கூட  லேசாக எடுத்துக் கொள்ளும்  சாரு  , ஜெயை கேலி  செய்தவரை  படு  ஆவேசமாக  வறுத்தெடுத்து விட்டார்

    ரத்தம்  சிந்தி  கையொடிய   அவர்  எழுதிய  விஷ்ணுபுரத்தைப்  படித்து விட்டு  அதைப் பற்றி  ஏதாவது  பேசு  . நான்  இலக்கியரீதியாக விமர்சிப்பது  வேறு.   அதற்காக  வருபவன்  போவனெல்லாம்  அவரை   தாழ்த்திப்  பேசினால்   நடப்பதே  வேறு  என  வெகு  கடுமையாகப்  பேசி  அவரை  நட்பு  வட்டத்தில்  இருந்து  வெளியேற்றினார்

       பத்து  ஆண்டுகளுக்கு  முந்தைய  சம்பவம்  இது.   மனம்  கனிந்த ( !?) தற்போதைய  சாரு  அல்ல

         ஒரு முறை  ஞாநி  சாருவை  மேடையில்  வைத்துக்  கொண்டே ,  அவரது சில  எழுத்துகள்  பிறரால் எழுதப்பட்டவை  என்கிறார்களே  என  இலக்கிய   வரம்புக்கு  அப்பாற்பட்ட  கேள்வி  எழுப்பினார

" ஜெயமோகன்  இதுபோன்ற   தாக்குதல்களை  ஒரு  போதும்  நிகழ்த்தியல்ல



      (  அந்தக்  குற்றச்சாட்டை  ஒரு  காலத்தில்  வைத்தவர் , தான்  அப்படி  சொல்லவே  இல்லை  என  சமீபத்தில்  பேசி, அதை முடித்து வைத்தது  வேறு விஷயம் )

       நான்  சம்பந்தப்பட்ட  ஒரு  நிகழ்வு

சாரு  வாசகர்  வட்ட  நிகழ்வில்  ஒரு தனிப்பட்ட  உரையாடலில்  சாரு  இசை  குறித்தும்  லத்தீன்  அமெரிக்க சினிமா குறித்தும் சில  விஷயங்கள்  சொன்னார்.  அப்போது  ஸ்மார்ட்  போன்கள்  கிடையாது.   எனவே  யாராவது  இதை குறிப்பெடுத்து  வைத்துக்  கொண்டு பிறகு  நினைவு  படுத்துங்கள்  எனறார்  என்னிடம்  பேப்பர்  பேனா  எப்போதும்  இருக்கும்  என்பதால்  நான் அனைத்தையும்  குறிப்பெடுத்தேன்

இரண்டு  நாட்கள்  கழித்து  அதை  டைப் செய்து  அவருக்கு  அனுப்பினேன்.

Dear  charu   , with  reference  to  our  discussion ,என்றெல்லாம்  விளக்காமல்  அவர்  பேசியதை மட்டும் அனுப்பினேன்

    அவர்  எனக்கு  பதில்  அனுப்பினார்;

அன்புள்ள  பிச்சை 

   உங்களது  கட்டுரை  அபாரம்.   உங்கள்  பெயரை  குறிப்பிட்டு , இதை  எனது  கட்டுரையில்  பயன்படுத்திக்  கொள்ள  அனுமதிப்பீர்களா

    அன்புடன்  சாரு


இதைப் படித்து  அதிர்ந்து போய் அவரிடம்  சொன்னேன்    இது  எனது  படைப்பு  அல்ல.   முழுக்க  முழுக்க உங்கள்  சிந்தனை  அது   நான்  சும்மா  குறிப்பு  எடுத்தேன்  என்றேன்

        இப்படி சின்ன  சின்ன  செயலில்கூட  நுட்பமாக  பெருந்தன்மையாக  நடந்து  கொள்பவர்  அவர்

        அவரது  எழுத்துகள்  அனைத்துமே  இந்த  சென்சிப்ளிட்டியைத்தான்  பேசுகின்றன

         அவர்  எழுத்துக்கும்  பேச்சுக்கும்  வாழ்க்கைக்கும்  எந்த  வேறுபாடும்  இருப்பதில்லை

    எழுத்து  எனும்  வேள்வியில்  தன்னையே  அர்ப்பணித்துக்கொள்பவர்  அவர்    கற்பனையான  ஒரு  ஃபேண்டசி  உலகை  அவர்  சமைப்பதில்லை

    ரத்தமும்  சதையும்  கண்ணீரும்  காதலும்  காமமும்   உண்மை  வாழ்வில் உள்ளபடியேதான்  நுரைத்துப்   பொங்கும்;

         வெண்முரசு   போன்ற  ஒரு  நாவலை  படைக்க  வேண்டியதில்லை

, ஒளரங்ஸேப்   நாவலைத்தான்   அவர்  படைக்க  முடியும்   அதுதான்   இலக்கியத்துக்குதேவை   அதற்காகத்தான்   இயற்கை  அவரை  உலகுக்கு  அனுப்பியுள்ளது

        அவர் எழுத்து  வேறு  வகையானது  என்பதைத்தான்  ஜெயமோகன்  அன்றும்  சொன்னார்  இன்றும்   சொல்கிறார்   நாளையும்   சொல்வார்

     திடீரென  கனிந்து போய்  தன்  மதிப்பீடுகளை  ஜெ மாற்றிக்  கொள்ளவில்லை

ஜீரோ  டிகிரி  வெளிவந்தபோது  அதை  மலம்  என  சுஜாதா  போன்றோர்  திட்டியபோது  அதற்கு  ஆதரவாக  இருந்து  அங்கீகாரம் அளித்த  ஜெ ( பாராட்டிப் பேசிய இன்னொருவர்  இ பா ) அந்த  அங்கீகாரத்தை  தற்போது வேறு  வடிவில்  காட்டுகிறார்   அவ்வளவுதான்


பெர்ப்யூம்களை  எப்படி  தேர்வு  செய்கிறேன்  என  சாரு  பல   சந்தர்ப்பங்களில்  எழுதி  இருப்பார்.

ஒரு முறை  மலம் நிறைந்த  வாளி  தன் மீது  அப்படியே கொட்டி விட்டதையும்  எழுதியிருப்பார்

       நிகழ்வுகளை  புனைவு  போன்ற  சுவாரஸ்யத்துடன்  புனைவை  உண்மை  நிகழ்வு  போன்ற  பாவனையுடன் எழுதி  புனைவு  அபுனைவு  எல்லைகளை  தொடர்ந்து  அழித்து  வரும் எழுத்து  அவரது

     மீன்கார  பாட்டி , துப்புரவுத  தொழிலாளர்கள்  ,  பிழைப்புக்காக  திருடக்கூடிய  சிறு  திருடர்கள் , பாலியல்  தொழிலில்  தள்ளப்பட்ட  அபலைகள்  போன்ற   விளிம்பு  நிலை  மக்களை  அவர்  எழுத்து   தொடர்ந்து  பேசி வருகிறது

உயர்தர  உணவுகள்  கேளிக்கை  விடுதிகள்  என  கொண்டாட்டங்களையும்  பேசுகிறது

        சாரு  எழுத்தை  படிக்கும்  ஒருவன்  யாரிடமும்  போய் ,   சட்டை  என்ன  விலை  கால்  பிறக்கும்பாதே  இப்படியா  அல்லது  விபத்தா   ..   என்றெல்லாம்  கேட்க  மாட்டான்      பூக்கார கிழவியிடம்  பேரம்  பேச  மாட்டான்      தெரியாமல்  இடித்துவிட்ட  பெண்ணிடம்  மீண்டும்  மீண்டும்  மன்னிப்புக்  கேட்டு  அவளை சங்கடப்படுத்த மாட்டான்

        முதல்  நாவலான  ஜீரோ டிகிரியில்  அப்பா  மகள்   பந்தத்தை  சொல்லி  , தொடரந்து  அன்பை  தன்  எழுத்துகளில்  வரும்  சாருவுக்கு  சமரசமற்ற மதிப்பீடுகள்  கொண்ட  ஜெயமோகன்  விருது  வழங்குவது  மிகவும்  மகிழ்ச்சிக்குரியது

          





Saturday, July 4, 2020

வண்ண மயமான பழுப்பு நிற்ப் பக்கங்கள்




என்னதான் இணையம் , kindle , ஆடியோ புத்தகங்கள் என வந்து விட்டாலும் பேப்பர் வடிவில் புத்தகங்களை படிப்பது தனி சுவைதான். வசதிகள் என்பது நவீன வடிவங்களில் அதிகம். ஆனால் அச்சு பிரதியில் தொடு உணர்ச்சி என்ற கூடுதல் கவர்ச்சி உண்டு.

சாருவின் பழுப்பு நிறப்பக்கங்கள் – 3 கைக்கு கிடைத்ததும் அந்த  பார்சலை பிரிக்காமல் வெகு நேரம் பார்த்தும் தொட்டும் முகர்ந்தும் மகிழ்ந்தேன். அதன் பிறகு வெகு மெதுவாக நிதானமாக பிரித்து புத்தகத்தை எடுத்தேன். புத்தகத்தை முதன் முறையாக  கண்ணில் பட்ட அந்த கணம் !!!

கடின அட்டையுடன் கூடிய புத்தகம் என்பது கூடுதல் அழகு.

அதன் பின் மெல்ல ஒரு வரலாற்று பயணத்துக்குள் - காலம் இடம் கடந்து , இலக்கிய முன்னோர்கள் பாதச்சுவடுகளை பின்பற்றி – செல்லலானேன்.

பழுப்பு நிறப் பக்கங்கள் வரிசையின் முதல் இரண்டு புத்தகங்கள் மிகவும் சிறப்பானவை என்றாலும் இந்த மூன்றாவது புத்தகம் எனக்கு தனிப்பட்ட முறையில் வித்தியாசமான ஒன்று.

காரணம் சி சு செல்லப்பா…    சு ரா … கு ப ரா…  சா கந்தசாமி…  ம முத்துசாமி ப சிங்காரம் எனும் சம்பந்தமற்ற ஆளுமைகளின் தொகுப்பாக எனக்கு தோன்றியது..

எனவே இதை படிக்கும்போது ஒட்டு மொத்த இலக்கிய வரலாற்றின் ஒரு குறுக்கு வெட்டு தோற்றம் மனதில் தோன்றியது.



இதை இலக்கிய விமர்சன நூல் வரையறுப்பதா … ஆளுமைகளின் வரலாறு என்பதா.. அல்லது ஆளுமைகளுடனான ஒரு சம காலப்படைப்பாளியின் சொந்த அனுபவ பகிர்வா.. அல்லது ஓர் அறிமுகமா என சொல்லி விட முடியாத அளவுக்கு ஒரு பன்முக குணாதிசயத்தை இந்த நூல் கொண்டுள்ளது.. அதாவது கறுப்புக்கும் வெண்மைக்கும் இடைப்பட்ட ஒரு வண்ணம்.. அதனால்தான் இது பழுப்பு நிறப் பக்கங்கள் ஆனதோ J

வண்ணம் என சொல்கையில் ஒரு விஷ்யம் நினைவுக்கு வருகிறது. புத்தகத்தை விரைவாக மீள் வாசிக்கும் பொருட்டு பல்வேறு வண்ணங்களில் வரிகளை ஒளிர்விப்பது என் வழக்கம்.

அழகான மொழியாளுமைகளுக்கு ,  ஒப்பு நோக்க வேண்டிய புத்தக / ஆளுமைகள் பெயர்களுக்கு  ரசிக்கும் வரிகளுக்கு சுவையான சம்பவங்களுக்கு என ஒவ்வொரு வண்ணத்தை பயன்படுத்துவேன். இப்படி படித்து முடித்து விட்டு , ஒரு குறிப்பிட்ட பக்கத்தை பார்த்து திகைத்தேன். அந்த பக்கம் முழுமையும் , எல்லா வரிகளுமே , ஒவ்வொரு வண்ணத்தில் ஒளிர்ந்து கொண்டிருந்தன. அந்த பக்கமே வண்ணமயமாக ஜொலித்தது. கலர்ஃபுல்லாக ஓர் இலக்கிய நூலை எழுதுவது என்பதே ஒரு வியப்புதான்
பின் நவீனத்துவம் என்பதற்கு குறிப்பிட்ட யுக்தி எதுவும் இல்லை.. மூன்றடியில் எழுதி ஒரு காட்சியை சொன்னால் ஹைக்கூ , செப்பலோசை பயின்று வந்தால் வெண்பா. அகவலோசை வந்தால் ஆசிரியப்பா என்று ஃபார்முலா எதுவும் இல்லை.. ஆனாலும் பலர் பின் நவீனத்துவ ஃபார்முலா என எதையாவது நினைத்துக்கொண்டு குழந்தைத்தனமாக எழுவதுண்டு.

பின் நவீனத்துவ படைப்பு என்பது இயல்பாக நிகழ்வது. பின் நவீனத்துவ கட்டடங்கள் , பின் நவீனத்துவ இசை என இப்படி அமைந்தவை உண்டு,  அந்த வகையில் பின் நவீனத்துவ கூறுகளை இந்த நூலில் காண முடிகிறது.

இந்த நூலில் இன்னொரு சுவையான விஷயம் , ஒரு விஷயத்தை சொல்லாதே .. அதைக் காட்டு என்ற யுக்தி திறம்பட செயல்பட்டுள்ளது.  கு ப ரா எழுத்தை தவமாக பயின்றதன்  மூலம் அதன் சிறந்த ஒரு பகுதியை – ஒரு மாதிரியாக தேர்ந்தெடுத்து – அதை அப்படியே கொடுத்து குபராவை இது வரை படிக்காதவர்கள் கூட அவர் குறித்து புரிந்து கொள்ள உதவுவது ஒரு நல்ல யுக்தி. ஆனால் அப்படி கொடுக்கும் பகுதி அவர் எழுத்தை பிரதிநிதித்துவம் செய்வதாக இருக்க வேண்டும் என்றால் அதற்கு மிகப்பெரிய உழைப்பும் புரிதலும் ஆழ்ந்த வாசிப்பும் தேவை. இதை சாரு சிறப்பாக செய்துள்ளார்.

இந்த நூலில் பேசப்பட்டுள்ள அறுவர் குறித்தும் ஒரு தெளிவான பார்வை நமக்கு கிடைக்கிறது.

இது ஆளுமைகளை வியந்தோதும் பாராட்டுரைகளின் தொகுப்பன்று. சுருக்கமாக ஓர் ஆளுமையின் முழு பரிமாணத்தை 360 டிகிரியில் பார்க்கும் ஒரு பார்வையை தருவதுதான் நூலின் நோக்கம்.

தன் ஆளுமையை உருவாக்கியவர் என ஒரு குரு இடத்தில் வைத்து சுந்தர ராமசாமியை போற்றினாலும் அவர் படைப்புகளை தயவு தாட்சண்யமின்றி நிராகரிப்பது , சி சு செல்லப்பா படைப்புகளையும் அவர் வாழ்க்கையையும் அவர் குணங்களையும் அவ்வளவு தூரம் பாராட்டி விட்டு , தமிழில் விமர்சனத்துறை என்பது தனி நபர் வசையாக உருவெடுக்க ஆரம்ப புள்ளி அவர்தான் என்று சுட்டிக்காட்டுவது என விருப்பு வெறுப்பற்ற ஒரு பார்வையை வைக்கிறார் சாரு.

இந்த புத்தகத்தின் நாயகர்களான இந்த அறுவர் தவிர அசோகமித்திரன் ஜி கே செஸ்டர்ட்டன் தி ஜா  எஸ் வைதீஸ்வரன் வெங்கட சாமி நாதன் ஜெயமோகன் சார்த்தர் ஃப்லௌபர்  ஜார்ஜ் ஜோசஃப் என எண்ணற்ற  ஆளுமைகள் பக்கங்கள் தோறும் வந்து கொண்டே இருக்கின்றனர், வெறும் பெயர்களாக அன்று. ரத்தமும் சதையுமாக நம்முள் நடமாடுகின்றனர் .

இன்னொரு சுவையான அம்சம் .

இந்த புத்தகம் சுட்டிக்காட்டும் பல விஷயங்களுக்கு இந்த புத்தகமே – இதன் நூலாசியரே - உதாரணம் ஆகி விடுவது சுட்டிக்காட்டப்பட வேண்டிய ஒன்று.

போலிகளை சுட்டிக்காட்டுவதில் எந்த தயக்கமும் கூடாது என்பதை சுந்தர ராமியிடன் கற்றேன் என்கிறார் நூலாசிரியர்,   அதே சுந்தர ராமசாமியின் நாவல் ஒரு ஃபேக் என தன் கைக்காசை செலவிட்டு மனைவியின்  நகைகளை அடகு வைத்து எழுதி நூலாக்கியவர் சாரு . அதாவது தான் கற்றதற்கு உதாரணமாக சுந்தர சாமி சம்பந்தப்பட்ட ஒன்றையே சொல்ல முடியும்

பாரதியார் ஒரு பன்முக கவிஞர். ஆனால் அவரது தேசிய கவிதைகள் பெற்ற பிராபல்யம் காரணமாக அவர் தேசிய கவி என சுருக்கப்பட்டு விட்டார் என்று பேசுகிறார் கு ப ரா

இந்த நூலின் இன்னோர் இடத்தில் சாரு பேசுகிறார் – என்னை நல்ல கட்டுரையாளன் என மக்கள் பாராட்டும்போது எனக்கு அவமானமாக இருக்கும்

அதாவது அவரது கட்டுரை பெற்றுள்ள வரவேற்பால் அவரது மற்ற சிறப்பம்சங்கள் மறக்கடிக்கப்படுவது அவருக்கு வருத்தம். இதைதான் குபரா நூலின் இன்னொரு பக்கத்தில் சொல்கிறார்


இதில் இன்னொரு ட்விஸ்ட் என்ன  என்றால் , சாரு மனதில் அவருக்கு இருக்கும் நாவல் மீதான காதலால் தன்னை சிறந்த நாவலாசியர் என்று மட்டுமே நினைத்துக்கொள்கிறார். அவர் மிகச்சிறந்த சிறுகதைகளை படைத்தவர்,.. மிகச்சிறந்த மொழிபெயர்ப்பாளரும்கூட, அந்த காலத்தில் அவர் எழுதிய லத்தீன் அமெரிக்க திரைப்பட புத்தகமெல்லாம் வரலாற்று பொக்கிஷம்,  சமீபத்தில் அவர் கு ப ரா குறித்து வழங்கிய உரைவீச்சு தமிழ் சொற்பொழிவுகளில் முக்கியமான ஒன்று. ஆனால் இவற்றை எல்லாம் மறந்து விட்டு தன்னை ஒரு நாவலாசிரியர் என்ற அளவில் சுருக்கிக்கொள்கிறார். அதாவது இந்த புத்தகம் சுட்டிக்காட்டும் தவறை அவரும் செய்கிறார்

இப்படி இந்த நூலே இந்த நூலுக்கு ஒரு ரெஃபரன்ஸ் ஆகி விடுவது சுவாரஸ்யம்.

தமிழின் பல சொற்களின் பயன்பாடுகள் அருகி வருகின்றன. இலக்கியவாதிகளால் மட்டுமே பல சொற்கள் புழக்கத்தில் உள்ளன என பேசுகிறது இந்த நூல் ,. இந்த நூலே அதற்கு உதாரணமாகவும் உள்ளது.
எத்தனை எத்தனை அழகான சொற்கள் !!      

நாம் எதை ரசிக்கிறோம் என்பதுதான் நம்மை உருவாக்குகிறது. சாருவை கவர்ந்த சொல்லாடல்கள் பலவற்றை இதில் சாரு சுட்டிக் காட்டியிருக்கிறார். அதே அளவுக்கு அவரது சொல்லாடல்கள் நம் சிந்தையைக் கவர்கிறது , ஒரு கவிதையைப் போல.. ஓர் ஆப்த வாக்கியம் போல.



உதாரணமாக சில பளிச் வரிகளை பாருங்கள்.. இவற்றில் சில சாருவின் சிந்தனை.. சில சாரு மேற்கோள் காட்டும் ஆளுமைகளின் சிந்தனை…

  • இவர் தமிழ் மொழியின் பொக்கிஷம் என பாரதி குறித்து காந்தி கூறினார். காந்தியிடம் ராஜாஜி சொல்லி இருக்க வேண்டிய வார்த்தைகளை ராஜாஜியிடம் காந்தி சொன்னார்
  • ஆசிரியப்பா , கலிப்பா போன்று இப்போது ஒரு புதிய பா தோன்றி இருக்கிறது . அதுதான் செல்லப்பா
  • உலகத்தில் வேறு எங்கும் நடக்காத ஓர் அதிசயம் இங்கு நடந்தது . அதாவது அதிசயத்தையே அறிந்து கொள்ளாத அதிசயம்
  • அசோகமித்திரன் எனக்கு இலக்கியம் கற்பித்தார். சுந்தர ராமசாமி இலக்கியத்தை விட மேலான வாழ்வின் அறத்தை கற்பித்தார்
  • அபிப்பிராயங்களை அழுத்தமாக உறுதியாகச் சொல்வார்.  நகைச்சுவையுடன் சொல்வார், புண்படுத்தாமல் சொல்வார்
  • கிராமங்களில் மனிதர்களையும் விலங்குகளையும்போல தெய்வங்களும் பேய் பிசாசுகளும்கூட வாழ்ந்து வந்தன. தெய்வங்கள் மனிதர்களுக்கு நம்பிக்கையையும் பேய்கள் அச்சத்தையும் விலங்குகள் உணவையும் அளித்து வந்தன

ஏன் இலக்கியம் தெரிந்திருக்க வேண்டும் என்பது அடிக்கடி கேட்கப்படும் கேள்வி. இன்றைய சூழலில் இலக்கிய பரிச்சயம் என்பது ஓர் அடிப்படைத்தேவையாக இருக்கிறது என்பதே பலருக்கு தெரிவதில்லை.

ஒரு முறை அப்போதைய முதல்வர் ஜெயலலிதா வீட்டுக்கு நடிகர் ராஜேஷ் தன் குடும்பத்துடன் சென்றிருந்தார். பேசி விட்டு கிளம்பியவர் தன் கார் இஞ்சின் இயங்கிக் கொண்டிருப்பதையும் , ஏசி ஆன் செய்து இருப்பதையும் கண்டு ஆத்திரம் அடைந்தார் . இவ்வளவு  நேரம் வீணாக ஓடிக்கொண்டிருப்பது ஏன் என ஓட்டுனரைக் கடிந்து கொண்டார். அதற்கு ஓட்டுனர் பதில் சொன்னார் “ முதல்வர்தான் ஏசியை இயக்கத்தில் வைத்திருக்கச்சொன்னார். அப்போதுதான் நீங்கள் கிளம்பும்போது வசதியாக இருக்குமாம் “

ஒரு வி ஐ பி வருகிறார் என்றால் அவர் வருவதற்கு முன்பே அவருக்கான அறையில் ஏசியை இயங்க வைத்து அவரது வசதியை பேணுவது வழக்கம். இந்த உதாரணத்தில் ஒரு முதல்வர் , ஒரு நடிகருக்காக யோசித்தது ராஜேஷை மட்டும் அல்ல… திமுக அனுதாபியான ஓட்டுனரையும் பிரமிக்க வைத்தது… இப்படி பிறருக்கான யோசிக்கும் தன்மை வாசிப்பால் மட்டுமே வரும்.

இலக்கியப்பரிச்சயம் உங்கள் வாழ்வை செழிப்புறச்செய்யும் என்கிறார் சாரு.. இது முற்றிலும் உண்மை..   ஒருவர் மருத்துவராக , எழுத்தாளராக , பொறியாளராக , ஓட்டுனராக , விவசாயியாக , பேருந்து ஓட்டுனராக என என்னவாக வேண்டுமானாலும் இருக்கலாம்..  யாராக இருந்தாலும் சரி, இலக்கியப்பரிச்சயம் இருந்தால் , அவர்கள் செய்வது கலாப்பூர்வமாக மாறும்..அவர்கள் பிரஞ்ஞையில் ஒரு மாற்றம் ஏற்படும்.
பழுப்பு நிறப்பக்கங்கள் இந்த மாற்றத்துக்கான ஒரு சாவி எனலாம்.


Thursday, May 28, 2020

யதார்த்த வாதமும் சாருவும் . விவாதம் தேவை


 எதையும் மனதில் வைத்துக் கொள்ளாமல் வெளிப்படையாக பேசுவது சாரு பாணி

எழுத்தாளர் கார்ல் மார்க்ஸ் நூல் வெளியீட்டு விழாவில் பேசிய சாரு , அவரது சிறுகதைகள் பிரமாதம் என்றும் ஆனால் அந்த வகை கதைகளுக்கான தேவை முடிந்து விட்டது என்றும் பேசினார். யதாரத்தவாத பாணி காலாவதியாகிவிட்டது என்றார்

வாசகனை கவர வேண்டுமென்றால் யதார்த்தவாதம் நல்ல பாணிதான். பிரபலமான கதைகள் பல யதார்த்தவாத கதைகள்தான்.

இன்று பிரபலமாக பேசப்படும் பல கதைகளை விட உங்கள் கதைகள் சிறப்பாக உள்ளன என்ற தெளிவுடன் சொல்கிறேன்.  மீண்டும் மீண்டும் இதேபாணியில் எழுதுவதில் அர்த்தமில்லை என்றார் சாரு

மிகை நடிப்பு படங்களை ஒரு காலத்தில் ரசித்தோம். இன்று அப்படி நடிக்கமுடியுமா ? மிகை நடிப்பு படங்கள் இழிவானவை என்பதல்ல. அந்த பாணிக்கான காலம் முடிந்து விட்டது .

அதுபோல யதார்த்தவாதம் முடிவுக்கு வந்துவிட்டது என்று ஆக்கப்பூர்வமாக தன் விமர்சனத்தை முன் வைத்தார் சாரு;

அதன்பின் கார்ல் மார்க்ஸ் பேசினார்

எனக்கு இப்படி எழுதுவதுதான் வசதியாக இருக்கிறது என்றோ , யதார்த்தவாதத்தின் தேவை இன்றும் இருக்கிறது என்றோ சாருவை வெட்டி அவர் பேசியிருக்கலாம். அல்லது சாருவை ஒட்டியும் அவர் பேசியிருக்கலாம். ஆனால் அவர் பேச முனைந்தபோது மனுஷ்யபுத்திரன் சம்பந்தமில்லாமல் பேசி பேச்சை வேறு திசைக்கு மாற்றினார். கடைசியில் இந்த விவாதம் குறித்து என்ன நினைக்கிறீர்கள் என சாருவிடம் கேட்டபோது விவாதமே நடக்கவில்லையே என சிரித்தபடி சொன்னார். என் கருத்து அடித்து துவைத்தாலும் , அல்லது ஏற்றாலும் எனக்கு சம்மதமே என அவர் சொல்லியும் அது விவாதிக்கப்படவில்லை

ஆனால் நாஞ்சில் நாடன் தன் கருத்தை அழகாக எடுத்து வைத்தார்.

வெளிநாட்டில் இருந்து வரும்போது , ஊருக்கு வந்தால் மது அருந்தமுடியாது என்பதால் பயணம் முழுக்க மதுவில் திளைத்தோரைக் கண்டேன்

அதுபோல விடுமுறை முடிந்து கிளம்புகையில் இனி இரண்டு ஆண்டுகள் பிரிவு என்ற நிலையில் சூழலை மறந்து தன் மனைவியின் இதழ்களில் முத்தமிட்ட கணவனைக் கண்டேன் என்றார்

இதுபோன்ற தருணங்கள்தான் முக்கியம். யதார்த்தவாதம் , பின்நவீனத்துவம் என்ற பிரிவுகள் தேவையில்லை என்றார்

அவரது கூற்று அங்கே விவாதிக்கப்படவில்லை.

ஆனால் நண்பர்கள் சிலர் அவர் கூறிய தருணத்தை , உணர்ச்சி மல்க எப்படி எல்லாம் எழுதியிருக்க முடியும் என விவாதித்தோம். ஒரு நல்ல தருணத்தை செண்டிமெண்ட் குப்பையாக்கி வீணடிப்பது தவறு என்றால் அது எழுதவும் எளிது. படிப்பதும் எளிது என்பதால் பலர் யதார்த்தவாத எழுத்தையே கைக்கொள்ள விரும்புகின்றனர் என்பது தெளிவு
இது நிற்க

அங்கே விவாதம் நடக்காவிட்டாலும் இன்னொரு சூழலில் விவாதம் நடந்தது

அராத்து எழுதிய பொண்டாட்டி நாவலில் இப்படி ஒரு வரி வருகிறது

குத்தவே நினைத்துக்கூட பார்க்க முடியாத அம்மனின் கைகளில் சூலத்தைக் கொடுப்பது எவ்வளவு பெரிய வக்கிரம்


இது தனக்குப் பிடிக்கவில்லை என கார்ல் மார்க்ஸ் இப்படி மாற்றுகிறார்

அவள் குத்துவாள் என்பதை  கற்பனை செய்தே பார்க்க முடியாத அம்மனின் கைகளில் சூலத்தை தந்தது எவ்வளவு பெரிய வக்கிரம்

  மேலோட்டமான பார்வையிலேயே இரண்டின் அர்த்தமும் வேறு வேறு என புரிகிறது அல்லவா

நாவலின் முதல் வரியில் இருந்து கடைசிவரி வரை கன்சிஸ்டண்ட்டாக , இலகுவாக , படிப்பவரைக்கவரும் வண்ணம் எழுதுவது ஒரு பாணி

பண்டித நடை , இலகு நடை , திருகல் நடை என கதம்பமாக எழுதுவது பின்நவீனத்துவ கூறுகளில் ஒன்று. சில பகுதிகளில் பிரஞ்ஞைப்பூர்வமாக தப்புதப்பாக எழுதுவதும் உண்டு. எந்த பாத்திரத்தின் கூாற்று , கதையின் சூழல் என பல விஷயங்களைக்கவனித்தாக வேண்டும்

பொண்டாட்டி நாவலில் ஆரம்பத்தில் ஒரு பகுதி அப்படி இருக்கும் . அதற்கு ஒரு காரணம் உண்டு.

மேடையில் சொல்லாததை கார்ல் மாரக்ஸ் இந்த விவாதத்தில் தெளிவு படுத்தினார். அவருக்கு யதார்த்தவாத கதைகள்தான் பிடித்திருக்கிறது.  அதற்கான தேவை இருப்பதாக நினைக்கிறார்.

நல்லதுதான்.  ஆனால் அதற்காக சாருவையோ சாருவின் வாசகர்களையோ எதிரிகளாக நினைக்க வேண்டியதில்லை.

சாருவைப் பொறுத்தவரை அவர் , வழக்கமான சிறுகதை வடிவான , ஆரம்பம் ஒரு முடிவு ஓர் உச்ச கணம் என்ற மரபான கதைகளும் எழுதியதுண்டு.  பெரும்புகழ் பெற்ற அந்த கதைகளுக்காகவே அவரை நினைவுகூர்வோரும் உண்டு
பவராலும் பாராட்டப்படும் பிளாக் நம்பர் 27 த்ரிலோக்புரி என்ற தனது
கதையையே கடுமையாக விமர்சிக்ககூடியவர் சாரு

சமீபத்தில் பீச் என்ற சிறுகதை குறித்துப் பேசினார்.  கதாபாத்திர அறிமுகம் , அதற்கு சிக்கல் , அதன் முடிவு என்பது அதில் இருக்காது. அதாவது அதில் கதை என ஒன்று நிகழாது
ஆனால் அது சிறந்த சிறுகதைகளில் ஒன்றாக போற்றப்படுகிறது

ராசலீலாவில் இத்தகைய தருணங்கள் ஏராளமாக இருக்கும்

த்ரிலோக்புரி கதையை சீக்கியர் படுகொலை சம்பவத்தின்போது அங்கு இருந்த யார் வேண்டுமானாலும் எழுதிவிட முடியும். உன்னத சங்கீதம், நேனோ நட்சத்திரங்களிடம் இருந்து செய்தி கொண்டுவந்தவர்களும் பிணத்தின்னிகளும் போன்ற கதைகளை எழுதுவதற்குதான் சாரு தேவை என்பார் அவர்

யதார்த்தவாதம் காலாவதியாகி விட்டது என்பது தனது வாழ்வை வேள்வியாக்கி தன்னையே அவியாக்கி அவர் அடைந்த தரிசனம்.

அதை ஆக்கப்பூர்வமாக விவாதிப்பதே சாரு என்ற கலைஞனுக்கு நாம் காட்டும் நன்றியாக இருக்க முடியும்















Monday, February 17, 2020

சாரு , பெருமாள் முருகன் , மனுஷ்ய புத்திரன்

பெருமாள் முருகனையும் சாருவையும் ஒப்பிட்டு தமிழ் இந்துவில் ஒரு கட்டுரை வந்திருந்தது

பெருமாள் முருகன் தமிழர்களின் சாதி உணர்வை சீண்டியதால் எதிர்ப்பை சந்தித்தார்.  சாருவின் நாவல்களில் வரும் பாத்திரங்கள் குறிப்பிட்ட அடையாளங்கள் அற்றவை எனவே அவை பாதுகாப்பான இடத்தில் இருக்கின்றன என்பது அந்த கட்டுரையின் சாரம்

உண்மையில் இலக்கியம் என்பதே திரளுக்கு எதிரானது. பொதுவான மானுடனுத்துடன் உரையாடுவது. வெண்ணிற இரவுகளின் கனவுலகவாசி ஒரு ரஷ்யன் அல்லன். தமிழனாகிய எனக்கும் சொந்தமானவன். என்னைப்போன்ற ஒருவன் சூதாடியின் நாயகன் நான்தான்.. யாரோ ஒரு,ரஷ்யன் அல்லன்
யாயும் ஞாயும் யாராகியரோ என்ற உணர்வை உலகில் இருக்கும் எல்லா தேசத்தவனும் தன்னுடன் அடையாளப்படுத்திக் கொள்ள இயலும்


உலக இலக்கியங்கள் அனைத்தும் பொதுவான மனிதத்தைப் பேசினாலும் அவை அந்தந்த நாடுகளில் பெரும் சலனத்தை ஏற்படுத்துகின்றன. தமிழ் நாட்டில் அந்த நிலை இல்லை

அதற்குகாரணம் வாசிப்பு என்பதோ இயல்பான உணர்வெழுச்சிகளோ இங்கு கிடையாது.

சமீபத்தில் ஒரு கிரிக்கெட் வர்ணனையாளர் இந்தி தெரியாமல் ழக்கள் இருப்பது வெட்கக்கேடு என்றார். இலங்கை ராணுவ தளபதிக்கு அமெரிக்கா விசா மறுத்தது. இவையெல்லாம் யார் கவனத்துக்கும் வராமல் கடந்தன.

யாரேனும் தூண்டிவிட்டால் அனைவருமே உணர்வெழுச்சி பெறுவார்கள். ஏதோ கண்காணா சக்தியின் பொம்மைகளாத்தான் இருக்கிறோம்

பெருமாள் முருகன் நாவலுக்கு ஏற்பட்ட எதிர்ப்பு இயல்பாக எழுந்ததன்று. குறிப்பிட்ட சாதி தலைவர்கள் தங்களை அடையாளப்படுத்திக் கொள்வதற்காக தூண்டிவிட்ட எதிர்ப்பு அது

நம் சமூகம் அறிவுப்பூர்வமான சமூகமாக மாறும்போது , இதுபோன்ற பொம்மலாட்ட எதிர்ப்புகள் மறையும்.

பேரிலக்கியங்கள் கடும் விவாதங்களுக்கும் சர்ச்சைகளுக்கும் உள்ளாகும்

சாருவின் நாடகத்துக்கு , சில உரைகளுக்கு அவர் சந்திக்க நேர்ந்த எதிர்ப்புகளெல்லாம் இது போன்றவை அல்ல

திரள்களை நோக்கிப் பேசி உடனடி கவனம் பெறுவது ஒப்பீட்டளவில் எளிது. மனுஷ்யபுத்திரன் போன்ற முன்னாள் இலக்கியவாதிகள் , அரசியல்வாதி அவதாரம் எடுப்பதெல்லாம் உடனடி வெகுமதியைப் பெற்றுத்தரலாம். ஆனால் மானுடத்தை நோக்கிப்பேசும் எழுத்துகளே இலக்கிய வரலாற்றில் நிற்கும்





Wednesday, February 5, 2020

வண்ணதாசனுக்கு சாதீய அணுகுமுறை தேவை

பிற தேச நூல்களைப் பார்ப்பதற்கே அவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கும்.

தமிழில் ஏன் அந்த தரத்தை எட்ட முடியவில்லை என்பது ஆரம்ப நிலை வாசகனுக்கு ஒரு ஏக்கமாக இருக்கும்

அதற்கு முக்கிய காரணம் விற்பனைதான்.  நூறு ரூபாய்க்கு விற்கப்படும் நூலை ஆயிரம் ரூபாயக்கு வாங்க வாசகன் தயார் என்றால் உயர் ரகம் சாத்தியம். அல்லது லட்சக்கணக்கில் −குறைந்தது ஆயிரக்கணக்கில் − விற்றாலும் உயர் ரகம் சாத்தியமே.

இதைத்தான் சாரு நிவேதிதா குறிப்பிட்டிருந்தார்.  கலாப்ரியாவின் வேனல் நாவல் உள்ளடக்கம்தான் இலக்கிய மதிப்பை தீர்மானிக்கும். ஆனால் வடிவமைப்பும் நன்றாக இருந்திருக்க வேண்டும். அதற்கு அதிகம் விற்பனை ஆக வேண்டும் என நூலுக்கு ஆக்கப்பூர்வமான அறிமுகம் கொடுத்தார்.அதிகளவில் வாசகர்கள் வாங்கினால் சாதாரண விலைக்கே செம்பதிப்புகள் கிடைக்கும் சூழல் உருவாகும்


சாருவின் ஜீரோ டிகிரி நாவலும்கூட மலிவுவிலைப்பதிவு வந்துள்ளது.  அதன்பிறகு சிறப்புபதிப்பும் வெளிவந்துள்ளது.  ஜெயமோகனின் வெண்முரசு மலிவுப்பதிப்பாக கிடைத்தாலும் விலைகூடுதலாக இருந்திலும் செம்பதிப்பை தேடிச் சென்று வாங்குவோர் பலர்

கெட்டி அட்டை , தரமான தாள் , வண்ணப்படங்கள் என செம்பதிப்பின் அனுகூலங்கள் ஏராளம்.

ஒரு வாசகனின் பார்வையிலும் , எழுத்தாளனை கவுரவிக்க வேண்டும் என்ற எண்ணத்திலும் சாரு சொன்னது கலாப்ரியாவுக்கு சாதகமானதுதான் என்பதை வண்ணதாசன் உணர வேண்டும்.


சில பதிப்பகங்கள் எழுத்தாளர்களை உரிய கவுரவத்துடன் நடத்தாததாலும் தனக்கு கிடைக்க வேண்டிய நியாயமான ராயல்ட்டியை கேட்டால் , அவர்களை பிச்சைக்காரர்கள் போல நடத்துவதாலும் எழுத்தாளர்கள் அந்த பதிப்பகங்களை விட்டு விலகுகின்றன். இதனால் அந்த பதிப்பகங்கள், வாட்சப் வீரர்களின் மெசேஜ்கள் , முகநூல் பதிவுகள் , முதிர்ச்சி அற்ற எழுத்துகள் போன்றவற்றை எந்த பிழை திருத்தமும் இன்றி வெளியிட்டு இலக்கியப்பணி ஆற்றுகின்றன. இவற்றை அவரவர்களின் நண்பர்கள் வாங்கிப் படிக்கின்றனர்

பொதுவான வாசகன் , இளைஞன் இதனால் மனவிலக்கம் அடைந்து ஆங்கில நூல்கள்பால் செல்கிறான். அவர்கள் எதிர்பார்க்கும் தரம் தமிழில் இருப்பதில்லை. உள்ளடக்கத்தை விடுங்கள்.. பிழையற்ற வாக்கியத்தைக் காண்பதே துர்லபமாக இருக்கிறது

தமிழ் வாசிப்பு என்பது நாற்பது வயதுக்கு மேற்பட்டவர்களின் வழக்கம் என்றாகி வருகிறது.  வணிக இதழ்களைக்கூட இன்றைய பள்ளி , கல்லூரி மாணவன் சீந்துவதில்லை

அராத்து போன்ற சில எழுத்தாளர்கள் தமது நூல்களை எழுதுவதற்கு செலவிடும் நேரத்தை விட , அவற்றை செப்பனிட அதிக நேரம் செலவிடுகிறார்கள். ஈகோ பாராமல் மெனக்கெடுகிறார்கள். ஜீரோ டிகிரி பதிப்பகம் போன்ற சிலர் தரமான கட்டமைப்பில் நூல்களை வெளியிடுகின்றனர்.  ராயல்ட்டியில் வெளிப்படைத்தன்மையை மேற்கொள்கின்றனர்.
இவர்களின் நூல்கள் நல்ல வரவேற்பை பெறுகின்றன என்பதையும் குறிப்பிட வேண்டும்

இணையகூச்சல்களுக்கிடையே வேனல் போன்ற தரமான ஆக்கங்கள் இளைஞனை எட்டுவதில்லை. அப்படி அனைவரையும் அடைவது தமிழுக்கு நல்லது என்பதைத்தான் சாரு சொன்னார்; அதற்கு நூலில் கட்டுமானமும் அவசியம்.  நூலில் இலக்கிய மதிப்புக்கு அதன் உள்ளடக்கமே போதும். ஆனால் பரவலாக வாசகனை அடைய நூல்,வடிவமும் முக்கியம்
இதில் ,வண்ணதாசன் சாதீய நிலைப்பாடு எடுத்திருப்பது நல்லதுதான்.

தமிழ்ச்சாதி , எழுத்தாளன் சாதி என்ற சாதீய சார்பு எடுத்து , சாருவுடன் கைகோர்த்து செயல்பட வேண்டும் என்பதே வாசகர்களின் விருப்பம்






Saturday, January 18, 2020

சாருவிடம் கலை உருவாகாதா ? ஜெயமோகன் பேச்சுக்கு சாரு பதிலடி

என்னப்பா புத்தக கண்காட்சி போகலையா என அலுவலகத்தில் ஜுனியர் பையனிடம் கேட்டேன்

அறிவார்ந்த வகையில் பேசுவான் , அறிவு தேடல் கொண்டவன் என்பதால் கேட்டேன்

அதுதான் எல்லாமே நெட்ல யூட்யூப்ல கிடைக்குதே சார். எதுக்கு புக் படிக்கணும் , அப்படியே படிச்சாலும் புக்ஃபேர் ஏன் போகணும் என்றான் .

தம்பி , புத்தகங்கள் குவிந்திருக்கும் இடத்தில் நிற்பதும் அறிவாரந்த பேச்சுகள் காதில் விழுவதும் தனி அனுபவம் , வந்து பார் என இளைய சமுதாயத்திடம் என்னால் சொல்ல முடியவில்லை.

காரணம் அங்கு மேடைகளில் காதில் விழுபவை எல்லாம் , ஏய் மோடியே , உனக்கு சவால் விடுகிறேன்.  துண்டுச்சீட்டு ஸ்டாலின் , இந்து மதமே உயரந்தது என்பவை போன்ற தெரு முனைப் பேச்சுகள்தான்.

இலக்கிய இயக்கமாக உருவாக வேண்டிய ஒன்று அரசியல் சக்திகளிடம் சிக்கி மக்களை விட்டு தொலைதூரம் போகும் அவல சூழல்




இந்த சூழலில் இலக்கியத்துக்கு ஆக்சிஜன் கொடுப்பதுபோல வெகு சிறப்பாக நடந்தது சாரு நிவேதிதாவின் இலக்கிய அமர்வு

நிற்கக்கூட இடமில்லாத பெருந்திரளான வருகையில் அரங்கு தளும்பியது

கலை என்பதன் அவசியம் , ப்ளஷர் ஆப் டெக்ஸ்ட் , மீறல் என்பது எப்படி கலையாகிறது , எப்படி போர்னோவில் இருந்து மாறுபடுகிறது , பித்து நிலையும் எழுத்தும் என்பது போன்ற பல விஷயங்களை வெகு அழகாக தொட்டுச் சென்றது அமர்வு

ஒரு பேராசிரியர் வகுப்பெடுப்பது போல, குரு சீடனுக்கு ஞானம் வழங்குவது வெகு அழகாக பேசினார் சாரு.  அரசியல் தலைவர்கள் பெயரைக் குறிப்பிட்டு அரசியல் மேடை ஆக்கிவிடக்கூடாது என வெகு கவனமாக இருந்தார்

இங்கெல்லாம் குழந்தைகளை அழைத்து வரலாமா என அவர் கோபமாக கேட்டது இலக்கிய நிகழ்வில் அபூர்வமான ஒரு தருணம்.

ஒரு கல்லூரி மாணவனை மாணவியை சாரு நூல் படிக்க விடாமல் செய்வது , குழந்தைகளை அழைத்து வருவது என்பதன் அபத்தத்தை சுட்டிக்காட்டினார்

சாரு அ. மார்க்ஸ் ஆகியோரிடம் இருந்தால் கலையை கற்க முடியாது என்ற ஜெயமோகனின் கருத்தை இந்த இருவரால் உருவான ஜெயமோகன் உட்பட பலரால் ஏற்கப்பட்ட ஷோபா சக்தி உதாரணம் மூலம் மறுத்தார்

பிற வகை சிந்தனைகளை இப்படி மறுப்பதுதான் பாசிசம் , என்னைப் பொருத்த வரை ஜெயமோகனை வேறு வகை சிந்தனைப்பள்ளி என சொல்வேனே தவிர அவரை ஒட்டு மொத்தமாக மறுதலிக்க மாட்டேன் என்றார்  சாருவின் உரை காணொளி

நேசமித்ரன் உரை வெகு ஆழமாக அமைந்திருந்தது. சங்க இலக்கியங்கள் தி ஜா , கோபிகிருஷ்ணன் , தஞ்சை பிரகாஷ் என்பது போன்ற ஒரு மரபில் சாருவின் இடத்தை அழகாக தொட்டுக்காட்டினார்.. அவரது காத்திரமான அந்த உரை யூ-ட்யூபில் வரும்போது அனைவரும் அதை பல முறை கேட்க வேண்டும் . விவாதிக்க வேண்டும் என சாரு கேட்டுக் கொண்டார். அந்த அளவு ஓர் அற்புதம் அந்த உரை

அப்படி இல்லாமல் சம கால இலக்கியவாதிகளிடையே சாரு எப்படி மாறுபடுகிறார் என தன் பாணியில் பேசினார் அராத்து

பொது வெளிகளில் பேசிக் கேட்டிராத அவந்திகா அவர்களின் பேச்சு இன்றைய நிகழ்வின் எதிர்பாரா போனஸ்

தமிழை ஒழிக்காமல் விட மாட்டார்கள் போலயே என துவண்டிருந்த மனஙகளுக்கு மருந்து போடுவது போல இந்நிகழ்வு அமைந்திருந்தது

Monday, August 27, 2018

தேகம் நாவலும் மிஷ்கினும் - சாருவுக்கு ஒரு கடிதம்

அன்புள்ள சாரு..

ஒரு முறை நான் , செல்வா மற்றும் ஸ்ரீராம் ஆகியோர் உங்களுடன் சேர்ந்து உணவருந்தியபடி உரையாடிக் கொண்டிருந்தோம்.. பல விஷயங்கள் சுவாரஸ்யமாக பேச்சு சென்று கொண்டிருந்தது.. அப்போது செல்வா திடீரென ஒரு கேள்வி கேட்டார்

- சாரு.. உங்கள் கட்டுரைகள் சிலவற்றில் எழுத்தாளர்கள் குறித்தும் அவர்கள் படைப்புகள் குறித்தும் எழுதுகையில் , அவர்கள் படைப்பின் சில பகுதிகளை அப்படியே கட் அண்ட் பேஸ்ட் செய்கிறீர்கள் என்றும் இதனால் உங்கள் கருத்துகளுக்கான இடம் குறைந்து விடுகிறது என்றும் சிலர் சொல்கிறார்கள்.. கட் அண்ட் பேஸ்ட் என்பதற்கு உங்கள் விளக்கம் என்றார்

எனக்கு செம ஷாக்... சும்மா ஜாலியாக பேசும்போது இப்படி குற்றம் சாட்டுவது போல ஒரு கேள்வியக்கேட்கலாமா என எனக்கு செல்வா மீது கோபம்தான்.

ஆனால் நீங்கள் உங்களுக்கே உரிய ஒரு மென் சிரிப்புடன் அதற்கு லாஜிக்கலாக ஒரு பதில் சொன்னீர்கள்.. பொது இடம் என்பதையும் மறந்து  நாங்கள் மூவரும் கைதட்டி பாராட்டினோம்

எதற்கு சொல்கிறேன் என்றால் விமர்சனங்களுக்கு இடம் கொடுப்பதில் உங்களுக்கு நிகர் யாரும் இல்லை

தேகம் நாவல் வெளியீட்டின் போது , அதைப் படிக்கவில்லை என்று மிஷ்கின் பேசியது சர்ச்சை ஆனது... படிக்காமல் ஒரு விழாவுக்கு செல்வது தவறு அல்லவா.. மற்றபடி அது த்ரில்லர் ஃபார்மேட்டில் இருக்கும் நாவல், பாக்கெட் நாவல் ஃபார்மேட்டில் இருக்கும் நாவல் என்று எப்படியும் சொல்லலாம்


காப்ரியேல் கார்சியா மார்க்வெஸ் துப்பறியும் நாவல்  வார்ப்புருவில் ஒரு நாவல் எழுதி இருக்கிறார்... அகராதி வடிவில் மிலோரத் பாவிச் உலக இலக்கியம் படைத்திருக்கிறார்..

அதுபோல சரோஜா தேவி கதைகளின்  வார்ப்புருவில் தேகம் இருக்கிறது என ஜாலியாக மிஷ்கின் பேசியதை , சரோஜா தேவி எழுத்தை விட சாரு எழுத்து எந்த விதத்தில் சிறப்பு என அவர் பேசவே இல்லை...  அவர் பேசாததை பேசியது போல திரித்து சொல்கிறார் உங்கள் நண்பர் ஒருவர்


தேகம் என்ற படகை வைத்துதான் வாழ்க்கை எனும் கடலை கடக்க வேண்டும் என்பது ஆன்மீகம்.  தேக இன்பங்களை துய்ப்பதே வாழ்வின் பயன் என வாழ்வது உலகவியல்...     கிடைத்த தேகத்தை மக்களுக்காக உழைப்பதில் பயன்படுத்த வேண்டும் என உழைப்பது  தொண்டு...  தொண்டு செய்து பழுத்த பழமாக வாழ்ந்த பெரியார் இதற்கோர் உதாரணம்.  பிறர் உடலை துன்புறுத்து வதைத்து அச்சத்தை விளைவித்து அதிகாரத்தை கைப்பற்றுதல் சர்வாதிகாரிகளின் அரசியல்..   ஹிட்லர் இதற்கோர் உதாரணம்

இப்படி ஆன்மிகம் , அதிகாரம் , அரசியல் ,  காமம் என அனைத்துக்குமே அடிப்படை தேகம்தான் . உடலை புரிந்து கொண்டால் உன்னுள் இருக்கும் உத்தமனை புரிந்து கொள்ளலாம்..

இதை சொல்ல சரோஜா தேவி வார்ப்புரு பொருத்தமானதுதான்...  மிஷ்கின் அதை விளக்கமாக பேசி இருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்பது மட்டுமே குறை..

கேவலம் , சில டிவி வாய்ப்புகளுக்காக உங்கள் நண்பர் இவ்வளவு கீழே இறங்கி இருக்க வேண்டாம்

டிவீ வாய்ப்பெல்லாம் வாழ்க்கையில் எந்த மூலைக்கு ?

திமுக மதுரை மா நாட்டுக்கு தலைமை ஏற்கும் வாய்ப்பு கிடைத்த மு க முத்து இன்று எப்படி இருக்கிறார்?

தென்னக ஜேம்ஸ் பாண்ட் ஜெய்சங்கர் பதினைந்து நிமிட புகழுக்காக திமுகவை ஆதரித்து பிற்காலத்தில் துணை நடிகராக மாறவில்லையா?


எ ம் ஜி ஆரின் சினிமா வாரிசு என அழைக்கப்பட்ட பாக்யராஜ் திமுகவுக்கு ஆதரவளித்த பின் என்ன ஆனார்?

எம் ஜி ஆரை எதிர்த்து திமுக ஆதரவு கொடுத்தபோது , தற்போது  உங்கள் நண்பருக்கு  கிடைக்கும் விளம்பரத்தை விட அதிக விளம்பரம் , டி ராஜேந்திருக்கு கிடைத்தது ?  இன்று அவர் எப்படி இருக்கிறார்?

வரலாறு நமக்கு பாடங்கள் கற்பிக்கிறது... நாம்தான் கவனிப்பதில்லை... உங்கள் நண்பரை கொஞ்ச காலம் கவிதையை மறந்து விட்டு வரலாறு படிக்க சொல்லவும்

அன்புடன்

பிச்சை





Sunday, January 8, 2017

கொண்டாட்டப்பட வேண்டிய குமரகுருபரன் - நூல் வெளியீட்டு விழா

இலக்கியம் என்றாலே தோல்வியாளர்களின் துக்கமாக வாழ்பவர்களின் புகலிடம் என்றொரு எண்ணம் சிலரால் உருவாக்கப்பட்டுள்ளது... தமிழை இலக்கியத்தை காதலை நட்பை கொண்டாட்டமாக நினைப்பவர்கள் சிலர்தான்.. அவர்களில் முக்கியமானவர் கவிஞர் குமரகுருபரன்...

அவரது புத்தக வெளியீட்டு விழா நடந்தபோது , இதை வெறும் புத்தக விழாவாக அல்லாமல் ஒரு நல்ல அனுபவத்தை அனைவருக்கும் வழங்குவதே முக்கியம் என நினைத்தார்.. நூலகங்கள் , அரங்குகள் என இதுபோன்ற விழாக்கள் நடக்கும்... அப்படி வேண்டாம் என நினைத்து , ரேஸ் கிளப்பில் கார்ப்பரேட் மீட் போல நடத்த ஏற்பாடு செய்தார்... வந்தவர்கள் அனைவருக்கும் விலை உயர்ந்த உயர் தரமான டின்னர் என இலக்கியத்துக்கு என இருந்த முகத்தை மாற்றி அமைத்தார்...

அது பொது நிகழ்ச்சி அல்ல... அழைக்கப்பட்டவர்கள் மட்டுமே கலந்து கொள்ள முடியும்... அன்று செம மழை.. பொது நிகழ்ச்சி என்றாலே இந்த மழையில் கூட்டம் வராது.... அழைக்கப்ப்பட்டவர்கள் சிலர்தான்..அவர்களில் எத்தனைபேர் வரப்போகிறார்களோ என சந்தேகமாக போய்ப்பார்த்தால் , அரங்கு நிறைந்த கூட்டம்.. குமார் மீதும் தமிழ் மீதும் ஆர்வம் கொண்ட அத்தனை பேரை பார்க்க மகிழ்ச்சியாக இருந்தது... இலக்கியமும் கவிதையும் கொண்டாடப்பட்டது அந்த இரவில்...


நூல் வெளியாகி சில நாட்களிலேயே விற்றுத்தீர்ந்த நிலையில் இரண்டாம் பதிப்பு வெளியீட்டு விழா ஏற்பாடு செய்ப்பட்டது...

முதல் நிகழ்ச்சியை விட சிறப்பாக நடக்க வேண்டும் என்பதற்காக சிறப்பு கவனம் செலுத்தப்பட்டது..

சென்னை எக்மோரில் இருக்கும் ஆடம்பரமான ஹோட்டல் ஒன்றில் வெகு சிறப்பாக நிகழ்ச்சி நடந்தது...

அனைவருமே குமாரை நேசிப்பவர்கள் என்பதால் ஈடுபாட்டுடன் அனைவரும் கலந்து கொண்டனர்


சாரு பேசுகையில் , குமரகுருபரன் மீதான தன் நட்பை பகிர்ந்து கொண்டார்..

குமரகுருபரன் இறந்த போது நான் அஞ்சலி செலுத்த அவர் இல்லம் செல்லவில்லை... சென்றிருந்தால் , நீங்கள் இரண்டு உடல்களை எடுத்துச் செல்ல வேண்டி இருக்கும் என்றார்


அனைத்து விளக்குகளுன் அணைக்கப்பட்டு , மேடை மீது சிறு ஒளி மட்டும் பாய, பீத்தோவன் இசை பின்னணியில் குமரகுருபரன் கவிதை ஒன்றை சாரு வாசித்தபோது அந்த இடமே இன்னொரு பிரபஞ்சத்தில் சஞ்சரித்த்து....குமார் ஒரு மிகப்பெரிய இசை ரசிகர்...

உரை , அறிவுரைகள் , இலக்கிய விளக்கங்கள் என்று இல்லாமல் குமாரின் கவிதை வாசிப்பு மட்டுமே முழுக்க முழுக்க நிகழ்ந்தது வித்தியாசமான அனுபவமாக இருந்தது

பலரும் அவருடனான தம் அனுபவத்தை பகிர்ந்து கொண்டனர்...

குமார் ஒரு கவிஞர் மட்டும் அல்ல... திரைப்படத்துறை மீது பெருங்காதலும் மேதமையும் கொண்டவரும்கூட... இந்த அம்சம் குறித்தும் விவாதிக்கப்பட்டது...


நட்பாகவும் அன்பாவாகவும் கொண்டாட்டமாகவும் காதலாகவும் தமிழாகவுமே அன்றி வேறு எப்படியும் குமாரை பார்க்க இயலாது....

அந்த வகையில் குமாருடன் கை குலுக்கி , உரையாடி , அவருடன் சேர்ந்து டின்னர் சாப்பிட்ட மகிழ்ச்சியை தந்த்து விழா

ஞானம் நுரைக்கும் போத்தல் - டிஸ்கவரி வெளியீடு

சாரு எனும் பல்கலைக்கழகம்

அன்புள்ள சாரு,,,,,,

charu school of thought என்கிறீர்களே ...அப்படி என்றால் என்ன என ஒருவர் அராத்து புத்தக விழாவில் என்னைக் கேட்டார்...

இலக்கியக் கூறுகள் , இசங்கள் என்பதையெல்லாம் பேச்சில் காட்டாமல் தன் வாழ்க்கையே தன் செய்தி என கொண்டாட்டமாக , யாருக்கும் தொந்தரவளிக்காத , அன்பை பரப்புகிற ஒரு வித வாழ்க்கை முறை...

விழாவில் சாருவை கவனியுங்கள்...உங்களுக்கே புரியும் என்றேன்..

இலக்கிய உச்ச கணம் என்றால் என்ன என உரை நிகழ்த்தாமல் , சிலிர்ப்பான குரலில் , மெல்லிய இசைப் பின்னண்யில் கவிதை வாசித்து - மன்னிக்கவும் கவிக்கணத்தில் வாழ்ந்து - அந்த பரவ்ச கணத்தில் அனைவரையும் சில நிமிடங்கள் வாழ வைத்தீர்களே... அப்போது புரிந்து கொண்டார்  அவர் சாரு என்றால் அனுபவம்... வெறும் பேச்சு அல்ல என்று..


உங்களைப் பேச அழைத்தபோது , வேண்டாம்... நண்பர் ஜெயமோகன் பேசட்டும் என விட்டுக்கொடுத்தீர்களே... அப்போது புரிந்து கொண்டார் , அக்ரெஸ்சிவ்னெஸ் இல்லாத தன்மையே ஆன்மீகம் என ஜேகே போன்றோர் சொல்வதை வாழ்ந்து காட்டும் ஆன்மிக வாழ்க்கை என்றால் என்ன என்பதை


பிரேக் அப் கதைகளைப்பற்றி விரிவாக பேச தயார் நிலையில் வந்து இருந்தீர்கள்...அதற்காக எவ்வளவு உழைப்பை - பல வேலைப்பளுகளுக்கிடையே - நல்கினீர்கள் என எங்களுக்கு தெரியும்.. ஆனால் விருந்தினரை எதிர்த்துப்பேசுவது போல ஆகி விடுமே என நினைத்து அந்த அற்புதமான உரையையே தவிர்த்தீர்களே... அங்கு புரிந்து கொண்டார் சென்சிப்லிட்டி என்றால் என்னவென்பதை////கன்சிடெரேஷன் எனும் உயரிய தன்மையை


அவ்வளவு பிசியிலும் ஆட்டோகிராப் கேட்போருக்கு பொறுமையாக , தேதி பெயர் உட்பட அனைத்தையும் விசாரித்து அக்கறையுடன் ஓர் ஓவியம் தீட்டுவது போல கை எழுத்துப்போடுவீர்களே..அங்கு புரிந்து கொண்டார் , அன்பும் அக்கறையும்தான் உண்மையான அறம் என்பதை வாழ்ந்து காட்டுகிறீர்கள் என்பதை


ஜெய்மோகனை உரிமை எடுத்துக்கொண்டு கலாய்த்தது ( நான் பெண்ணாக மாறினால் யோக்கியர்களை காதலித்து காலி செய்வேன்.. முதல் நபர் ஜெயமோகன் என்றபோது அவரே வாய் விட்டு சிரித்து விட்டார் ) ஜாலியான கேள்விகள் பதில்கள் , ஆடை நேர்த்தி என எனர்ஜெட்டிக்காக இருந்தீர்களே...அங்கு புரிந்து கொண்டார் .. Life is a celebration... Celebrate it என்பதை...


சிலரது வாசிப்புகள் அவர்கள் மூளையில் ஒரு மடிப்பாக மாறுவதோடு சரி... ஆனால் சாரு படித்து குவித்த புத்தகங்கள் அவரை அன்பு மயமாக்கி வருகிறது... வாழ்ககையை மென் மேலும் கொண்டாட செய்கிறது... இந்த ரசவாதமே சாரு எனும் பல்கலைக்கழகத்தின்  அடி நாதம் என புரிந்து கொண்டேன்....என்ன நான் சொல்வது சரியாக என கேட்டார் அந்த நண்பர்

Sunday, May 22, 2016

காலம் கடந்து நிற்கப்போகும் கலைக்களஞ்சியம் - சாருவின் வேற்றுலகவாசியின் டயரிக் குறிப்புகள்


சில புத்தகங்களை படிப்பது என்பது நம் தேர்வு… சில புத்தகங்களை படிப்பது என்பது நாம் செய்தே ஆக வேண்டிய ஒரு செயல். அவ்ற்றை படித்தபின் நாம் வாழ்க்கையே பார்ப்பதை வேறு விதமாக மாறி விடும்.
அப்படி ஒரு புத்தகம்தான் சாரு நிவேதிதாவின் வேற்றுலகவாசியின் டயரிக் குறிப்புகள்
 நாவல் , சிறுகதை போன்றவைகளில் சாரு விற்பன்னர் .. அவற்றுகான வாசகர்கள் ஏராளம் என்றாலும் அவரை பிடிக்காதவர்களும் உண்டு..ஆனால் அவரை பிடிக்காதவர்களையும்கூட ஈர்க்கக்கூடிய வசியம் கொண்டவை அவரது பத்தி எழுத்துகள்..
தமிழின் சுவையான பத்தி எழுத்தாளர் என சுஜாதாவை குறிப்பிடுகிறார் சாரு..ஆனால் இந்த சாருவின் கட்டுரைகளை தொடர்ந்து படிப்போர்க்கு அவர்  சுஜாதா தொடாத சில உயரங்களை தொட்டு வருவது புரியும். சாருவின் எழுத்துகள் ஒரு கலைக்களஞ்சியம் போல விஷ்யங்களை உலக ஞானங்களை நமக்கு அள்ளித்தருகிறது என வாலி ஒரு முறை குறிப்பிட்டார்.. ஆனால் விஷ்ய ஞானம் எனபதையும் தாண்டி அவர் எழுத்துகளில் ஊடுபாய்ந்து விரவிக்கிடக்கும் மைய தரிசனம்தான் , ஆன்மிக பார்வைதான் அவர் எழுத்துகளை காலக்கடந்த படைப்பாக்குகிறது என கருதுகிறேன்.
ஆன்மிகம் என்றால் ஜீவாத்மா , பரமாத்மா , விபூதி , மந்திரம் ,ஆலயம் என்பது அல்ல…  வரும் துன்பத்தை தாங்கி , பிறர்க்கு துன்பம் தராமல் வாழ்தலே தவம் அதுவே ஆன்மிகம் என்கிறாரே வள்ளுவர்…  அந்த ஆன்மிகம்தான் சாரு பேசுவது…   சூரியனுக்கு கீழே இருக்கும் அனைத்து விஷ்யங்களையும் வேற்றுலகவாசியின் டயரி குறிப்புகள் பேசுகிறது.. ஆனால் ஆய்வுக்கட்டுரை போல இல்லாமல் , சுவராஸ்யமான உரையாடல் போல பல விஷ்யங்களை சொல்லித்தருகிறது…அந்த விஷ்யங்கள் வெறும் knowledge ஆக இல்லாமல் அந்த விஷ்யத்தையும் தாண்டி மனதில் ஓர் ஆழ்ந்த திறப்பை ஏற்படுத்துகிறது
உதாரணமாக ஓர் இடத்தில் மசூதியின் பாங்கு ஓசையயும் கபாலீஸ்வரர் ஆலயத்தின் வேத கோஷத்தையும் ஒப்பிடுகிறார்…எல்லா மதங்களும் சொல்வது ஒரு விஷ்யம்தான் என்ற ஆன்மிக பார்வை நமக்கு கிடைக்கிறது..இப்படி கிடைப்பதற்கு முன் ப்ரிட்ஜ் விளையாட்டுக்கு அந்த பெயர் எப்படி வந்தது , பாலம் ஒன்று இரு கலாச்சாரங்களுக்கும் பாலமாக இருப்பது , நகரா இசை , ரஜினி உட்பட பலரின் ரோல் மாடல் லீ க்வான் யூவின் இன்னொரு பக்கம் என பல விஷ்யங்கள் எஃப்ஃபோர்ட்லெஸ்சாக  விளையாட்டுபோல நம்மை வந்தடைந்து விடுகின்றன..அதுதான் சாரு
  நமக்கு ஏதாவது கஷ்டம் வ்ந்து விடுகிறது..  நமக்கு மட்டும் ஏன் இப்படி நடக்கிறது என புலம்புகிறோம்…ஆனால் நமக்கு கிடைத்திருக்கும் வாய்ப்புகளை , நல்ல விஷ்யங்களை நினைத்துப்பார்த்து நமக்கு மட்டும் ஏன்  இப்படி கிடைக்கிறது என நினைப்பதே இல்லை..இதை அழகாக – ஆர்தர் ஆஷ் வரலாற்றை விளக்கி – சொல்கிறார் சாரு. அந்த கட்டுரையை மட்டும் காப்பி எடுத்து தமிழகமெங்கும் வினியோகித்து ஒவ்வொருவரையும் படிக்க வைக்க வேண்டும் என்ற எண்ணம் அதை படிக்கையில் தோன்றியது.. அந்த கட்டுரையை உள்வாங்கி படித்தால் , அதன் பின் இன்னொரு புத்தகம் வாழ்க்கையில் தேவையே படாது
 வாய் விட்டு சிரிக்க செய்யும் நகைச்சுவை சாருவின் ஸ்பெஷாலிட்டி. கீழ்கண்ட வரிகளை படித்து வெகு நேரம் சிரித்தேன்
குழந்தைகளைப்பற்றி தாய்மார்கள் பெருமை அடித்துக்கொள்கிறார்களே..அது பயங்கரம்.. அதி பயங்கரம். என்னமா இங்லீஷ் பேசறான்..எல்லாதலயும் முதல் பரிசு .
இது எல்லாவற்றிலும் டாப் என்ன தெரியுமா..சமீபத்தில் ஒரு தாய் தன் 29 வயது மகன் குறித்து சொன்னார்.என் மகன் மகாத்மாதான் ( அய்யோ..இந்த புத்தகத்தை ஒளித்து வைக்க வேண்டுமே..  காரணம் இதை சொன்னது என் மனைவி..என் மகன் குறித்து )
பாகிஸ்தான் , தஜிகிஸ்தான் , இத்தாலி , ஸ்காட்லாந்து என உலகெங்கும் சுற்றிபார்த்த உணர்வை தரும் இந்த புத்தகம் ,  நாம் உள்முக பயணம் செய்து நம்மை நாமே சுற்றிப்பார்த்த உணர்வையும் தருகிறது
 
 நுண்ணுணர்வு என்பது சாரு அடிக்கடி சொல்லும் விஷ்யம்.. இலக்கியம் படிக்காமல் இது சாத்தியம் இல்லை
எனக்கும் தமிழ்தான் மூச்சு.. ஆனால் அதை பிறர் மேல் விட மாட்டேன் என்ற ஞானக்கூத்தன் வரிகளில் இதை காணலாம்.
தலைவியை பார்க்க குதிரை வண்டியில்  விரைந்து வரும் தலைவன் , வண்டி சப்தம் வண்டுகளுக்கு இடையூறாக இருப்பதை பார்த்து விட்டு , வண்டியை விட்டு இறங்கி நடந்து செல்லும் சங்க பாடல்களில் இதை காணலாம்.
வாசிப்பு.. வாசிப்பு ...வாசிப்பு...இதை விட்டால் வேறு வழி இல்லை என சொல்லும் சாரு , தான் ஓர் எழுத்தாளன் என்பதை விட முதலில் ஓர் வாசகன் என சொல்கிறார் என்றால் அது மிகை அல்ல.. இத்தனை ஆண்டுகள் தொடர்ந்து எழுதினாலும் , இன்னும் புதிதாக சொல்ல அவரிடம் ஏராளமான விஷ்யஙகள் இருக்கின்றன என்றால் காரணம் வாசிப்புதான்.. இந்த புத்தகத்தில் சினிமா , இலக்கியம் , இசை , சாப்ப்பிட வேண்டிய உணவு என ரெஃபரன்சுகள் ஏராளம்..ஒவ்வொன்றையும குறிப்பெடுத்து , தேடி பார்த்து பயன்படுத்திக்கொண்டே இருக்கலாம்.. ஆக இந்த புத்தகத்தை யாராலும் படித்து முடிக்க இயலாது. இது என்றென்றும் பய்ன்படப்போகும் user manual
அருளப்பரின் வரலாறு நம்மை நெகிழச்செய்கிறது .செல்கர்க் வரலாறு சிலிர்க்கச்செய்கிறது , ஆர்தர் ஆஷ் வரலாறு நம் அகத்தை தொட்டுப்பார்க்கிறது , தோர் ஹயர்டால் வரலாறு மயில் தோகையாய் மனதை வருடுகிறது,, மகாபாரதம் , குற்றாலக்குறவஞ்சி , பாஷோ என எத்தனை எத்தனை… நம்புங்கள்..இவை அனைத்தும் ஒரே புத்தகத்தில்
 
தமிழில் வந்த புத்தகங்களில் இது மிகவும் முக்கியமான நூல் என்றே சொல்லலாம்.. மிஸ் செய்யக்கூடாத புத்தகம்
 
வேற்றுலகவாசியின் டயரி குறிப்புகள் – உயிர்மை பதிப்பகம்

Saturday, August 15, 2015

தங்க மீன்கள் போன்ற குப்பைகளை திட்டுவது தவறா- சாரு உருக்கம்


சுவாரசியமான ஆரம்பம் ,  நகைச்சுவை என பேச்சை ஆரம்பித்து கைதட்டல் வாங்குவது சிலர் பாணி.
ஆனால் சாரு அப்படி அல்லர்.. அவர் தொழில்முறை பேச்சாளர் போல பேச மாட்டார்... சுவையான ஆரம்பம் . ஆங்காங்கு நகைச்சுவை , கொஞ்சம் கொஞ்சமாக முடிவை நோக்கிச்செல்லுதல் எனும் ஃபார்முலா அவரிடம் இல்லை...

15.08.2015 அன்று விருட்சம் இலக்கியச் சந்திப்பு - 15 சென்னையில் நடந்தது...

இலக்கியமும் இன்றைய வாழ்க்கையும் என்ற தலைப்பில் சாரு பேசினார்...

 நல்ல கூட்டம்...  வந்திருந்தவர்களில் பெரும்பாலானோர் இலக்கிய ரசனை கொண்டவர்கள் . ஆனால் முழு நேர இலக்கியவாதிகள் அல்லர்.. இளைஞர்கள் , பெரிய வேலைகளில் இருப்பவர்கள் , பெண்கள் என வித்தியாசமான சூழல்.. ஜிப்பா ஜோல்னா பை எனும் அந்த கால இலக்கிய கூட்ட அம்சங்கள் எதுவும் இல்லை...
சாரு தன் பேச்சில் இதை குறிப்பிட்டார்...

அந்த காலங்களில் இலக்கியம் பேச சரியான இடம் கிடைக்காது... அழுக்கு நிறைந்த ஏதோ ஒரு கட்டிடம் கிடைக்கும்..போய் விட்டு வந்தால் ரெண்டு நாள் தூசி போகாது.. வாசகர்கள் என யாரும் இருக்க மாட்டார்கள்.. எழுதுபவர்கள்தான் படித்தும் ஆக வேண்டும். எனவே ஒரு சின்ன கூட்டமாகவே அன்றெல்லாம் கூட்டம் நடக்கும். இப்போது நிலை பரவாயில்லை.. இத்தனை வாசகர்களை பார்ப்பதில் சந்தோஷம்.  முன்பைவிட நிலை தேவலாம் என்றாலும் இதுவும் போதாது.. இன்னும் அதிகமாக வேண்டும்.

எனக்கு பேச தெரியாது. நான் ஓர் எழுத்தாளன். என் மகனிடம்கூட அதிகம் பேசுவதில்லை. மெயில்தான் அனுப்புகிறேன்.ஆனாலும் சில விஷயங்களை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

இலக்கியவாதிகளுக்கு மதிப்பில்லாத நிலையே சமூகத்தில் நிலவுகிறது. ஒரு நடிகருக்கு மேடையில் கை கொடுக்க போனேன். அவரோ என் கையை தட்டி விட்டு போய் விட்டார். இப்படி அவமரியாதை செய்வது மனித தன்மையா.. சாரு என்றாலே பலர் தீண்டத்தகாதவன் என ஒதுக்கி வைக்கும் நிலையில் என்னை துணிச்சலாக கூட்டத்துக்கு அழைத்த அழகிய சிங்கருக்கு என் நன்றி. இந்த கூட்டத்தில் கலந்து கொள்வதில் பெருமைப்படுகிறேன்.

உண்மை சொல்வதற்காக நான் வெறுக்கப்படுகிறேன். ஊரே பாராட்டுகிறது என்பதற்காக என்னால் பரதேசி படத்தை பாராட்ட முடியாது. அது ஒரு தப்பான படம் என்பதை நான் மட்டும் தனி ஆளாக சொல்லி பலர் வெறுப்புக்கு ஆளானேன்.. இத்தனைக்கும் டைரக்டர் பாலா மேல் எனக்கு அன்பு உண்டு.

எனக்கு இதய பிரச்சனை காரணமாக  நான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது , தன் வேலைகளையெல்லாம் ஒதுக்கி வைத்து விட்டு என்னை வந்து பார்த்தவர் வசந்த பாலன்.  அவர் என்  மேல் அன்பு காட்டுபவர்  என்பதற்காக அவ்ரது எல்லா படங்களையும் என்னால் பாராட்ட முடியாது. பிடிக்கவில்லை என்றால் யாராக இருந்தாலும் விமர்சிப்பேன்..

தங்க மீன்கள் என ஒரு மோசமான படம். தற்கொலை செய்து கொள்வது எப்படி என குழந்தைகளுக்கு சொல்லித்தரும் படம். கடுமையாக திட்டி எழுதினேன். இப்படி சராசரி மன நிலைக்கு எதிராக நான் இயங்குவதால் பலராலும் வெறுக்கப்படுகிறேன்.

அந்த காலத்தில் பல நல்ல சிற்றிதழ்கள் வந்தன. பலர் தம் சொத்துகளை விற்று நகைகளை விற்று இலக்கியத்தை வளர்த்தனர். சி சு செல்லப்பா ஊர் ஊராக சென்று புத்தகம் விற்றார். அவர்களுக்கு உரிய அங்கீகாரம் கிடைக்காவிட்டாலும் தம் பணியை செய்து கொண்டே இருந்தனர். அவர்களது நீட்சியாக  , விமர்சனங்களை கண்டு கொள்ளாமல் நான் எழுதி வருகிறேன்.

யாரையும் துன்புறுத்துவது என் நோக்கம் அல்ல.. என் வீட்டுக்குள்  நுழைந்து விடும் பூரான்களைக்கூட நான் கொல்வதில்லை.. எந்த காயமும் ஏற்படாமல் ஒரு பேப்பரில் எடுத்து வெளியே தூக்கி போடுவேன்

சிலர் என்னை தவறாக புரிந்து கொள்வதே பிரச்சனைக்கு காரணம். அதிகமாக செக்ஸ் எழுதுவதாக ஒரு குற்றச்சாட்டு. பாலியல் வறட்சியில் வாடும் நாடு என்பதால் , நான் பத்து பக்கத்துக்கு பாலியல் எழுதினால் , நூறு பக்கங்களுக்கு கற்பனை செய்து கொள்கிறார்கள்.

தாய்லாந்து போன்ற நாடுகளில் சில கடைகளில் இந்தியர்களுக்கு அனுமதி இல்லை என எழுதி வைத்துள்ளனர். காரணம் நம் ஆட்கள் கடைகளுக்கு போனால் , அங்கிருக்கும் பெண்களுடன் போட்டோ எடுக்க க்யூவில் நிற்கின்றனர். பஸ்ஸில் செல்லும் சுற்றுலா பயணிகள் இப்படி க்யூவில் நின்று போட்டோ எடுத்து முத்தம் கொடுத்து அதை பெருமையாக இங்கே சொல்லலாம்.. ஆனால் நம் பெயர் கெட்டு விடுகிறது. இந்தியர்கள் வர வேண்டாம் என்கிறார்கள்>.

இதற்கு காரணம் பாலியல் வறட்சி மட்டும் அல்ல...சென்சிப்லிட்டி இன்மையும் இதற்கு காரணமாகும்.  இலக்கிய பரிட்சயம் இல்லை என்றால் இப்படித்தான் இருப்பார்கள்.

மேம்போக்காக கருத்துகளை சொல்லும் சராசரி மனிதனைப்போலவே மெத்தப்படித்த பேராசியர்களும் இருக்கிறார்கள். ராணுவ ஆட்சி வந்தால் எல்லாம் சரியாகி விடும் எனும் மேம்போக்கான கருத்தையே ஒரு பேராசிரியரும் சொல்கிறார்.

ஒரு பேட்டிக்காக ஒரு பேராசியர் என்னிடம் கேள்வி கேட்டார்.. நீங்கள் யார் , என்ன தொழில் செய்கிறீர்கள் என்கிறார். இப்படித்தான் பொது அறிவு இருக்கிறது..

ஒரு பேராசியருக்கு மெயில் அனுப்பினேன்... டியர் மேடம் என பதில் எழுதுகிறார் அவர்..

அப்துல் கலாமிடம் உங்களுக்கு பிடித்த சிந்தனையாளர் யார் என கேட்டால் , விவேக் என்கிறார்.. நிலை இப்படி இருக்கிறது..

பலரது மானசீக குருவாக இருப்பவர் மௌனி. அவரை எனக்கு பிடிக்கும் என சொல்ல முடியாது. ஒரே கதையை மீண்டும் மீண்டும் எழுதுகிறார் என தோன்றும் . ஆனாலும் அவரது எழுத்தாளுமையின் ரசிகன் நான். அதற்காகவே அவர் எழுத்தை படிப்பேன்.. அந்த வகையில் அவர் என் குரு. ஜெயகாந்தனும் அவரை குருவாக நினைத்தவர் .

அப்படிப்பட்ட மௌனியின் கொள்ளு  பேத்தியை சமீபத்தில் சந்தித்தேன். இலக்கியம் அளவுக்கு எனக்கு நாய்களை பிடிக்கும். வளர்ப்பு பிராணிகள் ஆர்வலர்கள் கூட்டங்களுக்கு செல்கையில் மௌனியின் பேரனோடு  பழக்கம் ஏற்பட்டது.  அவரோடு மௌனியைப்பற்றி பேசுவதை பார்த்து குழம்பிய அவள் என்ன டாப்பிக் பேசுகிறீர்கள் என கேட்டாள்/. உன் கொள்ளு தாத்தா மிகப்பெரிய ரைட்டர் என்றேன். அப்படியா எனக்கு தெரியாதே என்றாள்t; திடுக்கிட்ட நான் , ஏன் இதை மகளிடம் சொல்லவில்லை என அவரிடம் கேட்டேன்.. ஏன் சொல்ல வேண்டும் என கேட்டார் அவர்.

கலாம் அளவுக்கு மௌனி கொண்டாடப்பட்டு இருந்தால் அவர் இப்படி கேட்டிருக்க முடியுமா....  மௌனி பல்கலைக்கழகம் , மௌனி நெடுஞ்சாலை , என இருந்தால் அந்த பேத்திக்கு அவரை தெரியாமல் இருந்திருக்குமா

சம்பத் குறித்து எழுத அவரது நூல்கள் தேவைப்பட்டன. கிடைக்கவில்லை. ஏன் தெரியுமா... அந்த நூல்கள் வெளியிடப்படக்கூடாது என அவர் மனைவி தடை வாங்கி இருக்கிறார். அந்த அளவுக்கு குடும்பத்தார் எழுத்தாளர்களை வெறுக்கின்றனர்...

சர்வதேச அளவில் சிலாகிக்கப்படும் நூல்களை விட சிறந்த ஆக்கங்க்ளை படைத்தவர் தஞ்சை பிரகாஷ். அவரது காரமுண்டார் வூடு நாவல் கிடைப்பது இல்லை. நல்ல நூல்களை நாம் கொண்டாடுவது இல்லை. இவரது நூல்கள் மொழி பெயர்க்கப்பட்டு இருந்தால் சர்வதேச புகழ் பெற்றிருக்கும். ஆனால் நம் ஊரிலேயே இவர் நூல்கள் கிடைப்பதில்லை

சி சு செல்லப்பாவுடன் அவர் தாயார் பல ஆண்டுகள் பேசவில்லை...எழுத்துக்காக இப்படி எல்லாம் கஷ்டப்பட வேண்டி இருக்கிறது..

ஆனால் இப்படி கஷ்டப்படுவதற்கான பலன் குறைவுதான்.

எழுத்துக்காக பல தியாகங்களை செய்த தஞ்சை பிரகாஷ் . குறித்து சராசரி வாசகன் தெரிந்து கொள்ளாவிட்டால் பரவாயில்லை.. அவர் உயிர் நண்பரான வெ சா என்ன எழுதுகிறார் பாருங்கள்

முப்பது வருடமாக ப்ரகாஷ் என் உயிர் நண்பர்; ஒரே தட்டில்தான் சாப்பிட்டோம். ஆனால் அவர் சாவுறதுக்குக் கொஞ்ச நாள் முந்திதான் அவர் எழுதுவார் என்றே தெரிந்தது

வெ சா எ ( வெங்கட சாமி நாதன் எழுதுகிறார் )  என ஒரு பத்திரிக்கை நடத்தியவர் தஞ்சை பிரகாஷ். அவரைப்பற்றி இப்படி எழுதுகிறார் வெங்கட சாமி நாதன்

இப்படித்தான் நம் சூழல் இருக்கிறது...


இதற்கு முக்கிய காரணம் என நான் நினைப்பது மொழி என்பது நம்மிடம் ஒரு தகவல் தொடர்பு சாதனமாகவே மட்டும் இருக்கிறது. இது தவறு . மொழி என்பது கலாச்சார சின்னமாக பண்பாட்டு அடையாளமாக இருக்க வேண்டும்.

 நல்லா இருக்கியா ..சாப்பிட்டியா என தகவல்களை சொல்ல மட்டும் பயன்படுவது மொழி அல்ல.. நம் மரபு , பண்பாட்டின் சின்னமாகவும் மொழி இருக்க வேண்டும்.

விமானத்தில் ஒருவர் பயணித்தார். காசு எடுத்து வரவில்லை.. பசி.. ஏதாச்சும் சாப்பிட கொடுங்கள் . விமான நிலையத்தில் இறங்கிய அடுத்த நொடி காசு தந்துவிடுகிறேன் என்றார்.. படித்த ஸ்டைலிஷான் ஏர்ஹோஸ்டஸ் அதை ஏற்கவில்லை..

இதுவே கிராமமாக இருந்தால் அவருக்கு உணவு கிடைத்து இருக்கும்.

 உ வெ சா வாழ்வில்  உதாரணம் ...   அவர் வீடு அருகே ரயில் நிலையம் ... இரவில் ரயில் அங்கே வரும்.. ரயிலில் இருந்து இறங்குபவர்கள்  யாருக்காவது தேவைப்படுமே என அவரது தாயார் சோறு வைத்து இருப்பார். சில நேரங்களில் ரயில் தாமதமாக வரும்... அந்த நேரங்களில் ரயில் வரும்வரை சோற்றில் தண்ணீர்  ஊற்றாமல்
 காத்திருப்பார்



இலக்கியம் என்பது நுண்ணுணர்வை வளர்க்கும் என சொன்னேன்.. கிராமங்களில் எல்லோரும் இலக்கியம் படிப்பதில்லை. ஆனாலும் எப்படி நுண்ணுணர்வு எப்படி இருக்கிறது...காரணம் அவர்கள் அன்றாட மொழியே இலக்கியமாக இருக்கிறது.. கூத்து , நடனம் என இலக்கியம் அவர்களை அடைகிறது..

ராமாயணம் , பாரதம் என பாட்டிகள் சொல்லும் கதைகள்  அவற்றில் பல புனை கதைகள் , கட்டுக்கதைகள் . அவைகள் ஒரு மன நிலையை உருவாக்குகின்றன.. சுருட்டு புகையுடன் என் பாட்டி சொன்ன கதைகள் என்னை உருவாக்கின... 

நம் மொழியை நாம் காக்க வேண்டும்...

தன் மண்ணின் மொழியை படிக்காமல் அங்கு வாழ முடியும் என்பது இங்கு மட்டுமே இருக்கும் அபத்தம்.உலகில் எங்குமே இப்படி இல்லை..

என் மகனும் தமிழ் படிக்கவில்லை... ஏன்/?? தமிழில் மார்க் கிடைக்காது என்றான்... வேறு ஆப்ஷன் இருக்கிறது என்கிறான்..தமிழைத்தவிர வேறு ஆப்ஷன் ஏன் கொடுக்கிறீர்கள்>.. தமிழ் படித்தே ஆக வேண்டும் என்ற நிலை வேண்டாமா

 நான்கு பேர் கொண்ட குடும்பம் ஸ்கூட்டரில் போவதை பார்க்கையில் முன்பெல்லாம் கோபம் வரும். இப்போது அவர்களுக்கு வேறு வழி இல்லை என புரிந்து கொள்கிறேன். மெட்ரோ , பேருந்து என ஐரோப்பாவில் இருக்கும் ஆப்ஷன்கள் இங்கு இல்லை என்பதும் கவனத்தில் கொள்ள வேண்டியது..

மண்ணில் தெரியுது வானம் எனும் நாவல் என்னை மாற்றிய நாவல்களில் ஒன்று. என்னிடம் இருக்கும் வன்முறையை அது ஒழித்து விட்டது.. முப்பது ஆண்டுகளுக்கு முன் இதை படித்திருந்தால் , என் வாழ்க்கை  வேறு மாதிரி இருந்திருக்கும்.. ஆனால் என் நாவல்கள் இதேபோலத்தான் இருந்திருக்கும் .பக்திமானாக இருந்து கொண்டே , பாலியலை எழுதினாரே வெங்கட்ராம். அவரைப்போல என் வாழ்க்கை இருந்திருக்கும்..

என்னை மாற்றிய இன்னொரு நாவல் , மொராக்கோ எழுத்தாளர்  தகர் பென் ஜெலுன் எழுதிய ஃபிரஞ்ச் நாவலான This Blinding Absence of Light ..இதுதான் என் ஆன்மீக பார்வையை உருவாக்கிய நாவல் எனலாம்..



தமிழ் நாட்டைப்போல இலக்கிய அறிவு இல்லாத இடம் உலகிலேயே இருக்காது என நினைத்தேன்...அதை மாற்றிய நாடுகள் துருக்கியும் தாய்லாந்தும்... நம் வாசிப்புகூட அங்கு இல்லை... அந்த எழுத்தாளர்களை ஒப்பிட்டால் நம் ஊரில் இருக்கும் சில எழுத்தாளர்களை கோயில் கட்டி கும்பிடலாம்..

சௌதி அரேபியாவில் அப்துல் ரஹ்மான் முன்ஃப் என ஒரு எழுத்தாளர் இருந்தார்.. அவர் கருத்துகள் பிடிக்காத அரசு அவரை நாடு கடத்தியது.. அங்கே அந்த அளவுக்கு எழுத்தாளர்களை குறித்த சென்சிப்லிட்டி இருக்கிறது... நம் ஊரில் எழுத்தாளனை யாரும் கவனிப்பதில்லை....பிற்காலத்தில் அவரை மீண்டும் அழைத்தார்கள்>. அவர் போகவில்லை..



இங்கே பல பிரச்சனைகளுக்கு மத்தியில்தான் எழுத வேண்டி இருக்கிறது..

ஷேக்ஸ்பியர் நாடகத்தில் கண் இழந்த நிலையிலும் எழுகின்ற இன்னிசை குறித்த காட்சி வருமே... அதுதான் ஊக்கசக்தியாக இருக்கிறது...

எழுத்துக்கு ஒருவித தீவிர, தேவை.  நான் அந்த காலத்தில் அடிக்கடி தருமு சிவராமுவை சந்திப்பது வழக்கம். ஒன்றாக தேனீர் அருந்துவோம். ஒரு முறை நான் அவர் கவிதையை குறை கூறியிருப்பது வருத்தம் அளிப்பதாக சொல்லி டீ அருந்த மறுத்தார்... உங்கள் கவிதை எனக்கு மிகவும் பிடிக்குமே.. நான் குறை சொல்லவில்லையே என்றேன்.. அதன் பின் வீட்டுக்கு அழைத்து சென்றார். என் கட்டுரை வந்த பத்திரிக்கையை எடுத்து பார்த்த பின்பே சமாதானம் ஆனார். அந்த அளவுக்கு தீவிரமாக இருந்தவர் அவர்...

கொரில்லா படைபோல எழுத்தாளர்களும் வாசகர்களும் செயல்பட வேண்டிய சூழல்தான் இங்கு இருக்கிறது..

டீவி பார்ப்பதை குறைத்தால் படிக்க நேரம் கிடைக்கும். படியுங்கள்...

இவ்வாறு சாரு பேசினார்...

சாருவின் துணிச்சலுக்கு தான் எப்பவும் ரசிகர் என்றார் அழகிய சிங்கர்

அடிக்கடி சாருவை வைத்து கூட்டம் நடத்தும் அளவுக்கு கூட்டம் வெகு சிறப்பாக நடந்ததாக அமைப்பாளர்கள் கூறி நிகழ்ச்சியை நிறைவு செய்தனர்...








Monday, May 25, 2015

பாலுமகேந்திரா முன்பு அழுதேன் - சாரு நிவேதிதா உருக்கமான பேச்சு






தமிழ் ஸ்டுடியோ அமைப்பு சார்பாக ’ பாலு மகேந்திரா விருது “ வழக்கும் விழா 24.05.2015ல் , கோடம்பாக்கத்தில் இருக்கும் BOFTA கல்லூரியில் நடந்தது.,.. காலை 10 மணிக்கு ஆரம்பித்த விழா இரவு பத்து மணி வரை நடந்தது... பாலு மகேந்திராவின் தலைமுறைகள் திரைப்படம் , 16 குறும்படங்கள் திரையிடப்பட்டன... நல்ல அருமையான ஏசி மற்றும் ஒலி ஒளி வசதியுடன் கூடிய திரையரங்கில் அரங்கு நிறைந்த பார்வையாளர்களுடன் சினிமா பார்த்தது நல்ல அனுபவம்.. நாசர் உட்பட ஏராளமான ஆளுமைகள் , ரசிகர்கள் கலந்து கொண்டு ஒரு மாநாடு போல விழா நடந்தது




பாலுவின் தலைமுறைகள் படத்தை படம் வந்தபோது பார்த்து நான் எழுதிய குறிப்பு இதில்... தலைமுறைகள் - பிச்சையின் பார்வையில்..




மாலை ஆறு மணிக்கு விருது வழங்கும் நிகழ்ச்சிகள் துவங்கின...
பீ.லெனின் மாலன், சாரு நிவேதிதா , லீனா மணிமேகலை, கார்த்திக் சுப்புராஜ்,கோ.தனஞ்செயன் , அருண் ஆகியோர் பேசினர்...



-_______________________________________




குறும்படம் எனும் தனி வகை  - கார்த்திக் சுப்புராஜ்




அருணை எனக்கு அந்த காலத்திலியே தெரியும்.. குறும்படங்கள் குறித்து அவருடன் நிறைய பேசி இருக்கிறேன். அவருக்கு ஒரு உலக குறும்பட சீடியை அந்த காலத்தில் கொடுத்தேன்.. குறும்படம் என்பது தனியான ஒரு வகை. அது வணிக சினிமாவின் சுருக்கப்பட்ட வடிவம் அல்ல... நாளைய இயக்குனர் நிகழ்ச்சிக்காக குறும் படம் எடுத்தபோது கூட அதை ஆர்வத்துடன் செய்தேன். தயாளரிப்பாளரை பிடிக்க வேண்டும் என்பது என் நோக்கமாக இருந்தது இல்லை... குறும்ப்டங்களுக்கு என தனியான ஒரு சந்தையை உருவாக்கி பல குறும்பட இயக்குனர்களை ஊக்குவிக்க ஓர் அமைப்பை உருவாக்கி இருக்கிறேன். அடுத்து பல முக்கியமான ஆளுமைகள் பேச இருப்பதால் இத்துடன் முடித்துக்கொள்கிறேன்.




_______________________________




சிறுபத்திரிக்கை போல குறும்படம் -மாலன்



நிகழ்ச்சிக்கு குறித்த நேரத்துக்கு முன்பே வந்து விட்டேன்.. அமைதியாக தனிமையாக அமர்ந்து வானத்தை கவனித்துக்கொண்டு இருந்தேன். நீலம் , சாம்பல் நிறம் , சிவப்பு , கருப்பு என அதன் நிற மாற்றத்தை ரசித்தேன். இப்படி வானத்தை ரசித்து வெகு நாட்கள் ஆகி விட்டன. சமீபத்தில் தனஞ்செயனின் புத்தகம் படித்தேன். மிகவும் பிடித்திருந்தது. அவரிடம் பாராட்டை சொன்னேன். இந்த இரண்டு அனுபவங்களுக்காகவும் தமிழ் ஸ்டுடியோவுக்கு நன்றி. அந்த காலத்தில் எல்லாம் குறும்படங்கள் பார்ப்பது எல்லாம் சாத்தியம் இல்லாமல் இருந்தது. எங்கோ ஒரு சில இடங்களில் கிடைக்கும் வாய்ப்பை தேடிச்சென்று பயன்படுத்துவோம், நாங்கள் ஒரு குறும்படம் எடுக்க முயன்றோம். அதில் பல சவால்களை சந்தித்தோம் .காரண்ம் அன்று உரிய வசதிகள் இல்லை, இன்று வசதிகள் உள்ளன, அதை சரியாக பயன்படுத்திக்கொள்ள வேண்டுமானால் நிறைய வாசியுங்கள். பாலு மகேந்திராவை ஓர் இயக்குனராக உங்களுக்கு தெரியும். அவரை ஒரு நல்ல வாசகனாக எனக்கு தெரியும். நல்ல வாசிப்பாளர் அவர். நாங்கள் புத்தகங்கள் குறித்தே அதிகம் பேசுவோம். சிறு பத்திரிக்கை இயக்கம் போல குறும்படங்கள் தனி இடம் பிடிக்க வேண்டும்







-__________________________________




பாலுவுக்கு நிகர் பாலு மட்டுமே - லீனா மணிமேகலை



பாலு மகேந்திராவை நான் அப்பா என்றுதான் அழைப்பேன், எனக்கு அவர் அப்பா போன்றவர். நான் முதன் முதலில் என் படத்தை திரையிட்டபோது அவரை உரிமையுடன் அழைத்தேன்.. அவரும் ஆர்வமாக வந்தார், என் எல்லா திரையிடல்களுக்கும் அவர் வந்து இருக்கிறார். அவருக்கு நிகராக இனி ஒருவர் வர முடியாது, அவர் நம்மை விட்டு மறைந்தது பெரிய வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளது. இலக்கியத்துக்கும் சினிமாவுக்கும் இடையேயான இடைவெளி இப்போது குறைந்து வருகிறது. இன்னமும் கூட நாம் எடுக்கும் படங்களை திரையிட உரிய ஸ்பேஸ் கிடைப்பதில்லை. இது மாற வேண்டும். போட்டிக்கு வந்த படங்களை பார்த்தேன்,. பல நன்றாக இருந்தன. படம் எடுப்பவர்கள் ஒலி அன்ற அம்சத்தில் கவனம் செலுத்த வேண்டும். என் படத்தை பார்த்த ஒரு பிரபல ஆளுமை எனக்கு ஒரு மெயில் அனுப்பினார்.. அது எனக்கு மிகப்பெரிய வெளிச்சம் அளித்தது.. ஷூட்டிங் செல்லும்போது கேமரா இல்லாமல் செல்வது எவ்வளவு அபத்தமோ அதே போன்ற அபத்தம்தான் சவுண்ட் எஞ்சினியர் இல்லாமல் செல்வதும் என சொல்லி இருந்தார். ஒலி அம்சம் மிகவும் முக்கியம்




-______________________________________________




என்னை வென்ற மணி ரத்னம் - சாரு நிவேதிதா



என்னை எழுதச்சொன்னால் எழுதி விடுவேன். ஆனால் பேச எனக்கு எப்பவுமே தயக்கம் உண்டு. நான் மனதில் பட்டதை பேசி விடுவேன், இதனால் யாராவது புண்பட்டு என்னை ஜென்ம விரோதியாக நினைக்க ஆரம்பித்து விடுவார்கள். எழுத்திலும் என்னிடம் ஒளிவு ம்றைவு இல்லை. மது அருந்தியபோது நான் அதை மறைத்தது இல்லை. எந்த பாரில் அருந்தினேன் என்பது உட்பட விரிவாக எழுதுவேன்,. இதை பலர் திட்டினர். இப்போது குடியை விட்டுவிட்டு மகாத்மா காந்திபோல வாழ்கிறேன். இதைப்பற்றி யாரும் பேசுவதில்லை.




என்னை பெரும்பாலும் யாரும் பேச அழைப்பதில்லை. காரணம் என்னை அழைத்தால் வேறு சிலரின் பகை வந்து சேரும். சாருவை சும்மா ஃபார்மலாக அழைத்தோம். மற்றபடி அவருக்கும் எங்களுக்கும் சம்பந்தம் இல்லை என சொல்லி தப்பித்துக்கொள்ளுமாறு அமைப்பாளர்களை கேட்டுக்கொள்கிறேன் ( அரங்கில் பலத்த சிரிப்பு )







எனது சக பயணிகள் என நினைக்கும் இருவரை சமீபத்தில் ஒரு விழாவில் சந்தித்தேன்.. ஆர்வமாக கைகுலுக்க சென்றேன், ஆனால் என் கைகளை அவர் தட்டிவிட்டு வெறுப்பாக முகத்தை திருப்பிக்கொண்டனர். அந்த அளவுக்கு என்னை வெறுக்கிறார்கள்.




இதனால்தான் நான் மனிதர்களை விட மரங்கள் , விலங்குகளுடன் பேசுவதில் ஆர்வம் காட்டுகிறேன். பாலு மகேந்திராவும் இப்படிதான், ஒருவகையில் பாலு மகேந்திராதான் நான். அவருக்கும் எனக்கும் பல ஆண்டுகள் பழக்கம் உண்டு. ஆனால் அவர் படங்கள எதையும் நான் பார்த்தது இல்லை. வீடு , சங்தியாராகம் பார்த்து விட்டீர்களா என அடிக்கடி என்னை கேட்பார் , நான் இல்லை என்பேன். காரணம் இது போன்ற மாற்று படங்கள் மீது எனக்கு பயங்கர ஒவ்வாமை உண்டு.




துப்பாக்கி , கத்தி போன்ற படங்கள் மீது எனக்கு எந்த வருத்தமும் இல்லை. ஆனால் மாற்றுப்படங்கள் என்ற பெயரில் வரும் படங்கள் மீது எனக்கு பயங்கர ஒவ்வாமை உண்டு.




ஒரு காமன்மேனுக்கு இருக்கும் சென்சிபிள் கூட இவர்களுக்கு இருப்பதில்லை. சென்சிபிள் என எதை சொல்கிறேன். சிலர் திரையரங்கில் அமர்ந்தவாறு சத்தம்போட்டு செல்போனில் பேசுவார்கள். காரணம் இந்த நுண் உணர்வு இன்மை. உலக சினிமாக்கள் பார்க்காமல் , எந்த இலக்கிய வாசிப்பும் இல்லாமல் இவர்கள் எடுக்கும் படத்தில் சென்சிபிலிட்டி இருப்பது இல்லை, எனவே இவர்களைக்கண்டாலே எனக்கு பயம்.

எனவேதான் பாலுவின் படங்களை நான் பார்த்தது இல்லை.




முதல் முறையாக நான் பார்த்தது அவரது தலைமுறைகள் படம்தான்.. பார்த்துக்கொண்டிருந்தபோதே அவர் மேதைமையை அறிந்தேன். என்ன ஒரு கலைஞன் என நினைத்துக்கொண்டேன். இத்தனை நாள் இவரை தெரிந்துகொள்ளாமல் போனேனே என வருத்தப்பட்டேன்




மிக அழகான , மிக விலை உயர்ந்த மலர்க்கொத்துடன் அவரை சந்திக்க போனேன். அதை அவர் கையில் கொடுத்தும் ஏன் இவ்வளவு காஸ்ட்லியான மலர்க்கொத்து என ஆச்சர்யப்பட்டார். என்னால் எதுவும் பேச முடியவில்லை. அவர் முன்னால் வெறுமனே அழுது கொண்டே இருந்தேன்.




எப்பேர்ப்பட்ட கலைஞன் அவர். அதன் பின் அவர் படங்களை பார்த்தேன். அவர் படங்களை தாமதாக தெரிந்து கொண்டது எனக்குத்தான் நஷ்டம். அவருக்கு ஒன்றும் இல்லை.




தலைமுறைகள் படத்தை அவர் பாராட்டினாரா இவர் பாராட்டினாரோ என சிலர் பெயர்களை சொல்லி கேட்டேன்.. இல்லை என்றார். பாலச்சந்தர் எழுதிய கடிதம் மட்டும் காட்டினார். மிகச்சிறந்த பாராட்டுக்கடிதம்.




உங்கள் படங்களை பாலுவிடம் இருந்து கற்றுக்கொள்ளுங்கள். தமிழ் அல்லது ஹாலிவுட் சினிமாவில் இருந்து கற்றுக்கொள்ளாதீர்கள் .  ஐரோப்பிய சினிமா பாருங்கள். உங்கள் மீது எனக்கு இருக்கும் வெறுப்பை மாற்றுங்கள்







எனக்கு மணி ரத்னம் மேல் சின்ன கோபம் இருந்தது,,,ஓ காதல் கண்மணி படத்தை திட்டுவதற்காகவே அந்த படத்தை பார்க்க போனேன்.. ஆனால் அந்த படம் என்னை வென்று விட்டது. எனக்கு மிக மிக பிடித்து இருந்தது. அது போல உங்கள் படங்களால் என்னை வெல்லுங்கள்>




என்னை திருப்திப்படுத்தும் அளவுக்கு படம் எடுக்க முடியாது என சிலர் சொல்லலாம். ஆனால் என்னை திருப்திப்படுத்திய படங்கள் , இயக்குனர்கள் என நூறுக்கு மேல் என்னால் சொல்ல முடியும்...




போட்டிக்கான படங்களை பார்த்துவிட்டு பெஸ்ட் என நான்கு படங்களை பட்டியலிட்டேன். பார்த்தால் அதே படங்களைத்தான் மற்ற நடுவர்களும் தேர்ந்தெடுத்து இருந்தனர்.




நல்ல படம் என ஒன்று இருக்கிறது , அதை ரசிக்கவும் , அதை எடுக்கவும் சென்சிபிலிட்டி தேவை.... அதற்கு வாசிப்பும் , சினிமா பார்த்தலும் உதவும்




-______________




இதன் பின் லெனின் பேசினார். சாரு புத்தகங்களை படித்தாலே போதும் , நிறைய தெரிந்து கொள்ளலாம் என்றார். ஐரோப்பிய சினிமா பார்ப்பதன் அவசியம் , இலக்கிய வாசிப்பு என பலவற்றை தனக்கே உரித்தான முறையில் அழகாக சொன்னார். நேத்து ராத்திரி , அம்மா பாடலில் இருக்கும் ராகத்தை சொன்னது அழகாக இருந்தது.. தன் பாணியில் ஒரு பாட்டு பாடி பேச்சை முடித்தார் அவர்




பிறகு பரிசளிப்பு விழா நடந்தது

Friday, January 30, 2015

இந்த நூற்றாண்டின் மிகச்சிறந்த கதை சொல்லி யார்/? - ஜ்யோவ்ராம் சுந்தருடன் ஓர் உரையாடல்


எக்சைல் போன்ற நூல்களை படித்தால் போதாது... விவாதித்து புரிந்து கொள்வது முக்கியம்.. அந்த வகையில் ,  நண்பர் ஜ்யோவ்ராம் சுந்தருடன் பேசினேன்.. அவருடன் பேசுவது எப்போதுமே சுவையான அனுபவம் ஆகும்.  தமிழில் இணையத்தில் எழுத ஆரம்பித்த முன்னோடிகளில் அவரும் ஒருவர்.. ஆழ்ந்த வாசிப்பாளர். ஆனால் அந்த பந்தா எதுவும் இல்லாமல் பேசக்கூடியவர்

-_____________________________________________

எக்சைல் படித்து விட்டீர்களா.. உங்கள் பார்வை என்ன


படித்தது மட்டும் அல்ல ... பலர்க்கு வாங்கியும் கொடுத்தேன். இந்த நாவலில் பல வகை இலக்கிய வகைகளை கட்டவிழ்த்துள்ளார் சாரு. போர்னோ , ஆன்மீகம் என எதையும் உன்னதப்படுத்தாமல் அவற்றை கட்டவிழ்த்துள்ளார்.. மரம் பற்றிய காட்சி , போனில் பேசியபடி செக்சில் ஈடுபடும் காட்சி , ஆன்மீகம் என பல வகைமைகளை தொட்டுள்ளார்.

புதிதாக வாசிக்க ஆரம்பிக்கும் ஒருவனுக்கு இந்த நாவல் மிகப்பெரிய திறப்பாக அமையும் என கருதுகிறேன். தமிழில் எழுதப்பட்ட முக்கிய நாவல்களீல் ஒன்று என்பதை உறுதியாக சொல்வேன்.

 நல்ல வடிவமைப்பில் புத்தகம் வந்துள்ளது. தற்போது முன்னூறு பக்கம் கொண்ட நாவல் ஒன்றை படிக்கிறேன்.. ஆயிரம் பக்கங்கள் கொண்ட எக்சைல் இதை விட எடை குறைவு.. அந்த அளவுக்கு தரமான பேப்பர்.

ஆனால் சாருவின் பழைய நாவல்களை படித்தோருக்கு ஒருவேளை போரடிப்பது போல தோன்றலாம்.. இதுதான் மைனஸ்

ஆனால் எக்சைலை ஒரு பிரதியாக மதிப்பிட்டால் மிக மிக முக்கியமான படைப்பு என்பதில் ஐயம் இல்லை

இதைப்பற்றி விரிவாக நீங்கள் எழுதி இருக்கலாமே ...ஏன் எழுதவில்லை/?

சாருவின் நூல்கள் மிகவும் நுட்பமானவை.. ஒரு முறை படித்து விட்டெல்லாம் எழுதக்கூடாது ..  சீரோ டிகிரியெல்லாம் படிக்க படிக்கத்தான் அதன் நுட்பம் புலப்படும்.

ஒரு என்பதே வராமல் ( ஒரே ஓர் இடம் தவிர ) சீரோ டிகிரி எழுதி இருப்பார்.. அதைத்தவிர வேறு எத்தனையோ நுட்பங்கள் அதில் உண்டு. எண்கள் வரும்போது ஒன்பது என கூட்டுத்தொகை வருமாறு எழுதி இருப்பார். அதைப்பற்றி கேட்டால் அவர் ஒரு காரணம் சொல்வார்.

ஆனால் நாம் யோசிக்கும்போது அதில் பல அர்த்தங்கள் நமக்கு கிடைக்கும். ஒன்பது என்பதை நம்மில் சிலர் ஒதுக்கப்பட்ட எண்ணாக கருதுகிறோம். அப்படி ஒவ்வொரு துறையிலும்  ஒதுக்கப்பட்டோர் , நலிவடைந்தோர் , விளிம்பு நிலை மக்களின் வலியை ரெப்ரசண்ட் செய்வதாக எடுத்துக்கொள்ளலாம்.

இப்படி சாருவின் எழுத்துகள் ஒவ்வொரு வரியாக கான்சியசாக பிரஞ்ஞைபூர்வமாக உருவாக்கப்படுகின்றன. அதை புரிந்து கொள்ள தேடல் தேவை.

எக்சைலில் மரத்தைப்பற்றி எழுதி இருப்பார். அப்படியே கதறி விடலாம்போல தோன்றும். அந்த அளவுக்கு உணர்வு பூர்வமாக இருக்கும்.  நாம் சின்ன வயதில்  நாய்களுடன் விளையாடி இருப்போம் . பேசி இருப்போம். ஆனால் காலப்போக்கில் அந்த சென்சிட்டிவிட்டியை இழந்து விடுவோம். ஆனால் சாரு இப்பவும் மரத்துடம் பேசுவது எல்லாம்...... என்னால் இதை எல்லாம் சொல்ல முடியவில்லை... வார்த்தைகளுக்கு அப்பாற்பட்ட உணர்வு


நீங்கள் இப்படி உருகுகிறீர்கள். ஆனால் சாருவின் எழுத்து ஒரே மாதிரியாக இருப்பதாக...

ஷட் அப்...இப்படி எல்லாம் பேசினால் இனி உங்களுடன் பேச மாட்டேன்

சாரி.. நான் அப்படி கருதவில்லை.. நானும் சாரு ரசிகன்தான்..சிலர் இப்படி கேட்கிறார்களே என்பதையே சொல்ல வந்தேன். சாரு வழக்கமான கதை வடிவில் கதை சொல்வதில்லை..அவருக்கு அந்த திறன் இல்லை என சிலர் சொல்கிறார்களே.

நான்சென்ஸ். சொல்பவன் ஆயிரம் சொல்லலாம்.. அதை எல்லாம் பெரிதாக பேசலாமா... சாருவின் கதைகளை முதலில் படிக்க சொல்லுங்கள். அவர் எல்லா வகையும் எழுதி இருக்கிறார். வழக்கமான நேர்க்கோட்டு பாணியில் ஆரம்பம் நடு முடிவு என்ற பாணியில் இலக்கணத்துக்கு உட்பட்ட கதைகள் பலவும் படைத்துள்ளார்.

இந்த நூற்றாண்டின் மிக சிறந்த கதை சொல்லி என ஓர் புகழ்பெற்ற இடது சாரி சிந்தனையாளரே ஒப்புக்கொண்டுள்ளார். என்ன ஒன்று. இப்போது அப்படி சொன்னதை மறுக்ககூடும். அதை சாருவேகூட மறந்து இருக்கலாம்

ஆனால் நீங்களேகூட சாருவை சில நேரங்களில் திட்டி இருக்கிறீர்களே.


ஆமாம்.. நெருக்கம் இருக்கும் இடத்தில்தானே உரிமையும் , சண்டையும் வரும். ஜெயமோகனிடம் பேசி இருக்கிறேன்.. வணக்கம் சார் என பேச ஆரம்பித்தேன். சாருவை அப்படி ஒரு போதும் அழைத்ததில்லை..எப்போதும் பேர் சொல்லியே அழைப்பேன். அவர் மீதான அன்பு எப்பவும் குறையாது

ஏன் அந்த அளவு நேசிக்கிறீர்கள்



எனக்கு ப்யூகோவ்ஸ்கியை அறிமுகம் செய்தது அவர்தான்.  எனக்குப் பிடித்த கவிஞர்களான நகுலன், விக்ரமாதித்யன் அளவிற்கு ப்யூக்கையும் பிடிக்கும்.  ப்யுக் மட்டுமல்ல, ழார் பத்தேலையும் அவர்தான் அறிமுகம் செய்தார். அவர் சொல்லித்தான்  எனக்கு நேக்கட் லஞ்ச் தெரியும்.என்னுடைய இலக்கிய ஆசான் என்று அவரையே சொல்ல இயலும்.
அந்த காலத்தில் திருவண்ணாமலையில் விழா நடத்தி ஒரு நூல் வெளியிட்டனர். அதில் பல எழுத்தாளர் கதைகள் வெளியாகின. ஆனால் அதில் விஞ்சி நின்றது சாரு மொழி பெயர்த்த  (ஆர்த்துரே பியேட்ரியின் ) மழை எனும் கதைதான். இந்த நிகழ்ச்சியை சாருவே மறந்திருப்பார் என்பதுதான் இதில் இருக்கும் சுவாரஸ்யம்.

தமிழ் உலகில் யாருக்கும் தெரியாத பல எழுத்தாளர்களை அறிமுகம் செய்தவர் சாரு. அவர் பரிந்துரைக்கும் எழுத்தாளர்கள் பலரை நம்மால் படிக்க இயலாது.. அந்த அளவுக்கு கடினமாக இருக்கும்.. ஆனால் அவர்களின் அந்த சாரத்தை , கடினத்தன்மையை நீக்கி விட்டு நமக்கு அறிமுகம் செய்பவர் சாரு மட்டுமே..

அவரை விட எந்த சமகால எழுத்தாளராவது ஒரு சதவிகிதம் கூடுதல் சிறப்பாக எழுதுவதாக நிரூபித்தால் நான் வாசிப்பையே விட்டுவிட தயார். நானெல்லாம் பல ஆண்டுகளாக எல்லாவற்றையும் வாசித்து வருகிறேன். அந்த அனுபவத்தில் சொல்கிறேன். சாருவுக்கு நிகர் சாரு மட்டுமே.. ஆனால் சிலர் அவரை வேண்டுமென்றே மட்டம் தட்டுகின்றனர்.

சீரோ டிகிரி , ராசலீலா , எக்சைல் - ஒப்பிடுக


சீரோ டிகிரி சந்தேகம் இல்லாமல் ஆல் டைம் பெஸ்ட். அதை மிஞ்சிய படைப்பு இனி யாராலும் படைக்க முடியாது

ராசலீலா சுவையான நாவல்.. புதிதாக படிக்க வருவோர்க்கு நான் இதை கண்டிப்பாக பரிந்துரைப்பேன். முக்கியமான நாவல்

எக்சைல் சற்று கடினமான நாவல்.. நம் உழைப்பை கோரும் நாவல். படிக்க படிக்கத்தான் இதன் நுட்பங்கள் புலப்படும்

ஆனால் பழைய எக்சைலில் இந்த பிரச்சனை இல்லை.. சுவாரஸ்யத்தை நோக்கமாக கொண்டு படைக்கப்பட்டது அது.. ஆனால் புதிய எக்சைல் படிக்க முனைப்பு தேவை.

இதன் குறை என எதை சொல்வீர்கள்

ஒரு வரலாற்று சிறப்பு மிக்க நாவலை ப்ரூஃப் பார்க்கிறோம் என்ற கவனத்தோடு பிழை திருத்துவோர் செயல்பட்டு இருக்கலாம் என கருதுகிறேன்..


Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா