Monday, May 6, 2013

நன்றி மறந்த பிச்சைக்கார நாய் !!


இன்று ஒரு முக்கியமான மீட்டிங் இருந்தது. எல்லாம் பக்கவாக ரெடி செய்து வைத்து இருந்தேன்

தாம்பரம் பை பாஸ் வழியாக இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டு இருந்தேன்.  11.30க்கு ஸ்பாட்டில் இருக்க வேண்டும்

அக்னி நட்சத்திரம் என்றாலும் கூட வானில் மேகங்கள் சூழ்ந்து இருந்தன, குளிர் காற்று வீசியது,  கோடை கால அனுகூலகங்களான பத நீர் ,  மாம்பழம் போன்றவற்றையும் அனுபவித்து கொண்டு , வெயிலில் இருந்தும் தப்பிக்க முடிந்தால் நன்றாக இருக்குமே என நினைத்தவாறு சென்று கொண்டு இருந்தேன்.

திடீரென இஞ்சின் திணறுவதை உணர்ந்தேன். ம்ம்.. பெட்ரோல் காலி ஆகி விட்டது. சரி, ரிசர்வில் போடலாம் என கையை கொண்டு சென்றவன் , அதிர்ச்சியானேன்.

வண்டி ஏற்கனவே ரிசர்வில்தான் ஓடிக் கொண்டு இருக்கிறது. எப்படியோ கவனிக்காமல் விட்டு இருக்கிறேன்.

அட பிச்சைகார நாயே என என்னையே திட்டி கொண்டு , அடுத்து செய்ய வேண்டியதை யோசித்தேன்.

பக்கத்தில் பெட்ரொல் பங்க் ஏதும் இல்லை. யார் வண்டியிலாவது சென்று பெட்ரொல் வாங்கி ஊற்றலாம்.  ஆனால் லேட் ஆகி விடும்.

வண்டியை தள்ளி கொண்டு போனாலும் லேட் ஆகி விடும்.

ம்ம்ம்..சரி.எத்தனையோ தோல்விகளைகளை சந்திக்கிறோம். இன்றும் ஒரு தோல்வி. இருந்து விட்டு போகட்டும் என மனதை சமாதானம் செய்து கொண்டேன்.

அப்போது எதிர் திசையில் சென்ற பைக்கில் சென்று கொண்டு இருந்த ஒருவர், வண்டியை நிறுத்து  அவராகவே என்னிடம் வந்தார்.

என்ன பிராப்ளம் என்றார். சொன்னேன்

பைக்கில் ஏறி உட்காருங்க என்றார்.

நான் உதவி ஏதும் கேட்காமல் அவராகவே உதவுகிறாரே ..ஆச்சர்யமாக இருந்தது.

என் பைக்கில் நான் ஏறி உட்கார , அவர் பைக்கை என் பின்னால் ஓட்டியவாறு , என் பைக்கை லாகவாகமாக ஒரு காலால் தள்ளியபடி அழைத்து சென்றார்.

 கிட்டத்தட்ட 15 கிமீ இபப்டி சென்று பெட்ரோல் பங்க் வந்து விட்டார்.


வரும் வழி முழுதும் அவர் உதவியை நினைத்து ஆச்சர்யப்பட்டபடி இருந்தேன்,

காலத்தினால் அவர் செய்த உதவி என்னை பொறுத்தவரை மிக பெரிய உதவி. இந்த நன்றியை அவரிடம் ஏதோ ஒரு விதத்தில் சொல்ல வேண்டும் என நினைத்தேன்.

இது  ஒரு ட்ரிக்கி சிச்சுவேஷன்.  ஓர் உதவி இருவர் பார்வையிலும் பெரிய உதவியாக இருந்தால் நன்றி சொல்வது எளிது

ஆனால் உதவி பெற்றவர் பார்வையில் மட்டும் அது பெரிதாக இருந்தால் , அதை வெளிப்படுத்துவது கஷ்டம்.

சார்..இதோ பெட்ரொல் பங்க்என சொல்லி விட்டு , என் பதிலைக்கூட எதிர்பார்க்காமல் பறந்து விட்டார் அவர்.

குரல் எழுப்பி , கைதட்டி அழைத்து பார்த்தேன்.

   பயனில்லை..சென்று விட்டார்.

அவர் இல்லாவிட்டால் , இன்று மீட்டிங்கை தவற விட்டு இருப்பேன்.. அவர் செய்தது பேருதவி

நன்றி கூட சொல்லாமல் போய் விட்டோமே என மிக மிக வருந்தினேன்.


இதை பதிவிடுதன் மூலம் அந்த வருத்தத்தை குறைக்க முயல்கிறேன்.

***********************************************************

இயேசு சம்பந்தப்பட்ட இரு படங்கள் பற்றி எழுதினேன் அல்லவா.. இதன் தொடர்ச்சியாக , தேடலை தொடர்ந்தபோது , பல விசித்திரமான சுவையான தகவல்கள் கிடைத்தன.

இயேசுவின் சீடர்கள் அவரது போதனைகள் பற்றியும் அவர் வாழ்க்கை பற்றியும் எழுதியது பைபிளில் உள்ளது.

ஆனால் சில சீடர்கள் எழுதியது அதில் இல்லை.. ஏன் இல்லை..அவர்கள் எழுதவே இல்லையா அல்லது எழுதியும் மறைக்கப்பட்டதா என்பது மர்மமான ஒன்று.

ஆனால் சில சீடர்கள் எழுதிய , பைபிளில் இடம் பெறாத சுவிசேஷங்கள் , ஆங்காங்கு புழக்கத்தில் உள்ளன. மறை ஞானமாக திகழ்கின்றன.

இவற்றில் சில ஆங்கிலத்தில் புத்தகமாக வந்துள்ளன. படித்து பார்த்தேன். அற்புதம், தங்க சுரங்கம் என்பேன்.

இயேசுவின் சீடர் யூதாசும்கூட சுவிசேஷம் எழுதி இருக்கிறார். ஞான புதையல் போல இருக்கிறது.

ஆனால் தமிழில் வந்ததாக தெரியவில்லை.

இவை கிறிஸ்துவ திருச்சபையால் அங்கீகரிக்கப்படவில்லை என்பதால் , இவற்றின் தமிழ் வடிவை வெளியிட தயக்கமாக இருக்கிறது.


எனவே நீங்களே முடிவு செய்யுங்கள். கவனத்துக்கு வராத பைபிளை நான் நெட்டில் வெளியிடலாமா , வேண்டாமா.

பின்னூட்டத்திலோ , மெயிலிலோ , கருத்து கணிப்பிலோ சொல்லுங்கள்12 comments:

 1. தாராளமாக வெளியிடுங்கள், அஞ்ஞான சுவிசேசங்கள் பற்றி பதிவர் தருமி, சார்வாகன் உட்பட பலரும் எழுதியுள்ளனர் வாசிக்க.. !!!

  ReplyDelete
 2. சலாம் சகோ

  இந்த சுவிசேஷங்கள் கிறிஸ்தவ சபையால் கூட அங்கீகரிக்கபடவில்லை என்றால் அதன் தகுதி உங்களுக்கு புரிந்திருக்க வேண்டும்.

  பைபிளே எல்லாம் வல்ல இறைவனின் வேதம் அல்ல. அப்படி இருக்கும் போது சுவிசேஷங்கள் எப்படி சிறப்பானதாகும். இது போன்ற அர்த்தமற்ற உளறல்களை வெளியிடாதீர்கள்.

  அல் குரான் பற்றி எவ்வளவு எழுதலாம். அள்ள அள்ள குறைவில்லாத செல்வம். அது பற்றி நீங்கள் எவ்வளவு எழுதலாம்.

  அதைவிட்டு இந்த உளறல்களை வெளியிட்டு உங்கள் ஈமானை குறைத்து கொள்ளாதீர்கள்.

  அப்துல் ஜபார்

  ReplyDelete
 3. //எனவே நீங்களே முடிவு செய்யுங்கள். கவனத்துக்கு வராத பைபிளை நான் நெட்டில் வெளியிடலாமா , வேண்டாமா.// அதெல்லாம் ஏற்கனவே இணையத்தில் உள்ளது. இந்த புத்தகங்களை தள்ளுபடி ஆகமங்கள் என்பார்கள். இவை உண்மையிலேயே இயேசுவின் சீடர்களால் எழுதப்பட்டது என்பதற்கு தகுந்த ஆதாரங்கள் இல்லை. மேலும் இவற்றில் தகவல் பிழைகளும் உண்டு.

  http://carm.org/why-apocrypha-not-in-bible


  ReplyDelete
  Replies
  1. தாராளமாக வெளியிடலாம்... சகிப்பு தன்மை இல்லாதவன் கிறிஸ்தவனாக இருக்க முடியாது... நல்லது கெட்டது தெரியத்தான் நன்மை தீமை அறியத்தக்க கனியை தேவன் தோட்டத்தில் வைத்தார்.. அது போல்தான் இதுவும்.. எல்லாவற்றையும் தெரிந்து கொள்வதில் த்வறேதும் இல்லையே தோழா....

   Delete
 4. "நானும் பச்சைக் கொடி காட்டி விட்டேன். நானும் கிறிஸ்தவன்தான். வெளியிடப்படாத சுவிசேஷகங்களின் தமிழ் பதிப்பை ஆவலுடன் உங்களிடமிருந்து எதிர்பார்க்கிறேன்.
  கண்டிப்பாக கிறிஸ்தவர்கள் எதிர்க்க மாட்டார்கள். அதற்கு நான் உத்தரவாதம் தருகிறேன்.

  ReplyDelete
 5. நண்பரே . நீங்கள் சுட்டிய கட்டுரைகளை ஏற்கனவை படித்து விட்டேன் . அவர்கள் சமூக அரசியல் பார்வையில் எழுதியிருக்கிறார்கள்

  ReplyDelete
 6. மேலும் தெரிந்து கொள்ள ஆவல். எழுதுங்களேன்.

  ReplyDelete
 7. @அப்துல் ஜபார்,,, அல் குர் ஆன் அள்ள அள்ள குறையாத செல்வம் என்பதையும் , அதைப் பற்றி ஏராளமாக எழுதலாம் என்பதையும் மறுக்கவில்லை.. ஆனால் குர் ஆன் படிக்கையில் , தேன் குடிக்க போய் ,தேன் கடலுக்குள் விழுந்த ஈயைப்போல உணர்கிறேன். அந்த ஈயிடம் போய் தேன் சுவையைப்பற்றி கேட்டால் என்ன சொல்ல முடியும்... அந்த நிலைதான் என் நிலை.. ஆனாலும் குர் ஆன் வாசிப்பு என்ற இனிய அனுபவத்தை பகிர்ந்து கொள்வது , விவாதிப்பது என்பது இணையத்தை ஆக்க பூர்வமான திசைக்கு கொண்டு செல்லும். மற்றவர்கள் எழுதும் குர் ஆன் கட்டுரைகளை தவறாமல் படித்து வருகிறேன். அந்த அனுபவங்களை விரைவில் பகிர்ந்து கொள்வேன்

  ReplyDelete
 8. @தருமி அய்யா.... உங்களிடம் இருந்து நான் நிறைய தெரிந்து கொண்டு இருக்கிறேன். நீங்கள் எனக்கு கருத்தியல் ரீதியாக எதிர் துருவம் என அறிவேன்,,, விரைவில் ஆக்க பூர்வமான விவாதத்துக்கு தயாராகுங்கள் :)

  ReplyDelete
 9. @ உயிர் நேயம்... @ ராபின்.... வேண்டுமென்றே திரித்து , தவறான வடிவங்களில் நெட்டில் ஆங்கிலத்தில் உள்ளன... உண்மையான வடிவில் படித்து பாருங்கள்... கிறிஸ்துவத்துக்கு விரோதமாக எதுவும் இருக்காது

  ReplyDelete
 10. அன்பின் பிச்சைக் காரன் -

  காலத்தி னாற்செய்த நன்றி சிறிதுஎனினும்
  ஞாலத்தின் மாணப் பெரிது

  நல்வாழ்த்துகள்
  நட்புடன் சீனா

  ReplyDelete
 11. Don't publish.. That might hurt some Christian brothers. Bala.

  ReplyDelete

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா