Monday, February 10, 2014

சாரு அதிரடி - மகாபாரதம் ராமாயணம் எழுத நான் எதற்கு, நான் எழுதப்போவது வேறு


  சாருவை அவ்வப்போது சந்திப்பது வழக்கம் என்றாலும் சில சந்திப்புகள் மறக்க முடியாத சந்திப்புகளாகி விடுவதுண்டு. அப்படி ஒரு முக்கியமான சந்திப்பு சென்ற சனிக்கிழமை நடந்தது..

ஒரு விஷயத்தை நாம் பார்ப்பதற்கும் ஓர் இலக்கியவாதி பார்ப்பதற்கும் வித்தியாசம் உண்டு.. நாளை மற்றும் நாளே , ஜேஜே சில குறிப்புகள் போன்றவற்றையெல்லாம் படித்து அசந்து போன நாட்கள் எல்லாம் உண்டு.. அவை ஏன் மோசமான படைப்புகள் என சாரு சொன்னபின் படித்து பார்த்தபோதுதான் உணர முடிந்தது..

ஓநாய் குலச்சின்னம் நன்றாக எழுதப்பட்ட நாவல்தான்.ஆனால் அதன் நோக்கம் ஆபத்தனாது என்பதை தன் பார்வையில் விளக்கினார்..வீரபாண்டியன் மனைவி ஏன் படிக்க வேண்டிய முக்கியமான நாவல் என்பது பற்றி பேசினார்.

மொழி பெயர்ப்பு , சில மொழி பெயர்ப்பாளர்களின் தவறுகள் , ஷோபா சக்தியின் தங்கரேகை சிறுகதை என இலக்கிய விவாதங்கள் ஓடின என்றால் மற்ற ஜாலியான பேச்சுகளும் ஓடிக்கொண்டு இருந்தன.. நான் ஸ்டாப் சிரிப்பு ,கும்மாளம் என ஒவ்வொரு கணமும் கொண்டாட்டமாக கழிந்தது.. சமீப நாட்களில் நான் இது போல சிரித்ததே இல்லை..

இப்படி இலக்கியத்தரமாக பேசும் அவர் திடீரென குழந்தையாக மாறி என்னுடன் ஹாண்ட் ரெஸ்ட்லிங் மோதிப்பார்க்க தயாரா என சவால் விட்டார்..

குழந்தை , அடல்ட் , பொறுப்புள்ள எழுத்தாளர் என அடுத்தடுத்து காட்சிகள் மாறிக்கொண்டே இருந்தன..

 நான் , கணேசன் அன்பு , நிர்மல் போன்றோர் ஐந்து மணிக்கெல்லாம் போய் விட்டோம். சாருவும் கரக்ட்டாக வந்து விட்டார்.

எதிர்பாராத இனிய வரவாக அமைந்தது லாஸ் ஏஞ்சல்ஸ் ராம் அவர்களின் வருகை..
இவரெல்லாம் இணைய உலகில் ஆதி காலத்தில் இருந்தே இருப்பவர். சினிமா , எழுத்து என பல்துறை விற்பன்னர். அந்த காலத்தில் இருந்தே அவரை ரசித்து வருபவன் நான். சாருவும் இவரும் ஏதோ ஒரு புள்ளியில் இணைந்து இந்த சந்திப்பு நிகழ்ந்தது.. இவரது அனுபவங்கள் ,  பார்வைகள் மிகவும் சுவாரஸ்யமாக இருந்தன.

 நள்ளிரவுவாக்கில் செல்வகுமார் கணேசன் வந்தார். வந்ததும் உடனே சூழலில் தன்னை பொருத்திகொண்டு ஆரோக்கியமான வாதங்களை எடுத்து வைத்தார்.
ஷோபா சக்தியின் தங்க ரேகை குறித்தான இவர் பார்வை சிறப்பாக இருந்தது.

கணேசன் அன்பு ஓநாய் குலச்சின்னம் நாவலின் ஒவ்வொரு வரியையும் நினைவு வைத்து பேசினார்.. சாரு சொல்வதை எதிர்த்து தைரியமாக தன் கருத்துகளை எடுத்து வைத்தார். அவர் சொல்வதை சாருவே கவனித்து கேட்டார். யாரேனும் குறுக்கிட முயன்றால் கூட , அவர் பேசட்டும் என்றார் சாரு..


அவரது அடுத்த படைப்பு குறித்து கேட்டோம்.. எல்லோருக்கும் தெரிந்த மகாபாரத்தை சிலர் அப்படியே மீண்டும் எழுதி எரிச்சல் படுத்துகிறார்களே... நீங்கள் ராமாயணம் எழுதுவீர்களா என்றோம்.

எல்லோருக்கும் தெரிந்தவற்றை எழுத நான் எதற்கு.. யூதாசின் பார்வையில் யூதாஸ் பற்றி எழுதப்போகிறேன். தமிழுக்கு அது புதிதாக இருக்கும்.. யூதாசின் மன ஓட்டம் , வாதைகள் , கனவுகள் , துரோகம் , அன்பு , பக்தி என வேறொரு பார்வை உங்களுக்கு கிடைக்கும் என்றார் சாரு..

யூதாஸ் குறித்து சாரு


( வீரபாண்டியன் மனைவி நாவல் குறித்து , கமல் குறித்து , ஓனாய் குலச்சின்னம் , தருண் தேஜ்பால் குறித்தான விவாதங்கள் அடுத்த பகுதியில் )6 comments:

 1. வணக்கம்
  வித்தியாசமான படைப்புக்கள் வெளிவரட்டும் எம் மொழி தமிழும் வளரட்டும்
  பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
 2. ஒரு படத்துல கவுண்டரு செந்தில "டேய் ..எங்க தில்லானா வாசி".. ம்பாரு.....செந்தில், "ஹே ..ஹே ..இதுல வராதுங்க" -ம்பாரு...அது மாதிரி இருக்குங்க பிச்சக்கார்...

  ReplyDelete
 3. யூதாஸ் குறித்த பேச்சு காணொளியில்
  சாருவின் குரல் ஒலி தெளிவில்லை. ஒலி குறைவாக இருக்கிறது .
  என்ன பேசினார் என தட்டச்சுங்கள் .
  சாரு பேசும் முன் சேர்க்கப் பட்ட இசை

  ReplyDelete
 4. //எல்லோருக்கும் தெரிந்த மகாபாரத்தை சிலர் அப்படியே மீண்டும் எழுதி எரிச்சல் படுத்துகிறார்களே... //

  அப்படியா?...

  ReplyDelete
 5. அடுத்த பதிவிற்காக வெய்டிங்... சீக்கிரம்...

  ReplyDelete
 6. How many writers are required to change a light bulb - Jeyamohan's humourous interview here
  http://www.youtube.com/watch?v=i5g-8Zsk3No

  ReplyDelete

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா