Tuesday, July 5, 2016

தவளையின் சங்கீதம்

மன அமைதிக்காக தியானம் செய்கிறேன் என்றான் சீடன்.. அட கேப் வெண்டை... அமைதியின்மைதான் மனதின் இயல்பு..அதை ஒரு போதும் அமைதியாக்க முடியாது... மனமே இல்லாமல் ஆகும் நிலை என்பது வேறு.. நீ எந்த அளவுக்கு தியானம் செய்ய முயல்கிறாயோ அந்த அளவுக்கு மனம் மென்மேலும் செழித்து வளரும்.. அது இல்லாமல் போகாது என்றார் குரு.
சீடன் கேட்கவில்லை... தியானம் , மூச்சுப்பயிற்சி என தொடர்ந்தான்.
ஓர் அதிகாலை... இனிய காற்று, பறவைகள் சங்கீதம் என லயித்தபடி கண்மூடி அமர்ந்தவாறு தியானம் செய்வதாக நினைத்துக்கொண்டிருந்தவன் ஏதோ சப்தம் கேட்டு கண் விழித்தான்
குரு ஒரு செங்கலை தரையில் தேய்த்துக்கொண்டிருந்தார்
யோவ் குரு நாதா... என்ன செய்கிறீர் என் கத்தினான் சீடன்
செங்கலை தரையில் தேய்த்து கண்ணாடியாக்கப்போகிறேன் என்றார் குரு
உம்மை ஒரு கேப் வெண்டை என ரொம்ப நாள் சந்தேகப்பட்டேன்... அது உண்மையாகி விட்டது.. என்னதான் முயன்றாலும் செங்கல் செங்கலாகத்தான் இருக்கும்.. கண்ணாடி ஆகாது என்றான்
ரொம்ப நாள் கழித்து இப்பதான் அறிவுப்பூர்வமாக பேசுகிறாய்... எதுவும் தன் இயல்புப்படிதான் இருக்கும்... தியானம் செய்வதன் மூலம் மனம் இல்லாமல் போகாது என சொல்லி விட்டு செங்கலை பக்கத்தில் இருந்த குளத்தில் வீசினார்.
தியானம் செய்து செய்து மழுங்கிப்போய் இருந்த சீடன் முதல் முறையாக விழிப்புடன் அந்த சத்தத்தை கேட்டான்.. மனம் அங்கே அழிந்தது
----
பழங்கால குளம்
குதிக்கிறது தவளை
அந்த சப்தம்

1 comment:

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா